பொருட்பால் குறளும் - உரையும்

            பொருட்பால் 

அரசியல்                                                அதிகாரம் : 39.

                                 இறைமாட்சி 

படைகுடி கூழ்அமைச்சு  நட்பரண் ஆறும் 

உடையான் அரசருள்  ஏறு.                  -381.

தாய்நாட்டின் மீதுபற்றுதல்கொண்ட வீரமிக்கப்படை , தாய் மண்ணை நேசிக்கும் மக்கள், உணவு உற்பத்தியில் தனிப் பார்வை, மதிநுட்பம் வாய்ந்த அமைச்சர், நல்நெறிக்கூறும் அறிஞர் தொடர்பு மற்றும் நுட்பம் மிகுந்த பாதுகாப்பு அரண் ஆகிய ஆறும் கொண்டிருப்பான் ஆட்சியாளர்களில் சிறந்தோன் எனப்படுவான்...

* பார்ப்பனர் மட்டுமே அமைச்சராயிருத்தல் வேண்டும் என்று வள்ளுவன் கூறவில்லை... மேலும் வந்தேறிகள் மன்னவன் மீது நேசம் காட்டுவார்களேயன்றி மண்ணின் மீது நேசம் கொண்டிருக்கமாட்டார்...

                                  -----------------------------------------------------------------

அரசியல்                                      அரங்க கனகராசன் உரை.

அஞ்சாமை  ஈகை  அறிவூக்கம்  இந்நான்கும் 

எஞ்சாமை  வேந்தர்க்  கியல்பு.                  -382.

வீரம் கொண்டவனாக - எளியோருக்கு உதவும் குணம் கொண்டவனாக - பொதுவான அறிவுக் கொண்டு சீர்த்தூக்கி ஆயும்  சிந்தனையாளனாக - மனம் தளராத முயற்சி உடையவனாக - வேந்தன் இருக்க வேண்டும்... இந்நான்கும்  வேந்தனுக்குரிய இயல்பாகும்... 

*பார்ப்பனருக்கு மட்டுமே உதவி செய்து, தம் மக்களை கைவிட்ட வேந்தன் பின்னாளில் அரசையும் இழந்தான்... அடையாளத்தையும் இழந்தான்...

                            ------------------------------------------------------------------

தூங்காமை      கல்வி  துணிவுடைமை  இம்மூன்றும் 

நீங்கா  நிலனாள்  பவர்க்கு.                                        -383. 

விழிப்புணர்வு - கல்வியறிவு - துணிவு - இம்மூன்றும் நீங்காமல் நிலம் ஆள்பவன் காத்திட வேண்டும்...

*பார்ப்பனர் சொல் கேட்டு, தாய்மொழிக் கல்வியை ஒழித்தான்... பார்ப்பான் அவனது மொழியில் பயில கட்டமைப்பு செய்து கொடுத்தான்... சொந்த மக்களை கல்வியறிவு அற்றவர்காளாக ஆக்கினான்... துணிவுடன்  சிந்திக்காமல் பார்ப்பனரின் சொல் கேட்டு கைப்பாவையாக  விளங்கியதால் மன்னன் தன்னையிழந்து, தன் நாட்டையும் இழந்தான்...

                       ---------------------------------------------------------------------

அரசியல்                                     அரங்க கனகராசன் உரை.

அறனிழுக்கா  தல்லவை  நீக்கி  மறனிழுக்கா 

மானம்  உடைய  தரசு.                                    -384.

நீதி நெறியிலிருந்து வழுவாமல்தயக்கமின்றித் தீமைகளைக் களைய வேண்டும்... வீரத்துக்கு இழுக்கு ஏற்படாதவாறு தன்மானத்துடன் விளங்கவேண்டும்...  

இது ஓர் அரசின் அடிப்படை நெறியாகும்...

*குற்றம் புரிந்த பார்ப்பனனை தண்டிக்க தயக்கம் காட்டியது... போரை வீரத்துடன் எதிர் கொள்ளாமல், பாப்பனனின் சொல் கேட்டு வேள்வி யாகம் நடத்தி போரில் வென்று விடலாம் என்று ஏமாந்து, போரில் தோல்வியுற்று தன்மானம் இழந்தது... தமிழ் மன்னவர்களின் வீழ்ச்சிக்கு   ஏதுவாயிற்று...

                                 ------------------------------------------------------------------------------

இயற்றலும் ஈட்டலும்  காத்தலும் காத்த 

வகுத்தலும் வல்ல  தரசு.                     -385.

நாட்டு நலனை மையமாகக் கொண்டு தன் சொந்த முயற்சியில் நெறிகளை இயற்ற வேண்டும்... அரசு நியாயமான வழியில் வருவாயை ஈட்ட வேண்டும்... ஈட்டப்படும் வருவாயை சேதாரமின்றி, நாடும், மக்களும் பயனுறும் வகையில் செலவு செய்தல் வேண்டும்... அதுவே ஓர் அரசின் மேலாண்மை எனப்படும்...

*பார்ப்பனர் வகுத்த விதிகளின் படி அடிபணிவது, ... ஈட்டிய வருவாயை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இறைப்பது என்றிருந்தமையால் பாராண்ட தமிழரசின் பெரும் புகழும் காணாமல் போனது...

                                     -------------------------------------------------------------- 

காட்சிக்  கெளியன்  கடுஞ்சொல்லன்  அல்லனேல் 

மீக்கூறும்  மன்னன் நிலம்.                                      -386. 

எளிய மக்களும் எளிதில் தம்மை அணுகிடத் தக்க வகையில் மன்னன் விளங்க வேண்டும்... கடுஞ்சொற்களை பயன்படுத்தாத பண்பு வேந்தனிடம் வேண்டும்... இத்தகைய மன்னவனையும், அவன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தையும்  குடிமக்கள் மட்டுமன்றி, எல்லைக் கடந்தும் வாழ்வோர் புகழ்வர்...

*மன்னவனை எளிதில் அணுகவியலாதபடி பார்ப்பனனை வைத்திருப்பான்... இந்நாட்டுக் குடிகளை கடுஞ்சொல் கொண்டு பார்ப்பனன் ஏசும் மொழியில்  மன்னவன் மகிழ்வான்... இத்தகைய மன்னவனை குடிமக்கள் வெறுத்து, அயலவர் ஆதரவை நாடுவர்... 

                                -----------------------------------------------------------------------

அரசியல்                                                         அரங்க கனகராசன் உரை.

இன்சொலால்  ஈத்தளிக்க  வல்லார்க்கு  தன்சொலால்  

தான்கண்  டனைத்திவ் வுலகு.                                     -387.

இனிய சொற்கள் கொண்டு மக்களை ஈர்க்கும் குணமுள்ள மன்னவனெனில், மக்கள் இன்னல் நீங்கும் வண்ணம் திட்டங்கள் வகுத்து செயலாற்றும் மன்னவனெனில், மக்கள் மன்னவன் சொல்லுக்குக் கட்டுண்டு, நாட்டை முன்னேற்றும் பணியில் மன்னவனோடு மக்களும் இணைவர்... 

                          -----------------------------------------------------------------------------

முறைசெய்து  காப்பாற்றும்  மன்னவன் மக்கட்கு  

இறையென்று  வைக்கப் படும்.                           -388.

இறைவன் = காத்தல் செய்பவன், வாழ்வின் வழிகாட்டி.

வேண்டியவர், வேண்டாதவர் என பிரிக்காமல், எல்லாருக்கும் பொதுவாய் அரசாண்டு, நலத்திட்டங்கள் தீட்டி, மக்கள் வாழ்வை காப்பவன் எவனோ, அவனே மக்களின் இறைவன் அதாவது வாழ்வின் வழிகாட்டியாவான்...

*மன்னர்கள் பார்ப்பான் வழியாக இறைவனைத் தேடலாயினர் 

         --------------------------------------------------------------------------------------------

செவிகைப்பச்  சொற்பொறுக்கும்  பண்புடை  வேந்தன் 

கவிகைக்கீழ்த்  தங்கும்  உலகு.                                        -389.

அரசியலில் மாற்றுக் கருத்து  உடையோர், காதிரண்டும் புண்படும்படி கடுமொழிகள் பேசினாலும், சீற்றம்  கொள்ளாப் பண்பு  வேந்தனுக்கு  இருக்க வேண்டும்...

இத்தைகைய வேந்தனின் ஆட்சியின் கீழ்  வாழ்வதை மக்கள் உள்ளார்ந்து  விரும்புவர்...

                         ------------------------------------------------------------------------------------

கொடையளி    செங்கோல்  குடியோம்பல்  நான்கும் 

உடையானாம்  வேந்தர்க்  கொளி.                            -390.

எளியோரின் வாழ்வாதாரம் உயர, தகுந்த உதவியளித்தல் - எளியோரும்  எளிதில் சந்திக்க வகை செய்தல் - நீதி வழுவா ஆட்சித் தன்மை - குடிமக்கள் யாவருக்கும் வாழ்வுரிமை - ஆகிய இந்நான்கும் ஆட்சியாளனிடம் இருக்க வேண்டும்... அத்தகைய ஆட்சியாளன் ஏனைய ஆட்சியாளர்களைக் காட்டிலும்  புகழுடன் விளங்குவான்...

*பார்ப்பனருக்கு மட்டுமே அரசின் உதவி வழங்குதல் - எளியோர், வேந்தனை சந்திக்க விடாமல் பார்ப்பனன் இடையூறு விளைவித்தல் - பாப்பனர் தவறு செய்தாலும் தண்டிக்க மறுத்தல் - வாழும் உரிமையை பார்ப்பனனுக்கு மட்டும் வழங்குதல் போன்று ஆட்சி இருந்தமையால் தமிழ் மண் தமிழ் மக்களின் ஆதரவை இழந்தது...

                          ----------------------------------------------------------------------------

அரசியல்                                             அதிகாரம் : 40.

                                 கல்வி 

கற்க  கசடறக்  கற்பவை  கற்றபின் 

நிற்க  அதற்கு  தக.                          -391.

கற்றலை உணர்ந்து நன்கு உள் வாங்கல் வேண்டும்... கற்க வேண்டியதை பிழையின்றி முழுமையாக கற்க வேண்டும்...

கற்றபின், கற்று அறிந்ததை வாழ்வியலில் நிலைப்படுத்தி வாழவேண்டும்...

*ஆனால்; தமிழ் மண்ணில் பார்ப்பனருக்கு மட்டும் கல்வியுரிமை வழங்கப்பட்டது...

                              -------------------------------------------------------------------

எண்ணென்ப  ஏனை  எழுத்தென்ப  இவ்விரண்டும் 

கண்ணென்ப   வாழும்  உயிர்க்கு.                            -392.

கணக்கியல் மேலும்கலை, இலக்கியம், அறிவியல், தொழிற் நுட்பவியல் என வாழ்வியலுக்கு பயனுறும் எழுத்தியல் என இவ்விரண்டும் மானிடருக்கு இரு கண்களாகும்...

*மானிடர் வாழ்வுக்கு  எண்ணும், எழுத்தும் தேவையென வள்ளுவம் கூறுகிறது... பார்ப்பனனோ தன்னைத்  தவிர்ப் பிறர்  கற்றல் கூடாது என்பான்...

                                -----------------------------------------------------------------------------

கண்ணுடையர்  என்பவர்  கற்றோர்  முகத்திரண்டு 

புண்ணுடையர்  கல்லா  தவர்.                         -393.

பார்வைத்திறன் ஒருவனுக்கு உள்ளதா என்பதை எது கொண்டு கூறலாம்...  அவன் கல்விக் கற்றவன் எனில் அவனுக்கு பார்வைத்திறன் உண்டு எனலாம்... 

 ஒருவனுக்கு  கல்வியறிவு இல்லையெனில், அவனிடத்தில் முகத்தில் தெரிவது கண்கள் அல்ல... இரு புண் குழிகள் எனலாம்...

*பார்ப்பனர் திட்டமிட்டே இந்நாட்டு குடிகளை கல்வியறிவற்ற குருடர் ஆக்கினார்...

                  -----------------------------------------------------------------------------------------

உவப்பத்  தலைக்கூடி  உள்ளப் பிரிதல்

அனைத்தே  புலவர்  தொழில்.       -394.

தொலைவிலிருந்தும் வந்து கருத்தரங்கில் கூடும் அறிஞர் பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவும், புதியக் கருத்துக்களை அறிந்துக் கொள்ளவும் மனதில் ஆவல் கொண்டிருப்பர்...  கருத்தரங்கு நிறைவுற்று விடைப் பெறும் போது, எல்லார் நெஞ்சிலும் ஒருவித ஏக்கம் சூழும்... இது கல்வியாளரின் மன இயல்பே!... 

*மகிழ்வுடன் கூடுவர்... பிரிதல் போது ஏக்கம் கூடும்... இங்ஙனம் கல்வியாளரால்  நிரம்பியிருந்த தமிழ் மண், பார்ப்பனரின் சூது  நெஞ்சால் கல்வியை இழந்தது...   

                                      ----------------------------------------------------------------------

அரசியல்                                                                              திருக்குறள் உரை.

உடையார்முன்  இல்லார்போல்  ஏக்கற்றும்  கற்றார் 

கடையரே  கல்லா  தவர்.                             -395.

செல்வந்தர் முன் ஏழையர்  மிகப் பணிந்து  வாழ்வர்... ஆனால்; எளியக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் கல்வியில் ஏற்றம் பெற்றிருப்பின் அவனுள் தாழ்வு எண்ணம் எழாது... கல்லாதவன் பெருஞ்செல்வந்தனாயிருந்தாலும் கற்றார் முன் தாழ்ந்தவன் ஆவான்...

*ஆரிய சூழ்ச்சியை புறந்தள்ளி, கல்வியில் ஏற்றம் பெற்றோரும் உண்டு...

                            -----------------------------------------------------------------------------  

தொட்டனைத்தூறும்  மணற்கேணி  மாந்தர்க்கு 

கற்றனைத்  தூறும்  அறிவு.                                    -396.

நீர்வளம் இருப்பின் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும்... அதேபோல், நல்ல நூல்களை கற்கும் மக்களின் அறிவும் பெருகிக் கொண்டே இருக்கும்...

*மக்களை கல்வி கற்க விடாமல், தான் மட்டும் கற்றல் செய்த பார்ப்பனனின் அறிவு பெருகாதது ஏனெனில், அவனுடைய கல்வி முறை பகுத்தறிவின்பாற்பட்டு இன்மயால்  ஆகும்...

யாதானும்  நாடாமல்  ஊராமல்  என்னொருவன் 

சாந்துணையும்  கல்லாத  வாறு.                          -397.

கல்வித் தகுதிப் பெற்றிருப்பின் ஒருவன் எந்த நாட்டுக்கும், எந்த ஊருக்கும் சென்று பிழைக்க முடியும்... ஆயினும் ஏனோ, கல்வி கற்காமல், பலர் இறுதி வரைக்கும் வறுமையின் வலையில் விழுகின்றனரே...

*பார்ப்பனன் ஆட்சியாளரின் துணையோடு குடிமக்களை கல்விகற்க விடாமல், செய்கின்ற சதிச் செயலையும் முறியடித்து கல்வியை எவ்வகையிலேனும் கற்றிடல் வேண்டும் என்கிறான் வள்ளுவன்... அரசுக்குத் தெரியாமல் சில சான்றோர்களால் கல்வி கற்பித்தல்   நடைபெற்றிருக்கலாம்...

                 ------------------------------------------------------------------------------------

அரசியல்                                         அரங்க கனகராசன்  உரை.

ஒருமைக்கண்  தான்கற்ற  கல்வி  ஒருவற்கு 

எழுமையும்  ஏமாப் புடைத்து.                       -398. 

எழுமையும் = விழித்தெழுகிற ஒவ்வொரு கிழமையும்.

கல்வியை மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டால், ஒருவன் விழித்தெழுகிற ஒவ்வொரு நாளும் பெருமையுடைய நாளாகவே இருக்கும்...

*கல்லாதோரை இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்று பார்பனன் ஏமாற்றுவான்... எல்லா நாளும் ஒன்று போலவே சுழற்சிக்கு உரியது  என  கல்வியாளர் அறிவர்... 

எழுமை என்பதற்கு குறள் உரையாசிரியர் சிலர், ஏழுபிறப்பு என்கின்றனர்... மறுப்பிறவி என்பதே ஏமாற்று வேலையாகும்... இதில் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் நீடிக்கும் என்பது அறிவுக்கு ஒவ்வா கூற்றல்லவா...

                                         -----------------------------------------------------------------------

தாமின்  புறுவது  உலகின்  புறக்கண்டு 

காமுறுவர் கற்றறிந்  தார்.                -399.

தம்மை நல்ல நிலைக்கு உயர்த்தியக் கல்வியானது, பிறரையும் வளமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதைக் கண்ணுற்று, இன்புறுவர் கற்றோர்...

மேலும் மேலும் கல்வியின் பக்கம் அதிக சிந்தை செலுத்தி, வாழ்வில் சிறப்புப் பல காண்பர் கற்றோர்...

*கல்வியின் பலன் அறிந்தோர் பிறரையும் 'நன்கு படி' என்று ஊக்கம் கொடுத்து, அவர்களின் வாழ்வின் நிலையை உயர்த்தி இன்புறுவர்...

                                --------------------------------------------------------------------------------

கேடில்  விழுச்செல்வம்  கல்வி ஒருவற்கு 

மாடல்ல  மற்றை  யவை.                         -400.

                                     கேடில் = சிதைவுறாத 

                                      மாடு    = செல்வம்.

சிதைவுறாதப் பெருஞ்செல்வம் கல்வியாகும்... எவ்வொருவனுக்கும் கல்வியைத் தவிர வேறெதுவும் பெருஞ் செல்வமாகாது... 

*கல்வியின் மேன்மையை உணர்ந்த பார்ப்பனன் இந்நாட்டு குடிமக்களை கல்விக் கற்க விடாமல், கல்வியின் பலனை அவன் முழுமையாக நுகர வழிவகுத்தான்... "அவனது எண்ணத்திற்கு இரையாகாதீர்... எவ்வகையிலும் கற்றிடுக... கல்வியே செல்வமாகும்" என்கிறான் வள்ளுவன்...

                 --------------------------------------------------------------------------------   

அரசியல்                                                  அதிகாரம் : 41.

                                   கல்லாமை 

அரங்கின்றி வட்டாடி  யற்றே  நிரம்பிய 

நூலின்றிக்  கோட்டி கொளல்.        -401.

                                                     ஆடி = கூத்து.

பொருந்தாத இடத்தில பொருத்தமில்லாத விளையாட்டு  விளையாடினால், நகைப்புக்கு உள்ளாக நேரிடும்...

அதுப் போல; நூலறிவின்றி கற்றோர் குழுமியுள்ள அவையுள் புகுந்துப் பேசினால் நகைப்புக்கு உள்ளாக நேரிடும்...

*சூதும், பொறாமையும் நிரம்பிய பார்ப்பனனை வெல்ல கல்வி அறிவால் மட்டுமே இயலும்...

                            -------------------------------------------------------------------------------

   கல்லாதான்  சொற்கா  முறுதல்  முலையிரண்டும் 

இல்லாதாள்  பெண்காமுற்  றற்று.                         -402.

கல்வியறிவு அற்றவன் தன்னை கல்வியாளன் போலவும் - தான் அனைத்தும் அறிந்தவன் போலவும்கூறி, கல்வியாளர் குழுமியுள்ள அவையில் நுழைந்து உரையாற்ற முயன்றால், அவனது பொய்வேடம் வெளிப்பட்டுவிடும் அல்லவா...

அது எப்படிப் பட்டதெனில்?

பெண்மை சுரப்பிகள் நிகழ்த்தும் உணர்ச்சி மாறுபாடு உற்றோர், தன்னை பெண் போல் பாவித்தாலும்  அவர்களை ஆடவர் பெண்ணாக கொள்வதில்லை... மேலும் பெண்மை உணர்ச்சியை வெளிப்படுத்தினாலும் ஆடவர் மயங்குவதில்லையே என்பதால் மார்பில் முலையைப் போல் இயற்கைக்கு  முரணாக எதையேனும் பொருத்தி ஆடவரை மயக்க முற்றாலும் ஆடவர் ஏற்பதில்லை...    அதுபோல் கல்லாதவர் கற்றவர் போல் பேச முற்பட்டாலும் முரண்பாட்டினை கல்வியாளர் அறிந்து விடுவர்...

                        -------------------------------------------------------------------------------------------

கல்லா  தவரும்  நனிநல்லர்  கற்றார்முன்

சொல்லா  திருக்கப்  பெறின்.              -404.

                                      நனி  =  மிகவும்.

ஒரு வகையில் கல்லாதோரும் மிகவும் நல்லவர்களே... எவ்வாறெனில்; கற்றோர் முன்  பொருளற்றவைகளைப் பேசிடாதுகற்றோர் சொல்வதை அமைதியாக உள்வாங்கி இருப்பாரெனின்...

                                   -------------------------------------------------------------------------------

கல்லாதான்  ஒட்பம்  கழியநன்  றாயினும் 

கொள்ளார்  அறிவுடை  யார்.                     -404. 

கல்லாதான் அணுகுமுறை நன்றாக இருப்பினும், கல்வியறிவு இன்மையால், அவனை கல்வியறிவு பெற்றோனாக    உயர்வு செய்யார் அறிவுடை ஆன்றோர்...

                      -----------------------------------------------------------------------------------------

அரசியல்                                      அரங்க கனகராசன் உரை.

கல்லா  ஒருவன்  தகைமை  தலைப்பெய்து 

சொல்லாடச்  சோர்வு  படும்.              -    405.

                                       சோர்வு = இழுக்கு 

தனக்கு எல்லாமே தெரியும் என்ற மமதையுடன் கல்வியறிவுப் பெறாதவன், கற்றோர் முன்னிலையில் முந்திக் கொண்டு சொல்லாடினால், அவன் பேசும் பேச்சிலிருந்தே அவன் கல்வியறிவு பெறாதவன் என்பதைக் காட்டிவிடும்... அவனுக்கு இழுக்கை ஏற்படுத்தும்...

                               -----------------------------------------------------------------------------

உளரென்னும்  மாத்திரையர்  அல்லால்  பயவாக் 

களரணையர்  கல்லா  தவர்.                              -406.

                                                        களர்  =  சகதி.

உயிருடன் உலாவுகிறான் என்றுக் கூறலாமேயன்றி, எதற்கும் பயன்படாத சகதி நிலத்திற்கு ஒப்பாவான் கல்லாதவன்...

                         ----------------------------------------------------------------------------------

நுண்மாண்  நுழைபுலம்  இல்லான்  எழில்நலம் 

மண்மாண்  புனைபாவை  யற்று.                      -407.

பகுத்தறிவற்றவனின் உடல் அழகு மண் பொம்மைக்கு ஒப்பாகும்... மண் பொம்மையும் வடிவமைப்பில் அழகாக இருக்கும்... ஆனால்; சிந்திக்கும் திறன் இருக்காது... 

                     --------------------------------------------------------------------------------------

நல்லார்கண்  பட்ட  வறுமையின்  இன்னாதே      

கல்லார்கண்  பட்ட  திரு.                                  -408.

நல்லோரிடம்  நிலவும் வறுமையை விடக் கொடுமையானது எதுவெனில்?

கல்வியறிவு இல்லாதவனிடம் சேரும் செல்வம்...

*கல்வியறிவு இல்லாதவனிடம் சேரும் செல்வம் கெடுவழியில் செலவழிக்கப் படலாம்... தீமைகளின் கூறுகள் வந்தடையலாம்... கல்வியறிவு இன்மையால் செல்வத்தை பெருக ஆக்கத்தின் வழி புலப்படாது...

                          ---------------------------------------------------------------------------

அரசியல்                                                       அரங்க கனகராசன் உரை.

மேற்பிறந்தா  ராயினும்  கல்லாதார்  கீழ்ப்பிறந்தும் 

கற்றார்  அனைத்திலர்  பாடு.                                      -409.

செல்வந்தனாகவே இருப்பினும் - அல்லது தான் நெற்றியில் பிறந்ததாகக் கூறிக் கொள்பவனாகவே இருந்தாலும் - உலகியலுக்கு ஏற்பக் கல்வியைக் கல்லாதவன் எனில், சிறப்பற்றவனே!...

எளியக் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற போதிலும், அவன் கல்வியாளன் எனில், அவனே சிறப்புக்கு உரியவன் ஆவான்... பிறப்பால் பேதம் கானல் கூடாது...

                                --------------------------------------------------------------------------------  

விலங்கொடு  மக்கள்  அனையர்  இலங்குநூல் 

கற்றாரோடு  ஏனை  யவர்.                                  -410.

மாந்தர் உருவம் கொண்ட மிருகங்கள் என்று எவரைக் கூறலாம் எனில், அறிவியலுக்கு உகந்த நூல் கற்று, பகுத்தறிவோடு வாழ்வியலை அணுகுவோர் நீங்கலாக ஏனையோரை மிருகங்கள் எனலாம்...

*வேதம் கற்றுவிடுவதால் பார்ப்பனனை மானிடரோடு ஒப்பிடல் இயலாது... ஏனெனில் மூடக்கருத்துகள் கொண்ட வேதநூல்கள் பயின்று, மானிட இனத்தை இழிவுப்படுத்துதல் செய்வதால் பார்ப்பனன் மிருகமே!

                                -----------------------------------------------------------------------------------

அரசியல்                                                                                            அதிகாரம் : 42.

                                                         கேள்வி 

செல்வத்துள்  செல்வம்  செவிச்செல்வம்  அச்செல்வம் 

செல்வத்து  ளெல்லாந்  தலை.                                           -411.

கேட்கும் திறனும் செல்வமாகக் கருதப்படுகிறது... கேட்கும் திறனாகிய செல்வத்தை, பிற செல்வங்களோடு வரிசைப் படுத்தும் போது, செவிச் செல்வம் தலை சிறந்து விளங்குகிறது...

*கற்றல் என்பது செவிவழியாகவும் இருக்கலாம்... கல்வியறிவு இல்லையென்றாலும் செவிவழியே உள்வாங்கி வாழ்வியலை செம்மைப் படுத்தக் கூடும் என்பதால் கேட்கும் திறனும் செவிச் செல்வம் எனக் கருதப்படுகிறது...

                             -----------------------------------------------------------------------------------

செவிக்குண  வில்லாத  போழ்து  சிறுது 

வயிற்றுக்கும்  ஈயப்  படும்.                 -412.

உணவு  உடலுக்கு உரமூட்டுகிறது... செவி வழியே பெறும் உணவு என்பது நற்கருத்து கேட்டல் ஆகும்... செவிவழியே பெறும்  நல்கருத்துக்களை செவி  வழி உணவு என்கிறான் வள்ளுவன்...

நல் கருத்துகளை செவிவழியே பெறும் பொழுது  அறிவுத்திறன் கூடுகிறது... அறிவுத்திறன் வளரும்பொழுது வாழ்வியல் செம்மையாகிறது... ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் செவி வழி உணவுப் பெறுதல் நன்று... 

வயிற்றுப்பசி என்பது , வயிற்றின் நுண்புலம், பசியை நமக்கு உணர்த்தும்... பசியென்று உணர்த்துதல் அறியும்போது வயிற்றுக்கு உணவளித்தால் போதுமானது... மற்றப்படி, அறிவுத்திறன் பெருக செவிவழியை வாய்ப்புக்கிட்டும்போதெல்லாம் பயன்படுத்துக...

                               ----------------------------------------------------------------------------

 செவியுணவிற்  கேள்வி  யுடையோர்  அவியுணவின் 

ஆன்றாரோ  டொப்பர்  நிலத்து.                                     -413.

                                     அவி         = நெய் 

                                   ஆன்றோர் = மாட்சிமை உடையோர் 

செவி வழியே நல்கருத்துக்களை உண்டு அறிவுத்திறன் மேம்பாடு பெற்றோர் எவருக்கு இணையானவர் எனில்? உணவில் நெய்  சேர்த்து உண்ண அக்காலத்திலும் எளியோரால் இயலாது போலும்... செல்வந்தரின் உணவாக நெய் உணவு கருதப் படுகிறது... நெய் உணவை உட்கொள்ளும் செல்வந்தர்  மக்கள் மாட்சிமை உடையோராகப் பார்க்கப் பட்டனர்... நெய் உணவை உண்போர் மட்டுமல்ல, செவி உணவு உண்டு அறிவுப் பெற்றோரும் மாட்சிமை உடையோர் ஆவர்...     

*பார்ப்பனரும் நெய் உணவு உண்டிருக்கலாம்... ஏனெனில் பார்ப்பனன் சுரண்டல் பேர்வழியாவான்... நெய் உணவு உண்பதால் பார்ப்பனன் மாட்சிமை உடையோன் ஆகிட முடியாது... செவியுணவு உண்டேனும் அறிவுத் திறன் பெற்றோரே மாட்சிமைக்கு உரியர் ஆவர்...

                             -----------------------------------------------------------------------------------

அரசியல்                                          அரங்க கனகராசன் உரை.

கற்றில  னாயினும்  கேட்க  அஃதொருவற்கு 

ஒற்கத்தின்  ஊற்றாந்  துணை.                  -414.

கற்கவில்லையென்றாலும், கற்றவரிடத்தில் கேட்டுத் தெரிந்துக் கொள்ளல் வேண்டும்... கேட்டு, அறிவுத் திறன் வளர்த்துக் கொள்ளுதல் என்பது, ஊன்றுகோல் போல் உறுதுணை புரியும்...

                     ---------------------------------------------------------------------------------------------

இழுக்கல்  உடையுழி  ஊற்றுக்கோல்  அற்றே

ஒழுக்க  முடையார்வாய்ச்  சொல்.             -415.

வழுக்கல் ஏற்படுத்தும் நிலத்தில், காக்கும் ஊன்றுகோல் போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரை வாழ்வியலுக்கு உதவிடும்...

                                  --------------------------------------------------------------------

எனைத்தானும்  நல்லவை  கேட்க  அனைத்தானும் 

ஆன்ற  பெருமை  தரும்.                                                 -416.

எத்தருணத்திலும், எச்சூழலிலும் நல்லோரின் அறிவுரை மட்டும் கேட்டிடல் நன்று... நல்லோரின் அறிவுரைகள் நல்வழிப்படுத்துவதோடு, நற்பெருமையையும் தரும்...

                            ----------------------------------------------------------------------------

பிழைத்துணர்ந்தும்  பேதைமை  சொல்லார்  இழைத்துணர்ந் 

தீண்டிய  கேள்வி  யவர்.                                                                      -417.

           பிழைத்துணர்ந்தும் = பிழை எனத் தெரிந்தும்.

இது மூடத்தனம் மிக்கது என்று தெரிந்தே, மக்களிடையே மூடக்கருத்துகளைப் பரப்பி மக்களை அறியாமை எனும் இருளில் தள்ளிவிடுவோர் உண்டு... ஆனால்; பகுத்தறிவாளர் இத்தகைய மூடச்செயலில் ஈடுபடமாட்டர்... ஏனெனில்?

ஒன்றன் குறித்த கேள்வியை எழுப்பி, மிக நுட்பமாக தெளிவுப்  பெற்றப் பின்னரே மக்களிடத்தில் சேர்க்க வேண்டும் எனும் நுண்மதியாளர் கருதுவர்... 

*மக்கள் நலனில் அக்கறைக் கொள்வோர் தீமை பயக்கும் மூடக்கருத்துகளை சொல்லார்...

                     -------------------------------------------------------------------------------

கேட்பினும்  கேளாத்  தகையவே  கேள்வியால் 

தோட்கப்  படாத  செவி.                                        -418.

கேட்கும் திறனிருந்தும், காதிரண்டையும் செவிடு என்றே கூறலாம்... ஏனெனில்? ஆன்றோரின் பகுத்தறிவு முழக்கம் கேட்டும், மூடத்தனத்திலிருந்து விடுபடாமல், பழமையில் உழல்வோனின் செவியிரண்டையும் செவிடு என்றே கூறலாம்...

                                     --------------------------------------------------------------------------

அரசியல்                                         அரங்க கனகராசன் உரை.

நுணங்கிய  கேள்விய  ரல்லார்  வணங்கிய 

வாயின  ராதல் அரிது.                                  - 419.

ஆன்றோரின் நல்லுரையை உள்வாங்கி மனதில் நிலைநிறுத்த இயலாதவர்களால்-

பிழையின்றி - பண்புடன் - தெளிவுடன் - பேசுவதென்பது அரிதாகும்...

                            ------------------------------------------------------------------------------------

செவியிற்  சுவையுணரா  வாயுணர்வின்  மாக்கள் 

அவியினும்  வாழினும்  என்.                                   -420.

பகுத்தறிவாளரின் நல்லுரைக்கு செவி மடுக்காமல், உணவின் சுவைக்கு மயங்குவோரை அறிவிலிகள் என்றே கூறலாம்... இத்தகையோர்  வாழ்ந்தாலென்ன?... மடிந்தாலென்ன?...

*கொல்லாமைக் குறித்து ஆன்றோர் கூறும் பேச்சை செவிமடுக்காமல், வேள்வி எனும் பெயரில் மிருகங்களைக் கொன்று சுவைக்கும் பார்ப்பனன் வாழ்ந்தாலென்ன?... வதைப்பட்டாலென்ன?...

                              -----------------------------------------------------------------------------------   

அரசியல்                                                                   அதிகாரம் : 43.

                                    அறிவுடைமை 

அறிவற்றங்  காக்கும்  கருவி  செறுவார்க்கும் 

உள்ளழிக்க  லாகா  அரண்.                               -421.

அறிவென்பது  கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான ஆயுதமாகும்... அழிவிலிருந்துக் காப்பாற்றும் ஆற்றல் அறிவென்னும் ஆயுதத்திற்கு உண்டு... மேலும்; பகைவன் நண்பனைப் போல் உறவாடி வந்தாலும், அவனால் வெல்ல முடியாது... ஏனெனில் அறிவென்பது ஒருவருக்கு ஆயுதமாக மட்டுமல்ல; அரணாகவும் திகழ்கிறது....

*பகைவனின் குணத்தை, அறிவின் நுட்புணர்வு கண்டுப் பிடித்து விடும்...

                                  ------------------------------------------------------------------------------

சென்ற  இடத்தில்  செலவிடா  தீதொரீஇ

நன்றின்பால்  உய்ப்ப  தறிவு.               -422.

மனம் போகும்   போக்கில் போகிறவன்  பித்தனாவான்... மனம் போகும் போக்கில் போகவிடாமல், மானிடனை மானிடனாக வைத்திருப்பது எதுவெனில்? பகுத்தறிவாகும்...

'இது தீமையானது' - என்று மானிடருக்கு எச்சரிக்கை உணர்வை நல்குவதும் அறிவேயாகும்... நல்ல எண்ணம் - நல்ல செயல் - என நன்மையின் பக்கம் இட்டுச் செல்வதும் பகுத்தறிவாகும்...

                                   -------------------------------------------------------------------------- 

எப்பொருள்  யார்யார்வாய்க்  கேட்பினும்  அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பது  அறிவு.                               -423.

எத்தகையக் கருத்தை, எவர் சொன்னாலும், அதனை கேட்க நேர்ந்தால்- அக்கருத்துகளின் உண்மைத் தன்மையை ஆய்வது நல்லது... அதுவே பகுத்தறிவாகும்!

                      --------------------------------------------------------------------------------

எண்பொருள  வாகச்  செலச்சொல்லித்  தான்பிறர்வாய் 

நுண்பொருள்  காண்ப  தறிவு.                                          -424.

சொல்வதை பிறர் புரிந்துக் கொள்ளும் வண்ணம் நயமாகச் சொல்ல வேண்டும்... பிறர் கூறுவதையும் ஆழ்ந்து செவிமடுத்து, உண்மைத்  தன்மையைக் கண்டறிதல்  வேண்டும்... இது பகுத்தறிவின் பாற்பட்டச் செயலாகும்...

*பார்ப்பனன் தான் சொல்வதை, நம்ப வேண்டும்... சிந்தித்துப்பார்க்கக்கூடாது; எதிர்க்  கேள்விக்  கேட்கக் கூடாது என்பான்... *மனுநீதி.

                        --------------------------------------------------------------------------

அரசியல்                         அரங்க கனகராசன் உரை.

உலகம்  தழீஇய  தொட்பம்  மலர்தலும் 

கூம்பலும்  இல்ல  தறிவு.             -425.

                               மலர்தல் = அகலுதல் 

மாறிவரும் உலகின் போக்கினைப் புரிந்து, புதுமையை ஏற்றுக் கொள்வதே வாழ்விற்கு  அழகாகும்...

பழமைவாதம் பேசி, புதுமையை அகற்றுவதோ - கோபம் கொண்டு எதிர்ப்பதோ அறிவுள்ளச் செயலாகாது...

*பார்ப்பனன், வளர்ந்துவிட்ட அறிவியல் நுட்பத்தை ஏற்றுக் கொள்ளாமல் மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரம் பருக அனைத்து நோய்களும் தீரும் என்று மூடப் பழக்கத்தை மக்களிடையே திணிப்பான்...

                             -------------------------------------------------------------------------------

எவ்வ  துறைவது  உலகம்  உலகத்தோடு 

அவ்வ  துறைவது அறிவு.                    -426.

உலகம் புதுமையை நோக்கிப் பயணிக்கிறதெனில், உலகின் புதிய சிந்தனையை ஏற்று, புதுமையை நோக்கிப்பயணம் செய்வதே அறிவார்ந்தச் செயலாகும்...

*புதியக் கண்டுப் பிடிப்புகளை உலகம் தந்தால், அதனை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனன், அதனை ஒழுங்காக பராமரிப்புச் செய்தால்தான் அதன் பயன்பாடு சீராக அமையும் எனும் கருத்தை உதறிவிட்டு, எலுமிச்சைப் பழம் கொண்டு பூசிப்பான்... அதனால் என்ன பயன் என்று அவனே விளங்கிடாமல், பொருளற்ற பழமையில் திளைப்பான்...

                               -----------------------------------------------------------------------------

அறிவுடையார்  ஆவ  தறிவார்  அறிவிலார் 

அஃதறி  கல்லா  தவர்.                                -427.

ஒரு செயலைச் செய்ய முற்பட்டால், அதன் எதிர்விளைவு  எத்தகையதாக இருக்கும் என்பதை, முன்னரே ஊகிக்கும் திறன் உள்ளோர் அறிவுடையோர் ஆவர்...

ஆனால்; அத்தகைய நுண்ணறிவு அற்றவர்கள் பின்விளைவை சிந்தியாமல் செயல்படுவர்...

*ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாட்டுமூத்திரமே சகலத்திற்கும் தீர்வு என்றுக் கூறி ஏய்க்கும் பார்ப்பனன் சற்றும் பகுத்தறிவற்றவன் ஆவான்...

                               -------------------------------------------------------------------------

அரசியல்                                      அரங்க கனகராசன் உரை.

அஞ்சுவ  தஞ்சாமை  பேதைமை  அஞ்சுவது 

அஞ்சல்  அறிவார்  தொழில்.                     -428.

அஞ்சுவதற்கு அஞ்சாமல் திமிர்வாதம் பேசுவது அறிவின்மையாகும்... அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது கோழைத் தனமாகாது... அது அறிவுள்ளோரின் மதிநுட்பமாகும்...

*மேட்டிலிருந்து  பள்ளத்தை நோக்கி பாய்ந்து வரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி தடுப்பணைக் கட்டுவது கோழைத் தனமாகாது... 

வருண பகவான் எண்போனை யாசித்து யாகம் செய்து வெள்ளத்தை தடுக்கலாம்  என்று பார்ப்பனன் நூல்கள் கூறுகின்றன... இது பகுத்தறிவற்ற திமிர்வாதமாகும்...

                              ----------------------------------------------------------------------------    

எதிரதாக்  காக்கும் அறிவினார்க்  கில்லை 

அதிர  வருவதோர்  நோய்.                      -429.

தீமை ஏற்படக்கூடாது என்று விரும்புகிறவர், தீய செயலில் ஈடுபடலாகாது... தீமையில் சிக்காமல் தம்மைக்  காத்துக் கொள்கிறவர் அறிவுடையவர் ஆவர்... நுண்ணறிவு மிக்க இத்தகையோர், செய்யும் செயலால் நன்மை விளையுமா? தீமை விளையுமா என்று கணித்திடுவர்...அதனால்; சிக்கலில் சிக்கமாட்டர்...          

 மேலும்; தம் வாழ்வில் தூயவர்களாகத் திகழ்வதால், நெஞ்சில் பதற்றமின்றி அச்சமின்றி வாழ்வர்...

                               ---------------------------------------------------------------------------

அறிவுடையார்  எல்லாம்  உடையார்  அறிவிலார் 

என்னுடைய  ரேனும்  இலர்.                                -430.

அறிவுடையோர் தம் ஆற்றல் அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு சாதிப்பார்... அறிவற்றவன் முயற்சி தோல்வியைத் தழுவும்...

*கடவுளை வழிபட்டால், ஒரே நாழிகையில் செல்வம் குவியும் என்பர் அறிவற்றோர்... எத்தனை யாகம் செய்தாலும் அவர்களால் எதுவும் சாதிக்க இயலாது... 

                          ---------------------------------------------------------------------------------

அரசியல்                                                       அதிகாரம் : 44.

                               குற்றங்கடிதல் 

செருக்கும்  சினமும்  சிறுமையும்  இல்லார் 

பெருக்கம்  பெருமித  நீர்த்து.                    -431.

ஆணவம், கோபம், எளியோரை இழிவுச் செய்தல் என இம்மூன்று குணங்களும் இல்லாதார் புகழுடன் வாழ்வர்... இத்தகையவரின் நட்பு பெருமைக்குரியதாகும்... 

 *பார்ப்பனனிடம் இம்மூன்று குணங்களும் மிகுந்திருப்பதால் அவனோடு தொடர்புக் கொள்ளுதல் இழிவானதாகும்...

                              -------------------------------------------------------------------------------------

இவறலும்  மாண்பிறந்த  மானமும்  மாணா  

உவகையும்  ஏதம்  இறைக்கு.                    -432.

             மாண்பு இறந்த மானம் = நற்புகழைக் கெடுத்து

                                                               அவமானமுற்றோன் 

            மாணா உவகை               = அற்பத்தனமான மகிழ்ச்சி 

கஞ்சத்தனமும், நற்புகழைக் கெடுத்து அவமானம் அடைதலும், வீண் தற்பெருமையும்,  தலைவனுக்கு ஆகாது... பெருங்குற்றமாகும்... அழிவை உண்டாக்கும்...

                           -------------------------------------------------------------------------------------

தினைத்துணையாம்  குற்றம்  வரினும்  பனைத்துணையாக் 

கொள்வர்  பழிநாணு  வார்.                                                      -433.

மிகச்சிறிய தவறு என்ற போதிலும், செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்டதாக, மனதளவில் வேதனையுறுவோர் எவரெனில்?    

குற்றம் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும், வெட்கமும், மானமும் உடையோர்...

*பார்ப்பனன் குற்றங்கள் குறித்து கவலைக் கொள்வதில்லை... அவன் குற்றம் இழைத்தாலும் அரணாக மனுநீதி உள்ளது...

                             ---------------------------------------------------------------------

குற்றமே  காக்க  பொருளாகக்  குற்றமே 

அற்றம்  தரூஉம்  பகை.                       -434.

                                      அற்றம் = அழிவு.

ஒரு பொருளைப் பாதுகாப்பதுப் போல், குற்றம் ஏதும் நிகழ்ந்து விடாதபடி ஒழுக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்... ஏனெனில்? குற்றச் செயல் என்பது அழிவுண்டாக்கும் பகையைத் தரும்...

                          --------------------------------------------------------------------------------

அரசியல்                                                 அரங்க கனகராசன் உரை.

வருமுன்னர்  காவாதான்  வாழ்க்கை  எரிமுன்னர் 

வைத்தூறு  போலக்  கெடும்.                                 -435.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகா வண்ணம் வாழ்தல் வேண்டும்... நெருப்புத் தீண்டினால், வைக்கோல் சாம்பலாவதுப் போல், குற்றச் செயலுக்கு  உள்ளானவன்  தண்டனையில் இருந்துத் தப்பவியலாது...

                             ------------------------------------------------------------------------------

தன்குற்றம்  நீக்கிப்  பிறர்குற்றம்  காண்பிற்பின் 

என்குற்றம்  மாகும்  இறைக்கு.                        -436.

பொதுவாழ்வில் குற்றமற்றவனாய்த் திகழ வேண்டும்... இத்தகுதியோடு, பிறருடையக் குற்றத்தை ஆய்வதே முறையாகும்... இத்தகு நேர்மையுள்ளத் தலைவனை, எவரால் தவறாக மதிப்பீடுச் செய்யவியலும்...

                                  -----------------------------------------------------------------------------

செயற்பால  செய்யா  திவறியான்  செல்வம் 

உயற்பால  தன்றி  கெடும்.                          -437.

செய்ய வேண்டிய செலவினங்களைச் செய்யாமல் இருப்பது நல்லதல்ல... இது கஞ்சரின் குணமாகும்... கஞ்சனின் செல்வம் அவனுடைய பயன்பாட்டுக்கும் பயனற்றுப் போகும்...  

                                         ------------------------------------------------------------------------

பற்றுள்ளம்  என்னும்  இவறன்மை எற்றுள்ளும் 

எண்ணப்  படுவதொன்  றன்று.                         -438.

சேமிப்பு எனும் பேரில் மிகத் தேவையான செலவினங்களையும் செய்ய மறுப்பான் கஞ்சன்... கஞ்சனின் குணம் எதன் பொருட்டும் எவராலும் போற்றப்பட மாட்டாது...

------------------------------------------------------------------------------

வியவற்க  எஞ்ஞான்றும்  தன்னை  நயவற்க  

நன்றி  பயவா  வினை.                                   -439.

                                 நயவற்க = மனதாலும் நினையாதே.

தற்பெருமை வேண்டாம்... அதுப் போல தகாதச் செயலை மனதாலும் நினையாதே...

                             -------------------------------------------------------------------------------

காதல  காதல்  அறியாமை  உய்க்கின்பின் 

ஏதில  ஏதிலார்  நூல்.                              -440.

                                           நூல் = திட்டம்.

திட்டம் எதுவெனப் பிறர் அறிந்திட வாய்ப்புகள் ஏற்படுத்திவிடக் கூடாது... பிறர் அறியும்படியான  வாய்ப்புகள் அமைந்து விட்டால், திட்டத்தைக் கெடுக்க பகைவர் முனைவர்... பகைவர் வெல்ல வாய்ப்புக் கொடுக்காமல் திட்டம் வகுப்பது நன்று!....

                             ----------------------------------------------------------------------------

அரசியல்                                                                அதிகாரம் : 45.

                   பெரியாரைத் துணைக் கோடல்

அறனறிந்து  மூத்த அறிவுடையார்  கேண்மை 

திறனறிந்து  தேர்ந்து  கொளல்.                    -441.

நேர்மையான வழியைத் தேர்ந்தெடுத்து,   தகுதி வாய்ந்த மூத்த அறிஞர்களின் வழிகாட்டுதலையும், அவர்களின் ஆற்றலையும் துணைக் கொள்ள வேண்டும்...

                                -----------------------------------------------------------------------

 உற்றநோய்  நீக்கி  உறாமை  முற்காக்கும் 

பெற்றியார்ப்  பேணிக்  கொளல்.          -442.

நெருக்கடியிலிருந்து மீட்டு, வருமுன் காக்கும் நுண்மதியாளரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்க...

                          ------------------------------------------------------------------------------

அரியவற்று  ளெல்லாம்  அரிதே  பெரியாரைப் 

பேணித்  தமராக்  கொளல்.                             -443.

சிறப்புகளில் மிகமிகச் சிறப்பானது எதுவெனில்? அறிவிற் சிறந்த பெரியாரின் வழிகாட்டுதல் ஏற்று, அதனை தமது வாழ்வியலுக்கு உறுதுணையாக்கிக் கொள்ளல்  ஆகும்...

                            -----------------------------------------------------------------------------------

தம்மிற்  பெரியார்  தமரா   ஒழுகல் 

வன்மையு  ளெல்லாந்  தலை. -444.

அறிவிற் சிறந்தப் பெரியாரின் வழிகாட்டுதலை உறுதுணையாகக் கொண்டால், அதுவே பேராற்றல் கொண்ட செயலாகும்...

                               -------------------------------------------------------------------------

சூழ்வார்கண்  ணாக  ஒழுகலான்  மன்னவன் 

சூழ்வாரைச்  சூழ்ந்து  கொளல்.                   -445.

நேர்த்தியான வழிகாட்டுதல் செய்வோரை, மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்...  ஆட்சியாளனும், தனது நிர்வாகம் செம்மையுடன் செயல்பட தக்க ஆலோசகர்களை  அருகில் வைத்துக் கொள்வது நல்லது...

*பார்ப்பனன் வழிகாட்டுதல் எனும் பேரில் நாட்டில்,   மக்களை பேதம் படுத்தி குழப்பம் விளைவிப்பான்... ஆதலால்; பார்ப்பனனை தவிர, நேர்த்தியான வழிகாட்டுவோரை  ஆட்சியாளர் துணைக் கொள்வது நல்லது... 

                             ------------------------------------------------------------------------------

தக்கா  ரினத்தனாய்த்  தானொழுக  வல்லானைச் 

செற்றார்  செயக்கிடந்த  தில்.                              -446.

பேதம் படுத்தாத - நல்ல ஒழுக்கமுள்ளவனின் - ஆலோசனைக் கேட்டு, செயல்படும்  வல்லவனை, பகைவர்களாலும் வென்றிடல் இயலாது...

                                  --------------------------------------------------------------------------

இடிக்குந்  துணையாரை  ஆள்வாரை  யாரே 

கெடுக்குந்  தகைமை  யவர்.                       -447.

தவறுகளைச் சுட்டிக் காட்டும் நல்ல ஆலோசகரை அருகில் வைத்து, ஆட்சி செய்வோனை, எவரால் கெடுக்க வியலும்... கெடுக்குந் தகுதி எவருக்கு உண்டு?....

                               -------------------------------------------------------------------------------

இடிப்பாரை  இல்லாத  ஏமரா  மன்னன் 

கெடுப்ப  ரிலானுங்  கெடும்.             -448.

தவறுகளை சுட்டிக் காட்டத் தக்க ஆலோசகர் இல்லையெனில், ஆட்சியாளன் போக்கு சீர் கெடலாம்... அத்தகைய ஆட்சியாளனை அழித்திட, பகைவர் எவரும் வேண்டியதில்லை... தனது சீரற்ற நிர்வாகமே அவனை அழித்துவிடும்...

                                 ---------------------------------------------------------------------------

முதலிலார்க்கு  ஊதியம்  இல்லை  மதலையாம் 

சார்பிலார்க்கு  இல்லை  நிலை.                       -449.

                                          மதலை = தூண்.

வணிகம் செய்ய முதலீடு வேண்டும்... முதலீடு இல்லா வணிகத்தால் வருவாய் கிட்டாது... அது போல்ஆட்சியாளனுக்கு ஆலோசனை எனும் தூண் இருந்தால்தான், ஆட்சியெனும் மாடத்தை தாங்கிப் பிடிக்கவியலும்... 

தகுந்த ஆலோசகர் இல்லையெனில், ஆட்சி நிலைத்தத் தன்மையுடன் இருக்காது... கவிழ்ந்து விடும்...

*கெடுமதிக் கொண்ட பார்ப்பனன் சொல் கேட்டு ஆட்சியிழந்தனர் அரசர்...

                                ----------------------------------------------------------------------------  

பல்லார்  பகைகொளலிற்  பத்தடுத்த  தீமைத்தே 

நல்லார்  தொடர்கை  விடல்.                            -450.

அடுத்தடுத்து பகை பெருகினால், ஆபத்து  அதிகரிக்கும்... பத்து மடங்கு ஆபத்துத் தரக் கூடியச் செயல் எதுவெனில்? நல்ல ஆலோசனை வழங்கும் நல்லோரின் தொடர்பைத் துண்டித்து, தன்னலம் மிக்க ஆலோசகரை அருகில் வைத்திருந்தால் பத்துமடங்கு ஆபத்து சூழும்...

*நல் அமைச்சர்களை நீக்கிவிட்டு, தன்னலம் மிகுந்த பார்ப்பனனை ஆலோசகனாகக் கொண்ட மன்னவர்கள், பகைவர்கள் தரக்கூடிய தொல்லைகளைக் காட்டிலும் பன்மடங்கு துயரில் சிக்கி அரசை இழந்தனர்... பகைவனுக்குக் காட்டிக் கொடுத்து தன்னலம் வளர்த்துக் கொண்டான் பார்ப்பனன்...

                            ----------------------------------------------------------------------------------   

அரசியல்                                                            அதிகாரம் : 46.

                          சிற்றினம் சேராமை 

சிற்றினம்  அஞ்சும்  பெருமை  சிறுமைதான் 

சுற்றமாச்  சூழ்ந்து  விடும்.                             -451.

அறிவிற் சிறந்தோர், இழிகுணத்தாரோடு பழக மாட்டார்கள்; தீமை விளையும் என அஞ்சுவர்... ஆனால்; தீய சிந்தனை உடையோர், தீயோருடன் நெருங்கிப்பழகுவர்...

                              -----------------------------------------------------------------------------------

நிலத்தியல்பால்  நீர்திரிந்  தற்றாகும்  மாந்தர்க்கு 

இனத்தியல்ப  தாகும்  அறிவு.                                 -452.

வான்மழை விழும் இடத்தின் நிறமும் சுவையும் மழை நீரோடு கலந்து விடுகிறது... அதுப்போல எந்த குணத்தாரோடு சேர்கின்றனரோ, அக்குணத்தாரின் இயல்பு குணம் இவர்களோடு கலந்து விடும்...

                       -------------------------------------------------------------------------------

மனத்தானாம்  மாந்தர்க்  குணர்ச்சி  இனத்தானாம் 

இன்னான்  எனப்படுஞ்  சொல்.                                  -453.

மனதில் ஏற்படும் எண்ண அலைகளின் வெளிப்பாடே உணர்ச்சி எனப்படும்... எந்தக் கூட்டத்தினரோடு ஒருவன் நட்புக் கொண்டுள்ளானோ அக்கூட்டம் நல்லக் கூட்டம் எனில், அவனை நல்லவன் என்றும், தீயக் கூட்டம் எனில் தீயோன் என்றும் அடையாளமிடுவர்...

*மனம் மனிதனை வெளிப்படுத்தும்... இனம் (நல்ல இனம், தீய இனம்) இனத்தின் தன்மையை வெளிப்படுத்தும்...

                             --------------------------------------------------------------------------------

மனத்து  ளதுபோலக்  காட்டி  ஒருவற்கு 

இனத்துள  தாகும்  அறிவு.                     -454.

