இராவணன் காவியம் (நீயன்றோ அரக் கன்) - பாகம் : 3.
இராவணன் காவியம் -நீயன்றோ அரக்கன் - பாகம் : 3.
சரித்திர நாடகம்( மூன்று பாகத்தில் - மூன்றாவது பாகம். )
எழுதியவர் :
ஆர். கனகராஜ் (எ ) அரங்க கனகராசன்.
புனை பெயர்கள் : கனகு, மகாத்மா, தென்றல் கனகு, க.ராசன்.
வெளியீடு :
அன்னை ஆறுகுட்டியம்மாள் பதிப்பகம், கோவை.
பாகம் : 3. காட்சி : 1. நிலாமாடம்.
வண்டார்குழலி.
இராவணன்.
வாயிலோன்.
( வண்டார்குழலி யாழிசைத்துக் கொண்டிருக்கிறாள்...
இராவணன் குழலியின் முகத்தை நோக்கிய வண்ணம் அமர்ந்திருத்தல்-
யாழிசையன்றி, வேறு எவ்வோசையும் ஆங்கு இல்லாத சூழலில்,
யாழிசைத்துக் கொண்டிருந்த குழலி, தலைநிமிர்ந்து இராவணனை நோக்க-
இராவணனோ இமையாது, குழலியின் முகத்தையே கூர்ந்திருக்க-
குழலி கலகலவென சிரிக்கிறாள்...
இராவணன் தன்னிலையுணரப் பெற்றவனாய், வியப்பு மிகுகூட ...)
இராவணன் :
(வியப்போடு )
குழலி...
குழலி :
ம்...
இராவணன் :
விரலால் யாழிசைத்து, சிரிப்பால் முத்துகளை உரசவிட்டு, என்னை நீயேன் மயக்குகிறாய்?... உனது மடியில் என்னை வீழச்செய்யும் ஆயுதம்தான் உனது யாழிசையோ?...
குழலி :
மடி தாங்காது, மன்னவனே!... மயக்கும் சொல் எனும் மதுவை என் மனதும் தாங்காது!... யாழிசைக்கும் போது என் முகத்தையே நீர்ப் பார்த்துக் கொண்டிருந்தால், என் பெண்மையும் தாங்காது!...
இராவணன் :
இந்த முகத்தில், ஓர் அற்புத ஒளி!... என்னை மயக்கும் மஞ்சளொளி!... மங்கள தீபத்தின் சுடரொளி!... அதோ... அந்த முகிலோடு விளையாடும் வெண்ணிலவையே பழிக்கும் ஒளி!... உன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், நான் இலங்கையின் இணையிலா கவிஞனாகி விடுவேன்...
குழலி :
உங்கள் சொற்கள் என்னை வானளாவிய தமிழ் மன்றமாக்கி விடும்!...
இராவணன் :
நீ மன்றமானால், உன் மடியில் தவழ்ந்து, நான் மகரந்தத் தமிழுக்குக் குழந்தையாகி விடுவேன்...
குழலி :
ஆ... இது குழந்தையின் பிடியோ?... ஆங்... ஒடிந்து விடும் இடை!... விலகிப் போ; விளையாட்டுக் குழந்தையே!...
இராவணன் :
துள்ளும் பருவமம்மா, குழந்தைப் பருவம்!... அதனை நீ துரத்திவிட்டால், போகுமோம்மா!.... முத்தமொன்று நீ முல்லை இதழ் குவித்துக் கொடுத்தால்தான் நான் உன்னைவிட்டு விலகிப் போவேன்...
குழலி :
ஆங்... விடுங்கள்!... இது நிலா மேடையோ?... பள்ளியறையோ?...
இராவணன் :
அள்ளிக் கொள்ளென்று, உனது அழகு வதனம் கூறும் போது, நான் மாறுசொல் கூறுதல் சிறப்போ?... சிறு முல்லை இதழ் மீதில், பூத்ததோ மெல்லிய உனது வதனம்!... இது மேனியோ; அழகு மேடையோ... அழகெல்லாம் உன் உருவில் திரண்டு, அற்புதமாய் என் நெஞ்சையாளும் போது, நான் மஞ்சமாய் உனது மடியை ஆளக் கூடாதோ?... நிலமகளுக்கு நிழல் எனும் மலர்ச் சூடி, மரம் மகிழுமெனில் பகலவன் குறைக் கூறுவானா?... திருமகள் உன்னை நான் சூட, இங்கே பழிச்சொல் கூறுவாரும் உண்டோ?...
குழலி :
பாவையோடு, பேசும்போது பைந்தமிழ் வேந்தனும், தன் நிலை மறப்பான் என்பதற்கு மன்னா, நீரே சான்று!... தமிழ் மொழியில் சொற்கள், ஏராளமாய் இருப்பதன் பொருள் இப்போதுதான் புரிகிறது!... மங்கையைக் கொஞ்ச, மன்னவன் நெஞ்சிலிருந்து உதிரும் ஓசையெல்லாம், சொற்களாகி, மணிமுத்துகளாய் தமிழ் மகுடத்தில் ஒட்டிக் கொள்கின்றன!... பூவென்றும், மலரென்றும், இதழென்றும், இழையென்றும், சிறுநூலென்றும், குறுநீரென்றும் ஒரு பொருளுக்குப் பல சொல்லாளும் மன்னவா, உமது புதுச் சொற்களெல்லாம் என் நெஞ்சை மட்டுமா நிரப்புகிறது!... தமிழையே நிரப்புகிறது!... 'தமிழுக்குச் சொல்லாக்கியோன்' என்று உம்மைக் கூறினால் மிகையாகாது!...
(இராவணன் குழலியைத் தழுவ முனைய, குழலி விலகி-)
குழலி :
ஆ... என்னாயிற்று... இன்றேன் இந்தத் துடிப்பு!...
இராவணன் :
நான் கொஞ்சினால், தமிழுக்குப் புதுச்சொற்கள் உண்டாவதாகக் கூறினாயே... ஏன் விலகி ஓடுகிறாய்?....
குழலி :
அய்யோ... போங்கள் விலகி!... மகன் சேயோனுக்கு மணமாகியிருந்தால்...
இராவணன் :
மணமாகியிருந்தால்?...
குழலி :
சேயோனுக்குப் பிறந்தக் குழந்தையை தொட்டிலிலிட்டு, நானும் நீங்களும் ஆராரோ பாடிக் கொண்டிருப்போம்...
இராவணன் :
ஆராரோ பாட மழலை இங்கு இல்லாததால், மங்கை உன்னை நான் பாடுகிறேன் தாலாட்டு; மடியில் கிடத்தி!...
குழலி :
ஆங்... இது என்ன விளையாட்டு1.... என்ன வந்தது உங்களுக்கு!... பொறுங்கள்; சேயோனை அழைக்கிறேன்!....
இராவணன் ;
அழைத்து?...
குழலி :
திருமணத்திற்கு ஒப்புதல் பெற...
இராவணன் ;
ஆரியப் படையெடுப்புக்குத் தலைமையேற்றுச் சென்ற சேயோன், நேற்றுத்தானே திரும்பியுள்ளான்... ஓய்வுக் கொண்டிருக்கிறான் சேயோன்... இதுவா தருணம் திருமணம் குறித்துப் பேச!...
குழலி :
மன்னா...
இராவணன் :
கூறு; குழலி!...
குழலி :
ஆரியரே பாரினில் சிறந்தக் குடியினர்; ஏனையோர் அவரின் அடிப்பணிந்து வாழ்ந்திடல் வேண்டுமென்று திமிர்கொண்ட நெஞ்சினர் திரிகின்றனர் இதனைக் கூறி!... இம்மண்மீதில், மமதைக் கொண்ட ஆரியரைத் திருத்திடவும், மாந்தர் இனமாண்பை சிதைக்கும் ஆரியத்தை சிதைத்திடவும் சூளுரைத்து, போருக்கு தலைமையேற்று - அலைகடல் போல் ஆர்பரித்துச் சென்றவன் நமது சேயோன் அல்லவா...
இராவணன் :
ஆமாம் குழலி!
குழலி :
அயோத்தியை நமதுப் படை அடையுமுன்னரே, நடந்ததென்ன?...
இராவணன் :
அயோத்தியை ஆளும் பரதன் போரை விரும்பாது, தூது விட்டான் சேயோனுக்கு!...
குழலி :
என்னவென்று?...
இராவணன் :
அரும்பு மீசை இராமன் முகத்தில் காணும் முன்னரே,அவன் படுத்தியத் தொல்லை, பெண்களுக்கு ஏராளம்!... அவன் போக்கில் அவனை வளர விட்டதாலோ என்னவோ, ஈன்றத் தந்தையையும் வாள் பாய்ச்சிக் கொன்றான் இராமன்!... ஆரியமரபில் அவனொரு கருநாகம்!... அவனையும், இலக்குவனையும் ஆரியமண்மீதில், சிரசேதம் செய்ய அயோத்திக் காத்திருக்கிறது... இந்நிலையில் அவன் செய்தச் செயல்களைக் கொண்டு அயோத்தி மீது, இலங்கை அரசு, படைத் தொடுத்தல் சரியோ?... ஆரியர்க் குலத்திற்கு அழியாப் பழி உண்டாக்கிய இராமனை இலங்கை அரசே கொல்லுமேயானால், அயோத்தி அரசு அல்லவா முதலில் அகமகிழும்... இலங்கையோடு இனிவரும் நாளிலும் நட்புக் கொள்ளவே எனதரசு நாட்டம் கொண்டுள்ளது... எனவே, போர் தொடுப்பு வேண்டாம் என்று பரதன் விடுத்த தூதுவை, தூதன் சேயோனிடம் கூற
குழலி ;
சேயோன் யாதுக் கூறினான்?...
இராவணன் :
'இராமன் அவனெவன் என யாம் அறிவோம்... இராமனை மட்டும் பொருட்டாய் வைத்து வர, வீழும் மழைத் துளியல்ல நான்; இடமறியாது வீழ!... பாயும் நதி நான்; பாதை மாறாது வந்துள்ளேன்!... ஆரிய அரசின் மீது பகைக் கொண்டு நானிங்குப் படையோடு வரவில்லை!... அகந்தைப் பிடித்தலையும் ஆரியமுனிகளின் செருக்கடக்கவே வந்தேன்... முனிவர் எனும் வேடம் தந்து, தமிழ் எல்லைக்குள் ஆரியரை ஏவும், அயோத்தி அரசின் சிந்தைக்கு தெளிவூட்டவே நானிங்கு, படையோடு வந்துள்ளேன்...'
குழலி :
என்று சேயோன் தூதனிடம் கூறினானா?...
இராவணன் :
ஆமாம்!...
குழலி :
பரதன் என்னச் செய்தான்?...
இராவணன் :
தூதுவன் மூலம் பேசுவதை விடுத்து சேயோனோடு நேரில் பேசிட வந்தான் பரதன்!... தான் அணிந்திருந்த மகுடத்தை சேயோனது காலடியில் வைத்து, சேயோனது பாதணியை, பரதன் சிரமேற்கொண்டான்... இலங்கை அரசின் நட்புறவை நாடி நிற்பதாகக் கூறினான்...இனியொருபோதும் ஆரியமுனிகள் தமிழ் எல்லையில் ஊடுருவா வண்ணம் உறுதிக் கூறிப் பணிந்தான்...
குழலி :
அதனால், சேயோன்
இராவணன் :
என் எண்ணமறிய நமது தூதுவனை என்னிடத்தில் அனுப்பினான், சேயோன்!...
குழலி :
நீரும் இரக்கம் கொண்டு, ஆரியன் பரதனை மன்னித்திட சேயோனுக்கு தூது அனுப்பினீர்... பெரும் போரென்று கூவிச் சென்ற சேயோனும் உமது சிந்தையை ஏற்று, இங்கே படையோடுத் திரும்பிவிட்டான்... சூது என்பது ஆரியரோடுப் பிறந்தது... சூழ்ச்சியோ அவர்களது வாழ்வோடுப் பிணைந்தது... புற்றில் பாம்பு போல் அவர்கள் நெஞ்சில் வஞ்சகம் உறைந்திருக்கும்... வாய்த் திறந்து நான் சொல்லியோ இலங்கை வேந்தன் இதனை அறிய வேண்டும்... உணர்வே நமக்கு உணர்த்துமே, தீயின் சூடுதனை!... இதனை விழித் திறந்துப் பார்த்துதான் அறிய வேண்டுமென்றில்லையே... மண்டியிட்டு ஆரியன் அழுகிறான் எனில், அது மறைந்து நின்று தாக்குவதற்கு அவன் நடத்தும் ஒத்திகை என்பதை மன்னா, நீரா அறியவில்லை... கண்ணீர் சிந்திக் கெஞ்சுகிறான் எனில், ஆழ்கடலில் நம்மை அமிழ்த்தத் துடிக்கிறான் என்றல்லவா பொருள்!... சுவைப்படப் பேசிநிற்கிறான் எனில், ஆரியன் நமது உயிரை சுவைக்கத் தருணம் பார்த்துக் காத்திருக்கிறான் என்றால் பொய்யாகுமோ?... கானல் நீரில் கருத்திழப்பாருமுண்டோ?... ஏன் மன்னா, நீரும் மறந்தீர்; பரதனும் ஆரியன் என்பதனை!...
இராவணன் :
மன்னிப்பது வேறு; மறப்பது வேறு!... பரதனை நான் மன்னிக்கவுமில்லை; அவன் ஆரியன் என்பதை மறக்கவுமில்லை!... நமது படையெடுப்பால் நிலைக் குலைந்து விட்டான் பரதன் என்பதுதான் மெய்!... நமது ஒற்றர்கள் அனுப்பியச் செய்தியை நீ அறியவில்லையா?... பரதனது படை இன்று மிக நைந்த நிலையிலுள்ளது... நமது அதிரடித் தாக்குதலை அரை நாழிகைக்கூட ஆரியப்படையால் ஈடுத்தர முடியாது என்று ஒற்று கூறியதை நீ அறியவில்லையா?... முயல் குட்டியை விரட்டுவது வீரமாகுமோ?... எதிர்வரும் யானையோடு மோதுவதுதான் வீரமென்பர் குழலி!...
குழலி :
நீதியும், நியாயமும் பகைவனது கண்களுக்குப் பாம்பாகத் தெரியும்... கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டோம்... மேகம் சூழ, சூரியன் அழிந்தது எனும் வாதத்தினர் ஆரியர்!... பண்பாடு எனும் பேரில், நாம் அமைதிக் கொண்டது ஆரியரின் விழிகளை இருளாக்கும்!... இருண்டு விட்டது உலகென்று இனி அவர் போடும் கூத்துக்கு அளவிருக்காது... தருணமறிந்து நம்மைத் தாக்க வஞ்சகர்களுக்கு வாய்ப்புத் தந்தோம், மன்னிப்பு என்ற பேரிலே!...
இராவணன் :
குழலி,
(பேச வாயெடுத்தவனை, சைகையால் அமர்த்தி...)
குழலி :
மன்னா, வாயிலோன் வருகிறான் போலிருக்கிறது...
(வாயிலோன் வருகிறான்...)
வாயிலோன் :
தமிழினத்தலைவா வாழி!... எழில்நகர் சமைத்த கலைஞா வாழி!... தண்பொழில் தமிழுலகாளும் கவிஞா வாழி!...
(இராவணன் வாயிலோனை நோக்க-)
வாயிலோன் :
விழியிரண்டும் செந்நெருப்புமிழ, கடும்பாறையென முகம் காட்சி தர, கடுகி வந்து காவலனிடம், 'எங்கே இலங்கை வேந்தன்' எனக் கூவி நிற்கிறான் வழிப் போக்கனொருவன்!...
இராவணன் :
ஏன்?
வாயிலோன் :
'வினாவொன்று தொடுத்திடவே, விந்தநாட்டிலிருந்து வந்துள்ளேன்... மன்றங் கூட்டிடுக... மாமன்னனை அழைத்திடுக ' என்றே கூவுகிறான்...
இராவணன் :
மன்றமா?... இவ்விரவுப் பொழுதினிலே எதன் பொருட்டுக் கூட்டப்பட வேண்டுமாம்?...
வாயிலோன் :
கூவுகிறான், மன்னா!... கூற நா கூசுகிறது... 'மாற்றான் மனைவியைக் கவர்ந்து வந்த வேந்தே, மாமன்றம்தனில் முறையோவென்றுக் கூறு... இந்நாட்டு குடிமக்களுக்கும், உரிமையுண்டோ; பிறன் மனைவியைக் கவர்ந்திடவே' என்றே வினாத் தொடுத்து நிற்கிறான்...
(இராவணன் அதிர்ந்து, குழலியை நோக்க- குழலி பெருஞ்சினங் கொண்டு கூவுகிறாள்...)
குழலி :
வாயிலோனே, இருளருக்கும் பகலவன் மீது பழிச்சொல்லா?... நிலஞ்செழிக்க நீராய் உருகும் மேகத்தின் மீது கடுஞ்சொல்லா?... தேன் சொறியும் மலர்மீது, மாசு மொழியா?... பயிர் வாடக் கண்டால், பாலமுதூட்டும் நெஞ்சின் மீது சுடுநெருப்பு வீசத் துணிந்தவன் எவன்?... கூவுங்குயிலின் பாட்டுக்குப் பொருளறியாது, குறைக்கூற வந்தவன் எவன்?... தோகை மயிலின் அழகினிலே மாசுக்கூறும் மானிடனும் இம் மண்ணிலுண்டோ?... யாரவன்?...
( இராவணன் குழலியைப் பார்த்துவிட்டு, நீலா மாடம் விட்டு வெளியேறுகிறான்... குழலியும் பின்தொடர்கிறாள்... வாயிலோனும் அகலுகிறான்...)
- திரை -
பாகம் : 3. காட்சி -2. மக்கள் மன்றம்.
இராவணன்.
வண்டார்குழலி.
தலைமை அமைச்சர் மூவர்.
பீடணன்.
விந்தநாட்டு வழிப்போக்கன்.
சேயோன்.
கரன்.
சாமரம் விசிறுவோர்.
வீரர் இருவர்.
( வழிப்போக்கன் நின்றிருக்கிறான்...
ஏனையோர் தத்தமது இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்...)
வழிப்போக்கன் :
இலங்கை மன்னா, இதயம் நோக வந்துள்ளேன்!... இரும்புக் கொண்டு என் நெஞ்சைத் தாக்கியிருந்தாலும் நான் கதறியிருக்க மாட்டேன்... இருவிழிகளைப் பெயர்த்து சுடுகிற எண்ணெய்தனில், என்னை அமிழ்த்தியிருந்தாலும் நான் துடித்திருக்க மாட்டேன்... ஆனால்; அந்தோ!... இலங்கைக்கு இப்படியோர் அவச்சொல்லா?... பழி சுமந்து, இழிவாழ்வுக் காண்பதால் நிலைவாழ்வு நிலமீதில் கிட்டிடும் என்பதுதான் தங்கள் நினைப்போ?... நிலையில்லாதது வாழ்க்கை என அறியீரோ?... பாதகச்செயலை பாவிதனியொருவன் செய்திருப்பின் நான் பதறியிருக்கமாட்டேன்... சீர்மிகு இலங்கையின் பேரழந்திட செய்தவன் எவன்?... இந்நாட்டு மன்னவன் நீயல்லவா?...
(கரன் கோபத்துடன் எழுகிறான்...
இராவணன் கையசைத்து அமர்த்துகிறான்...
வழிப்போக்கன் தொடர்ந்து-)
வழிப்போக்கன் :
மன்னா, நீ பேசும் மொழி எது?... தமிழ்!... உன்னை வளர்த்த மொழி எது?... தமிழ்!... உனக்கு உரமூட்டிய மொழி எது?... தமிழ்!... இனி, நீ தமிழ் என்றுக் கூறும் தகுதியையும் இழந்தனையே... தமிழின் மேன்மையை வதைத்தாய்!... கூர்மையை உடைத்தாய்... சீர்மையை சிதைத்தாய்!... மன்னா, உனக்கு தமிழ் செய்த துரோகம் என்ன?... கூறு!... நீ தமிழினத்தவன்தானோ?... தமிழ்ப் பேசி வயிறுப் பிழைக்க வந்த அயல் இனத்தவனோ?... கூறு, மொழி!...
(சேயோன் வெகுண்டெழுந்து)
சேயோன் :
ஏய், முதியோனே...
இராவணன் :
சேயோனே, மக்கள் மன்றமிது!... மன்னவனைச் சாடவும், தூற்றவும், குற்றங் கூறவும், கூட்டத்தில் சொல்மழைத் தூவவும், முடிதுறந்திடென முழங்கவும், கடுஞ்செயல் நான் புரிந்திருப்பினும், நெடுந்தண்டனை விதிக்கவும் இலங்கையின் எளிய மகனுக்கும் உரிமையுன்டு!...
(சேயோன் அமர்கிறான்)
இராவணன் :
விந்தநாட்டு முதியோனே, வந்ததுமுதல் கடுஞ்சொற்மழைப் பொழிந்துக் கொண்டிருக்கிறாய்... ஏனெனக் கூறினால், நானும் கூறுவேன் உரிய மொழியை!...
வழிப்போக்கன் :
ஏனெனக் கேட்கிறாயோ?... மக்கள் கண்கள் கட்டப்படவில்லை... அவர்கள் செவியும் அடைக்கப் படவில்லை... உனதுச் செயலை மக்கள் எவரும் அறியவில்லை என்றோர் அறியாமையில் என்னை நீ கேட்கிறாய்!... மாலையோன் இங்கு மறைந்து விடுவதால், மண்ணுலகே இருளாகி விடுவதில்லை!... சாம்பல் ஏன் ஏற்பட்டது?... தீத் தீண்டியதாலன்றோ... சாம்பலுக்குப் பொருள் என்னவென்று தீயே கேட்கிறது... கரை சிதைந்ததேனென்று கடலலையே கேட்டால், யார்க் கூறுவது?... இடியை உதிர்த்துவிட்டு மேகம் மவுனமாய் கேட்கிறது... இடியைச் செய்தது யாரென்று?...
அமைச்சர் (1) :
விந்தநாட்டு தமிழ் மகனே... நீ தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் தமிழ் மண் மீதும் உலாவி உரிமைக் கொள்வதில் எமக்கு மிக மகிழ்ச்சியே!... மக்கள் மன்றத்தில் மன்னவனை நீ சாடிக் கொண்டிருக்கிறாய்!... கூற்றினைக் கூறிடு!... ஏற்றமிகு அரசனும், அமைச்சர் குழாமும், அரசியல் சீர்வாய்ந்தாரும் உனக்கு மறுமொழிக் கூற கடமைப் பட்டுள்ளனர்... ஏன் இந்நாட்டு அரசியும் கடமைப் பட்டுள்ளார்...
அமைச்சர் (2) :
தோழரே!... எதன் பொருட்டு நீ ஆத்திரம் கொள்கிறாய்?... தமிழென்றால் அழகு எனப்பொருள் உண்டே!... அழகினை மென்மையாய் பேணுதல்தானே சிறப்பு!... மலரைப் பறித்தலுக்கும், பிடுங்குதலுக்கும் வேறுபாடு உண்டல்லவா?... தமிழில் பேசுதல்தான் நன்று!... சீறுதல் சிறப்போ?... கூறு கூற்றினை; மென்மையாக!...
அமைச்சர் (3) :
அன்பரே, மக்கள் மன்றம் நெறிபிறழ்ந்த வரலாறும் உண்டோ?... இதோபார்... ஆயிரமாயிரம் மக்கள், மக்களவையில் குழுமிய வண்ணம் உள்ளனர்... பசியையும் பொறுத்திடும் இம்மக்கள், வேந்தனைப் பிறர்ப் பழிப்பதை பொறுத்திட மாட்டார்கள்... பாலமின்றி பயணம் மேற்கொள்ள முனைவதுப் போல், கூற்றில்லாமல் நீ குற்றஞ் சுமத்த வந்துள்ளதாக மக்கள் கருதி, கனல் சுமந்தக் கண்களோடு குழுமியிருக்கின்றனர்... ஆயினும்; எமது மக்கள் மரபிலிருந்து வழுவிடமாட்டர்... பண்பாடு மிகுந்த தமிழ் மக்கள், மக்களவையின் மாண்பினை மாசுப் படுத்த மாட்டர்... இதனை நீ அறியாதவனோ?... கூற்றினைக் கூறிடு நேரிடையாய்!... மக்கள் மன்றங் கூட்டி, அதன் கருத்தறிய, செவி சாய்த்திடும் மாமன்னரும் புவிமீதில் உண்டோ?... அவனியில் இராவணனின்றி வேறெவனுக்கு உண்டு இத்தகுதி?... வழிப்போக்கனே, களைத்திருக்கிறாய்; ஓய்வு வேண்டுமெனில் இளைப்பாறு!...
வழிப்போக்கன் :
அமைச்சரே, களைப்பும் இல்லை... எனதுப் பேச்சில் கனைப்புமில்லை!... இனத்தைத் தலைகுனியச் செய்தவன் இலங்கை மன்னன் இராவணன்!... மன்னனுக்கு வேண்டுமெனில் மயக்கம் வரலாம்; என் சொல் இப்போதுக் கேட்டு!... இளைப்பாறுதல் தாருங்கள் இம்மாமன்னனுக்கு!... எனக்கு வேண்டாம்... ஒருவனது மனதில் மாசு இல்லையெனில், அவனது செயலிலும் மாசு இருப்பதில்லை... ஏன்?...
அமைச்சர் (1) :
அவன் எந்த இனத்தோடு சேர்ந்துள்ளானோ, அந்த இனத்தின் மாண்பு நெஞ்சில் ஊறுவதால், மனதும் வினையும் தூய்மையாகத் திகழ்கிறது...
வழிப்போக்கன் :
அப்படியானால்; நிலத்தின் தன்மை நீருக்கு இருப்பதுப் போல், இந்த மன்னவனோடு சேர்ந்து வாழும் இந்நாட்டு மக்களின் நிலை என்னவாகும்?... மதியிழந்த மன்னவனைப் போல, மக்களும் நிலையிழந்து மாற்றான் மனைவியைத் தூக்கி வந்து, சுகம் காண்பர் அல்லவோ?...
மூன்று அமைச்சர்களும் :
முதியோனே!...
(அவையினர் அனைவரும் அதிர்ந்து எழுந்து நிற்கிறார்கள்)
வழிப்போக்கன் :
ஏன் பார்க்கிறீர்கள், அமைச்சரே!... கூறுங்கள்!... பிறன் மனையை காமநோக்கோடு நோக்குவது ஒழுக்கம் வாய்ந்தச்
அமைச்சர் (1) :
செயலல்ல!... காமம் ஒருவனது விழிகளிலே குடி கொண்டிருக்கிறது என்றால், அவன் தாயும் அவனைக் கண்டு அஞ்சுவாள்!... அவன் குடிமகனல்லன்!... இந்நாட்டின் இழிமகன்!... மன்னவனேயாயினும் இழிமகனே யாவான்!...
வழிப்போக்கன் :
நம்பிவந்தேன் நானும்மிடத்தில்!... அண்ட வந்தேன் உமது அடியில்... அந்தோ!... உமது எண்ணம் எனது மனைவியை நாடுகிறது என்றால்?...
அமைச்சர் (1) :
பிணத்துக்கு ஒப்பாவேன் நான்!... மானமுள்ளவன் ஆற்றும் செயலோ அது?... அறிவற்றவன் நான் எனில் அல்லவோ, என் மனம் பிறன் மனையை நாடும்... நடைப்பிணமென்று இந்நாடு என்னை விரட்டாதோ?... நான் இந்நாட்டு மன்னவனாயினும், எனக்குப் படைவலிமைத் துணையிருப்பினும், செல்வஞ் செழித்துக் கொழிப்பினும், என் எண்ணத்தில் பிறன் மனையை ஏற்றுவேனாயின் நாடு என்னைத் தாங்குமோ?... மக்கள் மன்னிப்பரோ என்னை?... ஞாயிறு உதிக்கும் நாட்டில் நான் இருளாகி போவேனே...
வழிப்போக்கன் :
உடல் வலிமை - உற்றத் துணைவர் வலிமை - உண்டென்பதற்காக, உடையவன் ஒருவனிருக்க, அவன் மனைவியின் தோளில் வேறொருவன் முயங்க முனைந்தால்?
பீடணன் :
நாடு காக்காது!... நிழல் போல் பழி, இனத்தையேத் தொடரும்!... சிறந்தவன் - நல்லவன் - வல்லவன் - வான்புகழ்க் கொண்டவன் - அறவழி நடப்பவன் - குறைவின்றி மக்களைக் காப்பவன் - என்பதெல்லாம் என்ன?... இவைதானோ சிறப்பு?... பிறமகளிரைக் கண்டு, மனமிழக்காத மாண்பு எவனிடத்தில் உள்ளதோ அவனே அறவழி ஆள்பவனாவன்!...
வழிப்போக்கன் :
நூல் பலக் கற்றவன் என்பதிலாப் பெருமை?... நுண்ணிய அறிவு நிரம்ப கொண்டவன் என்பதிலாப் பெருமை?... வில், வாள், வேல் போரில் வீரனிவன் என்பதிலாப் பெருமை?... சீர்மிகு இலங்கையின் பேரறிவாளனிவன் என்பதிலாப் பெருமை?...
மூன்று அமைச்சர்களும் :
இல்லை... இல்லை... இல்லை... பிறன்மனை நோக்காத பேராண்மையில்தான் பெருமை!...
வழிப்போக்கன் :
வறுமையால் இந்நாடு நலிவுறுகிறது எனில், இயற்கையோடு போரிட்டு, வறுமையை விரட்ட எம்மவர் முனைவார்கள்... ஆரியப் படையெடுப்பால், இப்பேரரசு, வீழ்கிறது எனில், எதிரியை எப்படியும் வீழ்த்திட வீறுக்கொண்டு எழும் உணர்ச்சி எம்மவரிடையே மேலோங்கும்... உட்குழுவால் இந்நாடு உருசிதைகிறது எனில், அதன் கருவருத்திட மீண்டும் அரசியலைத் தலை நிமிரச் செய்வோம் ... ஆனால்; இலங்கையின் அழிவுக்கு மன்னனின் சிற்றின்ப இச்சைதான் எனில், என்னச் செய்வோம்?... தமிழன் தலைக் குனிவானா?... தன்னையே அழித்து மாய்த்துக் கொள்வானா?... மானத்தை விலைப் பேசுவது போலல்லவா மாமன்னன் நிலையிழந்துள்ளான்... எமது பசிக்கு, மண் கலயத்தில் ஊற்றப்பட்ட கஞ்சியே போதும்!... நீ பொன்கலயத்தில் நஞ்சுத் தந்து, எமது உயிருக்குக் குழி வெட்டுகிறாய்... உனது ஆட்சியில் பெருமைக் கொண்டு நின்றோம்... நீயோ, மாமன்னன் என்ற திமிரில், மாற்றான் மனைவியைக் கைக் கொண்டு, எமது மானத்தை கொல்லத் துணிந்தாய்!... அடுத்தவன் மனைவியை அபகரித்த உனதுச் செயல் உன்னை மட்டுமல்ல நமது இனத்தையே இழிவுப் படுத்தும்... நமது மண்ணையே மாசுப் படுத்தும்... நமது மொழியையே காரியுமிழும்... தூ...
(மிக அமைதி நிலவ- அனைவரும் மன்னனையே நோக்க...)
இராவணன் :
உமிழ இன்னும் எச்சில் உள்ளதா உன்னிடத்தில்?...
வழிப்போக்கன் :
போதும்; உன் பொல்லாங்கு!... கூறு; அவைக்குக் கூற்று!...
இராவணன் :
வீரனே...
வீரன் :
தமிழ் வேந்தே!...
இராவணன் :
விந்தநாட்டு விருந்தாளிக்கு வாய்க் கழுவிட நீர் கொடு!... இளைப்பாறிட அமுது கொடு!...
(வீரன் செல்லுகிறான் )
வழிப்போக்கன் :
வேண்டாம்!... தொடேன், வேந்தே!... நீ முடித் துறக்கும் வரை!... கொண்டு வரப்பட்டவளைக் கொண்டு விடு, கொண்டவனிடத்தில்!... சிதைந்த மாண்பை நின் மார்பை சிதைத்தேனும் சீர்திருத்து!...
குழலி :
அய்யா, இன்னும் உமது நாவில் எச்சிலூறுவதாகத் தெரிகிறது... அதையும் உமிழ்ந்து விடு!... உமது எச்சில், நீர்க் கொண்டுக் கழுவிடப் போகும்... ஆனால்; மனதில் உள்ள எச்சில் எது கொண்டு நீக்குவது?...
வழிப்போக்கன் :
உன்னவனை இந்நாட்டை விட்டு ஓட்டுவதன் வாயிலாக!...
குழலி :
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீமை செறுவார்க்கும் செய்யா விடல் எனும் தமிழ்நெறியின்படி அரசோச்சும் எமது மன்னவனை, நாடுகடத்தக் கதறும் தாங்கள், கண் கொண்டு பார்த்தீரா?...
வழிப்போக்கன் :
எதனை?
குழலி :
எவளையோ என்னவன் கொண்டு வந்ததாகக் கூறினீரே... அதனை!...
வழிப்போக்கன் :
கண்ணால் காணவில்லை!...
குழலி :
சரி;... அழகுமிகு இலங்கையின் அழகூட்டும் எழில் கொஞ்சும் கன்னியர் ஏராளமாய் இங்கு இருக்க, எவருக்குப் பிறநாட்டு மங்கையர்ப்பால் நாட்டம் செல்லும்... எமது மன்னவன் நினைத்தால், நானிருக்குமிடத்தில் எழில் நலமிகுந்த நங்கையர் பலரை வைக்க முடியும்; வைக்க நெஞ்சில் உரமுண்டு!... உரம் வாய்ந்த என்னவன் கள்ளமாய்க் காரிகை எவளையோ கொணருவாரா?...
வழிப்போக்கன் :
கொண்டு வரப்பட்டுள்ளாள் என்பதுதான் எனது கூற்று!...
குழலி :
அவள் யார்?
வழிப்போக்கன் :
இராமன் என்பவனுக்கு மனைவி!...
குழலி :
இராமன் என்பவன் யார்?...
வழிப்போக்கன் :
இதென்னக் கேள்வி?... இராமனுடைய மனைவி உன்னவனால் கொண்டுவரப்பட்டுள்ளாளா?... அல்லவா?...
குழலி :
வரப்பட்டுள்ளாள்!...
வழிப்போக்கன் :
மக்கள் மன்றமதை நோக்கிக் கூறு!... மாதேவியே!... இது முறையோ?...
குழலி :
முறைதான்!...
வழிப்போக்கன் :
என்ன!...
குழலி :
முறைதான்!...
வழிப்போக்கன் :
முறையா?... தாகம் கேட்டு வந்தவனைத் தவிக்கச் செய்வது என்ன முறையோ?... நீதிக்கேட்டு வந்தவனைக் கூண்டிலேற்றி தண்டிப்பது என்ன முறையோ?... முடவன் போகும் பாதையில், முள் பரப்பி மகிழ்வது என்ன முறையோ?... உழைத்தவன் பொருளைக் களவு செய்வது முறையோ?...
குழலி :
கூவ வேண்டாம்!... நான் கூறுவதை சிறுது செவி மடுப்பீராக!... இராமன் எவன் என
வழிப்போக்கன் :
நானறிவேன்... அவனொரு நாடோடி!... ஆரியன்!... பிழைக்க வந்தானிங்கே!... மனைவி மானிறைச்சி வேண்டுமெனக் கேட்டதால், மான் வேட்டையாட இராமன் சென்றிருந்த வேளையில், இராவணன் வன்மமாக அவளை
குழலி :
கொண்டுச் சென்றதாக
வழிப்போக்கன் :
இராமன் கூறினான்!...
வழிப்போக்கன் :
நீரும் நம்புனீர்?...
வழிப்போக்கன் :
நம்புவதென்ன?... என்ன அகம்பாவம்; உன்னவனுக்கு?... எத்தகைய ஆணவம்!... கொடூரத்திலும் கொடூரமல்லவா; அடுத்தவன் மனைவியை அபகரித்த அநீதிச் செயலுக்கு, இலங்கை முத்திரைப் பதித்த ஓலை வேறு!... சீதை இலங்கை கொண்டு செல்லப்பட்டாள் என்று இலங்கையின் முத்திரையிட்டு!... செ... இதைவிட வேறு வெட்கமென்ன?...
குழலி :
வெட்கம் படவேண்டியவன் இலங்கை மன்னனல்ல!...
வழிப்போக்கன் :
இலங்கை மன்னனல்ல; இலங்கை மக்கள்!... ஆமாம்!... மக்களே, இழிச்செயல் கண்டும் இன்னும் நாம் உயிர் வைத்திருக்கிறோம்... பழிச்சொல் படர்ந்தும், கேளா செவியினனாய் இராவணன் வீற்றிருக்கிறான்... மயிர்ப் போனால், உயிர் வாழாதாம் கவரிமான்!... மானமே போயிற்று... இன்னும் நாம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்... செ...
(இராவணன் இருக்கையிலிருந்து எழுந்து, வழிப்போக்கனை நோக்கி வருகிறான்...
அவையே இராவணனை நோக்க-
மன்னன் கரனை நோக்கி...)
இராவணன் :
கரன்!...
கரன் :
வேந்தே!...
இராவணன் :
உணர்ந்தாயா?...
கரன் :
உணர்ந்தேன், வேந்தே!... ஆரியச்செயலில் சூதும், சூழ்ச்சியும் இருக்கும் என்று அறியாதவர்களா நாம்...
இராவணன் :
இராமன் நாடோடித்தான்!... ஆனால்; ஆரியவேந்தன் தசரதனின் புதல்வன்தான் இராமனவன் என்பதையும் நீ தெரிந்துக் கொள்ள வேண்டும், விந்த நாட்டவனே!... முனிவன் கோசிகனோடு வேள்வி நடத்த நமது எல்லைக்குள் இராமனும் இலக்குவனும் வந்தபோது, வேள்வியைத் தடுத்த தாடகையை, மறைந்து நின்றுக் கொன்றவன்தான் நீ கண்ட இராமன் என்பதையும் நீ தெரிந்துக் கொள்ளவேண்டும்...
வழிப்போக்கன் :
என்ன, அவனா... இவன்?...
இராவணன் :
பொறு!... கேள்;... அரசப்பட்டம் தனக்குத் தரவில்லை என்பதற்காக, இராமன் தனது தந்தை தசரதனைக் கொன்ற சேதி நீ தெரிந்திருக்கலாம்!... தந்தையைக் கொன்றுவிட்டு, தம்பியோடு நமது காட்டுக்குள் ஒளிய வந்தான் இராமன்!... உடன் மனைவி சீதையையும் அழைத்து வந்தான்... வந்தவன் புரிந்த நீசத்தனத்தை நீ அறிந்திருக்க வாய்ப்புண்டு!... தாடகைக்குப் பின்னர், விந்தநாட்டின் அரசியாகச் சென்ற காமவல்லி இராமன் கண்ணில் பட்டாள்... காமவல்லியைக் காதலிக்க முற்பட்டான்... இளம்பெண் என்றாலும், காமவல்லி இலங்கைப் பெண் அல்லவா... அதனால்,அவன் சூழ்ச்சிக்கு பலியாகவில்லை!... ஆனால்; சூதுக்கு இரையானாள்!... ஆமாம்...
வழிப்போக்கன் :
அறிவேன்!... அயோத்தியின் அரசபதவி கிட்டவில்லை என்றறிந்ததும், தந்தையைக் கொன்றான்.. காமவல்லி கிடைக்கமாட்டாள் என்று உணர்ந்தவன், அவளையும் தம்பியை ஏவி, கண்டந்துண்டமாக வெட்டினான்... அவனா... இவன்?... அவன் கழுத்தை நெறித்து கொல்லாமல் இங்கு நான் ஏன் வந்தேன்?... இனப்பகைவன்!... ஆரியநாடோடி!... தமிழர் வாழ்வு மீது பொறாமைக் கொண்ட ஆரியக் கூட்டத்தவன் அல்லவோ அவன்?... அவனையோ கொல்லாமல் நானிங்கு வந்தேன்... பண்பாடற்ற நெறியை தமிழகத்தில் திணித்து, உழைக்காமல் சுகவாழ்வு வாழத் துடிக்கும் ஆரியன் அல்லவோ இராமன்!...
இராவணன் :
கேள்!... நமது எல்லைக்குள் கள்ளமாய் நுழைந்து, தாடகையை, காமவல்லியைக் கொன்றதோடு, விலங்கினங்களை வேள்வி எனும் பேரில் கொன்று, தின்றுத் திரிந்தவர்கள்... அலைமுகிலெனும் வேட்டுவப் பெண்ணைக் கெடுத்து, அவளால் ஆபத்து நேரலாம் என்றஞ்சி கோரமாய் அவளைக் கொலைசெய்தவன்தான் இராமன்... துணைக்கு இலக்குவன்!... இராமனை கொன்றிட, நஞ்சுள்ளம் தாங்கிய அவனின் உடலைச் சிதைத்திட சினம் கொண்டு நான், அவனைத் தேடிச் செல்ல, அதே வேளையில் ஆரியத்தை அழித்திட அயோத்தி மீது சேயோன் படை நடாத்திச் சென்றான்...
பீடணன் :
இராமனைத் தேடிச் சென்ற நீ, சீதையின் அழகில் மயங்கி, இராமனை மறந்து சீதையைத் தூக்கி வந்ததாகத்தானே பேசப் படுகிறது...
இராவணன் :
பீடணா, நீயுமா பேசுகிறாய்?... நான் படையோடு வருவதை இராமன் அறிந்து, அவன் ஒளிந்துக் கொண்டான்... சீதை என் கண்ணில் படவேண்டுமென்பதற்காக இராமன் சீதையை மரத்தில் கட்டிவைத்துச் சென்றுவிட்டான்...
வழிப்போக்கன் :
ஏன் அவளை மரத்தில் கட்டினான்?...
இராவணன் :
சீதை என்னை மயக்கிட வேண்டுமாம்... நான் மயங்கி சீதையை இலங்கைக்கு அழைத்து வருவேனாம்... சிந்தைக் குளிர்ந்து, சீதைக்கு இலங்கையின் மகுடம் நான் சூட்ட, சீதை இராமனை அழைத்துக் கொள்ள வேண்டுமாம்... இராமன் இலங்கையின் மன்னனாகி, அயோத்தி மீதுப் படைத் தொடுத்து, பரதனிடமிருந்து அயோத்தியை மீட்பானாம்... அயோத்தியையும், இலங்கையையும் ஒரே குடையின் கீழ் ஆள்வானாம்...
வழிப்போக்கன் :
சீதை இதைக் கூறினாளா?...
இராவணன் :
ஆமாம்!...
வழிப்போக்கன் :
நீயும் நம்பிக் கொண்டாய்; இல்லையா மன்னா!...
இராவணன் :
நம்பினேனா, இல்லையா என்பது வேறு... ஆனால்;
(கரன் குறுக்கிட்டு)
கரன் :
மரத்தோடு கட்டப்பட்டிருந்த நிலையில், அவள் கதறினாள்... கெஞ்சினாள்... கொன்றுவிடும்படி வேண்டினாள்... இல்லையேல் இலங்கையில் வாழ அடைக்கலம் கேட்டாள்... எமது மன்னன் அப்போது கூறியது, இன்னும் நினைவில் இருக்கிறது... 'மனைவியிவளை மரத்தோடுக் கட்டி வைத்து விட்டு, பாவியவன் இராமன் எங்கோ பதுங்கியிருக்கிறான்... மங்கையிவள் மைவிழிகள் கண்ணீர சுரக்க, தம்பியவன் இலக்குவனோடு தந்திர வேலையில் ஈடுபட்டுள்ளான்... இதிலேதோ சூது உள்ளது!... இதனை நாம் அறிந்தாக வேண்டும்!... நேருக்கு நேர் நின்று, வீரம் காட்டுவதில் ஆரியருக்கு தீரமில்லை!... கோழைகள் அவர்கள் செய்யும் செயலிலே மானமிருக்காது!... அதனால் நம்மை இராமன் சூழ்ச்சி வலையில் சிக்கவைக்க செய்த முயற்சியிது!... இதனையும் நாம் ஏற்போம்... இவளையும் கொல்லுவோம்... பெண் என்பதால் தயங்கவேண்டாம்... கொல் என்று இவளே சொல்வதால் கொன்று விடுங்கள்...' என்று எனது மன்னன் முழங்கியது இப்போதும் என் செவிகளில் கேட்கிறது...
பீடணன் :
சீதையை வெட்டாமல், தூக்கி வந்ததேன்?...
இராவணன் :
பீடணா, திருத்திக் கொள்!... தூக்கி வரப்படவில்லை... அழைத்து வரப்பட்டுள்ளாள்...
பீடணன் :
ஆகா!... ஆரியச்சியின்பால் இத்தனை இரக்கம் ஏனோ?... அவள் அழகி என்பதாலா?...
குழலி :
நிறுத்துங்கள்!... அவள் அழகியா? அல்லவா என்பதா கூற்று?...
இராவணன் :
பீடணன், இரக்கமா என்று கேட்டாயே?... ஆமாம்!... இதயம் உள்ளவர்கள் காட்டும் நேயம்தான் நான் காட்டினேன்... சீதை, தங்கையாக எனக்குத் தெரிந்தாள்... அவளது கதறலிலும், கண்ணீரிலும் எனது தங்கையைத்தான் பார்த்தேன்... கணவனது தீய நடத்தையால் வாழ்வில் துயர் சுமந்திருக்கும் பெண்தான் சீதை!... ஆரியநெறி தீயது என்பதற்காகவோ, அவள் ஆரிய இனத்தவள் என்பதற்காகவோ, இராமனுக்கு மனைவி என்பதற்காகவோ சீதையை கொல்வது எந்தவகையில் நியாயம்?... இராமன் இருக்குமிடத்தை அறியவே, சீதையை மிரட்டுவதுப் போல் பேசினேன்...
பீடணன் :
ஆரியச்சி அவள் வாழ்ந்தாலென்ன?... மாய்ந்தாலென்ன?... அவள்மீது இரக்கம் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன?...
குழலி :
அல்லலுறுவோள் அழும் கண்ணீரைத் துடைப்பது தமிழ்ப் பண்பு!... அதுவே அங்கே நியாயமாயிற்று!...
இராவணன் :
இராமனைக் கொல்லும் எண்ணம் இப்போது இலங்கை அரசிடம் இல்லை!...
பீடணன் :
ஏன்?...
இராவணன் :
சீதை வாழ வேண்டுமென்பதற்காக!...
வழிப்போக்கன் :
நல்ல வேடிக்கையிது!... 'தமிழ்நெறியிதுதானோ?... மாற்றான் மனைவியை பெண்டாள்வதுதான் இலங்கைப் பேரரசின் சாத்திரமோ' என்று அவன் அங்கு நீதிக் கேட்டுத் திரிகிறான்... அவச்சொல் அவனால், உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது... அவனியோர் நம்மை பழிப்பதற்கு முன்னர், சீதை என்பாளை சீக்கிரமாகவே இங்கிருந்தது போக்கிவிடுவது நல்லது!...
அமைச்சர்கள்}
பீடணன் }
ஆமாம்!...
இராவணன் :
முடியாது!... கொன்று தின்ன காத்திருக்கும் சிறுத்தையிடம் புள்ளிமானை போகவிட மாட்டேன்...
பீடணன் :
நமது இனத்தின் மாண்பு சிதைந்துக் கொண்டிருக்கிறது...
இராவணன் :
சீர்ப்படுத்தும் கடமை எனக்கிருக்கிறது!...
அமைச்சர் (1) :
வேந்தே மறு ஆய்வுச் செய்யுங்கள்!...
இராவணன் :
அமைச்சரே, இராமன் கொடூரமானவன்!... தான்வாழ, தன் மனைவியையே விலைபேசத் துணிந்தவன்...
அமைச்சர் (2) :
விலைப் பேசுவது என்பது ஆரியத்தில் விந்தையானதல்லவே... தசரதன், முனிகள் சிலரை தனது மனைவிகளோடு கூடச் செய்துதான் இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கன் ஆகியோருக்கு தந்தையானான்... இறந்தக் குதிரைகளின் குறியை மனைவிகளோடு இணைத்து, அந்தக் காட்சியைப் பலர் காணச் செய்தான்... நல்நெறி, தீயநெறி என்று நாம் கூறுவதெல்லாம் அங்கே காட்சிப் பொருளாய் விலை பேசப்படுகிறது...
அமைச்சர் (3):
பொய்மையின் புலம்பலை, பொய்கை ஆற்றின் கரையினிலே, கரைத்துக் கொண்டிருக்கிறான்... கண்ணீர்ப் பெருக்கி இராமன் கபடநாடகம் ஆடிக் கொண்டிருக்கிறான்... இதனை அறியாது, உலகம் எம்மை தூற்றுகிறது... உலகத்தாரின் தூற்றுதல், எம்மை வருந்தச் செய்யும்... வேந்தே, சீதையை விட்டுவிடுங்கள்...
பீடணன் :
அண்ணா, கெஞ்சிக் கேட்கிறேன்... கேடு கெட்டவள் சீதை ஆரியச்சித்தானே!... ஆரியச்சி வாழ்ந்தாலென்ன?... வாடினால் என்ன?... அடுத்தவன் மனைவியை அபகரித்தவன் இராவணன் ; அவன் தம்பி இவன் என்று, என்னை சுட்டிக் காட்டினால், என் இதயம் சுக்குநூறாகி விடும்... இழிச்சொல் என்னால், தாங்க முடியாது... அவளை விட்டுவிடுங்கள்!...
இராவணன் :
முடியாது!... சீதைக்குக் கொடுத்த வாக்கை என்னால் மீற முடியாது... சீதையை அவன் கொன்றுவிடக் கூடும்... இல்லையேல்; தகாத வழியில் ஈடுப்படுத்தி துன்புறுத்தக் கூடும்... விழியிழந்தவனுக்குப் பாதையாய் நான் இருப்பேனேயன்றி, பாழுங்கிணறாய் மாறமாட்டேன்... அம்மா, என்று அழுது வந்தக் குழந்தைக்கு ஆறுதலாய் நான் இருப்பேனேயன்றி எரிநெருப்பில் எடுத்தெறிய மாட்டேன்... அஞ்சிவந்த மான்குட்டியை பொய்க்குழிதனில் தள்ள, நான் வேடனல்லவே!... வேந்தன் நான் தஞ்சமென வந்தவளைத் தவிக்க விடமாட்டேன்...
பீடணன் :
நமது இனத்தின் மாண்பைவிட, தமிழ் மொழியின் புகழை விட, இலங்கையின் சிறப்பைவிட, சீதைதான் உனக்கு சிறந்தவள் எனில், இனி நான் உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்... சீதையா?... இலங்கையா எனில் நீ சீதைத்தான் என்பாய்!... அந்தச்சிறுக்கியின்பால், சிந்தை வைத்த நீ மண்ணின் மானத்தை பறக்கவிட்டாய்!... உனக்குத் தம்பியாய் பிறந்தமைக்காக, நான் வெட்கம் படுகிறேன்... அரசவை, அமைச்சரவை எல்லாமே இங்கு செத்துவிட்டது... பிணக்காட்டின் மீது நீ குழல் வாசித்திரு!... என்னை இனி, நீ தம்பி என்று சொல்லாதே...
(பீடணன் வெளியேறுகிறான்...)
வழிப்போக்கன் :
மன்னா, "சீதை அழுதாள் ; அவள் படும் அல்லல் துடைக்க, இலங்கைக் கொண்டு வரப்பட்டாள் ' என்று சொன்னால், உலகம் ஏற்குமோ?... உடன்பிறந்த தம்பியே நம்ப மறுத்து விட்டான்... மனதில் அலை பாய, அவள் மீது மையல் கொண்டு இருப்பதாக அல்லவோ உலகம் தூற்றும்... சீதை ஆரியச்சி என்பதை மறவாதே!... ஆரியரோடு, சூதும் பிறந்தது என்பதை மறவாதே!... நாளை சீதையே கூறுவாள் 'இராவணன் தூக்கி வந்தான் ' என்று... மலர்சூடிதான் மகிழ்வோம்; முள் சூடி மகிழ்பவரும் உண்டோ?... சீதையை விட்டுவிடு!... அவள் யார்?... நாம் யார்?...
குழலி :
காட்டப்பட்ட பரிவுக்காகவும், இரக்கத்திற்காகவும், நேயத்திற்காகவும் மன்னன் முடித் துறக்க வேண்டுமென்றுதானே, சொல்கிறீர்!... இனம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டது மானிடநேயம்!... இதனைத் தவறு என்று மக்கள் மன்றம் கூறுமேயானால், எனது மன்னவனுக்கு, மகுடம் தேவையில்லை!... மணிமாளிகை வேண்டாம்... அணிமணிகள் வேண்டாம்... மக்களவைக் கூறட்டும்; மாமன்னனை நோக்கி!...
வழிப்போக்கன் :
தேவி, நாயகனுக்கு நல்வழிக் கூற வேண்டியது தேவியின் கடமை!... மாறாக, மன்னவன் போக்குக்கேப் போவது நல்லதல்ல!... கேள்; தேவி!... சீதை எங்கிருந்து அழைத்து வரப்பட்டாளோ, அங்கேயே கொண்டுப் போய் விட்டுவிடச் சொல்!... அவச்சொல்லும், பழிச்சொல்லும், நம்மவரின் ஒற்றுமையை சீர் குலைக்கும்... அவனியில் நமது நிலை தாழ்ந்துப் போகும்... எருவிட்டு வளர்த்தாலும், முள்செடி, முல்லைக் கொடியாகுமோ?...
அமைச்சர் (1) :
அடுத்தவன் மனைவியை அபகரித்து வந்தவன் என்றுதான் உலகம் தூற்றும்... ஆரியர்கள் மீது, உலகத்தின் அனுதாபம் மலர இச்செயல் ஏதுவாகும்!... இராமனது சூழ்ச்சி நிறைவேறாமல் தடுத்திட வேண்டுமென்றால், சீதையை விட்டுவிடுவதே சிறந்தது!...
இராவணன் :
அவனது சூழ்ச்சியின் முடிவென்ன?... இலங்கையைப் பிடித்து, ஆரியத்தை திணிப்பதாகத்தானே இருக்கும்?... கடைசி ஒரு தமிழ் இரத்தம் இருக்கும் வரை இராமனது எண்ணம் ஈடேறாது... ஆரியத்தை நம்மால் அழிக்க முடியாமால் போனாலும், தமிழகத்தில் ஒருக்காலும் ஆரியத்தை திணிக்க விடமாட்டோம்!... ஆரியச்சூழ்ச்சி எதுவாயினும், தமிழன் அதனை தகர்த்தெறிவன்... புலியென தமிழன் சிலிர்த்து நின்றால், எலியென எத்தர்கள் கூட்டம் சிதறியோடிடும்... தமிழ்...தமிழ்... தமிழ்தான் தமிழனது மூச்சு!... தமிழே தமிழனது உயிர்!... தமிழே தமிழனது வாழ்வு!... தமிழ்தான் தமிழன்!...
(இராவணன் முழங்க-)
குழலி :}
கரன் :} தமிழ் வாழ்க!...
சேயோன் :
தமிழ்நெறி ஓங்குக!...
அமைச்சர் :}
அவையினர் :} வாழியத் தமிழ்!...
- திரை -
பாகம் : 3. காட்சி :3. மலை சூழ்ந்தக்காடு - கருக்கல்!
இராமன்.
இலக்குவன்.
இரிசியமுகன் முனிவன்.
( இரிசியமுகன் ஆழ்ந்த ஞானி போல், கால் மீது கால் போட்டு, புலித் தோல் மீது - விழிகளை மூடி - தன்னை மறந்தவன் போல் - அமர்ந்திருக்கிறான்...
கருக்கலில்-
முனிவனைத் தேடி வந்த இராமனும், இலக்குவனும் விழிமூடி அமைதியில் மூழ்கியிருக்கும் இரிசியமுகனைக் காண்கிறார்கள்...
பின்னர் ஒருவரை ஒருவர் நோக்கி, தலையசைத்து முனிவனை நோக்கி வணங்கிய வண்ணம் நிற்கிறார்கள்...)
இராமன் :
தேவாதி தேவனே!.... எமது ஆரியமுனிவன் இரிசியமுகனுக்கு அருள் புரிந்திடுவாய்...
இலக்குவன் :
இந்திரனே, இரிசியமுகன் வல்லமை பெற்றிட, பேரருள் நல்கிடுவாய்!... இரிசியமுகன் வாழியவே; ஆரியர்குலந் தழைக்கவே!...
(தொடர்ந்து இராமனும் இலக்குவனும் இதனையே கூவி நிற்கிறார்கள்...
கதிருதயம் நிகழ்கிறது... விழித் திறக்கிறான் இரிசியமுகன்...)
இரிசியமுகன் :
யாரப்பா... தாங்கள்?... ஆ... இராமா, நீயா?... துரோகி!... சுட்டெரிக்கிறேன் பாருன்னை!... பாவி இலக்குவா, நீயுந் தொலைந்தாய்...
(இராமன் தடாலென்று, முனிவனின் காலில் விழுகிறான்...)
இலக்குவன் :
ஆரியர்க் குலக்கொழுந்தே!... ஆழியாய் இருந்து, ஆரியர் குலம் காப்பவனே!... அடுத்தடுத்து இன்னல் பல வரினும், தடுத்து வேலியாய் திகழ்பவனே!... இந்திரனருள் பெற்ற பெரு முனியே!... ஞானியே!... யாசிக்கிறோம்... மாசிலா நின் ஆசிதனைப் பெறவே நாமிங்கு வந்தோம்...
முனிவன் :
ஆரியர்க் குலத்திற்கே அற்புத விளக்காய்த் திகழ்ந்த தசரதனைக் கொன்ற நும்மை ஆரியர் என யாம் ஏற்போமோ?... பேயினும் பேதையரன்றோ அரக்கர்!... அவரினும் கொடியரன்றோ நீவிரிருவரும்!... நதியாய் நல்லன புரிந்தான் ஆரியன் தசரதன்!... அருங்குழந்தையென நும்மை சீராட்டி வளர்த்தான்... கொடுங் கருவியாய் மாறி, தந்தையைக் கொன்று, ஆரியர்க் குலத்தின் கடும்பகைப் பெற்றீர்... கீறி நும் தலையிரண்டை தசரதன் ஆவிக்கு நான் அவியல் தருவேன்...
( இராமன் எழுந்து நின்று, பணிந்தக் குரல்க் கொண்டு பேசுகிறான்...)
இராமன் :
விழுது பல கொண்ட ஆழம் போல், சீர்பல கொண்டு, நெடிது நிற்கும் நும் சித்தம் அதுவாயின் சிரந்தாழ்த்துகிறோம்... தலைக் கொய்துக் கொண்டு செல்க!... கொற்றவன் ஆவி அகம் மகிழவே!...
இலக்குவன் :
ஆயினும்; முனிவா, அன்புடன் தாங்கள் செவி மடுத்தால், ஆரியம் உய்த்திட உற்ற வகையொன்று உரைக்கவுள்ளோம்... உரைத்திடவா, சினகனலோனே!...
இரிசியமுகன் :
பகைவரும் நகைக்கலாயினர்; பாதகம் புரிந்த உம்மிருவரால்!... ஆரிய மரபுதனில் கருங்கோடுத் தோன்றலாயிற்று உம்மால்!... வாழினும், வீழினும் ஆரியரிடையே இரு கூறில்லை எனும் நேர் வாக்கன்றோ ஆரிய சிறப்பு!... வளரினும், தளரினும் நிலவது இரண்டாவதுண்டோ?... பொன் புதருக்குள் நச்சரவமானீர் நீவிரிருவரும்!... என்னவாயினும் மேலோன் தசரதனைக் கொன்ற கொடியோரே, கொன்றேன் நானிப்போதும்மை!...
இராமன் :
நன்றுதான்!... கொன்றிடுக... தேவாதி தேவன், இந்திரனருள் பெற்ற நுமது திருக்கரம் எம்மை கொல்லுமேயாயின், அதனினும் பேறுண்டோ எமக்கு?... திருமாலவன் திருப்பாதம் பணிந்தால் தேவருலகில் வாழும் பேறு கிட்டுமென்பர்!... நும் பாதம் திருமாலவன் பாதமன்றோ!... பணிந்தேன்... பாவியென்னை கொன்றிடு முனிவா!...
(முனிவனின் தாள் பணிகிறான் இராமன் )
இலக்குவன் :
ஆயினும்; ஆரியர்க் குலந்தனில் அருங்குணத்தின் வித்தகா, நேரியதோர் வார்த்தைக் கூறிட நீர் சித்தம் நல்கிட வேண்டும்!... ஒரு வரம் நீர் தந்தால், ஒரு நாழிகையில் அரக்கர் குலத்தையே அழித்து வருவோம்... பின்னர், நும் பேரின்பச் செயலாய் எம்மைப் பலிக் கொள்க; மாண்ட தசரதன் மனம் சிறக்க!...
( அப்போது இராமன் எழுந்து நின்று...)
இராமன் :
தந்தையைக் கொன்று பாவியான யாம், பாவம் கழுவிட வந்தோம்!... அரக்கரைக் கொன்று அவர்தம் இரத்தம்தனில், குளித்து, எம் பாவம்தனைப் போக்க வரம் கொடு, முனிவா!...
இரிசியமுகன் :
அரக்கரை கொல்லப் போகிறீர்களா?...
இராமன் :
கோசிக முனிவனோடு வேள்விக்குச் சென்ற நான், தாடகையைக் கொன்று, ஆரிய வீரத்துக்கு சிறப்புச் செய்தச் செயலை நீர் அறிந்திடவில்லையா?...
இரிசியமுகன் :
அறிவேன்!...
இராமன் :
இராவணன் தங்கை காமவல்லியின் கண் நோண்டி, காதறுத்து, மூக்கறுத்து, முலையறுத்து, முண்டமதைத் துண்டாக்கி
இரிசியமுகன் :
ஆகா!... கூறு!...
இராமன் :
சிரமறுத்து, விந்தநாட்டின் அரண்மனைக்குள் ஆரியவீரத்தை நிலைநாட்டி வந்தவன் என் தம்பி இலக்குவன் என்பதை நீரறியீரா?...
இரிசியமுகன் :
ஆகா, இலக்குவா!... நீயா?... அரக்கி காமவல்லியைக் கொன்றவன் நீயா!... ஆகா... நீ வாழ, நின் குலஞ் செழிக்கக் கேள்; வரம் தருகிறேன்!...
(இலக்குவனை இரிசியமுகன் ஆரத்தழுவி மகிழ்கிறான்...)
இராமன் :
பிறிதோர் அரக்கியையும் கொன்றேன், முனிவா!... அலைமுகில் எனும் அரக்கியை, ஆசைத்தீர நானும், இவனும் சுவைத்தோம்... பின்னரே அலைமுகிலின் அல்குலைப் பிளந்து, சிற்றிடையை வெட்டி, சிறுகுடல்தனை உருவி, பெருமுலையிரண்டைக் கொய்து, மூக்கறுத்து, மூளியாக்கிக் காட்டிலேயே தீக்கிரையாக்கினேன், முனிவா!...
இரிசியமுகன் :
இராமா, நீ வீரனடா!... நீ கொண்ட வீரம் நிகரற்றதடா... நீ மனம் கொண்டால், அரக்கர் குலமே மடியுமடா!... அரக்கர் தரும் அல்லல் அளவிட்டுக் கூற முடியாதடா... நினைத்தால் கனல்போல் நெஞ்சு எரிகிறதடா... இதோபார்... அந்த கிட்கந்தக மலையிலும், அதனை அடுத்த கிட்கந்தக நகரிலும் அரக்கர்தான் வாழுகின்றனர்... இங்கே நான் காட்டில் செய்யும் வேள்விக்கு அரக்கர் தரும் தொல்லைகள் ஏராளம்... தொலைத் தூரத்திலிருந்து வந்த நான், இங்கே தொல்லைகள் தாங்கி, ஆரியம் செழிக்க யாகமும் வேள்வியும் செய்கிறேனடா... அந்தோ, அரக்கர் அழிந்தப் பாடில்லை... அவர்கள் அடியோடு அழிந்தால் ஒழிய, நம்மால் நல்ல பல வேள்வியை நடத்த முடியாது!... இராமா, நீ அரக்கர்களை கொன்று வா!... ஆரியன் தசரதனைக் கொன்ற உனது பாவம் தானாய் நீங்கிவிடும்... போ; இராமா, மறைந்து நின்று மாய்த்திடு அரக்கரை!... ஒளிந்து நின்று ஒழித்திடு அரக்கரை!... தந்திரமாய் தாவிச் சென்று தசுயூக்களை தரைமட்டமாக்கிடு!... உனக்கு என்ன வேண்டுமோ, கேள்; தருகிறேன்...
இராமன் :
அய்யா, முதலில் தாங்கள், இதனை காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள்...
(சிறு மூட்டையைப் பிரித்து, நகைகளை இரிசியமுகனிடம் தருகிறான்)
இரிசியமுகன் :
ஆகா!... பொன்னும், வைரமும், வைடூரியமும், முத்தும், பவளமும்!... ஆகா... அரக்கர் நாட்டு முத்திரைப் பதித்த நகைகளும் இதிலே இருக்கின்றனவே... எவரிடத்தில் அடித்தக் கொள்ளையிது?...
இராமன் :
காமவல்லி, கனகமணி, அலைமுகில் இவர்களிடத்தில் பறித்த நகைகள்!... காட்டில், அவ்வழியே வரும் அரக்கர்களை வழிமறித்து செய்த கொள்ளைகள், வழி நெடுகிலும் எம் கண்ணில் பட்ட ஆரியர்களுக்கும், ஆரிய முனிகளுக்கும் தானம் செய்து பெரு மகிழ்ச்சியுடன் இங்கும் வந்துள்ளோம், முனிவா!... ஏற்றுக் கொள்; ஏற்றமிகு முனிவா!...
இரிசியமுகன் :
வேறு முனிகளையும் கண்டனையோ?...
இராமன் :
ஆம்!...
இலக்குவன் :
சித்திரக்கூடத்தில், தென்திசையில் அத்திரி முனிவனைக் கண்டு வணங்கினோம்... சரபங்க முனிவர் தாள் பணிந்து, நல்லாசி பெற்றோம்... அகத்தியனைக் கண்டு அகம் மகிழ்ந்தோம்... மாதங்கமுனிவனும் நல்மனதோடு வாழ்த்துச் சொன்னான்... நாம் கண்ட, முனிவரெல்லோரும், எமக்குப் படை உதவி நல்கிட இசைவுத் தந்துள்ளனர்...
இரிசியமுகன் :
படை உதவியா?...
இராமன் :
ஆமாம்!... இராவணன் எனது மனைவியைத் தூக்கிச் சென்றுவிட்டதால்,
இரிசியமுகன் :
என்ன?...
இராமன் :
முனிவா, எனக்குரியவளை - என் இல்லத்தரசியை - என் இதய ராணியை - இராவணன் அபகரித்துச் சென்று விட்டான்...
