இவன்தான் திருவள்ளுவன்  -வள்ளுவன் வரலாறு-

          இவன்தான் திருவள்ளுவன்...

                                                          - திருவள்ளுவர் வரலாறு -

                                                                          -அரங்க கனகராசன் 


நீராடும் சோழன் -1 

 

 திரவன் தன் கதிரொளியை சோழநாட்டின் மீது பரவவிட்டிருந்த இளங்காலை நேரத்தில்-

குயில்கள் கூவ-

பறவையினங்கள் ஓசை எங்கும் கேட்க-

மயில்கள் ஆட-

மாஞ்சோலையின் மையத்தில் அழகுற அமைந்திருந்த நீராடுந்துறையில் - சாய்வாக செதுக்கப்பட்டிருந்தப்  பளிங்குப் பாறை மீது - சோழமன்னன்  சாய்ந்த நிலையில் கால்நீட்டி அமர்ந்திக்கிறான்...

 

வலது தோள்மீது மெல்லிழை  மாராப்புத் துணி- யை இட்டுபத்துக்கும் மேற்பட்ட ஆரியபெண்- கள் மன்னவனை சூழ்ந்திருக்கிறார்கள்...

 

அவர்களில் சிலர், மன்னவனின் கால்தனை இதமாக அமுக்கிவிட-

இன்னும் சிலர் மன்னவனின் தோள் மீது இளந்தளிர் விரல்களால் எண்ணெய்த் தொட்டு பக்குவமாக நீவியிருக்க-

மேலும் ஒருவள் மன்னவனின் நரைமுடிக்கு மெதுவாக கருஞ்சாயம் தடவியிருக்க -

இன்னும் இரு ஆரியப் பெண்கள், மன்னவனின் பரந்த மாரில்  மென்மையாக இதழ்ப்      பதித்திருக்க-

ஒருவள் பேசுகிறாள் : "மன்னவா'’

 

"சொல் செங்கனியே" என்றுச் சொல்லி அவள் உதடுகளை சுண்டிவிட்டான்...

 

சுண்டப்பட்ட இதழ்களால் முறுவல் செய்து, மன்னவனின் இதழ்களோடு இதழ்களை அழுத்தினாள் ஆரியமங்கை...

 

"அன்பே, ஆனந்தம் செய்கின்றாய் அருங் காலைப் பொழுதினிலே... என் மேனி நரம்புக- ளை முறுக்கேற்றி விட்டு, வீணில் விலகலா- மோ  நீ" - என்று சொல்லி மன்னவன் அந்த ஆரிய மங்கையின் மார்பினை முகத்தோடு இறுகத் தழுவி, இன்னமுது சுவைத்தான்...

 

"காமக்கலைகளில் புதுப் புது நளினம் படைக்கும் மன்னவா, ஓர் சொல் சொல்ல எனக்கும் ஒப்புதல் தருவீரா" என்றனள் எழில் குலுங்கிடும் ஆரிய அழகி...

 

"ஒப்புதலும் வேண்டுமோ ஒப்பிலா ஆரிய சிற்பமே, செப்படி நின் செவ்விதழ் விரித்து"- என்று ஆரியப் பெண்ணின் சிவந்த உதடுகளை மீட்டினான் விரலால்...

 

தன் இருக்கரங்களையும் மாலை போல்  மன்னவனின் கழுத்தில் ஆக்கி,   சோழ மன்னனின் மடியில் மயில் தோகையவள் சாய்ந்து, "இந்நிலமாளும் இறைவனே, இவ்வு- லகை ஆளும்  இறைவனின் தாகம் எதுவென அறியாமல் தாங்கள் இருப்பதாக வேத வித்தகர்  வேதனைக் கொண்டிருக்கிறார்"- என்றாள் நளினமாக!... 

 

"சோழ மண்டலத்தின் முதல் அமைச்சர்  வேத- னைக் கொண்டிருக்கிறாரா?"- என்று கேட்டான்  மன்னவன் கேள்விக் குறியொன்று நெற்றியில் தெறிக்க...

 

"ஆம் மன்னவா!...  நீராடுஞ்சோலைக்குள்  நுழையும் வாயிலில், வேதவித்தகர் என்னைக் கண்டார்... சொன்னார் சேதி... காத்திருப்பேன் மன்னவன் காலையாடி வரும்வரை மந்திரா- லோனை மண்டபம் தனில் என்றார்" - என்றாள் செந்நிறப் பதுமையவள் ஆரியச்சி!...

 

"என்னது... வேதவித்தகர் காத்திருப்பதா... பாவ- மன்றோ எனக்கு... பிழையன்றோ நான் செய்- வது...  கன்னியரே, விலகியிருங்கள்... வேதகனைக் கண்டு விரைவேன் மீண்டுமிங்கு...” -என்று சொன்ன மன்னவன் மேனியில் நீர் வடிய வடிய, ஓடோடிச் சென்றான், சோழ மன்னன் சோழநாட்டின் முதல் அமைச்சனை சந்திக்க... 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

            தேவதாசி -2

 

மந்திராலோசனை மண்டபம்-

 

வேதவித்தகர் என்று அழைக்கப்படும் ஆரியன் சோழநாட்டின் முதல் அமைச்சனாகவும் மன்-னவனால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறான்...

 

அந்த ஆரியனின் இருக்கை ஏனைய இருக்கை- களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது.  

உச்சிக் குடுமியுடன் திகழ்ந்த ஆரியனின்        மார்பில்  பூணூல் எனப்படும் நூல் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது... அவன் மடியிலோ, சோழநாட்டு நன்னிளம் நங்கையொருத்தி அமர்ந்திருந்தாள்... 

 

அவளின் மேனியைத் தடவி மகிழ்ந்திருக்கி-  றான் ஆரியன்... அவனுக்கு சோழநாட்டின்  இரு பெண்கள் சாமரம் விசிறிக் கொண்டிருந்தனர்...

 

விசிறிக் கொண்டிருந்தவளின் இடையைக் கிள்ளி, "கள்ளி நீ, கருப்பாய் இருந்தாலும், கருத்தை ஈர்த்துவிட்டாய்... மாலை என் இல்லம் வந்துவிடு... உன்னிடம் மாங்கனிப் பருகிட வேண்டும்..." - என்றுச் சொல்லிவிட்டு, மடியில் அமர்ந்திருப்பவளிடம், “பலாச்சுளை- யைப் போல் பக்குவமாய் உனக்கு  இதழ் படைத்துவிட்டான் பெண்ணே, பிரம்மன்... நீயும் இன்றென் இல்லம் வந்துவிடு" - என்றான்...      

 

"முதல் அமைச்சரின் சொல் பணிந்திடல்  வேண்டும் என்பதுவே மன்னவன் எமக்கிட்டக் கட்டளை..."-என்றனள் இளங்குயிலெனக் குரல் கொண்டு ஆரியனின் மடியில்  அமர்ந்திருந்த ஏந்திழையாள் சோழநாட்டு தோகையவள்...   

 

அப்போது குதிரையின் குளம்படி ஓசைக் கேட்கிறது...

 

முதல் அமைச்சனும், அவனுடைய  மடியில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவளும்  கொண்டி- ருந்தவளும் வாயிலை நோக்கினர்...

தேர் ஒன்று மந்திராலோசனை மண்டபத்தின் வாயிலில் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய மன்னவனின் மேனி இன்னமும் ஈரம் உலரப்படாமல் இருந்தது...

 

ஈரமேனியோடுமந்திராலோசனை மண்டபத்தி-னுள் நுழைந்தான்  மன்னவன்!... 

 

மன்னவன் வருதல் அறிந்து, ஆரியனின் மடியில் அமர்ந்திருந்த சோழநாட்டு கோலமயிலவள்  எழுந்து நின்று மன்னவனுக்கு வணக்கம் கூறி நின்றாள்... 

 

ஆரியனோ சற்றும் கண்டு கொள்ளாதவனாய் மமதையோடு அமர்ந்திருந்தான்... 

 

அகந்தையோடு ஆசனத்தில் வீற்றிருக்கும்  ஆரியனின் தாள் பணிய, நெடுஞ்சாண் கிடை- யாக படுத்து, தாள் தொட்டு வணங்கினான்... 

 

"வேதவித்தகரே, தங்கள் கருணை வேண்டும்... பாவி நான், தங்களை நெடுநேரம் காத்திருப்புச் செய்து விட்டேன்..." - என்று பணிவோடு கூறிக் கொண்டே, ஆரியனின் இருக்கையைவிட உயரம் குறைந்த இருக்கையில் அமர்ந்தான்  சோழப் பேரரசின் மாமன்னன்...

 

 மேலும் பணிப்பெண்கள் இருவர்   நுழைந்து மன்னவனுக்கு சாமரம் வீசத் தொடங்கினர்...

 

"மன்னவனே, நீராடி, காலை உணவாடி  வந்தி- ருக்கலாமே..." -முதல் அமைச்சன்...

 

"இறைவா, நான் அந்தப் பாவத்தை இழைப்பதா... கூடாது... கூடாது... நீங்கள் என் வருகைக்காக காத்திருக்க - நான், எழில் மங்கையரோடு நீராடியிருப்பதா... பாவம் என்று நான் அறிவேன், வேதவித்தகரே..."

 

"நன்று மன்னவா!... நானிலம்தனில் நம் சோழர் நிலம் செழிப்புறவே, தங்களைக் காண விழைந்தேன்...  இரவிலொரு கனவொன்று, கண்டானாம் ஆலநஞ்சருந்தியோன் குடிக் கொண்டுள்ள கோயிலின் அந்தணன்...  

 

"வேதவித்தகரே!... அந்தணன் கண்ட கனவால் நம் சோழநாட்டுக்கு ஏதும் தீமையேற்படுமோ... மனம் அஞ்சுகிறது  வித்தகரே..."

 

"அஞ்சாதே மன்னவா, நானிருக்கையில் நீர் அஞ்சுதல் எனக்கன்றோ இழுக்கு..."

 

"நன்று வித்தகரே!..."

 

"மன்னா, ஆரிய அழகிகளுடன் அற்புத லீலை- கள் புரிந்து ஸ்னாநம்   நீர் செய்ததை  பார்த்து விட்டானாம்  இறைவன்..."

 

"வேதவித்தகரே... யாது சொல்கிறீர்... இறைவன் கோபம் கொண்டானோ?... ஏதும் நான் செய்தல் வேண்டுமோ பரிகாரம்?... கூறிடுக" - மன்னவன் அச்சம் கலந்து படப்படப்புடன் பேசினான்...

 

அதற்கு ஆரியன், "மனதில் அச்சம் விடுக மன்னவா!...  *பார்வதி தேவியார் ஸ்நானம் செய்துக் கொண்டிருந்ததை ஒளிந்து நின்று இரு கண்களால் கண்டுக் களித்தான் சிவன்..." - என்று சொல்லும்போது இடைமறித்த மன்னவன், "வேதவித்தகரே, தேவியார் சிவனுக்கு இல்லாள்தானே? ஏன் ஒளிந்து நின்று, குளியலைக் காண வேண்டும்... சிவனும் உடன் சென்று குளித்திடல் தவறில்லையே..." - என்று வினவினார்...

 

"மன்னவா, ஆரியன் பேசும்போது..."

 

"குறுக்கிட மாட்டேன்... தவறு... தவறு... இதற்கும் ஏதும் பரிகாரம் வேண்டுமெனில் கூறி- டுக..."

 

"மன்னவா, பார்வதி தேவியார் சிவனின் பத்தி- னியாக இருந்தப் போதிலும்,    அவளும் பெண் 

 

* http://thathachariyar.blogspot.com

தானே?... அவள் குளிக்கும் அழகை ஒளிந்து நின்றுப் பருகிட இறைவன் சிவனுக்கும் ஆவல் பிறந்தது... அதன் பொருட்டு காணலுற்றான்... தன் மனைவியின் குளியலை மறைந்து நின்று சுவைத்த ஈசன்,  ஒன்பதுக்கு மேற்பட்ட ஆரிய அழகியரோடு நீர் ஸ்னானம்  செய்வதைக் கண்டால்  மோகம் கொள்ளாதிருப்பானோ?..."

 

"அதனால்?"

 

"அதனால், கடவுளும் விரகதாபத்தில்  தவிக்கி- றார்... தனக்கும் தாசிகள் வேண்டும் என்று, அந்தணன் கனவில் வந்து  ஆண்டவனும்  கூறி விட்டானாம்..."

 

"அதனால்?"

 

"அதனால்... ஆண்டவனின் தாகத்தைத் தணிக்க வேண்டியக் கடமை இந்நிலமாளும் சோழ  னுக்கும் உண்டல்லவா..."

"நான் என்ன செய்யவேண்டும்?"

 

"கோயில்கள் தோறும் தாசிகளை நீர் அனுப்பிட வேண்டும்..."

 

“தாசிகள் என்றால்?”

 

“துணைவி என்பாள் துணைவனுக்கு இன்பம் நல்குவதுப் போல், ஆண்டவனுக்கு இன்பம் ஊட்டுவோள் தாசி எனப்படுவர் மன்னா...”  

 

"தாசிகளுக்கு நான் எங்கே போவேன்?"

 

"மன்னவா, நீர் ஏன் போகவேண்டும்?...  நமது ஏவலாட்களை  ஏவி, நாட்டில் இருக்கும் ஆடல் பாடல் அறிந்த இளம் கன்னியரை ஈங்கு கொணர்ந்திடச் செய்க... " 

 

"காவலனே வருக.." -என்று மன்னவன் குரல் கொடுக்க காவலன் ஒருவன் வருகிறான்...

 

"காவலனே, முதல் அமைச்சனின்  சொல்ல- றிந்து செல்வீராக... இதுவே எனது உத்தரவு.." -என்றான் மன்னவன்...

 

ஆரியன் அவனை நோக்கி, "நம் நாட்டில் உள்ள ஆடலும், பாடலும் நன்கறிந்த இளம் சவுந்திரிய சுந்தரிகளை ஆடலரங்கிற்கு இட்டு வருக"- என்று  கட்டளையிட, காவலனும் விரைந்தான்..

 

"வேதவித்ததகரே, ஆடல், பாடல் அறிந்த இளம் பெண்களை  வரவழைத்து, என்ன செய்யப் போகிறோம்?"-என்று மன்னவன் வினவினான்...

 

"மன்னவா, கடவுளுக்கு ஏற்பட்டுவிட்ட காமப் பசிக்கு, நாம் நம் நாட்டு ஆடல் பாடல் அறிந்த இளம் யுவதிகளை விருந்தாகப் போகிறோம்"

 

"காமப்பசி, கடவுளுக்கும் உண்டோ வித்தகரே... ம்.. தவறு தவறு.. ஆரியனிடம் கேள்வி கேட்பது தவறு என நான் அறிவேன்... ஆயினும், வித்தகரே, கடவுளின் காமப்பசிக்கு ஆடல், பாடல் அறிந்த பாவையர் எதற்கு?... என்னை மகிழ்விக்கும் ஆரிய பெண்களையே ஆண்டவ- னுக்கும் அனுப்பி வைக்கலாமே..."

 

"மன்னவா, ஆரியனுக்கு யோசனைக் கூறி இறைக் குற்றத்திற்கு உள்ளாகாதீர்... ஆரியப் பெண்கள் மன்னவனின் மனம் குளிர்விப்பதற்கு மட்டுமே ஆவர்... ஆரியப் பெண்கள், ஆண்டவ- னின் புதல்விகள் ஆவர்... அதனால் ஆண்டவன் ஆடல், பாடல் அறிந்த சோழநாட்டுப் பெண்க- ளை சுவைக்க ஆவல் கொண்டுள்ளான் என்பத- னை அறிக... ஆண்டவனின் மனதை மகிழ்-   விக்கத் தவறினால், ஆட்சிக்கு தோஷம் ஏற்படும்... தங்கள் வம்சத்தையும்  துவம்சம் செய்திடுவான். உங்கள் நலனைக் கருதியே என் பணியிருக்கும் என்பதை தாங்கள் அறிந்தும்... "

“அறிவேன்... அறிவேன்... சினம் கொண்டு என் குலத்தை நாசம் செய்திடாதீர்... உங்கள் கருணையால்தான் சோழர் அரசு இருக்கிறது...”

 

"ஆரியன் இருக்குமிடத்தில் ஆண்டவன் இருப்- பான்... ஆரியனைத் தொழுவோருக்கு  ஆண்ட- வனின் அருள் உண்டு... ஆண்டவனின் அருள் இருந்தால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை மன்னவா"

 

"வித்தகரே, ஆவல் ஒன்று எனக்குள்...?"

 

ஆரியன் என்ன என்பது போல, மன்னனைப் பார்த்தான்... 

 

"வேதவித்தகரே, கடவுள் ஆடல், பாடல் மங்கையரோடு கூடும் காட்சியை நான் பார்க்க வேண்டுமே... ஆவலாக இருக்கிறது"

 

"சோழ மன்னனின் ஆவலில் அர்த்தமுண்டு... தவறில்லை...  மன்னவா, கடவுள் ஆரியரின் கண்களுக்கு மட்டுமே தெரிவார் என்பது உங்களுக்குத் தெரியாதா?... ஆனாலும், உங்கள் ஆவலை நான் நிறைவேற்றுகிறேன்..."

 

"நல்லது வித்தகரே..."

 

"ஆண்டவனும் ஆரியனும் ஒன்றல்லவா... அதனால்; ஆரியன் புணர்வதைப் பார்த்தால், ஆண்டவனின் லீலையை நேரில் காண்பதற்கு ஒப்பாகும்"

 

"வித்தகரே, என்ன சொல்கிறீர்... கோயில் பூசாரி ஆடல், பாடல் மங்கையரைப் புணர்வானா?... அதற்கு ஆடல், பாடல் மங்கையர் ஒப்புதல் செய்ய மாட்டனரே..."

 

"மன்னா, என்ன சொல்கிறீர்... ஆயின் நீர் மன்னராக இருக்கத் தகுதியற்றவர் ஆவீர்... ஆண்டவனின் ஆசையை நீர் நிறைவேற்றாது நின்றால், தெய்வக் குற்றத்திற்கு நீர் உள்ளாவ- தோடு, இந்நாட்டை பகைவர் கைக் கொள்ளவும் கடவுள் சபித்து விடுவார்..."

 

"வேண்டாம்... வேண்டாம்... நான் செய்ய வேண்டியதை செப்புக..."

 

"ஆடல், பாடல் அறிந்த இளம் யுவதியர்  கடவுளுக்கு காணிக்கையாக்கப் பட்டனர் என்று ஆணை பிறப்பித்திடுக..."

 

"சரி... இன்றே, நான் ஆணை பிறப்பித்து விடு- கிறேன்... ஆனால் இளம் பெண்களை  மட்டும் கடவுளுக்குப் பிடிக்கும் என்றால், இப்போது காணிக்கையாக்கப்படும் பெண்களுக்கு வயதாகி விட்டால் அவர்களை என்ன செய்வது?... அவர்-களுக்குப் பிறகு?"

 

"மன்னா, சரியானக் கேள்வி"

 

"தவறு.. தவறு.. நான் கேள்விக் கேட்கவில்லை" - என்றுச் சொல்லி ஆரியணை வணங்கினான் மன்னவன்...

 

"மன்னா, இப்போது கடவுளுக்குக் காணிக்கை- யாக்கப்படும் பெண்களுக்கு வயதாகி விட்டால், இளம் பெண்களுக்கு கடவுள் எங்கே போவார் என்பதுதானே தங்கள் அய்யம்"

 

மன்னவன் மவுனமாக இருந்தான்...

 

"மன்னவா, ஆடல், பாடல் அறிந்த அனைத்து இளம் யுவதிகளும், தேவதாசிகள் ஆவர் என்று கட்டளை இடுக... கட்டளைக்கு இணங்க மறுத்- தால் குடும்பத்தார் அனைவருக்கும் சிரசேதம் செய்யப்படும் என்றும் ஆணையிடுக..."

 

"அதனால்அரசுக்கு ஏது பலன் என்று வினா எழுந்தால்..."

 

"அரசின் நலன்தானே ஆரியர் நலன் என்று அறியாதவரா தாங்கள்?... தேவதாசிகளாக ஆக்கப்படும் இந்நாட்டின் மங்கையர், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்... தேவதாசிகளின் ஆடல், பாடல் நிகழ்வுகள் கோவில் அரங்குகளில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்... ஆடல், பாடல் நிகழ்ச்சியைக் காண செல்வந்தர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்- பட வேண்டும்... நிகழ்ச்சியைக் கண்டுக்  களிக்க, நிதித் தர வேண்டும் என்று ஆணையிடுக... அந்நிதி அரசின் கருவூலத்திற்கு வந்தடையும்..." - என்றான் ஆரியன் புன்னகையோடு...

 

"ஆகா... இப்படியும் வருவாய்?... ஆரியர் அன்றி எவருக்கு உதிக்கும் இந்த யோசனை?..."

 

"மன்னா, தேவதாசிகளாக ஆக்கப் படுவோரை  ஒரு சாதி என்ற பிரிவிற்குள் நிறுத்துங்கள்... தேவதாசிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ந்த பிறகு, அவர்களும் தேவதாசிகள் ஆவர் என்பது சாதியின் விதி என்று ஆணை பிறப்- பித்து  விட்டால், செடியில் புதுப்புது புஷ்பங்கள் மலர்வது போல், புதுப்புது தேவதாசிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்... அரசுக்கு வருவாயும் பெருகிக் கொண்டே இருக்கும்... "

 

"ஆகா... ஆரியரே, உம்மை கட்டித் தழுவி என் மனதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னுள் விருப்பம் இருந்தாலும், ஆரியரை யாம் தொடுதல் கூடாதே... அது தெய்வ நிந்தனை- யாகுமே என்பதால், உம்மைத் தழுவாது  இருக்கிறேன்..."

 

"மன்னவா, ஆரியரை பூசித்தாலே போதும்... தெய்வ கடாட்சம் கிட்டும்... சரி; மன்னவா, தேவதாசிகளை  நாள்தோறும்   பராமரிக்கும் பணிக்கு செலவாகுமே... அதற்கான நிதி..." - என்று ஆரியன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்ட மன்னவன், "அரசின் நிதியிலிருந்தா தேவதாசி- களுக்கு உணவளிப்பது... அதற்கான நிதியை நான் கொடுத்தால், அரசின் கருவூலம் தாங்குமா?" -என்று கேட்டான்...

 

"மன்னவா, கருவூலத்தை நிரப்புவதுதான்  ஆரியனின் பணி... மன்னவனை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுதான் ஆரியனின் சிந்தை..."

 

"மகிழ்ச்சி!... வேதவித்தகரே,    தேவதாசிகளைப் பாராமரிக்க நிதி..."

 

"கடவுள் கைவிடமாட்டான், மன்னவா!... கடவுள் விரும்பியதால் தேவதாசிகளை கோவிலுக்கு அனுப்புகிறோம் அல்லவா... தேவதாசிகள் கடவுளை மகிழ்விக்க ஆடலும், பாடலும் செய்யும்போது அதனைக் காண வரும் செல்வந்தரின் நிலையை எண்ணிப்பாருங்கள்..."

 

"புரியவில்லை எனக்கு"

 

"மன்னவா, ஆரியப் பெண்களோடு நீராடிய தங்கள் நீராடலைக்  கண்ணுற்று கடவுளுக்கும் காமம் உதித்தது எனில், தேவதாசிகளின் ஆடல், பாடல் கண்ணுற்று செல்வந்தர்களுக்கும் காமம் பெருகாதா?... பெருகும்... தேவதாசிகள் செல்- வந்தர்களையும் குளிரச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடு ... தேவதாசிகளோடு இணைய செல்வந்தன் காசு  தருதல் வேண்டும் என்றும்  கட்டளையிடுக... செல்வந்தன் தரும் காசுகளில்  தேவதாசிகள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வர் மன்னா... "     

 

"ஆகா... அரசின் கருவூலத்தை நிரப்பிட, ஆரிய- ருக்கு மட்டுமே யோசனைகள் பிறக்கின்றன... விந்தைதான்... கோயில்கள் கடவுளைக் கும்பி- டுவதற்கு மட்டுமே என்றிருந்தேன்... ஆகா... கோயிலில் தேவதாசிகளை குடியமர்த்தி, அரசின்   வருவாயையும் பெருக்கிட ஆலோச- னை நல்கிய வேதவித்தகனே, உனக்கு  ஒரு ஊரை தானமாகக் கொடுக்கிறேன்... எந்த ஊர் வேண்டுமோ அந்த ஊரைக் கேள், வித்தகா..."                               

 

     

 

 

 

 

 

 

 

 

 

 

    சேரர்  நாட்டுக்கு வந்த சோழக் குடிகள் - 3.

 

யா கோழிக் கூவி ஒரு நாழிகை கழிந்த பொழுதில்

சேரநாட்டின் மன்னனும், படைத் தளபதியும் படைவீரர் சிலரோடு இரவு  நகர்வலம் புறப்பட்- டனர்...

 

புரவிகளின் குளம்படி ஓசையோடு  காற்றின் ஊதல் ஓசையும் கனமாக இருந்தது... 

 

இருளின் ஊடே, ஒளிப்பந்தங்களை ஏந்தி வீரர் முன்னே சென்றுக் கொண்டிருந்தனர்...    

 

பந்தங்களின் வெளிச்சத்தினூடே மன்னவனும், தளபதியும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்..

 

அவர்களுக்குப் பின்னும் சில வீரர்கள், புரவி- யில்  பின்தொடர்ந்துக் கொண்டிருந்தனர்...

 

"தளபதியாரே, சேரநாட்டில் வழிப்பறிக் கொள்ளையைக் குறைக்க, அமைச்சரிடம்  ஆலோசனைக் கேட்கப்பட்டது... ஆலோசனை கூறாமலே சோழ நாடு சென்று விட்டார்... அவர் திரும்பி வரும் நாள் குறித்து, ஏதும் தகவல் உண்டா" - என்று சேர நாட்டு மன்னன், தளபதியிடம் கேட்டான்...

 

"மன்னா,  சோழப் பேரரசின் ஆடலரங்கில் ஏதோ விழா நடப்பதாகவும், அதற்கான அழைப்போ- லை அமைச்சருக்கு வந்திருந்ததாகவும், விழா- வில் கலந்துக் கொள்ளும் பொருட்டே அமைச்சர் சென்றிருப்பதாகவும் தாங்கள்தான் என்னிடம் கூறினீர்... ஆனாலும்..."

 

"ஆனாலும்..." -மன்னன் புரவியை நிறுத்தி விட்டு  தளபதியைப் பார்த்தான்... 

 

"அமைச்சர் வந்தப் பிறகே அவரிடம் ஆலோச- னைப் பெற்று வழிபறிக் கொள்ளைக்கு முடிவுக் கட்டுவதென்றால், அதுவரைக்கும் வழிபறிக் கொள்ளைக்கு நமது அரசும்  உறுதுணை புரிந்தது போலாகுமே...  மக்கள் அரசின் மீது சினம் கொண்டிடுவரே..." -என்றான் தளபதி...

 

"தளபதி, யாதுப் பேசுகிறீர்?... அமைச்சரிடம் கேளாமல் துரும்பும் நகர்த்த இயலாது என்பது தங்களுக்குத் தெரியாதா... அப்படியே ஏதும் செய்து விட்டால், அமைச்சர் சபித்து விடுவார் என்பது தங்களுக்குத் தெரியாதா..."

 

"ஆமாம் மன்னவாஅமைச்சரிடம் கேளாமல் செய்வது விளைவுகளை ஏற்படுத்திவிடும் தான்... தாங்கள்  நகர்வலம் செல்வது அமைச்- சருக்கும்  தெரியும் அல்லவா..."

 

"அய்யமேன்?"

 

"நகர்வலம் செல்வது போல், ஊர் எல்லைக்கும் சென்று வரலாமே... ஊர்களின் எல்லைகளில் வழிப்பறி அதிகம் நடப்பதாக மக்கள் கூறுகின்ற- னர்... ஊர் எல்லை வரைக்கும் சென்றது போலி- ருக்கும்... வழிபறி கொள்ளையர்க் கிட்டினால் சிறை செய்யவும் இயலும் அல்லவா" - தளபதி...

 

"நல்லது, தளபதியாரே, அப்படியே செய்வோம்... பொழுது புலர்வதற்கு இன்னும் நாழிகை உள்ளது... நாம் இடுக்கிக் குன்றில் இறங்கினால் நமது எல்லைக்கு செல்லலாம் அல்லவா..." - மன்னன்...

 

"ஆமாம் மன்னவா, இந்த  நொய்யல் ஆற்றில் பயணம் பட்டால் நம் எல்லையை ஒரு நாழி- கைக்குள் அடைந்து விடலாம்... கொள்ளையர் தென்படின் சுற்றி வளைக்கவும் ஏதுவாக இருக்- கும்" - என்றான் தளபதி...

 

"நல்லது... தளபதியாரே, ஆவண செய்க..."- என்றான் சேர நாட்டு மன்னன்...

 

சிறிது நேரத்தில், பாய்மரக்கலம் அகன்ற நொய்- யல் ஆற்றில் பயணித்தது; இருளையும் நீரை- யும் கிழித்துக் கொண்டு வேகமாக...   

 

நொய்யல் நதியின் வேகமான வீச்சினை ஈடு செய்யும் விதமாக, பாய்மரக்கலம்  கட்டமைக்- கப் பட்டிருந்தது...

 

நிலவும், விண்மீன்களும் கருமுகில்களோடு நீலவானில் கவிதைப் பாடிக் கொண்டிருந்தன- வோ என்னவோ, மன்னவன் வான்பரப்பை பார்த்தபடி இருந்தான்...

 

கட்டப்பட்டிருந்த புரவிகளைக் காத்த வண்ணம்  சில வீரர்கள் நின்றிருந்தனர்... இன்னும் சில வீரர்கள்  மன்னவனுக்கு அரண் போல் பாய்மரக்கலத்தினுள்  நின்றிருந்தனர்... 

 

கலத்தின் பயணம் வேகமாக இருந்தபோதிலும், தளபதியின் கூரிய விழிகள் இருளை விரட்டி கரையின் அசைவுதனை அளவிட்டுக் கொண்டி- ருந்தன...  

 

"மன்னவா, அங்கே பாருங்கள்... எவரோ  சிலர் நம் எல்லைக்குள் நுழைவது தெரிகிறது" -தளபதி காட்டிய திக்கில் பார்த்த மன்னவன், "ஆமாம்... கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்" - என்றான் வியப்புடன்... 

 

"வீரர்களே, கலம் கரை ஒதுங்கட்டும்..." - என்று தளபதிக் கட்டளையிட, மரக்கலம் கரையோரம் ஒதுங்கியது... 

 

நீலவானத்தில் உலாவ கிளம்பியதோ என்று எண்ணத் தூண்டுவது போல், நிலவின் தோற்- றம்  எளிமையாக  இருந்தது...

 

அதன் மஞ்சள் நிறக் கீற்றுகள்  நொய்யல் ஆற்றில் அலையலையாய்ப் படர்ந்து தூரிகை- யில் அகப்பட மறுக்கும் ஓவியமாய் அலைந்- தது...

 

நிலவின் ஒளியை விழுங்க வந்த நொய்யல் மீன்கள், கலத்தின் மீது மோதி, படபடவென நீரோடு  நீந்திச் செல்லும் துள்ளல் காட்சியை 

கலத்தில் இருந்தோர் எவரும் கணாதிருந்தனர்...

 

அவர்களின்  கூர்விழிகள் கரையோரம் கூட்டம் கூட்டமாய் சென்றுக் கொண்டிருந்தோரின் மீது குவிந்து இருந்தமையால் நிலவின் வெளியில் நொய்யலின் மெல்லிள அழகை நுகரவில்லை..

 

சலசலவென நீர்த் திவலைகளை சுண்டியடித்த பாய்மரக்கலம் நெடுமரம் போல் நிமிர்ந்து கரை ஒதுங்கியது...

 

மரக்கலத்திலிருந்து புரவிகளைநேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்த கரை பாலத்தில் இறங்கச் செய்தனர்...      

 

ஆற்றங்கரையிலிருந்து, தொலைவில் சென்றுக் கொண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி வீரர்  சிலர்  விரைந்தனர் வாளும், வில்லுமேந்தி புரவியில்...

 

தளபதியோடு மன்னவனும் பின் தொடர்ந்தனர்...

 

முன்னே சென்ற வீரர்களால் சுற்றி வளைக்கப் பட்டனர் கூட்டத்தினர்... 

 

சேர நாட்டு மன்னன் தளபதியுடன் வந்து ஆங்கே வளைக்கப்பட்ட கூட்டத்தினரை உற்று நோக்கினான்... 

 

கவ்விய இருளைக் கிழிக்கும் நிலவொளியில்  சிறு குழந்தைகளோடும், கைக்குழந்தைகளோ- டும், இளம்பெண்களும் முதியோரும், இளைஞ- ரும் என குழுமியிருந்தோரை பார்த்த மன்னன் "யார் நீவிர்..." - என்று சற்று அதட்டலோடு கேட்டான்...

 

சிறு குழந்தையர்  வென கதறி அழுதனர்... இளம்பெண்களும், மங்கையரும் அழுதனர்... 

 

அவர்கள் முகம் வாட்டமுற்றிருப்பதையும்,  உடல்  சோர்ந்திருப்பதையும் மன்னவனுக்கும், தளபதி உள்ளிட்ட வீரர்களுக்கும் நிலவொளிக் காட்டியது...

 

"அழுவதை நிறுத்துக... மூட்டை முடிச்சுகளு- டன் இவ்விரவில் கிளம்பி செல்வது எங்கே?" - என்று தளபதி கேட்டான்...

 

முதியவர் ஒருவர், "அய்யா, நாங்கள்  சேரநாட்- டில் அடைக்கலம் கொள்ள சோழநாட்டிலிருந்து வந்துள்ளோம்... உமது மன்னவனிடம் எம்மை இட்டுச் செல்க" - என்றார்...

 

"மன்னவனை ஏன் காணவேண்டும்?" –மன்ன-  வன்...

 

"வாழ வழியின்றி சோழநாடு நீங்கி வந்தோம்; சேரநாட்டு மன்னவன் எம் குறைத் தீர்ப்பான் என்று நம்பி வந்தோம்"

 

கூட்டத்தில் ஒருவன், "பால் வேண்டி பைங்-குழந்தையும், நெடு நாழிகையாய் அழுது சோர்ந்து விட்டது சேரநாட்டு வீரர்களே, எம் குழந்தைகளின் பசிப் போக்கிட ஏதும் கொடுத்து உதவிடுக" - என்று மன்றாடினான்...

 

"தளபதியாரே, கனியும்,தேனும் தருக, முதலில்" - என்று மன்னவன் தளபதியிடம் கூற, வீரர்கள் பணியில்  வேகம் காட்டி, புரவிகளின் முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் பைகளிலிருந்து கனிகளையும், தேனுடன் கூடிய குப்பிகளையும்  எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தனர்...  மக்கள் அவற்றை வாங்கி அவசரமாக உண்ட- னர்... பசித் தாளாதத்  துயர் அவர்களின் உண்ண- லில் வெளிப்பட்டது... 

 

அவர்கள் உண்ணும் வரைக் காத்திருந்த மன்- னன், "சோழ நாட்டில் வாழ வழியின்றி சேர நாடு வந்ததாக கூறும் உமது மொழியில் மெய்- யில்லையே... உண்மை உரைத்திடுக... மறுத்- தால் சிறை ஏற்றம் நிகழும்... நினைவில் கொள்க... "- என்றான்...