மேலோட்டமாகப் பார்க்கும் பட்சத்தில் உணர்ச்சிகளின் வெளிப்பாடு, தனி மனிதனின் எண்ண அலைகள் போல் தோன்றும்...      

உற்று நோக்குங்கால், அவ்வுணர்ச்சி, தனிப்பட்ட மனிதனின் வெளிப்பாடு அல்ல... அவன் சேர்ந்திருக்கும் இனத்தின் தாக்கம் என்பது புலனாகும்... 

                                  -----------------------------------------------------------------------------

மனத்தூய்மை  செய்வினை  தூய்மை  இரண்டும் 

இனந்தூய்மை தூவா  வரும்.                                 -455.

எண்ணமும் செயலும் தூய்மையாக இருக்க வேண்டுமெனில், தூய எண்ணம் கொண்டுள்ள குழுவினரோடு தொடர்புக் கொண்டிருக்க வேண்டும்...  

*பார்ப்பனன் கும்பலோடு தொடர்பு இருப்பின், மானிட நேயமற்ற குணமே தலையெடுக்கும்...

                                          -----------------------------------------------------------------

அரசியல்                                                          அரங்க கனகராசன் உரை.

மனந்தூயர்க்  கெச்சம்நன்  றாகும்  இனந்தூயார்க்கு 

இல்லைநன்  றாக  வினை.                                            -456.

தனியொரு மானிடன் தூயமனதுடன்  செயல்படுவதால், நற்புகழ் அவனையே  சேரும்... ஆனாலும்; தனித் தனியாக இயங்காமல், ஒருங்கிணைந்து ஒரே குழுவாக செயல்பட்டால் சாதிக்க இயலாதது என எதுவுமிராது...

*இவ்வொருங்கிணைப்பு பார்ப்பனரிடையே உள்ளது...

                                  --------------------------------------------------------------------------------- 

மனநலம்  மன்னுயிர்க்  காக்கம்  இனநலம் 

எல்லாப்  புகழும்  தரும்.                              -457.

தெளிவானச் சிந்தனை என்பது, உயிர் வாழ்தலுக்கு நன்மை பயக்கும்... இன ஒற்றுமை என்பது, பண்பியலையும், தொன்மையையும் வளர்க்கும்...

*பார்ப்பனரின் சூழ்ச்சியிலிருந்து விடுபட, இன ஒற்றுமை முக்கியமாகிறது...

                               ---------------------------------------------------------------------------------

மனநலம்  நன்குடைய  ராயினும் சான்றோர்க்கு 

இனநலம் ஏமாப்  புடைத்து.                                   -458. 

தூய சிந்தனை இருப்பின் தனிமனிதன் நன்மை அடைவான்... ஆயினும்; குறிப்பிட்ட எல்லைக்குள் மனிதன் தனது சிந்தனையை கட்டுப் படுத்தாமல், சக மனிதர் யாவரோடும் ஒற்றுமையாக வாழ்தலையே சான்றோர் விரும்புவர்...

மானிட இனத்திற்கு பாதுகாப்பானது எதுவெனில் இன ஒற்றுமையே ஆகும்...

                                --------------------------------------------------------------------------------

மனநலத்தின்  ஆகும்  மறுமைமற்  றஃதும்

இனநலத்தின்  ஏமாப்  புடைத்து.           -459.

                                மறுமை = மேலும், மீண்டும்.

நல்ல எண்ணமானதுநன்மையைத் தோற்றுவிக்கும்... மேலும் நல்ல எண்ணமானது, இனத்தார்   யாவரிடத்தும் இருக்குமேயானால், அந்த இனத்தை  மிகு பெருமைப் படுத்தும்... 

------------------------------------------------------------------------------

நல்லினத்தி  னூங்குந்  துணையில்லை  தீயினத்தின் 

அல்லல்  படுப்பதூஉம்  இல்.                                             -460.

நல்ல இனத்தோடு வாழ்கிறான் எனில், ஒருவனுக்கு இனம் போன்று நல்துணை ஏதுமில்லை... தீயோர்களால் தீமையே விளையும்... தீய இனத்தோடு வாழ்கிறான் எனில், அந்த இனம் போன்று அல்லல் தருவது வேறொன்றுமில்லை...

*பார்ப்பனன் தீமைப் புரிதல் ஒன்றையே நெறியாக இருக்கிறான்... நல்லவன் ஒருவன் எவனாவது அந்த இனத்தில் இருந்தால், அந்த இனத்தின் வினை அவனையும் தாக்கும்...

அரசியல்                                                                  அதிகாரம் : 47.

                                தெரிந்து  செயல்வகை 

அழிவதூஉம்  ஆவதூஉம்  ஆகி  வழிபயக்கும் 

ஊதியமும்  சூழ்ந்து  செயல்.                             -461.

அழிவையும் ஆக்கத்தையும் கருத்தில் கொண்டு கிடைக்கக்கூடிய நன்மையையும் கணக்கிட்டு - அறிந்து - செயலாற்றுக... 

*ஒன்றின் தொடக்கம் உடனடி பலன் கிட்டிவிடாது... சில இழப்புகளும் ஏற்படலாம்... சில நன்மைகளும் நிகழலாம்...

                        ------------------------------------------------------------------------------------

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச்  செய்வார்க்கு 

அரும்பொருள்  யாதொன்றும்  இல்.                             -462.

எது செய்வதாக இருந்தாலும், எவரோடு சேர்ந்து செய்யவேண்டும் என்பதை முன்னரே தெளிவுப் பெற்று ஈடுபாடு கொள்வோர்க்கு முடியாதது என எதுவுமிராது...

                           -----------------------------------------------------------------------------------

ஆக்கம்  கருதி  முதலிழக்கும்  செய்வினை 

ஊக்கார்  அறிவுடை யார்.                           -463.

அதிக வருவாய் கிட்டும் என ஆசைக்குட்பட்டு, போதிய தெளிவின்றி முதலீட்டை இழக்கும் செயலில் ஒரு போதும் ஈடுபடமாட்டர், சிந்தித்து செயலாற்றுவோர்...

                                          ---------------------------------------------------------------

தெளிவி  லதனைத்  தொடங்கார்  இளிவென்னும் 

ஏதப்பாடு  அஞ்சு  பவர்.                                                -464.

                                              ஏதம்     = குற்றம்.

                                               இளிவு = அருவருக்கத் தக்க 

சட்டதிற்குப் புறம்பானச் செயலில் ஈடுபட மாட்டாதவர்  எவரெனில்? இழிவுத் தரும் குற்றங்களைக் கண்டு இயல்பாகவே அஞ்சும் குணம் கொண்டோர்...

------------------------------------------------------------------------------------

வகையறச்  சூழா  தெழுதல்  பகைவரைப் 

பாத்திப்  படுப்பதோ  ராறு.                         -465.

                                   பகைவர் = போட்டியாளர்.

எது செய்வதாக இருந்தாலும், அதுகுறித்த ஞானம் வேண்டும்... ஞானமின்றித் தொடங்கப்படும் எதுவாயினும் தோல்வியில் முடியும்... எவ்வாறனில்? பாத்திக் கட்டி நீர்ப் பாய்ச்சி பயிர் வளர்த்தல் போல், நுட்பம் இன்றி செய்வதானது, எதிரி அல்லது போட்டியாளரை  நமது பாதையில் நுழைய வழிவகுத்துக் கொடுத்தது போலாகும்...

                 ----------------------------------------------------------------------------------------

அரசியல்                                   அரங்க கனகராசன் உரை.

செய்தக்க  அல்ல  செயக்கெடும் செய்தக்க 

செய்யாமை  யானும்  கெடும்.          -466.

செய்யக் கூடாததைச் செய்யக் கூடாது... மீறி செய்தாலும், முயற்சிப் பலன் தராது... பொருள், காலம், முதலீடு யாவும் விரயமாகும்...

செய்ய வேண்டியதை உரிய நேரத்தில் செய்ய வேண்டும்... செய்ய வேண்டியதை செய்யாது செய்யாது விட்டாலும்  பலன்  கிட்டாது...

                          --------------------------------------------------------------------------------

எண்ணித்  துணிக  கருமம்  துணிந்தபின் 

எண்ணுவம்  என்பது  இழுக்கு.              -467.

ஒரு செயலில் ஈடுபடு முன்னர், அச்செயல் குறித்து நன்கு சிந்திக்க வேண்டும்...  சிந்திக்காமல் ஈடுபட்டு, தோல்வியைத் தழுவியப்  பிறகு, சிந்திக்காமல் 'ஈடுபட்டோமே' என்று மனம் நோவது மடமை! இழிவு!...

                                  -------------------------------------------------------------------------------

ஆற்றின்  வருந்தா  வருத்தம்  பலர்நின்று 

போற்றினும்  பொத்துப்  படும்.               -468.

பலரால் பாராட்டப்படும் திட்டம் என்றாலும், சரியான செயல் வடிவம் இல்லை யெனில், விரைவிலேயே செயலற்றுப் போகும்... 

*செயல் வடிவம் இல்லையெனில், முயற்சி வீணாகும்...  

                       ------------------------------------------------------------------------------

நன்றுஆற்றல்  உள்ளும்  தவறுண்டு  அவர்அவர் 

பண்புஅறிந்து  ஆற்றாக்  கடை.                            -469.

நல்திட்டம் என்ற போதிலும், சில தருணங்களில் தவறானத் திட்டமாக மாறிவிடும்...

எவருக்கு எது வேண்டுமென்று அறிந்து, அவரவரின்   தன்மைக்கேற்பத்  திட்டம் தீட்டப்பட வேண்டும்... குளிர் நிலத்தில் வசிப்பவனுக்கு கம்பளி ஆடைத் திட்டம் பயனளிக்கும்...

மருத்துவரால் கணித்துப் போக்க வேண்டிய நோயை மாட்டு மூத்திரம் கொடுத்து போக்க முனைந்தால் நோயாளி பாதிக்கப்படுவான்...

                             ----------------------------------------------------------------------------------

எள்ளாத  எண்ணிச்  செயல்வேண்டும்  தம்மொடு 

கொள்ளாத  கொள்ளாது  உலகு.                           -470.

பிறரின்  இகழ்மொழிக்கு உள்ளாகா வண்ணம் திட்டமிடல் வேண்டும்... பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் உலகு ஏற்றுக் கொள்வதில்லை... 

*பீடித்த நோயை மருத்துவர் கொண்டு சரியாக்காமல், கற்சிலைக்கு விளக்கு ஏற்றினால் நோய் நீங்கும் எனில் உலகு எள்ளி நகையாடும்...

                         -----------------------------------------------------------------------------

அரசியல்                                                                     அதிகாரம் :48.

                                                 வலியறிதல் 

வினைவலியும்  தன்வலியும்  மாற்றான்  வலியும்

துணைவலியும்  தூக்கிச்  செயல்.                          -471.

எத்தகைய செயல் என்பதை வரையறுத்தல்  - செயல் செய்தற்கு போதியத் திறன் கொண்டிருத்தல் - செயலுக்கு எதிரானவர்  இருப்பின் அவர்களின் ஆற்றல் அறிந்திருத்தல் - ஆதரவு நிலையையும் ஆற்றலையும் தெரிந்திருத்தல் - என நான்கு வலிமையையும் துல்லியமாக சீர்த்  தூக்கித் திட்டமிடல் வேண்டும்...

                             --------------------------------------------------------------------------------------

ஒல்வ  தறிவது  அறிந்ததன்  கண்தங்கிச் 

செல்வார்க்குச்  செல்லாதது  இல்.     -472.

எதைச் செய்ய இயலும் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்... எதைச் செய்கிறோமோ  அது குறித்தான தரவுகளை துல்லியமாக தொகுத்துக் கொள்ள வேண்டும்... அதன் பின்னர் செயலில் ஈடுபட்டால் நிறைவேறாதது என்று ஏதுமிராது...

                         ---------------------------------------------------------------------------------------

உடைத்தம் வலியறியார்  ஊக்கத்தின்  ஊக்கி 

இடைக்கண்  முரிந்தார்  பலர்.                        -473.

தம் வலிமையை உணராமல், ஆர்வத்தின் உந்துதலில் தொடங்கிடுவர்... இவ்வண்னம் தொடங்கி,   இடையில் தோல்வியில் துவண்டோர்  பலருண்டு... 

                                       ----------------------------------------------------------------------------------

அமைந்தாங்  கொழுகான்  அளவறியான்  தன்னை 

வியந்தான்  விரைந்து  கெடும்.                                  -474.

கற்க வேண்டியதை கற்கவும் இல்லை... தனது தகுதியையும் உணரவும் மாட்டான்... ஆனால்; தன்னைப் பற்றி தானே பெருமிதம் கொண்டு - தன்னை ஒரு வல்லுனனாகக் கருதிக் கொள்வான்... மமதையோடு அவனால் செய்யப்படுவன யாவும் தோல்விக் கண்டு சரியும்...

                                 ---------------------------------------------------------------------------

பீலிபெய்  சாகாடும்  அச்சிறும்  அப்பண்டம் 

சால  மிகுத்துப்  பெயின்.                              -475.

மயில் தோகை மெல்லியது என்றாலும்தோகைகள்   அளவுக்கதிகமாகச் சுமை ஏற்றப்பட்டால், எடை தாங்காமல்,     வண்டியின் அச்சு முறியும்...

*மெல்லிய மயிலிறகிற்கும் எடையுண்டு... 

--------------------------------------------------------------------------------

அரசியல்                                                        திருக்குறள் உரை.

நுனிக்கொம்பர்  ஏறினார்  அஃதிறந்  தூக்கின் 

உயிர்க்கிறுதி  யாகி  விடும்.              -476.

மரத்தின் நுனி வரைக்கும் ஏற முற்பட்டால், கொம்பு முறிந்து ஒடிந்துவிடும்... ஏற முற்பட்டவனும் இறக்க நேரிடும்...

*செய்வதை அறிந்து - விளைவையும் உணர்ந்து ஆற்ற வேண்டும்...

                          -----------------------------------------------------------------------------------

ஆற்றின்  அளவுஅறிந்து  ஈக  அதுபொருள் 

போற்றி  வழங்கும்  நெறி.                          -477.

வருவாயின் அளவறிந்து உதவி செய்தல் வேண்டும்... அளவறிந்து உதவி செய்தல் என்பது, ஈட்டிய வருவாயை உணர்ந்துப் பார்த்தல் மட்டுமல்ல; உதவி செய்வதற்கான இலக்கணமாகவும் கருதப்படும்...

                             ------------------------------------------------------------------------

ஆகாறு  அளவிட்டி  தாயினும்  கேடில்லை 

போகாறு  அகலாக்  கடை.                          -478.

வருவாய் குறைவு என்ற போதிலும், வருவாய்க்கு மிஞ்சியச் செலவு செய்யாதிருத்தல் வேண்டும்...

                             -----------------------------------------------------------------------------

அளவறிந்து  வாழாதான்  வாழ்க்கை  உளபோல

இல்லாதாகித்  தோன்றாக்  கெடும்.                   -479.

வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ வேண்டும்... வரவுக்கு மிஞ்சாமல் வாழாதான் வாழ்க்கை, வளமான வாழ்க்கைப் போல் தோற்றமளித்தாலும், நாளடைவில் சிக்கல்களைத் தோற்றுவித்து, துன்பத்தாலும் துயரத்தாலும் அழியும்... 

*கணக்கிட்டு வாழ்தல் வேண்டும்... அல்லவெனில் வாழ்வுக் கானல் நீராகும்...

                                   -----------------------------------------------------------------------------

உளவரை  தூக்காத  ஒப்புர  வாண்மை 

வளவரை  வல்லைக்  கெடும்.         -480.

உள்ளதை கணக்கிட்டுச் செலவு செய்யாத பழக்கம் தவறானப் பழக்கமாகும்... இப்பழக்கம் பெருஞ்செல்வத்தையும் விரைவில் அழித்து விடும்...

                        ------------------------------------------------------------------------------------       

அரசியல்                                                                                         அதிகாரம் : 49.

                                                   காலம்  அறிதல் 

பகல்வெல்லும் கூகையைக்  காக்கை  இகல்வெல்லும் 

வேந்தர்க்கு  வேண்டும்  பொழுது.                                     -481.

                                   கூகை = கோட்டான் 

                                    இகல் = சூழ்ச்சி 

கோட்டானுக்கு பகலில் கண் தெரியாது... அதனால், காகம் கூகையை வென்றும் விடும் பகல் பொழுதில்... அரசனும் பகைவரை வென்றிட, தகுந்த காலத்தை  பயன்படுத்திட  வேண்டும்...

                                   ----------------------------------------------------------------------------

பருவத்தோடு  ஒட்ட  ஒழுகல்  திருவினைத் 

தீராமை  ஆர்க்கும்  கயிறு.                            482.

வாய்ப்பைப் பயன்படுத்தி, கடமையாற்றுதல் என்பது, நற்பெயரோடு  மேலும் மேலும் புகழ்க் குவிப்பதுப் போலாகும்...

                                 ---------------------------------------------------------------------------   

அருவினை  என்ப  உளவோ  கருவியான் 

காலம்  அறிந்து  செயின்.                          -483.

இயலாதச் செயல் என்று  ஏதேனும்  உண்டோ?... நெறியோடு திட்டம் வகுத்து, ஏற்ற சூழலியலையும் முறையோடு பயன்படுத்திக் கொண்டால், இயலாதச் செயலும் இயலாதோ?...

                              ----------------------------------------------------------------------------

ஞாலம்  கருதினும்  கைகூடும்  காலம் 

கருதி  இடத்தாற்  செயின்.                 -484.

கோள்கள்  யாவும் மானிடரின் அசைவுக்கு ஆட்படவேண்டும் என்று கருதினாலும், எண்ணம் கைகூடும்... காலம் கருதி, ஆய்வுத் திறனோடு இயங்கினால் வானமும் வசமாகும்...

*அறிவுத்திறன் கொண்டு, நிலவில் கால் பதித்துவிட்டது... செவ்வாயையும் தொட்டு விட்டது... பிற கோள்களின் உள்நிகழ்வுகளையும் உணரத்தொடங்கிவிட்டது அறிவியல் குழு!...

                              ----------------------------------------------------------------------------------------

அரசியல்                                  திருக்குறள் உரை.

காலம்  கருதி  இருப்பர்  கலங்காது 

ஞாலம்  கருது  பவர்.                     -485.

காலநிலையை  ஆய்வுக்கு உட்படுத்தி காத்திருப்பர்... மேலும் ஆய்வுப் பணியில் சோர்ந்து விடாமல், இடைவிடாத முயற்சியை   மேற்கொண்டிருப்பர்... கோள்களை ஆளுமை செய்ய எண்ணும் அறிவியலர்...

*ஒவ்வொரு கோள்களுக்கும் கடவுளின் இருப்பிடம் என்று பொய்மைக் கூறி சிந்தனையைக் கருவறுத்தான் பார்ப்பனன்.. அவன் கூற்றினை பொய்யாக்குகிறது அறிவியல் சிந்தனை...

                           ---------------------------------------------------------------------------

ஊக்க  முடையான்  ஒடுக்கம்  பொருதகர் 

தாக்கற்குப்  பேருந்  தகைத்து.               -486.

                          பொருதகர் = சண்டையிடும் ஆடு.

போர்க் கலையில் வல்லுநன்  என்போன், அமைதிக் காத்து, அடக்கமாக இருப்பதைப் பார்த்து, கோழை எனலாகாது... சண்டையிடும்  ஆடு, மோதுவதற்குமுன் சற்றே பின் நகர்ந்து, வேகமாகப் பாய்வதுப் போன்றதாகும், போராளியின் அடக்கம்...

*பார்பானனின் சூழ்ச்சிக் கண்டு பகுத்தறிவாளர்  அமைதிக் காக்கின்றனர் எனில், பார்ப்பனனை  வீழ்த்தும் தருணம் உண்டாக்குகின்றனர் என்பதாகும் பொருள்...

                                    -------------------------------------------------------------------------------------  

பொள்ளென  ஆங்கே  புறம்வேரார்  காலம்பார்த்து 

உள்வேர்ப்பர்  ஒள்ளி  யவர்.                                       -487.

                                  வேர்வு = சினம் 

பொலபொலவென - உடனடியாக - வெளிப்படையாக - கோபத்தை வெளிப் படுத்தாதவர் உண்டு...  காலம் கனியும்  வரும்வரை கோபத்தை உள்மனதில் ஒளித்து வைத்திருப்பர்...  ஏனெனில்உடனடி கோபமானது பகையை வளர்ப்பதோடு, அது சரியானத் தீர்வாகவும் அமையாது என்பதால்... அதற்கான காலம் வரும் வரை கோபத்தை உள்மனதில் ஒளித்து வைத்திருப்பர்...            

*அரசின் துணைக் கொண்டு, பார்ப்பனன் எளியோரை இழிவுப் படுத்துதல் செய்கிறான் என்பதற்காக அவன் மீது உடனடி கோபம் கொண்டால் அரசின் பகைக்கு உள்ளாக நேரிடும்... பார்ப்பனனின் இழிவைத் தகர்க்க, தகுந்த வலிமையை - துணையை -  அரசியல் ரீதியான உள்கட்டமைப்பை - வலுப்படுத்திக் கொண்டு - கோபத்தை வெளிப்படுத்தினால் சரியான தீர்வை எட்டலாம்...

                         --------------------------------------------------------------------------------------

அரசியல்                                             திருக்குறள் உரை.

செறுநரைக்  காணின்  சுமக்க  இறுவரை 

காணின் கிழக்காம்  தலை.                  - 488.

                   செறுதல்   = சினம் கொள்ளுதல்.

                   செறுநர்     = அகந்தையுடையோர்.

                   இறுவரை = அழியுங்காலம், அடிவாரம்.

அகம்பாவமும், அகந்தையும் அழிவின் கூறுகள்... இத்தகு குணமுடையோரின் அடாவடித்தனம் கண்டு மனம் குமுறல் கூடாது... எதற்கும் ஓர் எல்லை உண்டு... வெறித்தாண்டமாடுவோர் இறுதியில் மக்கள் முன்னிலையில் தலைக் குனிய நேரிடும்...

                             --------------------------------------------------------------------------------

எய்தற்  கரியது  இயைந்தக்கால்  அந்நிலையே 

செய்தற்  கரிய  செயல்.                                          -489.

தருணம் சரியெனில், காலம் தாழ்த்தாமல், உடனே ஆற்றலை வெளிப்படுத்திட வேண்டும்... 

                          -------------------------------------------------------------------------------------

கொக்கொக்க  கூம்பும்  பருவத்து  மற்றதன் 

குத்தொக்க  சீர்த்த  இடத்து.                          -490.

மீன் வரும்வரைக்கும் மிகப் பொறுமையாகக் காத்திருக்கும்  கொக்கு... மீன் தென்பட்டவுடன் சற்றும் நேரத்தை கழியவிடாமல், கொக்கு மீனைக் கொத்தி தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது... அதுப் போல , கிட்டும் வாய்ப்பை உடனே பயன் படுத்திட வேண்டும்...

                             ----------------------------------------------------------------------------------

அரசியல்                                                                             அதிகாரம் :50.

                                            இடன்  அறிதல்.

தொடங்கற்க  எவ்வினையும்  எள்ளற்க  முற்றும் 

இடங்கண்ட  பின்  அல்லது.                                     -491.

எதனையும் உடனே தொடங்குதல் கூடாது... முழுமையாகத் தெரியாமல் எதனையும் இகழவும் கூடாது... 

                               -------------------------------------------------------------------------------

முரண்சேர்ந்த  மொய்ம்பி  னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 

ஆக்கம்  பலவுந்  தரும்.                                                             -492.

                                                      முரண்      = மாறுபாடு.

                                                      மொய்ம்பு = வலிமை.

மாறுபட்ட பல்வேறு ஆயுதங்களும், வலுவானப் படைப்  பிரிவுகளும் இருந்தாலும், அரணும் இருப்பின் கூடுதல் பாதுகாப்பாக அமையும்...

                                   ----------------------------------------------------------------------

ஆற்றாரும்   ஆற்றி  அடுப  இடனறிந்து 

போற்றார்கண்  போற்றிச்  செயின். -493.

அதிநுட்ப  ஆயுதங்களும் குறைவு... படைவீரர்களும் எண்ணிக்கையில் குறைவு... ஆயினும்; போரில் வென்றுவிடக் கூடிய சாத்தியக் கூறு உண்டு... எவ்வாறெனில், எதிரி நாட்டவரின் குறைப்பாடு எதுவென அறிந்து, அதற்கேற்ப போர்முறை வகுத்திட வேண்டும்...

                      ----------------------------------------------------------------------------     

எண்ணியார்  எண்ணம்  இழப்பர்  இடனறிந்து 

துன்னியார்  துன்னிச்  செயின்.                         -494. 

தோல்வி என்பது எப்போதும் இனியில்லை என்று இறுமாப்புக் கொண்டோரின் எண்ணமும் நொறுங்கும்... இறுமாப்புடையோனது குறைப்பாடு எதுவென அறிந்து, அதனை ஆய்வுச் செய்து வகைப் படுத்தி, நுண்மையுடன் போர்த் தொடுத்தல், இறுமாப்புக் கொண்டோனின் எண்ணம் தவிடு பொடியாகும்...  

                                 -------------------------------------------------------------------------------

நெடும்புனலுள்  வெல்லும்  முதலை  அடும்புனலின் 

நீங்கின்  அதனைப்  பிற.                                                   -495. 

ஆழமான நீரில் வாழும் முதலை, வெல்லத்தையும் எளிதில் வென்றுவிடும்... அதே முதலை, நீரைவிட்டு நீங்கி வெளியே வந்தால், சிறு விலங்கிடமும் சீக்கிரம் தோற்று விடும்...

                               -------------------------------------------------------------------------------

அரசியல்                                              அரங்க கனகராசன் உரை.

கடலோடா  கால்வல்  நெடுந்தேர்  கடலோடும்  

நாவாயும்  ஓடா  நிலத்து.                                     -496.

மிகு வலுவான சக்கரங்கள் கொண்டது தேர்...  காணுந்தோறும் அதன் வேலைப்பாடு நெஞ்சையள்ளும்... நிலப்பரப்பில் ஓடக்கூடிய தேர்தனை  கடல்  மீதில் செலுத்த முடியுமோ... அதுப்போல; கடல் மீதில் பயணிக்கும் கப்பல் நிலமீதில் ஓடாது... 

                      --------------------------------------------------------------------------------------

அஞ்சாமை  அல்லால்  துணைவேண்டா  எஞ்சாமை 

எண்ணி  இடத்தாற்  செயின்.                                          -497.

அஞ்சாமை அதாவது, அச்சமற்ற  மன உறுதியே சிறந்த தோழமையாகும்... வேறு தோழமை வேண்டியதில்லை...  சிந்தனையில் சலனமின்மை மற்றும் தகுந்த சூழல் அறிதல் என   செயல்படுவோருக்கு, வேறுதுணை வேண்டாம்...

                           --------------------------------------------------------------------------

சிறுபடையான்  செல்லிடம்  சேரின்  உறுபடையான் 

ஊக்கம்  அழிந்து  விடும்.                                                -498.

எதிரியின் ஆற்றல் எத்தகையது,   குறைப்பாடுகள் என்ன என்றறிந்து, நேர்த்தியான விதிவகுத்து போர் தொடுத்தால் எதிரி பெரும்படையுடன் இருந்தாலும், நிலைக் குலைந்து அழிந்திடுவான்...

                   --------------------------------------------------------------------------------------

சிறைநலனும்  சீரும்  இலரெனினும்  மாந்தர் 

உறைநிலத்தோடு  ஒட்டல்  அரிது.             -499.

ஒருநாட்டினர் போதிய பாதுகாப்பு அரண் இன்றியும், படைப்பிரிவுகள் இன்றியும் இருப்பதால், அந்நாட்டை எளிதில் வென்று அதிகாரம்தனை செலுத்த முடியும் என்று எதிரி எண்ணுவானேயானால் அது தவறாகும்... மண்ணின் பரப்பை கைப்பற்றி விடலாம்... மக்கள் மனதை கைப்பற்ற இயலாது...  மண்ணின் மைந்தர்களின் ஒத்துழைப்பு இன்றி, அந்நியர் அரசோச்சுதல் எளிதானதல்ல...

*வெள்ளையன் கொடுத்த படைப்பிரிவைக்கொண்டு பார்ப்பனர் நாட்டை கைப்பற்றி ஆண்டாலும், மண்ணின் மைந்தர் பார்ப்பனரை அந்நியம் படுத்தியே இருப்பர்...

                                  -------------------------------------------------------------------------------------

காலாழ்  களரில்  நரியடும்  கண்ணஞ்சா 

வேலாள்  முகத்த  களிறு.                       -500.

ஆழமான சேற்றில் சிக்கிய யானையை சிறு நரியும் கொன்று விடும்...  பொதுவாக, யானையானது வீரம் மிக்கது... போர்க் களத்தில் வேலேந்தி வரும் அஞ்சா நெஞ்சரையும், துச்சமெனத் தூக்கி வீசி, தந்தத்தால் குத்திக் கொன்று விடும்... ஆயினும் இடத்தின் மாறுபாட்டால் சிறுநரியிடமும் சாக வேண்டிய நிலை யானைக்கும் ஏற்படும்...

*தந்திரத்தாலும், சூழ்ச்சியாலும் பார்ப்பனர் அதிகாரம் செலுத்தினாலும், விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படின் பார்ப்பனர் வீழ்வது உறுதி.

                        --------------------------------------------------------------------------------------

அரசியல்                                                               அதிகாரம் : 51.

                               தெரிந்து  தெளிதல் 

அறம்பொருள் இன்பம்  உயிரச்சம்  நான்கின் 

திறம்தெரிந்து  தேறப்  படும்.                          -501.

நடத்தையில் ஒழுக்கம் உள்ளவனா? பொருள் மீது பேராசையற்றவனா? உண்மையில் முகத்தில் மலர்ச்சி உடையவனா? உயிருக்கு அஞ்சி, காட்டிக் கொடுக்கும் குணம் மிக்கவனா என நான்கு வகையிலும் ஆய்ந்து ஒருவனை  உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்...   

                                          --------------------------------------------------------------------

குடிப்பிறந்து  குற்றத்தின்  நீங்கி  வடுப்பரியும் 

நாணுடையான்  கட்டே  தெளிவு.                  -502.

ஒழுக்கம் வாய்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும், ஒருவர்  குற்றச் செயல்களில் பதிவாகாதவராகவும் இருக்க வேண்டும்... மேலும்; தீமை ஏதும் செய்து விட்டால், பழிச்சொல்லுக்கு உள்ளாக நேரிடும் என்று பழிக் கண்டு வெட்கம் படுபவராகவும் இருத்தல் வேண்டும்...  ஒருவரைத் தேர்வு தேர்வுச் செய்யும் போது, இவற்றை பார்வையில் கொள்ள வேண்டும்...

*பார்ப்பனன் என்பதால் அவனை நம்பி தெரிவு செய்துவிடக் கூடாது...

                                      -------------------------------------------------------------------------------

அரியகற்று  ஆசற்றார்  கண்ணும் தெரியுங்கால் 

இன்மை  அரிதே  வெளிறு.                                     -503.   

சிறந்த நூல்கள் பலக் கற்று, குறைவில்லாத கல்வித் தகுதிப் பெற்றிருப்பினும், அவருடைய பொது அறிவுத் திறன் குறித்து ஆய்வுச் செய்திடல் வேண்டும்... ஆய்வு செய்தால், அவருள் இருக்கும் அறியாமை எதுவென அறிய இயலும்...

*நூல் பல கற்றிருப்பான்... ஆனால்மூடஎண்ணத்தில் மூழ்கி புதிய சிந்தனையை ஏற்றுக் கொள்ள மறுப்பான்... பழமையில் ஊறி, மானிடர் யாவருக்குமான சமநிலையை மறுப்பான்... ஆதலால்; கற்றவனாயிருந்தாலும், பொது மனநிலையை அறிய வேண்டும்...

                              ------------------------------------------------------------------------------

குணம்நாடிக்  குற்றமும்  நாடி  அவற்றுள் 

மிகைநாடி  மிக்க  கொளல்.                   -504.

ஒருவரிடத்தில் உள்ள நல்ல குணங்களைக் கண்டறிவதோடு, குற்ற உணர்வு களையும் காணல் வேண்டும்... இவ்விரண்டில் மிகுதி  எதுவெனப் பகுத்து, அதனடிப்படையில் தேர்வுச் செய்தல் வேண்டும்...

                       -------------------------------------------------------------------------------

அரசியல்                                         அரங்க கனகராசன் உரை.

பெருமைக்கும்  ஏனைச்  சிறுமைக்கும்  தத்தம் 

கருமமே  கட்டளைக்  கல்.                                  -505.

புகழ்ச்சிக்குரியதா? இகழ்ச்சிக்குரியதா? என்பது அவரவர் செய்யும் செயல்களே உரைகல்லாக விளங்குகிறது...

                         --------------------------------------------------------------------------------------

அற்றாரைத்  தேறுதல்  ஓம்புக  மற்றவர் 

பற்றிலர்  நாணார்  பழி.                          -506.

பேராசை அற்றவர்களிடத்தில்  தெளிவுக் கொள்ள வேண்டும்... பேராசையுள்ளோர்  மக்கள் நலன் குறித்து அக்கறை அற்றவர் ஆவர்... இத்தகையோர் இழிவானச் செயல்களில் ஈடுபடத் தயங்க மாட்டர்... பழிக்கும் அஞ்சமாட்டர்...

                                ------------------------------------------------------------------------------

காதன்மை  கந்தா  அறிவறியார்த் தேறுதல் 

பேதைமை  யெல்லாம்  தரும்.                    -507.

போதியத் தகுதியற்ற ஒருவரை, தனிப்பட்ட அன்பின் பொருட்டு, தேர்வுச் செய்வது அல்லது அவரிடத்தில் பொறுப்பு ஒப்படைப்பது அறியாமையாகும்... அறியாமையால், இடர்கள் அதிகரிக்கும்...

                           --------------------------------------------------------------------------------     

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை 

தீரா  இடும்பை  தரும்.                                        -508.

ஒன்றன் குறித்த தெளிவு இல்லையெனில், ஈடுபடக் கூடாது... அதுவும், பிறனை நம்பி ஈடுபாடு செய்தல் கூடாது...  இந்நியதியை மீறினால், எல்லையற்ற தொல்லைகள் தொடரும்..

                        ------------------------------------------------------------------------------

தேறற்க  யாரையும்  தேராது  தேர்ந்தபின் 

தேறுக  தேறும்  பொருள்.                         -509.

ஒருவரை முழுமையாக  அறியாமல், அவர் குறித்த மதிப்பீடு செய்தல் கூடாது... தகுதியை வளர்த்துக் கொண்டு, தெரிவுச் செய்ய வேண்டியதை தெரிவு தெரிவு செய்தல் வேண்டும்...

                       ------------------------------------------------------------------------------------

தேரான்  தெளிவும்  தெளிந்தான்கண்  ஐயுறவும் 

தீரா  இடும்பை  தரும்.                                              -510.

தகுதியற்றவனை அல்லது முழுதாக ஒருவன் குறித்த ஏதும் தெரியாத நிலையில் நம்புவதும், தகுதியுடையவனை  அல்லது முழுதாக அறியப் பட்டவனை  அய்யம் கொள்வதும் பல இன்னல்களைத் தோற்றுவிக்கும்...

                             --------------------------------------------------------------------------------------

அரசியல்                                                           அதிகாரம் : 52. 

                          தெரிந்து  வினையாடல்.

நன்மையும்  தீமையும்  நாடி  நலம்புரிந்த 

தன்மையான்  ஆளப்  படும்.         -511.

நன்மை எது? தீமை எது? என தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும்... தீமையை நீக்கி, நன்மையானதை மட்டும் மேற்கொள்ளல் வேண்டும்... 

                               ------------------------------------------------------------------------------

வாரி  பெருக்கி  வளம்படுத்து  உற்றவை 

ஆராய்வான்  செய்க  வினை.              -512.

மேலும், மேலும் வருவாயைப் பெருக்கி, ஈட்டப்பட்ட வருவாயை விரயமாக்காமல், வளம் படுத்தும் வகையை தெரிந்தவனெனில், அவனோடு நம்பிக்கையுடன் செயலாற்றலாம்...

                               --------------------------------------------------------------------------------

அன்பறிவு  தேற்றம்  அவாவின்மை  இந்நான்கும் 

நன்குடையான்  கட்டே  தெளிவு.                           -513.

அன்பில் சிறந்தும், அறிவில் உயர்ந்தும், பிறர் மீதானக் கணிப்பில் தெளிவும், மற்றும் பேராசை அற்றும்  என இந்நான்கு குணங்களிலும் ஓங்கியவனை தேர்வு செய்தல் வேண்டும்... 

*இந்நான்கு குணங்களும் இன வெறியன் பார்ப்பனனுக்கு கிடையாது...

                                    --------------------------------------------------------------------

எனைவகையான்  தேறியக்  கண்ணும்  வினைவகையான் 

வேறாகும்   மாந்தர்  பலர்.                                                              -514.

பல கோணங்களில் சோதித்து, தேர்வு செய்த போதிலும், செயல் படும் போக்கில் மாறுபடும் மானிடர் பலருண்டு...

*குணத்தால் ஒன்றுப் படினும், செயல்பாட்டில் மாறுபடும் மாந்தர் பலருண்டு... அதாவது, தமது அன்பை வெளிப்படுத்தும் தன்மையில் சிலர் நெகிழ்ச்சியைக் காட்டுவர்...  சிலர் பொருள் கொடுத்து அன்பு குணத்தை வெளிப்படுத்துவர்...

                        -------------------------------------------------------------------------------------------

அறிந்தாற்றிச்  செய்கிற்பாற்கு  அல்லால்  வினைதான் 

சிறந்தானென்று  ஏவற்பாற்  றன்று.                                -515.

தொழிலை நன்கு அறிந்தவனிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்...  அல்லாமல்; மிகு நம்பிக்கைக்கு உரியவன் என்பதற்காக ஒருவனிடம் அவனறியாத பொறுப்பை ஒப்படைப்பது நல்லதல்ல!...

*வடமொழியில் புலமை மிக்க பார்ப்பனனுக்கு  அறிவியல் குறித்து ஏதும் அறிவு  இருக்காது... அவனிடம் அறிவியல் குறித்த பொறுப்பை ஒப்படைப்பது சீர்குலைவை ஏற்படுத்தும்...

                            ------------------------------------------------------------------------------

அரசியல்                                                   திருக்குறள் உரை.

செய்வானை  நாடி  வினைநாடிக்  காலத்தோடு 

எய்த  உணர்ந்து  செயல்.                                      -516.

தகுதியானவரை அமர்த்தி, தொழிலின் தன்மையை மனதில் கொண்டு, உரிய நேரத்தில் உற்பத்திச் செய்து, உரிய நேரத்தில் விற்பனைக்கு அனுப்ப  வேண்டும்... ஆதலால் முன் திட்டமிடல் நன்று.

இதனை  இதனால்  இவன்முடிக்கும்  என்றாய்ந்து 

அதனை  அவன்கண்  விடல்.                                    -517.

தொழில் நுட்பவியலாரால் மட்டுமே இப்பணியை ஆற்ற இயலும்  எனில், அதற்கான தொழில் நுட்பவியலாரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்...

                       ------------------------------------------------------------------------------------

வினைக்குரிமை  நாடிய  பின்றை  அவனை 

அதற்குரிய  னாகச்  செயல்.                         -518.

தொழில் நுட்பவியலாரா என உறுதிப்படுத்தியப் பின்னர், அத்தொழில் செய்ய தக்காரை நியமிக்க வேண்டும்...

                       ----------------------------------------------------------------------------------  

வினைக்கண்  வினையுடையான்  கேண்மைவே றாக 

நினைப்பானை  நீங்கும்  திரு.                                           -519.

தொழில் வேறு, உழைப்பவன் வேறு என்று வகைப்படுத்துதல் கூடாது... உழைப்பாளியை தாழ்வாக எண்ணம் கொள்ளல் கூடாது... இவன் தனது வேலைக்காரன்தானே என தாழ்வு படுத்தினால், தன்மீதான நன்மதிப்பு நீங்கும்... உழைப்பாளியின் ஒத்துழைப்பு இன்றி ஆக்கம் பெருகாது...

                              --------------------------------------------------------------------

நாடோறும்  நாடுக  மன்னன்  வினைசெய்வான் 

கோடாமை  கோடா  துலகு.                                 -520.

ஆட்சியாளர் நாள்தோறும் நாட்டின் நிலையை அறிந்திட வேண்டும்... அதுவும் உழைப்பாளியின் வாழ்க்கை நிலை தாழாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்... உழைப்பாளியின்  உயர்வு  நாட்டின் உயர்வாகும்...

*உழைப்பாளியின் வருவாய் நாட்டின் வருவாயை உயர்த்தும்...

                             ----------------------------------------------------------------------------------------

அரசியல்                                                        அதிகாரம் :53.

                                     சுற்றந் தழால் 

பற்றற்ற  கண்ணும்  பழமைபா  ராட்டுதல் 

சுற்றத்தார்  கண்ணே  யுள.                      -521.

வறுமைக் காலத்திலும், உறவினர்களைப் பேணுங்கடமை உறவினர்களுக்கு உண்டு...

                            ---------------------------------------------------------------------------------------

விருப்பறாச்  சுற்றம்  இயையின்  அருப்பறா 

ஆக்கம்  பலவுந்  தரும்.                                   -522.

                            அருப்பறா  = பாதிப்பு  ஏற்படாத 

மனக்கசப்பு  நேராவண்ணம், உறவினர்களோடு நட்பு கொண்டால், உறவில் விரிசல் ஏற்படாது... மேலும் இதனால் நன்மையே விளையும்... 

                           --------------------------------------------------------------------------------------

அளவளா  வில்லாதான்  வாழ்க்கை  குளவளாக் 

கோடின்றி  நீர்நிறைந்  தற்று.                               - 523.

இணக்கமாக - வெளிப்படையாக - அன்புடன் பேசிப் பழகாதவன் வாழ்க்கை, கரையில்லாத குளம் நோக்கி   நீர்ப் பாய்வதுப் போலாகும்...   

*கரையில்லாத குளத்தில் நீர்த் தங்காது... அன்பிலாதவனிடம் உறவுத் தங்காது...

                             -----------------------------------------------------------------------------

சுற்றத்தால்  சுற்றப்  படஒழுகல் செல்வந்தான்  

பெற்றத்தால்  பெற்ற  பயன்.                               -524.

இன்பம், துன்பங்களில் உறவினர்களோடு  பங்குக் கொண்டு வாழ்தல், துய்ப்பதற்காக ஈட்டப்பட்டச் செல்வத்தை, சரியான வழியில் பயன்படுத்துவது போலாகும்...

                      ------------------------------------------------------------------------------------

கொடுத்தலும்  இன்சொலும்  ஆற்றின்  அடுக்கிய 

சுற்றத்தால் சுற்றப் படும்.                                          -525.

துன்பம் படுவோருக்கு உதவுதல் வேண்டும்... ஆறுதல் மொழியை தன்னம்பிக்கை மலர - இதமாக - சொல்ல வேண்டும்... இத்தகைய குணம் உள்ளவர்ளை உறவினர் மகிழ்வோடு அணுகுவர்...

                           --------------------------------------------------------------------------------

பெருங்கொடையான்  பேணான்  வெகுளி  அவனின் 

மருங்குடையார்  மாநிலத்து  இல்.                            -526.

வாரி வழங்குவதுடன், எவரிடமும் கோபம் கொள்ளாதவன் எவனோ, அவனுக்கு ஒப்பான புகழுக்குரியோர் இப்பெருநிலத்தில் எங்கும் எவரும் இலர்.   

                          --------------------------------------------------------------------------------

அரசியல்                                                         திருக்குறள் உரை.

காக்கை  கரவா  கரைந்துண்ணும்  ஆக்கமும் 

அன்னநீ  ரார்க்கே  உள.                                      -527.

உணவைப் பார்த்த மாத்திரத்தில், எந்தவொரு காக்கையும் தான் மட்டும் தூக்கிச் சென்று, மறைத்து வைத்து உண்ணாது... அனைத்து காக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து உண்ணும்...  காக்கையின் இக்குணம் எல்லாராலும் பாராட்டப் படுகிறது... 

மானிடரிலும் பாராட்டுதலுக்கு உள்ளாவோர்  உண்டு.. அவர் எவரெனில்?

உணவை பகிர்ந்தளித்து உண்ணும் பழக்கம் கொண்டோர் அனைவராலும் பாராட்டப் படுவர்...   

                             --------------------------------------------------------------------------------------

பொதுநோக்கான்  வேந்தன்  வரிசையா  நோக்கின் 

அதுநோக்கி  வாழ்வார்  பலர்.                                    -528.

எல்லாருக்கும்  உதவிச் செய்து வாழ்தல் என்பது நற்பண்பாகும்... எனினும்; உண்மையாகவே, உதவித்  தேவைப் படாதவருக்கும், உதவி செய்தலில் நன்மையின் நோக்கம் கெடுகிறது... வறியவர்களையும், எளியவர்களையும் இனம் கண்டு ஆட்சியாளன் உதவி வழங்க வேண்டும்...

ஆட்சியாளனின் இந்த நெறியைப் பின்பற்றி, பலர்  வறியவருக்கும், எளியோருக்கும் உதவிச் செய்து வாழ தலைப்படுவர்...   

                              ------------------------------------------------------------------------------

தமராகித்  தன்துறந்தார்  சுற்றம்  அமராமைக் 

காரணம்  இன்றி  வரும்.                                    -529.

நல்லுறவுக் கொண்டிருந்த சுற்றத்தார், சூழ்நிலையின் பொருட்டு பிரிய நேரிட்டிருக்கலாம்... மீண்டும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படின் - பிரிவை ஆராயாமல் - மகிழ்வோடு சந்தித்து உறவைப் பேணிக் கொள்வர்...

                              --------------------------------------------------------------------------------------

உழைப்பிரிந்து  காரணத்தின்  வந்தானை  வேந்தன் 

இழைத்திருந்து  எண்ணிக்  கொளல்.                     -530.

எதன்பொருட்டோ தன்னைவிட்டுப் பிரிந்து சென்றவன், பின்னர் ஏதோ வாய்ப்பின் பொருட்டு, மீண்டும் தன்னை நாடி வந்தால், வேந்தன் மீண்டும் பிரிவு நிகழ்ந்து விடாதபடி, பிரிந்தவனை சேர்த்துக் கொள்ள வேண்டும்...

                           ---------------------------------------------------------------------------------

அரசியல்                                               அதிகாரம் :51.

                              பொச்சாமை 

இறந்த    வெகுளியின்   தீதே   சிறந்த 

உவகை  மகிழ்ச்சியிற்  சோர்வு.  -531.  

கடும் கோபத்தைவிடத் தீமையானது  எதுவெனில்? மிகுந்த மகிழ்ச்சியில் ஏற்படும் மறதியாகும்...

                  ----------------------------------------------------------------------------------------

பொச்சாப்புக்  கொல்லும்  புகழ்மை  அறிவினை 

நிச்ச  நிரப்புக்கொன்  றாங்கு.                               -532.

நற்புகழை சிதைக்குந் திறன் மறதிக்  குணத்துக்கு  உண்டு... எவ்வாறெனில்? வறுமை நிலை அறிவைக் கெடுப்பதுப் போல, மறதி புகழைக் கொன்று விடும்...

                                   ----------------------------------------------------------------------------------

பொச்சாப்பார்க்கு  இல்லை  புகழ்மை  அதுவுலகத்து 

எப்பால்நூ  லோர்க்கும்  துணிவு.                                 -533.

மறதியுடையோர்  புகழோடு வாழ முடியாது... இவ்வுண்மையை மத நூல்களாயினும், பொது நூல்களாயினும் மறுக்க முடியாது...

*பார்ப்பனன் நூல் தரித்திருப்பதால், புகழ்மை அவனுக்குரியது ஆகாது... 

                                     -----------------------------------------------------------------------

அச்ச  முடையார்க்கு  அரணில்லை  ஆங்கில்லை 

பொச்சாப்  புடையார்க்கு  நன்கு.                            -534.             

அச்சம் நெஞ்சில் கொண்டோர் அஞ்சியே வாழ்வர்... இத்தகையோருக்கு மிகுந்தக் காவலுடன் கூடிய அரண் இருந்த போதிலும் பலனில்லை... அதே போல் செல்வமிருப்பினும், மறதி நோய் இருப்பின் மனதில் மகிழ்விருக்காது...

                             ---------------------------------------------------------------------------------

முன்னுறக்   காவாது  இழுக்கியான்  தன்பிழை  

பின்னூறு  இரங்கி  விடும்.                                 -535.   

பின்விளைவை சிந்திக்க வேண்டும்... அதற்கேற்ப  முன் நடவடிக்கை செய்தல் வேண்டும்... இதனைச் செய்யாமல் இருப்பதோ, மறுப்பதோ பெருந்தவறாகும்... இத்தகைய தவறு, மன உளைச்சலை ஏற்படுத்தி விடும்...

                         --------------------------------------------------------------------------------

இழுக்காமை  யார்மாட்டும்  என்றும்  வழுக்காமை 

வாயின்  அதுவொப்பது  இல்.                                     -536.

மறதிக்கு இடம் கொடுக்கக் கூடாது... இப்பண்பை எவரிடத்திலும், எங்கும் பிசகாமல் கடைப்பிடிப்பது நன்று... இது நற்புகழைத் தரும்... இப்பண்புக்கு ஒப்பாவது இல்லை...

                      --------------------------------------------------------------------------------------

அரசியல்                                       அரங்க கனகராசன் உரை.

அறியஎன்று  ஆகாத  இல்லைபொச்  சாவாக் 

கருவியால்  போற்றிச்  செயின்.           -537.

சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை... நினைவாற்றல் என்னும் கருவியைத் துணையாகக் கொண்டால்...

                     --------------------------------------------------------------------------------------------

புகழ்ந்தவை  போற்றிச்  செயல்வேண்டும்  செய்யாது 

இகழ்ந்தார்க்கு  எழுமையும்  இல்.                                -538. 

            எழுமையும் = விழித்தெழுகிற ஏழுகிழமையும் 

சான்றோரால் சுட்டிக்காட்டப்பட்ட நல்வழியை, நினைவில் கொண்டுச் செயலாற்ற வேண்டும்... மறுப்பவர்களுக்கு, உறங்கி விழித்தெழுகிற எந்தக் கிழமையிலும் சிறப்பு என்பதுக் கிடையாது...

*சிலர் நல்லக் கிழமை, கெட்ட கிழமை என நாட்களைப் பிரித்துப் பார்ப்பர்... சிலர் வெள்ளிக்கிழமையை உயர்வான நாளாகக் கருதி, அந்நாளில் பிறர் பரிதவித்தாலும் சல்லிக்காசும் இரவல் தரமாட்டர்... ஏனெனில், வெள்ளிக் கிழமையில் பிறருக்கு உதவினால், லெட்சுமி எனப்படும் கடவுள் வீட்டை விட்டு வெளியேறி விடுவாளாம்... அறிவியலுக்கு முரணான இக்கதையை பகுத்தறிவாளர் ஏற்பதில்லை... மேலும் உதவி செய்தலை எந்தக் கிழமையும்  கட்டுப்படுத்தாது என்பர் பகுத்தறிவாளர்...

                          ------------------------------------------------------------------------------           

இகழ்ச்சியின்  கெட்டாரை  உள்ளுக  தாந்தம் 

மகிழ்ச்சியின்  மைந்துறும்  போழ்து.         -539.

   மைந்துறுதல் =மகிழ்ச்சியில் மயங்கி தம்மை மறத்தல்.

மறதி பல அழிவுகளை உண்டாக்கும்... மகிழ்ச்சியால் திளைக்கும் போது, மறதியால் அழிந்தவரை, மனதில் நினைத்திடுக... ஏனெனில் மகிழ்ச்சியில் மயங்கி கடமையை மறந்து கெட்டவர்  ஏராளம்...

                 ------------------------------------------------------------------------------------

உள்ளியது  எய்தல்  எளிதுமன்  மற்றுந்தான் 

உள்ளியது  உள்ளப்  பெறின்.                         -540.

எண்ணியதை நிறைவேற்றலாம்... எவ்வாறெனில்? எதனைக் கருதினோமோ, அதனை நினைவில்  நிறுத்தி  செயல் படுவோமானால்!... 

                  ----------------------------------------------------------------------------------

அரசியல்                                                                                     அதிகாரம் : 55.

                                              செங்கோன்மை 

ஓர்ந்துகண்  ணோடாது  இறைபுரிந்து  யார்மாட்டும் 

தேர்ந்துசெய்  வஃதே  முறை.                    -541.

நடுநிலைத் தவறாமல்  - ஒருசார்பாய் பாராமல் - ஆட்சியாள வேண்டும்... வேண்டியவர், வேண்டாதவர் என இனம் பிரிக்காமல் எவராயிருந்தாலும் உண்மை கண்டறிக... அதுவே நீதியாகும்...

                           -------------------------------------------------------------------------------------------

வானோக்கி  வாழும்  உலகெல்லாம்  மன்னவன் 

கோல்நோக்கி  வாழும்  குடி.                                  -542.

                     உலகெல்லாம் = கோள் யாவும்.

பிரபஞ்சத்தில் கோள் யாவும் சூரியனை நோக்கி இயங்குகின்றன... அதுபோல், அரசின் நீதி வழுவா ஆட்சியை நோக்கி, வாழ்கின்றனர் மக்கள்...

*எல்லாக் கோள்களுக்கும் இயங்கு தளமாக ஞாயிறு இருப்பது போல், மக்கள் சீருடன் வாழ மன்னவன் ஆட்சிமுறை இருக்க வேண்டும்...    

                     -----------------------------------------------------------------------------------------

அந்தணர்  நூற்கும்  அறத்திற்கும் ஆதியாய்  

நின்றது மன்னவன்  கோல்.                       -543.

                        அந்தணர் = உயர்சிந்தனையாளர்.

உயர்சிந்தனையாளர் இயற்றிய நூலுக்கும், நேர்மைக்கும் அடித்தளமாக திகழ்வது, நீதி வழுவா  ஆட்சிமுறையாகும்...

                           ---------------------------------------------------------------------------------

குடிதழீஇக்  கோலோச்சும்  மாநில  மன்னன் 

அடிதழீஇ  நிற்கும்  உலகு.                           -544.

குடிமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு அரசாளும் தலைவனை - அவனது ஆட்சி முறையை - எல்லா நாடுகளும் ஆதரிக்கும்...

                              ----------------------------------------------------------------------------

இயல்புளிக்  கோலோச்சும்  மன்னவன்  நாட்ட

பெயலும்  விளையுளும்  தொக்கு.              -545.