(சொல்லிக் கொண்டே அழுகிறான் இராமன் )
(இரிசியமுகனின் விழிகள் உருள்கின்றன...
கோபம் பொங்க-)
இரிசியமுகன் :
நிறுத்து வெட்கங்கெட்டவனே!... வேடிக்கைப் பார்த்தா நின்றாய்?... சூத்திரன் ஆரியப்பெண் மீது கைவைக்கும் போதே கையைத் தூண்டித்திருக்க வேண்டாமா?... நீ கற்ற மனுநீதியை மறந்து போனாயா?... ஆரியப் பெண்ணின் உடலைத் தொட்ட அரக்கனவன் உடலை அறுத்தெறிந்திருக்க வேண்டாமா?... ஆரியர்க் குலத் தோன்றல் சீதையை, சூத்திரன் தொடுவதா?... தூக்குவதா?... தூக்கிச் செல்வதா?... தூக்கிச் சென்றவன் அவள் துகில் உரிக்காமல் விட்டிருப்பானா?... தொடையைத் தொட்டானோ?... இடையைப் பிடித்தானோ?... எதனைத் தொட்டானோ?... என்னென்னச் செய்தானோ?... என் முன்னே நீ சோரம் போய் கண்ணீர் சொறிந்து நிற்கிறாய்... வெட்கம்... வெட்கம்... உன் வீரமெங்கே?... சீறாமல் நீ வந்ததேனிங்கே?... துடிக்கிறது அங்கம்!... சூத்திரன் ஆரியப் பெண்ணைத் தொட்டானா?... நெஞ்சை பகர்ந்தெறியாமல் என்னைக் கெஞ்ச வந்ததேன்?... போ... எனதுக் குடிலில் நூற்றுக் கணக்கில், ஆரிய சீடர்கள் இருக்கிறார்கள்... தமிழ்ப் பயில்பவர்களைப் போல், இங்கு வந்துள்ளனர்... அந்த ஆரிய வீரர்களை உடன் இட்டுச் சென்று, ஆரிய மானத்தைக் காப்பாற்று... சீதையை மீட்டு வா!... சிறுக்கிகள், அரக்கிகளின் அல்குலைப் பிளந்து வா!... முலைகளைக் கொய்து வா!... போ... போ.... வீரன் என்று நான் நினைத்தேன்... நீயோ சோரம் போய் நிற்கிறாய்!... சூத்திரன் ஆரியபெண்ணைத் தொட, நீ விட்டு வந்திருக்கிறாயே... சாபம் கொடுத்து நானுன்னை சபிக்கும் முன், ஆரியச்சி சீதையை மீட்டுவா!... பறித்தவனங்கே பாவை சீதையை படுத்தும் பாடு என்னென்னவோ?... அவன் தூக்கிச் செல்லும் வரை, நீ துணிந்து ஏதும் செய்யாமல் மரமாய் நின்றாயோ?... மானமில்லையோ... இல்லை; அவன் சீதையிடத்தில் செய்யவிருக்கும் லீலையைக் கற்பனையால் கண்டு நின்றாயோ?... கூறடா; வாய்த் திறந்து...
இராமன் :
முனிவா, அல்லல் என்பதனையே அறியாதவள் என் சீதா!... இளஞ்சொல் கொண்டு கூறுவதென்றால், செல்வ செழிப்பன்றி வேறு எதனையும் அறியாதவள்... அரசமகளாய்ப் பிறந்தவள், என்னோடுக் காட்டுக்கு வந்தாள்... நான் படும் அல்லலோடு, அவளும் அல்லல் படலாகாதே என, பூவாய்ப் போற்றி, தேனாய்க் காத்து, தேமதுர நிலவாய் நெஞ்சில் ஏத்தினேன்... அவள் விருப்பமறிந்து எதனையும் தேடிக் கொடுத்தேன்... கேட்டதை வேட்டையாடியேனும் தருவேன்... ஆசையோடு கேட்டாள்; மான்கறி வேண்டுமென்று!... நானும் இவனும் வேட்டையாடச் சென்ற போதிலே
(இலக்குவன் அழ ஆரம்பித்து...)
இலக்குவன் :
இராவணன் வந்தான்; முனிவன் வேடந்தரித்து, காரிகை சீதையிடம் பேரின்பச் சொல் பலப் பேசினானாம்... சிறு மருந்தொன்றைக் கொடுத்து, சுவைக்கச் சொன்னானாம்... பேதை அவளும் அருமருந்தென அதனைப் பருகிட மயங்கினாள்... மயங்கியவளை மார்போடணைத்து, தேர்மீதில் கொண்டுச் சென்றான், இராவணன்!... அங்கு வாழ்ந்த அரக்கரே எம்மிடம் இதைக் கூறிய போது, துடித்தோம்... துவண்டோம்... முனிவா, சீதையை மீட்டிட, நீதான் வழி கூற வேண்டும்!...
இரிசியமுகன் :
பிறன் மனைவியின் எழிலில் மையல் கொண்டானா?... பிற மனையை நோக்குவதே, பழியாகக் கருதும் அரக்கர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே; நேரிய செயலென்று!... இராமா, ஒன்று செய்!...
இராமன் :
கூறு, முனிவா!...
இரிசியமுகன் :
இராவணன் செய்தச் செயலால், அவன் மீது அரக்கரே பகைக் கொள்ள வேண்டும்...
இராமன் :
எப்படி?
இரிசியமுகன் :
பிறன் மனையை தூக்கி வருவதுதான் தமிழ்ப்பண்போ?... தமிழ் நெறியோ? பிறன் மனைவியை ஆள்வதுதான் தமிழ் ஒழுக்கமோ? என்ற வினாவினை அரக்கர்களிடையே பரப்பு... அரக்கர்கள் இராவணணை சூழ்ந்து பகைக் கொள்வர்... அரக்கர் குலம் இரண்டு படும்... அதனைப் பயன்படுத்தி நீ படை நடத்திடு!... அரக்கரை எளிதில் வெற்றிக் கொள்ளலாம்... சீதையையும் மீட்டிடலாம்...
இராமன் :
முனிவா, எமக்குப் பெரும்படை இல்லையே என்று ஏக்கம் கொண்டிருந்தேன்... இன்று ஏக்கம் கலைந்தது... நின் அறிவார்ந்த வார்த்தைகள் பெரும்படைக் கலன்களாய் எமக்குத் துணையாயின!...
இரிசியமுகன் :
இதோ கிட்கந்தகத்தை வாலி அரசாள்கிறான்... அவனும் அரக்கன்தான்!... அவனுடைய தம்பிக்கும் அவனுக்கும் பகைமை உள்ளது!... நாடாள வேண்டுமென்ற ஆசையோடு, தம்பி சுக்ரீவன் துடித்துக் கொண்டிருக்கிறான்... 'நாடாள வேண்டுமென்ற சுக்ரீவனது ஆசைத் தீதானது!... ஆசையை நெஞ்சில் கொண்டு உனக்கு மோசம் செய்யத் தயங்கமாட்டான்' என்று நீ வாலியிடம் கூறு!... 'சுக்ரீவன் உயிரோடு இருக்கும்வரை உனது ஆட்சிக்கு இடையூறு ஏற்படும்!... எனவே, சுக்ரீவனை சாகடிப்பதே சிறந்தது!... சாகடிக்கும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கிறேன்' என நீ வாலியிடம் நயமாகப் பேசி, வாலியின் மனதில் இடம் பிடித்துக் கொள்... பிறகு, இராவணன் செய்த ஒழுக்கமற்றச் செயலைச் சொன்னால், வாலி வெகுண்டு உனக்கு ஆதரவுத் தருவான்...
இலக்குவன் :
ஆகா!... அருமையானத் திட்டம்... முனிவா, நீ வாழி!...
இராமன் :
முனிவா, நாடோடும், சேனையோடும், பெருஞ்செல்வத்தோடும் வாழும் வாலியை நாம் ஏய்க்க நினைப்பதைவிட, ஆட்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சுக்ரீவனை நாம் கைக் கொண்டால் என்ன?...
இலக்குவன் :
ஆகா... இதுவல்லவோ திட்டம்!...
இராமன் :
சுக்ரீவனுக்கு ஆட்சிப் பிடித்துத் தருவதாக, நாம் ஆசை மொழிக் கூறி வஞ்சகமாகக் கொல்ல சதி வகுப்போம்... ஆட்சியையே பிடித்துக் கொடுத்து விட்டால், சுக்ரீவன் எக்காலத்திற்கும் அடிமையாய் நமக்கு உதவிடுவான்... நாம் மந்திரமும் மாயமும் அறிந்தவர்கள் என அவனை நம்பச் செய்து விட்டால், அவன் தன்னை மட்டுமின்றி, தனது இனத்தையே நமக்குத் தாரை வார்க்கத் தயங்க மாட்டான்!... அவனுக்கு வேண்டியது, கிட்கந்தகத்தின் அரசாட்சி!...
இரிசியமுகன் :
மகனே, உனது எண்ணமும் சரிதான்!... முதலில் சுக்ரீவனைச் சந்திப்பதை விட, சுக்ரீவனுக்கு தோழன் அனுமனை சந்திப்போம்; ஆசை வார்த்தைக் கூறுவோம்...
இராமன் :
சரி, முனிவரே!...
இரிசியமுகன் :
இனி, எந்த முனிவனையும் சந்திக்காதே!... எல்லா முனிகளையும் நானே சந்தித்து, ஆயிரக்கணக்கில் உனக்கு ஆரியப்படைத் திரட்டிக் கொடுக்கிறேன்... உன் மனைவியைத் தூக்கிக் கொண்டுச் சென்றானே இராவணன்... நீ இதனையே சாக்காகக் கொண்டு, படை நடாத்திடு!... அரக்கரை அழித்திடு!... இனி, உனது எண்ணமெல்லாம், எப்படி அரக்கரை அழிப்பது என்பதில்தான்!... இராமன் :
ஆமாம்! முனிவரே, சீதா எனக்குக் கிடைக்காவிட்டாலும் மோசமில்லை!... பிரமனை வேண்டினால் ஆயிரம் சீதாக்களை படைத்துத் தருவான்... ஆனால்; நீங்கள் வேள்வியும் யாகமும் நலமாகச் செய்திட வேண்டும்... இடையூறின்றி இனியப்பூசைகள் பல நடத்திட வேண்டும்... இதற்கு இடையூறாக இருக்கும் அரக்கரை, குலத்தோடு அழிக்கவேண்டும்... சீதாவால், எனக்கு மட்டுந்தான் சுகம்!... வேள்வி நடத்த உமக்கு நான் வழி செய்துக் கொடுத்தால் ஆரிய இனத்திற்கே சுகம்!... இதற்காகவே இனி நான் எனதுப் பிறவியைப் பயன் படுத்துவேன்... இதுவே எனது வெறி!... முனிவரே, நல்லாசி வழங்கிடு!...
இரிசியமுகன் :
நன்று மகனே!... அரக்கர் குலம் உன்னால் அழிந்துப் படட்டும்... நான் அனுமனை வரவழைக்கிறேன்... நீ குடிலில் இரு!...
(இராமனும் இலக்குவனும் குடிலுக்குள் செல்கின்றனர்...)
- திரை -
பாகம் : 3. காட்சி-4. மலைகள் சூழ்ந்தக்காடு!
இரிசியமுகன்,
அனுமன்.
இடைவாள் கையில் எடுத்த நிலையில், அனுமன் முனிவனை அணுகி-)
அனுமன் :
இரிசியமுகனே...
(முனிவன் அதிர்ந்து, விழிகளைத் திறந்து அனுமனை நோக்க, நோக்கிய வேகத்தில் எழுந்து நிற்கிறான்...
அனுமனுக்குப் பணிந்து, இரிசியமுகன் பேசுகிறான்...)
இரசியமுகன் :
அனுமனே, யாம் உம்மை அகக்கண்ணில் நோக்க, நீரோ புறக்கண்ணுக்கு காட்சித் தந்துக் கொண்டிருக்கிறீர்...
(சீற்றத்துடன் அனுமன் கேள்வி எழுப்பி நிற்கிறான்)
அனுமன் :
சற்று முன்னர் இருவர் வந்தனரோ, இங்கு?
இரசியமுகன் :
எமதுக் குடிலுக்கு வந்துள்ளனர்...
அனுமன் :
தமிழ் கற்கத்தானே உம்மைத் தேடி, உமது குடிலுக்கு வருகின்றனர்...
இரிசியமுகன் :
ஆமாம், அய்யா!...
அனுமன் :
அம்பு, வில்லோடும், பிற ஆயுதங்களோடும் அந்நியர் கிட்கந்தக எல்லையினுள் நுழைந்திட உரிமையில்லை என்பதை அறிவீரல்லவா?...
இரிசியமுகன் :
அறிவேன், அய்யா!... ஆயினும்; அவர்கள் அறியவில்லைப் போலும்!...
அனுமன் :
நீர் அறிவீரல்லவா?...
இரிசியமுகன் :
ஆம்; அய்யா!...
அனுமன் :
நீர் என்ன செய்திருக்க வேண்டும்?...
இரிசியமுகன் :
அவர்கள் தம்மோடுக் கொண்டு வந்திருந்த அம்பு, வில்தனை உம்மிடம் ஒப்படைக்கும் சித்தம் எம்மிடம் உள்ளது!... சற்று நாழிகையில் யானே வரலாம் என்றிருந்தேன்!...
அனுமன் :
காலந்தாழ்த்தாது, அம்பு, வில்லை எம்மிடம் கொண்டு சேர்த்திடுக!... அந்நியர் எவருக்கும் ஆயுதம் வைத்திருக்க இங்கு உரிமையில்லையென அறிந்தும், நீர் வாளாவிருந்தீர்!... இதனால், உம்மீது எமது தலைவன் சுக்ரீவன் கோபம் கொண்டுள்ளான்!...
இரிசியமுகன் :
பொறுத்தருள, பெருந்தகையோன் சுக்ரீவனிடம் கூறும், அனுமனே!... எமது பிறப்பு, பாவம் பட்டப் பிறப்பு!... மழைத்துளிகள் சகதியில் வீழ்ந்து கெட்டது போல், ஆரியராய் யாம் பிறந்ததால் எம் வாழ்வும் கெட்டுப் போனதய்யா!... தமிழர்களாகிய உம்மினத்தவர், ஆரியர்களாகிய எம்மினத்தவர்பால் துளியும் நேசம் காட்டுவதில்லை...
அனுமன் :
தவறு கூறுகிறாய்... தமிழர்கள் எவரையும் தம்மவர் போல் பேணி, விருந்தோம்பல் செய்திடும் பண்பில் இன்றும் உயர்ந்தே நிற்கின்றனர்... நேசமற்றவர் என்று தமிழரைக் கூறி, மாசுக் கொள்ளாதே!...
இரிசியமுகன் :
மன்னித்து அருள்வாய், அனுமனே!... தவறாய்க் கூறினேன்... வழிப்பாடு, யாகம் இவற்றில் தமிழர் நாட்டம் கொள்ளாததால்,
அனுமன் :
நாட்டமல்ல; நன்மையானச் செயலல்ல என்பதால்!...
இரிசியமுகன் :
நன்மைத் தரும் செயல் அல்லவெனில், ஆரியர் யாங்கள், அதில் நம்பிக்கைக் கொண்டு வாழ்வோமோ?...
அனுமன் :
நம்பிக்கைக் கொண்டும் என்பதும் தவறு!... நாவுக்கு சுவையாய் மிருகங்களை தின்பதற்காக என்றுக் கூறுங்கள்... யாகமும் வேள்வியும் உங்கள் வயிற்றை நிரப்பும் அன்னச் சாவடிகள்!... பூசை எனும் பேரில், மிருகத்தின் புண் தின்னும் பாம்புகள்தான் ஆரியர்கள்!...
இரிசியமுகன் :
இல்லை! அய்யா, மிருகங்களை புசிப்பதற்காகத்தான், வேள்வி நடத்துகிறோம் எனில், வேள்வியின்றியே, மிருகங்களைக் கொன்று அதன் சதையைத் தின்ன மாட்டோமோ?...
அனுமன் :
மிருகக் கொலையை எமது மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை... இதனை நன்கறிந்த உம்மவர், 'வேள்வியும் யாகமும் நாட்டுக்கு அமைதித் தருவன' என்று ஓர் ஏமாற்றுக் கூத்தினை ஆடுகிறீர்கள்... 'நன்மைத் தரும் செயல்! எனவே, நம்பிக்கையுண்டு அதில் எமக்கு!... அந்த நம்பிக்கையின் பொருட்டே வேள்வி நடத்துகிறோம்' என்று எம் தமிழினத்தையும் ஏமாற்றிட முனைகிறீர்கள்... முடிவதில்லை!...
இரிசியமுகன் :
இளையவர், நீர்!.. எனினும்; அனுமா, மூத்தவன் யான், முற்றும் உம்மவரை உணர்ந்துள்ளேன்... மனம் வேதனையுறும் என்பதால், உமது மண்ணில் யான் வேள்வி நடத்த முனைவதில்லை!... அமைதித் தரும் அழகுக்காடு இது என்பதால், தமிழ்நாடுத் தேடி யாங்கள் வருகிறோம்... அதுவன்றி வேறு நோக்கம் ஏதுமில்லை... ஆயினும்; அஃதோ, அன்னியில் அரசோச்சும் வாலி எம்மை, சிறுதும் நம்பினானில்லை!... யாம் கிட்கந்தக எல்லையில் நுழைவதையே எதிர்க்கிறான் வாலி!... இங்கே கிட்கந்தகத்தின் புறநகரில், சுக்ரீவனும் நீரும் இருப்பதாலன்றோ ஆரியமுனிகளாகிய எம்மவர்க்கு தாகத்திற்கு நீர்ப்போல் இருக்கிறது...
அனுமன் :
ஆரியர் இங்கு உறைய, எமது தலைவன் சுக்ரீவன் இசைவுத் தந்துள்ளான்... ஏனென்று அறிவாயோ நீ?... அந்நியர் ஆயினும், நீர் எமது அழகுத் தமிழ்க் கற்க வந்துள்ளீர்... தமிழ்மொழி தரணியெங்கும் பரவிடல் வேண்டும் எனும் தாகம், எமது தலைவன் சுக்ரீவன் நெஞ்சில் உண்டு!... அதன் பொருட்டே இசைவுத் தந்துள்ளான்... நீரோ, ஆயுதமேந்தி வரும் ஆரியனை குடிலுக்குள் நுழைத்துள்ளீர்...
இரிசியமுகன் :
தவறுதான்!... அனுமனே, சிறு நாழிகைக்குள், விரைந்து வருகிறேன்; அவர் தம்மோடுக் கொணர்ந்தப் பொறிகளோடு!... அரசாளும் வாலியிடத்தில், எமக்கு ஆதரவு இல்லையாயினும், அரசில்லாத சுக்ரீவன்தான் ஆரியருக்குக் காவலன்!... அவன் சொல் யாம் மீறுவோமோ?... அவன் மனம் நோக இங்கு யாம் வாழ இயலுமோ?... வான்துளி இல்லையேல் பசும்புல்லும் முளைக்காது... சுக்ரீவன் இல்லையேல், ஆரியரும் பிழைக்க முடியுமோ?... அரசில்லாத சுக்ரீவன் நீடூழி வாழ, இறைவனை யாசிக்கிறேன், அனுமனே!...
அனுமன் :
அரசில்லாத சுக்ரீவன் என்றா கூறினாய்?... கிட்கந்தகத்தின் ஆட்சி, தொலைக்காட்சியில் இல்லை!... இலை மூடியக் கனியிது!... அதனை சில நாளில் கைக்கொள்வோம்... அரசனாய் சுக்ரீவனும் அரியனையேறுவான்... முடிசூடி கிட்கந்தகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவன் வலம்வரும் திருநாள் நீ காண்பாய்!... வெகு நாளில்லை; வாலி வெருண்டோடிட!...
இரிசியமுகன் :
வாலியோ, படை வலிமையோடு இருக்கிறன்... சுக்ரீவனோ இம்மலைப் பகுதியில் வாழ்கிறான்!... வாலியை வென்றிடக் கூடும் என்பதில் எமக்கு ஒப்பமில்லை, அனுமனே!...
(அனுமன் சிரிக்கிறான் )
அனுமன் :
மலையில் வாழ்ந்தாலென்ன?... மண்ணில் வாழ்ந்தாலென்ன?... வீரமார்பன் சுக்ரீவனை தவறாய்க் கணித்தாய், இரிசியமுகனே!... புற்றில் வாழ்ந்தாலும் எறும்பு, அயராதுத் தீனி திரட்டுவது போல், மலையில் வாழ நேரிட்டாலும் மனந்தளராது, சுக்ரீவன் படைத் திரட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை நீர் அறியவில்லை... படைத் திரட்டப்பட்டு, ஆயுதம் உண்டாக்கப்பட்டப் பின் கிட்கந்தகம் சுக்ரீவனுடையதாகும்... ஆம்!... போரில் வெல்வோம்!...
இரிசியமுகன் :
அனுமனே, வாலியோடு போர் மூளுமெனில் யாம் உமக்கு உதவிடுவோம்!...
அனுமன் :
நீரா?... எமக்கா?... மாடறுத்துத் தின்று, மதுவருந்தி கும்மாளமிடும் ஆரியர்கள் போர்க்களத்தில் எம்மோடுத் துணை நிற்பார்களோ?...
(அனுமன் நமட்டு சிரிப்பு சிரிக்கிறான்...)
அனுமன் :
வேடிக்கைப் போதும்!... முகனே, நான் சொன்னதைச் செய்!
இரசியமுகன் :
அனுமனே, ஆரியர்கள் அற்பர்கள் எனும் எண்ணம்தானே உம்மை இப்படிப் பேச வைக்கிறது?... எமது வீரம்கூட உமக்கு கேலியாய்த் தெரிகிறது... சற்று முன்னர் அம்புவில்லோடு வந்தனரே இருவர்... விற்போரில் விண்ணுக்கு நிகரானவர்கள்!...
அனுமன் :
ஓ... (கிண்டலாக)
இரிசியமுகன் :
அவர்கள் மாயச்செயல் கண்டு, மண்ணுலகே வியக்கும்!...
(அனுமன் கடகடவென சிரித்து...)
அனுமன் :
வேடிக்கைப் போதும் என்றேன்!... இனியுமென்ன மாயமும்... மந்திரமும் என்ற பேச்சு?...
(அனுமன் தொடர்ந்து சிரிக்கிறான்...)
இரிசியமுகன் :
அனுமனே, சுக்ரீவனிடத்தில் நான் கூறியதாகக் கூறுவீராக... போருக்கு வாலியை அழைத்து, போர்முனையில் வாலியை சுக்ரீவன் சந்திக்கட்டும்... மாயமாய் ஓர் அம்புதனை ஏவி வாலியை கொல்லவில்லையெனில், நீர் என்னை மட்டுமன்று, இங்கு வாழ் ஆரியர் அனைவரையும் அடியோடு வெட்டிக் கூறாக்குங்கள்... மாய அம்பு ஏவி வாலியைக் கொன்றால், ஆரியர் இங்கு சுகவாழ்வு வாழ உதவிடுவானா சுக்ரீவன் என்றுக் கேட்டுச் சொல்லுங்கள்...
அனுமன் :
மாய அம்புதனை ஏவப் போவது நீயா?...
இரிசியமுகன் :
அல்ல!... சற்றுமுன்னர் நிலமதிர வந்தனரே வீரர் இருவர்... அவர்களில் ஒருவன்!...
அனுமன் :
எவன் அவன்?
இரிசியமுகன் :
விற்போரில் விண் போல் உயர்ந்தவன்!...
அனுமன் :
அழைத்து வா, நீ அவனை; சுக்ரீவனிடத்தில்!...
இரிசியமுகன் :
ஆகட்டும் அனுமனே!... சுக்ரீவனிடத்தில் நான் இராமனோடு வருகிறேன்!...
அனுமன் :
இராமனா?...
இரிசியமுகன் :
ஆம்; தசரதனின் புதல்வன்!...
அனுமன் :
அவன் கொல்லப்பட வேண்டியவனாயிற்றே!...
( வாளுருவி குடில் நோக்கி செல்கிறான் அனுமன்! )
இரிசியமுகன் :
அனுமனே, சற்றுப் பொறுத்தருள்க!...
அனுமன் :
பொறுப்பதா?... இராமனைக் கண்டும், கொல்லாமல் விடுவதா?... இராமனைக் கொல்லாமல் விட்டு, தமிழினத் தலைவன் பகைக்கு நான் ஆளாவதா?...
( அடியெடுத்துச் சென்றவன், ஏதோ சிந்தை வயப்பட்டவனாக நின்று...)
அனுமன் :
ஓ... மறந்து விட்டேன்!
இரிசியமுகன் :
மறதியா?...
அனுமன் :
ஆம்!... இருநாட்களுக்கு முன்னர், வந்த இலங்கைத் தூதுவர் சொல்லிச் சென்றனர்...
இரிசியமுகன் :
என்னவென்று?...
அனுமன் :
இராமனைக் கொல்லவேண்டாமென்று!...
இரிசியமுகன் :
ஏன்?
அனுமன் :
இராமன் மன்னிக்கப்பட்டான்... அவனுக்கு நல்லனச் சொல்லி, அவனுள் குடிக்கொண்டிருக்கும் தீயகுணம் போக்கி, சீதையோடு வாழச் செய்திட,
இரிசியமுகன் :
வேண்டுமென்று இராவணன் சொல்லியுள்ளான்?...
அனுமன் :
ஆம்!...
இரிசியமுகன் :
அனுமனே, இராமனைக் கொல்வதும், கொல்லாதிருப்பதும் சுக்ரீவனின் விருப்பம்!... இராமனைக் கொல்லுமுன்னர், அவனால், வாலி கொல்லப்பட்டு, சுக்ரீவன் அரசேறினால், பெருமை ஆரியருக்குத்தானே?... அந்தப் பெருமைக்காக யாசிக்கிறேன்... சுக்ரீவனிடம் கூறுவீராக!... மாய அம்பு தொடுத்து, வாலிக்கு மரணத்தைக் காட்டுவான் இராமனென்று!...
அனுமன் :
விரைவில் இட்டு வா, இராமனை!...
( அனுமன் புறப்படுகிறான் )
- திரை -
பாகம் : 3. காட்சி : 5. காடு.
சுக்ரீவன்,
அனுமன்,
இரிசியமுகன்,
இராமன்,
இலக்குவன்.
( சுக்ரீவன் பாறை மீதமர்ந்திருக்க, அருகில் அனுமன்-)
அனுமன் :
வாலியோடு ஒப்பிட்டால், படை வலிமையில், நாம் வலுவற்றவர்கள்தான்!... அவன்நிலைத் தளர வேண்டுமெனில், இப்போது நமக்குத் தேவையொருத் துணை!... ஆரியர்களாயிற்றே அவர்கள்!... அவர்களையா நாம் துணைக் கொள்வது என தயக்கம் கொள்ள வேண்டாம்!... குளிருக்கு நமக்கு நெருப்புத் தேவை!... எந்த மரத்தின் நெருப்பாய் இருந்தால் என்ன?... வாளேந்துகிறோம்... வேல் ஏந்துகிறோம்... ஆரியரையும் நாம் ஒரு போர்க் கருவியாய் ஏவிடுவோம்... நமக்குத் தேவை கிட்கந்தகத்தின் அரியணை!... அதற்குத் தேவை; வாலியின் மரணம்!... வெட்டப்படவேண்டிய மரம், காற்றில் பெயர்ந்து விழுந்தால் கவலை கொள்வாரும் உண்டோ?... வாலியின் பிணத்தின் மீதுதான் நமது அரியணை என்பதை மறவாதே!... இராமன் மாயமாய் அம்பு ஏவினாலென்ன?... மறைந்து நின்று ஏவினாலென்ன?... வாலி மடிந்துற வேண்டும்!...
சுக்ரீவன் :
அனுமனே, நான் அரியணை ஏறினால், நீதான் எனது தலைமை அமைச்சன்!...
அனுமன் :
அமைச்சர் பதவியாயினும், அரசக்கூடத்து ஏவலன் பணியாயினும், தலைவா நும் தாள் பணிந்துப் பணியாற்றுவேன்!... காட்டில் கருங்குரங்குகளோடு வாழ்ந்தவன் நான்!... என் வேடிக்கைச் செயல்களில் நீங்கள் மனமகிழ்ந்து என்னைத் தங்களோடு சேர்த்துக் கொண்டீர்கள்... என்னையும், என் வாழ்வையும் நான் உங்களுக்காகக் கொடுத்தேன்... என் செயல்கள் யாவும், நிழல்போல் உமக்கு சுகத்தைப் பொழியும்!...
சுக்ரீவன் :
மரத்தின் நிழல் நீயானால், மண்ணாய் உன்னை நான் தாங்குவேன்... இருள் என்னைப் பிணைத்திருக்க, நீ ஒளியாய் என் விழித் திறந்தாய்!... என் விழித் திறக்கக் கண்ட வாலி வஞ்சம் கொண்டு, என் வாழ்வை சிதைக்க முனைந்ததை நீயல்லவாக் கண்டாய்... என் வாழ்வு மலர, நான் வாலியிடம் அரியணையில் இடம் கேட்டேன்... அவனோ என்னை அடித்து விரட்டினான்... அனுமனே, நான் காடாள, வாலி அரசாள்வதா?... ஒரு பகுதியேனும் கொடு அரசாள்கிறேன் என்ற போது, வாலி, 'கொய்யாக்கனியா? கொய்ய?' என்றான்... 'மாங்கனியாயிது; மையத்தில் துண்டுபோட?' என்றான்... அகந்தைப் பிடித்த அவன் தலையைக் கொய்து எறிந்துவிட்டு, மகுடம் நான் தரித்திட தருணம் வாய்த்தது என்கிறாய் நீ!... மகுடம் சூடி நான் மன்னவனாகி விட்டால், முதலமைச்சன் நீதான்!... நீ கூறுவது போல் ஆரியன் இராமனையும் ஓர் கருவியாய் ஏவி போரிடுகிறேன்... மலையேறினால்தான், மைநிற மேகத்தைத் தொட இயலுமெனில், பாழ் பட்ட பாறையாயினும், பயணம் செய்வேன்... ஆரியனாயினும் துணைக் கொண்டு, கிட்கந்தகத்தின் மணிமகுடம் கொள்வேன்!...
அனுமன் :
அதோ, ஆரியர் மூவர், அடி தொழுதிட வருகின்றனர்...
( அனுமன் காட்டிய திசையை சுக்கிரீவன் நோக்க-
இரிசியமுகனோடு இராமன், இலக்குவன் கைத் தொழுது வருகின்றனர்...)
( பாறைமீதமர்ந்திருக்கும், சுக்ரீவனது வலதுகால் தொட்டு இரிசியமுகன் பணிந்து வணங்குகிறான்...
இடதுகால் தொட்டு இராமன் பணிந்து வணங்குகிறான்...
பணிதற்கு கால் தேடிய இலக்குவன்-
சுக்ரீவனது கால் இரண்டும் இருவரால் பணியப்பட்டிருப்பதால், அருகில் நிற்கும் அனுமனிடம் ஓடிச்சென்று அனுமனின் கால் பணிந்து வணங்குகிறான்... )
சுக்ரீவன் ;
நீதான் இராமனோ?...
மூவரும் எழுந்து நிற்கிறார்கள்...)
இராமன் :
செஞ்சொல்லாம் நின் திருவடி சுமந்து, பூங்கவிதையாம் சீராட்சி யாத்திட வந்த இராமன் யானே!... அருஞ்சொல் ஆயிரம் நிலவிடினும், நின் திருச்சொல் ஏந்தி மகிழும் இக்கானகம் போல், கிட்கந்தகமும் செழித்திட வந்த இராமன் யானே!... விழித்தெழுந்த விண்ணோன் மண்மீது நடந்திடாமல், திரைப் போட்ட கார்மேகத்தை அழித்திட வந்த கதிரவன் யான் இராமனே!... இருகரம் தொழுது நிற்கும் இவன் இலக்குவன்; எனது இளவலே!...
இரிசியமுகன் :
அரண்மனையில் நீர் இருந்திட்டால், வாலியின் திருமகுடம் பறிபோகுமென்று அஞ்சி, வஞ்சகமாய் வாலியும் வாள் நீட்டி விரட்டிவிட்டான்... தோள்தட்டி நீர் நின்றாலும் துணைக்கோப் படையில்லை... தோழனாய் அனுமன் உமக்கு இருப்பினும், வாலியோ நெருப்பெனவே நெடும்படைக் கொண்டுள்ளான்... கூரிய ஆயுதங் கொண்டு அவன் நெஞ்சை கீறிடினும், சீறி வரும் இரத்தம் சிதைத்திடுமே உமது சிறுபடையை!... ஆதலால், மாயமாய் அம்புதனை மந்திரத்தில் ஏவிட இராமன் வந்துள்ளான்... அதனால், அரசனாய் நீரும் அரியணை ஏறிடலாம்...
இலக்குவன் :
அரியணை ஏறிடவே நீர் அன்புடன் ஒரு யாகம் நடத்திடப் பணித்திடுக!... யாகத்தில் வெந்துறும் நிணங்கள் போல் உம் பகைவன் தலைப் பந்துரும் மாயத்தால்!... தகுதியில்லையோ உமக்கு அரியணையில் அமர்ந்திட?... இரு கொம்புமுண்டோ வாலிக்கு அரசாள?... வேறெதில் அவன் உம்மைக் காட்டிலும் சிறப்பாவான்?... வாரிசுதான் அரசாளுதல் என்பது பேதையன்றோ... பரதன்தான் வாரிசு என்ற போது, தசரதனைக் கொன்று தரணியில் புரட்சி விதைத்த வித்தகர்கள் யாம்!... வாலிதான் வாரிசெனில் வாளாவிருந்து நீர் மாளுவதோ இம்மாயக் காட்டில்?... வார்த்தையாட, வாயுண்டு!... வாளேந்த இரு கையுண்டு!... நெடுங்குன்றேற இருகாலுமுண்டு!... தடைவருமெனில் தகர்க்க தோளுமுண்டு!... இருந்தும் நீயேன், நிலமதனை விடுத்து, இலைச்சருகுகள் மீது மலையடியில் மறைந்து வாழ வேண்டும்?... அழைத்திடுக அவனை; போருக்கு!...
(இராமன் தொடர்கிறான் )
இராமன் :
'வாரிசென்பது பேதமையடா!... வாளேந்தி வாடா!... வென்றிடின் நீயே கொள்ளடா மகுடம்... அல்லவெனில்; அடிப் பணிந்திடடா!... வாலியே எனது அடிப் பணிந்திடடா' என்று எம் சுக்ரீவனே, கூவுக வாலியை!... எம் சுக்ரீவனே, அழைத்திடுக வாலியை!...
இலக்குவன் :
அழைத்திடுமுன்னர், அருந்திறல் தரும் யாகம் நடத்திட இசைவு கூறிடுக!... எம் வேந்தே!...
அனுமன் :
கேள்வியில் நாட்டம் கொள்ளும் யாம் வேள்வியை நாடோம்!... பார் சோகத்தில் பங்குக் கொள்ளும் யாம், மிருக யாகத்தில் பங்கு கொள்ளோம்... நல்லோரின் வழி நடக்கும் யாம் கல்லுக்கு வழிபாடு கண்டறியோம்...
சுக்ரீவன் :
ஆயினும்; வாலியை வதைத்திட இதிலும் வழியுண்டு என்கிறீர்கள்; அதில் எமக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், இசைவுத் தருகிறோம்... வாலியை கொல்லாது விடுவீராயின், இப்போது நான் சொல்வதை நெஞ்சில் கொள்க!... வாலியை கொல்லாது விடுத்தால், இங்கு வாழ் உம்மினத்தவர் எல்லோரையும் கொல்லுவேன்!... நெஞ்சில் கொள்ளுக என் கூற்றினை!...
இரிசியமுகன் :
உமது சித்தம் எமது சித்தம்!... ஆனால்; போர்க்களத்தில் எவரும் இருக்க மாட்டோம்...
அனுமன் :
என்ன?...
சுக்ரீவன் :
ஏன்?...
இரிசியமுகன் :
யாகசாலையில் எம்மவர் போரிட்டு நிற்பர் வாலியோடு!...
சுக்ரீவன் :
வாலியோடுப் போரிடுவது?
இரிசியமுகன் :
நீர்தான்... ஆமாம்!... நீர்தான்!... நெடும்படைத் திரட்டி வரும் வாலியிடத்தில் நீர் ஒன்று கூறிட வேண்டும்; நான் கூறுவதனை!...
சுக்ரீவன் :
யாது?
இரிசியமுகன் :
'படை ஏனடா படை?... போர் உனக்கும் எனக்கும்தானடா... அஞ்சா நெஞ்சன் - அயரா வீரன் - இந்நிலமாளும் அரசன் நீயானால், என்னோடுப் போர் புரிய நேருக்குநேர் வாடா... தனித்தே நாம் போரிட்டு, கிட்கந்தகம் எவருக்கென்று தீர்வுக் காண்போம்... இதில் வீரர் எதற்கடா?.. பேடிகளுக்கன்றோ வீரர் துணை வேண்டும்?... பேடியெனில் வாலி, நீ போர்க்களம் வாராதடா' என்று நீர் முழங்கிட வேண்டும்!...
அனுமன் :
பிறகு?
இரிசியமுகன் :
உம்மோடு மோத வரும் வாலியை யாம் கூறுமிடத்தில் நிறுத்திப் போரிட வேண்டும்...
சுக்ரீவன் :
போருக்கு அழைப்பதும் நான்; அவனோடுப் போரிடுவதும் நான்!... இதில், உங்கள் பணியென்ன?...
( இரிசியமுகன் பெருங்குரலில் சிரிக்கிறான்...)
இரிசியமுகன் :
நாளைய வேந்தே!... நன்றாய்க் கேட்டாய் கேள்வி!...
சுக்ரீவன் :
இதில் உங்கள் பங்கென்ன?... 'அம்புத் தொடுத்து, அவனை மாய்ப்பேன் மாயமாய் ' என்று சொன்ன நீவிர் யாகம் செய்து மாமிசம் புசித்திருக்க, வாலியோடு மோதி மாள்வதா நான்?...
இரிசியமுகன் :
நாளைய வேந்தே!... நன்றாய் செவி மடுப்பீராக... நான் கூறுமிடத்தில் நீர் வாலியோடு மோத வேண்டும்...
சுக்ரீவன் :
அதாவது!...
இரிசியமுகன் :
மோதுவது போல், நடிக்க வேண்டும்!... நாங்கள் செய்துக் கொண்டிருக்கும் யாகத்திசை நோக்கி நீர் நிற்க, யாக திசைக்கு வாலியின் முதுகுப்புறம் அமையும்படி நீர் அவனோடு மோதிட வேண்டும்... மாயவன் தேவாதி தேவன் இந்திரன் அருளோடு இராமனும் மந்திரம் முழங்க- நானும், இலக்குவனும் தேவருக்குப் படையல் புரிய, பறந்தோடி வாராதோ அம்பு!... ஆவென அலறித் தரையில் வீழும் வாலியின் குருதியைத்தான் குடிக்காதோ இராமனது அம்பு?...
இலக்குவன் :
மாய அம்பு யாகத்தில் எழுந்து - வேகமாய் - பாய்ந்து, வாலியை வீழ்த்தும் காட்சியை இரு கண் கொண்டு, நீர் காண்பீராக!...
இரிசியமுகன் :
அழைத்திடுக வாலியை!... "கிட்கந்தகம் எவருக்கென்று தீர்வு கண்டிட, நேருக்கு நேர் போர்ப் புரிந்திட வாடா வாலி" என்றுக் கூவிடுக நாளைய நல்வேந்தே!...
(சுக்ரீவன் கூவுகிறான்)
சுக்ரீவன் :
அழைத்தேன் வாலியை!... அடல் நெடுங்காட்டில் இடியென மோதிடவே!... வாடா வாலி!... வந்திங்கு போர்ப் புரிந்து உன் வீரத்தைக் காட்டடா!... மைங்குழல் கோதையர் நெஞ்சை மஞ்சமாக்கி, மையலில் திளைத்திருப்பவனே, வெயிலில் வெந்து வெறுந்தரையில் துயின்றிருக்கும் உனது தம்பி சுக்ரீவன் நான் அழைக்கிறேன்... வாடா, வாலி; வந்திங்குப் போர் புரிந்திட!... உன்னை ஈன்றவள்தான் என்னையும் ஈன்றனள்... இதில் பேதமில்லை!... நீ அரியணையில் வீற்றிருக்க, நானுனது அடிப்பணிந்திருப்பதுக் கொடுமையன்றோ!... அரசாள நானும் அறிவேன்!... அணிமணிப் புரவல் புரிந்திட, புது தேரேறி, பூவையரோடு வலம் வந்திட நானும் அறிவேன்!... சிறு பருவத்திலும், இளம்பருவத்திலும் கலைப்பல கற்றவன்தான் நானும்!...மூத்தவன் என்பதால், நீ முத்துமாலை சூடி, முத்தமிழ்ப் புகழும் மகுடம் தாங்கி அரியணை ஏறிடுவதா?... முத்துமாலை அணியவும், மகுடஞ்சூடவும் நானறிவேன்!... வாள் சுழற்றவும், வேல் எறிந்திடவும், நெடுங்கால் தேர்மீதில் பகைவர்மீதுப் பாய்ந்திடவும் அறிவேன் நான்!... வசந்த மண்டபத்தில் வண்ணமயில் சூழ, வானில் நிறம் பலத் தோன்ற, எந்தன் வாயினிலில் வனிதையர் அமுதூற்ற வாழ்ந்த நானிங்கு வாடித் திரிவதோ?... வாலி, வந்தேன் உன்னை அழைத்திடவே!... போர்... போர்... போர்...
(முழங்கிச் செல்கிறான் சுக்ரீவன்! அனுமனும் பின்தொடர்கிறான்...)
இரிசியமுகன் :
மூண்டதடா தீ!... யாம் மூட்டுவோம் யாகத்தீ!... நன்றாய் நினைவில் கொள்ளடா, இராமா!... அதோ, அந்தத் திறந்த வெளிதனில், வாலி சுக்ரீவனோடு மோதிடுவான்... அதோ... சிறுகுன்றின் புறத்தே நாம் யாகத்தீ வளர்ப்போம்!... நீ குன்றேறி மறைந்து நின்று, குறித் தவறாது,வாலியின் முதுகைத் துளைத்திடு!... அம்பு பாய்ந்திட 'ஆ ' வென வாலியும் மாய்ந்திட வேண்டும்!... சிறுநிலைத் தவறினும், நமது சூழ்ச்சி தோற்றுவிடும்!... மாய அம்பென்றே மற்றையோர் நம்பிடும் வண்ணம், தீயவன் வாலி மீது குன்றில் மறைந்து நின்று குறித் தவறாது ஏவிடு!... ஏவும் அம்பு வாலியின் உயிரை மட்டுமா குடிக்கும்?... தமிழர்களின் அறிவையே குடிக்கும்!... மாய அம்பு என்பதால், சுக்ரீவனையும் அலற வைக்கும்!... மாயம் கற்றவர்கள் ஆரியர்கள் என்பதனை அரக்கர் நம்பிட இத்தருணத்தை நாம் அற்புதமாய் கையாண்டிட வேண்டும்!... வாய்ப்பை நழுவவிடாதே!... மாயமாவது; மந்திரமாவது என்று வாய்ப் பேசும் அரக்கர்களின் அடிநெஞ்சிலே இனி பயம் எழும்!... ஆரியனை எதிர்த்தால் மாயத்தால் நம்மை மாய்த்திடுவான் என அரக்கர் அஞ்சும் வண்ணம், இராமா நீ குன்றேறி குறித் தவறாது வளைத்திடு வில்லை!... இந்நிலமெங்கும் எதிரொலித்திடவே, வாய்த் திறந்து நானும் மாய அம்பு வானிலிருந்து வந்தது காண்; பாவிகளை வீழ்த்தவே மாயவன் இந்திரன் ஏவினான் மாயமாய் அம்பென்றே கூவுகிறேன்!...
இரிசியமுகன் :
ஓ... இந்திரனே!...
இராமன் }
இலக்குவன் }
ஓ.. இந்திரனே!...
இரிசியமுகன் :
இடியை வைத்திருப்பவனே, எங்கள் பிரார்த்தனையைக் கேள்!
இராமன் }
இலக்குவன் }
இடியை வைத்திருப்பவனே, எங்கள் பிரார்த்தனையைக் கேள்!
இரிசியமுகன் :
தசுயூக்களாம் தமிழர்கள் மீது இடியைப் போடு!...
இராமன் }
இலக்குவன் }
தசுயூக்களாம் தமிழர்கள் மீது இடியைப் போடு!...
இரிசியமுகன் :
ஆரியருடைய பலத்தையும், கீர்த்தியையும் அதிகப்படுத்து!...
இராமன் }
இலக்குவன் }
ஆரியருடைய பலத்தையும், கீர்த்தியையும் அதிகப்படுத்து!...
- திரை -
பாகம் : 3. காட்சி : 6. நூலரங்கம்.
வண்டார்குழலி.
சேயோன்.
இராவணன்.
மாரீசன்.
( ஓலைச்சுவடிகள் மூங்கிற்கயிற்றில் தொங்கிக்கொண்டிருத்தல்-
வண்டார்குழலி ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறாள்... அப்போது சேயோன் நுழைகிறான்...
ஓசை எழாதவாறு நுழைந்து, குழலி அறியாதவாறு குழலியின் கண்களை கரத்தால் பொத்துகிறான்...)
( குழலி புன்முறுவல் பூத்து...)
குழலி :
மகனே!
சேயோன் :
அன்னையே, நான்தான் கண்ணை மூடினேனென்று உங்களால் எப்படி அறிய முடிந்தது?...
குழலி :
மலரின் மணமறிய விழிகளும் வேண்டுமோ?... என் வயிற்றில் பிறந்த மலரல்லவா நீ!...
சேயோன் :
அம்மா!...
குழலி :
ஈரைந்துத் திங்கள் உன்னை ஈரவயிற்றில் தாங்கி, உன்னைப் பூவாய்க் கரங்களில் ஏந்தி, பாலூட்டி, சோறூட்டி, நீராட்டி, சீராட்டியவளல்லவா நான்!... சிறு அணுவளவு உன்னுள் வளர்ச்சி ஏற்பட்டாலும், என்னிரு கண்களும் அதனைக் கண்டு அகத்திற்கு ஆனந்தம் ஊட்டுமே!... அந்த இலக்கணம் ஒருத் தாயால் மட்டுமே படித்துணர முடியும்!...
சேயோன் :
அம்மா, இந்தப் பூவுக்குள் நான் முகிழ்ந்திருந்து உயிரானேன் என்பதை நினைக்கும் போது ஆகா!... என் இதயத்தை மகிழ்விக்கும் வேறு சேதி ஏதம்மா?... பூக்கள் ஆயிரமிருக்கலாம்... பூவுக்கெல்லாம் பூவாகத் திகழும் வெண் முல்லையம்மா, நீங்கள்!...
குழலி :
மகனே, பூவுக்குள் நிறபேதமிருக்கலாம்... மணம் வீசுவதில் வேறுபாடிருக்கலாம்... ஆனால்; மகனே, பூவிதழ்களில் ஓர் ஒற்றுமை உண்டு!... அதுதான் மென்மை!... இந்த மென்மைத்தான் தாய்மையின் சிறப்பு!... ஒவ்வொரு தாயுள்ளதிலும் ஒப்பற்ற ஒளியாய்த் திகழ்வது மென்மை!... தாய்மையின் இலக்கணத்திற்கு உவமையே இல்லை, மகனே!...
சேயோன் :
அம்மா, நூலரங்கில் நான் கற்றுத் தெரிந்தது நிறைய என்று இறுமாந்திருந்தேன்... அந்த எண்ணம், எத்தனை அறிவீனமானது!... பெற்ற தாயிடத்தில் கற்றுணர வேண்டிய உண்மைகள்தான் எத்தனை?... எத்தனை?... உயிர்களனைத்தையும் தாங்குவது நிலம்!... இந்த நிலத்தையே உள்ளமாய்க் கொண்டிருப்பவள் தாயெனில் தவறாமோ?...
குழலி :
தாய்மை மேன்மையாவது எப்போது தெரியுமா, மகனே!... ஓர் ஆண்மகன் தாய்மையை நேசிக்கும்போதுதான் தாய்மையின் சிறப்பு மிக மேன்மையாகிறது!...
சேயோன் :
ஆமாம்!... அன்னையே, இந்த அரங்கத்தில் ஆயிரக்கணக்கில் நூல்கள் உள்ளன!... இந்த நூல்களை நாம் படித்துவிடுவதால் மட்டுமே இந்த நூல்களின் பெருமையை அறிந்துவிடப் போவதில்லை... இந்த நூல்களின் கருத்து நம்மால் நேசிக்கப்படும் போது. இந்த அரங்கத்திற்கே பெரும் பெருமை சேருகிறது...
குழலி :
ஆமாம், மகனே!... நாள் தவறாமல், நான் இந்நூலரங்கம் வருகிறேன்; படிக்கிறேன்!... ஆயினும்; பார்!... இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்... நாளையும் வந்து நான் படிப்பேன்... அறிவுத் தாகம் மட்டும் தணியவில்லை!... படிக்கப் படிக்க இந்த நூல்களில் புதுச் சுவை ஊறிக் கொண்டேயிருக்கிறது... தேனருந்த மலரினை நாடும் வண்டு போல, நானும் கருத்தருந்த நூலினை நாளெல்லாம் நாடிக் கொண்டிருக்கிறேன்...
சேயோன் :
அம்மா, இன்று தாங்கள் அருந்திய நூலமுது எதுவோ?...
குழலி :
பொருளியல்!
சேயோன் :
பொருளியல்!... எனக்கும் பிடிக்குமே... நீங்கள் படித்ததை எனக்கும் சொல்லுங்களம்மா!...
குழலி :
ஒரு செயலின் பின்விளைவை சிந்தியாமல் செய்கிறவன் பேதையாவான்... மகனே, இந்தக் கருத்து மிகச் சிறியதாகத் தோன்றலாம்... துளி தேனிலும் சுவையுண்டு என்பது போல சிறு கருத்துதான் என்றாலும், வாழ்வின் தத்துவத்தை உணர்த்துகிறது இல்லையா?
சேயோன் :
ஆமாம், அன்னையே!...
குழலி :
இது பேதைமையானது என்று உணரும் திறன் ஆரியருக்கு உண்டோ?... இல்லையோ?... தெரியவில்லை!... பேதமையானது என்பதை நமது தமிழ் நமக்கு உணர்த்துகிறது... ஆரியமும் அதனை அவர்களுக்கு உணர்த்துமேயானால்; இராமன், பின்விளைவை சிந்தியாமால் இராவணன் மீது பொய்க் கூற்றுக் கூறித் திரிந்துக் கொண்டிருப்பானா?...
சேயோன் :
அம்மா, ஆரியர்கள் அவர்கள் அறிவிலிகள்... அவர்களை ஒரு பொருட்டாய் நாம் கருதுவதே தவறு!... ஆனால்; நம்மவர் சிலரைப் பாருங்கள்... மன்னன் இராவணன் செய்தச் செயல் சரியானதல்ல என்று கூறுகின்றனர்...
குழலி :
ஆமாம்; மகனே!... அவர்களையும்தான் என்னால் அறிய முடியவில்லை!... சீதை ஆரியச்சியே யாயினும், அவள் படும் இன்னல் கண்டு வருந்தினான் இராவணன்!... இது தவறா?... அவள் வாழ்வில் சீர் மலர சிந்தைப் பூண்டான் இராவணன்!... இது தவறா?... வாடும் பயிருக்கு நீர் வார்ப்பது தவறென்றால், தணலில் தவித்தப் பறவைக்கு நிழல் செய்வது நீதியல்லவெனில், நீர் சூழ்ந்த இவ்வுலகில் உயிரினம் வாழ்வதும் தவறாகும்... ஆனாலும், மகனே, ஆயிரம் அம்புகள் தைத்தாலும் யானை, தனது ஒய்யாரத்திலிருந்து சிறுதும் நிலைக் குலையாது!...
சேயோன் :
ஆமாம்; தாயே!... யானையைப் போல்தான் வீரன் இராவணன் மனந்தளர மாட்டான்... இராமானது பொய்க் கூற்றுகள் அம்புகளாகத் தைத்தாலும், நம்மவர் சிலர் வீண் சொல்லம்பு ஏவினாலும், இராவணன் பெருமை சிதையாது... நீருயர, நீர்ப் பூவும் உயரும்!... நமது உள்ளம் நல்லச் செயல்களுக்கு இடந்தர தர நமது இனமும் நன்மையையே அடையும்!... தூற்றுதலுக்குத் துவளுதல் கூடாது... துணிவுதனை இழத்தலும் கூடாது!...
( இராவணன் நுழைகிறான் )
இராவணன் :
தாயின் முன்னே, தனயனின் சூளுரை எதன் பொருட்டோ?...
சேயோன் :
தந்தையே வருக!... சிந்தையள்ளும் நூலரங்கு போல், சீர்மிகு இலங்கையின் அமைச்சர்களிடையே குழப்பம் நிலவுவதாய் உலவிடும் பேச்சு உண்மைதானோ?...
இராவணன் :
உண்மைதான்!...
குழலி :
ஏன்?
இராவணன் :
'சீதையை இலங்கைக்கு அழைத்து வந்ததில் தவறில்லை' எனச் சிலரும், 'தவறுதான்' எனச் சிலரும் கூறி இருப் பிரிவாய் நின்றனர்... இன்றுக் கூடிய அமைச்சரவையில், இரு சக்கரங்களில் ஒன்று, திசைத் திரும்பி விட்டால், வண்டிதான் பயணத்திற்கு உதவுமோ?... இராமனைக் கொல்ல வேண்டாமென்று நான் ஆணையிட்டேன் அல்லவா!... 'குடில் மீது நெருப்புக் கண்டும், அணைக்காமல் அமைதிக் காத்திடு என்பவன் மானிடன்தானோ' என்று என்னைக் கேட்டனர் அமைச்சரவையில் சிலர்... 'இராமனைக் கொல்லாது விட்டதாலன்றோ, அவன் பொல்லாத வார்த்தைகள் இலங்கையின் மீது அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறான்... நெருப்பெனத் தெரிந்ததும், நெடும் பாய்ச்சலில் அதனை அணைத்திருந்தால், விளைவு நீண்டிருக்காதல்லவா... அவனைக் கொல்லாமல் விட்டதாலன்றோ, அவதூறும் கூறித் திரிந்துக் கொண்டிருக்கிறான்... அயல்நாட்டவரும் அதனை நம்பிவிட்டால் இலங்கையின் பேர் என்னாவது?... தலை குனிவதா?... உயிர்மாய்ப்பதா?... ' என்று என்னை ஏகமாக சிலர் சொல்லாடினர்!... கூடிய அவையில் குழப்பமே மிகுந்தது!... இலங்கையின் அவையில் குழப்பம் நிலவியதாக வரலாறு நீ கேட்டதுண்டா?... இந்தக் குழப்பநிலை வர, சீதையின் பொருட்டு நான் எடுத்த முடிவாகும்... குழலி, சீதை சிந்தட்டும் கண்ணீர் ; துடிக்கட்டும் ; துவண்டு போகட்டும் ; வாடட்டும் ; அலறித் தாள் பிடித்தாலும் அடைக்கலம் தரக்கூடாது என்று நான் எண்ணி வந்திருந்தால், அகிலம்தான் என்னைப் பாராட்டுமோ?... இராமனால் அவளுக்குத் தீங்கு நேர்ந்தால், எனக்கென்ன என்று நான் அவளை ஏறெடுத்தும் பாராமல், வந்திருந்தால் உலகம் சீர்ச் செய்து என்னைப் பாராட்டுமோ?... ஆரியச்சி என்பதால், ஒரு பெண்ணின் துயர்க் களைய மறுத்த இரக்கமில்லா இலங்கை என்ற பழிச்சொல் நம்மைச் சார்ந்திருக்காதா?...
குழலி :
மன்னவா, கரித்துகள் பட்டாலும் பொன்னின் நிறம் மாறாது!... கால் கொண்டு உதைத்தாலும், மலை நிலைப் பெயராது... தூற்றுதல் கண்டு நீர் துவண்டு விடவேண்டாம்... ஆயிரம் எலிகள் அணி வகுத்தாலும், ஒரு சிங்கத்தின் பீடுநடைக்கு ஈடாகுமோ?... உமது அரும்பணியின் முன்னே, அடுத்தவர் பேச்செல்லாம், கடலோசையின் முன்னே காகத்தின் கரைசல் ஒலிதான் ஆகும்!...
( மாரீசன் நுழைதல்)
மாரீசன் ;
தமிழினத்தலைவா வாழி!... செழுந்தமிழ் செங்கோலோச்சும் செழியா வாழி!... செல்வங்கொழிக்கும் செவ்விலங்கை வேந்தே வாழி!... கிட்கந்தகம் நகரிலிருந்து ஒற்று வந்துள்ளது...
இராவணன் ;
வாசி!...
மாரீசன் :
அரசபீடத்தின் மீது ஆசைக் கொண்ட இளவல் சுக்ரீவன் வாலியோடு போர்ச் செய்தான்... போரில், சுக்ரீவனுக்கு துணை நின்ற இராமன் மறைந்து நின்று அம்பெய்து வாலியைக் கொன்றான்...
( இராவணன் அதிர்ச்சியுற்று...)
இராவணன் :
வாலி கொல்லப் பட்டானா?...
சேயோன் :
தந்தையே, ஆழ்கடல் மீதிலே, புயலின் தாண்டவம் தொடங்கிவிட்டது!... எவர் தடுத்தாலும், இனி நான் அடங்கப் போவதில்லை!... தமிழிலங்கைப் புலிகளிடமா வந்தேறிகள் ஆரியர் கொக்கரிப்பது?... சீதை வாழ வேண்டுமென்றாய்... இராமனைக் கொல்லாதே என்றாய்... அமைதிக் காப்பதா?... அழிந்து மடிவதா?... பொசுக்கும் நெருப்பிடத்தில், நாம் பொறுமைக் காப்பதா?... இனி பொறுப்பதற்கில்லை... பொசுக்கும் நெருப்பாகி நிற்கிறேன்... பொங்கும் வெள்ளமானேன்... பொல்லா நாடோடி ஆரியன் கழுத்தை சீவ, சினந்தெழுந்து விட்டது எனது வாளும்!... தாடகையை, சுவாகுவை, காமவல்லியை, அலைமுகிலை என அடுத்தடுத்து அவன் கொன்ற போதும் அடங்கிக் கிடந்தோம்... எம்மை அவனோ, சொரனையிழந்தோம் என நினைத்தான்... சொரனையிழந்தவன் தமிழன் என்பதால்தானே, இராமன் ஒளிந்து நின்று வாலியையும் கொன்றிருக்கிறான்!... சீதை வாழ்ந்தாலென்ன?... வீழ்ந்தாலென்ன?... எனக்கு என் தமிழ் மாண்புதான் பெரிது... இராமனை இனியும் வாழ விட்டால், நாம் தமிழர்கள் அல்ல!... ஆரிய பலிக்காக வளர்க்கப்பட்ட மிருகங்களாவோம் நாம்!... மன்னவா, தமிழனை வீரனாக சாகவிடு!...
இராவணன் :
மகனே!...
சேயோன் :
ம்... பேச்சு வேண்டாம்... இராமனைக் கொல்வதே இனி எனது உயிர் மூச்சு!... திட்டம் வகுத்திடு!... ஆரியக் கொட்டம் அடங்கிடவே!...
( ஆவேசத்துடன் நூலரங்கை விட்டு சேயோன் வெளியேறுகிறான்...)
- திரை -
பாகம் : 3. காட்சி : 7. அசோகவனம்.
திரிசடை.
சீதை.
சேயோன்.
(திரிசடை நடனம் ஆடிடும் நளினத்திலும், அவள் வெளிப்படுத்தும் எழில் கலையின் நயனத்திலும், சலங்கையின் தாளத்திலும் எல்லையில்லா ஓர் அற்புதங் கண்டாற்போல், சீதை வியப்பு மிக, அமர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறாள்...
திரிசடையின் பாதம் தாளமிட-
சீதையும் அவ்வாறு தாளமிட முயற்சித்து வலியுற-
விரலசைவின் நளினத்தில் மனங்கவர்ந்த சீதை,
திரிசடையின் விரலசைவு போல், விரலசைவுக்கு முயற்சித்து, தோல்வி நிலையில் அமர்கிறாள்...
கண்ணசைவின் போது உதயமாகும் விழிக் கவிதையை வாசித்து-
சீதைத் தானும் கண்ணோரக் கவிதை எழுத முயன்று-
அது ஆந்தையின் ஓவியம் போல் வெளிப்படுவதாக, அவளே உணர்ந்து ஏக்க மூச்சு விடுகிறாள்...
திரிசடையின் நடனம் முடிந்துவிட்ட நிலையிலும், சீதை வியப்பிலிருந்து மீளாது இருக்கவே, திரிசடை சதங்கை ஒலிக்க நடந்து வந்து, சீதையைத் தொட-)
சீதை :
ஆகா!... திரிசடை, இதென்ன அற்புதம்?... மானிடப் பெண்களாலும், இப்படியோர் நடனம் ஆடவியலுமா?... உண்மையைச் சொல்!... நீ தேவலோகம் சென்று தானே இக் கலையைக் கற்று வந்தாய்?...
(திரிசடை சிரித்து)
திரிசடை :
தேவலோகமா?... இலங்கையின் நடனக் கழகத்தில் நான் கற்ற கலையிது!...
சீதை :
நடனக் கழகமா? அங்கு மந்திரம் அறிந்த முனிகளால் தானே கற்றுத் தரப்படுகிறது?...
(திரிசடை மேலும் சிரிக்கிறாள்...)
திரிசடை :
மந்திரமா?... வெளியில் சொல்லாதீர்கள்... உங்களுக்குப் பித்தமோ என்று நினைத்து விடுவார்கள்... நடனக் கழகத்தில் நடன ஆய்வாளர்கள் - நடனப் பகுப்பாளர்கள் எனப் பலப் பிரிவினர் உண்டு... குழந்தைக்கு மூன்றாம் பருவம் நிகழும் போதே, இங்கு சேர்த்து விடுவார்கள்!... தமிழ் நடனக்கலையில் பலவித நடனங்கள் உள்ளன!... ஆடலோடுக் கலையையும் சொல்லும் கலை எங்கள் நாட்டியத்தில் உண்டு!... ஆண் மகன் வேட்டைக்காரன் போல் பதுங்கி நின்று அம்பைப் பாய்ச்சுவான்... மான் மீதிலே அம்புப் பாய்ந்து, வீழ்ந்துப் பட்ட மான், வேதனையுறுதலை பெண் ஒருத்தி ஆடல் கலையில் காட்டுவாள்...
சீதை :
ஆகா!...
திரிசடை :
துள்ளாடல் என்றோர் நடனம்!... இது போர்க்களம் ஏகவிருக்கும் வீரன் நெஞ்சிலே போர் உணர்வுத் தூண்ட ஆடப்படுவது!...
சீதை :
போர்க்களம் செல்வோருக்கும் நடனமா?...
திரிசடை :
கொடு கொட்டிச் சேதம் என்றொரு வகை நடனம்!... ஆணும், பெண்ணும் விறுவிறுப்பாக ஆடுவார்கள்... தெய்வம், மந்திரம் என்றப் பேரில், ஆரியர் செய்யும் மோசடிகளை விளக்குவது கொடு கொட்டிச் சேதம் நடனம்!..
சீதை :
ஆகா!... அரும்பெருங்கலையல்லவா உங்கள் தமிழ்க் கலை!... இதனை ஆரியர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?... வேதம் படிக்கத் தகுதியற்ற சூத்திரர்களுக்குச் சொந்தமானது ஆடற்கலை!... நாட்டியக் கலையில் நாட்டம் கொண்டால், ஆரியருக்கு பாவம்தான் வந்தடையும் என்பார்கள்!... ஆடத் தெரியாதவனுக்கு மேடைக் கோணல் என்பது போலல்லவா இருக்கிறது ஆரியர்ப் பேச்சு!... ம்... இவ்வளவுதானா?... இன்னும் வேறு நடன வகைகள் இருக்கிறதா?...
திரிசடை :
நடனம் ஆடிக்கொண்டே சில வித்தைகளையும் செய்யலாம்... இந்தக் கலைக்கு நாங்கள் எடுக்கும் பயிற்சி மிக அதிகமாகும்... குடங்களைக் கோபுரம் போல் தலையில் அடுக்கி வைத்து ஆடுவோம்... ஆடும்போது தோளுக்கும், கைக்குமாய் குடங்களை எறிந்தும், ஏந்தியும் ஆடுவோம்... இந்த குடக்கூத்தினை காண்போருக்கு வியப்புத்தான் சூழும்... உம்மவர் கண்டால், மந்திரமோ என்று மயங்கி விடுவீர்கள்...
சீதை :
ஆகா!... இந்த ஆடலை ஆடிக் காட்டேன்... நானும் பார்க்கிறேன்...
திரிசடை :
இன்னும் சொன்னால் உங்களை நீங்களே மறந்து விடுவீர்கள்... குடைக்கூத்து என்றொரு ஆடல் பற்றிச் சொல்லுகிறேன்; கேளுங்கள்!... குறுக்காய்க் கயிறுக் கட்டி அதன் மீதில் ஏறிநின்று குடையிரண்டை கையில் விரித்து வைத்து ஆடுவோம் நடனம்!... இந்த ஆடலைக் காண்போருக்கு, மேகமிங்குத் தரையில் இறங்கி வருகிறதோ என்று விழிகள் விரிந்து வியப்பில் மூழ்கும்!...
சீதை :
கேட்கும் போதே வியப்பெய்தி என் விழிகள் விரிகின்றன... ஆகா!... அற்புதம்தான் தமிழ்க் கலைகள்!...
திரிசடை :
மற்போர் கேள்விப் பட்டதுண்டா?... மற்போரில் வீரர் செய்யும் காட்சியை ஆடல் மூலம் நாங்கள் செய்வோம்!... சிரிக்க வைத்து, சிந்தையை குளிரச் செய்யும்...
சீதை :
ஆடல் கலையின் வாயிலாக அனைத்தையும் சித்தரிக்க இயலும் என்றால், இந்தக் கலையின் உன்னதம்தான் என்ன!...
திரிசடை :
நெருப்பு சூழ அதன் நடுவே, நின்று ஆடுவது பாண்டரங்கம் எனும் ஒருவகை ஆடல்!...
சீதை :
நெருப்போடு ஆடுவதா?... தெய்வசக்தி இருந்தாலல்லவோ இதற்குசாத்தியமாகும்?...
(திரிசடை சிரிக்கிறாள்...)
திரிசடை :
தெய்வசக்தியா?... சிந்தனைத்திறன் என்றுசொல்லுங்கள்...துடியாடல் என்றோர் வகை ஆடல் உண்டு!...
சீதை :
அது என்ன ஆடல்?