 

"பொய்யுரைக்க யாம் ஆரியரோ... தமிழராய் - மிடுக்கென சோழநாட்டில் வாழ்ந்த எமக்கும் எத்தராய் ஆரியரும் வந்துற்றனர்... எமக்கும் வாழ்வில் வந்ததே கேடும்... ஏது சொல்வோம்... எதைச் சொல்வோம்..."

 

"நிறுத்துக... ஆரியர் எத்தராய் வந்தனரா?... ஆரியரை இகழ்தல் நன்றல்ல என்பதை அறி-  வீரா... சேரநாட்டிலும் ஆரியர் உள்ளனர்... ஆரி-யரின் சிந்தையில்தான் எம் கொற்றம் சீரும், பேரும் கொண்டு திகழ்கிறது... சேரநாட்டவர் எவரேனும், ஆரியரை வசைப் பாடியிருந்தால், கசைத் தந்திருப்பேன்... வேறு நாட்டில் இருந்து வந்திருந்தப் போதிலும் நீவிர் பசியுடன் தவிப்- பதை சேரநாடு வேடிக்கைக் காணாது... உண்- மை உரைத்திடுக... அல்லவெனில் அயல் நாட்- டவர் என்றும் பாரேன்... கயல் போல் எம் ஈட்டிமுனைக்கு சாவீர்கள்"

 

ஓர் இளம்பெண் வெடுக்கென முன்வந்து, "வீரரே, நான் சொல்கிறேன்... நான் ஆடல் பாடல் அறிந்த நங்கை... நாட்டியமும், நல்லிசையும் நான் கற்ற கலை... விழாக் காலங்களில் நடனம் செய்தும், நல்லிசைப் பாடியும் எம் வயிற்றினை வளர்ப்போம்... என் போல் ஆடல் தெரிந்த கன்-னியரை சோழ நாடு வேட்டையாடிப் பிடிக்கிறது ... கடவுளுக்கு பணிவிடையாற்றிட வேண்டு- மாம்... பாழும் ஆரியனோடும் படுக்க வேண்டு- மாம்... செல்வந்தரும் எம் தோள் தழுவிட இடம் தருதல் வேண்டும்... எனிவ்வாறு எம்மைப் பணிக்கிறீர் என்று கேட்டால் யாங்கள் தேவ தாசிகளாம்... நாட்டியத் தாரகைகள் என்று நானிலம் எம்மை புகழ்கிறது... சோழ மன்ன-னோ எம்மை தேவதாசிகள் என்றோர் இடுமொ- ழியில் அடைக்கிறான்... இந்த கெடுமொழி எமக்குப் பிடிக்கவில்லையென்றதால்   ஆடல், பாடல் அறிந்த நாட்டிய மகளிரின் குடும்பத்தை சிரசேதம் செய்திடவே சோழமன்னன் அலைகி- றான்... அல்லல் கொண்டு, தப்பிப் பிழைக்க சேர நாடு வந்துற்றோம்... மன்னவனிடம் இட்டுச் செல்க... எம்துயர்த் தனை நீக்கி, அமைதித் தந்-திடுவான் சேரன் என்று வந்தோம்... இதுவே மெய்... எம்மை இட்டு செல்க..."              

"பெண்ணே நானே மன்னன்... வழிகொள்ளை-  யர் தரும் இன்னல் நீக்கிடவே நகர்வலம் வந்- துள்ளோம்... சோறு போட்டு பேர் பெற்ற செந்- நிலம் சோழர் நிலமன்றோ... அங்கு மகளிரை விலைமகளிராக்கிட மன்னன் விழைந்துள்ள சேதி விந்தைதான்... ஏன் அரசன் நிலைப் பிறழ்ந் தான்... தவறன்றோ... தமிழ்க் கூறும் நானிலம் ஏலாதே..." -என்று சொன்ன மன்னன், தளபதி- யை நோக்கி, "தளபதியாரே, பயண வண்டியில் இவர்களை , நகருக்கு அழைத்துச் சென்றிட ஆவணம் செய்திடுக... இவர்கள் இன்று முதல் நம்  சேரமக்கள் ஆவர்... வாழ்வுக்கும் வழிச் செய்திடுக" - என்று மொழிந்தான்...

 

"உத்தரவு மன்னா" - என்றான் தளபதி...

 

 

 

 

 

4

சேரநாட்டின் நறுமணம் கமழும் சோலையில்-வண்டினங்கள் ரீங்காரம் பாடி பூவுக்குள் மகரந்தத் துகள்களைத் தூவிக் கொண்டிருக்கின்றன...

கனிமணம் தனில் மயங்கிய யானைகள் மரத் தை உலுக்கிஉதிர்ந்த முழுப் பலாப்பழத்-தை உண்டு கொண்டிருந்தன...

மலைச் சரிவில் இறங்கிய மான்குட்டிகள்  மீண்டும் மேடுநோக்கி ஏற முயன்றன...

படபடவென்று புறாக்கள் கிளைகளில் இருந்து பறந்துவானில் அரைவட்டம் கோலமிட்டு அழகாய் மிதந்தன...

 மாடத்தில் நின்றுதோழியரோடு சேரநாட்டுஅரசி விளையாடிக் கொண்டிருந்தாள் வண்ணத்துப்பூச்சிகளைப் போல்...

ஒருத்தியின் கண்ணைக் கட்டிவிட்டுஏனையோர் மடத்தில் மயிற்  சிற்பங்களுக்கிடை-யில் ஒளிந்துக் கொள்வதையும்கண்கட்டப் பட்டவள் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த சிலைகள்  ஒவ்வொன்றின் அருகில் சென்று தேடுவதும்ஏமாற்றத்தோடு  திரும்புகையில் ஒளிந்து நின்றவள் மறைந்து வந்து கொட்டுவதும்அச்சம் ஊட்டுவதுமாக   ஆட்டம்  சென்றது...

அரசிதோழிகளின் விளையாட்டில் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்திருக்கையில் சேரமன்னன் வந்து அரசியின் கண்களை பின்புறமாக பொத்தினான்...

மன்னவனைக் கண்டதும் சேரநாட்டு சிற்றி-டை தோழியர்தாவியோடி  மாடம்விட்டு  அகன்றனர்...

கண்களைப் பொத்தி இருந்த முரட்டுக் கரங்களை விலக்கிடாமல்சேரநாட்டு அரசி பேசினாள் : "சோழநாடு சென்ற சேரநாட்டின் ஆஸ்தான அமைச்சனே வருக... வேதம் கற்று சேர நாட்டினை வளம் செய்பவனே வருக...  ஆரிய  திருமகனின் திருக்கரம் படவே என் தளிர் மேனி பாக்யம் பெற்றதுவே... வருக வருக... ஆரிய மைந்தா வருக" –என்று சொல்லி மெல்ல கரம்  தொட்டு, அதிர்ச்சியுற்று, திரும்பி முகம் கண்டாள்...

எதிரில் நின்றிருந்தவன் தன் மணவாளன் -சேர நாட்டின் மன்னவன்- என்று தெரிந்த- தும் அரசியின்  முகத்தில் புன்னகைத் ததும்பியது...

"ஏனிந்தப் புன்னகை எனையாளும் அரசிக்- கு?"  

"வந்தவன் சேரநாட்டின் ஆஸ்தான வித்தகன் என நினைத்தேன்... எனைத் தொட்டவன் எனை ஆள்பவன் எனும் போதில் அரும்பாதோ புன்னகை" - என்று சொல்லி மன்னவனின் இருதோள் அணைத்து  இட்டாள்  முத்தம் கன்னத்தில்...

"இட்டமுத்தம் இதழ்மீதெனில் இனித்திருக்கும்" - என்றான் மன்னன் அவளை இழுத்து, வளைத்து, மதிமுகம் கண்டு நின்றான்...

"கசக்குதோ... கசந்த முத்தமதை வீசிவிட்டு, இனிக்கும் முத்தமொன்று இனிதாய் தரலாமே என்னிதழ் மீது" - என்று சொன்னாள்  சேரநாட்டு அரசி...      

"ஆசைமுத்தம் ஆயிரம் வைத்துள்ளேன்... ஒன்று மட்டும் நீ கேட்டால் மற்றவற்றை நான் மறைப்பதெங்கே?" - என்று சொன்ன மன்னன் இறுகத் தழுவி இடையில் மீட்டினான் இதழை...

"என் இடையில் முகம் புதைத்து, இன்பம் பல செய்திடுவான் ஆஸ்தான அமைச்சன்... அமைச்சன் எப்போது வருவான் அரசே"

"அறியேன் பெண்ணே... சோழநாட்டில் விழாவென்று சென்றான்... வந்ததும் உன்னை மென்றிட வேகம் காட்டுவான்... நன்றென நீயும் ஆரியனை நன்றே தின்றிடு..."

"ஆரியன் தொட்டால் ஆண்டவன் தொடு- வது போல், சிலிர்க்கிறது  மேனி..."

"பெண்ணே, அது என்ன மாயமோ?... பட்டத்-தரசியை ஆரியன் தொட்டால் நாட்டின் செல்வம் கொழிக்கிறது... ஆயினும் என்னவளே, எனக்கோர் அய்யம் உள்ளது நீண்ட நாளாய்..."

"அறியாமல் என் கை ஆஸ்தான அமைச்-   சன்  மீது பட்டுவிட்டால், தீட்டு என்றுக் கூறுகிறான்... அவன் கை என்னைத் தொட்டு விட்டாலும் தீட்டு என்று பதறுகிறான்... ஆனால்; பெண்ணே நீ அவனைத் தொட்டா- லோ, அவன் உன்னைத் தொட்டாலோ தீட்டு இல்லை என்கிறான்..."    

"மன்னவா, பெண்களைத் தொட்டால் தீட்டில்லை என்று ஆரியசாத்திரங்கள் கூறுவதை நீர் அறியவில்லையா?... தெய்வ நியதிகளுக்குள் நாம் அய்யம் காணக் கூடாது... மன்னவா, நாகமொன்று தீண்டி நீர் மூர்ச்சையாகி விட்டபோதில், நானும் பேச்சிழந்து போனேன்... ஓர் இரவெல்லாம் ஆஸ்தான அமைச்சன் என்னை தழுவி யிருந்தானாம்... அதன் பொருட்டே உமக்கு மூச்சு வந்ததாம்... ஆரியரின் மகிமைக்கு ஈடேது... நமது ஆஸ்தான அமைச்சனுக்கு ஏது செய்தாலும் தகும் மன்னவா!..."

"கண்ணழகே, நின் எண்ணத்தின்படி, நமது ஆஸ்தான வித்தகருக்கு திருசேரின்  ஒரு பகுதியை தானமாக வழங்கி உத்தரவி டுகிறேன்..."

"நல்லது மன்னவா, ஆஸ்தான அமைச்ச- ருக்கு மன்னவன் ஆற்றிட வேண்டிய கடமை இன்னும் ஒன்றுள்ளது..."

"யாது பெண்ணே?... கூறு... நமது ஆஸ்தான அமைச்சனின் விருப்பம்தனை நிறைவேற் றாவிடின் இந்த கிரீடம்தான் எனக்கு அழகாகுமோ? சொல் பெண்ணே..."

"ஆஸ்தான அமைச்சன் என்னை ஆள்வது போல், நம் சேரநாட்டு பெண்களுக்கு திருமணம் நடந்தவுடன்மணப்பெண்ணை ஓரிரவு ஆரியன் ஆள வேண்டுமாம்... அப்படிச் செய்தால், நமது சேர நாட்டுக்கு பகைவரிடமிருந்து தீங்கு ஏதும் நிகழாது என்று இறைவன் திருவாய் மலர்ந்துள்ளா னாம்... ஆண்டவனின் எண்ணத்தை நிறைவேற்றுவது மன்னவனின் கடமையல் லவா"

"ஆகட்டும் பெண்ணே, நமது சேரநாடு  செழிக்க, திருமணம் ஆனவுடன் பெண்கள் ஆரியனுக்கு மனைவியாய் ஓரிரவு இருக்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறேன்... மகிழ்ச்சிதானே... இளமாதுளையே" - என்றுச் சொல்லி, மன்னன் அரசியின் கன்னத்தில் கிள்ளினான்...

அரசியும் சிணுங்கி, மன்னவன் மீது தோள் சாயும் போது, வாயிலோன் ஒருவன், "வீரம் செறிந்த சேரநாட்டின் மாமன்னா வாழி... களிறு படைக் கொண்டு கலிங்கம் வென்ற வேந்தே வாழி... கருந்திரைக் கடலோச்சும் நெடுஞ்சேரலாதன் வாழி..." - வாழ்த்தொலி செய்து வந்தான்...

வாயிலோன் வரவறிந்து, சேரநாட்டு கிள்ளை, தோள் மீதிருந்து விலகி நின்றாள்...

வாயிலோனை நோக்கி, "கூறிடு வாயிலோ- னே" - என்று மன்னவன் சொன்னான்...

"ஆரியமைந்தனாம் நம் ஆஸ்தான அமைச்- சன் கடுஞ்சினம் கொண்டுள்ளான்... தங்க- ளைக் காணவே அரசமன்றலில்... விரைந்து வந்திடாவிடின் விமோசனம் இல்லா சாபம் விடுப்பேன் என்று எகிறி நிற்கிறான் ஆஸ்தான அமைச்சனும்..." - என்றான் வாயிலோன்...

"ஆஸ்தான மன்னன் சினம் கொள்ளவே தீங்கும் ஏது செய்தீரா மன்னா..." -என்று அரசி அரசனிடம் கேட்டாள்...

"இல்லையே தேவி..." -என்றான் சேரன்...

"வாயிலோனே, மன்னன் வருவான் விரைந்தே... சென்றிதனைச் சொல் அமைச்- சனிடம்" - என்றோர் பதைப்புடன் சேரநாட்டு அரசி மொழிந்தாள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5

சே நாட்டின் முதல் அமைச்சனாக   மன்னனால்  நியமிக்கப்பட்டிருக்கும் ஆரி- யன்  பஞ்சு மெத்தையில் கால் நீட்டிய  நிலையில் அமர்ந்திருக்கிறான்...

 

உச்சியில் குடுமியும், மார்பில் நூலும் தொங்கிட, விழிகளில் கடுஞ்சினத்துடன் காணப்பட்டான்...

 

அவனது இரு கால்களையும் சேரநாட்டு அழகியர் இருவர் வருடி விட்டுக் கொண்டிருந்தனர்...

 

அவனின் இருபுறமும் அய்வர் வீதம் பத்து ஆரியர் அமர்ந்திருந்தனர்... அவர்களில் நால்வர் பத்து வயதும் எட்டாதவர்... அனைவருமே உதவி அமைச்சர்களாம்... பூணூலும் குடுமியும் தங்கியிருந்தனர்... 

 

உதவி அமைச்சனாக வீற்றிருக்கும் பத்து வயதும் எட்டாத சிறுவன் ஒருவன் காவலனை நோக்கி, "டேய், காவலனே    இங்கே  வாடா" -என்று அழைத்தான்...

 

இளம் சிங்கமென வளர்ந்திருந்த - தந்தை வயதொத்த - சேரநாட்டு காவலன் கலயம் ஒன்று தூக்கிக்  கொண்டு   ஓடிவந்து, விளித்த சிறுவனிடம் நின்றான்... காவலனின் கையில் இருந்த கலயத்தில் சிறுவனான அமைச்சன் எச்சில் துப்பினான். ..

 

துப்பப்பட்ட எச்சில் சிதறல் தெறித்து காவல- னின் முகத்தில் பட்டது...

 

எச்சில் துப்பப்பட்டதும் சிறுவன்       கைய- சைக்க காவலன் எச்சில் கலயத்துடன்  அங்கிருந்து அகலும் போது, தலைமை அமைச்சன் விளித்தான்...

 

தலைமை அமைச்சனிடம் கலயத்தோடுச் சென்ற காவலனின் முகத்தில் காரி உமிழ்ந்- தான்...

 

உமிழ்ந்து விட்டு, "டேய் காவலனே, உன் முகத்தில் உமிழ்ந்ததேனென அறிவாயா... உன் மன்னவனின் மீது உமிழும் முன்னர் உன் மீது உமிழ்ந்து ஒத்திசைவுக் கண்- டேன்... என்ன ஆணவம் உன் மன்னவ- னுக்கு... என் சொல் கேளாமல் முடிவு எடுத்தவன் ஈங்கு வரும் வரை என் எச்சில் உன் முகத்தில் இருக்கவேண்டும்... அதனை அவன் காண வேண்டும்... அவன் காணும் வண்ணம் வாயிலில் நில்" - என்றான் தலைமை அமைச்சன்...

 

காவலன் செல்லும்போது பிற உதவி அமைச்சர்களும் காவலனை தனித் தனியே அழைத்து, காரி உமிழ்ந்தனர்...

 

உமிழ் எச்சில் வடிய, காவலன் உணர்ச்சி- யேதும் அற்ற மரப்பாவை போல்  அகன்று வாயிலை அடைய-

 

அரச மன்றல் வாயிலில் மன்னவனின் தேர் வந்து நின்றது... "செவ்வேள் சேரமன்னன் வருகிறார்... வருகிறார்..." - என்று காவலர் வரவேற்க -

 

தேரிலிருந்து இறங்கிய மன்னவன் மன்ற- லின் உள் நோக்கி ஓடி, ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்திருந்த தலைமை அமைச்ச- னின் தாள் பணிந்து எழுந்து நின்றான்...

 

மன்னவன் வருகையறிந்து பணிப்பெண்கள் எழுந்து நின்று மன்னவனை வணங்கினர்...

 

தலைமை அமைச்சனோ, உதவி அமைச்சர்- களோ துளியும் அசையாது வீராப்புடன் அமர்ந்திருந்தனர்...

 

"அமைச்சரே, தங்கள் வருகையைத்தெரி- வித்திருந்தால், எல்லைக்கே வந்து தங்க- ளை வரவேற்பு செய்திருப்பேன்..."-என்றான்..

 

"மதி இழந்தனையோ?... உம்  மண்டையில் மண்தானோ?... சுடுவெயில்தனை குளிர் எனக் கொள்ளுமோ மலரும்" - என்று சீறினான் தலைமை அமைச்சன்...

 

"வெயில்தனில் வாடிவிடுமே  மலரும்... அறிந்தும் குளிர் எனக் கொள்ளுமோ மலரும்..." -மன்னன் 

 

"என்னிடமே எகத்தாளம் போடுகிறாயோ.. ,மன்னவனே, மாசற்ற நா கொண்டு நான் சபித்தால், உன் குலம் நீசம் ஆகிவிடும்..." -தலைமை அமைச்சன்...

 

"தலைமை அமைச்சரே, அறியா பேதை நான்... சினம் ஏனென சிறியவன் யான் அறியேன்... பெருங்கடல் நிகர் மதியாளனே, தங்கள் அறிவே  எனது அரண்... தஞ்சமென நான் தங்களை அண்டி நிற்கிறேன்... சாபம் என தாங்கள் தீது சொல் கூறிட, தாங்குமோ என் உள்ளம்... பாவி நான் இழைத்த குற்றம் யாதோ"

 

"அடடா... அறியாதவன் போல் மன்னா, அழகாய் உரை செய்கிறீர்... சேரர் மண் சீர் கெட, நீர் இழைத்த பெரும்பாவம் சுமக்கவோ ஆரியர் யாம் அமைச்சராய் உள்ளோம்..." - என்று சிறுவன் அகந்தை பொங்கிட, கால் மீது கால் போட்டு, காலாட்- டிப் பேசினான்...

 

"உதவி அமைச்சரே, அறிகிலேன் நான்... தீது செய்திருப்பின் கூறுக... பரிகாரமும் செய்திட செப்பிடுக" - என்று கெஞ்சினான் மன்னன்...

 

"வடபுலத்தில் உறையும் ஆரியர் எழுவரை அழைத்து அவர் இங்கு வாழ்ந்திட நிலமும், ஆவினமும் தானம் செய்திடுக... அதுவே பரிகாரம்" -என்றான் தலைமை அமைச்- சன்...

 

"காவலனே, வடபுலம் சென்று வறிய நிலையில் வாடும் ஆரியர் எழுவரை அன்போடு - குடும்பத்தோடு - அழைத்து வந்திடுக... அவர் வாழ நிலமும், ஆவினமும் தந்திடல் வேண்டுமென  தளபதியிடம்  உரைத்திடுக" -என்று ஆணையிட்டான் மன்னன்...

 

"உத்தரவு மன்னா" - என்று சொல்லி காவ- லன் ஒருவன் சென்றான்...

 

"தளபதியாம்... அவனுக்கு நீரும் மன்ன-   னாம் ... வேடிக்கையன்றோ... அறிவில்லா உமக்கு நான் அமைச்சன் எனில், நகை செய்யாதோ நானிலம்... வெட்கம்... வெட்கம்... வேதனை... உம்மால் சோதனை சேரநாட்டுக்கு... அறிவீரா அரசே..." - என்றான் தலைமை ஆரியன்...

 

"சேரநாட்டின் மன்னன் என்னால் சேரநாட்டுக்கு சோதனையா?... பாவி நான் செய்த பாவம் என்னவோ?" - என்று மன்னன் கெஞ்சி நின்றான்...

 

"சோழ நாட்டின் கட்டளையை மீறி, சேரநாட்டுக்குள் நுழைந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த உமது செயல் நன்றோ... சோழநாட்டின் பகைதனை விலை கொடுத்து வாங்கிய நீர் பித்தன் எனின் தவறாமோ" - என்று சிறுவன் அமைச்சன் எள்ளி நகையாடினான்... 

 

"சோழநாட்டின் பகையா?" -சேர மன்னன்.

 

"ஏன் மன்னா, இந்த நாட்டில் ஓர் கட்டளை நீர் இட்டால் அதற்கு பணிந்திடல் குடி- மக்களின் கடனன்றோ... கட்டளை மீறுதல் அரச துரோகம் ஆகாதா?... அரசக் கட்டளை- யை  மதியாது, சோழ  மண்ணில் இருந்து வந்தோருக்கு நீர் அடைக்கலம் தருவது சோழ நாட்டின்  உள் கட்டளையை நீர் குறைப் பேசுவது ஆகாதா... சோழப் பேரரசின் பகைக்கு இரையாதல் வேண்டு- மோ  சேர மண்..." - என்று சினம் கொண்டு பேசினான் தலைமை அமைச்சன்...

 

"ஆயினும் அமைச்சரே, தன் நாட்டு பெண்களை  தேவதாசிகள் ஆக்கிட சோழ மன்னன் விழைவது..."

 

"போதும்... நிறுத்துக பேச்சை... அவன் நாடு... அவன் நாட்டு பெண்கள்... அவன் ஏது வேண்டுமானாலும் செய்திட அவனுக்கு உரிமை உண்டு... அதனைப் பிழைக் கூறல் வேண்டாம்... சோழநாட்டின் வளர்ச்சியில்  அந்நாட்டு மன்னன் விருப்பம் கொண்டுள்- ளான்... அந்நாட்டின் கருவூலம் நிரம்பி வழிகிறது... சோழநாட்டை வளம் செழிக்கும் பணியில் அவன் இருக்கிறான்... நீரோ, உம் கருவூலத்தைக் கரைக்கும் அவலத்தைச் செய்துக் கொண்டிருக்கிறீர்... வந்தோருக்- கெல்லாம் வாழ்விடம் வழங்கினால், கருவூலம் என்னாவது... நாட்டின் வளர்ச்சி- யில் நான் சிந்தித்துக் கொண்டிருக்க, நீரோ நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கிறீர்... யாரைக் கேட்டு சோழ நாட்டவரை நம் நாட்டுக்குள் நுழையவிட்டீர்... தலைமை அமைச்சன் என நான் ஒருவன் இருப்பது உமக்குத் தெரியாதா?... என்னிடம் கேளாமல் எதுவும் செய்திடக் கூடாது என்று நான் எத்தனை முறை உமக்கு உரைப்பது?" - என்று சீறினான் தலைமை அமைச்சன்...

 

"ஆரியனின் சொல் மீறுதல், தெய்வகுற்ற- மாகாதா  மன்னா?... தெய்வக் குற்றத்திற்கு உள்ளாகும் நாடும், மன்னன் வீடும் அழிந்துவிடும் என்று எத்தனை முறை உமக்குக் கூறுவது?" - அமைச்சர்களில் ஒரு சிறுவனும் மன்னனைச் சாடினான்...

 

"அமைச்சரே, என் பிழையால் என் வம்சம் அழிந்துவிடக் கூடாது... பரிகாரம் கூறுங்- கள்... "

 

"ஆரியனுக்கு முன்னறிவு அதிகம் என்பதை அறிந்திடுக மன்னனே... பரிகாரமாக வட புலத்தில் இருந்து ஏழு ஆரியக் குடும்பத்தை இங்கு வரவழைத்து வாழ்விடம் தந்திட ஏவலனை ஏவியிருக்கிறீர்... இப்போதைக்கு இதுவே பரிகாரம்..." -தலைமை அமைச்சன்...

 

"அண்டவந்த சோழ நாட்டவரை  விரட்டி- யடித்திடுக இப்போதே" - என்றான் அமைச்சர்களில் ஒருவன்...

 

உடனே குறுக்கிட்ட தலைமை அமைச்சன், "வேண்டாம்... சோழ நாடு தேவதாசி முறை- யால் வருவாயைப் பெருக்கிடும் போது, நாமும் நம் நாட்டின் கருவூலத்தின் வருவா-

யைப் பெருக்கிட வேண்டும்..." என்றான்...

 

"அமைச்சரே, தங்களின் உயரிய சிந்தனை- யால்தான் நம் சேரநாடு செழிப்புடன் திகழ்- கிறது... தாங்கள் கூறுவதை ஏற்கிறேன்... வருவாய்ப் பெருகிட வழிக் கூறுங்கள்..." - மன்னன்...

 

"சோழநாட்டில் செய்திருப்பதுப் போல், நாமும் நம்நாட்டில் தேவதாசி திட்டத்தை நடைமுறைப் படுத்திட வேண்டும்... நானே நேரில் கண்டேன்... சோழநாட்டின் வருவாய் பன்மடங்கு பெருகிக் கொண்டிருக்கிறது... "

 

"அப்படியே செய்திடுவோம் அமைச்சரே... சோழநாட்டில் இருந்து ஓடி வந்த பெண்க- ளை நம்நாட்டில் தேவதாசிகளாக ஆக்கிடு- வோமா... கட்டளையிடட்டுமா  தலைமை அமைச்சரே" -ஆவலுடன் வினவினான் மன்னன்...

 

"மன்னவா, உமக்கு அறிவே இல்லை... நான் சொல்வதை மட்டும் செவிக் கொள்... சோழ நாட்டுப் பெண்கள் நிறத்தில் கருப்பு... நம் சேரநாட்டு பெண்கள் எவரையும் சுண்டி- யிழுத்திடும் நிறம் பெற்றுள்ளனர் இறைவனின் அருளால்... அதனால்; ஆடல் ஆடல் அறிந்த சேரநாட்டு அழகிகளை நம்நாட்டின் தேவதாசிகளாக ஆக்கிடக் கட்டளையிடுக... வணிகத்தின் பொருட்டு இங்கு வரும் அரபு வணிகர்கள் நம்நாட்டு தேவதாசிகள் மீது மையல் கொள்வர்... நம்நாட்டின் வருவாயும் பெருகும்..."

 

"ஆகட்டும் அமைச்சரே, கட்டளையிடுகி-  றேன்... காவலனே இங்கு வருக" - என்று மன்னன் கூவ, காவலன் ஒருவன் வருகிறான்...

 

"படைத்தளபதியிடம் உரைத்திடு... ஆடல். பாடல் அறிந்த சேரநாட்டு கன்னியர் அனை- வரும்  கோயில் மாடங்களுக்கு கொண்டு வரவேண்டும் என்று..."  

 

"உத்தரவு மன்னா" - காவலன் செல்கிறான்...

 

"எப்படி அமைச்சரே, உத்தரவுப் பிறப்பித்து விட்டேன்..." - என்று சொல்லி மீசையைத் தடவிக் கொண்டான்   சேரமன்னன்...

 

"மன்னனே, வேறெந்த நாட்டிலும் இல்லாத இன்னொருத்  திட்டத்தை நம் நாட்டில் நடைமுறைப் படுத்த கட்டளையிட்டு, உல- கினரை வியப்பில் ஆழ்த்தவேண்டும்... அந்தத் திட்டத்தால் நம்நாட்டின் வருவாய்ப் பெருகி கருவூலம் செழிப்படையும்... தங்கள் வாழ்வும் வளமாகும்..."

 

"தங்கள் சிந்தனையால்தானே சேரநாடு செழிப்புடன் விளங்குகிறது... நான் இட வேண்டியக் கட்டளையைக் கூறிடுக..." -என்றான் ஆர்வத்துடன் மன்னன்...

 

"சோழநாட்டில் இருந்து அடைக்கலமாய் வந்தோரை விரட்ட வேண்டாம்... அவர்க-  ளும்   இங்கே வாழட்டும்... அவர்கள் இங்கு வாழ நாம் இடம் கொடுத்தால் சோழ மன்னனின் பகைக்கு உள்ளாக நேரிடுமே என்று உம்முள் கிளறும் அய்யத்தில் உண்மையிருந்தாலும், சோழ மன்னனை-  யும்  மனமகிழ்வு செய்திட என்னிடம் ஓர் எண்ணம் உண்டு"

 

"தங்கள்  எண்ணமே சேரநாட்டின் வாழ்வு"

 

"சோழ மன்னனின் கட்டளைக்கு கீழ்ப்படி- யாமல் ஓடி வந்தவர்களை நாம் சரிநிகராக இங்கே  வாழவிட்டால்தானே  சோழ மன்- னன்   சினம் காட்டுவான் நம்மீது..."

 

"வேறெப்படி வாழவைப்பது அவர்களை?"

 

"கூறுகிறேன் மன்னா, கூறுகிறேன்... சோழநாட்டின் நாடறுத்து வந்த அவர்களை  நாம் நாடறுத்தோர் எனக் குறிப்பிடல்  வேண்டும்... அவர்களை ஒரு கும்பலாக -ஒரே குழுவாக- அதாவது நாடறுத்த இனமாக - நாடறுத்த சாதியாக அறிவிக்க வேண்டும்... நிறத்தில் கருப்பாக இருப்பதால், நாடறுத்து வந்த சாதியினர் என நாம் அவர்களை இனம் காணுதல் எளிது..."

 

" புரிகிறது அமைச்சரே... நாடாறுத்த சாதியினராக அவர்கள்  இங்கு வாழ்ந்திட நான்  கட்டளையிட வேண்டும்..."

 

"மன்னா, நான் சொல்வதை பொறுமையா- கக் கேள்... நாடாறுத்த சாதியினர் இங்கு வாழ, அவர்களின் பெண்கள் முலை வரி செலுத்த வேண்டும்" -தலைமை அமைச்-   சன் ...

 

"முலைக்கு வரியா?..."

 

"ஆமாம் மன்னா, நாடறுத்தோர் வாழ, அவர்களின் பெண்களின் முலைக்கு வரி விதிப்போம்... முலைகளின் அளவுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து விடு"

 

"அற்புதம்... அழகு... முலைக்கு வரி... உமது  மூளைக்கு தானமாக அனந்தபுரத்தில் நான்கு ஊர்களை தானமாக வழங்குகிறேன் ..." - என்று கூறி மன்னன் மகிழ்ச்சி மேலீட்டில் ஆரியனின் தாள் பணிந்தான்...                       

 

 

     

 

 

 

 

 

 

                

 

   

 

 

 

 

 

 

6

உயர்ந்த கட்டிடங்கள் மதுரை நகரின் எழிலுக்கு எழில் சேர்த்தன... பரந்த நெடு வீதிகளும்அகலமான திண்ணைகளும் மதுரையின் கட்டழகைக் கூட்டின... நிழல் மரங்கள் நிரம்பியமதுரையில்  பறவைகளின் இன்னிசை கேட்டு இளைப்பாறும் பயணிகள் ஆங்காங்கே இருந்தனர்...

 

ஒருபயணிஅருகில் இளைப்பாறியிருந்த இன்னோர் பயணியிடம் பேசினார் : "நான் சீனநாட்டிலிருந்து  வருகிறேன்... அய்யாஉங்களிடம் பேச விருப்பம் கொண்டுள்ளேன்... தாங்கள் விரும்பினால் என்னோடு பேசலாம்..."

 

"பாண்டியநாடு வந்திருக்கும் சீனரை நானும் வரவேற்று மகிழ்கிறேன்... சீனரேவணிகத்தின் பொருட்டோ ஈங்கு வந்திருக்கிறீர்..." -என்று கேட்டார் பாண்டியநாட்டு வழிப்போக்கன்...

 

"பாண்டியரோடு பேசுவதில் எனக்கும் மகிழ்ச்சியே... தாங்கள் கூறுவது போல் வணிகத்தின் பொருட்டு வந்திருக்கிறேன்... பட்டால் நெய்யப்பட்ட எங்கள் உடுப்புகளை விற்க பாண்டிய நாடு வந்துள்ளேன்..."

 

"மகிழ்ச்சிசீனரே!... உங்கள் நாட்டு பட்டுடைகளை உடுத்த எம்மவருக்கு மிகுந்த விருப்பம்தான்... ஆனால்;..." - என்று பேசிக் கொண்டிருந்த பாண்டி வழிப்போக்கனின்  பேச்சில் இடைமறித்து, சீனன், "நான் என் சிறு வயதில் என்  தந்தையரோடு  பாண்டி நாட்டுக்கு வந்திருந்தேன்... அதன்பிறகு இப்போதுதான் வருகிறேன்... மதுரையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன..."- என்றான்...

 

"எந்த மாற்றம் கூறுகிறீர்... உயர்ந்த கட்டிடங்களையோ?... அல்லது  வீதியழகையோ?" - என்று வினவினான்  பாண்டிய நாட்டு வழிப்போக்கன்...

 

"எல்லாமும் மாறியிருக்கின்றன... ஆனால்"

 

"ஆனால்?"

"சிறுவனாக நான் இருந்தப் போது  நான் பார்த்த பாண்டியநாடு வேறு... இப்போதுள்ள பாண்டியநாடு வேறு..."

 

"காலையில் அரும்பும் மொட்டு,மாலையில் பூவாக  பூத்திருப்பதில் என்ன வேறுபாடு சீனரே..." 

 

"என்   கண்ணுக்குத் தெரிவது மாற்றத்தின்  வளர்ச்சியல்லபாண்டியரே..."

 

"சீனரேநீர் எதனைக் கூறுகிறீர்?"