நீதி வழுவாமல், அரசாளும் ஆட்சியாளனை, தகுந்த உவமையுடன் வாழ்த்த  வேண்டுமெனில்; தக்க பருவத்தில் பொழியும் மழைக்கும், குறைவில்லாத விளைச்சலுக்கும் ஒப்பாவான் என்றே வாழ்த்தலாம்...

                      -----------------------------------------------------------------------------------

அரசியல்                          அரங்க கனகராசன் உரை.

வேலன்று  வென்றி  தருவது  மன்னவன் 

கோலதூஉம்  கோடா  தெனின்.        -546.

ஆயுதம் மட்டுமே ஒரு நாட்டின் வெற்றியை நிர்ணயிப்பதில்லை... ஆட்சியாளரின் நிவாகமே வெற்றிக்கு வழி வகுக்கும்... அந்நிர்வாகமும் நீதிமுறையில் வழுவாதிருக்க வேண்டும்...

                               -----------------------------------------------------------------------------------

இறைகாக்கும்  வையக  மெல்லாம்  அவனை 

முறைகாக்கும்  முட்டாச்  செயின்.             -547.

மக்களை  ஆட்சியாளன்  காப்பாற்றுகிறான்... நீதி வழுவா ஆட்சி முறை, ஆட்சியாளனைக் காப்பாற்றும்...

*இடர்ப்பாடு நேர்ந்தால் மக்கள் ஓரணித் திரண்டு, ஆட்சியாளனைக் காப்பாற்றுவர்... பார்பனனோ, வலிமை எங்கே இருக்கிறதோ அங்கே போய் ஒட்டிக் கொள்வான்... காட்டியும் கொடுப்பான்...

                           ------------------------------------------------------------------------------------

எண்பதத்தான்  ஓரா முறைசெய்யா  மன்னவன் 

தண்பதத்தான்  தானே  கெடும்.                        -548.

                   தண்பதத்தான் = பனி உருகுதல் போல்.

தகுதி மிக்கோரைப் புறக்கணித்து, தனக்கு வேண்டியவர்களுக்காக அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஆட்சியாளன் எவ்வாறுக் கெடுவானெனில்? பனி உருகி அழிதல் போல், தன்னை அறியாமலே அழிவான்...

*பார்பனர்களுக்காக ஆட்சி நடத்திய ஆட்சியாளர், அழிந்தனர்... பார்ப்பனன் தாவிவிடுவான் பிற ஆட்சியாளரிடம்...

                             --------------------------------------------------------------------------------

குடிபுறங்  காத்தோம்பிக்  குற்றம்  கடிதல் 

வடுவன்று  வேந்தன்  தொழில்.         -549.

மக்கள் நலமுடன்  வாழ வகை செய்தல் வேண்டும்... நாட்டில் நிலவும் குற்றங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குதல் வேண்டும்... குற்றவாளியை தண்டிப்பது தவறானச் செயலல்ல... அது, ஆட்சியாளரின் பணிகளில் ஒன்றாகும்...

*பார்ப்பனன் எத்தகு இழிவு செய்த போதிலும், தண்டிக்கப் படவில்லை...

                      ------------------------------------------------------------------------------

கொலையிற்  கொடியாரை  வேந்தொறுத்தல்  பைங்கூழ் 

களைகட்  டதனொடு  நேர்.                                                  -550.

மரணதண்டனை விதித்து கொடியவர்களை அழிப்பது அரசின் நெறியாகும்... பயிர் நன்கு வளர, களை பிடுங்குதல் போலாகும் மக்கள் மக்கள் நிம்மதியாக வாழ, கொடியவர்களை தண்டித்தல்!...

                  -------------------------------------------------------------------------------

அரசியல்                                                                                                     அதிகாரம்:56.

                                             கொடுங்கோன்மை 

கொலைமேற்கொண்  டாரிற்  கொடிதே  அலைமேற்கொண்டு 

அல்லவை  செய்தொழுகும்  வேந்து.                                        -551.

கொலைகாரரைவிட கொடூரன் எவன்? பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவன்  ஆவான்... நெஞ்சில் ஈரமின்றி, தீய நெறியில் அரசாண்டு, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் ஆட்சியாளன், கொலைகாரரைவிட கொடியவன் ஆவான்...

                      ------------------------------------------------------------------------------

வேலொடு  நின்றான்  இடுஎன்  றதுபோலும் 

கோலோடு  நின்றான்  இரவு.                    -552.

ஆயுதங்காட்டி அச்சுறுத்தி, மக்களிடம் கொள்ளையிடுதல்  கொள்ளையர்த் தொழில்... அதேபோல், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் பன்மடங்கு வரி வசூலிப்பது கொடுங்கோல்  ஆட்சியாளரின் தொழில்...

                       ----------------------------------------------------------------------------------------

நாடொறும்  நாடி  முறைசெய்யா  மன்னவன் 

நாடொறும்  நாடு  கெடும்.                            -553.

ஒவ்வொரு நாளும்  அரசு நிர்வாகத்தை கண்காணித்திட  வேண்டும்... நடைமுறைப் படுத்தப்பட்டத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றனவா என்றறிதல் வேண்டும்... அல்லவெனில், அரசு ஒவ்வொரு நாளும் படிப்படியாக அழிவை நோக்கிச் செல்லும்... விரைவில் அழியும்...

                          --------------------------------------------------------------------------

கூழும்  குடியும்  ஒருங்கிழக்கும்  கோல்கோடிச் 

சூழாது  செய்யும்  அரசு.                                      -554.

நாட்டின் வளத்தையும், குமக்களின் ஆதரவையும் இழந்து விடுவான் ஆட்சியாளன், எப்போதுவெனில்? நீதிநெறியை மதிக்காமலும், நல் அறிவுரையைச் செவி மடுக்காமலும் அரசாண்டால் வளத்தையும் மக்களையும் இழப்பான்...

                      ----------------------------------------------------------------------------------------------   

அல்லற்பட்டு  ஆற்றாது  அழுதகண்  ணீரன்றே 

செல்வத்தைத்  தேய்க்கும்  படை.                   -555.

நாட்டு மக்களுக்கு, இழைத்த துன்பம் பெருந்துன்பம்... அடுக்கடுக்கான துன்பங்கள் தாங்காது, மக்கள் அழுத கண்ணீர் ஆயுதமாகும் என்று ஆட்சியாளன் அறியான் போலும்...

கொடுங்கோலனின் செல்வத்தை அழிக்கும் ஆயுதமாக - புரட்சியாக - மக்கள் சிந்தும் கண்ணீரும் மாறும்...

                                 ----------------------------------------------------------------------------

அரசியல்                                                                              திருக்குறள் உரை.

மன்னர்க்கு  மன்னுதல்  செங்கோன்மை  அஃதின்றேல் 

மன்னாவாம்  மன்னர்க்  கொளி.                                       -556.

ஆட்சியாளனுக்கு பெருமை எதுவெனில்? நீதி வழுவா  ஆட்சி முறையாகும்... நீதித் தவறி  அரசாள்வோன் புகழை இறந்துவிடுவான்... மாண்பிழந்து மானமும் இழப்பான்...

                               -----------------------------------------------------------------------------

துளியின்மை  ஞாலத்திற்கு  எற்றற்றே  வேந்தன் 

அளியின்மை  வாழும்  உயிர்க்கு.                        -557.

மழையில்லையேல் மண்ணில் வளமிருக்காது... அதே போல் ஆட்சியாளனின் மனதில் அன்பு இல்லையெனில் மக்கள் மனதில் நிம்மதியிராது....

                         -------------------------------------------------------------------------------------

இன்மையின்  இன்னாது  உடைமை  முறைசெய்யா 

மன்னவன்  கோற்கீழ்ப்  படின்.                                    -558.

வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்பவர்களைவிட மோசமானது செல்வந்தரின் நிலை... நீதித் தவறிய அரசின் கீழ் வசிக்க நேரும் செல்வந்தர்களின் நிலை, வறியவர்களைவிட மோசமானதாக  இருக்கும்...

*கொடுங்கோலன் நெறியற்ற ஆட்சியால் செல்வ வரி, விதித்து, செல்வந்தரின் உடைமைகள் கையகம் படுத்தி, செல்வந்தரை வறிய நிலைக்குத் தள்ளுவன்...

                               --------------------------------------------------------------------------------

முறைகோடி  மன்னவன்  செய்யின்  உறைகோடி 

ஒல்லாது  வானம்  பெயல்.                                     -559.

                                     உறைகோடி = நாடுகெட்டு 

                                     ஒல்லாது      = நன்மை பயக்காது.

நீதித் தவறி அரசாண்டால், நாடு கெட்டழியும்... வறுமைத் தாண்டவமாடும்... பருவமழைப் பொழிந்தாலும், மழைநீரை முறைப் படுத்தாத ஆட்சியாளரால் விளைநிலம் கெட்டு மக்கள் வாழ்வாதாரம் இழப்பர்...  

*இந்நிலையில் பார்ப்பனர் நடத்தும் யாகமோ, பூசையோ ஏமாற்று வேலையாக இருக்கும்...

                        -------------------------------------------------------------------------------------

ஆபயன்  குன்றும்  அறுதொழிலோர்  நூல்மறப்பர் 

காவலன்  காவான்  எனின்.                                        -560.

                         ஆபயன் = ஆதாயம், வருவாய்.

வளம் கெட்டு வருவாயும் குன்றும்... வல்லுனரும், மேதையரும்  தாம் கற்ற கல்வியை மறந்து, வறுமையின் கொடுமையால் வேறு  வேலைத் தேடி அலைவர் அரசின் சீர் கேட்டால்!...

*சிலர் இக்குறளுக்கு பசு பால் தராது என்று உரை எழுதியுள்ளனர்... பார்ப்பனன் வேதம் ஓத மறந்து விடுவானாம்... ஆபயன்  எனில் வருவாய் என்பதை மறந்தனர் போலும்...

                                     ----------------------------------------------------------------------------------

அரசியல்                                                                                அதிகாரம் :57.

                                    வெருவந்த  செய்யாமை.

தக்காங்கு  நாடித்  தலைச்செல்லா  வண்ணத்தால் 

ஒத்தாங்கு  ஒறுப்பது  வேந்து.                                  -561.

குற்றவாளியைத் தக்கவாறு விசாரித்து, மீண்டும் அவன் குற்றம் புரியாத வண்ணம், தகுந்த தண்டனை வழங்குவது அரசின் கடமையாகும்... 

                                   ----------------------------------------------------------------------------

கடிதோச்சி  மெல்ல  எறிக  நெடிதாக்கம் 

நீங்காமை  வேண்டு  பவர்.                   -562.

                     மெல்ல எறிக = ஆழ்ந்து சிந்தித்து.

விரைவாக விசாரிக்க வேண்டும்... ஆனால்; நன்கு சிந்தித்துத் தீர்ப்புக் கூறல் வேண்டும்... தவறானக் கருத்துக்கு இடம் தந்துவிடக் கூடாது  என்று நினைப்போர் தீர்ப்புக் கூறுவதில் அவசரம் காட்டமாட்டர்...

                             -------------------------------------------------------------------------------

வெருவந்த  செய்தொழுகும்  வெங்கோல  னாயின் 

ஒருவந்தம்  ஒல்லைக்  கெடும்.                 -563.

                                                  ஒருவந்தம் = நிச்சயமாக 

மக்களை அச்சுறுத்தி, அரசாளும் கொடுங்கோலன் நிச்சயம் விரைவில் அழிவான்...

                                      ----------------------------------------------------------------------------

இறைகடியன்  என்றுரைக்கும்  இன்னாச்சொல்  வேந்தன் 

உறைகடுகி   ஒல்லைக்  கெடும்.                                             -564.

அரசாள்வோன் கொடியவன் என மக்களால் பேசப்பட்டால், 'கொடியவன்' என்ற சொல்லே மக்களைப் புரட்சிக்கு இட்டுச் செல்லும்... மக்களின் புரட்சியால் கொடுங்கோலனின் கொட்டம் முறிக்கப்படும்...  அரசும் விரைவில் வீழும்... 

                                      ----------------------------------------------------------------------------------

அருஞ்செவ்வி  இன்னா முகத்தான்  பெருஞ்செல்வம் 

பேஎய்கண்  டன்னது  உடைத்து.                                     -565.

                                              பேஎய்கண் = கானல் திரை.

சற்றும் முகமலர்ச்சி இல்லாதவனுடைய பெருஞ்செல்வம் எத்தகையது  எனில்? கானல்நீர் போன்றதாகும்...

*அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 

கடுத்தது  காட்டும்  முகம்.

அகத்தில் அன்பு இருந்தால்தானே முகத்தில் மலர்ச்சி இருக்கும்...

*பெருஞ்செல்வம் இருந்தப் போதிலும், மலர்ச்சி முகத்தில் இல்லையெனில், அக்காதகனை மக்கள் அணுகார்... தனிமையே அவனை வாட்டும்... செல்வத்தால் யாரையும் பணியவைக்க முடியாமல் தவிப்பான்... ஆகஅவனுக்கு உதவாதச் செல்வம், அவன் மட்டில் கானல்நீரே!

                                  --------------------------------------------------------------------------------

அரசியல்                                         அரங்க கனகராசன் உரை.

கடுஞ்சொல்லன்  கண்ணில  னாயின்  நெடுஞ்செல்வம் 

நீடின்றி  அங்கே  கெடும்.                                                         -566.

வெளிப்படுத்தும் சொற்களில் பண்பிருக்காது... எதிர்காலம் குறித்துத் திட்டமிடலும் இல்லாததால் திட்டமிடப்படாத செலவழிக்கும் குணமிருப்போனின் செல்வம் பெருக்கின்றி அழிந்துவிடும்...

*செல்வத்தைப்  பேண தெரிந்திருந்தால் மட்டுமே, செல்வம் பெருகும்... அல்லவெனில் கரைந்து போகும்...

                                 -----------------------------------------------------------------------

கடுமொழியும்  கையிகந்த  தண்டமும்  வேந்தன் 

அடுமுரண்  தேய்க்கும்  அரம்.                                -567.

தீமைமிகு  அரசாணைகளும், இரக்கமற்ற கடுந்தண்டனையும் மக்களிடையே ஆட்சியாளனுக்கு, எதிரானக் கிளர்ச்சியை உண்டாக்கும்...      கிளர்ச்சி, புரட்சியாக வெடித்து வேந்தனின் அதிகாரவேர் அறுக்கும்...

                              ------------------------------------------------------------------------------------

இனத்தாற்றி  எண்ணாத  வேந்தன்  சினத்தாற்றி  

சீறின்  சிறுகும்  திரு.                                                   -568.

சான்றோரின் கருத்தை செவிமடுக்காமலும், அதிகார்த் திமிரில் மிகுசினம் கொண்டு சீறும் குணமும் இருக்குமேயாயின், ஆட்சியாளனின்  மாண்பு அழியும்...  

                        --------------------------------------------------------------------------------

செருவந்த  போழ்திற்  சிறைசெய்யா  வேந்தன் 

வெருவந்து  வெய்து  கெடும்.                             -569.

                                                            வெய்து = விரைந்து. 

பகை நாட்டவர் முற்றுகையிட்டுவிட்ட நிலையில்,  முன்னதாகவே நாட்டுக்கு வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளன், செய்வதறியாது, அஞ்சியஞ்சி விரைவில் அழிந்து விடுவான்...

                                --------------------------------------------------------------------------

கல்லார்ப்  பிணிக்கும்  கடுங்கோல்  அதுவல்லது 

இல்லை  நிலக்குப்  பொறை.                                  -570.

கடுங்கோலன் தனக்குத் துணையாக, அரசியலறிவு அற்றவர்களையும், மூடர்களையும் கொண்டிருப்பான்... இவனைப் போன்றதொருச் சுமை, இந்நிலத்தில் வேறில்லை என்றே கூறலாம்...

*பார்ப்பனன் என்பதற்காகவே அவனை துணைக்கு வைத்து, நிலத்திற்கு சுமையான மன்னருண்டு... 

                         ----------------------------------------------------------------------------- 

அரசியல்                                                                       அதிகாரம் :58.

                                          கண்ணோட்டம் 

கண்ணோட்டம்  என்னும்  கழிபெருங்  காரிகை 

உண்மையான்  உண்டிவ்  வுலகு.                      -571.

பிறரைக் கணித்தல் என்பது மிக நுண்ணியச் செயல்பாடாகும்... அவசியமானதும் ஆகும்!... அதனால்; கண்ணோட்டம் என்பது  சிறப்பானதாகக் கருதப்படுகிறது...

இந்தச் சிறப்புத் தன்மையால், உலகில் நன்மைகள் பல நிகழ்கின்றன... 

                               ------------------------------------------------------------------------------        

கண்ணோட்டத்  துள்ளது  உலகியல்  அஃதில்லார் 

உண்மை  நிலக்குப்  பொறை.                                   -572.

உலகின் செயல்பாடு, கணித்தல் என்னும் சிறப்புத் தன்மையால் அமைந்துள்ளது... கண்ணோட்டம் இல்லாதவர், உண்மையாகவே இவ்வுலகின் சுமையாவர்... 

                                ----------------------------------------------------------------------------------

பண்என்னாம்  பாடற்கு  இயைபின்றேல்  கண்என்னாம் 

கண்ணோட்டம்  இல்லாத  கண்.                                         -573.

பாடலொடு பொருந்தாத இசையில் சுவையுண்டோ?... பிறரைக் கணித்தறியும் ஞானம் கண்ணுக்கு இல்லையேல்,  கண்ணுக்கு ஏது சிறப்பு?....

                          ---------------------------------------------------------------------------------

உளபோல்  முகத்தெவன்  செய்யும்  அளவினால் 

கண்ணோட்டம்  இல்லாத  கண்.                         -574.

முகத்தில் இருக் கண்கள்  இருந்தும், பார்வையால் பிறரை அளவிட்டுக் கணிக்க, இயலவில்லையெனில் கண்களால் பயனென்ன?...

                           ----------------------------------------------------------------------

கண்ணிற்கு  அணிகலம்  கண்ணோட்டம்  அஃதின்றேல் 

புண்ணென்று  உணரப்  படும்.                                                -575.

கண்ணுக்கு சிறப்பு சேர்ப்பது எது?... பார்வையால் பிறரைக் கணித்தல் ஆகும்... கணிக்கும் திறன் இல்லையேல், கண் அல்ல;   அது புண் எனலாம்...

                            -----------------------------------------------------------------------------

மன்னோ  டியைந்த  மரத்தனையர்  கண்ணோ 

டியைந்துகண்  ணோடா  தவர்.                        -576.

மண்ணில்  புதைந்த மரம் போன்றவர் எவரெனில்? கண்களால் கணித்துணரும்  உணர்வற்றோர்...

                                --------------------------------------------------------------------------------

அரசியல்                                          அரங்க  கனகராசன்  உரை

கண்ணோட்டம்  இல்லவர்  கண்ணிலர்  கண்ணுடையார் 

கண்ணோட்டம்  இன்மையும்  இலர்.                                   -577.

கண்ணோட்டம்  இல்லாதவர்களை  பார்வையற்றவர் எனலாம்... பார்வையிருந்தும், கண்ணோட்டம் இல்லையெனில், கண்ணற்றவரே  அவர்...

                            -------------------------------------------------------------------------------------------

கருமஞ்  சிதையாமல்  கண்ணோட  வல்லார்க்கு 

உரிமை  உடைத்திவ்  வுலகு.                                   -578.

கொண்டக் கொள்கைச் சிதைவுறாமல், கண்களால் கணிக்க வல்லாரை, மக்கள் யாவரும் தம்மவராகக் கருதுவர்...

*விருப்பு, வெறுப்பில்லாமல் கண்களால் உண்மையை உரைக்க வல்லார் மக்களுக்கு பொதுவானவர் ஆவர்...

                   -----------------------------------------------------------------------------------

ஒறுத்தாற்றும்  பண்பினார்  கண்ணும்கண்  ணோடிப் 

பொறுத்தாற்றும்  பண்பே  தலை.                                -579.

பிறரைத் துன்புறுத்துவது ஒரு சிலரின் குணமாகும்... துன்புறுத்துவது ஏனெனக் கணித்திடல் வேண்டும்... கண்டறிந்து, திருந்தச் செய்யும் செயல் உயர்ப் பண்பாகும்...

*சிலர் தம்மையறியாது, பிறரைத் துன்புறுத்துதல் செய்வர்... அத்தகையோரை தண்டிக்கும் முன்னர்உளவியல் மருத்துவம் வாயிலாகக் கண்டறிந்து நலம் படுத்துதல் பண்பானச் செயலாகும்...

                     ----------------------------------------------------------------------------------

பெயக்கண்டும்  நஞ்சுண்  டமைவர்  நயத்தக்க 

நாகரிகம்  வேண்டு  பவர்.                                  -580.

நண்பன் தருவது நஞ்செனத் தெரிந்தும், அதனைப் பருகுவோர் எவரெனில்? நட்பின் மேன்மையை நன்குணர்ந்தோர் ஆவர்...

*நட்பின் இலக்கணத்தைப் பேணுவோர், நண்பனின் செயலுக்கு இழுக்கு ஏற்படுத்த எண்ணம் கொள்ளார்...

                       -------------------------------------------------------------------------------------

அரசியல்                                                                                     அதிகாரம் :59.

                                               ஒற்றாடல் 

ஒற்றும்  உரைசான்ற  நூலும்  இவ் இவையிரண்டும் 

தெற்றென்க  மன்னவன்  கண்.                                      -581.

உளவுத்துறை மற்றும் தெளிவான வழிகாட்டும் நூல்கள் என இவ்விரண்டும் நாடாள்வோனுக்கு  இரு கண்கள் போன்றவை...

                       -----------------------------------------------------------------------------------

எல்லார்க்கும்  எல்லாம்  நிகழ்பவை  எஞ்ஞான்றும் 

வல்லறிதல்  வேந்தன்  தொழில்.                               -582.

அமைச்சர் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரையும், ஒற்று வாயிலாக எப்போதும் நுண்ணறிவோடு அறிந்துக் கொள்வது நாடாள்வோனதுக் கடமையாகும்...

                              ---------------------------------------------------------------------------------

ஒற்றினான்  ஒற்றிப்  பொருள்தெரியா  மன்னவன் 

கொற்றங்  கொளக்கிடந்தது  இல்.                         -583.

வெளிநாட்டு நிகழ்வு, உள்நாட்டு நிகழ்வு, நண்பரின் தொடர்பு, எதிரியின் செயல்பாடு, அரசியல் நிகழ்வுயென ஒற்றரால் உளவறியப் பட்டவைகளை தெளிந்து, அதற்கேற்ப அரசியலை வளமை ஆக்கிக் கொள்வதே சிறந்தது...

உளவாளிகளால் தகவல் தரப்பட்டும், போதிய நடவடிக்கை எடுக்காமல் விட்ட ஆட்சியாளன், தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள மாட்டான்...

                            --------------------------------------------------------------------------------------

வினைசெய்வார்  தம்சுற்றம்  வேண்டாதார்  என்றாங்கு 

அனைவரையும்  ஆராய்வது  ஒற்று.                               -584.

பணியாளர், உறவினர், நண்பர் மற்றும் எதிரிகள் என அனைவரின் செயல்களையும் அறிவதே ஒற்றரின் கடமையாகும்...

                            ------------------------------------------------------------------------------

கடாஅ   உருவொடு  கண்ணஞ்சாது  யாண்டும் 

உகாமை  வல்லதே  ஒற்று.                                 -585.

இடத்திற்கு  ஏற்ப  மாறுவேடந்தரித்து உளவறிதல் வேண்டும்... அஞ்சா நெஞ்சுடன்  திகழ வேண்டும்... எங்குமே, எதன் பொருட்டும் தன்னை வெளிப்படுத்திடாது இருக்க வேண்டும்... மேலும், தகவல்களைக் காப்பாற்றும் திறனும் வேண்டும்... இவை உளவாளிகள் கடமையாகும்...

                          -----------------------------------------------------------------------------------

அரசியல்                                               திருக்குறள் உரை.

துறந்தார்  படிவத்த  ராகி  இறந்தாராய்ந்து 

என்செயினும்  சோர்விலது  ஒற்று.     -586.

ஆட்சியாளரின் தொடர்பைத் துண்டித்து விட்டேன்... ஆட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறி, எதிரியை நம்பச் செய்து, எதிரியின் மனதை உளவறிய வேண்டும்... கடமையின் பொருட்டு உயிர் துறந்தவர்களின் கடந்தக் கால நிகழ்வுகளையும் மனதில் கொண்டு உளவறிதல் வேண்டும்... எத்தகைய இடர் வரினும் மனந்தளராது உளவறிவதே ஒற்றர் பணியாகும்...

                                  -------------------------------------------------------------------------------

மறைந்தவை  கேட்கவற்  றாகி  அறிந்தவை 

ஐயப்பாடு  இல்லதே  ஒற்று.                        -587.

மறைக்கப் பட்டவைகளை நூதனமாகக் கண்டறிதல் வேண்டும்... அறிந்தவற்றில், துல்லியமாக ஆய்ந்து, அய்யத்திற்கு இடமில்லாத வகையில், உளவுச் செய்தியை உரியவர்களுக்கு அனுப்புதல் வேண்டும்...

                                ---------------------------------------------------------------------------

ஒற்றொற்றித் தந்த  பொருளையும்  மற்றுமோர் 

ஒற்றினால்  ஒற்றிக்  கொளல்.                           -588.

ஓர் உளவாளி உளவறிந்துத் தந்தத் தகவலை, இன்னுமோர் உளவாளி வாயிலாக உளவறிந்து, உண்மைத் தன்மையை அறிதல் வேண்டும்...

                       -----------------------------------------------------------------------------------

ஒற்றொற்  றுணராமை  ஆள்க  உடன்மூவர் 

சொல்தொக்க  தேறப் படும்.                          589.

ஒரு செயலை உளவறிய ஓர் ஒற்றனை பணிக்க வேண்டும்... அதே செயலை உளவறிய மேலுமொரு ஒற்றனையும் பணிக்க வேண்டும்... ஆனால்; அவன் பணிக்கப் பட்டது இவனுக்கும், இவன் பணிக்கப் பட்டது அவனுக்கும் தெரியக் கூடாது... 

இவ்வண்ணம்  தனித்தனியே மூன்று உளவாளிகள் வாயிலாக தகவல் பெற வேண்டும்... தனித் தனியே ஒற்றர் மூவரால் தரப்பட்ட தகவல்களை சரிப் பார்த்துச் செயல்பட வேண்டும்...

                      ----------------------------------------------------------------------------------------

சிறப்பறிய  ஒற்றின்கண்  செய்யற்க  செய்யின் 

புறப்படுத்தா  னாகும்  மறை.                              -590.

பிறர் அறிய ஒற்றனுக்கு  பாராட்டுதல் அல்லது பரிசு எதுவும் செய்தல் கூடாது... செய்தால், ஒற்றன் யாரென்று பிறருக்குத் தெரிந்து விடும்... தெரிந்து விட்டால், அவனிடமிருந்து உளவுத் தகவலை அறிய முற்படுவர்...

                             -------------------------------------------------------------------------------

அரசியல்                                                                    அதிகாரம் :60.

                                          ஊக்கம் உடைமை.

உடைய  ரெனப்படுவது  ஊக்கம்அஃ  தில்லார் 

உடையது  உடையரோ  மற்று.                       -591.

ஒருவனது உடைமை எதுவெனில் ஊக்கமேயாகும்... ஊக்கமில்லாதவர் பெருஞ் செல்வத்திற்கு உரிமையாளராக இருந்தாலும், உண்மையில் மனஉறுதிக்கு ஈடாகாது...

                                 ----------------------------------------------------------------------------------

உள்ளம்  உடைமை  உடைமை  பொருளுடைமை 

நில்லாது  நீங்கி  விடும்.                                            -592.

மனவுறுதியே  ஒருவனுக்குச் செல்வமாகும்... பொருட் செல்வம் என்பது, நிலை அற்றதாகும்... இன்றிருக்கும்... நாளை இல்லாமல் போகும்...

                                    ----------------------------------------------------------------------

ஆக்கம்  இழந்தேமென்று  அல்லாவார்  ஊக்கம் 

ஒருவந்தம்  கைத்துடை  யார்.                             -593.

முதலீட்டை இழந்து விட்டோமென்று மனம் கலங்காதவர் எவரெனில்? மனவுறுதியில்  மிகுந்த நம்பிக்கை உடையோர் மனம் கலங்க மாட்டர்...

*மனவுறுதிமிக்கோர் இழப்புக் குறித்து குறித்துக் கலக்கம் அடைய மாட்டர்...

                                   --------------------------------------------------------------------------

ஆக்கம் அதர்வினாய்ச்  செல்லும்  அசைவிலா  

ஊக்க  முடையா  னுழை.                                     -594.

வருவாய்த் தடங்கலின்றிப் பெருகும்... தளராத மனவுறுதி கொண்டவனிடத்தில்!...

                           ----------------------------------------------------------------------------------

வெள்ளத்  தனைய  மலர்நீட்டம்  மாந்தர்தம் 

உள்ளத்  தனையது  உயர்வு.                        -595.

நீரின் மட்டம் உயர உயர மலரும் உயர்வது போல, மக்களிடையே உயர்வான எண்ணம் பெருகப் பெருக வாழ்க்கைத் தரமும் உயருகிறது...

*தாழ்வு எண்ணம் நீங்கல் வேண்டும்...

                              --------------------------------------------------------------------------------

உள்ளுவ  தெல்லாம்  உயர்வுள்ளல்  மற்றது 

தள்ளினும்  தள்ளாமை  நீர்த்து.                 -596.

எண்ணத்தில் உயர்வுக் கொள்க... தாழ்வான எண்ணம் தலைத் தூக்கினாலும் இடம் கொடுக்காதீர்கள்...

*உயர் சிந்தனை... உயர் எண்ணம்... உயர் வாழ்வு...

                        --------------------------------------------------------------------------------------

அரசியல்                                                            திருக்குறள் உரை.

சிதைவிடத்து  ஒல்கார்  உரவோர்  புதையம்பிற் 

பட்டுப்பா  டூன்றும்  களிறு.                                    -597.

பெரும்பொருள் இழப்பு ஏற்படினும் அல்லது வேறு வகையில் தோல்வி ஏற்படினும் மனம்  தளரா உறுதியாளரை  எதனோடு ஒப்பிடலாமெனில்? அம்புகளால்  தைக்கப் பட்டாலும் மனவுறுதியை இழந்து விடாமல் துணிவுடன்  போராடும் யானையோடு ஒப்பிடலாம்...

                                ---------------------------------------------------------------------------

உள்ளம் இலாதவர்  எய்தார்  உலகத்து 

வள்ளியம்  என்னும்  செருக்கு.      -598.

                                        வள் = வளம் 

                                  வள்ளியம் = மிகு வளமான.

மனவுறுதி இல்லாதவர் பெருமை மிகு வாழ்வு எனும் நிலையை எய்த மாட்டர்... 

                         ------------------------------------------------------------------------------

பரியது  கூர்ங்கோட்டது  ஆயினும்  யானை 

வெரூஉம்   புலிதாக்  குறின்.                       -599.

பருத்த உடல் கொண்டும், கூர்மையான  தந்தங்கள் கொண்டும் விளங்கினாலும் யானையானது பயந்து விடும், புலி தாக்க முற்பட்டால்...

*மனவுறுதியில்  புலியாக  இருந்தால்பெருஞ் சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடலாம்...

                       ----------------------------------------------------------------------------------

உரமொருவற்கு  உள்ள  வெறுக்கைஅஃ  தில்லார் 

மரம்மக்க  ளாதலே  வேறு.                                    -600.

வலிமை எனப்படுவது மனவுறுதியாகும்... மனவுறுதியற்றவர் மரமாவர்... உருவ ஒற்றுமையில் மக்களைப் போல் இருப்பினும், மனவுறுதி அற்றோர் உயிர் வாழ்தலில் பொருளற்றவர் ஆவர்... 

                             --------------------------------------------------------------------------     

அரசியல்                                                                          அதிகாரம் :61.

                                                 மடி இன்மை 

குடியென்னும்  குன்றா  விளக்கம்  மடியென்னும் 

மாசூர  மாய்ந்து  கெடும்.                               -601.

நல்குடுமபம் என்பது சுடர்விளக்குப் போன்றது... சோர்வு என்னும் தூசிப் படிந்தால், ஒளி மங்கிக் கெடும்...

                                    -------------------------------------------------------------------------------

மடியை  மடியா  ஒழுகல்  குடியைக் 

குடியாக  வேண்டு  பவர்.              -602.

சோம்பலுக்கு இடம் தராமல் வாழ்பவன் யாரெனில்? குடும்பம் நல்லதோர் எடுத்துக் காட்டாக சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறவன்  சோம்பலுக்கு இடந்தராமல் வாழ்வான்...

                        -------------------------------------------------------------------------------------

மடிமடிக்  கொண்டொழுகும்  பேதை  பிறந்த 

குடிமடியும்  தன்னினும்  முந்து.                   -603.

சோம்பலில் முயங்குபவன் சோம்பேறியாவான்... உண்மையில் அவன் அறிவற்றவன்  ஆவான்... ஏனெனில்; அவனுடைய சோம்பேறி குணம் அவனுடைய குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தும்... அவனுக்கு முன்னரே குடும்பமும் சிதைந்து விடும்...

                                    -------------------------------------------------------------------------

குடிமறந்து  குற்றம்  பெருகும்  மடிமடிந்து  

மாண்ட  உஞற்றி  லவர்க்கு.                    -604.

சோம்பலில் சிக்கியக் குடும்பம், தரித்திரத்தில் தவிக்கும்... தகாதக் குற்றங்களுக்கு ஏதுவாகும்... சோம்பலை  எதிர்த்து உழைப்பில் ஆர்வம் செலுத்தாத சோம்பேறிகளின் குடும்பம் பலவாறு தத்தளிக்கும்...

                          ----------------------------------------------------------------------------------

நெடுநீர்  மறவி  மடிதுயில்  நான்கும் 

கெடுநீரார்  காமக்   கலன்.             -605.

தக்க நேரத்தில் செய்யாமல்  காலந்தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவு மீறியத் தூக்கம் என இந்நான்கும் வாழ்வில் கெட்டுப் போகின்றவர்களின் அணிகலன் ஆகும்...

                        ------------------------------------------------------------------------------

அரசியல்                                                                                   திருக்குறள் உரை.

படியுடையார்  பற்றமைந்தக்  கண்ணும்  மடியுடையார் 

மாண்பயன்  எய்தல்  அரிது.                                                -606.

செல்வந்தர்களின் தொடர்பு இருந்தப் போதிலும், சோம்பேறிகளால் வாழ்வில் முன்னேற்றம் காணவியலாது...

                                 ------------------------------------------------------------------------------

இடிபுரிந்து  எள்ளுஞ்சொல்  கேட்பர்  மடிபுரிந்து 

மாண்ட  உஞற்றி  லவர்.                                        -607.

பிறர் கேவலமாக இடித்துக் கூறுவதையும், பழித்துப் பேசுவதையும் கேட்க வேண்டிய நிலை சோம்பேறிகளுக்கு ஏற்படும்... ஏனெனில், சோம்பேறித் தனத்தில் ஊறியோர்  சூடு, சுரணையற்றுப் போவார்...

*இழித்தும், பழித்தும் பேசினாலும், சோம்பேறிகளிடத்தில் மானமோ, நாணமோ, கோபமோ இராது...

                          -----------------------------------------------------------------------------------------

மடிமை  குடிமைக்கண்  தங்கின்தன்  ஒன்னார்க்கு 

அடிமை  புகுத்தி  விடும்.                                               -608.

குடும்பத்தில் சோம்பல்  நிலவினால், விரோதிகளுக்கு எதிரிலும் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ முடியாது...

                        ------------------------------------------------------------------------------------

குடியாண்மை  யுள்வந்த  குற்றம்  ஒருவன் 

மடியாண்மை  மாற்றக்  கெடும்.                609.

குடும்பத்தின் மீது ஏற்பட்ட அவச்சொல்லை எதனைக் கொண்டு போக்கவியலுமெனில்;   சோம்பலுக்கு இடந்தராமல், விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேற்றம் கண்டால், குடும்பத்தின் மீது படிந்துள்ள அவச்சொல்  தானாகவே  நீங்கி விடும்...

*கடன் வாங்குதல், பொய் பேசுதல், ஏமாற்றுதல் போன்ற தீயகுணங்கள் சோம்பேறியிடத்தில் குடியேறும்... குடும்பத்திற்கு அவச்சொல் உண்டாக்கும்... இதனை களைய, முள்ளை முள்ளால் எடுத்தாற் போல் சோம்பலை சோம்பலின்றி களைந்தால் அவச்சொல் நீங்கும்.   

                        ------------------------------------------------------------------------------

மடியிலா  மன்னவன்  எய்தும்  அடியளந்தான் 

தாஅய  தெல்லாம்  ஒருங்கு.                           -610.

சோம்பலுக்குத் துளியும் இடந்தராத  மாவீரன் எவனோ, அவன் தான் நினைத்ததை முடிப்பான்... தனது காலடியின் கீழ்  பலப் பேரரசுகளை வீழ்த்திட வேண்டும் என்று எண்ணித் திட்டம் வகுத்தானெனில், அவன் வகுத்தத் திட்டம் யாவும் கைக்கூடும்...

*எண்ணிய நிறைவேறும்; சோம்பலின்றிச் செயல்பட்டால்!...

                     ------------------------------------------------------------------------------------

அரசியல்                                                                            அதிகாரம் :62.

                                    ஆள்வினை உடைமை.

அருமை  உடைத்தென்று  அசாவாமை  வேண்டும் 

பெருமை  முயற்சி  தரும்.                                           -611.

ஆகா... அருமையானச் செயல்... இதனை செய்தால், அதிகப் பலன் பெறலாம் என்று, மனதில் நினைத்தால் போதாது... செயல்படவும் வேண்டும்... செயலுக்கான முயற்சியே  பெருமைத் தரும்... 

*மிகச் சிறந்தச் செயல் என்ற போதிலும், காலந்தாழ்த்தாமல் செய்தல் வேண்டும்...

                      -------------------------------------------------------------------------------

வினைக்கண்  வினைகெடல்  ஓம்பல்  வினைக்குறை 

தீர்ந்தாரின்  தீர்ந்தன்று  உலகு.                                        -612.

செயலைக்  குறைவின்றிச் செய்க... செயலை முழுமையாகச் செய்யாமல் விட்டவரை, உலகு போற்றுவதில்லை...

*செயலில் முழுமை வேண்டும்... முழுமையற்றச் செயல் போற்றுதலுக்கு உரியதாகாது...

                     -----------------------------------------------------------------------------------

தாளாண்மை   என்னுந்  தகைமைக்கண்  தங்கிற்றே 

வேளாண்மை  என்னுஞ்  செருக்கு.            -613.

                                        தாளாண்மை  = விடாமுயற்சி 

                                           வேளாண்மை = உதவுதல்.

விடாமுயற்சி  என்பது, நல்லதோர்க் கொள்கையாகும்... அந்தக் கொள்கைக்கு உட்பட்டது எதுவெனில்? பிறருக்கு உதவுதல் என்னும் பழக்கமாகும்...

*முயற்சி உடையோர் முன்னேற்றம் காண்பர்... முன்னேற்றம் கண்டால்தான் உதவிட இயலும்...

                 -----------------------------------------------------------------------------------------

தாளாண்மை  இல்லாதான்  வேளாண்மை பேடிகை 

வாளாண்மை  போலக்  கெடும்.                                   -614.

சுயமாக உழைத்து பொருளீட்ட வேண்டும்... ஈட்டியப் பொருளிலிருந்து, பிறருக்கு உதவிட வேண்டும்... உழைத்து பொருளீட்டாமல், வீட்டில் உள்ளவற்றை அள்ளிப் பிறருக்கு உதவுதல் என்பது, ஆயுதம் தூக்கிக் கொண்டு, போர் போர் என்று பேடியானவன் கூவுதல் போன்றதாகும்... 

*பேடியால் போர்க்களம் போகமுடியுமா?... எதிரியின் போர்க் கோலமே பேடியை நடுங்க வைத்து விடும்... பேடியால் நாடு விளங்காது... அதுபோல், உழைக்காமல் வீட்டில் உள்ளதை பிறருக்கு அள்ளி வழங்கினால், வீடு விளங்காது...

               ----------------------------------------------------------------------------------------

அரசியல்                                                              அரங்க கனகராசன் உரை.

இன்பம்  விழைவான்  வினைவிழைவான்  தன்கேளிர் 

துன்பம்  துடைத்தூன்றும்  தூண்.                                   -615.

தன்னிடம் இருக்கும் செல்வம் தன் இறுதி நாள் வரைக்கும்  போதுமானது என்றாலும், அது அவனுக்கு மட்டுமே இன்பம் பயப்பதாக அமையும்... ஆனால்; பொது நலத்தில் நாட்டம் கொண்டுள்ளவன் தண்னிடம் இருக்கும் செல்வம் கொண்டு ஆலைத் திறந்தானெனில், அதில் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்... அதோடு, அலை திறப்பால், அநேகரின் வாழ்வைத் தாங்கிப் பிடிக்கும் தூண் போல் மதிக்கப்படுவான்...

                          -----------------------------------------------------------------------------     

முயற்சி   திருவினை  யாக்கும்  முயற்றின்மை

இன்மை  புகுத்தி  விடும்.                                       -616.

நல்ல முயற்சியானது, நல்லப் பலனைத் தரும்... முயற்சி இல்லாதவர்களை  வறுமை சூழும்...

*எவ்வித முயற்சியும் இன்றி, பார்பனனன் நல்ல நிலையில் இருக்கிறானே  எனில், அறவே முயற்சி அற்றவன் என்று அவனை ஒதுக்கி விட  இயலாது... ஏமாற்றுதல் எனும் முயற்சி அவனுக்கு தீயப் பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது... அதுவும் வெளிச்சம் படுத்தப் படும் போது, அவன் தீமையால்    சூழப் படுவான்...

                     ------------------------------------------------------------------------------------       

அரசியல்                               அரங்க கனகராசன் உரை.

மடியுளாள்  மாமுகடி  என்ப  மடியிலான்

தாளுளாள்  தாமரை  யினள்.               -617.

*இக்குறளுக்கு உரைக் காணும்  முன்பாக,

தற்காத்துத்  தற்கொண்டாற்  பேணித்  தகைசான்ற 

சொற்காத்துச்  சோர்விலாள்  பெண்.                    -56. 

                  சோர்வு = மனத் தளர்வு, மனஉறுதி இழப்பு        

பெண்மணிகள்,இல்லற வாழ்வில் முதலில்,  தமது உரிமையைமேலாண்மையை - நிலை நிறுத்த வேண்டும்... அதே போல் துணைவனின் நல் நோக்கம் நிறைவேற துணைப் புரிதல் வேண்டும்... மேலும்;  சான்றோர்  நல்கிய நல்லுரையை கருத்தில் கொண்டு  இல்லறவியல் கடமையை ஆற்ற வேண்டும்...

இனி 617 வது குறளின் உரைக் காண்போம்...

சோம்பலுடன் விளங்குபவளை, குடும்பத்தின் சீர் அழிப்பவள் எனலாம்... உழைப்பாளிக்கு -துணைவனுக்குஉறுதுணையாய் விளங்குபவளை - தாமரைப்பூ போன்றவள் எனலாம்... சேற்றிலும், செழுமையாக மலர்ந்து, அழகுச் செய்வது தாமரை... 

*இன்னல் சூழினும், துணைவனுக்குத் துணையாக இருந்து, குடும்பத்தை சீர்   செய்பவள் தாமரை மலருக்கு ஒப்பாவாள்...

*குடும்பத்தின் வெற்றியில் பெண்ணுக்கும் பங்குண்டு... அந்தக்கடமையை உணர வேண்டும்... பார்ப்பனன் பெண்ணை அடுப்படி மற்றும் படுக்கையறை பொருளாக மட்டுமே பாவிப்பான்... குடும்பப் பொறுப்பை  நல்கான்...

                            ---------------------------------------------------------------------

பெறியின்மை  யார்க்கும்  பழியன்று  அறிவறிந்து 

ஆள்வினை  இன்மை  பழி.                                  - 618.

உடல் ஊனம் என்பது எவருக்கும் குறையல்ல...  ஆனாலும்,    சிந்தித்து செயல் படாமலும் - மூடத்தனமாகவும் - பகுத்தறிவும் இன்றி - இருத்தலே குறையாகும்...   

                    ---------------------------------------------------------------------------------  

அரசியல்                                    அரங்க கனகராசன் உரை.

தெய்வத்தான்  ஆகாது  எனினும்  முயற்சிதன்

மெய்வருத்தக்  கூலி  துரம்.                          -619.

கடவுளேக் கிடையாது... இந்நிலையில் தெய்வம் என்று சொல்லப் படுபவைகளால் எந்தப் பலனும் ஆகாது... ஆனாலும், தன்னம்பிக்கையோடு செயல்படுவோருக்குமுயற்சிக்கேற்ப   பலன் கிட்டும்...

*உழைப்பை நம்பு... உய்வுக் கிட்டும்...

                                     ---------------------------------------------------------------------------------------

ஊழையும்  உப்பக்கம்  காண்பர்  உலைவின்றித் 

தாழாது  உயஞற்று  பவர்.                                  -620.

தடைகள் தகர்த்தெறிவர்... எவெரெனில்? இன்னல் கண்டு, தளராமல், மேலும் மேலும் முயற்சி செய்வோர், தடைகள் தகர்த்து  வெற்றியின் இலக்கை அடைவர்...   

*கடவுள் செயல் இதுவென்றும், விதியென்றும் மனம் தளராமல், முயற்சிப்போரால் தடைகள் தகர்க்கப்படும்...

                                     -------------------------------------------------------------------------------

அரசியல்                                               அதிகாரம் :63.

                            இடுக்கண் அழியாமை.

இடுக்கண்  வருங்கால்  நகுக  அதனை 

அடுத்தூர்வது  அஃதொப்பது  இல். -621.

துன்பம் கண்டு துவளால் கூடாது... புன்சிரிப்புடன் அதனை எதிர்க் கொள்ளல் வேண்டும்... துன்பத்திலிருந்து விடுப்பட,  புன்னகையுடன் கூடிய சவாலைப் போல் துணையாவது வேறு எதுவும் இல்லை.

*துன்பம் எதனால் என அறிந்து, தடைகள் இருப்பின் தகர்த்து முன்னேறும் வழி காணல்  வேண்டும்... கடவுள் என்பதன் மீது பழி போட்டு  சோர்ந்துப் போவதோ  அல்லது கடவுள் எனப்படுவதற்கு நேர்த்திக் கடன் செய்வதோ பகுத்தறிவற்ற பார்ப்பனன் சிந்தனை... எதையும் தாங்கும் நெஞ்சோடு புன்னைகையோடு துன்பத்தை எதிர்க் கொள்ள வேண்டும்...

                              -----------------------------------------------------------------------------

வெள்ளத்  தனைய  இடும்பை  அறிவுடையான் 

உள்ளத்தின்  உள்ளக்  கெடும்.                         -622.

வெள்ளம் பெருகுவது போல், அடுத்தடுத்துத் துன்பம் வரினும், பகுத்தறிவாளன் மனம் தளர மாட்டான்... துன்பத்தின் நிலை ஏனென ஆராய்வான்... நிலையைக் கண்டறிந்து, துன்பம் களைவான்... 

*கடவுள் எனும் பொய்மையை நினைந்து, கால விரயம் ஆக்கி ஏமாறமாட்டான்...

                         ---------------------------------------------------------------------------

இடும்பைக்கு  இடும்பை  படுப்பர்  இடும்பைக்கு 

இடும்பை  படாஅ  தவர்.                                   -623.

துன்பத்துக்கே துன்பமா? இதென்ன வேடிக்கை?... வேடிக்கையல்ல இதுதான்  உண்மை... துன்பங்கண்டு துவளாமல், துணிவுடன் செயல்படுவோரிடம் துன்பம் துன்பத்துடன் வெளியேறி விடும்...

*துவளாமல், துன்பத்தை எதிர்க் கொண்டால், துன்பத்திற்கேத் துன்பம் செய்தது போலாகும்... 

                              -------------------------------------------------------------------------------------

மடுத்தவா   யெல்லாம்  பகடன்னான்  உற்ற 

இடுக்கண்  இடர்ப்பாடு  உடைத்து.          -624.

                                                     பகடு = ஆண் யானை.

தடத்தில் எதிர்ப்படும் தடைகளைத் தகர்ப்பதில் ஆண் யானை நிகரற்றது... அதனைப் போல், துணிவுடன் துன்பமதை எதிர்க் கொண்டால், துன்பம் யாவும் தூளாகும்...

                      -------------------------------------------------------------------------------------

அரசியல்                                   அரங்க கனகராசன் உரை.

அடுக்கி  வரினும்  அழிவிலான்  உற்ற  

இடுக்கண்  இடுக்கட்  படும்.          -625.

சங்கிலித் தொடர் போல், அடுத்தடுத்து துன்பங்கள் பல வரினும், துன்பம் கண்டு துவளாதவன் எவனோ, அவனை நெருக்கும் துன்பம் நொறுங்கி விடும்...

                      --------------------------------------------------------------------------------

அற்றேமென்று  அல்லற்  படுபவோ  பெற்றேமென்று

ஓம்புதல்  தேற்றா  தவர்.                                             -626.

எல்லாமும் இழந்தோமே என்று கதறுவதேன்?...  ஈட்டப்பட்டச் செல்வத்தை பாதுகாக்கத் தவறிவிட்டு, இப்போது கதறுவதேன்...

*ஈட்டப்பட்ட செல்வத்தை பாதுகாக்க தவறிவிட்டு, இழப்பை நினைத்து வருந்துவது மடமை...

                     --------------------------------------------------------------------------------------

இலக்கம்  உடம்பிடும்பைக்  கென்று  கலக்கத்தைக்  

கையறாக்  கொள்ளாதாம்  மேல்.                          -627.

உடம்பு என்பது துன்பத்திற்கும் இடமானது என்று உணர்ந்தோர், துன்பத்தின் போது கலக்கம் கொள்ளார்... ஏனெனில்?   பகுத்தறிவு மிக்க மேலான சிந்தனை  கொண்டிருப்பர் அவர்...

*உடல் நலம் குன்றுங்காலத்தில், தகுந்த வழியில் தீர்வு காணாது, கடவுளே இப்படிப் படைத்தாயே, என்று மூடர் புலம்புவர்....

                              -------------------------------------------------------------------------

இன்பம்  விழையான்  இடும்பை  இயல்பென்பான் 

துன்பம்   உறுதல்  இலன்.                                      -628.

இன்பத்தில்  திளைக்கவும் மாட்டான்... துன்பச்செயலை விதி எனவும் கருத மாட்டான்... எவனினில்?... துன்பமும் ஓர் இயற்கை என்று அறிபவன், துன்பம் நேரும்போது துயரங்கொள்வதில்லை...

*இன்பத்தில் தம்மை மறப்பதும், துன்பத்தில் துவள்வதும் பகுத்தறிவாளர் செய்யார்...

                     --------------------------------------------------------------------------------------

அரசியல்                                                           திருக்குறள் உரை.

இன்பத்துள்  இன்பம்   விழையாதான்  துன்பத்துள் 

துன்பம்  உறுதல்  இலன்.                                        -629.

இன்ப உணர்வுகளுக்கு  மயங்காதவன், துன்பம் வந்துற்ற போதும் துயரம் கொள்ள மாட்டான்...

                       ----------------------------------------------------------------------------------------

இன்னாமை   இன்பம்  எனக்கொள்ளின்  ஆகுந்தன் 

ஒன்னார்  விழையும்  சிறப்பு.                                 - 630. 

மகிழ்ச்சிப் பெருகும் போது அதிமயக்கம் கொள்ளக் கூடாது எனும் நெறியோடு செயல்பட வேண்டும்... இப்பண்புதனைப் பகைவனும்   பாராட்டுவான்...

                           -----------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                               அதிகாரம் :64.

                                    அமைச்சு 

கருவியும்  காலமும்  செய்கையும்  செய்யும் 

அருவினையும்  மாண்டது  அமைச்சு.     -631.

ஒரு செயலுக்கான நோக்கம், காலம், பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் காலவரம்பு இதனால் கிட்டும் பலன் என்னவென்று  அறிந்திருப்பது அமைச்சரின் அறிவார்ந்த திறனாகும்... 

                   -------------------------------------------------------------------------------------------

வன்கண்  குடிகாத்தல்  கற்றறிதல்  ஆள்வினையோடு 

ஐந்துடன்  மாண்டது  அமைச்சு.                                   -632.

அஞ்சாநெஞ்சம், மக்களின் பாதுகாப்பு, புதியநூல்கள் கற்றல் புதியக் கருத்துகள் அறிதல்  மற்றும் செயலூக்கம் என இவ்வைந்து சிறப்புகளுடன் விளங்குபவனே  அமைச்சன்...

                   -------------------------------------------------------------------------------------------

 பிரித்தலும்  பேணிக்  கொளலும்  பிரிந்தார்ப் 

பொருத்தலும்  வல்லது  அமைச்சு.           -633.

துரோகியை  இனம் கண்டு பிரித்தல் வேண்டும்... நாட்டுப்பற்று மிக்கோரையும், நாட்டு நலனில் நன்றியுணர்வுக் கொண்டோரையும் கண்டறிந்து அவர்களின் தொடர்பை வளமாக்கிக் கொள்ள வேண்டும்...  கருத்து மாறுபாடு நிர்வாகத்தில் விரிசல் ஏற்படலாம்... விரிசல் வளர விடாமல் சீர் செய்திட வேண்டும்... பேச்சில் உண்மையும் தெளிவும் வேண்டும்... அமைச்சன் என்போன் இத்தகையோனாக இருக்க வேண்டும்...

                                -----------------------------------------------------------------------------------

தெரிதலும்  தேர்ந்து  செயலும்  ஒருதலையாச் 

சொல்லலும்  வல்லது  அமைச்சு.                -634.

எதையும் அலட்சியம்  செய்தல் கூடாது... நாட்டு நிகழ்வுகளை நாள்தோறும் தெரிந்துக் கொள்ள வேண்டும்... நன்கு ஆய்வு செய்தப் பின்னரே, திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்... தமதுக் கருத்தைத் தெளிவுடன் கூறல் வேண்டும்... இவற்றில் வல்லவனாக அமைச்சன் திகழ வேண்டும்...

                               -------------------------------------------------------------------------------

அறனறிந்து  ஆன்றமைந்த  சொல்லான்  எஞ்ஞான்றும் 

திறனறிந்தான்  தேர்ச்சித்  துணை.                                -635.

நீதிமுறையை நன்கறிந்தவனாகவும், துல்லியமாக எடுத்துரைப்பவனாகவும், துறைகள் பற்றிய நுட்பம் உடையவனாகவும் இருப்போனை துணையாகக் கொள்ள  வேண்டும்...

                     ---------------------------------------------------------------------------

அமைச்சியல்                                      அரங்க கனகராசன் உரை.