திரிசடை :
நீரின்மீது படகுசெலுத்தப்படும்போது அசைந்திடும் படகின் நிலைகளையும், காற்றுக்கும், அலைக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் படகின் நிலைகளையும், ஆடல் மூலம் நாங்கள் செய்துக் காட்டுவோம்...
சீதை :
அற்புதம்... அற்புதம்... அந்தத் துடியாடலை எனக்கு எப்போது செய்துக் காட்டுவாய்?...
திரிசடை :
ஒவ்வொரு மாலையும் ஒவ்வொரு ஆடல்!
சீதை :
ஆகா!... வேண்டாம்; ஒரே மாலையில் எல்லா ஆடல்களையும் காட்டு!...
திரிசடை :
ஆயிரம் கண்கள் வேண்டுமே; அத்தனையும் பார்க்க!...
சீதை :
அம்மாடியோவ்!... நான் மீதிக் கண்களுக்கு எங்கே போவேன்?... இன்னும் வேறு ஆடல் வகைகள் உண்டா?... சொல்லு!... காதால் கேட்டாலே, கண்ணால் காண்பது போல் இருக்கிறது!...
திரிசடை :
பேடாடல் என்பதும் ஒருவகை ஆடல்தான்!... பெண் வேடம் அணிந்து பெண்களின் நளினங்களை ஆண்கள் சித்தரிப்பார்கள்!... பார்ப்போரின் சிரிப்பை அடக்கவே முடியாது... அலையோசைப் போல், சிரிப்போசை அரங்கினைக் கலகலத்துக் கொண்டிருக்கும்!... பேடாடல் கண்டு, சிலநாள் பலநாள் என நினைத்து நினைத்துச் சிரிப்பார்கள்...
சீதை :
மக்கள் வாழ்வோடு இயைந்தக் கலைகள்தான் உங்கள் கலைகள்!... மனதை மட்டுமா, மதியையும் குளிர வைக்குமே உங்கள் கலைகள்!...
திரிசடை :
மரக்கால் ஆடல் என்பதும், ஒருவித ஆடல்தான்!... நாற்கால் விலங்குகளின் குணங்களைச் செய்துக் காட்டுவோம்... விலங்குகளுக்கும் இத்தனை நுட்பமான குணங்கள் உண்டா என்று, காண்போரை வியப்பில் ஆழ்த்தும்!...
சீதை :
ஆ...
திரிசடை :
கல்நெஞ்சுக் கொண்ட ஆண்மகனையும் கனியச் செய்து, மயக்கமூட்டுவது பாலைக்கூத்து!... இந்தக் கூத்தினைக் கண்டு, மயங்கிய ஆண்கள்தான் எத்தனை எத்தனை...
சீதை :
ஆண்களை மயக்குவதற்கும் ஒரு ஆடல் உண்டா?...
திரிசடை :
ஆசையைத் தூண்டுவதற்கும் ஒரு ஆடல் உண்டு!... கடையம் என்று அந்த ஆடற்கலைக்கு பேர்!... காம உணர்வுகளைத் தூண்டி விடுவது கடையம் கலையின் நோக்கமாகும்!... கடையம் கலையை கண்ணுற்றால், காமம் நெஞ்சில் தானாகவே ஊறும்!...
சீதை :
எங்கும் கலைகள்... எதிலும் கலைகள்... அம்மம்மா!... தமிழ்க் கலைக்கு எல்லையே இல்லையா?...
திரிசடை :
எல்லைக்கு உட்பட்டதுதான் எமது கலைகள்!... ஆனால்; இதன் தோற்றத்திற்கு ஓர் எல்லையைக் காண்பதுதான் அரிது!... இந்தக் கலையை ஓர் அரிய செல்வமாய் காத்து வருகிறது, இலங்கையின் நடனக் கழகம்!... தமிழர் மட்டுமின்றி அயல் நாட்டவரும் இலங்கையில் நடனம் கற்கின்றனர்... அயல் நாட்டவருக்கு நடனம் சொல்லித்தர துணைக் கழகங்கள் உண்டு!... இதற்கெல்லாம் சிகரமாக முல்லைத் தீவிலே, நாட்டிய சோலையே உண்டு!...
சீதை :
கேட்கக் கேட்க அமுதம் பருகுவது போல் இருக்கிறது...
திரிசடை :
விந்தநாட்டிலே இயல் கழகம் இருக்கிறது... இந்தக் கழகம்தான் தமிழ்மொழி வளர்ச்சியுற, பலநிலை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது!...
சீதை :
தமிழ்மொழியை வளர்ப்பதா?... எனக்குப் புரியவில்லையே!... நீரூற்றி மரத்தை வளர்ப்பதுண்டு!... தீனியிட்டு பறவைகளையும், மிருகங்களையும் வளர்ப்பதுண்டு... மனிதன் சோறுண்டு வளர்கிறான்... ஆனால்; மொழியை வளர்ப்பதென்றால், எனக்குப் புரியவில்லையே!... மொழி என்ன ஒரு உயிரினமா?... அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லையே... அதை எப்படி வளர்க்க முடியும்?... அதன் தீனிதான் என்ன?... என்னவோ நடனக்கழகம் என்றாய்... இப்போது இயல் கழகம் என்கிறாய்!... என் மனதை ஏன் நீ இப்படிக் குழப்புகிறாய்?...
(திரிசடை சிரிக்கிறாள்)
திரிசடை :
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்றுதமிழ்...
சீதை
என்ன மேலும் குழப்புகிறாய்?.... பேசுகிற மொழிக்குள் மூன்று மொழிகளா?...
திரிசடை :
கலைகளை நாங்கள் மூன்றாகப் பிரித்துப் பேணுகிறோம்... இயல், இசை, கூத்து என முக்கலைகள் தமிழில் உள்ளன... இயல் கழகம், இசைக்கழகம், கூத்துக் கழகம் என தனித்தனியே கழகங்கள் அமைத்து, ஒவ்வொரு கலைக்கும் நாங்கள் இலக்கணம் வகுத்துள்ளோம்... இதனை இப்படித்தான் செய்தல் வேண்டுமென மரபு விதித்து, அதன்படி வழுவாத நெறியில் நின்று நாங்கள் தமிழையும், கலைகளையும் பேணுகிறோம்...
சீதை :
இதுப் போன்று நெறிமுறைகள் எங்கள் ஆரியத்தில் இல்லையே!...
திரிசடை :
இசைக்கும் இலக்கணம் உண்டு!... ஏழு சுரங்கள்... அந்த ஏழுசுரங்களில் இருந்துதான் எண்ணற்ற பண்கள் பிறக்கின்றன என்பதையும் எமது இசைக்கழகம்தான் கண்டுள்ளது...
சீதை :
ஓ...
திரிசடை
அய்வகை நிலங்களுக்கும், முல்லைப் பண், குறிஞ்சிப் பண், மருதப் பண், நெய்தல் பண், பாலைப்பண் என இனம் பிரித்து பண் கண்டது, எமது இசைக் கழகம்தான்!... காலைப் பண், நன்பகல் பண், ஏற்பாடுப் பண், மாலைப் பண், யாமம் பண், வைகறை பண் என ஆறு வகைக் காலத்திற்கும் பண் கண்டது எமது இசைக் கழகம்தான்!... தரணியில் ஆயிரம் இசைக் கழகங்கள் இருக்கலாம்... ஆயினும் என்ன?... இசைக்கு இலக்கணம் கண்டது எமது இசைக் கழகமே!... எமது இசைத் திறன் அறிய அயல்நாட்டவரும் வருகின்றனர்... கலையால், எமது தமிழினம் பெருமிதம் கொண்டு வாழ்கிறது...
சீதை :
தின்பது, தூங்குவது, ஆணும் பெண்ணும் இணைவதுதான் வாழ்க்கை என்றிருந்தேன்... கலையெனச் சிறப்பான ஒன்றுண்டு.... அது வாழ்வோடு இயைந்தது என்பதை உன் பேச்சின் மூலம் இப்போதுதானே உணர்கிறேன்...
திரிசடை :
இலக்கியம் படைப்பது இயல் கழகமென்றால், அந்த இலக்கிய நிகழ்வுகளை சொல்லாலும், செயலாலும் ஓர் அரங்கத்தில் விளக்கிடுவோம்!... அதுவோர் அற்புதக் கலையாகும்... அந்தக் கலைக்குக் கூத்து எனப் பெயருண்டு!... சிறுவர் முதல், பெரியோர் வரை கூத்தாடும் கலையை சீருடன் வளர்ப்பது நாடகக் கலையாகும்... நகை, அழுகை, உவகை, இளிவரல், வெகுளி, வீரம், வியப்பு, அச்சம் என எண் வகைக் கலைகளையும் மாந்தர் வாயிலாக நாடகக் கலை வெளிப்படுத்தும்!... முக்கலைகளில் நாடகக்கலைக்கு எமது மண்ணில் சிறப்பான சீருண்டு!...
சீதை :
இப்போது நீ ஆடிய நாட்டியமும்
திரிசடை
கூத்தில் ஒருவகையே நாட்டியமாகும்!...
சீதை :
ஆகா!... இதென்ன விந்தை!... மொழியென்றும், கலையென்றும் பிரித்து வாழ்வில் இவற்றையும் ஓர் அங்கமாக்கி இன்பம் நுகர்ந்துக் கொண்டிருக்கிறீர்களே... நினைக்க நினைக்க பேருவகையாக இருக்கிறது... எங்கள் ஆரிய இனத்தில், இப்படி எந்தவிதக் கழகமும் கிடையாது!... எந்தவித வரைமுறையின்றி பாடுவோம்; குதிப்போம்... உங்கள் கலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நாங்கள் செய்வதெல்லாம் காட்டில் வாழும் மிருகங்கள் இடும் கூச்சல் போல்தான் தெரிகின்றன... ஆரியத்தில் நாங்கள் வேப்பங்கிளையைக் கட்டிக் கொண்டு ஒருகையில் மதுவும், மற்றோர் கையில் மாமிசமும் ஏந்தி புசித்த வண்ணம் குதிப்போம்... சிலநேரங்களில் மதுமயக்கத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணுமாய் வரிசையாகக் கைக் கோர்த்து, கால் போன போக்கில் எகிறி, விரும்பும் திசையில் கைகளை வீசி வாயில் வரும் ஓசைகளை முழக்குவோம்... அதனை நான் அற்புதம் என்று நினைத்திருந்தேன்... இன்று உனது நடனத்தையும் பார்த்து, பாட்டையும் கேட்டப் பிறகுதான், பாடலுக்கும், ஆடலுக்கும் கலைத் தன்மை வேண்டும் என்று புரிந்தது... ஓ... நீ ஆடவில்லை!... என் கண்ணுக்கும் செவிக்கும் தந்தாய் நல்விருந்து!...
திரிசடை :
கண்ணுக்கும், செவிக்கும் மட்டுந்தானா?... கருத்துக்கும் நல்விருந்தாவதுக் கலை!... எமதுக் கலைகள் கருத்தினை அடைவதால்தான் எமது மக்கள் ஒழுக்கத்திலிருந்து வழுவாது உயரிய பண்போடு வாழ்கிறார்கள்!...
சீதை :
ஆமாம்; கலை மனதுக்கு விருந்தாகி, மனதை அமைதியுறச் செய்கிறது... நல்வழியையும் காட்டுகிறது... நல்வழியிருக்க, அல்வழியில் மனமும் செல்லாது... நீரோடையிருக்க, சகதியையும் மனம் நாடுமோ?... ஒளித் தரும் ஆதவனிருக்க, எரிநெருப்பெடுத்து எவர்தான் வெளிச்சம் செய்வர்?... ஒளி வாய்ந்த தமிழ் நடனக் கலையை எனக்கும் கற்றுக் கொடுப்பாயா, திரிசடை?...
திரிசடை :
ஆகா... எமதுக் கலையைப் பரப்புவதால் எம் நாட்டுக்குத்தானே பெருமை!... நாட்டுக்குப் பெருமை சேர்க்க விரும்பாத குடிமக்களும் உண்டோ?... உங்கள் மனம் எப்போதுமே மகிழ்ச்சியுடனிருக்க வேண்டும் என்பதுதானே பெரியப்பாவின் விருப்பம்!... சீதையின் மனதறிந்து விரும்புவனச் செய் என்று எனக்குக் கட்டளையிட்டுள்ளார்... ம்... வாருங்கள் இனி நீங்கள் ஆரிய சீதையன்று தமிழ் சீதை!... என்ன நான் சொல்வது சரிதானே!...
(சீதை சிரித்து திரிசடையை அணைத்துக் கொள்கிறாள்...)
சீதை :
கண்ணே, என் கண்ணே, திரிசடை!... என் வாழ்விலும் வசந்தக் காற்று வீசுமென்று நான் கனவிலும் கண்டதில்லை... இதோ பார்... நீயும், இலங்கையும், இலங்கை வேந்தனும் வசந்தமாய் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... இந்த வாழ்வு நீடிக்க வேண்டுமென்று நான் நாள்தோறும் ஆண்டவனை வேண்டுகிறேன்...
திரிசடை :
போதும் உங்கள் வேண்டுதல்!... வாருங்கள் நடனம் கற்றுத் தருகிறேன்... இலங்கை வேந்தன் இராவணன் பேர் பாடினாலே பாதம் தாளமிடத் தொடங்கி விடும்... ம்... இப்படி...
(நயம் பிடித்து காட்டி, திரிசடை பாடல் பாடத் தொடங்குகையில் -
சேயோன் வருகிறான் கோபத்துடன்...)
சேயோன் :
திரிசடை!
(பாடத் தொடங்கிய அதே வேகத்தில் நிறுத்தி,
சேயோனை நோக்கி...)
திரிசடை :
அண்ணா!...
சேயோன் :
ஆடலும், பாடலும்தான் நீக் கற்ற கலைகளோ ?...
திரிசடை :
வீரமும், தீரமும் என்னோடுப் பிறந்தக் கலைகள்தான்!...
சேயோன் :
நிலா மாடத்தில் தோழியர் இருக்கின்றனரா?...
திரிசடை :
இல்லை!
சேயோன் :
என்னைப் பின்தொடர்ந்து நிலா மாடம் வா; உன்னோடுப் பேச வேண்டும்...
(திரிசடை சீதையை நோக்கிவிட்டு, சேயோனைத் தொடர்கிறாள்...)
- திரை-
காட்சி : 8. நிலா மாடம்.
சேயோன்
திரிசடை
சீதை.
திரிசடை :
சங்கெடுத்து முழங்கி, தங்கத் தமிழ்ப் பெண்களையும், கருவங்கத்தில் வளரும் சிசுவையும் இட்டு வருவேன்; தமிழினத்தின் மானங்காக்க!... வேடிக்கையோ; வேதனையோ? எதுவென்று இதனைக் கூறுவது?... வாலி எனும் தமிழனைக் கொல்ல, சுக்ரீவன் எனும் தமிழன் ஆரியனைத் துணை சேர்த்துள்ளானே... பஞ்சுக்கு படுநெருப்புத் துணையோ?... தீபத்துக்கு புயற் காற்றும் துணையாகுமோ?.... நீருக்கு எரியெண்ணையும் துணையாகுமோ?... பூவுக்கு இடியும் துணை வருகிறதென்றால், வேடிக்கை என்பேனா; வேதனை என்பேனா?...
சேயோன் :
நேர்முனைப் போருக்கஞ்சி, கூர்முனை அம்புதனை மறைந்து நின்று ஏவுவதுதான் மாபெரும் போர்முறை என்று நினைத்தானவன் இராமன்!...
திரிசடை :
வாலியையோ அவன் கொன்றான்?... இல்லை; வான்புகழ்க் கொண்ட எம்மினத்தவரின் வீரத்துக்கு அவன் அறைக்கூவல் விடுத்துள்ளான்... ஆடலரங்கு மூடப்படட்டும்... பாடலரங்கு தாழிடப்படட்டும்... கலையரங்கு யாவும் காலவரம்பின்றி சாத்தப்படட்டும்... எம்குலப் பெண்களே, எண்திசையில் இருந்தும் வாருங்கள் என நான் அழைக்கிறேன்... சேயோனே, நீ ஆவண செய்!...
சேயோன் :
விண்ணதிர, விரிநீர்க் குலுங்க, மண்ணதிர, மறத்தமிழ்ப்படை அணி வகுத்திடும்... மாயமென்றோர் நாடகமாடி,தமிழ் மாண்புதனை சாம்பலாக்கிட துணிந்திட்டான் நாடோடி இராமன்!...
திரிசடை :
ஓ... வாலிக்கு வைத்தக் குறியல்ல அது!... இராமன் சுக்ரீவனுக்கு வழங்கியது மகுடமுமல்ல!... இன ஒழிப்புக்கு, பதித்த கல்வெட்டு!... சீதை வாழவேண்டுமென்பதற்காக சீராளன் இராவணன் இராமனுக்கு வழங்கியதோ மன்னிப்பு!... சிந்தை சிறிதுமில்லாத இராமன் செய்வதோ மகாதப்பு!... இராமனொரு பித்தனெனில் அவன் சித்தம் தெளிய மருத்துவம் செய்யலாம்... அவனோ, சிந்தை சிறிதும் இல்லாதவன் என்பதால், சிரசேதமே செய்யலாம்!... நேயத்துக்கு இங்கு இடமில்லை; மன்னன் இராவணனே தடுத்தாலும், முடிக்காமல் விடப்போவதில்லை என்று நீ, சேயோனே பறை முழங்கி போர்க்களம் சென்றிடு!...
சேயோன் :
தமிழன் சிந்தையில் நிலவாவான்.... சீறினால், கருநாகமாவான் என்பதை சிறுதும் அய்யத்திற்கு இடமின்றிக்காட்டுகிறேன்...
திரிசடை :
நஞ்சருந்தி மடிந்தாலும், ஆரிய வஞ்சகத்தால் மடிந்தோம் என்ற பழியை எம்மவர் பெற்றிடக்கூடாது... உயிர்க் கொடுத்து ஆரியச் சூதினைத் தடுப்பவன்தான் தமிழன்!... தோள் கொடுத்து ஆரியச் சூதினை வளர்ப்பவனானானே சுக்ரீவன்!... 'உதயக் கதிர் செந்நெருப்பை உமிழ்ந்து விட்டது... உறங்கியதுப் போதும்... விரைந்தெழு... சுடுநெருப்பாய் தேகம் மாறி, பகைவனை சுட்டெரித்திட சூளுரையோடு எழு; தமிழா!' என்றே படை நடாத்திடு, பால் முகம் மாறா சேயோனே!...
சேயோன் :
விழியிழந்து குருடாய் வாழினும், மொழியிழந்து அடிமையாய் வாழோம்... நெளியும் புழுவும் தன் இனத்தோடு ஒட்டி வாழ்கிறது... அந்தோ!... நெடுந்தோள் சுக்ரீவா, புழுவினும் கீழாய் நீ போனதேன்?...
திரிசடை :
மலைக் குலைந்தால் மடுவாகும்... சுக்ரீவா, நிலைக் குலைந்து நீ இன பலியானாயே... தன்மை கெட்டால் தண்ணீரும் புண்ணீராகும்... சுக்ரீவா, மதி கெட்டு சதியில் வீழ்ந்தாயே... தூண்டில் பட்ட மீனுக்கு, மறு வாழ்வும் உண்டோ?... ஆரியம் பட்ட சுக்ரீவா, நீ பட்டமரம் போலாவாயே!...
சேயோன் :
பட்டினிக் கிடந்தாலும், பண்பற்றச் செயல் செய்யோம்
திரிசடை ;
என்ற நெறியை முறித்த சுக்ரீவனை, தமிழனென்றும் பாராமல், தகணமாக்கிடு, சேயோனே!... இராமனுக்குத் துணை நிற்கும் ஆரிய முனிகளையும், ஆரியப் படைகளையும் வேரோடு சாய்த்திடு!...
சேயோன் :
ஆரியத்தை மிதித்தோமா?... ஆரியத்தை சீண்டினோமா... தமிழ் நெறிக்கு ஆரியர் அடிமையாகிட வேண்டுமென்று அடாத பணியில் இறங்கினோமா... அல்லவே!... ஆயினும் ஆரியர் இங்கு வந்து இன்னல் புரிந்து, தமிழர் உயிரைப் பறிக்கின்றனர் எனில், இதனை ஆரியத்தின் ஆணவம் என்பதா?... அறியாமை என்பதா?...
திரிசடை ;
எதுவாயினும் என்ன... அழிக்கப்படவேண்டியது , அழிக்கப் பட்டே தீர வேண்டும்... வந்தது நேரம்... வீணாய்ப் பேசிட நேரமில்லை!... நோயாய்த் திரியும் இராமனை, தீயாய் எரித்திட இதுவே தருணம்... முள்ளென்று தெரிந்தும், அகற்றாமல் நடைப் பாதையில் நாமதனை விட்டு வைப்பதா?... கொல்ல வந்த புல்லுருவியை நாம் சொல் கொண்டு சீராட்டுவதா?
(சிறுது நேரம் அமைதித் தவழ, பின்னர் சேயோன் பேசுகிறான்...)
சேயோன் :
கூடாது!... மெல்லியது நீரென்றாலும், அதுவே வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும் போது, அணையே உடைந்து விடுகிறது அல்லவா!...
திரிசடை :
ஆமாம்!...
சேயோன் :
துயரங்கள் பெருகும் போது, நெஞ்சமே உடைந்து விடும் போல உணர்ச்சி ஏற்படுவதில்லையா?...
திரிசடை :
துயர சுமையால், சிலர் மரணத்தையும் தழுவி இருக்கின்றனரே...
சேயோன் :
ஆமாம்!... திரிசடை, சீதையின் மீது இராவணன் இரக்கம் கொண்டதேனென அறிவாயா?...
திரிசடை :
பருந்தின் வாயிலிருந்து தப்பி வீழ்ந்த, சிறு பறவையினிடத்தில் கூட, பெரும் பரிவுப் பொழிவோன் அல்லவா, இராவணன்!... மலர்மீது வெயில் பட்டாலே, மனம் நோகும் வேளாளன் அல்லவா இராவணன்!... சிறுத் துயர்க் கண்டாலும், பெருந்துயர் போல் போக்கிடும் இராவணன், துயரக் கடலில் சிக்கிய சீதையை மீட்டதில் வியப்பென்ன?...
சேயோன் ;
செல்வச் செழிப்பில் திளைத்த சீதைக்கு சொல்லில் அடங்கா துயர் சூழ்ந்தது இராமனால்!... ஆயினும்; கொண்டவன் என்பதால் அவன்பால் அவள் நெஞ்சில் அன்பில்லாமல் இருக்காது... துயரம் தாங்காமல் உயிர் மாய்க்கத் துணிந்தவள் அல்லவா, சீதை!... இப்போது இராமனை சாய்க்கப் போகும் சேதியறிந்தால், கொண்டவன் மீதிருக்கும் பாசம் அவள் நெஞ்சில் சோகத்தை ஊட்டும்!...
திரிசடை ;
புரிகிறது, சேயோனே... சிறு எள்ளின் முனையளவும், சீதையின் நெஞ்சில் துன்ப சாயல்இருந்திடக் கூடாது என்பதுதானே, இராவணனது விருப்பம்!... துயரம் தாங்கமாட்டாள் என்றறிந்தும், இராமனை நாம் கொன்றால், அந்த சேதி, சீதையின் நெஞ்சைத் துயரத்தில் ஆழ்த்தும்!...
சேயோன் :
அதனால், நீ சீதைக்கு அன்பு மொழிகள் கூறி, அவள் கண்ணீர் சிந்தா வண்ணம் காத்திட வேண்டும்...
(அப்போது சீதை நுழைகிறாள்...)
சீதை :
நான் கண்ணீர் சிந்த மாட்டேன்...
(திரிசடையும், சேயோனும் சீதையை நோக்க)
சீதை :
என் பொருட்டு தயக்கம் வேண்டாம் சேயோனே!... திரிசடை, இங்கே பார்... இந்த அசோகவனத்தில் - நிலா மாடத்தில் - நின்று நீவிர் இருவரும் பேசியப் பேச்சுகள் யாவும் என் செவிக்கும் எட்டியது... உங்களையறியாமல், உள்ளே நுழைந்த என்னை மன்னித்து விடு திரிசடையே!... தங்கத்தால் செய்யப்பட்ட ஊசி என்பதால், நாம் நம் விழிகளில் குத்திக் கொள்வோமா?... எனது கணவன் என்பதால், அவனை உயிரோடு இருக்க விட்டால், இந்த உலகமே கேடாகி விடும்... அதனால்; தயவு செய்து இராமனைக் கொன்று விடுங்கள்...
(இருவரும் சீதையை வியப்போடு நோக்கிட)
சீதை :
என் மனம் இன்புற்று இருக்க வேண்டும் என்பதுதானே, இராவணன் விருப்பம்...
(இருவரும் மறுமொழி கூறாமல் இருக்க)
சீதை :
இராமன் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாழியும், என்னைத் துயரத்தில் ஆழ்த்தும்!... அவன் இறக்கும் நாளே, நான் இன்புறும் நாள்... தயவு செய்துக் கொன்று விடுங்கள்...
(சீதைக் கூறிவிட்டு வெளியேறுகிறாள்...)
-திரை-
பாகம் : 3. காட்சி-9. அசோகவனம்.
சீதை
திரிசடை .
(அசோகவனத்தில் நுழைந்த சீதை, மரமொன்றில் முகம் சாய்த்து அழுகிறாள்...
திரிசடை வருகிறாள்-
சீதை அழுதல் கண்டு, திரிசடை அமைதி ததும்பும் குரலில் பேசுகிறாள்...)
திரிசடை :
அன்பு எனும் ஆழ்கடல் மீதில்தான், சோகமெனும் புயல் உருவாகிறது... உங்கள் வாழ்வின் துயர நிகழ்வுகளை எங்களால் உணர முடிகிறது... நெஞ்சின் ஈரக்கசிவுகள் கண்ணீராகத் துளிர்த்து, சுகமில்லா வாழ்வை, சுவர் சித்திரமாக்குவதைஎங்களால் உணர முடியாமல் இல்லை... நீங்கள் அழவேண்டுமென்பது எனது விருப்பமல்ல!... அழுது ஓய்வதால் நெஞ்சில் சிறுது இளைப்பாறுதல் துளிர்க்கும்... உங்கள் கண்ணீரை விரல் கொண்டு நான் துடைத்து விடுவதால், உங்கள் நெஞ்சத்துயர் மடிந்துவிடப் போவதில்லை... சோகத்தை சுவாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் மனதைத் தேற்ற என்னுள் வார்த்தைகள் இல்லை... சோகத்தின் விளிம்பிலிருந்து உங்கள் மனம் மீளும் வரைக்கும் எனது யாழும் சோகப் பண் பாடும்!...
( யாழெடுத்து சோகம் இசைக்கிறாள்...
அழுது இருந்த சீதை, சலனமற்று நெடுநேரம் வெறித்து நோக்கியப்படி இருக்கிறாள்...
சீதை அழுகையை நிறுத்திய போதிலும், திரிசடைத் தொடர்ந்து சோகம் இசைத்துக் கொண்டிருக்கிறாள்...
மெல்ல அசைவுற்று சீதை, திரிசடையை நோக்கி நடந்துச் சென்று, யாழ் நரம்பு மீதில் சோகத்தின் ஓவியம்தனை இசைத்துக் கொண்டிருக்கும் திரிசடையின் விரல்களை சீதைத் தொடுகிறாள்...
இசைத் தடையுறுகிறது-
சிறிதுநேர அமைதிக்குப்பின் ...)
சீதை :
வேண்டாம் எனக்கு யாழிசை!...
திரிசடை :
இராமன் மீது நீங்கள் கொண்டிருப்பது வெறுப்பல்ல; நடிப்பு!
சீதை :
திரிசடை!
திரிசடை :
இராமன் உங்கள் கணவன் அல்லவோ... கண்வனை கொண்றிடுவர் எனும் துக்கம்தானே உங்களை அழ வைத்துக் கொண்டிருக்கிறது...
சீதை :
அய்யோ; திரிசடை, இராமன் கொல்லப் பட்டாலென்ன... வெட்டப் பட்டாலென்ன... தீண்ட வரும் அரவத்தை அடிக்காமல், பால் வார்த்திடு என்றுக் கூறப் பித்தமோ எனக்கு?...
திரிசடை :
மற்று, அழுவது எதனால்?...
சீதை :
இதுதானோ உலகம்?... திரிசடை, இதயமே இல்லையோ இராமனுக்கு... உடன் பிறந்தவள் போல் என்னைப் பாவிக்கும் இராவணன் மீது உற்றப் பழிச்சொல் கேட்டுப் பெற்ற வேதனைதானம்மா எனது அழுகை...
திரிசடை :
இராவணனுக்கு உற்ற அவப்பழியை, இராவணன் தனது நேரியத் திறத்தால் தீர்த்திடுவான்... நீங்கள் அழ வேண்டாம்... நீங்கள் மனம் நொந்து இருப்பது அறிந்தால், இராவணன் மிக வேதனைக் கொள்வான்... இராவணன் செயலில் நீங்கள் நேசம் கொண்டிருப்பது உண்மையானால், உதிரும் கண்ணீரைத் துடைத்து விட்டு, உவகைக் கொள்ளுங்கள் நெஞ்சில்!...
சீதை :
நெஞ்சம் வெடிக்கும் போல் நினைவுகள் அழுந்த, என்னால் எப்படி வேதனைப் படாமல் இருக்க முடியும்?...
திரிசடை :
உங்கள் வேதனை இராவணனுக்கு வேதனையூட்டும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்... துன்பத்தின் சுமையிலிருந்து உங்களை மீட்டது ஏன்?... இன்பத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!... இந்த அசோகவனத்தின் அமைதியைப் பெற, அயல்நாட்டவரும் வருகின்றனர்... அவர்களில் எவரேனும் உங்கள் அழுகையைக் கண்ணுற்றால், என்ன நினைப்பார்கள்?... இராமன் கூற்று சரியே என்று எண்ணங் கொள்ள மாட்டார்களா?... இராவணனது காமவெறிக்கு பலியாகி, சீதை கண்ணீர் உகுத்து வாடுகிறாள் என்று நினைக்க மாட்டார்களா?...
சீதை :
என்னை மன்னித்துவிடு!... ஆரிய சிறுக்கி என்னால் இராவணனுக்கு அவச்சொல் வந்துவிடக்கூடாது...
திரிசடை :
அப்படியானால்; நான் நடனம் சொல்லித் தருகிறேன்... உங்களால் மகிழ்ச்சியோடு ஆட முடியுமா?...
(சரியென தலையசைக்கிறாள்...
திரிசடை நயம் பிடித்துக் காட்ட-
சீதையும் அந்நளினத்தைச் செய்ய -)
-திரை-
காட்சி-10. அரசவை.
இராவணன்
சேயோன்
அமைச்சர் மூவர்
சாமரம் விசிறுவோர்
மாரீசன்
வீரர் இருவர்
அநுமன்.
அமைச்சர் (1) :
மன்னா, இலங்கைப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசுகளில் ஒன்றுதான் கிட்கந்தகம்!... கிட்கந்தகத்தில் நடந்துவிட்ட செயல்கள் குறித்து நாம் ஆராயாமல், இனி அவ்வாறு நடவா வண்ணம் காத்திட வேண்டும்...
சேயோன் :
அதற்காக, சுக்ரீவனதுச் செயலுக்கு ஒப்புதல் செய்ய வேண்டும்... அவனை அரசாளவிட்டு, வாழ்த்து முழக்கம் நாம் செய்ய வேண்டும்... அப்படித்தானே?...
அமைச்சர் (2) :
சுக்ரீவனை அரசாள நாம் ஒப்புவதா?... வெள்ளாடுகளல்ல கிட்கந்தக மக்கள்; வேங்கைக்குத் தீனியாக!... சுக்ரீவனுக்கு ஒப்பம் தந்தால், தப்புச் செய்யத் துணிபவனுக்கு ஊக்கம் தந்தது போலாகும்...
அமைச்சர் (3) :
சுக்ரீவன், தன்னை கிட்கந்தகத்தின் அரசனென அறிவித்து, முடிசூடிக் கொண்டுள்ளான்...
சேயோன் :
தவறு; இராமனால் முடிசூட்டப் பட்டுள்ளான்... ஆரியனுக்குத் துணைவனாகி முதல் தவறு செய்தான்... அவன் சொல் கேட்டு, வாலியைக் கொன்று மன்னிக்கவியலா தவறுக்கு ஆளானான் சுக்ரீவன்!... மாபேரரசாம் இலங்கையின் ஆண்மைக்கு அறைக் கூவல் விடுப்பதுப் போல் முடிசூடிக் கொண்டுள்ளான், சுக்ரீவன்!... இன்று காலை அங்கிருந்து வந்ததே ஒற்று... அந்த ஒற்றுத் தந்த சேதியென்ன?... 'சுக்ரீவன் சுடிசூட்டு நிகழ்ச்சியை மக்கள் புறக்கணித்தனர்... வாலி கொல்லப்பட்டதால், மக்கள் மிகு கோபம் கொண்டுள்ளனர்... முடிசூட்டு விழாவில் கலந்துக் கொள்ள இராமன் கிட்கந்தகம் நகர் செல்லவில்லை ' என்பதுதானே ஒற்றுத் தந்த சேதி!... மக்களின் கோபத்துக்கு தான் ஆளாக நேரிடும் என அஞ்சிய இராமன், கிட்கந்தகம் நகர் செல்லவோ, முடிசூட்டு விழாவில் கலந்துக் கொள்ளவோ இல்லை!...
அமைச்சர் (1) :
உண்மைதான்!... ஆயினும், இப்போது நாம் செய்யக் கூடியச் செயல், எதிர் வரும் நாட்களுக்கு பாடமாய்த் திகழ வேண்டுமென்பதே எனது அவா!... சுக்ரீவன் செய்தது தவறுதான்... அதற்காக, அவனது அரசுக்கு, தடை விதித்தால் அதனால் ஏற்படும் குழப்பங்களும் நம்மைத்தானே சேரும்?...
சேயோன் :
என்னக் குழப்பம்?...
அமைச்சர் (1) :
தடை விதித்தால், இராமன் சுக்ரீவனைத் தூண்டி விடுவான்...
சேயோன் :
என்னவென்று?
அமைச்சர் (1) :
இலங்கையை எதிர்க்கும்படி!.... எதிர்த்தால், தானும் ஆதிரிப்பதாக இராமன் சுக்ரீவனைத் தூண்டுவான்... நம்மை எதிர்க்க வரும் சுக்ரீவனை, நாம் எதிர்த்திடத் தயங்குவோமா?... நாமும் எதிர்க்கும்போது, அதன் விளைவென்ன?... நாமும் தமிழர்கள்... சுக்ரீவனும் தமிழன்!... தமிழன் தமிழனோடு போரிட்டு, தமிழன் தமிழனையே சாகடிக்கும் நிலை ஏற்படாதா?...
சேயோன் :
அதற்காக?
அமைச்சர் (1) :
சுக்ரீவனை மன்னித்து
அமைச்சர் (2) :
மன்னிப்பதா?... அது நமது மரணத்திற்கு ஒப்பானதல்லவா?... நச்சு மரத்தை எவரேனும் வளர்க்கச் சொல்வார்களோ?...
அமைச்சர் (1) :
கோபம் வந்தால், நமதுத் தலையையே நாம் கொய்துக் கொள்வோமா?...
அமைச்சர் (3) :
சுக்ரீவனை அரசாள விடுவது, முதலையை மீன்களோடு நீந்த விடுவதற்கு ஒப்பாகும்... எது எங்கு இருக்க வேண்டுமோ, அதனை அங்குத்தான் விடவேண்டும்... நீரில் ஓடும் கப்பலை, நிலத்தில் ஓட்ட முடியுமா?... தேரினை நீரில் ஓடவிட்டால் ஓடுமா?... சுய வாழ்வில் நாட்டம் வைத்த சுக்ரீவனை, ஆள விட்டால் கிட்கந்தகம் நாசமாகாதோ?...
அமைச்சர் ( 1) :
அவசரம் படுவதற்கா இந்த அவைக் கூட்டப்பட்டது?... அவன் செய்தது தவறுதான்!...
சேயோன் :
தவறுதான்; ஆயினுமென்ன?... தன்மைக் கெட்ட சுக்ரீவனை மன்னனாக்கி, தமிழினத்தின் முகத்தில் கரும்புள்ளிக் குத்தச் சொல்கிறீர்களா?... இப்படியொரு தலைக் குனிவு வாழ்வு வாழ, எம்மை எவன் நிர்பந்தித்தான்?... சுக்ரீவனோ ஆரியனுக்குத் துணைவன்... அவனை அரசாள விட்டால், ஆரியமல்லவோ மேலோங்கச் செய்யும்?...
அமைச்சர் (1) :
சரி; அரசுக்கு தடைவிதித்தால் மட்டும் சுக்ரீவன் நமக்குப் பணிந்திடுவானா?...
சேயோன் :
மாட்டானெனில், மாய்த்திடுவேன் அவனை, நானே!...
அமைச்சர் (1) :
மாய்ப்பதாலோ, சுக்ரீவனை ஏற்க மறுப்பதாலோ மாண்ட வாலி மீண்டிடுவானா?...
சேயோன் :
மாட்டான்!... ஆயினும்; இனிமேல் தமிழினத் துரோகம் தலை தூக்காமல், தடையாய் நமது செயல் அமையட்டுமே... சொல்லும், அணியும் நமது மண்ணிலே நமக்குச் சிறப்புத் தர, கள்ளமும், கபடமும் மலிந்த ஆரியத்திற்கு நம்மவர் பலியாவதா?... ஆரிய வேரறுத்து வருகிறேன், வேந்தே... சிறு படை மட்டும் எனக்குப் போதும்... அண்ணியிலே ஆரியம் நுழைந்திட, இலங்கை மண்ணிலே சலனமற்று நாம் இருப்பதா?... சூளுரைக்கும் என் மீது, சுடுநீர்ப் பாய்ச்சுவது போல் தடை விதிக்காது, வெல்படைத் தருக, வென்று வருகிறேன் சுக்ரீவனை... கொன்று வருகிறேன் இராமனை!...
அமைச்சர் (1) :
நன்று, சேயோனே, இனப் பகைவனும், இனத் துரோகியும் இரு வேறானவர் அல்லர்... இருவரும் கொல்லப்பட வேண்டியவர்களே!... உனது நேர்த் திறம் வாழியவே!... கூறாக்கி வா;... இராமன் மார் பிளந்து வா... எதிர் விளைவென்று நான் வினவியதெல்லாம், நின் எதிர்த் தொடுப்பறியவே!... மன்னா, ஒருமித்து இங்கு எழுந்தக் கருத்துப் படி, சுக்ரீவனது அரசுக்கு தடை விதித்திடுக... தக்க தருணமிதை நாம் தவற விடாமல், இராமனை மாய்த்திட சேயோனுக்கு ஆணை பிறத்திடுக!... எழுகவே எமதுப் படை... மலையளவுப் பகை வரினும், மடை திறந்த வெள்ளம் போல் சீறி வருகவே!...
(மாரீசன் வருகிறான்...)
மாரீசன் :
மன்னா, வாழி!... கிட்கந்தகம் தலைநகரிலிருந்து தலைமை அமைச்சன் அனுமன் தூதுரைக்க- சுக்ரீவனது தூதுவனாய் இங்கு வந்துள்ளான்!...
இராவணன் :
வரச்சொல்!...
( மாரீசன் செல்ல, அனுமன் உள்ளே நுழைகிறான்...)
அனுமன் :
இலங்கை வேந்தே, வாழி!... இனியவன் சுக்ரீவன் உரைத்த தூதினைத் தாங்கி, தூதுவனாய் வந்துள்ளேன்!...
இராவணன் :
நன்று!... வருக தூதுவனே!... நீ வந்ததன் நோக்கமும் யாம் அறிவோம்...
அனுமன் :
நான் கூறுமுன்னரே எமதுக் கூற்றினை அறிந்து விட்டதாய்க் கூறுவது விந்தை!...
இராவணன் :
மறைந்து நின்று அம்பு ஏவுவோனை உணராது, அதனை மாயவித்தை என்றுக் கூறும் மதி கெட்ட நீ, எம்மை விந்தை என்று பகர்வது எவ்வாறு?... ஒற்றரையும், ஒற்றாடி ஒற்றறியும் வல்லமை இலங்கை ஒற்றுத் துறைக்கே உண்டு!... இலங்கை மன்னவனே யாயினும், நானும் ஒற்றாடலுக்கு உட்பட்டவன் என்பதை நீ அறியாய்!... எமது ஒற்றுக்கு தப்பிய சிறுதுறும்பு கூட இலங்கையில் இல்லாதப் போது, நீயும் சுக்ரீவனுமா தப்பியிருக்க முடியும்?... நீ சுக்ரீவனது தூதுவனாய் வரவில்லை... இராமதூதனாய் வந்துள்ளாய்...
அனுமன் :
ஆமாம்!... நான் இராமதூதன் தான்!... இராமன், அவனொரு ஞானி!... அவனொரு தெய்வப் புருஷன்!...
சேயோன் :
அடேய், துரோகி!... நீ இனத்துக்கல்ல ; தமிழ் மொழிக்கே பகைவனாகி விட்டாய்... புருஷன்.... (ஓங்காரமாக சிரித்து) புருஷன்... வடமொழியும் உன் வாயில் தமிழோடு ஒட்டி வருகிறதே... அனுமனே, அறிவினை ஏன் இழந்தாய்?... ஆரியத்தை திணித்து, தமிழை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான் இராமன்!... இதற்கு நீ இப்போது பேசிய 'புருஷன்' என்ற சொல்லே சான்று!... இராமன் ஒரு ஞானி; இராமன் ஒரு இறைத்தூதன்; இராமன் ஒரு இறைமகன் என்று தமிழில் கூறிக் கொண்டுப் போ... 'புருஷன் புருஷன் ' அடேய் அனுமனே, ஆரியசொல்லட அது!... தமிழ் மீது ஆரியத்தை, சுமத்துவதற்கு நீ, உடந்தையாய் மாறுவாயானால், உன் உயிரைச் சுமந்து நிற்கும் உடலைத் தரையில் சாய்த்திடுவேன் இப்போதே...
(சேயோன் பாய்ந்து அனுமனை நெறிக்க)
இராவணன் :
சேயோனே!... (இராவணன் கூவுகிறான்)
(சேயோன் அமைதியாகிறான்...)
இராவணன் :
இனத்துரோகியாயினும், இங்கே இவன் தூதுவனாய் நிற்கிறான்... மனதில் கொள்!... இலங்கையின் மாண்பை சிதைக்காதே... அமைச்சரே, சேயோனின் செயல், அவை மீறியச் செயல் என்பதாலும், இலங்கைப் பண்புக்கு முரண்பட்டச் செயல் என்பதாலும், தூதுவனிடத்தில் பண்பு மீறிய குற்றத்திற்காகவும் இலங்கையின் நீதி முறைப்படி சேயோனுக்கு தண்டனை வழங்குங்கள்...
அமைச்சர் (1) :
நீதிவழுவா இலங்கை அரசு, சேயோனுக்கு மூன்றுநாள் கடுஞ்சிறை வாசம் விதித்திட பரிந்துரைக்கிறேன்...
இராவணன் :
முல்லைத்தீவின் கொட்டடியில் மூன்று நாள் கடுஞ்சிறை வாசம் விதித்து இந்த அவையின் தீர்ப்பாய் வழங்குகிறேன்...
( வீரர் இருவர் சேயோனை இட்டுச் சென்ற பின்னர்...)
இராவணன் :
கருமந்திகளோடுக் காட்டுப் புறத்திலிருந்த உனக்கு நாட்டுப் புறத்தில் வாழ நாட்டம் ஏற்பட்டதெனில், இலங்கைக் கோட்டைக்குள் வந்து எம்மை நீ கேட்டிருக்கலாமே... உடன்பிறந்தோனைக் கொல்ல, தந்தையின் உயிரைப் பறித்தானோடு உடன்பாடு கொண்டோனுக்கு உதவிப் புரிந்த இனத் துரோகியே!...
(அனுமன் பெருங்குரலில் சிரிக்கிறான்...)
அனுமன் :
பகல் கெடுத்த கருமேகம் பகலவனையே இருளரக்கனென்று கர்ஜித்ததாம்... குலங்கெடுத்தக் கொடியோனே... என்னை நீ இனத்துரோகி என விளிப்பது விந்தையன்றோ... கொண்டவள் இருக்க, கண்டவளைக் கொண்டு வந்து, கொள்கைப் பேசும் பேதையே, உனதுச் செயல் நெருப்பிலிட்ட பிணம் போல், நாடெங்கும் தீய நாற்றமடித்துக் கொண்டிருக்கிறதே... இழிச்சொல் ஏதும் இல்லா தமிழினத்தின் மீது பழிச்சொல் படர, பாவச்செயல் புரிந்த நீ என்னை இனத்துரோகி என விளிப்பது விந்தையன்றோ!... உன்னால் கடத்திவரப் பட்டவள் கன்னியா?... அல்லவே!... காரிகையவள் இராமானது பத்தினியல்லவா... உனது சம்சாரம் மூலிகையால் மயக்கப்பட்டு, இராமனால் தூக்கிக் கொண்டு போகப்பட்டிருந்தால், உனது கண்ணில் ஜலம் கொட்டியிருக்காதா?... அய்யோ, அம்மாவென்று அரண்டு புரண்டு ஊரெங்கும் ஓலம் செய்திருக்க மாட்டாயா?... ஸ்திரி லோலனே, நீ செய்த துஷ்ட்டக் காரியத்தால் தமிழனத்திற்கே கெட்டப் பெயர் வந்து விட்டது... நீயல்லவா இனத்துரோகி!...
அமைச்சர் (2) :
அனுமனே, ஆயிரம் குற்றம் கூறினாலும், தாங்கும் இதயம் எமக்கு உண்டு!... ஆனால்; தமிழில் சொற்களே இல்லை என்பது போல், நீ ஆரியச் சொற்களை கலந்துப் பேசுகிறாயே... இதனை எம்மால் தாங்க முடியாது... பிறமொழிச் சொற்களைத் தமிழோடு கலந்திட உனக்கு வெட்கமாயில்லை... நீ தமிழன் தானா?...
(அனுமன் சிரிக்கிறான்...)
அனுமன் :
நான் கிட்கந்தகம் நாட்டவன்... நான் தமிழனில்லை!... தமிழர்கள் எல்லோருமே முட்டாள்கள்!... ஆரியர்கள் அறிவாளிகள்... ஆரியர்கள் தெய்வப் புருஷர்கள்... ஆரியர்கள் ஆணடவனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்... அவர்கள் பேசுவது தேவபாஷை!... தேவபாஷையில் பேசினால், நமக்கு மோட்ஷம் கிடைக்கும்... தமிழ் ஒரு நீச மொழி!... தமிழ்ப்பாஷையில்
இராவணன் :
அனுமனே, அடக்கிப்பேசு!... தூதுவன் என்பதால் துண்டிக்காமல் விட்டேன் உன் தலையை!... நாவினனை அறுத்திருப்பேன் நலமிழந்தவனே... தமிழையோ நீ, நீச மொழி என்கிறாய்... எழுத்தின் ஒலிக்கும், ஒலியின் அளவுக்கும் இலக்கணம் கண்டுள்ளது எமது தமிழ்மொழி!... எழுத்தின் ஒலியிலும், ஒலியின் ஓசையிலும் இசை உறவாடக் கண்டு, இசையை உலகிற்கு ஈந்தது எமது தமிழ்!... கலையை. கவினுறு இசையை வளமாகக் கொண்டு மக்கள் வாழ்வோடு வளரும் மொழி எமது தமிழ்மொழி!...
அனுமன் :
ஆயினும் என்ன?... மக்கள் பேசும் பாஷைத்தானே தமிழ்ப் பாஷை!... ஆரிய பாஷை தேவபாஷையாகும்... அந்த பாஷையைப் பேசுவது, மந்திரத்தைப் பேசுவது போல!... தேவபாஷையை நேசமோடு பேசினால், மாயக்கலைகள் யாவும் தானாய் நம்மிடம் வளரும்... தேவபாஷையைப் பேசுவது, தேவனோடு பேசுவதற்கு ஒப்பாகும்!... வாலியை கொல்ல வானிலிருந்து மாயமாய் அம்பொன்று வந்ததே?... அந்த மாயவித்தைக்கு மூலமென்ன?... அதுதான் தேவபாஷையின் மகிமை!... தேவபாஷையில் பேசப் பழகப் பழக உலகமே தெரிகிறது... இந்த லோகத்தின் ஜீவராசிகளின் பிறப்பு, இறப்பு எல்லாவற்றிற்குமே காரணம் புலனாகிறது... இது தமிழில் முடியுமா?... தமிழில் பேசுகிற ஒருவன் ஒவ்வொரு நாளும் முட்டாளாகிக் கொண்டிருக்கிறான்... தமிழனுக்கும் காட்டுமிராண்டிக்கும் வித்தியாசமில்லை... காட்டுமிராண்டிக்கு எதன் மீதும் பற்றுதலோ - நம்பிக்கையோ - கிடையாது... தமிழனும் அப்படித்தான்!... கடவுள் என்றால் எது என்று கேட்கிறான்... கடவுள் இருக்கிறது என்பதை தேவபாஷை அற்புதமாய்க் கூறுகிறது... 'கடவுள் என்றால் என்ன?... கடவுள் என்பது என்ன?...' என்று மூளையில்லாமல் கேள்வி கேட்பவன் தமிழன்!... தேவபாஷைப் படித்தப் பிறகுதான் எனக்கு லோகமே புரிந்தது... சிந்தனை வளர்ந்தது... ஆரியர்கள் தேவர்கள்... அவர்கள் பூஜிக்கத் தக்கவர்கள்... ஆரியர்களை பூஜித்தால், நமக்கு மோட்ஷம் கிடைக்கும்... ஆரியனைத் திட்டினால் நமக்கு தேவலோகத்தில் இடங் கிடைக்காது!... ஆரியர்கள் தேவர்கள்!... தேவர்கள்... தேவர்கள்... அவர்களுக்கு மந்திரம் தெரியும்... மாயம் தெரியும்... எல்லாமே தெரியும்... அவர்களைப் பகைத்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது... ஆரியத்தை பூஜித்து, ஆரியர்களின் அடித் தொழுது வாழ்ந்தால் நமக்கு மறுஜென்ம பாக்கியம் கிடைக்கும்... இல்லையென்றால் நரகதண்டனைத் தான் நமக்கு!...
அமைச்சர் (1) :
மூடனே, பேசி விட்டாயா?... மறுப்பிறவி என்பதனை பேச்சளவுக்கு ஏற்றுக் கொண்டாலும், ஆரியனுக்கு அடிமையாய் வாழ்ந்து - ஆரியனுக்கு அடிமையாய் இறந்து - தேவலோகம் சென்று, மீண்டும் ஆரியனுக்கு அடிமையாய்ப் பிறப்பதைவிட; ஒரே பிறவி; அதுதான் மானிடப்பிறவி... மானிடனாகவே வாழ்ந்து, மானிடனாகவே மடிவதில்தான் மானமிருக்கிறது...
அமைச்சர் (2) :
அனுமனே, இராமன் மாபெரும் மந்திரவாதிதான்; நானும் நம்புகிறேன்!...
அனுமன் :
இந்த நாடே நம்பத்தான் போகிறது...
அமைச்சர் (1) :
ஆமாம்!... அவன் மாயசக்தி படைத்தவன்தான்!... உனக்கு விழிகளிருந்தும் உன்னைக் குருடனாய் உலாவ செய்திருக்கிறானே... அவன் ஞானிதான்!... உடல் வலிமையுள்ள உன்னை, உள்ளத்தால் கோழையாக்கி உள்ளானே சாதுரியமாக!.... அந்த சாதுர்யத்திற்கு மந்திரம் என்று பேரிருந்தால், நானும் நம்புகிறேன்... சொர்க்கம், நரகம், மறுப்பிறவி என மருந்துக் கரைத்து உன்னை உண்ணச் செய்து, உனது சிந்தனையை அழித்தானே இராமன்!... அவனது அந்தச் சாதுரியத்திற்கு மந்திரம் என்று நீ பேர் சொன்னால், நானும் நம்புகிறேன்!... உனது மூளையை மழுங்கச் செய்த அவனதுத் திறமைக்கு மாயம் என்று பேர் கற்பித்தால், நானும் நம்புகிறேன்; மாயமென்று... அவனை மந்திரவாதி என நம்புகிற நான், ஆரியமொழியைப் பேசுவதால் அறிவாளியாகலாம் என்று நினைக்கும் உனது அறியாமையை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்... முட்டாளே, ஏன்?... எதனால்?... எதற்கு?... என்ற கேள்வி ஞானத்தைத் துறந்த - ஆரிய வார்த்தைகளில் மதியிழந்த - நீ, தமிழனை முட்டாள் என்கிறாய்... தூதுவன் என்ற போர்வை போர்த்தி நீ நிற்பதால், உனது உடல் இன்னமும் துண்டாக்கப் படவில்லை... கூறு ; வந்ததைக் கூறி விரைந்தோடு விரைவில்... பேடிப் பயலே!... அனுமன் :
நானோ பேடி?... நெருப்பிட்டு சாம்பலாக்கிடுவேன் இலங்கையை!...
அமைச்சர் (3) :
சமயம் வாய்த்தால் உன்னை நீயே சாம்பலாக்கிக் கொள்வாய்... பித்தம் ஏறினால், பிதற்றுவது தெரியாதாம்... இடியே விழுந்தாலும் இமியும் அசையா இலங்கைக் கோட்டை மீது நெருப்பு வீசப் போகிறாயோ?... நெருப்பு உன்னையும் சுட்டுவிடும்... பட்டெனப் பறந்துப் போ, புறவெளிக்கு!... இருந்தால் இங்கே இரு கூறாக்கிட ஆணைப் பிறப்பிக்கப் பட்டு விடும்... உயர்ந்திருந்தாலும் குப்பைக் குவியல் மலையாகாது!... உடலில் வலுவிருந்தாலும், கோழை ஒருபோதும் வீரனாக மாட்டான்...அமைச்சர் (2) :
கருங்குரங்குகளைப் பழக்கி வித்தைக் காட்டும் வித்தகா!... அரசுக் கட்டிலென்பது சிறு பிள்ளைகள் கட்டும் வீடல்ல!... மண்ணுருட்டி, பிட்டுச் சுட்டு விளையாடுவது சிறுவர் விளையாட்டு!... அதனை நீ செய்தால், உன்னைப் பித்தனென்று கூறாமல், சித்தனென்றோ மொழிவர்?... அந்தப்புரத்து சுகவாழ்வே அரசாட்சியாகாது!... அனுமனே, மூவேளை உணவோடு நோயற்ற வாழ்வும் நல்க வேண்டும் மக்களுக்கு!... பகை வருமுன்னரே, மக்களுக்கு அரணும் தர வேண்டும்... பழங்காலத்தை மறவாமல் செய்து, வருங்காலத்தையும் உணரச் செய்ய வேண்டும்... எழுத்தறிவோடு உழவுத் தொழிலையும் ஏற்றமுறச் செய்ய வேண்டும்... விண்டுரைத்து விண்கோள்களையும் காட்ட வேண்டும்... வறுமையிலும் வாழ்ந்து, தமிழ் மான்புறச் செய்ய வேண்டும்... சோலைக்கு நிகராக, சாலைகளும் எழிலாய்த் திகழச் செய்ய வேண்டும்... பாலமுது பருகி, பாவையர் மடியில் தலைச் சாய்த்து, ஏவலனைக் கூவி அழைப்பதுதான் அரசாட்சி என்று அனுமனே, நீயும் சுக்ரீவனோடுத் தவறாய் கணித்தாய்!...
அனுமன் :
அறிந்தவன்தான் அரசாளவேண்டுமென்பது தமிழர் கூற்று!... தேவ பாஷையைத் தொழுது, ஆரியனை ஆலோசகனாய்க் கொண்டு நின்றால், அரசாளுதல் பெருங்காரியமல்ல!...
இராவணன் :
ஆரிய மொழியைக் கற்று விட்டாயா?...
அனுமன் :
ஆரியமொழி மட்டுமல்ல!... வேறெந்த மொழியையும் சூத்திரர்களாகிய நாம் கற்கக் கூடாது... கல்விக் கற்றால், நமது நாக்கினை நரகத்தில் அறுத்து விடுவார்கள்... மறுஜென்மத்திலும் ஊமையாகத்தான் பிறக்க நேரிடும்... எனவே, சூத்திரர்கள் நாம் கல்வி கற்பது தவறு!... இராவணன் :
என்று இராமன் கூறினானா?...
அனுமன் :
ஆமாம்!...
இராவணன் :
அப்படியானால், உனக்கு கல்விஞானம் தேவையில்லையா?...
அனுமன் :
கல்விஞானம் என்றால்?.... அது எதற்கு நமக்கு?... நமக்குத் தேவை சாப்பாடு... இராத்திரியில் தூக்கம்... தூக்கத்திற்கும் சாப்பாட்டிற்கும் இடையில் ஆரியனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்... இதுதான் மோட்சத்திற்கு வழி!... இதனை நானும் நம்பாமல் இருந்தேன்... இப்போது நம்புகிறேன்... இராமன் செய்துக் காட்டும் மாய வேலைகளைக் கண்டால், நீயும் நம்புவாய்!... தெய்வசக்திப் படைத்தவர்களால் மட்டுமே மாய வேலைகளைச் செய்துக் காட்ட முடியும்!...இராவணன் :
தெய்வசக்தி எவருக்கு வரும்?...
அனுமன் :
தேவபாஷை பேசுபவருக்கு!...
இராவணன் :
அதனைக் கற்று நீயும் தெய்வசக்தி பெறலாமே!...
அனுமன் :
சூத்திரர்கள் நாம் கல்வி கற்பது பாவச் செயலாயிற்றே... பாவமென்று தெரிந்தும் நான் கற்பேனா?... தேவபாஷை தெரிந்த ஆரியதேவனை துணைக்கு வைத்துக் கொண்டால், தேவபாஷையை நாமும் பேசுவதற்கு ஒப்பாகும்!... தெய்வத்திற்கு தேவபாஷையில் பேசினால்தான் புரியும்... அமைச்சர் (1) :
வேறு மொழிகள் தெய்வத்தின் மண்டையில் ஏறாதா?... பிறிதோர் மொழியைப் புரிந்துக் கொள்ளும் திறன் இல்லையென்றால், தெய்வம் என்பதற்கு பொருள் என்ன?...
அனுமன் :
நாசமாகிப் போவாய் நீ!... தெய்வத்தை நிந்திக்காதே!... இப்படி பேசுபவருக்கு நரகதண்டனை நிச்சயம் உண்டு!... தெய்வத்திற்கு தேவபாஷைதான் புரியும்!... தெய்வத்தோடு ஆரியர்கள்தான் பேசவேண்டும்... ஆரியர்கள் சொல்வதை நாம் செய்தால், தெய்வகிருபை நமக்கும் கிட்டும்!...
இராவணன் :
ஆரியர்களைத் தொழுது வாழாத தமிழர்கள் இறந்து விடுவார்கள் இல்லையா?
அனுமன் :
ஆமாம்!...
இராவணன் :
ஆரியத்தைத் தொழுது வாழும் நீ இறக்க மாட்டாய்; உனக்கு சாவும் கிடையாது?...
அனுமன் :
ஆமாம்!...
இராமன் :
வீரனே, இவன் கழுத்தை சீவு... மடிந்தப் பின் இராமன் இவனை உயிர்த்தெழச் செய்யட்டும்...
(அனுமன் அஞ்சுகிறான்...)
அனுமன் :
நான் தூதுவன்... என்னை அவமானம் படுத்துவது நாட்டுக்கு நல்லதல்ல!...
இராவணன் ;
இராமன் செய்த மாய வேலையால்தான் நீ ஆரியத்தை நம்பத் தொடங்கினாய்...
அனுமன் :
ஆமாம்!... ஆரியமே நிஜமானது!...
இராவணன் :
அப்படியானால், மாயசக்திக் கொண்டு, இராமன் என்னையும் கொல்லட்டுமே...
அனுமன் :
இராமனால் முடியும்!...
இராவணன் :
வாலி போர்க்களத்திற்கு அழைத்து வரப்படாமல், அவன் அரண்மனைக்குள் இருக்கும் போதே, மாய அம்பு ஏவி, வாலியை மாய்த்திருக்கலாமே?...
அனுமன் :
......................
இராவணன் :
பேசு, அனுமன்!... இராமன் என்னைப் பகைவனாகத் தானே பார்க்கிறான்... என்னோடு நேரில் போர் புரிந்து, அவன் என்னை சாகடிக்க அவனுக்கு திராணியிருக்கிறதா? தெய்வசக்திக் கொண்ட இராமன் இப்போது எங்கு இருக்கிறானோ, அங்கிருந்து மாய அம்பு ஏவட்டும்... இலங்கைக்குள் இருக்கும் என்னை அந்த மாய அம்பு வந்து மாய்க்கட்டும்... இயலுமா இராமனால்?...
அனுமன் :
...............................
இராவணன் :
ஏன் பேச மறுக்கிறாய்?
அனுமன் :
தெய்வச் செயல்கள் பற்றி, நாம் சந்தேகம் படக்கூடாது... தெய்வ நிகழ்வுகள் எப்படி நிகழ்கின்றன என்றும் கேள்வியும் கேட்கக் கூடாது... கேட்டால், ஆண்டவன் நமது நாக்கினை அறுத்திடுவான்... கனவில் வந்து கண்களை நோண்டி விடுவான்!...
இராவணன் :
இந்தக் கேள்வியைக் கேட்ட எனது நாவினை ஆண்டவன் இன்னும் அறுக்கவில்லையே...
அனுமன் :
செத்தப் பிறகு, நரகத்திற்குக் கொண்டுப் போய் உமது நாவினை அறுப்பான்!...
இராவணன் :
நீ சொல்வதிலும் நியாயம் இருக்கிறது... நாம் எப்படிப் பிறந்தோம்?... நம்மைப் படைத்தது யார்?... நம்மை ஆட்டுவிப்பவன் எவன்?... சிந்திக்கும் போது நமக்கு மேலே ஒரு ஆற்றல் இருப்பது புலனாகிறது... உண்மைதான்!... அந்த ஆற்றலை நிகழ்த்துபவன் எவன்?... அவன்தான் ஆண்டவன்!... இதனை முதன்முதலாக உணர்ந்து அதனை நமக்கு உணர்த்த முற்பட்டவன் ஆரியன்... இதனைப் புரிந்திடாமல், இதுகாறும் நாமும் அவர்களைப் பகையாகக் கருதி விட்டோம்... ஆரியனைத் தொழுவதால் நமக்கு அறிவுப் பிறக்கும்... உண்மைதான்!... ஆரியன் ஆண்டவனுடைய வழித் தோன்றல்... அதனால்தான், ஞானம் கொண்டிருக்கிறான் ஆரியன்!... அனுமனே, நானும் ஆண்டவனை அறிந்தேன்!... இப்போதுக் கூறு!... நீ சுமந்து வந்தத் தூது யாது?...
அனுமன் :
சுக்ரீவனது ஆட்சிக்கு ஒப்புதல் தருவதுடன், இலங்கைப் படையால் சுக்ரீவனுக்கு இன்னல் எதுவும் நிகழா உறுதிக் கேட்டு சுக்ரீவன் என்னை, தூதுவனாய் அனுப்பியுள்ளான்...
இராவணன் :
மேலும்?
அனுமன் :
மேலும், கூற நா கூசுகிறது!... இழிவுப் புரிந்திடஉமது இதயம் எவ்வாறு இடந் தந்தது?... நினைக்கவே மனம் கூசுகிறது... ஆயினும் கூறுகிறேன்... தூக்கிவரப்பட்ட சீதையை இராமனிடம் ஒப்படைக்க வேண்டும்... இல்லையேல்?
இராவணன் :
இல்லையேல்?
அனுமன் :
அதனை இபோது கூற இயலாது!...
இராவணன் :
ஓகோ!...
அனுமன் :
இப்போது, சீதையை ஒப்படைக்க வேண்டுமென்பது இராமனது கட்டளை!...
(இராவணன் சிரிக்கிறான்...)
இராவணன் :
இராமன் இலங்கைக்கு கட்டளை!... ( சிரித்தல் ) ஏற்றேன்... ஆம்; அவன் ஆரியன் என்பதால் அவன் கட்டளைக்கு பணிந்தேன்... ஆரியன் கட்டளைக்கு பணிய மறுத்தால், மோட்சத்தில் இடமில்லை; நரகத்தில் தண்டனை!... அனுமனே, சுக்ரீவனது ஆட்சிக்கு ஒப்புதல் தந்தேன்... இலங்கைப் படையால், ஏதும் இன்னல் விளைந்திடாது... சீதை விரும்பினால் அழைத்துப் போ... மீண்டும் கூறுகிறேன்; செவி மடு!... சீதை விரும்பினால் அழைத்துப் போ!...
(அனுமன் வியப்பெய்தி நிற்கிறான்...)
இராவணன் :
ஏன் மவுனமானாய்?...
அனுமன் :
எளிதில் யாவுக்கும் ஒப்புதல் தந்தாய்... வியப்பால் நானும் மவுனம் ஆனேன்...
இராவணன் :
ஆரியனைப் போல், நானென்ன வித்தைக்காரனா?... நானுன்னை வியப்பில் ஆழ்த்த!... கருத்திழந்து கனல் கக்கும் உன்னோடு நானும் சினம் உமிழ்ந்தால், நிகழ்வது அழிவுதானே?... ஆசைப்பட்டான் சுக்ரீவன் அரசாள; ஆளட்டும் அவனும் முடிசூடி!... விரும்பினேன் நானும் சீதையை, பெண்டாள!... எனது விருப்பம் அறிந்தும், சீதையை வேண்டுகிறான் மீண்டும் இராமன்!... இதன் பொருள் என்ன?... சீதையை நான் தரமாட்டேன் என்பதுதானே அவனது எதிர்ப்பார்ப்பு!... நான் தர மறுத்தால், சீதையைக் காட்டி என் மீது போர்த் தொடுப்பான் இராமன்!... இராமனோடுப் போரில் என்னால் வெல்ல இயலுமா?... மாய அம்பின் முன்னே, எனது தோள்வலி தூளாகாதோ... மாயங் கற்றவனோடு வீணாய் மோதி, மாய்வதைவிட இம்மண்ணில் மகிழ்ச்சியோடு சிறுநாள் வாழ்வதுதானே சிறப்பு!... அனுமனே, திறந்தாய் நீயும் என் விழியை; ஆரியத்தின் அற்புதங்கூறி!... நீ வாராதிருந்தால் மாய அம்போடு நானும் போராடி, தோல்வியுற்றிருப்பேன்... அதனால், அழைத்துச் செல் சீதையை!... ம்... புறப்படு! வீரனே,
வீரன் :
வேந்தே!
இராவணன் :
அசோகவனம் இட்டுச் சென்று, அநுமனுக்கு அழகி சீதையைக் காட்டிடு!...