 

"சீனநாட்டுக்கு  தமிழ்  வணிகர்கள் வருவ- துண்டு... அவர்களோடுப் பேசி என் தமிழ- றிவை வளர்த்துக் கொள்வேன்...  மேலும்; எங்கள் நாட்டில்  உள்ள கல்விச் சாலைகளி-லும்,  தமிழ்க் கற்றுத் தருகின்றனர்...சேர, சோழ, பாண்டிய  நாடுகளுக்கு  சென்றுஇடையூறின்றி   வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது சீனத்தில் தமிழ் கற்பதால்...தமிழ் மொழியில் சில விளக்கங்கள் அறிய விரும்-பினேன்... அதன்  பொருட்டு மதுரை நகர் முழுதும்  சுற்றித் தேடினேன்... கல்விச் சாலைகள் ஏதும்  என் கண்ணுக்குத் தெரிய-வில்லை...  கண்ணில் கண்ட சில கல்விச்  சாலைகளிலும் தமிழ் மொழிக் கற்றுத்  தரு-வதில்லையாமே... ஏனென்று கூற மறுத்து விட்டனர்...  அரசிடம் சென்று அறிந்துக் கொள்ளுங்கள் என்றனர்... அவர்கள் பேசும் மொழியும் எனக்குப் புரியவில்லை... பாடல் பாடுவதுப் போல் ஏதோ ஓசையுடன் என்னி-டம் பேசினர்...  அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் உங்கள் மண்ணுக்கு  ஏற்புடை-யதாகத் தெரியவில்லையே... குடுமியுடன் காணப்பட்டனர்... அவர்கள் யார்?... ஏன் நாட்- டில்  தமிழ் மொழி கற்றுத் தருவதில்லை..."

 

சீனநாட்டவனின் வினாபாண்டிய நாட்ட- வன்  கண்களில் நீரைப் பெருக்கியது...

 

"அய்யா, அழுவதேன்... நான் ஏதும் குற்றமா-கக் கேட்டு விட்டேனா..."

 

கண்ணீரைத் துடைத்துக் கொன்டே,"அய்யாஅயல் நாட்டில் தமிழ்மொழி கற்றுத் தரப்ப- டுகிறது... ஆனால், தமிழ் மண்ணில் தமிழ் மொழி  தடை செய்யப்பட்ட  மொழியாக இருக்கிறது... எங்களில் யாருக்கும், படிக்க- வும், எழுதவும் தெரியாது... ஏதோ பேசுகி- றோம்... ஆனால்எங்கள் பேச்சிலும் ஆரியம்கலக்கப் படுகிறதுசீனரே...  எங்களில் ஒரு- வரை ஒருவர் பார்க்க நேரிட்டால் "நலமா?" என்று நலம் அறிவோம்... இப்போது "சவுக்கியமா?"  என்று வினவ வேண்டும் என்று எங்கள் அரசு எங்களை கட்டாயம் படுத்துகிறது."

 

"தமிழில் நான் அறியாத சொல்லாக இருக்கிறதே... ‘சவுக்கியமா’ என்பது?"

 

"அது ஆரிய சொல் அய்யா...  தமிழ் மொழி தனித்து இயங்கினால், சேரநாட்டுக்கு இன்-னல் வருமாம்... அதனால், ஆரியம் கலந்து பேசிட வேண்டுமாம்..."

 

"பாண்டியரே, நீர் சொல்வது வியப்பாக இருக்கிறதே... ஆரியம்  என்பது எந்த நாட்டு மொழி..."

 

"அந்த மொழிக்கு நாடேதுமில்லை அய்- யா..."

 

"அந்த மொழிக்கு உரியோர் எவர்?

 

"நீர் குடுமியுடன் சிலரைப் பார்த்ததாக கூறினீரே"

 

"ஆம்... கல்விச்சாலையில்..."

 

"ஆம் அவர்கள்தான் ஆரியர்... நாடோடிகள்.."

 

"... இவர்களை நான் கேள்விப் பட்டிருக்கி- றேன்... மாடுமேய்த்து வந்தவரோ இவர்கள்."

 

"ஆமாம்; அய்யா... அப்படித்தான் எங்கள் நாட்டில் பேசிக் கொள்கிறார்கள்..." 

 

"அவர்கள்தான் இவர்களும்... அய்யா... எங்கள் முன்னோர் இத்தகைய நாடோடிகள் குறித்து எங்கள் நாட்டில் சொல்லியிருக்- கிறார்கள்... மாடு மேய்த்துத்தான் எங்கள் நாட்டுக்கும் வந்தனராம்... எங்கள் மக்கள் வளர்த்த விலங்குகளை ஆரியர்கள் திருடி- னார்களாம்... விலங்குகளை வேட்டையாடி தின்பார்களாம்... எங்கள் நாட்டில் அப்போது பெரும்பசி நிலவிக் கொண்டிருந்தக் காலமாம்... எங்கள் காட்டில் எங்கள் விலங்குகளை ஆரியர்கள் வேட்டையாடி- யது எங்கள் மக்களுக்குப் பிடிக்காமல்விரட்டி விட்டனராம்... அங்கு விரட்டியடிக்- கப்பட்ட ஆரியர்கள் இங்கு வந்து சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது..."

 

"அய்யா இவர்களின் கொடுமைத் தாள முடியவில்லை... இவர்களின் பேச்சைக் கேட்டு, எங்கள் மன்னன் கல்விச் சாலைகளை மூடிவிட்டான்... எங்கள் நாடே எங்களை இழிவுச் செய்கிறது, சீனரே..." - வழிப்போக்கன் சொல்லி நீர் கசிந்தான்...

 

"என்னது... எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கு உரிமையுடன் வாழ, இந்த நாட்டுக் குடிகள் நீங்கள் அழுது நிற்பதா... மக்கள் உங்கள்  மன்னவனை எதிர்க்கவில்லையா..."       

 

"ஓசையுடன் பேசாதீர்கள்... ஒற்றர் கேட்க நேர்ந்தால் கொன்று விடுவர்..."

 

"உங்கள் பேச்சைக் கேட்டப் பிறகு பாண்டிய நாட்டில் இருக்க அச்சமாக இருக்கிறது..."

 

 "கல்விச்சாலையில் தமிழ் மொழி கற்றுத் தருவதில்லை ஏனென்று கேட்டதற்கு என்ன சொல்லப்பட்டது அங்கு?" - பாண்டிய நாட்டு வழிப்போக்கன்...

 

"அரசிடம் சென்று கேட்கச் சொன்னர் குடுமி- கள்"

 

"நீங்கள் அயல் நாட்டவர் என்பதால் அரசனி- டம் செல்ல  கூறினர்... இப்படிக் கேட்ட எங்கள் நாட்டவரை அதே இடத்தில் கழுத்த- றுத்துக் கொன்று விட்டனர் அரசின் காவலர்- கள்... நீங்கள் அரசனிடம் சென்று கேட்டிருந்- தால், உங்களையும் அரசன் கொன்றிருப்- பான்..."

 

"எனக்கு அச்சமாக இருக்கிறது... நான் பாண்- டிய நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் அய்யா..."

 

"கல்வி குறித்து எவரிடமும் வினவாதீர் சீனரே, சென்று வருக" -என்றான் வழிப்போக்கன்...

 

"சரி அய்யா... நான் புறப்படுகிறேன்... சோழ நாடு செல்கிறேன்... அங்கு ஒருவரை சந்திக்- க வேண்டும்..." - என்றான் சீனன்...

 

"சென்று வருக... சீனரே, சோழநாட்டிலும் நிலைமை சீரில்லை என்று கேள்விப் பட்டேன்... தக்க முறையில் பயணம் செய்க...  வணிகத்தின் பொருட்டுதானே சோழநாடு செல்கிறீர்..."

 

"இல்லை அய்யா... சோழ நாட்டவன் ஒருவனிடம்    ஒரு ஓலையைக் கொடுக்க  வேண்டும்...  அதன் பொருட்டே செல்கிறேன்..."

 

"அய்யா, எழுத்தோலை வைத்திருப்பது குற்றமாகும்... அதனால், அந்த ஓலையைத் தூக்கி ஆற்றில் எறிந்துவிட்டு செல்லுங்கள்..."

 

"அய்யா, சீன நாட்டில் இருந்து, நான் கிளம்பும் போது, ஒரு சோழ நாட்டவன் வந்து, 'அய்யா, பாண்டிய நாடு தாங்கள் செல்வதாக அறிந்தேன்... சோழ நாட்டுக்கும் செல்வீர் எனில் இந்த ஓலையை நான் குறிப்பிடும் இடத்திற்கு சென்று கொடுத்து விடுங்கள்...' என்று சொல்லி ஒரு ஓலை- யைக் கொடுத்துச் சென்றான்... அவனுக்கு நான் கொடுத்த உறுதியை மீற நான் விரும்ப வில்லை... வருகிறேன்..." - என்றுச் சொல்லி மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினார்...

 

"அய்யா, ஒரு ஓலைக்காக உங்கள் உயிரை விட்டு விடாதீர்கள்... சூழல் இங்கு சரியில்- லை..."

 

"என்னவாயினும், நான் கொடுத்த வாக்குறு- தியைக் காப்பது என் கடன்... நான் வருகி- றேன்..."

 

"உங்களுக்கு நிலைமையை சொல்வது என் கடன் அல்லவா... சீனரே, சீனத்திற்கு சென்- றுத் திரும்பும்  சோழர்களிடம் ஓலையைக் கொடுத்தனுப்பாமல் அந்த சோழநாட்டவன்  உங்களிடம் கொடுத்தனுப்பியது ஏன்?... கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..."

 

"ஆமாம் சோழர்களும் என்னோடு இருந்தன- ரே... அவர்களிடம் தராமல் சோழன் என்னி- டம் தர வேண்டியதன் தேவை என்ன?"

 

"என்னிடம் கேட்டால்?... உங்களுக்குத்தான் தமிழ்ப்  படிக்கத் தெரியுமே... அந்த ஓலை- யில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீரா..."

 

"இல்லை..."

 

"இப்போதாவது படித்துப் பார் சீனரே"

 

சீனன் மூட்டையை அவிழ்த்து, ஒரு சிறு பேழையில் இருந்த ஓலையை வெளியே எடுத்து, "தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்- கும்  ஓலைதான்" - என்று சொன்னான் சீனன்...

 

சீனன் தொடர்ந்து, "கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை" -என்று படித்தான்...

 

உடனே பதைப்புடன் பாண்டிய நாட்டவன், "அய்யா கற்க இயலாவிட்டாலும், கற்றவ னிடம் கேட்டுத் தெரிந்து கொள்... அது ஊன்றுகோல்  போல் உதவும் என்று எழுதப் பட்டிருக்கிறதே... யாரய்யா அந்த சோழன்" -என்று கேட்டான் 

 

"சோழநாட்டு வணிகனின் மகனாம்... மொழி ஆராய்ச்சியின் பொருட்டு  சிறுவயதிலேயே நாடுகள் பலவற்றிக்கு பயணம் மேற்கொண்  டானாம்... அதன்படி சீனத்திற்கும் வந்திருப்-பதாகச் சொன்னான்... அவன் பெயர் என்ன வென்று நான் கேட்கவில்லை" -என்றான் சீனன்...

 

"சீனரே, அயல் நாட்டில் இருக்கும் ஒரு சோழனுக்கு, இந்நாட்டின் அவலம் தெரிந்தி- ருக்கிறது... கல்வி தடைபடக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் எழுதியிருக்கிறான்...  அவனுடைய எண்ணம் ஈடேற வேண்டும்... நான் கற்றவன் அல்ல என்றாலும், நீர் கற்க, நான் கேட்டதால் என்னுள் துள்ளல் பிறந்து விட்டது... எப்படியாகிலும் உரியோரிடம் ஓலையை சேர்த்திடுக... அரசுக்கு தெரிந்- தால்  மரணம் நிச்சயம் என்பதையும்  நினைவில் கொள்க, சீனரே"

 

"ஆனாலும் பாண்டியரே, இந்த ஓலையை உரியவரிடம் சேர்ப்பிப்பதாக நான் உறுதி அளித்து விட்டேனே"

 

"நல்லது சீனரே, இங்கு பிறந்த எனக்கு இந்- நாட்டின் மொழியைப் படிக்க தெரியவில்- லை... சீனத்திலிருந்து வந்திருக்கும் நீர் தமிழ் படிக்க நான் கேட்கிறேன்... கல்வி முற்றிலுமாக அழிந்துவிடக் கூடாது இந்- நாட்டு மன்னவனின் இழிநடத்தையால்... ஆகட்டும் சீனரே, உரியவரிடம் சென்று ஓலையை கொடுத்திடுக... நன்று சீனரே, நானும் வருகிறேன் உம்மோடு... உமக்கு உதவுதல் பொருட்டு" - என்றான் பாண்டிய நாட்டவன்...             

 

மீண்டும் ஓலையை பேழைக்குள் வைத்துக் கொண்டே, "அய்யா கற்றலின் தேவையை நாங்கள் நன்கு அறிவோம்... ஒட்டு மொத்தமாக நாட்டின் மக்களுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதியாகும்... நான் எனது சீனப் பயணத்தை நிறுத்திவிட்டு, தமிழ் மக்-களுக்கு தமிழ் கற்றுத் தருவேன் என் உயிரைத் தந்தேனும்..." என்று சொல்லி மூட்டை முடிச்சுகளுடன் நடையிட்டான் பாண்டிய நாட்டவனோடு...




7  ஆயக்கலைகள்

புகார் நகரின்  பெரியதோர்    சிற்பவரங்கம்... உளிகளின் ஓசை தாளலயத்துடன் ஒலித்- துக் கொண்டிருந்தது... 

 

சிற்பிகள் சிற்பம் செதுக்கும் பணியில் கருத்- துடன் ஊன்றி இருந்தனர்...

 

ஒவ்வோர் சிற்பிக்கும் எதிரில், பட்டு சேலை உடுக்கப்பட்டு ஓர் இளம்பெண் அலங்கரிக்- கப்பட்டு, தலையில் மகுடம் சூடப்பட்ட கோலத்துடன் அமர்ந்திருந்தனர்...

 

ஒரு பெண்ணின் கையில் வேல் இருந்தது... இன்னோர் பெண்ணின் கையில் சூலம் கொடுக்கப்பட்டிருந்தது...

 

மற்றோர் பெண்ணின் கையில் உடுக்கை கொடுக்கப்பட்டிருந்தது...

 

ஒவ்வொரு பெண்ணுக்கும் அருகில், அலங்- கரிக்கப்பட்ட இருக்கையில் ஓர் ஆரியன் அமர்ந்திருந்தான்... அவன்  சொல்வதற்கேற்- ப இளம்பெண்கள் தோற்றம் தந்துக் கொண்- டிருந்தனர்... ஆரியன் மார்பில் நூலும், உச்சித் தலையில் குடுமியும் இருந்தன... 

 

பெண்ணின் தோற்றத்தை சிலையில் வடிவமைத்துக் கொண்டிருந்தனர்,சிற்பிகள்.

 

யாவற்றையும் ஓர் தலைமை ஆரியன் கண்காணித்துக் கொண்டிருந்தான்...

 

"அம்பி, அவளை முறைத்துப் பார்க்க சொல்" என்று திருத்தம் கொண்டிருந்தான் தலை- மை ஆரியன்...

 

"அம்பி, இவா என்னடா சிரிக்க மாட்டாளா... சிரிக்க சொல்லேண்டா" என்றுச் சொல்லி தோற்றம் கொடுத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் உதடுகளை இழுத்து விட்டான், தலைமை ஆரியன்...

 

 இன்னோர் பெண்ணுக்கு அருகில் சென்ற தலைமை ஆரியன், ஆங்கிருந்த ஆரியனி- டம், "அம்பி, இவா உடுக்கை சிறிதாக இருக்- கே... இன்னும் பெரிய உடுக்கை எடுத்துக் கொடு... ஏய் தேவதாசி  உடுக்கையைக் கை- யில்  பிடித்தால் மட்டும் போறுமா... ஆவேச- மாய் பார்க்கணும்டி " என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய இமைகளை இரு விரல்கள் கொண்டு விரித்து விட்டான்...

 

அப்போது, தேர் ஒன்று வந்து நின்றது... அதிலிருந்து முதலில் இறங்கிய காவலர்- கள், "மன்னர்  வருகிறார்... மன்னர் வருகிறார்" -என்று கூவிக் கொண்டே, முன்னே சென்று அறிவிக்கைச் செய்தான்... 

 

கூவலை செவிமடுத்த சிற்பிகள், செதுக்குவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றார்கள்... அங்கிருந்த ஆரியர்கள் சற்றும் செவிமடுக்காதவர் போல், இருக்கையில் அமைத்திருந்தனர்...

 

தேரில் இருந்து பாண்டிய மன்னரும், மன்னரைத் தொடர்ந்து தடித்த ஆரியனும் இறங்கினான்... தடித்த ஆரியன் பாண்டிய நாட்டின் தலைமை அமைச்சன் ஆவான்...

 

சிரவரங்கினுள் நுழைந்த மன்னவனையும், தலைமை அமைச்சனையும் கண்காணிப்பு ஆரியன் வரவேற்றான்...

 

"மன்னவா, வருக..." -என்று வரவேற்ற  கண்காணிப்பு ஆரியன், தலைமை அமைச்ச- னைப் பார்த்து, "நமஸ்கார்" - என்றுச் சொல்லி புன்முறுவலுடன் வரவேற்றான்... 

 

"சிற்பம் செதுக்கும் பணி சீருடன் நடை- பெறுகிறது போலும்" என்று சொல்லிக் கொண்டே பாண்டிய மன்னன் மீசையை வளைத்து விட்டுக் கொண்டான்...          

         

"மன்னா, இந்த அந்தணனை  கலிங்கநாட்டி- லிருந்து வரவழைத்தேன்... சிற்பம் செதுக்- கும் பணியை செவ்வனே பார்வையிடுவான் ..." - என்று சொல்லி கண்காணிப்பு ரிய- ணை அறிமுகம் செய்துவைத்தான்...

 

உடனே, மன்னவன், கண்காணிப்பு ஆரியனின் பாதம் தொட்டு வணங்கி, எழுந்து நின்று  "உங்கள் மேற்பார்வையில் பணி சிறக்கட்- டும்... பாரினில் எங்கும் இல்லாத சிறப்புடன் கோயில் கட்டித் தருவதாக, தலைமை அமைச்சர் கூறியிருக்கிறார்..." –என்றான்...

 

"மன்னவா, உலகே வியக்கும் வண்ணம் நமது பாண்டிய நாட்டுக் கோயில்கள் விளங்கப் போகின்றன... நம் பாண்டிய நாட்டின் கருவூலம் செழிக்கப் போகிறது... அண்டைநாட்டு மன்னவர்கள் வியப்பில் மாளப் போகிறார்கள்..."

 

"அமைச்சரே, கோயில் கட்டினால் அரசின் வருவாய்ப் பெருகும்தானே?"

 

"அய்யமென்ன... துளிகள் வீழ்ந்து குளம் நிரம்புவது போல், பாண்டிய நாட்டின் கருவூலம்  நிரம்பி வழியத்தான் போகிறது... நீங்கள் காணத்தான் போகிறீர்கள்" -என்றான் தலைமை அமைச்சன்...

 

செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிலைக- ளையும், சிலைகளுக்கு தோற்றம் கொடுத்-துக் கொண்டிருந்த தேவதாசிகளையும் ஒப்பிட்டு நோக்கினான் பாண்டிய மன்னன்...

 

"அமைச்சரே, நமது தேவதாசிகள் மிக மிக அழகாக இருக்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே ஒரு தேவதாசியின் முதுகைத் தடவினான் மன்னன்...

 

"பாண்டிய மன்னா, பாங்குடன் உள்ளே வருக... இன்னும் அழகைக் காணலாம்" - என்று சொன்ன தலைமை அமைச்சன், மன்னவனை உள் அரங்கிற்கு இட்டுச் சென்றான்...

 

உள் அரங்கிலும்  உளிகள் ஓசை  ரீங்கார- மாக இருந்தது... மன்னவனைக் கண்ட சிற்-பிகள் எழுந்து நின்றனர் உள் அரங்கினுள்...

 

ஆனால், மன்னவன் திகைத்து நின்றான்... தன்னை மறந்து நின்றான்... தன்னை இழந்து நின்றான்...         

 

விரிந்த கண்பாவை மூடமறுத்து குத்திட்டு நின்றன மன்னவனுக்கு... சிற்பம் செதுக்கும் அரங்கில் மன்னன் சிற்பமாய் நின்றான்...

 

மன்னா, மன்னா...” -என்று  தலைமை அமைச்சன் அழைத்து மன்னவனை விழிப்பு நிலைக்கு கொணர்ந்தான்...

 

இன்னமும் வியப்பில் இருந்து மீளாமல், "அமைச்சரே..." -என்று முணுமுணுத்தான்...

 

மன்னவன் வியப்பில் இருந்து மீளவியலா- மல் தவிப்பது ஏனென்றால், ஓர்  இளைஞ- னை வளைத்து நின்று, ஒன்றுக்கும் மேற் பட்ட இளம்பெண்கள்  இருந்தனர்... 

 

ஆணும் பெண்ணும் ஆடையேதுமின்றி,  தோற்றமளித்துக் கொண்டிருந்தனர்... 

 

"அமைச்சரே..." -என்று மன்னவன் முனகி- னானேயன்றி, அவனில் இருந்து, ஓசை வரவில்லை...

 

தலைமை அமைச்சன், "ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும் சித்தரித்து தோற்றமளிக்கின்றனர் தேவதாசிகள்... அவர்களிடம் உல்லாசம் காண்பது போல் இருப்பவன் ஒரு சூத்திரன்தான்..." -என்றான்...

 

"ஏன் எதற்காக?"

 

"மன்னா, கோயில் கட்டினால் போதுமா... கோயிலுக்கு கூட்டம் வரவேண்டாமா"

 

"அதற்கும் இதற்கும்..."

 

"மன்னா, அறுபத்து நான்கு கலைகளையும் சிற்பங்களாக வடித்து, கோயிலைச் சுற்றி- லும் - கோபுரத்திலும் - வைத்து விட்டால், இதனைக் காண கண்ணில்லாதவனும்  வருவானே... எண் திசையிலிருந்தும் ஏக்- கத்தோடு வருவோர் கோயிலுக்குச் செலுத்தும் காணிக்கையால், மதுரையின் கருவூலம் நிரம்பிடும் அழகை நீர் கண் கொண்டு காணும்போதுதான் ஆரியரின் அற்புதத்தை அறிவீர்..." -என்றான் தலை அமைச்சன்...

 

"இல்லை... இல்லை... நான் ஏதும் சொல்- லேன் இல்லை... ஆரியர் நீங்கள் அரசின் கருவூலம் நிரம்பிடவே வந்த அவாதாரர்- கள்..." - மன்னன் வியப்பில் இருந்து மீளா- மல் பிதற்றினான்...

 

"மன்னா, சோழநாட்டிலும், சேரநாட்டிலும் தேவதாசி முறைக் கொண்டு வந்தனர்... அதனை அறிந்து யாமும் ஈங்கு தேவதாசி- கள் படைத்தோம்... ஆயினும் வருவாய் சொற்பமே... ஆயக்கலைகள் அறுபத்து நான்கினைக் காட்டும் சிற்பங்கள் வேறெந்த நாட்டிலும் கண்டீரோ, மன்னா"

 

"இல்லை... காதலும் கேட்டதில்லை..."

 

"ஆயக்கலைகளை நாம் வடித்து வைத்தால், பாரினில் பாண்டியநாடு பேர்விளங்கும்... இப்படியோர் சிலை வடிப்பை எவர் செவிக்- கும் எட்டாத வண்ணம் செய்கின்றோம்... செய்து முடித்து கோயிலில், சிற்பங்களை காட்சிக்கு  வைத்து விட்டால்மதுரை நாட்டின் கருவூலம் தங்களைத் தாலாட்டும்" - என்றுச் சொன்ன தலைமை அமைச்சனின் பார்வை, தோற்றம் தந்துக் கொண்டு இருந்த ஒரு தேவதாசியின் மீது படிந்தது...

 

வேகமாக அவளருகில் சென்று, அவளுடை- ய கூந்தலைப் பிடித்து ஆட்டி, "இந்த நிலை- யில் உன் கண்களில் மயக்கம் தெரிய வேண்டாமா... சூத்தரச்சியே..." என்றுச் சொல்லி இடுப்பின் மீது எட்டி உதைத்தான்..

அருகில் சென்ற மன்னன், "அமைச்சனே, இவள் அழகாக இருக்கிறாள்... இவளை அந்தப்புரத்துக்கு அனுப்பிடுக" - என்று ஆணையிட்டான்...

 

"ஏய் தேவதாசியே, மன்னனின் அந்தப்புரத்- துக்கு செல்ல உனக்கு யோகம் பிறந்து விட்டது... போ..." -என்றான் தலைமை அமைச்சன்...

 

அவள் அதேகோலத்தில் எழுந்துநின்றாள்...

 

அரசன் அவளை நோக்கி, "எங்கிருந்து பெற்றாய் ஏந்திழையே உன் எழில் உருவை... கட்டித் தங்கமோ உன் கட்டுடல்" -என்று புகழ்ந்தான்...

 

அவளோ, முகத்தில் எவ்வித உணர்வினை- யும் வெளிப்படுத்தாது ஊமையாய் நின்றாள் ... கண்களில் வேதனையிழைந்தது...  

 

பிறகு அமைச்சனை நோக்கி, "அமைச்சரே அழகியிவளோடு அந்தப்புரம் செல்கிறேன் நான்... கோயில் திருப்பணிக்கு நிதியை அளவின்றி எடுத்துக் கொள்க... கோயிலை வடிக்கும் உங்கள் கரங்களுக்கு காணிக்கை இதோ..." - என்றுச் சொல்லி தான் அணிந்தி- ருந்த  முத்துமாலையொன்றை பரிசாக ஆரியனுக்குக் கொடுத்தான்...

 

அழகியோடு மன்னன் முன்னே சென்று தேரில் புறப்பட்டான்...

 

மன்னன் அகன்றவுடன், தலைமை அமைச்சன், கண்காணிப்பு ஆரியனிடம், "ஒய்... வேலையில் அக்கறையுடன் இரும்" - என்று சொல்லி, அங்கிருந்த பல்லக்கில் அமர்ந்தான்...

 

பல்லக்கை எட்டு தமிழர் தூக்கி விரைந்தனர் ...

 

பல்லக்கு மறையும் வரை சாலையில் நின்- றிருந்தான் கண்காணிப்பு ஆரியன்...

 

அவன் வெளியே நின்றிருந்த வேளையில் மெல்லியக் குரலில்

ஒரு சிற்பி, அருகிலிருந்த சிற்பியிடம் சொன்னான் : "சிலை வடிப்பது நாம்... பரிசுத் தருவதோ ஆரியனுக்கு" - என்று நொந்து முனகினான்...    

 

 

 

 

8 – ஓலைச் சுவடிகள் எரியூட்ட ஆணை...  

உள்ளூர் வணிகர்களும், அயல்நாட்டு வணிகர்களும் நடமாடிக் கொண்டிருக்கும் - அங்காடிகள் நிறைந்தசோழநாட்டின் தெரு...  

 

அங்காடிகளில் வணிகர் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தனர்...

சீனநாட்டின் பட்டுத்  துணிகளும் - உள்ளூர் அணிகலன்களும்  விற்கும்  அங்காடிகள் நிறைந்திருந்தன...

 

சுமை தூக்கிகள் மாட்டு வண்டியிலிருந்து சுமைகளை இறக்கிக் கொண்டிருந்தனர்... 

 

சில வண்டிகள் சுமைகளோடு வந்து கொண்டிருந்தன... சில வண்டிகள்  சுமைகளை ஏற்றிக் கொண்டுசென்றுக் கொண்டிருந்தன...

 

ஆங்காங்கே பட்டறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன... நெய் மணக்கும் இனிப்புக் கூடங்களும், சுவை மிகுந்த பழங்கள் விற்கும் அங்காடிகளும் இருந்தன...

 

அயல் நாட்டில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பழங்கள் இருந்தன... கனிகளின் நறுமணம் கமழ்ந்து, மக்களை ஈர்த்தது...

 

உள்ளூரில் நெய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் இருந்தன... குழந்தைகள் விளையாடிடும் பொருட்கள் குவிந்திருந்தன...

 

வேடிக்கை அரங்குகளிலும் கூட்டம் இருந்தன... வணிகர் பசியாறிட, உணவுக் கூடங்கள் இருந்தன...           

 

ஒவ்வொரு அங்காடியையும் வேடிக்கைப் பார்த்த வண்ணம் நடந்து வந்த   வேலவன் ஓர் அங்காடியின் முன் திகைப்பெய்தி நின்றான்...

 

"அய்யா, என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்" - என்று பதைபதைப்புடன் அங்காடியருகே ஓடினான் வேலவன்...

 

"ஏன் தெரியவில்லையா... தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை நெருப்பில் இட்டு சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறேன்..." - என்றான் சுவடிகளை நெருப்பிலிட்டுக் கொண்டிருந்தவன்...

 

"ஏனய்யா? ஏன்?... நமது இலக்கியங்கள் தீயில் கருகிடவோ யாத்தனர்..."

 

"இதனைக் கருக்காமல் இருந்தால் என் தலை அறுக்கப்பட்டுவிடுமே..."

 

"தலை அறுப்பா?... என்ன சொல்கிறீர்?... தமிழ் மொழியை நெருப்பில் இட்டு கருக்கிடுவதோ உமதுப் பணி?"

 

"அல்ல... சுவடிகள் படி எடுத்துத் தருவதுதான் என் பணி... சுவடிகளை படி எடுத்திட என்னிடம் பணிபுரிந்தோர் யாவரும் தெருதனைத் தூய்மைப் படுத்தும் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்..."

 

"கிளை முறிந்து விட்டது என்பதற்காக, மரத்தை வெட்டுவோமா?... பணிபுரிந்தோர் சென்றுவிட்டனர் என்பதற்காக, ஓலைச் சுவடிகளை ஒழிப்பார் உண்டோ"

 

"தவறு, அய்யா!... பணிபுரிந்தோர் தானாக செல்லவில்லை... அழைத்து செல்லப்பட்டு விட்டனர், தூய்மைப் பணிக்கு, நாட்டின் காவலரால்" - என்று சொல்லிக்கொண்டே பெட்டியில் இருந்து, ஓலைச்சுவடிகளை ஒவ்வொன்றாக எடுத்து நெருப்பிலிட்டான்...

 

"அய்யா, நிறுத்தும் அய்யா..." - என்றுச் சொல்லி, நெருப்பினுள் இடப்பட்ட ஓலைச் சுவடிகள் மீது நீர்த் தெளித்தான் வேலவன்...

 

"அய்யா, நீர் யார்?... ஏன் என் பணிக்கு இடையூறு செய்கிறீர்?"

 

"தாலாட்டப்படவேண்டிய குழந்தையை நீர் தாலாட்டியிருந்தால் உம்மை ஏதும் நான் வினவியிருக்க மாட்டேன்... தாலாட்டப்பட வேண்டிய குழந்தையின் விழிகளை நீர் நோண்டினால், அதனைத் தடுக்கும் உரிமை எனக்கும் உண்டு"

 

"உரிமைப் பேசுவதாயிருந்தால், அரண்ம- னைப் போ... உமது சிரம் அறுத்திட ஆரியர் ஆங்கு உண்டு... இங்கே நின்று உரிமை என்று நீர்ப் பேசி, என் சிரம் அறுப்புக்கு உள்ளாகாதீர்கள்..."

 

"அய்யா, புரியவில்லை எனக்கு... உமது சிரம் அறுப்பவன் எவன்?"

 

"சோழநாட்டின் வேழன்... நம் எல்லாரின் வேந்தன்... சோழ நிலத்தின் மாமன்னன்... அவன் இட்டகட்டளையிது... தமிழ் மொழி- யில் உள்ள ஓலைச்சுவடிகள் யாவற்றை- யும், நெருப்பில் இட்டு சாம்பலாக்கு என்று... மறுமுறை ஆய்வுக்கு வரும் போது ஒரு சுவடி தென்பட்டாலும், கழு மரத்தில் ஏற்றி, கழுத்து  கொய்யப் படுமாம்..."

 

"தமிழ் வேந்தனே, தமிழ் மொழியை நெருப்- பில் இட கட்டளையிட்டானா?..."

 

"நாட்டின் நிகழ்வுகளை அறிந்திட இயலாத உறக்கத்தில் இருந்தீரோ நீர்... விலகுமய்யா ... எரியூட்டப் படவேண்டிய சுவடிகள் ஏராள- மாய் இருக்கின்றன..."

 

"அய்யா, எரியூட்ட வேண்டாம்... நான் எடுத்துச் செல்கிறேன்... தமிழ் சுவடிகள் யாவும் தமிழ் மொழியின் செல்வமாகும்..." - என்று வேலவன் கெஞ்சினான்...

 

"புரியாமல் பேசாதீர்...  ஓலைச்சுவடிகள் உம்மிடம் இருப்பது ஆரியனுக்கோ, சோழநாட்டு வீரன் எவனுக்கோத் தெரிய நேர்ந்தால், உம்மை கொன்று விடுவர்... அங்காடித் தெருவுக்கு எந்தப் பணிக்காக வந்தாயோ, அந்தப் பணியை மட்டும் பார்த்துச் செல்..."             

 

"என் உயிர்ப் போனாலும், நான் இடந்தர மாட்டேன்; என் கண்ணெதிரில் தமிழ் வெந்து மடிவதை" - என்றுச் சொல்லி, வேலவன் சுவடிகள் அடுக்கப்பட்டிருந்த மரப்பெட்டியை தூக்கி தோளில் சுமந்து நடந்தான்...

 

"அய்யா, நில்லும்... உம்மால் சுவடிகள் காக்கப்படும் எனில், என்னிடம் உள்ள சுவடிகள் யாவற்றையும் தருகிறேன்... ஆனால்; உன் உயிரோடு நீ விளையாடு கிறாய் என்பதை நினைவில் கொள்...  சோழநாட்டில் தமிழர் எவரும் கல்வி கற்கக் கூடாது என்று மன்னவன் கட்டளையிட்- டுள்ளதை நீ அறியவில்லையா?"

 

"அறியேன்... அயல்நாடு சென்றிருந்தேன் பணியின் பொருட்டு... இன்று காலைதான் திரும்பினேன்...  கனிகள் வாங்கிச் செல்ல அங்காடித் தெருவுக்குள் நுழைந்த நான், சுவடிகளை நீர் நெருப்பில் எரியூட்டிக் கொண்டிருப்பதை கண்டே, உம்மிடம் வந்தேன்... தமிழர்கள் ஏன் கல்வி கற்கக் கூடாது..."

 

"அரசிடம், நீர் கேள்விக் கேட்பது அரசுக்கோ, ஆரியருக்கோ தெரிந்தால் உன் நாவினை நெருப்பால் பொசுக்கிடுவர்... தமிழ் குழந்- தைகள் கற்று வந்த கல்விக் கழகங்கள் ஆரியரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்- டுள்ளது... தமிழர்கள் கல்விக் கழகங்கள் பால் செல்ல தடை விதித்து கட்டளையி டப் பட்ட அதே நாழிகையில், தமிழ் மொழியில் உள்ள ஓலைச் சுவடிகளையும் எரியூட்ட கட்டளையிடப் பட்டது... கட்டளையிடப்பட்ட நேரத்தில், யார் யார் என்ன தொழில் செய்துக் கொண்டிருந்தன- ரோ, அவரவர் அத்தொழிலை தம் குழந்தை- களுக்கும்  கற்றுத்தர வேண்டும் என்றும், குழந்தைகளை கல்விக் கழகங்களுக்கு அனுப்பக்கூடாது என்றும், உறுதியானக் கட்டளையிடப் பட்டது..."

 

"அய்யா, அதன்படி, உமது குழந்தைகளை நீர் ஓலைச்சுவடிகள் படியெடுக்கும் பணியில் அமர்த்தி விட்டீரா?" -வேலவன்...       