மதிநுட்பம்  நூலோடு  உடையார்க்கு  அதிநுட்பம் 

யாஉள  முன்நிற்  பவை.                                        -636.

இயல்பான அறிவும், நூலறிவும் ஒருங்கே உடையவர்க்கு தெரியாதது என எதுவுமுண்டோ?...

                       -------------------------------------------------------------------------------------

செயற்கை  அறிந்தக்  கடைத்தும்  உலகத்து 

இயற்கை  அறிந்து  செயல்.                       -637.

பலபுதியனக் கண்டுபிடிக்கப் பட்டாலும், அவைகள் மாந்தர் வாழ்வுக்கு ஏற்புடையதா  என அறிந்து செயல்பட ஒப்புதல்  தர வேண்டும்...

                    --------------------------------------------------------------------------------------

அறிகொன்று  அறியான்  எனினும்  உறுதி 

உழையிருந்தான்  கூறல்  கடன்.         -638.

ஆட்சியாளன் அறியவேண்டியதை  அறியாமல் இருந்த போதிலும், அதனை தக்கவாறு எடுத்துரைக்கும் கடமை  உடனிருக்கும் அமைச்சனுக்கு உண்டு...

                       -----------------------------------------------------------------------------------------

பழுதென்னும்  மந்திரியின்  பக்கத்துள்  தெவ்வோர் 

எழுபது  கோடி  உறும்.                                               -639.

தீய ஆலோசனைகள் வழங்குவோன் அமைச்சனாக அருகில் இருப்பது, ஆட்சியாளனைச் சுற்றிலும்   எழு மடங்கில்  பகைவர் இருப்பது போலாகும்...

                           --------------------------------------------------------------------------------------------

முறைபடச்  சூழ்ந்தும்  முடிவிலவே  செய்வர் 

திறப்பாடு  இலாஅ  தவர்.                              -640.

தக்க ஆலோசனை  வழங்கும்  அமைச்சர்  பலர் சூழ்ந்திருப்பர்... ஆயினும், அமைச்சரின் ஆலோசனையை செவி மடுக்காமல் தன்னிச்சையாகத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவான்  ஆட்சியாளன்... ஆய்வு செய்யப்படாத அத்திட்டங்கள் தோல்வியைத் தழுவும்... பொருள் விரயம் ஏற்படும்... ஏனெனில் இயல்பாகவே, பகுத்தறியும் திறன் இன்மையால் ஆட்சியாளனின் செயல் யாவும் விரயமாகும்...

                     -----------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                  அதிகாரம் :65.

                              சொல்வன்மை 

நாநலம்  என்னும்  நலனுடைமை  அந்நலம் 

யாநலத்து  உள்ளதூஉம்  அன்று.             -641.

பேச்சால் பிறரை ஈர்ப்பது  என்பது  அருங்கலையாகும்... நன்மைத் தரத்தக்க பேச்சாற்றலையும் செல்வம் என்றும் கூறலாம்... அக்கலை பிறக் கலைகளிலிருந்து மாறுபட்டு சிறப்புடன் விளங்குகிறது...

                           ---------------------------------------------------------------------------------

ஆக்கமும்    கேடும்    அதனால்     வருதலால்  

காத்தோம்பல்  சொல்லின்கண்  சோர்வு. -642.     

நன்மையும்தீமையும் பேசும் பேச்சாலும் வரும்... அதனால், நன்மையானவற்றை மட்டும் பேசுதல் வேண்டும்... தீமை பயப்பதை பேசுதல் கூடாது...

                      -----------------------------------------------------------------------------------------

கேட்டார்ப்  பிணிக்குந்  தகையவாய்க்  கேளாரும் 

வேட்ப  மொழிவதாஞ்  சொல்.                            -643.

பேச்சால் பிறரைத் தம் பக்கம் ஈர்த்திட, நயமாகப் பேசுதல் வேண்டும்... செவி மடுக்காதவர்களும்  செவி மடுக்கும் வண்ணம் -அவர்களின் ஈர்ப்பை ஈர்க்கும் வண்ணம்தெளிவாகப் பேசுதல் வேண்டும்...

                     ----------------------------------------------------------------------------------

திறனறிந்து  சொல்லுக  சொல்லை  அறனும் 

பொருளும்  அதனினூஉங்கு  இல்.            -644.

குழுமியுள்ளோரின்  கேட்கும் நுணுக்கம்  அறிந்து பேசுதல் நன்று... கேட்போரின் புரிதல் மொழியில் - எளிய மொழியில் எவரும் விளங்கிடப் பேசுதல் - பேசவேண்டும்...  நீதியையும், நெறியையும் நிலைநாட்டிட, பேச்சாற்றலைப் போல் பேராற்றல் மிக்கது இல்லை...

                         --------------------------------------------------------------------------------

சொல்லுகச்  சொல்லைப்  பிறிதோர்சொல்  அச்சொல்லை 

வெல்லுஞ்சொல்  இன்மை  அறிந்து.                                  -645.

சொல்லும் ஓர் ஆயுதம்  போன்றதே!... அதனால்; தகுந்தச் சொற்களைப் பேசுதல் வேண்டும்... பிறர் சொல்லால் வென்றுவிடாதபடி பொருள் செறிவுடன் சொற்களைப் பேசுதல் வேண்டும்...    

                        ------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                       திருக்குறள் உரை.

வேட்பதாஞ்  சொல்லிப்  பிறர்சொல் பயன்கோடல் 

மாட்சியின்  மாசற்றார்  கோள்.                              -646.

பிறர் விரும்பும் வண்ணம் பேசுதல்  வேண்டும்... பேசுகையில், பிறர் கூறியக் கருத்துகளை மேற்கோள் காட்டுவது பேச்சின் பொருளைக் கூட்டும்... ஆன்றோர் இதனை நெறியாகக் கொள்வர்...

                         --------------------------------------------------------------------------------------

சொலல்வல்லன்  சோர்விலன்  அஞ்சான்  அவனை 

இகல்வெல்லல்  யார்க்கும்  அரிது.                        -647.

நயமாகச் சொல்லுந்திறன், பொருள் செறிவுடன் அஞ்சாமல் கருத்துகளை எடுத்துரைத்தல் என இத்தகைய பண்புடையோனை சொற்போரில் வெல்லுதல் எவருக்கும் எளிதல்ல.

                         -----------------------------------------------------------------------------------

விரைந்து  தொழில்கேட்கும்  ஞாலம்  நிரந்தினிது 

சொல்லுதல்  வல்லார்  பெறின்.                          -648.

அறிவுறுத்தல் கேட்டு, அதன்படியே விரைவாக வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வர்  மக்கள்... எவருடைய அறிவுறுத்தல் எனில்?     இவ்வுலகின் உய்வில் நலம் கொண்டு, நெறிப்படுத்தும்  பகுத்தறிவாளரின்  அறிவுரையை மக்கள் தேடிவந்து கேட்பர்... 

                                  ----------------------------------------------------------------------------------

பலசொல்லக்  காமுறுவர்  மன்றமா  சற்ற

சிலசொல்லல்  தேற்றா  தவர்.              -649.

பொருளற்றதை பேசுவர்... சொன்னதையே திரும்பத்  திரும்பச் சொல்லுதல் என்பது  சிலரின் வாடிக்கையாகும்...  அத்தகையோருக்கு அவையில் எப்படிப் பேசுதல் வேண்டும் என்று தெரியாது... சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் எனும் கலையை அறியாதார் ஆவர் அவர்...

                         -------------------------------------------------------------------------------------

இணர்ஊழ்த்தும்  நாறா  மலரனையர்  கற்றது 

உணர  விரித்துரையா  தார்.                          -650.

ஒரு சில மலர்கள் கொத்துக் கொத்தாய் அழகாகப் பூக்கும்... ஆனால்; மணமிருக்காது... மணமில்லா  மலர் போன்றவர் யாரெனில்? தாம் கற்றதை பிறர் உணரும் வண்ணம் பேசத் தெரியாதவர்... 

                                    -----------------------------------------------------------------------

அமைச்சியல்                                                  அதிகாரம் :66.

                            வினைத்தூய்மை 

துணைநலம்  ஆக்கம்  தரூஉம்  வினைநலம் 

வேண்டிய  எல்லாம்  தரும்.                        -651.

நல்ல நட்பு, நல்ல பழக்கத்தைத்  தரும்... தூய்மையானச் செயல்பாடு நற்புகழ்  அனைத்தையும்  தரும்...

                        -----------------------------------------------------------------------------------

என்றும்  ஒருவுதல்  வேண்டும்  புகழொடு 

நன்றி  பயவா  வினை.                            -652.

தேவையில்லாதச்  செயலைத் தவிர்த்துவிட வேண்டும்... ஏனெனில்? அத்தகு செயலால் நற்புகழும் கிட்டாது... நன்மையும் விளையாது...

                      ------------------------------------------------------------------------------

ஓஒதல்  வேண்டும்   ஒளிமாழ்கும்  செய்வினை 

ஆஅதும்  என்னு  மவர்.                                       -653.

தீயச்செயல்களை  அறவே புறக்கணிக்க வேண்டும்... ஏனெனில்? தீயச்செயல்களால் நற்புகழ் கெடும்... பிறரும்  போற்றத்தக்க  வாழ்வு வாழவேண்டும் என்ற நெறிக் கொண்டோர், தீயச்செயல்களை அறவே புறக்கணிப்பர்...

                           --------------------------------------------------------------------------------

இடுக்கட்  படினும்  இளிவந்த செய்யார் 

நடுக்கற்ற  காட்சி  யவர்.                   -654.

மிகக் கடுமையானத் துன்பம் நேர்ந்தாலும், இழிவானச் செயல்களைச் செய்யத் தலைப்பட மாட்டாதவர் எவரெனில்? தெளிவானச் சிந்தனையாளர் ஆவர்...

                            --------------------------------------------------------------------------------

எற்றென்று  இரங்குவ  செய்யற்க  செய்வானேல் 

மற்றன்ன  செய்யாமை  நன்று.                          -655.

காலமெல்லாம் வருந்தும்படியான, தவறானச் செயல்களை ஒருபோதும் செய்தல் கூடாது... ஏதோ சூழலில் அறியாமல் தவறு செய்து விட்டாலும், மீண்டும் அதனை  செய்யாதிருத்தல் நல்லது... 

                     ------------------------------------------------------------------------------------

ஈன்றாள்  பசிகாண்பான்  ஆயினும்  செய்யற்க 

சான்றோர்  பழிக்கும்  வினை.                       -656.                     

தாயினும் உயர்ந்தோர் இல்லை... ஆயினும் தாயே பசியால் துடிக்க நேர்ந்தாலும், தீமை செய்தல் கூடாது... சான்றோர்  எச்சூழலிலும் தீமையை ஒப்புக் கொள்வதில்லை... 

                               -----------------------------------------------------------------------------

அமைச்சியல்                              அரங்க கனகராசன் உரை.

பழிமலைந்து  எய்திய  ஆக்கத்தின்  சான்றோர் 

கழிநல்  குரவே  தலை.                                     -657.

மேலும் மேலும் குற்றம் புரிந்து, தவறான வழியில்  ஈட்டப்படும் செல்வத்தைவிடசான்றோரிடம் தாண்டவமாடும் வறுமை நிலையே மேலானது...

*ஊழல் புரிவதைவிட வறுமையோடு எதிர்நீச்சல் போடுவதே அறமாகும்...

                                 ------------------------------------------------------------------------

கடிந்த  கடிந்தொரார்  செய்தார்க்கு  அவைதாம் 

முடிந்தாலும்  பீழை  தரும்.                              -658.

சான்றோரால் சுட்டிக் காட்டப்பட்ட தீமையானச் செயல்களை விலக்கிவிட வேண்டும்... மாறாக; சான்றோரின் நன்மொழிகளைப் புறக்கணித்து - நீதிக்குப் புறம்பாக - செல்வம் குவிப்பாருண்டு... தவறான வழியில் ஈட்டி, செல்வந்தன் என்ற நிலையை எய்திவிட்ட போதிலும், குற்ற வடுக்கள் நீங்காமல் தீயவிளைவுகளுக்குப் பாதையாகும்...

*கோலத்தை மாற்றினாலும், குற்றத்தின் சுவடுகள் அழியாது... அது தடயமாக இருந்து, தண்டனைக்கு வழிவகுக்கும்...

                           -------------------------------------------------------------------------------------

அழக்கொண்ட  எல்லாம்  அழப்போம்  இழப்பினும் 

பிற்பயக்கும்  நற்பா  லவை.                                     -659.

பிறரை வஞ்சித்து, வேதனையில் ஆழ்த்தி - செல்வத்தைக் கவர்ந்து விட்டாலும், செல்வத்தை பறிகொடுத்தோர்  கண்ணீர் கதறி அழுவது போல்தவறான வழியில் ஈட்டப்பட்ட செல்வம் என்று அரசுக்குத் தெரிய நேர்ந்தால், அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்... கடுந்தண்டனைக்கும் உள்ளாக நேரிடும்... அதே அழுகை நேரும்... அழுது புரண்டாலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்வம் மீளாது... ஆனால்; நேர்மையான வழியில் ஈட்டப்பட்ட செல்வம் இழக்க நேரிட்டாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் திரும்பவும் செல்வத்தை ஈட்டிவிடலாம்... 

*தவறான வழியில் பொருள் குவித்தால், தப்பாமல் தண்டனையுண்டு... 

                 -------------------------------------------------------------------------------------

சலத்தால்  பொருள்செய்தே  மார்த்தல்  பசுமட் 

கலத்துள்நீர்  பெய்திரீஇ  யற்று.                   -660.

வஞ்சனையால்  பிறரை  ஏமாற்றி பொருள் பறிப்பது என்பது, ஈரமண்ணில் வெய்யப்பட்ட சட்டியின் ஈரம் காய்வதற்குள், சட்டியில் நீரூற்றி வைத்தல் போன்றதாகும்...

*ஏய்த்துப் பிழைத்தால், தடயம் கசிந்துக் காட்டிக் கொடுத்துவிடும்...

                  ----------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                               அதிகாரம் :67.

                                       வினைத்திட்பம் 

வினைத்திட்பம்  என்பது  ஒருவன்  மனத்திட்பம் 

மற்றைய  எல்லாம்  பிற.                                         -661.

உறுதியானச் செயல்பாடு ஒருவனது மனவுறுதியின்  வினையாகும்... மற்றவை எல்லாம் மனவுறுதிக்குப் பிறகுதான்...

*மனவுறுதியிருந்தால் மட்டுமே திறம்பட செயலாற்ற இயலும்... பிறரின் உதவியோ செல்வமோ மனவுறுதிக்கு அடுத்த நிலையுடையதாகும்...

                     ----------------------------------------------------------------------------------------

ஊறொரால்  உற்றபின்  ஒல்காமை  இவ்விரண்டின் 

ஆறென்பர்  ஆய்ந்தவர்  கோள்.                                   -662.

இடர்ப்பாடு வருமுன்னர் காத்தல், இடர்ப்பாடு வந்துற்றால், தளர்ந்து விடாமல் தடுத்தல் என இவ்விரண்டையும் ஒருவன் தெரிந்திருக்க வேண்டுமென்று தொழில் வல்லுநர் கூறுவர்... 

*காத்தலும், தடுத்தலும் கடமை யென்பது   நிர்வாக வியலாளரின்  கொள்கையாகும்... 

                    -------------------------------------------------------------------------------------------

கடைக்கொட்கச்  செய்தக்க  தாண்மை  இடைக்கொட்கின்  

எற்றா  விழுமந்  தரும்.                                                                  -663.

முழுமையாக, நிறைவேற்ற முடியும் என்று உறுதி செய்தப் பின்னரே, திட்டத்தை வெளிப்படுத்துதல்  வேண்டும்... அதுவே அறிவார்ந்தச் செயல்!... திட்டவரைவு முழுமை பெறும் முன்னரே, நடைமுறைப் படுத்த முயன்றால் திட்டத்தின் நோக்கம் சிதையும்...

                 ---------------------------------------------------------------------------------------------

சொல்லுதல்  யார்க்கும்  எளிய  அரியவாம்  

சொல்லிய  வண்ணம் செயல்.                  -664.    

எதனையும், எவரும் எளிதில் சொல்லிவிடலாம்... சொன்னதைச் சொன்னபடி செய்தல் என்பது  எளிதானதல்ல...

                          --------------------------------------------------------------------------------------

வீறெய்தி  மாண்டார்  வினைத்திட்பம்  வேந்தன்கண் 

ஊறெய்தி  உள்ளப்  படும்.                                                  -665.

சாகசம் செய்தோரின் செயல்பாடு, நாட்டின் தலைவனுக்குத்  தெரியவரும்போது, ஆட்சியாளன் சிறப்புச் செய்வான்...

*சாதனையாளர் அரசின் பாராட்டுதலுக்கு உள்ளாவர்...

                     ----------------------------------------------------------------------------------------- 

அமைச்சியல்                                          அரங்க கனகராசன் உரை.

எண்ணிய  எண்ணியாங்கு   எய்துப  எண்ணியார் 

திண்ணிய  ராகப்  பெறின்.                                         -666. 

எண்ணமதை நிறைவேற்றுவோர்  எவரெனில்? எண்ணமது நிறைவேற மனம் உறுதியுடன் செயலாற்றுவோரே எண்ணத்தை நிறைவுறுதல் செய்பவர் ஆவர்...

                    ----------------------------------------------------------------------------------------------

உருவுகண்டு  எள்ளாமை  வேண்டும்  உருள்பெருந்தேர்க்கு 

அச்சாணி  அன்னார்  உடைத்து.                                                 -667.

உருவில் மெலிந்தவன்... எப்படி ஆற்றல் உடையவன் ஆவான் என்று எள்ளி நகையாடல் கூடாது... மிகப்பெரியத் தேரின் அச்சாணி சிறியது என்றாலும் அதுதான் தேரை தாங்கி நிற்கிறது... அதுபோல் உருவில் மெலிந்திருந்தாலும், உள்ளத்தால் உறுதியானவர் எனில் அவர் அச்சாணி போன்றவர் ஆவர்...

                         -----------------------------------------------------------------------------------

கலங்காது  கண்ட  வினைக்கண்  துளங்காது 

தூக்கங்  கடிந்து  செயல்.                                  -668.

குழப்பம் கூடாது... நோக்கம் எதுவோ அதன் பொருட்டு சிந்தித்தல் வேண்டும்... மனம் தளரக் கூடாது...  மனஉறுதியுடன் சோர்வுக்கு இடமின்றி செயலாற்ற வேண்டும்...

                             -------------------------------------------------------------------------------------

துன்பம் உறவரினும்  செய்க  துணிவாற்றி 

இன்பம்  பயக்கும்  வினை.                       -669.

முடியும் என்று திட்டமாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும்... தடைகளையும் - தடங்கல்களையும் - துணிவுடன் எதிர்க் கொள்ள வேண்டும்... துன்பம் என்று கருத்தப்பட்டவை  துணிவுமிகு செயலால் இன்பமாக மாறும்...

                         -------------------------------------------------------------------------------------------

எனைத்திட்பம்  எய்தியக்  கண்ணும்  வினைத்திட்பம்

வேண்டாரை  வேண்டாது  உலகு.                                -670.

செல்வம், செல்வாக்கு என ஆயிரம் துணையிருப்பினும், ஒருவனிடத்தில் உறுதிமிகு  செயல்பாடு - திட்டவரைவு - இல்லையெனில் உலகோர்  அவனைப் பொருட்டாகக் கொள்ளார்...

                   ----------------------------------------------------------------------------------------      

அமைச்சியல்                                                      அதிகாரம் : 68

                                வினை செயல்வகை 

சூழ்ச்சி  முடிவு  துணிவெய்தல்  அத்துணிவு 

தாழ்ச்சியுள்  தங்குதல்  தீது.                        -671.

திட்டம்  வகுப்பது  என்பது, துணிவுடன் செயல்படுத்துவதற்குத் தான்... துணிவுக் கொள்ள தயக்கம் ஏற்படுமேயானால், நன்மை பயக்காது... திட்டம் பாழாகும்...

                           ------------------------------------------------------------------------------------------

தூங்குக  தூங்கிச்  செயற்பால  தூங்கற்க 

தூங்காது  செய்யும்  வினை.                   -672.

காலந்தாழ்த்தி நடைமுறைப் படுத்துவதால் தவறில்லையெனில் தாமதிப்பதில் தவறில்லை... ஆனால்; தாமதிக்காமல் செய்ய வேண்டியதை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்...

                            ------------------------------------------------------------------------------------------------

ஒல்லும்வா  யெல்லாம்  வினைநன்றே  ஒல்லாக்கால் 

செல்லும்வாய்  நோக்கிச்  செயல்.                                     -673.

எங்கெங்கு செயல்படுத்தக் கூடுமோ  அங்கங்கு செயல் படுத்துக... ஒருக்கால், திட்டத்திற்கு சில இடங்களில் எதிர்ப்பு இருக்குமேயானால் அம்மக்களின் உணர்வுகளுக்கு இடமளித்து செயல்படுத்திட வேண்டாம்... ஏற்புடைய மக்கள் மனமறிந்து நல்வினை ஆற்றவதே நன்று...

*மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்... 

                            ---------------------------------------------------------------------------------------

வினைபகை  என்றிரண்டின்  எச்சம்  நினையுங்கால்         

தீயெச்சம்  போலத்  தெறும்.                      -674.

நற்செயல்  என்றாலும், பகையை வேரறுத்தல் என்றாலும் இவ்விரண்டின் செயல்பாடும்,  முழுமையாக இருக்க வேண்டும்... பகுதியில் விட்டால் அது பின்னர், தீயின் சுவடுப் போல் சுடத் தொடங்கும்... எதிர்விளைவு தீமையாகக் கூடும்...

                     ---------------------------------------------------------------------------------------

பொருள்கருவி  காலம்  வினையிடனொடு  ஐந்தும் 

இருள்தீர  எண்ணிச்  செயல்.                                      -675.

எதன் பொருட்டு - எதன் துணையோடு - எத்தனைக் காலத்தில் - எந்த நோக்கோடு - எந்த இலக்கை நோக்கிச் செய்தல் - என ஐந்து வகையிலும் அய்யமின்றி சிந்தித்து செயல்படல் வேண்டும்...

                  --------------------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                               திருக்குறள்  உரை.

முடிவும்  இடையூறும்  முற்றியாங்கு  எய்தும் 

படுபயனும்  பார்த்துச் செயல்.                        -676.

திட்டத்தின் அளவீட்டையும், ஏற்படும் இடையூறுகளையும்   கணக்கிட்டும், செயல் முடித்த பின்னர் கிட்டும் பலனையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்...            

                         ----------------------------------------------------------------------------------------

செய்வினை  செய்வான்  செயல்முறை  அவ்வினை 

உள்ளறிவான்  உள்ளம்  கொளல்.                             -677.

ஆற்றவிருக்கும் செயல்பாடுசெயல்படுத்தப் படுவோரின்  செயல்திறன், ஏற்கனவே செயல்பட்டோரின் படிப்பினைகள் என ஆராய்ந்துச் செய்வது நல்லது...

                      -----------------------------------------------------------------------------------------

வினையால்  வினையாக்கிக்  கோடல்  நனைகவுள்

யானையால்  யானையாத்  தற்று.                             -678.

ஒருசெயலைச் செய்யும் போதே  தொடர்புடையச் செயலைச் செய்து  முடித்தல் எப்படிப்பட்டதெனில்? பழகிய யானையைக் கொண்டு இன்னொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்...    

                       -----------------------------------------------------------------------------------------

நட்டார்க்கு  நல்ல  செயலின்  விரைந்ததே

ஒட்டாரை  ஒட்டிக்  கொளல்.                  -679.

நண்பனுக்கு உதவுதல் என்பது நற்செயலாகும்... அதைவிட விரைவானச் செயல் எதுவெனில்? பகைவனையும் நண்பனாக்கிக் கொள்ளல்...

                            --------------------------------------------------------------------------------

உறைசிறியார்  உள்நடுங்கல்  அஞ்சிக்  குறைபெறின் 

கொள்வர்  பெரியார்ப்  பணிந்து.                                     -680.

சீரியத் திட்டம் எனினும், நடைமுறைப் படுத்த போதியத் துணையில்லையேல், மனக்கலக்கம் கொண்டு தவித்தல் கூடாது... தக்கவர்களோடு இணைந்து வெற்றிக் காண  வேண்டும்... இது வெற்றியாளரின் இலக்கணமாகும்...

                          ---------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                                      அதிகாரம்:69.

                                                    தூது.

அன்புடைமை  ஆன்ற  குடிப்பிறத்தல்  வேந்தவாம் 

பண்புடைமை  தூதுரைப்பான்  பண்பு.                  -681.

அன்புக் கொண்டவன், குடும்பத்தில் சிறப்புகளை சேர்த்து இல்வாழ்வில் சிறந்து விளங்குவோன், நாட்டுப்பற்று மிக்கோன் என பண்புகளுடன் திகழ்பவன் எவனோ, அவனே தூதுவன்  ஆவான்... தூது உரைக்கும் பண்புநலம் மிக்கவன் ஆவான்...

                         ---------------------------------------------------------------------------------------------

அன்பறிவு  ஆராய்ந்த  சொல்வன்மை  தூதுரைப்பார்க்கு 

இன்றி  யமையாத  மூன்று.                                                       682.

அன்பும், பொது அறிவும்இடமறிந்து பேசுந்திறனும் தூதுவனுக்குத் தேவையான மிக முக்கிய மூன்றுக் கோட்பாடாகும்...

                     -------------------------------------------------------------------------------------------------

நூலாருள்  நூல்வல்லவன்  ஆகுதல்  வேலாருள் 

வென்றி  வினையுரைப்பான்  பண்பு.                  -683.

சுருங்கக் கூறுதல், விளங்க வைத்தல், சிறப்புற கூறுதல் என்பது தலைச் சிறந்த நூலாசிரியரின் இயல்பாகும்...  தலைச் சிறந்த நூலாசிரியனைப் போல்  இரு மாறுப்பட்ட  அணிகளுக்கிடையில், ஏற்பட்ட போர் நிகழ்வை - வெற்றி நிகழ்வை -  சிறப்பாக எடுத்துரைக்க வேண்டியது தூதுவனின் பண்பாகும்...

                          --------------------------------------------------------------------------------------------------

அறிவுரு  ஆராய்ந்த   கல்விஇம்  மூன்றன் 

செறிவுடையான்  செல்க  வினைக்கு. -684.         

பொது அறிவு, எளிதில் எவரையும் அன்போடு நோக்கும்  தோற்றம், மேம்பட்டக் கல்வி என இம்மூன்றிலும் சிறந்து விளங்குபவன் தூதுரைக்கும் பணிக்கு ஏற்றவன்...

                    ----------------------------------------------------------------------------------------------

தொகச்சொல்லித்  தூவாத  நீக்கி  நகச்சொல்லி 

நன்றி  பயப்பதாம்  தூது.                                          -685.

தொகுத்து நயமாக உரைக்க வேண்டும்... தேவையற்றச் சொற்களைத் தவிர்த்துவிட வேண்டும்... கோபமுற்றவனும் மனம் மகிழும் வண்ணம் நகைச்சுவை உணர்வுடன் பேசிட வேண்டும்... எதன் பொருட்டு தூதுப் பணிக்கப்பட்டதோ, அதன் பொருட்டு செயல்பட்டு வெற்றியை ஈட்டுவது தூதுவனின் பணியாகும்... 

                           ----------------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                  அரங்க கனகராசன் உரை.

கற்றுக்கண்  அஞ்சான்  செலச்சொல்லிக்  காலத்தால் 

தக்கது  அறிவதாம்  தூது.                                                   -686.

கற்க வேண்டியதைக் கற்று அஞ்சாமல் கருத்துகள்  கூறல் வேண்டும்...  பிறர் ஏற்கும் வண்ணம், மேற்கோள் காட்டி நயமாகப் பேசுதல் வேண்டும்...  சூழ்நிலையைப் பயன் படுத்தி சுவைப்படப் பேசுதல் வேண்டும்... தூதுவன் இவற்றை எப்போதும் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும்... 

                       ------------------------------------------------------------------------------------------------

கடனறிந்து  காலம்  கருதி  இடனறிந்து 

எண்ணி  உரைப்பான்  தலை.           -687.

கடமையுணர்வுடன்  காலத்தின்  தேவையைக் கருத்தில் அறிந்து, சூழ்நிலைக்கேற்ப உடனடியாக சிந்தித்து, உறுதியானக் கருத்துகளைச் சொல்பவனே சிறந்தத் தூதுவன்... 

                      -----------------------------------------------------------------------------------------------------

தூய்மை  துணைமை  துணிவுடைமை  இம்மூன்றின் 

வாய்மை  வழியுரைப்பான்  பண்பு.                               -688.

செயலில் - நல்லொழுக்கம் - தூய்மை, நட்பிலக்கணம், நெஞ்சில் துணிச்சல் இம்மூன்றின் நெறி நின்று தூதுரைப்பதுத் தூதுவர்களின் கடமையாகும்...

                   ----------------------------------------------------------------------------------------------

விடுமாற்றம்   வேந்தர்க்கு  உரைப்பான்  வடுமாற்றம் 

வாய்சோரா  வன்க  ணவன்.                                             -689.

தலைவன்  இதனை  இன்னாரிடத்தில்  உரைத்து வா என்றுக் கூறியதை, அதனை அன்னாரிடத்தில் உரைப்பவன்  எப்படி இருக்க வேண்டுமெனில்?

பிழைத்தரத்தக்கச் சொற்களைப் பேசாதவனாகவும், நெஞ்சுரம் மிக்கவனாகவும் தூதுவன் இருக்க வேண்டும்... 

                         ------------------------------------------------------------------------------------------

இறுதி  பயப்பினும்  எஞ்சாது  இறைவற்கு 

உறுதி  பயப்பதாம்  தூது.                            -690.

உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றாலும், முயற்சியைக் கைவிடாமல் தலைவன் இட்டக் கட்டளையை நிறைவேற்றுபவனே நல் தூதுவன்...

                               --------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                    அதிகாரம்:70.

                         மன்னரைச்  சேர்ந்தொழுகல்

அகலாது  அணுகாது  தீக்காய்வார்  போல்க 

இகல்வேந்தர்ச்  சேர்ந்தொழுகு  வார்.    -691.

அகலவும் கூடாது, நெருங்கவும் கூடாது, நெருப்பிட்டுக் குளிர் காய்வதுப் போல் இருக்க வேண்டும் யாரிடத்தில் எனில்? ஆட்சியாளனிடத்தில்!...

*ஆட்சியாளனிடத்தில் பணியாற்ற வாய்த்தால், அவனோடு மிகவும் உரிமைக் கொள்வதோ, விலகியிருப்பதோ கூடாது...

                 -------------------------------------------------------------------------------------------------------

மன்னர்  விழைப  விழையாமை  மன்னரால் 

மன்னிய  ஆக்கந்  தரும்.                                  -692.

ஆட்சியாளனின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளில் தலையிடாதிருக்க வேண்டும்... ஆயின், ஆட்சியாளனின் நன்மதிப்புக் கூடும்...

                                     -----------------------------------------------------------------------------

போற்றின்  அரியவை  போற்றல்  கடுத்தபின் 

தேற்றுதல்  யார்க்கும்  அரிது.                        -693.

ஆட்சியாளனின் நன்மையை - சாதனையை - வெற்றியை - புகழ்வதில் தவறில்லை... புகழ் மொழியும் வழிகாட்டுதல் போலாகும்... ஆனால்; தேவையற்ற புகழ் மொழிகள் கூடாது... தேவையற்ற புகழ்ச்சி, ஆட்சியாளனை மயக்கத்தில் ஆழ்த்தி தவறானப்  பாதையைக் காட்டக் கூடும்... ஆணவம், அகம்பாவம் உய்யலாம்...

பாதை மாற்றப்பட்டபின், ஆட்சியாளனை சீர்படுத்துதல் என்பது எளிதானதல்ல!...

                      -------------------------------------------------------------------------------------------------

செவிச்சொல்லும்  சேர்ந்த  நகையும்  அவித்தொழுகல் 

ஆன்ற  பெரியா  ரகத்து.                                                            -694.  

கருத்தரங்கில் கலந்துக் கொண்டும், கலந்துரையாடலில்  கருத்தூன்றாமல் அருகில் இருப்போரிடம் பேசிக் கொள்வதும், சிரித்து மகிழ்வதும் தவறு... சிரித்து மகிழவும், தமக்குள் பேசிக்கொள்ளவும் கருத்தரங்கில் கலந்துக் கொள்ள  வந்திருக்க வேண்டியதில்லை...  கருத்தரங்கின் வெளியிலேயே தம் சொந்தக் கருத்துகளை பரிமாறிக் கொண்டிருக்கலாம்... இப்படிப் பட்டோரின் பொறுப்பின்மை அவையினரை இகழ்ச்சிப் படுத்துவதாக அமையும்...

          ----------------------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                              திருக்குறள் உரை.

எப்பொருளும்  ஓரார்  தொடரார்மற்  றப்பொருளை 

விட்டக்கால்  கேட்க  மறை.                                          -695.

ஒருவர், கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கும் போது, கருத்தரங்கில் இருப்போர் செவி மடுக்க வேண்டும்... சிந்தையை சிதற விடலாகாது... மேலும், ஒருவர் உரை ஆற்றுகையில் குறுக்கீடும் செய்தல் கூடாது... உரையாற்றி முடித்தப் பின்னரே அய்யப்பாட்டை  வினவ வேண்டும்...

                     ----------------------------------------------------------------------------------------------

குறிப்பறிந்து  காலம்  கருதி  வெறுப்பில  

வேண்டுப  வேட்பச்  சொலல் .            -696.

நாடாள்வோனின்  மனநிலை  அறிந்து -தருணம் அறிந்து - மனம் நோகா வண்ணம்எதனைச் சொல்ல  விருப்பமோ, அதனைப்  பக்குவமாகச் சொல்ல வேண்டும்...

                            -------------------------------------------------------------------------------------------

வேட்பன  சொல்லி  வினையில  எஞ்ஞான்றும்

கேட்பினும்  சொல்லா  விடல்.                          -697.

நன்மைமிகு சொற்களைச் சொல்ல வேண்டும்... சிலநேரங்களில் ஆட்சியாளன் தகாதச் சொற்களை பேசும்படி வற்புறுத்தினாலும், பேசுவதைத் தவிர்த்து விட வேண்டும்... 

                          ----------------------------------------------------------------------------------------

இளையர்  இனமுறையர்  என்றிகழார்  நின்ற 

ஒளியோடு  ஒழுகப்  படும்.                              -698.

நாடாள்வோன் வயதில் இளையவராக இருக்கலாம்... பொறுப்பேற்று பணியாற்றியக்  காலம் குறைவாக இருக்கலாம்... ஆனால்; அதனைச் சுட்டிக் காட்டி, இகழ் மொழிக் கூறுதல் கூடாது...  அச்செயல், நாடாள்வோனின் பொறுப்பை இழிவுச் செய்தல் போலாகும்...  வகிக்கும் பொறுப்புக்கு உகந்த ஏற்றத்தை - மதிப்பைவழங்க வேண்டும்...

                  ------------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                                             திருக்குறள் உரை.

கொளப்பட்டேம்  என்றெண்ணிக்  கொள்ளாத செய்யார் 

துளக்குற்ற  காட்சி  யவர்.                                                      -699.

நாடாள்வோனிடம் நெருக்கமாகப் பழகிட  வாய்ப்பு அமைந்து  விட்டது என்பதற்காகவோ - அல்லது; நாடாள்வோன் மிக முக்கியத்துவம் தருகிறான் என்பதற்காகவோ - வரம்பு மீறிய எச்செயலையும் செய்யாதவர்கள்  எவரெனில்? அரசியல் நிலைப்பாட்டை அறிந்தவர் ஆவர்...

*நாடாள்வோனது பழக்கத்தை தவறாகப் பயன்படுத்தினால், ஊழல் பேர்வழியாக மாறிட நேரிடும் என்பதாலும், அதன் எதிர்விளைவு குற்றச்சாட்டுகளை அடுக்கும் எனும் அரசியல் நிலைப்பாட்டை அறிந்தோர் நாடாள்வோனின் பழக்கத்தை தவறாக பயன்டுத்த மாட்டர்...

                   ------------------------------------------------------------------------------------------------

பழையம்  எனக்கருதிப்  பண்பல்ல  செய்யும் 

கெழுதகைமை  கேடு  தரும்.                       -700.

நாடாள்வோன் நெடுநாள் நண்பன் என்பதற்காக அத்துமீறியச் செயல்களை செய்யத் துணியக் கூடாது... நட்புரிமையை தவறாக தவறாகப் பயன்படுத்தினால் தீமை உண்டாகும்...

                    -------------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                                          அதிகாரம் :71.

                                              குறிப்பறிதல் 

கூறாமை  நோக்கிக்  குறிப்பறிவான்  எஞ்ஞான்றும் 

மாறாநீர்  வையக்கு  அணி.                                            -701.

ஒருவனுடைய முகம் பார்த்து, அவனுடைய மனநிலையை  அறிகிறவன் என்றென்றும் அழிவின்றி, இவ்வுலகை சூழ்ந்து, அணிகலன் போல் திகழும் கடலுக்கு ஒப்பாவான்... 

                       -----------------------------------------------------------------------------------------------

ஐயப்  படாஅது  அகத்து  உணர்வானைத் 

தெய்வத்தோ  டொப்பக்  கொளல்.   -702.

           தெய்வம்   = இறைவன் 

           இறைவன் = கொடையாளன், ஒளி பொழியும் கதிரவன்.

அய்யப்பாட்டுக்கு இடமின்றி அடுத்தவனின் மன உணர்வுகளை வெளிப் படுத்துகிறவன்,  ஒளியால் உலகை வெளிப்படுத்தும் கதிரவனோடு ஒப்பாக்கிக் கொள்ளலாம்...

                     -----------------------------------------------------------------------------------------------------

குறிப்பிற்  குறிப்புணர்  வாரை  உறுப்பினுள்                      

யாது  கொடுத்தும்  கொளல்.                       -703.

முகத்தில்  தென்படும் சிறுகுறிப்பினைக் கொண்டு, அக உணர்வைப் புரிந்துக் கொள்வோரை, தமது உடைமைகளில் எதைக் கொடுத்தும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்...

                         --------------------------------------------------------------------------------------------

குறித்தது  கூறாமைக்  கொள்வாரோ  டேனை 

உறுப்போ  ரனையரால்  வேறு.                       -704.

முகக்குறிப்பைக் கொண்டு அகத்தில் உள்ளதை உணர்வோன் உருவ அமைப்பில் மானிடனாகத்  தெரிந்தாலும்அறிவினால் மாறுபட்டு இருப்பான்...

                            -------------------------------------------------------------------------------

குறிப்பிற்  குறிப்புணரா  வாயின்  உறுப்பினுள் 

என்ன  பயத்தவோ  கண்.                                   -705.

முகக்குறிப்பைக் கொண்டு  அகக்குறிப்பை உணராது போயின், உறுப்புகளில் ஒன்றான கண்களால் என்ன பயனோ?...

                            ----------------------------------------------------------------------------------------   

அமைச்சியல்                                              திருக்குறள் உரை.

அடுத்தது  காட்டும்  பளிங்குபோல்  நெஞ்சம் 

கடுத்தது  காட்டும்  முகம்.                               -706.

தனக்கு நேர் உள்ள பொருட்களை பளிங்குப் பிரதிபலிப்பது போல், நெஞ்சின் உணர்வை முகம் காட்டி விடும்... 

                            -----------------------------------------------------------------------------

முகத்தின்  முதுக்குறைந்தது  உண்டோ  உவப்பினும் 

காயினும்  தான்முந்  துறும்.                                            -707.

முகத்தைப்  போல் உணர்வுமிக்க உறுப்பு வேறு உண்டோ?... உள்ளம் மகிழ்ந்தாலும், உள்ளம் சோகம் கொண்டாலும் உள்ளத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் முகம் முந்திக் கொள்ளும்...

*மகிழ்வையும், துயரத்தையும் வெளிப்படுத்துவதில் முகம் முந்திக் கொள்ளும்...

                        ----------------------------------------------------------------------------------

முகம்நோக்கி  நிற்க  அமையும்  அகம்நோக்கி 

உற்ற  துணர்வார்ப்  பெறின்.                              -708.

முகம் நோக்கி உள்ளத்தில் மறைந்துள்ளதை  உணர்ந்து விடுவர்; முகக் குறிப்பியலாளர்...

                      ------------------------------------------------------------------------------

பகைமையும்  கேண்மையும்  கண்ணுரைக்கும்  கண்ணின் 

வகைமை  உணர்வார்ப்  பெறின்.                                              -709.

பகை கொண்டுள்ளானா? உள்ளத்தில் நட்புக் கொண்டுள்ளானாஎன்பதை, கண்கள்  காட்டிவிடும்... கண்கள் வழியே புலனறிவோர், இதனை அறிந்துவிடுவார்...

                         -------------------------------------------------------------------------------            

நுண்ணியம்  என்பர்  அளக்குங்கோல்  காணுங்கால் 

கண்ணல்லது  இல்லை  பிற.                                         -710.

ஒருபொருளின் சரியான அளவீடுதனை அறிய, அளக்குங் கருவிகள் உள்ளன என்பர்... ஆனால்; ஆராய்ந்துப் பார்த்தால், கண்களைப் போன்று துல்லியமாக மதிப்பீடு செய்யும் கருவி வேறில்லை என்பதே உண்மை...

                          --------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                                      அதிகாரம் :72.

                                               அவைஅறிதல் 

அவையறிந்து   ஆராய்ந்து  சொல்லுக  சொல்லின் 

தொகையறிந்த  தூய்மை  யவர்.                              -711.

எப்பொருள் குறித்துப் பேச, அவைக் கூட்டப்பட்டுள்ளதோ, அப்பொருளை நன்கறிந்து பேசுதல் வேண்டும்... சொற்களின் பயன்பாடறிந்த - சிந்தனையில் தெளிவுக் கொண்டோர் - அவ்வண்ணமே பேசுவர்...

                           ------------------------------------------------------------------------------------

இடைதெரிந்து  நன்குணர்ந்து  சொல்லுக  சொல்லின் 

நடைதெரிந்த  நன்மை  யவர்.                                         -712.

அவையின் பொருள் தெரிந்து, அவையோர் கருத்தினை நன்கு உள்வாங்கி, கருத்துரைக்க வேண்டும்... சொற்களின் வீச்சறிந்து - தெளிவுடன் பேசுவோர் இவ்வண்ணமே பேசுவர்... 

                       -------------------------------------------------------------------------------

அவையறியார்   சொல்லல்மேற்  கொள்பவர்  சொல்லின் 

வகையறியார்  வல்லதூஉம்  இல்.                                         -713.

அவைக் கூட்டப்பட்டதேன் என அறியாமல் பேச முற்பட்டு, ஏதேதோ பேசிடுவர்... இத்தகையோரின் பேச்சால் ஏதும் நன்மை விழையப் போவதில்லை...

                          -------------------------------------------------------------------------------

ஒளியார்முன்  ஒள்ளிய  ராதல்  வெளியார்முன் 

வான்சுதை  வண்ணம்  கொளல்.                       -714.

விஞ்ஞானம், கலை, இலக்கியம், அறிவியல் என கற்றோர் குழுமியுள்ள அவையில் பேசுகையில் -

விஞ்ஞானம், கலை, இலக்கியம், அறிவியல் என இவற்றிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசிட வேண்டும்...

ஏதுமறியா மக்களிடம் பேசும்போது, மக்களின் புரிதல் திறன் உணர்ந்து, அதற்கேற்பப் பேச வேண்டும்... 

*கற்றோர் முன் கலைச்சொற்களையும், எளியோர் முன் எளிய சொற்களையும் பேச வேண்டும்...

                         -----------------------------------------------------------------------------------

நன்றென்ற  வற்றுள்ளும்  நன்றே  முதுவருள் 

முந்து  கிளவாச்  செறிவு.                                   -715.

நற்பண்பு என்று சொல்லக்கூடிய  வகையில், மிகவும் சிறந்தப் பண்பு எதுவெனில்? அறிஞர் குழுமியுள்ள அவையில், அறிஞர் பேசத் தொடங்குவதற்கு முன், முந்திப் பேச கூடாது... அமைதியாக செவிமடுப்பது சிறந்தப் பண்பாகும்...

*மூத்தோரின் முதுமொழியை செவி மடுப்பது சிறந்தப் பண்பாகும்...

                              ------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                அரங்க கனகராசன் உரை.

ஆற்றின்  நிலைதளர்ந்  தற்றே  வியன்புலம் 

ஏற்றுணர்வார்  முன்னர்  இழுக்கு.            -716.

வலுவிழந்த  வயோதிகனை போல் காணப்படுவது  எதுவெனில்?...விஞ்ஞானத்தின் உதவியால், நாளும் நாளும் புதிது புதிதான  கண்டுப் பிடிப்புகளால், விந்தைமிகு இவ்வுலகின் செயல்பாட்டை அறிந்துவரும் அறிவியலாளரின் உண்மைக் கருத்துதனை மறுத்து, பழமைவாதம் பேசுதல்  ஆகும்... 

*பழமைவாதம் என்பது வலுவிழந்த முதுமையாகும்...

                     --------------------------------------------------------------------------------------

கற்றறிந்தார்   கல்வி  விளங்கும்  கசடறச் 

சொல்தெரிதல்  வல்லா  ரகத்து.           -717.

சிறப்பாகக் கல்வி கற்றுள்ளானா  அல்லது கற்ற கல்வியில், பிழையுள்ளதா  என்பதை ஒருவன் பேசும் பேச்சில் இருந்தே அறிஞர் பெருமக்கள் அறிந்து விடுவர்... 

                           --------------------------------------------------------------------------------

உணர்வ  துடையார்முன்  சொல்லல்  வளர்வதன் 

பாத்தியுள்  நீர்சொரிந்  தற்று.                                   -718.

நுண்ணிய அறிவுடையாரோடு பேசிப் பழகுதல் என்பது, செழித்து வளரும் பயிருக்கு பாத்தியுள் நீர் வார்த்தற் போலாகும்...

                         ---------------------------------------------------------------------------------

புல்லவையுள்   பொச்சாந்தும்  சொல்லற்க  நல்லவையுள் 

நன்கு  செலச்சொல்லு  வார்.                                                      -719.

தெளிவில்லாதவர்களின்  முன்னிலையில், மறந்தும் உரை நிகழ்த்தக் கூடாது...  அறிஞர் பெருமக்கள் கூடிய அவையில் பேசுந்திறன் மிக்கோர்... 

                         --------------------------------------------------------------------------------

அங்கணத்துள் உக்க  அமிழ்தற்றால்  தங்கணத்தார் 

அல்லார்முன்  கோட்டி கொளல்.               -720.

                                     அங்கணம் = சாக்கடை 

சாக்கடை நீரில், அமிழ்தம் கலந்தது போலாகும்; அறிவற்றார் முன் நிகழ்த்தும் உரை... 

*சாக்கடை நீரில் அமிழ்தம் கலந்தாலும், சாக்கடை நீர் அமிழ்தமாகாது... மூடர்முன் பேசும் பேச்சும் பயனற்றுப் போகும்...

                            ---------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                                            அதிகாரம் : 73.

                                           அவை அஞ்சாமை 

வகையறிந்து   வல்லவை  வாய்சோரார்  சொல்லின் 

தொகையறிந்த  தூய்மை  யவர்.                                  -721.

எவற்றைப் பேச வேண்டுமென்று அறிந்து, தெளிவுடன் பேசும் ஆற்றல் கொண்டோர், அவையில் அஞ்சவோ, தடுமாற்றம் கொள்ளவோ மாட்டர்... 

                         -----------------------------------------------------------------------------------

கற்றாருள்  கற்றார்  எனப்படுவர்  கற்றார்முன் 

கற்ற  செலச்சொல்லு  வார்.                              -722.

பேரறிஞர் என எவரை சொல்வரெனில்? கல்வியாளரும் ஏற்கும்படியானக் கருத்தை மொழிபவரே பேரறிஞர் எனப்படுவர்...

                       -------------------------------------------------------------------------------------

பகையகத்துச்  சாவார்  எளியர்  அரியர் 

அவையகத்து  அஞ்சா  தவர்.             -723.

போர்க்களம் சென்று வீரமரணம் எய்திட அநேகருண்டு... அவைக்களத்தில் சொற்போர் நிகழ்த்துவோர் ஒருசிலரே... ஆயினும் சொற்போரில் வெல்வோர் வீரஞ்செறிந்தவர் என்பர்... 

                       -----------------------------------------------------------------------------------

கற்றார்முன்  கற்ற  செலச்சொல்லித்  தாம்கற்ற 

மிக்காருள்  மிக்க  கொளல்.                                  -724.

தாம் கற்றதைக் கற்றவரிடத்தில் சொல்லி, தம்மினும் சிறப்பாகக் கற்றோர் சொல்வதைக் கேட்டு, தெரியாததைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்... 

                                  --------------------------------------------------------------------------------

ஆற்றின்  அளவறிந்து  கற்க  அவையஞ்சா 

மாற்றம்  கொடுத்தற்  பொருட்டு.             -725.

எப்பொருள் குறித்து அவை கூட்டப்படுகிறதோ, அப்பொருள் குறித்து நன்கறிந்திருக்க வேண்டும்... அறிந்திருந்தால், அவையின் கேள்விகளுக்கு ஈடுக் கொடுக்க முடியும்... 

                               -------------------------------------------------------------------------------------

அமைச்சியல்                                                           அரங்க கனகராசன் உரை.

வாளொடென்  வன்கண்ணர்  அல்லார்க்கு  நூலொடென் 

நுண்ணவை  அஞ்சு  பவர்க்கு.                                                 -726.

கோழையின் கையில் ஆயுதம் இருந்தாலும் ஏதும் பலனில்லை... அதுபோல்; நூல் பலக் கற்றும் பலனுண்டோ, அவையில் நுட்மானக் கேள்விகளுக்கு விடை கூற அஞ்சுவோர்க்கு!... 

                               ----------------------------------------------------------------------------------

பகையகத்துப்  பேடிகை  ஒள்வாள்  அவையகத்து 

அஞ்சு  மவன்கற்ற  நூல்.                                            -727.

கோழையின் கையில் கூராயுதம் இருப்பதுப் போல், அவை அஞ்சுபவனுக்கு படித்தப் படிப்பும் பலனற்றுப் போகும்...

                                -------------------------------------------------------------------------------------

பல்லவை  கற்றும்  பயமிலரே  நல்லவையுள் 

நன்கு  செலச்சொல்லா  தார்.                          -728.

பல்வேறு பல்கலைக் கழகங்களில் படித்திருந்தாலும், பயனுண்டோ... கற்றோர் குழுமியுள்ள அவையில் தெளிவாகப் பேசுந் திறன் இல்லையெனில்...

                             -----------------------------------------------------------------------------------

கல்லா  தவரின்  கடையென்ப  கற்றறிந்தும் 

நல்லார்  அவையஞ்சு  வார்.                        -729.

படிக்காதரைவிட மூடர் எவரெனில்தாம் கற்றதை, அவையின்  முன்னிலையில்நயமாக விவரிக்கத் தெரியாதவர்களை, கல்வியறிவற்ற மூடர் எனலாம்... 

                          -------------------------------------------------------------------------

உளரெனினும் இல்லாரொடு  ஒப்பர்  களன்அஞ்சிக்

கற்ற  செலச்சொல்லா  தார்.                                        -730.

உயிரோடு உலாவினாலும், சடலமாகவே கருத்தப்படக் கூடியோர் உண்டு... அவர் எவரெனில்? கற்றோர் குழுமிய  அவையில், தாம் கற்றதைத் திறம்பட பேசிட அஞ்சுவோர் சடலமெனக் கருதப்படுவர்... 

*பிணம் பேசுமோ?

                              ------------------------------------------------------------------------------

அரணியல்                                                                 அதிகாரம் :74.

                                                    நாடு 

தள்ளா  விளையுளும்  தக்காரும்  தாழ்விலாச் 

செல்வரும்  சேர்வது  நாடு.                                -731.

உழவு உட்பட எல்லாத் துறையிலும் தன்னிறைவு, அறிவியலர் மற்றும் மக்களைத் தாழ்வாகக் கருதாத செல்வந்தர் என இவ்விணக்கமே நாடு எனப்படும்... 

                          ------------------------------------------------------------------------------

பெரும்பொருளால்  பெட்டக்க  தாகி   அருங்கேட்டால் 

ஆற்ற  விளைவது  நாடு.                                                     -732.

பொருளாதாரத்தில் தன்னிறைவுக் கண்டு, எல்லாத் தரப்பினரும் ஒற்றுமையுடன் வாழ வழிவகுத்தும், சீரியத் திட்டத்தால் மேலும் மேலும் சிறப்பிடம் பெறுவதே நாடு எனப்படும்...                               

*பார்ப்பனர் ஊடுருவலுக்குப் பின்னர் இவ்விலக்கணம் தடம் புரண்டது...

                       --------------------------------------------------------------------------------

பொறையொருங்கு  மேல்வருங்கால்  தாங்கி  இறைவற்கு 

இறையொருங்கு நேர்வது  நாடு.                                               -733.

                                              இறை = அரசு.

இயற்கை சீற்றத்தால் நாட்டில் பேரழிவு நிகழும் போது, துவண்டு விடாமல் ஆட்சியாளரோடு சேர்ந்து பாதிக்கப்பட்டோரின் துக்கத்தில் பங்குக் கொண்டு, சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவோரைக் கொண்டு விளங்குவது நாடு.

*துன்பக் காலத்தில் உதவிடும் தொண்டுள்ளம்  கொண்ட அமைப்புகளைக் கொண்டதாக நாடு விளங்க வேண்டும்...   

                         -------------------------------------------------------------------------------------

உறுபசியும்  ஓவாப்  பிணியும்  செறுபகையும் 

சேரா  தியல்வது  நாடு.                                        -734.

கடும்பஞ்சமும், கொடுநோய்களும், உட்பகைவரும் இல்லாதிருப்பதே நாடு எனப்படும்...

                       -----------------------------------------------------------------------------------------

பல்குழுவும்   பாழ்செய்யும்  உட்பகையும்  வேந்தலைக்கும் 

கொல்குறும்பும்  இல்லது  நாடு.                                                 -735.

பொதுத் தன்மையின்றி மதம், கடவுள் எனும் பேரில் இயங்கும் பல்வேறு குழுக்களும், அருகிருந்து கெடுக்கும் பார்ப்பனர் போன்ற உட்பகைவரும்மக்களிடையே பகையை வளர்ப்போரும், ஆட்சியை சீர்குலைக்க முனையும் கொலைப் பாதகர்களும், ஆட்சிக்கு எதிரானக் கிளர்ச்சியாளரும் இல்லாதிருப்பதே நாடு எனப்படும்...