(வீரன் முன் செல்ல-
அனுமன் பின் தொடர்கிறான்...)
இராவணன் :
அமைச்சரே...
அமைச்சர் (1) :
புரியவில்லை; புதிர்!...
இராவணன் :
புதிரல்ல; இதுவும் ஒரு போர்த் திறம்... ம்... ஆகட்டும்... சேயோன் தலைமையில் செருக்கு மிகு எமதுப் படை கிட்கந்தகம் போகட்டும்!...
அமைச்சர் (2) :
சேயோன் தலைமையிலா?... சேயோன் இருப்பது சிறை வாசத்தில் அல்லவா...
இராவணன் :
சிறையில் சேயோன் அடைக்கப் பட்டதாக அனுமனும், அவனைச் சார்ந்தோரும் எண்ணியிருக்கட்டும்... ஆகட்டும் பணி!... சேயோனது தலைமையில் படைப் பறக்கட்டும்... அதிரடிப் போர் ஏவி, ஆரியன் இராமனையும், சுக்ரீவனையும் சேயோன் சிறைப் படுத்தி வரட்டும்... தூதுவனாக வந்தவனை இங்கு சிறைப் படுத்துதல் அறமாகாது... எனவே, நமது எல்லை நீங்கி, சுக்ரீவனை அனுமன் அணுகியவுடன் அங்கேயே இவனும் சிறைப் படுத்தப் படல் வேண்டும்... வாலி மகன் அங்கதன் அரசியலறிவுப் பெறும் வரைக்கும், நமது கரன் கிட்கந்தகத்தின் அரசப் பணியாளட்டும்... ஆவண செய்திடுக... துளி நேரமும் சேதமாகாமல், துடிப்புடன் ஏவிடுக வீரர்களை!... பாழும் ஆரியம் பரவிடு முன்னர் பறந்தேவுக , சேயோனை!...
(இராவணன் அவை விட்டு நீங்க )
-திரை-
பாகம் - 3. காட்சி - 11. காட்டுப்பாதை.
அனுமன், வீரர்.
(குதிரை குளம்படியோசையைத் தொடர்ந்து...)
வீரன் :
அனுமனே, இங்கேயே நில்!
அனுமன் :
அசோகவனம் வந்து விட்டதா?
வீரன் :
இன்னும் சிறு தொலைவில் உள்ளது... குதிரையை இங்கேயே கட்டி வை!...
வீரன் :
அனுமனே, இதோ இவ்வழியே சென்றால், சிறு தொலைவில் அசோகவனம் உள்ளது...
அனுமன் ;
குதிரையில் சொல்லக் கூடாதா?...
வீரன் :
கூடாது!... குதிரைப் பயணம் இவ்வெல்லைக்கு மேல் தடைச் செய்யப் பட்டுள்ளது...
அனுமன் :
ஏன்?...
வீரன் :
அசோகவனம் ஓர் அமைதிவனமாகும்... இனபஞ்சூழ்ந்த இனிய வனம்!... இயற்கையில் எழும் ஒலிகள் கூட, அங்கு இதமான ரீங்காரமாகத் திகழும்... வேறு ஓசைகள் இயற்கை சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என்பதால், குதிரைப் பயணங்களும், வேறு வாகன ஓட்டங்களும் இவ்வெல்லைக்கு மேல் தடைச் செய்யப் பட்டுள்ளது!...
அனுமன் :
அப்படியா?... நான் தவறாய் நினைத்தேன்... காட்டுப் பாதையில் என்னைத் தனியே தவிக்க வைப்பதாக நினைத்தேன்...
வீரன் :
வந்தாரை வாழ வைக்கும் தமிழன், போவாரைத் தவிக்கவிட மாட்டான்... சரி; நீ புறப்படு!...
அனுமன் :
நீ?
வீரன் :
அதோ அந்தச் சத்திரத்தில் ஓய்வுக் கொண்டிருக்கிறேன்... இந்தா ஓலை!
அனுமன் :
ஓலை எதற்கு?
வீரன் :
நுழைவு வாயிலில் எமது காவலர் இருப்பர்... காவலரிடம் இதனைக் காட்டினால், சீதையை சந்திக்க வழிவிடுவார்!...
(ஓலையைப் பெற்றுக் கொள்கிறான்...)
வீரன் :
அனுமனே, நீ திரும்பி வரும் வரைக்கும், நான் சத்திரத்தில் இருப்பேன்... நன்று: சென்று வருக!...
( அனுமன் காட்டுப் பாதையில் நடக்க-
வீரன் சத்திரம் நோக்கித் திரும்புகிறான்...)
-திரை-
பாகம் : 3. காட்சி : 12. அசோகவனம்.
திரிசடை,
சீதை,
வீரன்,
அனுமன்.
(திரிசடை யாழ் இசைத்துக் கொண்டிருக்கிறாள்...
உச்சநிலையில் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள் சீதை!
ஆட்டத்தின் சுழற்சிக்கு ஈடுகொடுக்க இயலாதப் பாதம் பிணைந்து இடற-
யாழ் மீது வீழ்கிறாள் சீதை!
இசை நிற்கிறது...
யாழின் விளிம்புப் பட்டு, சீதைக்கு காயம் ஏற்பட்டு, இரத்தம் வடியக் கண்ட திரிசடை-
சீதையைத் தாங்கிப் பிடித்து, துடித்திடும் உள்ளத்தோடு மெல்லத் தரையில் கிடத்துகிறாள்...
வேகமாய் ஓடிச்சென்று, மூலிகையோடு வருகிறாள்...
மூலிகையைக் கசக்கி, காயத்தின் மீது வைத்து, கையோடு கொண்டு வந்திருந்த துணியால் கட்டு இடுகிறாள்...
எழுந்தமர்ந்த சீதை, )
சீதை :
திரிசடை, கண்ணே... யாழ் மீட்டு!... மீண்டும் நான் ஆடுகிறேன்...
திரிசடை :
வேண்டாம்; இளைப்பாருங்கள்!...
(சீதை விரக்தியோடு சிரிக்கிறாள்... )
சீதை :
எரியும் நெருப்புக்கு நிழல் எதற்கு?
திரிசடை :
நெருப்பெரித்த நெடும் புண்ணுக்குத்தான் நிழல் செய்கிறேன்...
சீதை :
நிழல் மீதே இடி வீழுமே...
திரிசடை :
இடி விழுந்தாலும் தாங்கி, தன்னை அழித்து உம்மைக் காப்பான் இராவணன்!... கலங்காதீர்கள்!...
சீதை :
மண்ணுயிர்க்கெல்லாம் ஆழிபோல் திகழும் இராவணன் மீது இடி விழ, நான் வாழ்வதா?... என் வயிற்றுப் பசிக்காக, என் கண்ணை நான் நோண்டி தின்பதா?... கடவுளே, நிழல் தரும் மரத்துக்கு நானே நெருப்பாவதா?... இப்படியோர் வாழ்வு வாழத்தான் என்னை நீ படைத்தாயா?...
( சீதை அழுகிறாள் )
சீதை :
இருப்பதும், இறப்பதும் ஒன்றுதான்!... கண்ணே!... திரிசடை, வழியொன்று கூறு; உயிர் மாய்த்திட!... என்னால் இயலவில்லையே இதயத்தில் சுமையோடு வாழ!... ஆயிரம் ஆறுதல் கூறினாலும், நெருப்புப் போல் நெஞ்சு வேதனையால் சுடுகிறதே...
(தொடர்ந்து அழுகிறாள்...)
திரிசடை :
உங்கள் மகள் போல் நான்!... என்னால் இனி என்ன பேச முடியும்?...
சீதை :
எவள் பெற்றாளோ என்னை?... நானறியேன்!... பெற்றவள் என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?... இதுதானோ விதி?... விதியே, உனது கொடுமைக்கு நான்தான் கிடைத்தேனோ?... காட்டிலே கடும் பாறைக்கு இடையிலே என்னைக் கிடத்திவிட்டு ஓடி விட்டாள் என்னைப் பெற்றவள்!... நாயோ, நரியோ, பேயோ, பிசாசோ, காகமோ, கழுகோ என்னைத் தின்றிருக்கக் கூடாதா?... கடுந்துயர் இன்று என்னை வாட்ட, கண்ணீர்க் கடலில் சிக்கித் தவிக்கிறேனே... இந்நிலை நானடைய, என்னைப் பெற்றவள் என்னை கொல்லாமல் விட்டதால் தானே... வேட்டைக்கு வந்த சனகன் சாகக் கிடந்த என்னை, தூக்கிப் போனான்... குழந்தையில்லா துயரோடு திரிந்த சனகன், என்னைப் பெறற்கரியப் பெருஞ் செல்வமாய்ப் போற்றி வளர்த்தான்... அவன் காதில் நான் படும் வேதனை விழுந்தால், இடிபட்ட மரம் போல் நொடியில் வெந்து போவானே... என்னைத் தூக்கி வளர்த்ததால் அல்லவா, என் வேதனை சனகனையும் தாக்குகிறது...
திரிசடை :
அசோகவனத்துக்கு அன்போடு உங்களைக் கொண்டு வந்தது ஏன்?... மரணம் நெருங்கினாலும், மனதில் வேதனை நெருங்காது... மலையே குலைந்தாலும், மன அமைதிக் குலையாது... வானமே வெடித்தாலும், அசோக வனத்தின் அமைதி சிதறாது... மனதில் இன்பம் இல்லாதவர்க்கு அன்பும், அமைதியும் அசோகவனத்தின் அருமருந்துகள்!... துயரத்தின் விளிம்பைக் கூட உமது நெஞ்சம் தொட்டுவிடக் கூடாது என்பதுதானே இராவணனது விருப்பம்!... இன்பம், துன்பங்களை கடந்த ஓர் வாழ்க்கை வாழ நம்மால் முடியும்!... மனதோடு நாம் வாழ்வதை விடுத்து, நம்மோடு மனதை வாழச் செய்தால், அந்த வாழ்க்கைக்கு ஈடேது?... மனதை ஆளும் சூழ்நிலை அசோகவனத்தில் மட்டுமே உண்டு!...
சீதை :
முடியவில்லையே, திரிசடை!... மணலைக் கயிறாக்கி, கயிற்றில் ஏணிக் கட்டி வான்முகடு செல்லச் சொல்கிறாயா?... வானத்தை நான்காய் மடித்து, நெடுங்கடலுக்குள் ஆழ்த்தச் சொல்கிறாயா?... அவைகள் கூட எளிதாக இயலும் போலிருக்கிறதே... ஆனால்; மனதை ஆள இயலாத மண்பாவை ஆனேனே, நான்!...
திரிசடை :
கண்ணீர் சிந்தி, கதறியழுது, நெஞ்சுத் துடிக்க விம்மி நின்றால்தான் வேதனையால் சூழப்பட்டிருக்கிறோம் என்று பொருளாகும்!... இல்லையா?... மரம் என்று கூறுகிறோமே... அந்த மரத்திற்கும் வேதனையுண்டு... வாய்ப் பேசவோ, கண்ணீர் சிந்தவோ, கதறித் துடிக்கவோ இயலாத அந்த மரத்திற்கு நீர் வார்க்காமல் இருந்து விட்டால், பசியால் வாடும் மரத்தின் வேதனையை எதனோடு ஒப்பிடுவது?... வாயிருந்தால், அதுவும் உங்களைப் போல் ஓலம் செய்யுமே?... ஓலம் செய்யாமல் நிற்கும் என்னை மரம் என்றோ, எனக்குள் வேதனைகளே இல்லை என்றோ கூற முடியுமா?...
சீதை :
திரிசடை
திரிசடை :
இவ்வுலகில் நாம் மட்டுமே துயரம் படுவது போல் அரற்றி நிற்பது சரியோ?... சுட்டெரிக்கும் சுடுவெயிலைத் தாங்கி, சுகமான நிழலைத் தரும் மரத்தின் உணர்ச்சிக் கூட நமக்கில்லையே?... நம்மைப் போல் பிறருக்கும் துயரம் இருக்குமோ என்று சிறுது நேரம் சிந்திப்போமானால்; நமக்கு மட்டும் துயரமா என்பதை அறியலாமே... எந்த மண்ணை வெட்டுகிறோமோ, அதே மண்தானே நம்மைத் தாங்குகிறது... எந்தத் துயரம் தாக்குகிறதோ, அதே துயரத்தைத் தாங்கும் வலிமை மனதுக்கு வேண்டுமல்லவா... துயரம் படும்போதிலே, ஆறுதலுக்காக உங்கள் நெஞ்சம் ஏங்குவது போல் எல்லா நெஞ்சிலுமே ஏக்கம் இருக்கும்... திரி எரிவதால்தான் நமக்கு ஒளிக் கிட்டுகிறது... அதனுள்ளே புதைந்து கிடக்கும் உண்மையை கொஞ்ச நேரமாவது படித்துப் பார்த்ததுண்டா?... கொஞ்சம் செவி மடுத்து, விழித் திறந்துப் பாருங்கள்... வேதனையில்லாத வீடே இல்லை... விளக்கின் ஒளியைப் போல், ஆறுதல் மொழி சிறுதுக் கூறுங்கள்... துயரம் உங்களுக்கு மட்டுமில்லை; பிறருக்கும் உண்டு!... இதைப் புரிந்து கொண்டால், கண்ணீர்ப் பெருக்கும் கதை தோற்றுவிடும்...
சீதை :
திரிசடை, என்னை மன்னித்து விடு!... வயதில் நீ சிறியவள் என்றாலும், சொல்லாடி என்னை சிறியவளாக்கி விட்டாய்... நிழலின் சுகத்தை மட்டுமே, நான் கண்டுக் கொண்டிருந்தேன்... நிழலுக்காக மரம் தாங்கும் வேதனையை நான் தெரியாமல் விட்டேன்...
திரிசடை :
தமிழ்த் தாயென்று தமிழ் மக்களால் புகழப் பட்ட தாடகைத் தாய் கொல்லப்பட்ட சேதி கேட்டு, உள்ளம் உள்ள எல்லாருமே துடித்தோம்... துவண்டோம்... கதறினோம்... கண்ணீர் சிந்தி இராவணனே கனிந்துருகினான் என்றால், அந்த வேதனையை நான் எந்த மொழியால் கூறுவேன்?... அதே நாளில் சுவாகுவும் கொல்லப் பட்டான்... மலர்மீதில் வெயில் பட்டாலும் மனம் நோகும் இராவணன் தன் தங்கை காமவல்லி, கண்டந்துண்டமாக வெட்டப்பட்டாள் ; அலற அலற அங்க சேதம் செய்யப்பட்டாள் என்ற சேதி கேட்டு அவன் துடித்தத் துடிப்பை, கண்களில் இரத்தம் சிந்திச் சொன்னாலும் ஈடாகுமா?... இந்த வேதனைகளை எல்லாம் நானும் நெஞ்சில்தான் வைத்திருக்கிறேன்... நானும் உங்களைப் போல் கதறி கண்ணீர் உகுத்தால்தான் எனது நெஞ்சமும் வேதனைக் கொண்டிருக்கிறது என்று உங்களால் உணர முடியும்; அல்லவா?... என் கண்ணில் சிறுதூசி பட்டாலும், தன் கண்ணில ஊறுபட்டது போல் துடித்திடும் சேயோன், இன்று சிறையில் வாட நானும்மோடு பாடி நிற்கிறேன்... நானும் நெஞ்சம் வேதனையில் இருக்கிறேன் என்று கண்ணீர் சிந்தி உம்மிடம் கதறி அழவா?... கூறுங்கள்!...
சீதை :
வேண்டாம்!... திரிசடை, கண்ணே!... வேண்டாம்... நான் ஒரு பாவி!... என்னால் அல்லவோ உனக்கும் வேதனை?... இராமனால் நான் மட்டுமே வேதனையால் மடிந்துக் கொண்டிருப்பதாக நினைத்தேன்... அம்மாவோவ்... அந்தக் கொடியவன் என்னை மட்டுமா அழ வைத்தான்?... தமிழ் நெஞ்சிலும் அல்லவா முள் குத்தினான்... திரிசடை, என்னால்தானே சேயோனும் சிறை புகுந்துள்ளான்... என்னைக் கடத்திச் சென்றதாக இராவணன் மீது பொய்க் குற்றம் சுமத்தி, என்னை மீட்க அநுமனை இராமன் ஏவியுள்ளான்... அநுமனை எதிர்த்த சேயோனுக்கு சிறையல்லவா பரிசாகக் கிடைத்தது... இதற்கெல்லாம் பொருட்டு நானல்லவா... நான்... நான்... அய்யோ ... திரிசடை...
(சீதை தேம்பி அழுகிறாள்...
அப்போது-
வீரன் வருகிறான்...)
வீரன் :
வணக்கம், இளவரசியாரே!... அமைச்சகத்தின் ஓலையிது!...
(திரிசடை ஓலைதனைப் பெற்று, மனதோடு வாசிக்கிறாள்...
.பின்னர்- )
திரிசடை :
வந்துள்ளானா?
வீரன் :
ஆமாம்!...
திரிசடை :
அவனே வந்துப் பேசி அழைத்துச் செல்லட்டும்... சரி!... நீ போ!...
வீரன் :
தாங்கள்?...
திரிசடை :
ந... நானும் இருக்கக் கூடாதல்லவா?... ஆமாம்!... நான் மேல் மாடம் போகிறேன்... அவனை இங்கே அனுப்பு...
( வீரன் செல்கிறான்... திரிசடையும் மேல்மாடம் நோக்கி சொல்லுகிறாள்...
சீதை அழுதுக் கொண்டிருக்க -
அநுமன் நுழைகிறான்...)
( உள்ளே நுழைந்த அநுமன், சீதையின் தாள் பணிந்து...)
அனுமன் :
சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்...
சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்...
சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்...
(அனுமன் ஓயாது முனுமுனுத்திருக்க, கேவுதலை நிறுத்திய சீதை, அனுமனை ஏறிட்டு நோக்குகிறாள்...)
அனுமன் :
'பூவுக்கு மகளாய்ப் பிறந்த பூந்தேவியே!... ஞானச்சுடரில் உதித்த அருள்விளக்கே!... மாதர்க் குல மணி முத்தே!... ' என உம்மை சீராட்டி, உம் நினைவால் பாடல் செய்து, நெஞ்சில் உம்மைத் தாலாட்டியிருக்கும் சிறிமான் இராமபிரானின் தூதுவன் யான்!... அநுமன் என்பது எனது நாமம்!... உமது அடித் தொழுதிட வந்த அடிமை நான்!... துணையிழந்த மான் போல், துயருறும் இராமபிரான், கண்ணீர் சிந்தி கலங்கி நிற்கும் உமதுக் கோலம் கண்டால், நெருப்பில் நெய் வார்த்ததுப் போல் அவர் துயர் பெருகாதோ?... 'மணநாளில் நான் மங்கை சீதையின் மடியில் முகம் புதைத்து, தொடையில் விரல் தடவி, இடையில் படம் பார்த்து இருக்க, தேவ சுகம் தந்த சீதையை நான் இழந்தேனே' என்று அவர் அழுவார்!... அவர் அழும் நிலையை நான் கூற, நீங்கள் கேட்பதா?... 'காடேகி , கடும் புதரில் துயில நேரிட்டபோதும், இளங்கனி சீதையின் எச்சில் பருகி மகிழ்வேன்... ஏந்திழை எனக்குப் பின்னழகுக் காட்டி புன்னகைப்பாள்... முன்னழகில் நான் முகம் தோய்க்க, அவள் சிணுசிணுப்பாளே... அந்த சிங்காரியை நான் துறந்துத் துடிக்கிறேனே...' என்று அவர் அழுவார்!... அவர் அழும் நிலையை நான் கூற நீங்கள் கேட்பதா?... 'முலைகளிரண்டிலும் கலையெழுதி, என் கண்ணெதிரில் சீதை வர, நான் சிந்தையிழந்து சிற்பமாய் நிற்பேன்... சிறு இடையசைத்து வந்து சீதை, என் நெஞ்சில் சாய்வாளே... சித்திரம் வரைந்த முலைகள் என் மார்பில் படர, நான் மதுவுண்ட வண்டாகி வைதேகி மீது மயங்கி சாய்வேன்... எனை மயக்கியவள் இன்று பிரிந்தாளே' என்று மார்புத் தடவி அவர் அழுவார்... அவர் அழும் நிலையை நான் கூற, நீங்கள் கேட்பதா?... 'சீதா பிராட்டியின் அல்குலை அனுதினமும் நான் பூஜிப்பேன்... அந்த இன்ப தெய்வத்தையோ நான் இழந்தேன்' என்று அலறுவார்... அதனை நான் கூற நீங்கள் கேட்பதா?...
சீதை :
ஏனிங்கு வந்தாய்?...
அனுமன் :
இராமபிரான் தந்த கணையாழியிது!... தாயே, கண்டிடுக... கண்ணீர் நீக்கிக் கவலையை விடுக!...
(கணையாழித் தருகிறான் அனுமன்... சீதை அதனைப் பெறாமல்)
சீதை :
கணையாழியல்ல; எமவாளி!... நீ இராம தூதுவன் அல்ல... நீ எம தூதன்!... போய் விடு; இங்கிருந்து!...
அனுமன் :
தாயே... தெய்வமே... சீதா பிராட்டியே!... இராமதூதுவன் என்னை எம தூதுவன் என்பது ஏனோ?... கணையாழி கண்டிட்டால், சீதை கனிந்துருகிடுவாள் என்றுக் கூறிய இராமபிரானின் கூற்றும் பொய்யோ?...
சீதை :
பொய்யோ... மெய்யோ... போய்விடு; இங்கிருந்து!...
( சீதை அழுகிறாள்...)
அனுமன் :
சீதாப்பிராட்டியாரே, இழிபிறவிகள் நாங்கள்தான் அழப் பிறந்தவர்கள்... தேம்பித் தேம்பியழுது, கண்கள் சிவந்து தேகம் சிறுத்து, துரும்பாகிவிட்டதே... நீர் துன்பக் கடலில் தவிக்க, இன்பக்கடலில் திளைக்கும் இராவணனுக்கு ஊழி நெருங்கி விட்டது, உத்தமபத்தினியே!...
சீதை :
ஊழியின் உருவாய் உழல்கிறேன்... தெய்வமே, உயிரை எடுத்து என்னைப் பிணமாக்க மனமில்லையோ?...
(கேவி அழுகிறாள்...)
அனுமன் :
கீழே நரகத்திலும், மேலே விண்ணிலுமாக பத்து திசைகளிலும் இலங்கையின் புகழ் இன்று மங்கி வருகிறது, தாயே!... மாய மூலிகையால் மயக்கி மாதர்க் குல மாணிக்கத்தை தூக்கிச் சென்ற துஷ்டன் இராவணன் ' என்று தூற்றுகிறது, லோகம்!...
சீதை :
நெஞ்சறம் வீழ, வஞ்சகம் வாழ்வதோ... தெய்வமே, கண்ணிருந்தும் நீயேன் காணாதிருக்கிறாய்... காதிருந்தும் நீயேன் கேளா செவியினனாய் வாளாவிருக்கிறாய்... வாய்த் திறந்து ஒருவார்த்தை வஞ்சகம் இதுவென்று கொஞ்சம் சொல்லாயோ?.... தெய்வமே, வஞ்சகனுக்கு கொஞ்சம் சொல்லாயோ, இறைவா!...
(தொடர்ந்து அழுகிறாள் )
அனுமன் :
வஞ்சகனுக்கு சொல்வான் தேவன்!... தெய்வம் நின்று கொல்லும் என்று சீதாப்பிராட்டியாரே, தாங்கள் அறியாததா?... வஞ்சகம் வீழ வேண்டும்; அரக்கர்தாம் மடிய வேண்டும் என்பதற்காகத்தானே, அவதாரம் எடுத்து வந்துள்ளார் இராமபிரான்!... தாயும் அவனே!... தந்தையும் அவனே!... அவனே இராமபிரான்!...
சீதை :
தெய்வமே, விதியோ?... சதியோ?... உன் சதிராட்டம் அடங்குவது எப்போது?...
அநுமன் :
மாற்றான் மனைவியை மனதால் தீண்டுவதும் தீது எனும் நெறியை நெறித்த இராவணனை வாழ விட்டால், அறம் பிழைக்குமோ?... மாதர் கற்புப் நிலைக்குமோ?... கற்பு தெய்வம் கண்ணீர் சிந்தினால், உலக வாழ்வு உய்க்குமோ?... உலகம் சிதறுற கொடியவன் ஒருவன் வாழ்வதா... அவனை அழிப்பதால் அல்லவோ அறம் காக்கப்படும்!... அதற்காக அல்லவோ இராமாவதாரம் இராமபிரான் எடுத்துள்ளார்... பூவுலகில் பிறந்த எல்லாருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்பட வேண்டும் என்பதல்லவோ இராமபிரான் நோக்கம்!... இராவணன் வாழும்வரை அறஞ்செழிக்காது!... அறஞ்செழிக்காது போனால், அனைவருக்கும் நரகம்தானே... அதனால், இராவணன் கொல்லப் படுவான்... ஆரியம் அகிலமெல்லாம் செழித்தோங்கும்!... ஆரியத்திற்கு அடிப்பணிந்தால்தான் மோட்ஷம் கிடைக்கும்... ஆரியம் செழிப்புற, அவதாரம் எடுத்துள்ள இராமபிரானின் நாயகியே, கண்ணீர் சிந்தவேண்டாம்... பத்தினி தெய்வமே!... சித்தம் கலங்காதே...
சீதை :
கருணையில்லையோ கடவுளே, உனக்கும்!...
அனுமன் :
கருணைக் கடல் இராமனிருக்கையில், கண்ணீர்க் கடல் எதுக்கம்மா? வழி மீது விழி வைத்து இளங்கொடியினாளே, உம்மைக் கட்டித் தழுவிடக் காத்திருக்கிறான் இராமன்!... வருகவே! வைதேகியே, என்னோடு வருகவே!... அழைத்துச் செல்கிறேன்... அண்ணல் உம்மைக் காணாது, கண் துயிலாது தவிக்கிறான்... வருகவே!...
(பேசிய வண்ணம் சீதையின் கைத் தொடுகிறான்... சீதை அனுமனை அறைகிறாள் பளாரென )
-திரை-
பாகம் :3. காட்சி :13. மாஞ்சோலை.
அனுமன்,
முதியவர் இருவர்.
(மாஞ்சோலையில் மாங்கனிகள் சில, மரத்திலிருந்து வீழ்ந்துக் கிடக்கின்றன...)
(மாஞ்சோலை வழியே வந்த அனுமன், கீழே கிடக்கும் மாங்கனிகளைக் காண்கிறான்...)
(பயணக் களைப்பால்-
மரத்தடியில் படுத்துறங்க முனைகிறான்...
மேலும்; ஒரு கனி மரத்திலிருந்து அவன்மீது விழ-
வீழ்ந்தக் கனி உருண்டோட -
எழுந்து, அக்கனியை கையிலெடுத்து முகர்ந்துப் பார்க்கிறான்...
அப்போது-
எதிர் திசையிலிருந்து வந்த இரு முதியவர்கள், அனுமன் அமர்ந்திருக்கும் இடத்தை சமீபிக்கிறார்கள்...)
முதியவர் (1) :
அய்யா, நாமும் இங்கே சிறுது நேரம் இளைப்பாறுவோமா?...
முதியவர் (2) :
ஆமாம்; இளைப்பாறி விட்டுப் பிறகு செல்வோம்... இதோ மாங்கனிகள் விழுந்துக் கிடக்கின்றன... இங்கு அமர்ந்து இளைப்பாறி மாங்கனியையும் சுவைத்தால் களைப்பு நீங்கி விடும்... பிறகு அலுப்பின்றி நடக்க வலு வந்து விடும்...
(இருவரும் ஆளுக்கொரு கனி வீதம் எடுத்துச் சுவைக்கின்றனர்...)
முதியவர் (1) :
இளமையில் இருந்த துள்ளல், எல்லாம் எது அள்ளிக் கொண்டுப் போயிற்று, அய்யா!... பாயும் புலியோடு போரிடுவேன்... மதங்கொண்ட களிறோடு விளையாடி யிருக்கிறேன்... அப்போதெல்லாம், என் வாழ்வை நிலையான வாழ்க்கை என்று நினைத்து இறுமாந்திருப்பேன்... என்னிடம் எப்படி முதுமை வந்தது?... என்னுடைய இளமையும், வலிமையும் என்னிடமிருந்து எப்படிப் பிரிந்தது என்று எனக்கு விளங்கவில்லை அய்யா!... இப்போது சிறுதுத் தொலைவு நடந்தாலும் உடல் தொல்லைப் படுத்துகிறது?...
முதியவர் (2) :
உலகத்தில் எதுவுமே நிலையில்லை, அய்யா!... இளமையோடுத் திகழும் இந்தப் பூ, நாளை சருகாகிவிடும்... இதோ இந்தக் கனியை எடுத்துக் கொள்ளுங்கள்... சுவையில் அமுதமாக இருக்கிறது... நாளையும் இதே அமுதச் சுவை இருக்குமோ?... அழுகிய பொருளாகி, தொடுவதற்கும் விரும்பப் படாதப் பொருளாகிவிடும்... இதுதானய்யா வாழ்க்கை!... மூப்பும், மரணமும் எல்லாருக்குமே உண்டு!... இதை அறியாமல் சிலர்ப் போடும் ஆட்டம்தான் என்ன?...
முதியவர் (1) :
சாவு நம்மை நெருங்காத படி நம்மால் வாழ முடிவதில்லை... வாழுகின்ற இந்தக் குறுகிய காலத்திற்குள், வஞ்சத்தை நெஞ்சில் வைத்துக் கொள்கிறோம்... வாக்கிக்கியங்களில் சூடு செய்து, பிறரை சுடுகிறோம்... என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே, இப்படியும் வாழலாம் என்று நினைத்து சிலர் எப்படியெல்லாமோ வாழ்கிறார்கள்... அந்த வாழ்க்கை மட்டும் நிலையாகி விடுமா என்ன?... நமது அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள்...
முதியவர் ( 2) :
அரசியலை பேசாதீர்கள்... இதென்ன அரசியலா?.... ஒருவரை ஒருவர் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் இன்றைய நிலையை அரசியல் என்று சொல்லாதீர்கள்... வஞ்சகர்களின் கூடாரமாய் மாறிவிட்டது, நமது அரசியல்!... மக்கள் வாழ்வில் நாட்டமில்லாத அரசியலய்யா இன்றைய அரசியல்...
முதியவர் (1) :
சுயவாழ்வை நிலைநாட்டத் துடிக்கும் கும்பலின் செயலை அரசியல் என்று எவர் ஏற்றுக்கொள்வர்?... இது எதில் முடியுமோ?... கலகமும், குழப்பமும் பகைவனுக்குப் பால் சோறு மாதிரி!...
முதியவர் (2):
இது, தெரிந்திருந்தால் சுக்ரீவன் தனது அண்ணன் வாலியை கொன்றிருப்பானா?... வாலியைக் கொன்று விட்டு, தான் அரசனாகி விடலாம் என்று எண்ணினான்... ஆரியன் இராமனை வைத்து முடியும் சூடினான்... ஆனால்; ஆட்சியில்
(அப்போது அனுமன் முதியவர்களை திடுக்கிட்டு நோக்குகிறான்)
முதியவர் (1) :
அய்யா, இதில் இன்னொரு வேடிக்கைக் கேள்விப் பட்டீரா?... குரங்காட்டி பயல் ஒருவன், அவன் பேர் அனுமானம்!... அவன் சுக்ரீவனுக்கு தூதுவனாய் இலங்கை வேந்தன் இராவணனிடம் போனானாம்!...
முதியவர் (2) :
ஆமாமாம்... நானும் கேள்விப் பட்டேன்... சுக்ரீவன் முடி சூட்டிக் கொண்டு, கிட்கந்தகத்தை அரசாள வேண்டுமென்று, அனுமன் இலங்கை வேந்தனிடம் கேட்டானாம்... இலங்கை வேந்தனும் கபட நாடகம் ஆடியிருக்கிறான்...
( அனுமன் முதியவர்களை நோக்க-)
முதியவன் (1) :
நல்ல நாடகமய்ய்யா, அது!... ஒருபுறம் அனுமனை ஏமாறச் செய்துவிட்டு, மறுபுறம் மகன் சேயோன் தலைமையில் பெரும்படையைக் கிட்கந்தகத்திற்கு அனுப்பி விட்டான் இராவணன்!...
முதியவர் (2) :
ஆமாம்!... அதன்பிறகு நடந்ததை நாடே அறியுமே... சேயோன் படையுடன் வருவதை அறிந்த சுக்ரீவன், துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று பதறியடித்து பாதாளப் பாதை வழியாக வெளியேறி விட்டானாம்...
முதியவர் (1) :
அவன் தம்பியிராவிட்டால், சேயோனிடம் சிறைப் பட்டிருப்பான்... சுக்ரீவனும், இராமனும், இரிசியமுகனும், இலக்குவனும் இப்போது காட்டுமலைக் குகையில், ஒளிந்திருக்கிறார்களாம்... இவர்கள் எல்லாரையும் சிறைப் படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சேயோன் பெரும்படையுடன் வந்தானாம்...
முதியவர் (2) :
தப்பித்து விட்டார்கள்... இவர்களது பேராசையால், மக்களுக்குத்தான் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது... கிட்கந்தகத்தின் அரசியல் பணியைப் பார்க்கும் பொறுப்பு இப்போது கரனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது... இருந்தாலும், குழப்பம் குழப்பம்தானே...
முதியவர் (1) :
இன்னொரு வேடிக்கை நடக்கப் போகிறது...
முதியவர் (2) :
இன்னொரு வேடிக்கையா?...
முதியவர் (1) :
ம்... நடந்த சம்பவங்கள் எதுவும் ஏமாளி அநுமனுக்குத் தெரியாது... தூதுவனாய்ப் போன அநுமன் இலங்கையிலிருந்து நேராக, கிட்கந்தகம் போவான்... நகர எல்லையிலேயே அவனை மடக்கி சிறை செய்து விடுவான் கரன்... முதியவர் (2) :
அய்யா, என்ன, கொட்டையைக் கடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?... கனி சாப்பிட்ட பிறகும் கொட்டையை எறிய மனமில்லையோ?... ( சிரித்தல்) களிப்பதைக் களித்து, கழிப்பதைக் கழிக்க வேண்டுமய்யா!...
முதியவர் (1) :
ஆமாமய்யா!... அரசியலிலும் சிலர் கழிக்க வேண்டியதைக் கூட களித்து இன்புறுகின்றனர்... இந்தக் கேடு நீடித்தால், இந்த நாடு உருப்படாது!...
முதியவர் (2) :
இந்த அரசியலைப் பேசினால், நாமும் உருப்பட மாட்டோம்... எழுந்திருமய்யா போவோம்!...
( முதியவர்கள் சென்றப் பின்னர்-
மாங்கொட்டையைக் கடித்த அனுமன், கொட்டையைத் துப்பி விட்டு விருட்டென எழுகிறான்...)
-திரை-
பாகம் : 3. காட்சி :14. காடு (மலைக்குகை)
இராமன்,
இலக்குவன்,
சுக்ரீவன்,
அனுமன்.
மண் கலயத்திலிருந்து, இராமனது பாதத்தின் மீது இலக்குவன் நீரூற்ற-
பாதத்திலிருந்து வடியும் நீரை, சுக்ரீவன் மண்டியிட்டு இருக் கரத்தில் ஏந்திப் பருகுகிறான்...
நீரூற்றப்பட்டவுடன், இராமன் வாழையிலையிலிருந்து அகலுகிறான்...
இராமன் நின்றிருந்த இடத்தை,சுக்ரீவன் தொட்டு...)
சுக்ரீவன் :
சிறி இராம ஜெயம்.... சிறி இராம ஜெயம்....
சிறி இராம ஜெயம்.... சிறி இராம ஜெயம்....
சிறி இராம ஜெயம்.... சிறி இராம ஜெயம்....
சிறி இராம ஜெயம்.... சிறி இராம ஜெயம்....
சிறி இராம ஜெயம்.... சிறி இராம ஜெயம்....
இராம்... இராம்... இராம்... இராம்... இராம்...
( இராமானதுப் பெயரை, முனகிக் கொண்டே இராமன் பாதம் பட்ட மண் எடுத்து, நெற்றியில் இட்டுக் கொள்கிறான்... )
இராமன் :
சுக்ரீவா, நீ அருள் பெறப் படுவாய்... எழுந்திரு!...
சுக்ரீவன் :
அய்யனே, தினம் தினம் உனை நான் யாசிக்கிறேன்... ஆரியனே, உனது பாதம் பட்ட தீர்த்தம் அருந்துகிறேன்... இன்னும் ஏன் காட்டு வாழ்க்கை என்னைத் தொடர்கிறது?... பாவி எனது பாவம் தீரும் நாள் எந்நாளோ?... வாலியை வதைத்தும், எனதாசைக் கைக் கூடவில்லையே!... ஆயுள் முழுதும் இதுதானோ எனது நிலையும்?... அய்யா, அரசபதவி எனக்கினிக் கிட்டாதோ?... அசுரர் தமை வீழ்த்த அவதரித்த திருமகனே!... அன்புடன் யாசிக்கிறேன்... அருள் பொழியாயோ?...
இராமன் :
சுக்ரீவா, கண் செய்த பாவம் கருத்தைச் சுடுவது போல், முன் செய்த வினையால், இன்று நீ இன்னல் துய்க்கிறாய்... அரக்கனாய்ப் பிறந்து, போனப் பிறவியில், ஆரியருக்கு அநியாயம் பலப் புரிந்த நீ, இப்போதும் அரக்கனாய் உருவெடுத்து, உழல்கிறாய் வேதனையில்!... ஆயினும், நீ எனது அடித் தொட்டு வணங்குவதால், பாவம் நீக்கி உன்னை பரலோகம் வைப்பேன்... ஆயுள் என்றுக் கூறினால், வரம்பில் அடங்கும்!... அதனால்; வரம்பிலா வாழ்நாள் நான் உனக்கு ஈந்தேன்... தீராயுள் நீ வாழ்ந்து, சிறி இராம ஜெயம் செய்து வருவாயாக!...
சுக்ரீவன் :
அப்பனே, திருமந்திரத்தால் நீ என்னை திரும்பவும் கிட்கந்தகத்தின் அரசனாக்க முடியாதா?... வாலியை வதைக்கும் முன்பாய் வாய் மலர்ந்தாய்!.... அந்தோ, வாலியைக் கொன்றும் என்னை ஏன் அரச பதவி நாடவில்லை... கரன் என்போன், சேயோனுடன் வந்து, அரசக் கட்டிலை அபகரித்தான்... நாடாளுவோம் என்ற எனது ஆசையும் நப்பாசையோ?... நல்லவிதமாய் சொல்லய்யா... காடுதான் இனி எனது வாசமா?... ஆயின், ஒரு காரியம் செய்திடு, பகவான் இராமனே...
இராமன் :
யாது காரியம்?
சுக்ரீவன் :
திருமந்திரத்தால் இக்காட்டை அழித்து, கிட்கந்தகத்திற்கு இணையானதோர் நகரம் ஒன்றை எழுப்பி, என்னை அதில் அரசனாக்கு!... அரசனாய் வாழவே, ஆசைப் படுகிறேன்... அரசபதவிக்கு வழி வகுத்திடய்யா...
இராமன் :
அற்பப் பதவியய்யா அரச பதவி!... சொற்ப நாளில் அதுவும் சருகாகும்... மோசம் புரியும் நீச அரக்கர், வரிசையில் நீ உதித்திருந்தாலும், யாசித்து எனதடியில் வீழ்ந்துள்ளாய்... அதனால், மோட்சத்தில் உனக்கு ஒரு பதவித் தருகிறேன்... இளம்பெண்கள் பலரை மோகித்து நீ அங்கு இன்பமாய் வாழ, வரமும் ஈந்தேன்...
சுக்ரீவன் :
அய்யனே, இப்பிறவியிலும் நான் இன்பம் துய்த்திட, இனிய வரம் கொடு!... மாயத்தால் அம்பெய்து வாலியைக் கொன்றாயே... அரக்கன் இராவணன் அனுப்பியக் கரனையும் கொன்று, கிட்கந்தகத்தின் அரச பதவியைப் பறித்துக் கொடு... படுகிற இன்னல் முறிந்திட, வரம் கொடு!...
இராமன் :
கொடுங்குலத்தில் பிறந்தோர்க்குத்தான், அரசன் கொடை மீது ஆசை பிறக்கும்... எம்மைப் பார்... ஆரியர் யாவரும் அடர்மிகு காட்டிலே உறைகின்றனர்... கனி உண்ணுகின்றனர்... யாகத்திலும், வேள்வியிலும் சுகபோகம் காண்கின்றனர்... ஆண்டவனை வணங்கி, அங்கே மோட்சத்தையும் பெறுகின்றனர்... சுக்ரீவா, தமிழ்க் குலம் எமக்கு தாசிக் குலம்!... எமதிந்தக் கருத்தை, நீ தலைவணங்கி ஏற்றுக் கொண்டாய்... இகவாழ்வையும் நீ மறந்து விடு!... பரலோகத்தில் உனக்கு நான் பதவித் தருகிறேன்... பரந்தாமன் என் பேச்சைக் கேட்டிடு!... பாழ்ப் பட்ட நிலமிது!... இதில் ஆரியர் வாழ, பால் வார்த்திடவே, அவதாரமும் எடுத்து வந்தேன்... நேர் நின்று நீ எனக்குத் துணையாய் வந்திடு!... நீ வேண்டுவன யாவும் தானமாய்த் தருவேன்... இது உறுதி!...
சுக்ரீவன் :
சிறி இராம ஜெபம் சொன்னால், எனது துன்பம் யாவும், தீருமென்றாய்... இன்று துணையாய் வரவும் வேண்டுமென்கிறாய்... உனதடிமையாய் நானும் மாறி விட்டேன்... மேலும், மேலும் உன்னை நான் யாசிக்கிறேன்... அரச பதவி நான் அடைந்திட வேண்டும்... அவதார புருஷன் நீயென்றால், என் மனதாசையை மாயத்தால் நிறைவேற்று!...
இலக்குவன் :
இராமசக்தியை நீ சோதிப்பதென்ன, மடையா?... ஆரியப் பேச்சுக்கு அடிபணிய வேண்டும், கடையா!... ஆசை கொண்டலையும் உனக்கு இராமனென்ன, படையா?... இவன் சொல்லுக்கு நீ எவனடா மறுமொழிக் கூற?... ஆரியனிடம் கேள்விக் கேட்டால், உன் விழியிரண்டை நோண்டிடுவான் ஆண்டவன்!... இதை உணராதது ஏனடா?... இராமனோடு சரிசமமாய் ஏனடா பேச்சு?... அறிவில்லையோ உனக்கு?... அழுகிவிடும் நாக்கு!...
(சுக்ரீவன் அஞ்சி...)
சுக்ரீவன் :
இராம்... இராம்... சிறி இராம்... இதென்ன சாபம்?...
( இராமன் சிரித்து...)
இராமன் :
கோபமூட்டினால், சாபம் உன்னைத் தீண்டும்... அரசபதவி, அரசபதவி என்றேன் அழுகிறாய்?... நீ யார்?... உன்னை அறிந்துக் கொண்டாயா?... உன்னை அடிமையாய் ஏற்றுக் கொண்ட நான் யார்?... நான் மகான் என்பதை நீ தெரிந்துக் கொண்டாயா?... தெரிந்தும் நீயேன் திரும்பவும் அரச பதவி என்றழுகிறாய்?... உன்னை நான் இந்த சூரியனுக்கே அரசனாக்குகிறேன்...சுக்ரீவன் :
என்ன?
இராமன் :
ஏன் வியக்கிறாய்?... வியப்பு, கேள்வி இவைகள் கூடாது... ஆரியன் பேச்சுக்கு, உடனே அடிபணிய வேண்டும்... இந்த உலகத்தையே சூடாக்கும் சூரியனுக்கு, சுக்ரீவா, இனி நீ தான் அரசன்!... நீ சொன்னால், அது உதிக்கும்... நீ சொன்னால் அது உதிரும்... சூரியனுக்கே இனி நீ கடவுள்!... போதுமா?... இன்னும் வேறேதும் வேண்டுமா?...
இலக்குவன் :
புத்திகெட்ட இராமனே!... நீதான் அறிவு கெட்டு உளறுகிறாய்... வரம் கொடுத்து விட்டாய் இவனுக்கு!... சோதித்துப் பார்க்க, இவன் நம்மையே சுட்டெரித்து விடுவானே... வாங்கு வரத்தைத் திரும்பவும்...
(இராமன் கரத்தை சுக்ரீவன் தலைக்கு மேலாய் நீட்டி-)
இராமன் :
வாங்கினேன் வரத்தை; திரும்பவும்!...
(சுக்ரீவன் அதிர்ந்து இருவர் தாள் பணிகிறான்...)
சுக்ரீவன் :
இலக்குவனே!... இராமனே!...
சுக்ரீவா, எழுந்திரு!... நீயெனக்கு ஆற்ற வேண்டியப் பணி ஏராளம்!... ஏராளம்!... அதன் பின்னரன்றோ நீ சூரியதேவன்... தேவன்...
(அப்போது-
இவர்களுக்கு மையமாக-
மரத்திலிருந்து அனுமன் குரங்கு வேடத்தில் குதிக்கிறான்...
குரங்குத்தான் தம்மைத் தாக்கக் குதித்ததோ என்று அஞ்சி அலறி-
மூவரும் மூன்று திசையில் ஓடுகிறார்கள்...)
அநுமன் :
அண்ணலே!... என் ஆத்மாவே!... அநுபூபதியே!... என்னவோ இந்த சோதனை?... ஏனிந்த சோதனை?... ஏனிந்த அச்சமோ?... சுக்ரீவனே!... என் தலைவா!... அலறி அடித்து ஓடுவது ஏனய்யா?... இலக்குவனே!... கடும்பாறையை இதயமாய்க் கொண்டவனே!... நீயுமா அஞ்சி ஓடினாய்?... இராமச்சந்திர மூர்த்தியே!... உலக இரகசியம் அனைத்தும் ஞானத்தால் அறிந்ததாய்க் கூறும் நாயகனே!... கல்லாய் நின்ற அகலிகையும் நின் திருப்பாதம் பட்டு பெண்ணாய் உருமாறினாள் என்றுக் கூறும் அவதார புருசனே!... உன் திருபார்வைப் பட்டு, என் ரூபம் மாறுமென்று, வேடம் கலைக்காமலேயே ஓடி வந்தேன்... நீயோ பேடிப் பயலானாயே... அருகில் வா!... அயோத்தி மைந்தா, அஞ்சி நிற்காதே!... அச்சம் தவிர்த்து வா!... அடியேன் நான் வேடம் கலைத்தேன்... அண்ணலே, நீயும் அய்யம் கலைத்து வா!...
(குரங்கு வேடம் களைந்து அனுமன் தோன்றுகிறான்... இராமன், இலக்குவன், சுக்ரீவன் மெல்ல வருகின்றனர்...)
அநுமன் :
குரங்குதான் குதித்தது எனில், மனம் நடுங்கி ஓடியது சரியோ?.... நெடும்புகை நடுவில் நின்று, வேதம் ஓதி மாயம் கற்ற இராமா, என் வேடம் பொய்யென்று மாயத்தால் உணராது, நீ அஞ்சி ஓடினாய் என்று உலகம் அறிந்தால் சிரிக்காதோ?... மாயத்தால் வாலியை வீழ்த்தி, எம்மை வியப்பில் ஆழ்த்தினாய்!... இன்னும் உன் மாயத்தால் என் வேடம் நீக்குவாயா மாட்டாயா என்று சோதிக்கவே, நானிங்கு வேகமாய் வேடத்தோடு குதித்தேன்... நீயோ அஞ்சி ஓடினாய்... என் சோதனை பொய்யோ?... உன் மாயம்தான் பொய்யோ?...
இலக்குவன் :
அறிவுகெட்ட அனுமனே... அசுரபுத்தி நீங்கா நீசனே... அழிந்து போவாயடா; நீ எம்மை சோதித்தால்!... அஞ்சியது போல் யாம் ஓடியது ஏனென்று தெரியாது மூடனே, இனியொரு வார்த்தை எம் அண்ணலை பார்த்து, சோதனை என்று நீ கூறினால், மாயத்தால் கிழித்திடுவோம் உனது வாயை!...
இராமன் :
அஞ்சியதுப் போல் யாம் ஓடினோம் என்று அனுமனே, நீ அநுமானிக்காது பேசுகிறாயே... நீ அநுமானிப்பதில் வல்லவன் என்பதால் அல்லவா, உனதன்னை உனக்கு அனுமான் என்று பெயர் சூட்டினாள்... உனது அநுமானம் பொய்யா?... உனது எண்ணம்தான் பொய்யா?...
அநுமன் :
அய்யா, மன்னிக்க வேண்டும்!... சபிக்க வேண்டாம்... புத்தியின்றி நான் புது நாயகன் உம்மை ஏசினேன்... ஏசிய என்னை, வேறு ஏதும் பேசவேண்டாம்...
இலக்குவன் :
உன்னை ஈன்றவள் அஞ்சனாதேவி என்று நீ சொல்லியா நாமறிந்தோம்?... ஞானத்தால் அறிந்தோம்... உனது தந்தை இப்போது வாயு மண்டலாதிபதியாக வான் வீதியில் வீற்றிருக்கிறான் என்பதை மாயத்தால் அல்லவோ உனக்கதனை கூறினோம்... உன்னையும் காற்றுக்கே கடவுளாக்கிட நினைத்திருந்தோம்... நீ தூற்றும்படி நடந்துக் கொண்டாயே!...
இராமன் :
யாம் அஞ்சி ஓடுவது போல் ஓடினால், உனது நெஞ்சிலே ஏது எண்ணம் உதயமாகும் என்று சோதிக்கவே, ஓடினோம்... எமது சோதனை சரியாயிற்று!... உயிருக்கு ஆபத்து வந்தாலும், துதிக்கும் தலைவனை தூற்றுவதோ, அய்யம் கொண்டு சோதிப்பதோ அடிமை நாய்க்கு அழகாகுமோ?...
இலக்குவன் :
எம்மை சோதிக்க எண்ணிய எத்தனே... பித்துப் பிடித்து நிற்கிறாயோ கூறு!... அல்லவெனில், நீ அறிவு கெட்டு எம்மை சோதிக்க முனைவதென்ன?... சோதிக்கத் துணிந்த இவனை; அண்ணலே, 'கல்லாகக் கடவாய்' என்று சொல்லால் சபித்துவிடு!...
( அனுமன் இராமன் காலில் விழுந்து...)
அநுமன் :
அண்ணலே!... எனது ஆத்மாவே!... தாமரையைத் திருப்பாதமாய்க் கொண்ட திருமாலே!... பொருத்தருள்வாய்... என் போதாதக் காலம்... நாநும்மை சோதிக்கத் துணிந்தேன்... சுடுகிற நெருப்பில் விரல் வைத்து சோதித்த நானொரு மூடன்!...
இலக்குவன் :
அதனையே மும்முறைச் சொல்லு..
அநுமன் :
நானொரு மூடன்!... நானொரு மூடன்!... நானொரு மூடன்!...
இராமன் :
அடேய் நிறுத்து!... தமிழ் பாஷை பேசும் நானொரு மூடன் என்று மும்முறை கூறு!...
அநுமன் :
தமிழ் மொழி பேசும் நானொரு மூடன்... தமிழ் மொழி பேசும் நானொரு மூடன்... தமிழ் மொழி பேசும் நானொரு மூடன்...
இராமன் :
நீ எம்மிடத்தில் நேசமாய் இருப்பதால், உனது மோச குணம் மன்னிக்கப் பட்டது... எழுந்திரு!...
அநுமன் :
அய்யனே, உமது தூதேந்திக் கடல் தாண்டி, இலங்கைச் சென்றேனே... அதனை கூறவா?...
இராமன் :
கூற வேண்டாம்... யாமே எல்லாம் அறிந்தோம்...
அநுமன் :
அய்யனே, இராவணன் அவன் இராக்கதனா?... ஏனிப்படி என்னிடத்தில் ஏமாற்று மொழிக் கூறினான்... கிட்கந்தகம் ஆள, 'சுக்ரீவனுக்குத் தந்தேன் உரிமை' என்றான்!... 'இலங்கைப் படையால் இமியளவும் கேடு வராது... சுக்ரீவனே அரசாளட்டும்' என்றான்... 'சீதை விரும்பினால் அழைத்துப் போ' என்றான்...
இராமன் :
சீதை வரமாட்டாள் என்பதையும் நானறிவேன்!...
அநுமன் :
என்ன?
இராமன் :
ஆமாம்; சீதை வரமாட்டாள்...
அநுமன் :
அறிந்தும், நீயேன் தூதுவனாய் என்னை அங்கு அனுப்பினாய்?...
இராமன் :
அறிவேன் அனைத்தும் நான் முன்னரே; அதனை நான் சொன்னால் அகிலம்தான் நம்புமோ?... அடிமை நீதான் உணர்வாயோ?... இராவணன் இவனென்று வாயால் நான் சொன்னால், ஏற்பவர் எத்தனைப் பேர்?... கூறு!... செயலால் செய்து காட்டிய பிறகல்லவா நீயே அவனை உணர்ந்தாய்... நான் அனைத்தும் அறிந்த மடையனடா!... சி... ஞானியடா!... அதனால்தான் சொன்னேன் : 'சீதை வரமாட்டாள்' என்று!...
அனுமன் :
அவள் நினைவெல்லாம் உம்மோடுதான்!... உமது நினைவாகவே, உருகி நிற்கிறாள்... கண்ணீர்ப் பெருக்கிக் காரிகையவள் மெலிந்து நிற்கிறாள்... ஆயினும்; 'வா' வென்று அழைத்தும் அவள் மறுத்தாளே... அதன் காரணம்தான் என்ன?... என்னால் அறியமுடியவில்லையே அய்யனே!...
இராமன் :
இராவணன் செய்த மாயவித்தை அது!... நானே நேரில் சென்று அழைத்தாலும், மனதால் என்னிடம் ஓடி வரத் துடிப்பாள்... ஆனால்; செயலால் அவள் இயங்காதபடி இராவணன் மாயத்தால் அவளைக் கட்டி வைத்திருக்கிறான்...
அநுமன் :
மாயத்தால் வாலியைக் கொன்ற மாயாவா!... அகலிகையை உயிர்ப்பித்த ஆண்டவா!... இராவணன் செய்த மாயமதனை அறுத்து, மங்கை சீதையை இங்கு மந்திரத்தால் கொண்டு வந்து விடு!...
இலக்குவன் :
நீ ஏதும் அறியாமல் பேசுகிறாய்... மந்திரமில்லை; மாயமில்லை; கடவுளுமில்லை ; பூதமுமில்லை என்று ஏமாற்று மொழிக் கூறுபவன்தான் இராவணன்!... இதனை அறியாது, ஏமாறுகிறவர்கள்தான் உமதுத் தமிழர்கள்... இராவணன் கற்ற மாயம் எம்மையே வியக்கச் செய்கிறது... இலங்கை நெடுகிலும் அவன் மாயவேலி எழுப்பியுள்ளான்... அதனை பிறிதோர் மாயத்தால் வீழ்த்த முடியாது... இராவணனை இலங்கை எல்லைக்கு இப்பால் வரச்செய்து, மாயத்தால் போரிட்டு வென்றாலன்றி சீதையை நாம் மீட்க முடியாது!...
அநுமன் :
பிறன் மனைவியைத் தூக்கிச் சென்றதுமல்லாமல், மாயத்தால் வேலியும் எழுப்பியுள்ளானா?... அதனால்தானே மமதையோடு என்னிடத்தில் பேசினான்?... 'கிட்கந்தகம் ஆளும் உரிமையை சுக்ரீவனுக்குத் தந்தேன்... தூதுவனே, நீ போ ' என்றான்... அவன் பேச்சை நம்பி நேராய், கிட்கந்தக நகர் சென்றிருந்தால் இன்று என் நிலை என்னவாகியிருக்கும்?... கரன் என்னை கைது செய்து, கடுஞ்சிறை வாசம் தந்திருப்பானே...
இலக்குவன் :
கிட்கந்தக நகருக்குள் நீ நுழைந்து விடக்கூடாதே என்பதற்காகத் தானே இங்கு எல்லையில் நிற்கிறோம் நாங்கள் உன்னைக் காத்திட!...
அநுமன் :
விந்தகத்தின் மாஞ்சோலைக்குள் வரும் போதே நான் விபரம் அறிந்துக் கொண்டேன்... சுக்ரீவனையும், இராமனையும், இலக்குவனையும், இரிசியமுகனையும் சிறைச் செய்ய பெரும் படையோடு சேயோனும், கரனும் கிட்கந்தகம் வந்த சேதி நானறிந்தேன்!...
இலக்குவன் :
எப்படி?
அனுமன் :
களைப்பாய் நான் மாங்காட்டில் இளைப்பாறியிருந்த வேளையில், முதியவர் இருவர் வந்தனர் அவ்வழியே!... அந்த முதியவர்களின் பேச்சில் கிடைத்தத் தகவலிது...
இராமன் :
மூடனே, முதியவரென்று நீ மூளையின்றி பேசுவதென்ன?... நீ சேதியறிய முதியவர் வேடத்தில் வந்தவன் நானடா!...
அனுமன் :
நீ ஒருவனாயிற்றே... எப்படி இரண்டு பேராய், நீ வேடந் தரித்து வர முடியும்?...
இராமன் :
யாரென்று நினைத்தாய் என்னை?...
இலக்குவன் :
அவதார புருஷனடா; அனுமனே, இவன்!...
இராமன் :
நீராய் மாறுவேன்... நிலமாய் உருவெடுப்பேன்... நிலவாய்த் திகழ்வேன்... விண்ணாய் வேடந்தரிப்பேன்... விண்மீனாய் கண் சிமிட்டுவேன்... இப்பூவுலகின் மாந்தரெல்லாம் நானே!...
இலக்குவன் :
புல் பூண்டும் இவனே!... அணுவும் இவனே!... ஆண்டவனும் இவனே!... அசையும் பொருளின் உயிரும் இவனே!... இவனே இவன்!... இவனே நான்!... நானே ஆரியன்!... ஆரியனே ஆண்டவன்!... ஆண்டவனே இராமன்!... அறிந்துக் கொள்ளடா, அனுமனே!...
இராமன் :
சரியென்றுக் கூறு... உன்னைக் கொன்று, உன் உடலுக்குள் என்னுயிர்ப் புகுத்தி வித்தைக் காட்டுகிறேன்...
அநுமன் :
அய்யோ வேண்டாம்!... என்னைக் கொன்று விடாதீர்கள்... பிற மனை பெண்டாளும் இராவணனை கொல்லுங்கள்... கிட்கந்தகம் யாம் ஆளத் தடையாய் வந்து நிற்கும் கரனை கொல்லுங்கள்... படையோடு வந்த சேயோனை கொல்லுங்கள்...
இலக்குவன் :
கொல்லுவோம்... கொல்லுவோம்... அரக்கர் குலத்தையே கொல்லுவோம்... ஆரியருக்கு அடிப் பணியாத எவரையும் கொல்லுவோம்...
(சுக்ரீவன் இராமன் தாள் பணிந்து)
சுக்ரீவன் :
அய்யனே, நான் அரசாள வேண்டும்... அடிமையாய் யாசிக்கிறேன்... அரக்கர் அனைவரையும் கொல்ல நான் உறுதுணையாய் இருப்பேன்... யான் வேண்டுவதெல்லாம், அரசபதவி தான்!...
அனுமன் :
பிறிதொன்றையும் கூற நான் மறந்தேன்...
இலக்குவன் :
என்ன?
அநுமன் :
சீதைக் கடத்திப் போகப் பட்டசேதி எமக்கு மட்டும் சினத்தையூட்டவில்லை...
இராமன் :
வேறு எவருக்கும் ஊட்டியது?
அநுமன் :
வழிப்போக்கன் ஒருவனோடு நீர் வழக்குரைத்ததை எம்மிடம் கூறினீரே...
இலக்குவன் :
ஆமாம்!...
அநுமன் :
மக்கள் மன்றம் கூட்டி மன்னன் இராவணன் மீது பழிச்சொல் சுமத்தினானாம் அவன்!... விழிப் பிதுங்க இராவணன் முழித்து, முறையின்றி ஏதோ மறுதலித்தானாம்... ஏதுவாயிருப்பினும் அடுத்தவன் மனைவியை களவாடி வந்தது தவறென்று வழிப்போக்கன் வாதிட்டானாம்... மன்றம் கூடிய மக்களில் சிலரும் மன்னன் இராவணன் செய்தச் செயல் சரியன்று என்று கூறினார்களாம்...
இராமன் :
ஓகோ!...
அநுமன் :
இலங்கை வேந்தனுக்கு தம்பி ஒருவன் உண்டு!... பீடணன் என்பது அவனது பேர்!... அண்ணன் செய்தச் செயலால், தம்பி காழ்ப்புக் கொண்டுத் திரிகிறானாம்... 'சீதையைத் தூக்கி வந்து இலங்கையின் சீர் கெடுத்தான் இராவணன் என்று எல்லாரிடமும் புலம்பித் திரிகிறானாம் பீடணன்!...
இராமன் :
நீ அறிந்ததெவ்வாறு?...
அநுமன் :
அடிமை என்னை, தூதுவனாய் இலங்கை தேசம் அனுப்பி வைத்தீரே... மறந்து விட்டீரா?... மன்னன் இராவணனைக் கண்டு, பின்னர் மங்கை சீதையைக் காண நான் போகும் வழியிலே இதுதானய்யா எங்கும் பேச்சு!...
இலக்குவன் :
அப்படியானால்?
அனுமன் :
'அண்ணன் சீதையைத் துறக்க வேண்டும்; இல்லையேல், மகுடம் துறக்க வேண்டும்... அதன்பின்னரே அரசவை நுழைவேன்' என்று பீடணன் சூளுரைத்துச் சென்றக் காட்சியை கூட்டம் கூட்டமாய் மக்கள் கூடிப் பேசுவதைக் காதாரக் கேட்டேன்; இராமனே!...
இராமன் :
அப்படியானால்?
அனுமன் :
பீடணன் நெஞ்சில் இராவணன் மீதுப் பகைமை மூண்டு விட்டது...
இராமன் :
அப்படியானால், இலக்குவா!...
இலக்குவன் :
புரிந்துக் கொண்டேன் இராமா!... புது முயற்சி எமக்குக் கைக் கூடும்...
இராமன் :
அனுமனே, உன்னால் ஆக வேண்டியப் பணி அடுத்தொன்று உள்ளது...
அனுமன் :
அடிமை நான் படிகிறேன்... கூறுங்கள்!...
இராமன் :
பீடணனை நீ சந்திக்க வேண்டும்...
அநுமன் :
சந்தித்து?
இராமன் :
நான் சொல்வதை நீ அவனிடம் சொல்ல வேண்டும்...
அநுமன் :
என்னவென்று?
இராமன் :
இலங்கையின் வேந்தனாய், பீடணனுக்கு நான் முடிசூட்டுவேனென்று
அநுமன் :
சொல்லவேண்டும்!...
இராமன் :
ஆமாம்!...
அனுமன் :
சுக்ரீவனுக்கு சூட்டுவேன் முடி என்றாய்... இதோ, சுக்ரீவன் 'இராம ஜெயம் ' கூறி நிற்கிறான் இன்முடி வேண்டியே!... இதனையல்லவோ பீடணன் கேட்பான் என்னிடத்தில்?.... நான் எதனைச் சொல்வேன்?...
இராமன் :
மூலபலத்தை அழிக்காமல் வேறெது செய்தாலும், கைக் கூடாது... ஞானத்தால் சொல்கிறேன் கேளிதனை!... பீடணன் இலங்கையின் அதிபதியாய் அரசேறும் அதே வேளையில், சுக்ரீவன் கிட்கந்தகத்தின் அரசனாவான்... அதற்கு முன்னர், உம்மிருவரின் உதவியோடு பீடணனின் உதவியும் எமக்குத் தேவை!... பீடணன் இலங்கையை அறிந்தவன்... இலங்கையின் படை நுட்பத்தையும் அறிந்தவன்... அவன் உதவிக் கிட்டினால், போதும்... இராவணன் மீது போர்த் தொடுத்து வீழ்த்தி விடலாம்... அவன்தானே மூலபலமாய் நிற்கிறான்... அவனை வீழ்த்தி, பீடணனை அங்கு அரசனாக்கி நான் மனமகிழ்ந்திடுவேன்... எனக்கு வேண்டியதெல்லாம் சீதை மட்டுமே!...
சுக்ரீவன் :
ஒழுக்கமற்ற இராவணன் ஒழியட்டும்... பிறமனையைப் பெண்டாளும் சண்டாளன் சாகட்டும்... நெடுமனை நின்று பிறமனைத் தீண்டி, நீங்காப்பழிச் செய்த பதரவன் மடியட்டும்... இதற்கெமதுத் துணை எப்போதும் உண்டு!... இராமா, என் படையும், உன் படையும் இணைந்தால், எவன் படை இனி வெல்லும்!... துணைக்கு பீடணன் வந்தால், பீடு நடைப் போடாதோ நம் படை!...
இராமன் :
அனுமா, நீ போ; இலங்கைக்கு!... பீடணனோடுப் பேசு!... காற்றுக்கே உன்னைக் கடவுளாக்கிடுவேன்... போ!...
(அனுமன் வணங்குகிறான்...)
-திரை-
பாகம் : 3. காட்சி-15 நிலாமாடம்
வண்டார்குழலி
இராவணன்
திரிசடை
( மேக சரிவிலே உருண்டு வந்ததோர் நிலவு!...
மேகநிலாவை பூமிக்கு 'வா' வென அழைப்பதுப் போல், தென்னங்கீற்று அசைந்தன...
யாழ் மீதில் விரல் தீண்ட-
விளைந்ததோர் இன்னிசை!...
குழலிச் செய்த யாழிசையால் வழக்கம் போல் மெய்மறந்து இருந்த இராவணனைத் தட்டி எழுப்புவது போல்-
குரலோசை ஒன்று வந்தது...)
குரல் :
மன்னவா... மன்னவா... மன்னவா...
(குரலோசை சமீபிக்க, யாழ் அமையுறுகிறது!...
இராவணனும், குழலியும் ஓசை வந்த திக்கில் நோக்க-
திரிசடை நுழைகிறாள்...)
திரிசடை :
மன்னவா!
(கூவிக்கொண்டே திரிசடை நுழைகிறாள்...)
இராவணன் :
திரிசடை...
திரிசடை :
இலங்கையில் ஒற்றர்கள் ஒழிந்துப் போயினரோ?... வீரர்கள்தான் மடிந்துற்றனரோ?... இலங்கை இது திறந்த வீடோ?...
இராவணன் :
என்ன சொல்கிறாய் நீ?... சீதைக்கு ஏதேனும் ஆபத்தோ?...
திரிசடை :
சீதையால் வந்ததிங்கே ஆபத்து!...
குழலி :
திரிசடை, என்ன சொல்கிறாய்?