 

"அய்யா, நான் சொல்வது உமக்குப் புரியவில்லையா... தச்சு தொழில் ஒழிக்கப் படவில்லை... அதனால் தச்சு வேலை செய்துக் கொண்டிருந்தவர் தம்  குழந்தை- களை  தச்சுப் பணியில்  அமர்த்திக் கொண் டனர்... அதேபோல், ஓவியம், பட்டறை போன்ற பணிகளுக்கும் குழந்தைகள் அமர்த்தப்பட்டு, குழந்தைகளின் கல்வி  தடை  செய்யப்பட்டது... ஆனால்;..."

 

"ஆனால்?" - வேலவன்...

 

"நான் பார்த்துக் கொண்டிருந்த ஓலைச் சுவடிகளில் தமிழ் எழுதும் பணி முற்றிலு- மாக தடைச் செய்யப்பட்டது... என்னோடு பணியாற்றியவர்கள் பணியற்றவர் ஆயி- னர்... என் போல் ஓலைச்சுவடி எழுத்தர் அனைவரும் பணியற்றவர் ஆயினர்... அதனால், கல்வி உரிமை மறுக்கப்பட்ட என் குழந்தைகளும் பணியற்றவர் குழந்தைக-ளாயினர்..."

 

"அப்படியானால்?"

 

"பணியற்றவர்களாகிய என் போன்றோர், நகர் தூய்மையாளராக ஆக்கப்பட்டிருக்கி- றோம்... இந்த ஓலைச் சுவடிகளை, எரித்து விட்டு எனக்காக ஒதுக்கப்படும் பணிக்காக நான் செல்ல வேண்டும்..."

 

"அய்யா, தமிழ் மக்களுக்கு தமிழ் மன்னவ- னாலேயே அநீதி இழைக்கப் படுகிறது எனில், மனம் ஒப்ப மறுக்கிறது... அதனால்; உம்மிடம் இருக்கும் ஓலைகள் எல்லாவற்- றையும் எடுத்துச் செல்கிறேன்... எத்தகைய சூழலிலும்  ஓலைகள் அழியாமல் காப்பேன் ... இது உறுதி... சுமை வண்டி ஒன்று இட்டு வருகிறேன்... அதில் ஓலைகள் ஏற்றிச் செல்கிறேன்... நீர் ஓலைகள் கொடுத்ததாக எவரிடமும் கூறமாட்டேன்... நீரும் சொல்ல வேண்டாம்... ஓலைகள் எரித்து சாம்பலாக்-கப் பட்டதாக அரசிடம் கூறிடுக..." -என்றார் 

 

"தமிழுக்கு நன்மை விளையும் எனில், நான் உடன்படுகிறேன்..." - என்றான் ஓலை சுவடியான்...

 

வேலவன் பொதி வண்டிக்காக சென்றான்... சிறிது நேரத்தில், சுமை - பொதி - வண்டியோடு வந்து, ஓலைகளை ஏற்றிக் கொண்டு, புறப்பட்- டான்...  

 

பார்வையிலிருந்து மறையும் வரை, வண்டியை பார்த்து நின்றான் ஓலை எழுத்தச்சன்...

 

 

 

 

 

 

 

 

 

9  - செங்கோடன்

 



சோழநாடு...
இருண்டுவிட்ட நேரம்...

 

அங்கொன்றும் இங்கொன்றுமாக எண்- ணெய் பந்தங்கள் தெருவிற்கு வெளிச்சம்
தந்துக் கொண்டிருந்தன...

 

மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்ட நேரம் அது... நிலா வெளிச்சமும் மெலிதாகவே இருந்தது... அநேகமாக எல்லா வீடுகளும் சாத்தப்பட்டிருந்தன...

குதிரையில் காவலர்கள் தெருவில் வலம் இட்டுக் கொண்டிருந்தனர்...

 

காவலர்களின் கண்களுக்கு அகப்படாமல், சீன வணிகனும், அவனோடு பாண்டிய நாட்டு வழிப்போக்கனும் இருளில் கலந்து, பெரிய மரத்தின் பின் ஒளிந்து நின்றிருந்- தனர்...
"
சீனரே, பார்த்தீரா... இரவில் மக்களின் நடமாட்டத்திற்கு சோழநாடு தடை விதித்- துள்ளது... ஆரியர் வருகைக்கு முன்னர், இந்தப் பகுதி இரவிலும் வணிகம் நிறைந்த பகுதியாகவே இருந்தது..." -பாண்டியநாட்டு வழிப்போக்கன்...

"
ஏன் இரவு வணிகம் தடை செய்யப்பட்டுள்- ளது?" - சீனன்...

 

"இரவு வணிகத்தின் ஊடே, கல்விக் கழகங்கள் செயல் பட்டனவாம்... தமிழர்க- ளுக்கு, கல்வித் தடை செய்யப்பட்டிருந்த நிலையில்- அரசுக்குத் தெரியாமல், கல்வி கற்றுக் கொடுத்த கல்விக் கழகத்தினர் கழுவேற்றி கொல்லப்பட்டனர்... அதோடு, இரவு வணிகத்திற்கும் தடை செய்யப்பட்ட- னவாம்..."-பாண்டிய நாட்டு வழிப்போக்கன்...

"
ஆரியர்களின் சொல் கேட்டு, தன் நாட்டுக் குடிகளைக் கொல்லும் அரசை, எந்த நாட்டிலும் கண்டேனில்லை நான்... நீர் சொல்வதுக் கேட்டு அச்சமாகிறது..." சீனன்...
"
தூதுவாய் சுமந்து வந்த ஓலைகளை, தூக்கியெறிந்து விடு சீனனே... காவலர் கையில் அகப்பட்டால், கழுவேற்றி விடுவர்  உன்னையும், என்னையும்... மரமேறி பதுங்கிக் கொள்வோம் இப்போது... விடிந்- ததும் வணிகர் போல நாம் மாறி,
எவருக்கும் அய்யம் ஏற்படாமல் அகன்று விடுவோம் இங்கிருந்து..." - என்றான் பாண்டியநாட்டு வழிப்போக்கன்...

 

"அய்யா, சீனன் நான்... வாக்குக் கொடுத்தால் ஒருவருக்கு உயிர்கொடுத்தேனும் காப்- பேன்... இந்த உயிர் நிலையற்றது... நிலை- யற்ற உயிருக்காக அஞ்சி வாழ்வதில் பொருள் உண்டோ... அச்சமெனில், நீ அகன்று விடு... நானே செங்கோடனைத் தேடி ஓலையை சேர்த்து விடுகிறேன்... அஞ்சி வாழும் குடிகள் என்பதால்தான் அச்சமின்றி ஆரியர் உம்மவரை ஏய்த்துப் பிழைக்கின்றனர்... நன்றி பாண்டியனே, சென்றிடு நீ என்னிடமிருந்து" -சீனன்...

"சீனநாட்டிலிருந்து வந்து தமிழ் மொழிக்காக உயிர்க் கொடுக்கத் துணிந்த உம்மெதிரில், நான் அஞ்சும் தமிழனாய்  நின்றால் அறிவற்றவன் ஆவேன் நான்... உயிர் என்னய்யா உயிர்... என் மயிரும் உயிரும் ஒன்றென்பேன்... என் மக்களின் கல்விக் கெடல் கூடாது என்று சோழ நாட்டவன் எவனோ, அயல் மண்ணில்
இருந்து ஆவல் கொண்டுள்ளான் எனில் இம்மண்ணில் இருந்து ஏதும் நான் செய்- யாது விட்டால் வெறும் எலும்பென்பேன் என்னை நான்... ஆயினும்; காவலர் கையில் அகப்படாமல், நாம் இருக்க வேண்டும்... சீனனே, அதோ உயரமாக மாளிகைகள் தெரிகின்றன அல்லவா... அதற்கப்பால், செங்கோடன் வசிக்கும் மருங்கு இருக்கிறது என நினைக்கிறேன்...  காவலர் எவரும் இல்லையென நினைக்கிறேன்... என்னைப் பின் தொடர்ந்து வா..." - என்றான் பாண்டிய நாட்டு வழிப்போக்கன்...

 

இருளின் ஊடே, பதுங்கிப் பதுங்கி, மரங்க- ளிடையே மறைந்து நின்று, சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் மிக மெதுவாக நடந்தான் பாண்டியநாட்டு வழிப்போக்கன்...

அவ்வாறே சீனனும் அவனைப் பின் தொ- டர்ந்தான்...

நிலவின் ஒளியிலும், தெருவில் நிறுவப்- பட்டிருந்த தீப்பந்தங்களின் மெல்லிய ஒளியிலும், பெருமாளிகைகளின் வண்ணக் கண்ணாடி சுவர்கள் மிளிர்ந்தன...

 

ஒவ்வொரு மாளிகையும் வழிப்போக்கர்கள் தங்கிச் செல்ல  ஏதுவாக திண்ணைக- ளோடுத் திகழ்ந்தன...    

 

அகன்ற தெருக்களின் இருபுறமும் அடர் மரங்களில் பூத்திருந்த பூக்களின் நறுமணம் நாசியை வருடியது...

 

"பாண்டியரே, சோழநாடு இரவு நேரத்திலும் பேரழகுக் கொண்டிருக்கிறது" - என்று புகழ்ந்தான் சீனன்...

"சோழர்கள் கட்டுமானம் மிகவும் நேர்த்தி- யானது"

"
பாண்டியரே, குதிரைகளின் குளம்படியோ- சை  போலிருக்கிறது..."

 

"ஆமாம் காவலர்கள் போலிருக்கிறது... மரத்தின்பின் ஒளிந்து நில்"

 

காவலர்கள் சிலர் குதிரையில் கடந்துச் சென்றனர்... அவர்களின் உடையில் வாளும் ஒரு கையில் தீப்பந்தமும் இருந்தன... நோட்டமிட்டவாறு அவர்கள் சென்றப் பிறகு, "நீர் சொல்லும் குறியீடுகளின்படி, அதோ அந்த மருங்கின் முனையில் இருக்கும் வீடுதான் செங்கோடனின் வீடு என நினைக்கிறேன்..." என்று ஒரு மாளிகையைச் சுட்டிக் காட்டினான் பாண்டி- யநாட்டு வழிப்போக்கன்...

 

"முகப்பில் மூன்று தீப்பந்தங்கள் இருக்கு- மாம்... வெண்பளிங்கு வேய்ந்த சுவரில் புலி- யின் உருவம் செதுக்கப்பட்டிருக்குமாம்" -சீனன்...

"
அருகில் சென்று காண்போம்" –என்ற வழிப் போக்கன், மெதுவாக இருளினூடே நடந்து, மருங்கின் முனையில் இருந்த மாளிகை யைக் கண்டான்...

 

"சீனரே,  உங்கள் குறிப்புகளின்படி இது செங்கோடனின் இல்லமாகத்தான் இருக்- கும்... சிறிதுநேரம் திண்ணையில் படுத்தி-ருப்போம்... காவலர் வருகின்றனரா என்றுப் பார்த்து விட்டு, செங்கடனை அழைப்போம்... ஓலைச் சுவடிகளை, மரத்தின் மீது ஒளித்து வைப்போம்" - என்றுச் சொன்ன வழிப்போக்- கன் சீனனிடமிருந்து ஓலைச்சுவடிகளை பெற்று மரக்கிளையில் மறைத்து வைத்- தான்...

பிறகு, திண்ணையில் படுத்துறங்குவது போல் பாவித்தார்கள் இருவரும்...

 

"சீனரே, காவலர் எவரும் தென்படவில்லை.. செங்கோடனை விளிக்கிறேன்" - என்று சொன்ன வழிப்போக்கன், மாளிகையின் வாசல் கதவில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து மெதுவாக இழுத்தான்...

உள்ளிருந்து வெண்கல மணியோசை கணீர் என ஒலிக்கும் ஓசை வாசலுக்கும் கேட்டது...

சீனனும், வழிப்போக்கனும் மவுனம் காத்து, திண்ணையில் படுத்த நிலையில் இருந்த- னர்...

சிறுது நேரத்தில் உள்ளிருந்து நடந்து வரும் ஓசை கேட்டது... அதனை அடுத்து, கதவின் சிறு துளையின் வழியாக, "யார் மணிய- டித்தது" என்ற குரலோசையும் கேட்டது...

"
செங்கோடனைக் காண வேண்டும்"

 

"நான்தான் செங்கோடன்"

 

"அய்யா, சீனத்திலிருந்து வணிகர் ஒருவர் வந்திருக்கிறார்... ஓலைச் சுவடியுடன் தங்களைக் காண"

 

ஓலைச் சுவடியென்று சொன்ன மாத்திரத்- தில் மாளிகையின் பெருங்கதவுத் திறந்து வெளியே வந்தான் நெடுநெடுவென வளர்ந்- திருந்த இளைஞனவன் செங்கோடன்...

 

வழிப்போக்கன், "செங்கோடன், சுவடி எடுத்து வருகிறேன்" என்றுச் சொல்லி மரத்தின் மீதுத் தாவி, சுவடியுடன் கூடிய சிறு பேழையை எடுத்து வந்தான்...

 

இருவரையும் உள்ளே அழைத்து, வாசலின் பெருங்கதவை, வேகமாக மூடினான்...

உள்ளே பெரியக்கூடம்...

 

கண்ணாடிச் சிமிழ்கள்ஒளியை உமிழ்ந்துக் கொண்டிருந்தன... பிரம்புகளால் வேயப்- பட்ட இருக்கைகள் - ஊஞ்சல்கள் - அழகிய ஓவியங்கள் என கூடம் அழகுப் படுத்தப் பட்டிருந்தது...

"
அய்யா, நான் சீனநாட்டிலிருந்து வருகி- றேன்... சீனநாட்டில் இருந்து நான் புறப்- படும்போது இதனை தங்களிடம் கொடுக்கச் சொல்லி, உங்கள் நண்பர் என்னிடம்  கொடுத்தார்" என்று சொல்லி   பேழையை செங்கோடனிடம் கொடுத்தான் சீனன்...

பேழையைத் திறந்து, உள்ளிருந்த சுவடியை எடுத்துப் பார்த்து விட்டு, ஏதும் கூறாமல், சுவடியைப் பேழைக்குள் வைத்தான்...

 

"நன்றி அய்யா" - செங்கோடன்...

 

"சரி நாங்கள் புறப்படுகிறோம்" - என்று சீனன் சொன்னான்... பாண்டியநாட்டு வழிப்போக்- கனும் புறப்பட எழுந்து நின்றான்...

 

செங்கோடன் வாயிற்கதவைத் திறந்து விட்டான்... கதவுத் திறக்கப்பட்டதும்,குளிர்க் காற்று மெலிதாய் வருடியது அவர்களை...   

 

சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தக் காற்- றில் நனைந்தப்படி, சீனனும், வழிப்போக்- கனும் தெருவில் நடக்கலாயினர்... 

 

சீனன் பேசினான் : "பயத்தினை நெஞ்சில் சுமந்து, ஓலைச்சுவடிகள் கொண்டு சேர்த்- தோம்... செங்கோடன் வெறும் நன்றியை சொல்லில் உதிர்த்து அனுப்பிவிட்டான்... இரவு உறங்க இடம் தருவான் என நினைத்தேன்... மனம் வேதனையாக இருக்- கிறது..."

 

"சீனரே, விருந்தோம்பல் நேரமா இது... அரசின் ஆட்கள் வேவு பார்த்துக் கொண்- டிருக்கிறார்கள்... நாம் செங்கோடனின் வீட்டுக்குள் நுழைந்து வருவதை, காவலர் எவரும் கண்டிருப்பின், செங்கோடன் நிலைமை  மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி விடும்... அதனால்தான் நம்மை உடனடியாக வெளியே அனுப்பிவிட்டான் செங்கோடன்.."

 

"... குடிமக்கள் அஞ்சிப்பிழைக்கின்றனரே... அப்படியானால், இப்போது காவலர்கள் கண்- ணில் நாம் பட்டால்?"

 

"ஆபத்துதான்... சீனரே, இங்கே ஏதேனும் திண்ணையில் உறங்கி, காலையில் புறப்ப- டுவோம்..."

 

ஒரு மாளிகையின் திண்ணை, மதில் வரைக்கும் நீண்டிருந்தது... பெரிய திண்- ணையது... ஏற்கனவே சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர்... அவர்களிடையே, சீன- னும், பாண்டிய வழிப்போக்கனும் ஓர் ஓரமாக கண்ணயர்ந்தனர்... 

 

இதமானக் காற்றின் தழுவலில், இருவரு- மே  அயர்ந்து உறங்கினர்... 

 

சிறுது நேரத்தில்- ஒருகை இருவரையும் ஓசையின்றித் தட்டி எழுப்பியது... 

 

 

 

 

 

10-கோடிக்கரை

இரண்டாம் சாமக் கோழிக் கூவிய கருக்கல் பொழுது...

புகார் கரையோரம் நடந்து சென்றுக் கொண்டி- ருந்தனர் இருவர்...

 

முன்னே சென்றவன், பாண்டியநாட்டு வழிப்போக்கன்... அவனைப் பின்தொடர்ந்து
கொண்டிருந்தவன் சீனவணிகன்...

 

புகார் கடல் சீற்றம், கோரமாக இருந்தது... காற்றின் விசையும் வேகமாக இருந்தது...

கருக்கலில் மீனவர்கள் மீன்களைப் போல் சோம்பலின்றி  இயங்கிக்  கொண்டிருந்தனர்...

பல்வேறு நாடுகளின் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சியிருந்தன...

கரையோரம் ஆங்காங்கு இளைப்பாறிட மன்-  றில் இருந்தன...

 

மன்றி ல்தனில் இளைப்பாறியிருந்தோர் பலர்... அப்படியொரு மன்றில் கலங்கரை விளக்கம் எதிரில் இருந்தது... அந்த மன்றில் நோக்கி இருவரும் நடையிட்டுக் கொண்டிருந்தனர்...

சீறிப்பாய்ந்து வந்த அலைகள், கரையோரம் நடந்துக் கொண்டிருந்தோரின் கால்களைத் தாக்கிவிட்டு கடலுக்குள் மீண்டும் மீண்டும் சென்று கரைந்துக் கொண்டிருந்தன...

சீற்றம் மிகுந்த அலைகளின் வேகமானத் தாக்குதலுக்கு, தாக்குப் பிடிக்க வலுவற்றோர் கரையில் விழுந்து எழுந்து நின்றக் காட்சிகள் திரும்பத் திரும்ப அரங்கேறின...

 

"பாண்டியரே, புகாரின் அலைகள் தாக்குதல் இன்று கூடுதலோ" - என்று கேட்டான் சீனன்...

 

"என்றுமே, புகாரின் அலைவீச்சு மற்ற அலைவீச்சுகளைக் காட்டிலும் பாய்ச்சலோடு தான் இருக்கும்... மீனவர்களும் தடுமாறிடுவர்" – என்றான் வழிப்போக்கன்..

 

"பாய்ச்சல் தடிமனாகத்தான் இருக்கிறது... கரைகள் அரித்துவிடும் இல்லையா"

 

"புகார் நகர் அழிந்துவிடுமோ எனும் அச்சம் அலைகளைக் காணும் போதெல்லாம் யாவ- ருக்கும் ஏற்படுவதுதான்"

 

இருவரும் பேசிக்கொண்டே, கலங்கரை விளக்- கம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்...

முதல்நாள் இரவு, செங்கோடனிடம் ஓலை- யைக் கொடுத்து விட்டு ஒரு திண்ணையில்
கண்ணயர்ந்து இருந்த வேளையில் இருவரை- யும் ஒருகை தட்டி எழுப்பியது... பாண்டிய வழிப்போக்கன், காவலர்தானோ என்று நினைத்து, துணுக்களுடன் விழித்து அமர்ந்தான்...

படபடப்போடு விழித்த பாண்டிய வழிப்போக்- கனின் அதிர்வு அசைவுதனை உணர்ந்த
சீனனும் கண்விழித்துப் பார்த்தான்... எதிரில் செங்கோடன் இருந்தான்...

 

"இருவருக்கும் உணவுக் கொண்டு வந்திருக்- கிறேன்... பருக நீரும் உள்ளது... உணவருந்துக" - என்றான் செங்கோடன்...

 

இருவருக்கும்  பனைமட்டையைப் பிரித்து கொடுத்தான் செங்கோடன்...

பொட்டலம் அவிழ்க்கப் பட்டதும், நெய்மணம் கமழ்ந்தது...

"
ஓலையுடன் வருவோர் காவலர் கண்ணில் பட்டால், கடுந்தண்டனைக்கு உள்ளாக நேரு- மே... அச்சமின்றி நீவிர் இருவரும் என்னைக் காண வந்ததை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது" -செங்கோடன்...

 

உணவு அருந்திக் கொண்டே, "இங்கு நிலவும் சூழல் குறித்து ஏற்கனவே இவர் என்னிடம் எச்சரித்திருந்தார்... நாங்களும் மிக எச்சரிக்கை- யுடன்தான் உங்கள் இல்லம் வந்தோம்" - என்றான் சீனன்...

 

"தங்கள் இருவரை ஒற்றர் எவரும் பின்தொடர்கின்றனரா என்று அறியவே, தங்களை விரைவாக இல்லத்திலிருந்து வெளி- யேற்றினேன்... மேலும், தாங்கள் இருவரும்
என் இல்லத்திலிருந்து வெளியேறியப் பின்னர், தங்கள் இருவரையும் கண்காணித்தேன்; காவலர் எவரும் தங்களை  பின் தொடர்கின்- றனரா என்று சிறுது நேரம் அவதானித்தேன்...  அய்யப்பாட்டை போக்கியப் பின்னரே, உணவு எடுத்து வந்தேன்... நன்றி சீனரே, என் நண்பன் குறித்து தங்களிடம் அறிய வேண்டும்...
இந்த இடம் ஏற்புடையதல்ல... ஆதலால் நாளைக் காலை - இரண்டாம் சாமக்கோழிக்
கோழி கூவியப் பிறகு புகார் கரையோரம் கலங்கரை விளக்கம் மன்றிலுக்கு இருவருமே வருக... அங்கு நான் இருவரையும் சந்திக்கக் காத்திருப்பேன்" -என்று சொல்லி  செங்கோடன் குதிரையில் அங்கிருந்து விரைந்தான்...

 

செங்கோடனை சந்திக்கவே சீனன், பாண்டிய வழிப்போக்கனோடு நடந்துக் கொண்டிருந்தான்..

கலங்கரை விளக்கம் மன்றிலில், முத்து விற்- கும்  வணிகனாய் இருந்தான்  செங்கோடன்...

சீனனும், பாண்டிய வழிப்போக்கனும் அருகில் வந்தவுடன் அருகிலிருந்தவனிடம் "நான் புறப்ப- டுகிறேன்" - என்று சொன்ன செங்கோடன், அருகிலிருந்த லாயத்திற்கு சென்றான்...

 

சீனனும், வழிப்போக்கனும் செங்கோடனிடம் சென்றனர்...

"
குதிரையில் பயணிப்போம்..." -என்று சொல்லி ஒரு குதிரையில் ஏறினான் செங்கோடன்...

சீனனும், வழிப்போக்கனும் ஆளுக்கொரு குதிரை ஏறினர்... மூன்று குதிரைகளும் கோடிக்கரை   நோக்கி விரைந்தன...

              

     

 

       

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

11-வள்ளுவனுக்குத் திருமணம்...     

 

நெடுநெடுவென வளர்ந்திருந்த பனையும், செவ்விளக் குலைகளுடன் தென்னையும் கொண்டிருந்தன கோடிக்கரை...

 

அணிவகுத்து செல்லும் படையணிப் போல் - நீலத்திரைக்கு வெண்ணுடை போர்த்தப்பட்டது போல் படகுகள் வெண்திரை விரித்து, சென்றும், வந்தும் கொண்டிருந்தன... 

 

வெண்கொக்குகள் சிறகு விரித்து மிதப்பது போல் படகுகளின் பயணம் கண்கொள்ளாக் காட்சியாய் நீலக்கடல் மீதில் தெரிந்தன...

 

அலைநீரை மிதித்த வண்ணம் மூன்று புரவிக- ளும் கோடிக்கரைக்குள் நுழைந்தன...

 

மாங்கனி வீசும் மணத்தை நுகர்ந்து, மாஞ்சோ- லைக்குள் நுழைந்த செங்கோடன் புரவியை ஓரிடத்தில் நிறுத்தினான்...

 

மற்ற இருக்குதிரைகளும் அருகே வந்து நின்ற போது, செங்கோடன் சீனனிடம் சொன்னான் : "கோடிக்கரை மீன் உணவு சுவை மிகுந்திருக்- கும்... இந்த மாங்கனிகள் போல்..."

 

"நான் சோழநாடு வரும்போதெல்லாம், கோடிக் கரை வந்து மீன் சுவைத்துச் செல்வேன்..." என்றான் பாண்டியநாட்டு வழிப்போக்கன்...

 

"இன்று உங்கள் இருவருக்கும் மீன் விருந்து, ஏற்பாடு செய்திருக்கிறேன்... செல்வோம்... வாருங்கள்" - என்று சொல்லி செங்கோடன் முன்னே செல்ல, சீனனும், பாண்டியனும் பின்தொடர்ந்தனர்...

 

கோடிக்கரையில் பெரும் செல்வந்தர்கள் இளைப்பாறிடும் மாளிகைகள் ஆங்காங்கு இருந்தன...

 

ஒரு மாளிகையின் அருகே நின்றான் செங்கோடன்...

 

அங்கு ஒரு நீரோடை சலவென இசைப்பாடி ஓடிக் கொண்டிருந்தது...

 

"இந்த நீர்ப்பருகிட அமுதமாக இருக்கும்" - என்று சொல்லி இருக்கரங்களால் அள்ளிப்  பருகினான் ...

 

சீனனும் பருகினான்...

 

"... சுவையாக இருக்கிறது..." -சீனன்...

 

"சுவைத்தரும் இந்த நீர் கடலுக்குள் சென்று கலந்துவிட்ட பிறகு, இதன் சுவை காணாமல் போய்விடும்... ஆனால், இந்த நீர் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் கிடைக்கும் மீன்கள் இந்த நீரின் சுவையைப் போல் தித்திக்கும்... சரி; நீராடிவிட்டு உள்ளே செல்வோம்"....

 

மூவரும் நீராடினர்...

 

பெரிய மாளிகையின் முன் பரப்பில், பனையால் வெய்யப்பட்ட புதுப்பாயின் மீது அமர்ந்து மூவ- ரும் உணவருந்தினர்... 

 

உணவருந்தியப்பின் மூவரும், மாநிழல் அடி- யில்  -ஊஞ்சலில்- ஓய்வாக அமர்ந்தப் பிறகு, செங்கோடன் சீனனிடம் கேட்டான்...

 

"என் நண்பன் நலமாக இருக்கிறானா"- செங்கோடன்...

 

சீனனக்குப் புரியவில்லை...

 

மீண்டும் செங்கோடன், "சீனரே, குறள் எழுதப் பட்ட ஓலையைக் கொண்டு வந்தீர் அல்லவா..." - என்று நினைவுப் படுத்தினான்...

 

"... சோழநாட்டவன்... என்னிடம் ஓலைக் கொடுத்து அனுப்பியவன்... ... நான் கண்ட வரைக்கும் நலமாகவே இருந்தான்... அவனு-டைய துணைவியாரும் நலமாக இருந்தார்... தான் மணம் முடித்துக் கொண்டதாக, தங்க- ளிடம் தெரிவிக்க சொன்னான்..."

 

"என்ன?... என் நண்பனுக்குத் திருமணம்  ஆகி விட்டதா... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..."

 

"யவனநாட்டு பெண் என நினைக்கிறேன்... மிகவும் அழகாக இருந்தாள்..."

 

"... நண்பன் யவனநாட்டு நங்கையை துணையாக்கிக் கொண்டானா... மிகவும் மகிழ்ச்- சியாக இருக்கிறது... சிறுவயதிலேயே என் நண்பன், மொழிகள் குறித்த தேடுதல்  கொண்டிருந்தான்... அகவை பத்தில், 'மொழிகள் குறித்த ஆய்வு செய்யப் போகிறேன்" என்று கூறிவிட்டு அயல்நாடுகள் நோக்கிச் சென்றான்... சென்ற இடத்தில் மணமும் முடித்துக் கொண்- டான் போலும்..."

 

"உம் நண்பனின் துணைவியார், நிலவு போல் அழகாக இருந்தார்... கல்விக் கற்றவள்தான் அவளும்... உமது நண்பன்  சொல்லச் சொல்ல, ஓலையில் வடிவமைத்துக் கொடுத்தாள்... பிழையின்றி எழுத்தாணியில் நுட்பமாக எழுதி- னாள்..."

 

"ஆமாம் என் நண்பன் இதுவரைக்கும், ஆயிரத்- திற்கும் அதிகமான குறள் எழுதி அனுப்பி- யுள்ளான்... என் நண்பன் வருவதற்கு முன்னரே, அவன் யாத்த குறட்பாக்களை படி பல எடுத்து மக்களிடம் சேர்த்திட வேண்டும்... "

 

"தமிழ் மொழிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் ஓலைகள் படி எழுதிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதே... சேரர், சோழர், பாண்டியர் நாடுகள் எங்கும் இந்தத் தடை நிலவும் நிலையில்- குறட்பாக்களை படியெ- டுப்பது அரச நியதிக்கு எதிரானதல்லவா... " –என் றான் பாண்டியன்...

 

"அஞ்சி ஒடுங்காமல், வீரத்தை இழந்துவிடாமல் வாழவேண்டும்... அந்த மனவுறுதியானது, மலையைக் காட்டிலும் உறுதியானது என்று என் நண்பன் உரம் ஊட்டியுள்ளான் எமக்கு...  'நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது' என்று குறள் கூறி எம்மை செறிவுப் படுத்தியுள்ளான்... ஆதலால்; ஆரியரின் சொல் கேட்டு, அடக்குமுறையேவும் ஆட்சிக் கண்டு அஞ்சேன்... என் நண்பனின் குறட்பாக்களை இல்லந்தோறும் கொண்டு சேர்த்து, தமிழர் மீதிருக்கும் இருள் அகற்றுவேன்" - என்றான் ஆவேசமாக        செங்கோடன்...

 

"நன்று... செங்கோடன்... உன் பணிசிறக்க நானும் விழைவேன்... ஓரினம் - ஓர்மொழிஅழிக்கப் படுவதை எம் நாட்டவர் விரும்பார்... இனி நான் சீனநாடு செல்லேன்... என் வாழ்நாள் முழுதும் உம் பணிக்கு உறுதுணைபுரிவேன்" - என்றான் சீனன் உணர்ச்சிப் பிழம்போடு...

 

"அய்யா, சீனன் தமிழ்மொழிக்காக உயிர்க் கொடுக்க விழைகிறான் எனில், தமிழ்மொழிப் பேசும் பாண்டியன் நான், எம் மொழிக்காக உயிர்த் தாராது  சாவேனாயின், பிழையாகுமே என் வாழ்நாள்... படி எடுத்திடவும், தடைசெய்யப் பட்ட தமிழ் மீண்டும் கோலோச்சிடவும் பணி- யாற்றுவேன் செங்கோடனே உன்னருகிருந்து" - என்றான்  பாண்டியன்...

 

செங்கோடன் முகத்தில் வெற்றிக் கீற்று இழைந்தது...              

 

"செங்கோடன், உன் நண்பனின் பெயர் என்னவென்று அறியவில்லை நான்"

 

"எனக்கும் மறந்துவிட்டது... செந்நாப்புலவரே என்று விளிப்போம்... ஆமாம்; சிறுவயதிலேயே, புலமைமிக்கோனாக இருந்தான் என் நண்பன்... அப்போதே, செந்நாப்புலவர் என்போம்"

 

"ஆனால் உமது பெயரை உமது நண்பன் மறக்கவில்லை... ‘இந்த ஓலையை என் நண்பன் செங்கோடனிடம் சேர்த்துவிடுக’ என்றான்..." - என்று சீனன் சொல்லக் கேட்டு, செங்கோடன் உள்ளம் மகிழ்ந்தது... மகிழ்வு முகத்தில் இழையோடியது...   

 

ஒரு பேரிடரை நோக்கியதாக அவர்களின் பயணம் இருக்கப்போகிறது...  

 

 

 

12 - மணப்பெண் ஆரியனுக்கு தாசியா?... 

 

சேரநாடு...

தென்னை மட்டைகள் உரசிட, தவழ்ந்து வந்த தென்றல் காற்று இளங்காலைப் பொழுதை அழகாக்கிக் கொண்டிருந்த நேரமது-  

மத்தளம் ஓசையும், நல்லிசையும்  தவழ மிகவும் மகிழ்ச்சியில்  திளைத்திருந்தது  மணமகள் வீடு...

வாழை மரம் கட்டப்பட்டு, மாவிலைத் தோரணம் சீராக தொங்கப்பட்டிருந்தன தெரு- வின் இரு மருங்கும்...

பூக்கள் சொறியப்பட்ட பதாகைகள் விருந்தின- ரை வரவேற்றுக் கொண்டிருந்தன...

சந்தனம் மணமும், மல்லிப்பூவின் நறுமணமும் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இசையொ- டுக் கலந்து மணமேடையில் வீற்றிருக்கும் மணமக்களை மகிழ்வில் ஆழ்த்தின...

புத்தாடையும், புது பட்டாடையும் அணிந்து - வலம் வந்து - இளைஞர்களை கிறக்கத்தில் வீழ்த்திக் கொண்டிருக்கும் இளம்பெண்களின் அழகை பருகிக்கொண்டிருந்தனர்  காளையர்...

காளையர்களின் கிண்டல் மொழிக்கு ஈடுசெய்- யும் விதமாக, இளம்பெண்கள் தாமும் கிண்டல் மொழிந்து காளையர்களை களிப்பில் மூழ்கடித்- தனர் இளம்பெண்கள்...

சிறுவர், சிறுமிகள் மணஅரங்கின் உள்ளே ஓடியாடி மகிழ்ந்திருந்தனர்...

பெரியவர்கள் நலம் கேட்டும், நலம் கூறியும் உவகைப் பொங்கிட விழா அரங்கில் வீற்றிருந்- தனர்...

விருந்தினர் மகிழ்வுக் கொள்ளும் வண்ணம் அறுசுவை உணவும் உணவரங்கில் அளிக்கப்- பட்டுக் கொண்டிருந்தன...

நெய் மணம் கமழும்   இனிப்புகள் எல்லோரை- யும் சுண்டி இழுக்க- விருந்தரங்கினை  மெல்லி- சை வருடிக் கொண்டிருந்தது...

மணமக்களின் அருகில் நின்றிருந்த இளசுகள், மணமக்களை கிண்டல் பேசி இருந்தனர்...

வாழ்த்துக் கூற வந்தோருக்கு நன்றி நவின்று மகிழ்ந்தனர் மணமக்கள்...

மணமக்களை வாழ்த்திப் பேசினர் பெரியோரும், ஆன்றோரும் மேடையில்...

வாழ்த்துப்பா முடிந்ததும், பெரியவர் ஒருவர் மணமக்கள் அருகில் வந்து திருமணம் ஒப்பந்தம் படித்தார்...

தாழம்பூர் வெற்றிமாறனின் மகன்  பொற்கோ ஆகிய நான்....' என்று பெரியவர் சொல்ல,
அதனை மணமகன் 'தாழம்பூர்  வெற்றிமாறனின் மகன் பொற்கோ ஆகிய நான்' -என்று மறுமொழி யுறும் போது-

பத்துக்கும் மேற்பட்ட புரவிகள் வேகமாக வந்து மணவீட்டின் முன் நின்றன...