*பேதமற்ற அரசில் கிளர்ச்சி இராது...

                                 --------------------------------------------------------------------------------------

அரணியல்                                    அரங்க கனகராசன் உரை.

கேடறியாக்  கெட்ட  விடத்தும்  வளங்குன்றா 

நாடென்ப  நாட்டின்  தலை.                             -736.

பார்ப்பனர்  போன்றோரின் கெடுதியான எண்ணத்துக்கு இரையாகாமலும், பேரிடர் காலத்திலும் உழவு முதலான அனைத்துத் துறைகளிலும் பற்றாக்குறை ஏற்பட்டு விடாதபடி முன் உணர்வோடு இயங்கும் நாடே, எல்லா நாடுகளுக்கும் வழிகாட்டி எனப்படும்...

                      ------------------------------------------------------------------------------

இருபுனலும்  வாய்ந்த  மலையும்  வருபுனலும் 

வல்லரணும்  நாட்டிற்கு  உறுப்பு.                    -737.

நிலத்தடி நீர்வளம் மற்றும் மழை வளமும், மலை வளமும், ஆற்று வளம், நதிவளம் இவைகளோடு பாதுகாப்பு முறைகளும் ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான உறுப்புகளாகும்... 

                                  ------------------------------------------------------------------------

பிணியின்மை  செல்வம்  விளைவின்பம்  ஏமம் 

அணியென்ப  நாட்டிற்கிவ்  வைந்து.              -738.

                ஏமம் = செருக்கு, மண்பற்று.

பிணி நேராதிருக்க, நாட்டின் அனைத்து நிலைகளிலும் தூய்மை கடைப்பிடித்தல், வறுமையில்லா நிலை, உற்பத்திப் பெருக்கம், யாவருக்கும்  சமஉரிமையுடன் கூடிய வாழ்வு, மண்பற்று என இவ்வைந்தும் நாட்டிற்குப் பெருமை சேர்க்கக் கூடியவை ஆகும்...

                              -----------------------------------------------------------------------------

நாடென்ப  நாடா  வளத்தன  நாடல்ல 

நாட  வளந்தரு  நாடு.                         -739.

நாடு என்பது, பிறநாட்டின் ஆதரவின்றி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டதாகும்... பிற நாட்டிடம் நாடி  வாழ்வது நாடாகாது...

                             ------------------------------------------------------------------------------------

ஆங்கமை  வெய்தியக்  கண்ணும்  பயமின்றே 

வேந்தமை  வில்லாத  நாடு.                             -740.

நாட்டிற்குத் தேவையான வளம் அனைத்து  இருப்பினும், நாட்டிற்குப் பலன் உண்டாவெனில், பலனேதுமில்லை என்றே கூறலாம்... ஏனெனில், நாட்டின் வளத்தை நெறிப் படுத்தும் அரசு இல்லையெனில், வளங்கொண்ட நாடும் வறிய நாடாகும்...    

                            ---------------------------------------------------------------------------------------

அரணியல்                                                                     அதிகாரம்:75.

                                                  அரண் 

ஆற்று  பவர்க்கும்  அரண்பொருள்  அஞ்சித்தற் 

போற்று  பவர்க்கும்  பொருள்.                          -741.

போர் தொடுத்தவர்க்கும் அரண் நன்மையாகிறது... போருக்கு அஞ்சிப் பதுங்குவோர்க்கும் அரண் நன்மையாகிறது...

                          -------------------------------------------------------------------------------

மணிநீரும்  மண்ணும்  மலையும்  அணிநிழற் 

காடும்  உடையது  அரண்.                                -742.

எதிரிகளால் முற்றுகையிடப்படினும், நாட்டில் வறுமை சூழ்ந்திடாதிருக்க ஊற்றுநீர் இருக்க வேண்டும்... விளைச்சல் தரக்கூடிய நிலம் இருக்க வேண்டும்... மலைகள் சூழ்ந்திருக்க வேண்டும்... மலையுடன் கூடிய நிழல் தரக்கூடிய அடர்ந்தக் காடும் இருக்க வேண்டும்... இத்தகைய அமைப்பு அரணுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும்... 

                                 ----------------------------------------------------------------------------

உயர்வகலம்  திண்மை  அருமைஇந்  நான்கின் 

அமைவரண்  என்றுரைக்கும்  நூல்.               -743.

எளிதில் எதிரிகளால்  ஆட்கொண்டுவிடாதபடி நாட்டின் அரண் உயரமாகவும்அகலம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்... தாக்குதலின் போது சிதைவுறாத உறுதித் தன்மைக் கொண்டதாக அரண் இருக்க வேண்டும்... அரணில் இருந்து எதிரிகளைத் தாக்கவல்ல சிறப்புத் தன்மையுடனும், தொழிற்நுட்பத்துடனும் இருக்க வேண்டும்... இந்நான்கு சிறப்பும் அரணுக்குப் பெருமை சேர்க்கும் என்று அரண் தொழிற் நுட்பவியல் நூல்கள்  கூறுகின்றன...

                            --------------------------------------------------------------------------------

சிறுகாப்பிற்  பேரிடத்த  தாகி  உறுபகை 

ஊக்கம்  அழிப்பது  அரண்.                  -744.

பரப்பளவில் சிறிய இடத்தைக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பில் பெரும் வல்லமைக் கொண்டு விளங்குவது அரணாகும்... எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க வல்லதுமாய் விளங்குவது அரணாகும்...

                            -------------------------------------------------------------------------

கொளற்கரிதாய்க்  கொண்டகூழ்த்  தாகி  அகத்தார் 

நிலைக்கெளிதாம்  நீரது  அரண்.                              -745.

பகைவன் கைப்பற்றிவிடாமல் காப்பது அரண்... முற்றுகையிடப் பட்டிருந்தாலும், உள்ளிருப்போருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் நுட்பத்தோடு அமைக்கப் பட்டிருப்பது அரணாகும்... மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாதத் தன்மையுடன் விளங்குவது அரணாகும்... 

                                ------------------------------------------------------------------------------

அரணியல்                                               அரங்க கனகராசன் உரை.

எல்லாப்  பொருளும்  உடைத்தாய்  இடத்துதவும் 

நல்லாள்  உடையது  அரண்.                                  -746.

                     நல்லாள் = நிபுணத்துவம் மிக்கவன் 

அவசரநிலைக் காலத்திலும், ஆயுதம் முதலான அனைத்துப் பொருட்களும், தட்டுப்பாடின்றி கிடைத்திடும் வகையில் அரண் அமைக்கப் படுதல் வேண்டும்... மேலும்; எங்கெங்கு எது தேவையோ, அதனைத் தாமதமின்றி தக்க நேரத்தில் செயல்படுத்தவல்ல நிபுணனைக் கொண்டிருப்பது அரணுக்கு சிறப்பாகும்...

                             ----------------------------------------------------------------------

முற்றியும்  முற்றா  தெறிந்தும்  அறைப்படுத்தும் 

பற்றற்  கரியது  அரண்.                                             -747.

                                         அறை = சூழ்ச்சி 

பகைவர் முற்றுகையிட்டும் போர் புரிவர்... முற்றுகையைத் தவிர்த்துப் பதுங்கி நின்றும் பாய்வர்... சூழ்ச்சியை வகுப்பர்... தந்திரம் மேற்கொள்வர்... எதுவாயினும் பகைவனுக்கு இரையாகாதிருப்பது அரணாகும்...

                        --------------------------------------------------------------------------------

முற்றாற்றி முற்றி  யவரையும்  பற்றாற்றிப் 

பற்றியார்  வெல்வது  அரண்.                     -748.

முற்றுகையிடுதலில் தேர்ந்தவரையும் தோல்வியுறச் செய்வதே அரண்...அரண் பற்றி அறிந்தோரையும் தோல்வியுறச் செய்வதே அரண்...

*முற்றுகையிட்டவரையும், முற்றுகையிட்டு வென்றோரையும் தோல்வியுறச் செய்வதே அரணாகும்...

                          --------------------------------------------------------------------------

முனைமுகத்து  மாற்றலர்  சாய  வினைமுகத்து 

வீறெய்தி  மாண்டது  அரண்.                                 -749.

போர்முனையில் பகைவர் சாய, ஆவேசத் தாக்குதலிலும் நிலைக் குலையாது தீரம் கொண்டு திகழ்வது அரண்...

                       ------------------------------------------------------------------------------

எனைமாட்சித்  தாகியக்  கண்ணும்  வினைமாட்சி 

இல்லார்கண்  இல்லது  அரண்.                               -750.

நுட்பமாக அரண் அமைக்கப்பட்டிருந்தப் போதிலும், போர் நுட்பம் அறியாதோர் வசம் அரண் இருக்குமேயானால், நன்மையேதும் இல்லை...           

                             -------------------------------------------------------------------------------

கூழியல்                                                                அதிகாரம்:76.

                             பொருள் செயல்வகை 

பொருளல்  லவரைப்  பொருளாகச் செய்யும்

பொருளல்லது  இல்லை  பொருள்.           -751.

மதிக்கத் தகாதவரையும், மதிப்பிற்குரியர் எனும் தோற்றத்தை உண்டாக்குவது பணம்... அதுவன்றி வேறுதுவுமே அத்தகையத் தோற்றத்தை உண்டு பண்ணுவதில்லை...

                                   --------------------------------------------------------------------------

இல்லாரை  எல்லாரும்  எள்ளுவர்  செல்வரை 

எல்லாரும்  செய்வர்  சிறப்பு.                             -752.     

பணமில்லாதாரை மதிப்பதில்லை... இகழவும் செய்வர்... பணமிருப்பின் கயவரையும் போற்றுவர்...

*வறியவரை திட்டுவதும், செல்வந்தரைத் துதிப் படுவதும் உலகியல்பு...

                      -----------------------------------------------------------------------------

பொருளென்னும்  பொய்யா  விளக்கம்  இருளறுக்கும் 

எண்ணிய  தேயத்துச் சென்று.                                         -753.   

பணம் என்பது ஒளிவிளக்குப் போன்றது... அது உலகின் எந்த எல்லையையும் அடைந்து, புதிய உண்மையைக் கண்டறியும்...

                                    ---------------------------------------------------------------------

அறன்ஈனும்   இன்பமும்  ஈனும்  திறனறிந்து 

தீதின்றி  வந்த  பொருள்.                                 -754.

                                  அறம் = அமைதி.

அமைதியையும், இன்பத்தையும் நல்குவது எதுவெனில், நேரிய வழியில் ஈட்டப்பட்டப் பணமே...

                       -----------------------------------------------------------------------------

அருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம் 

புல்லார்  புரள  விடல்.                                                     -755.

பணிக்கு அமர்த்தப்பட்டத் தொழிலாளியிடத்தில் அன்பும், பரிவும் காட்ட வேண்டும்... மாறாக, தொழிலாளிக்கு கடுமையான வேலைப் பளுவைக் கொடுத்து, ஊதியத்தையும் குறைவாகக் கொடுத்து, தான் அதிக வருவாய் ஈட்டுவது முறையல்ல... முறையற்ற முறையில் பொருளீட்டுவது முறையல்ல என்பதால், முறையுடன் அம்முறையை நீக்கிடல் வேண்டும்...

                            ------------------------------------------------------------------------

கூழியல்                                                                     திருக்குறள்  உரை.

உறுபொருளும்  உல்கு  பொருளுந்தன்  ஒன்னார்த் 

தெறுபொருளும்  வேந்தன்  பொருள்.                   -756.

              உறுபொருள் = தானே வந்தடையும் பொருள்

                  உல்கு             = வரி 

உரிமையாளர் எவரென அறியப்படாத பொருளும் மற்றும் மண்ணுக்கடியில் விளையும் கனிமப்பொருட்களும், நாட்டு நலனுக்காக விதிக்கப்பட்ட வரியின் வாயிலாக வந்தப் பணமும், பகை நாட்டோடுப் போரிட்டுக் கைப்பற்றப்பட்ட பொருளும் அரசுக்குரியதாகும்...

                             --------------------------------------------------------------------------------------

அருளென்னும்  அன்பீன்  குழவி  பொருளென்னும் 

செல்வச்  செவிலியால்  உண்டு.                             -757.               

அன்புத் தாய் ஈன்றெடுத்த நேர்மை எனும் குழந்தை வளர்ந்திட செல்வம் எனும்  சீமாட்டி வேண்டும்...

                         --------------------------------------------------------------------------------

குன்றேறி  யானைப்போர்  கண்டற்றால்  தன்கைத்தொன்று 

உண்டாகச்  செய்வான்   வினை.                                                 -758.

குன்றின் மீது யானைகள் சண்டையிட்டுக் கொள்வது போன்றதாகும் பொருளீட்டல் என்பது!... சிறு மயிரிழையளவுத் தவறினாலும், பள்ளத்தில் வீழ்ந்து யானை மடிய நேரிடும்... சறுக்கி விழுதலையும் சமாளித்து, சண்டையிடுவதிலும் பிசகாமல் வெற்றியைக் குறியாகக் கொண்டு நிகழ்த்தப்படும் சண்டைப் போன்றது பொருளீட்டல்... நியாயமான வழியில் பொருள் ஈட்டுகையில் எதிர்க் கொள்ளும் போராட்டங்கள் பல... பெரும் போராட்டங்களுக்கிடையே ஈட்டப்படும் பணத்தை நல்ல முறையில் கையாள்வதே நன்று...

                             -----------------------------------------------------------------------------

செய்க  பொருளைச்  செறுநர்  செருக்கறுக்கும் 

எஃகதனிற்  கூரியது  இல்.                                   -759.          

நல்வழியில்  பொருளீட்டல் நன்று... பொறாமையின் பொருட்டோ, போட்டியின் பொருட்டோ பொருளீட்டுதல் குறித்து,   பகைவர் பொய்மையைப் பரப்பினாலும், அப்பொய்மையை வீழ்த்தும் ஆயுதமாக விளங்குவது நேர்மையாகும்...  நேர்மையைப் போல் கூராயுதம் வேறெதுவும் கிடையாது...

                   -------------------------------------------------------------------------------

ஒண்பொருள்  காழ்ப்ப  இயற்றியார்க்கு  எண்பொருள் 

ஏனை  இரண்டும் ஒருங்கு.                                                -760.   

நேரிய வழியில் செல்வத்தை ஈட்டியோர் வாழ்வில் அமைதியும், இன்பமும் ஒருங்கே அமையும்... இதுவன்றி வாழ்வில் வேறென்ன வேண்டும்...

                            -----------------------------------------------------------------------

படையியல்                                                                     அதிகாரம்:77.

                                         படைமாட்சி 

உறுப்பமைந்து  ஊறஞ்சா  வெல்படை  வேந்தன் 

வெறுக்கையு  ளெல்லாம்  தலை.                      -761.

போர்க்கருவிகளும், அதனை கையாளும்  அஞ்சா நெஞ்சம்  கொண்ட வீரரும்  இருப்பின், நாட்டின் தலைவனுக்கு  பெருஞ்சிறப்பாகும்...

                                 ------------------------------------------------------------------------------

உலைவிடத்து  ஊறஞ்சா  வன்கண்  தொலைவிடத்துத் 

தொல்படைக்  கல்லால்  அரிது.                                         -762.

துயரம் சூழும் போதில் துவளாத அஞ்சா நெஞ்சு எவரிடத்தில் இருக்கும்?... தோல்வி ஏற்பட்ட போதிலும், மனந்தளராத வீரப்பாசறையில் பயின்றப் படையினருக்கே அஞ்சா நெஞ்சமிருக்கும்!...  

                            ---------------------------------------------------------------------------

ஒலித்தக்கால்  என்னாம்  உவரி  எலிப்பகை 

நாகம்  உயிர்ப்பக்  கெடும்.                              -763.

                             உவரி = கடல்.

எலிகள் கூடி கடலலைகள் போல் இரைச்சல் செய்தாலும் எலிப் புலியாகுமோ?... நாகம் ஒன்று எதிரில் நின்று மூச்சால் சீறினாலே, எலிகள் மூச்சடங்கி விடும்...

*எண்ணிக்ககையைக் கொண்டு வலுவானப் படை  எனக் கணித்தல் தவறாகும்...

                           ---------------------------------------------------------------------------------

அழிவின்று  அறைபோகா    தாகி  வழிவந்த 

வன்க  ணதுவே  படை.                                   -764.

                                       அறை = சூழ்ச்சி.

உறுதிக்  குலையாமல் திகழ்வது நல்படை...  எதிரிகள் விரிக்கும் ஆசை மொழிக்கு விலைப் போகாமல், நாட்டுப் பற்றுடன் திகழ்வது  நல்படை... அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரப் பாசறையினருக்கே உரித்தான  தீரத்துடன் திகழ்வதே நல்படை...

                                ----------------------------------------------------------------------

கூற்றுடன்று  மேல்வரினும்  கூடி  எதிர்நிற்கும் 

ஆற்ற  லதுவே  படை.                                            -765.

                      உடன்று = உயிர்ப் பறிக்கும் நச்சாயுதம்.

எதிரிகளால் ஏவப்பட்ட உயிர்ப் பறிக்கும் ஏவுகணைகள்  பாய்ந்து வரினும், அஞ்சி ஓடாமல், தக்க இடத்தில் இருந்து மறித்து அழிக்கக் கூடிய ஆற்றல் உள்ளப் படையே நல்படையாகும்...

                               ------------------------------------------------------------------------------

படையியல்                               அரங்க கனகராசன் உரை.

மறமானம்  மாண்ட  வழிச்செலவு  தேற்றம் 

எனநான்கே  ஏமம்  படைக்கு.                      -766.

வீரம், மானம், நன்னடத்தை, சிந்தனையில் தெளிவு என நான்கும் படைவீரனுக்குப் பெருமை  சேர்க்கும்...

                    ---------------------------------------------------------------------------------

தார்தாங்கிச்  செல்வது  தானை  தலைவந்த 

போர்தாங்கும்  தன்மை  அறிந்து.              -767.

படைக்குச் சிறப்பு, அணிவகுத்து - கட்டுப்பாடுடன் - குறிக்கோளுடன் - செல்வது!... மற்றும்; எதிர்வரும் போரை எதிர்க் கொண்டு வெற்றி காண்பதும் படைக்குப் பெருஞ் சிறப்பாகும்...

                          ----------------------------------------------------------------------

அடற்றகையும்  ஆற்றலும்  இல்லெனினும்  தானை 

படைத்தகையால்  பாடு   பெறும்.                               -768.

வெற்றிக்கு உறுதுணை புரியும் புதிய  தொழிற் நுட்பத்துடன் கூடிய படைக்கலன் இல்லையென்றாலும்,போதிய படைவீரர் இல்லையென்றாலும், சீர்மிகு படைத் தலைவன் போருக்கு அஞ்சமாட்டான்... இருக்கும் கருவிகள் கொண்டும், இருக்கும் படைவீரர்க் கொண்டும் உகந்தத் திட்டம் வகுத்து வெற்றியை ஈட்டி விடுவான்...

                                 ----------------------------------------------------------------------------

சிறுமையும்  செல்லாத்  துனியும்  வறுமையும் 

இல்லாயின்  வெல்லும்  படை.                       -769.

எண்ணத்தில் தாழ்வும், கட்டுக்குள் அடங்காத கோபம், குற்ற உணர்வும் இல்லையெனில் படையணி தன் மதிநுட்பம் கொண்டு வெற்றியை ஈட்டிவிடும்...

                                 ------------------------------------------------------------------------

நிலைமக்கள்  சால  உடைத்தெனினும் தானை 

தலைமக்கள்  இல்வழி  இல்.                              -770.

நாட்டுப் பற்றுடைய வீரர்களைக் கொண்டிருந்தாலும், போருக்கான நுட்பம் அமைக்கக் கூடிய தலைமை இல்லையெனில் வெற்றிபெறக் கூடிய சாத்தியக் கூறு அந்தப் படைக்கு இருக்காது... 

                             ----------------------------------------------------------------------------------

படையியல்                                                                                 அதிகாரம்:78.

                                            படைச்செருக்கு.

என்னைமுன்  நில்லன்மின்  தெவ்விர்  பலர்என்னை 

முன்நின்று  கல்நின்  றவர்.                                              -771.

பகைவீரர்களே, எமது தலைவனை எதிர்த்து வெற்றிக் கொள்ளவோ வந்தீர்?... அறியாது வந்து விட்டீர்... உமது முயற்சி வீண்  முயற்சியாகும்... எதிர்க்கும் எண்ணத்தை அகற்றி, அகன்று விடுவீராக, இங்கிருந்து!...

வீரர்காள்! நும்மைப் போலவே, என் தலைவனோடு போரிட வந்தனர் பலர்... ஆனால்; நடந்ததை அறிகிலீரோ... அதோ காணுவீராக... அவைகள் யாவும் போரிட வந்து மாண்டோரின் நினைவுக் கற்கள்...

                                       -----------------------------------------------------------------------------

கான  முயலெய்த  அம்பினில்  யானை 

பிழைத்தவேல்  ஏந்தல்  இனிது.      -772.

முயல் மீது வீசியெறியப்பட்ட அம்பை ஏந்துவது வீரமாகாது... யானைமீது வீசப்பட்ட வேல்  குறித் தவறினால்  யானைப் பிழைக்க வாய்ப்புள்ளது... ஆனால்; சினம் கொண்டு பீறிட்டு வரும் யானையின் மீது வேல் ஏவப்பட்ட நிகழ்வு வீரம் பொதிந்ததாகும்... குறித் தவறினாலும், வீரத்தோடு வீசப்பட்ட அவ்வேல்தனை ஏந்துதலில் வீரத்தின் செறிவு இருக்கும்... 

                             -----------------------------------------------------------------------------

பேராண்மை  என்ப  தறுகண்ஒன்  றுற்றக்கால் 

ஊராண்மை  மற்றதன்  எஃகு.                           -773.

                             தறுகண் = அஞ்சாநெஞ்சம்.

வீரம் என்பது, போர்க்களத்தில் அஞ்சா நெஞ்சுடன் போரிடுவதாகும்... களத்தில் பகைவன் குற்றுயிராகி தவித்தல் அடைகிறான்  எனில், பகைக் கண் கொண்டு பாராமல், ஓருயிரைக் காப்பாற்றும் நேயத்துடன் உதவியாற்றுதல் வேண்டும்... களத்தில் மானிடநேயம் கொள்வது என்பது, வீரம் போன்றே உறுதியானக் கோட்பாடாகும்...      

                          ------------------------------------------------------------------------------------

கைவேல்  களிற்றொடு  போக்கி  வருபவன் 

மெய்வேல்  பறியா  நகும்.                            -774.

கையில் இருந்த இறுதி வேலும், வீசப்பட்டு யானையை வென்று வெற்றி பெருமிதத்துடன் திரும்புவோன் மீது, பகைவர் வேல் வீசினால் வீரன் அஞ்சுவானோ?... யானையோடு போரிடும் வீரன் மானிடன் வீசும் வேலுக்கோ அஞ்சுவான்... தன்மீது வீசப்பட்ட வேல் பிடுங்கி எதிரியைப் பார்த்து நகைப்பான்... யானையோடு போரிட அஞ்சுவோர் தன்மீது வேல் எறிகின்றனர் என்று எள்ளி நகையாடுவான்...

                       --------------------------------------------------------------------------------------

படையியல்                                                                           திருக்குறள் உரை.

விழித்தகண்  வேல்கொண்  டெறிய  அழித்திமைப்பின் 

ஒட்டன்றோ  வன்க  ணவர்க்கு.                                          -775.

                                                         ஒட்டு = இழப்பு.

எதிரியும் விழிப்பு நிலையில் இருந்து ஆயுதம் தொடுப்பான்... எனவே, களம் நிற்கும் வீரரும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்... கண்காணிப்பில் சிறுது சுணக்கம் ஏற்பட்டாலும் களமேகிய வீரர்  இழப்பை சந்திக்க நேரிடும்...

                                   ------------------------------------------------------------------------

விழுப்புண்  படாதநாள்  எல்லாம்  வழுக்கினுள் 

வைக்கும்தன்  நாளை  எடுத்து.                           -776.

விழுப்புண் என்பது வீரனுக்கு விருது போல... வீரத்தழும்பு வரலாற்றினை எழுதும்... வீரப்புண் படாத நாள் எல்லாம் வீணே கழிந்த நாள் என வீரன் வருந்துவான்... 

                                ---------------------------------------------------------------------------

சுழலும்  இசைவேண்டி  வேண்டா  உயிரார் 

கழல்யாப்புக்  காரிகை  நீர்த்து.         -777.

                                 கழல் = வீரர் அணியும் சீருடை.

                                யாப்பு = அணிதல்.

தாம் இறந்தப் பின்னும், தம் புகழ் பாட வேண்டும் என்று விருப்பம் கொண்டு, தம் இன்னுயிரை துச்சமெனக் கருதும் படைவீரர், தாம் அணியும் சீருடையில் பதிக்கப்படும் விருதுகளின் மடல்களை எழில் மங்கையை நேசிப்பதுப் போல் பாவிப்பர்... 

                          -------------------------------------------------------------------------------

உறின்உயிர்  அஞ்சா  மறவர்  இறைவன் 

செறினும்சீர்  குன்றல்  இலர்.       -778.

                     இறைவன் = மன்னன், ஆட்சியாளன்.

இறையாண்மைக்கு கேடு  சூழ்ந்து விட்டதை அறிந்த வீரர், அரசின் ஆணைக்கு காத்திராமல், இறையாண்மைக் காக்கும் பணியில் ஈடுபடுவர்... அரசின் கட்டளை யின்றி செயல் பட்டமையால் ஆட்சியாளரின் சினத்திற்கு ஆட்பட நேரிடலாம்... ஆயினும், படைவீரர்களின் நாட்டுப்பற்று புகழ் சேர்க்குமேயன்றி, குறைத்து விடாது...

*குடிமக்களை பிறநாட்டுப் படையினர் தாக்கினால், ஆங்கே அரசு மவுனித்தாலும் மாவீரர்  தம் கடமையாற்றிடத் தயங்கார்... 

                        --------------------------------------------------------------------------------

படையியல்                                அரங்க கனகராசன் உரை.

இழைத்தது  இகவாமைச்  சாவாரை  யாரே 

பிழைத்தது  ஒறுக்கிற்  பவர்.                    -779.

சூளுரைத்து நாட்டுக்காக  இன்னுயிர் துறக்கும் வீரரை, பிழையிழைத்தானிவன் என்று தூற்றுவார் யார்... தண்டிப்பார் யார்...

                         ---------------------------------------------------------------------------

புரந்தார்கண்  நீர்மல்கச்  சாகிற்பின்  சாக்காடு 

இரந்துகோள்  தக்கது  உடைத்து.                  -780.

சில வீரரின் மரணம் நினைத்து மனம் கலங்குதல் - கண் கலங்குதல் - அடைவான் தலைவன்...  தலைவனுக்காக களம் கண்டு மடிவது உயர்வானது... அத்தகைய சாவைக் கேட்டுப் பெறுவது உயர்வாகும்...

*தற்கொலைப் படைத் தாக்குதல் நாட்டுக்காக - கொள்கைக்காக - நிகழ்வது உண்டு... கொள்கையின் பொருட்டு தன்னை அழித்துக் கொள்ளும் வீரரின் செயல் நினைத்து தலைவன் கண்கலங்குதல் உண்டு... இப்படிப்பட்ட மரணத்தைக் கேட்டுப் பெறுவர் வீரர்...

                              ------------------------------------------------------------------------------ 

நட்பியல்                                                          அதிகாரம்:79.

                                                நட்பு.

செயற்கரிய  யாவுள  நட்பின்  அதுபோல் 

வினைக்கரிய  யாவுள  காப்பு.             -781.

நட்பைவிட உயரியச் செயல் உண்டோ... அதுபோல்; செயல்திறன் போல் வாழ்க்கைக்கு உறுதுணை யாவது எதுவுமில்லை... 

                              ----------------------------------------------------------------------------

நிறைநீர  நீரவர்  கேண்மை  பிறைமதிப் 

பின்நீர  பேதையார்  நட்பு.                      -782.

முழுநிலாப் போன்றது அறிஞரின் நட்பு... தேய் நிலா போன்றது அற்பர்களின் நட்பு... 

*அறிஞரின் நட்பு பண்பை வளர்க்கும்... அற்பர்களின் தொடர்பு பண்பை தீய்க்கும்... 

                            ---------------------------------------------------------------------------

நவில்தொறும்  நூல்நயம்  போலும்  பயில்தொறும் 

பண்புடை  யாளர்  தொடர்பு.                                          -783.

படிக்கப் படிக்க அறிவு வளர்கிறது... பழகப் பழக பண்புடையாளரின் தொடர்பால் ஒழுக்கம் வளர்கிறது... 

                            --------------------------------------------------------------------------

நகுதற்  பொருட்டன்று  நட்டல்  மிகுதிக்கண் 

மேற்சென்று  இடித்தற்  பொருட்டு.             -784.

சிரித்துப் பேசிப் பொழுதை இனிமையாகப் போக்குவதற்கல்ல  நட்பு!... நண்பரின் போக்கில் தவறுத் தெரிய வந்தால், உரிமையுடன் தவறுதனை எடுத்துக் கூறி, தக்க வழியில் நண்பனை நேர்படுத்துவதே  நட்பின் இலக்கணமாகும்...

                       ------------------------------------------------------------------------------

புணர்ச்சி  பழகுதல்  வேண்டா  உணர்ச்சிதான் 

நட்பாம்  கிழமை  தரும்.                                     -785.

உதட்டளவில் பழகுவதுப் பழக்கமல்ல... உள்ளார்ந்த  உணர்வே நட்பெனும் உரிமையைத் தரும்...

                            -----------------------------------------------------------------------------

நட்பியல்                        அரங்க கனகராசன் உரை.

முகநக  நட்பது  நட்பன்று  நெஞ்சத்து 

அகநக  நட்பது  நட்பு.                          -786.

முகத்தைப் பார்த்துப் புன்னகைப்பது மட்டும் நட்பாகாது... உள்ளத்திலும் மகிழ்வை உண்டாக்கச் செய்வதே நட்பாகும்...   

                         --------------------------------------------------------------------------

அழிவி  னவைநீக்கி  ஆறுய்த்து  அழிவின்கண் 

அல்லல்  உழப்பதாம்  நட்பு.                                 -787.

நண்பன் அழிவை நோக்கிப் பயணிக்கிறான் எனில், தடுக்க வேண்டும்... நல்வாழ்வுக்கான வழியைக் காட்டி, நண்பனின் வாழ்வை மேம்படுத்த வேண்டும்... நண்பன் துயறுருங்காலத்தில், அவனுடைய துன்பத்தில் பங்குக் கொள்வதே நட்பாகும்...

                       -------------------------------------------------------------------------------

உடுக்கை  இழந்தவன்  கைபோல  ஆங்கே 

இடுக்கண்  களைவதாம்  நட்பு.                -788.

ஆடை இடுப்பிலிருந்து நழுவுவதற்கு முன்னரே, முந்திச் சென்று மானம் காப்பது கை... அது போல், நண்பன் துயரில் தவிக்கிறான் என்று அறிந்தக் கணமே, அவனைத் துயரிலிருந்து மீட்கும் மீட்புப் பணியை மேற்கொள்வது நட்பாகும்...

                                ----------------------------------------------------------------------------

நட்பிற்கு  வீற்றிருக்கை  யாதெனில்  கொட்பின்றி 

ஒல்லும்வாய்  ஊன்றும்  நிலை.                           -789.                

                                கொட்பு = மாறுபாடு 

நட்பின் முகாந்திரம் எதுவெனில், மாறுபட்டக் கருத்துக்கு இடமின்றி, நண்பனுடையத் துன்பத்தை, இயன்றளவுப் போக்கி உதவிடுவதாகும்...

                                      -----------------------------------------------------------------

இனையர்  இவரெமக்கு  இன்னம்யாம் என்று 

புனையினும்  புல்லென்னும்  நட்பு.            -790.

எமது இனத்தை சேர்ந்தவர் இவர்; யான் இவருக்கு உறவினன் என்று சிறு வட்டத்துக்குள் நட்பை அளப்பது நட்பை இழிவுச் செய்வதாகும்...

*பார்ப்பனன் பார்ப்பானுக்கு மட்டுமே உதவிடக் கோருவான்... அவனிடம் மானிடநேயம் இருக்காது... அது நட்பின் இலக்கணமன்று...

                     --------------------------------------------------------------------------

நட்பியல்                                                          அதிகாரம்:80

                               நட்பாராய்தல்

நாடாது  நட்டலிற்  கேடில்லை  நட்டபின் 

வீடில்லை  நட்பாள்  பவர்க்கு.               -791.

ஒருவரைப் பற்றித்  தெளிவுக் கொள்ளாமல், அவரோடு நட்புக் கொண்டால்,அதுபோல் தீமைத் தருவது எதுவுமில்லை... நல்ல முறையில் நட்புக் கொண்ட பிறகு, அந்த நட்பிலிருந்து மீளவும் முடியாது... இக்கோட்பாடு நட்பின் மேன்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்...

                               -------------------------------------------------------------------------

ஆய்ந்தாய்ந்து  கொள்ளாதான்  கேண்மை  கடைமுறை 

தான்சாந்  துயரம்  தரும்.                                                         -792.

ஒருவரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமல், அவரோடு நட்புக் கொண்டால், அதன் எதிர்விளைவு எப்படி அமையுமெனில், அவர் தீயவர் எனில், அந்நட்பு மரண வேதனையுள் ஆழ்த்திவிடக் கூடியதாக அமையும்...

                             ----------------------------------------------------------------------------

குணனும்  குடிமையும்  குற்றமும்  குன்றா 

இனனும்  அறிந்தியாக்க  நட்பு.                -793.

நல்ல குணம் கொண்டவனா? ஒழுக்கமுள்ள குடும்பத்தை சேர்ந்தவனா? குற்றமேதும் இழைத்தவனா? நல்ல நட்பு வட்டத்தில் உள்ளவனா என்று தெரிந்து தெளிந்தப் பிறகே, ஒருவனோடு நட்புக் கொள்ளல் வேண்டும்...

                            ------------------------------------------------------------------------------

குடிப்பிறந்து  தன்கட்  பழிநாணு  வானைக்

கொடுத்தும்  கொளல்வேண்டும் நட்பு. -794.

குடும்பத்தில்  நல் ஒழுக்கமும் மற்றும் பழிச் செயல்களுக்கு நாணும் குணமும்   ஒருவனிடத்தில்   இருப்பின், அவனை நண்பனாக அடைய ஏதும் கொடுத்தால்தான் இயலுமெனில் அதனைக் கொடுத்தாவது அவனை நண்பனாக ஆக்கிக் கொள்ள  வேண்டும்... 

*தன்னிடம் இருக்கும் ஆணவம், திமிர் இவற்றை ஒழித்தால்தான் ஒருவனை நண்பனாக அடைய இயலுமெனில், விட்டொழித்து நட்பை பெறுக... 

                           --------------------------------------------------------------------------

அழச்சொல்லி  அல்லது  இடித்து  வழக்கறிய 

வல்லார்நட்பு  ஆய்ந்து  கொளல்.        -795.

தீமையின் ஆழத்தை தயக்கமின்றி நன்கு உணர்த்துபவனை, அல்லது உரிமையுடன் கண்டிக்கும் குணம் கொண்டவனை, மேலும் மதிநுட்பம் கொண்டவனை  நண்பனாகத் தேர்வுச் செய்துக் கொள்ளவேண்டும்...

                             ----------------------------------------------------------------------------------

நட்பியல்                                அரங்க கனகராசன் உரை.

கேட்டினும்  உண்டோர்  உறுதி கிளைஞரை  

நீட்டி  அளப்பதோர்  கோல்.                          -796.

துன்பத்திலும் ஓர் இன்பம் உண்டு.. அது எதுவெனில்;  துன்பமும் நண்பரை அளவிட உதவும் ஓர் அளவுகோலாகும்...

*துன்பம் ஏற்படும்போது விலகி விடுவோர் உண்டு... துன்பம் என்பது ஒருவனை நண்பனா? அற்பனா? என அளக்கும் கோலாக உதவுகிறது...

                               ----------------------------------------------------------------------------

ஊதியம்  என்பது  ஒருவற்குப்  பேதையார் 

கேண்மை  ஒரீஇ  விடல்.                            -797.

ஒருவனுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய செயல் என ஒன்றுண்டு... அது எதுவெனில், ஒழுக்கம் அற்றவனின் நட்பை நீக்கி விடுவதாகும்... 

                           ------------------------------------------------------------------------------

உள்ளற்க  உள்ளம்  சிறுகுவ  கொள்ளற்க 

அல்லற்கண்  ஆற்றறுப்பார்  நட்பு.      -798.

கீழான சிந்தனைக் கூடாது... நம்பிக்கைத் துரோகியுடன் நட்பும் கூடாது...

                              ----------------------------------------------------------------------------

கெடுங்காலைக்  கைவிடுவார்  கேண்மை  அடுங்காலை 

உள்ளினும் உள்ளம் சுடும்.                                                         -799.

வாழ்க்கையில் பெருந்துன்பம் வந்துற்ற போது, நழுவியோடுவோனின் நட்பை, மரணத்தின் போது நினைத்தாலும் மனம் சுடும்...

                       --------------------------------------------------------------------------

மருவுக  மாசற்றார்  கேண்மைஒன்  றீத்தும் 

ஒருவுக  ஒப்பிலார்  நட்பு.                              -800.

நாடிப்பெற வேண்டும் களங்கமற்றவரின் நட்பை!... எதையேனும் கொடுத்துதான் நட்பைத் துண்டிக்க வேண்டுமெனில், எதையாவதுக் கொடுத்தும் நயவஞ்சகரின் நட்பைத் துண்டிக்க வேண்டும்... 

                               -----------------------------------------------------------------------------

நட்பியல்                                                                அதிகாரம்:81.

                                          பழைமை 

பழைமை  எனப்படுவது  யாதெனின்  யாதும் 

கிழமையை  கீழ்ந்திடா  நட்பு.                       -801.

நட்புணர்வுடன்  பழகுதல் எனில்  யாது என்றால், எதன் பொருட்டும் நட்புரிமையை இழிவுப் படுத்தாமல் பழகுவதே  ஆகும்...

*நட்புரிமையை இகழ்ச்சிக்கு உட்படுத்தாதிருப்பதே நட்பின் அடையாளமாகும்...

                             ---------------------------------------------------------------------------

நட்பிற்  குறுப்புக்  கெழுதகைமை  மற்றதற்கு 

உப்பாதல்  சான்றோர்  கடன்.                          -802.

நட்பின் இலக்கணம்  என்பது நற்பழக்க வழக்கமே யாகும்...  இவ்விலக்கணத்தை மேம்படுத்துவது சான்றோரின் கடமையாகும்...

*சான்றோர் நட்பின் சான்றாய் விளங்க வேண்டும்...

                         ------------------------------------------------------------------------

பழகிய  நட்பெவன்  செய்யும்  கெழுதகைமை 

செய்தாங்கு  அமையாக்  கடை.                    -803.

வெறுமனே நட்புடன் பழகுவதில் என்ன பயன்? உரிமையுடன் கூடிய தோழமை மறுக்கப்படும் பட்சத்தில், வெறுமனே நட்புப் பாராட்டுவதில் பலனில்லை...

                                 -----------------------------------------------------------------------------

விழைதகையான்  வேண்டி  யிருப்பர்  கெழுதகையாற் 

கேளாது  நட்டார்  செயின்.                                              -804.

நட்பின் மேலாண்மைக் கெட்டுவிடக் கூடாது எனக் கருதுவோன், தனது நண்பன் தன்னிடம் ஆலோசிக்காமல் நட்புரிமையோடு செய்துவிட்டச் செயலை எண்ணி வருந்த மாட்டான்...

*தெரியப் படுத்தாமல் உரிமையோடு நண்பன் மேற்கொண்ட செயலானது, தேவையற்றதாகவும் இருக்கலாம்... ஆயினும் நட்பின் மேலாண்மைக் கருதி, தோழனோடு முரண்பாடுக் கொள்ளமாட்டான் நண்பன்...

                               -----------------------------------------------------------------------

பேதைமை  ஒன்றோ  பெருங்கிழமை  என்றுணர்க 

நோதக்க  நாட்டார்  செயின்.                                    -805.

நண்பன் வரம்பு மீறிச் செய்துவிட்டாலும், அதனை அவன் அறியாமையில் செய்து விட்டதாக எண்ணம் கொள்க... அல்லது; நட்பின் உரிமையில் செய்துவிட்டான் என்று ஆறுதல் கொள்க... நண்பன் செய்துவிட்டச் செயல் குறித்து வருத்தம் கொள்ளக் கூடாது... அது நட்புக்கு இழுக்காகும்...

                          -------------------------------------------------------------------------

நட்பியல்                                                       அரங்க கனகராசன் உரை.

எல்லைக்கண்  நின்றார்  துறவார்  தொலைவிடத்தும் 

தொல்லைக்கண்  நின்றார்  தொடர்பு.                       -806.

நெஞ்சார்ந்த தோழர் நட்பினை முறிக்க மாட்டனர்... நண்பரைப் பிரித்துவிட சூழ்ச்சி வகுத்து சிலரால் பெருந்தொல்லைகள் தரப்பாட்டாலும் நட்பைத் துண்டிக்க மாட்டனர்... 

*உண்மையை அறிவர்... தவறான தகவல் கேட்டு மதியிழந்து நட்பைத் துறவார்...

                                 ---------------------------------------------------------------------------

அழிவந்த  செய்யினும்  அன்பறார்  அன்பின் 

வழிவந்த  கேண்மை  யவர்.                     -807.

தோழனின் ஆக்கமற்றச் செயலால் மனம் நோவதோ, நட்பைத் துண்டிப்பதோ அன்போடு இயைந்த நண்பன் ஒருபோதும் செய்யமாட்டான்...

                           ---------------------------------------------------------------------

கேளிழுக்கம்  கேளாக்  கெழுதகைமை  வல்லார்க்கு 

நாளிழுக்கம்  நட்டார்  செயின்.          -808.

                                                நாள் = விண்மீன்.

தோழன் மீது பிறர் தவறானக் கருத்துகள் கூறினாலும், பொருட்படுத்தாமலும், நண்பன் மீதான தனது அன்பை மாற்றாமலும் திகழ்வது உயரியப் பண்பாகும்...  இத்தகையோனுக்கு நண்பர் வாயிலாக் சில இழுக்குகள் ஏற்படலாம்...  இழுக்குகளால் உயரிய பண்பாளரின் நன்மதிப்பு சரிந்து விடாது...  இத்தகைய இழுக்குகள் விண்மீது காணப்படும் சிறுகளங்கம் போன்றது...

*களங்கத்தால் விண்மீனுக்கு தகுதியிழப்பு நேர்வதில்லை... நண்பனால் விழையும் இழுக்கும் நட்பின்  மேண்மையைக் கெடுக்காது    

                              -----------------------------------------------------------------------

கெடாஅ  வழிவந்த  கேண்மையார்  கேண்மை 

விடாஅர்  விழையும்  உலகு.                          -809.

நட்புக்கு இழுக்கு ஏற்படுத்தாதப் பண்பாளரின் நட்பை எவரும் இழந்து விடார்... பண்புடையோரின் நட்பைப் பார்ப் போற்றும்...

                      ------------------------------------------------------------------------

விழையார்  விழையப்  படுப  பழையார்கண் 

பண்பின்  தலைப்பிரியா  தார்.                   -810.

பகைவர்களாலும்  பாராட்டப் படுவது எதுவெனில், எச்சூழலிலும் பிரிவினைக்கு இடந்தராமல் நட்புணர்வுடன் திகழ்வது  நண்பர்களின் நற்பண்பாகும்... இந்நட்பைப் பகைவரும் பாராட்டுவர்...

                        -------------------------------------------------------------------------------       

நட்பியல்                                                                         அதிகாரம்:82.

                                                   தீநட்பு.

பருகுவார்   போலினும்  பண்பிலார்  கேண்மை 

பெருகலிற்  குன்றல்  இனிது.                             -811.

தேனொழுகப் பேசிப் பழகினாலும், நல்லொழுக்கம் இல்லாதாரின் தொடர்பை வளரச் செய்வது  நல்லதல்ல... துண்டித்துக் கொள்வது சிறந்தது...

                            -------------------------------------------------------------------------------

உறின்நட்டு  அறின்ஒரூஉம்  ஒப்பிலார்  கேண்மை 

பெறினும்  இழப்பினும்  என்.                                      -812.

பலன் கிட்டும் எனில் நெருங்கிப் பழகிடுவர்... பலன் கிட்டாது எனில் விலகி விடுவர்... இத்தகையோர் நட்புக்கு ஏற்றோர் அல்லர்... இத்தகையோரிடம்  பழகுதலால் மனதுக்கு நெகிழ்ச்சி ஏற்படப் போவதில்லை... பழகாமல் விடுவதாலும் வேதனை நிகழப் போவதில்லை...

                                  --------------------------------------------------------------------------

உறுவது  சீர்தூக்கும்  நட்பும்  பெறுவது 

கொள்வாரும்  கள்வரும்  நேர்.        -813.      

ஊதியம் கருதிப் பழகும் பழக்கத்தை எதனோடு ஒப்பிடுவது?... நண்பனால் ஈட்டப்பட்டப் பொருள் மீது முழு உரிமைச் செலுத்தப் படுவதை எதனோடு ஒப்பிடுவது?... கள்ளத்தனத்தோடு  ஒப்பிடலாம்...  

*எதிர்ப்படுவோரிடம்  கொள்ளையிட வாய்ப்பை உண்டாக்கி காத்திருப்பான் திருடன்... அதுபோல், நண்பனிடம் வருவாயை எதிர்ப் பார்த்து பழகிடுவான் அற்பன்... 

பிறரின் உழைப்பில்  உண்டாக்கப்பட்டப் பொருளை, கொள்ளை இடுவான்  திருடன்... அதுபோல், நண்பனின் உழைப்பில்  ஈட்டப்பட்ட பொருளை, மிகு உரிமையுடன் தன் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வான் அற்பன்...  இவ்வற்பர்களை நண்பர் எனல் ஆகாது... திருடர் எனில் தகும்... 

                               ------------------------------------------------------------------------------------

அமரகத்து  ஆற்றறுக்கும்  கல்லாமா  அன்னார் 

தமரின்  தனிமை  தலை.                                        -814.

போர்முனையில் தாக்குதலுக்கு அஞ்சி, வீரனைக்  கீழேத் தள்ளி விட்டு, தான் பிழைத்தால் போதும் என்றோடும் குதிரைப் போன்றோரின் நட்பை விட தனிமையே சிறந்ததாகும்...

*இன்னல் நேருங்கால், தவிக்கவிட்டு பிரிவோன் போன்றோரின் நட்பைவிட தனிமையே நன்று...

                             ----------------------------------------------------------------------------------

நட்பியல்                                                          திருக்குறள் உரை.

செய்தேமஞ்  சாராச்  சிறியவர்  புன்கேண்மை 

எய்தலின்  எய்தாமை  நன்று.                          -815.

நட்பின் இலக்கணத்தை இழிவுப் படுத்துவது போல் நம்பியவனுக்கு துரோகம் செய்வோன் இழிவானவன் ஆவான்... அவனோடு நட்புக் கொள்வதைவிட அறிஞரின் பகைமைத் தீமைத் தராது... 

*அறிஞரின் நட்பு இல்லையென்றாலும், இழிவானோனின் நட்பு இழிவைத் தரும்...

                          ----------------------------------------------------------------------------------

பேதை  பெருங்கெழீஇ  நட்பின்  அறிவுடையார் 

ஏதின்மை  கோடி  உறும்.                                      -816.

                                                 ஏதின்மை = பகைமை.

பகுத்தறிவற்றவனோடு நட்புக் கொள்வதைவிட, அறிஞரின் பகைமையானதுத் தீமைத் தராது... 

பகுத்தறிவற்றவனின் நட்பு, மனஉளைச்சலை ஏற்படுத்தும்... அறிஞரின் பகைமை தீமையை உண்டு பண்ணாது...

                                --------------------------------------------------------------------------------

நகைவகைய  ராகிய  நட்பின்  பகைவரால் 

பத்தடுத்த  கோடி  உறும்.                              -817.

உதட்டளவில்  சிரித்து, உள்ளத்தில்  வஞ்சகம் கொண்டோரின் நட்பைவிட, பகைவர்களால் பத்துக் கோடி நன்மை நிகழும் எனலாம்... 

*நண்பனைப் போல் நடித்து ஏமாற்றும் வஞ்சகன் எந்த நேரத்தில் ஏது செய்வான் என்று தெரியாது... ஆனால்; பகைவனின் நகர்வு உணர முடியுமென்பதால், பகைவனிடமிருந்து  தற்காத்துக் கொள்ள இயலும்... ஆதலால்; பகைவனால் நன்மையே என்றுக் கூறின் மிகையன்று...

                    --------------------------------------------------------------------------------------

ஒல்லும் கருமம்  உடற்று  பவர்கேண்மை  

சொல்லாடார்  சோர  விடல்.                    -818.

                                                  உடற்றுதல் = கெடுத்தல்.

நிறைவேறக் கூடியச் செயலையும், நட்புப் போர்வையில் உறவாடும் வஞ்சகன் கெடுத்து விடுவான்... அவன் குணம் அறிந்து விட்டால், அவனிடம் இதுகுறித்து சொல்லாடுவதோ, விளக்கம் கேட்பதோ கூடாது... அவனோடு இருக்கும் தொடர்பை மெல்ல துண்டித்து விடுவது நல்லது...

                        ------------------------------------------------------------------------

நட்பியல்                                                           திருக்குறள் உரை.

கனவினும்  இன்னாது  மன்னோ  வினைவேறு 

சொல்வேறு  பட்டார்  தொடர்பு.                       -819.

கனவிலும் துன்பம் தருவது எதுவெனில், நன்மை செய்வதாக வாக்குறுதி வழங்கி, தீமை செய்வோனின் தொடர்பு கனவிலும் துன்பம் தரும்...

                                     ---------------------------------------------------------------------

எனைத்தும்  குறுகுதல்  ஓம்பல்  மனைக்கெழீஇ 

மன்றில்  பழிப்பார்  தொடர்பு.                                -820.

அனைத்து  வகையிலும் ஒதுக்க வேண்டிய ஒன்று உண்டு... அது எதுவெனில், தனித்திருக்கையில்  நேரில் ஒருவனைப் புகழ்ந்தும், பலர் கூடிப் பேசி மகிழ்ந்திருக்கும் இடத்தில் அவனை இகழ்ந்தும் பேசும் குணாளனின் தொடர்பை  எல்லா வகையிலும் எப்போதும் ஒதுக்கிட வேண்டும்...

                             ------------------------------------------------------------------------

நட்பியல்                                                அதிகாரம்:83.

                               கூடாநட்பு 

சீரிடம்  காணின்  எறிதற்குப்  பட்டடை 

நேரா  நிரந்தவர்  நட்பு.                        -821.

நன்மைத் தருவது எதுவென சீர்த் தூக்கி நோக்கினால்- உலைக்களத்தில் வீசப்படும் பொருள் உரு சிதைந்து அழிவது போல்,  நேயமற்ற நட்பையும் வீசி விடுவது நன்மையானச் செயலாக இருக்கும்...  

                          -----------------------------------------------------------------------------

இனம்போன்று  இனமல்லார்  கேண்மை  மகளிர் 

மனம்போல  வேறு  படும்.                                        -822.

நண்பர் போல் பழகுவர்... ஆனால்; நெஞ்சில் நட்புணர்வு இராது... இப்படி தோழமை உணர்வற்ற நட்பானது, கருத்து மோதலை உருவாக்கும்... இணக்கமற்ற இந்த உறவு மனநிலையில் பாதிப்பை உண்டாக்கும்... எவ்வாறெனில், பெண்களைப் போல தம்மை அலங்கரித்துக் கொண்டு தம் வாழ்வை மகளிர் வாழ்வுப் போல் அமைத்துக் கொண்டாலும், உடலியக்கம் ஆடவர்க்கு உரியதாகவே இருக்கும்... இப்படி மாறுபட்டத் தன்மையால் உடலும் உள்ளமும் இணக்கமற்றுத் தவித்தல் செய்யும்... இத்தகைய மகளிர் மனநிலை குழப்பம் சூழ்ந்திருக்கும்... ஆணாகவும் வாழப் பிடிக்காமல், பெண்ணாகவும் வாழமுடியாமல் மகளிர் தவிப்பர்...

*தோழமையற்றவரின்  நட்பும் குழப்பத்தில் ஆழ்த்தும் 

                                --------------------------------------------------------------------------

பலநல்ல  கற்றக்  கடைத்தும்  மனநல்லர் 

ஆகுதல்  மாணார்க்கு  அரிது.                 -823.

                               மனநலம் = மானிடநேயம் 

நூல்கள் பலக் கற்றவர்  என்பதால், ஒருவரை  மானிடநேயம் மிக்கவர் என்றுக் கூறிவிட முடியாது...

*பண்பற்றவரைபடித்திருந்தாலும் ஒருக்காலும் மானிடநேயர்  எனவியலாது...

                  ---------------------------------------------------------------------------------------

முகத்தின்  இனிய  நகாஅ  அகத்தின்னா 

வஞ்சரை  அஞ்சப்  படும்.                       -824.

முகத்திலோ மாறாதப் புன்னகை... அகத்திலோ வஞ்சகம்... இத்தகைய வஞ்ச மதியினர் நட்புக் கொள்ள முன் வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

                                ---------------------------------------------------------------------

மனத்தின்  அமையா  தவரை   எனைத்தொன்றும் 

சொல்லினால் தேறற்பாற்று  அன்று.                   -825.

மனஉறுதியற்றவர்  பேசும் பேச்சை , எதன் பொருட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது... நன்மை பயக்காது...

                             ------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                                 திருக்குறள் உரை.

நட்டார்போல்  நல்லவை  சொல்லினும் ஒட்டார்சொல் 

ஒல்லை உணரப் படும்.                                                          -826.

நண்பனைப் போல் மிகு உரிமையோடு, நன்மையானதைப் பேசுவது போல் நயமாகப் பேசிடுவர்... அத்தகையோரின் பேச்சில் சாரம் இருக்காது என்பதை அவர் பேசும் பேச்சே காட்டிக் கொடுத்து விடும்...  தோழமையற்றவன் பேச்சில் கபடம் நிறைந்திருப்பதை  எளிதில் உணர முடியும்...            

* தோழமையுள்ளவன் பேச்சில் உண்மையிருக்கும்...

                             -------------------------------------------------------------------------------------

சொல்வணக்கம்  ஒன்னார்கண்  கொள்ளற்க  வில்வணக்கம் 

தீங்கு  குறித்தமை  யான்.                                                                     -827.