இராவணன் :
சீதையால் வந்ததிங்கே ஆபத்து என்றால், என்னப் பொருள்?... திரிசடையே என்ன நீ கூறுகிறாய்?...
திரிசடை :
என்ன நான் சொல்ல?... எங்கோத் திரிந்தவளை, எவனுக்கோ உரியவளை இங்குக் கொண்டு வந்து
(குழலி கோபமாக)
குழலி :
திரிசடை
(குழலி திரிசடையின் கன்னத்தில் அறைந்து)
குழலி :
மகளே, என்ன நீ பேசுகிறாய்?... மழைத் தரும் மேகத்தின் மீது, நீயுமா பழிச்சொல் பேசுகிறாய்?... பாலோடு தேன் கலந்திட மனமில்லையென்றாலும், பாழ் நஞ்சுதனை கலந்திட நீயுமா துணிந்தாய்?... விண்மீன்களை எரிகற்களோடு ஒப்பிட நீயென்னக் கல்லாதவளா?
(திரிசடை அழுகிறாள் )
திரிசடை :
அன்னையே மன்னித்து விடுங்கள்... நெஞ்சக் கொதிப்பிலே நானிங்கு எதை எப்படிப் பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன்... மன்னித்து விடுங்கள்... அப்பா, பெரியப்பா... என் மீது கோபமா?...
இராவணன் :
மகளே...
(திரிசடையின் கண்ணீர்த் துடைத்து...)
இராவணன் :
உன்னை எனக்குத் தெரியாதா?... உன் மீது கோபம் கொள்வேனா?... இளங்கொழுந்தாய் நீ என் கைகளில் தவழ்ந்தபோதும் என் நெஞ்சை உன் தளிர் பாதம் எட்டி உதைக்கும் போதும், நான் ஆனந்தம் கொண்டு, மனம் மகிழ்ந்து நிற்பேன்... இன்று நீ கோபத்தில் பேசினாலும், அன்று நீ தவழ்ந்து தவழ்ந்து வந்து என் முதுகின் மீது ஏறி, விளையாடியக் காட்சியை மறந்து விடுவேனா?... என்றும் என் மகள்தானம்மா நீ!...
திரிசடை :
அப்பா...
(அழுகிறாள்)
(குழலி திரிசடையை அரவணைத்து...)
குழலி :
என்ன நடந்தது?... சொல்லு மகளே...
திரிசடை :
எது நடக்கக் கூடாதோ... அது; நடந்து விட்டது...
இராவணன் :
மகளே!...
திரிசடை :
திங்களது சூடாகி ஞாயிறுதனைச் சுடுமோ?... மீன் குடித்து கடல் நீரும் தீருமோ?... மணல் கொண்டுக் கயிறுச் செய்யலாகுமோ?... இதனையும் நம்பத்தான் இயலுமோ?... என் தந்தையும் இந்நாட்டு வேந்தனுக்கு பகைவனாவானோ?...
குழலி }
இராவணன் } :
திரிசடை...
திரிசடை :
மன்னா, சொல்லுங்கள்!... பசிக்கிறதென்று நம் விரலையே நாம் கடித்துத் தின்போமா?... அரசபதவிக்காக அண்ணனையே கொல்லத் துணிந்தான் பீடணன் என்றால், என்னவென்று சொல்வது?... இது ஆரியகுலமா? தமிழினமா?... அறியாமல்தான் கேட்கிறேன்... ஒழுக்கம் சிதைந்ததோ?... உயர்வுதான் கரைந்ததோ?... சொல்லுங்கள் மன்னா!...
குழலி :
திரிசடை, நீ என்ன சொல்கிறாயம்மா!...
திரிசடை :
பெரியம்மா!... எதனைச் சொல்லி, எப்படி அழுவேன்?... இப்படியுமா துரோகம்!... நம்பவே மறுக்கிறதம்மா... என் நெஞ்சமும்!...
இராவணன் :
குழலி, என் தம்பி எனக்கு துரோகியா?... இருக்காது... நான் நம்ப மாட்டேன்...
திரிசடை :
மானங்கெட்டு வாழவும், மாமன்னன் இராவணனை வீழ்த்தவும் சூளுரைக் கொண்டான் எனது தந்தை பீடணன் என்றால், நம்பத்தான் மறுக்கிறது மனமும்!... காதால் கேட்டு, கண்ணால் கண்டு கதறி நிற்கிறேன்... இன்னுமா மன்னா, நம்ப மறுக்கிறாய்?... வேலியில்லாத நிலமோ, இலங்கை நாடு?... காவலர் யாருமில்லையோ இங்கு?... ஒற்றருக்கெல்லாம் ஓய்வு கொடுத்து விட்டீரோ?... சொல்லுங்கள்... மாறு வேடமிட்டு இலங்கை மாநகருக்குள் அநுமன் நுழைந்திருக்கிறான் என்றால், நமது காவலரும், ஒற்றரும் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்தனரோ?... சொல்லுங்கள்... மாநகர் வந்து பீடணன் வீடுத் தேடி அவனை நாடிப் பேசுகிறான் என்றால், இது நாடா?... நாடோடிகளின் கூடாரமா?... கூறுங்கள்...
இராவணன் :
மகளே, மாறு வேடத்தோடு அனுமன் இங்கு வந்தானா?...
திரிசடை :
ஆமாம்;... மன்னா, சீதைக்குத் துணையாய் அசோகவனம் நான் சென்ற நாளிலிருந்து உம்மையோ தந்தை பீடணனையோ காண்பதென்பது அரிதாகவே இருக்கிறது... ஓரிருமுறை அரசவை வந்து உம்மை நான் கண்டபோதுங் கூட எனது தந்தை பீடணனை என்னால் சந்திக்க முடியவில்லை... தந்தையைக் கண்டு நாள் பலவாயிற்றே என்ற சிந்தை என்னை வாட்டமுறச் செய்தது... சீதையிடம் கூறிவிட்டு இல் சென்றேன் - தந்தையைக் காண!... மன்னா,
இராவணன் :
சொல்லு திரிசடை!...
திரிசடை :
தந்தை அறியாதவாறு மெல்லச் சென்று தந்தையைக் கட்டிப் பிடித்து வியப்புச் செய்ய வேண்டுமென்று நான் ஓசை எழாதவாறு, உள்ளே நுழைந்தேன்... திரையை விலக்கி எட்டிப் பார்த்த என்னால், அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை!... உள்ளே தந்தையோடு அனுமன் இருந்தான்... ஏதேனும் சூதிருக்குமோ என்று அய்யத்தோடு அப்படியே நான் நின்று விட்டேன்... ஒண்டி நின்றேன்... இருவரது பேச்சும் என் செவிக்குத் தெளிவாய்க் கேட்டது, மன்னா!... இராமனுக்கு பீடணன் உதவி செய்தால், இராமன் தங்களைக் கொன்று விட்டு, என் தந்தை பீடணனை இலங்கையின் அரசனாக்குவானாம்...
இராவணன் :
ஓகோ!...
திரிசடை :
இதைக் கேட்டு நான் அதிர்ந்து கூச்சலிட, என்னை இருவருமே கண்டுக் கொண்டனர்... மன்னனையே கொல்லத் துணிந்த பீடணன், பெற்ற மகளைக் கொல்லத் தயங்குவானோ... அவர்கள் என்னைப் பிடித்துவிடக்கூடும் என்பதறிந்தேன்... வெளியே ஓடி வந்துக் குதிரையேறி இங்கு வந்தேன், மன்னா!...
குழலி :
திரிசடை, என்னால் நம்ப முடியவில்லை!...
திரிசடை :
சீதை இங்கு அடைக்கலம் புகுந்ததேனென யாருக்குத் தெரியும்?... அவளை இங்குத் தூக்கி வந்ததாக அநுமன் கூறுகிறான்... தந்தை பீடணனும் மன்னன் இராவணனை ஏசுகிறான்... மன்னா, தமிழ்க் குறுநில மன்னர் எல்லாருமே நம்மை தூற்ற வேண்டும்; நமக்கு எதிராய்க் கருத்துக் கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டு இராமன் எல்லாப் பகுதிக்குமே ஆட்களை அனுப்பியுள்ளான்... சீதையை இராவணன் தூக்கிச் சென்றச் செயல் சரியோ என்று கேட்டு இராமன் எல்லா மன்னர்களுக்கும் தூது அனுப்பியுள்ளதாக அனுமன் பேச்சிலிருந்து தெரிகிறது மன்னா... இத்தனைக்கும் அடிப்படை, சீதைதானே என்று கோபத்தில் நான் தங்களைப் பேசி விட்டேன்... மன்னா, என்னைப் பொறுத்திடுக!...
இராவணன் :
திரிசடை, மகளே!... எனக்காக நீ உன் உயிரையும் துச்சமாகக் கொண்டு இங்கு ஓடி வந்திருக்கிறாய்... உன்னிடத்தில் நான் நன்றியல்லவாக் கொள்ள வேண்டும்... கண்ணே, நீ போ!... சீதை அங்கு தனியாக இருப்பாள்... போ; பெண்ணே!...
திரிசடை :
நான் போகிறேன்... ஆனால்; பீடணனும், அனுமனும்
இராவணன் :
நான் பார்த்துக் கொள்கிறேன்... நீ, போ!...
( திரிசடை போதல் )
-திரை-
பாகம் :3. காட்சி :16. காடு.
இரிசியமுகன்
இராமன்
பீடணன்
அநுமன்
இலக்குவன்
( இரிசியமுகன் புலித் தோல் மீதமர்ந்து, விழிகள் மூடி சிந்தையில் ஆழ்ந்திருக்க-
அவனை இராமனும், இலக்குவனும் கைத்தொழுது வணங்கி நிற்க-
விழித் திறந்த இரிசியமுகன்...)
இரிசியமுகன் :
இராமா, நீயே ஆரியர்க்குல தீபமானாய்.... எம்குல ஒளிவிளக்கு நீதான்!... எம்மினம் செழிக்க, மேகமாய் உதித்தவன் நீ!... உன் பிறப்பால், ஆரியர் குலம் பிழைத்தது... உன் செயலால் எம் பகை தீர்ந்தது... தமிழர் பகைக் கொண்டு எம் வாழ்க்கை சிதைக்கலாயினர்... இனி அச்சமில்லை எமக்கு... அஞ்சி ஒளியும் நிலை அகிலத்தில் எங்கும் இனி எமக்கில்லை... ஆரியர் பலர் தோன்றினர்... அரக்கர்களுக்கு அஞ்சியே வாழ்ந்தனர்... அந்நிலையை மாற்றி, அரக்கரை அடிபணியச் செய்தாய்... அரும்பணியைச் செய்த நீ ஆரியர்க் குல முதல்வனும் ஆனாய்... உன்னைப் போற்றி - உன் புகழ் பாடுவதற்காகவே, அகிலத்தில் இனி ஆரியர்ப் பிறப்பர்... அஞ்சியொளிந்த ஆரியர்க் குலத்தை இன்று நெஞ்சு நிமிரச் செய்தாய்... பேடியாய் ஓடித் திரிந்த ஆரியர்க் குலத்திற்கு நீ வீரம் தந்தாய்.... புது வரலாறுத் தந்தாய்... வாழ்க நீ மகனே!... வையகம் உன்னை வாழ்த்தும்...
இராமன் :
அய்யனே, அயோத்தியைத் துறந்து நானிங்கு ஏன் வந்தேன்?.. அரக்கரை அழித்திடவே!... அடர்ப் புரியும் கொடுஞ் செயலுக்கு எல்லாம் கூற்றுவனாய் நான் இருப்பேன்... ஆரியரின் பாதுகையாய் என் தேகம் மாற்றி எம் நெறியைக் காப்பேன்... என் மூச்சோடுக் கலந்தது ஆரியர் வாழ்வு!... தமிழர் பகைக் கொண்டு வரின், என் நெஞ்சம் கனல் கொண்டு பொசுக்கும்... அவர் நகைக் கொண்டு வரினும், எமது நெறிக் கொண்டு அடிமைப் படுத்துவேன்... எனதுச் செயல் கண்டு, நீவிர் என்னை ஓர் அவதார நாயகன் என்று புகழ்ந்தால், அதுவே எனக்கு ஆனந்தம் ஊட்டும்!...
இரிசியமுகன் :
அய்யமென்ன... ஆரியராமனே, பாலையிலே பாம்பாய்ப் பரிதவித்த எமக்கு, நீ சோலையின் நிழலாய்த் தோன்றியுள்ளாய்... அவதார நாயகனன்றி வேறு எவரால் இது இயலும்... அரக்கரை அழிக்க அவதாரம் எடுத்தவனே... ஒரு முகமாய் ஆரியமுனிகள் நின்று முகமன் கூறுகின்றனர்; இராமா, உனது அருஞ்செயலுக்கு!... தசரதன் மாண்டது உன்னாலன்று; விதியால்!... நீ துறந்தாயே அயோத்தியை; எதனால்?... விதியால்!... விதியின் செயலன்றோ உன்னை விந்த நாட்டுக்குக் கொண்டு வந்தது... அரக்கர் அழிந்துபட, ஆரியர் செழித்து மலர எது காரணம்... உனது பிறப்பல்லவா காரணம்!... இதோ இந்த மண்ணின் கதை என்ன?... வாலியோ, சுக்ரீவனோ வாய்த் திறந்து எம்மை வதைத்திடு என்றிட்டால், எமது வாழ்வது நாசம்... ஆனால்; இன்று நிலை என்ன?... வாலி மாண்டான் உன்னால்!... சுக்ரீவன் மண்டியிட்டான் உன் முன்னால்!... ஆணவம் பிடித்த அரக்கர், இன்று ஆரியரை, அடிப்பணியும் வித்தை, உன்னால் தோற்றுவிக்கப்பட்டது... நீ வாழ்க; எம்மினம் செழிக்க!... உன் சொல் பணிய ஆரிய முனிகள் அனைவரும் சித்தமாயினர்...
இராமன் :
அய்யனே!
இரிசியமுகன் :
ஆமாம்; இராமா!... அருகிலிருக்கும் ஆரியமுனிகள் பலர் உன் பணி போற்றி மகிழ்ந்தனர்... தொலைவிலிருக்கும் ஆரியமுனிகளுக்கு தூது விட்டுள்ளேன்... யாவரும் உன்னை மெச்சுகின்றனர்... ஏனினி தயக்கம்?... எத்தரைக் கொன்று எமக்கு அடிமையாக்கிடு!... எம்மவர் இங்கு தடையின்றி வாழ, வகைச் செய்திடு!...
இராமன் :
என் உயிர் துறப்பேன்... என் சீதையை துறந்தாலும் துறப்பேன்... இலக்குவனையும் துறப்பேன்... ஏன், என் சகலத்தையும் துறப்பேன்... ஆனால்; பார்ப்பனர்களின் வாழ்வை மட்டும் துறக்க மாட்டேன்... ஆரியர்களை வாழவைப்பதுதான் என் பணி!... முனிவரே, தங்கள் மனம் மகிழும்படி ஒரு சேதி சொல்லவா?...
இரிசியமுகன் :
மைந்தனே, உன் வாய் வார்த்தைகள் யாவும் ஆரியவாழ்வுக்கு அமுதமல்லவா...
இராமன் :
இராவணன் தம்பி பீடணன் வந்துள்ளான், இங்கு!...
(இரிசியமுகன் அதிர்ந்து )
இரிசியமுகன் :
ஏன்?
இராமன் :
வாலிக்கும், சுக்ரீவனுக்கும் பகை மூண்டதேன்?...
இரிசியமுகன் :
பதவி மோகம்!... அதனாலன்றோ மூண்டது பகையும்...
இராமன் :
அதனைத்தான் நானும் மூட்டுகிறேன் பீடணன் நெஞ்சில்!
இரிசியமுகன் :
இராமா, நீ... நீ... ஞானிகளுக்கெல்லாம் ஞானியடா!... அறிவிற் சிறந்த சான்றோனாடா நீ!... உன் புத்திமானம் புவியில் எவருக்குமில்லையே?... யாருடைய நெஞ்சிலும் உதயமாகாத எண்ணம் உன் நெஞ்சில் முளைத்தது எப்படி?... உன் கற்பனையில் இப்படியும் ஒரு விளையாட்டா?... விந்தை என்பேனா?... மாயை என்பேனா?... சொல் இல்லையே உன்னைப் போற்ற!... நீ என் நெஞ்சுக்கு சொல் மழையோ தூவினாய்... பூமழையன்றோ பொழிந்தாய்... இலங்கை இரு கூறாகிட, நீ இலங்கை வேந்தன் தம்பி பீடணனைக் கருவியாகக் கொண்டாயா!... உன் திருவிளையாடலுக்கு அளவே இல்லையடா... என் கண்மணி இராமா... நீ கடவுள் தானடா!...
இராமன் :
அய்யனே, அனுமனை அனுப்பியிருந்தேன் பீடணனைச் சந்திக்க!... நான் சொன்ன நயமானச் சொற்களை பீடணனிடம் கூறி, பீடணனை இங்கு அழைத்து வந்துள்ளான், அனுமன்!... நேற்றே வந்து விட்டனர், அவர்கள்... காலைவேளை ஞானவேள்விக்குப் பின்னர் உம்மிடம் கூறக் காத்திருந்தேன்... அதோ சற்று திரும்பிப் பாருங்கள்...
இரிசியமுகன் :
நீ மாயவனோ... மாலவனோ... மண்ணுலகின் நாயகனோ... என் மனமெல்லாம் பூரிக்குதடா...
(இரிசியமுகன் திரும்பிப் பார்க்கிறான்)
இராமன் :
பிறர்க்குத் தலை வணங்கி வாழா பரம்பரையில் தோன்றியவன் பீடணன்... அதோ பாருங்கள்... என் திசை நோக்கி, கை கூப்பி வணங்கி நிற்கிறான்... ஆசையூட்டப்பட்டு அவன் நெஞ்சில் அரச பீடம் ஏற்றப்பட்டு விட்டது!... கனவு போல் அவன் நெஞ்சில் அரசசுகம் வலம் வந்துக் கொண்டிருக்கிறது... அது நனவாக, இந்திரனைத் துதித்து நிற்கிறான்... முனிவரே, கடவுள் இல்லை எண்று கொக்கரித்த தமிழ் கபோதிகள் நெஞ்சிலே பேராசை எனும் பெரு நெருப்பினை மூட்டிவிட்டால், கால் தூசியைக் கூட கடவுள் என்று வணங்குவார்கள்... இந்தத் தமிழர்களை நான் நன்றாகவே கணித்து விட்டேன்... அதோ அவனைப் பாருங்கள்... காதிரண்டைக் கைகளால் பிடித்து, காலிரண்டை மடக்கிக் கரணமிட்டு வணங்குகிறான்... அவன் வாழ்நாளில் ஒரு நாளேனும் கடவுள் என்று கண்ணீர் மல்க வணங்கியிருப்பானா?... இன்று பாருங்கள்... தேவேந்திரனை நினைத்து, அரசபீடத்துக்காக மண்டியிட்டுத் துதிக்கிறான்... தமிழர்களை எப்படியும் ஆட்டுவிப்போம் என்பதற்கு சுக்ரீவனும், அநுமனும் அதோ அந்த பீடணனுமே சான்று!... ம்... இலக்குவா, அழைத்து வா அவனை!
(இலக்குவன் கையோசை எழுப்பி )
இலக்குவன் :
அனுமனே; அழைத்து வா பீடணனை!
( ஓசையோடு கூவுகிறான்)
இரிசியமுகன் :
தெய்வமில்லை என்றுச் சொன்ன இந்தத் தமிழர்களை ஆரியர்த் தாள் கழுவி, நீர் பருகிடச் செய்திடு...
இலக்குவன் :
முன்னரே செய்துவிட்டோம் முனிவரே!... 'ஆண்டவன் அருள் வேண்டுமானால் அவதார நாயகன் இராமன் பாதம் கழுவி நீர் பருகு' என்றுச் சொன்னேன்... அரியணையின் மீது ஆசைக் கொண்டு சுக்ரீவனும் இராமன் கால் கழுவி வழிந்த நீர்க் குடித்தான்...
இரிசியமுகன் :
ஆரியருக்கு அரக்கர் இழைத்த கொடுமை சொல்லில்தான் அடங்குமா?... பழி வாங்கி எம் குலம் பரந்து வாழ வகைச் செய்திடு... எம் நெறிக்கு பாவமிழைத்த இவர்களின் மனைவிகளை தாசிகள் என்று பகர்ந்திடு... ஆரியர்களுக்கு தாசிகள்தான் தமிழ்ப் பெண்கள் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்ட பின்னரே, அரசபதவி கிடைக்க வழிச் செய்வேன் என்று இவர்களைப் பணியச் செய்திடு...
இராமன் :
இதில் அய்யமென்ன?... ஆரியன் வாழ்வதற்காகவே பிறந்தவன்... அவன் எப்படியும் வாழ வேண்டும்... எந்நிலையிலும் எவருக்கும் அடிப்பணிந்திடக் கூடாது... ஆரியன் பிரம்மனின் நெற்றியிலிருந்தும், தமிழர்கள் பாததூசியிலிருந்தும் பிறந்தவர்கள் என்பதை நான் நிலை நாட்டுவேன்... இதனை நான் செய்யவில்லையென்றால், என் கீர்த்தி கெட்டழியட்டும்... தமிழர்கள் நீசப்பிறவிகள் என்பதை நான் நிலை நாட்டத் தவறுவேனேயானால், என் கழுத்தறுத்து என் உயிர் துறப்பேன்... இது உறுதி!...
(அனுமன் பீடணனோடு வருதல்)
பீடணன் :
சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்...
சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்...
சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்... சிறி இராம ஜெயம்...
(முனகிக் கொண்டே பீடணன் வருதல்...)
(பீடணன் நெற்றியில் வெண்சாம்பல் பொட்டளவுத் தடவப் பட்டிருக்கிறது...
பீடணன் இராமன் தாள் பணிந்து எழுகிறான்...)
இராமன் :
பீடணா, ஆரியமுனி இவன் நாமம் இரிசியமுகன்... தவம் பலச் செய்து, வரம் பல பெற்றவன்... வாய்த் திறந்து சபித்தால், உன் வாழ்வது நாசமாகும்... கண் கொண்டு கனல் கக்கினால், உன் தேகமது சாம்பலாகும்... இவர் விடும் மூச்சிலும் சூடிருக்கும்... இந்திரனை நினைத்து இவர் இரு நூறாண்டு யாகம் செய்தவர்...
பீடணன் :
அய்யா, உங்கள் ரிக் வேதமே மானிடருக்கு ஆயுள் நூறு ஆண்டுகள்தான் என்றுக் கூறுகிறது... இவர் இருநூறாண்டு...
இராமன் :
அரக்கர்களுக்கு விதிக்கப்பட்டதுதான் நூறு ஆண்டு!... ஆரியருக்கு ஏதடா வரம்பு... ஆரியனிடம் கேள்வி கேட்காதே... நீ இலங்கையின் அரசனாக வேண்டுமெனில், வாய் மூடி இரு!... என் பேச்சைக் கேட்டிடு... சிவனை நினைத்து இவர் தவம் செய்கையில், சிரசில் முளைத்த முடி பூமியோடுப் புதையுண்டது... இவர் நினைத்தால் பூமி சதிராடும்... இமயம் வானிலே பறக்கும்... கடலும் ஆகாயமாகும்!... வானம் கடலாகும்... மேகம் மலையாகும்... பீடணா, இவர் தாள் பணிந்திடு...
(பீடணன் இரிசியமுகன் தாள் பணிந்து, நெடுஞ்சாண்கிடையாக தரை மீதில் கிடக்க )
இரிசியமுகன் :
தமிழ் நாயே, அருளப்பட்டாய்!... இன்று முதல் நீ ஆரியருக்கு சேவைச் செய்வாயாக!... அதுவே உனக்கு புண்ணியந்தரும் பணியாகும்... அரக்கனாய் இதுநாள் வரையும், நீ வாழ்ந்து, கொடும்பாவத்துக்கு ஆளானாய்... பாவம் உன்னை பலிக்கொள்ளும் முன்னர், எம் பாதம் வந்தடைந்தாய்!.... ஆரியர் அடிப்பணிந்து வாழ்ந்தால், மோட்சத்துக்கு வழிப்பிறக்கும்.. ஆரியருக்கு தானம் செய்வதை நீ புண்ணியமாகக் கருது!... நரகம் உனக்குக்கிட்டது... நீ இறந்தப்பிறகு , மேலோகத்தில் உனக்கு தேவபதவிக் கிடைக்கும்... எழுந்திரு!...
(பீடணன் எழல்)
இராமன் :
அனுமனே, ஏன் நிற்கிறாய்?... ம்... வணங்கு!...
( அனுமன் இராமனையும், பின்னர் இரிசியமுகனையும், இலக்குவனையும் தாள் பணிந்து எழல்)
இரிசியமுகன் :
பீடணா, தமிழ்மொழி என்பது அரக்கர் மொழி!... இதனைக் காட்டுப் பன்றிகள் கூட பேசாது... தமிழ் மொழி பேசுவதால், நாளை நீ, இறந்தப் பிறகு அடையவிருக்கும் தண்டனை அறிவாயோ?... தமிழ் மொழி பேசியமைக்காக, உன் நாவின் மீது சூடு வைக்கப்படும்... வெந்த நாக்கினை வெடுக்கெனப் பிடுங்கி, வாய்ப் பேசா ஊமையாக்கி விடுவர் உன்னை!... நரகம்தான் உனக்கு!...
பீடணன் :
அய்யனே, தமிழ்ப் பேசும் மண் மீதுப் பிறந்ததால், பாவம் என்னை சேர்ந்த்தது... இதற்கோர் பரிகாரம் கூறுங்கள்...
இரிசியமுகன் :
நீ தமிழோடு ஆரியம் கலந்துப் பேசு!... ஆரியமொழிதான் வையகத்தின் முதல் மொழி... இதனை நீ எங்குச் சென்றாலும் கூற வேண்டும்... இதுவே தேவ மொழி!... இந்த மொழியைத் துதித்தால், உன்னைத் துன்பம் வந்தடையாது... நரகமும் சேராது...
பீடணன் :
இன்று முதல் நான் தங்கள் அடிமை!... தங்கள் பணியே எனது சித்தம்...
இலக்குவன் :
பீடணா, சொல் ஒன்று சொல்லு முன்னர், வணங்கு நீ ஆரியனை!... செயல் ஒன்று நீ செய்யு முன்னர் வணங்கு நீ ஆரியனை!... ஆரியனே சிறந்தவன்... ஆரியனே ஆண்டவன்... அவனே உனக்குத் தலைவன்... அதனால் ஆரியன் சொல், நீ பணிந்திடு!... மனதில் மாசுவின்றி நீ ஆரியரை வணங்கினால், உன் எண்ணம் யாவுமே ஈடேறும்!...
பீடணன் :
மாயசக்தியோ?... மந்திர சக்தியோ?... எதுவென்று அறியானாம் அனுமன்!... அவன் மனதை இன்னும் மர்மம் ஆட்கொண்டுள்ளதாம்... நினைத்ததை நொடியில், நிகழ்த்தும் சக்தி, இராமனுக்கு உண்டாம்... மாயவனே, நான் வேண்டுவதெல்லாம், இலங்கை மண் ஆளவேண்டும்... மாயவா, உன் பாதத்தை நான் பிடிக்கிறேன்... எனக்கோ அரசபீடம் வேண்டும்... அதனை நீ பெற்றுத் தர யாசிக்கிறேன்...
இராமன் :
பீடணா, நீ இலங்கையின் இளவல் எனில், உனக்கேன் உனது அண்ணன் அரசுரிமைத் தரக் கூடாது?... நீ ஆளத் தகுதியற்றவனா?... உனக்கு அரசாள அருகதையில்லையா?... பசிக்கும் போது சோறும், படுத்துறங்க வீடும்தானோ உனக்கு?... இதுதானோ அரசவாழ்க்கை?... எளியக் குடிமகனுக்கும் இது உண்டு!... நீயோ அரச மகன்!... உனக்கேன் அரசில்லை... இலங்கையின் பாதியை உனக்குத் தந்து, உன்னை ஏன் அவன் அரசனாக்கவில்லை?...
இலக்குவன் :
ஆரியக்குலத்தில் நீ பேதம் காண முடியுமோ?... பரதன் விரும்பினான் அரசாள... இராமன் இசைந்தான் அவனாளா... மெய்யொன்று சொல்கிறேன் நீ கேள்... என் மனைவியை இவன் விரும்பினால், நான் விட்டுத் தருவேன்... இவன் மனைவியை பரதன் கேட்டால், விட்டுத் தருவான்... சத்ருகன் மனைவியை இராமன் பல இராத்திரிகள் சுவைத்ததுண்டு... நீ சொல்!... குழலியோடு ஒரு இராத்திரியேனும் சுகம் கண்டிருப்பாயோ?... ஏனிந்த பேதம்?... அரச இளவளாய்ப் பிறந்தும், அரசகுமாரியாம் குழலியை நீ சுகங்காணவில்லையென்றால் உனக்கெங்கே அவன் அரசபீடம் தருவான்?...
இராமன் :
ஆரியருக்கும், அரக்கருக்கும் இதுதான் பேதம்... எம் வாழ்வில் பேதமில்லை... எம் பிறப்பில் தாழ்வில்லை... எம் நடையில் தளர்வில்லை... யாம் எவருக்கும் அடிமையில்லை... அடிமையை ஆள்வோனே ஆரியன்... ஆரியனே ஆண்டவன்... ஆண்டவன் நான் விரும்பினால் அரசபீடமும் நீ ஆளலாம்...
பீடணன் :
என்னையே அடிமையாக்கினேன்... ஆரிய மைந்தா, நீயே எனது தெய்வம்...
( தாள் பணிந்து எழல் )
இராமன் :
ஆரியக்குலத்தில் ஒரு சாத்திரம் உண்டு... அனுமா, நீ இதனைச் சொன்னாயோ?... மீண்டும் சொல்கிறேன்... பீடணா, தெய்வத்திடம் ஒன்று வேண்டும்போது, காணிக்கையொன்று படைத்தல் வேண்டும்...
பீடணன் :
ஏதுக் காணிக்கையாயினும் நான் தருவேன்... என்னையே தருவேன்... என் உயிரையும் தருவேன்... என் சகலத்தையும் தருவேன்...
இராமன் :
சகலத்தையும் தர வேண்டாம்... உன் சம்சாரத்தை மட்டும் தா!...
பீடணன் :
இராமா... (கத்துகிறான்)
இலக்குவன் :
அடேய் அரக்கப் பயலே!... பேர் சொல்லியோ கத்துகிறாய்?... இராமன் யார்?... அவதார நாயகனடா... கடவுளின் அவதாரத்தையோ பேர் சொல்லி அழைப்பது?... கழுத்தறுத்திடுவேன் நீச நாயே...
(வில் எடுத்து ஓங்கி பீடணனை இலக்குவன் நெருங்க-
பீடணன் அழுங்குரலில்-)
பீடணன் :
அய்யனே!... அப்படியோர் பழக்கம் எம் குலத்தில் இல்லையே... கொண்டவளைத் தாரை வார்க்கும் இனம் தமிழ் இனம் அல்லவே...
இரிசியமுகன் :
பேசாதே!... கொண்டவள் என்று நீ கூறுகிறாயே... யாரவள்?... தானே முளைத்தவளா?... மண்ணிலிருந்து உருட்டி உயிர்க் கொடுக்க உயிர்த்தவளா?... சொல் யாரவள்?... எப்படித் தோன்றினாள்?... எவரால் அவளுக்கு உயிர்க் கொடுக்கப்பட்டது?... கூறடா, பீடணா!... ஆண்டவனால் படைக்கப்பட்ட உன் மனைவியை உனக்கு உரியவள் என்று நீ கூற உனக்கேதடா உரிமை?... படைத்தவன் ஆண்டவன்... அவனுக்குத்தானடா அந்த உரிமை... ஆண்டவனும் ஆரியனும் ஒன்று... ஆரியன் உன் மனைவியை விரும்புவதில் தவறேதடா... கடவுள் கைப் பட்டால் உன் குலவாழ்வு செழிக்குமடா... இதனை உணராமல் நீ ஏனடா கத்துகிறாய்?... திமிர் கொண்ட அரக்கனே, இன்னும் உன்னிடத்தில் உனது பிறவித் திமிர் அடங்கவில்லை... உனக்கோ யாம், உதவிட வேண்டும்?... உன்னையோ இலங்கையின் மன்னவனாக ஆக்கிட வேண்டும்?... படைப் பலம் கொண்டு, பரந்த வேலி அமைத்து, அரண் கட்டி அரசாளும் இராவணனைக் கொன்று உன்னை அரசனாக ஆக்க வேண்டும்?... நீ எமக்குத் தரும் காணிக்கை அற்பமடா... ஓடிப்போ அரக்கனே... அரசபீடமாம்; அதனை இவன் ஆளவேண்டுமாம்...
இரிசியமுகன் :
பீடணா, மாணிக்கம் பதிந்த இலங்கை மண்ணின் மகுடம் நீ தரித்து, மஞ்சள் பொழியும் மாலை நிலவின் எழிலோடு, நீ அமர்ந்து அகமிழ்ந்திருக்க- அரச யாழெடுத்து அரிவையர் சூழ, இளமங்கையர் மடியில் நீ இன்பம் காண, உனக்கு விருப்பம் இல்லையோ...
பீடணன் :
விருப்பம் இல்லாமலா நானிங்கு வந்தேன்?...
இரிசியமுகன் :
உண்டென்றால் நீ உரக்க கூவு!...
பீடணன் :
என்னவென்று?
இலக்குவன் :
என் மனைவியும், என் தமிழினப் பெண்கள் யாவருமே, ஆரியருக்கு தாசிகள்!...
( பீடணன் தயங்குகிறான் )
இராமன் :
ம்... கூவு!
(பீடணன் தயங்கல்...)
இலக்குவன் :
சொல்லடா, பீடணா!...
இராமன் :
தயங்குவாயானால், நீ ஆண்டவனது அருள் பெறத் தகுதியற்றவனாகிறாய்... கூற மறுப்பாயானால், உன்னை இரு கூறாக்கி, இங்கேயே மண்ணுக்குள் புதைத்து விடுவோம்...
இரிசியமுகன் :
சாக விருப்பமெனில், கூறாது நில்!... அரசாள விருப்பமெனில் தயங்காமல் சொல்!...
( பீடணன் வாயசைத்தல்)
இலக்குவன் :
செவிக் கேட்கவில்லை; நீ சொல்வது!...
பீடணன் :
எ... எ... என் மனைவியும், என் தமிழினப் பெண்கள் யாவருமே, ஆரியருக்கு தாசிகள்...
இரிசியமுகன் :
மூன்று முறைக் கூறு... அனுமா, நீயும் சேர்ந்துக் கூறு...
பீடணன் : }
அனுமன் : }
என் மனைவியும், என் தமிழினப் பெண்கள் யாவருமே, ஆரியருக்கு தாசிகள்...
என் மனைவியும், என் தமிழினப் பெண்கள் யாவருமே, ஆரியருக்கு தாசிகள்...
என் மனைவியும், என் தமிழினப் பெண்கள் யாவருமே, ஆரியருக்கு தாசிகள்...
( இரிசியமுகனும், இராமனும், இலக்குவனும் கைக் கொட்டி ஆராவாரித்தல்...)
-திரை-
பாகம் : 3. காட்சி : 17. அரசவை.
அமைச்சர் மூவர்,
மாரீசன்,
இராவணன்,
வண்டார்குழலி,
சாமரம் விசிறுவோர்.
(அவையில் யாவரும் இருக்க-
இராவணனும், குழலியும் நுழைகிந்து, இருக்கையில் அமர்கிறார்கள்... )
அமைச்சர் (1) :
வேந்தே, வாழி!... வெண்கொற்றவா, இலங்கை வானிலே கருமூட்டம்!... இன்னிசைத் தூவும் தென்னங்கீற்றுதனிலே மவுன ராகம்... அலைக் கடலும் துயருற்றனவோ... ஆனந்தக் களிப்பிலே, அகமகிழ்ந்திருக்கும் இலங்கை மண், இன்று ஆளரவமற்ற புறவெளிப் போலாயிற்று... சலங்கையொலித் துறந்த ஆடலரங்கு போல் மக்கள் இனிமைத் துறந்து, ஏக்கமுற்றுள்ளனர்... ஏனிந்தக் கொடுஞ் சூழல்?... இதற்கொரு முடிவென்ன?... ஆய்ந்திடவே இன்று அரசவைக் கூட்டப்பட்டது... அருந்தமிழ் ஆட்சிக்கோர், அவச்சொல் நேருங்கால், உயிர் ஒரு பொருளாகுமோ... உரைத்திடு, மன்னா!... உயிர்த் தந்த மண்ணை விலைப் பேசும் பீடணனை உணராமல், இதுகாறும் வாளாவிருந்தோமெனில், இலங்கை மண்ணுக்கு நாம் இழைத்தது துரோகமல்லவா... இனியும் நாம் அமைதி காப்பதா?... மண்ணின் மாண்பை சிதைப்பதா?...
அமைச்சர் (2) :
இதனைக் கொடுஞ் சூழல் என்பதா?... இல்லை; எமது கோழைத் தனம் என்பதா?... முளைக்கும் போதே முள்மரம்தனை வெட்டாமல், வளரவிட்டு வாய்க்கதறுவது போல் ஆயிற்றே இப்போது!... புற்றில் துஞ்சிட பாம்பு இன்றெமது இல்லம் புகுந்தது எனில் எமது பேதையாலன்றோ... பாம்பென்று தெரிந்தும், நாம் அதனைப் படைக் கொண்டுக் கொல்லாமல் விட்டதாலன்றோ, இன்று அது நஞ்சுமிழச் சீறுகிறது... அத்துமீறி விந்தகத்தின் தடையையும் மீறி, வேள்விச் செய்து, எமது நெஞ்சம் வேதனையுற, தாடகையையும் கொல்லப்பட்ட போதே, இராமன் பாம்பென்று அறிந்தோமே... கொல்லாமல் அவனை அன்று விட்டதால், இன்று அவன் பீடணன் உருவில் நஞ்சுதனை கக்குகிறான்... இதற்கு மாற்று என்ன?... மருந்துதான் என்ன?
அமைச்சர் (3) :
வஞ்சகன் அவன் என்று நாம் சந்தையில் நின்று கூவினாலும், எம்மை ஒரு பொருட்டாய் உலகரங்குக் கொள்ளுமோ?... ஓவியந்தனைக் குறைக் கூறும் குருடர் இவரென்று எம்மை அவனியோர் இகழாரோ?... இந்நிலையை வஞ்சகன் இராமன் வண்ணமாய் வரைந்து விட்டான்... எம்மீது கரியும் பூசிவிட்டான்... உலகரங்கின் முன்னே, நாம் எதனைக் கொண்டு கழுவி, எம்மை தூயவர்கள் என்று காட்டிட இயலும்?... சீதையின் பால் காமம் கொண்டு, சிறைச் செய்து இராவணன் சென்றான்... அவனது இச்சைக் கண்டு மனம் வருந்தி இராவணனை வெறுத்து வந்துள்ளான் பீடணன் என்று இப்பெருநில மக்கள் யாவரும் எம்மை, சிறு சொல் கொண்டுப் பேசும் நிலையாயிற்று!...
மாரீசன் :
பேசும் நிலையாயிற்று... இதோ ஓலைகள் எண் திசையிலிருந்தும்!... எமதுச் செயல் தீயது என்று, தூதுவன் மூலம் ஓலைக்கொடுத்துள்ளனர் அரசர் பலர்... வாசிக்கிறேன்... இது யவனநாட்டுச் செய்தி... 'பிற மங்கையைக் கண்டு மோகிப்பது அறிவார்ந்தவர்ச் செயலன்று ... அந்தப்புரத்து செயல் அரங்கத்துக்கு வந்துவிட்டது... மாமன்னன் செயல்இது என்றாலும் இதனை மாண்புக்குரியச் செயலென்று எமது யவனநாடு ஏற்றுக்கொள்ளாது... சீதையை உரியவளிடம் சேர்த்து, இனியொருத் தவறு இவ்வண்ணம் நிகழாது காப்பது பேரரசின் பணியாகும்...
அமைச்சர் (1) :
இது யவனநாட்டு ஓலை!... ம்... அடுத்தது?
மாரீசன் :
மிதிலை நாட்டிலிருந்து... 'இலங்கை மன்னா, இதுவோ உனதுத் திருக் கோலம்?... இதற்கோ உனக்கு மாமகுடம்?... உன் இல்லக் கிழத்தியை இன்னொருவன் கொண்டு சென்றிருந்தால் அல்லவோ, நீ வேதனையின் உருவை உணர்வாய்... துடித்து நிற்கும் இராமன் துயர்ப் போக்கு!... இல்லையேல், அவனியின் அவச்சொல்தனைத் தாங்கு!...
அமைச்சர் (1) :
இது மிதிலை நாட்டவன் தந்ததோ?... ம்... அடுத்து என்னவோ?...
மாரீசன் :
குறுநிலமாளும் குகனும் ஓலைத் தெடுத்துள்ளான்... "தமிழ்மண் மீதில், நீ தவழ்ந்து வளர்ந்தவனோ?... தகுதியிழந்தாய் இன்று நீ, தமிழுலகாள!... வேடந்தரித்தவன் நீ வேந்தன்தானா?... வேந்தனெனில் இந்த வேட்கையும் சரியோ?... மானங்கொண்டு பீடணனும் இலங்கை மண் துறந்தான்... நீயோ, மானமிழந்து, பிறமங்கையோடு உறைந்தாய்... காமம் கொண்டு நீ அரசக் கட்டில் மீது ஏனிருக்கிறாய்?... உன் இச்சை அறிந்தால், காட்டு மிருகங்கள் கூட காத வழி ஓடோடிடும்; உன் காமம் கண்டு அஞ்சி!... அடுத்தவன் மனைவியோடு, அசோகவனத்தில் நீ துஞ்சுகிறாயா?... அல்லது எமது இனமாண்பின் மீது நஞ்சு பொழிகிறாயா?...
அமைச்சர் (1) :
தகுதியோடு அரசாள, குகன் தவறி விடுவதால் அல்லவா, அவன் நாட்டு வழியே ஆரியர்த் தடையின்றி நுழைந்து விடுகின்றனர்... இவன் தூற்றுகிறான் எம்மை!... இதுவோ இன்றெமது நிலை!... ம்... அடுத்த ஓலைதனைப் படி...
மாரீசன் :
இராநூபுரம் நாட்டின் ஓலையிது!... "மிகப்பெரிய நாட்டின் அரசன் செய்த மிகச் சிறியப் பணியிது!... காட்டில் திரிந்த சீதையின் பால் ஆசை வந்தது எனில், உனது நாட்டில் வாழும் நல்லிளம் பெண்களும் உனது ஆசைக்கு பலியானவர்களாகத் தானே இருக்கும்...
(குழலி கோபம் கொண்டு)
குழலி :
மாரீசா!...
அமைச்சர் (1) :
கோபம் வேண்டாம் அரசியாரே!... பேசத் துணிந்து விட்டான்; பேசட்டும்...
மாரீசன் :
இயக்கநாட்டுத் தலைவன் இதனை அனுப்பியுள்ளான்... இலங்கைப் பேரரசின் ஆட்சியின் கீழ் எனது இயக்கநாடு பெருமைக் கொண்டிருக்கிறது என்றிருந்தேன்... இன்றோ, உம்மால் நானடைந்த சிறுமையைக் கூற என் நாவும் கூசுகிறது...
அமைச்சர் (1) :
அடுத்த ஓலை என்ன?...
மாரீசன் :
நாகநாட்டின் ஓலையிது!... "நல்லவன் நெஞ்சிலும் இப்படியோர் நச்சரவம் குடிக் கொண்டிருக்குமா?... நம்ப முடியவில்லை... என்றாலும்; நடந்துவிட்டச் சம்பவம் நல்லதிற்கில்லை... ஆரியர்ப்பால் அகிலத்தவர் மனம் இளக, தமிழர் பால் அகிலத்தவர் தூபம் செய்ய உமது ஆசைச் செயல் ஏதுவாய் அமைந்து விட்டது...
அமைச்சர் (1) :
நம்மவரையே நம்மவர்த் தூற்றும் வண்ணம், இராமனும் இரிசியமுகனும் நல்லதோர் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்... இனியும் யாம் ஊமையாய் இருந்தால், உலகம் எம் நெஞ்சில் குத்தும்...
மாரீசன் :
நாளும், நாளும் ஓலைகள் நாடெங்கிலும் வந்த வண்ணம் உள்ளன... மன்னா, நாமினிச் செய்ய வேண்டியதென்ன?...
இராவணன் :
பீடணனைச் சந்தித்தாயா?...
மாரீசன் :
சந்தித்தேன்...
இராவணன் :
கூறினாயா?...
மாரீசன் :
கூறினேன்... மறுத்துவிட்டான்... 'மண்ணாளும் ஆசை பீடணா, உனக்கிருந்தால், மன்னன் இராவணன் அழைக்கிறான் வந்துவிடு... இலங்கையை நீயே அரசாண்டிட எமது மன்னன் அழைக்கிறான் வா' வென்று அழைத்தேன்... அவன் இராமனோடு ஏதோப் பேசி, பின்னர் என்னிடம் வந்தான்... 'அரசாட்சி தருகிறேன் வாவென்று என்னை அழைத்து, இலங்கை மண்மீதில் சிர சேதம் செய்வான்!... இராமன் இதனை ஞானத்தால் கூறிவிட்டான்... உன் வாய் வார்தைதனில் ஏமாற நான் ஏமாளியல்லடா!... போய்விடு!.. இலங்கையின் அரசனாய் என்னையிங்கு முடி சூட்டிட இராமன் இருக்கிறான்... இராமனொரு தெய்வம்... அவன் என்னை இலங்கையின் அரசனாக்குவான்... இதனையும் இராவணனிடம் கூறி விடு!... சீதையின் பால் சிந்தையிழந்த இராவணனுக்கு இறுதி நெருங்கிவிட்டது என்பதையும் சொல்லிவிடு' என்றான் பீடணன்!...
இராவணன் :
பல நாட்டரசர் நெஞ்சில் எம் மீதுப் பழியை வளர்த்து விட்டனர்... உறவாய்ப் பிறந்த தம்பியும் உரைத்து விட்டான் வீணுரை!... கேடு மதிக் கொண்ட இராமன் மீது யாம் கோபம் கொண்டு போர் செய்தால், பாரினிலே எம் மீது வீண் பழி தான் பெருகும்... சீதையையும் தூக்கிச் சென்று விட்டு இராமனையும் போர் தொடுத்துக் கொன்றான் என்றோர் பழியும் எம்மை வந்தடையும்... சீதையை இராமனிடம் சேர்த்து விட்டால், எம் மீது சொல்லப்படும் பழியை யாமே உறுதி செய்தல் போலாகும்... சீதையை களவாடிச் சென்றான்... உலகத்தாரின் தூற்றுதலுக்கு அஞ்சி, திரும்பவும் சீதையை இராமனிடம் சேர்த்தான் இராவணன் என்றப் பழி உறுதி செய்யப்பட்டு விடும்... அமைச்சரே, இனி நாம் செய்ய வேண்டியதென்ன?... சீதைக்கு நான் செய்தது உதவி!... அதிலே களங்கமில்லை என்பதனையும், இராமன் கேடுக் கொண்டு மனதில் சூது புரிந்துக் கொண்டிருக்கிறான் என்பதனையும் உலகம் அறியச் செய்ய வேண்டும்... இதற்கோர் வழிக் கண்டு எனக்குக் கூறுக...
( இராவணன் கூறிவிட்டு அவையை விட்டு நீங்க-
குழலியும் தொடர-)
-திரை-
பாகம் :3. காட்சி-18. மலைக்குகை (காடு)
பீடணன்,
இரிசியமுகன்,
இராமன்,
சுக்ரீவன்,
அநுமன்.
( பீடணன் பாறை மீது அமர்த்தப்பட்டிருக்கிறான்...
தரை மீது ஒரு மகுடம்...
அதனெதிரில்-
நெய்யூற்றி தீ வளர்த்துக்கொண்டிருக்கிறான் இரிசியமுகன்...
சுக்ரீவன், அநுமன் இருவரும் பீடணனுக்கு சாமரம் விசிறிக் கொண்டிருத்தல்...
இலக்குவன் எரியும் தீயில் சிறுச் சிறுக் குச்சியை ஒடித்து போடல்...
இரிசியமுகன் புரியாத மொழியில் ஏதேதோ ஓதி-
தீயில் நெய் வார்த்துக் கொண்டிருக்கிறான்...
இராமன் இரு கரம் ஏந்தி...)
இராமன் :
ஓ... இந்திரனே...
இடியை வைத்திருப்பவனே...
எங்கள் பிரார்த்தனையைக் கேள்...
அடிமை நாய் பீடணனை இன்று இலங்கையின் அரசனாய் முடி சூட்டுகிறோம்...
ஆரியர் பாதம் பணிந்துத் துதிக்கும் பீடணன் என்றைக்கும் எமது ஏவலனாய் ஊழியம் புரிய அருள்வாக்கு மலர்வாய்...
சூரியன் மீண்டும், மீண்டும் உதயமாவதுப் போல்-
கடலில் மீண்டும் மீண்டும் அலைகள் பெருகுவது போல்-
சூடுக் கண்டாலும் நிறம் மாறாதப் பால் போல்-
பீடணன் ஓய்தல் இன்றி ஆரியத்துக்கு ஏவல் புரிய வேண்டும்...
அவன் அரசாட்சியில் ஆரியம் தழைத்தோங்கட்டும்...
வாழும் ஆரியர் வாழ்வு வளம் பெறட்டும்...
நீர் சூழ்ந்த இலங்கையில் இனி ஆரியரும் சூழ்ந்து வாழட்டும்...
அருள் பொழிவாய் ஆண்டவனே...
(இரிசியமுகன் பெருங்குரலில் கூவுகிறான்...)
பீடணா, சூத்திரனாய்ப் பிறந்து சுத்தம் அடைந்தாயில்லை... எம்பாதம் பணிந்து உன் பாவம் தீர்த்தாய்... இனி வரும் நாளிலும் நீ ஆரியர் வாழ்வு சிறக்க, உன் சிந்தை செலுத்துவாய்... புண்ணியம் என்பது இதுவே!... கண்ணில் திரைப் போல் நீ ஆரியருக்கு காவலனாய் வாழ்ந்தால் மறுப் பிறவியில் நீ மானிடனாய்ப் பிறப்பாய்... இல்லையேல்; நாயாய், நரியாய், பேயாய், பெரு நோய் பீடித்த புழு வாய்த் தண்டிக்கப் படுவாய்... எரிநெருப்பில் உனது தேகம் வாட்டப்படும்... கொதிக்கும் எண்ணெய்யில் நீ அமிழ்த்தப் படுவாய்... குருடாக்கி உன்னைக் குளிரூட்டும் பனி மீதில் முள் தூவி நடமாடச் செய்யப் படுவாய்... அய்யோ என்றாலும் அங்கே உன்னை அரவணைக்க ஆளில்லை... அப்பா என்றாலும், ஆறுதல் கூறுவாரில்லை... ஆரியரே அங்கு ஆதிக்கம் செய்வதால், பாவங்கொண்ட அரக்கர் வாழ்வு பாழ்ப்படுவது நிச்சயம்...
பீடணன் :
அய்யனே, அடியேன் யான் உமது அடிமை அல்லவோ... நான் இலங்கை மண்ணாள வேண்டும்... மறுஜன்மத்தில் மானிடனாய்ப் பிறக்க வேண்டும்... உதிக்குந்தோறும் சூரியன் உலகின் இருளருப்பது போல், என் பிறவி தோறும் ஆரியர் துயரறுத்து சுகவாழ்வு தருவேன்... இதனையே நீர் எனக்கு வரமாய்த் தந்தருள வேண்டும்...
இராமன் :
இன்றுமுதல் நீயே இலங்கையின் மன்னன் ஆனாய்... இலங்கை மண் மீதில் இன்று வீற்றிருக்கும் இராவணன் உனது பகைவன்... அவன் வீழ, நீ ஆள மாயவன் இந்திரன் மனம் திறந்தான்...
பீடணன் :
எனக்கு மட்டுமோ இராவணன் பகைவன்... எத்தனவன் ஏழு உலகிற்கே பகைவன்... கொடியவரைக் கொன்று, நாட்டில் நல்லறம் மலர, அவதாரம் எடுத்த நாயகனே, இராவணனைக் கொன்று அங்கே அரசபீடத்தில் என்னை அமர்த்து...
இராமன் :
மனங்கலங்காதே... மனம் திறந்தான் இந்திரன்...
சுக்ரீவன் :
இலங்கையின் மன்னனாய் இவன் முடிசூடிட மனந்திறந்தான் இந்திரன்!... மாயவா, கிட்கந்தகத்தின் மலைக்குகையில் நான் மனமேங்கி நிற்கிறேன்... வாலியவனைக் கொன்றால், என் வாழ்விலும் வசந்தம் வரும் என்றாய்!... கொன்றாய் அவனை நீயும்...
இராமன் :
நானோ கொன்றேன்?... சுக்ரீவா, விதிக் கொன்றது...
சுக்ரீவன் :
என் கதி?...
இராமன் :
கரன் இங்கு பெரும்படைக் கொண்டு நிற்கிறான்... ஒரு வில்லெடுத்து, வித்தைச் செய்வது போல், அவன் கொட்டம் அடக்கிடுவேன்... ஆயினும் பலனுண்டோ?... கரனைக் கொன்றால், இன்னோர் அரக்கனை யிங்கு படையோடு அனுப்புவான் இராவணன்!... அதனால், மூலத்தையே கொன்று விட்டால், முளைக்குமோ வேறொன்றும்... என் முடிவினிலே, நீ அய்யம் கொள்ளாதே... என் மனைவியை அவன் தூக்கிச் சென்று, தமிழினத்தின் பேரழித்தான்... தூற்றத் துவங்கி விட்டது உலகம்... ஆயினும் அவன் என் சீதையை எனக்குக் கொடுத்தானில்லை... எனவே, போர் தொடுத்து, அப்பொல்லாதவனின் உயிரறுப்பேன்... அதன்போது, சுக்ரீவா, நீயும் உனதுப் படையும் என்னோடு உடன் வரவேண்டும்... பல நாட்டவரும் படைத் தந்து உதவ, முனிவனிடம் சொல் தந்துள்ளனர்... அனுமா, நீயும் உனது தீரத்தைக் காட்டி, எனது சீதையை மீட்டிட வேண்டும்... அவள் மீட்கப்பட்ட பின்னர், சுக்ரீவன் மீண்டும் முடிசூட்டப் படுவான்... கிட்கந்தகத்தின் அரசும் அவன்தாள் வந்தடையும்...
பீடணன் :
மாயமாய் வில்லொன்று வந்து வாலியை மாய்த்தது போல், இராமா, போரெதற்கு?... கூரிய வில்லொன்றை நீயிங்கிருந்து மாயமாய் செலுத்து... இராவணன் மாய்ந்துறட்டும்... இலங்கைப் படையும், நொடியளவில் நைந்து போகட்டும்... எளிதில் இங்கிருந்து மாயவில் தொடுத்து,பாவியவனைக் கொல்லாமல், ஆழ்கடல் தாண்டி போய் அவனோடு போரிட வேண்டுமா?... சிரமமல்லவோ?...
இரிசியமுகன் :
பீடணா, எல்லாம் அறிந்தவன் போல் நீ சொல்லாடுவதென்ன?... இராவணன் யார்?... அவனும் மாயங்கற்றவன்...
பீடணன் :
என்ன!... மாயமில்லை... மந்திரமில்லை... என்று முழங்கும் இனத்தில் மந்திரங் கற்றவர்களா?... இருக்காது... இதில் எம்மினத்தவர்க்கு நம்பிக்கையில்லை... இராவணன் கற்றுள்ளான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை...
இராமன் :
மாயமில்லை; மந்திரமில்லை என்று இராவணன் கூறி இராக்கதராம் உமது இனத்தவரை இதுகாறும் ஏய்த்து வந்துள்ளான்... ஞானத்தால் இதனை அறிந்துக் கூறுகிறோம் யாம்... சிவனை நினைத்து, அவன் சில காலம் தவமிருந்தக் கதை உனக்குத் தெரியுமா?... ஞானி, யானே அதனை அறிந்தேன்... அரச மாளிகையில் யாருமறியா வண்ணம் மாயம் அவன் படித்தான்... இது எவருக்குத் தெரியும்?... மந்திரம் கற்று அவன் இந்திரனோடும், தேவர் பலரோடும் உரையாடுகிறான் தினமும்... இதனை அரக்கர், யார்தான் அறிவார்?... மாயசக்தியும், மந்திர சக்தியும் இரு வேலியாய் அவனைக் காத்து நிற்கின்றன... சிவனை நினைத்து, அவன் செய்த தவத்தால், வரம் பலப் பெற்றுள்ளான்... அந்த தவவலிமையின் திமிரால்தான் என் சீதையை களவாடிப் போனான்...
பீடணன் :
நான் அறியாத செய்திகள் அல்லவோ இவைகள்!...
இராமன் :
அரக்கர்கள் முட்டாள்கள்... மணல் மீதில் நடந்தால், மரத்து நிழல் சுகமும் கிட்டுமோ?... அமுதம் பருகுவதில்தான் இன்பம் என்று யாம் கூறினால், 'தமிழ்ப் பேசினாலே எமக்கு இன்பம்' என்பர் அரக்கர்... 'தமிழ்' 'தமிழ்' என்றே தம்மை மறந்தப் பித்தர்கள் இந்தத் தமிழர்கள்... 'கடவுள் இல்லை.... மந்திரம் இல்லை... மாயம் இல்லை என்ற அறியாமையை மனதில் வளர்த்த அறிவிலிகள்தான் உமதுத் தமிழர்கள்... இவர்களுக்குத் தமிழைத் தவிர வேறொன்றும் தெரியாது... இராவணனைப் பார்... தமிழரைக் கொஞ்சமும் சிந்திக்க விடாமல் முட்டாள்களாகவே வளர்த்தான்... அவன் மந்திரம் பயின்று இன்று உம் எல்லாரையும் ஆட்டுவிக்கிறான்... ஒருநாள் ஆரியமுனி ஒருவன் கானில் தவமிருக்கக் கண்டான் இராவணன்!... மறைந்து நின்று முனிவன் செய்யும் தவத்தை மனதில் தாங்கி இந்திரனை இவனும் நினைத்து இயற்றினான் தவம்!... இது யாருக்குத் தெரியும்?... வரம் பல பெற்றான்... அவன் வாய்ப் பேச்சுதனிலே மந்திரம் கலந்து பேசிடுவான்...
பீடணன் :
ஆமாம்!... அவன் சொல்லுக்கு மாறுசொல் கூற யாரும் துணிவதில்லை!...
இராமன் :
இங்கிருந்து, என்னை மாயாவில் தொடுத்து பாவி இராவணனை மாய்த்திடு என்று நீ பகர்ந்தாயே... நான் தயக்கம் செய்து நிற்பதன் காரணம் நீ அறிவாயோ?...
பீடணன் :
சொல்லுங்கள் சுவாமி!...
இராமன் :
மாயமாய் நான் எத்தனை அம்புத் தொடுத்தாலும், அது இலங்கை மண்ணை அடையாது... இலங்கை மண்ணுக்கு இப்பால், இமிழ்க் கடல் மீதில் வீழ்ந்து மாயவில் மடியும்...
சுக்ரீவன் :
புரியவில்லை... என்ன புதிரோ?...
இராமன் :
மாயவேலி எழுப்பி, இலங்கையை அரசாள்கிறான்... இதனை ஞானக் கண் இருந்தால் மட்டுமே காண முடியும்... மாயவேலியைத் தகர்க்கும் சக்தி என் மாயவில்லுக்குக் கிடையாது!...
பீடணன் :
அப்படியானால், அவனை வெல்வது என்பது இயலாதோ?...
இரிசியமுகன் :
ஏன் இயலாது?.... இராவணன் ஒரு ஆணவக்காரன்!... ஆரியர் யாமோ சூழ்ச்சிக்காரர்கள்!... மாயவேலியை அமைத்து, இலங்கையில் அவன் மனம் போல் மங்கை சுகம் கண்டுத் திரிகிறான்... அங்கிருக்கும் வரை, அவனைக் கொல்ல இயலாது.... மாய அரியணையில் இருந்து அவன் பேசும் சொல் யாவும் மந்திரமாய், மக்கள் யாவரையும் மயக்கத்தில் ஆழ்த்தும்...
பீடணன் :
அய்யா, அவனை எப்படி கொல்வது? அதனைக் கூறுங்களய்யா...
இராமன் :
பீடணா, தாடகை ஆண்ட நாடு எது?
பீடணன் :
விந்தநாடு!
இராமன் :
அவளுக்குப் பிறகு, யாரதனை அரசோச்சினர்?...
பீடணன் :
காமவல்லி!...
இராமன் :
காமவல்லி!... அவள் காதகி!... இராட்சஷி!... என் தேகத்தின் மீது மோகம் கொண்டு அலைந்தாள்... காட்டில் என்னைக் கண்டு, கட்டியணைக்க வந்தாள்... பெண்ணாய்ப் பிறந்து பெண்மையின்றி இருந்தாள்... காமவெறிக் கொண்டு, என்னைக் கலவிக்கு அழைத்தாள்... பெரும் புலமையோடு, பெண்களை ஆண்கள் புகழ நான் கேட்டதுண்டு... நாணமற்ற காமவல்லி, ஆண்மகன் என் அழகினைப் புகழ்ந்தாள் - பாடினாள் - புதுப்புதுச் சொல் பல கொண்டு பாராட்டினாள்... வேல் கொண்டு வேங்கையைக் குத்துவதுப் போல் விழிக் கொண்டு என் இதயத்தைக் குத்தினாள்... வில் தொடுத்து புள்ளிமானை வீழ்த்துவதுப் போல், காமம் தொடுத்து, தன்னை வீழ்த்திடு என்று காமவல்லிக் கெஞ்சினாள் - மண்டியிட்டு என் இடையில் முகம் புதைத்துத் துவண்டாள்... காமுகி அவள் என் கருத்தழித்திடுவாள் என்றஞ்சி, விலகி விலகி நான் விந்த எல்லையில் இருந்து நீங்கினாலும், நெருங்கி நெருங்கி என் நெஞ்சில் காமதீபம் ஏற்ற முனைந்தாள்... பாவை சீதை என் பாதந்தொட்டுத் துதிப்பவள்... அவளைத் துறந்து காமுகியோடு நான் காமத்துயில் கொள்ள என் நெஞ்சமும் இடந்தருமோ?... நானிருக்கும் இடமே, அயோத்தி என்று என் அடி வணங்கி நிற்கும் வைதேகிக்கு நான் இழைப்பேனா துரோகம்?... மணமானவன் நான்; மங்கை சீதையின் மணவாளன் நான்; மனந்திருந்தி, காமவல்லி, நீ கடமை புரியப் போய்விடு!... காமம் கொண்டு என் பின் நீ அலைந்தால், கேடு நிகழும் என்று கூறினேன்... அவளோ, எதுவும் கேளாதவளாய், என் மார்புதனில் முயங்கத் துடித்தாள்... காட்டினில் நான் தவம் செய்து, வரம் பல பெற சிந்தைக் கொண்டிருந்தேன்... என் சிந்தைக்கு இன்னலாய் காமுகி காமவல்லி இருந்தாள்... என் நோக்கம் சிதையுறுமோ ; காமுகியின் வலையில் வீழ்ந்து, சீதையவளை இழப்பேனோ- எனும் நிலையில் என் மனம் அமைதியிழந்தது... பீடணா, கவலையால் என் தேகமும் கரையக் கண்டு, இலக்குவனும் கேட்டான் ஒருநாள்... காமவல்லியின் கடும்போக்கால் என் நெடுந்தேகம் நொந்துக் கொண்டிருக்கும் கதையை இலக்குவனுக்குச் சொன்னேன்... பேயவளால் பெரும் தீங்கு நிகழும்; கொன்று விடு; அவள் கொங்கைகளைக் கொய்துவிடு; மாய்த்துவிடு; அவளை மரணந் தழுவவிடு என்று நான் சொன்னேன்... ஆமாம்!... அவளை கொன்றோம்... இல்லையேல் என் நோக்கம் மடிந்துப் போயிருக்கும்... என் நோக்கம் மடிய வேண்டும் என்பதற்காகவோ, என்னவோ காமவல்லியை மாயத்தால் ஏவினான் மாயங் கற்ற இராவணன்... காமம் கொண்டு என்னை, காடெங்கும் விரட்டியக் காமவல்லியைக் கண்டுக் கொள்ளவில்லை உம்மவர்... அரக்கியவளை கொன்றான் கொலைபாதகன் இராமன் என்று உம்மவர் தூற்றுவது முறையோ?...
பீடணன் :
முறைதான் என்று நான் உன் முன்னே உரை செய்வேனோ... காமம் கொண்டு காதகி அவதார நாயகனை அல்லல் படுத்தினாள் எனில், இதனை யாரோ தாங்குவார்!... அவள் கொல்லப்பட்டதால் தர்மம் இன்று உன் வடிவில் அரசோச்சுகிறது... வாழ்க; இராமா!... நீ வளம் பல கண்டு!...
இராமன் :
காமவல்லிக்குப் பிறகு உன்னையல்லவோ அரசனாக்கியிருக்க வேண்டும், விந்தநாட்டுக்கு!...
(பீடணன் ஏதும் பேசாமல் இருத்தல்...)
இரிசியமுகன் :
ஏன் அமைதிக் கொண்டிருக்கிறாய்?... மடையனே!... பீடணா, நீ வாய்ப் பேசாது இருந்ததால் அல்லவோ, அரக்கன் இராவணன் இன்று ஆணவமாய் அரசோச்சுகிறான் இலங்கையை!... தாடகை இறந்தாள்; காமவல்லி அரசியானாள்... காமவல்லி இறந்தப் பிறகு யாரதனை அரசாண்டிருக்க வேண்டும்?...
பீடணன் :
மாரீசனின் மனைவி!
இராமன் :
அவள் அரசியாக்கப்பட்டாளா?
பீடணன் :
இல்லை...
இராமன் :
ஏன்?... வழி வழியாக பெண் மகளால் அரசாளப்பட்டு வந்தது விந்தநாடு!... காமவல்லிக்குப் பின், மாரீசன் ஆளத் தொடங்கினான்... ஏன் இந்த மரபு மீறப்பட்டது?... இதனைக் கேட்டாயா நீ?... பெண்களால் மட்டுமே விந்தநாடு ஆளப்பட வேண்டும் என்ற மரபினை மன்னன் இராவணன் மீறினான்; மாரீசனை ஆள வைத்தான்... வாய்த் திறந்து ஒரு வார்த்தை ஏனென்று கேட்டாயா, பீடணா!...
பீடணன் :
விந்தநாட்டில் ஆரியர்களால் அடிக்கடித் தொல்லை ஏற்படுகிறது என்பதால், ஆண்மகன் அரசாளுதல் நல்லது என்று அமைச்சர்கள் கூறினார்களாம்...