புரவிகளின் குளம்படியோசை கேட்டு அனைவ- ரும் திரும்பிப் பார்த்தனர்...

புரவிகளில் இருந்து காவலர்கள் வாளோடு இறங்கி, மணமேடை நோக்கி வேகமாக வந்தனர்...

புரவிகளின் நடுவில் இரட்டைப் புரவி தேர் ஒன்றும் இருந்தது...

யாவற்றையும் நோக்கி நின்றவரிடையே உட் புகுந்த காவலன் ஒருவன் "மணமக்களை சிறைசெய்ய ஆணை வந்துள்ளது... மணமக்- களை நீதிசபை  அழைத்துவர ஆணையோடு வந்துள்ளோம்" - என்றான்...

அதனைக் கேட்டு, மணமக்கள் உட்பட யாவரும் திகைப்பெய்ய-
பெரியவர் காவலனை நோக்கி, "மணமக்கள் செய்தப் பிழை யாது?... மணநாளில் சிறைப் பிடிப்பது ஏன்?" என்று கேட்டார்...

"மணநிகழ்வை முன்னதாகவே அரசிடம் தெரி- விக்கவில்லை... ஒப்புதலும் பெறவில்லை... அதன் பொருட்டே சிறைப்பிடிப்பு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது..."

"
விரும்பி இருவர் மணம் செய்திட, பெற்றோர் இசைவு இருக்கையில் அரசிடம் ஏன் ஒப்புதல் பெறவேண்டும்..." - என்று பெரியவர் கேட்டார்...

"அரசிடம் ஒப்புதல் பெற்று திருமணம் நடாத்திட வேண்டும்; அரசின் விதிகளுக்கு ஏற்பவே திருமணம் நிகழ்வு அமைய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறியீரோ? ... விதிமீறல் பொருட்டே சிறைச் செய்ய ஆணை யுடன் வந்துள்ளோம்..."

"இப்படியோர் அரசாணை இருப்பது நாங்கள் அறியோம்... ஆயினும், அரசிடம் ஒப்புதல் பெற்- று  மணநிகழ்வை அமைத்துக் கொள்கிறோம்... மணமக்களை சிறைசெய்ய வேண்டாம்" - என்றார் பெரியவர்...

"அரசின் ஆணைக்கு உட்பட்டு மனநிகழ்வை அமைத்துக் கொள்வதாக இருந்தால், மணமக்க- ளை சிறைச் செய்ய மாட்டோம்..." –என்றான் காவலன்...

"
நல்லது காவலரே... ஒப்பம் தருக... மணநிகழ்வு நடத்திட" -என்று கேட்டார் பெரியவர்...

"அரசின் விதிகளுக்கு உட்படுகிறீர்களா?"

"அரசாணை மீறுவது குடிமக்களின் பண்பல்ல- வே... நீர் ஒப்பம் கொடுத்தால், மணநிகழ்வை தொடர்ந்து விடுவேன்... இன்னும் உறுதிமொழி ஏற்பு நிகழவில்லை..."

"இதுகாறும் இருந்த உறுதிமொழி ஏற்பு  தடை செய்யப்பட்டுள்ளது... ஆரியர் ஒருவரின் முன்னிலையில், மணநிகழ்வு  நிகழ வேண்-   டும்... ஆரியர் வேதம் ஓதி, மணநிகழ்வுதனை   நடத்தி வைப்பார்" - என்றான் காவலன்...

"எங்கள் குழந்தைகளின் திருமணத்தை ஆரியன் முன்னின்று நடத்துவதா?... ஏன்?"            

 "
ஆரியன் வேதம் ஓதி, திருமணம் செய்வித்- தால், அரசருக்கு நன்மை விளையும்... நாடும் செழிக்கும்... நாட்டின் நன்மை கருதியே அரசா- ணை இடப்பட்டுள்ளது... காவலரே ஆரியரை பல்லக்கில் அழைத்து வருக" -என்று ஒரு காவலனை நோக்கி, சொன்னான்...

புரவிகளுக்கு மையத்தில் இருந்த தேரில், பல்லக்கின் மீது அமர்ந்திருந்த ஆரியனை காவலர் எண்மர் தூக்கி வந்தனர்...

ஆரியருக்கு வழிவிடுக... குறுக்கே எவரும் நில்லாதீர்கள்" -என்று கூவிக்கொண்டே காவலர் பல்லக்கினை சுமந்து வந்து மணமேடையில் இறக்கினர்...

பல்லக்கில் இருந்து இறங்கிய ஆரியனின் கையில் ஒரு செம்பும், சில புல்லும் இருந்தன... குடுமி தலையன் ஆரியன் அமர முக்காலி போடப்பட்டு, அதன்மீது பட்டுத் துணி விரிக்கப் பட்டது...

இடுப்பில் கோவணம் போல் உடுத்தியிருந்தான் ஆரியன்... அவன் மேலாடை அணிந்திருக்க- வில்லை... அவனின் திறந்த மார்பைக் காணப் பிடிக்காமல்  பெண்கள் வெட்கித் தலை குனிந்தனர்...

முக்காலியில் அமர்ந்தவுடன் காவலர் இருவர், நெருப்புடன் கூடிய சட்டியை தூக்கி வந்து முன்வைத்தனர்...

நெருப்பினுள் நெய் வார்த்து மக்களுக்குப் புரியாத மொழியில் ஏதோ முணுமுணுத்தான்...

அவனது செய்கையை விரும்பாமல் விருந்தி- னர் முகம் சுளித்தனர்... மணமக்களின் பெற்றோ- ரும் செய்வதறியாது நின்றனர்...

ஆரியன் புரியாத மொழியை முணுமுணுத்த படியே மணமக்களை அருகில் வந்து அமர சைகை செய்தான்...

மணமக்களும் மேடையில் அமர்ந்தனர்...

பாலில் மிதக்கும் மாங்கனிபோல் அழகாக ஒளிரும் மணமகளின் முகத்தை ஒருவித வேட்கையுடன் பார்த்தான் ஆரியன்...

மணமகள் ஆரியனின் பார்வையால் குறுகி  னாள்...

ஆரியனின் செயல் விளங்காமல், விந்தையுடன்  பார்த்து நின்றனர் விருந்தினர்...

பேரமைதி கவ்வியிருந்த சூழல் அங்கு நிலவியது...

நெருப்பில் நெய்வார்த்து - மணவரங்கினை  புகையால் நிரப்பிக் கொண்டிருந்தான் ஆரியன்...

புகை நெடியால் மணமக்கள் திணறினர்...

புகையால் சூழல் மாசு அடைவதுக் குறித்து, கவலைக் கொள்ளாமல், ஆரியன் மஞ்சள் கயிறு ஒன்றை மணமகனிடம் கொடுத்து மணமகளின் கழுத்தில் கட்டச் சொன்னான்...

மணமகன் புரியாமல் விழிக்க- ஆரியன் அந்தக் கயிற்றை மணமகளின் கழுத்தில் போட்டு, மூன்று முடிச்சுக் கட்டி, மணமகனுக்கு செய்முறை விளக்கம் செய்தான்...

கயிறு கட்டப்பட்டவுடன், பொருள் புரியாத ஏதே- தோ செய்தான்... அதனைத் தொடர்ந்து மணமக்- களின் சுண்டு விரல்களை  கோர்க்கச் செய்து மனமேடையை வலம் வரச் செய்தான் ஆரியன் மணமக்களை...

ஏன்? எதற்கு? எனப் பொருள் விளங்காமல் ஆரியன் சொல்வதை கேட்டு இயங்கினர் மணமக்கள் புகை நடுவே...

இதன்பிறகு நடந்ததுதான் பேரவலமாக அமைந்தது...

"
காரியம் ஆயிடுத்து... மணப் பொண்ணை என்னாத்துக்கு கொண்டு வாங்கோ" -என்று காவலர்களுக்குக் கட்டளையிட்டான் ஆரியன்...

காவலன் ஒருவன் வந்து, மணமகளின் கரம் பற்றி இழுத்து, "என்னோடு வா" -என்றான்...

மணமகளின் தாயும், தந்தையும் பதைபதைப்பு- டன் ஓடிவந்து "என் மகள் கையை விடு" - என்றனர்...

காவலனோ, "திருமணம் முடிந்தது... விலகிப் போ" என்று பெற்றோரை தள்ளிவிட்டான்...

"என்மகள் கையை விடு" -என்று பெண்ணின் தந்தை ஆவேசமாக குறுக்கீடு செய்தான்...

"காவலரே, ஆரியனை முன்னிறுத்தி திருமணம் நிகழ்த்த வேண்டும் என்று சொன்னீர்... அரசின் ஆணை என்றீர்... நாங்களும் அரசின் ஆணைக்கு அடிப்பணிந்தோமே... பிறகேன் மணமகளை இழுக்கிறீர்?" - என்று பணிவாகக் கேட்டார்...

"... அரசின் ஆணையை முழுதாக அறியீரோ நீங்கள்... காவலனே, திருமணம் குறித்த அரசின் ஆணையை முழுமையாக விளக்கவில்லையா நீ" - என்று காவலன் இன்னொரு காவலரிடம் வினா எழுப்பினான்...

வினா எழுப்பப்பட்ட காவலன் பெரியவரின் அருகில் வந்து, "பெரியவரே, நாட்டுக்கும், அரச- ருக்கும் நன்மை நிகழத்தக்க செயல்களைத்தான் ஆரியர் செய்வர் என்பது புரியாதா?" - என்று கேட்டான்...

"
ஆரியன்தான் மணநிகழ்வை நிகழ்த்தி விட்டானே... " - பெரியவர்...

"ஆரியர் செய்ய வேண்டிய நிகழ்வுகள் இன்னும் உள்ளன... கழுத்தில் நாண் கட்டப்பட்டதோடு நிகழ்வு நிறைவுப் பெறாது... மங்கலநாண் கட்டப்பட்ட இந்த மணப்பெண்ணின் இன்றைய இரவு, முதல் இரவு எனப்படும்... மணமகள் இந்த இரவை ஓர் ஆரியரிடம் கழிக்க வேண்டும்... ஆரியர் ஒருவர் இந்த மணமகளை இன்றைய இரவில் ஆண்டு விட்டு நாளைக் காலை மணமகனிடம் ஒப்படைப்பார்... நாளை முதல் இவள் இவனுக்கு துணைவியாவாள்... நட பெண்ணே" -என்று சொல்லி மணமகளை இழுத்தான் காவலன்...

"என் மகளை விடமாட்டேன்" - என்று சொல்லி தாய் ஓடிவந்து மணமகளை இறுக்கமக அரவ- ணைத்து  நின்றாள்...

காவலன் ஒருவன், சவுக்கால் மணமகளின் தாயை அடித்தான்... தாய்... "என்னைக் கொன்றாலும் என் மகளை ஆரியனுக்கு விட மாட்டேன்" என்று சொன்னாள்...

காவலன் மீண்டும் மீண்டும் சவுக்குக் கொண்டு மணமகளின் அன்னையை விளாசினான்...

காவலனின் பிடியில் சிக்கி முரண்டுப் பிடித்த மணமகள், "அம்மாவை அடிக்காதீர்" - என்று கதறினாள்...

மணமகள் முதுகிலும் சவுக்கால் அடித்து, "அடங்கு" -என்றான்...

அடித் தாளாமல், ‘அம்மா’   என்று அலறினாள் மணமகள்...
"
காவலரே, என் மகளை அடிக்காதீர்... அவளை நான் செல்லமாக வளர்த்திருக்கிறேன்... என் செல்லத்தை விட்டுவிடுங்கள்" -என்று கெஞ்சி- னான் மணமகளின் தந்தை...        

"இதோ பாருங்கள்... மணமகள் ஆரியருக்கு முதல் விருந்தாக வேண்டும் என்பது அரச விதி... இந்த விதிக்கு இடையூறு செய்தால், மன்னரின் நலம் பாதிக்கப்படும்... மன்னர் வீட்டில் அகால மரணம் ஏற்படும்... மன்னர் மனம் நோகச் செய்தால் நாடு சீரழியும்... அதனால், யாரும் குறுக்கீடு செய்யாமல், அர- சின் விதிக்குக் கட்டுப்படுங்கள்... அல்லவெனில் குறுக்கீடு செய்வோர் மரணிக்கும் வரை பொதுவெளியில் சவுக்கால் அடிக்க அரசின் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது..." -என்று மிரட்டினான்...

ஒரு காவலன் உடைவாள் தூக்கிப் பிடித்து, "நகருங்கள்..." - என்று உரக்க கூவினான்...

காவலர்கள் மணமகளை இழுத்துச்சென்று தேரில் ஏற்றினர்...

ஆரியனையும் பல்லக்கில் சுமந்து, தேரில்  அமர வைத்தனர்...

தேர் நகர்ந்து விரைந்தது  மணமகளுடனும் ஆரியனுடனும்...

பதறி ஓடி வந்தோர் சவுக்கால் அடிபட்டு அலறினர்...

அப்போது ஓர் இளைஞன் புரவியொன்றில் தேர் நோக்கி விரைந்தான்....

 

தேரில் பயணித்துக் கொண்டிருந்த ஆரியனை கண்ணிமை நேரத்தில்  இழுத்து, சீவினான்...

தலைத் தெறித்து உருண்டது... முண்டமோ துவண்டது... நீர்ப் போல் கொப்பளித்து, குருதி வெளியேறியது   

 எகிறி எகிறித் துடித்த ஆரியனின் முண்டத்தின் மீது மடல் சில வீசியெறிந்து புரவியில் மறைந்தான்... 

 

அந்த மடலில்

 

சேர மன்னனே,

நலக்குரியார் யாரெனின்  நாமநீர் வைப்பில் 

பிறற்குரியாள்  தோள்தோயா  தார்

 

மாந்தரை - மகளிரைஇழிவுச் செய்யும் ஆரியருக்கு உடந்தையாய் இருந்து, தமிழ் இனத்திற்கு பேரவலம் புரிகிறாய்...

 

நீ ஆரியபெண்களின் மடியில் முயங்குகிறாய்... அதற்கு ஈடாக, தமிழ் மகளிரை ஆரியருக்குத் தாரை வார்க்கிறாய்...

 

ஆரியன் ஒழுக்கசீலன் - அவனுக்கு யாவரும் அடிபணிந்திடல் வேண்டும் - என்று ஆணையி- டுகிறாய்...

 

தூய்மை - ஒழுக்கம்என்பதன் பொருள் அறியா மூடனாக நீ இருக்கிறாய்... 

 

நீர் இந்நிலத்தை சூழ்ந்திருப்பினும், நீரானது இந்நிலத்தின் தூய்மைக்கு உறுதுணையாய் விளங்குகிறது...

 

மானிடரும் தூயோராக இருந்தால் அல்லவா, மானுடம்  தூய்மையாக விளங்கும்... 

 

பிறப்பால் ஆரியனை நீ தூயோன் என்கிறாய்... தூயோன் என்பவன் யாரெனில், தோகை மயிற் போல் அழகாக பிறர் பெண்  இருப்பினும், அவள் தோள் தழுவிடத் துடிக்காத, மனவுறுதி எவனிடம் உள்ளதோ அவனே தூயோன் ஆவான்...

மகளிரை இழிவுச் செய்யும் ஆரியருக்கு உனது ஏவல் தொடர்ந்தால், எமது சீவலும் தொடரும்...           

-இது ஒரு சேரனின் சீற்றம்!’




13 – காதில் ஓதிய வேதம்

 

மஞ்சத்தில் மல்லாந்து மெய்மறந்து கிடந்த சேரநாட்டின் தலைமை அமைச்சனான ஆரிய- னின்  மேலாடையற்ற உடலை, இதமாக எண்- ணெய் தடவி நீவிவிட்டிருந்தனர் சேரநாட்டின் இளம் கன்னியர் மூவர்...

 

மார்பில் தொங்கும் நூல்கயிறு, அவனுடைய கழுத்தில் இறங்கியிருந்தது... 

 

கோவணம் போல் உடுத்தியிருந்த உடுப்பும், விலகியே இருந்தது...

 

ஆரியனின் இரு கைகளும் இருக்கன்னியரைத் தழுவியிருந்தன... காலால், இன்னொருவளின் கழுத்தில் உரசிக் கொண்டிருந்தான் ஆரியன்...

 

பெருத்தப் பானைப் போல் புடைத்திருந்த வயிற்- றின் மீது ஒருத்தி எண்ணெய் தடவிய போது, "அடியே சூத்திரச்சி, நீ உன் கைகளால் என்னை, கிறக்கத்தில் ஆழ்த்துகிறாய்... எங்கிருந்தடி நீ  கற்றாய் இந்தக் கலையை... உன் புருஷனுக்கும் இப்படித்தான் பண்ணுவாயா?" -என்று கேட்டான் ஆரியன்...

 

சேரநாட்டு தமிழச்சி ஏதும் கூறாமல், அவனை நீவிவிட்டுக் கொண்டிருந்தாள்...

 

"இன்னுங் கொஞ்சம் இனிதாய் மீட்டடி அடியில்" -என்றான் ஆரியன்...

 

அப்போது-

கூவலுடன் உள்ளே ஓடிவந்தான் ஆரியன் ஒரு- வன் : "அத்திம்பேர்... அத்திம்பேர்..."

 

"என்னடா ஓடி வருகிறாய்... அச்சம் தெரிகிறதே உன் கண்ணில்" - என்று தலைமை அமைச்சன் ஓடிவந்த ஆரியனிடம் கேட்டான்...

 

"நம்மவாவை கொன்னுட்டான் ஒரு சூத்திரன்"

 

"சூத்திரன் ஆரியனை..."

 

"சிரம் சீவிவிட்டான்" -என்று அவன் சொன்னதும் சிலிர்த்து எழுந்து அமர்ந்தான்...

 

ஆயினும் பெண்கள் அவன் உடலை நீவிக் கெண்டே இருந்தனர்...

 

ஆரியன், ஓடிவந்த ஆரியனின் முகத்தை உற்று நோக்கினான்...

 

"அத்திம்பேர், விவாஹம் பண்ணி வைக்க போன நம்மவாளை சூத்திரன் ஒருத்தன் கொன்னுட்- டான்... அவனைப் பிடிச்சு உடனே வெட்டணும்... ராஜாவாண்டே, சொல்லுங்கோ

 

"அபிஸ்ட்டு, நன்னா புரியற மாதிரி சொல்லடா"

 

தேரில் இருந்து, ஆரியனை கீழே இழுத்து,  தலையை ஒரு சேரன் சீவிய நிகழ்வை ஆரியன் விவரித்தான்... பிறகு கொல்லப்பட்ட ஆரியன் மீது வீசப்பட்ட, மடலையும் காட்டினான்...

 

"..."

 

"ஓன்னு சொன்னால் எப்படி?... அவாளைப்   பிடிச்சு  சிரசேதம் பண்ண வேண்டாமோ?"

 

"வேண்டாம்..."

 

"என்ன சொல்றேள்?"

 

தலைமை அமைச்சனான ஆரியன், சேரநாட்டு பெண்களைப் பார்த்து, "சூத்திரச்சிகளே, வெளி-யே  போங்கடி" - என்று விரட்டினான்...

 

சேரநாட்டு பெண்கள் மூவரும் அகன்ற பிறகு, தலைமை அமைச்சனான ஆரியன் சொன்னான் :  "நெய் எடுத்து நெருப்பில் ஊற்றடா..." 

 

"நேக்கு புரியலை"

 

அவனுடையக் காதில் ஏதோ கூறினான்...

 

ஆனந்தமாக வெளியேறினான் ஓடிவந்த ஆரியன்... 

 

ஆரியன் ஆரியன் காதில் என்ன சொன்னான்?





14 - இரத்தம் கக்கிய தேங்காய்...

 

ஒருஉச்சி வேளையில்-

 

'அத்திம்பேர்..."  என்று கூவி வந்த ஆரியன், கோயில் முன் மன்றத்தில் பாய் மீது, தூண் சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

 

தடித்த உடலும், கொழுத்த பானை வயிறுமாக காட்சியளித்தான்... மாரில் தொங்கியிருந்த நூல் கயிற்றை நீவிக் கொண்டே, சிந்தை வாயப்பட்டவனாக இருந்தான்...

 

கொக்கின் அலகு போல், குடுமி வைத்திருந்தான்...

அவன் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிந்தது...

உயர்ந்த விட்டத்தில் வரையப்பட்டிருந்த,    வண்ண  ஓவியங்களில் அவன் பார்வை இருந்தது...

ஓவியங்களின் அழகைவிட - அதனை நேர்த்தியாக - வரைந்திட்ட ஓவியர்களை நினைத்துப் பொறாமைக் கொண்டான் மனதில்...

'சூத்திரன்களா? இல்லை; இவன்கள் இந்திரனின் அருள் பெற்றவர்களா?... நூலிடை நங்கையர் ஆரியனின் தாள் பணிந்து கைகூப்பி வணங்குதற்ப் போல் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது... என்ன நேர்த்தி... என்ன அழகு..." என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்...

 அவனுடைய பார்வை,ஓவியத்தை மேய்ந்து விட்டு, விசிறிக் கொண்டிருந்த சேரநாட்டு பணிப்பெண்களின் மார்பகத்தையும் மேய்ந்தது...


"
ஏய் சேரநாட்டு சூத்திரச்சியே, பேரழகுதான் உன்மேனி" -என்று புகழ்ந்தான்...

அவன், விசிறிக் கொண்டிருந்த  பணிப்பெண் ஒருத்தியின்  தொடையை வருடினான்...

அப்போது ஓர் ஆரியன் வந்து, "மகாராணியார் வந்துவிட்டார்" - என்று தகவல் சொன்னான்...

 "உள்ளே வரச்சொல்"

தகவல் சொன்ன ஆரியன் சென்று, கோயிலின்  பெருங்கதவினைத் திறந்துவிட்டான்...

 தேரில் இருந்து இறங்கிய சேரநாட்டு அரசி, பூப்போல் மெல்லிளம் இடையசைய நடந்து ஆரியனிடம் வந்தாள்...

விசிறிக் கொண்டிருந்த பணிப்பெண் இருவரும், அரசியாரைக் கண்டு சிரம் தாழ்ந்து வணங்கினர்...

சலனம் ஏதுமின்றி தூண் சாய்ந்து அமர்ந்திருந்த ஆரியன் அரசியாரின் வருகையை சற்றும் பொருட்படுத்தவில்லை...

சிற்பமொன்று நடைப்பயின்று வருவது போல், வந்த அரசி இனிய குரலில், "ஸ்வாமி, நமஸ்காரம்" - என்றுச் சொல்லி ஆரியனின் தாள் பணிந்து எழுந்து நின்றாள்...

ஆரியனோ ஏதோ சிந்தை வயப்பட்டோனாய் காட்சியளித்தான்...


அவனது சிந்தையை தன்பால் ஈர்க்க அரசி பூங்குழலி மீண்டும்  குயில் போல், "ஸ்வாமி நமஸ்காரம்" - என்றாள்...

 "தேவியே, நின்னொடு வந்திருக்கும் நின் தோழியரை வெளியே அனுப்பிவிடு" -என்றான் ஆரியன்...


"
தோழியரே, ஸ்வாமியின் தாள் பணிந்து விட்டு, கோயிலுக்கு வெளியே செல்க" -என்றாள் சேர நாட்டு அரசி...

தோழியர் நால்வரும் ஆரியனின் தாள்பணிந்து, வணங்கிவிட்டு, வெளியே சென்றனர்...

ஓர் ஆரியனை அழைத்து, "பத்மநாபனின் திருவடியில் இருக்கும் வழிபாடு பொருள் கொண்டுவா" -என்றான்...

பிறகு, விசிறிக் கொண்டிருந்த பணிப்பெண் இருவரையும் நோக்கி, "ஸூத்திரசியே, வெளியேறுக" - என்றான்...

விசிறிக் கொண்டிருந்த பணிப்பெண் இருவரும் ஆரியனின் தாள் பணிந்து வணங்கிச் வெளியேறினர்...


"
ஸ்வாமி என்னுள் ஓர் அய்யம்..." என்றாள் சேரநாட்டு அரசி...


"கேள் தேவி... ஆரியன் அன்றி அய்யம் அகற்றுவோன் வேறு யாருண்டு ஜகத்தில்... நின் அய்யம் யாது" -என்று கேட்டான் ஆரியன்...

 "சூத்திரர்கள்  கோயிலில் நுழைவது தீட்டல்லவா... சூத்திரச்சிகளை நுமக்கு பணிவிடை செய்திட ஏன் ஒப்பம் செய்கிறீர்... சொல்லியிருந்தால் அரண்மனை பெண்களை அனுப்பியிருப்பேனே.”


"
தேவியே, ஆரியனுக்கு பணிவிடை செய்வதால், ஸூத்திரச்சிகளின் பாவம் கழிந்துவிடும்... ஆதலால், தீட்டு என்பது இல்லை" என்று சொல்லும் போது, வழிபாடு பொருட்கள் அடங்கிய வெள்ளித் தட்டினை  கொண்டு வந்து வைத்தான் பத்து வயதுடைய  ஆரிய சிறுவன் ஒருவன்...

அவனுடைய பாதத்தையும் தொட்டு வணங்கினாள் சேரநாட்டு அரசி...

"சரி, நீயும் வெளியே செல்... அரசியாரின் பூசை முடியுமட்டும் வாயிற்கதவுதனை எவருக்கும் திறந்து விடாதே..." -என்று சொல்லிவிட்டு நன்- றாக நிமிர்ந்து அமர்ந்தான்  ஆரியன்...

சிறுவன் அகன்ற பிறகு  வெள்ளிக் குடுவையில் இருந்த நீரை தர்பைப் புல்லால் தொட்டு, அரசியின் மீதுத் தெளித்தான் ஆரியன்...

கண்மூடி அமர்ந்திருந்த அரசியிடம், "தேவியே, வாழையிலை விரித்து அதன்மீது அமர்ந்திடு" -என்றான்...


நீண்டதோர் வாழையிலை விரித்து அதன்மீது அமர்ந்தாள் அரசி அழகு மயிற்போல்...

"தேவியே, நின் திருக்கரத்தால் இந்த தேங்காயினை உடைத்து, என் காலடியில் வை"- என்றுச் சொல்லி, தேங்காய் ஒன்றையும், அதனை வெட்ட அரிவாள் ஒன்றையும் அரசியிடம் கொடுத்தான்...

 "தேங்காய் சரிபாதி உடைப்படவேண்டும்" –என்றான் அரசியிடம்...

 தேங்காயை வாங்கி அதன் நரம்பின் மீது வெட்டிய சேரநாட்டு அரசி "ஸ்வாமி" -என்று அலறினாள்...

உடைப்பட்ட தேங்காயிலிருந்து இரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது... அதிர்ச்சியினை வெளிப்படுத்தி  "தேவியே, இது என்ன?... சகுனம் சரியில்லையே..."–ஆரியன் தீமையின் அறிகுறி  என்பது போல்  புலம்பினான்...

உண்மையில், அரசியார் வருவதற்கு முன்னர், தேங்காயின் கண் பகுதியை நோண்டி, நீரை வெளியேற்றியிருந்தான்... மீண்டும் கண் வழியே, கொல்லப்பட்ட பறவையின் குருதியை ஊற்றி கண் பகுதியை களிமண் கொண்டு அடைத்திருந்தான் ஆரியன்...

இதனை அறியாமல், தேங்காயிலிருந்து இரத்தம் வடிவதாக எண்ணி, 'தீமையின் வடிவமோ' என அஞ்சினாள் அரசி...

அவளுடைய அச்சத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஆரியன், மேலும்அவளை அஞ்சச் செய்ய பொய்யும் பேசினான் :  "நமது சேரநாட்- டின் தலைமை அமைச்சர், நேற்று ஓர் கனவு கண்டாராம்; சேரநாட்டின் குடை சாய்வது போல்..." –என்றான்

"ஸ்வாமி... இது என்ன சோதனை... என் நாதனுக்கு ஏதும் ஆபத்தா?" – என்று கேட்டாள் அரசி... அவளுடைய முகம் வாடி, சோகம் கொண்டது...

"தேவி, தலைமை அமைச்சர் தான் கண்ட கனவினை என்னிடம் கூறி, 'தேவியாருக்கு பூசைச் செய்து சகுனம் அறிந்திடு' என்று என்னைப்  பணித்தார்... அதன் பொருட்டே, சிறப்பு பூசை செய்திட தங்களை அழைத்தேன்..."

"
ஸ்வாமி... எனக்கு அச்சம் ஆகிறது... தேங்காயில்  இரத்தம் வடிகிறதே... இதன் அறிகுறி என்ன?... பரிகாரம் உண்டா ஸ்வாமி"

"தேவியாரே, கலங்க வேண்டாம்...  கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டது என்பதை நீ அறிவாயே... எத்தகைய தீய சகுனத்தையும் ஆரியரின் மந்திரம் கட்டுப்படுத்தி விடும்... அஞ்சாதே..." -என்று சொல்லி, ஆறுதலாக  அரசியின் கரம் பற்றினான்...

 "ஸ்வாமி... அச்சம் ஆகிறது" - என்றுச் சொல்லி கண்ணீர் உகுத்தாள் அரசி...

"அரசியே, ஆரியன் நான்  இருக்கையில், நீ கண்ணீர் வடிக்கலாமோ" என்று சொல்லி, அவளுடைய கண்ணீரை இதமாகத் துடைத்து விட்டு மார்பில் சாய்த்துக் கொண்டான் அவளை...

அதே நிலையில், வெள்ளிக் குடுவையில் இருந்த நீரை தர்ப்பைப் புல்லில் தொட்டுஅவளுடைய உச்சியில் தெளித்த வண்ணம், இருவிழிகளை மூடி ஏதோ முணுமுணுத்தான்...

"
ஸ்வாமி அச்சமாகிறது"

அரசியின் முதுகில் தடவிவிட்டு, மீண்டும் வாழையிலையில் அமரச் செய்தான்...

"தேவியே, கிண்ணத்தில் இருக்கும் மஞ்சளைத் தொட்டு, உள்ளங்கையில் பூசிக் கொள்"

வெள்ளிக் கிண்ணத்தில் இருந்த மஞ்சள்  தொட்டு, உள்ளங்கை இரண்டிலும் பூசி, ஆரியனிடம் நீட்டினாள்...

ஆரியன் தனது ஆட்காட்டி விரலோடு பெருவிரலையும் சேர்த்து  அரசியின் உள்ளங்கையில் அழுத்தி, "தேவியே இருக் கரத்தையும் இறுக மூடிக்கொள்" -என்று பேசிக் கொண்டே, அரிசி அறியாவண்ணம், தன் விரல் நக இடுக்கில் இருந்த சுண்ணத்தை அரசியின் உள்ளங்கைக்கு மாற்றினான்...

அரசியும் அவன் சொன்னபடியே கரத்தை மூடிக் கொண்டாள்...

"தேவியே, நின் இருக்கரத்தையும் நன்றாக தேய்த்து விட்டு, நீட்டு" - என்றான்...

அவ்வாறே  இருகரத்தையும் தேய்த்தப் பிறகு ஆரியனிடம் நீட்டினாள்...

இப்போதும் இருக்கரங்களின் உட்பகுதி இரத்தம் போல் சிவந்து காணப்பட்டது...

"ஸ்வாமி, மஞ்சள் தொட்ட  என் கை இரத்தம் போல் மாறிவிட்டதே... " -என்று அலறினாள்...

தன் ஏமாற்றுதலுக்கு அரசி பலியாகிக் கொண்டிருப்பதை எண்ணி ஆரியன் உள்ளுள் மகிழ்ந்தான்...

ஆனாலும்; உவகையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "அரசி இதென்ன கோரம்... தலைமை அமைச்சன் கண்டக் கனவும் மெய்யாகி விடுமோ... மெய்யாகி விட்டால், அரசன் உயிருக்கு ஊறு நேருமே... அரசி நீயும் பகைவர்களால் சூறையாடப்படுவாயே... சேரநாடு இனி எவனுக்கு இரை- யாகுமோ" -என்று மேலும் அவளுக்கு அச்சம் ஊட்டினான்... 

 "தேங்காய் இரத்தம் கக்குவது, நாட்டின் அரசனுக்கு நன்மையானதல்லவே... தேவியின் உள்ளங்கையில் இருந்த  மஞ்சள்,  சிவந்த நிறமாக மாறியதை  என் வாழ்வில் நான்  கண்டிராத காட்சியாக இருக்கிறதே... பேராபத்தின் அறிகுறி- யோ... நாராயணா, இறைவா, சேரநாட்டுக்கும் தீமை வராலமோ... நின் துணை அரசிக்கும் இல்லையோ... ஏனிந்த சோதனை சொல்லடா நாராயணா..." -என்று உரக்கக் கூவி நின்றான் ஆரியன்...

தீமை நேருமோ என்ற அச்சத்தில் உழன்ற அரசி, "ஸ்வாமி, கடவுளிடம் யாசித்து, மன்னவனையும், என்னையும் காப்பாற்றுங்கள்" -என்று மன்றாடினாள்...  

அரசியின் நெற்றியைத் தொட்டு, அவளின் உச்சந்தலையை அழுத்தி, கண்களை மூடிக் கொண்டு-

*“
தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் 

பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான 

ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா 

முஷந்தஹா ப்ஷரே பஷேபம்...” –என்று

அரசிக்குப் புரியாத மொழியில் `சொல்கிறான்... 

அதாவது, 'நான் இவளைக் கட்டிப்பிடிப்பேன்... இவளோடு நான் உறவுக் கொள்ளும்போது, என்னுடைய உறுப்பு இவளுடைய உறுப்பில் சரியாக பொருந்திட, தேவதைகளே, நீங்கள் உதவ வேண்டும்'  -எனும் பொருளில் சொல்லுகிறான்...

 தும் புரியாத சேரநாட்டு அரசி, "ஸ்வாமி, ஆபத்திலிருந்து தப்பிக்க, பரிகாரம் கூறுங்கள்... கடவுளிடம் கேட்டுச் சொல்லுங்கள்" - என்று கெஞ்சி கண்ணீர் வடிக்கிறாள்....

ஆரியன், "அஞ்சாதே தேவி, நிழலாய் நான் இருக்க நீ சூரியனுக்கு அஞ்சலாமோ... ஆரியன் யான் இருக்கையில் நீ வேதனைப்படுவது சரியோ... கண்ணீர் வடிக்காதே... இறைவன் பரிகாரம் சொல்லிவிட்டான்..." -என்றுச் சொல்லி, அரசியின் கண்ணீர் துடைத்தான்...

 "ஸ்வாமி,பரிகாரம் யாது?... பொன்னும், பொருளும் அள்ளித் தரவா?... காடும், கழனியும் காணிக்கையாக்கவா?... கூறுங்கள் ஸ்வாமி!"

 "தேவி, கடவுள் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறார்... அதுவே பரிகாரம்..."

*https://thathachariyar.blogspot.com/

 

"எனக்கு மணமாகிவிட்டதை கடவுள் அறியாரா ஸ்வாமி"

"தப்பு... தப்பு... கடவுளை நிந்திப்பதுப் போல் பேசக்கூடாது தேவி... கடவுள் நின்னை திருமணம் செய்ய விரும்புகிறார் என்றால், இப்போது உன்னை விரும்- புகிறார் என்று பொருள்... உன் உடலை இறைவனுக்கு கொடுத்துவிடு  தேவி... கடவுள் கொடுத்த உடலை கடவுள் சிறிதுநேரம் கேட்கிறார் என்றால் உனக்கு புண்ணியம் அல்லவா... அவன் உள்ளம் சாந்தி அடையட்டும்... அதுவே பரிகாரம்"...