வணக்கமும் சொல்லுவான்... பணிவுடனும் பேசிடுவான் சூழ்ச்சிக்காரன்... அவன் கூறும் வணக்கத்தைத் தவிர்க்க வேண்டும்... ஏனெனில், வில் வணங்கினால் கொடிய அம்புப் பாயும்... கயவனது வணக்கமும் கொடியதை நிகழ்த்தும்...

                                  ----------------------------------------------------------------------------

தொழுதகை  யுள்ளும்  படையொடுங்கும்  ஒன்னார் 

அழுதகண்  ணீரும்  அனைத்து.                                    -828.

கைக் கூப்பி வணக்கம் கூறி வருவான்... கூப்பியக் கரத்தினுள் கொலைக் கருவி மறைந்திருக்கும்...  வஞ்சகன் வடிக்கும் கண்ணீரிலும் சூழ்ச்சி மறைந்திருக்கும்...

                              ---------------------------------------------------------------------------------

மிகச்செய்து  தம்எள்ளு  வாரை  நகச்செய்து 

நட்பினுள்  சாப்புல்லற்  பாற்று.                  -829.

துளியளவும் அய்யப்பட்டுக்கு இடமின்றி நல்நண்பனைப் போல் பழக்கத்தை வெளிப்படுத்துவான்... ஆனால்; பிறரிடம் எள்ளி நகையாடி - இழிவுப்பட - பேசிடுவான்... அவனைப் பற்றித் தெரிந்து விட்டால் அவன் மீது கோபம் கொள்ளல் கூடாது... அவன் மீதிருக்கும் வெறுப்பை வெளிக் காட்டிக் கொள்ளவும் கூடாது... நட்புரீதியில் புன்முறுவல் செய்தே அவனுடைய நட்பை மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்திட வேண்டும்... 

                            ----------------------------------------------------------------------------------

பகைநட்பாம்  காலம்  வருங்கால்  முகநட்டு 

அகநட்பு  ஒரீஇ  விடல்.                                    -830.

பகைவரும் நட்புக் கொள்ளுதல் போல் வரலாம்... அத்தகைய சூழல் ஏற்படின், முகத்தளவில் புன்னகைக் கொள்க... அகத்தில் பகைவரைக் குறித்து  விழிப்புடன் இருக்க வேண்டும்... மனதளவில் அவரோடு நட்பினை வளர்க்காமல் தவிர்த்தல் வேண்டும்...  

                        ------------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                                              அதிகாரம்:84

                                                            பேதைமை 

பேதைமை  என்பதொன்று  யாதெனின்  ஏதங்கொண்டு 

ஊதியம்  போக  விடல்.                                                           -831.

நீச அறிவு என்பது யாதெனில், அது சட்டத்திற்குப் புறம்பாக அதாவது, குற்றச் செயல்களில் நாட்டம் கொள்ளும்... நன்மையை விலக்கும்... இதுவே நீச அறிவின் சாயல்

*இச்சாயல் பார்ப்பனரிடம் மிகுந்திருக்கும்...

                              ----------------------------------------------------------------------------------

பேதைமையு  ளெல்லாம்  பேதைமை  காதன்மை 

கையல்ல  தன்கட்  செயல்.                                      -832.

மிக மிக மிகத் தாழ்ந்த சிந்தனை எதுவென்றால், முறையற்றச் செயலில் முனைப்புடன்  நாட்டம் கொள்வதாகும்...

                             ------------------------------------------------------------------------------

நாணாமை  நாடாமை  நாரின்மை  யாதொன்றும் 

பேணாமை  பேதை  தொழில்.                                  -833.

எதிலும் வெட்கம் இருக்காது... நன்மைத் தரும் செயல்தானா என ஆய்ந்துச் செய்யும் மனப்பக்குவம் இருக்காது... மானிடநேயம் இருக்காது... பிறருடைய உணர்ச்சிகள் குறித்து அக்கறை இருக்காது... என இந்நான்கின் அடையாளமாக விளங்குபவன் பகுத்தறிவற்றவன் ஆவான்... இது அவனது இயல்பாகும்...

*இது பார்ப்பனன் குணம்.

                         --------------------------------------------------------------------------------

ஓதிஉணர்ந்தும்  பிறர்க்கு  ரைத்தும்  தானடங்காப்

பேதையின்  பேதையார்  இல்.                                   -834.

எதனை ஓதுகிறோம் என்று உணர்ந்திருப்பான்... வேதநெறி வாழ்வது பிறப்பின் கடமை என்பான்... பிறர் உணர்வை மதிக்க மாட்டான்... தானே உயர்ந்தவன் என்று உரக்க கூவும்   அறிவிலியைப் போல் தரங்கெட்டோர் எவருமிலர்...

*பார்ப்பனனை போல் தரம் தாழ்ந்தோர் எவருமிலர்... ஓதுதல் என்ற பேரில் கற்பனைக் கொவ்வா பாலியல் வக்கிரம் ஓதுவான்...

                               -----------------------------------------------------------------------     

நட்பியல்                                           அரங்க கனகராசன் உரை.

ஒருமைச்  செயலாற்றும்  பேதை  எழுமையும் 

தான்புக்  கழுந்தும்  அளறு.                                  -835.
        
ஒருமை      = தன்னிச்சையாக 

        அளறு           = சகதி 

     எழுமையும் = உறங்கி விழித்தெழுகிற எவ்வொருக் கிழமையும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

தனக்காக மட்டுமே செயல்படுவான்... தான்தோன்றித் தனமும் அகம்பாவமும் மிகுந்திருக்கும்... அறிவிலியான  இவன் உறங்கி விழித்தெழுகிற ஒவ்வொருக் கிழமையும்    மக்களுக்கு கேடு சூழும்... சேற்றிலும், சகதிலும் சிக்கித் திணறுதற் போல் மக்கள் இன்னல் உறுவர்... 

*மக்களை இழிபிறவி என்றுக் கூறி இன்னலுக்கு உட்படுத்துவது பார்ப்பனன் செயல்... தனது கூட்டம் மட்டுமே வாழவேண்டும் என்று திரியும் வஞ்சகன்   பார்ப்பனன்...

                                  ---------------------------------------------------------------------------------

பொய்படும்  ஒன்றோ  புனைபூணும்  கையறியாப் 

பேதை  வினைமேற்  கொளின்.                               -836.

ஒருவன் எது செய்தாலும் அது தவறான விளைவை ஏற்படுத்துவதோடு, அவப்பெயரையும் உண்டாக்குகிறது எனில் அதன் உண்மைத் தன்மை என்னவாக இருக்கும்... ஒரு செயலைத் தொடங்கிடும் முன், அதன் வழிமுறை சரியானதாக இருக்கவேண்டும்...  மேலும்; திட்டமிடல் இருக்கவேண்டும்... ஆனால்இவற்றைக் கருத்தில் கொள்ளாத அறிவீனன் செய்யும் எதுவும் தவறாகத்தான்  முடியும்...

                          -------------------------------------------------------------------------

ஏதிலார்   ஆரத்  தமர்பசிப்பர்   பேதை 

பெருஞ்செல்வம்  உற்றக்  கடை. -837.

சிந்திக்கும் திறன் அற்றோன் அறிவிலியாவான்... தற்புகழ்ச்சிக்கு இரையாவான்... தன்னை புகழ்வோரின் மொழிக்கு மயங்கி, தன் செல்வத்தை விரயம் செய்யுங்கால், அவனுடைய குடும்பம் பசியால் வாடும்... தன் குடும்பத்தின் நிலையையும் உணரவியலாத அறிவிலியால், அவனின் அறிவற்றத் தன்மையை பிறர் பயன்படுத்தி அவனுடைய செல்வத்தை சூறையாடுவது இயல்பே...

                     --------------------------------------------------------------------------------------

நட்பியல்                                          அரங்க கனகராசன் உரை.

மையல்  ஒருவன்  களித்தற்றால்  பேதைதன் 

கையொன்று  உடைமை  பெறின்.                -838.

தனக்குத் தானே சிரிப்பது பித்தனின் செயல்... தான் சிரிப்பதேன் ஏனென உணரும் மனநிலை பித்தனுக்கு இருக்காது... அதுபோல் தன்மை ஒருவனுக்கு  இருக்கிறது எனில் அவனை அறிவிலி எனலாம்... அறிவிலி ஒரு பொருளின் உரிமையாளனாகி விட்டால், பித்தனைப் போல் தன்னை மறந்து பிதற்றவும், பெருமை பீற்றிக் கொள்ளவும் செய்வான்...

                         -------------------------------------------------------------------------------

பெரிதினிது  பேதையார்  கேண்மை  பிரிவின்கண் 

பீழை  தருவதொன்று  இல்.                                       -839.

ஒரு வகையில் மிகவும் இனிமையானதுதான் பேதையரின் நட்பு... ஏனெனில் ஒருக்கால் பேதையோடு நட்பு முறிவு ஏற்படும் பட்சத்தில், பிரிவுக் குறித்து மனம் வேதனைக் கொள்ளாது...

                               -------------------------------------------------------------------------------

கழாஅக்கால்  பள்ளியுள்  வைத்தற்றால்  சான்றோர் 

குழாஅத்துப்  பேதை  புகல்.                                             -840.

சேற்றிலும், சகதியிலும் தோய்ந்தப்  பாதத்தைக் கழுவாமல், வீட்டினுள் அடியெடுத்து வைப்பது போன்றது எதுவெனில்; கல்வியாளர் - அறிஞர் - குமியுள்ளக் கருத்தரங்கில் கலந்துக் கொள்ள, பொது அறிவோ,  சிந்தித்து பேசுந்திறனோ  அற்ற அறிவிலி புகுவது...                 

*பகுத்தறிவாளன்  மனதில் இருள் எனும் அழுக்கு இருக்காது... அறிவிலியிடம் அறியாமை எனும் அழுக்குப் படிந்திருக்கும்... 

                    -------------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                         அதிகாரம் : 85

                                        புல்லறிவாண்மை 

அறிவின்மை  இன்மையுள்  இன்மை  பிறிதின்மை 

இன்மையா  வையாது  உலகு.                              -841.

அறிவின்மை  என்பது மிக மிக இழிவானதாகும்...  கல்வியில்லை; செல்வமில்லை எனறாலுங்கூட உலகத்தார் இழிவாக கருதுவதில்லை...

                          ------------------------------------------------------------------------------

அறிவிலான்  நெஞ்சுவந்து  ஈதல்  பிறிதுயாதும் 

இல்லை  பெறுவான்  தவம்.                              -842.

அறிவில்லாதவன்  மனமுவந்து உதவிச் செய்வது ஏனென ஆய்வு செய்தால், வேறென்னவாக இருக்கும்?...  உதவிப் பெறுகிறவனுக்கு அந்நேரத்தில் எதிர்பாராதப் பரிசு கிடைத்திருக்கிறது என்றுக் கூறுவதே தகும்... 

                      -----------------------------------------------------------------------------

அறிவிலார்  தாம்தம்மைப்  பீழிக்கும்  பீழை  

செறுவார்க்கும்  செய்தல்  அரிது.            -843.

அறிவில்லாதவனின்  அறிவற்ற தன்மை, அவனுக்கு பல இன்னல்களைத் தோற்றுவிக்கும்... பகைவர்களாலும் இத்தகைய இன்னல்களைத் தோற்றுவிக்க இயலாது... 

*அறிவின்மையால் துயர் நிகழ்வுகள் ஏற்படும்... 

                 ----------------------------------------------------------------------------------

வெண்மை  எனப்படுவது  யாதெனின்  ஒண்மை 

உடையம்யாம்  என்னும் செருக்கு.                  -844.

ஒருவனை அறிவிற் சூனியம் எனக் கண்டறியப் படுவதற்கு ஒன்றுண்டு... அது எதுவெனில், தனக்குத் தானே தன்னை அறிவாளியாக - மமதையுடன் - பீற்றிக் கொள்ளுவான்... அவனுடைய பீற்றுதலே அவனை சூனியம் எனக் காட்டிக் கொடுத்துவிடும்... 

                           ---------------------------------------------------------------------------    

கல்லாத மேற்கொண்டு  ஒழுகல்  கசடற 

வல்லதூஉம்  ஐயம்  தரும்.                   -845.

ஒரு செயலில் ஈடுபடுமுன் அது பற்றி தெரிந்திருக்க வேண்டும்... தெரியாதவற்றைச் செய்து தோல்வி ஏற்பட்டால், பின்னர் செய்யவிருக்கும் செயல் மீதும் அய்யம் ஏற்படும்...     

                             ---------------------------------------------------------------------

நட்பியல்                                    அரங்க கனகராசன் உரை.

அற்றம்  மறைத்தலோ  புல்லறிவு  தம்வயின் 

குற்றம்  மறையா  வழி.                                 -846.

குற்றத்தை மூடி மறைப்பது மடச்செயலாகும்... குற்றச் செயல்களை மூடி மறைப்பதென்பது, குற்றங்களில் இருந்து விடுப்படும் வழியை அடைத்து விடுவது போலாகும்...

                       ------------------------------------------------------------------------------

அருமறை   சோரும்  அறிவிலன்  செய்யும் 

பெருமிறை  தானே  தனக்கு.                  -847.

மனத்தோடு பாதுகாக்கப்பட வேண்டிய செய்தியைப் பாதுகாக்காமல், வெளிப் படுத்துகிறவன் அறிவில்லாதவன் ஆவான்... இத்தகு செயலால், தனக்குத்தானே பெருந்துன்பத்தையும் செய்துக் கொள்ளுபவனாகிறான்... 

                       --------------------------------------------------------------------------------

ஏவவும்  செய்கலான்  தான்தேறான்  அவ்வுயிர் 

போஒம்  அளவுமோர்    நோய்.                       -848.

சொன்னாலும் செய்யமாட்டான்...  சிந்திக்கவும் மாட்டான்... பகுத்தறிவற்ற அவனுக்கு, அவனது உயிர் மரணிக்கும் வரைக்கும் ஒரு  நோயாகாவே கருதப்படும்...

                          -----------------------------------------------------------------------------

காணாதான்  காட்டுவான்  தான்காணான்  காணாதான் 

கண்டானாம்  தான்கண்ட   வாறு.                                 -849.

அறிவற்றவன் தன்னைத் தத்துவஞானியாகக் காட்டிக் கொள்வான்... ஆனால்; உண்மையில் தான் அறிய வேண்டியதை அறிந்திருக்க மாட்டான்... - அறியவும் மாட்டான்... அறிஞர்களின் கருத்துகளை ஏளனம் பேசுவான்... தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையோடு இருப்பான்... 

                        -----------------------------------------------------------------------------

உலகத்தார்  உண்டென்பது  இல்லென்பான்  வையத்து 

அலகையா  வைக்கப்  படும்.                                          -850.

பகுத்தறிவாளர்களால் ஒப்புக் கொள்ளப்படும் உண்மையை மறுத்து மறுமொழி பேசுவான்... இத்தகையவனை நுண்ணறிவற்ற விலங்கென இப்புலம் கருதும்...

                    -----------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                 அதிகாரம் :86.

                                             இகல் 

இகலென்ப   எல்லா  உயிர்க்கும்   பகலென்னும் 

பண்பின்மை  பாரிக்கும்  நோய்.          -851.

                                                     இகல் = முரண்பாடு.

மானிட இனத்தை பிரித்தாளும் சூழ்ச்சிக் கொண்டோரை, முரண்பாட்டின் உருவம் என்பர்... வாழ்வுரிமை எல்லா உயிர்க்குமே உண்டு... மானிடரிடையே பிறப்பால் பேதம் கற்பித்து, செய்யும் தொழிலாலும் மானிடரைப் பிரித்து, ஒற்றுமையை சிதைப்பர் சிலர்... இவர்களின் முரண்பாடானச் செயல்களால், மானிடரிடையே வேற்றுமை எனும் நோய் வேரூன்றும்... 

                         ----------------------------------------------------------------------------------

பகல்கருதிப்  பற்றா  செயினும்  இகல்கருதி 

இன்னாசெய்  யாமை  தலை.                   -852.

                                                  இகல் = பகை.

மானிடரின் ஒற்றுமையை சிதைத்திட கடவுள், மதம் எனும் பேரால் பிரிவினையைத் தூண்டினாலும்  - விரும்பத்தகாதச் செயல்கள் - செய்யப்பட்ட போதிலும், புல்லுருவிகளாம் முரண்பாட்டாளர்களைப் பழி வாங்க நினைத்து, கொடுஞ் செயல் செய்திடக் கூடாது... முரண்பாட்டு மொழியை, பகுத்தறிவு மொழியால் வெல்ல  வேண்டுமே யன்றி, கொஞ்செயல் செய்துப் பகையை வளர்த்திடக் கூடாது...

                                 ------------------------------------------------------------------------------

இகலென்னும்  எவ்வநோய்  நீக்கின்  தவலில்லாத் 

தாவில்  விளக்கம்  தரும்.                                        -853.

                               எவ்வநோய் = தீமைத் தரும் நோய்  

முரண்பாடு என்பதுத் தீமையான நோயாகும்... மனதில் முரண்பாட்டுக்கு இடமின்றி நீக்கி விடல் வேண்டும்... நீக்கினால், தீமையிலிருந்து விடுபடலாம்... மிகச் சிறப்பான நற்புகழையும் அடையலாம்... 

*முரண்பாட்டுச் சிந்தனையை விலக்கினால், குழப்பத்திலிருந்து விடுபட்டு, நற்பெயருடன் விளங்கலாம்...

                          -------------------------------------------------------------------------------

இன்பத்துள்  இன்பம்  பயக்கும்  இகலென்னும் 

துன்பத்துள்  துன்பம்  கெடின்.                       -854.

இன்பத்துள் இன்பம் எதுவெனில், அமைதியும், நிம்மதியுமாகும்... மானிடரின் ஒற்றுமையை சிதைப்பது பகுத்தறிவற்ற கருத்துகளாகும்... இக்கருத்துகளால் நாட்டில் பேரழிவு நிகழும்... எனவே, முரண் மிகு கருத்துகளை புறந்தள்ளினால் அமைதி நிலவும்...

                         ------------------------------------------------------------------------------

நட்பியல்                                        அரங்க கனகராசன் உரை.

இகலெதிர்  சாய்ந்தொழுக  வல்லாரை  யாரே 

மிகலூக்கும்  தன்மை  யவர்.                         -855.

மானிடரை சீர்குலைப்பது முரண்பாடு தத்துவமாகும்... முரண்பாட்டு நிலையை முறியடிக்க, பகுத்தறிவு முழக்கமிடுவோரை எவராலும் வெல்ல இயலாது... வெல்லும் தகுதி வேறு எந்தத் தத்துவத்திற்கும்  கிடையாது...

                         ---------------------------------------------------------------------------

இகலின்   மிகலினிது  என்பவன்  வாழ்க்கை 

தவலும்  கெடலும்  நணித்து.        -856.

                                         இகல்   = முரண்பாடு.

                                              மிகல்  = வெற்றி 

                                              தவல்  = குற்றம்                          

மானிட இனத்தை சிதைப்பது மூடஎண்ணமான முரண்பாடுத் தத்துவமே!... மூட எண்ணத்தைப் பரப்பி மக்களை ஏய்ப்பதில் வெற்றி அடையலாம் என்று கருதுவோர் வாழ்வில் குற்றம் மிகுந்து காணப்படும்... விரைவில் வாழ்வும் அழியும்... 

*மூட எண்ணம் பரப்புதல் நிலையான வெற்றியைத் தராது... பகுத்தறிவே வெல்லும்... 

                               --------------------------------------------------------------------------------

மிகல்மேவல்  மெய்ப்பொருள்  காணார்  இகல்மேவல் 

இன்னா  அறிவி  னவர்.                                         -857.

                                                   மிகல் = வெற்றி.

வாழ்வின் வெற்றிக்கு, உண்மை எதுவென அறியாதோர் முரண்பாட்டாளர் ஆவர்... இவர்கள் கேடு நிறை  சிந்தையாளர் ஆவர்..

*மானிடரின் ஒற்றுமையை வேரறுத்தல் மதக் கோட்பாட்டாளரின் சிந்தையாகும்...

                         ----------------------------------------------------------------------------

இகலிற்கு  எதிர்சாய்தல்  ஆக்கம்  அதனை 

மிகலூக்கின்  ஊக்குமாம்  கேடு.            -858.

மூடக் கருத்தை முறியடிக்க, பகுத்தறிவுடன் செயல்பட்டால் நன்மைக் கிட்டும்... மூடக் கருத்துக்கு  ஆதரவாக செயல்பட்டால், நாடு சீரழிய ஊக்கம் தருவது போலாகும்...

                         ----------------------------------------------------------------------------------

நட்பியல்                                 அரங்க கனகராசன் உரை.

இகல்காணான்  ஆக்கம்  வருங்கால்  அதனை 

மிகல்காணும்  கேடு  தரற்கு.                         -859.

மானிடர் ஒற்றுமையை விரும்புகிறவன், மாறுபாடு உணர்வுக்கு இடந்தர மாட்டான்... நாட்டில் இரத்த ஆறு ஓடுவதை விரும்புகிறவன் மூடக்கருத்தை பேசிடுவான்...

                  ----------------------------------------------------------------------------

இகலானாம்  இன்னாத  எல்லாம்  நகலானாம் 

நன்னயம்  என்னும் செருக்கு.             -860.       

                                  நகல் = ஒளி, தெளிந்தச் சிந்தனை.

மூட எண்ணம் பெருந்தீமையை  ஏற்படுத்தும்... ஆனால்; பகுத்தறிவு எனும் தெளிந்தச் சிந்தனையால், சிறந்த வழிக் காட்டுதல் என்னும் சிறப்பு நேரும்...    

                                ----------------------------------------------------------------------------

நட்பியல்                                                     அதிகாரம் :87.

                                   பகைமாட்சி 

வலியார்க்கு  மாறேற்றல்  ஓம்புக  ஓம்பா 

மெலியார்மேல்  மேக பகை.                 -861.

வீரனிடம் வீரத்தைக் காட்டுதல் வேண்டும்... வலிமைக்   குன்றியவனோடுப்  பகைப் பாராட்டுதல் கூடாது... 

*அது ஆதிக்க வெறியெனப்படும்...

                         ----------------------------------------------------------------------------

அன்பிலன்  ஆன்ற  துணையிலன்  தான்துவ்வான் 

என்பரியும்  ஏதிலான்  துப்பு.                                   -862.

மக்கள் மீது அன்பில்லாமலும், அரசுப் பணியாளர் நலன் மீது காட்டாமலும், நல்லறிவுக் கூறிடத் தக்க துணைவர் இல்லாமலும், தனித்து நின்று சாதிக்கக் கூடிய ஆற்றல் இல்லாமலும் எவ்வாறு பகைவனது வலிமையை அறிய முடியும்... 

*தனித்து நின்றால் பகைவன் போக்கை அறிய முடியாது...

                          ------------------------------------------------------------------

அஞ்சும்  அறியான்  அமைவிலன்  ஈகலான் 

தஞ்சம்  எளியன்  பகைக்கு.                      -863.

நெஞ்சில் எப்போதுமே அச்சம்... நிர்வாகவியல் திறனும் இல்லை... அமைப்பு ரீதியானச் செயல்பாடும் இல்லை... எவருக்கும் எதுவும் உதவிடும் குணமும் இல்லை... இப்படியிருந்தால், பகைவனிடம் எளிதில் அடிப் பணிந்திடுவான்...

                               -----------------------------------------------------------------------

நீங்கான்  வெகுளி  நிறையிலன்  எஞ்ஞான்றும் 

யாங்கணும்  யார்க்கும்  எளிது.                        -864.

கோபத்திலிருந்து  விடுப்படாமலும், மனதில் உறுதிக் குலைந்தும் இருப்போனை எத்தருணத்திலும், எவ்விடத்திலும், எவராலும் வெல்லுதல் எளிது...

                     ---------------------------------------------------------------------------

வழிநோக்கான்  வாய்ப்பன  செய்யான்  பழிநோக்கான் 

பண்பிலன்  பற்றார்க்கு  இனிது.                                    -865.

நன்மை பயக்குமா? தீமைப் பயக்குமா? என ஆராயும் அறிவின்றி இருத்தல், எதிர்கால நலனை முன்னிட்டுத்  திட்டமிடுதல் இல்லாதிருத்தல்,   தன்னலத்திற்காக கொடுஞ்செயலுக்குத் துணிதல், பழிக் குறித்து நாணம் கொள்ளாதிருத்தல், பிறரை மதிக்கும் பண்பு அறவே இல்லாதிருத்தல் என இத்தகையோனை வெல்வது பிறர்க்கு எளிதாக அமையும்... 

                        ------------------------------------------------------------------------------

நட்பியல்                                                     திருக்குறள் உரை.

காணாச்  சினத்தான்  கழிபெருங்  காமத்தான் 

பேணாமை  பேணப்  படும்.                    -866.

முரட்டுக் கோபமும், வரம்பற்ற காம இச்சையும் தானாகவே பகையை வளர்க்கும்... 

                             -------------------------------------------------------------------------------

கொடுத்தும்  கொளல்  வேண்டும்  மன்றஅடுத்திருந்து 

மாணாத  செய்வான்  பகை.                                           -867.

விலை பேசிட வேண்டும்... எவனை?... கூடவே  இருந்துக் குழிப் பறிப்பவனை!... விலை பேசிடுவதன் வாயிலாக, அவனால் ஏற்படக்கூடிய பகையைத் தடுத்திடலாம்...

                         ----------------------------------------------------------------------------

குணனிலனாய்க்  குற்றம்  பலவாயின்  மாற்றார்க்கு 

இனனிலனாம்  ஏமாப்பு  உடைத்து.                          -868.

நல்குணம் அறவே இல்லை... குற்றமோ எண்ணிலிடங்காதவை... நல்துணையும் இல்லையெனில், ஒருவனை பகைவர்களால் வென்றிட வாய்ப்பு  சிறப்பாக அமையும்... 

                        -------------------------------------------------------------------------------

செறுவார்க்குச்  சேணிகவா  இன்பம்  அறிவிலா 

அஞ்சும்  பகைவர்ப்  பெறின்.                             -869.

வென்றிட வந்தப் பகைவனுக்கு, வெற்றிக் கைக்குள் கனி போல் எனில், பகைவன் இன்பம் கொள்ள மாட்டானா?... போர்முறை அறியாதவனை  அதுவும்  கோழையோடுப் போர்  எனில், பகைவன் நெஞ்சம் மகிழத்தானே செய்யும்...       

                            ------------------------------------------------------------------------------

கல்லான்  வெகுளும்  சிறுபொருள்  எஞ்ஞான்றும் 

ஒல்லானை  ஒல்லாது  ஒளி.                               -870.

போர்முறையோ, பொது அறிவோ இல்லை... மேலும்; சின்னஞ் சிறியச் செயலுக்கும்  கோபம் கொள்ளும் குணம் உள்ளவனை வெல்வது மிக எளிது... ஆனால்; இதுப் போன்ற எளிய வெற்றியையும்ஈட்டமுடியாதவரை உலகம் போற்றாது... 

                           ------------------------------------------------------------------------------

நட்பியல்                                                         அதிகாரம் :88.

                           பகைத்திறம் தெரிதல்.

பகைஎன்னும்    பண்பி    லதனை     ஒருவன் 

நகையேயும்  வேண்டற்பாற்று  அன்று.  -871.

பகை என்பது பண்பாடற்றச் செயல்... இதனை ஒருவன் வேடிக்கைக்காகவும் விரும்பக் கூடாது...

                             --------------------------------------------------------------------------------

வில்லே  ருழவர்  பகைகொளினும்  கொள்ளற்க 

சொல்லே  ருழவர்  பகை.                                    -872.

வில் வீச்சு வீரர்களோடு, பகை  ஏற்பட்டாலும், சொல் வீச்சு வீரரோடுப் பகைக் கூடாது... 

                                 -------------------------------------------------------------------------------

ஏமுற்  றவரினும்  ஏழை  தமியனாய்ப் 

பல்லார்  பகைகொள்  பவன்.         -873.

பித்தனைக் காட்டிலும் அறிவிழந்தவன்  யாரெனில், எவரோடும் நல்லுறவுக் கொண்டு பழகாமல், தனித்து  வாழ்ந்து பலரோடு, பல முனைகளிலும் பகை வளர்த்துக் கொள்பவனே ஆவான்!... 

                              -----------------------------------------------------------------------------

பகைநட்பாக்  கொண்டொழுகும்  பண்புடை  யாளன் 

தகமைக்கண்  தங்கிற்று  உலகு.                              -874.

பகைவனையும் தனது சாதுர்யத்தால் நட்பாக்கிக் கொள்ளுதல் நல்  பண்பாகும்...  அத்தகையப் பண்புடையவனின் உயர்வானக் குணத்தால் இவ்வுலகில் மானிடநேயம் வளர்கிறது...

                      --------------------------------------------------------------------------------

தன்துணை  இன்றால்  பகைஇரண்டால்  தான்ஒருவன் 

இன்துணையாக்  கொள்கவற்றின்  ஒன்று.                -875.

உதவிட உற்றத் தோழமையும் இல்லை... பகையோ இருமடங்கு... இந்நிலையில் தனி ஒருவனாய் நின்று இருமுனைப் பகையையும், ஒரே நேரத்தில் எதிர்க் கொண்டால், தோல்வியும், அழிவும் நிகழலாம்... ஆனால்; இரு பகையில் ஒன்றை நட்பாக்கிக் கொள்வது நல்லது... அது தனது வலிமைக்குத் துணையாகும்... இதுவும் போர்த் தந்திரங்களில் ஒன்றாகும்...

                               -------------------------------------------------------------------------

நட்பியல்                               அரங்க கனகராசன் உரை.

தேறினும்  தேறா  விடினும்  அழிவின்கண் 

தேறான்  பகாஅன்  விடல்.                      -876.

பகைமை ஏன் ஏற்பட்டதென தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம்... ஆனால்; பகைமையின் விளைவாய் ஏற்பட்ட அழிவிலிருந்து, முதற்கண் விடுப்பட வேண்டும்... அதற்காக சிந்திப்பது நல்லது... சிந்தித்து ஆபத்திலிருந்து விடுப்படுவதை விடுத்து, பகைமை ஏன் ஏற்பட்டது ஏனென ஆராய்ந்துக் கொண்டிருக்கக் கூடாது... அதே நேரம், ஆராயும் எண்ணத்தையும் முற்றிலுமாய் நீக்கவும் கூடாது...

                              ---------------------------------------------------------------------------

நோவற்க  நொந்தது  அறியார்க்கு  மேவற்க 

மென்மை  பகைவ  ரகத்து.                         -877.

தமக்கு ஏற்பட்ட மனவேதனையை, அடுத்தவருக்கு தெரியப் படுத்துவது ஆகாது... பிறருக்குத் தெரியப் படுத்துவதால் தமது வலுவீனம் அம்பலமாகி விடும்... அதேப் போல் மென்மையானப் போக்கைப் பகைவனிடத்தில்  காட்டக்கூடாது... 

*மன வேதனையை அம்பலமாக்கக் கூடாது... பகைவனிடம் மென்மையைக் காட்டக் கூடாது...

                                 -------------------------------------------------------------------------    

வகையறிந்து  தற்செய்து  தற்காப்ப  மாயும் 

பகைவர்கண்  பட்ட  செருக்கு.                    -878.

முன்னதாக - நன்கு - நிறைவுடன் - திட்டமிடுதல் வேண்டும்... பாதுகாப்பு ஏற்பாடுகளும் சீருடன் இருக்கவேண்டும்... இருப்பின், பகைவனின் எண்ணம் முறியடிக்க ஏதுவாகும்...

                      --------------------------------------------------------------------------------

இளைதாக  முள்மரம்  கொல்க  களையுநர் 

கைகொல்லும்  காழ்த்த  விடத்து.         -879. 

தளிராய் இருக்கும் போதே முள் மரத்தை அழித்திடல் வேண்டும்... அல்லவெனில், வளர்ந்துவிட்ட முள்மரத்தை முற்படும்போது, வெட்டுபவரின் கையை மரத்தின் முள் வருத்தும்...

 *அதுபோல் பகையையும் ஆரம்பத்திலேயே அழித்துவிடுவது நன்று... 

                              --------------------------------------------------------------------------

உயிர்ப்ப  உளரல்லர்  மன்ற  செயிர்ப்பவர் 

செம்மல்  சிதைக்கலா   தார்.                  -880

மூச்சிருக்கும்... உயிருள்ள சடலமென்று எவரைக் கருதும் இவ்வுலகு?... கொக்கரிக்கும் பகைவனின் கொட்டத்தை அடக்கத் திராணியற்றவனை உயிருள்ள சடலமென இவ்வுலகு கருதும்...

                         ---------------------------------------------------------------------------------------

நட்பியல்                                                            அதிகாரம்:89.

                                     உட்பகை 

நிழல்நீரும்  இன்னாத  இன்னா  தமர்நீரும் 

இன்னாவாம்  இன்னா  செயின்.     -881.

நிழல் சுகம் தரக்கூடியது...  நீரின்றி உயிர் வாழவும் முடியாது... ஆனாலும்; ஒரு கட்டத்தில் நீரும், நிழலும் தீமைப் பயக்குமெனில், அவற்றைத் தவிர்த்து விட வேண்டும்... அதுப்போல ஒழுக்கமற்ற உறவினர் தொடர்பும் கூடாது... ஏனெனில் தீமை விளைவிக்கும் என்பதால்...

                           --------------------------------------------------------------------------------

வாள்போல்  பகைவரை  அஞ்சற்க  அஞ்சுக 

கேள்போல்  பகைவர்  தொடர்பு.               -882.  

பகைவரில் ஒருவகை-

தமதுப் பகை உணர்வை வெளிப்படையாக  வெளிப்படுத்துவர்.. இத்தகையரிடமிருந்து ஆபத்து ஏற்படும் என்பதை முன்னரே, அறிய வாய்ப்புள்ளது... அதனால்; தற்காத்துக் கொள்ளலாம்... இத்தகையப் பகைவரைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை...

பகைவரில் இன்னொரு வகையினர் உண்டு... யாரெனில், நண்பர் போல - உறவினரைப் போல - இருப்பர்... இத்தகையோரின் பகை வெளியில் தெரியாது... உள்ளொன்றும், புறமொன்றுமாகப் பழகி, நம்பியவரை அழிக்க திட்டமிடுவர்... இவர்களிடம் அச்ச உணர்வை நெஞ்சில் கொண்டு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...

                                -------------------------------------------------------------------------------

உட்பகை அஞ்சித்தற்  காக்க  உலைவிடத்து 

மட்பகையின்  மாணாத்  தெறும்.               -883.

உறவாடிக் கெடுப்பவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... ஈரமண் கொண்டு மண்பாண்டம் உண்டுச் செய்யும் போதில், சக்கரம் சுழன்றுக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து மண்பாண்டத்தை அறுத்து எடுப்பர்... அதுபோல உறவாடியே அழித்து விடுவர் உட்பகைவர்...

                           -----------------------------------------------------------------------------

மனமாணா  உட்பகை  தோன்றின்  இனமாணா 

ஏதம்  பலவுந்  தரும்.                                               -884.      

மனதில் உட்பகை வேரூன்றி வளர, வளர மானிட இனத்தின் மாண்புக் குன்றும் படி, குற்றச் செயல் பெருகி, பல இன்னல்கள் உண்டாகும்...

                 ---------------------------------------------------------------------------

உறல்முறையான்  உட்பகை  தோன்றின்  இறல்முறையான் 

ஏதம் பலவுந்  தரும்.                                                                            -885.

நெருங்கிய உறவுக்குள் உட்பகைத் தோன்றினால், உறவை முறிப்பதோடு, இறுதிவரை குற்றச்செயல் புரியச் செய்து, இன்னல் பல உண்டாக்கும்... 

                                -------------------------------------------------------------------------------

நட்பியல்                                                   அரங்க கனகராசன் உரை.

ஒன்றாமை  ஒன்றியார்  கட்படின்  எஞ்ஞான்றும் 

பொன்றாமை  ஒன்றல்  அரிது.                             -886.

கூடி வாழ்வோரின் நெஞ்சில்  பிரிவினை எனும் உட்பகை ஏற்பட்டால், அது கூடி வாழ்தலின் மேன்மையை அழிக்கும்... இனி எப்போதுமே அந்த அழிவிலிருந்து மீண்டு, மீண்டும் கூடி வாழ்தல் என்பது அரிதாகும்...

*பிரிவோம் எனும் எண்ணமே, கூடி வாழ்தலைக் குலைத்து விடும்...

                            --------------------------------------------------------------------------     

செப்பின்  புணர்ச்சிபோல்  கூடினும்  கூடாதே 

உட்பகை  உற்ற  குடி.                                          -887.

செப்பு எனும் உலோகத்தோடு வேறு உலோகத்தை உருக்கி இணைத்தாலும், பொருந்துவது போல் தோற்றமளித்தாலும், மீண்டும் உருக்க நேரும்போது செப்பின் தனித் தன்மையால் இணைப்பிலிருந்து வேறுபொருள் விடுபட்டுவிடும்... அதுப்போல் கூடி வாழ்தல் போல் காட்சியளித்தாலும், நெஞ்சில் உட்பகை கொண்டிருப்போர் தமது தனித் தன்மையால் பிரிந்து விடுவர்... உறவற்ற குடியால் இணைந்து வாழ இயலாது...

                               ----------------------------------------------------------------------

அரம்பொருத  பொன்போலத்  தேயும்  உரம்பொருது 

உட்பகை  உற்ற  குடி.                                                         -888.

அரம் எனும் கருவிக் கொண்டுத் தேய்க்கத் தேய்க்க, உறுதியான இரும்பும் தேய்வதுப் போல், நெஞ்சில் ஆழமாக வேரூன்றிவிட்ட உட்பகை எனும் உணர்வு வளர வளர உறுதியான குடும்பத்தின் மாட்சிமைத் தேய்ந்து விடும்...

---------------------------------------------------------------------------------------

எட்பக  வன்ன  சிறுமைத்தே  ஆயினும் 

உட்பகை  உள்ளதாம்  கேடு.              -889.

அளவில் சிறியதுதான் எள்!... அந்த எள்ளையும் இரு கூறாக்கினால் மேலும் அளவில் சிறுத்து விடும்... பிளவுப் பட்ட எள் போன்று அளவில் சிறிதாய் உட்பகை இருப்பினும் குடும்பம் சீரழியும்...

                      -----------------------------------------------------------------------------

உடம்பாடு  இலாதவர்  வாழ்க்கை  குடங்கருள் 

பாம்போடு  உடனுறைந்  தற்று.                       -890.

கருத்தொற்றுமை இல்லாதோர் ஓரிடத்தில் வாழ்தல் என்பது, ஒரே குடிலுக்குள் பாம்போடு  உடன் வாழ்வது போன்றதாகும்...

                           -----------------------------------------------------------------------------

நட்பியல்                                                                         அதிகாரம்:90.

                               பெரியாரைப் பிழையாமை 

ஆற்றுவார்  ஆற்றல்  இகழாமை  போற்றுவார் 

போற்றலு  ளெல்லாம்  தலை.                          -891.

திறமையாளரின் செயல்பாட்டை இகழாதிருத்தல் வேண்டும்... நற்செயல் கண்டவிடத்து, நன்மொழிகளால் பாராட்டுவதைவிட சிறந்தது எதுவெனில், திறமையாளரின் செயல்பாட்டை இகழாதிருத்தல் சிறப்பு ஆகும்...

                        ---------------------------------------------------------------------------------

.

பெரியாரைப்  பேணாது  ஒழுகின்  பெரியாரால் 

பேரா  இடும்பை  தரும்.                                          -892.

அறிவிற் சிறந்தப் பெரியோரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ள மறுப்பது தவறாகும்... பெரியாரின் வழிகாட்டுதல் இல்லையேல், வாழ்வில் பெருந்துன்பம் ஏற்படும்...

                             ----------------------------------------------------------------------------

கெடல்வேண்டின்  கேளாது  செய்க  அடல் வேண்டின் 

ஆற்று  பவர்கண்  இழுக்கு.                                                -893.

வாழ்வில் இன்னல் சூழ வேண்டுமெனில், அறிவிற் சிறந்தப் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துச் செயல்படுக... அறிவிற் சிறந்தோரின் சொல் கேளாமல் தன்னிச்சையாகச் செயல் பட்டால், செயல்பாட்டில் குறைகள் காணப்படும்...

                    -------------------------------------------------------------------------------------

கூற்றத்தைக்  கையால்  விளித்தற்றால்  ஆற்றுவார்க்கு 

ஆற்றாதார்  இன்னா  செயல்.                                                 -894.

'துன்பமே வருக, எமக்குத் துன்பம் தருக' என்று துன்பத்தைக் கைநீட்டி அழைப்பது போன்றது எதுவெனில், ஆற்றலும், திறமையும் கொண்டு செயல்படுகிறவரின் செயல்பாட்டிற்கு இடையூறு செய்தல் என்பது துன்பத்தை வலியச் சென்று வரவழைப்பதாகும்... 

*தீமைப் புரிவோர்க்கு தீமையே எதிர்வினையாகிறது...

                                -------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                                  திருக்குறள் உரை.

யாண்டுச்சென்று  யாண்டும்  உளராகார்  வெந்துப்பின் 

வேந்து  செறப்பட்  டவர்.                                                       -895.

அரசத் துரோகிகள் தப்பி எங்கு சென்ற போதிலும், நிம்மதியான வாழ்வு வாழ முடியாது... ஏனெனில் அரசுக்கு எதிராக சதிச் செயல் செய்து, அரசின் குற்றவாளியாக ஆக்கப் பட்டிருப்பின் எங்கும் அச்சமின்றி வாழ முடியாது...

* அரசின் கோபத்திற்கு உள்ளானவர், ஒளிவு வாழ்க்கை வாழ்ந்த போதிலும், அஞ்சியே வாழ வேண்டியவர் ஆவர்...

                             --------------------------------------------------------------------------

எரியால்  சுடப்படினும்  உய்வுண்டாம்  உய்யார் 

பெரியார்ப்  பிழைத்தொழுகு  வார்.                 -896.

எரிநெருப்பால், சுடப்பட்டாலும் சிறந்த மருத்துவம் மேற்கொண்டால் பிழைக்க வாய்ப்புண்டு... ஆனால்; எவ்வகையிலும் வாழ்வில் மேம்பாடு அடைய முடியாதோர் எவரெனில், அறிவிற் சிறந்த பெரியோரின் சொல் கேளாது, தான்தோன்றித்தனமாக செயல்படுகிறவர்...

                       -------------------------------------------------------------------------------

வகைமாண்ட  வாழ்க்கையும்  வான்பொருளும்  என்னாம் 

தகைமாண்ட  தக்கார்  செறின்.                                                 -897.

பார்ப்புகழும்படி முன்னோர் வாழ்ந்திருக்கலாம்... முன்னோரின் வாழ்வு முறை அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கும், பெருமை சேர்க்கலாம்... வான் முட்டுமளவு செல்வம் குவித்து வைத்திருக்கலாம்... ஆனால்; ஒருவனுக்கு அவற்றால் மட்டுமே நற்புகழ் கிட்டிவிடுமா?... இழிவு பல செய்து, பெரியாரின் இன்னுரையைத் தவிர்த்து, சான்றோரின் மனநோதலுக்கு உள்ளானவன் மக்களின் நன்மதிப்பை இழந்து விடுவான்...

                                      ---------------------------------------------------------------------     

குன்றன்னார்  குன்ற  மதிப்பின்  குடியொடு 

நின்றன்னார்  மாய்வர்  நிலத்து.            -898.

தகுதி வாய்ந்த பெரியோரின் நல்லுரையை தவறாக மதிப்பீடு செய்தால், செல்வந்தரும் செயல் இழப்பர்...  

                       -----------------------------------------------------------------------

நட்பியல்                                                       அரங்க கனகராசன் 

ஏந்திய  கொள்கையார்  சீறின்  இடைமுறிந்து 

வேந்தனும்  வேந்து  கெடும்.                           -899.

ஆட்சியாளர் அநீதியாய் செயல்படும்போது -

அநீதியை எதிர்த்து தூய்க் கொள்கையுடைய  தகைமையாளர், சீறி எழின் நாட்டில் புரட்சி வெடிக்கும்... மக்களுக்கும் ஆட்சியாளருக்கு உள்ள உறவு முறியும்... ஆட்சியாளன் அழிவான்... அவனது கொடுங்கோண்மை அரசும் அழியும்...

                 -----------------------------------------------------------------------------------

இறந்தமைந்த  சார்புடைய  ராயினும்  உய்யார் 

சிறந்தமைந்த  சீரார்  செறின்.                           -900.

அதிகாரத்தின் துணைக் கொண்டும், செல்வத்தின்  துணைக் கொண்டும் பலரை பாதுகாப்புக்கு வைத்திருந்தாலும், நாட்டின் நலன் கருதி மக்கள் நெஞ்சில் எழுச்சியூட்டி புரட்சியை ஒருவன் தோற்றுவித்தால் கொடுங்கோல் அரசு   வீழும்...

                      ----------------------------------------------------------------------------------

நட்பியல்                                                  அதிகாரம் :91.

                                              பெண்வழிச்  சேறல்

பெண்விழைவார்  மாண்பயன்  எய்தார்  வினைவிழைவார் 

வேண்டாப்  பொருளும் அது.                                                         -901.

மனைவியை இன்பம் துய்க்கும் கருவியாய் நினைத்து,  காம மயக்கம் கொண்டு, மனைவியின் ஏவலுக்கு அடங்குவோன், வாழ்வில் மேன்மை அடையவியலாது... வாழ்வில் வெற்றிக் காணுதல்  எனும் குறிக்கோளுடன் செயல் புரிவோர், மனைவியின் மேனியழகிற்கு அடிப்பணிவதோ, மனைவியிடம் வரம்பு மீறி மயங்குதலோ செய்ய மாட்டர்...

                              -------------------------------------------------------------------------------

பெண்விழைவான்  ஆக்கம் பெரியதோர் 

நாணுந் தரும்.                                              -902.

காம சுகம் வேண்டி, 'பாலியல் சுகமே பெரிதுஎன செயல்படுவோனது செயல்பாடானது , வெட்கக் கேடாகும்... காலமெல்லாம் தலைக் குனிவைத் தரும்...

                             -------------------------------------------------------------------------------

இல்லாள்கண்  தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 

நல்லாருள்  நாணுந் தரும்.                                                 -903.

                          தாழ்ந்த இயல்பின்மை = இழிவாய் 

மிகுக் காம உணர்வுக்கு ஆட்பட்டு, மனைவியின் ஆட்டுவித்தலுக்கெல்லாம் அடங்கிவிடுகிற இழித்தன்மையானதுஎப்போதுமே நல்லதல்ல!... பண்புள்ளோரை சந்திக்க நேரிடுகையில் தாழ்ந்துவிட்ட தனது நிலைப்பாடு, வெட்கக் கேட்டினை உண்டாக்கும்...

                          ------------------------------------------------------------------------------------

மனையாளை  அஞ்சும் மறுமையி  லாளன்

வினையாண்மை  வீறெய்த  லின்று.   -904.

          மறுமையிலான் = மாற்று சிந்தனை இல்லாதவன் 

உடல் சுகத்துக்காக மனைவியிடம் அஞ்சி அஞ்சி வாழ்வான் எவன்?

பாலியல் சிந்தனையன்றி வேறு சிந்தனை அற்றவன் ஆவான்... இத்தகையோன் வாழ்வின் முன்னேற்றம் குறித்து  சிந்திக்க மாட்டான்... 

                               -----------------------------------------------------------------------------------

இல்லாளை  அஞ்சுவான்  அஞ்சுமற்  றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு  நல்ல  செயல்.                                              -905.

பாலியல் உணர்வுக்கு மயங்கி  மனைவியின் ஏவலுக்கு அடிப்பணிந்திடுவான்... அஞ்சி அஞ்சி வாழும் நிலைக்குத் தள்ளப்படுவான்...  நல்லோர் துன்புறுதல் கண்டும் உதவிடத் துணியான்; மனைவி மாறு சொல்லிடுவாளோ  எனும் அச்சத்தில்!...

                                -----------------------------------------------------------------------------------

நட்பியல்                                           அரங்க கனகராசன் உரை.

இமையாரின்  வாழினும்  பாடிலரே  இல்லாள் 

அமையார்தோள்  அஞ்சு  பவர்.                        -906.

மக்களில் உயர்ந்த செல்வாக்கு மிக்கோனாக - செல்வந்தனாக - கற்றோனாக - வாழ்ந்தாலும், போற்றுதலுக்குரியன் அல்லன் இவன்... ஏனெனில், மனைவியின் அழகிய தோள் தழுவி முயங்க அதிக நாட்டம் கொண்டிருப்பான் எந்நேரமும்... அவள் சொற்படியே நடப்பான்... மாறு கருத்துச் சொன்னால், மனைவியின் தோள் தழுவிட முடியாதே என அஞ்சுவான்... 

                               ------------------------------------------------------------------------------

பெண்ணேவல்  செய்தொழுகும்  ஆண்மையின்  நாணுடைப் 

பெண்ணே  பெருமை  உடைத்து.                                                   -907.

பெண்ணின் ஏவலுக்கெல்லாம்  அடங்கி வாழ்கிற ஒருவனது ஆண்மையை ஒப்பிட்டு நோக்கும் போது, இயல்பாகவே நாணம் கொண்டிருந்தாலும் பெண்ணே பெருமைக்கு உரியவளாகத் திகழ்கிறாள்...     

                          -------------------------------------------------------------------------------------

நட்டார்  குறைமுடியார்  நன்றாற்றார்  நன்னுதலாள் 

பெட்டாங்கு  ஒழுகு  பவர்.                                               -908.

துயரில் தவித்தாலும் நண்பனின் இன்னல் களைய மாட்டான்... மேலும்; நல்லதென்று மனம் நினைத்தாலும் அதில் ஈடுப்பட மாட்டான்... எவனெனில்? எழில் பெண்ணின் உடல் அழகில் மதியிழந்தவன் ஆவான்... பெண்ணின் சொல் கேளாமல் ஏதும் செய்து விட்டால் பெண்ணின் தழுவல் கிட்டாதோ என்று அஞ்சிடுவான்... தன்னிலை மறந்த அவன், பிறருக்கு நல்லதும் செய்யான்...

                                      --------------------------------------------------------------------------  

அறவினையும்  ஆன்ற  பொருளும்  பிறவினையும் 

பெண்ஏவல்  செய்வார்கண்  இல்.                            -909.

நேர்மையான முயற்சியும், நேர்மையான முறையில் பொருளீட்டும் குணமும், காலமறிந்து ஆற்ற வேண்டியக் கடமை உணர்வும் இருக்காது... எவருக்கெனில், பெண்ணின் எழிலில் மயங்கி, அவளின் ஏவலுக்கு அடங்கித் தாழ்ந்து விட்டோரிடம்... இத்தகையோர் பெண்ணின் மனதை மகிழச் செய்வதற்காக எத்தகைய இழிச் செயலுக்கும் உடன்படுவர்...

                               -----------------------------------------------------------------------------

எண்சேர்ந்த  நெஞ்சத்  திடனுடையார்க்கு  எஞ்ஞான்றும் 

பெண்சேர்ந்தாம்  பேதைமை  இல்.                                       -910.

நல்சிந்தனையுடன் மனதில்  உறுதியும் இருப்போர்க்கு, எத்தருணத்திலும் பெண்ணின் புற அழகில் மயங்கி, பாலியல் உணர்வுக்கு அடிமையாகிடும் இழிநிலை ஏற்படாது...

                                  --------------------------------------------------------------------------

நட்பியல்                                                                                                 அதிகாரம்:92.

                                             வரைவின்  மகளிர்.

அன்பின் விழையார்  பொருள்விழையும்  ஆய்தொடியார் 

இன்சொல்  இழுக்குத்  தரும்.                                                  -911.

அன்புக் கொண்டோ ஏக்கத்தின் பாலோ விலைமகளிர் ஆடவரைத் தழுவுவதில்லை... விலைமகளிரின் தழுவல் பொய்மையானது... காசுக் கிடைக்கும் என்பதால் ஆடவரைத் தழுவுகின்றனர்... ஆதலால்; எழில் உருவம் கொண்ட விலைமகளிரின் எடுப்பான தோற்றத்தில் மயங்கிய  ஆடவரை மேலும் மயக்கிட மயங்கு மொழிகள் கூறிடுவர்... விலைமகளிரின் மயக்கு மொழியில் முயங்குவோருக்கு மேலும் மேலும் பொருள் இழப்பும், நோயும், மானமிழப்பும் நேரும்...

                        ------------------------------------------------------------------------------------

பயன்தூக்கிப்  பண்புரைக்கும்  பண்பின் மகளிர் 

நயன்தூக்கி  நள்ளா  விடல்.                                -912.

தனக்கொரு நன்மையெனில், விலைமகளவள் நன்னெறியை  நயமாகப் பேசிடுவாள்...  அவளின் ஆசை மொழியில் அறிவிழந்து அள்ளிக் கொடுக்கும் முன், உண்மையை சீர்த்தூக்கிப் பார்த்தல் நன்று...  அவளது சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருக்கும்... பணத்தின் பொருட்டே பாசத்தை பொழிந்திடுவாள்... எனவே, விலைமகளின் தொடர்பைத் துண்டிப்பதே நல்லதாகும்...   

                          ---------------------------------------------------------------------------

பொருட்பெண்டிர்    பொய்ம்மை முயக்கம்  இருட்டறையில் 

ஏதில்  பிணந்தழீஇ  யற்று.                                                              -913.

விலைமகளின் தழுவல் உணர்ச்சியின் பாற் பட்டதல்ல... உண்மையில் அவளது தழுவல் காசினைக் குறியாகக் கொண்டதே... தழுவுதல் போல் நடி செய்வாள்... அவளைத் தழுவுதலை  எதனோடு ஒப்பிடுவது எனில், இருட்டறையில் கிடத்தப்பட்ட பிணத்தைத் தழுவுதலோடு ஒப்பிடலாம்... 

                              -------------------------------------------------------------------------------

பொருட்பொருளார்  புன்னலம்  தோயார்  அருட்பொருள் 

ஆயும்  அறிவி  னவர்.                                                                  -914.

காசைக் குறியீடு செய்பவள் விலைமகள்... அவளோடு கொள்ளும் உடலுறவுத் தகாத உடலுறவாகும்... அவள் மெய்யான உணர்ச்சியோடு  இணைவு கொள்ள மாட்டாள்... அவளோடு இயங்குவது பிணத்தோடு இயங்குவது போலாகும்... அவளின் இணைவை ஒழுக்கத்தை உயர்வாகக் கருதுவோர் விரும்ப மாட்டர்... ஏனெனில், நற்செயல், தீயச் செயலுக்கான வேறுபாட்டை ஆய்ந்து, நன்மை எது, தீமை எதுவென சிந்தித்து செயல்படக் கூடியோர் ஒழுக்கத்தை உயர்வாகக் கருதுவோர் ஆவர்... 

                       --------------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                       திருக்குறள் உரை.