இராமன் :
நீ ஆண்மகன் இல்லையா?... காமவல்லி செத்தப் பிறகு, உன்னையல்லவோ அரசனாக்கியிருக்க வேண்டும், விந்தநாட்டுக்கு!... உன்னை அரசனாக்காமல், மாரீசன் என்பானை மன்னனாக்கியிருக்கிறான் என்றால், என்னப் பொருள்?... உன்னை அவன் ஏன் புறக்கணிக்கிறான்?... புலனாகவில்லையோ உனக்கு?... உனது மகள் திரிசடையையாவது விந்தநாட்டின் அரசியாக்கியிருக்கலாமே... ஏன் செய்யவில்லை?... உன்னை மட்டுமல்ல; உனது வழித் தோன்றல்களையும் அவன் புறக்கணிக்கிறான்... இதற்கு நீ என்ன சொல்லப் போகிறாய்...
பீடணன் :
கொடியவன்... வஞ்சகன்... நெஞ்சில் நஞ்சுக் கொண்டவன்... இந்த சிந்தனையெல்லாம் என் மண்டையில் ஏன் எழவில்லை?...
இராமன் :
அதுதான் மாயம்?... இராவணன் கற்ற மாயம் உன்னை மட்டுமல்ல; இலங்கையையே மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது... மாயத்தால் எல்லாரது சிந்தனையையும் அவன் கருவறுத்தான்... ஞானத்தால் இதனை எப்போதோ நாம் உணர்ந்தோம்...
இரிசியமுகன் :
மடையனே பீடணா, கூறு; இராவணன் இலங்கையை இனியும் ஆள வேண்டுமா?...
பீடணன் :
கூடாது...
இராமன் :
ஆயின்; அவனைக் கொன்று வா!... போ...!
பீடணன் :
என்ன இது... சித்தம் இன்றிப் பேசுவது?... மாயசக்தி நிறைந்த அவதார நாயகன் நீ!... என்னை ஏவுவது என்ன?... மாயத்தால் அவனை நீயே கொல்!...
இராமன் :
பீடணா, ஏது நீ பேசுகிறாய்?... இராவணனிடம் இருக்கும் மாயசக்தி மிகக் கொடியது!... என் சக்தியைக் காட்டிலும் அவன் பெருஞ்சக்திக் கொண்டிருக்கிறான்...
பீடணன் :
நீ அவதார நாயகன் அல்லவோ?... அதனை நீ தகர்த்தெறிய உனக்குச் சக்தி இல்லையென்றால், நீயேன் அவதாரம் எடுத்து வந்தாய்?... உனது மாயசக்திக்கு வலுவில்லையென்றால், யாகமும், வேள்வியும், தவமும் பல செய்து சக்தியை யாசித்திடு இந்திரனிடம்!... அவதார நாயகன் நீ, அரக்கன் என்னை இராவணனுக்குப் பலியாக்குவதா?... மாயத்தால் மாயக்காரன் இராவணனை நீயே மாய்த்தல் அல்லவோ அவதார நாயகனென்று எம்மவர் உன்னைப் போற்றுவர்... மாயவனோ? வீணனோ? அவதார நாயகன் என்பதெல்லாம் பொய்யுரையோ... நீ அவதார நாயகன் எனில், அரக்கன் இராவணனைக் கொன்றுக் காட்டு!... என்னை இலங்கையின் அரசனாக்கிக் காட்டு...
இரிசியமுகன் :
சூத்திரப் பயலே!... ஆரியனையோ நீ சோதிக்கிறாய்?... கேள்வி ஞானம் சூத்திரனுக்கு இருந்தால், ஆரிய வாழ்வு நாசமாகும் என்று இராமா, நீ உணராமல் மரமாய் நிற்பதேன்... பொசுக்கு இவனை!... பொல்லாத இவன் நாக்கினை அடக்கு!... கிழித்திடுக் கேள்விக் கேட்ட வாயை!... மகுடமாம்... மகுடம்!...
(எட்டி உதைத்தல்)
இராமன் :
மன்னனாகவில்லை இன்னும் நீ!... என்னை நீ எதிர்க் கேள்விப் போடுகிறாய்?... மகுடம் சூட்டி உன்னை மன்னவனாக்கி விட்டால், மமதைக் கொண்டு எம்மை நீ மதிக்கவும் செய்வாயோ?... காலில் இட்டு மிதிக்கவும் தயங்குவாயோ?... வாய்த்திமிர் அடங்கவில்லை... வார்த்தைத் தடிப்பு சுருங்கவில்லை... அரக்கன் உன் இரத்தத் திமிர் மாறவில்லை... ஆரியனுக்கு அடிமை நீ என்று இன்னும் உணரவில்லை... உனக்கெதற்கு மகுடம்!... உனக்கோத் தருவேன் இலங்கையின் பீடம்... நஞ்சென்று தெரிந்தே நானதனைப் பருக மூடனோ?... உன் வாய் வார்த்தைக் கேட்கவோ அவதாரம் எடுத்து வந்தேன்?... ஏனடா இலக்குவா, எருமை மாடு மாதிரி நிற்கிறாய்?... ஏசுகிறான்... என்னை இவன் சோதிக்கிறான்... சொரணையின்றி நீ சோம்பி நிற்பதென்ன?...
( இலக்குவன் பீடணனை எட்டி உதைத்து, மயிர்ப் பிடித்து ஆட்டுகிறான்...)
பீடணன் :
அய்யனே, அவதார நாயகனே... முனிவனே, என்னை மன்னித்திடு!... மண்டியிட்டு உனது பாதம் கழுவி நீர்க் குடிக்கிறேன்... எனது இனத்துப் பெண்கள் தாசிகள் என்றுக் கூறி உமக்குக் காணிக்கையாக்குகிறேன்... கெஞ்சுகிறேன்... நெஞ்சில் உம்மை எப்போதும் போற்றுவேன்... பொல்லாத என் நாவில் புறப்பட்ட சொற்களால் நான் பெருமையிழந்தேன்... இனி நான் ஏதும் பேச மாட்டேன்... உமது அடிமை நான்!... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்...
(மண்டியிட்டுக் கதறுகிறான்)
ஆரியனை சோதித்து சொல் பேசிய இவன் நாவினைச் சுட்டுவிடு!... மனுநீதியின் படி இலக்குவா, நீ இவனுக்கு நீதி வழங்கிடு!...
(இலக்குவன் எரிகிறக் கொள்ளியை எடுத்து-)
இலக்குவன் :
நாவினை நீட்டு சூத்திரப் பயலே...
(பீடணன் நாவினை நீட்ட-
இலக்குவன் பீடணன் நாவின் மீது ஏரி நெருப்பால் சூடு வைக்கிறான்...)
பீடணன் :
ஆ...
(பீடணன் அலறித் துடிக்கிறான்)
(பீடணன் நாவின் மீது சூடு வைப்பதைக் கண்ட அனுமன், தனது வாயைப் பொத்தி, பின்னாசனத்தையும் மறுகையால் பொத்தி மூலைக்கு ஒதுங்குகிறான்)
-திரை-
பாகம் : 3. காட்சி : 19. அசோகவனம் - நிலவொளி -
சீதை,
கரன்,
திரிசடை.
அசோகவனத்தின் மாடத்தின் உள்ளிருந்து-
கரன் வெளி வருகிறான்...
மரம் சாய்ந்து அமர்ந்திருக்கும் சீதையைப் பார்த்த வண்ணம் கரன் வெளியேறுகிறான்...
கரனை கவனித்த சீதை, மெல்ல எழுந்து நடந்து-
அசோகம் மரத்தைப் பிடித்து நின்று, நிலாவை வெறித்துப் பார்த்திருக்க-
திரிசடை பொற்கிண்ணத்தில், பாலேந்தி வந்து சீதையின் அருகில் நிற்கிறாள்...
திரிசடை வந்ததையும் உணராமல், நிலாவையே சீதைப் பார்த்திருக்க-
திரிசடை சீதையின் தோள் பற்றி-)
உறக்கம் கொள்ளாமல், உலவும் நிலவை வெறித்துப் பார்ப்பதென்ன?...
சீதை :
பகலவன் திரியும் பாதையில் அல்லவோ இந்த நிலவனும் உலவுகிறான்... சுட்டுவிடுமோ இந்த சுந்தர தீபம் கெட்டுப் போமோ...
திரிசடை :
என்ன இது பேத்தல்...
சீதை :
கெட்ட கனவுகள் என் விழிகளைத் தொட்டுத் தொட்டு மறைகின்றன... அஞ்சி நானிங்கு வந்தாலும், அச்சம்தான் கூடுகிறது... அதோபார்... கருமுகில் படைத் திரண்டு வெண்ணிலவை விழுங்க வருகிறது...
திரிசடை :
கார்முகிலது படையுமல்ல!... வெண்ணிலவது பகைவனுமல்ல!... ஏனிந்தக் கற்பனை... கண்துயிலும் வேளையில் திகில் கொண்டு மனம் தவிப்பதேன்?... மலர்தூவப்பட்ட மஞ்சம் தனித்திருக்க, பயம் கொண்ட மனதோடு நீர் இங்கு தவித்திருப்பதென்ன?... சூடுதணியும் முன்னே பால் பருகுங்கள்... வேளையாகி விட்டது வாருங்கள் துயில!...
(பொற்கிண்ணத்தை சீதையின் கையில் தர-
சீதை அருந்தாமல் கையில் வைத்திருக்க -)
சீதை :
மூடாத விழியின் உறக்கம் ஆனேன் நான்!... உறங்காத மனதின் ஓவியம் நான்தான்!... சிதைந்த ஓவியத்தில் சிந்தும் துளியாய் கரைந்துக் கொண்டிருக்கிறேன்... திரிசடை :
வீணாய் மனதை வாட்டுவதும் நல்லதோ?... ஏதோ ஒன்றை நினைத்து என்ன நீர் இப்படிப் புலம்புவது?... வசந்தம்தான் வாழ்வாகுமோ?... வசந்தம் என்பது என்ன?... துயர் என்று ஒன்று இருப்பதால் அல்லவோ, வசந்தம் என்பதனை அறிய முடிகிறது?... நீங்கள் பார்த்து நிற்கும் வானத்தை இன்னும் கற்பனையோடுப் பாருங்கள்... நீலவானம் வெண்ணிலவுக்கு மட்டுமோ பாதையாய் இருக்கிறது... கார்மேகம் கூடி வந்தாலும், அந்தக் கருநிற மேகத்துக்கும் நீலவானம் பாதையாய் இருப்பதில்லையா?... கார்மேகத்துக்குப் பாதையாய் இருப்பதால், நீலவானின் பெருமை சிதைந்து விடுவதில்லை... நெஞ்சில் துயர் மூளுவதால், உமதுநிலைத் தாழ்ந்து போகாது... வான் போல் மனம் உறுதியாய் இருந்தால், வாழ்வில் எல்லாம் வசந்தம்தான்!...
சீதை :
அந்த உறுதியினை எனக்குத் தா!... அல்லவெனில் என் உயிரினை இழக்கும் உரிமை எனக்குக் கொடு!... உன்னால் எப்படி உறுதியாய் இருக்க முடிகிறது?... புரியவில்லையே!... வெயில் பட்ட புழுப் போல் நான் துடிக்கிறேன்... நீயோ அனலுக்குள் பாயும் புலிப் போல் சிலிர்த்து நிற்கிறாய்...
திரிசடை :
வெயில் பட்டப் புழுவோ... வெந்துயர் உம்மை சூழ்ந்ததுவோ... என்ன நீர் புலம்புவது... தமிழ் மண்ணில் உமக்குத் துயரமும் சூழுமோ...
சீதை :
ஆறுதலாய் நீ பேசும் சொல்தான் என்னை அமைதிக் கொள்ள வைக்கிறது... ஆயினும், மூடிய விழிகளை முள்ளொன்றுக் குத்துகிறது... உறங்கும் போதிலே நெருப்பெனைச் சூழ்கிறது... அஞ்சி நான் எழுந்தாலோ, மனதை அரவம் கொட்டுகிறது... இங்கு நின்று அமைதிக் கொள்வோம் என்று வந்தாலும் அச்சமே மேலோங்குகிறது... என்னவோ இது... என் வாழ்வில் இறுதியை உணர்த்தும் சகுணமோ அல்லது என்னால் நிகழவிருக்கும் தீமையின் அறிகுறியோ... கண்ணே!... திரிசடை, காட்டுக்குப் போகிறேன்... இராமனெதிரில் நின்று அவன் எண்ணத்தை துண்டித்து வருகிறேன்... என்னைப் போகவிடு!...
திரிசடை :
முடியாது!... அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்... இப்படியொரு முடிவுக்கு நீங்கள் வரக்கூடும் என்பதறிந்துதான் மன்னன் இராவணன் காவல் இங்கு அதிகரித்துள்ளான்...
சீதை :
நெருப்புக்கு நடுவில் மயிலிறகா?... இராமனது தீயகுணத்துக்கு நடுவில் எழில்நகர் இலங்கையா?... கண்ணே! திரிசடை, என் கண்ணெல்லாம் இந்தக் காட்சிதானம்மா... எழில்நகர் இலங்கை என்னாகுமோ... இலங்கை வேந்தன் உயிர் தப்புமோ... மாண்பு சிதைந்து இம்மண் மீதிலே கோட்டான்கள் குடிப் புகுமோ... கனவில் எழும் இந்தக் கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை... குழம்பி நான் குற்றுயிராய் குறுகியிருந்த வேளையில்தான் கரனும் வந்தான்... கண்ணே! திரிசடை, உன்னோடு பேசி நின்றான்... நானும் கேட்டு நின்றேனம்மா...
திரிசடை :
என்ன... எல்லாமே
சீதை :
ஆமாம்!... திரிசடை நீங்கள் பேசியதெல்லாம் எனக்குக் கேட்டது... உனது தந்தை பீடணன் இராமனால் முடிசூட்டப் பட்ட சேதியை கரன் சொல்லவில்லையா உன்னிடம்?... 'சீதையை இராமனிடம் கொடுத்துவிடு... இல்லையேல்; படைக் கொண்டு நானுன்னைத் தாக்குவேன்' என பீடணன் இராவணனுக்கு ஓலை அனுப்பியுள்ளதாக கரன் உன்னிடம் கூறவில்லையா?... என் காதில்தான் அந்தச் செய்தி விழவில்லையா?...திரிசடை :
எது உங்களுக்குத் தெரியக்கூடாது என்றிருந்தோமோ; அது தெரிந்து விட்டது...
சீதை :
இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையை மீட்க, படைத் தருகிறோம்; போர்த் தொடுத்திடு என்று அரசர் பலர் இராமனுக்கு உதவுவதாக ஒற்று வந்துள்ளதே இலங்கைக்கு... இதனை கரன் சொன்னானா இல்லையா உன்னிடம்?...
திரிசடை :
ஆமாம்!...
சீதை :
சொல்; திரிசடை!... தீவினை ஏதும் புரியாத இராவணன் மீது, தீயவன் போர்த் தொடுக்க, நானிங்கு பாலருந்தி, பஞ்சணையில் துயின்று - பசுஞ்சோலையில் உலா வந்து, அசோகவனத்தில் அமைதிக் கொள்வதா?... இலங்கை மக்களின் குருதியின் மீது என்னை இளைப்பாறு என்றால், என் மனம் ஒப்புமோ... பொய்மை எனும் பெரும் பாறையை உருட்டி விட்டான் இராமன்... பலியாகவிருக்கும் உயிர்கள் எத்தனையெத்தனையோ... திரிசடை, என் கண்கள் ஆளும் கனவெல்லாம் நனவாகிடுமோ... கரன் சொன்ன சேதி என் செவிக் கேட்டு, அச்சம்தான் அதிகமாகிறது... போகிறேன் இராமனிடம்!... பொல்லாத அவன் போக்கறுத்து வருகிறேன்... சபைக் கூட்டி சண்டாளானவனை சாடைக் காட்டி வருகிறேன்...
திரிசடை :
முன்னரே சொல்லிவிட்டேன்; இந்த முடிவினை மாற்றிக் கொள்ளுங்கள் என்று!... போர்த் தொடுப்பேன் என்று பீடணன் வாயிலாக இராமன் ஓலை விடுத்துள்ளான்... இந்த வேளையிலே இங்கிருந்து நீங்கள் இராமனிடம் சென்றால், உலகம் என்ன சொல்லும்?... போருக்கஞ்சி, உலகத்தின் பழிக்கு அஞ்சி சீதையை இராவணன் சிறை விடுத்தான்; இராமனோடு சேர விட்டான் என்றல்லவா பேசும்!... பழி புரியாத இராவணன் மீது பழியுண்டாக வேண்டுமெனில், போங்கள் நீங்கள் இராமனிடம்!...
சீதை :
திரிசடை, நான் மிதிலைப் போகிறேன்... அயோத்திப் போகிறேன்... ஊர்க் கூட்டி, நடந்தவற்றைச் சொல்லுகிறேன்...
திரிசடை :
நம்ப மாட்டார்கள் எவரும்!
சீதை :
ஏன்?...
திரிசடை :
இராவணன் ஒரு மந்திரவாதி என்ற பொய்க் கோலத்தைப் புனைந்து விட்டான் இராமன்... ஊர்க் கூட்டி நீங்கள் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வான்?... 'இராவணன் மந்திரத்தால் இவள் மனதை பேதலிக்கச் செய்துவிட்டான்... பேதலித்த மனதோடு இவள் ஏதேதோ பேத்துகிறாள்'... என்று சொல்லுவான்... நல்லவனையும் நாலுமுறை பித்தன் என்றுச் சொன்னால், இல்லை என்று அவன் வாயில் இருந்து வரும் சொல்லும் பித்தத்தின் வெளிப்பாடுதான் என்று நாலுபேர் முடிவு சொல்லுவார்கள்...
சீதை :
வேறு மார்க்கமே இல்லையா?...
திரிசடை :
ஒரே மார்க்கம்தான்!... இராமனோடு போர் புரிந்து, அவனைக் கொல்வது!...
சீதை :
திரிசடை!...
திரிசடை :
எதனை உங்களுக்குச் சொல்லக்கூடாது என்றிருந்தேனோ
சீதை :
'இராமனைக் கொல்லக் கூடாது' என்று இலங்கை வேந்தனால் இடப்பட்ட ஆணை என்னவாயிற்று?...
திரிசடை :
மாற்றப்பட்டுவிட்டது... அவன் மரணம் எழுதப்பட்டு விட்டது...
சீதை :
திரிசடை, இப்போதுதான் என் நெஞ்சில் இன்பம் துய்த்தாய்... இந்த மாற்றத்தில் மாறுதல் வேண்டாம்... பேதை எனக்கொரு வாய்ப்புக் கிடைத்தால், கயவன் அவன் கழுத்தை நானே அறுத்திடுவேன்... கண்மணி, திரிசடை!... என் கண்ணுக்கு நீ துயில் தந்தாய்... உறங்குவேன் இனி நான் உல்லாசமாக!... கொடியவனைக் கொல்லுவதாய் சொன்ன உன் வாய்க்கு நான் பால் வார்க்கிறேன்... ம்... குடி!...
(கிண்ணத்தைத் திரிசடையிடம் நீட்டியவள், கிண்ணத்தினுள் பார்வையை செலுத்தினாள்...)
சீதை :
திரிசடை, என்ன இது...
திரிசடை :
என்னவாயிற்று?...
(திரிசடையும் நோக்க-)
சீதை :
திரிந்து விட்டதடி பால்!...
(சீதைக் கூவுகிறாள்)
திரிசடை :
ஆமாம்!... பாலோடு தேன் கலந்து, பணிப் பெண்தானே தந்தாள்... வேறெதும் கலந்து விட்டனளோ?... பால் திரிந்திட வாய்ப்பென்ன?... சரி; மஞ்சம் செல்லுங்கள்... நான் வேறு கொண்டு வருகிறேன்...சீதை :
வேண்டாம் திரிசடை!... இதன் அறிகுறிக்குப் பொருளென்னவோ?... என் மனதை ஆட்ட பேய்தான் வந்ததோ?... பேதை நான் என்னவென்று சொல்வேன்?... என்ன சகுனமோ இது?...
திரிசடை :
கொஞ்சம் அமைதியாய் இருங்கள்... பால் கெட்டு விட்டது என்பதற்காக, மனதை அல்லல் படுத்தலாகுமோ... வீண் புலம்பல் ஏன்?... நாழியாயிற்று... பனியும் பெய்யலாயிற்று... வாருங்கள் போவோம்...
சீதை :
திரிசடை!... என் மனதில் ஏனிந்த திகில்?... இதயம் ஏனிப்படி படபடக்கிறது... இதயமற்ற இராமன் ஏதும் கேடு செய்வானோ?... என்ன நான் எப்படி பேசுவேன்?... சகுனம்தான் இது?... உனக்கு நான் எதனைக் கூறி எப்படி நம்ப வைப்பேன்?...
திரிசடை :
புலம்பல் போதும்... புலரட்டும் பொழுது!...
சீதை :
புலர்ந்தால்?...
திரிசடை :
நாளை விடிந்ததும் முதல் வேலையாய் மன்னன் இராவணனை சந்திப்பேன்... பின்னர் உம்மிடம் வந்து, "நீர் பேசும் சகுனமெல்லாம் பேதமைதான் என்று உணர்த்துவேன்... எம் தமிழரை வெற்றிக் கொள்ள, எவனுக்கு இத்தரணியில் வீரமுண்டு?... எம்மை ஏய்க்க ஆரிய நாட்டவனும் துணிவனோ?... ஒளிந்து நின்று ஒப்பாரி வைப்பவன் வாள்முனைக் கொண்டு, போர் முனைக்கு வருவானோ?... சூது கொண்டு சூழ்ச்சி செய்தால், எம்மிடத்து வீரம் உண்டு!... தமிழன் தலை வணங்கான் என்பதை இராமனோடு யாம் நிகழ்த்தவிருக்கும் போர் உணர்த்தும்... வாருங்கள் போவோம்!...(சீதையின் கரம் பிடித்து, திரிசடை நடத்தல்...)
-திரை-
பாகம் : 3. காட்சி : 20. அரசவை.
இராவணன்,
குழலி,
கரன்,
சேயோன்,
தலைமை அமைச்சர்,
திரிசடை.
இராவணன் :
விண் பிளந்து, மண் மீது வீழ்ந்ததோ எனும்படி கல்லெறிப் படைகள் கவனோடு களம் ஏகட்டும்... ஞாயிறு சுழன்றோடி வருகிறதோ என அஞ்சி, அயலவர் ஓடிட, சக்கரம் சுழற்றெறியும் படைகளும் களம் ஏகட்டும்... நிலைத் தளரா மழுப் படைகளும் மடை திறந்த வெள்ளமென சீறிச் செல்லட்டும்... மின்னல் திசைத் தெறித்து மண்ணில் குதித்ததோ என அஞ்சி ஆரியர் நடுநடுங்கிட, எகிறிக் குதித்து எமது ஈட்டிப் படைகள் ஏகட்டும் களம்... தோமரம் சுமந்தப் படைகள் தோண்டப்பட்டக் குழியிலிருந்து பதுங்கி பாயட்டும்... எதிரி படைகள் சிதறி ஓடட்டும்... தீ பொங்கி திசை எங்கேயும் பொசுக்க வந்ததோ என களம் நின்று கதி கலங்கிட சூலம் சுமந்து எமது படைகளும் சுதிப் பாடி ஏகட்டும்... ஒளிந்து நின்று ஒல்லார் தாக்குவதைத் தடுக்க, வளைந்து நின்று வலயம் வீச வன்மம் மிகு எமது படை போர்முனைப் புறப்படட்டும்... கருநிற ஆரியர்க் கூட்டம் கனவிலும் போர்முனைக் கண்டு அஞ்சிட எமது கப்பன சேனை, முகாம் கொள்ளட்டும் களமதில்!... நெடுமலையின் தீப்பிழம்பென நாஞ்சில் படை பொங்கிப் பொசுக்கட்டும்... முகில் விரைந்து முழு மழைப் பொழிவதுப் போல் எழுபடை எங்கும் நிறைந்து பொழியட்டும்... ஆரியர்க் கூட்டம் எங்கும் சிதறி ஓடட்டும்... வாள்படையும், வேல் படையும் தோட்டிப் படையும் பகை வேட்டையாடிட போர்ப் பாடிப் புறப்படட்டும்... மைநிற மேகம் மண் மீது வந்துற்றதோ என மால் படையும், கடலலை சிலிர்த்திங்கே வந்ததோ என மா படையும் அணி வகுக்கட்டும்; களம் நோக்கி கயவர் திகில் கொள்ளவே!...
கரன் :
தலைமை வகித்து, தருக்கர் தலையறுத்து வருகிறேன்... விண்ணதிர வீரநடையிட்டு எமது படைக்கு, தலைமை வகிக்க எனக்கொரு வாய்ப்புக் கொடு; தமிழினத் தலைவா!...
சேயோன் :
தனயன் யான் இருக்கிறேன்... தந்தை ஒருசொல் தந்தால் போதும்... ஒற்றர் தந்தத் தகவல்படி ஒண்டவந்த ஆரியர்க் கூட்டம் ஓராயிரத்துக்கும் மேல் கிட்கந்தக மலைச் சரிவில் கூடி நிற்கின்றனராம்... இராமனோடு கூடி நிற்கும் அந்த ஆரியர்க் கூட்டம், ஆட்டு மந்தைகள் கூட்டம்தான்... அடி ஒன்று விழுந்தால் ஆடுகள் யாவும் அலறிப் புடைத்து ஓடிவிடும்... அவச்சொல் கொண்டு எனது தந்தையின் மீது இழுக்குப்பூச துணிந்த இராமனை நானே கொல்கிறேன்... நானே கொல்கிறேன்; தலைமை வகித்து!...
அமைச்சர் (1) :
சேயோனே, மானம் அழிந்தது... மதிப்பு சிதைந்தது... நமது மாண்பு விலைப் பேசப் பட்டது... நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்?... தமிழனை சூத்திரன் என்று இதுகாறும் கூறிக் கொண்டிருந்தனர் ஆரியர்... சூத்திரன் தான் என தாள் பணிந்தானே, பீடணன்!... அந்தத் தமிழனை நீ என்ன செய்யப் போகிறாய்?... கரன், அவனைக் கொல்ல நீயுமா துணியவில்லை... எதிர்ப் பேச்சு ஒன்று பேசினானாம் பீடணன்!... 'என்னடா நீ ஆரியனை எதிர்த்தா பேசுகிறாய்' என்று கேட்டு, பேசிய நாவின் மீது சூடும் வைத்தானாம் ஆரியன்... பீடணனும் அடங்கி, அவன்தாள் பணிந்தான் என்றால், தன்னை சூத்திரனாக்கிக் கொண்டான் என்றுதானே பொருள்... ஆரியனைப் பழித்தால், இரும்பை செந்நிறமாய்க் காய்ச்சி சூத்திரனது வாயில் செலுத்த வேண்டும் என்று ஆரிய நூல்கள் கூறுகின்றன... ஆரியநூல் இன்று பீடணனால், நீதி நூலாயிற்று... ஆயிரம் நூல் இங்கு இருந்தும், தமிழனுக்கு அறிவு மட்டும் வளரவில்லை... - சொரணை வளரவில்லை - சூடுப் பிறக்கவில்லை... தன்னலம் பேணுபவன் ஆனான் தமிழன்... தன்னை சூத்திரன் என்றும், ஆரியனுக்கு அடிமை என்றும் ஓங்காரித்துக் கொண்டான் பீடணன்... அவன் தன்னை மட்டுமா ஆரியத்தை அடிமையாக்கிக் கொண்டான்?... பதவி என்றும், சுகம் என்றும் நாளை ஆசைக் காட்டி இனி எத்தனை எத்தனை தமிழர்களை பீடணர்களாக மாற்ற விருக்கிறார்களோ?... பதவிவெறிப் பிடித்த இனம் தமிழினம் என்று எதிர்காலம் எம்மைத் தூற்ற பீடணன் புள்ளி வைத்து விட்டான்... அதன் மீது கோலந்தீட்ட இனி பீடணன்கள் பிறக்கக்கூடாது... போ... கரனே, பீடணனைக் கொன்று விடு!... பீடணன் கொல்லப் பட்டாலன்றி, சூத்திரன் என்ற சொல் ஆரியநூலில் இருந்து நீங்காது!... பீடணன் வாழ்ந்தால், சூத்திரன் என்றச் சொல் தமிழன் மீது நிலைக் கொண்டு விடும்... போ... இராமனை மட்டுமல்ல; பீடணனையும் கொன்றுவிடு!...
குழலி :
ஓலை அனுப்பியுள்ளான் ஒல்லான், பீடணன் வாயிலாக!... நேர் நின்று போரிட பயந்தவனல்லவா இராமன்!... அதனால்தான் ஓலையையும் நேர்முகம் அனுப்பவில்லை... 'சீதையைக் கொடுத்து விடு; இல்லையேல், போர்த் தொடுப்பேன்' என்று இவனல்லவா தீட்டியிருக்க வேண்டும் ஓலை!... எவன் மனைவிக்கு எவன் தீட்டுவது?... அமைச்சர்களே, எண்ணைய்யில் இருந்துத் தெரித்த சிறு கடுகும் புண்படுத்தும்... சிறுகடுகு செய்த புண் தானே என்று நாம் சும்மா இருந்து விடுவதில்லை... சூத்திரர் என்றோர் வர்க்கம் உதயமாகிட பீடணன் அடிகோலினான்... அடியோடு நாசம் செய்ய நாம் தவறினால், நீர் சொன்னது போல், அஞ்சி நின்ற ஆரியர் அச்சம் தெளிந்து நிற்பர்... சூத்திரன் என்ற சொல் தமிழன் மீது நிலைக் கொண்டு விடும்...
(திரிசடை நுழைகிறாள் )
திரிசடை :
தந்தையே என்று நான் தேனொழுக அழைத்து மகிழ்ந்ததுண்டு... அவன் மடியில் நான் தலைவைத்து உறங்கும்போது தமிழோடு நான் உறங்குவதாய் இன்பம் துய்த்ததுண்டு... வாஞ்சையோடு என்னை அவன் தடவிய போது, என் நெஞ்சிலே நேசம் ஊறும்... இன்றோ, தமிழ் நெஞ்சங்களிலே அவன் நஞ்சூற்றி நிற்கிறான் எனில், நாம் எதனை ஊற்றுவது அவன்மேல்?... களம் செல்லும் வீரரோடு நானும் செல்கிறேன்; பீடணன் என்போனைக் கொல்ல!... அவனுக்கு மகளாய் நான் பிறந்தேன் என்பதை நினைக்கும்போது மானங்குன்றி மரணத்தைத் தான் மனம் நாடுகிறது... என்னை நான் மரணத்துக்கு உட்படுத்திக் கொள்வதை விட, என் தந்தையின் மரணம் என்னால் உட்படுத்தப் படுமேயானால், தமிழ் மண்ணிலே புது இரத்தம் பிறக்கும்... இனத்தின் மானம் சிறக்கும்... தமிழ்மாண்பு தன்னிகரில்லாதது எனும் பேர் தரணியில் மேலோங்கும்... வாழவோ பிறந்தனர் தமிழர்?... இனமானங் காக்கவும், பிறந்தனர் எம் தமிழர் என்பதனை நிலைநாட்ட இதுவே தருணம்... வேந்தே, வெற்றிக் கொடி ஏந்தி வீரமுழக்கம் செய்க!... போர்... போர்... போர்... முரசதிர - சங்கு முழங்க - முழவு இசைய - போர்... போர்... போர்... தமிழுக்கும் ஆரியத்திற்கும் போர்... பொய்மைக்கும், மெய்மைக்கும் நடக்கும் இனப்போர்!... இராவணன் :
கூவுகப் போரென்று!...
குருதி சிந்தி இனங்காப்போம்!...
கூவுகப் போரென்று!...
மடமையால் ஆரியரும் நல்மனம் இழந்தார்...
கொடுமைகள் பல செய்து - எம்மினம்
தூற்றி நின்றார்...
சொல் எடுத்துத் தந்தோம்
அன்போடு வாழ்வோமென்று!...
வில்தொடுத்து எம்மை
வீழ்த்த வந்தான் இராமன்!...
எம்விழிப் பிடுங்கி அவன் தின்ன
யாம் மீனா?... சிறுபறவையா?...
பாயும் புலிதனை சிறுபுல்தான்
தடுக்குமோ?...
பாயும் நதியில் சிக்கினால் பாம்பும்தான் சாகும்!
போரென்றுக் கூவும் எம்படைதனில் சிக்கினால்
பீடணனும்தான் சாவான்!...
இதில் அய்யமென்ன?...
வீரர் அணிவகுக்க
சங்கு முழங்கட்டும்!...
வெற்றிக்கொடி நாட்ட
வண்ணவிளக்குகள் வீதிதோறும்
வாழ்த்துப் பாடட்டும்...
பகைவர் தேகம் தோரணமாய் கட்டப்படு முன்னர்
எமதுவீரர் செல்லும் வீதியெங்கும்
அழகு தோரணவாயில் அமைக்கப் படட்டும்...
கொட்டுக முரசு!...
முழங்குக சங்கு!...
கூவுக போர்... போர்... போர்...
அனைவரும் :
போர்... போர்...
(என்று முழங்க)
-திரை-
பாகம் :3. காட்சி - 21. மலைக்குகை (காடு)
இரிசியமுகன்,
இராமன்,
இலக்குவன்,
பீடணன்,
அனுமன்.
அருகில் வில்லேந்தி, இலக்குவன் காவல் நிற்க-
பீடணன் முனிவனை நோக்கி, இருகாதுகளையும் இருக்கரங்களால் பிடித்த வண்ணம் குனிந்து அமர்ந்து, அமர்ந்து எழல்... அவன் தலையில் மகுடம் இருக்கிறது...
கடுஞ்சினம் கொண்டவன் போல் இராமன், பாறை மீது கால் ஊன்றி உரக்கக் கூவி நிற்றல்...)
இராமன் :
போர்... போர்... போர்... அரக்கருக்கும், ஆரியருக்கும் போர்... வெந்துற்றது நெஞ்சு!... விம்மி சிதைந்தது விழிகள்... வெங்கொடுக் கானில் சூளுரைத்துத் தொடுக்கிறேன்... போர்... போர்... போர்... ஆணவம் மடிந்துற அரக்கரோடுப் போர்... அடிபணிய மறுத்தவனோடு போர்... ஆரியஞ் செழித்திட, தடை விதிப்பானோடுப் போர்... வானம் பொழிகிறது... வனவிலங்குகள் வாழ்கின்றன...; ஆரியன் அதனை உண்ண அரக்கன் தடுப்பதோ... உலகம் உய்ய உதித்த வேள்வியை கேலி செய்வதோ?... நியாயமோ இது?... நீதியோ இது?... மரணபூதமோ மண்ணுலகை ஆள்வது?... சிறு ஓலையில் தொற்றிய தீ, பெருங்குடிலைச் சாம்பலாக்கிடாதோ?... இலங்கையை ஓச்சும் வஞ்சகம் நாளை, வையகத்தையும் தீண்டாதோ?... அரியணையில் ஒருத்தியை அருகில் வைத்து, ஆசைக்கு அடுத்தவன் மனைவியைத் தூக்கிச் சென்றால், நீதிப் பிழைக்குமோ?... நேர்மை அரசோச்சுமோ... வேதம்தான் ஒலிக்குமோ... ஓலையோடு இருக்கவோ வேதம் பிறந்தது... வேதமுழக்கம் எங்கும் ஒலித்தால் அல்லவோ வானம் பொழியும்... வையகம் சிறக்கும்... தடைச் செய்து ஒருவன் தரணியில் இருக்கிறான் எனில், படைக் கொண்டு அவனை அதம் செய்திட வேண்டாமோ?... அதன்பொருட்டே, கூவுகிறேன்... போர்... போர்... போர்... இந்திரனே, செவிக் கொண்டு எம் சிந்தையில் வெற்றிப் பூவினை நாட்டு!.... போர்... போர்... போர்...
(உரக்கக் கூவி, ஓசையின்றி சிறுது நேரம் அமைதிக் கொண்டிருக்கிறான் இராமன்!...
காதிரண்டை பிடித்து, குனிந்து எழும் பீடணனை நெருங்கி...)
இராமன் :
போதும் நிறுத்து!...
(பீடணன் காதுகளில் இருந்து கரத்தை விடுவிக்காமல், அப்படியே நிற்றல்-)
மகுடம் சூட்டப்பட்டு, நீ இலங்கையின் மன்னவனாக ஆக்கப்பட்டு விட்டாய்... மடமடவென்று, படை நடத்தி அரக்கன் இராவணனைக் கொல்ல வேண்டும்... அதன்பிறகே, நீ அரியணையில் அமர முடியும்... அறிவாயா?...
பீடணன் :
அறிவேன் அய்யனே... அரியணை ஏற வேண்டும் என்பதே எனதுத் திட்டம்...
இராமன் :
தாள் தொழுது எழு... உன் தாகம் தீர்ந்திடும்...
(இராமன் நின்றிருக்க-
பீடணன் குனிந்து தாள் தொட்டு வணங்கல்...)
இராமன் :
பீடணா!..
பீடணன் :
அய்யனே!...
இராமன் :
அய்யனே, என்று நீ ஏன் என்னை ஒருமையில் விளிக்கிறாய்... அய்யரே என்று பணிவோடு பன்மையில் விளித்திடு ஆரியரை!...பீடணன் :
அய்யரே!...
இராமன்
சுக்ரீவன் எங்கே?...
பீடணன் :
படைக்கருவி உண்டாக்க, படைவீரர் சிலரோடு சுக்ரீவனை அனுப்பியது தாங்கள் அல்லவா?...இராமன் :
ஆமாம்!... போர்... போர்... போர்... என்று முழங்கு!... போரில் வென்று சுக்ரீவனை கிட்கந்தகத்தின் அரசனாக்குவேன்... ஏற்றுவேன் உன்னையும் அரியணையில்!...
(பீடணன் மீண்டும் தாள் பணிந்து வணங்க-)
இராமன் :
இரிசியமுகன் விழிமூடி ஞானப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறான். இந்திரனோடுப் பேச... ஏனென்று அறிவாயா அரக்கனே...
பீடணன் :
அறியேன் அய்யரே...
இராமன் :
சீதையைக் கொடு ; இல்லையேல் போர்த் தொடுப்பேன் என்று நீ சொல்லியும் இராவணன் அஞ்சினானில்லை... சீதையைத் தந்து, 'செய்தப் பிழையைப் பொறுத்தருள்க' என்று என் தாள் பணிந்திருந்தால், நான் அவனை மன்னித்திருப்பேன்... அவனோ, சீதையைத் தர மறுத்து விட்டான் எனில், இனி நாம் செய்வது என்ன?... போர்ச் செய்வோம்... அரக்கன் இராவணன் தலைக் கொய்வோம்... சரியா நான் கூறுவது?...
பீடணன் :
சரியே; அய்யரே!...
இராமன் :
இராவணன் சற்றும் அறியா வண்ணம், படையோடு நாம் சூழ்வோம் இலங்கையை!... படைக் கொண்டு நாம் முற்றுகையிட்டுப் பாழாக்குவோம் இலங்கைப் படையை!...
பீடணன் :
ஆகா... அய்யரே!... அருமைமிகு யோசனை இதுதான்!...
இராமன் :
ஆனால்...
பீடணன் :
சொல்லுங்கள் அய்யரே!...
இராமன் :
இலங்கையை நாம் அடைவது எப்படி?...
பீடணன் :
படகில் செல்வோம்... பெரும்கடல் கலம் செய்வோம்... அதில், படைவீரரோடுச் செல்வோம்...
இராமன் :
இந்த யோசனை எனக்கில்லை என்று எண்ணினாயா மூடனே!...
பீடணன் :
பொருத்தருள்வாய் ஆரிய மைந்தா...
இராமன் :
கலமேறி நாம் கடல் மீதில் சென்றால், புயலோ, பெருங்காற்றோ தாக்கினால், கடல் நடுவில் தத்தளிப்பதா?... மூழ்கி மூச்சுத் திணறிச் சாவதா?... சிந்தையோடுதான் பேசுகிறாயா, அடிமை அரக்கனே?... பீடணன் :
மன்னிக்கவேண்டும் ஆரிய மைந்தனே!...
(தாள் வணங்கி எழல்)
இராமன் :
ஆரியவீரர்கள் என்னிடம் ஆயிரம் பேர் உண்டு... அவர்களோடு இணைந்திட - இராவணனை எதிர்த்து சீதையை மீட்டிட - பக்கத்து நாடுகளின் படையும் இங்கே வந்துள்ளது... சுக்ரீவனும் படை வைத்துள்ளான்... இவர்கள் எல்லாரையும் ஏற்றி, கலத்தில் செல்வது சாத்தியமாகுமோ?...பீடணன் :
ஆகாது அய்யரே...
கடல்நீரை வற்றச் செய்து விட்டால், தத்தளிப்பு ஏதுமின்றிக் கடந்து விடலாம்... இலங்கையையும் சூழ்ந்து விடலாம் அல்லவா...
பீடணன் :
கடல்நீரை வற்றச் செய்வதா?... சாத்தியமாகுமோ இதுவும்...
இராமன் :
இரிசியமுகன் விழிமூடி ஞானப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறான்... வருண தேவனைத் தேடியலைகிறான்... வருணதேவன் வந்தவுடன், கடல்நீர் முழுவதையும் அள்ளிச் சென்று வானத்தில் வைத்துக் கொள் என்று நான் ஆணையிடுவேன்... இரிசியமுகனே, வருணதேவன் அகப்பட்டானா?...(விழி மூடியப்படியே )
இரிசியமுகன் :
அவன் எங்கே சென்றான்... எவளோடுப் படுத்திருக்கிறான் என்றே தெரியவில்லை... எங்கெங்குத் தேடினாலும், அவன் இருக்குமிடந் தெரியவில்லை...
(இராமன் கோபமாக )
இராமன் :
ஆ... பொங்கும் அலை போல் பொங்கியது கோபம்தான்; எனக்கும்!... அவன் இருக்குமிடந்தான் தெரியவில்லையா?... எங்குச் சென்றாய், வருணதேவனே!... நானழைத்தும் இன்னும் வரவில்லையென்றால், நாணேற்றி உன்னை நாசமாக்குகிறேன் பார்...
(நாண் தொடுக்க-
நாண் மிகு ஒலியுடன் வான் நோக்கி பாயல்-
தொடுப்பு ஓசையில் அஞ்சி பீடணன் காதுகள் இரண்டையும் பொத்திக் கொளல்...)
இராமன் :
நாண் தொடுத்து விட்டேன்; ... நாசம் செய்துவிடும் வருண தேவனை!... எங்கிருந்தாலும் அவன் இடந்தேடிச் சென்றுக் கொன்று விடும்... அவதாரம் எடுத்து வந்த ஆண்டவன் நான்!... நான் அழைத்தும் அவன் வரவில்லை... அதனால் இதுவே தண்டனை...
பீடணன் :
கடல்நீர் வற்ற, வேறு வழியில்லையா?... கலமேறிச் செல்வதும் கூடாது என்கிறாய்... கடப்பது எப்படி?... இலங்கையை நாம் சூழ்வது எப்படி?...
இராமன் :
பாலம் ஒன்று கட்டுவோம்... அதன் மீதில் படை நடாத்திச் செல்வோம்...
பீடணன் :
ஆகா...
இராமன் :
பாலம் கட்டவேண்டுமென்று, இந்திரனை யாசித்து இரிசியமுகன் விழிமூடி ஞானத்தில் மூழ்கியிருக்கிறான்... இந்திரனும் மாயத்தால் பாலமொன்றுப் படைத்துத் தந்தால், படை நடாத்திடலாம் நாம்!...பீடணன் :
மாயமாய் பாலமும் உருவாகுமோ?... ஆகா, அந்தக் காட்சியைக் காண வேண்டுமே...
இராமன் :
கல்லும், மண்ணும் சுமந்து கடும் பணி சிறுது அரக்கர் நீவிர் ஆற்றினால்தான் இந்திரனும் நம்மோடு நின்று பாலம் எழுப்பிடுவான்... கடல் மீதில் பாலம் என்பது கனவில் மட்டுமே நிகழக் கூடியது... நனவாக வேண்டுமெனில், ஆண்டவன் அருள் வேண்டும்... அந்த அருள் வேண்டித்தான் இரிசியமுகன் விழி மூடி யாசிக்கிறான்... அறிவாயா பீடணா!...
பீடணன் :
அறிந்தேன் அய்யரே!... ஆனால்;
இராமன் :
சொல்லடா, பீடணா!... 'ஆனால்' என்று வாய் மெல்லுவது ஏனடா?...
பீடணன் :
அய்யரே, நீர் சொல்வதுப் போல், இலங்கையில் தண்ணீர் மேல் கட்டப்பட்ட பாலங்கள் நிறைய உள்ளன... அந்தப் பாலங்களைக் கட்ட இராவணன் இந்திரனை யாசித்ததாய் எனக்குத் தெரியவில்லையே... இராமன் :
அவனோ, மாயங் கற்றவன்!... மந்திரம் தெரிந்தவன்... அதன் துணைக் கொண்டு, பணியாட்களை ஏவி, பாலம் கட்டியிருப்பான்... உனக்கெங்கே இது புரியும்?... புரிந்திருந்தால் நீயேன் இங்கே நிற்கிறாய்?... கேள்; நான் சொல்வதை!... பாலம் இலங்கையில் உள்ளதென்றால், அதனைக் கட்டியப் பணியாட்கள் சிலரைப் பிடித்து வா!... அமைச்சர் பதவித் தருகிறோம்' என்று ஆசையை அவர் நெஞ்சில் ஊட்டி, பாலம் கட்டச் செய்வோம்...
பீடணன் :
பாலம் கட்டுவதில் தேர்ந்தவன் ஒருவன் இருக்கிறான்... நளன் என்பது அவனது பெயர்... நண்பன்தான் எனக்கும் அவன்!.. நான் சொன்னால் மறுப்பானோ?... அவனோடு சிலரையும் அழைத்து வருகிறேன்... பாலம் கட்டித்தந்தால் அமைச்சராக்கித் தருவேன் என்று அவன் நெஞ்சில் ஆசை வார்க்கிறேன்...
இராமன்:
பதவி ஆசை வார்த்தால் போதும்... செத்து போனத் தமிழ்ப் பிணம்கூட, ஆவென்று வாய்ப் பிளந்து நிற்கும்... போ... போய் ஆள் திரட்டு... இலங்கைக்குள் நீ நுழைவதை எவரும் அறிந்திடக் கூடாது...
பீடணன் :
அய்யரே, மேலும் ஒரு சொல்!...
இராமன் :
சொல்!
பீடணன் :
நீரில் மூழ்கிச் செல்லும் கலம் வைத்துள்ளான் இராவணன்... அதனைப் போல் நாமும் செய்தால், யாரும் அறியா வண்ணம் நீரில் மூழ்கிச் சென்று இலங்கையை சூழ்ந்துக் கொள்ளலாம்... இராமன் :
மந்திரத்தால் செய்த கலமது!... அதனைப் போல் நாமும் செய்ய வேண்டுமெனில், இந்திரனை யாசிக்க வேண்டும்... நீர்மூழ்கிக் கலம் செய்யத் தெரிந்த தமிழர்கள் இருந்தால், அவர்களையும் அழைத்து வா... நீர் மூழ்கிக் கலம் அவர்களைச் செய்யச் சொல்வோம்... செய்தால், ஆண்டவனது அருள் அவர்களுக்குக் கிடைக்க வழிச் செய்வோம்... அரசவையில் அவர்களைச் சேர்ப்போம்... ஆசை வார்த்தைக் கூறி அழைத்துவா!
(அனுமன் வருகிறான்)
அனுமன் :
அவசியமில்லை அதற்கு... நாம் போர் தொடுத்து இலங்கைக்குப் போகவும் வேண்டாம்...
இராமன் :
என்ன நீ உளறுகிறாய்?... எத்தன் இராவணன் மந்திரத்தால் உனது சித்தம் கலக்கினானா?... இலங்கை மீது போர் தொடுக்க வேண்டாம் என்று நீ கூறுவதன் பொருளென்ன?... சீதையைத் தூக்கிச் சென்று, தமிழ் மாண்பின் சீரழித்தான்... அவன் மீது போர்த் தொடுக்க வேண்டாம் என்றுக் கூற அறிவும் உண்டோ உனக்கு?... அவன் தூக்கிச் சென்றது என் மனைவியைத்தானே?... போர்த் தொடுக்க வேண்டாமெனில் நீ உன் மனைவியை எனக்குத் தந்துவிடு...
அனுமன் :
அய்யனே!...
பீடணன் :
அய்யனே என்று விளிக்காதே... அய்யரே என்று பண்போடு அழை!...
(அனுமன் தலையில் பீடணன் குட்டுகிறான்)
அனுமன் :
அய்யரே!...
இராமன் :
போர்த் தொடுக்க வேண்டாம் என்று சொன்ன உனது நாவைப் பொடிப் பொடியாய் நறுக்கிடுவேன் மந்திரத்தால்... மனதில் பயமின்றி நீ என்னடா பேசுகிறாய்?... உரிமையுண்டு சுக்ரீவனுக்கு அரசாள!... அவனை விரட்டியடித்த வீணன் கரனிடம் கிட்கந்தகத்தின் அரசப் பொறுப்பைத் தந்துள்ளானே இராவணன்!... பூமஞ்சத்தில் மங்கையோடு கொஞ்சிட வேண்டிய சுக்ரீவனை மலைக்குகையில் மரமேடையில் துயின்றிடச் செய்தவன் எவன்?... அவனோடுப் போர்த் வேண்டுமா? வேண்டாமா?... காக்கையின் முட்டையை கருநாகம் தூக்கிச் சென்றுச் சுவைப்பதா?... கூறடா... இவன் யார்?... இலங்கையை ஆள இவனுக்குத் தகுதியில்லையா?... இவன் மகள் திரிசடைக்குத்தான் தகுதியில்லையா?.... இரு கூறாக்கி இலங்கையின் ஒரு பகுதியை, பீடணனும் ஆளட்டும் என்று பெருந்தன்மை இல்லா இராவணனோடுப் போர்த் தொடுத்திட வேண்டாமென்று அநுமன் கூறுகிறான்... பீடணா, நீ அமைதிக் காத்து நிற்கிறாயே... அரசனாக உனக்கு விருப்பமில்லையா?... இன்னும் நீயேன் செவி மூடி நிற்கிறாய்?... பீடணன் :
அடேய்... அநுமா, அய்யருக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமோ?... வாய் மூடி நில்லடா... வாய்ப் பேசி என் வாழ்வையும் நாசமாக்காதே... அடுத்தவன் மனைவியை அழகாய்த் தூக்கிச் சென்று, திமிராய் அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறான்... இது நன்றோ... நீயேன் துவண்டு நிற்கிறாய்?... படை நடாத்தி, இலங்கை கொடியறுத்து இராமன் காலடியில் போடு!... போடா...
அனுமன் :
அய்யரே, நான் சொல்ல வந்தது என்னவென்றால்?...
இராமன் :
வெல்லும் வழி இருந்தால் சொல்லு!... படைக் கொண்டு இலங்கையை சூழ்வோம் என்ற என் சொல்லுக்கு உன் சொல் தடைக் கொண்டு வரின் உன் தாடையைக் கிழித்திடுவேன், அடிமைத் தமிழ்ப் பிசாசே!...
அநுமன் :
அய்யரே, தடையும் சொல்ல, எனக்குத் தகுதியும் உண்டோ?... ஊறிவரும் நீருக்குத் தடை விதிக்க, உதிரி மண்ணுக்கும் தகுதியுண்டோ?... கருநிற மேகத்துக்குத் தடைச் சொல்ல, சுடுகிற கதிரவனே முனையாதபோது, கருநிற மேனியழகா, உன் போருக்கு நானோ, தடைச் சொல்வேன்... அசைந்தாடும் கடலலைக்கு நுரைத்தான் தடையாகுமோ?... அய்யரே, அறிவில்லையோ எனக்கும்; தடைச் சொல்ல!... தடை சொல்லவோ நானிங்கு வந்தேன்... தகவல் கூறவே தாவி வந்தேன்...
இராமன் :
தகவலா?...
அநுமன் :
தம்பி பீடணன் அனுப்பிய ஓலைக் கண்டு, அரக்கன் இராவணன் அஞ்சினானில்லை... சீதையோடு ஆசைத் தணித்தானில்லை... அவளைப் பிரிய மனமின்றி பிதற்றலுற்றான்... போரென்றுக் கூவி, தமிழ்ப் படையை ஏவ துணிந்திட்டான்...இலங்கையை சூழ்வது எப்படி என்று நாம் எண்ணமிட்டுக் குழப்பம் கொள்ளவேண்டாம்... படையோடு கரன், இங்குப் பாசறைக் கொள்ள வருகிறான்...
(இராமன் அதிர்ந்து)
இராமன் :
என்ன போரா?...
அநுமன் :
ஆமாம்!... நம்மைத் தேடி நம்மை முற்றுகையிட வருகிறான், கரன் தமிழ்ப் படையோடு!...(இராமன் மேலும் அதிர்ந்து)
இராமன் :
இங்கேயா வருகிறான்... நம்மை சூழ்ந்துக் கொண்டால், நாம் எங்கே செல்வது?...
பீடணன் :
அவதார நாயகா... மாயவில் தொடுத்து மரணம் செய்பவனே... நேயமாய் யாம் உம்மை நம்பியிருக்கையில், நீயோ அஞ்சி அதிர்ந்து நிற்கிறாயே...
இராமன் :
அஞ்சவில்லை... அதிரவில்லை... முனிவரே, பாதம் பதறுகிறது... பாழ் நெஞ்சுத் துடிக்கிறது... விழித்தெழுங்கள்... ஞான நித்திரை போதும்...
(இரிசியமுகன் விழித் திறவல்)
இராமன் :
போர்த் தொடுத்துவிட்டான்... முரசொலித்து கரன் முற்றுகையிட வந்துக் கொண்டிருக்கிறான்... முனிவரே, உமது முடிவென்ன?...
இரிசியமுகன் :
அழைத்து வாருங்கள் வாலியின் மகன் அங்கதனை!...
இராமன் :
அங்கதன் எதற்கு?
இரிசியமுகன் :
அழைத்து வாருங்கள் அவனை!
வாலியைக் கொன்ற எம்மைப் பழித் தீர்க்கத் துடித்துத் திரிகிறானாம் அங்கதன்!... அவனை ஏன் இங்கு அழைத்து வரவேண்டும்?...
இரிசியமுகன் :
அவன்தான் கிட்கந்தகத்தின் அரசன்!
அநுமன் :
துரோகம் இது!... எனது தலைவன் சுக்ரீவன் நிலை என்னாவது?...
இரிசியமுகன் :
அவனும்தான்!
அநுமன் :
புரியவில்லை!... இது என்ன... ஏமாற்றுப் பேச்சு!... எனது தலைவன் சுக்ரீவன் அரசாள வேண்டும் என்பதுதானே பேச்சு!... அதன் பொருட்டுத்தானே வாலியின் வதம் ஆயிற்று... அடிமையாய் உமக்குத் தாள்ப் பணிந்து நிற்கிறான் சுக்ரீவன் எதன் பொருட்டு?... அரியணை ஏறிட வேண்டுமென்றுதானே... நீரோ, அங்கதனை அரசனாக்க வேண்டுமென்று வாய் மலர்ந்தால், என் தலைவன் கதி என்னாவது?... கொல்லபட்டவன் மகன் மன்னனாய் இந்நிலமாள வந்தால், எம் நிலை என்னாவது?... பாம்பின் வாயில் விரல் வைக்க யாம் என்ன பச்சிளம் குழந்தையா?... சொல் மீறிச் செய்வது ஆரியமுகனுக்கு அழகோ...
இரிசியமுகன் :
அடேய் இராமா, அறிவில்லாதவன் இவனை ஏன் வைத்திருக்கிறாய்?... ஆரியனிடம் கேள்விக் கேட்க அரக்கனுக்கு அருகதையில்லை என்று மனுநீதி சொல்வதை மடையினவன் உணர உரைப்பாய்... இலக்குவா, மரம் போல் நிற்காதே...
(அநுமனை இலக்குவன் எட்டி உதைத்தல்)
இலக்குவன் :
அரக்கப்பயலே, கேள்வியாக் கேட்கிறாய்?... ஆரியனும் ஆண்டவனும் ஒன்று!... அறிந்தும் ஏனடா நீ வாய்த் திறந்தாய்... சொல் கேட்டு நடப்பதுதான் சூத்திரன் உனது பணி!... வில் விட்டு மாயமாய், உன்னுயிர் பறித்திடுவோம்...
(எட்டி உதைத்தல்... இராமன் தடுத்து)
இராமன் :
அனுமனே... அனுமானிப்பதில் நீ சிறந்தவன் என்று நான் எண்ணியிருந்தேன்... நீயோ அரக்கன் என்பதை பேச்சில் காட்டினாய்... காற்றுக்கேக் கடவுளாக்கி, உன்னைப் பிறர் கை தொழுதிட வைப்பேன்... ஆரியசக்தியை என்னவென்று இன்னமும் நீ உணராமல் இருக்கிறாயே... இரிசியமுகன் ஏன் சொல்கிறான்... எதற்குச் சொல்கிறான் என்று செவிமடு!... முனிவனே, முனிந்து நீ சபித்தால் சாம்பலாகிப் போவான்... பொறுத்து, இவன் மன இருள் அறுத்திடு...
இரிசியமுகன் :
அங்கதன் வாலியின் மகன் என்று எனக்குத் தெரியாதா?... அவனை அரசனாக்கினால் பழி வாங்குவான் என என் சிந்தை அறியாதா?... அழைத்து வாருங்கள், அவனை...
இலக்குவன் :
பெரும்படைக் கொண்டு கரனோடு போர் புரிந்திட வேண்டியத் தருணம் இது... பகைவனிடமும் நகைமுகம் காட்டி, சூழ்ச்சி வகுக்க வேண்டியத் தருணம் இது... வெல்வது எப்படி என்று சொல்வதை விடுத்து, சின்னப்பயல் அங்கதனை கொண்டு வா என்பது விந்தையாகத்தான் படுகிறது...
இரிசியமுகன் :
சின்னப்பயல் என்பதால்தான் அவனை சீக்கிரமாகவே இங்கே அழைத்து வா என்றேன்...
பீடணன் :
அழைத்து?
இரிசியமுகன் :
அவன் நெஞ்சில் ஆசை ஊட்டு!... அவனே கிட்கந்தகத்தின் அரசனென்று ஆசையை மட்டும் ஊட்டு நெஞ்சிலே... புரிகிறதா...
அநுமன் :
புரியவில்லை...
இரிசியமுகன் :
தமிழன்களுக்கு ஒரு போதும் ஆரியசூழ்ச்சிப் புரியாது... அங்கதனை அரசனாக்குவோம் என ஆசை ஊட்டுவோம்... சின்னப்பயல் அவனை தலைவனாக்கிப் படையோடு போர்க்களம் அனுப்பி வைப்போம்...
இராமன் :
சிட்டுக்குருவியின் தலையில் சிங்கத்திற்குக் குடியிருப்பா?...
இலக்குவன் :
முனிவனே, இது என்ன விளையாட்டு?... சிற்றெலியும் சிங்கத்தை வெல்லுமா?...
இரிசியமுகன் :
ஆரிய மைந்தர்களே, சிற்றெலியைச் சிங்கத்தோடுமோதச் சொல்லவில்லை... இருட்டறையில் நின்றுக் கொண்டிருக்கிறோம்... சிறு விளக்கேற்றி வைக்கிறேன்... பீடணன் :
புரியவில்லை; முனிவா!...
இரிசியமுகன் :
புரியாது; தமிழ் மூடர்களுக்கு!...
அநுமன் :
ஆரியர் இவர்களுக்கும்தான் புரியவில்லை...
இரிசியமுகன் :
அடிமை நாயே... அடங்கிக் கிடடா... ஆரியரையும் மூடர் என்கிறாயோ?... இராமா, இவன்களுக்கு நான் சொல்வதைச் சொல்லு... அங்கதன் அவன் சின்னப் பையன் என்பதால், சீற்றம் கொண்டு வரும் கரன், சின்னப் பையனோடு மோதுவதா என்று தயக்கம் காட்டுவான்... அந்தத் தருணத்தை நாம் சாதகமாக்கி, சரஞ்சரமாய் மாய அம்புதனை ஏவிட வேண்டும்...
பீடணன் }
அநுமன் }
ஆகா! நீயல்லவோ ஞானி!...
இராமன் }
இலக்குவன் }
ஆரியருக்கல்லவோ ஞானம் உதிக்கும்!...
இரிசியமுகன் :
அழைத்து வாருங்கள் அவனை!... ஆசை ஊட்டுங்கள் நெஞ்சிலே... பதவி ஆசைக்குப் பணியாதவனா தமிழன்... போடா அனுமா, போய் அழைத்து வா அங்கதனை!...
(அநுமன் போதல் )
- திரை -
பாகம் :3. காட்சி : 22 பாசறை
கரன்
வீரன்
அங்கதன்
( சிந்தித்த வண்ணம் கரன், பாசறையில் நடையிட்டு இருத்தல்-
வீரன் நுழைந்து...)
வீரன் :
வணக்கம் தளபதியாரே, தங்களைக் காண அங்கதன் வந்துள்ளான்...
கரன் :
வாலியின் மகன் அங்கதனா?...
வீரன் :
ஆமாம்!...
கரன் :
வாலி கொலை செய்யப்பட்ட பிறகு, அங்கதனுடைய இளம் பிஞ்சு நெஞ்சம் வேதனையில் வாடக்கூடாது என்று, அவன் வாட்டமுறா வண்ணம், கிட்கந்தகத்தின் உல்லாச மாளிகையில் வைத்தேன்... நகர் விடுத்து, அவன் ஏன் இங்கு போர் முகாமுக்கு வந்தான்?... அறுபட்டு வீழும் தலைகளையும், அவதியுற்றுத் துடிக்கும் முண்டங்களையும் பார்த்தால், பிஞ்சு மனம் தாங்குமோ?... சின்னப் பையன் அவன் ஏன் வந்தான் இங்கு?வீரன் :
தங்களைக் காண வேண்டுமாம்...
கரன் :
வரச்சொல்...
(வீரன் செல்லல்... கரன் தொடர்ந்து நடையிடல்... அங்கதன் நுழைதல்...)
அங்கதன் :
வணக்கம், தளபதியாரே!...
கரன் :
அங்கதா,வா!... என்னைக் காணவேண்டுமென்று நீ சொல்லி அனுப்பியிருந்தால், நானே உன்னைக் காண வந்திருப்பேனே... பூஞ்சோலையில் நீ புதுப் புது எண்ணங்களோடு உறவாடியிருக்க வேண்டும் என்பதுதானே இராவணன் விருப்பம்... வாள்முனை உரசலில், இங்கே எழும்பிடும் மரணமேடையின் மீது உன் கால்முனைப் பட இதுவோ தருணம்?...
அங்கதன் :
அரசமகனாய் நான் பிறந்திருந்தாலும், ஆதிக்கம் செலுத்தும் உரிமை உமக்கல்லவோ தரப்பட்டிருக்கிறது... நன்றுதான்!... இதனை மறந்து உமது ஒப்புதல் பெறாமல், நானிங்கு வந்துவிட்டேன்... தவறுதான்...
கரன் :
அல்ல!... மாமன்னனின் தூதுவனாய்த் தான் நான் கிட்கந்தகத்தில் இருக்கிறேன்... நாளை அரசியல் - கல்வியில் - அறிவுப் பெற்றவுடன், நீதானே இந்நிலத்தின் அரசன்... வாலியைப் போல் வளமுடன் கிட்கந்தகத்தை ஆளப்போவது நீதான்!...
அங்கதன் :
நாளை நான் அரியணை ஏறும் காட்சியை இந்நிலம் காணுமோ; இல்லையோ!... இன்று நமது இனம் அவச்சொல்லுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதை இந்நிலம் கண்டுக் கொண்டிருக்கிறது...
கரன் :
என்ன சொல்கிறாய் அங்கதா?... அவச்சொல்லுக்கு ஆளாகவில்லை... நமது மாண்பையும், கீர்த்தியையும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது...
அங்கதன் :
மங்கை எவளோ ஒருத்தியை மஞ்சத்தில் வைத்துக் கொண்டிருப்பது மாண்பாகாது!...
கரன் :
மாசு தூவுவோரைப் போல் நீயும் பேசுவதுக் கீர்த்தியாகாது!...
அங்கதன் :
நிறத்தில் ஒன்றுதான் என்றாலும் காகம் குயிலாகாது!...
கரன் :
செவியில் குறை இருந்தால், குழலின் இசையும் கசக்கும்!...
அங்கதன் :
வேம்பு ஒரு போதும் இனிக்காது!...
கரன் :
ஆமாம்; வேம்பு ஒரு போதும் இனிக்காது... இராமன் நாடகம் தமிழ் மண்ணில் அரங்கேறாது!...அங்கதன் :
நாடகம் ஆடுவது யாரென்று அறிந்து நானிலமே காரி உமிழ்கிறது... இன்னும் வரவில்லை இலங்கைக்கு வெட்கம்!... இதிலோ வாய்ச் சொற்கள் மட்டும் நீளம்!... மாயங்கற்றவன் இராமன்... அவன் மனம் நினைத்தால், எமது இனமே சாம்பல்... இதனை உரைக்கவே நானிங்கு வந்தேன்... சாவதும், பிழைப்பதும் உமது தலைவிதியாலாகட்டும்... நேரில் கண்டேன் இராமனது சக்தியை!... நெருப்பின் மீது அவன் நடந்துப் போகிறான்... எந்த ஒருத் தீங்கும் அவன் தேகத்தில் ஏற்பட நான் காணேன்... வண்ணப்பொடி சிறுது எடுத்து வான் நோக்கித் தூவினான்... எண் திசையில் இருந்தும் அம்புமாரிப் பொழிய நேரில் நான் கண்டேன்... முனிவன் ஒருவன் சபிக்க மூர்ச்சையாகி ஒருவன் வீழ்ந்தான்... இராமன் காலடிப்பட, மூர்ச்சையாகி வீழ்ந்தவன் உயிர்தெழுந்தான்... இது விந்தையோ?... மாயமோ?... ஆனால்; இராமன் ஒரு மகான்... அவன் விரல் நுனியிலும் விந்தையானதோர் சக்தி உண்டு... அவனோடு மோதுவது பாறை மீது மோதிக் கொள்வதுப் போல!... விழியை குருடாக்கி, வீணில் பயணம் செய்ய மூடனும் துணிய மாட்டான்... இராவணன் ஏன் துணிந்தான்; இராமனோடுப் போர்ப் புரிய என்றுதான் புரியவில்லை!...