 "கடவுள்..."

 "உன்னைப் பள்ளியறைக்கு அழைக்கிறார்..."

 "கடவுள்... ஸ்வாமி... கடவுள் என்னைத்..."

 "ஆமாம் தேவி... இணங்கு... இன்னல் நொறுங்கவே..."

 "கடவுள் என்னெதிரில்... நான்... கடவுளை காண்பேனா?..."

"தேவி, ஆரியனும், கடவுளும் ஒன்றல்லவா... ஆரியன் புணர்ந்தால் கடவுள் நின்னைப் புணர்ந்தது போல்... கடவுள் எப்போதும் ஆரியர் வடிவில் உறைவார் என்பதுதானே நிதர்சனம்..."

 "ஸ்வாமி... ஆரியர், என்னைத் தொடுவது தீட்டாகாதோ?..."

"ஆரியன் விருப்பத்தை நிறைவேற்றினால், தீட்டு என்பது ஏதும் இல்லை தேவி...சொர்க்கத்தின் கதவு ஆரியனைத் தொடுவதால் திறக்கும் தேவி ..."

 "என் மன்னவனுக்கும், எனக்கும், நாட்டுக்கும் கேடு வராதிருக்க, என்னை நான் கொடுப்பேன் ஸ்வாமி... ஆரியர் என்னைத் தொடுவது எனக்கு  பாக்கியம்..."

 அரசி கண்மூடினாள்...

 ஆரியன் அவளை வாழையிலையில் படுக்க வைத்து சுவைத்தான்...

சுவைத்துக் கொண்டிருக்கும் போது, 'நாராயணா... நாராயணா' என்று சொல்லிக் கொண்டிருந்தாள்....

சுவையின் உச்சத்தில் ஆரியன் செய்ததை ஆங்கிருந்தோர் யாரும் அறிய- வில்லை... 

ஆமாம்; காம உச்சத்தில், அரசியின் கழுத்தை நெரித்து -கத்தியால் அறுத்து - கொன்றான்  ஆரியன்... 

 

 

 15 - ராஜா என்று சொல்லு... 

 

வைகை ஆற்றின் கரை மிக அகலமாகவும், நெடுக நீண்டும் இருந்தது...

கரையின் இருபுறமும் நெடிதுயர்ந்த, பனை மரங்கள் சில்லென்றக் காற்றினை வீசிக்கொண்டிருந்த காலைநேரம்...

மீன்கொத்திகள் நீரில் பாய்வதுப் போல், வேகமெடுத்து ஓடும் வைகையின் பரப்பினுள் அலகை நுழைத்து, நுழைத்த வேகத்தில் மீன்கள் துள்ளத் துள்ள தூக்கிச் செல்லும்  காட்சிகளை கண்ணுற்றவாறே பாண்டிய அரசன் பயணித்துக் கொண்டிருந்தான் விரிந்த தேர்மீதில்...

அரசனுக்கு அருகில் -ஆனால்; சற்று உயர்ந்த தனி  இருக்கையில்- ஆரியன் ஒருவன் அமர்ந்திருந்தான்... அந்த ஆரியன் பாண்டியநாட்டு   தலைமை அமைச்சனுமாவான்...

 

மன்னரும்,தலைமை அமைச்சனும் ஒரேத் தேரில் பயணித்துக் கொண்டிருப்- பதை மெல்லிளந்திரையினூடே கண்டும்  மக்கள், மன்னவனின்  வருகையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை...
ஏனெனில், மன்னவன் தமக்கானவர் அல்லர் - ஆரியருக்கான மன்னவர் - என்ற மனநிலை மக்களின் உள்ளத்தில் பதிந்திருப்பதாலோ என்னவோ, எவரும் மன்னவனைக் கண்டுக் கொள்ளாமல் தம் பணிகளில் ஊன்றியிருந்தனர்.

வயல்வெளிகளில் பணியின் போது பாடப்படும் தெம்மாங்கு பாடல்களை பாடிக்கொண்டு, உழவுப் பணியில்  இருந்தனர்...

"அமைச்சரே, முன்னெல்லாம் என் வருகையை அறிந்தால், மலர்த்தூவி - இன்னிசையெழுப்பி - இன்முகத்துடன் என்னைக் காண வரும் மக்கள், இப்போதெல்லாம் பாராமுகத்தினராய் இருக்கின்றனரே..."


"
மன்னவனை பார்த்தலோ, நெருங்குதலோக் கூடாது என்று, சொல்லப்பட்டிருக்- கிறது மன்னவா... ஸூத்திரர் அல்லவா இவர்கள்..."

 "... மறந்துவிடுகிறேன் நான்..."

 "நானிருப்பது ஏன்?... தங்களுக்கு நினைவூட்டல் செய்வதற்குத்தானே"


"
அதோ, பச்சை நிறத்தில் ஆடையுடுத்தி  நாற்று நட்டுக் கொண்டிருக்கும் இளங்கிள்ளையின் கட்டுடல் என் நெஞ்சை சுண்டுகிறது, அமைச்சரே..."

"
மன்னவா, நான் இருக்கையில் நீர் தவித்தல் கொள்ளல் தகுமோ?... தளுக்கி, குலுக்கி, நெளிந்தோடும் வைகை நீர் உமது தாகத்தைத் தணிக்க உதவாதெனில், கரையை உடைத்து வதம் செய்திட மாட்டேனா நான் மந்திரத்தால்... சாரதி, தேரை நிறுத்து" -என்று தலைமை அமைச்சன் ஆணையிட, சாரதி நிறுத்தினான்...

தேரின் முன்னும், பின்னும் வந்துக் கொண்டிருந்த  நூற்றுக்கும் மேற்பட்ட புரவி- களும் நின்றன... நின்ற புரவியின் மீது அமர்ந்திருந்த    படைத்  தளபதியை, அருகே அழைத்தான் தலைமை அமைச்சன்...

"தளபதியாரே, காவலன் ஒருவனை ஏவி, அதோ பச்சை நிறத்து பாவையவளை பாங்காய் அழைத்து வந்து, அந்தப்புரத்தில் சந்தனம் பூசி அழகு செய்திடச் சொல்..." -என்றான்...

கட்டளையிடப் பட்டதும் படைத் தளபதி காவலன் ஒருவனை ஏவினான்...

சாரதி மீண்டும் தேரை ஓட்டினான்...

"மகிழ்ச்சிதானே, மன்னவனே..." -என்று ஆரியன்  கேட்டதும், அரசன் அகமகிழ்- வுடன், "நன்றி அமைச்சரே..." என்று கூறி, பொன் அணி ஒன்றை தன் கழுத்தில் இருந்து கழற்றி, "இதனை அன்போடுத் தருகிறேன்... ஏற்றுக் கொள்க" -என்று சொல்லி ஆரியனிடம் நீட்டினான்...

ஆரியனும் அதனைக் குளிர்ந்த நெஞ்சோடு, உடல் குறுகி வாங்கிக் கொண்டான்; குறுவலுடன்...

தேர் பயணித்துக் கொண்டிருந்தது...

தலைமை அமைச்சன் சாரதியிடம், "சாரதி, வலப்புறமாக திரும்பும் சாலையில் திருப்புக" -என்றான்...

மாஞ்சோலை நிரம்பியிருந்த வலது சாலையில் தேர் திரும்பியது... புரவிப் படையணியும் தேர் சென்ற சாலைக்குள் தொடர்ந்தது...

மாம்பூவின் மணம் மனதைத் தாலாட்டியது... "ஆகா... மாம்பூவின் மணத்தோடு மடி சாய, மங்கையொருத்தி இருந்தால் மகிழ்வேன் அமைச்சரே..." -என்றான் பாண்டிய மன்னவன்...

"நல்லது மன்னவா, அந்தப்புரத்தில் இருந்து ஆரியப் பெண் ஒருத்தியை அழைத்துவர சொல்கிறேன்" -என்று தலைமை அமைச்சனான ஆரியன் சொல்- லிக் கொண்டிருக்கும் போது, ஓர் இளைஞன் காளைப் பூட்டிய வண்டியொன்றில் கடுவேகத்தில் வந்து தேரின் குறுக்கே மறித்தான்...

"
அரசே, உழவுப் பணியில் இருந்த, என் இல்லாளை காவலன் ஒருவன் தூக்கிச் செல்கிறான்... "-என்றான் பதைப்புடன்...

ஆத்திரம் கொண்டு இறங்கிய ஆரியன், காளைஞனை நோக்கி, "ஸூத்திரனே, மன்னவனை  ‘ராஜா’ என்று கூப்பிட வேண்டும் என்று பறையறிவித்து சொல்லப்பட்டதை நீ கவனத்தில் கொள்ளாமல், அரசே என்கிறாயே... ‘ராஜா’ என்ற அழைப்பில் எழும் ஓசை இந்த ராஜாங்கத்திற்கு வலுசேர்க்கும் என்று பறையறிவித்தும் நீ அரசே என்று ராஜாவை விளிப்பது ஏன்?" -என்று சீறினான்...

"யோவ், ஆரியனே, என் துணைவி தூக்கப்பட்டாள் பாண்டியக் காவலனால் என்று நான் துக்கித்து இருக்கிறேன்... என்னிடம் வந்து ராஜா, கூஜா என்கிறாயே"

அதனைக் கேட்டு தேரில் இருந்து வெளிப்பட்ட அரசன், "ஏய் சூத்திரனே, ஆரியரிடம் அடங்கிப் பேச வேண்டும் என்பதை  அறியாயோ நீ... தளபதியே, இந்தத் தறுக்கனின் தலையை சீவு" -என்று ஆணையிட்டான்...

தளபதி அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வாளேந்தி காளைப் பூட்டப்பட்ட வண்டியில் இருந்த இளைஞனை வீசினான்... தலை சீவப்பட்டது...  முண்டாமோ துடித்துடித்து தரையில் சரிந்தது...

"தளபதியே, தக்கதோர் பரிசு உனக்கு..." என்றுக் கூறி, தான் அணிந்திருந்த காப்பு ஒன்றினை தளபதிக்கு வழங்கினான்...

தளபதி பெற்றுக் கொண்டான் புன்னகையோடு... ஆங்கு பணியில் இருந்த குடிமக்கள் அஞ்சியப் பார்வையோடு அரசனைக் கண்டனர்...

மீண்டும் தேர் பயணிக்க- ஆரியன் சொன்னான் : "மன்னவா, தக்க தருணத்தில், தகுந்த ஆணை  செய்தீர்... நல்லது... ஸுத்திரன்களை இவ்வண்ணமே அடக்க வேண்டும்... அல்லவெனில், சேர நாட்டில் நடந்தேறிய வன்மம் பாண்டிய நாட்டிலும் அரங்கேறிவிடும்..."

"அதனால்தான் சீவிடச் சொன்னேன் தலையை.. என்ன ஆணவம்... என்ன திமிர்... ஆரியரை எதிர்ப்பதை என்னால் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்... அறிவில்லா சூத்திரன் அழிந்தான்... இதனை வளரவிட்டால், சூத்திரன் அச்சம் இல்லாதவன் ஆகிவிடுவான்... சேர நாட்டில் நடந்ததை அறிவீர் அல்லவா!. மணம் செய்வித்த  ஆரியரைக்  கொன்றதோடு, சேரநாட்டு அரிசியின் கற்பையும் சூறையாடிக் கொன்று விட்டானாம் அங்கிருந்த சூத்திரன் ஒருவன்... கொன்றதோடு, 'நலக்குரியார் யாரெனின்  நாமநீர் வைப்பில் பிறற்குரியாள் தோள்தோயா  தார்.' என்றோர் குறளையும் மடலாய்  வரைந்து, கொல்லப்பட்ட ஆரியன் மீதும், அரசி மீதும் வீசிச் சென்றானாம்... அப்படியோர் நிலை பாண்- டியநாட்டில் உருவாகிட கூடாது என்பதற்காகவே சூத்திரனின் தலை சீவிட ஆணைப் பிறப்பித்தேன்" -என்றான் பாண்டிய அரசன்... 

"பலர் காணக்  கழுவேற்றிட வேண்டும் மன்னவா!... ஸூத்திரர் நெஞ்சில் எப்போதும் அச்சம் ஏற்றிட வேண்டும்..." -என்ற தலைமை அமைச்சன், சாரதியை நோக்கி, "அதோ அந்த பூவரசம் மரத்தடியில் தேர்தனை நிறுத்து..." –என்றான்...

தேர் நிறுத்தப்பட்டது...


16 - சூத்திரனுக்கு தனிநிலம்...

மாமரங்களில் கனிந்து, மணம் வீசிக்கொண்டிருந்தன கனிகள்... அவற்றின் மணம் சுமந்து வந்த இளங்காற்றோடு, மகளிர் பாடும் இசையும் மாங்கனியின் சுவைக்கு நிகராக இருந்தது...

இசைப்பாடிய வண்ணம் கனிகள் பறித்து,   கூடைகளில் நிரப்பினர் மகளிர்...

நிரப்பப்பட்ட கனிகளை  வரிசைப்படுத்தி - சீராக - வண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தனர் ஆடவர்.

மாங்கனிகள் நிரப்பப்பட்டக் கூடைகளை வண்டியில் ஏற்றும்போது, மகளிர் பாடும் பாடலுக்கு ஏற்ப, எதிர்ப் பாட்டு பாடினர்...

அதோடு, குயில்களின் இசையும் அந்த இளங்காலையின் நிறத்திற்கு புது வண்ணம் பூசுவது போல்  அமைய, பறவைகளின் ஒலியும் ஒத்திசையாக நிரம்பி எழில் சேர்த்தது...

தங்கள் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் சிந்தையை மிரட்டுவதுப்  போல் புரவிகளின் குளம்படியோசை டொக் டொக் என - சடசடவென - அண்மித்தது...

புரவியில், அமர்ந்தநிலையில், ஒரு வீரன் நெருங்கி, "இருநாட்களில் இங்கிருந்து யாவரும் வெளியேறிட வேண்டுமென மன்னவர் ஆணையிட்டுள்ளார்" -என்றான்...

 "ஏன்"" - என செங்கொடி கேட்டாள்....

"மாமரங்கள் யாவற்றையும் அழித்துவிட்டு,  இங்கே கடவுளுக்கு ஆலயம் எழுப்பிட விரும்புகிறார் மன்னவர்..."

"குழந்தையின் கழுத்தைத் திருகி, இரத்தம் பருகிட மன்னவன் விழைகிறான் என்று நீ விந்தையாய் சொல்வது ஏன், காவலனே?"

"துடுக்கோடுப் பேசி, துறவாதே உயிர்... மன்ன- வன் கட்டளைக்குப் பணிந்திடு"

"குழந்தைகள் போல் சீர்செய்து எங்களால் வளர்க்கப்பட்ட மாமரங்களை, வெட்டுவேன் என்பது துடுக்கா?... எம் மக்களுக்கு உணவளிக்கும் இந்த மரங்களை ஏன் வெட்டுகிறீர் என்று கேட்பது துடுக்கா?... காவலனே, எமது வாழ்விடத்தை விட்டு அகற்றுதல் ஏனென வினவினால், துடுக்கெனப் படுகிறதோ உம் செவிக்கு"

"பெண்ணே, இது மன்னவன் ஆணை... மன்னவன் ஆணையை மீறுவது பெருங்குற்றமாகும்"

"இப்போது எங்களுக்கு இடையூறு செய்யாது சென்றிடு காவலனே!...  பகலுக்குள் கனிகள் சந்தைக்கு அனுப்பிடவேண்டும்... பாண்டிய மன்னவனிடம் எங்கள் கூற்றினைக் கூறி, இது முறையோ என  கேட்க வருகிறோம் அரசவைக்கு... "

"மன்னவனும், தலைமை அமைச்சனும் இங்கே வந்துள்ளனர்... ஆலயம் எழுப்பிட, இடத்தினைத் தேர்வு செய்தவர் தலைமை அமைச்சர்... தலைமை அமைச்சரின்  எண்ணத்திற்கு இசைவுத்  தந்து விட்டார் மன்னவர்..."

"எம் நிலத்திலிருந்து எம்மை அகற்றி, ஆரியருக்கு  கோயில் கட்டிட இசைவுத் தருவது முறையோ?"

ஆண்களும், பெண்களும் காவலரை சூழ்ந்தனர்... அவர்களின் முகத்தில் கடுங்கோபம் வெளிப் பட்டது...

விழிகள் சிவந்திட செங்கொடி சீறினாள் : "பாண்டிய மன்னவனிடம் கூறு... எமக்கு சோறு போடும்  இம் மாமரங்களை  வெட்டிடும் முன் எம் உடலை வெட்டிடுவென்று..."

"வெட்டவும் செய்வோம்... கழுவேற்றவும் செய்வோம்..." -என்ற குரல் கேட்டு, அனைவரும் திரும்பினர்...  

குரல் தந்தவன் ஆரியன் - தலைமை அமைச்சன் - அமர்ந்திருக்க, அருகில் இருந்தான் பாண்டிய மன்னன் தேரில்...

தேர் அவர்களை நெருங்கி நின்றது...

"பாண்டியநாடு, வளம் பெறவும், வல்லமைப் பெறவும் வேண்டுமெனில், இங்கே ஆலயம் எழுப்பிட வேண்டுமென்று அந்தணர் கனவில் கடவுள் கூறியிருக்கிறார்... கடவுளின் நிந்தனைக்கு உள்ளாகாமல் அனைவரும் அகன்றி- டுக  இங்கிருந்து..." -என்று மன்னன் கணீரெனக் கூறினான்...

"மன்னவா, இது எங்கள் வாழ்விடம்" -செங்கொடி...

"
மன்னவன் என்று சொல்லாதே... ராஜா என்று பெருமிதம் பொங்க சொல்லு... ராஜாதிராஜன் பாண்டியராஜன் புகழ், பார் முழுதும் சிறக்க, மந்திரம் பொதிந்துள்ளது ராஜா எனும் சொல்லில்..." -என்று தலைமை அமைச்சனான ஆரியன் சொன்னான்....

மீண்டும் செங்கொடி, "விளைநிலமதைக் கொன்று, கோயில் செய்வது நன்றோ... கோயில் செய்ய இப்பாண்டிய மண்ணில் வேறிடம் இல்லையா" -என்றாள்...

"பெண்ணே, கடவுள் விருப்பம் இது... நான் உங்கள் அனைவருக்கும் மாற்றிடம் தருகிறேன்... அதோ ஆறோடும் மலைக்கு அப்பால், உள்ள பெருவெளிக்கு சென்றிடுக..."

"... ஆற்றுக்கு தொலைவில், புல்லும் முளைக்காத -புதரும் தழையாத-  பாழ்நிலமதில் காலூன்றி வாழ்தல் கூடுமோ..." -செங்கொடி...

"பெண்ணே, கடவுள் விருப்பமிது.... மறுப்புச் சொல்லாதே... பாழ்நிலமென்று பதறல் வேண்டாம்... கோயில் கட்டி, யாகம் ஒன்று ஆரியர் கொண்டு செய்திடுவேன்... யாகம் செய்திட்டால், பாழ்நிலமது  பூவிதழ் போல் செழித்திடும்...   அஞ்சாதே..."

"பாண்டியநாட்டில் விளைநிலம் பாழாயிற்று எனும் பழிச்சொல் படருமேயானால், பாரோர் நகைத்தல் கொள்வரே..."

"பெண்ணே, நிலம் பாழாகும் என்று வீணாய் நீ கூறாதே... கோயில் எழுப்பி இந்நிலத்தில் கோபுரமும் செய்யும் போது அழகு பெறாதோ  இந்நிலம்... அதுமட்டுமா... கோயிலின் அருகே அந்தணர் வாழ்ந்திட அழகிய இல்லங்கள் அமைக்கப்படும்... அந்தணர் வாழ்வுக்கு நிலம் தரப்பட்டு, உழவும் மேற்கொள்ளப்படும்... இந்நிலம் செழிப்புடன் திகழப் போவதை நீ காணத்தான் போகிறாய்... அப்போது நீ என்னை புகழ்வாய்..."

"ஆகா... நன்று... எமது வாழ்விடத்தில் ஆரியருக்கு வசிப்பிடமா?"

"பெண்ணே, உன்னிடம் என்னப் பேச்சு... கோயிலின் அருகே அந்தணர் குடியிருப்பு அமைய வேண்டும்... அதனை அடுத்து சத்திரியர் வசிப்பிடம் அமையும்... அதன் புறத்தே, வைசியர் வாழ்வில்லங்களுக்கு இடம் தரப்படும்... கடைக்கோடியில்- சூத்திரர்கள் உங்களுக்கு ஒதுக்கப்படும்... இது என் ஆணை..."

"நல்லது... இந்த மண்ணின் குழந்தைகள் யாம், கடைக்கோடிக்கு ஓடவேண்டும்... ஒண்ட வந்த ஆரியருக்கு  ஆற்றின் கரையில் - அழகிய நகர் சமைக்கப்பட வேண்டும்...  கெடுமதியாளர் வாழ - குடிகள் மாய வேண்டும் -  என்று நீர்  இடும் ஆணையை, பிற நாட்டினர் கேட்டிடின் பித்தன் என்று உன்னை மொழிவரே மன்னவா" - என்று செங்கொடி ஆவேசமாய் குரல் கொடுத்தாள்...

அப்போது ஆத்திரம் கொண்ட ஆரிய அமைச்சன், "காவலனே, 'ராஜா' என்று சொல்லாமல், சூத்திரச்சியவள் மீண்டும் மீண்டும்மன்னவா’ என்று விளிக்கிறாள்... வாள் கொண்டு அவள் குரல் வளையை கொய்தெறி" -என்றான்...                                  

அமைச்சன் கூற, புரவியில் இருந்த காவலன் ஒருவன் செங்கொடியை நோக்கி, வாள் தூக்கினான்...

வாள் தூக்கப்பட்ட கைமீது ஓர் அம்பு வந்து குத்தியது... அம்போடு ஓர் மடலும் இருந்தது...

அம்புக் குத்துப்பட்டு காவலன் வலியால் அலற- அம்பு வந்த திசையை அனைவரும் பார்க்க-

இளைஞன் ஒருவன் மாமரங்கள் மீது தாவி  மின்னல் வேகத்தில் மறைந்தான்...

அவனைப் பிடிக்க இயலாமல் காவலர் திரும்பினர்...

அம்போடு வந்த மடலை ஒரு காவலன் எடுத்து, மன்னவனிடம் நீட்டினான்...  

அதில்-

'பழுதென்னும் மந்திரியின் பக்கத்துள்     தெவ்வோர்
எழுபது  கோடி  உறும்.'                                         

பாண்டிய மன்னனே,

'தீய ஆலோசனைகள் வழங்குவோன் அமைச்சனாக அருகில் இருப்பது, ஆட்சியாளனைச் சுற்றிலும்   எழு மடங்கில்  பகைவர் இருப்பது போலாகும்...'  என்பதை நீ உள்ளத்தில் கொள்... அல்லவெனில் நீயும் அழிவாய்... நின் அரசும் அழியும்....

மடல் கண்ட மன்னன் வெகுண்டு,  "எய்தவனை எங்கிருந்தாலும் கழுவில் ஏற்றுக... அடங்க    மறுக்கும் இந்த சூத்திரர்களை வெட்டி எறிக..." -என்றான்... 

எதிரில் திகைத்து நின்றிருந்த, மக்கள் மீது காவலர் பாய்ந்து வெட்டினர்...  சிலர் அஞ்சி ஓடினர்...

சிறுநேரத்திற்கு முன்இன்னிசையில் நனைந்த மாமரங்கள், இப்போது இன்னிசை இசைத்தவரின் குருதியில் ஊறியது... 

காவலர் அணிவகுக்க, செங்குருதி மீதில், மன்னனையும் - ஆரிய அமைச்சனையும் - சுமந்து தேர் திரும்பியது...

தேர் ஓட ஓட, வெட்டுப்பட்ட மக்களின் ஓலம் மெல்ல மெல்ல கரைந்தது...



17 - பல்லவச்சிற்பங்கள் 

 

பல்லவநாட்டின் கடல் அலைகள் இன்று கூடுதல்  அளவில், சீற்றத்துடன் கரையைத் தாக்கிக் கொண்டிருந்த தருணமதில்-

படைத்தளபதியும், பல்லவ மன்னனும் அலைகள்  செய்த ஈர மண்தனை காயம் செய்வதுப் போல் மிதித்து நடந்தனர்...

சிப்பிகள் மிதிபட்டு அழுந்தின மணலில்... சிறு நண்டுகளும் கரைமீதில் மிதிப்பட்டன... கடல் ஆமைகள் இட்ட முட்டைகளும்  நசுங்கி நொறுங்கின...

பேசும் ஆற்றல் ஆமைகளுக்கு இருந்திருப்பின், "பல்லவ மன்னனே, நான் இட்ட முட்டையை சிதைக்கவோ நீ இந்த மண் ஆள்கிறாய்?" என்று அரற்றியிருக்கும்...

நடையில் வீரம் சொரிய- இடையில் வாள் தெரிய - சிந்தையில் ஆரியம் உறைய - எங்கே சென்றுக் கொண்டிருக்கிறான் தளபதியோடும், வீரர்களோடும் பல்ல- வன்...

வேறெங்குச் செல்வான்?... ஆரியக்கதைகளை சிற்பமாக வடித்துக் கொண்டிருந்த பணியை நேரில் காணவே  விரைந்துக் கொண்டிருந்தான்..

பாறைகள் மலிந்திருந்த பல்லவக் கடற்கரையில் சிற்பிகள் உளிகள் கொண்டு செய்த ஓசை - கடல்நீரில் அலைகள் செய்த ஓசையைக் காட்டிலும் இசையாய்   சுரந்தன...    

சிற்பிகளுக்கு காட்சியின் தன்மையை விளக்கிக் கொண்டிருந்தனர்  ஆரியர் பலர்....

சாய்வு இருக்கைகளில் ஆரியர் அமர்ந்திருக்கமையமாக நடுவிருக்கையில்-ராஜகுரு எனப்படும் பல்லவ நாட்டின் தலைமை அமைச்சனான ஆரியன் வீற்றிருந்தான்...

நடந்து வந்து கொண்டிருந்த பல்லவ மன்னவனை ஆரியர் எவரும் எதிர்க் கொண்டு  அழைக்கவில்லை...

பல்லவன் நடந்து வரும்  வரும் திக்கையும், காணாது அமர்ந்திருந்தனர் ஆரியர்...

பல்லவன் நடந்துச் சென்று, அகந்தையோடு அமர்ந்திருந்த ராஜகுரு எனப்படும்  ஆரியனின் தாள்தொட்டு வணங்கி எழுந்தான்...

"ராஜகுரு, நமஸ்காரம்... தங்கள் ஆசீர்வாதம் வேண்டும்..."

"ராஜாதிராஜனே, நின் நாட்டு சிற்பிகள் வடிக்கும் சிற்பங்கள் காண, எட்டுத் திக்கிலிருந்தும்   பன்னாட்டவர் வருவர்... சேரர், சோழர், பாண்டியரைக் காட்- டிலும் பல்லவனே நின் நாட்டு பாறைகள் கதை சொல்லிகளாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்... கடவுள் உறையும் சொர்க்கமாக இந்த பல்லவபூமி திகழப் போகிறது... நின் கருவூலம் நிரம்பி வழியும் அழகைக் கண்டு,  மூவேந்- தர்களும் பொறாமை பேசிடுவர்... மகிழ்ச்சிதானே..."

"ராஜகுருவின் கருணையால், பல்லவ தேசம் பாரோரால் புகழப் படும் என்பதுதானே மெய்... என் நாட்டு பாறைகளுக்கு உயிரூட்டுவது  நீரல்லவா... எல்லாப் புகழையும் ராஜகுருவின் பாதார விந்தாரங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்..." -என்றுச் சொல்லி ஆரியனின் தாள் பணிந்து நின்- றான், பல்லவ மன்னன்...

மன்னன் நின்றுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான்... ஆரியர் எவரும், மன்னன் அமர இருக்கைத் தரவில்லை...

"ராஜாகொடும் கதிர்களைத் தாங்கி,  மரமாய் உமது அரசுக்கு  ஆரியர் யாம் நிழல் செய்கிறோம்... மரமது விறகாகிப் போனாலும், வீணாவதில்லை... நாங்- கள் மரணித்தப் பிறகும், எங்களை நீங்கள் போற்றுவதால், உமக்கும், உமது குலத்திற்கும்  சொர்க்கத்தில் வாசம் புரிய அருள் புரிகிறோம்..."-என்று பீடிகையு- டன் ராஜகுரு எனப்படும் ஆரியன், பல்லவமன்னனிடம் பேச்சைத் துவக்கி- னான்...

"ராஜகுரு, தங்கள் பேச்சில் சோகம் இழைகிறதே... எனக்கு வருத்தமாக இருக்கிறது..."

"காலில் மிதிபட்டு, வெயிலில் வெடிப்புக்கு உள்ளாகி, உப்புநீரில் சிதிலமாகிடும் இந்த பாறைகளை சிற்பமாக வடித்திட ஆலோசனைக் கூறியவர் யாரென்றுக் கூறு ராஜா"

"இதில் வினா என்பதே வீண் ராஜகுரு... ஆரியரின் கருணையாலன்றோ இந்தத் திருப்பணி  நடந்துக் கொண்டிருக்கிறது... இதில் நான் ஏதும் பிழை இழைத்- தேனா, ராஜகுரு?"

"ஆரியரும் ஆண்டவரும் ஒன்றல்லவா ராஜா... ஆரியர் அன்றி எவரால் உமது அரசுக்கு நல் வினையாற்றிட இயலும்... சொல் ராஜா"

"ராஜகுரு, தங்கள் கேள்வியின் புரிதல் எனக்கில்லை... அடியேன் தவறு இழைத்து விட்டேனா"

"ஏன் ஆரியர் நாங்கள் அல்லும், பகலும் சிந்தையைச் செலவிட்டுக் கொண்டி- ருக்கிறோம். இந்த  நாடும், இந்த நாட்டின் மன்னவனும் சகல பாக்கியத்துடன் திகழ வேண்டும்... சொர்க்கத்தில் வாசம் செய்திட இடமும் கிடைத்திட வேண்டும் மன்னவனுக்கு என்பதற்காத்தானே?..."

"அறிவேன் ராஜகுரு... ஆரியர் மந்திரம் ஓதுவதால்தான் எனது அரசு பிழைத்துக் கொண்டிருக்கிறது... அல்லவெனில், சோமங்கலம், கடாரம் போல் வாரிசுகளற்ற மலடாக எனது நாடு மாறி இருக்கும்...  பகை சூழ்ந்து என் பட்டமும் பறி- போயிருக்கும்... மகுடம் இழந்து இம்மண்ணில் தரம் இழந்து போகாமல் என்னை வாழ  வைத்துக் கொண்டிருப்பது நீர் ஓதும் மந்திரத்தால் அல்லவா... உமது திருமந்திரம் செழிக்கவே கல்விச் சாலைகள் ஒழித்து, வேதசாலைகள் பன்மடங்கில் செய்திருக்கிறேனே... சேரர், சோழர், பாண்டியர் போலல்லாமல் பல்லவர்  தேசம் ஆரியர்  வாழ, அர்ப்பணிப்புடன் இருக்கிறது   ராஜகுரு"

ராஜகுரு ஊமைச் சிரிப்புச் செய்து, "ராஜா, என்ன பேசுகிறாய் நீ... ஆரியர் வாழ நீ அர்ப்பணிப்பு செய்கிறாயா?... ஆரியருக்கு தானம் செய்வதால் நீ அரசனாக இருக்கிறாய்... ஆரியரைத்  துதிப்பதால்தான் அரக்கர் வாழும் இந்த மண்ணுக்கு மழை கிடைக்கிறது... ஆரியருக்கு அறம்  செய்கிறவன் சொர்க்கம் அடை- கிறான்"-என்றான்...

"பொறுத்தருள வேண்டும், ராஜகுரு!... பிழைப் பேசி விட்டேன்" –என்றான் பணி- வுடன், பல்லவ மன்னன்...

"ஆர்ப்பரிக்கும் இக்கடல்தனை ஆளும் சமுத்திர ராஜன் ஆரியரின் சொல்லுக்கு அடங்கிக் கிடக்கும் போது, நீர் எமக்கு செய்திடும் தானத்தை அர்ப்பணிப்பு என்று  ஒப்பீடு செய்வது அறிவீனத்தின் வெளிப்பாடு" - ராஜகுரு...

"மன்னிக்க வேண்டும் ராஜகுரு... நீர் என் தேசத்தின் நலன் வேண்டி ஏதோ செப்பிட இருந்தீர்... நான் குறுக்கீடு செய்து, மடைமாற்றி விட்டேன்... உங்கள் சொல் கேளவே உங்கள் தாள் பணிகிறேன் " -என்ற மன்னன், ஆரியனின் தாள் பணிந்து எழுந்தான்...

"ஆரியன் மந்திரம் ஓதி, நாட்டின் அரணாகத் திகழ்கிறான்... ஆயினும், தமிழ் மொழி பேசும், சூத்திரர்கள் எமக்குச் செய்யும் கைம்மாறு என்ன?... கூறு ராஜா"

"சூத்திரன் எவனும் ராஜகுருவின் மனம் புண் செய்திருப்பின், கொய்து எறிகிறேன் சூத்திரர்த் தலையை... தளபதியாரே, யாரவன் என அறிந்து எறிக தலையைக் கொய்து"

ராஜகுரு, பல்லவர் நாட்டில், ஆரியர் மனம் நோதல் செய்பவனும் உண்டோ... சூத்திரன் அவன் எவன் என நீர் கூறுக... " -என்றான் படைத்தளபதி!

"அரசும், அரசகுலமும் தழைக்க வேதம் ஓதும் ஆரியரை கொன்றுவிட்ட  கொடு நிகழ்வை நீ அறியவில்லையா தளபதி?"

"ராஜகுரு, சேரநாட்டிலும், சோழர் நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நடந்திருக்க- லாம்... என் நாட்டில் நடக்காது..." -மன்னன்...

"நடந்தால்?" -ஆரியன்...

"நடக்காது"


"நடந்தால்?..."