பொதுநலத்தார்  புன்னலம்  தோயார்  மதிநலத்தின் 

மாண்ட  அறிவி  னவர்.                                                    -915.

பகுத்தறிவாளர், விலைமகளோடு உடலுறவுக் கொள்ள மாட்டர்... ஏனெனில்; பலரோடு உடலுறவுக் கொள்வதால் விலைமகளைப் பாலியல் நோய்த் தாக்கும்... இந்நோய், தொற்றுக் கிருமிகளைப் பரவச் செய்யும் என்பதை பகுத்தறிவால் உணர்ந்தோர் விலைமகளோடு உடலுறவை விரும்ப மாட்டர்... 

                               --------------------------------------------------------------------------

தந்நலம்  பாரிப்பார்  தோயார்  தகைசெருக்கிப்

புன்னலம்  பாரிப்பார்  தோள்.                            -916.

பாலியல் நோய் என்பது உயிர்க் கொல்லி  நோயாகும்... இந்நோயின் தன்மை அறிந்தோர், தமது நலன் கருதி  விலைமகளோடு  உடலுறவுக் கொள்ள மாட்டர்... விலைமகள் தன் எடுப்பில் தானே மமதைக் கொண்டு, ஆடவரை எளிதில் வீழ்த்திடலாம் என்ற எண்ணி மோக வீச்சுச் செய்வாள்... இனிக்க இனிக்கப் பேசி உடலை விலை பேசிடுவாள்... ஆயினும்; உடல் நலனில் நலம் செலுத்துவோர் விலைமகளின் வலையில் வீழமாட்டர்...

                           ----------------------------------------------------------------------------------

நிறைநெஞ்சம்  இல்லவர்  தோய்வர்  பிறநெஞ்சிற் 

பேணிப்  புணர்பவர்  தோள்.                                       -917.

மனதில் உறுதி அற்றவர்கள் - விலைமகள் விரிக்கும்  வலையில் - வீழ்வர்... மேலும்; சஞ்சலம் மிக்க ஆடவர்  ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயரியக் கோட்பாட்டை பொருட் படுத்தாமல், காசுக்காக அநேகர் மார்பில் சாய்ந்து, அநேகரை உடலுறவுக்கு உட்படுத்திய விலைமகளிரின் தோள் தழுவி  உடலுறவுக் கொள்வர்...    

                                       -------------------------------------------------------------------------

ஆயும்   அறிவினர்  அல்லார்க்கு  அணங்கென்ப 

மாய  மகளிர்  முயக்கு.                                            -918.

பாலியல் நோய்க் குறித்த அறிவு அற்றோர், விலைமகளிரை பேரழகியாகப் பார்ப்பர்... அவளின் பொய்யான தழுவலில் மயங்கிடுவர்...    

                          --------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                                  திருக்குறள் உரை.

வரைவிலா  மாணிழையார்  மென்றோள்  புரையிலாப் 

பூரியர்கள்  ஆழும்  அளறு.                           -919.

                                        புரை    = மேன்மை 

                                                பூரியர் = ஒழுக்கங்கெட்ட 

                                                அளறு  = சேறு, சகதி.

ஒழுக்கமில்லாத தொழில் பாலியல் தொழில். பாலியல் தொழிலில் ஈடுபடும் விலைமகளின் பேரழகையும், இளந்தோள்களையும் எவர் கண்டு மயங்குவரெனில்; மேன்மையற்றோர் மயங்குவர்... ஒழுக்கமற்றோர் தீயவரோடு தொடர்புக் கொள்ளுதல் போன்றதாகும் விலைமகளிரோடு உடலுறவுக் கொள்ளுதல்... உண்மையில் விலைமகளின் எழில் மேனியும், இளந்தோளும் கிருமிகள் நிரம்பிய சகதி எனலாம்...  மேன்மையற்றோர் சகதியில் முயங்குவர்...

                              ------------------------------------------------------------------------------------     

இருமனப்  பெண்டிரும் கள்ளும்  கவறும்

திருநீக்கப்  பட்டார்  தொடர்பு.               -920.

மனதில் இருவேறு எண்ணங்கள் விலைமகளிருக்கு உண்டு... முதலாவது மோகப்  பார்வை  வீசி, ஆடவரை தம் வயம் படுத்துவது... இரண்டாவது, வீழ்த்தப்பட்ட ஆடவரிடம் இருந்து இயலும் வரை  காசைப் பறித்து விட்டு விலகி விடுவது... அதேபோல் ஒழுக்க மற்றவரிடம் இரு பழக்கம் உண்டு... ஒன்று மதுவருந்துதல் மற்றொன்று சூதாடுதல்...     

                               ---------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                      அதிகாரம்:93.

                                     கள்ளுண்ணாமை 

உட்கப்  படாஅர்   ஒளியிழப்பர்  எஞ்ஞான்றும் 

கட்காதல்  கொண்டொழுகு  வார்.               -921.

மானம் போகும்... நாணமும் அழியும்... மக்களிடையே நன்மதிப்பையும் இழக்க நேரிடும்... மதுவுக்கு அடிமையாகி எந்நேரமும் போதையில் திளைப்போருக்கு... 

                             ---------------------------------------------------------------------------

உண்ணற்க  கள்ளை  உணில்உண்க சான்றோரான் 

எண்ணப்  படவேண்டா  தார்.                                      -922.

'மது அருந்துதல் கூடாது... மது அருந்துவதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கெடுதல் விளையும்... பொருளும் அழியும்...' எனும் இந்நல்லுரையை மீறி மதுவருந்துவோர் அருந்துக!... ஆயினும்; சான்றோரின் நல்லுரையை செவிமடுக்காமல் மது அருந்துவோர்  பெரியோரின் வெறுப்புக்கு உள்ளாவர்...

                                       ------------------------------------------------------------------------------

ஈன்றாள்  முகத்தேயும்  இன்னாதால்  என்மற்றுச்

சான்றோர்  முகத்துக்  களி.                                     -923.

மதுவுக்கு அடிமையாகி, மானமிழந்து திரிவதைக்  கண்டு, ஈன்றத் தாயே மனம் நொந்து முகம் சுளிக்கிறாள் எனில், பிறகு என்னவென்று சொல்வது?... மதுவருந்துவோரைக் கண்டு முகம் மலர்ச்சிக் கொள்வரோ சான்றோர்?...

                     -------------------------------------------------------------------------------

நாண்என்னும்  நல்லாள்  புறங்கொடுக்கும்  கள்ளென்னும் 

பேணாப்  பெருங்குற்றத்  தார்க்கு.                                            -924.

                                          நல்லாள் = நல் துணைவன் ( நல் + ஆள் )

நாணம் என்னும் நல் துணைவன் துணையாய் இருந்தால், நன்மதிப்பும், நற்புகழும் நிறைந்து இருக்கும்... நாணம் எனும் நல்துணை ஒருவனை விட்டு ஓடி விடுவதேனெனில்; மது அருந்துதல் என்பது தேவை இல்லாத ஒன்றாகும்... எது தேவையில்லையோ அதனை எவன் விரும்பி ஏற்று, குடிகாரன் எனும் இழி குற்றத்திற்கு உள்ளாகிறானோ, அவனை விட்டு நாணம் எனும் நல்துணை நீங்கிடும்...

                           -------------------------------------------------------------------------

கையறி  யாமையுடைத்தே  பொருள்  கொடுத்து 

மெய்யறி  யாமை  கொளல்.                              -925.

                 கையறியாமை = தொடு உணர்வு இன்மை 

தொடு உணர்வு இன்மை என்பது, பக்க வாதம் நோய் தாக்குண்டால், தாக்கபட்டப் பகுதி உணர்ச்சியிழந்திருக்கும்... தொடு உணர்வு இன்மைக்கு ஒப்பானது எதுவெனில், உழைத்து ஈட்டிய வருவாயில், மயக்கமாதல்பக்கவாதம் நோய் தாக்குண்டதற்கு ஒப்பாகும்... விலை கொடுத்து பக்கவாதம் நோய்தனை வாங்குதற் போலாகும்... 

                              ---------------------------------------------------------------------------

நட்பியல்                                                                 திருக்குறள் உரை.

துஞ்சினார்  செத்தாரின்  வேறல்லர்  எஞ்ஞான்றும் 

நஞ்சுண்பார்  கள்ளுண்  பவர்.                                 -926.

உறங்குவது போலும் சாக்காடு!... உறங்குதல் என்பது இறப்புப் போன்றது என்றுக் கூறின் மிகையல்ல... ஒவ்வொருநாளும் மது அருந்துவது, நஞ்சுப்  பருகுவது போன்றதாகும் எனில் மிகையல்ல...

                         ------------------------------------------------------------------------------

உள்ளொற்றி  உள்ளூர்  நகப்படுவர்  எஞ்ஞான்றும் 

கள்ளொற்றிக்  கண்சாய்  பவர்.                             -927.

ஒருவனுடைய நிழல் வாழ்க்கை அருவருப்பானது எனத் தெரிய வந்தால், ஓரே எள்ளி நகையாடும்... அதுபோல், மதுவருந்துவது எவருக்கும் தெரியாது என்று நினைத்து மறைவிடம் சென்று மதுவருந்தினாலும், போதை மயக்கம் மதுவருந்தியதை பிறருக்குக் காட்டிக் கொடுத்துவிடும்...  பிறர் இகழ் மொழிக்கு உள்ளாக்கும்... 

                             ------------------------------------------------------------------------------

களித்தறியேன்  என்பது  கைவிடுக  நெஞ்சத்து 

ஒளித்ததூம்  ஆங்கே  மிகும்.                          -928.

மதுவருந்தினாலும் நிலை பிறழேன் என்பது தவறாகும்... அருந்தப்பட்ட மதுவானது, நரம்பு மண்டலத்தைத் தளர்வுறச் செய்து, உள்ளத்தின் பொதிவுகளைப் புலம்பல்களாகவோ, தற்பெருமை வடிவிலோ  வெளிப்படுத்தி விடும்...

                              -----------------------------------------------------------------------------------

களித்தானைக்  காரணம்  காட்டுதல்  கீழ்நீர்க்

குளித்தானைத்  தீத்துரீஇ  யற்று.               -929.

மதுமயக்கத்துக்கு அடிமையானவனிடம், அறிவுரை கூறுவது, ஆழ்நீரில் மூழ்கியவனை நீரின் மேற்பரப்பின் மீது விளக்கொளியைப் பரவச் செய்துத் தேடுவது போலாகும்...

*மதுவில் மூழ்கியிருப்போனிடம் நல்லுரை ஊடுருவித் திருத்தாது... நீர்ப் பரப்பினடியில்   ஒளி ஊடுருவாது...

                       -----------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                  அரங்க கனகராசன் உரை.

கள்ளுண்ணாப்  போழ்தில்  களித்தானைக்  காணுங்கால்

உள்ளான்கொல்  உண்டதன்  சோர்வு.                               -930.

மது அருந்தாத நேரத்தில், மதுவருந்தியனின் நிலையைப் பார்க்கும் போதுமதுமயக்கம் மானிடரை மிக இழிவு செய்கிறதே என்று நினைத்துப் பார்க்குமோ மனம்?... மதுமயக்கத்தில் தவறாகப்பேசுவதும், அடாவடித்தனம் புரிவதும், ஆடைகளை அலங்கோலம் படுத்துவதும் மகளிரை வம்புச் செய்வதும் மதுவின் பண்பாகும்... 

*இத்தகு இழிநிலை உண்டாக்கும் மதுவைப் பருக்கலாகாது என்று மது அருந்தா நேரத்தில் மதுவுண்டு மயக்கத்தில் தள்ளாடுவோனைக் கண்டு சிந்தித்தல் செய்யுமா மனம்

                       ----------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                               அதிகாரம்:94.

                                                       சூது.

வேண்டற்க  வென்றிடினும்  சூதினை  வென்றதூஉம் 

தூண்டிற்பொன்  மீன்விழுங்கி  யற்று.                    -931.

வென்றிடக் கூடிய வாய்ப்பு இருப்பினும் சூதாடுதலை விரும்பக் கூடாது... ஏனெனில்; சூதாடுதல் மூலம் வென்ற பொருளும், சூதாடுதல் வழியே தொலையும்... இரைக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்கும் மீன் போல்குறுகிய வழியில் வருவாய்ப் பெருக்கிட ஆசைப்பட்டு சூதாடுதலில் சிக்கி அழிந்திடக் கூடாது...

                               --------------------------------------------------------------------------------

ஒன்றெய்தி  நூறிழக்கும்  சூதர்க்கும் உண்டாங்கொல் 

நன்றெய்தி  வாழ்வதோர்  ஆறு.                                   -932.

ஒருமுறை சூதாடி, தற்செயலாக இருமடங்கு வென்ற சூதாடியின் மனம் மீண்டும் பன்மடங்கு வென்றிட சூதாடுதலை விரும்பும்... அதன் விளைவு, ஒருமுறை வென்றதைப் போல், நூறு மடங்கு பொருள் இழப்பான் சூதாடி... நேரிய வழியில் உழைத்து நேரிய வழியில் பொருளீட்டி, மானத்துடன் வாழ சூதாடியின் மனம் எண்ணம் கொள்ளாதோ?...

                         ------------------------------------------------------------------------------

உருளாயம்  ஓவாது  கூறின்  பொருளாயம் 

போஒயப்   புறமே  படும்.                          -933.

                                   உருளாயம் = சூதாட்டம்.

சூதாட்டத்தில், ஒருவருக்கே வெற்றி நிலைத்திருக்கும் என்றுக் கூற முடியாது... கிடைத்த வெற்றி, அடுத்த முறை  உருண்டோடி அடுத்தவனின் வெற்றியாக மாறும்... உருண்டோடிவிடக் கூடிய சூதாட்டத்தில் மனம் ஒன்றி மேலும் மேலும் சூதாடினால் பணம், பொருள் யாவும் கைவிட்டுப் போகும்...

                              --------------------------------------------------------------------------

சிறுமை  பலசெய்து  சீரழிக்கும்  சூதின் 

வறுமை  தருவதொன்று  இல்.       -934.

சூதாடப் பழகி விட்டால், பலத் தவறுகள் செய்ய மனம் விழையும்... சூதாட பணம் இல்லையேல் கடன் வாங்கத் தூண்டும்... திருடத் தூண்டும்... இன்னும் பல கீழான குணம் மனதில் தோன்றும்... மேலும்; சூதாட்டத்தால் நற்பெயரும் அழியும்... சூதாடுதலில் ஏற்படக்கூடிய வறுமைப் போல் வேறெதிலும் ஏற்படாது...

                        --------------------------------------------------------------------------------------

நட்பியல்                 அரங்க கனகராசன் உரை.

கவறும்  கழகமும்  கையும்  தருக்கி 

இவறியார்  இல்லாகி  யார்.     -935.

     கவர்             = குறுகிய வழியில் பொருளீட்டும் குணம் 

     கை               = சிறுமை.

     தருக்குதல் = களித்தல்

     இவறல்       = பேரவா.

குறுகிய வழியில் பொருள் ஈட்ட எண்ணி, சூதாடுங் கழகத்தோடு, தொடர்புக் கொண்டோர் சூதாடக் காசு இல்லாதப் போது, பொய்ப் பேசி கடன் வாங்குவர்... கடன் கிட்டாத பட்சத்தில் திருடவும் தலைப்படுவர்... இன்னும் பல சிறுமைச் செய்ய மனம் இன்பம் கொள்ளும்... இத்தகையோரின் இறுதி நிலை, வறுமையாகும்... உறவுகள் பிரிந்து தனிமையை - ஆதரவற்ற நிலையை - ஏற்படுத்தும்...

                                 ------------------------------------------------------------------------------

அகடாரார்  அல்லல்  உழப்பர்சூ தென்னும்

முகடியால்  மூடப்பட்  டார்.                    -936.

பசிக்கும் நேரத்தில் சாப்பிட தோன்றாது... பல உளைச்சலுக்கு ஆளாவர்... சூது என்னும் மயக்கும் திரையால் போர்த்தப் பட்டவர்...

                            -----------------------------------------------------------------------------------

நட்பியல்                            அரங்க கனகராசன் உரை.

பழகிய  செல்வமும்  பண்பும்  கெடுக்கும் 

கழகத்துக்  காலை  புகின்.                    -937.

கற்ற நற்கலைப் பயனற்றுப் போகும்... நல் பண்பும் அழியும்... சூதாட்டத்தில் மூழ்கினால்!...

                        ----------------------------------------------------------------------------

பொருள்கெடுத்துப்  பொய்மேற்  கொளீஇ  அருள்கெடுத்து 

அல்லல்  உழப்பிக்கும்  சூது.                                                 -938.

பொருளை அழிக்கும்... பொய்ப் பல பேச வைக்கும்... வாழ்வின் அமைதியை சீர் குலைக்கும்... அவதியை உண்டாகும்... அதுவே சூதாட்டம்!...

                       ---------------------------------------------------------------------------------

நட்பியல்                                            அரங்க கனகராசன் உரை.

உடைசெல்வம்  ஊண்ஒளி  கல்விஎன்று  ஐந்தும் 

அடையாவாம்  ஆயம்  கொளின்.                       -939.

உடுத்த நல்ல ஆடை, செல்வம், உணவு, ஊரில் நற்பெயர், சீரிய கல்வியின் மேன்மை என ஐந்தும் கிடைக்காது சூதாடுதலில் ஈடுப்படுவோருக்கு... 

                     -----------------------------------------------------------------------------------

இழத்தொறூஉம்  காதலிக்கும்  சூதேபோல்  துன்பம் 

உழத்தொறூஉம்  காதற்று  உயிர்.                          -940.

காசு, பொருள் என இழப்புக்கு மேல் இழப்பு நேர்ந்தாலும், சூதாடுதலையே மனம் விரும்புகிறது; அடுக்கடுக்காய் துன்பம் சூழ்ந்தாலும் உயிர் வாழ்வதையே மனம் விரும்புவதைபோல்...

*துன்பம் நேர்ந்தாலும் உயிர் வாழவே மனம் விரும்புவதுப் போல், இழப்புகள் பல ஏற்படினும் சூதாடுதலை மனம் விரும்புகிறது...

                  -----------------------------------------------------------------------------------

நட்பியல்                                                                               அதிகாரம்:95.

                                               மருந்து

மிகினும்  குறையினும்  நோய்செய்யும்  நூலோர் 

வளிமுதலா  எண்ணிய  மூன்று.                            941.

மிகுதியானுலும், குறைவு ஏற்பட்டாலும் நோய் ஏற்படுமென மருத்துவ நூலோர் குறிப்பிட்டுள்ளனர்... அவை எவையெனில்; காற்று, நீர் மற்றும் வெப்பம் ஆகும்... இம்மூன்றும் மருந்தியல் சான்றோர்களால் நன்கு ஆய்வுச் செய்யபட்டுக் கூறப்பட்டுள்ளன...

                      -------------------------------------------------------------------------------------

மருந்தென  வேண்டாவாம்  யாக்கைக்கு  அருந்தியது 

அற்றது  போற்றி  உணின்.                                                  -942.

உடல் நலம் பேண மருந்தென எதுவும் தேவைப்படாது... எவ்வாறெனில்; உண்ட உணவு செரித்தப் பிறகு, உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய உணவை அறிந்து அளவுடன் உண்டால், உடல் நலம் சிறக்கும்... மருந்தும் தேவைப்படாது... 

                   ----------------------------------------------------------------------------------------

அற்றால்  அளவறிந்து  உண்க  அஃதுடம்பு 

பெற்றான்  நெடிதுய்க்கு  மாறு.               -943.

முன் உண்ட உணவு செரித்தப் பிறகு, மீண்டும் பசிக்கு அளவுடன் உண்க... இந்நல் பழக்கம்தனை நாள்தோறும் முறையாகக் கடைப் பிடிப்போர், நெடுநாள் வாழ்வர்... நோயின்றி நெடுநாள் வாழ இதுவே சிறந்த வழியாகும்...  

                        --------------------------------------------------------------------------------------

அற்றது  அறிந்து  கடைப்பிடித்து  மாறல்ல 

துய்க்க  துவரப்  பசித்து.                                -944.

உண்ட உணவு செரித்து விட்டதா என்பதை உணர வேண்டும்... இதனை எப்போதும் உணர்வது நல்லதாகும்... உடல் ஏற்றுக் கொள்ளாத உணவைத் தவிர்க்க வேண்டும்... நன்றாகப் பசிப்பதை உணர்ந்து  பிறகு, நல்ல உணவை உண்ண வேண்டும்... 

                        -----------------------------------------------------------------------------------

மாறுபாடு  இல்லாத உண்டி  மறுத்துண்ணின் 

ஊறுபாடு  இல்லை  உயிர்க்கு.                       -945.

சுவை மிகு உணவு என்றாலும், உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்து, நல்லுணவை அளவுடன் உண்டால், உயிர் வாழும் வரை கேடில்லை உடலுக்கு...

                     --------------------------------------------------------------------------------

நட்பியல்                                                        அரங்க கனகராசன் உரை.

இழிவறிந்து  உண்பான்கண்  இன்பம்போல் நிற்கும் 

கழிபே   ரிரையான்கண்  நோய்.                                  -946.

தீமையை உணர்ந்து அளவுடன் உண்டால், உடல் நலம் சிறக்கும்... அதேபோல் அளவு மீறி உண்டால் அளவற்ற நோய் பீடிக்கும்...

                             --------------------------------------------------------------------------------

தீயள  வன்றித்  தெரியான்  பெரிதுண்ணின் 

நோயள  வின்றிப்  படும்.                              -947.

உடல் நலனில் பாதிப்பை உண்டாக்கும் உணவுகளை உணராமல், அளவின்றி எதையும் உண்டால் நோயும் அளவின்றித் தொற்றும்...

*உணவின் தன்மையை அறிவது நல்லது.

                  --------------------------------------------------------------------------------

நோய்நாடி  நோய்முதல்  நாடி  அதுதணிக்கும் 

வாய்நாடி  வாய்ப்பச்  செயல்.                          -948.  

நோய் அறிந்து, அந்நோய் ஏன் ஏற்பட்டது என்பதையும் அறிந்து, அந்நோயைத் தணிக்கும் வகையறிந்து மருத்துவம் செய்ய வேண்டும்...

                            ---------------------------------------------------------------------------

உற்றான்  அளவும்  பிணியளவும்  காலமும் 

கற்றான்  கருதிச்  செயல்.                               949.

நோயாளியின்  உடல்நிலை மற்றும் வயது, பிணிமுற்றிய கால அளவு, பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும்... 

                       -----------------------------------------------------------------------------------

உற்றவன் தீர்ப்பான்  மருந்துஉழைச்  செல்வானென்று 

அப்பால்நாற்  கூற்றே  மருந்து.                                           950.

நோயாளி, மருத்துவர், மருந்து, மருத்துவப் பணியாளர்  என மருத்துவம் நான்கு அங்கங்களாகத் திகழ்கிறது...

                             -------------------------------------------------------------------------------------     

குடியியல்                                                                               அதிகாரம்:96.

                                             குடிமை.

இற்பிறந்தார்  கண்அல்லது  இல்லை  இயல்பாகச்

செப்பமும்  நானும்  ஒருங்கு.                                    -951.

நன்னடத்தை மிக்கப் பெற்றோருக்குப் பிறக்கும்  குழந்தைகளின் பழக்க வழக்கம்  பெற்றோரை ஒத்து இயல்பாக அமையும்... மாறாக;   நன்னடத்தையும் நாணமும் அற்றப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளிடத்தில் நல் இயல்பு இருக்காது...

*இன்றைய மருத்துவம் மரபணு நெறி பெற்றோர்களிடத்தில் இருந்து குழந்தைகளுக்கும் ஒத்திருப்பதைக் கூறுகிறது...

                        --------------------------------------------------------------------------------

ஒழுக்கமும்  வாய்மையும்  நாணும்இம்  மூன்றும் 

இழுக்கார்  குடிப்பிறந்  தார்.                                        952.

ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய இம்மூன்று  நெறிகளில் இருந்து, வழுவாமல் வாழ்வோர் எவரெனில்; நன்னடத்தை பிறழா வழிவந்த குடி மரபினர் ஆவர்...

                            ---------------------------------------------------------------------------

நகைஈகை  இன்சொல்  இகழாமை  நான்கும் 

வகைஎன்ப  வாய்மைக்  குடிக்கு.                -953.

கனிவு, பிறருக்கு உதவுதல்அன்பானப் பேச்சு, பிறரை இகழாதிருத்தல் ஆகிய இந்நான்கும் நேர்மையான குடும்பத்தின் உயரியப் பண்புகளாகும்...   

-----------------------------------------------------------------------------------------------

அடுக்கிய  கோடி  பெறினும்  குடிப்பிறந்தார் 

குன்றுவ  செய்தல்  இலர்.                              -954.

கோடிக் கோடியாய் ஆதாயம் கிடைப்பதாக இருப்பினும், நல்வழிக் குடும்பத்தார்  வழிவழியாய் தொடரும்  குடும்பத்தின் நற்பெயர்க் கெடும்படி, தகாதனச் செய்ய மாட்டர்...

*பண்பு என்பது மரபணுவோடு ஒன்றியிருப்பதை இன்றைய மருத்துவமும்  கூறுகிறது...    

                               ----------------------------------------------------------------------------

வழங்கு  துள்வீழ்ந்தக்  கண்ணும்  பழங்குடி 

பண்பில்  தலைப்பிரிதல்  இன்று.             -955.

வள்ளலாய்  வாழ்ந்து, இன்று செல்வச் செழிப்பில் வீழ்ச்சியுற்ற நிலையிலும், பிறருக்குக் கொடுத்து மகிழ்வது என்பது ஒருசிலருக்கு வழிவழிப் பழக்கமாகும்... பற்றாக் குறை நிலவினாலும், பிறருக்குக் கொடுத்து மகிழக் கூடிய ஒப்பற்ற பண்பிலிருந்து நிலைப் பிறழ்வதில்லை  வழிவழி வந்தக் குடியினர்...

                            ----------------------------------------------------------------------------

குடியியல்                                           திருக்குறள் உரை.

சலம்பற்றிச்  சால்பில செய்யார்மா  சற்ற 

குலம்பற்றி  வாழ்தும்என்  பார்.           -956.

                                          சலம் = வஞ்சனை.

வஞ்சனையை நெஞ்சில் கொண்டு, பண்பற்றச் செயல்களைச் செய்யாதார் எவரெனில்; குடும்பத்தின் பெருமைக்குக் களங்கம் உண்டாக்காமல் வாழ்தல் நல்லது என்ற உயரியக் கோட்பாடுடன் திகழ்வோர் ஆவர்...

                              --------------------------------------------------------------------------------

குடிப்பிறந்தார்  கண்விளங்கும்  குற்றம்  விசும்பின் 

மதிக்கண்  மறுப்போல்  உயர்ந்து.                            -957.

நன்னடத்தை மிகுந்தக் குடும்பத்தில் பிறந்தவர் செய்யும் சிறு தவறும், பளிச்செனப் பலருக்குத் தெரிந்து விடும்... எவ்வாறெனில்; வான் நிலவில் வளைந்த சிறுகருங் கோடுகள் பளிச்செனப் பார்வைக்குத் தெரிவது போல், நல்லோர் செய்யும் சிறு தவறும் வெளிச்சமாகி விடும்...

                    ----------------------------------------------------------------------------------

நலத்தின்கண்  நாரின்மை  தோன்றின்  அவனைக் 

குலத்தின்கண்  ஐயப்  படும்.                                       -958.

நல்லக் குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பிறரிடம் நேயமின்றிச் செயல்பட்டால், அவனது செயல் அவனுடையக் குடும்பத்தாரின் பண்புக் குறித்து ஐயம் எழுப்பும்...

                      ------------------------------------------------------------------------------

நிலத்தில்  கிடந்தமை  கால்காட்டும்  காட்டும் 

குலத்தில்  பிறந்தார்வாய்ச்  சொல்.              -959.

நிலத்தில் பதிந்தச் சுவடுகளைக் கொண்டு, அது எந்தப் பொருளின் தடயம் எனக் கண்டறியலாம்... அதுபோலவே, கண்டறியக் கூடிய மற்றொரு தடயம் உண்டு... அது எதுவெனில்; ஒருவரிடமிருந்து வெளிப்படும் வாய்ச் சொற்களைக் கொண்டு, நல்ல வளர்ப்பை சேர்ந்தவனா? அல்லவா? எனக் கண்டறிந்து விடலாம்...

                               -------------------------------------------------------------------------------

நலம்வேண்டின்  நாணுடைமை  வேண்டும்  குலம்வேண்டின் 

வேண்டும் யார்க்கும்  பணிவு.                                                           -960.

நற்புகழுடன்  வாழவேண்டுமானால் நடத்தையில் ஒழுக்கம் வேண்டும்... உற்றாரும், சுற்றத்தாரும் மதிக்க வேண்டுமானால் எல்லாரிடத்திலும் பணிவுடன் பழக வேண்டும்...

*பணிவு என்பது பார்பனரிடம் இல்லையாதலால், அவர் நல் குடியர் அல்லர்

                       -------------------------------------------------------------------------------

குடியியல்                                                   அதிகாரம்:97.

                                    மானம் 

இன்றி  யமையாச்  சிறப்பின  ஆயினும் 

குன்ற  வருப  விடல்.                              -961.

மிக அவசியம் என்ற போதிலும், மானத்திற்கு இழுக்கு ஏற்படுமென்றால், தவிர்த்து விட வேண்டும்...

*சுமரியாதைக்கு இழுக்கு ஏற்படக்கூடிய எந்தவொருச் செயலையும் கைவிடுக...

                         -----------------------------------------------------------------------------------

சீரினும்  சீரல்ல  செய்யாரே    சீரோடு 

பேராண்மை  வேண்டு  பவர்.       -962.

                                         சீர்        = நன்மை, செல்வம்.

                                      சீரல்ல = நேர்மையற்ற.

வருவாய்க் கிட்டும் என்றாலும், நேர்மையற்றச் செயலைச் செய்யத் துணிய மாட்டாதவர் எவரெனில்; வாழ்வதற்கு செல்வம் தேவை... ஆயினும் அதோடு மானமும் மிக அவசியம்... மானத்தை பெரிதெனக் கருதும் சுயமரியாதையாளர் ஒருபோதும் நேர்மையற்றச் செயல் செய்யார்...

*பார்ப்பனன் மானத்தைவிட கையேந்தியும் ஏய்த்தும்  வாழ்வதை நலமாகக் கருதுகிறான்...

                               ----------------------------------------------------------------------------------        

பெருக்கத்து  வேண்டும்  பணிதல்  சிறிய 

சுருக்கத்து வேண்டும் உயர்வு.             -963.

செல்வச் செழிப்பில் - அதிகாரம் செலுத்தும் இடத்தில் - இருந்தாலும்சக மானிடரோடு பணிவுடன் பழக வேண்டும்... அதேபோல், செல்வம் நீங்கி ஏழ்மை நிலையை அடைந்துவிட்ட போதிலும், எவரிடமும் தாழ்ந்துப் போகக் கூடாது... தலைநிமிர்ந்து தன்மானத்துடன் வாழவேண்டும்... 

                                   -----------------------------------------------------------------------------

தலையின்  இழிந்த  மயிரனையர்  மாந்தர் 

நிலையின்  இழிந்தக்  கடை.                    -964.

தலையில் முடி இருக்கும் போது, முடியை  சீராக திருத்திக் கொள்வர்... நறுமணம் தடவி முடிக்குச் சிறப்புச் செய்வர்... நரை தோன்றிடின் கருஞ்சாயம் பூசிடுவர்... மகளிர் பூ சூடி முடிக்கு புதுப் பொலிவை ஊட்டுவர்... தலையோடு உறவாடிக் கொண்டிருக்கும் வரை முடிக்கு சிறப்புகள் பல செய்வர்... அதே முடி உதிர்ந்து விட்டால், மயிரெனக் கூறுவர்...  உதிர்ந்த மயிரைத் தொட்டும், தொடாமலும் அருவருப்போடு அப்புறம் படுத்துவர்... அவ்வாறே, மானிடரும் உயரியக் கோட்பாடுடன் வாழும் வரை இவ்வுலகு வாழ்த்தும்... அதே போல் மானமிழந்து, உரிமையிழந்து வாழ்வோரை  மயிரென இவ்வுலகு  தாழ்த்தும்...

                             -----------------------------------------------------------------------

குடியியல்                                  அரங்க கனகராசன் உரை.

குன்றின்  அனையாரும்  குன்றுவர்  குன்றுவ 

குன்றி  அனைய  செயின்.                                  965.

கல்விக் கற்று உயர்ந்திருக்கலாம்...  செல்வத்தால் உயர்ந்தவராக  இருக்கலாம்... புகழால் ஓங்கியிருக்கலாம்... இத்தகையோரும் நன்மதிப்பை இழக்க நேரிடும்... எப்போதெனில்; சுயமரியாதையை இழந்து வாழ நேரிட்டால், மதிப்பை இழந்து விடுவர்...

                              --------------------------------------------------------------------------

புகழ்இன்றால்  புத்தேள்நாட்டு  உய்யாதால்  என்மற்று 

இகழ்வார்பின்  சென்று நிலை.                                          -966.

அடிப்பணிந்து வாழ்வதால் - சுமரியாதை இழந்து - வாழ்வதால் புகழ் கிட்டுமா?... தாழ்ந்து வாழ்வோருக்கு  புதுமைகள் புரிந்து உயர்ந்து விளங்கும் நாடுகள் நற்சான்று வழங்கிடுமா?... அல்லவே... பிறகேனடா இகழ்வார் முன் மண்டியிடுகிறாய்... 

*பார்ப்பனன் இழிவுச் செய்கிறான் என்று தெரிந்தும், சிலிர்த்தெழுந்து சீறாமல், சிரம் தாழ்ந்து அவனடி வீழ்வதேனடா?....       

                                ------------------------------------------------------------------------------

ஒட்டார்பின்  சென்றொருவன்  வாழ்தலின்  அந்நிலையே 

கெட்டான்  எனப்படுதல்  நன்று.                                               -967.

மானிடனை மானிடனாக மதிக்காத ஒருவனிடம் பணிவதை விட, மானிட உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து மாண்டான் இவன் எனும் வீரச்செய்தியே நாட்டுக்கு நன்மைத் தரும் செய்தியாகும்...  

 *மானிட உரிமையைக் கொல்லுவோனை  எதிர்த்து மாண்டான் என்பதில் கூட நியாயம் இருக்கிறது... பார்ப்பனனுக்கு அடங்கி வாழ்தலில் ஏது சிறப்பு?...

                              ------------------------------------------------------------------------------

மருந்தோமற்று  ஊன்ஓம்பும்  வாழ்க்கை  பெருந்தகைமை  

பீடழிய  வந்த இடத்து.                                                                      -968.

மானிடனே, மரணத்திலிருந்து தப்ப வைக்கும்  மருந்தோ இது?...  உடம்புக்குத் தீனியிட்டு வாழும் வாழ்க்கையானது, மரணத்திலிருந்து தப்ப வைக்குமோ?... உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும், உரிமைப் பற்றி கவலைப் படாமல், தனமானம் அழிந்தும் சிந்திக்காமல், அடிப்பணிந்து வாழும் வாழ்க்கையானது மரணத்திலிருந்து தப்ப வைக்கும் மருந்தாகிடுமோ?...

*மரணத்திலிருந்து எவரும் தப்ப முடியாது... பார்ப்பனனிடம் இழந்த உரிமையை மீட்க  உயர்ந்து நில்...

                        ---------------------------------------------------------------------------------

குடியியல்                                                    திருக்குறள் உரை.

மயிர்நீப்பின்  வாழாக்  கவரிமான்  அன்னார் 

உயிர்நீப்பர்  மானம்  வரின்.                          -969.

கவரிமான் போரில் சிறு மயிர் இழக்க நேரிட்டாலும், அது தனக்கு ஏற்பட்ட தோல்வி எனக்கருதி, அக்கணமே உயிரை மாய்த்துக் கொள்ளும்...   கவரிமான் போன்றோரும் உள்ளனர்... யாரெனில்; தன்மானத்துக்கு இழுக்கு எனில், உயிர்வாழ்வதை விட, உயிர்த் துறந்து விடுவோர் கவரிமான் போன்றோர்...

*செய்; அல்லது மடி!...

                             ----------------------------------------------------------------------------

இளிவரின்  வாழாத  மானம்  உடையார் 

ஒளிதொழுது  ஏத்தும்  உலகு.            -970.

மானிட உரிமை மறுக்கப்பட்டு, மானிடரை இழிவுக்கு உட்படுத்தினால்

இழிவை சகித்து வாழ விரும்பாமல், உரிமைக்காகப் போரிட்டு மாய்வர் தன்மானம் கொண்டோர்... அம்மாவீரரின் கொள்கையை நினைவுக் கூர்ந்து, வீரவணக்கம் செய்யும் இவ்வுலகு!...

                                --------------------------------------------------------------------------

குடியியல்                                                                       அதிகாரம்:98.

                                            பெருமை

ஒளிஒருவற்கு  உள்ள  வெறுக்கை  இளிஒருவற்கு 

அஃதிறந்து  வாழ்தும்  எனல்.                                   -971.

ஒருவருக்குப் புகழ் சேர்ப்பது எதுவெனில்; மனவுறுதியாகும்!... ஒருவருக்கு இழிவு நேர்வது எதனால் என்றால், மனதில் உறுதியிழந்து கோழையாய் வாழ்வதால்...

----------------------------------------------------------------------------------------------------

பிறப்பொக்கும்  எல்லா  உயிர்க்கும்  சிறப்பொவ்வா 

செய்தொழில்  வேற்றுமை  யான்.                          -972.  

பிறப்பு எனும் நிகழ்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதே... பிறப்பால் ஏதும் வேறுபாடில்லை... ஆனால்; செய்தொழிலைக் கொண்டு மானிடரைப் பாகுபடுத்துவது நீதியாகாது...

வானத்திலிருந்து எவனும் தோன்றுவதில்லை... நெற்றியில் இருந்தும் பிறப்பதில்லை... கருக்கூடுதல்  வாயிலாவே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன...

               -------------------------------------------------------------------------------------

மேலிருந்தும்  மேலல்லார்  மேலல்லர் கீழிருந்தும் 

கீழல்லார்  கீழல்  லவர்.                                             -973.

செல்வத்தில்  உயர்ந்திருப்பினும், உயர்க் கல்விக் கற்றிருப்பினும் நற்பண்பற்றோர் மேன்மையாளர் அதாவது உயர்க் குடியினர் ஆகார்... அதேபோல், ஏவல் பணி செய்பவராயிருப்பினும், அவரிடத்தில் இழிகுணம் இல்லையேல் அவர் கீழானவர் அதாவது தாழ்ந்தக் குடியினர்  ஆகார்...

                     ---------------------------------------------------------------------------------------- 

ஒருமை      மகளிரே     போலப்       பெருமையும் 

தன்னைத்தான்  கொண்டொழுகின்  உண்டு. -974.

மனஉறுதியில் நல் நிலை வகுத்து, அதனை மீறாமல் வாழ்வர் மகளிர்... ஆதாலால், குடிப் பெருமை மிக்கோராய் மகளிர் விளங்குகின்றனர்... அதேபோல் ஆடவரும் நிலை பிறழாது குடிப்பெருமை சிறக்க விளங்குவராயின் பெண்ணைப் போல் பெருமைக்கு உரியோராய்த் திகழலாம்...

----------------------------------------------------------------------------------------------

குடியியல்                                               திருக்குறள் உரை.

பெருமை  உடையவர் ஆற்றுவார்  ஆற்றின் 

அருமை  உடைய  செயல்.                         -975.

பலராலும் பாராட்டப் படும் பெருமதிப்பிற்கு உரியோரின் செயல் எவ்வாறு இருக்குமெனில், சாதனை மிக்கதாய் இருக்கும்... பலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாய்  இருக்கும்...

                   -----------------------------------------------------------------------------------

சிறியார்  உணர்ச்சியுள்  இல்லை  பெரியாரைப்     

பேணிக்கொள்  வேம்என்னும்  நோக்கு.     -976.

இழிவானச் செயல்பாடுகளில் நாட்டம் கொள்வோர் சிறியர் ஆவர்... சிறியோரிடம் மாந்தர் நேயம் இருக்காது... இத்தகையோரால் மானுடம் வீழும்... எனவே, மானுடம் தழைக்க பெரியோர்க் காட்டியக் கோட்பாட்டை ஏற்று அதன்படி செயற்படுதல் நன்று எனும் உணர்ச்சி சிறியோரிடம் இருப்பதில்லை...

*மானிட நேயமற்ற பார்ப்பனன் தன்னை உயர்க்குடி என்பது ஏமாற்றுத்தனம்... அவனுடைய  செயல் இழிவின்பாற்பட்டு நிற்பதால் பார்ப்பனன் சிறியோனே!... 

                         -----------------------------------------------------------------------------

இறப்பே  புரிந்த  தொழிற்றாம்  சிறப்புந்தான் 

சீரல்  லவர்கட்  படின்.                                    977.

தவறு இழைப்போன் என்று தெரிந்தும்  அவனிடம் மேலும் பொறுப்புகள் ஒப்படைப்பது அவனை, தவறுக்கு மேல் தவறுசெய்ய ஊக்கம் கொடுத்தது போலாகும்...     

*பேராசை கொண்டோரிடம் அரசு நிர்வாகத்தைக் கொடுத்தால், ஊழல் பெருகும்... 

                     ------------------------------------------------------------------------------

பணியுமாம்  என்றும்  பெருமை  சிறுமை 

அணியுமாம்  தன்னை வியந்து.          -978.

வீண் பகட்டோ, மமதையோ பெருந்தன்மையாளரிடம் இருக்காது... அவரிடம் இருப்பதெல்லாம் மானிட நேயம் மட்டுமே!... ஆனால்; சிறியர் அற்பமானச் செயலையும் தற்பெருமைப் படுத்துவர்... அடக்கமோ, பணிவோ இராது...  தனக்குத் தானே நற்சான்று வழங்கிக் கொள்வர்... 

                     ------------------------------------------------------------------------------ 

குடியியல்                          அரங்க கனகராசன் உரை.

பெருமை  பெருமிதம்  இன்மை  சிறுமை 

பெருமிதம்  ஊர்ந்து  விடல்.                 -979.

ஆணவமோ, வீண் பகட்டோ இல்லாதோர் பெருமைக்குரியர் ஆவர்... ஆனால்; அற்பர்களின் நடத்தையில் ஆணவம் தாண்டவமாடும்... மமதையோடு திளைப்பர்... மானுடம் தெரியாது... தான் அறியாதது ஏதுமில்லை எனும் அகந்தை மண்டியிருக்கும்...

                    -----------------------------------------------------------------------------

அற்றம்  மறைக்கும்  பெருமை  சிறுமைதான் 

குற்றமே  கூறி  விடும்.                                   -980.

அறியாமையில் தவறு செய்து விட்டோரை, மன்னிக்கும் பண்பு பெருந் தகையாளரிடத்தில் உண்டு...  மன்னிக்கக் கூடியதையும் மன்னிக்காமல் அதனைப் பெரிதுப் படுத்தி, குற்றச் செயல் போல் திரித்து   இன்பம் காணபர் சிறுமதியாளர்... 

                     -----------------------------------------------------------------------------

குடியியல்                                                                 அதிகாரம்:99.

                                       சான்றாண்மை 

கடன்என்ப  நல்லவை  எல்லாம்  கடன்அறிந்து 

சான்றாண்மை  மேற்கொள்  பவர்க்கு.        -981.     

நன்மை  செய்தலைத் தமதுக் கடமையெனக் கருதுவர் சான்றோர்... எங்கு அநீதி இழைக்கப் படுகிறதோ, அங்கு நீதியை நாட்டுவது சான்றோரின் குணமாகும்... 

                       --------------------------------------------------------------------------------------

குணநலம்  சான்றோர்  நலனே  பிறநலம் 

எந்நலத்து உள்ளதூஉம்  அன்று.         -982.

நல்ல குணமே, சான்றோரைப் பெருமைப் படுத்துகிறது... உயர் பதவிகளால் சான்றோர்  பெருமை அடைவதில்லை...  சான்றோரால் வகிக்கப்படும் உயர் பதவிகள் பெருமை அடைகின்றன... இதில் மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லை...

                          -------------------------------------------------------------------------------------------

அன்புநாண்  ஒப்புரவு  கண்ணோட்டம்  வாய்மையொடு 

ஐந்துசால்பு  ஊன்றிய  தூண்.                                          -983.

அன்பு, நாணம், எல்லாரையும் சீராகப் பாவித்தல், நுண்ணறிவுடன் திகழ்தல் மற்றும் வாய்மை ஆகிய ஐந்தும் நல்ல குணத்தின் அடித்தளமாகும்... சான்றாண்மை எனும் மாடத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஐம்பெரும் தூண்களாகும் இவை.

                         ----------------------------------------------------------------------------------------

கொல்லா  நலத்தது  நோன்மை  பிறர்தீமை 

சொல்லா  நலத்தது  சால்பு.                      -984.

கடவுள் என ஒன்று இருப்பதாகக்  கருதி, அதனை வழிப்படுவதற்காக, சிலர் கடும் பசியை அடக்கி உண்ணாதிருப்பர்... அதனை நோன்மை என்பர்... உண்மையில் பாராட்டுதலுக்குரிய நோன்மை எதுவெனில்; எதன் பொருட்டும் பிற உயிரைக் கொல்லாது வாழும் நெறியே நோன்மை எனப்படும்... அதுப்போல; பிறரிடத்தில் உள்ள குற்றங் குறைகளை எல்லாரிடத்திலும் பறைசாற்றிக் கொண்டிருப்பது பெருந்தன்மையானச் செயலாகாது... கொல்லாமலும், பிறர் தீமைச் சொல்லாமலும் இருப்பது  சான்றாண்மை...

                       ------------------------------------------------------------------------------------

குடியியல்                                     அரங்க கனகராசன் உரை.

ஆற்றுவார்  ஆற்றல்  பணிதல்  அதுசான்றோர் 

மாற்றாரை  மாற்றும்  படை.                          -985.

வாழ்வின் வெற்றிக்காகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்கங்களில் ஒன்று பணிவும் ஆகும்... பணிவு என்பது சான்றோருக்கே உரியது... மாறுபட்டக் கருத்து உடையவர்களையும் சிந்திக்க வைக்கும் ஆற்றல் பணிவு எனும் பண்பாடுக்கு  உண்டு... 

                   ---------------------------------------------------------------------------------       

சால்பிற்குக்  கட்டளை  யாதெனில்  தோல்வி 

துலையல்லார்  கண்ணும்  கொளல்.        -986.

சான்றோரின்  நற்குணத்திற்கு சான்று எதுவெனில்; தகுதியற்ற ஒருவனிடத்தில் தோல்வியுற நேரினும்தோல்வியை  ஒப்புக் கொள்வதாகும்... இதுப் போல் உயரியச் செயல் சான்றோரின்  நற்குணத்திற்கு உரைகல் போலாகும்...

                               -----------------------------------------------------------------------------

இன்னாசெய்  தார்க்கும்  இனியவே  செய்யாக்கால் 

என்ன  பயத்ததோ  சால்பு.                                      -987.             

தீமைப் புரிந்தவனுக்குத் தீமைச் செய்வதுத் தீர்வாகாது... தீமை செய்தோர்க்கு நன்மைச் செய்வதே சரியானத் தீர்வு...  நன்மைச் செய்ய மறுத்தால் பெருந்தன்மை எனும் ஒரு கோட்பாடு இருந்தும் அது பொருளற்றதாகி விடும்....    

                            ------------------------------------------------------------------------------------

இன்மை  ஒருவற்கு  இளிவன்று  சால்பென்னும் 

திண்மைஉண்  டாகப்  பெறின்.                          -988.

வறுமை நிலை ஒருவனை இழிவுப் படுத்துவதில்லை... அவனிடத்தில் பெருந்தன்மை எனும் உறுதிப்பாடு இருக்கும் பட்சத்தில்!... 

                               --------------------------------------------------------------------------------

குடியியல்                                                                    திருக்குறள் உரை.

ஊழி  பெயரினும்  தாம்பெயரார்  சான்றாண்மைக்கு 

ஆழி  எனப்படு  வார்.                                                    -989.

இயற்கை சீற்றத்தால் உலகில் கடல், மண், மலையும் நிலை குலையலாம்...  ஆனால்; கொடும் வறுமை நேரிட்ட போதிலும், நிலைக் குலையாதவர் எவரெனில்; நற்பண்புடையோர் நிலைகுலையார்... இத்தகையோரின் மனவலிமை ஆழ்கடலுக்கு ஒப்பானதாகும் என உலகுப் பாராட்டும்... 

*ஆழ்கடல் பூமிக்கு அரண்போல் திகழ்கிறது... சான்றோரும் மக்களுக்கு நன்மை செய்கின்றனர்... துன்பம் சூழ்ந்தாலும் நல் நெறியிலிருந்து சான்றோர் விலகுவதில்லை... மக்கள் யாவரும் நன்மையடைய சான்றோர் விழைவர்...

                                  ----------------------------------------------------------------------------

சான்றவர்  சான்றாண்மை  குன்றின்  இருநிலந்தான் 

தாங்காது  மன்னோ  பொறை.                                  -990.

அமைதியானவர், தமது பெருந்தன்மை எனும் பண்பை இழந்து விட்டால், மாந்தரிடையே பழிக்குப் பழி எனும் காழ்ப்புணர்வு பெருகும்... வழி காட்டுநர் அமைதியாகிப் போனால்  இப்பரந்த பூமியில் ஆங்காங்கு சன்டை சச்சரவுகள் தோன்றும்... குற்றங்கள் அதிகரிக்கும்... வாழ்வில் அமைதிக் கெட்டு, எங்கும் கொந்தளிப்பு ஏற்படுமே... இப்படியோர் அவலநிலையை பூமித் தாங்குமோ...      

                   ------------------------------------------------------------------------------------

குடியியல்                                                                  அதிகாரம்:100.

                                   பண்புடைமை 

எண்பதத்தால்  எய்தல்  எளிதென்ப  யார்மாட்டும் 

பண்புடைமை  என்னும்  வழக்கு.                       -991.

பிறரை அணுகுவதற்கும், பிறரிடம் பழகுவதற்கும் தகுதி ஒன்று உண்டு... அது எதுவெனில்; நற்பண்பு எனும் தகுதியாகும்... எவரிடம் நல் பண்பு எனும் தகுதியுண்டோ, அவர் எவரையும் எளிதில் அணுகவும், பழகவும் செய்யலாம்...

                        ----------------------------------------------------------------------------------------

அன்புடைமை  ஆன்ற  குடிப்பிறத்தல்  இவ்விரண்டும் 

பண்புடைமை  என்னும்  வழக்கு.                               -992.

மாந்தரிடம் நேயம், குடும்பத்தின் நற்பெயர் என இவ்விரண்டுமே நன்கு காப்பாற்றப் பட வேண்டும்... இது எவ்வாறு சாத்தியமாகுமாவெனில்நன்னெறியைப் பேணினால் சாத்தியம் ஆகும்... 

                               ---------------------------------------------------------------------------

உறுப்பொத்தல் மக்களொப்பு  அன்றால்  வெறுத்தக்க 

பண்பொத்தல்  ஒப்பதாம்  ஒப்பு.                                 -993.

வடிவத்தில் உறுப்புகள் ஒன்று போல்  காட்சியளித்தாலும், அவை மாந்தர்க்குரிய  சிறப்புகளாகக் கொள்ள முடியாது... மாந்தருக்கு உரிய சிறப்பு எதுவெனில், மானிட இனத்திற்கே உரிய பகுத்தறிதல் எனும் பண்புகளுடன் விளங்குவதே மாந்தரின் சிறப்பாகும்...

*பகுத்தறிவு எனும் பண்பாடு உடையோனே மானிடன் ஆவான்... 

                     ---------------------------------------------------------------------------------

நயனொடு   நன்றி  புரிந்த  பயனுடையார் 

பண்புபா  ராட்டும்  உலகு.                     -994.

அன்பு சார்ந்து வாழ்தல் வேண்டும்... நன்றி உணர்வுடன் திகழ வேண்டும்... பிறரும் பயனுறும்  வகையில் செயல்பட வேண்டும்... ஆயின்; இத்தகையப் பண்பாளரை உள்ளம் மகிழ உலக மாந்தர் பாராட்டுவர்...

                        -----------------------------------------------------------------------------

குடியியல்                                           திருக்குறள் உரை.

நகையுள்ளும்  இன்னாது  இகழ்ச்சி  பகையுள்ளும் 

பண்புள  பாடறிவார்  மாட்டு.                                 -995.

வேடிக்கையாகக் கூட, பிறரை இகழ்வது நல்லதல்ல...  பகைவனிடத்திலும் நேயம் காட்ட வேண்டும்... இத்தகைய நல்ல குணம், மானிட உணர்வுகளை உணர்ந்தோரிடம் உண்டு...

                          -----------------------------------------------------------------------------------

பண்புடையார்ப்  பட்டுண்டு  உலகம்  அதுஇன்றேல் 

மண்புக்கு  மாய்வது  மன்.                                        -996.

மானிடநேயம்  கொண்டோரின் செயல்பட்டால்தான், இவ்வுலகில் மானுடம் வாழ்கிறது... மானிட நேயம் இல்லையேல், மாந்தர் ஒருவரை ஒருவர்க் கொன்று அழிந்திருப்பர்... மானிட இனமே மண்ணுக்குள் புதைந்திருக்கும் என்பது உண்மையான கூற்றாகும்...

                           ---------------------------------------------------------------------------

அரம்போலும்  கூர்மைய  ரேனும்  மரம்போல்வர் 

மக்கட்பண்பு  இல்லா  தவர்.                                -997.

நுட்பமிகு அறிவுடையோர் எனினும், அவரிடம் மானிடநேயம் எனும் பண்பு இல்லாதிருப்பின், அவரும் மரமும் ஒன்றாகும்...

                              ------------------------------------------------------------------------------

நண்பாற்றா  ராகி  நயமில  செய்வார்க்கும் 

பண்பாற்றா  ராதல்  கடை.                        -998.

நட்புக்குரிய நல்பண்பை  மதிக்காமல், நட்புக்கு களங்கம்  செய்தவன் என்ற போதிலும், அவனிடமும் மானிடநேயம் காட்ட வேண்டும்... நேயம்  காட்டாதோர், மானிட இனத்தில் தாழ்ந்தவர் எனக் கருதப்படுவர்... 

                           ---------------------------------------------------------------------

குடியியல்                                  அரங்க கனகராசன் உரை.

நகல்வல்லர்  அல்லார்க்கு  மாயிரு  ஞாலம் 

பகலும்பாற்  பட்டன்று  இருள்.                  -999.

சிரித்து மகிழ்தல் என்பது பெருஞ்சிறப்பிற்கு உரியதாகும்... உவகை எனும் உணர்வு அற்றோர் எத்தகையோர் எனில்; இப்பெரிய பூமியானது தன்னை இருகூறுகளாகக் கொண்டு சுழல்கிறது...  சுழற்சியின் போது, ஒரு பகுதி இருளுக்குள் மூழ்க நேர்ந்தாலும், மறுபகுதி வெளிச்சத்தில் திளைக்கிறது... இருளைத் தொட்டப் பகுதி, மீண்டும் வெளிச்சப் பாதைக்குத் திரும்புகிறது... ஆனால்; சிரித்து மகிழ்தல் எனும் உணர்வு இல்லாதவர் முகமும் அகமும் இருண்டுதான் காணப்படும்... உவகை எனும் உணர்வற்றவர் இருள்சூழ் மண்ணில் வாழ்தல் போன்றவராவர்...

                               ------------------------------------------------------------------------

பண்பிலான்  பெற்ற  பெருஞ்செல்வம்  நன்பால் 

கலந்தீமை  யால்திரிந்  தற்று.                       -1000.

நல்லொழுக்கம்  அற்றவனிடம் சேர்ந்தப் பெருஞ் செல்வத்தை, தூய்மையானப்  பாலோடு ஒப்பிடலாம்...  தூய்மையானப் பால்  ஊற்றி வைக்கப் பட்டப் பாத்திரம் அழுக்கானதெனில், பால் கெடும்... அதுபோல ஒழுக்கமற்றவனிடம் சேரும் செல்வம் ஒழுங்கற்ற வழியில் அழியும்...

                     ---------------------------------------------------------------------------------

குடியியல்                                                                                     அதிகாரம்:101.

                                             நன்றியில் செல்வம்.

வைத்தான்வாய்  சான்ற  பெரும்பொருள்  அஃதுண்ணான் 

செத்தான்  செயக்கிடந்தது  இல்.                                      -1001.            

மிக அரிய பொருட்களையும் சேமித்து வைப்பான்... ஒன்றல்ல... இரண்டல்ல... அளவில் அடங்காத  அளவில் பணம், பொருள் என நிறைய சேமிப்பான்... ஆனால்; கஞ்சன்!... அவசரத் தேவைக்கும் அதிலிருந்து செலவிட மாட்டான்... பசியானாலும் செலவிட  மனம்  வராது... அவனை 'சடலம்' எனலாம்... சடலத்தால் செயல்படக் கூடுமோ?... 

*பணமிருந்தும், பொருளிருந்தும் எவனொருவன் தகுந்தச் செலவு செய்யாது இருக்கிறானோ அவனும் பிணமும் ஒன்றே!...

                      ------------------------------------------------------------------------------      

பொருளானாம்  எல்லாமென்று  ஈயாது  இவறும்

மருளானாம்  மாணாப்  பிறப்பு.                          -1002.

பொருளுக்கு மிஞ்சியது இவ்வுலகில் எதுவுமில்லை என்றெண்ணி, தன்னிடமுள்ளப் பொருளில் இருந்து துளியளவும் ஈகைச் செய்ய மாட்டான்... பெருங்கஞ்சன்!... பேராசையில் திளைப்பான்... பணம், பொருள் என குவிக்கும் பேராசைப்  பிடித்த கஞ்சரால் மானிட இனத்திற்குப் பெருமையா சேரும்...

                       ----------------------------------------------------------------------------

ஈட்டம்  இவறி  இசைவேண்டா  ஆடவர்

தோற்றம்  நிலக்குப்  பொறை.          1003.   

*சிலர் ஆடவர் என்றும் சிலர் ஆடகர் என்றும் எழுதியுள்ளனர். வள்ளுவனின் கையெழுத்துப் பிரதியோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

ஆடகர் எனில் செல்வந்தர் என பொருள் உண்டு. ஆடவர் எனில் ஆண்பால் குறிக்கும் சொல் ஆகிறது... இரு சொற்களுமே (குறளின்) பொருளை மாற்றுவதில்லை   

சொத்துக் குவிப்பதில் குறியாக இருப்பர்... நேர்மைக் குறித்து கவலை கொள்ளார்... பொருள் குவிப்பைக் குறியாகக் கொண்டோரின் செயல்பாடு பிறருக்கும் வழிகாட்டுதலாய் அமைந்து விட்டால், நாடு பாழாகி விடும்...   இத்தகையோரின் வளர்ச்சி நாட்டுக்குச் சுமையாகும்...

                          -------------------------------------------------------------------------------

குடியியல்                                                                     திருக்குறள் உரை.

எச்சமென்று  என்எண்ணுங்  கொல்லோ   ஒருவரால் 

நச்சப்  படாஅ  தவன்.                                                   -1004.

ஒருவன் வாழும் வாழ்வின் அடையாளமாய் எதனை முத்திரையாக்குவான்?... பழகுவதற்கு இனிமையாளன் எனும் நல்மொழியை முத்திரை ஆக்குவானா?... அல்லது; மானிட நேயமற்றவன் எனும் இழிமொழியை முத்திரையாகப் பதிப்பானா?...

-------------------------------------------------------------------------------------------------

கொடுப்பதூஉம்  துய்ப்பதூஉம்  இல்லார்க்கு  அடுக்கிய 

கோடிஉண்  டாயினும்  இல்.                                          -1005.

உதவிச்  செய்து வாழ்தல் வேண்டும்... ஈட்டியப் பொருளை நன்முறையில் நுகர்தல் வேண்டும்... இத்தன்மை இல்லாதோரிடம்  கோடிக் கோடியாய் செல்வம் சேர்ந்தாலும், பயன்படாதக்  குப்பைப் போன்றதே...

                             --------------------------------------------------------------------------------

ஏதம்  பெருஞ்செல்வம்  தான்துவ்வான்  தக்கார்க்கொன்று 

ஈதல்  இயல்பிலா  தான்.                                                          1006.

எவரிடத்தில் செல்வம் குவிவதுப் பெருங்குற்றமெனக் கருதப்படுமெனில்; அவசியம் இருந்தும் நுகராதவனாகவும், உதவி தேவைப் படுகிறவர்க்கு, உதவிட மறுப்பவவனாகவும் இருப்போனிடம் செல்வம் குவிதல் குற்றச் செயலாகக் கருதப்படும்... 

*நுகராமலும், உதவாமலும் உள்ளவனிடம் செல்வம் வீணே முடங்கிப் போவதால், நாட்டின் வளமும் பாழாகக் கூடும்... 

                  ---------------------------------------------------------------------------

அற்றார்க்கொன்று  ஆற்றாதான்  செல்வம்  மிகநலம் 

பெற்றாள்  தமியள்மூத்  தற்று.                                  -1007.

வசதியற்றவனுக்கும்  உதவிச் செய்ய  மனமில்லாதவனிடம் குவிந்துள்ளச் செல்வம் எப்படிப்பட்ட தெனில்; பேரழகுக் கொண்ட கன்னிப் பெண், தனித்து வாழ்ந்து முதுமை உறுதல் போலாகும்...

                      -----------------------------------------------------------------------------

குடியியல்                                    திருக்குறள் உரை

நச்சப்  படாதவன்  செல்வம்  நடுவூருள்  

நச்சு  மரம்பழுத்  தற்று.                    -1008.

குற்றம் புரிந்து ஈட்டப்பட்ட செல்வம் எப்படிப் பட்டதெனில்; ஊரின் நடுவே இருக்கும் நெடிய - பரந்த - நச்சு மரம் போன்றதாகும்...  நச்சுமரத்தின் நிழலும் நச்சுத் தன்மை உடையதாக இருக்கு மென்பதால், மக்கள்  அம்மரத்தின் அடியில் ஒதுங்குவதையும் விரும்ப மாட்டனர்... நச்சுமரத்தின் கனியை உண்ணுவரோ?... அதுபோல், தவறான வழியில் ஈட்டப்பட்ட (வன்)செல்வமும் பயனற்றுப் போகும்...                       

                         -------------------------------------------------------------------------

அன்பொரீஇத்   தற்செற்று  அறநோக்காது  ஈட்டிய 

ஒண்பொருள்  கொள்வார்  பிறர்.                      -1009.

அன்பற்றவன்... எளியோர்பால் இரக்கம் கொள்ளமாட்டான்... வீண் கோபம் கொண்டு, இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவான்... மக்களுக்குப் பணியாற்றுவதைக் கடமை எனக் கருத மாட்டான்...நேர்மைக்குப் புறம்பான வழியில் பெரும் பொருள் செல்வம் தனக்கே தனக்கே  எனக் குவித்திடுவான்... தன்னால் முழுமையாக  அதனை நுகரவியலுமா என்று அவனுக்கே தெரியாது... கள்ளத்தனமாக ஈட்டப் பட்டச் செல்வம்  சூறையாடப் படலாம்... அரசால் பிடுங்கப்படலாம்... செல்வம் குவித்து வைத்திருப்பதால், அச்செல்வம் அவனது  மரணத்தையாவது தடுத்திடுமா என்றாலும் இல்லை... அவனால் அறநெறிக்குப் புறம்பாக ஈட்டப்பட்டச் செல்வம், அவனுக்குப் பிறகு எவெரெவரால் நுகரப் படுமோ...

                      ----------------------------------------------------------------------------------

சீருடைச்     செல்வர்      சிறுதுனி     மாரி 

வறங்கூர்ந்  தனையது  உடைத்து. -1010.

வாரி வழங்கும் செல்வந்தரை மழை மேகத்துடன் ஒப்பிடலாம்... வாரி வழங்கி  நற்புகழைதமது ஆடையாக தரித்து இருப்பர் செல்வந்தர்... வழங்கும் தன்மையுள்ள செல்வந்தரும் சிறு வறுமைக்கு உள்ளாகலாம்... அத்தகையோரின் வறுமையின் விளைவு எப்படியிருக்கும்?...

மழை மேகம் பொழியும் போது மண் செழிப்புறும்... மேகம் வறண்டு விட்டால், நாட்டில் பெருந்துன்பம் ஏற்படும்... அதே போல், வள்ளல் தன்மை உடையோர் தம்மிடம் செல்வம் இருந்தால் வாரி வழங்குவர்... மக்கள் பயன் பெறுவர்... செல்வந்தரிடம் செல்வம் இல்லாது போனால்மக்கள் துன்பம் அடைவர்... அதனால் வழங்கும் தன்மையில் மழை மேகமும், வள்ளலும் ஒன்றே எனலாம்... 

                       --------------------------------------------------------------------------------

குடியியல்                                                    அதிகாரம்:102.

                                நாணுடைமை 

கருமத்தால்  நாணுதல்  நாணுத்  திருநுதல் 

நல்லவர்  நாணுப்  பிற.                             1011.

செய்துவிட்டச் செயலை எண்ணி நாணம் கொள்ளுதல் ஒருவகை... பெண்மைக்குரிய நாணம் இன்னொரு வகை... நல்லோர் -நல் நெறியாளர்- பொது இடத்திலும் நாணம் காப்பர்... இடத்துக்கு இடம், தன்மைக்குத் தன்மை நாணத்தின் வகை மாறுபடும்... நாணம் என்பது மானிடரின் சிறப்புத் தன்மையாகும்...

                            --------------------------------------------------------------------

ஊணுடை  எச்சம்  உயிர்க்கெல்லாம்  வேறல்ல 

நாணுடைமை  மாந்தர்  சிறப்பு.                    -1012.

உணவு, உடை மற்றும் இன்பம் நுகர்தல் போன்ற பிறத் தேவைகள் யாவும், எல்லாருக்கும் பொதுவானவை... ஆனால்; நாணம் என்பது மானிடர்க்கே உரியதாகும்...

                         --------------------------------------------------------------------------------

ஊணைக்  குறித்த  உயிரெல்லாம்  நாண்என்னும் 

நன்மை குறித்தது  சால்பு.                                    -1013.

வயிற்றுப் பசிக்காக, உயிரினங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன... ஆனால்; மானிடர் மட்டுமே நாணத்தின் பொருட்டும்  வாழ வேண்டியராக இருக்கின்றனர்... நல்லொழுக்கம் என்பது வாழ்வின் அடிப்படை நெறியாகும்... அந்த நல் ஒழுக்கம் நாணத்தை ஆதாரமாகக் கொண்டு திகழ்கிறது... 

*நாணம் உடையோன் மானிடன் ஆவான்.

                          -------------------------------------------------------------------------

அணிஅன்றோ  நாணுடைமை  சான்றோர்க்கு  அஃதின்றேல் 

பிணிஅன்றோ  பீடு  நடை.                                                       -1014.

நாணம் கொண்டு வாழ்வதுப் பெருமையாகும்... சான்றோரையும் கூடுதாலாய்ப் பெருமைப் படுத்துவது நாணம் எனும் நல் குணமாகும்... நாணம் இன்றி வாழும் வாழ்வில், பெருமை இருக்காது... விலையுயர்ந்த ஆடை அணிந்து வீதியில் தலை நிமிர்ந்து பீடுநடையிட்டு வந்தாலும், அந்த நடையைக் கண்டு எவரும் போற்றுதல் செய்யார்... வெட்கமற்றச் செயலைச் செய்து விட்டு, பீடு நடையிடுகிறான் எனில், அவனுள் மனநோய் மண்டியுள்ளதோ என்றே மக்கள் கருதுவர்...

                             -------------------------------------------------------------------------------

குடியியல்                                      அரங்க கனகராசன் உரை.

பிறர்பழியும்  தம்பழியும்  நாணுவர்  நாணுக்கு 

உறைபதி  என்னும்  உலகு.                          -1015.

தான் செய்து விட்ட தவறுக்காக மட்டுமின்றி, தன்னோடுப் பழகும் நண்பர், உறவினர் என பிறர் தவறு செய்தாலும் மனம் வருந்தி நாணம் கொள்வர்... இத்தகையோரை, நாணத்தின் உறைவிடம் என்று உலகுக் கூறும்...

                        --------------------------------------------------------------------------

நாண்வேலி  கொள்ளாது  மன்னோ  வியன்ஞாலம் 

பேணலர்  மேலா  யவர்.                                          -1016.

நாணம் என்பது வரையறைக்கு உட்பட்டது அன்று...  அது எளியவர்களிடம் இருக்க வேண்டும்  என்றோ, படித்த பண்பாளரிடம்  மட்டுமே இருக்க வேண்டும் என்றோ, நியதிக்கு உட்பட்டது என்றோ கூற முடியாது... 

விந்தைகள் நிறைந்த -விரிந்த- இவ்வுலகின் செயல்பாடு எவ்வாறு சீராக உள்ளதோ, அதுப் போலவே நாண் உணர்வுப் பொதுவானதாகும்... இவ்வுண்மையை உணராதவரே நாணமற்று வாழ்வர்... மேன்மையானவர் நாணத்தின் பண்போடு விளங்குவர்...

                              ----------------------------------------------------------------------------

நாணால்  உயிரைத்  துறப்பர்  உயிர்ப்பொருட்டால் 

நாண்துறவார்  நாண்ஆள்  பவர்.                        -1017.

நாணக் கேடு ஏற்பட்டால், உயிரையும் மாய்த்து விடுவர்; உயிர் வாழ்தலை பெரிதெனக் கருதி, நாணத்தை இழக்க மாட்டாதவர் எவெரெனில்; மானத்தைப் பெரிதென எண்ணுவோர்!... 

                       ------------------------------------------------------------------------------------

பிறர்நாணத்  தக்கது  தான்நாணா  னாயின் 

அறம்நாணத்  தக்கது  உடைத்து.         -1018.

பிறர் வெட்கம்படத் தக்கச் செயலை ஒருவன் வெட்கமின்றிச் செய்வானாயின், அவனதுச் செயல் கண்டு, ஒழுக்கம் உள்ளோர் எவரும் அவனோடுத் தொடர்புக் கொள்ள மாட்டர்...

*நாணங் கெட்டவனோடுப் பழகுதலை, மானங்கெட்டத் தன்மை என உலகு கருதும்...

                     --------------------------------------------------------------------------------------

குடியியல்                                                           திருக்குறள் உரை.

குலஞ்சுடும்  கொள்கை  பிழைப்பின்  நலஞ்சுடும் 

நாணின்மை  நின்றக்  கடை.                             -1019.

கொண்ட கொள்கையில் பிழை இருந்தால், அக்கொள்கை வழி நின்ற எல்லாரும் கெட்டழிவர்... அதேபோல் தயக்கமின்றி வெட்கங் கெட்டச் செயலைச் செய்தால் நற்புகழ் யாவும்  அழியும்...                 

                        ----------------------------------------------------------------------------------

நாண்அகத்  தில்லார்  இயக்கம்  மரப்பாவை 

நாணால்  உயிர்மருட்டி  யற்று.               -1020.

அகத்தில் நாணம் வேண்டும்... அகத்தில் நாணம் அற்றவரின் இயக்கம் எப்படிப்பட்டதெனில்; மரப்பாவையை கயிறுக் கொண்டு ஆட்டுவித்தால், அசைவில் உயிரோட்டம் உள்ளது போல்  தென்படும்...  நானமற்றோர் இயக்கம் மரப்பாவையைப் போலிருக்கும்...

                         -------------------------------------------------------------------------

குடியியல்                                                         அதிகாரம்:103.

                               குடிசெயல்வகை 

கருமம்  செயஒருவன்  கைதூவேன்  என்னும் 

பெருமையின்  பீடுடையது  இல்.               -1021.

நோக்கத்தில் நிச்சயம் வெற்றிப் பெறுவேன் என, எவனொருவன் மனவுறுதி பூண்டு, தோல்வியிலும் மனம் தளராமல் முனைப்புடன் செயல்படுகிறானோ, அவனது விடாமுயற்சிக்கு இணையானதோர் பெருமை வேறெதுவும் இல்லை...

                      -----------------------------------------------------------------------------

ஆள்வினையும்  ஆன்ற  அறிவும்  எனஇரண்டின் 

நீள்வினையால்  நீளும்  குடி.                           -1022.

விடாமுயற்சி, சிந்தித்துச் செயல்படும் திறன் என இவ்விரண்டின் இணைந்தச் செயலாக்கத்தால் குடிச் செழிப்புறும்...

                          --------------------------------------------------------------------------------

குடிசெய்வல்  என்னும்  ஒருவற்குத்  தெய்வம் 

மடிதற்றுத்  தான்முந்  துறும்.                       -1023.

                              தெய்வம்   = இறைவன்.

                                இறைவன் = அரசன்

ஊரோர்  போற்றும்படி குடியைச் செழிப்புறச் செய்வேன் என்று சூளுரைத்து செயல்படுவோனுக்கு, தடை நேர்ந்தாலும் ஆட்சியாளன் தடையைப் போக்கி, தானே முன்வந்து உதவிடுவான்... 

*நல்திட்டத்திற்கு அரசின் ஆதரவுக் கிட்டும்...

                      -----------------------------------------------------------------------------

சூழாமல்  தானே  முடிவெய்தும்  தம்குடியைத் 

தாழாது  உஞற்று  பவர்க்கு.                         -1024.

உதவிகள் எதுவும் கிட்டாத நிலையிலும், ஒருவனது குறிக்கோள் எவ்வாறு நிறைவேறுகிறது எனில், குடி செழிப்புற வேண்டும் எனும் குறிக்கோளுடன் மனம் தளராது, இடைவிடா முயற்சி மேற்கொண்டால் குறிக்கோள் நிறைவேறும்...

                     ------------------------------------------------------------------------------

குற்றம்  இலனாய்க்  குடிசெய்து  வாழ்வானைச் 

சுற்றமாச்  சுற்றும்  உலகு.                               -1025.

எந்தவொருக் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல், குடியைச் செய்து செவ்வனே  வாழ்வானோடு, பழக விரும்புவர்  மக்கள்...

                        ---------------------------------------------------------------------------

குடியியல்                                           அரங்க கனகராசன் உரை.

நல்லாண்மை  என்பது  ஒருவற்குத்  தான்பிறந்த 

இல்லாண்மை  ஆக்கிக்  கொளல்.                  -1026.

ஒழுக்கத்தில் உயர்ந்தோன் எனும் சிறப்பு, ஒருவனை வந்தடைவது எப்போது?... தான்பிறந்தக் குடிக்கு இழுக்கு ஏற்படாமல், ஒழுக்கம் காப்பதால், ஒழுக்கத்தில் உயர்ந்தவன் எனும் சிறப்பு வந்தடைகிறது... 

அமரகத்து  வன்கண்ணர்  போலத்  தமரகத்தும் 

ஆற்றுவார்  மேற்றே  பொறை.                      1027.

அஞ்சா நெஞ்சுடன்  படையை எதிர்க் கொள்ளுவோரை, தெரிவுச் செய்து போர்க்களத்திற்கு  அனுப்புவர்... அதுப் போல; தனதுக் குடிக்கு வரும் இன்னல்களை எதிர்க் கொண்டு,    மனந்தளராது, குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் எவரிடம் உள்ளதோ அவரிடமே குடும்பப் பொறுப்பும் வந்தடையும்...

                               ----------------------------------------------------------------------------

குடிசெய்வார்க்கு  இல்லை  பருவம்  மடிசெய்து 

மானம்  கருதக்   கெடும்.                                  -1028.

முன்னேற வேண்டும் என முனைப்புடன் இருப்போர் நல்ல நேரம், கெட்ட நேரம்  என காலத்தை வீண் செய்ய மாட்டர்... கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி முன்னேற்றம் காண்பர்...  இது நல்ல நேரம், இது கெட்ட நேரம் என காலத்தை வீணாக்கும் சோம்பேறிகளால் - அவர்களது மூட எண்ணமே - அவர்களின் வாழ்வுக்கு தடைக் கல்லாகும்...   

                      --------------------------------------------------------------------------

இடும்பைக்கே  கொள்கலங்  கொல்லோ  குடும்பத்தைக் 

குற்றம்  மறைப்பான்  உடம்பு.                                         -1029.

துன்பத்தின் உறைவிடம் என்று எதனைக் கூறலாம்?... தன்னலங் கருதாமல் குடும்பத்திற்காக, குடும்பத்தின் மொத்தச் சுமையையும் தாங்கி பாடுபடுபவனின் உடம்பு, துன்பத்தின் உறைவிடமோ... 

*கடுந்துன்பத்திலும் குடும்பத்தின் நன்மைக்காக உழைப்பவன் மனம் குறுக்கு வழியை நாடாது...

                   ----------------------------------------------------------------------------------

குடியியல்                                                                திருக்குறள் உரை.

இடுக்கண்கால்  கொன்றிட  வீழும்  அடுத்தூன்றும் 

நல்லாள்  இல்லாத  குடி.                                       -1030.

                      நல்லாள் = நல் ஆளுமை.

குடும்பத்தை வீழ்த்தி விடும் அனைத்துச் சாத்தியக் கூறுகளும் உள்ளடங்கியதாக துன்பம் உருவெடுக்கும்... ஆயினும்; தகுந்த ஆளுமையோடு எதிர்க் கொண்டால், துன்பத்தை விடுவிக்க இயலும்... அத்தகைய ஆளுமை இல்லையெனில் குடும்பத்தின் வீழ்ச்சியைத் தடுக்க இயலாது...

                                 ---------------------------------------------------------------------------

குடியியல்                                                    அதிகாரம்:104.

                                          உழவு 

சுழன்றும்ஏர்ப்  பின்னது  உலகம்  அதனால் 

உழந்தும்  உழவே  தலை.                        -1031.

தன்னை தானே சுற்றும் பூமியின் மீது வாழும் மக்களின்  உயிர் வாழ்வு எதனை அடிப்டையாகக் கொண்டுள்ளது...  எந்த வகையில் நோக்கினாலும் - மக்கள் எந்த வடிவில் - வருவாய் ஈட்டினாலும், மக்களின் வருவாய் ஏர்த் தொழிலுக்கு துணை புரிவதாகவே உள்ளது... அதனால், பசியாற்றும் உழவுத் தொழிலே சிறந்தது...     

                                  -----------------------------------------------------------------

உழுவார் உலகத்தார்க்கு  ஆணிஅஃ  தாற்றாது 

எழுவாரை  எல்லாம்  பொறுத்து.                 -1032.

உழவர் பெருமக்கள்  உலகத்தார்க்கு அச்சாணி  போன்றவர்  ஆவர்... ஏனெனில், வேறு  தொழில் செய்வோரையும் உயிர் வாழச் செய்வது, உழவுத் தொழிலே... அதனால், உழவர் உலகோர்க்கு  அச்சாணி எனலாம்...    

                              ----------------------------------------------------------------------------

உழுதுண்டு  வாழ்வாரே  வாழ்வார்மற்  றெல்லாம் 

தொழுதுண்டு  பின்செல்  பவர்.                               -1033.

சேற்றில் இறங்கி சகதியில் நின்று, உழவுத் தொழில் செய்தாலும், உழவர்களின்  வாழ்வே  ஒப்பற்ற வாழ்வாகும்... பிறத் தொழில் செய்வோரை, உழவர் பெருமக்களிடம் கையேந்தி வாழ்வோர் எனலாம்... 

                         --------------------------------------------------------------------------------  

பலகுடை  நீழலும்  தங்குடைக்கீழ்க்   காண்பர் 

அலகுடை  நீழ  லவர்.                                           -1034.

அதிகாரம் எனும் குடையின் கீழ் மக்களை அரசோச்சுவர்  ஆட்சியாளர்...  ஆட்சியாளரை அரசோச்சுபவர்  எவரெனில்; உழவு எனும் குடையின் கீழ்  ஆட்சியாளரையும், அரசோச்சுபவர் உழவர் பெருமக்களே!... 

*நாடாள்வோனேயாயினும், உழவரின் நிழலில்  வாழ்வோன் ஆவான்.

                          ---------------------------------------------------------------------

இரவார்  இரப்பார்க்கொன்று  ஈவர்  கரவாது 

கைசெய்தூண்  மாலை  யவர்.                   -1035.

பிறரிடம்  கையேந்தும் பழக்கம்  உழவர் பெருமக்களிடம் அறவே கிடையாது... கையேந்தி வருகின்ற நாடோடிகளுக்கும், மறைத்து வைக்காமல், கொடுத்து உதவும் பண்பாளர் ஆவர்... இப்பண்பானது, புகழுக்குரிய உழவுத் தொழிலைப் புரியும் பெருமக்களின் சிறப்பியல்பாகும்...

                          ----------------------------------------------------------------------------

குடியியல்                                                                              திருக்குறள் உரை.

உழவினார்  கைம்மடங்கின்  இல்லை  விழைவதூஉம்

விட்டேம்என்  பார்க்கும்   நிலை.                                     -1036.

உழவர் உழவுத் தொழிலைச் செய்யாமல், தொழிலை முடக்கி விடுவரெனில் பஞ்சமும், குற்றமும் பெருகும்... இந்நிலையில் நிலைக் குலைந்து விடக்கூடிய கூட்டம் ஒன்றுண்டு... கடவுளின் பிறப்புகள் தாம் என்றுக் கூறி, மக்களை ஏய்க்கும் கயமைக் கூட்டமே அது... எத்தகைய இன்னலையும் போக்கி விடுவோம்  கடவுளிடம் சொல்லி  என்பர்...  ஆனால்; உழவர் உழவுத் தொழிலை நிறுத்தி விட்டால், இக்கயமைக் கூட்டம் கதறித் துடித்து விடும்... கடவுள் எனும் சொல்லையும் மறந்து, உணவுக்காக பதறிவிடுவர்...

                                     ------------------------------------------------------------------------        

தொடிப்புழுதி  கஃசா   உணக்கின்  பிடித்தெருவும் 

வேண்டாது  சாலப்  படும்.                                        1037.

ஒருபங்கு மண், கால் பங்கு ஆகும்படி நன்றாக உழுது காய விட்டால், ஒருப்பிடி எருவும் இட வேண்டியதில்லை... பயிர் செழித்து வளரும்...

* நிலத்தை ஆழமாக  புழுதியின்றி  உழுதால், எருவும் இடல் வேண்டாம்... 

                               ------------------------------------------------------------------

ஏரினும்  நன்றால்  எருஇடுதல்  கட்டபின் 

நீரினும்  நன்றதன்  காப்பு.                     -1038.

ஏர் உழுதல் நன்று... அதனினும் நன்று, மண்ணின் தன்மையறிந்து எருவிடுதல் ஆகும்... களை எடுத்தப் பின், நீர் பாய்ச்சுதல் நன்று... அதனினும் நன்று, பயிர் அழிந்துவிடாமல் காத்தல்... 

                         ------------------------------------------------------------------------

செல்லான்  கிழவன்  இருப்பின்  நிலம்புலந்து 

இல்லாளின்  ஊடி  விடும்.                                -1039.

நில உரிமையாளன், நிலத்தைப் பார்வையிடச் செல்லாது இருந்தால், நிலம் பொலிவு இழந்து விடும்... இதற்கோர் உவமை கூற வேண்டுமானால்; மனைவியைக் காண வீட்டுக்குப் போகாது இருந்து விட்டால், மனைவியின்  மனம் சோர்வுற்று முகம் பொலிவிழந்து   வாடிவிடும்... அதோடு ஊடலும் கொள்வாள்... அதுபோல், நிலத்தை கவனிக்காமல் விட்டால் நிலமும் பொலிவிழந்து விடும்...

                                 -------------------------------------------------------------------

குடியியல்                                                                              திருக்குறள் உரை.

இலமென்று  அசைஇ  இருப்பாரைக்  காணின் 

நிலமென்னும்  நல்லாள்  நகும்.           -1040.  

                              நல்லாள் = பயன் பெறுவோன், நல்லோன்.

வறுமை வாட்டுகிறதே இனி வாழ்வதெப்படி எனப் புலம்புவோர் சோம்பேறிகள் ஆவர்... அறவே முயற்சி அற்ற இவர் நிலைக் கண்டு - விளைந்திட நிலமுண்டு; உழைத்திட மறுத்து வறுமை வதைக்கிறதே என்று   புலம்புவோரைக் கண்டு - நிலம் போன்று மனவுறுதி மிக்கோன்  நகைக் கொள்வான்...

                         --------------------------------------------------------------------------------------

குடியியல்                                                                                 அதிகாரம் :105.

                                              நல்குரவு.

இன்மையின்  இன்னாதது  யாதெனின்  இன்மையின் 

இன்மையே  இன்னா  தது.                                              -1041.

வறுமையைப் போல் துன்பமானது எதுவெனில், வறுமையின் கொடுமையே மிகத் துன்பமானது  ஆகும்...    

                             ---------------------------------------------------------------------------

இன்மை  எனஒரு  பாவி  மறுமையும் 

இம்மையும்  இன்றி  வரும்.          -1042.

வறுமை எனும் கொடுநோய் மீண்டும் மீண்டும் வாதிக்கிறதே... அய்யகோ கலவரம்பின்றி இப்போதும் வாதிக்கிறதே...

*ஒருவன் சோம்பேறி ஆகிவிட்டால், வறுமை அவனை வாட்டும்... ஒருநாள் அல்ல; மீண்டும் மீண்டும் வறுமைக்கு ஆட்படுவான்...   

                              ---------------------------------------------------------------------

தொல்வரவும்  தோலும்  கெடுக்கும்  தொகையாக 

நல்குரவு  என்னும்  நசை.                                          -1043.

                                      நசை - ஆசை, குற்றம்.

வழிவழியாய்க் கடைப்பிடிக்கப்படும் நல் ஒழுக்கத்தையும், குடும்பத்தின் மாண்பையும் கெடுப்பன  எதுவெனில், வறுமையால் விளையும் குறுக்கு எண்ணமும், குறுக்கு எண்ணத்தால் விளையும் குற்றச் செயல்களும் ஆகும்!...

                              -----------------------------------------------------------------------------

இற்பிறந்தார்  கண்ணேயும்  இன்மை இளிவந்த 

சொற்பிறக்கும்  சோர்வு  தரும்.                        -1044.

ஒழுக்கம் வாய்ந்தக் குடும்பத்தில் வாழ்ந்தாலும், வறுமை சூழ்ந்து விட்டால் தகாத செயல்கள் செய்ய மனம் விழையும்... ஒழுக்கத்தை முடக்கும்... அதனால் இழிச் சொற்கள் வந்தடையும்... களங்கம் வேரூன்றும்...    

                         ---------------------------------------------------------------------------

நல்குரவு   என்னும்  இடும்பையுள்  பல்குரைத் 

துன்பங்கள்  சென்று  படும்.                              -1045.

வறுமை எனும் துன்பம் நேர்ந்தால், அதனைத் தொடர்ந்து, பல்வேறு வடிவில் இன்னல்கள் சூழும்... பல்வேறு விளைவுகள் உண்டாக்கும்... 

                ------------------------------------------------------------------------------------

குடியியல்                                                                   அரங்க கனகராசன் உரை.

நற்பொருள்  நன்குணர்ந்து  சொல்லினும் நல்கூர்ந்தார் 

சொற்பொருள்  சோர்வு  படும்.                                 -1046.

வறுமையால் நைந்து - துவண்டுவிட்ட ஒருவன் - வறுமையின் கோரத்தை உணர்ந்து, அதன் தாக்கத்தில் சிக்காதிருப்பது எப்படியெனச் சொன்னாலும், அவன் பேச்சினை செவிமடுக்க மறுப்பர்... ஏனெனில் வறுமையால் அவன் தன்னிலை இழந்து பித்துப் பிடித்து உளறுதல் செய்கிறான் என  நினைப்பர்... அதனால் வறியவன் சொல் அரங்கேறாது...  

                          ------------------------------------------------------------------------------

அறஞ்சாரா  நல்குரவு  ஈன்றதா யானும்

பிறன்போல  நோக்கப்  படும்.           -1047.

நேர்மையற்ற செயலால் வறுமைக்கு உள்ளாகி விட்டவனை, ஈன்றவளும் அந்நியனைப் போல் பார்ப்பாள்...

                           ---------------------------------------------------------------------------------

இன்றும்  வருவது  கொல்லோ  நெருநலும் 

கொன்றது  போலும்  நிரப்பு.                      -1048.

இன்றும் வறுமை வாட்டி வதைக்குமோ?... நேற்றும் தாங்கவொனா துன்பத்தில் துடித்தேனே...

                                 -----------------------------------------------------------------------------

நெருப்பினுள்  துஞ்சலும்  ஆகும்  நிரப்பினுள் 

யாதொன்றும்  கண்பாடு  அரிது.                 -1049.

வெப்பம் சூழ்ந்திருப்பினும் உறங்கி விடலாம்... ஆனால்; வறுமை சூழ்ந்து விட்டால், கண் மூடி உறங்க முடியாமல், மனம் தத்தளிக்கும்... அமைதியிழந்து நெஞ்சம் நள்ளிரவிலும் வேதனையில் துவளும்... 

                          --------------------------------------------------------------------------

துப்புரவு  இல்லார்  துவரத் துறவாமை 

உப்பிற்கும்  காடிக்கும்  கூற்று.      -1050.

       துப்பு+உரவு = மனவுறுதி, மனத்துணிவு.

       துவர்தல்      = பிரிதல்,

       காடி               = கஞ்சி, உணவு.

மனஉறுதி அற்றவர் பேராசைக்கு இரையாவர்... பேராசையால் உந்தப்பட்டு, வறுமையில் சிக்கியோர், வறுமை நிலையிலும்  தமது பேராசையை இழக்காமல், அறமற்று இயங்குவாராயின், இன்னல் பல சூழும்... கஞ்சிக்கும் வழியின்றி தவிக்க நேரிடும்...

                              ---------------------------------------------------------------------

குடியியல்                                                     அதிகாரம் :106.

                                        இரவு

இரக்க  இரத்தக்கார்க்  காணின்  கரப்பின் 

அவர்பழி  தம்பழி  யன்று.                      -1051.

உதவி கேள்; உதவி செய்வோரை நாடி!... இல்லையென அவர் மறைத்தால், அது அவருக்குத்தான் பழிச்சொல் தரும்... கையேந்திக் கெஞ்சியும் - பசியால் துடிப்பதறிந்தும் - ஏதும் கொடுக்காத கல்நெஞ்சன் என்று அவனைப் பழிப்பர்... உதவி கேட்டமைக்காக எவரும் பழிச்சொல் வீசார்... 

                          ----------------------------------------------------------------------

இன்பம்  ஒருவற்கு  இரத்தல்  இரந்தவை 

துன்பம்  உறாஅ  வரின்.                          -1052.

உதவிக் கேட்பதிலும் ஒருவித இன்பம் நிகழும்... உதவப்பட்ட பொருள், முகம் சுளிக்காமல் தரப்பட்டதெனில்!...

                       ------------------------------------------------------------------------------

கரப்பிலா  நெஞ்சின்  கடனறிவார்  முன்நின்று 

இரப்புமோ  ரேஎர்  உடைத்து.                           -1053.

இல்லை என்று கூறாமல்,   இல்லார்க்கு உதவுதல் நன்றெனக் கருதும் உள்ளம் கொண்டோரிடம்  சென்று உதவி நாடுதல் பெருமை மிகுந்தச் செயலாகும்...     

                          ----------------------------------------------------------------------

இரத்தலும்   ஈதலே   போலும்   கரத்தல்

கனவிலும்  தேற்றாதார்  மாட்டு.  -1054.

உதவிக் கேட்பதும், உதவிசெய்தல் போல் தான்... எவ்வாறெனில்; கனவிலும் இல்லையென்று மறைக்காமல் உதவிடும் நல்லோரிடம் உதவி நாடுதல், உதவி செய்தலுக்கு ஒப்பாகும்... 

                         --------------------------------------------------------------------------------

கரப்பிலார்  வையகத்து  உண்மையால்  கண்ணின்று 

இரப்பவர்  மேற்கொள்  வது.                                            -1055.

உண்மையாகவே இவ்வுலகில் ஒளிவு, மறைவின்றி உதவும் நல்லோர் இருக்கின்றனர்... அதனால்தான்; பிறரிடம் சென்று உதவிக் கேட்கின்ற வழக்கமும் தொடர்கிறது...

*உதவுவோர் உள்ளனர் என்பதாலேயே ஆரியர் ஈங்கு கையேந்தி நுழைந்தனர் போலும்...

                                     -----------------------------------------------------------------------   

குடியியல்                                                         அரங்க கனகராசன் உரை

கரப்பிடும்பை  இல்லாரைக்  காணின்  நிரப்பிடும்பை 

எல்லாம்  ஒருங்கு  கெடும்.                                             -1056.

ஒளிவு, மறைவு எனும் குணம் இல்லாரைக் கண்டால், வறுமையும், துன்பமும் நீர்த்துப் போகும்...

                        ----------------------------------------------------------------------------------

இகழ்ந்தெள்ளாது  ஈவாரைக்  காணின்  மகிழ்ந்துள்ளம் 

உள்ளுள்  உவப்பது  உடைத்து.                                            -1057.

இகழ்மொழி பேசாமல் மனமுவந்து உதவுவோரைக் காணின், உள்ளம் மகிழும்... உள்ளத்தில் பேரின்பம் பல்கும்... 

                                 -------------------------------------------------------------------------

இரப்பாரை  இல்லாயின்  ஈர்ங்கண்மா  ஞாலம் 

மரப்பாவை  சென்றுவந்  தற்று.                  -1058.

                   இரப்புஉதவி கேட்டல்.

                 இரப்பார் = உதவியாற்றுவோர், இரப்பை தணிப்பார்.  

உதவியாற்றும்   மானிடர் எவரையும் கொண்டிருக்கவில்லை என்றால்நீர் வளத்தால் சூழப்பட்ட இவ்வுலகின் இயக்கம் மரப்பாவையை ஒத்ததாக இருக்கும்... 

                          --------------------------------------------------------------------------

ஈவார்கண்  என்னுண்டாம்  தோற்றம்  இரந்துகோள் 

மேவார்  இலாஅக்  கடை.                                              -1059.

ஒருவன் வாரி வழங்குவதால் பேரும், புகழும் அடைகிறானா எனில் இல்லை என்றே கூறலாம்... கையேந்தி பிழைக்கும் நிலையில் சிலர் இருப்பதால் வள்ளல் எனும் புகழ்ச் சொல்லுக்கு உரியவன் ஆகிறான் வழங்குவோன்... 

                            --------------------------------------------------------------------------

இரப்பான்  வெகுளாமை  வேண்டும்  நிரப்பிடும்பை 

தானேயும்  சாலும்  கரி.                                                  -1060. 

உதவிப் பெறும் நிலையில் உள்ளவன் கோபம் கொள்ளாதிருக்க வேண்டும்... ஏனெனில், கோபம் என்பது சிந்தித்தல் இன்மையால் விளைகிறது... இதன் எதிர் விளைவு தீமையாகக் கூடும்... கையேந்தி பிழைக்கும் நிலையும் கோபத்தால் ஏற்பட்டிருக்கலாம்... அதனால், துன்ப நிலையைக் கருதி, கோபம் கொள்ளாதிருத்தல் வேண்டும்...

                          -------------------------------------------------------------------------------

குடியியல்                                                                     அதிகாரம்:107.

                                                இரவச்சம் 

கரவாது  உவந்தீயும்  கண்ணன்னார்  கண்ணும் 

இரவாமை  கோடி  யுறும்.                                     -1061.

இல்லையென்று மறுக்காமல், தன்னிடம் இருப்பதை மகிழ்ச்சியோடு கொடுப்பவர் எவரோ, அவரிடமும் கையேந்துதல் கூடாது... இப்பண்பு கோடி மடங்கில் சுய மரியாதையை உயர்த்தும்...

                            -----------------------------------------------------------------------------

இரந்தும்  உயிர்வாழ்தல்  வேண்டின்  பரந்து 

கெடுக  உலகியற்றி  யான்.                          -1062.

'ஒரு சிலர், ஒரு சிலரிடம் கையேந்தி தான் வாழ வேண்டும்... இது தலைவிதி' என்பர்... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உரிமையின் முன் இது முரண்பாடானக் கருத்தாகும்... ஒரு சிலர் உரிமையுடனும், வேறு சிலர் உரிமையற்றும் அடிமையாய் - பிறர் தயவில் - வாழ்ந்திட வேண்டுமா?... இதனை விதியென்று சொல்வதா?... இது மோசடியல்லவா...
இயற்றப்படும் சட்டத்தால் மானிடர் யாவரும் சம உரிமையுடன் வாழ்தல் வேண்டும்... எவ்விதத்திலும் பேதம் இருக்கக்கூடாது...  மானிடர் யாவரும் உரிமையுடன் வாழ, சட்டத்தால் இயலவில்லையெனில், இப்படியொரு பாகுபாடு மிகு சட்டத்தை இயற்றியவன் எவனோ அவன் வீழ்ந்தொழியட்டும்... 

*மானிடரைப் பாகுபடுத்தி, உரிமை நல்க மறுக்கும் சட்டம் நொறுக்கப் படட்டும்... கெட்டு அழியட்டும்... ஒடுக்கப்பட்டோர் ஓங்கி எழட்டும்... புரட்சி வெடிக்கட்டும்...

                               ------------------------------------------------------------------------

இன்மை இடும்பை  இரந்துதீர்  வாமென்னும் 

வன்மையின்  வன்பாட்டது  இல்.              -1063.

வறுமை என்பது  மிகத் துன்பமானது... அதனால்பிறரிடம் கையேந்தி, துன்பத்தைப் போக்கி விடலாம் என்று கருதுவது  தாழ்வான எண்ணமாகும்... தாழ்வான எண்ணத்தைப் போன்ற, இழிவான எண்ணம் வேறு எதுவும் இருக்க முடியாது...           

                       ----------------------------------------------------------------------------

இடமெல்லாம்  கொள்ளாத்  தகைத்தே  இடமில்லாக் 

காலும்  இரவொல்லாச்  சால்பு.                                   -1064.

எந்தச் சொற்களால் புகழ்ந்தாலும் ஈடாகாது... கண்ணியம் மிக்க பேரவையில் நின்றுப் போற்றினாலும் ஈடாகாது... அது எதுவெனில்; நேர்மையாக உயிர் வாழ அனைத்து வழிகளிலும் முயன்றும் எல்லா வழிகளிலும் தோல்வி கண்டும், எவரிடமும் கையேந்தி வாழ விரும்பாத மனவுறுதியை ஒருவன் பெற்றிருப்பானேயாயின், அவ்வுறுதியை வாழ்த்த சொற்களுமுண்டோ?...

                     ------------------------------------------------------------------------------------

குடியியல்                                           அரங்க கனகராசன் உரை.

தென்னீர்  அடுபுற்கை  யாயினும்  தாள்தந்தது 

உண்ணலி     னூங்கினியது  இல்.                -1065.

உண்பது வெறும் கஞ்சியாயிருந்தாலும், பிறரிடம் கையேந்தி உண்ணல் கூடாது... தன் உழைப்பில் ஈட்டிய கஞ்சியை புசிப்பதில் கிட்டும் சுய மரியாதைக்கு ஈடில்லை...

                            -------------------------------------------------------------------------

ஆவிற்கு  நீரென்று  இரப்பினும் நாவிற்கு 

இரவின்  இளிவந்தது  இல்.                   -1066.

'பசு, பசியாலும், தாகத்தாலும் தவிக்கிறது... சிறிதுக் கஞ்சி ஊற்றுக' என்று பசுவின் பெயரில் கஞ்சியை பெற்று பசியாறிடுவர் பார்ப்பனர்... உழைத்து வாழ விரும்பாமால் பசுவின் பெயர் கூறி நாவைக்  கெஞ்சச் செய்வது , நாவிற்கு இழிவுப் படுத்தும் செயலாகும்... நன்மொழியை மொழியும் நவிலும் நாவிற்கு இதைவிடச் சிறுமை ஏதுமுண்டோ...

                             --------------------------------------------------------------------

இரப்பன்  இரப்பாரை  எல்லாம்  இரப்பின் 

கரப்பார்  இரவின்மின்  என்று.            -1067.

பிறரிடம் கையேந்தி வாழ நினைப்போர் யாவருக்கும் எனது வேண்டுகோள் யாதெனில்; கையேந்தி கெஞ்சியும், உதவிட மனமில்லாரிடம் ஒருபோதும் உதவி வேண்டி கையேந்தாதீர்...

                          ----------------------------------------------------------------------

இரவென்னும்  ஏமாப்பில  தோணி  கரவென்னும் 

பார்த்தாக்கப்  பக்கு  விடும்.                                    -1068.

                                        பார் = பாறை.

கையேந்தி உதவி கேட்டல் என்பது, தத்தளிக்கும் படகுப் போன்றதாகும்... கல்நெஞ்சர்களின் 'உதவிட ஏதுமில்லை' எனும் சொல் பாறை போன்றதாகும்... பாறைத் தாக்க படகு நொறுங்கி விடும்...

*ஏற்கனவே தத்தளிக்கும் படகு, பாறை மீது மோதினால் படகு சிதைந்து விடும்... வறுமையில் வாடுவோருக்கு   உதவி கிட்டாதுப் போயின், உள்ளம் நொறுங்கிடும்...

                       -----------------------------------------------------------------------------

குடியியல்                                       திருக்குறள் உரை.

இரவுள்ள  உள்ளம்  உருகும்  கரவுள்ள 

உள்ளதூஉம்  இன்றிக்  கெடும்.     -1069.

பிறரிடம் கையேந்தி வாழும் நிலையில் சிலர் நிலை உள்ளதே என்று நினைக்கையில்  வேதனை மிகுந்து உள்ளம் உருகும்... கையேந்தி நின்றாலும், இல்லையென்று மறுப்போரை நினைக்கையில் நெஞ்சம் கசிந்து கரைகிறது...

                             ----------------------------------------------------------------------

கரப்பவர்க்கு  யாங்கொளிக்குங்  கொல்லோ  இரப்பவர் 

சொல்லாடப்  போஒம்   உயிர்.                                             -1070.

பசியால் துடித்தல் கண்டும், எவருக்கும் எதுவும் தராமல் மூடி மூடி ஒளித்து வைத்துக் கொள்வோனால் தன் உயிரை மூடி வைக்க முடியுமா?... பிறருக்கு ஈகைச் செய்யாமல் மூடி வைக்கப்படும் பொருளால் உயிரைக் காக்க இயலாது... பிறரிடத்தில் கையேந்தி வாழும் நிலையில் இருந்தாலும், மானக்கேடான சொற்களுக்கு ஆளாகி விட்டால், உயிரை மாய்த்து விடுவர்... ஆனால்; பிறர்க்கு இல்லையென்று சொல்வதால் பலரின் இழிமொழிக்கு உள்ளாகி மானம் இழந்தாலும் உயிர் துறவார் கல்நெஞ்சர்...

                        --------------------------------------------------------------------------

குடியியல்                                              அதிகாரம்:108.

                                    கயமை 

மக்களே  போல்வர்  கயவர்  அவரன்ன 

ஒப்பாரி  யாங்கண்டது  இல்.           -1071.

மானிடரைப் போல் உருவம் பொருத்தத்துடன் காணப்படுவர் கயவர்... கயவருக்கு அமைந்துவிட்ட உருவ ஒற்றுமையைப் போல் யான் வேறெந்த உயிரிடமும்  கண்டது இல்லை...

                                  ---------------------------------------------------------------------

நன்றறி  வாரிற்  கயவர்  திருவுடையார் 

நெஞ்சத்து  அவலம்  இலர்.               -1072.

ஒரு வகையில் மானிடநேயம் மிக்கோரைக் காட்டிலும், பாராட்டுதலுக்கு உரியோர் என கயவரைக் கூறின் மிகையாகாது... ஏனெனில்; கயவர் தம் நெஞ்சில் ஏது குறித்தும் கவலைக் கொள்ளார்... எனவே, அந்த வகையில் பாராட்டுதலுக்கு உரியோராகக் கயவர்த் திகழ்கின்றனர்...

                               ------------------------------------------------------------------------------

தேவர்  அனையர்  கயவர்  அவருந்தாம் 

மேவன  செய்தொழுக  லான்.          -1073.                     

                           தேவடி = அரண்மனை 

                              தேவர் = அரண்மனைக்கு உரியவன், அரசன்.

தேவடிக்கு உரியவன் தேவன்... அதாவது அரண்மனைக்கு உரியவன் அரசன்... ஒரு வகையில் அரசனுக்கு இணையானவர் என்று கயவரைக் கூறலாம்... எவ்வகையெனில்; அரசனைப் போலவே, கயவரும் மனம் நாடுவதைச் செய்கின்றனரே...

                                  ----------------------------------------------------------------------------

அகப்பட்டி  ஆவாரைக்  காணின்  அவரின் 

மிகப்பட்டுச்  செம்மாக்கும்  கீழ்.           -1074.

கீழ்தரமானச் செயல்களில் ஈடுபடுவோரைக் காணும் போது, அவர்களைக் காட்டிலும் தாம் உயர்ந்தவர் என கயவர் செருக்குக் கொள்வர்... 

                              -----------------------------------------------------------------------------

குடியியல்                        அரங்க கனகராசன் உரை.

அச்சமே     கீழ்களது     ஆசாரம்     எச்சம் 

அவாஉண்டேல்  உண்டாம்  சிறிது. -1075.

அடிப்படையில்  கயவர்களிடம் இயல்பான ஒழுக்கம் கிடையாது... தண்டனைக்கு அஞ்சி, ஒழுக்கமுள்ளவரைப் போல் தம்மைக் காட்டிக் கொள்வர்... கயவரிடத்தில் மூடநம்பிக்கையும் இருக்கும்... இறப்புக்குப் பிறகு, மேல் உலகத்தில் நன்மைக் கிட்டும் எனும் மூடநம்பிக்கையின் பொருட்டு, நப்பாசையுடன் சில தருணங்களில், ஒழுக்கம் உடையோர் போல் மாறுவர்...

                     -------------------------------------------------------------------------

அறைபறை    அன்னர்    கயவர்தாம்   கேட்ட 

மறைபிறர்க்கு  உய்த்துரைக்க  லான்   -1076.              

அறிவுப்புகளைப் பறையடித்துச் சொல்வதுண்டு... பறையடித்து செய்தியை வெளியிடுவோருக்கு ஒப்பானவர் யாரெனில்; கயவர் ஆவர்... ஏனெனில்; தாம் கேட்ட மறைச் செய்தியை, பிறரிடம் கூறி அம்பலம் ஆக்குவதால்!...

                                   -------------------------------------------------------------------------

ஈர்ங்கை  விதிரார்  கயவர்  கொடிறுடைக்கும் 

கூன்கைய  ரல்லா  தவர்க்கு.                         -1077.

கையில் ஒட்டியிருக்கும் எச்சில் பருக்கையையும் உதற மாட்டாதவர் கயவர்... ஆனால்; தாடையை உடைப்பது போல் ஓங்கி கன்னத்தில் குத்து விடுவோரிடம், குலை நடுங்கி  தமது உடைமையை கொடுத்து விடுவர்... 

*அமைதியான முறைக்கு  கயவர் இணங்க மறுப்பர்... அடக்கு முறையால் மட்டுமே கயவரை ஆட்கொள்ளவியலும்...

                                    --------------------------------------------------------------------------

சொல்லப்   பயன்படுவர்  சான்றோர்  கரும்புபோல் 

கொல்லப்  பயன்படும்  கீழ்.                                       -1078.

நற்சொல்லுக்கு கட்டுப்பட கூடியவர் சான்றோர்... கரும்பைப் போல், பிழிந்தால் மட்டுமே கயவர் அடங்குவர்...

                             --------------------------------------------------------------------

குடியியல்                                              அரங்க கனகராசன் உரை.

உடுப்பதூஉம்  உண்பதூஉம்  காணின்  பிறர்மேல் 

வடுக்காண  வற்றாகும்  கீழ்.                                 -1079.

பிறர் நன்முறையில்  உழைத்து, நல்லதை உடுத்தி, நல்ல உணவு உண்பதைக் கண்டால், அவர்கள் மீது குற்றம், குறைகளை சுமத்தி, களங்கம் படுத்த முனைவான் கயவன்... மனம் குமுறுவான்... அதிலோர் இன்பம் காணும் இழிகுணம் கயவனிடத்தில் இருக்கும்...  

                               -------------------------------------------------------------------------

எற்றிற்  குரியர்  கயவரொன்று  உற்றக்கால்  

விற்றற்கு  உரியர்  விரைந்து.                     -1080.

கயவரால் ஏதும் நன்மையுண்டா எனில், எதுவுமே இல்லை எனலாம்... எதற்குரியர் கயவர் எனில், சிறு வாய்ப்புக் கிடைத்தாலும், எதையும் விற்றுவிடத் துணிவர் கயவர்...  

*ஏமாறும் மானிடரிடம் எளிதாகப் பேசி, அரசின் உடமைகளையும், தம் உடைமைகள் என்றுக் கூறி, விலைப் பேசி விற்று விடவும் செய்வர்... எதிர்விளைவுகள் குறித்து துளியும் கவலையின்றி, எத்தகு மோசடிக்கும் துணிந்தவர் ஆவர் கயவர்...

                  ---------------------------------------------------------------------------

-பொருட்பால் நிறைவு-

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்