கரன் :
அங்கதா, அறுத்து விடுவேன் தலையை!... போய்விடு இங்கிருந்து... நாளை நீ கிட்கந்தகத்தின் அரியணை ஏறிட வேண்டியவன்... இல்லையேல் வாள் வீசியிருப்பேன்... மாயமாம்... மந்திரமாம்... பேடிகள் கண்களுக்கு எல்லாமே விந்தையாகத்தான் தெரியும்... பயந்து நின்றால் சிந்தனையும் மாண்டுப் போகும்... போடா பேடிப்பயலே!... தூதுரைக்க வந்தாயோ; துவட்டி விடுவேன்...
அங்கதன் :
தூதுரைக்கத்தான் வந்தேன்... நேரம் கடந்துவிடவில்லை... சீதையை விட்டுவிடுங்கள்... செய்தப் பிழைக்கு மன்னிப்புக் கேட்டு நின்றால், மகான் இராமன் பொருத்தருள்வான்...
கரண் :
கிளிப்பிள்ளையைப் போல் இராமன் பேரை இங்கு நீ கொஞ்சி நிற்பதன் பொருளென்ன?... என்ன வாக்குத் தந்தான் உனக்கு?... கைக்கூலி ஏதும் பெற்றாயோ அவனிடத்தில்?...
அங்கதன் :
என்னை அரசனாக்கப் போவதாய் வாக்குத் தந்துள்ளான் இராமன்!...
கரன் :
அதில் ஏதும் மாற்றம் சொன்னோமா யாம்!... நீதானே நாளை கிட்கந்தகத்தின் அரசன்...
(அங்கதன் சிரித்தல்)
அங்கதன் :
இராவணன் என்னையோ அரசனாக்குவான்?... பித்தேறி அலைகிறான் உனது இராவணன்... அரசபதவியோடு பெண் பித்தும் அவனைப் பிடித்தாட்டுகிறது... விந்தகத்தைப் பெண் ஆளவேண்டும்... ஆனால்; ஆள்வது யார்?... இராவணனது ஒற்றன்தானே ஆள்கிறான்... கிட்கந்தகத்தையும் இராவணனது அடியாளாய் நீதானே அரசாள்கிறாய்... எங்கு இடம் கிடைக்குமோ, அங்கே தனது அரசாதிக்கத்தை நிலைநாட்டத் துடித்துக் கொண்டிருக்கிறான், இராவணன்... அவனோ என்னை அரசாள விடுவான்... வீண் பேச்சினை நம்ப நான் விளையாட்டுப் பிள்ளையல்ல!...
கரன் :
அங்கதா, என் சீற்றம் அடக்கப்பட்டுள்ளது... பொங்குமுன் போய்விடு!... சிறுவன் என்பதால் தலையை சீவாமல் விட்டேன்...
அங்கதன் :
தூதுவனைக் கொல்லத் துணிவது என்ன பண்பாடோ?... இதனையே இறுதியாய்ச் சொல்லுகிறேன்... சீதையை விட்டு விடுங்கள்... சீதையை விட்டு விட்டால் இராமன் போர்த் தொடுக்க மாட்டான்...
(கரன் சிரித்தல்)
கரன் :
இராமன் போர்த் தொடுப்பதா?... அங்கதா, போர்த் தொடுத்து யான் வந்துள்ளேன்... இராமானுக்குத் தூதுவிட்டு நாள் ஏழாயிற்று!... எங்கே சந்திப்பது என்று நீயேனும் கேட்டுச் சொல்; அந்த மந்திரவாதியை!... வாய்வீச்சில் உன்னை மயக்கிய இராமன் என்னோடு வாள் வீச்சில் சந்திக்க வரச்சொல்!... களம் வந்துள்ளேன்... எந்நிலையில் மாற்றமில்லை... போர்... போர்... போர்... போ... போ... போ... சொல்... சொல்... சொல்... இராமனிடம் சொல்... எங்கே சந்திப்பது என்று இராமனிடம் கேட்டுச் சொல்... இன்னும் இருநாளில் அவன் சொல்லி அனுப்பாவிட்டால், எமதுத் தமிழ்ப் படையால் அவன் சூழப்பட்டு, கொல்லப் படுவான்... போய்ச் சொல்...
(அங்கதன் செல்லல் )
-திரை-
பாகம் :3. காட்சி-23. மலைக்குகை (காடு)
இராமன்
இலக்குவன்
அநுமன்
பீடணன்
அங்கதன்
( இராமன் பாறைமீது காலூன்றி நிற்க, மண்டியிட்டு அநுமனும், பீடணனும் இருக்க இலக்குவன், இராமனுக்கு அருகில் நின்றிருத்தல்-
அங்கதன் ஒரு ஓரமாக நின்றிருத்தல்...)
இராமன் :
அங்கதா, அய்யுறாதே!... கிட்கந்தகத்தின் அரியணையில் சுக்ரீவனை அமரச் செய்வேன் என்று வாக்குறுதித் தந்தவன் நான்தான்!... அதே அரியணையில் உன்னையும் அமரச் செய்வேன் என்று வாக்குத் தருபவன் நான்தான்!... இருவர் எப்படி ஒரு நாட்டை ஆளமுடியும்... ஒரு நாட்டுக்கு இருவர் முடிசூட்டிக் கொண்டால், எவர் அரசாள்வது என்றுதானே நீ குழம்பி நிற்கிறாய்?... அய்யம் வேண்டாம்... நீதான் கிட்கந்தகத்தின் அரசன்...
அநுமன் :
அண்ணலே!... எனது தலைவன்?...
இராமன் :
அவனும்தான்; கிட்கந்தகத்தின் அரசன்!... அய்யம் வேண்டாம்... ஆரியன் யான் சொல்வது மெய்யே!... நான் யார்?... அரக்கரை அழிக்க அவதாரம் எடுத்து வந்த ஆண்டவன்!... என்னிடம் என்ன இருக்கிறது?... தெய்வசக்தி இருக்கிறது!... நான் நினைத்தால் என்ன நடக்கும்?... நினைப்பது யாவுமே நடக்கும்... ஒரு கிட்கந்தக்கதை ஒருவன் ஆள, இன்னொரு கிட்கந்தகத்தை மற்றொருவன் ஆள்வான்!...
அங்கதன் :
இரு கிட்கந்தகமா?...
இராமன் :
இந்த கிட்கந்தகத்தை சுக்ரீவன் ஆள்வான்... மாயத்தால் ஒரு கிட்கந்தகத்தையும் படைத்து, அதில் அழகு மங்கைப் பலரைப் படைத்து, மாதவத்தால் அரியாசனம் செய்து அதில் உன்னை அரசனாக்குவேன்... அஞ்சாதே!... என் கண்மணியே, அங்கதா!... நீயும் கிட்கந்தகத்தின் அரசன்தான்... அய்யம் தீர்ந்ததோ?...
அங்கதன் :
ஆகா... அழகு மங்கையர் எனக்கு சாமரம் வீச, ஆசையோடு அவர்கள் இடைதனில் நான் விரல் கொண்டு தடவி மகிழ, இராமச்சந்திர மூர்த்தியே, நீ வாழ்க!... நின் கொற்றம் செழிக்க!... நின் படை வெல்க!...
இராமன் :
வாழ்த்துகிறேன் உன்னை!... நீ வளமுடன் வனிதையர் பலருடன் பல நூறாண்டு வாழ்ந்திரு!... திருவாய் மலர்ந்தேன்... என் திருவடிப் பணிந்திடு!...
(அங்கதன் இராமன் பாதம் தொட்டு எழ...)
இராமன் :
நாளைத் தொடங்குகிறதுப் போர்... போரில் நீயே தலைவன்... சீவி வா, கரனை!... சீற்றத்தோடு அரக்கர் படையச் சிதைத்து வா!... போ...
அங்கதன் :
போரில் நான் இறந்து விட்டால்?...
இராமன் :
மாயவனடா நான்!... மாண்டாலும் உன்னை நான், மறுபடியும் உயிர்த்தெழச் செய்வேன்... மனம் துணிவோடுப் போ!... இந்தா, திருநீறு!...
(வெண்மண் நெற்றியில் தடவல்)
இராமன் :
விரலில் மண் தொட்டு, நீ என்னை நினைத்து நெற்றியில் இட்டுக் கொள்... இனி உனக்கு பயமில்லை... போ... போர்முனையில் உன்னைக் கண்டு, பதைபதைத்துப் பகைவர் ஓடிட, வாளெடுத்துப் போ... வாய்த் திறந்துப் ஏதும் பேசாமல், காரியத்தில் சித்தமாயிரு... கண்மணி சீதையை மீட்கும் பணி உன்னுடையதுதான்!... போ...
(அங்கதன் போதல் )
இராமன் :
பீடணா, எழுந்திரு!...
(பீடணன் எழல்..)
இராமன் :
நாளைத் தொடங்குகிறதுப் போர் ... மாயம் செய்துவிட்டேன்... அங்கதன் அழித்துவிடுவான் கரனை!... எஞ்சி நிற்கும் படையும் அடுத்து சில நாட்களில், அழித்து விடுவேன் மாயத்தால் நான்!... வஞ்சகன் என் உயிரையே வஞ்சித்துச் சென்றான்... கயவன் என் கன்னியை களவாடிப் போனான்... மரணம்தான் இனி இலங்கை மன்னவனுக்கு இனி சொந்தம்... என் சீதையைத் தொட்டவனே, விட்டேன் பார் மாயம்!... கொய்தெறிவேன் தலையை!...
பீடணன் :
என்னை இலங்கையின் வேந்தனாக்கு!... இதுவே எனது வேண்டுதலாகும்...
இராமன் :
ஆக்கினேன்... நீயே கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் நீயே இலங்கையின் வேந்தன்... வாக்குத் தந்தேன்... என் வார்த்தை என்றும் பொய்க்காது... பீடணா!...
பீடணன் :
அய்யரே!...
இராமன் :
இலங்கையின் படையாற்றலை நீயே அறிந்தவன்... உனக்குத்தான் தெரியும்; இலங்கையின் படை ஆற்றல்!... இலங்கை வீரர் எவ்விதமாய்ப் போர் புரிய கற்றுள்ளனர் என்பதனை நீ அறிவாய்... அவை யாவற்றையும் தம்பி இலக்குவனிடம் சொல் போ...
பீடணன் :
இந்தக் கடைசி நேரத்தில், எனக்கு என்னவோ உதறலாக இருக்கிறது... ஏதேனும் தவறலாகச் சொல்லி விடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது... அவதார நாயகன் நீ, ஞானத்தால் அறிந்துக் கொண்டால்... மிகவும் நன்று!...
இராமன் :
நான் சொல்வதைக் கேள்... போ... படைபலம் எவ்வளவு? படைவீரர் கற்ற போர்முறை என்னென்ன...
பீடணன் :
சொல்கிறேன்... எனக்கென்னவோத் தெரியவில்லை... மனதில் பதட்டமாகவே இருக்கிறது...
இராமன் :
இங்கே வா!...
(வரல்-
இராமன் பீடணனின் நெற்றியில் வெண்மண் பூசல்...)
இராமன் :
அச்சமில்லை இனி உனக்கு!... அஞ்சி நிற்கும் நிலையும் இனி உனக்கில்லை... நெடுமரம் போல் நீ நிமிர்ந்து நட... ஆலம் விழுதுப் போல், உன் வாயிலிருந்து வரும் சொல் யாவும் எமது படைக்கு பலம் சேர்க்கும்... போ... இலக்குவா, இவனை அழைத்துச் சென்று, குடிலில் அமர்த்து... குடிக்க அமுதம் கொடு!... பிறகு, இலங்கைப் படையின் ஆற்றல் என்னவென்பதை கூறச் சொல்... மாறிச் சொன்னால் மரணம் என்பதையும் சொல்லிவிடு!... இவன் சொல்வதைக் கேட்டு, இரிசியமுகனிடம் தெரிவித்து விடு... முனிவன் சொல்லறிந்து நமதுப் படையை வழி நடாத்திடு!... போ...
(பீடணனும், இலக்குவனும் போதல்...)
இராமன் :
அனுமா, எழுந்திரு!...
(அநுமன் எழுந்திருத்தல்)
இராமன் :
நேற்று நான் சொன்னது நினைவில் இருக்கிறதா?
அனுமன் :
அய்யரே, மறப்பேனா?...
இராமன் :
எந்த நாழியில் நான் எத்தனைக் கேட்டாலும், தாமதம் செய்யாமல் தந்துவிட வேண்டும்... நமது வெற்றி உன் கையில்தான்...
அநுமன் :
உமது சித்தத்தில் அல்லவா, எமது வெற்றி உள்ளது...
இராமன் :
சுக்ரீவன் எங்கே?...
அநுமன் :
அணி அணியாய்ப் பிரித்து, படைவீரர்களை அனுப்பும் பணி சுக்ரீவனிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதே... அதன் பொருட்டே, சுக்ரீவன் சென்றுள்ளான்... இராமன் :
அவன் வீரன்!... அவன் பணிச் செவ்வனே இருக்கும்... அவனே கிட்கந்தகத்தின் அரசனாவான்...
அநுமன் :
உமது சித்தம்!...
இராமன் :
அனுமா, மீண்டும் நினைவில் கொள்!... நான் எப்போதில் கேட்டாலும், நீ உறுதியாய் இருக்க வேண்டும்...அனுமன் :
அய்யரே, நான் மறக்கவில்லை!...
இராமன் :
சரி; நீ புறப்படு!...
(அநுமன் போதல்)
-திரை-
பாகம் - 3. காட்சி-24. பாசறை.
கரன்
வீரன்.
கரன் :
அங்கதன் சிறுவன் என்பதால், அவனோடுப் போர் புரியத் தயக்கமா?... சிறு பாம்பு என்றாலும், கடுநஞ்சு அதனிடமும் இருக்கும்... உன் மனமேன் இதனை மறந்தது?... கண்ணுக்குப் புலப்படாத காற்றினிலே நீ வேகம் கண்டதில்லையோ?... உருவில் சிறியவன் என்றாலும் அங்கதன் ஆரியத்தின் உருக் கொண்டிருக்கிறான் மறவாதே... சிறுவன் இவனுடன் போரா என்று நீங்கள் இரக்கம் செய்தீர்கள்... போருக்குத் தயங்கி நின்றீர்கள்... தயக்கத்தை ஆரியர் தமது தயவாக்கினார்கள்... மறைந்து நின்று ஏவினர் அம்பு எனில், ஏதம் எம்பாலன்றோ... இடனறிந்து தயக்கம் செய்தால், தவறென்று எவர்தான் கூறுவர்?... கட்டுமீறிப் பெருகி வரும் வெள்ளமதில், கண்மூடி யாம் நீந்தச் செல்லாது தயக்கம் செய்து ஒதுங்குவதனை தவறென்பார் ஆரோ?... பதுங்கும் குணம் கொண்ட புலியிடம் நாம் தயக்கம் காட்டினால், தாவி எம் உயிர் ஒரு நொடியில் பறிக்காதோ?... இதுதானே இப்போது நடந்தது... தயக்கம் என்பது களத்தில் நிற்கும் வீரனுக்கு அழகோ?... மாந்தன் என்பதை நீ மறந்துவிடு!... இலங்கையின் வீரனாய்த்தான் இமிழ்க் கடல் தாண்டி வந்துள்ளாய்... நினைவில் கொள்... மண்ணில் நீ மானிட நேயத்தைக் காட்டு... களத்தில் நீ வீரன் என்பதை நிலை நாட்டு!... நீயா அங்கதனோடு மோதுகிறாய்... அல்லவே... இலங்கையல்லவோ மோதுகிறது... நீ உன்னை நினைப்பதாய் இருந்தால், குடிமகனாய் இலங்கையிலேயே இருந்திருக்கலாம்... இலங்கையை நினைத்துத்தான் இங்கே வீரனாய் வந்துள்ளாய்... போ... களம்... அங்கதன் சிறுபயல் என்றாலும், அவன் நின்றிருப்பது போர்க்களம் என்பதை மறவாதே... தயக்கமேன்?... தகர்த்தெறி!...(வீரன் செல்லல்)
-திரை-
பாகம் :3. காட்சி-25. மலைக்குகை
இரிசியமுகன்
இராமன்
இலக்குவன்.
( இரிசியமுகன் பாறைமீது அமர்ந்திருக்க-
அருகில் இராமனும், இலக்குவனும்...)
(இராமன் புலம்பல்)
இராமன் :
முனிவனே, என்ன இது?... ஏனிந்த தோல்வி நமக்கு?... சிதறி தலைகள் தரையில் உருள, தறிகெட்டு ஓடிற்றாம் முண்டங்கள்... சிந்தியக் குருதி, தரை மீதில் கடல் போல் காட்சியளிக்கின்றதாம்... பூதத்தின் வயிறுத்தானோ என்று அஞ்சும்படி இரத்தம் உறைந்தக் காட்சி, தென்படுகிறதாம்... வெட்டுண்ட கைகள், துடித்து எகிற, மரக்கிளைகளில் சிக்கி ஆடிற்றாம்... மரக்கிளைகளில் மனிதக் கைகள் முளைத்தனவோ என்று அஞ்சும்படி காட்சி உள்ளனவாம்... சிறுபயல் அங்கதனைக் கண்டு பரிதாபம் கொண்டு, அரக்கர் போர்க்களம் விட்டு நீங்குவர்... மறைந்து நின்று மாயமாய் அரக்கரைக் கொன்று விடுவோம் என்று நீர் சொன்னதை நம்பி ஏவினேன் அங்கதனை... அரக்கரோ, சிறுவன் என்றும் பாராமல் சீறும் நாகம் கொடுநஞ்சு கக்குவது போல் வாள்வீசி, இரத்த ஆறு ஓடச் செய்து விட்டனர்... வாள்வீச்சுக் கூட அறியாத அங்கதனை, படைக்குத் தலைமையாக்கி அனுப்பினோம்... அவன் அங்கமெல்லாம் காயமாகி அஞ்சி ஓடி ஒளிந்தானாம்... குதிரையின் கனைப்பும், யானையின் காலடியோசையும் ஏழுகாத தூரம் கேட்டனவாம்... போர்க்களம் இரணகளமாயிற்று... முதல் நாளே நமக்கு மூக்குடைப்பு எனில், வீறுகொண்டு எமது வீரர் போவாரோ நாளை களம் நோக்கி?... பிணமாவது நிச்சயம் என்று எண்ணிற்றோ என்னவோ, பிணந்தின்னும் கழுகுகள் எம் படை வீரரை வட்டமிட்டுக் கொத்த வருகிறதாம்... பிணமாகும் முன்னே எம்படை வீரரைத் தின்ன வந்தனப் பறவைகள் எனில்...
இரிசியமுகன் :
தின்னட்டும்; நீயேன் மூச்சுத் திணறுகிறாய்?...
இராமன் :
முனிவரே!...
இரிசியமுகன் :
ஏனலறுகிறாய்?...
இராமன் :
போரில் நாம் தோல்வி...
இரிசியமுகன் :
ஏன் உளறுகிறாய்?... முதல் நாளே முடிவான போரல்ல...
இராமன் :
முதல் நாளே தோல்வி எனில், வீரர் நெஞ்சம் துவண்டு போகாதா?... மாண்டவர் எண்ணிக்கையில் 'எம்மவர் அதிகம்... எம்மவர் இட்ட அலறல் கேட்டு வானமே நடுங்கிற்றாம்... மேகம் உருண்டோடியதாம்... சூரியனும், சந்திரனும் அச்சத்தால் ஒளிந்துக் கொண்டனராம்...
இரிசியமுகன் :
என்னிடமே நீ கதைக்கிறாயே... அரக்கர் நெஞ்சில் அச்சமூட்டப் பேசுவதுப் போல் ஆரியன் என்னிடத்தில் நீ பேசுவது ஏனடா?...
இராமன் :
சிதறின தலைகள்... சிவந்தது பூமி!...
இரிசியமுகன் :
சிதறட்டும்... சிவக்கட்டும்... நீயேன் சினக்கிறாய்?... நீயேன் சிலிர்க்கிறாய்?...
இராமன் :
முனிவா...
இரிசியமுகன் :
செத்தது யார்?
இராமன் :
எம்படை வீரர்...
இரிசியமுகன் :
முட்டாளே, செத்தது யார்?... ஆரியரா?...
இராமன் :
எமக்குத் துணைப் புரிய வந்த வீரர்!
இரிசியமுகன் :
அவர்தான் யாரென்றுக் கேட்டேன்...
இராமன் :
தமிழர்கள்!...
இரிசியமுகன் :
இராவணன் செய்த தீயச் செயல் கண்டு மனம் வெதும்பினார்கள் குறுநில மன்னர்கள் சிலர்!... குறுநில மன்னர்கள் யார்?... தமிழர்கள்!... அவர்கள் எமக்குப் படைத் தந்து உதவினார்கள்... நமக்கு உதவிட வந்த தமிழ்ப் படை, இலங்கையின் தமிழ்ப் படையோடு மோதி மாண்டது... ஆக, தமிழர் தமிழரோடு மோதினர்... தமிழன் தமிழனையேக் கொன்றான்... தமிழினம் தமிழினத்தை அழிக்கிறது... இதில் ஆரியர் நாம் ஏன் துக்கம் கொள்ள வேண்டும்... தமிழன் அழியட்டும்... தமிழினம் சுருங்கட்டும்... தமிழர் வலிமை ஒடுங்கட்டும்... ஆரியன் கை ஓங்கட்டும்... இதற்காகத்தானே காத்திருக்கிறேன்... சீதையைத் தூக்கிச் சென்று இராவணன் தமிழ் மாண்பை சிதைத்தான் என்று நீ ஓயாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டேயிரு!... உனது நீலிக் கண்ணீர்க் கண்டுதமிழ் மக்களே உருகிட வேண்டும்... நீ உனது சுதியை மாற்றாமல் இரு... போரில் வெற்றி நமக்குத்தான்!...இராமன் :
ஆனால்; முதல் நாள் போர்...
இரிசியமுகன் :
அது முடிவானப் போரல்ல!... முடுக்கிவிடுப் படையை!... முழுதாய்த் தமிழினம் அழிந்துப் படவே!... எஞ்சி சிலத் தமிழர் வாழ்ந்தாலும், எமக்கு தாசிக் குலத்தவர்களாய் வாழட்டும்... மறவாதே மனுநீதியை!...
இராமன் :
மறவேன் நான்... மனதில் என்னையும் மீறி அச்சம் குடிக் கொள்வதால், ஏதேதோ பிதற்றிவிட்டேன்... அங்கதன் அடிப் பட்டாலென்ன... அவன் அழிந்தாலென்ன... இலக்குவா, அழைத்து வா; சுக்ரீவனை!... முதலில் அநுமனை அனுப்பி வை இங்கு...
(இலக்குவன் போதல்)
இராமன் :
அரக்கர் அழிந்து பட்டாலன்றி, ஆரியர் எண்ணம் செழிக்காது... அறிந்தேன் நான்!... இராவணன் கொட்டம் அடக்கி, ஆரியத் திட்டத்தைத் தமிழ் மண்ணில் தூவுவேன்... வெட்டிச் சாய்த்து அவன் இருந்த அரியணையில், ஆரிய வேதம் முழங்கச் செய்வேன்... இது சீதையை மீட்கும் போரல்ல... ஆரிய சிந்தையைக் காக்கும் போர்... கொடியவனை அழித்து, ஆரியக் கொள்கையை நாட்டும் போர்... இதில் எமக்குத் தோல்வி எனில்...
( அனுமன் வருதல் )
அனுமன் :
தப்பிப் பிழைக்கவும் வழியில்லை... சூழப்பட்டுள்ளோம் இலங்கைப் படையால்!... சாவும், வாழ்வும் இனி நமக்குக் களத்தில்தான்!... அஞ்சி ஓடலாம் எனில், அரக்கர் வேலி போல் வேய்ந்து நிற்கின்றனர்; நமது வெளியைச் சுற்றிலும்...
இராமன் :
ஆ...
அநுமன் :
ஆமாம்!... சூழப்பட்டுள்ளோம்!... அரக்கரை நாம் களத்தில் சந்தித்தே ஆக வேண்டும்... தப்பித்தல் என்பது கனவிலும் நடவாது போலிருக்கிறது...
இரிசியமுகன் :
மூடனே!... என்ன நீ பேசுகிறாய்?... தப்பிக்க வழித் தேட வேண்டியது இராவணனடா!...
அநுமன் :
அவன் படையல்லவோ நம்மைச் சூழ்ந்துள்ளது...
இரிசியமுகன் :
சூழ்ந்திருக்கட்டுமே... சூழ்ச்சி இருக்கிறதே நம்மிடம்... வாய்ப் பிளந்தேனடா இராமா, வானுயர்ந்து நிற்கிறாய்?... அழைத்தது ஏனிவனை?... அதனைக் கூறு...இராமன் :
போரில் நாம் தோல்வியுற நேர்ந்தால், தப்பிக்கவும்
இரிசியமுகன் :
அவதார நாயகன் என்பதை நீ மறந்து ஏனடா அரக்கன் முன்னிலையில் ஏதேதோ பேசுகிறாய்... நமது போர்த் திட்டம் என்ன என்பதையும் நீ தோல்வி பயத்தில் மறந்தாயா?... பேசடா... ஏனிவனை அழைத்தாய்?...
இராமன் :
என்னவாயிற்று இன்று எனக்கு... ஏனிப்படி நெஞ்சம் அல்லாடலாயிற்று?...
இரிசியமுகன் :
அனுமா, இராவணன் ஒரு மாயக்காரன்!... அவன் மந்திரவினையால், எமது சிந்தையை சீர் குலைக்கிறான்... அதனால்தான் இராமன் குழம்பி நிற்கிறான்... அவன் சிந்தையில் தெளிவும் இழந்து நிற்கிறான்... இதோ பார்... நான் இராமனை ஒரு நொடியில் நேராக்குகிறேன்...
(வாயில் ஏதேதோ முணுமுணுத்து, வெண்மண் எடுத்து, இராமன் மீது தூவ, இராமன் சிலிர்த்தல்...)
இரிசியமுகன் :
பேசு... நீ ஆரியன்... அவதார நாயகன்... பேசு... அரக்கர் அழிந்துபட, ஆரியஞ் செழித்து மலர, அகிலம் அமைதியுற பேசு... பிறன் மனைவியைப் பெண்டாள, சண்டாளன் தூக்கிச் சென்றான்... அவன் அரசாள, அவனியில் ஒழுக்கம் தழைக்குமோ என்று பேசு... வாலி எனும் தீயவன் சுக்ரீவனது வாழ்வைப் பறித்தானென்று பேசு!... அனுமன் எனும் அன்புடையோன் கிட்கந்தகத்தின் அமைச்சனாவான் என்று பேசு!... துடியிடையாள் சீதையைத் தூக்கிச் சென்றக் கொடியவன் கொற்றம் சீவி, பீடணனை பீடமேற்றுவேன் என்று பேசு... ம்... பேசு... போரில் வெற்றி நமக்கே என்று இந்திரனை யாசித்துப் பேசு...
(இராமன் சிலிர்த்தல்)
இராமன் :
அனுமனே, அழைத்தது ஏன் உன்னை அறிவாயோ?...
அனுமன் :
அய்யரே, அடிமை நான்...
இராமன் :
குரங்குகள் எங்கே?...
அனுமன் :
ஆயிரக்கணக்கில் குரங்குகளை அடிமை நான் பிடித்து வைத்துள்ளேன்...
இராமன் :
பித்தமோ உனக்கு?... சித்தமில்லையா உனக்கு?... என்ன சொன்னேன் நான்?...
அநுமன் :
தங்கள் எண்ணத்தின்படியே, நான் குரங்குகள் எல்லாவற்றிற்கும் பயிற்சித் தந்துள்ளேன்...இராமன் :
குரங்குகளோடுப் பழகி, குரங்குகளோடு வாழ்ந்தவன் நீ என்பதனை நான் அறிவேன்... அதன் பொருட்டன்றோ உனக்குப் பணித் தந்தேன்...
அநுமன் :
ஏவிவிட்டால், குரங்குகள் அனைத்தும் எதிரியைக் குதறிக் குற்றுயிராக்கிவிடும்... வாள் கொண்டுப் படை வீரர் வந்தாலும், தாவி அவன் கழுத்தைத் திருகிவிடும்... வேல் கொண்டு வந்தாலும், வாலால் அதனைப் பிடுங்கிவிடும்... ஈட்டிக் கொண்டு வந்தாலும், எதிரியின் விழிகளை என் குரங்குகள் பெயர்த்து விடும்... அருமை மிகுப் பயிற்சித் தந்துள்ளேன்... நீர் சொன்னால் நாளையே களம் ஏவி விடுவேன்...
இராமன் :
நன்று!... இன்னும் வேகமாய்ச் சுழன்று, காட்டில் திரியும் குரங்குகளைத் திரட்டி வை... திட்டம் இதுதான்... எதிரிகள் எத்தணிக்கும் முன்னர் நீ ஏவிவிடு குரங்குகளை!... முனிவனே, சுக்ரீவன் வருகிறான்... வா; சுக்ரீவா!...
(சுக்ரீவன் வருதல்)
இராமன் :
சுக்ரீவா , நாளை நீதான் தளபதி!... களம் நோக்கிப் போ... கடவுள் உன் பக்கம் இருப்பார்... நீயே கிட்கந்தகத்தின் அரசன்!... மறவாமல் போ...
சுக்ரீவன் :
அய்யரே, இராவணன் வந்துவிட்ட்டான்...
இராமன் :
எங்கே? (அதிர்ந்து)
சுக்ரீவன் :
போர்க்களம் வந்துவிட்டான்... முகாம் கொண்டுள்ளான்...
இரிசியமுகன் }
இராமன் }
இராவணன் வந்து விட்டானா?
(இருவரும் அதிர்ச்சியுறல்)
சுக்ரீவன் }
அனுமன் }
ஆமாம்!...
-திரை-
பாகம் :3. காட்சி-26. பாசறை.
இராவணன்
சேயோன்
வீரர் சிலர்
( வீரர் மையமாய் நின்றிருக்க-
அருகில் சேயோன் நின்றிருக்க, வீரர் இரு மருங்கும் நிற்க... )
*திரைத் தூக்கப்பட்டவுடன் இராவணனது முழக்கம் தொடரல்...
இராவணன் :
கரன் கொல்லப்பட்டான்... சுக்ரீவன் கொக்கரித்தான்... இலங்கைப் படை அஞ்சி சிதறியது... வீரமண்மீது கருங்கோலமா?... வீரமரணம் எய்தினான் தமிழ்வீரன் எனும் வரலாறுதான் தமிழ்நாடுக் கண்டிருக்கிறது... கோழையாய் களம் விட்டு அஞ்சி ஓடினான் தமிழன் என்பதுப் புது வரலாறு... இது எம்மினத்தின் மீது விழுந்தக் கருங்கோடு!... சேயோனே, களைந்தெறி!... கருங்குரங்குகளை ஏவி, எம் வீரரின் சிந்தையை சிதைக்கலாயினர் எனில், முறையான போருக்கு ஆரியர் முனையவில்லை என்றுதான் பொருள்... இதுதான் எமது போர்முறை என்று காட்டி, நிற்கின்றனர்... ஒளிந்து நின்று தாக்குவதுதான் ஆரியரின் போர்முறை என்றால், நெருப்பின் நுனியாய், எம் படையை எண் திக்கும் ஏவிவிடு... ஆரியர் எவரும் நேராய் நின்று போரிட களம் வரவில்லை... அங்கதன், சுக்ரீவன், அனுமன் போல் தமிழினத் துரோகிகளை களம் ஏவி, பலியிட்டுக் கொண்டிருக்கிறான் இராமன்... இது ஆரியர் போரா?... தமிழர், தமிழரையே அழிக்கும் போரா?... இங்கே இனி இந்த ஆய்வு வேண்டாம்... இலங்கை மண்ணுக்கு எதிராய் எவன் போர்த் தொடுத்து வந்தாலும், அவன் குருதியைக் களத்தில் ஓட விடு!....
சேயோன் :
மன்னவா, களத்திலிருந்து எம் வீரர் புறம் கண்டனர் என்பது, நம்மைத் தலைக் குனியச் செய்யும் செய்திதான்... ஆயினும் களத்தின் நிலைமையை நாம் மறந்துவிட வியலாது... வெள்ளத்தோடுப் போராடியிருந்தப் புள்ளிமான் மீது, வேங்கைப் பாய்ந்தக் கதைதான்... களத்தில் எதிரியைச் சந்திக்க நின்றவன் மீது குரங்குகளை ஏவி விட்டிருக்கிறான், இராமன்!... மனிதரோடுப் போர்ப் புரிய வந்த இடத்தில், விலங்குகளின் தாக்குதலை எம் வீரர் சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை... பாய்ந்து வந்தக் குரங்குகள் வீரர்களின் விழிகளை நோண்டின... கழுத்தைக் கடித்தன... கன்னத்தைக் கீறின... என்ன ஏது என்று வீர்ர் குரங்குகளின் செயலைச் சற்றும் உணர இயலாதபடி தீடீர்த் தாக்குதல் குரங்குகளால் நடத்தப் பட்டது... இதனை விரட்டிவிட முனைந்த வீரர்களும், அஞ்சும்படி குரங்குகளின் பாய்ச்சல் அமைந்திருந்தது... விலங்கினங்களைக் கொல்லும் பழக்கம் எம் இனத்தவரிடையே இல்லாததால், எதிர்த் தாக்குதல் நடத்தத் துணிந்தாரில்லை சிலர்... தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, எம் படை வீரர், புறம் காண நேர்ந்தது உண்மையே... அதனை வாய்ப்பாகக் கொண்டு, குரங்குகள் கொடூரத் தாக்குதலில் ஈடுப்படுத்தப் பட்டன... ஆரியவீரர்களும் ஒளிந்து நின்று அம்பு ஏவி, கரனையும், சில வீரர்களையும் கொன்றனர்... இதனை ஆரியர்கள் வீரம் என்றோ, வெற்றி என்றோ
இராவணன் :
பேச முடியாது... இதுதான் ஆரியர்களின் போர்முறை என்பதை நினைவில் கொள்... குரங்குகள் வந்தாலும், குள்ளநரிகளாம் ஆரியர்கள் வந்தாலும் தாக்கவல்ல வலயம் படையை முன்னிறுத்திப் போரிடு... நடப்பது போர்... இதில் எதிரியை வெல்ல வேண்டும்... அஞ்சி நாம் களம் நீங்கினால், மரணம் நம்மைவிட்டு விலகப் போவதில்லை... மரணம் என்பது நிச்சயமானது... இதனை மனதில் ஊட்டி இன்று நீ தலைமைத் தாங்கு... போ...
(சேயோன் போதல்)
-திரை-
பாகம் :3. காட்சி : 27. மலைக்குகை (காடு)
இராமன்
அநுமன்
இரிசியமுகன்
இராமன் :
என்ன குரங்குகளின் மரண ஓலம் கிட்கந்தக மலையையே கிடுகிடுக்கச் செய்ததா?... பாய்ந்து பத்துப் பேரையும் தாக்கும் பயிற்சி குரங்குகளுக்குத் தரப் பட்டதே... அனுமா, உன் பயிற்சியில் என்னக் குறை?... ஏன் குரங்குகள் அலறின?... குரங்குப் படையின் பெரும்பகுதி அழிந்தது என்கிறாயே... நேற்றையப் போரில், குரங்குகளைக் கண்டு அஞ்சி ஓடினார்கள் அரக்கர்கள்... இன்று உன் குரங்குகள் அரக்கரை ஏன் அச்சம் கொள்ளச் செய்யவில்லை... இது உனது பயிச்சியின் குறைதான்!...அநுமன் :
நேற்றையப் போரில் குரங்குகளைக் கண்டு அரக்கர் அஞ்சி ஓடினார்கள்... அலறி மாண்டார்கள்... இந்திரனது அருள்தான் இதற்குக் காரணம் என்றாய்... இன்று நடந்தப் போரில், குரங்குகள் மாண்டன... மலைகளே அதிரும்படி மரண ஓலமிட்டன... நான்தான் காரணமென்று என்னை நீ குறைக் கூறுகிறாய்? நான் வென்றால் எனது வெற்றியை உனது வெற்றியாகப் பாராட்டிக் கொள்வாய்... தோல்வி நேர்ந்தால், என்னை மட்டும் நீ, சாடுவதேன்?... ஏனிந்த விதவிதமானப் பேச்சு?...
இராமன் :
முனிவனே, அரக்கனிவன் என்னை ஏன் எதிர்த்துப் பேசுகிறான்?...
அவன் பேசவில்லை!... இராவணன் மந்திரத்தால் செய்வினைச் செய்து விட்டான்... எம்மிடையே, பகை மூட்டி நம் ஒற்றுமையைக் குலைக்கக் குறி வைத்துள்ளான்... இராவணனது மந்திரம் ஆரியரை எளிதில் தாக்காது... அரக்கர்களை எளிதில் ஆட்கொள்ளும்... அதனால்தான், அனுமன் எதிர்ப்பதுப் போல் பேசுகிறான்... உண்மையில் அநுமன் பேசவில்லை... பேச வைக்கப் பட்டுள்ளான்... இராமா, போர் நடந்துக் கொண்டிருக்கிறது... எம்மை யாம் ஆய்வுச் செய்ய இது நேரமல்ல!... ம்... ஆகட்டும்... அடுத்தக் கட்டம்...
இராமன் :சுக்ரீவா, நேற்று நீ வீசிய வாள், பல அரக்கர்களின் உயிர்க் குடித்தது... இன்று; உன் உயிரும் தப்புமோ என்ற நிலையாயிற்று!... குரங்குகள் மட்டுமோ மடிந்தன... படையும் அழிந்தது...
சுக்ரீவன் :
சேயோனது போர்த் திட்டம் என்னவென்றே என்னால் அறிய முடியவில்லை... யானைப் படையை ஏவி விடுவான் என்று நினைத்திருந்தோம்... கண்ணிமை நேரத்தில் கல்லெறிப் படைகள் நம்மை சூழ்ந்தன... வேகமாய் வந்த கல்லின் ஓசையும், கல்லடிப் பட்டு வீழ்ந்த குரங்கின் மரண ஓலமும் சேர்ந்து வீரர் நெஞ்சை கலக்கின... வீசப்பட்ட கல் பட்டு, எம் வீரர் அங்கமெல்லாம் மோசமாயின... யானையின் காலடிப்பட்டு, நசுங்கி செத்தனர் நம் வீரர்... மறைந்து நின்று மாய அம்பு வீச காத்திருந்த ஆரியவீரர்களை அரக்கர், சக்கரம் சுற்றி வலயம் வீசிக் கொன்றனர்... எந்தத் திசை நோக்கிப் படைச் செலுத்துவது என்று யோசிக்கும் முன்பே, மூன்று திசையிலிருந்தும் ஈட்டிப் படைகள் எம்மை சூழ்ந்தன... எறிந்த ஈட்டி ஆரியவீரர் நெஞ்சைப் பிளந்தன... ஆவென அவர்கள் ஓலம் கேட்டு எஞ்சி நின்ற நம் வீரர்கள் சிலர், மூச்சடங்கித் தரை வீழ்ந்தனர்... அஞ்சி ஓடிய எமதுப் படையை அரக்கரின் சூலப் படை சூழ்ந்துக் கொன்றது... சேயோன் செய்ததுப் போரா?... தந்திரமா?... என்று இன்னமும் எனக்கு வியப்பாய் உள்ளது... அய்யரே, சேயோனை எதிர்க் கொள்ள எனக்கு வலுவில்லை... நாளைப் போரில், நீரே அவனை வெற்றிக் கொள்ளுங்கள்...
இராமன் :
என்ன நீ பேசுகிறாய்?... நீதான் நாளையப் போரின் தளபதி!... பேசாதே; மறு வார்த்தை!...
(சுக்ரீவன் தாள் பணிந்து...)
சுக்ரீவன் :
அய்யரே, அவன் இடியாக வருகிறான்... மின்னலெனத் தோன்றுகிறான்... மலையென நிமிர்ந்து நிற்கிறான்... கடலெனப் படையைப் பரப்பி விடுகிறான்... கண்ணிமை நேரத்தில் மாரியென அம்பு பொழிகிறான்... அவன் மனிதப் பிறவியோ?... மாயவனோ... அவன் எவனிடத்தில் மந்திரம் கற்றானோ... ஆரியப்படையை அழிப்பதற்காகவே அவன் பிறவி எடுத்தானோ... அவனொடுப் போர் புரிந்தால், நான் அழிவது திண்ணம்...
இராமன் :
அழிந்தால் எனக்கென்ன?... போ... நீதான்...
அநுமன் :
அய்யரே, 'கிட்கந்தகத்தின் அரியணை ஏற்றுவேன்' என்று சொன்ன நீ, இன்று 'அழிந்துப் போ' என்கிறாயே... இது அவதார நாயகனுக்கு அழகா?...
இரிசியமுகன் :
இராமா, நீயுமா இராவணனது மந்திரத்திற்கு பலியாகிறாய்?... படைக் கருவிகளடா இவர்கள் நமக்கு!... இவர்களைத் துறந்தால், நமது கதி என்னவாகும், சிந்தித்தாயா?... உயிரையும் பொருட்டாய்க் கொள்ளாது இழந்த சீதையை மீட்க வந்த செம்மல்களாடா... நேசமாய் இரு... இராவணனது மந்திரத்துக்குப் பலியாகி மோசம் போகாதே...
(பேசியபடி மண் எடுத்து, இராமன் மீது ஊத, இராமன் சிலிர்த்து...)
இராமன் :
என்னவாயிற்று எனக்கு?... என்னை ஏன் நான் மறந்தேன்?... இராவணன் செய்யும் மந்திரக்கலைதான் இதுவும்... செய்வினையால், என் மதி மயக்குகிறான்... சுக்ரீவா, பார்த்தாயா?... சிந்தையிழந்த என்னை முனிவன் அருள் பொழிந்து சிலிர்க்கச் செய்தான்... உனக்கும் அருள் பொழிந்து; உயிருக்கும் அரண் செய்வான்!... போரில் வெற்றி, தோல்வி இருக்கும் என்று இனி நான் பேசமாட்டேன்... போரென்றாலே எமக்கு வெற்றித்தான்!... சேயோன் என்ன?... இராவணனே வந்தாலும் இனி எமக்கு அச்சமில்லை!... வெற்றி... வெற்றி... அழைத்து வா அங்கதனை... அறுத்தெறிகிறேன் தலையை!...
-திரை-
பாகம் : 3. காட்சி-28. வெண்திரை
சேயோன்
அங்கதன்
(சேயோன் ஓய்வுக் கொண்டிருக்க, அங்கதன் வருகிறான்... அவன் தோளில் துணி மூட்டை ஒன்று சிறு அளவில் தொங்கிக் கொண்டிருத்தல்... அங்கதன் சேயோனதுத் தாள் பணிந்து...)
அங்கதன் :
இளவலே, நும் தாள் பணிந்தேன்... தஞ்சம் புகுந்தேன்... தமிழுக்கு, வஞ்சம் செய்தவன் நான்!... பிழைத் திருந்தி உமது பீடம் நோக்கி வந்தேன்... என் சுகவாழ்வை மட்டுமே நான் கருதி, என் தமிழுக்கு நான் துரோகியானேன் நான்!... இனியும் நான் வாழ வேண்டுமா?... இன்னுயிர்த்தானோ என்னுயிர்... இனி நான் வாழ்வதால் இலங்கையின் மாண்புக்கு நானிழைத்தப் பிழைத் தீருமோ?... தண்டனையாய் என் தலைக் கொய்து, நும் தாள் வைக்க வந்தேன்... என் வரலாறு இளந்தமிழருக்குப் பாடமாகட்டும்... என்னைப் போல் இனி ஒருவனும், இலங்கை மண்ணுக்குத் தேவையோ?... வேண்டாம்!... என் தலை நானே கொய்து எறிகிறேன்...
(பேசியப்படியே, தலைக் கொய்ய முற்பட, சேயோன் பதைபதைத்து-)
சேயோன் :
அங்கதா, அறிவற்றச் செயலல்லவோ இது...
அங்கதன் :
என் தேகம் தமிழ் மண்ணுக்கு பாரம்தான்... என்னைத் தடுக்காதே... என் மரணம் குறித்து, நீ தமிழ் மண் மீது எழுதிவிடு... 'தமிழுக்கு வஞ்சம் இழைத்தவன் இவன்... தவறுணர்ந்துத் தலைக் கொய்து மாண்டான்!'... என, தரணியோர் உணர எழுதிவிடு!...(மீண்டும் முற்பட, சேயோன் அங்கதன் கையிலிருந்து வாள் பிடுங்கல்...)
சேயோன் :
பிழைத் திருந்தி வாழ்வதுவும், தண்டனை கொண்டாற் போல்தான்!... தவறென்று தண்டனைச் செய்து, உடலை வதைப்பது, மூடர் செயல்!...
அங்கதன் :
பிழைத் திருந்தி நான் எங்கு வாழ்வேன்?... இம்மண் மீதுதானோ?... ஆசை எனும் மது, மீண்டும் என் மனதை மயக்கத்தில் ஆழ்த்தாது என்பதும் நிச்சயமோ?... ஆரியமாயையை அறியும் ஆற்றல் எனக்கில்லையே... சிறுமீன் நான்!... தூண்டில் போட்டு ஆரியர் என்னைப் பிடித்து விடுவார்கள்...
சேயோன் :
தூண்டிலுக்குப் பயந்து எந்த மீனும், நீரை விட்டு வெளியேறி விடுவதில்லை... மரணத்தின் வரைக்கும், அது நீரோடுதான் வாழ்கிறது... ஆரியம் என்பது, தமிழர் மீதுக் கொண்ட பொறாமையால் உண்டாக்கப் பட்டது... தமிழினம் இருக்கும் வரைக்கும் ஆரியருக்கு பொறாமை நீடிக்கும்... பொறாமைத் தீயில் எம்மைப் பொசுக்கி விடுவார்களே என்று எந்தத் தமிழனும் புகழ் சேர்க்கும் பணியைச் செய்யாமல் இருப்பதில்லை...
அங்கதன் :
தமிழன் எனும் தகுதியை நான் இழந்து விட்டேனே...
சேயோன் :
துயர்க் கொண்டு உழல்வது, தமிழனுக்குப் பெருமையாகுமா?... துயர்க் களைந்து, நிமிர்வதில்தான் தமிழுக்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்க்க முடியும்...
அங்கதன் :
அந்த உறுதி என் நெஞ்சில் இல்லாததால்தான் நான் தமிழன் எனும் தகுதியை இழந்தேன்... நெஞ்சில் உரம் இருந்திருந்தால், - மனதில் சிந்தனை இருந்திருந்தால் - சிந்தையில் தெளிவு இருந்திருந்தால் நான் ஆரிய இராமன் பேச்சுக்குப் பலியாகியிருப்பேனா... அவன் நகர்த்தும் பகடைக் காயாக நான் ஆக்கப் பட்டேன்... என் தந்தையைக் கொன்றவன் தாள் பணிந்தேன்... எந்த மதியோடு என்று எனக்கு இன்னமும் புரியவில்லை... வாலியை வதைத்தவனை வஞ்சம் தீர்க்காமல், அவனைக் கெஞ்சி நின்றேன்... அதனை மாயத்தால் என்பேனா?... அல்லது ஆரியக் கூற்றுப்படி விதி என்பேனா?... சொல் சேயோனே!... ஒரு நாட்டுக்கு இருவரை அரசனாக்கிடுவேன் என்று இருவரிடமும் அவன் சொல் தந்தான்...இது எப்படி சாத்தியமாகும் ' என்று நான் சிந்தித்தேனா?... இதனை மடமை என்பேனா?... அவன் செய்த மாயம் என்பேனா?... 'போருக்குப் போ' என்று என்னை அவன் ஏவினான்... ஏன் போர்?... எதற்குப் போர்?... என்னை நான் சிறிதேனும் கேட்டேனா?... மவுனமாய்த் தலைப் படிந்து, மரப்பாவையாய் செயல் படலானேன்... சொல்; சேயோனே!... நான் செய்தது சிறு பிழையா?... பெரும்பழியன்றோ என்னை சூழ்ந்துள்ளது... யாருக்கு எதிராய், நான் வாள் தூக்கினேன்?... ஆரியனுக்கு எதிராகவா?... அல்லவே... என் அருந் தமிழினத்திற்கு எதிராக அன்றோ வாள் தூக்கினேன்... அய்யோ என் நெஞ்சு சுடுகிறது... என்னை சாகவிடு... இல்லையேல் என்னை சாகடித்து விடு!...
சேயோன் :
அங்கதா, யாமக்கோழிக் கூவுகிறது... இன்னும் இரு நாழிகையில் போர்க்களம் புறப்பட வேண்டும்... நாளையப் போருக்கு, நானே தலைமை வகிக்கிறேன்... களத்தின் தென்முனையில் பாசறைக் கொண்டுள்ளான் இராவணன்... நாளையப் போருக்குப் பின் நான் உன்னை, இராவணனிடம் இட்டுச் செல்கிறேன்... அமைதியுற்று இன்று இரவு மட்டும் இங்கு உறங்கு...
அங்கதன் :
இராவணனின் திருமுகத்தைக் காண என் இருவிழிகளில் ஒரு விழிக்கும் கூட, தகுதியில்லையே... சேயோனே, நீயுறங்கு!... நின் திருவடியில் என் தலைக் கொய்து, என் உயிர் துறக்கிறேன்...
சேயோன் :
அங்கதா, நான் போர் முனையில் நின்றுக் கொண்டிருக்கிறேன்... இங்கு உன் ஒருவனை மட்டுமே அமைதிப் படுத்தி நான் நின்றால், என் பணி என்னாவது?... இங்கு நான் வந்த நோக்கம்தான் எனது குறிக்கோள்!... இதனை நீ நினைவில் கொள்... இன மோதல் நடந்துக் கொண்டிருக்கிறது... உன் ஒருவனுடைய இழப்பால், என் இனத்தின் உயர்வு சிதைந்து விடப்போவதில்லை... 'உயிர் துறப்பதாய் இருந்தால், எங்கேனும் போ!... இங்கே என் அமைதிக் கெடுத்து நிற்காதே...
அங்கதன் :
இளவலே, கோபமா?...
சேயோன் :
நீ ஏதும் சொல்வதாயிருந்தால், நாளை மன்னன் இராவணனிடம் சொல்லிக் கொள்!... இங்கு நீ உறக்கம் கொள்ள விரும்பினால், இங்கே படுத்துக் கொள்... இல்லையேல்; வெளியேறு!...
(சேயோன் கூறிவிட்டு உறங்க, நின்றுக் கொண்டிருந்த அங்கதன், தரையில் கால் நீட்டி உடல் சாய்க்கிறான்...
இரண்டாவது முறையாக யாமக்கோழிக் கூவல்...
அங்கதன் எழுந்து அமர்தல்...
துணி மூட்டையைப் பிரித்து, உள்ளிருந்து சிறு மூலிகைக் கொத்து எடுத்தல்... மூலிகையோடு நடந்துச் சென்று , உறங்கும் சேயோனை உற்றுப் பார்த்தல்... மெல்லக் குனிந்து, உறங்கும் சேயோனது நாசியில் மூலிகை வைத்தல்... மூலிகை வாடை நாசியில் புக, சேயோனது உடல் மெல்ல சிலிர்க்க-
சற்றுநேர இடைவெளிக்குப் பின், மூலிகையைத் தூக்கியெறிந்துவிட்டு, சேயோனை அங்கதன் உலுக்கல்... உலுக்கப் பட்டும் நினைவுத் திரும்பாத நிலையை சேயோன் எய்தி விட்டதை அங்கதன் உறுதியாய் உணர்ந்து-
பிறகு-
மறைத்து வைத்திருந்த வாளெடுத்து சேயோனது கழுத்தில் வைக்க-
-திரை-
பாகம் :3 காட்சி : 29. மலைக்குகை (காடு)
இரிசியமுகன்
சுக்ரீவன்
அங்கதன்
ஆரியவீரர் சிலர்
(இரிசியமுகன் யாகத் தீயருகே அமர்ந்து ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருக்க, இராமன் இரு கைக் குவித்து வான் நோக்கி நிற்க-
சுக்ரீவன் மண்டியிட்டு இராமனை வணங்கி இருக்க,-
ஆரியவீரர் சிலரோடு அங்கதன் ஓடி வருகிறான்...
அங்கதன் கையில் சேயோனின் அறுபட்டத் தலை -
இராமனது அடியில் சேயோனின் அறுபட்டத் தலையை வைத்து-)
அங்கதன் :
அய்யரே, நும் அடி வைத்தேன் தலையை!... சிரம் பணிந்தேன் நும் சிந்தைக் குளிரவே!...
(யாவரும் விழித் திறந்து நோக்கி, வியப்போடு அங்கதனையும் மாறி நோக்க-)
அங்கதன் :
வெட்டினேன் கொடியவன் மகன் சேயோன் தலையை!... சிறுவன் என்னால் இயலுமோ என்று நான் பயம் கொண்டிருந்தேன்... அய்யன் இந்திரன்தான் என்னுள் துணையாய் வந்தானோ... அவதார நாயகன் நின் திருமந்திரம் என்னையும் வீரனாக்கி விட்டது... கொய்து வந்தேன்; தலையை!... அடியில் வைத்தேன் நும் பாதம் பணிந்து...
(இராமன் அங்கதனைத் தூக்கி, முத்தம் மாரிப் பொழிந்து...)
இராமன் :
நீயிங்குத் திரும்பி வரும் வரை, உணக்குத் தீங்கு ஏதும் நேரக்கூடாதென்று, யாசித்து நின்றோம் இந்திரனை!... இந்திரன் காத்தான் உன்னை!... அங்கதா, என் ஆருயிர்த் தம்பி நீ தானடா!... ஆரியனுக்கு அரக்கன் தம்பியாவானோ என்று நீ கேட்காதே... அவதார நாயகன் நான் உன்னை, தம்பியாய் ஆக்கினேன்... இன்று முதல் நீ ஆரியகுமரனடா... 'சேயோனைக் கொன்று வா ' என்றேன்... நீயோ; தலையைக் கொய்து வந்திருக்கிறாய்... கண்மூடி, கைக் குவித்து மண்டிப் போட்டு நிற்கும் சுக்ரீவா, விழித் திறந்துப் பாரடா; தலையை!... கொய்து வந்துவிட்டான் அங்கதன்... முனிவா, முனுமுனுத்தது போதும்... காலால் மிதித்து, அரக்கன் தலையை யாகத்தீயில் போடு... ஆரியவீரர்களே, காரி உமிழ்ந்து அரக்கன் தலையை எட்டி உதையுங்கள்...
(ஆரிய வீரர்கள் சேயோனது வெட்டப்பட்டத் தலையைக் காரி உமிழ்ந்து எட்டி உதைத்தல்... முனிவன் காலால் மிதித்து காரி உமிழ்கிறான்...)
இரிசியமுகன் :
எரிநெருப்பில் எடுத்துப் போடடா, சுக்ரீவா!...
(தலையை எடுத்து நெருப்பில் வீச-
இரிசியமுகனும், இராமனும், ஆரியவீரரும் நெய் வார்க்க, தீக் கொழுந்து விட்டு எரிய-)
இரிசியமுகன் :
ஓ... இந்திரனே!...
இராமன் }
வீரர் }
ஓ... இந்திரனே!...
இரிசியமுகன் :
இடியை வைத்திருப்பவனே... எங்கள் பிரார்த்தனையைக் கேள்...
இராமன் }
வீரர் }
இடியை வைத்திருப்பவனே... எங்கள் பிரார்த்தனையைக் கேள்...
இரிசியமுகன் :
ஆரிய இனத்தைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சூத்திரர்களாம் தமிழர்கள் மீது, நீ இடியைப் போடு!...
இராமன் }
வீரர் }
ஆரிய இனத்தைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சூத்திரர்களாம் தமிழர்கள் மீது, நீ இடியைப் போடு!...
இரிசியமுகன் :
அரக்கன் சேயோன் தலையை உனக்குப் படையல் செய்தோம்...
இராமன் }
வீரர் }
அரக்கன் சேயோன் தலையை உனக்குப் படையல் செய்தோம்...
இரிசியமுகன் :
அரக்கன் தலையை ஏற்று நீ அசுரர்தமை நாசமாக்கு!...
இராமன் }
வீரர் )
அரக்கன் தலையை ஏற்று நீ அசுரர்தமை நாசமாக்கு!...
(முழக்கம் முடிந்துற)
இரிசியமுகன் :
இராமா, அங்கதனை நீ கடவுளாக்கிடு!... அவனை இந்நாட்டு மக்கள் கைத் தொழுது வணங்கிடச் செய்திடு...
இராமன் :
அங்கதா, என் பேர் உள்ளவரைக்கும் உன் பேரும் நிலைக்கும்...
(தாள் பணிந்து எழுந்த அங்கதன்)
அங்கதன் :
ஆண்டவனைத் தொழுது என்னை நீர் ஏவினீர்... ஆண்டவனே எனக்குத் துணையாய் வந்தான் போலும்... யாதொரு இடரும் எனக்கு நிகழா வண்ணம் காத்தவன் ஆண்டவன் தானோ?... இராமத்தெய்வமே, நாநும்மை வெறுப்பது போல், சேயோனிடம் பேசினேன்... சேயோன் எனது கூத்தினை, மெய்யென நம்பினான்... கண்மூடி அவன் உறங்குவதறிந்து, மூலிகையால் அவனை மீளா மயக்கத்தில் ஆழ்த்தினேன்... வாளெடுத்து கழுத்தறுத்தேன்... கொய்த தலையை எடுத்து மூலிகைச் சாறுக் கொண்டு, கழுவினேன்... வடிந்துக் கொண்டிருந்த இரத்தம் உறைந்தது... தலையைத் துணியால் கட்டி, மூட்டை, முடிச்சுகளோடு வெளியேறினேன்... வெளியேறும் முன், அங்கதன் அணிந்திருந்த இலங்கை முத்திரைக் கணையாழியை எடுத்துக் கொண்டேன்... பாசறைக்கு வெளியே காவல் புரிந்து நின்ற வீரன், என்னை நடு யாமத்தில் எங்கே போகிறாய் என்று என்னைக் கேட்டான்... கணையாழியைக் காட்டி அங்கதன் பணித்த பணியின் பொருட்டுப் போவதாய் சொல்லிவிட்டு நடந்தேன்... பாசறையில் புறவெளி புதரிலே, இதோ நமது வீரர்கள் காத்திருந்தனர்... அவர்களோடுப் புரவியில், புழுதி படர விரைந்து வந்தேன், இங்கு!...
இரிசியமுகன் :
நடந்துக் கொண்டிருக்கும் போரில், சேயோன் செய்த அழிவு அளவிட முடியாதது... அவனை உயிரோடு விட்டிருந்தால், எமதுப் படையை, முழுதாக அழித்திருப்பான்... அஞ்சாது சென்று அவன் தலையை நீ, கொய்து வந்தாய்... நீ புகழப்பட்டாய்; எம்மால்!... உன் கீர்த்தி நிலைக்கவே, யாம் உனக்கு அருளினோம்...
இராமன் :
சுக்ரீவா, வாய்த் திறந்து பேசடா... சின்னப் பையன் அங்கதன் செய்த கீர்த்தியைக் காணடா... சேயோனை எதிர்க் கொள்ள இயலாது என்று அஞ்சி நீ இங்கு முடங்கினாயே... இப்போதுச் சொல்; கிட்கந்தகத்தின் அரசனாய் உன்னை ஆக்குவதா?... இவனை ஆக்குவதா?...
(தடாலென சுக்ரீவன் இராமன் காலடியில் வீழ்ந்து-)
சுக்ரீவன் :
அய்யரே, இதென்ன சோதனை?... உனது அடிமை நான்!... என்னை கை விட்டு விடாதீர்கள்... இது சேயோனது தலைதானோ என்று சோதித்துப் பாருங்கள்... ஓ... நெருப்பில் இடப்பட்டு வெந்துக் கொண்டிருக்கிறது... இனி எப்படி சோதிப்பது?... அய்யரே, வேறு எவனுடையத் தலையையோ கொய்து வந்து என்னைத் தலை குனியச் செய்கிறான்; சிறுவன்!... இவன் தந்தையைக் கொன்றதற்காக இவன் என்னைப் பழி வாங்குகிறான்...
அங்கதன் :
மூடு வாயை!... ஓடிப் பார்ப் பாசறையை... கொல்லப்பட்டவன் சேயோனா?... வேறு கொடியவனா என்று?... உன்னைப் பழி வாங்கவோ நானிங்கு வந்தேன்... என் அய்யன் இராமன் அடித் தொழவே வந்தேன்!... அவதார நாயகன் அருள் தந்தால், தேவருலகில் வாழும் பாக்கியம் கிட்டும் என்பதால் இங்கு வந்தேன்... இனி ஏதும் என்னைப் பேசாதே!... பேடி சுக்ரீவனே!... பேசினால் கொய்து விடுவேன் உன் தலையையும்!...
சுக்ரீவன் :
என்ன... என்ன... என்னையோ எதிர்த்துப் பேசினாய்?... சின்னப் பையனே, என்ன செய்கிறேன் பார்...
(பேசிக்கொண்டே, வாளுருவிக் குத்த, அங்கதன் உயிர்ப் பிரிந்து சாய- )
இராமன் :
அடேய் சுக்ரீவா!... என்னச் செய்தாய்?... அடேய் சுக்ரீவா!... நீ யாரோடு போரிடுகிறாய்?... அரக்கரோடு மோதி அரக்கப் படையை அழிக்க வக்கற்றவனே... என் படை வீரனையோ நீ கொன்றாய்?... வாளைக் கீழேப் போடு... வாய் திறந்து முனிவன் சபித்தால், உன் தேகம் எரிந்து சாம்பலாகும்...
( சுக்ரீவன் தாள் பணிந்து )
சுக்ரீவன் :
அய்யரே, என்னை சாம்பலாக்கி விடாதீர்கள்... நான் சாவதற்கு முன், கிட்கந்தகத்தின் அரியணை ஏற வேண்டும்... எனது ஆசையை நீர்த்தான் நிறைவேற்ற வேண்டும்... உம்மை அண்டி நிற்கிறேன்... உம் சொல் பணிந்து, எதனையும் செய்வேன்... என்னை நீக்கி விடாதீர்கள்... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்...
இராமன் :
ஆரிய வீரர்களே!... இவனைத் தூக்கிச் சென்று முகாமில் கிடத்துங்கள்... நாளையப் போரையும், இவனே முன் நின்று நடத்த வேண்டும்...
( சுக்ரீவனை வீரர்கள் இழுத்துச் செல்லல்...)
இரிசியமுகன் :
எப்படியோ; அரக்கர்கள் அரக்கர்களையே கொன்று சாகட்டும்...
-திரை-
பாகம் : 3. காட்சி - 30. நிலாமாடம்
வண்டார்குழலி
திரிசடை
சீதை.
(எவ்வித முகச் சலனமுமின்றி, குழலி யாழ் மீட்டிக் கொண்டிருத்தல்... மாடத்தின் ஒரு தளத்தில் நின்று திரிசடை கேவிக் கேவி அழுதுக் கொண்டிருத்தல்... சீதை நிலா மாடம் வருதல்-
நடையில் தளர்வும், தோற்றத்தில் சோகமும், இலங்க வந்த சீதை, யாழ் மீட்டிக் கொண்டிருக்கும் குழலியின் தாள் பிடித்து கதறியழ-
குழலி அமைதியாக-)
வண்டாற்குழழி :
திரிசடை, சீதையை இங்கு வரச் சொன்னவர் யார்?... சீதை இருக்க வேண்டிய இடம் அசோகவனமல்லவா!...
சீதை :
தேவியே, அசோகவனமோ நானிருக்க வேண்டிய இடம்?... அல்லல் துளைத்து, உமது நெஞ்சில் துயரத்தைத் தூவி நிற்கும் நான் இருக்க வேண்டிய இடம் அசோகவனமா?... அவதிகள் என்னாலன்றோ விளைந்து, அமைதிமிகு இலங்கையின் விழிகளில் நீர் சொறியச் செய்கிறது...
வண்டார்குழலி :
திரிசடை, சீதையை இட்டுச் செல்!... உன்னையும்தான் இங்கு வரச் சொன்னவர் யார்?... போ...
திரிசடை :
போகிறேனம்மா... போகிறேன்... உங்கள் இதயமே உங்களை விட்டுப் போனப் பின்னர், நானிங்கிருந்து ஆவதென்ன?... பொலபொலவென்று கண்ணீர் சிந்தி, நெஞ்சம் இடிந்துற அழுவதால் மட்டும் மாண்ட சேயோன் மீண்டும் வந்திடுவானோ?... உம் மடிமீதில் தலை வைத்து 'அம்மா' வென்றே கொஞ்சிடுவானோ?...
( திரிசடை தொடர்ந்து அழ )
சீதை :
போர்ச் செய்து வெல்ல வீரமின்றி, கூர்வாளோடு அங்கதனை ஏவி, தூங்கும் சேயோனது கழுத்தறுத்தவன் இராமனல்லவா!... கொலைப் பாதகனுடைய மனைவி என்று தெரிந்தும், என்னை இன்னும் அசோகவனத்தில் துஞ்சச் சொல்கிறாயே, தேவி!... நின் பாதம் பிடித்து அழவும், எனக்கு என்னம்மா அருகதை இருக்கிறது... மகன் மடிந்துற்ற போதும், ஆரியச்சி என்பால் நேசம் காட்டும் உங்கள் பாவம்தான் என்ன?...
திரிசடை :
விழியில் துளி நீரும் சுரக்கவில்லையே...உம் நெஞ்சம்தான் கல்லாயிற்றோ!... சொல்லுங்களம்மா!... 'அம்மா' வென்று மகன் சேயோன் அழைக்கும் ஓசைதானே இந்த யாழ் நரம்பிலிருந்து கிளம்புகிறது... யாழ் ஓசை என் நெஞ்சைத் தகர்த்து, என்னைக் கண்ணீரில் உருக்கிக் கொண்டிருக்கிறதே... என் நெஞ்சமே தகர்ந்தப் பிறகு, இனி நான் எந்த நெஞ்சோடு உமக்கு ஆறுதல் கூறுவேன்...
வண்டார்குழலி :
திரிசடை, என்ன நீ பேசுகிறாய்?... என் மகன் மட்டுமோ இறந்தான்?... இலங்கையின் மாண்புக் காக்கும் போரில், இன்னுயிர் நீத்துக் கொண்டிருக்கும் இலங்கையின் மகன்கள் எத்தனைப் பேர் என்பதை நீ அறியவில்லையோ?... என் மகன் சேயோனுக்காக மட்டுமே நீ விழிநீர் சிந்துகிறாய் என்றால், இன்னுயிர் நீத்துக் கொண்டிருக்கும் இலங்கை வீரர்களின் உயிர்களை நீ பொருட்டாய்க் கொள்ளவில்லை என்பதுதானே பொருள்!...
திரிசடை :
அம்மா...
வண்டார்குழலி :
அழைத்துப் போ; சீதையை, அசோகவனத்துக்கு!...