"நடந்தால்?... கொன்றுவிடுவேன்  சூத்திரனை"

"... என்னை சூத்திரன் எவனாவது கொன்ற பிறகு, நீ அவனைக் கொன்று விடுவாய்... அப்படித்தானே... அவனைக் கொன்று, என்னை நீ உயிர்த்தெழச் செய்து விடுவாயா?... சொல் ராஜா... என்னை உயிர்த்தெழச் செய்யும் ஆற்றல் நீ கற்றிருக்கிறாயா... சொல் ராஜா"

"ராஜகுரு"

"இல்லையல்லவா... அத்தகைய ஆற்றல் ஆரியருக்கு மட்டுமே உண்டு... அகிலத்தில் ஆரியர் அன்றி எவரும் ஆற்றல் அற்றவர் என்பதை நீ அறிவாயா ராஜா"

"ராஜகுரு, நான் என்னச் செய்ய வேண்டும்... ஆலோசனை வழங்கும் இடத்தில் நீர் இருக்கையில், நான் ஆலோசிப்பது ஏதம் ஆகுமே... சேரர் நாட்டிலும், சோழர் நாட்டிலும், பாண்டியர் நாட்டிலும் ஆரியருக்கு எதிரான பாதகங்கள் நடந்- தேறியுள்ளன என்பதை ஒற்று கூறுகின்றன... அத்தகைய பாதகம்ஆரியருக்கு எதிராக- பல்லவநாட்டில் நடந்தால், என் நாடு அழிந்துப் போகுமே... என் வம்சம் இற்றுப் போகுமே... ஆரியருக்கு எதிரான கலகமாக மட்டும் இதனை நான் கருதவில்லை... சேரநாட்டு  அரசியின் ஆடையை உரித்து, அவள் கற்பை உறிஞ்சிய சூத்திரன் ஏதோ குறள் செய்தியையும் மடலாய் வீசியெறிந்து சென்றிருக்கிறானாம். சூத்திரர்கள்  ஆரியருக்கும், அரசருக்கும் எதிர்நிலையை மேற்கொண்டுவிட்டதை அறிந்த சேரநாடு சேரநாட்டில் இருந்த இளைஞர்களை சிறைப்பிடித்து கழுவில் ஏற்றிக் கொன்று வருவதாக ஒற்றுகள் கூறுகின்றன... இளைஞர்களைத் தேடித் தேடிப் பிடித்து  கழுவில் ஏற்றுவதாக ஒற்றர் செய்தி அனுப்பி கொண்டிருக்கின்றனர்... சேரநாட்டைப் போல், பாண்டிய, சோழ நாடுக- ளைப் போல் இளைஞர் அனைவரையும் கழுவில் ஏற்றிக் கொன்று விடட்டுமா ராஜகுரு..." –பல்லவமன்- னன் மிகு கோபம் கொண்டு கேட்டான்...

"ராஜா, இந்த உலகில் ஆரியர்த் தவிர அனைவருமே முட்டாள்கள் என்பதை உம் போன்றோர் மெய்பிக்கின்றனர்... இளைஞர்கள் அனைவரையும் கொன்று விட்டால், நாட்டின் படைக்கு யாரை சேர்ப்பாய்... பகைவன் போர்தொடுத்து வந்- தால், மோதிட நம்மிடம் படை வேண்டாமா... சூத்திரர்கள் இருந்தால்தானே படையணி அமைக்க முடியும்... "

"ஆமாம் ராஜகுரு... ஆனால்; சூத்திர இளைஞர்கள்தானே அரசுக்கும், ஆரியருக்- கும் எதிரான குறள் மடல் வீசி கொலைபாதகம் புரிகின்றனர்... அதுபோல் பல்லவ நாட்டிலும் நடந்து விடாமல் இருக்கவே, வருமுன் காத்தல் செய்திட
விரும்புகிறேன்..." –பல்லவமன்னன்

"எறும்புக்கு அஞ்சி ஊரைக் கொளுத்துவது மூடர் செயல்... சிலர் செய்யும் கலகத்திற்கு அஞ்சி ஸூத்திர இளைஞர்களைக் கொல்வது நல்லதல்ல ராஜா... படையில்லாமல் அரசுகள் இருக்க முடியாது... ராஜா"

"ராஜகுரு, தாங்கள் நல்ல தீர்வு வழங்குங்கள்... உங்கள் சொல் பணிந்திட சித்தமாக இருக்கிறேன்..."


"ராஜா,  கல்விச்சாலைகள் மூடப்பட்டன.. ஸூத்திரர் கல்விக் கற்கவும் தடை செய்ப்பட்டுள்ளது பிற நாடுகளில்..."

"நம்நாட்டிலும் தடைச் செய்யப்பட்டுள்ளதே ராஜகுரு..."

"தடைசெய்ப்பட்டும், அரசுக்கும், ஆரியருக்கும்  எதிராக குறள் எழுதி வினை- யாற்றுவது எப்படி சாத்தியமாகிறது?...  தமிழில் ஓலைச்சுவடிகள் எழுதிட தடைச்செய்யப்பட்டும், சூத்திரர்களுக்கு ஓலைச்சுவடி எழுதிக் கொடுக்கும் எழுத்தச்சர்கள் எவர்?..."

"பல்லவநாட்டில் எவரும் இல்லை ராஜகுரு... இங்கு முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது... தளபதியாரே, கண்காணிப்பும் சிறப்பாகத்தானே இருக்கிறது"

"பல்லவநாட்டில் எழுத்தச்சர்கள் எவரும் இல்லை, ராஜா"

"ஆனால்; சேரநாட்டிலும், பாண்டியர் நாட்டிலும், சோழர் நாட்டிலும் தடை மீறப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொண்டாயா, ராஜா"

"தளபதியாரே, கண்காணிப்பை வேகம் படுத்துக.. தடைமீறல் என்பதே பல்லவ நாட்டில் இருக்கக் கூடாது"

"உத்தரவு ராஜா"

"கண்காணிப்பை வேகம் படுத்துவதோடு, ஸூத்திரர்களின் சிந்திக்கும் தன்மை- யை கெடுக்க வேண்டும்... ஸூத்திரர்களை காவல் அணியில் சேர்த்து, பணிச் சுமையை அதிகம் படுத்த வேண்டும்... ஓய்வு என்பதே இருக்கக்கூடாது... எந்- நேரமும் நாட்டின்  நலனில்  சிந்தையிருக்கும் வண்ணம் அவர்களின் நினை- வாற்றலை  அடிமைப்  படுத்தவேண்டும் ராஜா... "

"ராஜகுரு, இப்படியே செய்துவிடலாம்... இப்படி செய்தால், அரசுக்கும், ஆரியருக்கும் எதிரான மனநிலை சூத்திரர்களின் நெஞ்சில் எழாதல்லவா..."

"ஆனால்; பரிகாரம் ஒன்று செய்திடவேண்டும் ராஜா..."

"சொல்லுங்கள் ராஜகுரு"

"பிறநாட்டில், எழுந்த ஆரியருக்கு எதிரான கலகம், பல்லவநாட்டிலும் தோன்றா- திருக்க பரிகாரம் வேண்டும் ராஜா..."

"சொல்லுங்கள் ராஜகுரு"

"ஆரியர் தாக்கப்பட்டாலோ - ஆரியர் கொல்லப் பட்டாலோ - அரசனுக்கும், அரசக் குடும்பத்திற்கும் பழி நேரும்... சொர்க்கம் என்பது இல்லாமல், நரகத்தில் வதைப்பட நேரிடும்... ஆரியரைக்  காக்கத் தவறிய அரசனை கொதிக்கும் எண்ணையில் இட்டு வதைத்திடுவர் மேலுலகில்..." -என்று விழிகளை உருட்டி, புருவத்தை உயர்த்தி கோரமாக முகத்தைக் காட்டி அச்சமூட்டினான், ஆரி- யன்...

மனதில் திகில் குடியேற, "வேண்டாம் ராஜகுரு, கேட்கவே அச்சமாக இருக்கிறது... பல்லவ நாட்டின் அரசி சிறு துயரும் தாங்காதவர்... எவனோ சூத்திரன் செய்யும் பிழைக்கு, மன்னர் குடும்பம் பலியாவதா?...   கூடாது... பரிகாரம் என்னவென்பதை கூறுங்கள்..."

"துலாபாரத்தில் கைங்காரியம் செய்ய வேண்டும் ராஜா... அதாவது, துலாபாரத்தின் ஒருத் தட்டில் நீங்கள் நிற்க வேண்டும்... உங்கள் எடைக்கு எடை பொன் நகைகளை அந்தணருக்கு தானமாக வழங்க வேண்டும்... இதுவே  பரிகாரம் ஆகும்  ராஜா... இப்படி செய்தால் துஷ்டர்களிடமிருந்து பல்லவநாடு காப்பாற்றப்படும்..."  -என்றான் மிடுக்கோடு ராஜகுரு எனப்படும் ஆரியன்...

"தளபதியாரே, ஆரியருக்கு துலாபாரத்தில் பொன்நகை வழங்கிடும் நிகழ்வை ஆடலரங்கில் விழாவாக ஏற்பாடு செய்திடுக... தானம் பெற வரும் ஆரியர் அனைவரும் சீனத்து பட்டுடை உடுத்திட ஆவணச் செய்திடுங்கள்... பிறநாட்டு மன்னவருக்கும் அழைப்பு விடுத்து, பல்லவநாட்டின் பெருமையை நிலை- நாட்டுக...  பல்லவநாட்டின் பாவவிமோசனம் நீங்கிட, ஆரியர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிடவும் செய்க..."-பல்லவமன்னன் தளபதியாரிடம் இட்ட கட்டளையை  சிற்பிகள் எவரும் செவிமடுக்காமல், உளிக் கொண்டு செதுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்... ஆனால்; ஒரு இளஞ் சிற்பியின் விழிகள் சிவக்கத் தொடங்கியது... 








18 - ஆரியருக்கு எடைக்கு எடை பொன்...

 

மாவிலைத் தோரணங்கள் பல்லவர் வீதியெங்கும் கட்டப்பட்டன... அழகு மலர்கள் தூவப்பட்டன ஆரியர் நடந்து வரும் பாதைதனில்... அறிவிப்புகள் அடிக்கடி பறையடித்து செய்யப்பட்டன...

'எடைக்கு எடை பொன் வழங்குகிறார் நமது பல்லவமன்னர், ஆரியக்குடிக- ளுக்கு... இவ்வற்புத நிகழ்வைக் கண்டுக் களிக்க பல்லவ மக்கள்  அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்... ஈகைப் பெறும் ஆரியரை நோக்கி, தொழுது நின்றால் குடிமக்களின் சகலபாவமும் தீரும் என்பதாலும்பல்லவநாடு மேன்மையுறும்  என்பதாலும் குடிமக்கள்   யாவரும் தவறாமல் அழைக்கப் படுகிறார்கள்... இது அரசர் ஆணை '- இப்படி ஓர் அறிவிப்பு சிலநாட்களாக செய்யப்பட்டது...

 

ஆரியர் நடக்கும் பாதையில் நடக்க, குடிமக்க- ளுக்குத் தடை செய்யப்பட்டது...

 

ஊரைச்சுற்றிபலவீதிகளைக் கடந்துவிழா நடக்கும் திடலுக்கு, கொன்டு வரப்பட்டனர் மக்கள் வலுக்கட்டாயமாக...

 

திடலின் கிழக்கு முனையில் ஓர் அரங்கம் போல் வடிவமைக்கப் பட்டிருந்தது...

 

அரண்மனை அலுவல் மேற்கொள்ளும் ஆரியர்- கள் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்- திருந்தனர்...

 

சற்று உயரம் குறைவான இருக்கைகளில்-

பல்லவ மன்னவனும், அரசியாரும் இருந்தனர்... 

 

அமைச்சர்கள் யாவரும் ஆரியர் என்பதால், மன்னவனின் இருக்கையைவிட சற்று உயரம் அதிகம் கொண்ட இருக்கைகளில் இருந்தனர்... 

 

அரங்கின் அருகில், பெரியதோர் பந்தல் இடப்- பட்டு, நெய்மணம் கமழ விருந்தும் நடந்துக் கொண்டிருந்தது ஆரியர்களுக்கு...

 

பல்லவநாட்டு பூவையரும்,சிறாரும், ஆண்மக்-களும், மூப்பு எய்தியோரும் வெயிலில் நொந்து வதங்கிய வேளையில்- ஆரியர்க்கு, அருஞ்- சுவை விருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்- தது...

 

அவர்களின் நாசியை நெய்மணம் துளைக்க, சிறார் நாவில் உமிழ்நீர் சுரந்தது... தாயிடமும், தந்தையிடமும் 'பசிக்கிறது' என்று ஈனக்குர- லில் முனகினார்...

 

விருந்துண்ட ஒவ்வோர் ஆரியரையும்- துலாக் கோலில் அமர வைத்துஅவரவர் எடைக்கேற்ப பொன்நகைகள் வழங்கப்பட்டன...

 

பொன்நகைகள் கொடுத்து - பொன் நகைகள் பெற்ற - ஆரியரின் பாதம்தனை பல்லவ மன்ன- வனும், அரசியாரும் தொட்டு வணங்கினர்...

 

அருஞ்சுவை உணவு  உண்ட மயக்கத்திலும், பொன்நகைகளை சுமக்கமுடியாமல் சுமந்தும் - சிலர் நகைகளின் சுமையால் சற்றே நடையில் தள்ளாடியும், மணம் சுரக்கும் பூக்கள் தூவப்பட்ட பாதையில் நடந்து வந்தனர் ஆரியர்...

 

பேரிகைகள் முழங்க

யாழ் நரம்புகள் இசை செய்ய

கன்னியர் ஆடல் செய்ய

கலைஞர்கள் ஆரியரைப் போற்றி  பாடல் பாடிக் கொண்டிருந்தனர்...

 

பொன்நகைகளோடுத் திரும்பிய ஒவ்வோர் ஆரியருக்கும் சந்தன சிறகுகளால் தொடுக்கப் பட்ட மாலைகள், யானைகளால் அணிவிக்கப் பட்டு சிறப்புச் செய்யப்பட்டன...

 

யானைகளிடம் சிறப்புப் பெற, ஒருவர் பின் ஒருவராக ஆரியர் வந்தனர்... இறுதியாக நான்கு ஆரியர் வந்தனர்... அந்நான்கு ஆரியரும், சிற்பவரங்கில் சிற்பிகளை மேலாண்மை செய்- துக் கொண்டிருந்தவர் ஆவர்..  

 

ஆரியர்களுக்கு மாலை சூட்டிட  யானைகளின் அருகே  நின்று, பாகன்கள் யானைகளுக்கு  சைகை செய்து கொண்டிருந்தனர்...

 

ஆங்கிருந்த பாகன்களில் ஒருவனாக, ஒரு இளஞ்சிற்பியும் நின்றிருந்தான்... ஆரியர்க- ளுக்கு  எடைக்கு எடை பொன் வழங்கிட வேண்- டுமென்று தளபதியிடம் சிற்பவரங்கில் மன்னன் இடும் கட்டளையை செவி மடுத்து, கண் சிவந்த அந்த இளஞ்சிற்பிதான் இவன்-

 

எவரும் காண இயலாதபடி, சிற்பி உளியை  மறைத்து வைத்திருந்தான்...

மாலை அணிவிப்பை ஏற்க, வரிசையில் வந்துக் கொண்டிருந்த ஆரியர்களில் கடைசியாக இருந்- த நான்கு ஆரியர்களும், மாலை அணிவிப்பை ஏற்க யானையை நெருங்கினர்...

 

சிற்பி, தான் வைத்திருந்த உளியை யானையின் துதிக்கையில் கொடுத்து கடைசி நான்கு ஆரியர்களின் உச்சி மண்டையில்  குத்த சைகை மொழியில் கட்டளை செய்தான்...

 

எவரும் எதிர்ப்பாராத ஒரு நிகழ்வாக - திடுமென யானை ஒவ்வொரு ஆரியர்களின் உச்சிமண்- டையில் என நான்கு ஆரியர்களின் உச்சி மண்- டையில் உளியை ஆழமாக குத்தியது கண- நேரத்தில்-

 

குத்தப்பட்ட உளியின் வழியே பொங்கியக் குருதியோடு மூளையும் பீறி வெளிப்பட-

ஆரியர் அலற-

சிற்பி, யானை மீதேறி வேகமாக ஓடச்செய்தான் யானையை... ஓட்டம் எடுத்தபோது சில ஆரிய- ரும் யானையின் காலில் மிதிபட்டு நசுங்கினர்...

 

என்ன ஏதென்று பிறர் உணரும் முன்னர், தான் இடுப்பில் வைத்திருந்த சில ஓலைச் சுவடிகளை மன்னன் மீது வீசிவிட்டு வேகமாக திடல்விட்டு வெளியேறினான் சிற்பி... 

 

சுவடியில்-

'ஆரியனே ஓடிப்போ...' என்ற வரியின் கீழ்-

 

'நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் 

நல்வினை  மேற்சென்று  செய்யப் படும்.'

என்ற குறளும் தீட்டப்பட்டிருந்தது...

அதனடியில், ‘வஞ்சிக்கும் மன்னவனே, உன் ஆயும் அறிவற்றத் தன்மையிலிருந்து  மக்களை மீட்கும் நல்வினையிது.. மக்களே, மன்னவனின் விழித்திறவின்மின்' என்றும் எழுதப்பட்டிருந்-  தது...

படைவீரர் எத்தனிக்கும் முன், யானை வேகம் எடுத்து மறைந்தது பார்வையிலிருந்து... 

 

            

 

 

19 - மாட்டுவண்டியில் கல்வி 

கடங்... கடங்...

என ஓசை சீராக, சமநிலையில் வேயப்பட்ட ற்- சாலையின் மீது  ஓடிய மாட்டு வண்டியின் சக்கரங்கள் ஒலியெழுப்ப-

சலங்... சலங்... என்று மாட்டின் கழுத்தில் மாட்- டப்பட்டிருந்த வெண்கல மணி, ஓசை எழுப்பிட-

நான்கைந்து மாட்டு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக பூம்புகாரின் சந்தையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன...

 

ஒரு பெரிய உருளையை இரண்டாக வகிர்ந்து, ஒரு பகுதியை மாட்டு வண்டியின் மீது கவிழ்த்- து வைத்திருப்பதுப் போல் மாட்டுவண்டியின் கூடு வேயப்பட்டிருந்தது மிக நேர்த்தியாக... 

 

கூட்டின் மீதும், உள்ளும் பொதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன...

 

முன்னும், பின்னும் அடுக்கி வைக்கப்பட்ட பொதிகளின் நடுவே, சிறு வெற்றிடம் இருந்தது...

அந்த வெற்றிடத்தில் அமர்ந்திருப்போரை, வண்டிக்கு வெளியே இருந்து எவராலும் காண முடியாதபடி, பொதிகள் மறைத்தன...

பொதிகளுக்கு நடுவே, சில சிறுவர், சிறுமியர் அமர்ந்திக்க, அவர்களின் அருகில் சீனநாட்டு வணிகன் அமர்ந்திருந்தான்...

 

சிறார் கையில் எழுத்தாணியும், ஓலையும் இருந்தன...

 

அவர்களின் கையைப் பிடித்து, தமிழ் எழுத்துக- ளின் வரிவடிவத்தை எழுதிட பழக்கிக் கொண்- டிருந்தான் சீனன்...

 

'

 

''

 

சீனன், தமிழ்  எழுத்துகளின் ஒலியை உச்சரித்து, அதனை வரிவடிவமாக எழுதிட கற்றுக் கொடுத்- துக் கொண்டிருந்தான் சிறார்களுக்கு...

 

சிறாரும், ஒலிநயத்துடன் கற்றும், எழுதியும்  பழகிக் கொண்டிருந்தனர்...

 

வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன், பாண்டியநாட்டு வழிப்போக்கன்... 

சிறார் இருந்த வண்டி நடுவிலும், அவ்வண்டிக்கு முன்னும், பின்னும் இரண்டிரண்டு வண்டிகள் பயணித்துக் கொண்டிருந்தன...

 

வேறு சில வண்டிகளும் பொதிகளை சுமந்து, சந்தைக்குச் சென்றுக் கொண்டிருந்தன...

 

சந்தையில் பொருட்களை விற்பனையின் பொ- ருட்டு கொண்டு செல்வதாகவே  யாவருக்கும் புலப்படும்... ஆதலால்; இதுபோல் சில வண்டி- கள் கல்விக்கூடமாக இயங்குவது அரசுக்கோ - ஆரியருக்கோ - தெரியவாய்ப்பிலை... 

 

"குழந்தைகளே, அருமை.. அருமை... மிக சிறப்- பாக எழுதுகிறீர்கள்..." -என்று சிறாரைப் பாராட்-டினான், சீனன்...

 

சிறாரும் உளம் மகிழ்ந்து, கற்றுக் கொண்டிருந்- தனர்...

 

பாடசாலைகள் மூடப்பட்டு விட்டதாலும், தமிழ் மக்கள் கல்வி கற்கத் தடை இருப்பதாலும், தத்தம் இல்லங்களில் இருந்தும், கல்வி கற்கக் கூடாதென்ற ஆணையின் படியும் குழந்தைக- ளுக்குக்  கல்வியறிவு கிட்டாமல் போகிறதே என்று பெற்றோர் கவலைக் கொண்டிருந்த வேளையில்-                   

ஏற்பாடு செய்துக் கொடுத்திருந்தான் செங்கோ- டன்; இத்தகையக் கல்விக்கூடத்தை; மாட்டு வண்டியில்... 

 

எழுதவும், படிக்கவும் தெரிந்து, கற்றுக் கொடுக்க ஆர்வமும் உள்ளோரைத் தெரிவுச் செய்து மாட்- டு வண்டி கல்விக்கூடத்தை சேர, சோழ, பாண்- டியர் மற்றும் பல்லவ நாட்டிலும் ஆரம்பித்- தான்  செங்கோடன்...

 

செங்கோடனின் இம்முயற்சியானது  இப்போது பல சிறார்களுக்கும், ஆர்வம் உள்ளோருக்கும்  மறைமுகமாக கல்விக் கற்றிட வழி வகுத்தது...

 

தமிழ்மொழி அழிந்துவிடாத செயலூக்கத்தை  நிறுவிய செங்கோடன் அவ்வப்போது, அயல்நா- டுச் செல்வோர் வாயிலாக

மொழிக் குறித்த ஆய்வின் பொருட்டு அயல் நாடுகளுக்கு சென்றுள்ளவனும்  - திருக்குறள் எழுதியவனும்செந்நாப்புலவர் என்று கேளிர்க- ளால் அழைக்கப்படுபவனுமான  தனது நண்ப- னுக்குத்  தகவல் தந்தும் கொண்டிருந்தான்...

 

மாடுகளின் குளம்படி ஓசையோடு, மணிகளின் சலங் சலங்கென பண்ணோடுவண்டிச் சக்கரங்- கள் எழுப்பிடும் தடக் தடக்கென தாளத்தோடு கற்றலும் கலந்து தமிழை அழிக்கவியலா வேர் களாய் - விழுதுகளாய் - பரவிற்று தமிழ் மண்- ணில்... 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

20

 

விழுதுகள் நிரம்பிய பெரியதோர் ஆலமரம் அது. மரத்தைச் சுற்றி மேடை போல், அமைத்திருந்- தனர் அவ்வூர் மக்கள், வழிப்போக்கர் இளைப்- பாறுதல் பொருட்டு!... வழிப்போக்கர் கால்நீட்டிப் படுத்திடும் அளவுக்கு பெரியதோர் மேடையாக அது இருந்தது.. 

 

அந்தத் திடல் முழுமைக்குமான நிழல் தந்துக் கொண்டிருந்தது, அம்மரம்...              

 

நிழலில் ஒதுங்குவோரும் உண்டு... நிழலில் விளையாடிட மகளிரும் வருவதுண்டு...நிழலில்  படுத்து ஓய்வுக் கொள்ள சில விலங்குகளும் ஆங்கே வருவதுண்டு... 

 

ஊரில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் அந்தத் திடல் பயன்பாட்டுக்குரியதாக  இருந்தது... 

 

காக்கை, குருவிகள்.மற்றும் பல்வேறு பறவைக- ளின்  பண் அரங்கேற்றும் மரமாகவும் அம்மரம் விளங்கியது...

 

குளுகுளுவெனக் காற்றின் தழுவல் ஆங்கே எப்- போதுமே இருக்கும்...

 

இத்தகையப் பொழில் சூழ்ந்த இடத்தை சிறார்- கள் விட்டுவைப்பாரா?...

 

அன்று சில சிறார்கள் ஆலமரத்தடியில்நான்கு நான்கு என எட்டுக் கட்டம், வரையப்பட்டிருந்த இடத்தில், விளையாடிக் கொண்டிருந்தனர்...

 

ஒரு சிறுவன் அல்லது சிறுமி, எட்டுக் கட்டத்- திற்கு வெளியே நின்று  '' என ஒலியெழுப்- பிடுவான்...

 

முதல் கட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் சிறு- வன் அல்லது சிறுமி '' என அடித் தொடங்கும் குறளை சொல்ல வேண்டும்... இப்படி ஒவ்வோர் கட்டத்திலும் முன்னேறி ஒவ்வோர் குறள் சொல்ல வேண்டும்...

 

அனைத்துக் கட்டத்திலும், நின்று சரியாக 'குறள்சொல்லும் சிறுவன் அல்லது சிறுமி வென்றதாகக் கருதப்பட்டு, ஆலம் விழுதுக- ளால் பிணையப்பட்டிருக்கும் ஊஞ்சலில் அமர்த்தி,  ஊஞ்சல் ஆட்டிவிடுவார்கள்...

 

குறள் சொல்லத் தெரியாமல், விழிக்கும் சிறு- வன் அல்லது சிறுமியை ஊஞ்சல் ஆட்ட விடுவார்கள்...

 

'' என்றவுடன் முதல் கட்டத்தில் உள்ளவன் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே  உலகு' என்றுச் சொல்லி உலகில் உள்ள எல்லா மொழிகளின் முன்னெழுத்து அகரத்தில் தொடங்கும்... அதேபோல் இந்த வான்வெளியில்  உள்ள அனைத்து கோள்களும் பகலவனை மையமாய்க் கொண்டு இயங்குகின் றன...' என்று பொருளும் உரைப்பான்...

 

அடுத்து '' என்று சொல்லப்படும்... இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியவன்ஆற்று  பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்' என்று '' வன்னாவில்  தொடங்கும் குறள் சொல்ல வேண்டும்... பொரு- ளும் உரைக்க வேண்டும்...

பிறகு மூன்றாம் கட்டத்திற்கு முன்னேறலாம்... 

ஒவ்வொரு கட்டத்திலும் ஓரோர் எழுத்து சொல்லப்படும்... அது யிரெழுழுத்தாகவும் இருக்கலாம்... மெய்யெழுத்தாகவும் இருக்க- லாம்... எழுத்தின் ஓசைக்கு ஏற்ற அடிக் கொண்- டக் குறளை, கட்டத்தில் நின்று இருக்கும் சிறு- வன் அல்லது சிறுமி சொல்ல வேண்டும்...

குறள் சொல்லத் தெரியாதவர், குறள் மொழிந்- தவரை ஊஞ்சலில் ஆட்ட வேண்டும்...  

 

ஊஞ்சல் ஆட்டப்படும் போது, சிறாரின் மகிழ்ச்- சிக் குரல் ஆரவாரத்துடன் ஒலிக்கும்...

 

குழந்தைகளின் இந்த விளையாட்டை, பொது மக்கள் கண்டு மகிழ்வதும் உண்டு... 

 

ஒரு சிறுமி 'மறத்தல் வெகுளியை யார்மாட்- டும்  தீய பிறத்தல் அதனான்  வரும்.' எனும் குறள் சொல்லி  அக்குறளுக்கு, எவரா- யிருப்பினும் கோபத்தை மறந்து விடுவது நன்-மையாகும்...அல்லவெனில்தீய விளைவுகள்  கோபத்தால் ஏற்படும்...’    -என்று பொருளும் சொல்லும் போது

திடல்தனைக் கடந்து  ஒரு பல்லாக்குச் சென்- றது... அதேநேரம் மற்ற சிறாரும் ஆரவார ஓசையுடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்... வெளிப்படுத்தப்பட்ட மகிழ்ச்சி ஓசையானது திடலைக் கடந்து சென்றுக் கொண்டிருந்த பல்லாக்கினுள் ஊடுருவி, உள்ளே சொகுசாக அமர்ந்திருந்த ஓர் ஆரியனின் செவிகளைத் துளைத்து அவனுள் எரிச்சல் ஊட்டியது...

பல்லாக்கை, சிறார் விளையாடிக் கொண்டிருந்- தத் திடலுக்கு எதிரில் நிறுத்தச் சொன்னான், ஆரியன்...

  

மீண்டும் சிறுவன், 'மி' என்றான்... கட்டத்தில் நின்றிருந்த சிறுமி, 'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு' எனும் குறள் சொல்லி, ' சுவை மிகு உணவு என்றாலும்உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்துநல்லுணவை அளவுடன் உண்டால்உயிர் வாழும் வரை கேடில்லை உடலுக்கு...' என்று விளக்கமும் சொன்னாள்...

 

குழந்தைகள் அனைவரும் ஒரேகுரலில்  அக்குறளை சொன்னார்கள்...

குழந்தைகளின் குரலோசை. பல்லக்கினுள் நுழைந்தது...

 

உள்ளிருந்த, ஆரியன் படபடப்புடன் எட்டிப்பார்த்தான் திடலை...

 

குழந்தைகள் கட்டம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்... அவர்கள் சொல்லும் குறள் அந்த ஆரியணை பதை பதைக்க வைத்தது...

 

ஆத்திரம் பொங்கிட - ஆவேசத்துடன்- பல்லக்கில் இருந்து இறங்கினான் ஆரியன்...

 

அவனுடைய மெய்க் காவலர்களாக, பல்லக்கின் முன்னும், பின்னும் இருந்த சோழநாட்டு காவலர்கள் ஆரியனை சூழ்ந்து நின்றனர்...

 

ஆரியன் கட்டளையிட்டான் : “அந்த ஸூத்திர நாய்களை இழுத்து வாருங்கள்...”

 

காவலர்கள் விரைந்து வந்து, சிறார்களை தரதரவென இழுத்துச் சென்று, ஆரியன் முன் நிறுத்தினர்...

 

ஆங்கிருந்த பொதுமக்கள் அஞ்சி, குழந்தைக- ளின் பின் ஓடினார்கள்...

 

இழுத்து வரப்பட்டக் குழந்தைகளை நோக்கி, “என்ன விளையாட்டு இது?” என்று கேட்டான்...

ஒருசிறுமி "மனனம் விளையாட்டு..." -என்றாள்...

 

"... மனனம்... எதை மனனம் சொல்லி விளை- யாடிக் கொண்டிருந்தீர்' -என்று ஆரியன் கேட் டான்...

 

புரிதல் கொண்ட பொதுமக்களில் சிலர், "சாமி, குழந்தைகள் தவறுதலாக சொல்லி விட்டார்- கள்... இனிமேல் சொல்ல மாட்டார்கள்... விட்டு விடுங்கள்" - என்று கெஞ்சினர்...

 

"காவலர்களே, ஸூத்திரர்களை பேச வேண்- டாம் என்று சொல்லுங்கள்" - என்று ஆரியன் கட்டளையிட்டான்...

 

பேசிய, பொதுமக்களை சாட்டையால் அடித்து அமைதியாக இருங்கள்... ஏதும் பேசக் கூடா- து" -என்று சொல்லி மிரட்டினர் காவலர்கள்...

 

ஆரியன் மீண்டும் குழந்தைகளை நோக்கி, “எதை மனனம் செய்து விளையாடிக் கொண்- டிருந்தீர்கள்" -என்று கேட்டான்...

 

"சொல்லுங்கடா" - என்று காவலன் ஒருவன் சாட்டையை நீட்டி -சொடுக்கி– குழந்தைகளை அதட்டினான்...

 

அஞ்சிய சிறுவன் ஒருவன் பயந்துக் கொண்- டே,  “வாழ்வு நெறிக் குறள்” - என்றான்...

 

"... எம்மவரைக் கொலை செய்துவிட்டு, எம்மவர் சடலத்தின் மீது வீசப்படுவதற்கு  'வாழ்வு நெறிக் குறள்" என்று  பெயரா?... சேர நாட்டு அரசியைப் புணர்ந்து விட்டு, அவளைக் கொன்று, அவளுடைய சடலத்தின் வீசப்பட்ட- தற்கு 'வாழ்வு நெறிக் குறள்' என்று பெயரா?... ... இந்தச் சின்ன வயதிலேயே உங்களுக்கு கொலைக் குற்றம் புரிய பயிற்சியா?” -என்று சொன்ன ஆரியனின் விழிகள் சிவந்தன...   

 

"இப்போது விளையாடும் போது வாழ்வு நெறிக் குறள் சொல்லியா விளையாடினீர்கள்..." - என்று சிறார்களை நோக்கி குரூரமாகக் கேட்டான் ஆரியன்... 

 

ஒரு சிறுமி, "ஆம்" -என்றாள்...

 

"அதை மீண்டும் சொல்லு..." -என்றான் ஆரியன்..

    

“மறத்தல்  வெகுளியை  யார்மாட்டும்  தீய 

பிறத்தல்  அதனான்  வரும்.” -என்று சொல்லி விளையாடினோம்...

 

"நீசபாஷையில் வாழ்வு நெறியா?... கூடாதே..." -என்று சொன்ன ஆரியன், மீண்டும் சிறாரிடம்,  “உங்களுக்கு யார் கற்றுக்  கொடுத்தார்கள்" - என்று கேட்டான்...          

உடனே, காவலன் ஒருவன்  காவலன், ''சொல்- லுங்கடா" -என்றுச் சொல்லி சாட்டையைச் சொடுக்கினான்...

 

பயந்த சிறுமி, "ஒரு தாத்தா சொல்லிக் கொடுத்தார்" -என்றாள்....

 

ஆரியன் கூட்டத்தினரைப் பார்த்து, "ஸூத்தி- ரர்களே, உங்களில் யார் சொல்லிக் கொடுத்- தது " -என்று  கேட்டான்...

 

கூட்டத்தில் இருந்து ஒருவன், "ஆரியரே.." என்று சொல்லும் போது இடைமறித்த  காவ- லன் ஒருவன், அவனை சாட்டையால் அடித்து, "ஆரியரே என்று சொல்லாதே... 'சாமி' என்று சொல்... ஏனென்றால், ஆரியரும் கடவு- ளும் ஒன்று... ஆரியரை சாமி என்றுதான் விளிக்கவேண்டும் என்று அரசர் கட்டளை இட்டு உள்ளார் என்பது உங்களுக்குத் தெரி-யாதா?" -என்று கேட்டான்...

 

அடித் தாளாமல் அவன் "சாமி என்றே சொல்- கிறேன்... அடிக்காதீர்கள்" -என்று காவலனிடம் கெஞ்சினான்...

 

"சொல்லடா! ஸூத்திரனே, இதுகளுக்கு யார் கற்றுத் தந்தது" -என்று ஆரியன் ஆவேசமாகக் கத்தினான்...

 

பொதுமக்கள் பயந்தனர்...

 

ஒருவன், "சீனன் ஒருவன் சொல்லிக் கொடுக்- கிறான்" -என்று உண்மையைச் சொல்லி  விட் டான்...

 

ஆவேசம் கொண்ட ஆரியன், "ஸூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று சொல்லியும் , ஸூத்தி- ரக் குழந்தைகள் பாடம் படித்திருக்கிறார்கள்... இதுகள் கையில் ஆயுதம் கொடுத்து, ஆரியரைக் கொலைச் செய்ய, இப்போதே பயிற்சி... காவலர்- களேஇதுகளை சிறைப் படுத்துக... சீனன் எவன்  என்று தெரிந்து, அவனையும் சிறைப் படுத்துக" -என்றுச் சொல்லிவிட்டு, பல்லாக்கினுள் சென்றான் ஆரியன்...

 

அவனைச் சுமந்து சென்றனர், சோழநாட்டு காவலர்...  

 

சிறார் அனைவரையும் சிறைப்படுத்தினர் சோழநாட்டு காவலர்...

 

பெரியவர்கள் அஞ்சி, - அரண்டு - கெஞ்சினர் காவலர்களிடம்... 

 

காவலர் செவிமடுக்காமல் விரைந்தனர் புரவி- யில்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

21 - தமிழும் கழுமரமும் 

 

வெட்டவெளியில் மக்கள் குழுமியிருக்கப் பட்-டனர்... மக்களின் விழிகள்  அச்சமும், நடுக்க- மும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன... அவர்-களின் பார்வை, வெளியின் மையத்தில் நிறுவப் பட்டிருந்த, கழுமரங்களை நோக்கியிருக்க-

கழுமரங்களுக்கு அருகே சிறுவர், சிறுமியர் கை- கள் பின்புறமாகக் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்- தனர்... 

 

கழுமரங்களுக்கு அருகே ஏன் நிறுத்தப் பட்டிருக்- கிறோம் என்பது விளங்காவிட்டாலும், சிறுவர், சிறுமியர்  நெஞ்சம்தனை இனம் புரியாத அச்சம் கவ்வி, அழுகையை ஏற்படுத்திக் கொண்டிருந்- தது...

 

கூட்டத்தோடு நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் பெற்றோர் கதறிக் கொண்டிருந்தனர்...

 

அங்கு பீதியுடன் கூடிய ஓலம் எழும்பி, குழுமியிருக்கப்பட்டோர் அனைவரையும் கலங் கடித்தது...

 

கூச்சல் எழுப்பக்கூடாது என்று காவலர்களால் மிரட்டப்பட்டபோதும் மக்களின் துக்கம் அடங்க மறுத்து கேவலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்- தது...

     

வெளியின் மையத்தில், இடப்பட்டிருந்த அழகுப் பந்தலினடியில், ஆரியர் பலர் அமர்ந்திருந்தனர்..

 

அவர்களுக்கு சாமரம் விசிறிக் கொண்டிருந்த, சோழ நங்கையர் மனதிலும் துக்கம் கவ்விக் கொண்டிருப்பதை, அவர்களின் முகம் வெளிப் படுத்திக் கொண்டிருந்தது...

 

ஆரியர்கள் துப்பும் எச்சிலை ஏந்திட, காவலர் பலர் எச்சில் குடுவைகளோடுக் காத்திருந்தனர் பந்தலுக்கு வெளியே, வெயிலில்...

 

ஒரு காவலன், மேடையில் நின்றிருந்தான்; ஒலிப் பெருக்கும் கூம்புத் தாங்கி...    

 

அவன், அவ்வப்போது அறிவிப்புச் செய்துக் கொண்டிருந்தான் : "சூத்திரர்கள், கல்விக் கற்கத் தடைவிதிக்கப் பட்டிருந்தும், சோழநாட்டின் உத்- தரவை மீறி, இந்தப் பொடிசுகள் கல்விக் கற்ற- தால், இவர்களுக்கு தண்டனை வழங்கவிருக்கி- றார் நமது மன்னவர்..."

 

அவன் ஒவ்வொரு முறை அறிவிப்பு செய்தப் போதெல்லாம், "எங்கள் குழந்தைகளை பொறுத்- தருள வேண்டும்... இனி கல்விக் கற்றுத் தர முனையமாட்டோம்"-என்று பெருங்குரலெடுத்- து கெஞ்சினர்; குழந்தைகளின் பெற்றோர்...

 

கூட்டத்தினரும், "குழந்தைகளை விட்டுவிடுங்- கள்"- என்று கெஞ்சினர்...

 

காவலுக்கு நின்ற காவலர்கள், சாட்டையை உதறி, அமைதியாக இருக்கும்படி மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும்போது புரவிகள்   ஓசைக் கேட்டு, ஓசைவந்த திக்கினை மக்களும், காவலரும் திரும்பிப் பார்த்தனர்...

 

உடனே, ஒலிப் பெருக்கிடும் கூம்பின் வழியே, "மன்னவர் வருகிறார்... மன்னவர் வருகிறார்"-  என்று, முன் அறிவிப்புச் செய்தான் அறிவிப்பா- ளன்...

 

வெளியில் இருந்தோரிடையே, பேரமைதிப் புகுந்தது... அதோடு; பீதியும் வெளிப்பட்டது...

 

தேரில் இருந்து இறங்கிய சோழமன்னன், நேரே பந்தலடியில் உயரமான இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆரியர்களை நோக்கி நடந்தான்...

 

ஆரியர்களிடையே மையமாக வீற்றிருந்த, தலைமை அமைச்சனான ஆரியனின் பாதம் தொட்டு வணங்கி எழுந்தான் மன்னன்... 

அவனருகில் சற்றே உயரம் குறைந்த இருக்கை- யில் அமர்ந்த சோழமன்னன், "வேதவித்தகரே, நமது சோழ நாட்டில் சூத்திரர்கள் கல்விக் கற்றிடக் கூடாது என்று ஆணைப்பிறப்பிக்கப்- பட்டும், அதனை மதியாத இந்த சூத்திரக் குழந்தைகளுக்கு, எத்தகைய தண்டனை வழங்- குவது என்று தாங்கள் கூறினால் நன்று" -என்றான் பணிவுடன்...

 

"ராஜா, சூத்திரக் குழந்தைகள் மட்டுமா, அரசின் ஆணையை அவமதிக்கின்றனர்... அதோ, அந்தக் காவலன், ஒலிவங்கியொடு நிற்கிறானே... அவ- னும்தான் மீறினான்... இச்செயல் ராஜவிசுவாச- மன்று... இந்நிலை நீடித்தால், சோழநாட்டின் ராஜவம்சம் அழிவதன்றி. சோழநாடும் பகைவர்- களால் சூழப்பட்டு - சூறையாடப்பட்டுவிடும்..." -என்றான் அமைதியாக ஆரியன்... சிவந்த அவன் விழிகள் குரூரத்தைக் கொட்டியது...

 

அச்சமுற்ற அரசன், "அருகில் இருந்த காவல- னிடம், "அறிவிப்புச் செய்வோனை, விரைந்து வரச்சொல் ஈங்கு" -என்று சொன்னான்...

 

அறிவிப்பாளன் வந்து அச்சத்துடன் அரசனின் எதிரில் நின்று வணங்கினான்...

 

"அறிவிப்பாளனே, அடாத செயல் புரிந்ததேன- டா?" - என்று மன்னவன் அவனை அதட்டிக்  கேட்டான்...

 

"மன்னவா" - என்று அவன் வாயிலிருந்து சொல் பிறக்கும் முன்னரே தலைமை ஆரியன் அவ- னை எட்டி உதைத்தான்...

 

"கேட்டீரா, ராஜா... அரசின் ஆணையை செயல்படுத்திட வேண்டிய பணியாளர்களே அரசின் ஆணையை மீறிட்டால், பாவம் விளை- யாதோ... சோழநாடும் தாழ்வுறாதோ... தேவபா- ஷையில், ‘ராஜா’ என்று விளித்திட வேண்டும் என்று  ஓயாமல் ஆணை செய்தும், இந்த சூத்- திரன் தங்களை சூத்திர மொழியில் மன்னவனே  என்று விளிக்கிறான்... உடன் இருப்பது நெருப்- பெனில், அருகில் இருக்கும் அனைத்தும் சாம்- பல் ஆகிடாதோ... தேவபாஷையைப் புறக்க-ணித்தால், தெய்வக் குற்றமாகாதா... தெய்வக் குற்றம் இழைத்தால், சோழநாட்டின் ராஜவம்- சத்தை சோகம் கவ்விடாதோ... இத்தகையோன்  பணியாளனாக இருந்தால் ராஜவம்சம் தீமைக்கு இரையாகாதோ..."-என்றான் தலைமை ஆரியன்.

 

"பதரே, ஆரியரின் சொல் பணியாத சூத்திரனே..." -என்றுச் சொல்லி, மன்னவன் குறுவாள் எடுத்து அவன் மார்பில் குத்தச்சென்ற போது, தலைமை ஆரியன் தடுத்தான்...

 

"ராஜா, நீர் கொல்ல வேண்டாம்... கழுமரம் ஏனி- ருக்கிறது... கழுவில் ஏற்றி கயவனைக் கொன்- றிடு... காண்போர் யாவரின் உள்ளத்திலும் குடி- யேறட்டும் தேவபாஷை..." -என்று தலைமை ஆரியன் சொன்னதை, கட்டளையாக்கினான் அரசன்...

 

அரசனின் கட்டளையேற்ற காவலர், அறிவிப்பா- ளனை இழுத்துச் சென்று, கழுமரத்தில் அமர்த்- தினர்...

 

அறிவிப்பாளன் கதறலும், துடிப்பும் காண்போ- ரை கலக்கத்தில் ஆழ்த்த-

பீறிட்டு இரத்தம் ஆசனவாயில் இருந்து கொட்ட- கருநிற கழுமரம் செந்நிறம் ஆனது... 

மரத்தினூடே வழிந்த இரத்தமும், உடலின் கழி- வும் அருகில் கட்டப்பட்டிருந்த சிறுவர், சிறுமி- யர் மீதுத் தெறித்தது...

 

கண்ணெதிரில் அறிவிப்பாளன் கழுமரம் ஏற்றப் பட்ட கொடுங்கோலத்தை கண்ணுற்ற சிறுவர்- சிறுமியர் - அலறித்துடித்தனர்...

 

அப்போது சோழமன்னன், கழுமர மேடையேறி - மக்களைப் பார்த்து, அறிவிப்புச் செய்தான்: "சோழநாட்டு சூத்திரர்களே, சோழநாட்டின் அரசாணைதனை அவமதித்த ராஜதுரோகிகளே, சூத்திரமொழியைக் கற்றால், தேவபாஷையை நிந்திப்பதாகும் என்று பலமுறை முரசறைந்தும்- தேவபாஷை  நிந்தனைக்கு உள்ளானால், நம் சோழநாட்டை துயரம் சூழும் என்று பலமுறை முரசறைந்தும், செவிமடுக்காது கொடுங்குற்றம் சுமந்து நிற்கும் சூத்திரர்க் குழந்தைகள் இவர்கள் 

கழுவில் ஏற்றிட ஆணையிடுகிறேன்..."

 

சோழமன்னனின் ஆணையைத் தொடர்ந்து, கல்-விக் கற்ற குழந்தைகள் ஊராரின் முன்னிலை- யில் கழுவில் ஏற்றப்பட்டனர்...

 

ஒருசில நேரத்திலேயே- கழுமுனை குழந்தைக- ளைத் துடிக்கச் செய்து, கோரமாக உள்வாங்கி- யது...

 

துடித்துத் தொங்கிய சதை நார்களைத் தின்ன கழுகுகள் வட்டமடித்துக் குவிந்தன...

 

அமைதியாக நடந்து வந்து ஆரியனின் தாள் பணிந்து எழுந்தான் சோழமன்னன்...

 

ஆரியர் அனைவரும் சோழநாட்டுக் காவலர் காவல் வழங்கிட, பல்லாக்கில் புறப்பட்டனர்...

 

மன்னவன் தேர் ஏறிச் சென்றான்...

 

மன்னவன் சென்றதும்- குழுயிருந்த கூட்டத்தி- னர் பதறியழுது ஓடினர் கழுமேடை நோக்கி...                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

22 - வள்ளுவன் திரும்பினான் சோழநாட்டுக்கு...

 

நிலவின் மஞ்சள் நிற அழகினைத் தழுவிட, தாகம் கொண்டதோ அலைகள் என்று எண்ணு- மளவுக்கு, கோடிக்கரை கடலலைகள் எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன...

 

நிலவுக்கு விளையாட்டுக் காட்டுவதுப் போல் வெண்ணிற மேகக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று துரத்திப் பிடிக்க விரைவது போல், வான்வெளி- யில் மேகங்கள் தெரிந்தன...

 

கடலும், வானும் நல்லதோர்க் காட்சியாய் கண்- ணுக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பதைசோழ நாட்டின் தலைமை அமைச்சனான ஆரியனோ,  சோழநாட்டு மன்னவனோ கோடிக் கரை கலங்கரை விளக்கத்தின் மேல்மாடத்தில் இருந்தப்போதிலும் கவனிக்கவில்லை...

 

குளிர்க் கொண்ட கடற்காற்று, விசுவிசுவென இரைச்சலுடன் தழுவிச் செல்ல-

அழகிய ஆரியநங்கையொருத்தி கிண்ணத்தில் மதுவூற்றி, மன்னவன் பருகிடச் செய்துக் கொண்டிருந்தாள்... 

 

ஆரியநங்கை உடுத்தியிருந்த மெல்லிளத் துகில், காற்றில் படபடத்து மன்னவன் மீது படர்ந்துப்  படர்ந்து, மன்னவனை மகிழ்வுச் செய்தது...

காற்றில் துகில் விலகிடுகையில், திமிறி நின்ற முலைகள் இரண்டையும்  மன்னவனின் முகத்- தில் உரசச் செய்து, மன்னவன் நெஞ்சில் காமம் ஏற்றிக் கொண்டிருந்தாள் ஆரிய நங்கையவள்...

 

மன்னவனுக்கு எதிரில் - திரைக்கு அப்பால் -   மயிற்றோகை  மஞ்சத்தில், சோழநாட்டு நங்கை யின் மடியில் படுத்திருந்தான் தலைமை ஆரி- யன்...

 

சோழநாட்டு நங்கையின் இடுப்பினைக் கிள்ளி, அவளின் இதழ்தனை சுண்டி, தொடைதனில் புரண்டுக் கொண்டிருந்தான் தலைமை ஆரியன்.

 

அவனுடைய  தோள்தனை அமுக்கி இதம் செய்- தும், கிண்ணத்தில் மதுவும் நிரப்பி, அவனுடைய வாயில் சிறுது சிறுதாக ஊற்றி, அவனை சுவைக்க செய்துக்   கொண்டிருந்தாள் சோழ- நாட்டு அழகியொருத்தி...

 

மன்னவனுக்கு  மது கிறக்கம் அதிகரித்து கொண்டிருந்தது... கிறக்கத்தில், ஆரிய நங்கை- யை, இறுகத் தழுவினான்... 

 

அவனுடையத் தழுவலுக்கு முழுமையாகத் தன்னை, ஆட்படுத்திக் கொள்ளாமல், அவனு- டைய முகத்தில் தன் மார்பகங்களை உரசி, அவனுள் காம சூட்டினை அதிகம் ஆக்கினாள் ஆரியநங்கை... 

 

மதுமயக்கமும், ஆரியநங்கையின் முலை உர-சலும், நாடாள்வோனுள் வெறிப்படுத்தியது... தொட்டும் தொடாமலும், விலகியும், விலகாம- லும் நின்ற ஆரியநங்கையை இழுத்து, மஞ்சத்- தில் கிடத்தி, அவள் மேல் சுமையை இறக்கி- அவளுடைய இதழ்தனைக் கவ்வ முற்பட்ட போது, ஆரியநங்கை சொன்னாள்: "ராஜா..."

 

"சொல், செவ்விளங்கனியே..."

 

"மனதில் துயர் நிரம்பி, மங்கையெனை வாட்டு- கையில், ராஜராஜனை மகிழ்விக்க மனதும் மறுக்கிறதே..."

 

"அன்பே... அணங்கே... நான் ஆளும் நாட்டில், ஆரியமங்கையின் மனதில் துயர் நிரம்பிடலோ? ஏது விளம்பினாய், இளந்தென்றலே... என் மனம் நோகிறதே, சுடர் அழகே!" - என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய, தலை முடியை விரல் களால் கோதிவிட்டான் சோழமன்னன்...

 

அவனுடையத் தழுவலில் இருந்து சற்றே நகர்ந்து, "நமது தலைமை அமைச்சர், ஏதும் கூறிடவில்லையோ, தங்களிடம்... என் துயர் நெஞ்சினை ஆற்றாமல், என் மீது படர்வது நன்றோ..." -என்று சொல்லி, தழுவியிருந்தவ- னைத் தள்ளிவிட்டாள்...

 

"தலைமை அமைச்சரே, என்னயிது... செங்- கிளையின் இடைப்பற்றிட என் மனமும் விளையுமோ... இவளின் இதயம் நொந்திருப்பது ஏன்?...எனக்கு ஆசையமுதம் ஊற்றிட வந்திவள் நெஞ்சம் துயர்த்  துடைக்காமல், இவளொடு மஞ்சம் பகிர  என்னை அழைத்தது ஏன்?"

 

சிறுது சினம் கொண்டு சோழன் வினவினான் ஆரியனிடம்...

 

"ராஜா, இன்று மாலை ஓர் செய்தி வந்தது பெரியக் கோயிலின் பேரருள் புரோகிதனிடமி- ருந்து..." -என்று சொல்லிக் கொண்டே, திரை விலக்கி வந்தான் தலைமை அமைச்சன் ஆரியன்...  

 

"நமது புரோகிதர் விடுத்த செய்தியா?... என்னி- டம் தாங்கள் கூறாதது ஏன்?... இனியவள் இவள் மனம் நோதல் செய்திட்டச் செய்தி யாது?"

 

"ராஜாதிராஜா, சோழநாட்டின் நலனுக்குக் கேடு வருமெனில், ஆரியர் அன்றி, வேறு எவர் துயர் கொள்வர்?... சூத்திரர்களுக்கு ஏது சோழநாட்டின் மீது கரிசனம்?..."

 

"பெண்ணே... புது மலரே... புதுக்கனியே... உன்- னுள் துயரம் செய்த செய்தி யாது... சொல்லடி புத்தம்புது புஷ்பமே..." -என்றுச் சொல்லி மன்ன- வன் ஆரியப் பெண்ணை ஆசையோடு இழுத்- தான் அருகில்...

 

மன்னவனின் முகத்தை,  தன்மார்போடு   அழுத்தி, கேவினாள் துயர்ப் பெருக்கி...

 

சோகம் கொண்ட சோழன், ஆரியனிடம், "அமைச்சரே, ஆரியப் பெண் அழுவது, ஆட்சிக்கு நல்லதல்லவே... சொல்லுக செய்தியை..."-  என்று கேட்டான்...

 

"ராஜாதிராஜா, பெரியக் கோயிலின் புரோகிதரு- டைய கனவில், சிவன் வந்தானாம்... சிவன் குடிக்கொள்ள இன்னும் புதிய கோயில் அய்ந்து, கோடியூரில் எழுப்பிடவேண்டுமாம்... கோபுரம் கொண்ட கோயில்தனில் அபிஷேகம் செய்திட, வடபுலத்தில் இருந்து ஆரியர் வரவழைக்கப்பட வேண்டுமாம்... காலந்தள்ளாமல் இக்காரியம் செய்திட வேண்டுமாம்... வடமேற்கில் இருந்து, சோழநாட்டின் மீது படைத்தொடுப்பு நிகழ்த்திட வஞ்சகர் நெஞ்சம் சதியிட்டு உள்ளதாம்... அய்ந்து கோயில் சிவன் குடிக்கொள்ள அமைத்- திட்டால், படைத்தொடுப்புதனை பாங்குடன்  சிவன் தடுத்திடுவான் என்று, புரோகிதர் கன- வில் சிவன் சொன்னதாக, புரோகிதன் சேதி அனுப்பினான் இன்று மாலை எனக்கு..." -என்று பொய்யுரைத்தான் 

 

"மாலையே என்னிடம் கூறியிருக்கலாமே... நிதி நிலை நம் நாட்டில் சரியில்லாத நிலையில் கோயில் எழுப்பிட ஏது செய்வேன் அமைச்சரே”..

 

"ராஜாதிராஜா, தங்கள் நெஞ்சம் வேதனைக் கொள்ளல் ஆகாது எனும் நல் நோக்கில்தான், இதனை நான் நவிலவில்லை மாலையில்... மேலும்; இளநங்கை இவள் பூப்பெய்தி இன்றோடு நாள் அய்ந்தாயிற்று... இவளோடு நீங்கள் இன்பம் துய்த்திட   இன்றைய நாள் நல்லநாள் என புரோகிதனும் நாள் சொன்னான் ஏற்கனவே... கன்னியிவளோடு தாங்கள், முதல் இன்பம் துய்த்திடும் இனிய வேளையில் இன்னல் பெறுவது நன்றோ தங்கள் நெஞ்சம்... இவளை நான் இங்கு அழைத்து வருகையில் புரோகிதன் செய்தித் தாங்கி, ஆரிய மைந்தன் ஒருவன் வந்தான்... இவள் செவியில் படும் வண்ணம், ஆரிய மைந்தன்  வடமேற்கில் இருந்து படைத்தொடுப்பு செய்தியை சொல்லி விட்டான்... சோழநாட்டின் மீது படைதொடுப்பா என்றே, செய்திகேட்ட மாத்திரத்தில் சோகம் ஆனாள் புதுமங்கை இவளும்... ராஜாதிராஜன் இன்பம் துய்க்கும் வரை, 'பெண்ணே, சோகம் தனை வெளிச் சொல்லாதே' என்று நான் சொல்- லியிருந்தும், துக்கம் தாளாமல் புதியவள் இவள் பகன்று விட்டாள் மனத்தைத் தங்களிடம்...” -என்று பொய்யுரைத்த ஆரியன், மேலும் சொன்- னான்:ஆயினும் என்ன... ராஜாதிராஜா, இவ- ளின் கன்னித் தன்மையைக்  கழித்திடுக நன்றே இப்போது..."

 

"ஆரியப் பெண்ணிவள் சோழநாடுக் குறித்து சோகம் கொண்டிருக்கிறாள்... சோகம் கொண்ட இவளோடு சேர்வது நன்றோ..."

 

"தீமையில்லை ராஜா... தவறும் இல்லை... ஆரியமங்கையின் கன்னித்தன்மையை நுகர்ந்- தால், ஆயுள் விருத்தியாகும் உமக்கு... மனம் நோகாது கூடிடு ராஜா... புதுத் தேன் பருகிடு இவளிடம், சோழப் பேரரசின் ராஜாதிராஜா" -என்றான் தலைமை அமைச்சன் ஆரியன்...  

 

'அமைச்சரே, சிவன் தோன்றி கனவில், கோடி- யூரில் குடிக்கொள்ள கோவில் கேட்டுள்ளான்... கோவில் எழுப்பிட நிதிக்கு என்ன செய்வேன் நான் என்று என் நெஞ்சம் தவிக்கிறது..."

 

"தவிக்காதே ராஜா, முதலில் இவளோடு தாகம் தணித்திடு... சிவனும் காட்டுவான் கோயில் எழுப்பிட வழியும்..."

 

"நிதிநிலை இல்லாத நிலையில்- நான் எங்ஙனம் எழுப்புவேன் கோயில்... இறைவா, இதென்ன சோதனை.."

 

"ராஜா, நீர் புலம்பிடவோ ஆரியர் யாம் இருக்கி- றோம் அமைச்சராய்... நன்றே கேட்டிடுக; சோழ நாட்டு ராஜாவே... பனை மரம், தென்னை மரம், வளர்ப்போருக்கு வரிவிதித்திடுக... உழவுத் தொழில் செய்வோருக்கும் பயிருக்கு ஏற்ப -பருவத்திற்கு ஏற்ப- வரி விதித்திடுக... ஆடு வளர்ப்போருக்கும், ஆவினம் வளர்ப்போருக்கும்  புதிய வரி செய்திடுக... கருவூலம் தேடி நிதி வந்திட்டால், நுமது கவலையும் கரைந்து போ- கும்... ஆலயமும் அழகுடன் எழும்பிடும்... வழி கூறிட,ஆரியர் யாம் இருக்கையில்..."

 

"நல்லது அமைச்சரே... புதிய வரிவிதித்து ஆணையிடுகிறேன் இப்போதே..."

 

"நல்லது ராஜா, மஞ்சம்தனில் ஆரியள் இவ- ளோடு மகிழ்ந்திரு ராஜா... ஸூத்திரச்சியோடு மஞ்சள் நிலவின் மடியில் நானும் மது அருந்தி மகிழ்கிறேன்..." - என்றுச் சொன்ன ஆரியன்   மயிற்றோகை மஞ்சம்தனில் சாய, மையத்தில் இருந்தத் திரையை விலக்கி நுழைந்தான்... 

 

ஆரியனை மடியில் தாங்கியிருந்த சோழநாட்டு அழகி அங்கே, விளக்கத்தின் மாடத்தில் நின்று கடல் நோக்கியிருந்தாள்...

 

அருகில் வந்த ஆரியனும் கடல்நோக்கினான்...

 

கடற்கரையில் தீச்சுடர் ஏந்தி சிறுகூட்டமும் சில புரவிகளும் இருப்பதைக் கண்ணுற்றான், ஆரியன்... கரைநோக்கி வந்துக் கொண்டிருந்த மரக்கலம் நோக்கி கையசைத்துக் கொண்டி- ருந்த சிறுக் குழுவினரையும் கண்டான் ஆரியன்

 

நள்ளிரவுக் கடந்து, -முன்னிரவு- முதல் சாமக் கோழி கூவும் பொழுதுதனில் கரைநோக்கி வரும் கலம், மீனவர் கலமாக இருக்கவும் வாய்ப்பில்லையே...                   

 

மீன்பிடிக்கலமெனில், அதனை எதிர்க் கொள்ள புரவிகள் தேவையில்லையே...   

 

புரவிகள் சூழ, தீச்சுடர் ஏந்தி கரையில் நிற்பது எவர் என விளங்கிட இயலாமல், உள்ளத்தில் சிறு கலக்கம் கொண்டு சோழமன்னவனை நோக்கி ஓடினான், கலங்கரை விளக்கத்தின் மாடத்தில்...

 

ஆரியநங்கையின் மேல் படர்ந்திருந்த மன்ன- வன், ஆரியனின் வருகையை உணர்ந்து எழுந்- தான்...

ஆரிய அமைச்சன் சுட்டிக் காட்டிய திசையில் கடல் நோக்கினான் சோழ மன்னவன்...

 

கரையில்-

'வருக... வருக...செந்நாப்புலவனே வருக' எனும் வாழ்த்து முழக்கம் கலங்கரை விளக்கத்தின் மாடத்தில் இருந்த, அனைவருக்கும் கேட்டது...

 

காவலர்களை நோக்கி கூவினான் மன்னன்: "காவலர்களே, யாரவன், செந்நாப்புலவன்?... சென்று காண்க... கரையில் இருப்போர் உட்பட  அனைவரையும் சிறைப்படுத்துக"...

 

சோழமன்னனின் கட்டளையேற்று, செந்நாப் புலவரை சிறைப்படுத்திட கரை நோக்கி விரைந் தது  காவல்படை...  

             

                        

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

23 – வள்ளுவன் எங்கே?

 

இளங்காலைப் பொழுதுதனில் மாங்குயில்கள் கூவும் ஓசையில் சோழ மன்னனின் மனம் கிறங்கவில்லை...

 

மெல்லென விரிந்த செம்மஞ்சள் கதிரொளிப் பட்டு, ஆற்றின் மேற்பரப்பு பளிச்சென  மின்னிட -சலசலவென ஓடும் நீரோடையின் ஓசை அரசமாடத்திற்கு எட்டிய போதிலும், அதனை சுவைக்கவில்லை சோழ மன்னன்...

 

கதிரொளித்தனில் களித்தத் தென்னங்கீற்றுகள் தமது மகிழ்வை, ஆனந்தமாக வெளிப்படுத்திய- தோ என்னவோ... கீற்றுகள் வீசிய  இளங்காற்- றால் புல்லினங்கள்  உல்லாசமாய்ப் பறந்தன...    

 

பறவைகள் ஓர் ஓவியம் போல் வட்டமிட்டு பறந்தக் காட்சி, மேகங்களையும் ஈர்த்தனவோ எனும்படி மேகங்களின் அணிவகுப்பும் அழகாக இருந்தது...

இந்தக் காட்சியும் சோழமன்னனிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை... 

 

அரசமாடத்தில் மிகு கோபத்துடன் நடையிட்டுக் கொண்டிருந்தான் சோழன்... மாடத்தின் நிழற் பந்தலின் கீழ், தலைமை அமைச்சரான சோழ நாட்டின் தலைமை ஆரியனும், துணைநிலை அமைச்சர்களான சில ஆரியர்களும் அழகுச் செய்யப்பட்ட இருக்கைதனில் வீற்றிருக்க-

 

சோழநாட்டுப்பணிப்பெண்கள் சாமரம் விசிறிக் கொண்டிருந்தனர் ஆரியர்களுக்கு... 

 

கோபம் கொண்டு நடையிடும் சோழ மன்னவ- னுக்கு எதிரில், சோழநாட்டு  படைத்தளபதி நின்றிருந்தான்...    தளபதியின் இருபுறமும் சில வீரர்கள் நின்றிருந்தனர்...

 

தளபதி தனது பார்வையை மன்னவன் மீதும், நீரோடையின் மீதும் செலுத்தியிருந்தான்... 

 

கோடி கடலோடு இணையும் கோடியாற்றின் கழிமுகத்தில் இருந்து ஒரு நீரோடை சோழ நாட்டு அரசமாடத்தின் வழியை இணைத்திருந்- தது... 

 

அந்த  நீரோடையைத்தான் தளபதிப்    பார்த்து  நின்றான்... தொலைவில் ஒரு படகு வருவதும், படகில் சோழநாட்டு கோடி பறப்பதையும், பட- கில் சோழநாட்டு வீரர்கள் இருப்பதையும் கண்ணுற்ற தளபதி, "ராஜா, படகு வருகிறது" -என்றான்...

 

அரசனும்ஆரியர்களும் நீரோடையில் படகு வந்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்தனர்...

 

"நமது வீரர்கள் மட்டுமே இருப்பதுப் போல் தெரிகிறது... செந்நாப்புலவன் என்பவனோ, வேறு  எவனும் இருப்பதாகவோ தெரியவில்- லையே, தளபதி"

 

"செந்நாப்புலவன் எனும் வாழ்த்து முழக்கம் எனக்கு நன்றாகவே கேட்டது... சோழநாட்டின் எல்லைக்குள் நுழைகிற சோழநாட்டு மன்னவ- னுக்கும், ஆரியர்களுக்கும் மட்டுமே வாழ்த்து முழக்கம் இட்டு வரவேற்புச் செய்வது மரபு... ஆனால்; எவனோ ஒருவனை 'செந்நாப்புலவன்' என விளித்து வரவேற்புச் செய்வது புதிது... புதிது  மட்டுமல்ல... இது சோழப் பேரரசின் மாண்புக்கு இடப்பட்ட அறைக்கூவல் என்பதை உணர்ந்தாயாராஜா... செந்நாப்புலவன் என்ப- வன் எழுதியக் குறள் கொண்டு, நாட்டில் செங்- குருதி பீறிட கலகம் செய்தனர் இதுகாறும்... இப்போது செந்நாப்புலவன் என்பவன் சோழநாட் டுக்குள் நுழைந்திருக்கிறான் எனில்; அது; சோழப் பேரரசுக்கு பேராபத்து அல்லவா, ராஜா..." -என்றான் தலைமை அமைச்சன் ஆரி- யன் சினம் பொங்கிட...

 

"உணர்வேன் தலைமை அமைச்சரே... வாழ்த்து முழக்கம் கேட்ட மாத்திரத்தில், செந்நாப்புலவ- னை சிறைப்படுத்திட காவலர்களை ஏவினேன்... விடிந்து, கதிரும் சுடர்ந்து, சூடுப் பரவியும் செந்நாப்புலவன் என்போன் எவனென்று அறிந்- திட இயலவில்லை எனில், நம் படைவலிமை- யைக் காட்டிலும் செந்நாப்புலவன் என்போன் வலியவனா என்று அறிய விரும்புகிறேன், தளபதியாரே..."       

 

"கீரைதனைக் கிள்ளுவது போல், செந்நாப்புல- வன் தலையைக் கொய்தேறிவேன், ராஜா!... அய்யம் வேண்டாம்" -என்று தளபதி சொன்ன போது படகு, கரையை அடைந்தது... படகில் இருந்து இறங்கிய வீரர், அரசமாடம் நோக்கி வந்தனர்...

 

வந்த வீரர்களில் ஒருவன் படைத்தளபதியை நோக்கி, "செந்நாப்புலவன் கிட்டவில்லை... ஆனால்; சிலதகவல்கள் கிடைத்தன..."-என்றான்

 

சினத்துடன் சோழன் வீரனை நோக்கி, "யாது தகவல்?" -என்று வினவினான்...

 

"செந்நாப்புலவன் என்பது இயற்பெயரல்ல அவனுடைய  நட்பு வட்டத்தால் விளிக்கப்படும் புகழ்ச்சொல்..." -என்று பேசிய வீரனை இடை மறித்த சோழன், "இதுதான் தகவலா?... இந்தத் தகவல் பெறவோ, சோழர் படையில் இருக்கி- றாய், வீரனே?" -என்று சினம் கொண்டு பேசினான்...

 

"ராஜாதிராஜா, செந்நாப்புலவன் என்பவன் ஒரு வணிகனின் மகன்..." -என்றான் வீரன்...

 

"வணிகனின் பெயரென்ன?"

 

"அறிய இயலவில்லை, ராஜா?"

 

"இதைச் சொல்லத்தான் ஈங்கு வந்தாயோ?"

 

"செந்நாப்புலவன் சிறுபருவத்திலேயே அயல் நாடுகளுக்கு சென்றுவிட்டவனாம், மொழி ஆராய்ச்சியின் பொருட்டு... மொழி ஆராய்ச்சி- யினூடே   யவன நாட்டு நங்கையை மணம் புரிந்து, இப்போது சோழநாடு திரும்பியுள்ள செந்நாப்புலவனின் அகவை இப்போது இருபது என சொல்லினர், மக்கள்..."

 

"அவன் இருப்பிடம்?"

 

"தெரியாது என்றே யாவரும் கூறினர்" -வீரன்...

 

"அவனுடைய தோற்றம்?"

 

"அவனுடைய அங்க அடையாளத்தையும் அறி- ய இயலவில்லை, ராஜா"

 

"ஏன்?"

 

"எமது விசாரிப்புக்கு ஆட்பட்டோரில் எவரும் செந்நாப்புலவன் என்பவனை நேரில் கண்டதில்- லையாம்... பிறர் வழியறிந்த செய்தியைத்தான் எமக்கும் கூறினர்..."

 

"தளபதியாரே, செந்நாப்புலவனாம்... யவனமங்- கையை மணந்தவனாம்... அகவை இருபதாம்... அவன் எப்படியிருப்பான் என்றும் தெரியவில்- லையாம்... இருப்பிடம் தெரியவில்லையாம்... இதுதான் செய்தி எனில், சோழநாட்டின் ஒற்றர் வலிமையற்றவரா?... செந்நாப்புலவன் வலிமை யுற்றவனா?... சோழர் எல்லைக்குள் நுழையு- முன்னரே, அவன் குறள் பேரில் கலகம் நடந்தே- றியுள்ளது... சோழ நாட்டுக்குள் நுழைந்திட்டான் ... அவனுடையப் போக்கினை எமது ஒற்றரால் கணிக்கயிலாதெனில், தளபதியாரே, வெட்கக்- கேடல்லவா..." -ஆத்திரம் கொண்டான் சோழன்..

 

"ராஜாதிராஜா, இருநாளில் சிறை செய்கிறேன் செந்நாப்புலவனையும், அவனதுக் குழுவினரை- யும்... இந்த உறுதியை, யான் ஆற்றவில்லை- யெனில் ஏற்றுக என்னைக் கழுவில்" -என்று உறுதிப்படக் கூறி தளபதி அரசமாடத்திலிருந்து வெளியேறினான்...    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்