சீதை :
சீதை... சீதை... சீதை... ஏன் என்னை தனியே பிரித்தாளுகிறீர்கள்?.... இலங்கைக்கு ஒன்று நேர்ந்தால், அந்தத் துயரில் நான் பங்குக் கொள்ளக் கூடாதா?... ஆரியச்சி என்பதால், அந்த உரிமையை இலங்கை எனக்கு மறுக்கிறதோ?... பகைவன் தோட்டத்தில் பூத்திருந்தாலும், பூ பூதானே... தேவி, உணவுக்காகத்தான் நான் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்றால், அந்த உணவை நான் எங்கும் திரிந்து, எப்படியும் வாழ்ந்து விடுவேன்... ஆனால்; இலங்கை எனக்கு உணவை மட்டுமோத் தருகிறது... மானம் நிறைந்த மங்கையாக என்னை வைத்திருப்பது, இந்த இலங்கையல்லவா... ஆடை நழுவும் முன்னரே, விரைந்தெழும் கைப் போல், இலங்கையின் கை என்னைக் காத்து நிற்கிறதே... என் கைக்கு ஒரு தீங்கெனில் என் விழிகள் வேதனைக் கொள்ளாமல், ஆனந்தக் கூத்தோ ஆடும்?... தேவியே, துயர்க் கொண்டு நீங்கள் இல்லையென்றாலும், உங்கள் விரல் துடிப்பால் எழும் இந்த இசையின் சோகத்துக்குப் பொருளென்ன?...
வண்டார்குழலி :
கொல்லப்பட்ட என் மகனை எனது யாழிசைச் சென்று அடையப் போவதில்லை!... என் விரல் மீட்பில், உருவாகும் யாழிசை, என் சேயோனது உயிரை மீட்டு வரப் போவதில்லை... துயர்க் கொண்டு நீங்கள் இருவரும் அரற்றி நிற்பதால், என் மகனும் இங்கு வந்துவிடப் போவதில்லை..
திரிசடை :
ஆனாலும்...
வண்டார்குழலி :
ஒரு துயர்தான் என்னை வாட்டுகிறது... திரிசடை, இதுநாள்வரைக்கும் நடந்துக் கொண்டிருக்கும் போரில் எந்த ஆரியனாவது தலைமை வகித்து வந்தானா?... ஆரியனுக்கும், தமிழனுக்குமா போர் நடந்துக் கொண்டிருக்கிறது... தமிழனும், தமிழனுமல்லவா மோதி மாண்டுக் கொண்டிருக்கிறார்கள்... தமிழனைக் காட்டிக் கொடுக்க இன்னொரு தமிழனே துணிந்திருப்பதுப் போல், ஆரியனைக் காட்டிக் கொடுக்கும் குணம் அங்கே எந்த ஆரியனுக்குமாவது வந்திருக்கிறதா?... சிந்தித்துப் பார்... வேறெந்த இனத்திலும் இதுப் போல் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் உள்ளனரா?... கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்று பெருமைப் படப் பேசுகிறோம்... துரோகிகள் நிறைந்த இனம் தமிழினம் என்று நாளைய ஆய்வாளர்கள் எழுதக் கூடும்... தமிழினத்தில் மட்டுமே, காட்டிக் கொடுக்கும் பணி நடந்துக் கொண்டிருக்கிறது... சேயோன் கழுத்தை சீவிச் சென்ற அங்கதன் தன்னை ஒரு தமிழன் என்று உணர்ந்திருந்தால், இந்த இழிச்செயலுக்கு உடன் பட்டிருப்பானோ?... இப்போது நாம் இரண்டுப் பகையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்... உட்பகை ஒன்று, மற்றொன்று ஆரியப்பகை!... புற நோயினும் கொடிது அக நோய்!...
திரிசடை :
ஆயினும் என்னம்மா... நெஞ்சில் வீரமும், மாண்பில் தீரமும் கொண்டிருக்கிறோம்...
வண்டார்குழலி :
என்மகன் உயிர்ப் பறிக்கப்பட்டது என்பதில்கூட எனக்கு வருத்தமில்லை... தமிழினத்திலா, துரோகிகள் உருவாயினர் என்பதுதான் என்னை ஆட்கொண்டிருக்கும் துயர்!... அந்தத் துயரும் கரைந்துக் கொண்டிருக்கிறது,,, கொலை செய்யப்பட்ட சேயோனுக்கு இணையாய் - சேயோனாய், விந்தநாட்டு இளவரசன் மாரீசன் களம் நின்று போரிடுகிற சேதி மெய்சிலிர்க்க வைக்கின்றதாம்... இதுப் போன்ற சேதிதானே என் மகன் இழப்பை ஈடுசெய்கிறது... இனி வேறேது துக்கம் எனக்கு... போங்கள்; நீங்களிருவரும் அசோகவனத்துக்கு!...
திரிசடை :
அன்னையே!
வண்டார்குழலி :
திரிசடை, சொல்வதைக் கேள்!...
சீதை :
துக்கம் நெஞ்சில் இல்லை என்பது போல் பேசிவிட்டாலும், உண்டும், உறங்கியும் நாள் பலவாயிற்றே நீங்கள்... இதன் பொருளென்ன தேவி?...
வண்டார்குழலி :
போதும் உங்கள் பேச்சு!... இனி எவரும் என்னை நாடி வராதீர்கள்...தனிமையில் என்னை விடுங்கள்... அதுவே எனது நெஞ்சுக்கு அமைதித் தரும் மருந்து... போய்விடுங்கள்; இருவருமே அசோகவனத்துக்கு!...
-திரை-
பாகம் :3. காட்சி :31. காடு (மலைக்குகை)
இராமன்
இரிசியமுகன்
இலக்குவன்
அனுமன்.
( இரிசியமுகன் விழிமூடி, சிந்தையில் மூழ்கியிருக்க-
இராமன் நடையிட்ட வண்ணம் இருக்க, இலக்குவன் பதட்டத்துடன் ஓடி வருதல்...)
இலக்குவன் :
அண்ணா, அழிந்தோம் நாம்!... அஞ்சி எமது படைகள் எதிரியிடம் தஞ்சம் கொள்ளும் காட்சியை நானே நேரில் கண்டேன்... ஓடி நாம் தப்பிக்கவும் வழியில்லை... படையை வேலி போல் நிறுத்தி நம்மை சூழ்ந்துள்ளான் இராவணன்!... என்னச் செய்வது?...
இராமன் :
சுக்ரீவன் என்னச் செய்துக் கொண்டிருக்கிறான்?...
இலக்குவன் :
தளர்ந்த நடையிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறான்...
இராமன் :
பேடிப் பயல்!... வாள் வீசத் தெரியாதவனுக்கு, அரச போகத்தின் மீது மட்டும் ஆசை!... போரில் என்னதான் நடந்துக் கொண்டிருக்கிறது?...
இலக்குவன் :
அஞ்சி ஓடினாலும், அரக்கர் எமது வீரர்களை விட்டப் பாடில்லை... விரட்டி வந்து எம்மவர் கழுத்தை சீவி எறிந்தக் காட்சியை தூரத்தில் நின்று நானே கண்ணால் கண்டேன்... கால் வைக்கும் இடங்களில் எல்லாம் ஆரியர் தலைகள் உருண்டுக் கிடக்கின்றன... முண்டங்கள் பல யானையின் காலில் மிதிப்பட்டு... அய்யோ கோரக்காட்சிதான் அங்கே!...
இராமன் :
நம்மிடம் படை இல்லையா?... நம்மிடம் படைக்கருவி இல்லையா?... ஏனிந்த தோல்வி நமக்கு?...
இலக்குவன் :
நம்மிடம் மாரீசன் இல்லையே... அவன் விதி வகுத்துப் படை ஏவி விடும் அழகே மெய் சிலிர்க்கிறது... எம்பி வரும் அலைகள் போல், யானைப் படைகள் எகிறி வரும் காட்சியே எம்மை அஞ்சச் செய்கிறது... கண்ணிமை நேரத்தில் கணக்கிலடங்கா குதிரைகள் களம் நோக்கிக் கீழ்த் திசையிலிருந்து பாய்ந்து வந்தன... நமது கவனம் அதில் சிதருற, மேலும் எமது சிந்தையை சிதறடிக்க, வந்தது வடத் திசையிலிருந்து சக்கரத்தோடுப் படைகள்... வாள் படையும், வேல் படையும், தோட்டிப் படையும் எத்திசையில் முளைத்து களத்தை அடைந்தன என்றே தெரியவில்லை... அச்சமும் வியப்பும் எமது படையை சூழச் சூழ, தென்திசையிலிருந்து நீரூற்றுப் போல் கிளம்பியது கப்பனப் படைகள்... அண்ணா, எத்தனை விதப் படைகள் அவன் வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை... மாரீசனா?... அவன் மாய ஈசனா?...
இராமன் :
சேயோனைக் காட்டிலுமா அதிவீரன் மாரீசன்?...
இலக்குவன் :
அரக்கர்கள் வீரத்தில் எவன் உயர்ந்தவன்? எவன் தாழ்ந்தவன்? என்று என்னால் கணிக்க இயலவில்லை... போர்த் திறத்தில் எல்லாருமே, ஒரே வடிவினராய்த் தான் தெரிகின்றனர்...
இராமன் :
இன்றையப் போரின் முடிவுத்தான் என்ன?...
இலக்குவன் :
இன்னும் இரண்டு நாளில் எமது எல்லாப் படைகளும் அழிந்து விடும்... மாரீசனா அவன் மாய ஈசனா?...
இராமன் :
விந்தநாட்டவனா அவன்?
இலக்குவன் :
ஆமாம்;... அவனேதான்!...
இராமன் :
தாடகையை கொல்லும் போதே இவனையும் நாம் கொல்லாமல் விட்டோம்...
இலக்குவன் :
தப்பித்து ஓடிவிட்டான்; தறுதலை!...
இராமன் :
எம்மை எதிர்க்கத் துணிந்த கரனை கொன்றோம்... சேயோனைக் கொன்றோம்... மாரீசனையும் கொல்ல, இரிசியமுகனே ஏதும் வழி உள்ளதா?...
(இரிசியமுகன் விழித் திறந்து)
இரிசியமுகன் :
அழைத்துவரச் சொல் ; அநுமனை!...
( அநுமன் வருதல் )
அநுமன் :
வந்தேன்; நானே அநுமன்!...
இரிசியமுகன் :
அவனெங்கே உனது தலைவன்?...
அனுமன் :
அயர்ந்து உறங்குகிறான், படை முகாமில்!...
இரிசியமுகன் :
கிடக்கட்டும் அவன் அங்கேயே!... நாளை நீதான் தளபதி!...
அநுமன் :
அய்யரே!...
இரிசியமுகன் :
உன் நெஞ்சில் இராமனைக் குடி வைத்தேன்...
அநுமன் :
விந்தை வார்த்தையிது; எதிரில் இராமனிருக்க, நெஞ்சில் குடி வைத்தேன் என்பது என்னவோ?...
இரிசியமுகன் :
பிளந்துப் பார்; உன் நெஞ்சை!... இருப்பது இராமனா? இல்லையா? என்று சோதித்துப் பார்... இலக்குவா, அநுமன் நெஞ்சைப் பிளந்துக் காட்டு...
(இலக்குவன் வாளோடு அனுமனை நெருங்க, அனுமன் அஞ்சி-)
அநுமன் :
அய்யரே, வேண்டாம்... என் நெஞ்சில் இராமபிரான் குடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்... ஆகா!... இராமத் தெய்வத்தை நினைத்தால், சஞ்சீவிப் போல் என் தேகம் உயர்கிறது... இராமதேவனே, பணிந்தேன், நும் தாள்!...
இராமன் :
அனுமா, இனி உனக்கு அச்சமில்லை... அழிவுமில்லை... என் பேர் உள்ளவரைக்கும் உன் பேரும் நிலைக்கும்... உலகில் உனக்கிணையாய் பலசாலி இல்லை!... பலம் வேண்டி பயிற்சி செய்வோரும், இனி உன்னை நினைத்தால், பலம் கூடும் என்பதனை நிலை நாட்டுவேன்... நீ உனது பலத்தை இந்தப் போரில் காட்டு!...
அநுமன் :
மாரீசனோடு மோதவா?...
இராமன் :
அஞ்சாதே; நான் உன்னுள் இருப்பேன்!...
அநுமன் :
இன்னொரு முறை சொல்லுங்கள்... நீங்கள் சொல்லச் சொல்ல என்தேகம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது...
இராமன் :
நான் சொன்னேனே... இனி உனக்கு பலசாலி யாருமில்லை என்று!...
அநுமன் :
எவன் இனி என் தெய்வத்தை எதிர்த்து வந்தாலும், எட்டி உதைத்து அதம் செய்திடுவேன்... இராமநாதா, நீ என்னுள் இருந்தால், நான் இந்த மலையயேத் தூக்கிவிடுவேன்... மாரீசன் என்ன... மடிந்துப் போன தாடகையே ஆவியாய் வந்தாலும், அணு அணுவாய் சிதைத்திடுவேன்...
இரிசியமுகன் :
நாளையப் போர்ப் பற்றிச் சொல்கிறேன்... அதன் பிறகு உனது வாய் வார்த்தையைக் காட்டு... முதலில் என் பேச்சுக்கு செவி மடு... எம் எதிரில் இனி நீ வாயாடி நின்றால், மாயச் சொல்த் தூவி, உன் மண்டையைப் பிளந்திடுவேன்... எச்சரிக்கையாய் நெஞ்சில் இதனைக் கொள்!...
அநுமன் :
அய்யரே, உமது எச்சில் நான்!... ஏதும் அளவு மீறிப் பேசியிருந்தால், ஏதம் காண வேண்டாம்... என்னைப் பொறுத்திடுக...
இராமன் :
இரிசியமுகனே, எம் பேர் துதித்து நிற்கும் இவன், எமக்கு உண்மையானவன்... நாளையப் போர்ச் செய்வது எங்ஙனம் சொல்லுங்கள்...
இரிசியமுகன் :
குரங்காட்டி வீரனே, உன் பயிற்சியில் பழகியக் குரங்குகள் எத்தனை இருக்கின்றன, நம்மிடத்தில்?
அநுமன் :
நூறுக்கும் மேல் இருக்கின்றன... நன்கு பயிற்சிக் கொடுத்துள்ளேன்...
இராமன் :
கொடுத்தென்னப் பயன்?... கல்லெறிப் படைக்கு அஞ்சி அலறித் திரும்பியக் குரங்குகள்தானே உனது குரங்குகள்!...
அநுமன் :
என் செய்வது அய்யரே, அச்சம் என்பது குரங்குகளுக்கும் இருக்காதோ?...
இராமன் :
வாயாடாதே!... முனிவன் சொல்வதைக் கேளடா...
இரிசியமுகன் :
குரங்குகளின் வாலோடு, தீப்பந்தம் கட்டி ஏவிவிடு எதிரிகள் மீது!... தாவியோடிக் குரங்குகள் எதிரியின் முகத்தில் வால் சுழற்றி தீயால் சுடட்டும்... ஆடைகளில் தீப்பிடித்து, எதிரிகள் அய்யோ, அம்மா என்று ஓடிட வேண்டும்... கல்லெறிப் படைகள் கல்லெறிந்தாலும், அஞ்சிக் குரங்குகள் ஓடும் திக்கெல்லாம் தீயும் ஓடும்... ஓடும் திக்கெல்லாம் தீயும் பரவும்... குரங்குகளின் கையிலும் தீப்பந்தம் கொடுத்துத் துரத்தி விடுக களத்துக்கு!... தீக்கு இரையாகி இலங்கைப் படைகள் சாகட்டும்... அரக்கர் படையை அழிக்க இதுவே வழி!... இல்லையேல்; மாரீசன் நாளைய ஒருநாள் போரிலேயே எம் படையை அழித்து விடுவான்... ஆயுதம் செய்துக் கொண்டிருக்கும் பீடணனையும் துணைக்கு வைத்துக் கொள்... தீயொடுக் குரங்குகள் களம் பாயும் காட்சியை இலக்குவா, நீ கண்காணித்திடு!...
இராமன் :
எனக்கும் உதித்தது ஒரு திட்டம்!...
இலக்குவன் :
என் அண்ணனின் திட்டம், அடக்கும் எதிரியின் கொட்டம்... கேட்க இதுவே கட்டம்!... கேட்டப் பின் உனக்கும் இதுதான் சட்டம்!...
அநுமன் :
நீரே எனக்கு வட்டம்!... இதுத் தவிர வேறேது விட்டம்... உம்மை விட்டாலோ எனக்கு நட்டம்... அடிமை எனக்குச் சொல்லுங்கள் உமதுத் திட்டம்... அமைச்சனாய் நானும் கிட்கந்தகத்தின் அவையில் நுழைய வேண்டும்... திட்டம் எதுவாயினும் திடமாய்ச் செய்வேன்... சொல்லுங்கள் இராமபிரானே!...
இராமன் :
இறந்துபட்டுக் கிடக்கும், சடலங்கள் அங்கு ஏராளமாய் இருக்கின்றனல்லவா...
அநுமன் :
ஆமாம் அய்யரே...
இராமன் :
சடலங்களுக்கிடையில் எமது வீரர்களும் சடலங்கலாய்க் கிடக்கட்டும்...
அநுமன் :
அய்யரே, உயிருள்ளவன் சடலமாவதா?...
இராமன் :
பேசாதே; கேள்!...
அனுமன் :
பேசுங்கள்; கேட்கிறேன்...
இராமன் :
மடிந்து வீழ்ந்த யானைகளும் களத்தில் கிடக்கின்றனல்லவா!...
அநுமன் :
ஆமாம்!...
இராமன் :
யானையைப் போல் பெரும் மரப்பாவைச் செய்திடு!... அதனைக் கொண்டு போய், களத்தில் கிடத்து... பொய்மை யானைக்குள் பொங்கும் ஆரிய வீரர்கள் சிலர் ஒளிந்திடச் செய்... சடலங்களுக்கிடையிலும் எமது வீரர் சிலரைச் சடலங்களாய்க் கிடத்து!... களத்துக்குள் தமிழ் வீரர்கள் வந்தவுடன், குரங்குகள் தீயோடுப் பாயவேண்டும்... எதிரிகள் சிறுதும் எதிர்ப்பாரா வண்ணம், இந்தத் தாக்குதல் நடைப்பெறும் அதே நேரத்தில், சடலங்கலாய்க் கிடக்கும், ஆரிய வீரர்களுக்கு குறிப்பொலி தந்து ஏவிவிடு!... ம்.. போ... காலை புலர்வதற்குள், மரயானையை உண்டாக்க பீடணனுக்கு உரைத்திடு... போ...
(அனுமன் போக...)
இரிசியமுகன் :
நில் அனுமா!... இந்தப் போர்முறை சின்னஞ் சிறுவனும் செய்வான்... உன்னை அதற்காகவோ அழைத்தோம்?...
அநுமன் :
அய்யரே!....
இரிசியமுகன் :
என்ன செய்வாயோ... ஏது செய்வாயோ... நாளையப் போரில், உன்னால் மாரீசன் கொல்லப்பட வேண்டும்... இல்லையேல்; உனக்கு மரணம் எம்மால் நிகழும்... போ...
(ஒருகணம் திகைத்து நின்ற அனுமன், பின்னர் தலைக் குனிந்து போதல்... அனுமன் சென்றப் பிறகு, இலக்குவனை இராமன் தனியே அழைத்துச் சென்று...)
இராமன் :
தம்பி, நாளைய முடிவு நமக்குச் சாதகமாக இருக்காது என்றே நினைக்கிறேன்...
இலக்குவன் :
அதனால்?
இராமன்:
நாமிருவரும் மந்திகள் வேடமணிந்து தப்பி விடவேண்டும்... ஏற்பாடு செய்து வை... நாம் தப்பிப் போவதுக் குறித்து முனிவனுக்கும் தெரியக் கூடாது...
(இலக்குவன் தலையசைத்தல்...)
-திரை-
பாகம் : 3. காட்சி-32. மலைக்குகை (காடு)
இராமன்
அநுமன்
இரிசியமுகன்
இலக்குவன்.
(அநுமன் கூவி வருதல்)
அநுமன் :
வெற்றி... வெற்றி... வெற்றி...
இராமன் :
அநுமா, நீ வாழ்க!... நீ வாழ்க... நீ மட்டுமே வாழ்க!...
அநுமன் :
கொல்லப்பட்டான் மாரீசன்... கொடும் அரக்கனவன் கொடுவாள் வீச்சுக்கு பலியானான்... மாரீசன் முதுகினை கூர்முனை அம்புத் துளைத்தது... குருதி சிந்த அரக்கனவன் மண்ணில் சாய்ந்தான்... ஆனந்தம் என் நெஞ்சில் சாய, அநுமன் நான் உம்மிடம் ஓடோடி வந்தேன்; வெற்றி முழக்கம் முழங்கி!... வெற்றி நமதே!... வேந்தன் இராவணனும் மடிந்துற்றால், மாவிலங்கை உமது அடியில்... வெற்றி... வெற்றி... எமக்கே வெற்றி!...
இரிசியமுகன் :
கொக்கரித்ததுப் போதும்... மாரீசனைக் கொன்றது எப்படி கூறடா; அடிமை, அனுமா!
அநுமன் :
தாவின... தாவின.... தாவின.... தாவிக் கொண்டேயிருந்தன, குரங்குகள் தீப்பந்தமேந்தி!... எகிறின... எகிறின... எகிறின... எகிறிக் கொண்டேயிருந்தன எம் குரங்குகள்... சுழற்றின... சுழற்றின... சுழற்றின... தீக்கொண்ட வாலினை சுழற்றின எம் குரங்குகள்... தீச்சூடுப் பட்டு அரக்கர் வேதனையுற்று அலற, தீப்பந்தம்தனை குரங்குகள் அரக்கர் மீது வீச, அரக்கரும் நிலைப் பிறழ்ந்து சிதற, எங்கும் எமது குரங்குகள் எக்காளமிட்டுக் கொன்றன அரக்கரை!.... விழியைப் பிடுங்கின... மயிரை வேரொடுப் பிடுங்கின... வாள் வீச வந்த அரக்கரை எமதுக் குரங்குகள், அடித்தன... குதறின... குடலை உருவின... சூழ்ந்து நின்ற எமது வீரர் சூளுரைத்து ஏவினர் அம்பு!... மழை போல் பொழிந்த எமது அம்பின் முனை அரக்கர் அநேகரின் உயிரைக் குடித்தது... குரங்குகளுக்கு ஈடு செய்து போர் செய்ய இயலாமல், அரக்கர்படைத் திணறியக் காட்சி, கண் கொள்ளாக் காட்சியப்பா!... மரணமுற்று கிடக்கும் சடலம் போல், கிடந்த எமது வீரர்களும் அரக்கர் அறியா வண்ணம், வாள்வீசி மகிழ்ந்தனர்... மரத்தால் செய்யப்பட்ட யானைப் பாவைக்குள் மறைந்து நின்ற எமது வீரர்கள் வீணாய் இருக்கவில்லை... குரங்குகளுக்கு அஞ்சி, ஒளிய இடந்தேடித் திரிந்த அரக்கரை, யானைக்குள் இருந்த எம் வீரர்களின் அம்பு ஏவிக் கொன்றக் காட்சிக் கோடி கண் கொண்டு கண்டாலும், தீராதய்யா தாகம்!... நான் நடத்திய, இந்தப் போர்ப் போல், எமக்கு வெற்றித் தந்தப் போர் எதய்யா... சொல்லய்யா...
இரிசியமுகன் :
அடேய், மடையா!... மாரீசன் மடிந்தான்... எப்படிச் சொல்லு?...
(இலக்குவன் வருதல் )
இலக்குவன் :
அதனை நான் சொல்ல, நீங்கள் கேட்பதில்தான் இன்பம்... மாலையாயிற்று... போரும் ஓய்ந்தது... மாண்ட வீரர்களைத் தூக்கவும், காயம்பட்ட அரக்கர்களுக்கு மருந்து பூசவும் வந்தனர் அரக்கர்களின் மருத்துவர்கள்... அவர்களோடு மாரீசனும் வந்தான்...
அனுமன் :
தீச்சுடர்க் காட்டி, மடிந்துற்ற அரக்கர் முகத்தைக் குனிந்துக் குனிந்துப் பார்த்து நின்ற மாரீசன் மீது, மாயமாய் அம்பொன்று
இலக்குவன் :
நான் ஏவினேன்!...
இராமன் :
நீயா?...
இலக்குவன் :
ஆமாம்!... மரப் பாவைக்குள், ஒளிந்து சமயம் பார்த்து அம்பு மழைத் தூவிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்...
இராமன் :
மடையனே, ஏனடா நீ போர்க்களம் போனாய்...
இலக்குவன் :
நேர்களம் போகவில்லை... மரப்பாவைக்குள் மறைந்து நின்றல்லவோ மாயமாய் அம்பு ஏவினேன்... மாண்டான் மாரீசன்...
-திரை-
பாகம் :3. காட்சி-33. போர்க்களம் (நிலவொளி)
இராவணன்
வீரர் சிலர்.
(களமெங்கும் செந்நிறம் மண்ணோடு உறைந்திருக்க, போரில் உயிர் துறந்தவீரர்களின் பிணங்கள் களமெங்கும் கிடக்க, வெட்டுண்ட கை, கால், தலைகள் சிதறியிருக்க, மாரீசன் வீரமரணம் எய்தி கிடக்க, மாரீசன் தலைமாட்டில் இராவணன் அமர்ந்து தலையை வருடி, முகத்தைத் தடவியிருக்க... வீரர் அழ...)
இராவணன் :
வீரர்களே, அழுவது எமக்கு அழகோ?... செந்நீர் சிந்தி மாண்ட வீரருக்கு நாம் செய்வது கண்ணீர்த் தானா?.... வற்றி விட்டதோ நமது உடலில்தான் குருதியும்!... வெற்றி முழக்கம் முழங்கிட நாம் வீரம் செய்தாலன்றோ, எம் வீரர்களின் வீர மரணத்தின் பொருளை நாம் உணர்ந்தவர்களாவோம்... என் மகன் சேயோனைவிட மிகு வீரம் காட்டியவன் மாரீசன்... மாரீசன் கொல்லப்பட்டான் என்றாலும், எம் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்!... வீரச்சின்னம் மாரீசன் நினைவாய் எழுப்பி, மாரீசன் வீரத்தை நினைவுக் கூர்வோம்... மாரீசனது வீரத்தை நிலை நாட்டுவது என்பது, நாளையப் போரில் நாம் காட்டவிருக்கும் தீரத்தில்தான் இருக்கிறது... இறந்துப்பட்ட எமது வீரர் யாவரும் அஞ்சி ஓடி இலங்கையின் வீரத்துக்கு மாசு உண்டாக்கினாரில்லை... களம் நின்று, நேர்நின்று உயிர் துறந்தவர்கள்... இவர்களது மரணம் தமிழ் உள்ளளவும், தமிழர் நெஞ்சில் வீரம் ஊட்டும்... கலங்குவது தமிழர் பண்பாடல்ல!... மரணத்திலும், தமிழ் மாண்பை சிதறவிடாத இந்த வீரர்கள்தான் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... வீரர்களே, யாழிசை ஒலிக்க, இறந்துப் பட்ட நம் வீரர்களின் சடலங்களை எரியூட்டி பீடு நடையிட்டு வாருங்கள்... நாளையப் போர், என் தலைமையில்தான்!...
(இராவணன் நடையிட-
யாழிசை ஒலிக்க, வீரர்கள் சடலங்களைத் தூக்க...)
-திரை-
பாகம் :3. காட்சி-34. மலைக்குகை (காடு)
இரிசியமுகன்
இராமன்
சுக்ரீவன்
அநுமன்.
(இரிசியமுகன் விழிமூடி அமர்ந்திருத்தல்...)
சுக்ரீவன் :
தலைமை வகிப்பது இராவணன்... அவனோடோ நான் போர் புரிவது?... இயலாது என்னால்...
இராமன் :
காரணம் கேட்கிறேன்... நீ, கூறியதையே கூறி நிற்காதே!...
சுக்ரீவன் :
அய்யரே, ஆயிரம் பகை இராவணன் மீது என் நெஞ்சில் இருக்கலாம்... அரசசுகத்தின் மீது ஆசையும் என் நெஞ்சில் இருக்கலாம்... ஆனால்...
இராமன் :
ஆனால்; சொல்லு...
சுக்ரீவன் :
இயலாது என்னால்... அவன் தன்னிகரிலாத் தலைவன்... தமிழினத் தலைவன்... நான் பகைவனாய் அவனைக் கருதினாலும், என் நெஞ்சம் என் தலைவனை எதிர்க்க மறுக்கிறதே... மனதை மீறிச் செய்ய என்னால் இயலாது...
இராமன் :
மூடனே, ஆரியத்தின் பாதம் பணிந்தப் பின்னர், தமிழினத்தின் மீது ஏனடா பற்றுதல்?...
சுக்ரீவன் :
இயலாது... ஏனோ தெரியவில்லை... மறைந்து நின்றுக் கூட மாமன்னன் இராவணனைக் கொல்ல என் நெஞ்சம் துணிய மறுக்கிறது... இலங்கை அரக்கர்கள் எல்லாரையும் அழிக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்... ஆனால்; இராவணனோடுப் போர் செய்ய மனம் மறுக்கிறது... வாலியோடு நான் பகை மூண்டு நின்ற போதும், வாஞ்சையோடு இராவணன் என்னை ஆறுதல் படுத்தி நின்றான்... வாலி என்னை விரட்டியடித்தப் போது, இலங்கையில் வாசம் செய்ய அழைத்தான் என்னை... அன்புக் காட்டியவன் மீது நன்றி மறந்துத் தாக்கவும் என் மனமும் இடந்தருமோ?...
இராமன் :
அனுமா, என்ன சொல்கிறாய் நீ?...
அனுமன் :
என் தலைவன் சொல்தான் என் சொல்லும்...
இராமன் :
அடேய், அரக்கப் பயல்களே, இறுதி நேரத்தில் என்னைக் கழுத்தறுக்கவோ, முடிவு செய்தீர்கள்?...
அநுமன் :
இத்தனை நாள் நடத்தியப் போரிலும், நாங்கள்தானே பங்குக் கொண்டோம்... நீயும், இரிசியமுகனும், இலக்குவனும் இங்கிருந்து எம்மை ஏவுகிறீர்களேத் தவிர, வேறு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று நான் கேட்கவில்லை, உம்மை மக்கள் கேட்கிறார்கள்...
(கோபக்கனல் தெறிக்க)
இராமன் :
அடேய் அனுமா... அற்பர்களுடனோ என்னைப் போரிடக் கூறுகிறாய்?... விழிமூடிக் குந்தியிருப்பவனே, உன்செவிதான் கேடானதோ?... யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல், பதர்கள் இவன்கள் வாயாடுகின்றனர்... நீயோ, வாய் மூடி, விழிமூடி செவிமூடி...
(விழித் திறந்த இரிசியமுகன்...)
இரிசியமுகன் :
எனக்கு எல்லாமே தெரியும்... இவன்கள் இப்படித்தான் பேசுவான்கள்... அரச பீடத்தையும் நீ தந்து விட்டால், உன்னையும் ஆட்டிப் படைப்பார்கள்... என்னவென்று நினைத்தாய் நீ அரக்கன்களை!... சபித்தால், சாம்பலாகி விடுவான்கள்... என் சொல் கேட்டு அச்சத்தால் நடுங்கி நிற்கிறான்கள்... ஆனால்; நெஞ்சில் மட்டும் திமிர் கொண்டிருக்கிறான்கள்...
இராமன் :
அற்பர்களோடு என்னைப் போர் செய்யும்படி அரக்கன்கள் இவன்கள் எனக்கு சொல்கிறான்கள்... அற்ப பதரே, நீ என்ன எனக்கு ஆண்டவனா?... சொல் பணிய நான் என்ன சூத்திரனோ?... ஆரியனடா நான்!... அடிபணிய வேண்டியது நீங்கள்தானடா... இராவணனோடு மோத
(இரிசியமுகன் தடுத்து )
இரிசியமுகன் :
டேய் அனுமனே, டேய் சுக்ரீவனே, போங்கடா... போய் பீடணனை வரச் சொல்லுங்கடா...
(போதல்... சிறுது நேரம் இரிசியமுகன் நடையிடல்... பீடணன் வருதல்...)
இரிசியமுகன் :
வாடா, பீடணா!... படைக் கருவி செய்தாயா?... இல்லை; கிடங்கில் இருந்து தவம் செய்கிறாயா?... ஏன் எம்மை வந்து காணாதிருக்கிறாய்?... யாமும் உன்னை ஏன் காணாதிருந்தோம்?... அறிவாயா?...
பீடணன் :
அடிமை நான்... அறியும் அறிவில்லை எனக்கு!...
இரிசியமுகன் :
இராவணனோடுப் போர் ; நீதான் தலைமை வகிக்கிறாய்... சொல்லவே அழைத்தோம்... சொல்லினோம் ; போ... நீ!
பீடணன் :
அய்யரே...
இராமன் :
என்னடா?
பீடணன் :
இராவணனோடு நான்...
இராமன் :
ஆமாம்!... நீயேதான்!...
இரிசியமுகன் :
இத்தனை நாள் நடந்தப் போரிலும், உன்னைக் கலந்துக் கொள்ளச் சொன்னோமா... இல்லை... ஏன்?... இராவணன் உனது உடன்பிறப்பு மட்டுமல்ல... அவனுக்கு சரி நிகர் வீரன் நீதான்!... இளமையிலிருந்தே, அவனது வீர நுணுக்கத்தை அருகிலிருந்தே அறிந்தவன் நீ... அதனால் நீயே அவனை வெல்ல இயலும்... அதனாலன்றோ வேறு அரக்கரோடு உன்னை மோதவிடாமல் தீனியிட்டுக் காத்து நின்றோம் உன்னை!... நாளை நீ... நீயே மோத வேண்டும்...
பீடணன் :
அய்யரே, அவனை நான் அறிந்தவன்தான்...
இராமன் :
அதனால்தான் சொல்லுகிறேன்... நீயே மோத
பீடணன் :
அய்யரே,அவன்...
இராமன் :
அடுத்துப் பேச வேண்டாம்... சொல்வதைச் செய்!...
பீடணன் :
செய்கிறேன்... செய்வதற்கு முன்னர் எனது ஒரு பேச்சை செவிக் கொள்ளுங்கள்...
இரிசியமுகன் :
என்ன நீ பேசுகிறாய்?... பேடித்தனம் உன் பேச்சில் இருந்தால், அடுத்த ஜன்மத்தில் நீ அரசனாக மாட்டாய்... சொல்லிவிட்டேன்... இதுவே சாபமும்... அறிவாய், நீ!...
பீடணன் :
என் மகள் திரிசடையை நான் சந்தித்து வர நீர் ஒப்பம் தர வேண்டும்...
இராமன் :
மாயையில் சிக்கி விட்டனர் இந்த அரக்கர்கள்... அநுமனும் சரி; அறிவில்லா சுக்ரீவனும் சரி ; இவனும் சரி... பாசம், பந்தம் என்று அடிமையாய் நிற்கின்றனர்... அற்ப சுகங்களை வெல்ல இயலாத இவர்கள், அரசபீடத்தை எப்படி ஆள முடியும்?... இராவணன் தமிழினத் தலைவனாம்!... அதனால் பாசம் நெஞ்சில் மோதுகிறதாம்... போரிட அவர்களுக்குத் தயக்கமாம்... இவனோ, மகள் திரிசடை மீது பாசம் வைத்து நிற்கிறான்... நோக்கம் என்ன என்பதை மறந்துவிட்ட பேய்களே, நீங்களா உலகை ஆளப் போகிறீர்கள்?... நோக்கம் என்பது கல்லெறிந்துக் கனியை வீழ்த்துவதில்தான் இருக்க வேண்டும்... அதுவன்றி கனியின் அழகில் மயங்கி அதனையோ வீழ்த்துவது என்று பேதமைக் கொண்டால், சுவைத்திடக் கனியும் கிட்டுமோ... பாசம் அறுத்திடு... பந்தம் அறுத்திடு... ஆரியனைத் தொழுதிடு... ஆண்டவன் பாதம் பணிந்திடு... இதுவே சொர்க்கம்... அல்லவெனில்; நரகமே உமது வாழ்வின் எல்லை!... சொன்னேன் நான்... இன்னும் ஏனடா, புத்தியின்றி நிற்கிறாய்?...
பீடணன் :
பேடித்தனம் இல்லை என் நெஞ்சிலே... உம்மோடு சேர்ந்து நானும் சூதறிந்து நிற்கிறேன்... சூழ்ச்சியால் இராவணனை கொல்லவே திட்டம் ஒன்று நெஞ்சில் உதயமாக நிற்கிறேன்... ஒப்பம் நீர்த் தந்தால், செப்புகிறேன் நானும் அதனை!...
இரிசியமுகன் :
சொல்லடா என்னவென்று!... சூழ்ச்சியால் கொல்லுவேன் இராவணனை என்றாய்!... திட்டம் சரியென்றால், ஒப்பம் யாமும் தருவோம்... அல்லவெனில்;
இராமன் :
வளவளவென்று முனிவனே, வாயாடாதே!... சொல்லடா நீ!...
பீடணன் :
கடல் கொண்டுள்ள ஆழமும் கணக்கில் அடங்கும்... என் மகள் திரிசடையின் மீது இராவணன் கொண்டிருக்கும் அன்புக்கோ அளவில்லை... அவன் ஒரு குவளை அமுதம் பருகிட என் மகள் திரிசடைத் தர வேண்டும்... அவன் மரணத்துக்கு வாளும் வேண்டாம்... வேலும் வேண்டாம்... ஆரியப்படையும் வேண்டாம்... நானும் வேண்டாம்... நீயும் வேண்டாம்... என் மகள் தரும் ஒரு குவளை அமுதமே போதும்... அதில் நஞ்சிருக்கும்... அவனது மரணமும் இருக்கும்...
இராமன் :
எப்படி நீப் போவாய்; உன் மகள் திரிசடையை சந்திக்க?... காவலர் அதிகம் சூழ்ந்துள்ளனர் எம்மை!....
பீடணன் :
நான் போவேன்... நான் அறிவேன்... இலங்கையின் எல்லா வழிகளையும்!...
இராமன் :
போய் வா...
இரிசியமுகன் :
நில்... இவன் போனால், இராவணனோடுப் போரிடுவது யார்?... நீயா?
இராமன் :
பீடணன் நீ போடா!... நான் முனிவனோடுப் பேசிக் கொள்கிறேன்...
(பீடணன் போதல் )
இராமன் :
முனிவனே, மூளையில்லாமல் பேசாதே!... நடந்துக் கொண்டிருக்கும் போரில், நாம் துளியும் கலந்துக் கொள்ளாமல் இருந்தால் நம்மை பேடிகள் என்றும், ஏமாற்றுப் பேர்வழிகள் என்றும் இவர்கள் எண்ணத் தொடங்கினால், நம் கதி என்னாவது?... சிந்தித்தாயா?... பேருக்கேனும் போரில் நாம் நிற்பது போல் நடிப்போம்... அதற்குள் பீடணன் மகள் திரிசடையை அழைத்து வந்து, நஞ்சும் தந்திடுவான் ; இராவணனுக்கு!... வெற்றி எமதே!... இலக்குவனை நாளையப் போருக்குத் தலைமையாக்கி அனுப்புவோம்...
-திரை-
பாகம் : 3. காட்சி - 35. அசோகவனம்.
திரிசடை
பீடணன்
பீடணன் :
மகளே, திரிசடை!... என் சொல் கேளம்மா... மாயவனம்மா அவன்... அவன் மனம் நினைத்தால் யாம் எல்லாருமே...
திரிசடை :
போய்விடு இங்கிருந்து!... வஞ்சகன் உன்னோடு வாய்ப் பேசவும் விருப்பமில்லை எனக்கு!... நீ எனது தந்தையல்ல!... உன்னை நான் என்றோ துறந்து விட்டேன்...
பீடணன் :
நான் சொல்வதை...
திரிசடை :
கேட்கும் செவி எனக்கில்லை!... வாள் வீசி, உன்னைக் கொல்லாமல் விட்டேன்... போ ; நீப் பிழைத்து!... இன்னும் நின்றால் இலங்கை வீரர்களை அழைத்திடுவேன்... போ... வந்த வழியே குதித்து!...
பீடணன் :
நீ நாளை சுகமாய் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடோடி வந்தேன்... அம்மா, நான் என்னதான் சொல்ல வந்தேன் என்பதையாவது
திரிசடை :
எதுவும் சொல்ல வேண்டாம்... நீ வாழ, என்னை ஆரியனுக்கு விற்கத்தானே வந்திருக்கிறாய்?... மலரின் அழகை நேசிப்பவரைத்தான் நான் கண்டிருக்கிறேன்... அழகிய மலர்களை அழிப்பதில் சுகம் காண்போனை உன் உருவில் இப்போதுதான் காண்கிறேன்...
பீடணன் :
நானோ இலங்கையின் எழிலை அழித்தேன்... அழித்தவன் எவனென்று தெரிந்தும் என் மீது ஏனம்மா, ஏதம் சுமத்துகிறாய்?...
திரிசடை :
எரி விளக்கைக் கெடுத்து, இருள் செய்தவன் நீயல்லவா!...
பீடணன் :
விளக்கின் ஒளியே இராமன் தானம்மா!... நான் விளங்கிடச் சொல்கிறேன்... நீ கேளம்மா!...
திரிசடை :
வாளெடுத்து நெஞ்சம் பிளந்திடுவேன்... தந்தை என்றும் பாரேன்... தருக்கன் இராமன் பேச்சு நீ எடுத்தால்!...
பீடணன் :
அவன் மீது நீ கொள்ளும் கோபம் தீமையில் ஆழ்த்தும்... அவதாரபுருஷன்!... அவனே, இவ்வையகம் ஆளப்பிறந்தவன்...
திரிசடை
மாளப் பிறந்தவன்தான்!...
பீடணன் :
சத்தியமே ஜெயம்... வாய்மையே வெல்லும்... நீ பார்!... நான் சொல்வது பொய்க்காது... இராவணன் சத்தியவான் எனில், நடந்துக் கொண்டிருக்கும் போரில் இராவணனல்லவோ வெற்றிக் குவித்திருக்க வேண்டும்... இராவணன் கரனை இழந்தான்... சேயோனை இழந்தான்... மாரீசனையும் இழந்தான்... எஞ்சி நிற்பவன் இராவணன் மட்டுமே!... அவனும் அழிந்து பட்டால் உன் நிலைமை என்னவாகும்?... ஆரியர் உன்னை சூறையாடிட மாட்டார்களோ?... அதற்கு முன்னர் நீ என்னோடு வந்திடு!... என்சொல் கேட்டிடு!... ஆரியரைப் பணிந்து, நம் வாழ்வை காத்திடுவோம்...
திரிசடை :
கரன் கொல்லப் பட்டான் வஞ்சத்தால்!... மாரீசனும் கொல்லப் பட்டான் வஞ்சகத்தால்!... நேற்றையப் போரில், இலக்குவனும் கொல்லப் பட்டான் நேர்த் திறம் கொண்ட எமது வீரத்தால்!...
பீடணன் :
என்ன? இலக்குவன் கொல்லப்பட்டானா?... இலக்குவா... இராமா...
-திரை-
பாகம் : 3. காட்சி - 36. மலைக்குகை (காடு)
இராமன்
ஆரியவீரர் சிலர்
இலக்குவன் பிணம்
இரிசியமுகன்
அநுமன்
சுக்ரீவன்.
(ஆரியவீரர் சிலர், இலக்குவனது உடலைத் தாங்கிய வண்ணம் வருதல்...)
ஆரியவீரர் :
இராமா... இராமா... இராமா...
(குரல் கேட்டு, இராமன் உள்ளிருந்து வர, இலக்குவனது உடலைத் தரையில் வீரர் கிடத்த, கண்ணுற்ற இராமன்...)
இராமன் :
இலக்குவா...
(இராமன் அலறி மயங்கி சாய்தல்... மயங்கி விழுந்த இராமனைக் கண்டு அதிர்ந்த வீரர் செய்வதறியாது மூலைக்கொருவராய் ஓட-
சிறுது நேரத்தில் ஆரியவீரர்களோடு அநுமனும், சுக்ரீவனும் அவசரமாக ஓடி வர-
வந்தவர் இராமனை சூழ்ந்து நிற்க)
இரிசியமுகன் :
மாயைத்தானோ இதுவும்... இந்திரா, மாண்டான் இலக்குவன்... மயக்கத்தில் வீழ்ந்தான் இராமன்... இது என்ன சோதனை?... ஆரியக்குலம் காக்க உதித்தவன் இன்று, தன் இளவல் உயிர்ப் போகக் கண்டு மயங்கி வீழ்ந்தான்!... என் செய்வேன்?... ஆரியஞ் செழிக்கத் துணிந்தவனுக்கு இது தானோ நீ தரும் பரிசு!...
(இரிசியமுகன் விழிமூடி அமர-)
அநுமன் :
தலைவா, இது என்னக் கூத்து?...
சுக்ரீவன் :
இறந்த இலக்குவனை மாயத்தால் உயிர்ப்பிக்காமல், இவனும் மயங்கி விழுந்தான் என்றால், இதனை என்னவென்பது?... உண்மையில் இவர்கள் தேவர்களோ?... வேடதாரிகளோ?... புல் பூண்டும், அணுவும், விண்ணும், மண்ணும், எல்லாம் இவனே என்று தன்னை, கூறிக் கொண்டான்... அசையும் உயிர், அசையா உயிர் எல்லாம் இவனே என்றான்... தம்பிக்குப் புதிதாய் உயிர்க் கொடுக்கத் தெம்பின்றி, இவனும் விழுந்தானே மயங்கி!...
அநுமன் :
இவனை நம்பியல்லவோ இராவணனது பகைக்கும் ஆளாகி நிற்கிறோம்... என்னாகுமோ?...
சுக்ரீவன் :
இதோ... இந்தக் கிழவனைப் பார்... மயங்கிக் கிடப்பவனைத் தெளியச் செய்யாமல்,மனதில் ஏதோ முனுமுனுத்து விழிமூடிக் கொண்டான்... இவன் ஞானப் பாதையில் போய் ஆண்டவனை அழைத்து வந்து இவர்களை உயிர்ப்பிப்பது இப்போது சாத்தியமாகுமோ?... இவன் போய் ஆண்டவனை அழைக்கும் போது, ஆண்டவன் வேறு வேலையாய் வேறு எங்கும் சென்றிருந்தால்?...
அநுமன் :
சென்றிருந்தால் நமதுக் கதையும்?...
சுக்ரீவன் :
இப்போது என்னச் செய்வது?...
அநுமன் :
தமிழ் நூல்கள் நாம் கற்றிருப்பதால், மூலிகை மருத்துவம் நமக்குத் தெரியுமே... இவன் ஆண்டவனை அழைத்து வரட்டும்... வருவதற்குள், நாம் மூலிகைக் கொடுத்து மயக்கத்தைத் தெளியச் செய்வோம்!...
(அநுமனும், சுக்ரீவனும் மூலிகைத் தேடிச் செல்லல்...
சிறுது நேரத்தில் மூலிகையோடு வரல்... சுக்ரீவன் ஒரு மூலிகைக் கொண்டு, இராமனது நாசியில் தடவல்... அனுமன் மூலிகைச் சாறுப் பிழிந்து இராமனின் நாசியில் விடல்...
இராமன் உடல் அசைய... அவன் உதடு மெல்லென விரிந்து...)
இராமன் :
இலக்குவா... இலக்குவா...
( புலம்ப...)
-திரை-
பாகம் : 3. காட்சி - 37. பாசறை.
இராவணன்
முதியவன் ஒருவன்.
முதியவன் :
மன்னவா, மூத்தோர்ச் சொல்லும், நெல்லிக் கனியும் முதலில் கசக்கும் என்பர்... என் சொல் நீ கேளாவிடினும்,
இராவணன் :
பெரியவரே, இலங்கை வீரத்துக்கு உகந்தது எனில் சொல்லுக!... எமது தீரத்துக்கு மாசு செய்யுமேயாயின் பேசாது சொல்லுக!...
முதியவன் :
சீதையை விட்டுவிடு மன்னவா...
இராவணன் :
இதுதானோப் பேச்சு?...
முதியவன் :
எம் பக்கமும் அழிவு!... ஆரியர் பக்கமும் அழிவு!... அழிவு நிகழ்வது சரியோ?... அமைதி வேண்டி நான் உம்மை வேண்டுகிறேன்... சீதையை விடுத்தால், தானும் போர்க்களம் நீங்குவதாக இராமன் கூறுகிறானாம்... சீதையின் பொருட்டன்றோ போர் நேர்ந்தது... சீதையை நீர் விட்டுவிட்டால் போரில்லை... சொல்வதைக் கேள் மன்னவா...
இராவணன் :
இதுதானோ பேச வந்தாய்?...
முதியவன் :
இராமனை எதிர் வெல்லுதல் இயலாது... ஊற்றுப் போல் அவன் படைப் பெருகுகிறதாம்... ஊழியாய் அவன் எமக்கு முளைத்தானோ?... கேள்! மன்னா, சீதையை விட்டுவிடு!... நாடோடி என்று நாம் அவனைப் பேசினோம்... அவனோ நம் நாட்டை அழிக்கப் பிறந்தவன் போல் இருக்கிறது... அவனை எளிய மானிடன் என்றுக் கூறுவது தவறு!... அவன் மானிடன் அல்லன்... தெய்வசக்தி கொண்டவன்... உண்மையில் அவனும் ஒரு கடவுளாகத்தான் இருப்பான்... இல்லையென்றால்; இலக்குவனை மீண்டும் உயிர்ப்பித்திருப்பானோ...
(இராவணன் கோபத்தோடு...)
இராவணன் :
எவன் சொன்னது?... இலக்குவன் மீண்டும் உயிர்த் தெழுந்தானென்று?... கொன்றவன் நான்!... அவன் உடலைத் துளைத்த வேல் என் வேல்!... மரணித்து விழுந்தான்; தேர் மீதில் நின்று கண்டவன் நான்!...
முதியவன் :
உண்மைதான்!... ஆயினும்; மன்னவா, இலக்குவன் மீண்டும் உயிர்த்தெழச் செய்தான் இராமன் எனில்?...
இராவணன் :
கட்டிவிட்டக் கதையிது!... காதால் கேட்டுவிட்டு நீ என்னிடம் கூப்பாடுப் போடுகிறாய்... நாளையும், நானே தலைமை வகித்துப் போர் செய்கிறேன்... வரட்டும்; இலக்குவன் உயிரோடிருந்தால்!... வாய்ப் பேசியது போதும்... போ ; முதியவனே நீ!...
(முதியவன் போதல் )
-திரை-
பாகம் : 3. காட்சி - 38. மலைக்குகை
இரிசியமுகன்,
பீடணன்,
இராமன்.
(இராமன் சோகமாய் முழந்தாள் மீது தலைக் கவிழ்த்து, தரையில் அமர்ந்திருக்க-
நடையிட்டு முனிவன் இருக்க... பீடணன் - )
பீடணன் :
இராமநாதா!... சோகித்திருப்பதால், மாண்ட இலக்குவன் மீண்டுடிவானோ?
(முகன் கோபத்துடன்...)
இரிசியமுகன் :
யாரடா மாண்டது?... மடையா, இலக்குவனோ மாண்டான்?... அறியாதுப் பேசாதே... அறுத்திடுவேன் நாக்கினை!... தேகத்தில் புண்பட்டுத் தரையில் வீழ்ந்தான் இலக்குவனன்... தேவர்கள் அவனை தேவலோகம் தூக்கிச் சென்றுள்ளனர்... தேவமருத்துவம் செய்தப் பின்னர் இலக்குவன் மீண்டும் வருவான்... ஒருநாளும் பிரிந்திராத இராமன், இலக்குவனது சிலநாள் பிரிவையும் தாங்க மாட்டாமல் சோகித்திருக்கிறான்... நீ ஏனடா கதைக் கட்டுகிறாய்... திரிசடையைக் கொண்டுவந்து தீர்த்துக்கட்டுகிறேன் இராவணனை என்றாய் ... அந்தோ வெறுங்கை வீசி வந்தாய்... தமிழ் முதியவன் ஒருவனுக்கு கையூட்டுத்தந்து இராவணனிடம் அனுப்பினாய்... மாயத்தால் இலக்குவனனை இராமன் மீளச்செய்தான் என்று சொல்லச்சொன்னாய் ... அதற்கும் அஞ்சினானில்லை இராவணன்... இன்னும் மரமாய் நிற்காதே... போ... நாளையப்போருக்கு நீயே தலைமை வகித்துப்போ ... இலக்குவனைப்போருக்கு அனுப்பவேண்டாம் நேர் நின்று போர்ச்செய்யும் திறம் தெரியாதவன் என்றுதடுத்தும் என் சொல் கேளாது இலக்குவனை அனுப்பினான்... இப்போது சோகித்துக்கிடக்கிறான் இராமன்... நீயும் பேசி நிற்காதே... களத்துக்கு எவரும் நம்மவர் செல்லவில்லையென்றால் இங்கேயே வந்துவிடுவான் படையோடு நம்மைப்பலிகொள்ள... நீயே தளபதி நாளையப்போருக்கு...
இராமன் :
முனிவா! போர்ச்செய்து இராவணனை வெல்ல இயலாது... எஞ்சி நிற்கும் நமதுப்படையையும் பலியாக்குவதா?... ஒரு திறம் சொல்லுகிறேன் கேளுங்கள்... மாயசீதையைச்செய்து களத்தின் நடுவில் போட்டுவிடுங்கள்... சீதையை இராவணன் கொன்றுபோட்டுவிட்டதாக நம்மவர் மாயா சீதாவை சுற்றி நின்று ஒப்பாரி வைக்கவேண்டும்... 'இராவணனதுகருணையில்லா செயல் இது' என்று அரக்கர் நெஞ்சிலும் நம்மீது இரக்கம்பிறக்கும்... போர்க்களத்தில் நிற்கும் அரக்கப் படையினரின் மனதையும் இச்செயல் நெருடும்...
இரிசியமுகன் :
அதனால்?
இராமன் :
பீடணா, நீ மாயா சீதா ஒன்று செய்துவிடு ... ஆரியவீரன் ஒருவனை நாளையப்போருக்கு தலைமை வகிக்கச்செய்திடு... போ... நீ மாயா சீதாவை செய்திடு
(போதல்)
-திரை-
பாகம் : 3. காட்சி - 39. போர்க்களம் (நிழற்காட்சி)
குரல் :
ஆரியர்கள் களத்துக்கு வந்தும் எம் மீது மோதாமல் சோகித்து நிற்கின்றனரே...
குரல் :
அச்சம்... அச்சமின்றி வேறென்னவாகவிருக்கும்?... இராவணனது போர் முறையால், முழு வலிமையையும் இழந்த நிலையில் இராமன் சோர்வுற்று விட்டான்... அதன் தாக்கமே இதுவும்...
குரல் :
நான் அப்படிக் கருதவில்லை... நமது மன்னவனுக்கு ஏனிந்த அவசரம்?...
குரல் :
என்ன நீ கூறுகிறாய்?...
குரல் :
இலக்குவனை, இராமன் உயிர்த்தெழச் செய்ததாகப் பேசப்பட்டதே... அது உண்மைதானம்!...
குரல் :
அதற்காக ஆரியர்கள் ஏன் சோகித்து நிற்கின்றனர்?...
குரல் :
ஆரிய இராமனின் மனைவி கொல்லப்பட்டால், ஆரியவீரர்கள் சோகிக்காமல் என்ன செய்வார்கள்?...
குரல் :
ஏதும் புரியவில்லை!...
குரல் :
இலக்குவனை மாயத்தால் உயிர்த்தெழச் செய்தானாம் இராமன்... மாயத்தால் இராமன் ஏதும் செய்திடுவான் என்று நமது மன்னவனுக்கே அச்சம் வந்து விட்டதாம்... சீதைக்காகத்தானே இராமன் போர்ச் செய்கிறான்... சீதையை இராமானுக்குக் கிட்டாமல் செய்து விடுகிறேன் என்று சூளுரைத்து சீதையை நேற்று இலங்கையிலிருந்துக் கொண்டு வந்து, வெட்டிப் போட்டானாம் நமது மன்னவன் இராவணன்...
குரல் :
அய்யோ உண்மையாகவா?...
குரல் :
வெட்டப்பட்ட சீதையின் சடலம் பார்த்துத்தான், ஆரியவீர்கள் கண்கலங்கி நிற்கின்றனர்...
குரல் :
நமது மன்னன் இப்படியும் துணிந்தானா?...
குரல் :
இராமன் மாயத்தால் எதுவும் செய்வான் என்று இலங்கை வேந்தனே அஞ்சி சீதையைக் கொலைச் செய்தான் என்றால், நம் நிலை?...
குரல் :
ஆமாம்; நம்மையும் மாயத்தால் எதுவும் செய்துவிட்டால்?
குரல் :
ஏன் நமது மனம் இப்படிப் பேடிக் கொள்கிறது... போரிட மனம் மறுக்கிறதே...
குரல் :
எனக்கும் அப்படித்தான்!... நான் முகாமுக்குப் போகிறேன்...
குரல் :
நானும் முகாமுக்குத் திரும்புகிறேன்... உண்மையோ; பொய்யோ; சீதை என்பவளுக்காகவா நம்மையும் போரில் சிக்க வைத்தான் இராவணன்...
குரல் :
அதோ; நம்மைப் போல்தான் நமது வீரர்கள் பலர் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்... வாருங்கள் நாமும் போவோம்...
-திரை-
பாகம் : 3. காட்சி-40. மலைக்குகை.
இராமன்
பீடணன்
அநுமன்
சுக்ரீவன்
(பீடணனும், அநுமனும், சுக்ரீவனும் குதித்தோடி வரல்... இராமன், இரிசியமுகன் உள்ளிருந்து வெளிவரல்...)
பீடணன் :
வெற்றி... வெற்றி... வெற்றி...
இரிசியமுகன் :
வெற்றி... எமக்கு வெற்றியா?...
அநுமன் :
ஆமாம்!... போர்களக் காட்சியைக் கண்டோம்... வெற்றி எமக்கே!...
சுக்ரீவன் :
மாயா சீதை எமக்கு வெற்றித் தந்தாள்... சீதையை வெட்டினான் இராவணன் என்று மனம் நொந்து அரக்கர் படைத் திரும்பியது...
பீடணன் :
அதனை சாதகமாய்க் கொண்டு, எம் படை வீரர்கள் பாய்ந்து, அரக்கர் பலரை முதுகில் குத்திக் கொலை செய்தனர்... வெற்றி... எமக்கே வெற்றி!...
அநுமன் :
எதிர்ப் பாராத் தாக்குதலில், நிலைக் குலைந்துப் போயினர் அரக்கர்... அளவிட்டுச் சொல்ல இயலாது... அரக்கர் இன்று அநேகர் அழிந்தனர்... மாயா சீதை வாழ்க... இராமன்
பீடணன் }
சுக்ரீவன்}
வாழ்க!...
இராமன் :
இப்படித்தான் இனி நாம் இராவணனைப் போரில் வெற்றிக் கொள்ள முடியும்...
அநுமன் :
இராவணனே எதிர்ப் பார்த்திருக்க மாட்டான் ; இன்றையப் போரில் அவனுக்கு இழப்பு ஏற்படுமென்று...
இராமன் :
இன்றையப் போரில் அவன் அழிவு கண்டதால், நாளை அவன் மிகு சீற்றத்தோடுப் பாயக் கூடும்... அதனால், படைத் திறம் தெரிந்த சுக்ரீவன், அநுமன் நீவிர் இருவரும் நாளையப் போருக்கு தலைமை வகித்துச் செல்லுங்கள்...
அநுமன் :
இராமநாதா!...
இராமன் :
ஒப்புக்குப் போரில் நீங்கள் படை நடாத்திச் சென்றால் போதும்... போரிட எம்மிடம் ஆரியவீரர்கள்தான் அநேகர் இருக்கின்றனரே...
சுக்ரீவன் :
பீடணனை அனுப்பக் கூடாதா?...
இராமன் :
மறுநாள் பீடணன் செல்வான்...
சுக்ரீவன் :
நாளை அவன் போகட்டுமே...
இராமன் :
படை உதவிக் கேட்டு, குறுநில மன்னர்களிடம் பீடணன் செல்ல வேண்டியிருப்பதால், நாளை நீவிர் இருவரே செல்லுங்கள் ; போர்க்களத்துக்கு... ம்... இதுவே எனது இறுதிமொழி!... இலக்குவன் உயிர்த்தெழுந்து விட்டான்... எவர் கண்ணுக்கும் அவன் புலப்பாடாமல் களத்தில் நின்றுப் போர்ச் செய்வான்... ம்... புறப்படுங்கள்...
(போதல்)
-திரை-
பாகம் :3. காட்சி-41. மலைக்குகை.
இராமன்
இரிசியமுகன்
அனுமன்
(இரிசியமுகன் விழிமூடி அமர்ந்திருக்க, இராமன் அருகில் நடையிட்டு இருக்க, அநுமன் சோகம் கொண்டு தளர்ந்து வருதல்...)
இராமன் :
ஏன் அனுமா?
(வேதனையோடு அநுமன் பேசல்...)
அநுமன் :
தோல்விதான்!... தோல்வியிலும் தோல்வி... இதுப்போல் ஒரு தோல்வி இனி எமக்கு ஒருபோதும் நிகழாது... மரம்தான் பெயரும் என்றிருந்தேன்... வேரே பெயர்ந்தது... இன்ன விதமென்று இன்றுபட்ட தோல்வியை என்னவென்று சொல்வேன்?... எம் வீரர் மிதித்த மண்ணும் வெட்டுண்டது எனில், அரக்கரின் ஆவேசத்தை எப்படிக் கூறுவேன்?... நேற்று மாயா சீதைச் செய்து ஏமாறச் செய்தோம் அரக்கர்களை!... வாள்வீசி இன்றெம்மை அரக்கர் கதிகலங்கிடச் செய்தனர்... போரிலும், சூத்திரம் வகுத்திடும் அரக்கர்கள், ஆத்திரம் பொங்க, வேல் எறிந்தனர்... எறிந்த வேல், பொங்கும் கடலலையோ என எம்மை ஏமாறச் செய்தது... என் தொடையில் குத்தி நின்ற ஈட்டியைப் பிடுங்கும் போது, தோளில் வெட்டு விழுந்து மயங்கி விழுந்தேன்... எத்தனை ஆரிய வீரர்கள் செத்தனரோ?...
இராமன் :
ஆண்டவா!... இதென்ன சோதனை?
அநுமன் :
நான் வேதனையோடு புலம்புகிறேன்... நீ சோதனையென்று புலம்புகிறாய்?... நாம் இனிப் புலம்புவதற்குத்தான் ஆவோம்... இராவணனை இனி நம்மால் வெல்ல முடியாது... தோல்வியை நாம் ஒப்புக் கொண்டு தஞ்சமாய் அடிப்பணிவதே மேல்!...
இரிசியமுகன் :
அடேய் இராமா... அவன் கழுத்தை அறுத்தெறி!... ஆரியர்களா சரணடைவது? எங்கே சுக்ரீவன்!...
அநுமன் :
வேதனையோடு அனத்திக் கொண்டிருக்கிறான் பாசறையில்!... நடந்ததைக் கூறவே நானிங்கு வேதனையையும் பாராமல் வந்தேன்... என்னை இனி எதற்கும் அழைக்காதே!... போரில் வெற்றி, தோல்வியை நீயே நிர்ணயம் செய்துக் கொள்... காயம் பட்டு சபித்துக் கொண்டிருக்கிறது இரத்தம்... வலியின் வேதனையால் என் நெஞ்சமே துவண்டு விட்டது... அரக்கர் படைகளுக்கு இராவணன் அளித்தப் பயிற்சித்தான் என்ன?... அய்யோ வலிக்கிறதே...
இராமன் :
காயம் பட்டால் வலிக்காமல் என்னச் செய்யும்?... போரென்றால் நாலும் நடக்கும்... ஏன் கத்துகிறாய்?... மாண்டவனையும் உயிர்த்தெழச் செய்வேன் நானும்!... மாயத்தால் உன் புண்ணையும் குணமாக்குவேன்... புலம்பாதே!...
அநுமன் :
மாயத்தால் பிறகுச் செய்துக் கொள்ளலாம்... நான் சொல்லும் மூலிகையை புண்மீது சாறுபிழிந்து விடு!... புண் சீக்கிரமே குணமாகிவிடும்...
இரிசியமுகன் :
இராமா, பீடணன் எங்கே?
இராமன் :
படை திரட்டப் போயிருக்கிறான்...
இரிசியமுகன் :
சூத்திரன்கள் இவன்கள் எல்லாருமே, ஒதுங்கிக் கொண்டார்கள்... பீடணனும் படை திரட்டச் சென்று விட்டான்... நாளையப் போருக்கு யார் தலைமை வகிப்பது?...
இராமன் :
அனுமன்
அநுமன் :
அய்யோ என்னால் முடியாது...
இராமன் :
என்னச் செய்வது முனிவனே?...
இரிசியமுகன் :
எவன் இருக்கிறான் நம்மிடத்தில்?...
இராமன் :
எவனும் வேண்டாம்... சூத்திரன்களை நம்பி நாம் கெட்டோம்... போரிடத் தெரியாத இவன்களுக்கும் எதற்குப் பதவி ஆசை?... நானே தலைமை வகித்துப் போகிறேன்...இரிசியமுகன் :
இராமா!...
இராமன் :
அஞ்சாதே!... போர்களம்தான் போகிறேன்... போருக்கல்ல!...
இரிசியமுகன் :
என்ன நீ சொல்கிறாய்?...
களம் செல்வேன்... இராவணனுக்கு எதிரில் நிற்பேன்... போரென்று அவன் முழங்கிடும் நேரம், நானொன்று சொல்வேன்!... களம் நிற்பவன் கையில் கருவி இல்லையெனில், போர்ச் செய்வது தமிழர் மரபல்லவே!... கருவியின்றி களம் வந்துள்ளேன்... படையொடும், கருவியோடும் நாளை களம் வருவேன்... நீ இன்று போய் நாளை வா... நாளை நாம் செய்வோம் போர் என்பேன்...
இரிசியமுகன் :
நாளை என்ன செய்வாய்?...
இராமன் :
நாளை பீடணன் வந்து விடுவானே... படையும் வந்து விடுமே...
இரிசியமுகன் :
இன்னொருமுறைக் கூறு... நீ, இராவணனிடம் நாளை சொல்லவிருப்பதை?...
இராமன் :
இன்று போய் நாளை வா!
-திரை-
பாகம் : 3. காட்சி-42. பாசறை
இராவணன், வீரர் சிலர்.
இராவணன் :
இன்று போய் நாளை வா' வென்றான்... நாளை மட்டும் அவன் வென்றிடுவானா என்ன?... நமது வீரர்கள் ஓய்வுக் கொண்டிருக்கட்டும்... நாளை மீண்டும் சந்திப்போம்... நாளை எனக்கும், இராமனுக்கும் போர்... சென்று வருக வீரர்களே!...
(வீரர் செல்லல்)
-திரை-
* காட்சி 43 முதல் வேறு தொகுதியாக (பாகம் 43 முதல் நீயன்றோ அரக்கன்) வெளியிடுபட்டுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக