அறத்துப்பால் குறளும் - உரையும்
.
அறத்துப்பால்
குறளும் - உரையும்
உரையாசிரியர் : ஆர்.கனகராஜ் (எ) அரங்ககனகராசன்
--------------------------------------------------------------------------------------------------------------------
வானியல் அதிகாரம் - 1.
ஞாயிறு போற்றுதும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
-1.
இரவு
என்பதன் எதிர்ச்சொல் பகவு என்க.
இரவு X பகவு
= பகல் = பகர்வு.
பகர்தல்
= ஒளிர்தல்.
பகவன்
= பகருங்கோள், பகலவன், ஒளிக்கோளம்.
ஆதபம்
= வெயில்.
ஆதபன்
= சூரியன், ஞாயிறு.
ஆதிபகவன் = ஒளியின் பிறப்பிடமாம் ஒளிக்கோள்.
பக வன் = ஒளி, வெப்பம் பகிர்தல்
எழுத்துகளுக்கு
முன்னிலை வகிப்பது அகரமாகும்... விண்மீன்கள் முதலான எல்லாக் கோள்களுக்கும், ஆதியாய்
- ஆதாரமாய் - திகழ்வது வெப்பமுடைய ஒளிக்கோளம் ஆகும்... எனவே- பகவனே - ஒளித்தரும் கோளே
உலகிற்கெல்லாம் ஆதியானது என்க...
ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்...
-----------------------------------------------------------------------------------------------------
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
-2.
வால்
= ஒளி
அறிவன்
= கொண்டது, உடைத்து.
வாலறிவன் = ஒளியுடைத்து, தன்னகத்தே ஒளி கொண்டக் கோள்
நற்றாள்
= நன்னெறி, நற்செயல், நல்லியக்கம்.
தொழாஅர்
= உணராதார், பின்பற்றாதார், ஏற்காதவர்.
கற்ற கல்வியை ஆக்க வழியில் பயன்படுத்த வில்லையெனில், கற்றதால் பயன் உண்டோ?...
ஒளியை தன்னகத்தே கொண்டுள்ள பகலவன், அது எல்லாக் கோள்களுக்கும் - துணைக் கோள்களுக்கும் - இருள் நீங்கிட ஒளி வழங்குகிறது... ஆதவனின் இச்செயல் நற்செயலாகும்!... உலகு யாவும் உய்ய ஒளிவழங்கும் பகலவன் போல், மானுடம் தழைக்க நம்முள் இருக்கும் கல்வியை பிறருக்கும் வழங்க வேண்டும்... அல்லவெனில், கற்றதால் பயனேது?
*கல்வியை பிறருக்கு வழங்காதே என்கிறான் பார்ப்பனன்... வள்ளுவனோ பகலவனின் நற்செயலைக் காட்டி, பொதுத் தன்மை நிலைப் பெறச் செய்கிறான்
--------------------------------------------------------------------------------------------------
வானியல்
திருக்குறள் உரை
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
-3.
மலர் = புகழ்
ஏகினான் = தனித்தன்மையுடன் இயங்குதல்
மாணடி = ஈடு இணையற்ற மாபெரும் பணி
சேர்ந்தார் = பின்பற்றுவோர்
தனித்தன்மையோடு இயங்குவது சூரியன்... அண்டவெளியில் அனைத்துக் கோள்களுக்கும் ஒளித் தருவது சூரியன்... ஆதவனின் செயல்பாடு, தன்னிகரில்லா புகழுக்குரியதாகும்... சூரியனுக்கு இணை எதுவுமில்லை... ஈடு இணையற்ற சூரியனின் செயலைப் பின்பற்றி, தன்னலமின்றி பொதுத் தொண்டாற்றுவோரின் புகழ்,
இந்நிலமீதில் நீடு
நீடு நீடு
வாழும்
------------------------------------------------------------------------------------------------------
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
-4.
இலான்அடி = குறுகியக் கண்ணோட்டம்
இல்லாதவனுடைய பொதுநெறி
சேர்ந்தார்க்கு = பின்பற்றுகிறவர்க்கு
இடும்பை = இன்னல்
நெருக்கத்தில் இருந்தாலும், நெடுந்தொலைவில் இருந்தாலும் எல்லாக் கோள்களுக்கும் பகலவன் பொலிவு உண்டு... பகலவன் எல்லாக் கோள்களுக்கும் ஒளி வழங்குவது போல், மானிடர் யாவருக்காகவும் நற்செயலாற்றுக!.... இத்தைகைய நற்செயல் ஒருபோதும் எவருக்கும் இன்னல் தராது...
*சூரியனுக்கு அண்மையில்
மிகு வேகத்தில் சுழலுகிறதே புதன் கோள்... சூரியனிடமிருந்து மிகு தொலைவில் ஆமை வேகத்தில் - சுழலுகிறதே சனிக் கோள்... அருகில் இருக்கும் கோள் என்பதால் ஒளி வழங்குவதோ, தொலைவில் இருப்பதால் தனக்கு ஆகாதக் கோள் என எண்ணி ஒளி வழங்காமல் இருப்பதோ இல்லை சூரியன்... அதுபோல், வேண்டியர், வேண்டாதவர் என மானிடரை இனம்
காணாது வாழ ஆதவனின் செயல்பாடு அறிக... மதக் கோட்பாடுகள் மானிடரிடையே பிளவு
உண்டாக்கி பாகுப் படுத்தும்...
வேண்டுதல், வேண்டாமை என்பதற்கு, விருப்பு வெறுப்பு அற்ற கடவுள் என பொருள் உரைக்கின்றனர்... அப்பழுக்கில்லாத கடவுள் எதுவும் உண்டோ?.... அடுத்தவன் மனைவியை நுகர்வதும், அடுத்தவள் கணவனை வன்புணர்வு செய்வதுமானக் கடவுள்களை விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளர் என்பது பிழையன்றோ...)
-----------------------------------------------------------------------------------------------
வானியல் அரங்க கனகராசன் உரை
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
-5.
இருவினை
= இருவித எண்ணங்கள்
இறைவன்
= ஒளியை வழங்கும் கோள்,
கோள்களுக்குத் தலைமை!
பொருள்சேர்
= குறிப்பறிந்து, பொருள் பொதிந்த
புகழ்புரிந்தார் = (புகழும் படியான) நற்செயல் செய்கிறவர்க்கு
மானிடர் வாழ்வில் இழிவை ஏற்படுத்துவது எது?... அறியாமை மற்றும் அகந்தை எனும் இருவித எண்ணங்களே!... இருவினையும் மானிடரிடம் தோன்றாமலிருக்க வழி?... எல்லாக் கோள்களுக்கும் ஆதியானதும் - ஒளி வழங்குவதுமான பகலவன் பணியை நோக்குக!... உச்சத்தில் சுழன்றாலும், மையத்தில் இருந்தாலும் எங்கும் எவருக்கும் ஒளி வழங்குவதில் தொய்வில்லை... ஆதவனின் உன்னதப் பணியை அறிவோமாக!... அறிந்தால், ஆணவம் ஒழியும்... அறியாமை விலகும்...
----------------------------------------------------------------------------------
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
-6.
அவித்தான்
= கட்டுக்குள் வைத்துள்ள கதிரோன்
பொய்தீர்
= (உண்மையிலும்) உண்மையான
பிரபஞ்சத்தின் அய்ம்பெருங் கூறுகளான நிலம், நீர், காற்று, வெப்பம், வெளி ஆகிய இவற்றின் செயல் - அளவீடு - ஆதவனின் சீரான விசைக்குக் கட்டுப்பட்டுள்ளன... சீரான செயல்பாட்டைக் கொண்டுள்ள பகலவனைப் போல், உண்மையான ஒழுக்கம் கொண்டு, அதாவது; கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என அய்ம்புலன்களையும் கட்டுக்குள் வைத்து, சீராக வாழ்வோமெனில், நலமோடு வாழ்வோம்...
*அய்ம்பெருங் கூறுகளின் செயல்பாடு கூடினும், குறையினும் பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்படும்...
---------------------------------------------------------------------
வானியல் அரங்க கனகராசன் உரை.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
-7.
தாள்சேர்ந்தார் = வழியை - கொள்கையை- பின்பற்றுவோர்.
பகலவனுக்கு இணையுண்டோ?... இணையில்லா ஆதவனின் செயல்பாடறிந்து, அதனைப் பின்பற்றி நன்மையாற்றுக!... பேதம் காணாமல் செயல்படுக... மாறாக, பகலவனின் கோட்பாட்டை மனதில் கொள்ளாமல், மானிடர் சிலர் காட்டும் வேறு மார்க்கங்களைப் பின்பற்றினால் வீண் குழப்பங்களே சூழும்!... வேறு பாதைகள் தீமைக்கு இட்டுச் செல்லும்...
*மதங்கள் மானிட இனத்தை கூறு போடக் கூடியது... வன்மத்தைத் தூண்டுவன... கவலைத்தருவன...
------------------------------------------------------------------------
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
-8.
அற =
மிக, முற்றிலும்
வாழி =
வாழ்த்துதலுக்கு உரிய
(அந்தரம் - வானம் )
அந்தணன்
{ண}
அணவு =
மையம், நடுவில்.
அந்தணன் =
அண்டவெளியில் மையத்தில் இருக்கும் ஆதவன்
மிகவும் வாழ்த்துதலுக்குரியது எதுவெனில்? அந்தரத்தில் உள்ள பகலவனின் சீரான செயல்பாடே... பகலவனின் செயல்பாட்டைப் பின்பற்றி, கடமை ஆற்றுவோர் தம் வாழ்வில் மேன்மை பெறுவர்... மாறாக ; குறுகியக் கண்ணோட்டம் கொண்ட இயக்கத்தையோ - கோட்பாட்டையோ - மார்க்கத்தையோ பின்பற்றினால், தூயவாழ்வை எதிர்க்கொள்ளல் இயலாது...
*பகலவன் மையத்தில் - அதன் புள்ளியில் - சீராக சுழலுவதால், சுற்றிலும் உள்ள கோள்களின் இயக்கம் சீராக உள்ளது... இக்கோட்பாடு மாறுபட்டால்- கோள்கள் ஒன்றோடொன்று மோதி சிதறுண்டு அழியும்... இப்பேரழிவு நிகழ்ந்து விடாமல் இருக்க ஏதுவெனில், பகலவனின் சீரான செயல்பாடே...
அந்தணன் என்போன் பார்ப்பானன் என்றும், ஒழுக்கத்தை பேணுபவன் பார்ப்பனன் என்றும், அவனைத் தொழுதல் சிறந்தது என்றும் கருத்துரு இடையில் திணிக்கப்பட்டது... மனித இனத்தை வருணம் எனும் பேதத்தால் கூறுப் போடும் பார்ப்பனன் மானிட இனத்தில் எப்படி மேம்பட்டவனாவான்?...
வானியல்
அரங்க கனகராசன் உரை.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
-9.
கோள்கள் யாவும் அழியும்... சிறுவிண்மீன்களும், சிறுத்துணுக்குகளும் இல்லாமல் போகும்... திசை எட்டிலும், தூய கதிரொளியால் ஆட்சி நடத்துவது சூரியனே... சூரியனின் ஆளுமையை ஏற்காதபட்சத்தில் - பகலவனின் சுற்றுப்பாதையை ஏற்க மறுத்தால்- கோள்,பொறி, திசை யாவும் இல்லாமல் போகும்...
*பால்வெளியில் ஆதவனின் இயக்கக் கோட்பாட்டை அறிதல் வேண்டும்... இப்புரிதல், வாழ்வியலுக்கு உகந்ததாகும்... பகலவனின் கோட்பாட்டைப் புரிதல் செய்யாது இருப்போமேயானால் மாந்தர் வாழ்வு சீர்கெட்டுப் போகும்.
---------------------------------------------------------------------------------
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
-10.
இறைவன் = [ஒளி] வழங்குவோன்
வாழ்க்கை என்பது, பெருங்கடலுக்கு ஒப்பானது... சோதனைகள் நிறைந்தது... ஆயினும், வாழக்கூடியதே!... சிலர், வாழ்க்கைப் பற்றியத் தவறான வழிகாட்டுதலுக்கு உட்படுவர்... அவர்களால் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியாது... வீண் குழப்பங்களால் சூழப்பட்டு, கடலில் தவித்தல் போல் தவிப்பர்...
அண்டவெளியில் சுழன்று அனைத்துக் கோள்களுக்கும், ஒளியை வழங்கி, அனைத்துக் கோள்களும் அதனதன் பாதையில் பயணிக்க ஏதுவாய்த் திகழ்கிறது ஒளிக் கோளமான ஞாயிறு!... பிறருக்கு இடையூறுத் தராமல் - மக்களை வஞ்சிக்காமல் - மக்களை ஏற்றத் தாழ்வுப் படுத்தாமல், ஆதவனைப் போல் நன்னெறியோடு வாழ்வோர் வாழ்வில் செம்மையான வாழ்வு பெறுவர்... அல்லாமல்; மதம், கடவுள் என பேதம் படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவோரின் சொல் பணிவோர் இன்னல் உறுவர்...
*பொதுவாக, கடவுள் பெயராலும் - மதத்தின் பெயராலும் - மக்கள் நெஞ்சில் நஞ்சுக் கலக்கப் படுகிறது... அந்நஞ்சு மானிடரை மூட எண்ணத்தில் ஆழ்த்துகிறது... மேலும்; சோம்பேறியாக்குகிறது... அதனால் மானிடர் வாழ்வு ஊனமாகிறது...
*முதல் அதிகாரம்தனில் பத்துக் குறட்பாக்களில் இறைவன் எனும் அடியை இரு
குறட்களில் மட்டுமே வள்ளுவன் பயன்படுத்தியுள்ளான்...
இருளை அகற்றுவது பகலவன் என்றும், இடரை நீக்குவது நன்னெறியென்றும் வள்ளுவன் வகைப் படுத்தியுள்ளான்*
--------------------------------------------------------------------------
வானியல்
திருக்குறள் உரை.
மாமழைபோற்றுதும்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. -11.
மழை, வானிலிருந்து பொழிகிறது... அதனால் உலகம் உய்வடைகிறது... எனவே; அமிழ்தம் என்பது மழையாகும்... உலகு நன்மைப் பெறுவதால், மழைதனை அமிழ்தம் என்று உணர முடிகிறது...
*மழை தேவன் என ஒருவன் இருக்கிறான்... அவனே; மழைப் பொழிகிறான் என்று அறிவுக்கொவ்வா கருத்துகளைத் திரிக்கவில்லை திருக்குறள்... ஏழுகடல்தனைக் கடைந்தால்தான் அமிழ்தம் கிட்டும் என்றும் கூறவில்லை... அமிழ்தம் என்பது இதுதான் என்று மாறுபட்டக் கருத்திற்கு இடமின்றி, அழகாய்க் கூறுவது திருக்குறள் மட்டுமே...
மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்...
---------------------------------------------------------------------------------
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
-12.
துய்ப்பவர்களுக்கு உணவாகி, உணவுப்பொருளையும் விளைவித்து, உண்டப் பொருளையும் செரிமம் செய்தும் உதவிப் பல புரிவது வான் மழையாகும்... மானிடருக்கு துணை புரிவது மழையன்றி கடவுளோ, மதமோ அல்ல!
--------------------------------=-----------------------------------------------------
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
-13.
மழை இல்லையென்றால்,பூமியின் நிலை என்னவாகும்?... உலகின் பெரும்பகுதியைக் கடல் நீர் வியாபித்துள்ளது... எஞ்சிய சிறு பகுதியில் நாம் வசிக்கிறோம்... பெரும் பகுதி நீரால் சூழப் பட்டிருப்பினும்- வியப்பும், விந்தையுமான நிகழ்வுகள் கொண்ட இந்த பூமிக்கு மழையில்லையென்றால் , பசிக் கொடுமை மிகுந்து உயிர்கள் துடித்துடித்து மடியும்...
*பரந்து விரிந்த அண்டவெளியிலும் , பகலவனை சுற்றும் கோள்களிலும் நிகழும் நிகழ்வுகள் மிக மிக வியப்புகளாய் உள்ளன... ஆழ்ந்து சிந்திக்கும் போது பிறப்பது விஞ்ஞானம்... வேதங்கள் முழங்குவதால் பசி நீங்காது... யாகத்தீ வளர்ப்பதாலும் கடும்பசி களையாது...
வானியல்
திருக்குறள் உரை.
ஏரின் உழாஅர் உழவர்
புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
-14.
உழவுத் தொழிலைக் கைவிடும் நிலை உழவர் பெருமக்களுக்கு ஏற்படலாம்... எவ்வாறெனில்? மழைப் பொழிவு இல்லாது போனால் , மண்ணில் நீர் வளம் குன்றிவிடும்... நீர் இல்லாத நிலையில் உழவர் பெருமக்கள் உழவுத் தொழிலைக் கைவிடக் கூடும்...
*கடவுளோ, மதமோ சோறு போடாது... உழவன் உழவுத் தொழிலைச் செய்தால் மட்டுமே நமக்கு உணவு!.... அதற்கும் மழைப் பொழிவு இருத்தல் வேண்டும்... மழைப் பொழிவு நின்றுவிட்டால், உழவனும் உழவுத் தொழிலை நிறுத்தி விடுவான்...
---------------------------------------------------------------------------------
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
-15.
அதிக மழைப் பொழிவும் கேட்டினைத் தரும்... அதிக மழைப் பொழிவால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வு மீண்டும் வளம் பெற்றிடவும் மழையே துணையாவதும் உண்டு!... ஆக; அழிவையும், ஆக்கத்தையும் நிகழ்த்தவல்லது மழை!...
--------------------------------------------------------------------
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
-16.
வானிலிருந்து மழைத்துளி வீழாது எனில், இந்நிலப்பரப்பில் சிறுபுல்லின் நுனியும் முளைப்பது அரிது...
*வான்மழை இல்லையேல் புல்லும் முளைக்காது என்று உரக்க அறிவியலைக் காட்டுகிறான் வள்ளுவன்]
--------------------------------------------------------------------------------------
வானியல்
அரங்க
கனகராசன் உரை.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
-17.
நீர்மை
= நீர்வளம்
எழிலி = மேகம்
தடிந்தெழிலி = மின்மேகம், கார்மேகம்.
நீள் நெடுவெல்லை நீர் நிரம்பியுள்ள ஆழ்கடலும் தனது நீர் வளத்தை இழந்து வற்றிவிடும்... ஏனெனில்? மின்னல் செய்யும் கார்மேகம் மழைப் பொழிவை நிறுத்திவிட்டால், கடலும் வற்றிவிடும்...
*மழைக்கும் மேகத்திற்கும் தொடர்புண்டு என அறிவியலாளனாய் அன்றே கூறினான் வள்ளுவன்... மேகத்தைத் திரளச் செய்து,மழை பெறுகிற வல்லமை - ஆற்றல்
- இன்றைய அறிவியல் உலகில் காண்கிறோம்... அதாவது; மழைப் பொழிய மேகம் தேவை
எனும் உண்மையை, இன்றைய விஞ்ஞானம் நமக்குப் புலப்படுத்துகிறது... ஒவ்வொரு செயலுக்கும், வியப்பெய்திக் கொண்டிருந்த அக்காலத்தில் - ஒவ்வொரு செயலுமே, கடவுளின் செயல் என்று மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்திக் கொண்டிருந்த காலத்தில்- மழைக்கான கடவுளே மழைப் பொழிவை நிகழ்த்துகிறான் எனும் தவறானக் கருத்தை விதைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்- தெள்ளத் தெளிவாய் - தெளிந்த விஞ்ஞான உண்மையை வள்ளுவன் பகன்றிருக்கிறான்...
--------------------------------------------------------------------------------------
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. -18.
ஆண்டவனுக்கு விழா எடுக்காதுவிட்டால் குற்றம் ஆகி விடும் எனும் கட்டாயத்தால் திருவிழாவும், அதன் பொருட்டு - விழா நடத்தப்படும் வரைக்கும் - நாள்தோறும் வழிபாடும் நடக்குமா?... நடக்கவே நடக்காது... ஏனெனில்? வானம் வறண்டுவிட்டால் மழைப் பொழிவு இருக்காது... மழைப் பொழிவு இல்லையாயின் நாட்டில் பஞ்சம் வரும்... பஞ்சத்தால், மானிடன் மானிடனையே கொன்று தின்ன நேரிடலாம்... பருக நீரும் இருக்காது... இந்நிலையில் -
வானுலகில் கடவுள் இருக்கிறான்
என்றுக் கூறி மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மதவாதிகளே, புரோகிதர்களே கூறுங்கள்... நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால் உங்கள் கடவுளுக்கு பூசை செய்வீர்களா... அல்லது உணவுக்காக உங்களைக் கொல்ல வருவோனுக்கு இரையாவீர்களா?... புல்லும் முளைக்காத பஞ்சப் பூமியில் உயிர் வாழவே இயலாத நிலையில் என்ன செய்வீர்கள்?...
வானியல்
அரங்க கனகராசன் உரை.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
-19.
தானம் கொடுக்கவும் ஆளிருக்காது... தவமும் செய்ய முடியாது... எப்போதுவெனில்?... பால்வெளியின் செயல்பாடு மிகவும் ஆழமானது.... வியப்பு மிகுந்தது... அங்கிருந்தே ஒளியும், வெப்பமும் பெறுகிறோம்... விந்தைமிகு வான்வெளி, மழைப் பொழிவை நிறுத்தி விட்டால், நாட்டில் பஞ்சமும், வறுமையும் தாண்டவமாடும்... வறுமைக்கும் -வாட்டத்திற்கும் - பஞ்சத்திற்கும் ஆட்பட்டவனிடம் பொருள் இருக்குமா தானம் வழங்க? உழைத்து வாழத் தெரியாதவன் பார்ப்பனன் - பிறர் உழைப்பில் தானம் வாங்கி வயிறு வளர்ப்பவன் பார்ப்பனன் - பசிக்கொடுமை வாட்டுகையில் தவம் இருப்பானா பார்ப்பனன்?...
ஆதலால், மழைப் பொழிவின்றி வறுமைக் கோலோச்சினால் தானமும் நடைப்பெறாது ... மக்களை ஏய்க்கும் தவமும் நடக்காது...
*
குறிப்பிட்ட இனத்தவருக்கு தானம் வழங்க வேண்டுமாம்... குறிப்பிட்ட இனத்தவரே தவமும் இருப்பாராம்... தானம் பெரும் தகுதியும், தவம் செய்யும் உரிமையும் பார்ப்பனனுக்கே என்பது எத்தகைய மோசடித்தனம் - ஏமாற்றுத்தனம் - மக்களைப் பிளவுபடுத்தும் கயமைத் தனமல்லவா...
------------------------------------------------------------------------------------
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
-20.
ஒழுக்கு =
மழை.
நீர் இல்லையேல் உலகில்லை... அதுபோல்; நெற்றியில் பிறந்ததாகக் கூறிக் கொள்ளும்
பார்ப்பனன், பெருமை பிதற்றிக் கொள்ளும் செல்வந்தர், அதிகாரம் செலுத்தும் ஆணவக்காரர் என எவராக இருந்தாலும் உயிர் வாழ மழைவேண்டும்... வானம் வறண்டுவிட்டால் மழையில்லை... மலையில்லையேல் நீர் இல்லை... நீர் இல்லையேல் உயிர்வாழ்தல் இல்லை...
*எனவே, மழையே அமிழ்தம் என்றுணர முடிகிறது...
----------------------------------------------------------------------------
வாழ்ந்தாரியல்
அதிகாரம் : 3.
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. -21.
விழுப்பம் = மேன்மை
பனுவல் = நூல்
துணிவு = கடமை
இழுக்கானவற்றைத் துறந்து, ஒழுக்க நெறி நின்று - மானுடம் உய்வுக்காக பெரியோர் ஆற்றிய அரும்பணியை - வருங்கால மாந்தரும் அறிந்து மேன்மையுறுதல் வேண்டும்...
அதன் பொருட்டு உண்மையை எழுதிட வேண்டும்... நூலோர் துணிவுடன் இருந்தால் இது சாத்தியமாகும்... இது நூலோரின் கடமையாகும்...
*கடவுள், மதம் பேரில் உண்மையைத் திரித்து எழுதுதல் கூடாது... அது வருங்கால மக்களின் வாழ்வியலை கெடுத்தல் போலாகும்...
------------------------------------------------------------------------------
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
-22.
தீமையை வென்று, நன்மை நெறி நின்று, பெரியோர் ஆற்றிய அரும்பணியை அளவிட்டுக் கூற வேண்டுமானால், இவ்வுலகில் இதுவரைக்கும் மாண்டோரின் எண்ணிக்கையை எவரால் கூற முடியும்...
மாண்டோரின் எண்ணிக்கையை எவ்வாறு கூறவியலாதோ , அதுபோல்; பெரியோர் ஆற்றிய பெருஞ்சாதனைகளும் ஒப்பீட்டிற்கு அப்பாற் பட்டதாகும்...
---------------------------------------------------------------------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
-23.
இருமை = நன்மை, தீமை.
அறம்
= நல்வழி.
நன்மை எது? தீமை எது? என்றறிந்து, நல்வழியை மக்களுக்குக் காட்டி, நற்செயல் செய்தப் பெரியோர்களால், இவ்வுலகு சிறப்புற்றுத் திகழ்கிறது... நல்லோர் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் எனும் பெருமையே பெருஞ்சிறப்புத் தரத் தக்கது...
*இருமை என்பதனை இம்மை மறுமை எனப் பொருள் கூறுவாருண்டு... மறுமை வாழ்வு நலமாக அமைய, இம்மையில் குறிப்பிட்ட இனத்தவருக்கு தானம் செய்தல் வேண்டுமென்றும், அத்தகையோரால் இவ்வுலகு பெருமையடைகிறது என்றும் உரைப் பிழை இழைத்துள்ளனர் உரையாசிரியர் சிலர்...
வாழ்ந்தாரியல்
திருக்குறள் உரை.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
-24.
தோட்டி = கதவு.
ஓரைந்தும் = ஐ வகையுணர்வுகளையும்
ஒருங்கு சேர்த்து
மனவுறுதியெனும் கதவுக் கொண்டு, நல் பார்வை, நல்லதுக் கேட்டல், நல்லது நுகர்தல், நல்லதுத் தீண்டல், நல்லது சிந்தித்தல் ஆகிய ஐம் புலன்களையும் காப்பவன் விளைநிலத்தில் விதைக்கப்படும் நல் விதைக்கு ஒப்பாவான்...
*நல்ல விதை நல்லப் பயிரை விளைவிக்கிறது... நல் மானிடன் நல் மக்களை உருவாக்குகிறான்... பிறப்பால் வேற்றுமையைச் சொல்லும் பார்ப்பனன், நச்சு விதைக்கு ஒப்பாவான்... அவனால் தீமையே விளையும்...
-------------------------------------------------------------------------------
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
-25.
ஐந்தவித்தான் = தீமைத்தரும் ஐம்புலன்களையும் அடக்குதல்.
கோமான் =
கோள்களின் தலைமை
இந்திரன்
= தலைவன்.
தீயப்பார்வை, தீய கேட்டல், தீய நுகர்தல், தீயத் தீண்டல், தீய சிந்தனை ஆகிய தீமைத் தரும் ஐம்புலன்களையும் ஒழித்து ஆளும் ஆற்றல் எதற்கு ஒப்பானதெனில்? அகன்ற - பரந்த - பால்வெளியில் இருக்கிற கோள்களின் ஆதியானதும், எல்லாக் கோள்களையும் இயக்குவதுமான சூரியனே - சூரியனின் மாபெரும் பணியே ஒப்பாகும்.
ஆதவனின் செயல்பாடு, திட்டமிட்ட செயல்பாடு போல் கட்டுப்பாடுடன் இருப்பதால் அண்டவெளியில் நன்மை விளைகிறது... அதுபோல்; தீமைத் தரும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதால் நன்மை விளையும்... புலன்களை அடக்கி ஆளும் ஆற்றல் சூரியனின் பணிக்கு ஒப்பாகிறது...
*சில உரையாசிரியர் இந்திரன் என்பதனை கடவுள் எனக் குறிப்பிடுகின்றனர்... கடவுளெனக் குறிப்பிடப் படும் இந்திரன் என்போன் முனிவன் மனைவி அகலிகையை திருட்டுப் புணர்ச்சியில் ஈடுபட்டவன் என மதப் புரட்டர்களே எழுதியுள்ளனர்... இச்சையை கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்ற இந்திரனை வள்ளுவன் ஒப்புவமைக் காட்டியிருப்பான் என்பதும் புரட்டே!... புலன்களை அடக்கியாளும் ஆற்றல் சூரியனின் பணிக்கு ஒப்பாகிறது என்பதுவே மெய்யுரை...
வாழ்ந்தாரியல்
அரங்க கனகராசன் உரை.
செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
-26.
பிறர் தம்மால் இயலாது என்று கைவிட்டதை, நன்னெறி - நல் ஆற்றல் - கொண்டு சாதனை நிகழ்த்துவோர் பெரியர் ஆவர்....
சிறியர் யாரெனில்?.... ஒருவனது முயற்சிக்கு ஊக்கம் கொடுக்காமல், 'உன்னால் முடியாது' என்றும் 'நீ இதனை ஆற்ற உனக்குத் தகுதியில்லை' என்றும் 'உனக்கு விதிக்கப்பட்ட விதியை மீறாதே' என்றும் அவனை சிறுமைப் படுத்தும் விதமாக, கூடாத நியதியைத் திணிப்பவன் - செயலாற்றுவதில் சோம்பேறித்தனம் காட்டுபவன் - நற்செயலை தீய எண்ணம் கொண்டு தடுப்பவன் - சிறியர் ஆவர்...
--------------------------------------------------------------------------
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
-27.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
என ஐவகை உணர்வுகளின் நன்மை, தீமைகளை நன்கறிந்து வழி நடத்துபவன் எவனோ, அவனை மாந்தர் ஏற்பர்...
*எவரின் வாழ்வுக்கும் பாதிப்பு உண்டாக்காத நன்னெறியை மொழிபவனை உலகம் ஏற்கும்...
-------------------------------------------------------------------------------
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
-28.
அறிவார்ந்த பேச்சாற்றலால் - செயலால் - மக்களுக்கு வழிகாட்டி, மக்கள் வாழ்வு மேம்பாடுற, தம் சிந்தையைச் செலவிட்டோர் அறிஞர் பெருமக்கள் ஆவர்... அத்தகையோர் இம்மண்ணில் வாழ்ந்தனர்... இன்னின்ன நன்மைகள் மக்கள் அடைந்தனர் என வரலாறு கூறும்... அழிக்கவியலா அவ்வரலாற்றுச் செய்திகள், முன்னர் வாழ்ந்த அறிஞர்களைக் கோடிட்டுக் காட்டிவிடும்...
--------------------------------------------------------------------------------
வாழ்ந்தாரியல்
திருக்குறள் உரை.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
-29.
கணப்பு =
நெருப்பு
மேயும் =
படரும்
கணமேயும் = நெருப்புப் பரவும்.
குணத்தில், ஒருவன் சிகரம் போல் விளங்கினாலும், அவனிடத்தில் தோன்றும் கோபமானது, நெருப்பெனப் படர்ந்துத் தீமையையும் விளைவிக்கும்... கோபம்தனைத் தோன்ற விட்டால் மீண்டும் அதனை அடக்குதல் என்பது எளிதல்ல!... அரிதாகும்... அதனால் நல் குணமும் வேண்டும்... கோபத்தைக் காக்கும் தன்மையும் வேண்டும்...
*குடிசையாய் இருந்தாலென்ன... கோபுரமாயிருந்தால்தான் என்ன?... நெருப்பு குடிசையையும் சாம்பலாக்கும்... கோபுரத்தின் உச்சியையும் சாம்பலாக்கும்... குணத்தில் குன்றாயிருந்தாலும், ஒருவனிடம் பிறக்கும் கோபம் எனும் தீயானது, எதனையும் பொசுக்கத் தயங்காது...
------------------------------------------------------------------------------
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
-30.
அந்தரம்
=உயர்ந்த
அந்தணர்
=உயர்ந்தோர்
செந்தண்மை =பேரன்பு.
அந்தணர் என்போர் யார்? பார்ப்பனரை அந்தணர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்... பார்ப்பனரை ஒருபோதும் அந்தணர் எனக் கூறவியலாது... ஏனெனில், அவர்களிடத்தில் மானிடரை மதிக்கும் பண்புக் கிடையாது... அதனால்; அந்தணர் என்போர் எவரெனில்; பண்பில் உயர்ந்தோர் அந்தணர் எனப்படுவர்...
மாந்தர் யாவரிடமும் - எல்லா உயிர்களிடத்தும் - பேதம் பார்க்காமல் - பாகுபடுத்தாமல் - பேரன்புக் காட்டி - மானிடநேயம் பிறழாமல் உயரியப் பண்புடன் விளங்கு வோர் அந்தணர் எனப்படுவர்...
---------------------------------------------------------------------------
நேரியல்
அதிகாரம் : 4.
அறன் வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
.
-31.
சிறப்பும் கிட்டும்; நல்வழியில் செல்வமும் கிட்டும்; நேரிய வழியில் செயல்படுவோர்க்கு!...
இதுவன்றி, மானிடருக்கு வேறு வழியில் உய்வுக் கிடைக்குமோ?...
*கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் குறிப்பிட்ட இனத்தவருக்கு தானம் செய்திடு... யாகம் நடத்திட உதவிடு... புதையல் கிடைக்க நரபலியிடு என மூடநம்பிக்கையை விதைப்போரால் ஆக்கம் ஏதும் இல்லை...
------------------------------------------------------------------------------
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
-32.
நேர்மையான கோட்பாடுபோல் மானிடருக்கு நன்மை பயப்பது வேறில்லை... பொதுக் கோட்பாட்டை மறுத்து, குறுகிய எண்ணம் ஊட்டும் மூடர் வழியைக் கொண்டால்; வாழ்வில் கேடு சூழும்... மூட எண்ணம் போல் கேடு தரத்தக்கது வேறில்லை... * எண்ணமே வாழ்வு!
------------------------------------------------------------------------------------
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.
-33.
எத்தகைய சூழலிலும் நேர்மையிலிருந்து வழுவக்கூடாது... மனம் தளர்தலோ - மனம் சஞ்சலம் கொள்ளுதலோ-
கூடாது... நன்மையென மனம் உறுதி கொள்ளுமேயாயின், தடம் புரளாமல், இறுதிவரை நேர்மையுடன் செயலாற்றல் வேண்டும்...
*மதம் தடைச் செய்கிறது; கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானது எனும் மூட எண்ணத்திற்கு ஆற்படாமல் நேர்மையிலிருந்து ஒருபோதும் வழுவாதிருக்க வேண்டும்...
------------------------------------------------------------------------------------
நேரியல்
திருக்குறள் உரை.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
-34.
மனதில் குற்ற உணர்வின்றி இருப்பதே நேர்மை எனப்படுவதாகும்... குற்ற உணர்வுள்ளப் பிற செயல்கள் யாவும் நேர்மை எனப்படுவதாகாது...
*மனதாலும் தீங்கு நினைக்காமல்,
தூய்மையான எண்ணம் கொண்டிருப்பதே அறம் ஆகும்... அல்லாமல், கடவுளை வழிப்படுகிறோம்; மதத்தை நேசிக்கிறோம் என்பதன் பேரில் மானிடர் வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும் செயலும், மானிடரைத் தாழ்வுப் படுத்தும் செயலும் அறம் என்பதாகாது...
------------------------------------------------------------------------------------
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
-35.
பொறாமை, பேராசை, கோபம், அவசியமற்ற - தீமையான - சொற்கள் ஆகிய இந்நான்கும் இழிவுத் தருவனவாகும்... இத்தைகைய இழுக்குகளின்றி இயங்குவதே அறமாகும்...
*கடவுள், விதி,மற்றும் மதத்தின் பெயரில் பார்ப்பனர், தம்மைத் தவிர பிறமக்கள் கல்விகற்கக் கூடாது என்ற பொறாமையும், பிறரின் உடைமைகளை உழைக்காமல் அபகரிக்க முற்படுவதும், தமக்கு இணையாய் நடந்து வந்தாலே அம்மக்கள் மீது கோபம் கொள்வதும், இழிப்பிறவி என மக்களை சாடுவதும் அறமாகாது...
------------------------------------------------------------------------------------
அன்றறிவோம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றா துணை
. -36.
பொன்றுங்கால் = முற்றுங்காலத்தில்
பொன்றா = எல்லையிலா
துணை = சான்று.
கண்னெதிரில் நிகழும் கொடுமையைக் கண்டுக் கொள்ளாமல், இன்னொரு முறை இதுபோல் கொடூரம் நிகழும் போது, இதற்கான தீர்வுக்கு முற்படுவோம்
என்று காலந்தாழ்த்தாமல், சகமானிடனுக்கான நீதியை நிலை நாட்ட வேண்டும்... சகமானிடனுக்கு நேரும் அநீதியைத் தடுக்காமல் காலந்தாழ்த்துவது என்பது, அநீதிக்கு-அதாவது- கொடூரத்துக்கு துணை நிற்பது போல் ஆகும்...
நேரியல்
அரங்க கனகராசன் உரை.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. -37.
அறநெறி எனில் யாது எனக் கூற விளக்கம் தேட வேண்டாம்... தன்னை வருத்தி, அடுத்தவனைப் பல்லக்கில் சுமந்து செல்கிறானே; அந்தச் சுமையில் பொதிந்துள்ள வாழ்க்கை நிலையே
விளக்கமாகும்... அடுத்தவனுக்கு ஏற்பட்டுள்ள சுமைக் குறித்துத் துளியும் கவலைக் கொள்ளாமல்; பல்லக்கில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறானே அவனுக்கும், சுமப்பவனுக்கும் இடையில் நிகழும் மன உணர்வுகளே அறத்திற்கும், அறமற்றதிற்கும் சான்றாகும்...
*சுமப்பவனின் இன்னலை உணராமல் ஒய்யாரமாய் பயணிப்பது- இன்னலை வெளிப்படுத்தும் உரிமையற்று சுமப்பது தன்விதியென மனதால் உழல்வது- இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளியே அறமற்றதுக்கும் - அறத்திற்கும் உள்ள விளக்கமாகும்...
*அக்காலத்தில் பார்ப்பனன் சுமக்கப்பட்டான்...
------------------------------------------------------------------------------------
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
-38.
எடுத்துக் கொண்டக் கொள்கைக்கு இழுக்கு ஏற்படாதவாறு நன்னெறியை மேற்கொள்ள
வேண்டும்...
அச்செயலானது நன்னெறியாளனின் வாழ்நாளை செதுக்கி எதிர்கால மக்களுக்கு பாடம் சொல்லும்
கல்வெட்டாக அமையும்...
*மக்களுக்கு நன்னெறியைக் காட்டவேண்டும்... மக்களைப் பிளவுப் படுத்தும் மத கூறுகள் மக்களால் ஒழிக்கப்படும்...
------------------------------------------------------------------------------------
நேரியல்
திருக்குறள் உரை.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
-39.
சீரிய இலக்கினை எட்ட, தூயக் கொள்கை அவசியம்... கொள்கைக்கு இழுக்கு ஏற்படாமல் செயல்பட்டால், விளைவது நன்மையாகும்!...
நன்னெறியற்றவர்களால் கூறப்படுபவை
யாவும் நேர்மைக்கு மாறுபட்டதாகும்... அவைகள் போற்றுதலுக்குரியதாகவும் இராது...
*மதம் மக்களிடையே தீமையைப் பரப்பி,
குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தி
விடும்...
------------------------------------------------------------------------------------
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
-40.
நன்மைச் செய்வதாயிருந்தால்; மானிடர் யாவருக்குமான நன்மையின்பாற்பட்ட செயலாயிருத்தல் நன்று!... அல்லாமல்; குறுகிய கண்னோட்டதுடன் கூடியதும் மானிடரிடையே பிளவுப் படுத்துவதுமான தீயநெறியை மேற்கொண்டால், மானிடரை நிழற்போல் தொடர்ந்து தீமையின் பக்கம் தள்ளி, கெடுதலையேத் தரும்...
------------------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் - 5
இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
41.
இனிய இல்வாழ்வு வாழ்வோன் யாரெனில்?... மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார், இவ்விரு வீட்டுக்கும் பொதுவானவர்
என ஆகிய மூவரும் என்ன எண்ணம் கொண்டிருப்பர்?... இவளைக் கைக் கொள்ளும் இவன், இவனை கைக் கொள்ளும் இவள் இனிய வாழ்வு வாழ வேண்டும்... ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரியக் கோட்பாட்டை நிலை நாட்ட வேண்டும் என்றல்லவா எண்ணியிருப்பர்!...அம்மூவரது எதிர்பார்ப்புகளுக்கும் தொய்வு ஏற்பட்டுவிடாதபடி வாழ்ந்து, நல்லச் சொல்லுக்கு துணையாகிறவனே இல்வாழ்வான் என்பான்...
*ஒருத்திக்கு அய்ந்து கணவர் என்பது ஆரியர் நெறி!... அது ஒழுக்க ஈனம் என்பது தமிழர் பண்பு...
--------------------------------------------------------------------------------
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
-42.
துவ்வுதல் = நுகர்தல்
துவ்வாதவர் = நுகராதவர்
ஒருவன்
வாழும் இல்வாழ்வின் மாண்பை இல்வாழ்வில் ஈடுபாடு கொள்ளாதோரும், போற்றும்
வண்ணம் வாழ வேண்டும்... இல்வாழ்வை
நுகராதோருக்கும் இல்வாழ்வின் மீது விருப்பம் மலர
வாழவேண்டும்... முன்னோரின் நற்புகழுக்கு
களங்கம் ஏற்படா வண்ணம் வாழ வேண்டும்... இம்மூன்றும்
இல்வாழ்வோனின் கடமையாகும்...
----------------------------------------------------------------------------------
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
அய்ம்புலத்தாறு ஓம்பல் தலை.
-43.
தென்புலத்தார் = கலையியலார், தொழிற்
நுட்பவியலார்.
தெய்வம் = இறைவன், மன்னன்.
தொழிற் நுட்பவியலர், ஆட்சியாளர் அதாவது அரசாங்கம், விருந்தினர் உறவினர் மற்றும் தனது குடும்பத்தார் என ஐ வகையினரோடும் ஒத்திசைவுக் கொண்டிருப்பதே வாழ்வாகும்...
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
-44.
பழிச்சொல்லுக்கு அஞ்ச வேண்டும்... நேரிய வழியில் மட்டுமே பொருள் சேர்க்கும் நல்ல குணம் வேண்டும்... அதனோடு, தான் சேர்த்த பொருளில் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் ஈகை குணமும் வேண்டும்... இருந்தால்; வாழ்க்கையில் மன உறுத்தல் எச்சூழலிலும் இருக்காது!...
*மதமோ, கடவுள் என்ற பெயரில் சுரண்டல் செய்கிறது... குறிப்பிட்ட மதத்தவரோடு மட்டுமே உதவி செய்தலையும் கற்பிக்கிறது... பொது நோக்கம் கிடையாது... ஏய்த்துப் பிழைக்க ஆரியருக்கு வழி காட்டுகிறது அவர்களின் மதநூல்...
----------------------------------------------------------------------------
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-45.
அன்பு வேண்டும்... சீரிய ஒழுக்கமும் வேண்டும்... இருப்பின்; இத்தைகைய இல்வாழ்வானது, பண்பை வெளிப்படுத்தும்... பயனுடையதாகவும் அமையும்...
*ஆனால்; மதம் இல்வாழ்வில் பெண்களின் சமநிலை வாழ்வைத் தடைச் செய்கிறது...
---------------------------------------------------------------
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்.
-46.
நேரிய நெறியுடன் இல்வாழ்வை மேற்கொள்ளும்போது, பண்பும் பயனும் மிளிர்கிறது... நேரிய நெறிக்குப் புறம்பாக, வாழ முற்படுவதால் கிட்டுவது என்ன?...
*மானிடர்க்கு இல்வாழ்வு என்பது இயல்பான பண்போடு இயைந்தது... இதில் மதம்தனை நுழையவிட்டால், ஆண், பெண் பாகுபாடு ஓங்கும்...
--------------------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. -47.
இயல்பாகவே மானிடநேயங் கொண்டு, பிறரின் பழக்க வழக்கங்களைப் புரிந்து சீரிய வண்ணம் இல்வாழ்வு வாழ்பவன் சிறந்தவனா? இயல்புக்கு முரணாக மதத்தின் பெயராலும், கடவுள் பெயராலும் ஏய்த்து, குறுக்கு வழியில் வாழ முயற்சிக்கிறானே; அவன் சிறந்தவனா எனில்?...
இயற்கைப் புரிதலோடு வாழ்வோனே சிறந்தவன் ஆவான்...
------------------------------------------------------------------------------------
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
-48.
கடமையில் கருத்தூன்றி, நேர்மைக்கு இழுக்கு ஏற்படாதவாறு வாழும் சீரிய இல்வாழ்வானது கடவுள் பெயரால் செய்யப் படும் வழிபாட்டைவிட சிறந்ததாகும்...
------------------------------------------------------------------------------------
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
-49.
நேர்மையுடன் வாழ்வதே இல்வாழ்க்கை அதுவும் பிறருடையப் பழிச் சொல்லுக்கு உள்ளாகாமல் வாழ்வதே நன்று!...
*நேர்மையை மறுதலிப்பது போல், ஓர் சார்புடைய கடவுள், மதம் கொள்கைகளைத் திணித்தால், இல்வாழ்வு, பழிச்சொல்லுக்கு உள்ளாகும்...
-----------------------------------------------------------
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
-50.
தெய்வம் =
இறைவன் = கொடையாளன் =
ஒளியைப் பொழிபவன்.
இப்பூமித்தானில் வாழவேண்டிய நியதிகளுடன் வாழ்பவன் வானில் இருக்கும் சூரியனைப் போல போற்றப் படுவான்...
*ஒளிவழங்கி உலகை உய்விக்கும் கொடையாளன் சூரியனைப் போல, கடமைத் தவறாது இப்பூமித்தானில் இல்வாழ்க்கை வாழ்பவன் போற்றப் படுவான்...
-----------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் - 6
வாழ்க்கைத் துணைநலம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை..
-51.
பிறந்த வீட்டில் வளர்ந்த விதம் வேறாயினும், புகுந்த வீட்டாரின் பழக்க வழக்கத்திற்கும் இடையூறு விளைவிக்காதவளாகி, தன்னைக் கொண்டவனுடைய வருவாய்க்கு ஏற்ப ஒத்திசைவு நல்குபவள் வாழ்க்கைத் துணையாவாள்...
-----------------------------------------------------------
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
-52.
குடும்பப் பொறுப்பு உணராதவளாக - குடும்ப மானமும் காப்பாற்றத் தெரியாதவளாக - வாழ்க்கைத் துணை அமைந்தால்?... நடக்க- இரத்தின விரிப்பு! அணிய- அழகிய அணிகலன்! உடுத்த - பெருமதிப்புள்ள ஆடைகள்! உண்ண- பேரமுது! உறங்க- உல்லாச மெத்தை! வசிக்க- பெருமாடம்! களிக்க- வீட்டினுள்ளேயே கலையரங்கம் என எண்ணற்ற வசதிகள் இருந்தாலும், ஆறுதல் இருக்காது... பெருமை இருக்காது...
*பெண் என்பவள் அழகு பதுமையன்று!... குடும்பத்தின் மேலாண்மை உரிமையும் பெண்ணுக்கு உண்டு... இதனை உணராதவள் வசிக்கும் குடும்பம் சீர்பெறாது...
-----------------------------------------------------------
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மானாக கடை.
-53.
பணமில்லை; பகட்டான வசதியில்லை... உண்ணும் உணவுக்கும் பற்றாக்குறை... உடுத்தவும் சிறந்த ஆடையில்லை... வசிக்கவோ மாடமில்லை!... ஆனால்; குடும்ப மேலாண்மை இல்லத்தரசியிடம் இருக்குமேயானால், குடும்பதை
மாண்புறச் செய்வாள்... ஆனால்; தேவையான வசதிகள் இருந்தும், இல்லத்தரசி மேலாண்மை உரிமையை இழந்து நின்றால், குடும்பம் சீரழியும்...
*மனைவி என்பவள் அடிமையன்று!... உரிமை என்பது கணவன் மனைவி இரு சாராரருக்கும் உரித்தானது... பெண்ணின் உரிமை மறுக்கப்படும்
போது குடுபத்தின் நலன் பாதிக்கப்படும்...
-----------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
-54.
கற்பு = மனவுறுதி
திண்மை = மேலாண்மை
பெண்ணின் பெருமையைப் போல் போற்றத் தகுந்தது எதுவும் உண்டோ?... மனவுறுதியுடன், குடும்பத்தின் மேலாண்மையை கோலோச்சும் திறன் கொண்டிருப்பாள் எனில், பெண்ணின் பெருமையைப் போல் போற்றத் தகுந்தது எதுவுமில்லை...
*மதமானது கற்பு எனுஞ் சொல்லை பாலியல் உணர்வோடுப் பொருத்தி, பெண்களுக்கு மட்டுமே உரித்தது என்பது போல கோடு வரைந்து, அக்கோட்டின் எல்லைத் தாண்டல் கூடாது என்கிறது... உண்மையில் கற்பு என்பது, இல்லறவியலில் பெண்ணின் உறுதியையும், சிறப்பையும் காட்டுகிறது... கற்பு எனுஞ்சொல் இல்லறவியலில் பெண்ணின் மேலாண்மையை சுட்டிக் காட்டுகிறது... ***பெண் தனது மேலாண்மையை இழந்துவிட, மதம் என்ற பெயரில் புனையப்பட்ட பொய்மைகள்தான் காரணம்!.... எப்போது தனது நிலைப்பாட்டை
பெண் உறுதிப் படுத்துகிறாளோ அப்போது அவள் சமூக அவலத்திலிருந்து விடுபட்டு, மேம்பாடு உய்வாள்... ஆதலால் பெண்ணானவள் , கடவுள், மதம் எனும் பொய்மையிலிருந்து மீளவேண்டும் முதலில்!***
-----------------------------------------------------------
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
-55.
கடவுள் என ஒன்று இருப்பதாக அநேகர் கூறினாலும், கடவுள் என ஒன்று இருப்பதாக மனதளவிலும் துளியும் நம்பாதவள்...
மேலும், கடவுள் என எவர் எதனைக் கூறிடினும் அத்தகைய எதனையும் வணங்கவும் மாட்டாள்... ஆனாலும்; இல்லறவாழ்வில்- கணவனின் நல் நோக்கமறிந்து, நல் துணைவியாக, -இல்லறத்தின் மேலாண்மை
- அறிந்து, கணவனோடு கலந்து, மாசற்ற வாழ்க்கை நடத்தும் பண்பினள்... இத்தகையப் பெண்ணின் மேலாண்மைக்கு ஒப்பீடு எதுவெனில்? 'பெய்' என்ற, சீரான இரைச்சலுடன், பெய்யும் மழையே சரியான ஒப்பீடாகும்...
*பருவக்காலத்து மழையை கவனியுங்கள்... "பெய்" - என்ற இரைச்சலுடன் பொழியும்... பருவமழையால் நாடு செழிப்பது போல்,
மேலாண்மை மிக்க நல் துணைவியால் வீடு செழிக்கும்... நல் துணைவி என்பாள் பருவமழைக்கு ஒப்பாவாள்...
இல்லறவியல்
அரங்க
கனகராசன் உரை.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
-56.
சோர்வு = மனத் தளர்வு, மனஉறுதி இழப்பு
பெண்மணிகள், இல்லாற வாழ்வில் முதலில், தமது உரிமையை -மேலாண்மையை - நிலை நிறுத்த வேண்டும்... அதே போல், துணைவனின் நல்
நோக்கம் நிறைவேற துணைப் புரிதல் வேண்டும்... மேலும்; சான்றோர் நல்கிய நல்லுரையை கருத்தில் கொண்டு இல்லறவியல் கடமையை ஆற்ற
வேண்டும்...
*பெண்கள் ஆணுக்கு சரி
நிகரல்லர் என்று
மதக் கோட்பாட்டாளர் கூறிடின், மனசோர்வுக் கொள்ளாமல், தம் மேலாண்மையில் உறுதியுடன் பெண்கள் எதிர்க் கொள்ள வேண்டும்...
-----------------------------------------------------------
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
-57.
பெருமதிலமைந்தப் பெருஞ்சிறை!... திறமை வாய்ந்தக் காவலர் கடுங்காவல் காக்கின்றனர்... ஆயினும்; என்ன பயன்?... சிறையை உடைத்து காவலரையும் ஏய்த்துத் தப்புகின்றனர்... ஆம்! சிறைச்சாலையும் உடைப்படலாம்...
ஆனால்; பெண்கள் தமது
மேலாண்மையில் உறுதியாக இருப்பின், குடும்பத்தின் மாண்பை சிதைக்க இயலாது...
சிறைக் காவலைவிட, மகளிரின் மேலாண்மையே உறுதியானது...
-----------------------------------------------------------
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
-58.
புத்தேளிர் = சான்றோர், நல்லோர், கற்றோர்.
உலகு = வட்டம், அவை.
துணைவி, மேலாண்மையுடன் - இருப்பின் , இல்லறவியல் சிறப்புறும்... குடும்பம் சிறப்புற்றால் துணைவனும் பெருமை அடைவான்... துணைவன் பெருமிதம் கொண்டு, எங்கும், எவரிடத்தும் தன் பெருமைக்கும், அருமைக்கும் துணைவியின் மேலாண்மையே ஏதுவாகும் என துணைவியைப் பெருமிதம் படுத்துவான்... கணவனது புகழ் மொழியால், மனைவியும் பெருமிதம் கொள்வாள்... இவ் இல்வாழ்வின் மாண்புதனை நல்லோரும் பாராட்டுவர்...
*இல்வாழ்வு என்பது துணைவன், துணைவி என இரு சார்பின் ஒருமித்த சிந்தனையும், பகுத்தலும் கொண்டிருப்பின் புகழ்மொழிக்கு உள்ளாகிறது...
-----------------------------------------------------------
இல்லறவியல் திருக்குறள் உரை.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .
-59.
இல்லறவியலுக்கு ஏற்ற பண்புகள் அற்ற துணைவியால், துணைவனுக்கு இல்லற வாழ்வில் பெருமிதம் இருக்காது... ஏனெனில்?
செல்வத்திற்கு ஆசைப்பட்டு, செல்வ சீமாட்டியை மணந்திருப்பான்... அல்லவெனில்; புற அழகில் மயக்கம் கொண்டு அழகியொருத்தியைத்
துணைவியாய்த் தேர்ந்தெடுத்திருப்பான்...
துணைவி எனக் கூறப்படுபவளுக்கோ அகந்தையும், அறியாமையும் நிறைந்திருக்கும்... இல்லறவியலின் பண்பு நலன் இருக்காது... அத்ததைய துணைவியோடு சரிநிகர் வாழ்வுதனை இழந்துத் தவிக்கும் துணைவன் நண்பர்களின் இகழ்மொழிக்கு ஆளாவான்...
சுற்றத்தாரின் சொல் மீறி, பண்பாடற்ற துணைவியைத் தேர்ந்தெடுத்தமையால், பொதுவெளியில் தலைநிமிர்ந்து நடையிட இயலாமல், தலைக்குனிவோடுதான் வாழ்நாளைக் கழிக்க நேரிடும்...
*ஒருமித்த எண்ணம் உடைய, பகுத்து ஆயும் பண்புள்ள துணையே நன்மை பயக்கும்...
-----------------------------------------------------------
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
-60.
இல்லறவியலை நல் அணிகலன் என்பர்... அணிகலனை அழகுச் செய்வது எதுவெனில், நுணுக்கமான வேலைப்பாடு என்பர்... நுணுக்கமான வேலைப்பாடு ஓர் அணிகலனை மேலும் அழகுறச் செய்வது போல், இல்லற வாழ்வில் துணைவனுக்கும், துணைவிக்கும் மனதில் அதிகப் பெருமிதம் ஊட்டுவது குழந்தைச் செல்வமாகும் என்பர்...
-----------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் - 7
மக்கட்பேறு
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
-61.
வள்ளுவன் பேசுகிறான் :
பெறத்தகுந்த பேறுகளில் எமக்குத் தெரிந்த வரைக்கும், அறிவிற் சிறந்த மக்கட்பேறுவைத் தவிர வேறு இருப்பதாகத் தெரியவில்லை...
*மக்கட்பேறு, குடும்பத்திற்கு அணிகலன் போல, அழகு சேர்க்கும்... பெற்ற மக்களும் அறிவிற் சிறந்தவர்களெனில், வேறு பெருமை உண்டோ?...
-----------------------------------------------------------------------
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடைமை மக்கட் பெறின்.
-62.
எழுபிறப்பும் - உறங்கியெழுதல் தோறும்.
உறங்கி விழித்தெழுகிற ஒவ்வொரு நாளும், தீமை நேராது... தீயோன் என்ற பழிச் சொல்லுக்கு இடந்தராமல், நல்லோன் என்ற புகழ்ச் சொல்லுக்கு உரியவனாகத் திகழும் நற்பண்புடைய மக்கட் பெற்றோர்க்கு!...
*இன்று விடிந்தது... இன்று, தமதுக் குழந்தையால் பழி ஏதும் சேருமோ எனும் கவலையற்ற நிலை ஒவ்வொரு நாளும் இருந்தால், பெற்றோர்க்கு ஏதும் பழியுண்டோ?...
------------------------------------------------------------------------
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். -63.
அறிவிற் சிறந்தோர் கூறுவதென்ன?... பெற்றவர்களின் சொத்து எதுவெனில், பெற்றக் குழந்தைகளே என்பர்... வீட்டில் அவரவர் பொருள் எதுவெனில்? இது எனது பொருள் என மனைவி, ஒரு பொருளின் மீது உரிமைக் கொண்டாடலாம்... இது எனது என்று கணவரும் ஒன்றைச் சொல்லலாம்... அவரவர் தனிப்பட்ட முறையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை சேர்த்திருக்கலாம்... 'இது எனது' 'இது உனது' எனப் பிரிக்கலாம்... ஆனால்; குழந்தைச் செல்வத்தை 'இது நம் குழந்தை' என்று மட்டுமே கூற முடியும்...
------------------------------------------------------------------------
இல்லறவியல் திருக்குறள்
உரை.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
-64.
அமிழ்தத்தைவிட சுவையில் இனியது எது? குழந்தைகளின் தளிர்விரல் தொட்ட உமிழாகும்...
குழந்தை விரல் சப்பி - வடியும் உமிழ்நீர் மீது - கன்னத்திலும், தளிர் விரல் மீதும் அன்னையானவள் அன்பு முத்தம் பொழிவாளே... அந்த உமிழ்நீர் அமிழ்தத்தை விட இனிதாக இனிக்கும்...
------------------------------------------------------------------------
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. -65.
குழந்தையின் கன்னத்தைத் தடவிப் பார்... கருவிழியின் மீது பூத்திருக்கும் இமையை முத்தமிடு... சிறுநுதழ் மீது உதட்டைப் பதித்துப் பார்... உச்சியை முகர்ந்துப் பார்... மூக்கின் நுனியை மூக்கால் உரசிப் பார்... கழுத்தின் வளைவில் நாவால் நக்கிப் பார்... தளிர் விரலை இதழ்களால் தீண்டிப் பார்... வயிற்றில் கை வைத்துப் பார்... சிறுகையையும் காலையும் நீவிவிடு... குழந்தையை எங்குத் தொட்டாலும், இன்பமோ இன்பம்!... உடலைத் தீண்டுதலில் மட்டுந்தானா இன்பம்... தய்... தய்... தக்க... தக்க... ஆங்... ஊங்... என உமிழ்நீர் வடிய வடிய வெளிப்படும் உணர்வு ஓசையை செவிமடுத்துப் பார்... செவிக்கும் இன்பமோ இன்பம்...
*எங்கள் வீட்டில் முதல் குழந்தைச் செல்வமாய் எனது அக்காவுக்குப் பிறந்தக் குழந்தையை நான் பார்த்தபோது என்னுள் ஓர் உந்துதல் - குழந்தையைத் தொட்டுப்பார்க்க!... தொட்டேன்... தொட்டேன்... தினம் தினம் தொட்டேன்... அடடா அந்த நுகர்வுத் தந்த இன்பம் என்னுள் இப்போதும் தித்திக்கிறது... அக்குழந்தையின் அரும்பு ஓசைகள் என்னுள் ஓராயிரம் மிதவையை மிதக்கச் செய்து தாலாட்டியது... இப்போதும் அந்த உணர்வு என்னுள் இசையாய் இசைக்கிறது...
இப்போது அந்தக் குழந்தை நீதிசபையில் ஒரு வழக்கறிஞராய் வலம் வந்தாலும், குழந்தைப் பருவத்தில் பொழிந்த இன்பம் என்னுள் இன்றும் சிலிர்ப்பை உண்டாக்குகிறது...
------------------------------------------------------------------------
இல்லறவியல் திருக்குறள்
உரை.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
-66.
குழலும் இனிது... யாழும் இனிது... இதனினும் இனிது உண்டோ என்பார்கள்... அவர்கள் யாரெனில்? குழந்தைகளின், மழலை மொழியைக் கேட்டிராதவர்கள்... அந்த மழலையில் மலர்ந்தெழும் இசையை உணர்ந்திராதவர்கள் ஆவர்...
*'இசை' தேவர்களுக்குச் சொந்தமானது... 'இசை' கடவுள் தந்தது என்பது மதம்!... வள்ளுவனோ மழலைச் சொல்லில் இசையை அறிகிறான்
----------------------------------------------------------------
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
-67.
தந்தைக்குக் கடமை நிரம்ப உண்டு!... தமதுக் குழந்தையை நன்முறையில் வளர்ப்பது மட்டுமன்று!... குழந்தைக்கு எந்தத் துறையில் ஈடுபாடு அதிகம் என்பதைக் கூர்ந்து, கல்வி, கலை எதுவாயினும், அத்துறையை நன்கு உணர வழிவகுத்து, முன்னிலை வகிக்கும்படி செய்ய வேண்டும்...
*நன்றி என்ற சொல்லை வள்ளுவன் இங்கே கையாண்டிருப்பதை கவனித்தல் நன்று!... எதிர்வரும் காலத்தில் குழந்தை ஆளாகி, இந்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் வழிகாட்டியாக அமையப் போகிறது... குழந்தையின் எதிர்வரும் காலத்தின் பணியைக் கருத்தில் கொண்டே வள்ளுவன் குழந்தைக்கு நன்றியாற்றிடுக என்கிறான்...
-----------------------------------------------------------
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
-68.
மாறிவரும் சூழலில் குழந்தைகளுக்கு
கூடுதலான அறிவுத்
திறன் வளர்ச்சியும் மேலோங்கிட வேண்டும்... அதாவது - அறிவிற் சிறந்தோங்கிட வேண்டும்... அறிஞராக - சான்றோராகத் திகழுமேயாயின் புகழ்மிகு இம்மண்மீதில் வாழும் உயிர்க்கெல்லாம் இனிது...
*மாறாக, மதம், சாதியை குழந்தையின் நெஞ்சில் புகுத்துதல்
இம்மண்மீதில் வாழும் உயிர்க்கெல்லாம் தீமையே நிகழும்...
இல்லறவியல் அரங்க
கனகராசன் உரை.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
-69.
பத்துத் திங்கள் மணிவயிற்றில் சுமந்தாள்... தாய்ப் பட்ட வேதனைகள் கொஞ்சமோ?... ஆயினும், அவ்வேதனைகள் யாவும் நொடியில் காணாமல் போகும் தருணமும் வாய்க்கும்... அத்தருணம் எதுவெனில்? மகன் இன்னான்... இன்ன சாதனைச் செய்யும் இவன் இன்னாளின் மகனாவான் என்று அனைவராலும் புகழப்படும் போது, அந்தப் புகழ் மொழியைக் கேள்விப்படும் தருணமே, தாயின் மகிழ்ச்சி மகனைப் பெற்ற பொழுதில் அடைந்த மகிழ்ச்சியைவிடக் கூடுதலாகும்...]
----------------------------------------
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல். -70.
தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய உதவி என்ன?... மூப்புற்றக் காலத்தில், தந்தைக்கு நல்லதோர் தோழனாய் உடனிருந்து உதவி செய்வதா?... மருத்துவ வசதிகள் கிட்டச்செய்தா?... விரும்பும் உணவை உண்ணக் கொடுப்பதா?... மனம் நோகாதபடி பணிவிடை ஆற்றுவதா? இவைகளுக்கும் மேலும் ஒன்று உண்டு...
அது- 'இவன் தந்தை எத்தைகையத் திட்டமிடல் வகுத்தானோ... என்ன பாடுப்பட்டானோ?... எப்படியெல்லாம் ஆளாக்கினானோ... மகனை வல்லவனாகி, நாடே வளம் காணச் செய்துள்ளானே'... எனும் சொல் மக்களால் பேசப்படவேண்டும்... அதுவே; தந்தைக்கு செய்யும் உதவியாகும்...
----------------------------------------------------
இல்லறவியல் அதிகாரம் :
8.
அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
-71.
ஆர்வலர் = அன்பிற்குரியவர்
புன்கண் = துன்பம்.
அன்பின் வெளிப்பாட்டை அடைக்க முடியுமோ?... நம்மனதை ஆட்கொண்டவரோடு காலச் சூழலாலோ, சில நெருக்கடிகளாலோ பிரிவு ஏற்படலாம்...
அவரோடு தொடர்புக்கொள்ளுதல் கூடாது - சந்தித்தல் கூடாது
- பேசுதல் கூடாது என்ற தடைகள் குறுக்கே நிற்கலாம்... ஆயினும்; நம் நெஞ்சில் நிறைந்தவர்க்கு, சிறு துன்பமென சேதி தெரிந்தாலே, நமதுக் கண்ணீர், தானே பெருகி நம் அன்பை பலர் அறியச் செய்திடும்...
----------------------------------------------------------------
அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
-72.
அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தாமதாகக் கருதி, உரிமைக் கொள்வர்... சுயநலமே மேலோங்கியிருக்கும்... அன்புடைய நெஞ்சினர், தமது உடலையும், பிறர்க்குரியதாக்கி வாழ்வர்...
-----------------------------------------------------------------
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. -73.
அன்போடு இயைந்தது வாழ்க்கை என்பர்!... உயிரென்பது அருமையானது... அந்த உயிர்க்கு எதனோடு தொடர்பு? உடலோடு!... உடலோடு இயைந்தது உயிர்!...
*அன்பு இல்லையேல் வாழ்க்கை
இல்லை... உடல் இல்லையேல் உயிர் இல்லை...]
-----------------------------------------------------------------
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
-74.
அன்பானது, பாச உணர்வை வெளிப்படுத்தும்... பாசமானது மிகச்சிறப்பு வாய்ந்த நட்புணர்வை வெளிப்படுத்தும்...
---------------------------------------------------------------
இல்லறவியல் அரங்க
கனகராசன் உரை.
அன்புற்று அமர்ந்த
வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
-75.
அன்பு நிரம்பிய வாழ்க்கையால் மட்டுமே, இன்பத்தை நுகர முடியும்... இப்பூமிதனில் பலர், இன்பமெனும் சிறப்பு நிலையை எய்திடக் காரணம், அன்புப் படர்ந்த வாழ்க்கை வாழ்வதால்தான் என்று ஆன்றோர் உரைப்பர்...
*பொது
நோக்கு அற்ற மதம், மானிடரின்
இன்ப நுகர்வைத் தடுக்கும்...
---------------------------------------------------------------
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
-76.
*அமைதி அவனுக்கு வேண்டி இருந்தது... காடு தேடி வந்தான்... கடும்பாறை மீது - பெரும்மரத்தினடியில் - அமர்ந்தான்...
பறவைகளின் ஓசை!... காற்றினிலே அசையும்போது இலைக் கிளைகளின் சலசலப்போசை!... பாம்புகள் ஊர்கையில் சருகுகளின் ஓசை! எங்கோ ஓநாய்களின் ஊளையோசை!... அவ்வப்போது, சில மிருகங்களின் உறுமலோசை!... இவை தவிர- அமைதி!... அமைதி!
திடீரென-
பெண் குழந்தையொன்றின் கதறலோசைக் காற்றில் கரைந்து வர, விரைந்தான்; ஓசை வந்த திசை நோக்கி!... கண்டான்... பதைத்தான்... பெண் குழந்தையொன்று புலியிடம் சிக்கித் துடித்தலுற்றான்... பாய்ந்தான் புலிமீது!... பெரும் போர் நிகழ்த்தி மீட்டான் குழந்தையை! அமைதி நாடி வந்தவனுக்கு, ஏனிந்த வீரம்? அதுதான் அன்பு! - குழந்தையின் மீதிருந்த அன்பு!...
***அன்பால் எதனை நிலைநாட்ட முடியுமென்றால் அமைதியை என்பார்கள், அறியாதவர்கள்!... ஆனால்; வீரத்திற்கும், அன்பே துணையாகிறது!...***
---------------------------------------------------------------
என்பி லதனை
வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
-77.
எலும்பற்ற புழுக்கள் வெயிலால் துடித்துடிக்கும்... நேர்மையற்ற வாழ்க்கை, மனச்சாட்சியால் துடித்துடிக்கும்...
--------------------------------------------------------
இல்லறவியல் திருக்குறள்
உரை.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
-78.
நெஞ்சில் ஈரம் எனும் அன்பில்லாத வாழ்வு, வறண்டப் பாலை நிலத்தில் பட்டமரம் துளிர்ப்பது போல!
*வறண்ட நெஞ்சில் ஈரம் சுரக்குமோ? பட்டமரம் பாலைநிலத்தில் துளிர்க்குமோ?...
--------------------------------------------------------
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
-79.
உடலில், தெரிகிற உறுப்புகளால் என்னப் பயன்? நெஞ்சில் அன்பு என்னும், உள்ளுணர்வு இல்லாதப் பட்சத்தில்?...
--------------------------------------------
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
-80.
உயிர்வாழ்தல் என்பது, நெஞ்சில் அன்புக் கலந்து வாழ்தல் ஆகும்!... அன்பு இல்லாதவர்களின் உடம்பானது எலும்பும், தோலும் போர்த்தப் பட்ட வெறும் கூடாகும்!...
--------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் -9.
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
-81.
பணம், பொருளென சேமிப்புப் பன்மடங்காக இருக்கலாம்... இந்த சேமிப்பெல்லாம் யாருக்காக?... இல்வாழ்வின் மாண்பு என்னவெனில்?... சேமிப்பு வேண்டும்... அந்த சேமிப்பைத் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது போல, பொருள் இன்மையால் வாடுவோருக்கும் பயன்படுத்திட வேண்டும்...
எளியோரைத் தாழ்வாய்க் கருதாமல், எளியோரையும் விருந்தினராய் வரவேற்று விருந்துத் தந்து, அவரின் இன்னல், களையும் பொருட்டு உதவி செய்தல் வேண்டும்... இது இல் வாழ்வின் ஓர் அங்கமாகும்...
*பார்ப்பனனுக்கு
மட்டுமே பிச்சையிடல் வேண்டும் எனும் மனுநீதியின் கோட்பாட்டைத்
தகர்த்து, எளியோர் யாவருக்கும் விருந்தளிக்கக்
கூறுகிறான் வள்ளுவன்
------------------------------------------------------
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. -82.
"அய்யனே, அற்புத மூலிகைகளின் கலவையிது!... இதனை உண்டால் சாவேது உனக்கு!... மரணம் என்பதே மானிடா, இனி உனக்கில்லை " என்று ஒருவனால் தரப்பட்ட அருமருந்தேயாயினும்,
வீடு நாடி வந்த விருந்தினர் வெளியில் - திண்ணையில் - அமர்ந்திருக்க, தான் மட்டும் உண்பது, சாவா மருந்து என்றாலும், அது நல் பழக்கமல்ல!... விரும்பத் தக்கதல்ல!... விருந்தினர்க்கும் கொடுத்து உண்ணலே நன்று!...
-----------------------------------------------
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
-83.
வந்த விருந்தினருக்கு விருந்தளித்து மகிழ்வோனின் வாழ்க்கை, பழிச் சொல்லுக்கு உள்ளாவதில்லை... இல்லறம் அழிவதுமில்லை...
----------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள்
உரை.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
-84.
செய்யாள் = செவ்விய குணத்தாள், வாழ்க்கைத்
துணைவி.
செவ்வியக் குணம் நிரம்பிய வாழ்க்கைத் துணைவியானவள் கூடுதல் மன மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டில் வசிப்பாள்... கூடுதல் மனமகிழ்ச்சி ஏனெனில்?
முகமலர்ச்சியுடன், விருந்தினரை வரவேற்று - விருந்தளித்து - ஊராரின் பாராட்டுதலுக்கு உள்ளாகும் நல் துணைவனுக்குத் துணைவியாய், தான் இருப்பதை யெண்ணி அகமகிழ்வு கொள்வாள்... அதிலோர் பெருமிதமும் காண்பாள்... கூடுதல் மகிழ்வோடு வசிப்பாள்...
*விருந்தளிப்பவன் வீட்டில் இலக்குமி எனும் பெண் தெய்வம்
குடியிருப்பாள் என்று பலர் உரை
எழுதியுள்ளனர்... ஒழுக்கத்தை உயர்வுப் படுத்தும் வள்ளுவன் ஒழுக்க ஈனள் என
உருவகம் படுத்தப்பட்ட இலக்குமியை உவமையாக்கி இருப்பானா வள்ளுவன்? இவள் யார்? கணவன்
இல்லா நேரத்தில் குதிரை வேடம் பூண்டு
குதிரையைப் புணர்ந்தவள் என்று உருவகம் ஆக்கப்
பட்டவளையா குடும்பத்தின் திருமகள்
என்கின்றனர் உரையாசிரியர்...
------------------------------------------------------
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
-85.
வித்து
= ஆசைமொழி, புலம்
= அறிவு.
மானிடரின் நெஞ்சில் ஆசைமொழி எனும் விதையை விதைக்கவும் வேண்டுமோ?... விருந்தினரை வரவேற்று - விருந்தளித்து உண்ணுதல் நல்ல பழக்கமாகும்... இதனை ஒவ்வொரு மானிடரும் கடமையாய்க் கொள்ளுதல் நன்று... விருந்தோம்புதல் என்பது, ஆசையெனும் தூண்டுதலால் நிகழ்வது ஆகாது.... இயல்பான அறிவின்பாற்பட்டதாகும்...
*புண்ணியமும், சுவர்க்கமும் கிட்டும் பார்ப்பனனுக்கு தானம் - தருமம் - செய்தால் என்று ஆசையெனும் விதையை விதைக்க வேண்டுமோ...
இது ஏமாற்றும் பித்தலாட்டமும் ஆகும்...
வள்ளுவனோ விருந்தோம்பல் என்பது இயல்பான அறிவிற் பாற்பட்டதாகும் என்கிறான்... *விருந்தோம்புகிறவன், தனது நிலத்துக்கு விதையும் விதைக்க வேண்டுமோ?... தானம் செய்வதால் அவன் நிலத்தில் தானாகவே பயிர் முளைத்திடும் என பொருள் உரைத்துள்ளனர் உரையாசிரியர் பலர்... இது அறிவுக்கு பொருந்தாத பொருள்... இவ்வுரையை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், நிலவுடைமையாளர்கள் மட்டுந்தானோ விருந்தளிப்பவர்கள்... ஏனையோருக்கு விருந்தோம்புந் தன்மை இல்லையா எனும் வினா எழுதல் நியாயந்தானே...
இல்லறவியல் திருக்குறள்
உரை.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. -86.
நல்விருந்து
= நற்புகழ்.
வானத்தவர் = வான்போல் புகழ்க் கொண்டோர்,
சான்றோர்.
அகமகிழ்வுடன் வரவேற்று விருந்தளித்து, மனமகிழ்வுடன் வாசல் வரைச் சென்று விருந்தினரை வழியனுப்புதல், மேலும்; - விருந்தினர் வருகையை எதிர்ப் பார்த்தல்
- என்பது நற்பண்பாளனின் குணமாகும்... இத்தகையோன் வான்போல் புகழுடன் திகழும் சான்றோராலும் புகழப் படுவான்...
-------------------------------------------------------------------
இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
-87.
வேள்விப் பயன்
= மனமுதிர்வு
அளிக்கப்படும் விருந்துக்கு இணை என்றோ - நிகர் என்றோ - எதனையும் கூறுதல் இயலாது... அது, விருந்து ஏற்பவரின் மனமுதிர்வை - மனநிலையைப் – பொறுத்தது
ஆகும்...
--------------------------------------------------------------------------
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
-88.
பரிவு
= இரக்கம்
பரிந்தோம்பி
= இரக்கம் காட்டி
பற்றற்றேம்
= நம்பிக்கை அற்றோம்.
பிறருக்குப் பரிவுக் காட்டுவதால் - பிறர் மீது இரக்கம் கொள்வதால் - எளியோரிடம் கருணைப் பொழிவதால் - பலன் கிட்டும் என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை என ஒரு சாரார் கூறுவர்!...
அவர்கள் எவரெனில்? விருந்தினரை வரவேற்று விருந்தளிப்பது என்பது, கடவுள் பேரால் நடத்தப் படும் தவம், நோன்பு இவைகளுக்கும் மேலானது... இது பலன் கருதி செய்வதல்ல எனும் பகுத்தறிவு
உணர்வைப் பெறாதவர் - மூடக் கருத்தியல் - உடையோர் ஆவர்!
*பகுத்தறிதல் உணர்வு அற்றோரே பரிவுக் குறித்தும், மானிடநேயம் குறித்தும் மாறுபாடு பேசுவர்...
இல்லறவியல்
அரங்க
கனகராசன் உரை.
உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
-89.
விருந்தினரை, வரவேற்று விருந்தோம்பாத குணமே, செல்வ நிலையிலும் வறுமை எனப்படுவதாகும்...
விருந்தோம்பாதிருப்பது அறிவில்லார் செயலாகும்... அறிவின்மை என்பது முட்டாள்களின்
தன்மையாகும்...
-------------------------------------------------------------
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
-90.
அனிச்சப்பூ முகர்ந்தவுடன் வாடிவிடும்... ‘இன்றும் வந்து விட்டான் தின்ன’ என மனம் நினைத்தால், மனதின் எண்ணத்தை முகம் காட்டிவிடும்!...
முகத்தின் மாறுதலை விருந்தினர்க் கண்டவுடன், அவர் மனம் வாடிவிடும்...
-------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் – 10
இனியவை கூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
-91.
ஈரம் அளைஇ = அன்புக் கலந்த
படிறு
= வஞ்சம்
அன்புகலந்தச் சொற்கள் இனியச் சொற்களாகும்... அது, வஞ்சம், பொறாமை, தீமைக் கலவாதது!... இத்தகைய சொற்கள் எவரால் பேசப் படுமெனில்? நன்மை எதுவென நன்கறிந்தர்வர்களால் பேசப்படும்!...
*பகுத்தறியும் தன்மையுள்ளோரால், இனியச் சொற்கள் பேசப் படும்!
-------------------------------------------------------------
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின். -92.
அகமகிழ்வுடன் ஒருவருக்கு உதவி செய்வது நல்லது!... அதைவிட, நல்லதொன்று உண்டு? முகமலர்வுடனும், இனிதாகவும் பேசுவதாகும்...
-------------------------------------------------------------
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானம்
இன்சொ லினதே அறம்.
-93.
மனதில் மாசற்றவனாக இரு... அதுவே அறம் ஆகும் என்று சொல்லும் வள்ளுவன், மேலும் சொல்லுகிறான்:
முகமலர்வுடன் பார்... அதோடு உள்ளார்ந்த இனியச் சொற்களை இனிமையாய்ப் பேசு!... இதுவே அறம்...
--------------------------------------------------
இல்லறவியல் திருக்குறள்
உரை.
துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
(94).
துவ்வாமை
= இழிநிலை
மனதைத் துன்புறுத்தும் இழிநிலை ஏற்படாது... எவரிடத்திலும் இனிமைப் பயக்கும் இன்சொல் பேசுகிறவர்களுக்கு!...
*வெளிப்படுத்தும் சொற்கள் கூட இனிதானதாய் இருத்தல் வேண்டும் என்பதால்தான் திருக்குறளை, உலகமாந்தர் யாவருக்கும் பொதுநூல் என்கிறோம்...
"ஓ இந்திரனே, இவளை நீ அனுபவித்தாய்... பார்ப்பனனாகிய நானும் சுவைக்கிறேன்... இதன்பிறகே இந்த சூத்திரனுக்கு இவளை மனம் செய்து வைக்கிறேன்... இவளை நானும், இந்திரனும் அனுபவித்துவிட்டதால் இப்போது இவள் தாசியாவாள்... இந்த தாசிக்கும், இந்த சூத்திரனுக்கும் பிறப்பது தாசியின் குழந்தையெனப்படும்" - இப்படி இழிவும், பேதமும் படுத்துவது
ஆரிய நூல்கள்... ஆதலால், பலரின் வெறுப்புக்கும் உள்ளாகிறது...
----------------------------------------------------------------
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
-95.
பெரியோரிடம் பணிவுக் காட்டவேண்டும்!... எவரிடத்திலும் இனியச்சொற்களையே பேசுதல் வேண்டும்... இத்தகைய நற்குணம் கொண்டிருப்பவனுக்கு இது நல்லணியாகும்!
வெளித்தோற்றத்திற்கு அழகு சேர்க்கும் பொருட்கள் நற்பண்பு எனும் அணியாகாது...
---------------------------------------
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
-96.
அல்லவை = வாழ்க்கைக்கு ஆகாதவை,
தீயவை.
தீயவை நீங்கி நன்மை பெருகும்... நல்லெண்ணத்துடன் நன் மொழிகளையே பேசினால்!
*நன்னெறியைக் கற்றுக் கொடுத்தால், நெஞ்சில் தீநெறி மடியும்...
---------------------------------------
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். -97.
நன்மையைத் தரும்... நன்மதிப்பையும் நல்கும்!... எது? பயன் தரக்கூடிய
பண்பான இனியச் சொற்கள்!...
*இனியச் சொற்களை நயமாகப் பேசினால், நன்மையும், நன்மதிப்பும் பெருகும்...
-----------------------------------------------------------------------------------
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.
-98.
மறுமை = உரைக்குந்தோறும்;
பேசும்போதெல்லாம்.
இம்மை = செவிமடுக்கும் போதெல்லாம்.
கீழான உணர்ச்சியைத் தூண்டுகிற சொற்களையும், தீய நெறியைக் காட்டும் தீயச் சொற்களையும் தவிர்த்து விடு!... நன்மையுண்டாக்கும் நன்மொழியைப் பேசு!
நன்மொழியை வெளிப்படுத்துகிறவனுக்கும், நன்மொழியை ஆழ்ந்து செவி மடுப்பவனுக்கும் நலமே விளையும்...
-------------------------------------------------------------
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. -99.
நற்சொற்கள் நன்மையைச் செய்கின்றனவெனத் தெரிந்தும், ஏனோ கொடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்...
--------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பாக் காய்கவர்ந் தற்று. -100.
பேசுவதற்கு இனிமையானச் சொற்கள் இருக்கும்போது, தகாத சொற்களைப் பேசுவதேன்?
சுவைப்பதற்குச்
சுவையானக் கனிகள் இருக்க, கசக்கும் காய்கள் மீது ஆசைக் கொள்வாயோ?...
--------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் : 11
செய்நன்றி அறிதல்
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
-101.
ஒருவரிடமிருந்து ஒருவருக்கு, எதிர்பாரா நேரத்தில் கிடைத்த உதவிக்கு எதனை உவமையாகக் கூறுவது?... மரம், செடி, கொடிகள் உட்பட எண்ணற்ற உயிர்களைச் சுமந்தும், வாழவைத்தும் கொண்டிருக்கும் பூமியின் செயல்பாட்டை உவமையாய்க் கூறுவதா?
ஒளியும், மழையும் எனப் பொழியும் வானத்தின் பணியை உவமையாகக் கூறுவதா?
தக்க நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட - தக்க உதவியை - எதனோடும் ஒப்பிட்டுக் கூறுவது அரிதாகும்...
------------------------------------------------------------
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. -102.
தக்க நேரத்தில் - தக்கத் தருணத்தில்
- ஒருவரால் செய்யப்பட்ட - தக்க உதவி சிறிதெனினும், பலனை ஒப்பிடும்போது- இந்த உலகத்தின் சிறப்பான எதனை விடவும் மிகப் பெரியதாகும்...
---------------------------------------------------
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
-103.
கைம்மாறு துளியும் கருதாமல் ஒருவர் செய்த உதவியை ஆய்ந்து நோக்கின்; அவருடைய நேயம் ஆழ்கடலினும் பெரிதாகும்!...
----------------------------------------------------------------
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
-104.
ஒருவர் செய்தது சிறிய உதவித்தான் என்ற போதிலும்; அதனை மிகப்பெரிய உதவியென கருதுவர்;
உதவியால் நன்மையடைந்தவர்!...
----------------------------------------------------------------
இல்லறவியல் - அரங்க
கனகராசன் உரை.
உதவி வரைத்தன்று
உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. -105.
உதவி எனப்படுவதானது; பெரிய உதவி, சிறிய உதவி என்று அளவீடுக்கு உட்பட்டதன்று!.... உதவி, உதவிப் பெற்றவரின் மனமுதிர்வைப் பொறுத்து சிறப்படைகிறது!...
*தக்க நேரத்தில் உதவிக் கிட்டியது எனில், உதவியால் மனநிறைவு கொள்ளல் வேண்டும்... அதுவே உதவிக்குச் செய்யும் சிறப்பாகும்!... உதவியை அளவீடுக்கு உட்படுத்தக் கூடாது...
----------------------------------------------------------------------
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
-106.
மறத்தல் கூடாது என்றென்றும்; நெஞ்சில் வஞ்சனை அற்றவரின் நேயத்தை!... துறத்தல் கூடாது; இடருற்றக் காலத்தில் உதவியோரின் நட்புதனை!...
-------------------------------------------------------------
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந்
துடைத்தவர் நட்பு.
-107.
எழுமை - எந்தவொருக் கிழமையிலும்
எழுபிறப்பு - விழித்தெழும் போதெல்லாம்
இது நற்கிழமை; இது கேடு விளைவிக்கும் கிழமை என, கிழமையை பிரித்து நோக்காது; ஏழு கிழமையும் உறங்கி விழித்தெழும் போதெல்லாம் மனதில் எதனை எண்ணங் கொள்வரெனில்? பேரிடரிலிருந்து மீட்டு வாழ்வில் நன்னிலை உண்டாக்கியவரின் நட்புதனை விழிக்குந்
தோறும் மனதில் எண்ணம் கொள்வர் நல்லோர்!...
*உறங்கி விழித்தலை, பிறப்பு என்கிறான் வள்ளுவன்! எனவே; எழுபிறப்பு = 'உறங்கி விழித்தெழுகின்ற போதெல்லாம்' என்பதே சரியானப் பொருளாக இருக்கும்.*
-----------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
-108.
நன்மையை மறப்பது நன்மையானச் செயலாகாது... ஆனால்; தீமையை அன்றே, மறந்து விடுவது நற்செயலாகும்!...
-----------------------------------------------------------
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
-109.
கொலைப் பாதகம் போன்று கொடூரம் இழைத்தவனாயினும், அவனால் எப்போதாகிலும் ஒரு நன்மையேனும் நிகழ்ந்திருக்குமேயாயின் அந்நிகழ்வு, நினைக்கப் படுக்கமேயானால், அவரின் குற்றம் அற்றுவிடும்...
--------------------------------------------------------------------
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
-110.
பலரிடம், பல பல உதவிகள் பல நேரத்தில், பெற்று பலன் அடைந்திருந்தாலும், அவற்றை மறந்து விடுவோரும் உண்டு... அத்தகையவர்களின் குணநலன்களையும் மக்கள் ஏற்பர்...
ஆனால்; பெற்றோரால் ஆற்றப்பட்ட கடமையை மறந்து விடும் குழந்தைகளின் குணநலன்களை மக்கள் ஒருபோதும் ஏலார்...
---------------------------------------------------------
இல்லறவியல் அதிகாரம் :12.
நடுவுநிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
-111.
நடுநிலைமை என்பது பொதுவாய் இருத்தலே நன்றாகும்... ஏனெனில், வழக்கின் இருபுறத்தையும் அலசி ஆய்ந்து, உண்மையை நிலை நிலைநாட்ட வியலும்...
*உண்மையை நிலைநாட்ட விரும்புவோர் நடுநிலையாளராக இருத்தல் வேண்டும் என்று, வள்ளுவன் கூறுகிறான்...
ஆனால்; பார்ப்பனன், பார்ப்பனரால் மட்டுமே நீதி கூறப்பட வேண்டும்
என்று கூறுகின்றான்... இது பார்ப்பனர்களுக்கு ஒரு சார்பு நீதியாகவும், ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப் படும் அநீதியாகவும் அமையும்...
--------------------------------------------------------------
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112.
ஆக்கம் = தீர்ப்பு
எச்சம் = குற்றம்சாட்டப் பட்டவனும்.
நடுநிலைத் தவறாத - நேர்மையுடைய - நடுவரால் கூறப்படும் தீர்ப்பானது, குறை கூறவியலாபடி - அறம் சார்ந்து விளங்கும்... குற்றம் சாட்டப் பட்டவனும்
தீர்ப்பின் ஒழுங்கமைப்பைப் பாராட்டுவான்...
*பிறப்பின் அடிப்படையில் ஒருவனை நல்லவன் எனக் கூறல் செப்பம் உடைய தீர்ப்பாகாது... எளியோருக்கும் கிடைக்க வேண்டியதை நீதி பெற்றுத் தருமேயாயின், அத்தீர்ப்பு மக்கள் தீர்ப்பாகக் கருதப்படும்...
----------------------------------------------------------------
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
-113.
ஒரு சாராருக்கு சார்பாய் தீர்ப்பு வழங்கப் பட்டால், அத்தரப்பினரால் தரப்படும் கையூட்டு தம்வாழ்க்கை தரம் உயர ஏதுவாக இருக்கும் என்று கருதி, நடுநிலையற்ற தீர்ப்புதனை நடுவர் வழங்குதல் அறமாகாது... எனவே, அவ்வெண்ணம் துளிர் விடும் போதே ஒழித்துவிடவேண்டும்...
----------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
-114.
நல்லவனா கெட்டவனா என்பதை அவனுடைய செயல்தான் காட்டும்... குற்றச் சாட்டுக்கு இவன் ஏற்புடையவனா? அல்லவா என்று பிறப்பின் அடிப்படையில் - வாழ்க்கை தரத்தின் அடிப்படையில் - ஒருவரை நடுவர் கணித்தல் கூடாது... எவராயிருந்தாலும் அவரவர் செய்த செயலைக் கொண்டே நடுவர் அறிய வேண்டும்...
*ஆரிய நூல் பார்ப்பனன் தவறு செய்திருந்தாலும், அதனை குற்றச் செயலாக கருதக்கூடாது என்கிறது...
---------------------------------------------------------
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
-115.
தீமை தரத் தக்க எண்ணமும், தீமை விளைவித்து கேடு உண்டாக்கக்கூடிய சிந்தையும் இல்லாமலிருப்பதே நன்னெஞ்சம் எனப்படும்...
நன்னெஞ்சம் உடையோர் மட்டுமே நடுவராக செயல்படத் தகுதியடையவராவார்... மேலும்; இத்தகுதி சான்றாண்மையின் அணிகலன் எனப்படும்...
*பார்ப்பனர்களின் நீதிநூல் எனப்படுவது சக மானிடர்களுக்கு கேடு விளைவிப்பதாகவே உள்ளது... எனவே அது ஒருசார்புத் தன்மை கொண்டதாகும்)
----------------------------------------------------------
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
-116.
பிறருக்கு கெடுதல் செய்தால், கெடுதலுக்கு உள்ளானவர்களால், மீண்டும் தனக்கு கேடு விளைவிக்கப்படலாம் என்பதை எவராயிருந்தாலும் உணர வேண்டும்...
இது நடுநிலையற்றச் செயல் என்று தம் நெஞ்சம் உணர்த்தியும், அதனை உணராமல் கேடு செய்தல் கூடாது...
*நாட்டுக்கு இன்னல் சூழ்ந்த காலத்தில், மன்னருக்கு மக்களின் ஆதரவு கிட்டவில்லை... நடுநிலைமையின்றி பார்ப்பனருக்கு மட்டுமே நன்மை செய்து, மக்களுக்கு பெரும் கேடு விளைவித்ததால், மக்கள் மன்னவனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து எதிரிகளின் நுழைவை எளிதாக்கினார்...
--------------------------------------------------------------
இல்லறவியல் அரங்க கனகராசன் உரை.
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. -117.
நடுநிலைத் தவறாமல் இருப்பவனை
இவ்வுலகம் தூற்றாது... ஆனால்; எவனொருவன் நடுநிலைத் தவறுகிறானோ, அவனை தீமையாளன் என்று இவ்வுலகம் தூற்றும்...
*வள்ளுவனின் காலத்தில்- மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு நன்மை செய்தும், குடிமக்களை வதைத்தும் அநீதி இழைத்தனர்...
-------------------------------------------------------------
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
-118.
எடைக்கேற்ற பொருள் உள்ளதா என்பதை , துலாக்கோல் காட்டும்... துலாக்கோல் போல், மக்கள் யாவரையும் சமமாக பாவித்து நீதி வழங்க வேண்டும்... அப்பண்பு சான்றோருக்கு அணி போன்றது...
*நீதி வழங்கல் முறை, பார்ப்பனர் விருப்பத்திற்கேற்ப அக்காலத்தில் இருந்தது...
----------------------------------------------------------------
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
-119.
செம்மையானத் தீர்ப்பு என்பது பிழையில்லாதிருத்தல் ஆகும்... அதுவும் தமக்கு வேண்டியவர் என்பதால், அவருக்காகவும் ஒருதலைச் சார்பு இல்லாமல் இருந்தால்தான் நடுநிலைத் தவறா செம்மையான தீர்ப்பு எனல் தகும்...
-----------------------------------------------------------------------
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.
-120.
வணிகம் என்பது வருவாய் கிட்டுவதாகவும் இருக்கவேண்டும்... பொருள் வாங்குவோருக்கு பலன் கொடுப்பதாகவும் வணிகம் இருக்க வேண்டும்... இது வணிகத்தின் அழகு!... அதுபோல் தீர்ப்பு என்பது நடுநிலையானதாக இருத்தல் வேண்டும்...
-----------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் -13.
அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
-121.
அமரர் = உயர்ந்தோர், பண்பாளர்.
அடக்கம் எனும் பண்புடன் திகழ்வோருக்கு உயர்ந்தோரின் தொடர்பு கிடைக்கும்...
அடங்காதுத் திமிரோடுத் திரிவோருக்கு, பெருந்துயர் சூழும்...
*செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123 = *அடக்கமாய் வாழ்வதால் கிட்டும் பலனைப் போல் வேறெதிலும் கிட்டுவதில்லை...
------------------------------------------------------------
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
-122.
அடக்கம் எனும் பண்புதனை செல்வமெனக் கருதிக் காத்தல் வேண்டும்... அடக்கமாய் வாழ்வதால் கிட்டும் பலனைப் போல் வேறெதிலும் கிட்டுவதில்லை...
*பிறரை மதித்துப் பழகுதல் நற்பெயரைத் தரும்... பிறரை அடக்கி வாழ நினைக்கும் பார்ப்பனத் திமிர் கலவரத்திற்கு வழிவகுக்கும்...
---------------------------------------------------------
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
-123.
ஒழுக்கத்தை செந்நெறியுடன் காப்பவரை சீரியப் பாராட்டுதல் அடையும்... செந்நெறியுடன் கூடிய ஒழுக்கம் எனில்?
அடக்கத்தின் மேன்மையை அறிந்து, வாழுதல் செந்நெறியுடன் கூடிய வாழ்வு எனலாகும்... செந்நெறியுடன் வாழ்வோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேரும்...
-----------------------------------------------------------------
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணாப் பெரிது.
-124.
எச்சூழலிலும், நல் கொள்கையிலிருந்து வழுவாமல் வாழும் வாழ்க்கை எப்படிப் பட்டதெனில்?
கொள்கை உறுதிக் கொண்ட ஒருவனது மன உறுதியை ஒப்பிட்டால், மலைக்கு நிகரானதாக தோன்றும்...
---------------------------------------------------------
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
- 125.
பணிவு எனும் பண்பு எல்லாருக்கும் நல்லது!... குறிப்பாக செல்வந்தரிடத்தில் பணிவு எனும் நற்பண்பு இருக்குமேயானால், அவரிடத்தில் உள்ள செல்வத்தைக் காட்டிலும் நற்பண்பானது மேன்மையானதாக காட்சிப் படுத்தப் படும்...
*பார்பானனிடத்தில் நற்பண்பு எதுவும் இன்மையால், அவனுடைய தீயகுணமே முன்னிலைப்
படுத்தப்படுகிறது...
--------------------------------------------------------------------
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
-126.
*எழுமை = விழித்தெழும் கிழமை தோறும்.
ஒரு கூட்டுக்குள் ஆமை, தன்னை அடக்கி வாழும்... அதேபோல் நல்லதைக் காணுதல், நல்லதைக் கேட்டால், நல்லதை நுகர்தல், நல்லெண்ணத்தில் தீண்டல், நற்சிந்தனை கொண்டிருத்தல் என் ஐம்புலன்களையும் தன்னகத்தே கொண்டு வாழ வேண்டும்...
இத்தைகைய கட்டுப்பாடு ஒருவனின் நெஞ்சில் இருக்குமேயாயின், அவன் விழித்தெழுகிற ஏழு கிழமையிலும் அவனைக் களங்கம் எட்டாது...
இதில், நல்லக் கிழமை, கெட்ட கிழமை என பேதம் ஏதுமில்லை... ஏழு கிழமையும் அவன் நற்பெயர் பெருமைப் படுத்தப்படும்...
*'இன்று நாள் சரியில்லை... இன்று நாள் இன்ன திசையில் பயணிக்க வேண்டாம்... இன்று நாள் பார்ப்பனர்களுக்கு தானம் கொடு... இன்று நாள் இன்ன பூசைச் செய்' -என்று பார்ப்பனனின் பொய்யுரைக்கும், மானிடர் வாழ்வுக்கும் எந்த தொடர்பு
மில்லை... ஆமை போல் ஐந்தடக்கி வாழ்ந்தால் எல்லா நாளும் நல்நாளே!
-------------------------------------------------------------------------------
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. -127.
எதனை அடக்க இயாலாது போயினும், நாவினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்... அல்லவெனில், நா தேவையற்ற சொற்களை உதிர்த்து பழியை வரவழைக்கும்... சோகத்தில் ஆழ்த்திவிடும்...
*சொற்கள் மட்டுமல்ல... சுவை உணவையும் கட்டுப்பாடின்றி நா நுகர விட்டால், உடல் நலம் கெடும்... சோகம் சூழும்...
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
-128.
எவனொருவனின் நா ஒரே ஒரு கெட்டச் சொல் உதிர்த்தாலும், பாதிப்பு என்னவோ அவனுக்குத்தான்!...
ஆம்! நாவினை அடக்காமல், கெட்டச் சொல் உதிர்க்க விட்டால், அவனிடம் இதுகாறும் இருந்த நன்மதிப்பு யாவும் நீங்கிவிடும்...
*இது தமிழர் வாழ்வு நெறி!... ஆனால்; ஆரியர் உதிர்க்கும் சொல் யாவும் மானிடரை இழிவுப் படுத்தும் தீயச்சொற்களே... தீயச்சொற்களை பாப்பனனின் நா உதிர்ப்பதால்தான் அவர்கள் நாடற்ற நாடோடிகளாய் அல்லாடுகின்றனர்...
---------------------------------------------------------------------
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
-129.
தீயினால் ஏற்பட்ட புண் ஆறிட மருந்துண்டு... ஆறாத புண்ணும் உண்டோ?...
ஆம்!... நாவிலிருந்து வெளிப்படும் நச்சுச்சொல், சக மானிடரின் நெஞ்சை புண்ணாக்கும்... நெஞ்சில் விழுந்த நெடும் புண்ணுக்கு மருந்தில்லை.... அது நீங்காத வடுவாக நீடிக்கும்...
*பார்பனனின் நாவிலிருந்து தெறிக்கும் சொற்கள் யாவும் சக மானிடர் நெஞ்சை இன்றளவும் புண் செய்வதை காண்கிறோம்... புண் பட்ட நெஞ்சினர், ஒண்ட வந்த பார்ப்பனனை ஓடிப்போ என்று சொல்லும் அளவுக்கு விளைவுகளை உண்டாக்குவதை காண்கிறோம்...
--------------------------------------------------------------------
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. -130.
கதம் = சினம்.
செவ்வி = பண்பு.
சினம் காப்பான்... சீரியக் கல்வியாளன்... மேலும் மமதை அற்றவன்!... கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என ஐம்புலன்களையும் கட்டுக்குள் வைத்து வாழும் நெறியாளனை அறநெறியாளர் வாழ்த்துவர்...
*தனக்கு மட்டுமே மூளை அதிகம் என்று மமதையில் இன்றளவிலும் உழலும் பார்ப்பனனை சான்றோர் போற்றார்...
----------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம்-14.
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
-131.
ஒழுக்கமானது, மேன்மையைத் தருகிறது... அதனால்; ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய்க் காத்தல் வேண்டும்...
*பார்ப்பனனின் நூற்கள் ஒழுக்கத்தை பேணுவதில்லை... எப்படியும், எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி உயிர் வாழ கற்பிக்கின்றது என்பதை ஒப்பிட்டு நோக்க வேண்டும்...
--------------------------------------------------------------
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
-132.
அன்பின் வழி நின்று ஒழுக்கம் பேணுதல் வேண்டும்... எவ்வகையில் ஆய்வுச் செய்தாலும், நன்மையாவது ஒழுக்கமே!...
*பார்ப்பனன் வாழ்வில் ஒழுக்கம் இராது... கயமைப் பேசி பொருள் பறிப்பது மட்டுமே பார்ப்பானனின் வாழ்வியல் நெறி!
-----------------------------------------------------------------------
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
-133.
ஒழுக்கம் என்பதன் தன்மை எது?
ஒழுங்கு நெறியோடு கட்டமைக்கப்பட்ட வாழ்வியலாரை உயர்குடியினர் எனக் காட்டும்...
ஒழுக்கமற்ற தன்மை எனில் எது?
எப்படியும் வாழலாம் என்று ஒழுங்கு நெறிக்கு அப்பாற்பட்டு வாழும் கூட்டத்தினரை இழி பிறவிகளாய் காட்டும்...
*நெற்றியில் பிறந்ததாக அறிவியலுக்கு புறம்பாய் பேசி வயிறு பிழைக்கும் கூட்டம் தம்மை உயர்குடியினர் என்று கள்ளம் பேசும்... உண்மையில் அக்கூட்டத்தினரை இழிந்த பிறப்பினர் என்றே உலகு கருதும்...
------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். -134.
ஒத்து =நினைவூட்டல்
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் எனும் நியதியை மக்கள் மறந்து விடுகின்றனர் போலும்... ஆயினும் நினைவூட்டல் தவறல்லவே...
பார்ப்பான் என்பான் நெற்றியில் பிறந்தவனாம்... இது அறிவியலுக்குப் புறம்பான கூற்று... மக்களை ஏய்த்துப் பிழைக்க பார்ப்பான் பரப்பும் பொய்யுரையாகும்... அவன் தன்னை நெற்றியில் பிறந்ததாகக் கூறி, தன்னை உயர் குடியினன் என்றும், அவனை சட்டத்தால் தண்டிக்கவியலாது என்றும் கூறித் திரிக்கிறான்... உண்மையில் பார்ப்பனனும் குற்றம் இழைப்பின் தண்டனைக்கு உரியவனே... ஏனெனில் பிறப்பில் உயர்வு,தாழ்வு வேற்றுமை ஏதுமில்லை...
-------------------------------------------------------------
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
-135.
பொறாமை உள்ளவனிடம், உயர்வானச் சிந்தனை இருக்காது... அதேபோல், ஒழுக்கம் அற்றவனின் வாழ்வு மேன்மைப் பெறாது...
-------------------------------------------------------------------
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
-136.
உரவோர் = சான்றோர்
ஏதம் = குற்றம்.
சான்றோர் ஒழுக்க நெறியை மீறமாட்டர்... ஏனெனில்?
இழிச்செயல்கள் இழிநிலையைத் தோற்றுவிக்கும் என்பதனை சான்றோர் நன்கு உள் கொண்டிருப்பதால், குற்றம் விளைவிக்கக் கூடிய இழிசெயல்தனில் ஈடுபடமாட்டர்...
*ஏமாற்றிப் பிழைக்கும் பார்ப்பனனுக்கு இழிச்செயல் செய்வதே நோக்கமாக இருக்கிறது...
--------------------------------------------------------
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
-137.
ஒழுக்க நெறி நின்று வாழ்வோரே உயர்ந்தவர் ஆவர்... இழிச்செயலுக்கு தம்மை உட்படுத்தி வாழ்வோர் குற்றம் புரிந்தவர் ஆவர்...
*ஆதலால் நெற்றியில் பிறந்ததாக ஒருவன் ஏய்த்தாலும், அவனது இழிசெயல்
அவனை குற்றவாளியென வெளிப்படுத்தும்...
-------------------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
-138.
நற்செயலுக்கு வித்து எதுவெனில்?
நல் பழக்கமும் வழக்கமும்...
தீய ஒழுக்கத்தின் விளைவு எதுவெனில்?
துன்பமாகும்...
--------------------------------------------------------------------------------------
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
-139.
ஒழுக்கமுடையோர் நன்னெறிகளை மட்டுமே பேசுவர்... வாய்த் தவறியும் தீநெறிகளை கோடிட்டு காட்ட மாட்டர்...
*பார்ப்பனன்
பேசுவது யாவும் ஒழுக்கமற்ற சொற்களே... மதம், சடங்கு, வழிபாடு, கடவுளர் வரலாறு என எதிலும் அவன் ஒழுங்கீனத்தை சரளமாகக் காணலாம்...
-----------------------------------------------------------------------
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
-140.
அறிவியலின் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலை வளர வேண்டும்... அல்லாமல், தான் வேதம் கற்றவன், மதநூல் பல கற்றவன் மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எவன் பழமை வாதம் பேசினாலும், அவன் கல்வியறிவு அற்றவன் ஆவான்...
*விஞ்ஞானம், மானிடரின் வாழ்நாட்களை அதிகரித்துள்ளது... மேலும், கல்வி, கேள்வியை எழுப்பி மானிடரை சிந்திக்க வைக்கிறது...'
'இவற்றை புறம்தள்ளி, வேதம் காட்டும் பழமையை மக்கள் பின்பற்ற வேண்டும்' என்பவன் அறிவற்றவன் ஆவான்...
----------------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் -15.
பிறனில் விழையாமை .
பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
-141.
அறம்பொருள் = நன்னெறி,நல்லொக்கம்.
பிறன் மனைவி மீது இச்சைக் கொள்ளும் இழிகுணம், இவ்வுலகில் நன்னெறியோடு வாழ்வோரிடம் இருக்காது...
*வேறு யாரிடம் இருக்கும்?
ஒழுக்கமற்ற வாழ்வு வாழும் பார்ப்பனனிடம் இழிகுணம் இருக்கும்... ஒரு முனிவனின்
மனைவி மீது இச்சைப் பூண்டு, மாறுவேடத்தில் சென்று கள்ளப் புணர்ச்சியில் கடவுள் ஈடுபட்டதாக பார்ப்பனன் நூல்கள் கூறுகின்றன... மேலும், பிறன் மனைவியை புணர பார்ப்பனனுக்கு வழிகோலுகிறது அந்நூல்கள்!...
இன்றைக்கும் கோவில் கருவறைக்குள் பார்ப்பனன், பிறன் மனைவியோடும், சிறுமிகளோடு பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவதை காண்கிறோம்...
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
-142.
இழிவானோரைக் காட்டிலும், மிக இழிவானோர் எவரெனில்?... அடுத்தவன் மனைவி மீது இச்சைக் கொண்டோர் ஆவர்... இவர்களைக் காட்டிலும் ஒழுங்கீனர் எவரும் இலர்...
------------------------------------------------------------------
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.
-143.
விளிந்தார் = இறந்தவர்
மன்ற தெளிந்தார்= உயிர்த் தோழன்
பிறர் மனைவியிடம் கள்ள உறவு கொள்வது ஒழுக்கமற்றவன் புரியும் செயல்!.... அதிலும்; அளவுக் கடந்த நம்பிக்கைக் கொண்டு - உயிருக்கு உயிராக பழகும் உற்றத் தோழனின் மனைவியிடம் கள்ள உறவுக் கொள்வோனை மானிடன் எனல் தவறு... அவனை பிணம் எனச் சொல்வதே சரியாகும்...
ஏனெனில், பிணத்திற்கு பகுத்தறியும் உணர்வு இருக்காதே... நல் உணர்வினை யிழந்தோன், உயிரிழந்த பிணம் ஆவான்...
---------------------------------------------------------------------------
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
-144.
பெருஞ் செல்வந்தனாயின் என்ன?... கல்விப் பல கற்று, பட்டம் பலப் பெற்ற வனாயின் என்ன?... அவன் பிறரின் தூற்றுதலுக்கு உள்ளாகி இழிப் பார்வைக்கு உள்ளாக மாட்டானா?...
உள்ளாவான்! ஏனெனில், பிறப் பெண்களைப் பெண்டாளுதல், இழிவானது என்று அவன் சிறிதளவேனும் சிந்தித்திருந்தால் இழிச்செயலுக்கு தன்னை ஆட்படுத்தி யிருக்க மாட்டானே...
-------------------------------------------------------------------------
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
-145.
வாய்ப்புகள் சாதகமாக - எளிதாக - அமைந்திருக்கிறது என்பதற்காக, அடுத்தவன் மனைவியோடு கூடிட செல்வோனுக்கு, அவன் அழையாமலே பழி வந்து சேரும்... அழையா பழி!
-------------------------------------------------------------
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிருப்பான் கண். -146.
பிறன் மனைவியோடு, இச்சைக் கொண்டு, கள்ள உறவுக் கொண்டால் பகை வரும்... அதனைத் தொடர்ந்து குற்றமும் கூடும்... குற்றத்தினை ஒட்டிய தண்டனை கிடைக்கும்... தண்டனையோடு நின்று விடுமா?... வாழ்நாள் பழிச் சொல்லும் படரும்...
ஆனால்; இவைக் குறித்து எந்த சிந்தித்தலும் இல்லாமல், பிறன் மனைவியோடு கூடிட உள்ளம் அலாவும்...
----------------------------------------------------------------
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தான்.
-147.
ஒருவனுக்கு, ஒருத்தி எனும் கோட்பாட்டை மதித்து வாழ்பவன் எவனோ, அவன் அடுத்தவன் மனைவி மீது காம இச்சைக் கொள்ள மாட்டான்...
*ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடு, பார்ப்பனனிடத்தில் இல்லை... அவன் மன்னர்களின் துணையோடு பிறன் மனையாளை பெண்டாண்டு உள்ளான் வள்ளுவன் காலத்தில் என்பது தெளிவாகிறது... இந்நிலை கேரளா மண்ணில் வெள்ளையர் காலத்திலும் தொடர்ந்திருக்கிறது...
-------------------------------------------------------------------------------
இல்லறவியல் அரங்க கனகராசன் உரை.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. -148.
அடுத்தவன் மனைவியின் மேனியழகில் - காம இச்சைக் கொள்ளாமல் - மன உறுதியுடன் திகழ்வது பேராண்மை எனப்படும்...
பேராண்மை கொண்டோர் சான்றோர் ஆவர்... நேர்மையானச் செயலிதனை சான்றோரின் பேரொழுக்கம் எனலாம்...
----------------------------------------------------------------------
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார். -149.
வாழ்வில் தூய்மை உரியோன் எவன் எனில்?
கடலால் சூழப்பட்டிருப்பினும் இந்நிலம் தன் சுழற்சியில் உறுதியாக இருக்கிறது... அடுத்தவன் மனைவியவள், தோகைமயிற் போல் இருப்பினும், அவளின் தோள் தழுவிட இச்சைக் கொள்ளாமல், மன உறுதியுடன் இருப்பவன் எவனோ, அவனே வாழ் நெறியில் தூய்மையாளன் ஆவான்...
*ஒரு ஆடவன் பெண் வேடம் தரித்தாலே, மயங்கி காமஇச்சையில் மூழ்கும் கடவுளரை தூயோர் என பார்ப்பனன் நூற்கள் கூறுகின்றன...
------------------------------------------------------------------------------
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
-150.
கொள்ளையடித்தல், கொலை செய்தல், குறுக்கு வழியில் பொருள் ஈட்டல் போன்றவை நேர்மையற்ற செயல்... இதனினும் செய்யக்கூடாத ஒன்றுண்டு.... அது எதுவெனில்?
பிறன் மனைவியின் மேனி எழிலில் மயங்காதிருத்தல் ஆகும்...
*கண்ணன் என்போன் மங்கையரின் ஆடைகளைத் திருடி, கலவிக்கு உட்படுத்தி னானாம்... இதனை பெருமைமிகுக் கதைகளாக பார்ப்பன நூல்கள் கூறுகின்றன... ஒழுங்கின்மை என்பது பார்ப்பனனின் செயலாகும்...
-------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் -16.
பொறையுடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
-151.
தன்னை வெட்டி அகழ்பனையும். பூமியானது தாங்கி, தன் கடமையில் வழுவாது சுழல்கிறது... அதுபோல் ஒருவன் இகழ்ந்தாலும், கடமையை மறந்து விடாமல் – நற்பணியாற்று வதில் இருந்து - விலகி விடாதிருப்பது தலை சிறந்ததாகும்...
*’சூத்திரன்' என்று பார்ப்பனன் திட்டினாலும், சினம் கொண்டு அவனை வெட்டுதல் போன்று எண்ணத்தை சிதறச் செய்யாமல் - பண்பிலிருந்து - வழுவாமல் இரு... அந்தச் செயல் பார்ப்பனனை தோலுரித்து தோரணங் கட்டுதற்கு ஒப்பாகும்...
----------------------------------------------------------------------------
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. -152.
ஒருவன் இழைத்த துரோகத்தைப் பொறுத்துக் கொள்வது நன்று!... பொறுத்துப் போவதை விட, அதனை மறந்து விடுவது மிகவும் நன்று!...
*கல்வி கற்றால் நாவில் சூடு வைக்கிறானா பார்ப்பனன்... அதற்காக நீ பாப்பனனின் குரல்வளையை அறுக்காதே...
அவன் சூடு வைத்ததை பொறுத்து கொள்... அதைவிட அந்த நிகழ்வினை அடியோடு மறந்துவிடு... அதுவே நற்செயலாகும்...
-------------------------------------------------------------------------------
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
-153.
வறுமை நிலையால் சிலர், வறிய சூழலில் வாழ்கின்றனர்... அவர்களால் பிறருக்கு விருந்தளிக்க வியலாது... ஆனால்; வாய்ப்பிருந்தும் ஒருவன் விருந்தினருக்கு விருந்தளிக்க மறுக்கிறான் எனில், வறியோரின் வறுமையைக் காட்டிலும் அவனுடைய மனதில் கொடிய வறுமை நிலவுகிறது எனலாம்...
பேராற்றல் என்பது, முட்டாள்கள் செய்யும் தீங்கை பொறுத்துக் கொள்ளும் ஒருவனது சகிப்புத் தன்மையே ஆகும்...
*பார்ப்பனன் அறிஞன் அல்லன்... அவன் வடிகட்டிய முட்டாள்.. அதனால்தான் மானிடரை பாகுப் படுத்தி நான்கு வருணம் செயல் படுத்துகிறான்... சக மானிடரை இழிவு செய்கிறான்... இழிவுப் படுத்தும் பார்ப்பனனை பழிவாங்க, அவனை நடுவீதியில் தூக்கில் தொங்க விட நினைக்காதே... அவன் முட்டாள் என்பதால், அவன் இழைக்கும் தீங்கை பொறுத்துக் கொள்... அந்த சகிப்புத்தன்மை, உன்னை பேராற்றல் மிக்கவன் என்று காட்டும்...
---------------------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுக்கப் படும்.
-154.
நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என எண்ணும் எவனும், ஒரு போதும் ஆத்திரம் படக் கூடாது... சகிப்புத் தன்மையில் உறுதியாய் இருக்க வேண்டும்...
*சூத்திரனின் பொருள்களை கொள்ளையிட பார்ப்பனனுக்கு உரிமையுண்டு என்ற ஆரியநூல்களின் நியதிப்படி, உன் உடைமைகளை அவன் கொள்ளையிடட்டும்... அரசிடம் சொல்லி உன்னிடம் அதிக வரி வசூல் செய்யட்டும்... இதற்காக நீ ஆத்திரம் பட்டு, பார்ப்பனனை விரட்ட முனையாதே... சகிப்புத் தன்மையுடன் வாழ்!...
---------------------------------------------------------------------
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. -155.
தீங்கு செய்தவனை, மக்கள் ஒருபோதும் சக மானிடனாக ஏற்றுக் கொள்வதில்லை...
ஆனால்; தீங்கிழைத்தவனை மன்னித்து, பொறுத்துக் கொள்வோனை மக்கள் போற்றுவர்... குணத்தில் தங்கம் என்று வாழ்த்துவர்...
*உனது உரிமையைப் பறிக்கும் பார்பானனின் செயலை எவரும் நற்செயல் என்று சொல்ல மாட்டார்... ஆயினும், உன் உரிமையை பறிப்பவனை எதிர்த்து ஏதும் செய்து விடாதே... பார்ப்பனனின் தகாதச் செயலுக்கு நீ தலை வணங்கிடு... மக்கள் உன் செயலை பெருந்தன்மை என கூறுவர்... தங்கமான மானிடன் என்று போற்றுவர்...
-------------------------------------------------------------------
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
-156.
தீங்கு செய்தவனுக்கு, ஒரு நாள் மட்டுமே இன்பம்!... மன்னித்துப் பொறுத்துக் கொள்வோனை வாழ்நாளெல்லாம் வாழ்த்துவர் மக்கள்...
*எந்த நாட்டிலும், வந்தேறிகள் சொந்த நாட்டு மக்களை 'சூத்திரன்' என்று சொல்வதில்லை.
இங்கே வந்தேறிகள் இந்நாட்டு குடிகளை 'சூத்திரன்' என்று உரக்கக் கூவி, உல்லாச வாழ்வு வாழ்கின்றனர்... இதனை நினைத்து நீ பொங்கி விடாதே... 'சூத்திரன்' என்று சொல்வதால் பார்ப்பனன் மனம் மட்டுமே மகிழும்...
உன்னை நீ சூத்திரன் என்று ஒத்துக் கொண்டு, பார்ப்பனனுக்கு தலைவணங்கி நிற்பதால், உன்னை அகிலமே வியந்துப் பார்த்து மகிழும்...
இல்லறவியல்
திருக்குறள் உரை.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
-157.
தனது உரிமைகள் திறைமை யற்றவர்களால் பறிக்கப்பட்டு தீங்கு இழைக்கப் படுகிறது... அதற்காக மனம் நொந்து பழிவாங்கும் செயலில் ஈடுபடக்கூடாது... பொறுமை காத்தல் நன்று!
*உயரிய பொறுப்புகள் ஆற்றிடுதற்கு தேவையான கல்வித் தகுதியிருப்பினும் - திறன் இருந்தும் - ஒருவனுக்கு தீங்கு இழைக்கப் படுகிறது... ஏனெனில், பிறப்பால் அவன் பார்ப்பனன் அல்ல என்பதால்! ... தகுதி இருந்தும் உரிமை மறுக்கப் படுகிறதே என்று மனம் நொந்து, கெடுதியாளன் பார்ப்பனனை நாடு கடத்துதல் போன்ற செயலில் ஈடுபட்டுவிடாதே... அதுவே நல்லது...
---------------------------------------------------------------------------
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
-158.
எவனொருவன் தன் சூழ்ச்சியாலும், தந்திரத்தாலும் ஒடுக்கினாலும், நீ உன் அறிவுத் திறன் கொண்டு வென்றிடு!
*மதத்தின் பேரிலும், கடவுள் பேரிலும், ஆகமம் என்ற சூழ்ச்சியின் பேரிலும் பார்ப்பனன் உன் கல்வியுரிமை மற்றும் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்தாலும், நீ ஆத்திரம் கொண்டு அவனை அழிக்க நினைக்காதே... கல்வியால் அவனை வென்றிடு...
-------------------------------------------------------------------
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
-159.
இறந்தார்வாய் இன்னாச்சொல் = அறிவற்றவன்
பேசும் பேச்சு.
கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல்
என ஐம்புலன்களையும் சீராக கட்டுக்குள் வைத்திருப்பவன் தூய்மையாளன் ஆவான்... தூய்மையானவனுக்கு
இணையானவன் எவனெனில்? அறிவற்றவன் வாயிலிருந்து
வெளிப்படும் தீயசொற்களால் ஆத்திரம் கொள்ளாமல் அமைதி காப்பவனே தூய்மையாளனுக்கு
இணையாவான்...
*உன்னை
சூத்திரன் என்றும், தாசி மகன் என்றும், உனக்கு கல்விக் கற்க உரிமையில்லை என்றும்
எங்கிருந்தோ நாடோடியாய் ஈங்கு வந்த பார்ப்பனன் கூறுகிறான் எனில் ஆத்திரம்
கொள்ளாதே... அவன் அறிவற்றவன்... ஆதலால் அவனை அடிக்க முற்படாதே!... அமைதிக் காத்திடு... உன் அமைதி
அவனிடத்தில் உன்னை உயர்வாகக் காட்டும்...
இல்லறவியல் திருக்குறள் உரை.
உண்ணாது
நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல்
நோற்பாரின் பின். -160.
சிலர்
கடவுளின் அருள் கிட்டும் என்ற மூட எண்ணத்தில், சில நாள் அல்லது சில பொழுது
உண்ணாதிருப்பர்... உண்ணாதிருப்பதால் கடவுள் அருள் கிட்டும் என்பது ஆரியர் கூற்று...
ஆயினும்
உண்ணாதிருப்பது என்பது எல்லாராலும் இயலாது... பசியை அடக்கும் ஆற்றல் வேண்டும்...
பசியை அடக்கும் ஆற்றல் உள்ளோர் பெரியர் என்பர்... ஆனால்;
உண்மையில் பெரியர் யாரெனில்?
பிறர்
பொழியும் கொடுஞ் சொற்களைக் கேட்டும், ஆத்திரம் கொள்ளாமல் அமைதிக் காத்து சகித்து
வாழ்வோரே பெரியர் ஆவர்...
*உண்ணாநிலை
மேற்கொள்ளுதற்கும் ஆற்றல் வேண்டும்... அவ்வாற்றால் மிக்கோரை பெரியர்
என்கின்றனர்...
உண்மையில்
பெரியர் எவரெனில்,
மணவிழாவிற்கு அழைக்கப்பட்ட,
பார்ப்பனன் வாய்த் திறந்து ஓசையுடன் 'இந்திரனே இந்த சூத்திரனுக்கு திருமணம்
செய்விக்க வந்துள்ளேன்... இவனுக்கு மனைவியாக உள்ள கன்னியை முதலில் நீ
துய்த்துக்கொள்... சூரிய பகவானே நீயும் இவளை அனுபவித்துக் கொள்... நானும் மனதால் இவளை அனுபவித்து
விட்டு இந்த சூத்திரனுக்கு தாரை வார்க்கிறேன்" என்று சொல்லுவான்... அதனைக்
கேட்டும் ஆத்திரம் கொள்ளாமல், அமைதிக் காத்து
சகித்துக் கொண்டு பார்ப்பானனுக்கு காசு கொடுத்து அனுப்புகிறானே மணமகன்;
அவனே பெரியன் ஆவான்...
---------------------------------------------------------------------------
இல்லறவியல் அதிகாரம் :17.
அழுக்காற்றாமை
ஒழுக்காறாக்
கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு
இல்லாத இயல்பு. -161.
தூய
வாழ்வின் துணை எதுவெனில்?... நல்லொழுக்கம் ஆகும்!... மேலும், நெஞ்சில் துளியளவும் பொறாமைக்கு
இடந்தராமல் வாழும் வாழ்வாகும்...
----------------------------------------------------------------
விழுப்பேற்றின்
அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின்
அன்மை பெறின். -162.
சிறந்த
நன்மதிப்பைத் தருவது ஒன்றுண்டு... அந்த ஒன்றிற்கு ஈடானது ஏதுமில்லை... அந்த ஒன்று
எதுவெனில்? எவரிடத்தும் பொறாமையின்றி பழகுதல் வேண்டும்... அப்பண்பே நன்மதிப்பை வழங்கும்!
-------------------------------------------------------------
அறன்ஆக்கம்
வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது
அழுக்கறுப் பான். -163.
நேர்வழியில்
பொருளீட்ட மனம் மறுக்கும்... நேர்மையெனில் கசக்கும்... நேரிய வழியில் பொருளீட்டி மகிழ்வுடன் வாழ்வோனைக் காணின் மனம் வெறுக்கும்...
நேர்மையான
வாழ்வே சிறந்தது என்பதில் மனம் உடன்பாடு கொள்ளாது... அத்தகைய
குணம் எவனிடத்தில் இருக்குமெனில் பொறாமையால் வெம்புபவன்
எவனோ அவனிடத்தில் இருக்கும்...
--------------------------------------------------------------
அழுக்காற்றின்
அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம்
படுபாக்கு அறிந்து. -164.
பொறாமைக்
கொள்ளவும் மாட்டார்... பொல்லாததையும் செய்ய மாட்டார்... அவர்
எவரெனில்?
பொறாமை
என்பது இழிவான குணம்... பொறாமையால் பழிவந்து சேரும் என்பதை நன்கறிந்தோர்...
---------------------------------------------------------
அழுக்காறு
உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும்
கேடீன் பது. -165.
பொறாமை
குணம் உடையவரை அழிக்க, அவரிடத்தில் மண்டியிருக்கும் பொறாமை குணமே போதும்... எதிரி
மறந்தாலும், பொறாமை குணமே அவருடைய வாழ்வை நாசம் படுத்தி விடும்...
---------------------------------------------------------
இல்லறவியல் அரங்க கனகராசன் உரை.
கொடுப்பது
அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம்
இன்றிக் கெடும். -166.
சுற்றம் = பொறாமை மனநிலைக் கொண்டவர்கள்
*இங்கே, சுற்றம் எனும் சொல்லுக்கு, குடும்பத்தினர் மற்றும் உறவினர் என பொருள் தந்துள்ளனர்... ஒருவன் பொறாமை உடையவன் எனில், அவனுடைய குடும்பமும் உறவினரும் உண்ண உணவின்றி, உடுத்த ஆடையின்றி போவராம்... எதன் அடிப்படையில் இப்படியோர் பொருள் தந்தனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்...
ஒருவரின் உரையை அப்படியே நகல் எடுத்து, தன்னையும் உரையாசிரியர் என்று சொல்வதில் என்ன பெருமை?
பிறரின் உரையில் மாற்றுக் கருத்து இருப்பின், புதிதாக உரை எழுதுவதில் பொருள் உண்டு... முழுமையாக பிறரின் உரையை நகல் எடுப்பதால் என்ன பலன்?
இது என்னுடைய உரை :
ஒருவனுக்கு அளவான ஊதியமும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் இன்னொருவனுக்கு இவனைவிட கூடுதல் ஊதியமும் வழங்கப்படுகிறது... கூடுதல் ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது?
தகுதியின் அடிப்படையிலும், திறமையின் அடிப்படையிலும், மூப்பின் அடிப்படையிலும் ஊதியம் மாறுபடலாம்...
தன்னைவிட கூடுதலாக ஊதியம் இன்னொருவனுக்கு வழங்கப்படுகிறதே என்று ஒருவன் பொறாமைக் கொள்வான் எனில், அவனுடைய மனநிலையில் பாதிப்பு என்று உணர வேண்டியுள்ளது...
இவனைப் போன்று -பொறாமை குணம் கொண்டோர் - மனதளவில் புழுங்கி புழுங்கி மன அழுத்தத்திற்கு உள்ளவர்... மன அழுத்தம் அதிகரிக்கும் போது மனப்பிறழ்வு ஏற்பட்டு தன்னையே மறந்து - நிகழ் சம்பவங்களை உணரும் திறன் அற்றுப் போய் - மன நோயாளியாய் மாறுவர்...
உணர்வற்று நரம்பு நாளங்கள் பாதிப்படைந்து நேரத்திற்கு - பசிக்கு - உண்ணவும் மறந்து விடக்கூடிய அளவுக்கு உடல் நாளங்களில் மாற்றம் ஏற்படும்... மேலும், உடுத்தவும் மனமற்றவர்களாய் மனப் பிறழ்வு பெரியளவில், பாதிப்பை ஏற்படுத்தும்...
*இது உளவியல் உட்படுத்தும் குறள்... வள்ளுவன் உளவியலை காட்டுகிறான்...
-----------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
-167.
செய்யவள் = சிந்தனைத் தெளிவு பெற்றாள்
தவ்வை = தவிப்பு,இன்னல், துன்பம்.
*இக்குறளுக்கும் மூதேவி என ஒன்றை கொண்டு வந்து நிறுத்துகின்றனர் திருக்குறளுக்கு உரை எழுதியோர் பலர்...
மூதேவி என்பவள் யார்? எங்கிருக்கிறாள்... அவளின் பணியென்ன?... அவளைத் தேடிச் சென்று, அழைத்து வந்து இக்குறளின் நாயகி தன் இணையாளனுக்கு ஏன் காட்டினாள்?... மூதேவிக்கு கொடுக்கப்பட்ட கூலி எவ்வளவு?... மூதேவியை கண்டோர் யார்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன...
மக்கள் சிந்தையில் தெளிவு பெறல் வேண்டி குறள் தீட்டிய வள்ளுவன், மூதேவி என்ற கற்பனைப் பாத்திரம் புகுத்தி மக்களை மேலும் மூடர் ஆக்க முனைவானா?...
இது என்னுரை :
இணையாளனின் அளவுமீறிய பொறாமை குணத்தால், பற்பல பழிகள் வந்தடையும்... பொது வெளியில் தூற்றுதல் பெருகும்... செவ்விய சிந்தைக் கொண்ட இணையாள், இணையாளனை திருத்த முயன்றாலும், அவளால் இயலாது...
துணைவியானவள்
துணைவனின் போக்கு மாறாத நிலைக்
கண்டு அவனை விட்டுப் பிரியும்
நிலைக்குத் தள்ளப்படுவாள்... துணைவியின் பிரிவு துணைவனுக்கு, பெருந் துன்பத்தை கொடுக்கும்... துணைவி இன்மையால், ஏற்படும் இன்னல் கண்டேனும்
துணைவன் மனந்திருந்தலாம் என்று கருதி, பிரிவின் துன்பத்தை காட்டுவாள் துணைவி!...
-----------------------------------------------------------
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
-168.
பொறாமை குணத்திற்கு எவனொருவன் ,தன் நெஞ்சில் இடம் தந்திருப்பினும், அப் பொறாமையானது அவனது நற்பெயரை அழித்துவிடும்... மேலும், அவனை தீய வழிதனைக் காட்டி, அழித்துவிடும்...
--------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள்
உரை.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
-169.
பொறாமை குணம் கொண்டவன், மக்களுக்கு கேடு புரிந்து இன்பம் காணுதல் அடைவான்... அத்தகையவன் ஓர்நாள், மக்களுக்கு நன்மையாற்றிட முன்வருகிறான் எனில் மக்கள் அதனை ஏற்காமல் வியப்புக் கொள்வர்...
அதேபோல், மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவன், ஓர்நாள், மக்கள் நலனுக்கு எதிரானச் செயல்பாடு கொள்வான் எனில் மக்கள் அவன் மீது கோபம் கொள்ளார்...
எதன் பொருட்டு - எந்த சிக்கலின் பொருட்டு – நல்லவன் மன மாற்றத்திற்கு
உள்ளாக்கப்பட்டான் என்பதை மக்கள் எண்ணம் கொள்வர்...
----------------------------------------------------------------------
அழுக்கற்று
அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
-170.
பெறாமை குணத்தில் இருந்து விடுப்பட்டோரும் இல்லை... பொறாமை குணம் இல்லாதவர்கள் வாழ்வில் தோற்றும் விடுவதில்லை...
--------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் :18.
வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் அங்கே தரும்.
-171.
ஒருபொருளை நல்வழியிலும் பெறலாம்... தீயவழியிலும் அடையலாம்.... ஆனால்; நடுநிலைமையுடன் சிந்தித்து எவ்வழியில் பெற்றால் சிறந்தது என ஆய்வுச் செய்தல் வேண்டும்...
மிகச்சிறந்த பொருளாகவே இருந்தாலும் நடுநிலைமையில் சிந்திக்காமல், ஒரு பொருள்தனை அடைய பேராசை கொண்டால், அது பெரும் துன்பம்தனை தரும்... பேராசையானது, குடும்பத்தின் நன்மதிப்பை சீர்குலைக்கும்...
பல குற்றச் செயல்களுக்கும் வழி ஏற்படுத்தும்...
-----------------------------------------------------------------------
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
-172.
பல நன்மைகளை தரக்கூடிய பொருள்தான் என்றாலும் அதன்மீது பேராசை கொள்ளுதல்
கூடாது...
நல்வழியில் அப்பொருளை அடைய வாய்ப்பு இல்லாத நிலையில்,தீயவழியிலேனும் பெற்றிட அஞ்சுவர் எவரெனில்?
தீயவழியில் அடைந்தால் பழிச்சொல்லுக்கு உள்ளாக நேரிடும் என்று மான உணர்ச்சி
உடையோர் தீயவழியில் பொருள் அடைய மாட்டர்...
--------------------------------------------------------------------
சிற்றின்பம்
வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
-173.
அற்பசுகங் கருதி, பேராசைக்கு ஆட்படுவது தவறு!... இதனை உணர்ந்தோர்
நேர்மை யற்ற வழியை நாடமாட்டர்... ஏனெனில்? நன்மதிப்புடன் கூடிய வாழ்வு சிறந்தது என்று கருதுவோர் கண்ணியமற்ற செயல் செய்யார்...
-----------------------------------------------------------------------------
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
-174.
புன்மை = வறுமை.
தம்மிடம் இல்லாத ஒன்றின் மீது பேராசைக் கொண்டு, பெருந்துன்பத்தில் சிக்காதவர் எவரெனில்? கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என ஐம்புலன்களையும் அடக்கி யாளும் நன்னெறியாளர் ஆவர்...
வறுமை நிலையிலும் நல் மாண்போடு வாழ்வோரின் வாழ்க்கை பொதுமக்களுக்கு பாடமாக அமையும்...
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
-175.
நுட்பமான கல்விக் கற்று, பரந்த அறிவினை உடையவன் என்ற போதிலும் ஏது பலன்?
பிறர் உடைமைகள் மீது பேராசைக் கொண்டு அதனை தகாத வழியில் அடைய முனைதல் நன்றோ?
ஆசைப் பட்ட பொருள் எளிதில் கிட்டாது எனும் சூழலில் கற்ற கல்வியால் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியும், அத்துமீறியும், ஆணவத்தை கைக் கொண்டும் அடாவடியாக அப்பொருளை அபகரித்தல் செய்வோன், பரந்த அறிவினை பெற்றவன் என்பதில் ஏது பெருமை?
*பார்ப்பனன் நெற்றியில் பிறந்தவனாம்... ஒழுக்க சீலனாம்... இப்படி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டு, பிறர் உடைமைமைகளை மதம் கடவுள் பேரால் தனதாக்கி கொள்வான் பார்ப்பனன்...
-----------------------------------------------------------
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
-176.
அன்பு - அமைதி - சாந்தம் - கருணை - என்றெல்லாம் பேசுவான்... பார்வையில் கனிவுக் காட்டுவான்... கோலத்தில் தூயோனாய் மாறி நிற்பான்... தன்னை கடவுளின் தோற்றம் என்பான்...
ஆனால்; உள்ளத்தில் பேராசைக் கொண்டிருப்பான்... உழைக்காமல் பிறர் பொருளைக் கைக் கொள்ள, கடவுள் என்ற பேரிலும், மதம் மற்றும் வேள்வி, யாகம் எனும் பேரில் எவ்வாறெல்லாம் ஏமாற்றி, மக்களை ஏய்த்துப் பிழைக்கலாம் என்று, பொல்லாத எண்ணம் கொண்டிருப்பான்... அவனின் கெடுதல் எண்ணம் வெளிச்சமாகும் பட்சத்தில், அவன் அழிவது திண்ணம்... *பெரியாரின் காலத்திலிருந்து பார்பனனின் ஈரல்குலை ஆட்டம் கண்டு வருகிறது... ஒரு கட்டத்தில் ஏய்ப்பவன் அழிவான்...
--------------------------------------------------------------------------
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
-177.
பேராசைக் கொண்டு, நேர்மையற்ற வழியில் செல்வம் சேர்த்தல் கூடாது... சொத்து குவிந்த விதம் குறித்து, பொறுப்பாளர்களால் ஆய்வு நடத்தப் படலாம்... தீயவழியில் குவிக்கப் பட்டச் சொத்தானது, கொடிய மரணத்தைவிட- கொடூர வேதனையைத் தந்து எதிர்வினையின் சான்றாக மாறும்...
------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
-178.
ஒருவனின் செல்வத்தின் மீது, தீய மதிப்பீடோ - இழுக்கான கணிப்போ - அவச் சொல்லோ - ஏற்படாதிருக்க வேண்டுமெனில்,
பிறரிடமிருந்து பொருளைப் பறிக்கும் பேராசை அற்ற தன்மை - குணம் - அவனிடத்தில் இருக்கவேண்டும்...
-----------------------------------------------------------------------
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
-179.
திரு = சிறப்பு.
நேர்மையுடனும், நப்பாசை இன்றியும் செயலாற்றும் பண்பாளரை நோக்கி பாராட்டுதல்கள்
குவியும்...
*பண்பாளர் பழிக்கு சிக்குவதில்லை... பார்ப்பனன் செயல் யாவும் - உழைக்காமல் - பிறர் பொருளை வஞ்சித்தலில் இருப்பதால், பழிக்கு சிக்குகின்றனர்...
--------------------------------------------------------------------
இறல்ஈனும் எண்ணாது வெஃகி விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
-180.
இறல் = அழிவு.
விறல் = பெருமை, சிறப்பு, வெற்றி.
செருக்கு = உறுதிநிலை.
பின்விளைவை சிந்தியாமல், பேராசைக் கொள்வோருக்குப் பெருந்துன்பம் நிகழும்...
ஆழ்நெஞ்சிலும் பேராசைக்கு இடமின்றி வாழ்வோர் பெருஞ் சிறப்பு எய்துவர்...
----------------------------------------------------------------------------
இல்லறவியல் அதிகாரம் - 19.
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
-181.
நன்னெறிகளைப் பேச வேண்டாம்... நற்செயல்களையும் செய்ய வேண்டாம்... ஆனால்; ஒருவனை புறங்கூறாதே... அதுவே நன்செயலாகும்!
------------------------------------------------------------------
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. -182.
தகாதச் செயல் செய்வதுக் குற்றமாகும்... இதனைக் காட்டிலும், தீமையானது யாதெனில்?
எதிரில் இல்லாத ஒருவனை இகழ்வதும், நேரில் அவனைப் புகழ்வதும், பொய் சிரிப்பு சிரித்தலும் மிகத் தீமையானதாகும்...
------------------------------------------------------------------------
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
-183.
புறங்கூறி பித்தலாட்டம் மிக்க வாழ்வு வாழ்வதைவிட, இறந்து விடுதல்மேலானது...
ஏனெனில்? நேர்மையுடன் கூடிய வாழ்வுக்கு வழி இல்லாது போனதால், நேர்மையற்ற வாழ்வை வாழப் பிடிக்காமல் இறந்தான் என்று மரண நிகழ்வை போற்றுவர்...
*'நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.'
எந்நிலையிலும் கொள்கையிலிருந்து வழுவாமல் நேர்மையுடன் வாழ்தலை நல்லோர் போற்றுவர்...
--------------------------------------------------------
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
-184.
கண்ணெதிரில் இருக்கும் போது கடுஞ் சொல் கொண்டும் ஒருவனைப் பேசலாம்... ஆனால்; அவன் இல்லாத போது, அவனைப் பற்றி புறங்கூறல் கூடாது...
ஏனெனில், புறங்கூறுதல் தீயவிளைவை ஏற்படுத்தும்... பின்விளைவை மனதில் கொண்டு புறங்கூறுதல் வேண்டாம்...
---------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
-185.
அன்மை = தீயக் குணம்
புன்மை
= தீயப் பழக்கம்
மேடையில் மக்களிடையே நீதி, நெறி என்று சொற்பொழிவு ஆற்றுபவனின் தீயக் குணத்தை எவ்வாறு அறியலாம்...
நீதிக்கதை எவருக்கு எனில், ஒரு சாராருக்கு மட்டும் நன்மை விளையக் கூடிய கருத்துகளை மட்டும் முன்னிறுத்திப் பேசுவான்... ஏனையோர் வாழ்வைக் கெடுத்தேனும் வாழ வேண்டும் என்பது போல் அவன் பேசுவதிலிருந்தே அவனது குணநலனை அறியலாம்... அவன் மனம் பிற மக்கள் மீது பொறாமையில் தோய்ந்திருப்பதை - அவனது தீயப் பழக்கத்தை - அவன் பேச்சில் காணலாம்...
*பொதுவாக பார்ப்பனன் பேச்சு இவ்வண்ணமே இருக்கும்...
-------------------------------------------------------------------------
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
-186.
பிறரைப் பழிப்பது - புறங்கூறுவது - என ஒருவனது நடத்தை இருக்குமேயானால், அது அவனது இயல்புத் தன்மை என்பதை அறிவோர் - அவனைப் பற்றிய எச்சரிக்கையை பிறருக்கும் பரிமாறி விடுவர்...
---------------------------------------------------------
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
- 187.
நண்பரிடையே, பகையை உண்டாக்கி நட்பை முறிக்கும் கயவர்களும் உண்டு!...
இக்கயவர்கள் நட்பின் இலக்கணத்தை அறியாதவர்கள்...
*பிரித்தாளும் சூழ்ச்சியை பார்ப்பனன் செய்வான்... மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வது பொறாமைக் குணம் கொண்ட, பார்ப்பனனுக்கு பிடிக்காது...
---------------------------------------------------------------------------
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. -188.
உள்ளார்ந்த உணர்வுடன் நெருங்கிப் பழகும், நண்பர்களின் குற்றத்தை, ஊரெங்கும் சொல்லிப் பரப்பும் இயல்புடையோரை என்னவென்பது?...
நண்பர்களின் செயலையே தூற்றும் இவர்கள், பகைவர்களிடத்தில் எத்தகைய நிலைப்பாடு
கொள்வர்?... பொறாமை மட்டுமே இவர்களின் நிலைப்பாடு!
-------------------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
-189.
பொறை = சுமை.
புன்சொல் = இழிவானச் சொற்கள்
இவ்வுலகின் சுழற்சி எதனை நோக்கியதாக இருக்கிறது?... நேர்மையின் பாற்பட்டது என்று சொல்வோமா?...
நல்லவர்களோடு, பொறாமை மிக்கோரையும் சுமந்து சுழல்கிறது பூமியெனில்,அதன் செயற்பாடு பாகுபாடற்ற நேர்மையின் பாற்பட்டதோ?...
*கோள் மூட்டிகளையும் சுமந்து பூமி கோளகம் வலம் வருகிறது அதன் பாதையில்...
------------------------------------------------------------------------------------
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
-190.
பகைவனிடத்தில் குற்றம் காணுதல் போல், ஒவ்வொருவனும் தம்மிடத்திலும் குற்றம், குறை இருக்கிறதா என்று தமக்குத் தாமே ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்...
குற்றம் குறைகளை ஒவ்வொருவரும் களைந்துவிட்டால், இம்மண்ணில் வாழும் மானிடரிடையே தீமைப் படருமோ?
---------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் :20
பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
- 191.
பலரும் வெறுக்கத்தக்க, பயனற்ற சொற்கள் பேசுகிறவனை எல்லாரும் இகழ்வர்...
*பார்ப்பனன் பல்லோரின் வெறுப்புக்கு உள்ளதால் ஏனெனில், அவன் வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் எதுவுமே மானிடர் உய்வுக்கு உகந்ததாக இருப்பதில்லை...
--------------------------------------------------------------------------------
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது.
-192.
பயனற்றவைகளை பலரது முன்னிலையில் பேசுவது நல்லதல்ல!... நன்மையற்ற செயலை நண்பனுக்கு ஆற்றுவது தீமையாகும்...
நண்பனுக்கு ஆற்றும் தீமையைவிட மக்கள் முன் மாசு நிறைந்த உரையை ஆற்றுவது பெருந்தீமை பயக்கும்...
*நான்கு வருணத்தை கண்ணன் எனும் கடவுள் படைத்தான்... கண்ணன் சொல்படி நடந்தால், மக்கள் யாவரும் மோட்சம் பெறுவர் என்று பேசும் பார்ப்பனனின் பேச்சு, ஒற்றுமையுடன் வாழும் மக்களை பிரித்து, வேற்றுமையை வளர்த்து – தீமையை உண்டாக்கும்... இரு நண்பரிடையே வளரும் பகையைக் கட்டிலும், கொடும் அவலம் பெருகும்...
---------------------------------------------------------------------
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
-193.
பாரித்தல் = விரிவு.
பயனற்றவன் என்பது அவன் பேசும் பயனற்றச் சொற்களே சொல்லும்... சாரமற்ற சொற்களை மிகைப் படுத்திப் பேசிடுவான்...
*பார்ப்பனன், இராமன் ஆட்சி உன்னதமானது என்பான்... இராமன் வாழ்வு ஒழுக்கமானது என்பான்... உண்மையில் இராமன், தவம் செய்த தமிழன் ஒருவனைக் கொன்ற கொலைகாரன் என்பதையும், தன் துணையாள் மீது அய்யம் கொண்டு நெருப்பில் இறக்கி அவளைக் கொன்றவன் என்பதும் பார்ப்பனன் உரையில் இருக்காது... அதனை விரிவாக ஆழ்ந்து நோக்கினால், பார்ப்பனன் பேச்சு சாரமற்றது என விளங்கும்...
--------------------------------------------------------
இல்லறவியல் அரங்க கனகராசன் உரை.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. -194.
நன்மை விளையாது... நல்லோரின் தொடர்பும் நீங்கும்... பயன்படாத - பண்பற்ற - சொற்களை பலர் முன்னிலையில் பேசினால்!...
*பயன்படாத சொற்களை பார்ப்பனன் பலரிடம் பேசுவான்... 'கல்விக் கூடம் செல்லாதீர்... நூல்களுக்கு சரசுவதியாளை நினைத்து பூசை செய்க... கல்வித் தானாய் வரும்' என்று பார்ப்பனன் பேசுவதைக் கேட்டு ஒழுகினால், பயன் கிட்டுமோ?... கல்வியறிவும் கிட்டாது... கல்வியாளரின் தொடர்பும் நீங்கும்... வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படும்...
----------------------------------------------------------------
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். -195.
நற்புகழும், நற்பெயரும் நீங்கிவிடும்; பயனற்றச் சொற்களை பேசிடும் மதிப்பு மிக்கோருக்கும்...
*பயனற்ற சொற்களை பேசுவது பார்ப்பனன் இயல்பு!... பொதுப்பணியில் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் நல்லோர் சிலர் பார்ப்பனனைப் பின்பற்றுவோரும் உண்டு... பார்ப்பனன் பேச்சில் உள்ள நச்சுத் தன்மையை உணராது, அதனை பொதுமக்களிடம் கொண்டு செல்வோரின் பெயரும் களங்கத்திற்கு உள்ளாகும்...
------------------------------------------------------------------------------
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
-196.
பயனற்றச் சொற்களை, மிக விரும்பிப் பேசுகிறவனை மானிடன் எனலாமோ... மானிடர் உருக் கொண்டுத் திரியும் மூடன் எனில் தகும்...
*பார்ப்பனன், கண்ணன் என்போனது இழிச் செயலை, 'கண்ணன் லீலை' என மிக நயமாக விருப்போடு பாராட்டிப் பேசுவான்... உண்மையில் கண்ணன் என்போன் என்னச் செய்தான்? குளிக்கும் பெண்களின் ஆடையைத் திருடி வைத்து பேரம் பேசியவன்... ஆடை வேண்டுமெனில், அவனோடு உறவு கொள்ளப் பெண்டிரை கட்டாயம் படுத்துவான்... எளிய பெண்கள் பலியாவர்... இத்தகு இழிச்செயலை 'லீலை' எனப் பாராட்டிப் பேசுவோரை, மானிடன் எனலாமோ... பதர் எனின் தகும்...
------------------------------------------------------------------
இல்லறவியல் அரங்க கனகராசன் உரை.
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
-197.
நன்மை பயவாதச் சொற்களைப் பேசினாலும் பேசுக... சான்றோர், மக்களுக்குப் பயன்படாதச் சொற்களை பேசாதிருத்தல் நன்று!...
-----------------------------------------------------------------------
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். -198.
சொல்லின் விளைவை உணர்ந்தப் பெருமக்கள், ஒரு போதும் மக்களுக்குப் பயன் படாதச் சொற்களைப் பேசுவதில்லை...
*பூமித்தாய் பூமியைப் பாயாகச் சுருட்டி, கடலுக்குள் ஒளிந்து கொண்டாளாம்... பார்ப்பனனின் கடவுள் பன்றித் தோற்றம் பூண்டு, பூமிதாயைப் புணர்ந்து பூமியை மீட்டானாம்... இதுபோல் அறிவுக்கொவ்வாதவற்றைப் பேசி மக்களை மூடர் ஆக்குவான் பார்ப்பனன்... சொல்லின் விளைவுப் பற்றி, பார்ப்பனன் கவலைப் படுவதில்லை...
-----------------------------------------------------------------
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
-
199.
பொச்சாந்தும் = மறந்தும், தவறியும்.
பொருளற்றச் சொற்களை, மறந்தும் பேசாதவர் எவரெனில்?
கசடற கற்றுத் தெளிந்தோர்...
*சிவனோடு, கண்ணன் கூடி இன்பம் துய்த்து அய்யப்பன் என்பானை பெற்றான் என அறிவுக்கு ஒவ்வா சொற்களைப் பகுத்தறிவாளர்ப் பேசார்...
------------------------------------------------------------------------------
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
-200.
பேசுவீராக; மக்களுக்கு பயன் விளைவிக்கும் சொற்களை!...
பேசாதீர்; சொற்களில் பயனற்றச் சொற்களை!...
*இந்திரன் என்பான் அகலிகை என்பாளை திருட்டுப் புணர்ச்சி செய்தானாம்... அகலிகையின் கணவன் முனிவன் சாபமிட, இந்திரனின் மேனியில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றினவாம்... இதுபோல் காமக் கிளர்ச்சியூட்டும் கதைகள் பார்ப்பனன் பேசுவான்... இதனால் மக்களுக்கு ஏதும் பயனில்லை!...
---------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் :21.
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு.
-201.
தீயோர்த் தீமைக் குறித்து அஞ்சுவதில்லை!... ஆனால்; ஒழுக்கத்தில் சிறந்தோர் தீமைக் குறித்து அஞ்சுவர்... ஏனெனில்? தீயவை, தீய விளைவைத் தோற்றுவித்து, கேடு பயக்கும் என்பதால்!
--------------------------------------------------------------------
தீயவை
தீய
பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
-202.
தீய எண்ணம் தீமையை விளைவிக்கும்... அதனால்; தீமையை நெருப்பினும் கொடிதாகக் கருதி அஞ்சி விலக்க வேண்டும்...
-----------------------------------------------------------------
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
-203.
நன்கறிந்து உள்வாங்கிக் கொள்ளக் கூடியதில், தலை சிறந்தது எதுவெனில்?
தீமையைப் பகைவனுக்கும் செய்தல் கூடாது எனும் கோட்பாடாகும்!...
*பகைவனுக்கும் தீமை செய்தல் கூடாது என்கிறான் வள்ளுவன்... ஆனால், நாடோடிகளாய் நுழைந்திட்ட பார்ப்பனருக்கு அடைக்கலம் கொடுத்த மக்களுக்கே தீமை செய்தவராவர் பார்ப்பனர்... அடைக்கலம் கொடுத்த மக்கள் மீது வருண பேதம் ஏற்படுத்தி சொல்லவொணா தீமைசெய்தவர் பார்ப்பனர்...
----------------------------------------------------------------------
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204.
மறந்தும் பிறருக்குக் கேடு செய்தல் கூடாது... கேடு இழைத்தால், நீதி என ஒன்று, அநீதியாளனை தண்டித்து விடும்...
*வந்தேறி பார்ப்பனன் அரசின் அதிகாரத்தின் துணைக் கொண்டு எண்ணற்றக் கேடு செய்தனன் இந்நாட்டு மக்களை... இந்நாட்டு மக்கள் என்றைக்கேனும் ஒருநாள் பார்ப்பனனை சூழ்வர்...
--------------------------------------------------------------------
இல்லறவியல் திருக்குறள் உரை.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. -205.
இன்னல் தொலைய போதிய வருவாய் இல்லையே என மனம் நொந்து, தீயவை செய்தல் கூடாது...செய்தால், மேலும், மேலும் துன்பத்தில் உழலும்படி தண்டனைகள் சூழும்...
*வந்தேறி பார்ப்பனன் இந்நாட்டுக்குள் நுழையும்போது, இந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைப் போல், வளமுடனும், ஒழுங்கமைப்புடனும் தமக்கு இல்லையே எனக் கருதி, பொறாமைக் கொண்டு, மக்களின் வளமையைக் கெடுக்க அரசரின் துணைக் கொண்டு, கேடு செய்தனர்... அதனால், ஒட்டுமொத்த மக்களின் வெறுப்புக்கு ஆளாகினர் பார்ப்பனர்...
-------------------------------------------------------------------------
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
-206.
தீமையைப் பிறருக்கு செய்தல் கூடாது; - தீமையின் எதிர்வினையாக - தண்டனைக்கு உள்ளாகிவிடக் கூடாது என்று கருதுகிறவன் தீமையை பிறருக்கு இழைக்க மாட்டான்...
*பார்ப்பனன் தீமையின் உறைவிடமாக திகழ்கிறான்... அவனுடைய நூல்களும் தீமையைத் தூண்டுகின்றன... ஆதலால், பார்ப்பனன் தண்டனைக்கு உள்ளாவான்...
---------------------------------------------------------------------------
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். -207.
வேறுவிதமான பகைகளுக்கும் சமரசத் தீர்வுண்டு... திட்டமிட்டு தீயச் செயலால், உண்டாக்கபட்டப் பகை அழியாது... அது, நிழல்போல் - பழிக்கு பழியென- தொடரும்...
-----------------------------------------------------------------------
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
- 208.
தீமை செய்தவனுக்கு, தீமையே நேருகிறது... எவ்வாறெனில்? நிழல், பாதச் சுவடுகளோடு ஒட்டி உறவாடித் தொடர்வது போல், தீமைக்குரிய தண்டனையும் தொடரும்...
----------------------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
-209.
நல்லோன் எனும் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள விரும்புவன், எதன் பொருட்டும், எவருக்கும் எப்போதும் எள்ளளவும் தீமை செய்யத் துணிய துணிய மாட்டான்...
----------------------------------------------------------------------------
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். -210.
அருங்கேடு = மனநிம்மதி
மனநிம்மதியுடன் வாழ்வோன் எவனெனில்?
தீயஎண்ணத்திற்கு துளியும் இடந்தராமலும், எவருக்கும் தீமை செய்யாமலும் வாழ்பவனே மனநிம்மதியுடன் வாழ்பவன் எனப் படுவான்...
----------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் : 22
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. -211.
கைம்மாறு கருதாமல் செய்த உதவிக்கு எதனை நன்றியாய் ஈடாக்குவது?... பூமி செழிக்கப் பொழியும் வான்மழைக்கு நன்றியாய் எதனை வழங்கும் இவ்வுலகு!...
*எந்த ஒரு கைம்மாறும் கருதாமல், பார்ப்பனனின் இழி குணத்திலிருந்து மக்களை மீட்கும் ஓய்வறியா பெரியோருக்கு எதனை ஈடாய் வழங்கவியலும்?
-------------------------------------------------------------------------
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. -212.
நேர்மையான வழியில் ஈட்டப் பட்டப் பொருளாயினும், தனித்து துய்ப்பது, நன்றன்று... உதவியை எதிர்பார்த்து வாழும் எளியோருக்கும் கொடுத்து உதவிட வேண்டும்... அதுவே பொருளீட்டலின் பொருண்மையாகும்...
*தக்கார்க்கு உதவிடு என்கிறது வள்ளுவம்... பிறரின் உடைமைகளை மதத்தின் பெயரால் பிடுங்கிடு என்கிறது ஆரியம்...
------------------------------------------------------------------------------
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
-213.
ஈண்டும் = உழைத்தாலும், சென்றாலும்,
ஈட்டினாலும்.
புதிய புதிய கண்டுபிடிப்புகளால் வளமுற்றுத் திகழும் நாடுகளுக்குச் சென்று, பொருளீட்டினாலும், ஒன்றினை மட்டும் ஈட்டுவதரிது...அது எதுவெனில்? கைம்மாறு கருதாமல் எளியோருக்கும் உதவுதல் எனும் நற்பண்பாகும்!... இயல்பின் பாற்பட்டதாகும் இப்பண்பு!...
----------------------------------------------------------------------------
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
-214.
தன்னைப் போலவேப் பாவித்து, எளியோருக்கும் உதபுவன், உயிர்த் துடிப்பு உள்ளவன் ஆவான்... பிறர் துன்பம் கண்டும், உதவுதல் செய்யாதவனை உயிரற்ற சடலத்தோடு ஒப்பிடுவர் - உணர்வற்றவன் என்பர்...
*மானிடர் யாவரும் சரிநிகர் என்பவன் உயிருணர்வுக் கொண்டான் ஆவான்...
மானிடரைப் பிரித்து, இழிவுப் படுத்தி, பசியால் துடிப்பினும் ஈதல் செய்யா வன்குணம் கொண்டவன் பார்ப்பனன்... அவனை சடலம் என்பர்...
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு.
-215.
நீர்நிலைகள் நிரம்பியிருந்தால், நிலம் செழிக்கும்... அதுபோல்; மானிட நேயம் மிக்க மாமேதைகளிடம் செல்வம் இருந்தால் எளியோர் வாழ்வு மலரும்...
------------------------------------------------------------------------
பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
-216.
ஊரில் - மக்கள் வசிக்கும் - பகுதியில் - கனிதரும் மரம்... அதில் பழுத்த கனிகள் ஏராளம்... பசியின் பொருட்டும், சுவையின் பொருட்டும் கனிகள் பறித்து சுவைக்க அம்மரம் உதவியாய் இருக்கிறது... அதுபோல் - கனிதரும் மரம் போல் - செல்வமும் மானிட நேயம் மிக்கவனிடம் இருந்தால், ஏழை, எளியோர் பயன் பெறுவர்...
*பார்ப்பனன் வசம் அதிகாரம் இருந்தால், பார்ப்பனரைத் தவிர்த்து ஏழை எளியோர் இன்னல் படுவர்... மண்ணின் மைந்தரிடம் அதிகாரம் இருந்தால் மண்ணின் மைந்தர் பயன் பெறுவர்...
---------------------------------------------------------------------------
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
-217.
சிலவகை மரத்தின் இலை, கிளை, பட்டை, வேர் என தப்பாமல் யாவும் மருந்தாகி, மக்களுக்குப் பயன் படுதல் போல்- செல்வமும், பேரன்பு கொண்டோனிடம் இருந்தால் துயருறும் மக்கள் துயர் போகும்...
*செல்வம் பார்ப்பனன் போன்ற கொடுங்கோலரிடம் குவிந்தால் மக்கள் வறுமையில் வீழ்வர்...
----------------------------------------------------------------------------
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
-218.
வருவாய் குறைவு ஏற்பட்டு விட்ட போதிலும், எளியோரின் துயர் களையத் தயங்காதவர் எவரெனில்?
துயர் களைதல் தம் கடமையெனும் கோட்பாடுடன் வாழ்வோர் ஆவர்!...
--------------------------------------------------------------------
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
- 219.
ஈகை குணம் கொண்டவனை வறுமை சூழின், உதவுதல் தடைப்படும்... அத்தடை எப்படிப் பட்டதெனில்?
உதவுபவனுக்கும், உதவிப் பெறுபவனுக்கும் இடையில் வேயப் பட்ட இரும்புத் திரை போல் அமைந்து உதவுபவனின் வேதனையை அதிகரிக்கும்...
------------------------------------------------------------------------------
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
-220.
எளியோருக்கு உதவி செய்வதால், இடையூறு பல வருமெனில், நல்லதுதான்!... அவ்விடையூறுகளை, ஒன்றை விற்றேனும் வாங்கிக் கொள்ளலாம்... ஏனெனில்? அத்தகைய இடையூறுகளால் உதவி செய்தல் எனும் உந்துதல் அதிகரிக்கும்...
*பார்ப்பனன் வருகைக்குப் பின்னர், பார்ப்பனருக்கு மட்டுமே ஈதல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது... இதனால் எளியோர் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாயினர்... ஒடுக்கப்பட்ட எளியோருக்கு உதவினர் நல்லோர்.... பார்ப்பனன் தரப்பில் இடையூறுகள் செய்யப்பட்டன... அவ்விடையூறுகளைத் தகர்த்து, எழுச்சியுறச் சொல்லுகிறான் வள்ளுவன்...
--------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் : 23.
ஈகை
வறியார்க் கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. -221.
ஒடுக்கப் பட்ட - பிற்படுத்தப் பட்ட - நசுக்கப் பட்ட – மக்களுக்கு உதவுவதே ஈகையாகும்... பார்ப்பனனுக்கு ஈதல் செய்தல் நன்று என்று, பார்ப்பனனுக்கு ஈதல் செய்வது பலன் எதிர்ப் பார்த்துச் செய்வதாகும்...
*கடவுள் பெயராலும், கோயில் பெயராலும், பார்ப்பனனுக்கு ஈதல் நல்லது என்று மூடத்தனத்தினால், ஈகைச் செய்தல் சுயநலம் சார்ந்த
செயலாகும்...
-------------------------------------------------------------------------
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. -222.
'ஈகைப் பெற்று உல்லாச வாழ்வு வாழ எண்ணி, பார்ப்பனனே பிறரிடம் கையேந்தாதே... கையூட்டும் பெறாதே...' - இது வள்ளுவன் வாக்கு! 'பார்ப்பானனுக்கு ஈகையை வாரி வழங்கினால், மேல் உலகம் என்பதில் இடம் கிடைக்கும்'
- இது பார்ப்பனர் சொல்லும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதச் சொற்கள்!...
*'பார்ப்பனன் தவிர வேறு எவருக்கு உதவிச் செய்தாலும் மேலுலகில் இடம் கிடைக்காது' -
என்று பொய்மையைக் கூறி அச்சுறுத்துவர் பார்ப்பனர்... அறிவை மழுங்கச் செய்யும் நச்சுருவிகளும் – மோசடிப் பேர்வழிகளுமான
பார்ப்பனனின் அறிவற்ற -சுரண்டலுக்கு இரையாகாமல் - மேலுலகில் இடம் இல்லையென்றாலும் - பார்ப்பனனுக்கு பிச்சை இடேன் என்று உறுதி நெஞ்சொடு எளியோர் எவருக்கும் ஈதல் வழங்கிடுக... அது மெய்யாலுமே நன்றாகும்... மேலுலகம் என்பதெல்லாம் ஏமாற்றுதலாகும்...
---------------------------------------------------------------------
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.
-223.
குலம் = மேன்மை.
இல்லை என்று பொய் கூறல் குற்றமாகும்... உதவிக் கேட்டு வருவோரிடம், பொருள் இருந்தும் இல்லை என்று பொய்க் கூறாதவர் எவரெனில்? எளியோருக்கு உதவி செய்தல் மேன்மையானது எனும் உணர்வுக் கொண்டோர் பொய்ப் பேசார்...
------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
-224.
பிறரிடம் கையேந்தி வயிறு பிழைக்கும் வாழ்வு மிகவும் துயரமானதாகும்... துயரத்தோடு
வாழ்ந்தாலும், அவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிவது எப்போது எனில்? கையேந்தும் போது உதவிக் கிட்டுகிறது எனில், இரந்தவர் முகம் மகிழ்ச்சியுறும்...
-----------------------------------------------------------------
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 225.
உறுதியிலும் உறுதி எதுவெனில்? பசியை அடக்கும் மன உறுதியே ஆகும்!... பசியைப் போக்குவோரின் செயலும் சிறந்ததுதானே எனில்? அதுவும் சிறந்ததுதான் என்றாலும், பசியை அடக்கும் வலிமையே மிகச் சிறந்தப் பண்பாக மதிப்பிடப் படுகிறது...
------------------------------------------------------------
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -226.
பசியால், வாடுவோரின் பசியைப் போக்குவது போக்குவது சிறந்த நற்பணியாகும்... தொடர்ந்து ஒருவன் இந் நற்பணியை ஆற்றிட விருப்பம் கொண்டுள்ளான் எனில், பொருள் வேண்டுமல்லவா... பசியாற்றுவதற்கென ஒரு நிதியம் இருந்தால் அதன் மூலம் கிட்டும் வருவாயிலி
ருந்து, தடைப் படாமல், எளியோரின் பசி போக்கிட ஏதுவான ஓர் நிலைப்பாடு அமையும்... ஆதலால்; எளியோரின் பசி போக்கிடுவோர் சேமிப்பை ஏற்படுத்தி அதன் துணைக் கொண்டு , ஆற்றுவது நல்லது.
-------------------------------------------------------------------
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
- 227.
எளியோர் நிரந்தரமாக பசியாறிடும் பொருட்டு, அவர்களின் வேலை வாய்ப்பிற்கு முதலீடு செய்தல் வேண்டும்... முதலீடு பெருகி, முதலீடு செய்தவனுக்கும், வருவாய் அதிகரிக்கும்!... அதனால்; பசி என்னும் கொடுநோய் முதலீடுச் செய்தவனையும் தீண்டாது...
*அதுவும் சேமிப்பு எனும் பெயரில் பணத்தை முடக்குதல் கூடாது... பணத்தை முதலீடாக மாற்றி, எளியோர் பலர் வாழ, வேலை வாய்ப்புக்கு வழிகோலுதல் வேண்டும்... பலர் வேலை வாய்ப்புப் பெறுவதால், பலருக்கு உணவு பங்கிட்டுத் தருவதற்கு ஒப்பாகிறது... உணவை பங்கிட்டு உண்ணும் ஒருவனை பசியின் கொடுமை நெருங்காதாம்... இதில் அறிவியல் உண்மை உண்டா என்று உரை யாசிரியர் பலர் விளக்கவில்லை.
இல்லறவியல்
அரங்க கனகராசன் உரை.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
-228.
எளியோருக்கு உதவுதல் என்பது மனம் மகிழ்ச்சி தருவதாகும்... இம் மகிழ்ச்சியை அறியாதோரும் உளர்... அவர் எவரெனில்?
தம்மிடம் இருக்கும் செல்வதைத் தக்க வழியில் முதலீடு செய்யாதவர் ஆவர்... இவர்களின் செல்வம் இவர்களால்
நாளடைவில் கரைந்து போகலாம்...
தொலை நோக்கு சிந்தித்தல் அற்ற - சிந்தித்தலில் வறண்டு போனோரின் செல்வம் - இவர்களுக்கும் பயனற்று மக்களுக்கும் பயன்படாமல் - அழியும்...
----------------------------------------------------------------------------
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
-229.
கையேந்துவது என்பது, கொடுமைதான் என்ற போதிலும், அதனினும் கொடியோர் உண்டு... அவர் யாரெனில்?
ஏராளமாய் செல்வம் இருந்தும், பிறருக்கு ஏதும் தராமல் தாமே தனித்து உண்டு களிப்போர், மானிட நேயமற்ற கொடியோர் ஆவர்...
--------------------------------------------------------------------
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
-230.
மரணத்தைவிட துன்பமானதுண்டோ?... ஆனால்; மரணமும் இனிமையாவதுண்டு... எப்போதெனில்?
எளியோருக்கு உதவிச் செய்யா நிலை நல்லோருக்கு ஏற்பட்டு விட்டால், பிறருக்கு உதவ இயலாமல் உயிர் வாழ்வதைவிட, உயிர் துறத்தலை இனிதென நினைப்பர்...
--------------------------------------------------------------------------------
இல்லறவியல்
அதிகாரம் : 24.
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. -231.
பிறருக்கு உதவி வாழ வேண்டும்... பிறர் புகழும் வண்ணம் நன்னெறியுடன் வாழ வேண்டும்... அதுவன்றி உயிர் வாழ்தலில் வேறு இலக்கணமில்லை!...
------------------------------------------------------------------
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
-232.
சான்றோர், எதனை சான்றாய்க் கொண்டு, ஒருவனை அளவீடு செய்கின்றனரெனில்?
உதவிக் கேட்பவனுக்கு, உதவிச் செய்துப் புகழுடன் எவன் வாழ்கிறானோ; அவனதுப் புகழைச் சான்றாய்க் கொண்டு, சான்றோர் சான்றுரைப்பர்...
----------------------------------------------------------------
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல். -233.
நிலையற்ற வாழ்வும், நீடித்த சிறப்படைவது எதனால்?
உயர்ந்தப் புகழொடுக் கூடிய வாழ்வெனில்; நிலையற்ற வாழ்வும் நிலையான சிறப்படைகிறது... நற்புகழைப் போல் நிலையாக நீடிப்பது எதுவுமில்லை...
*பார்ப்பனன் நற்புழைவிட, வஞ்சித்து வாழும் வாழ்வை உயர்வாகக் கருதுவான்...
----------------------------------------------------------------------------
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
-234.
புத்தேள் = விஞ்ஞானம் மலர்ந்த.
உயிருள்ளவரை இந்நில மீதில், புகழுடன் வாழ்வோன் மரணமுற்றாலும், அவனதுப் புகழ் என்றென்றும் நினைக்கப் படும்... இவ்வுலகில் விஞ்ஞானம், பல புதிய மாற்றங்களை - விந்தைகளை - மலரச் செய்தாலும், இவ்வுலகம் ஒருவரைப் பாராட்டும்
இலக்கில் எந்த மாற்றதையும் ஏற்படுத்த வில்லை...
ஆம்!... படித்தவன் என்பதால் மட்டும் ஒருவனை இவ்வுலகு போற்றுவதில்லை... புகழுடன் வாழ்ந்தானா என்பதையும் இவ்வுலகு ஆய்வு செய்யும்...
--------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. -235.
நத்தம் = வாழை.
வித்தகர் = நன்மையை நிலை நாட்டுகிறவர்,
சாதனையாளர்.
வாழையதன் காய் உணவாகிறது; பழமும் உணவாகிறது; தண்டும் உணவாகிறது; இலையும் பயன்படுகிறது... வாழை மரம் வெட்டி சாய்க்கப் பட்ட பின்னரும்
நாறாய் பயனாகிறது...
அதுபோல்- சாதனையாளர் மரணமுற்றாலும், அவர் புகழ்மொழி, மக்களுக்கு வழிகாட்டியாகி நன்மையைப் பயக்கிறது... சாதனையாளர் மரணம் தவிர, வேறு எவருடைய மரணமும் மக்களின் வழிகாட்டியாக ஆவது அரிது...
-------------------------------------------------------------------
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
-236.
புகழ் = நற்பெயர், நன்னடத்தை.
உலகின் முன் தன்னை அடையாளம் படுத்திக் கொள்ள ஒருவன் விரும்பின், அவனுக்கு சிறப்புத் தகுதி வேண்டும்... அதென்னத் தகுதி?
நன்னடத்தை எனும் தகுதியாகும்!... இத்தகுதி இல்லாதோர் உலகின் முன் தன்னை அடையாளம் படுத்திக் கொள்ள முனையாமல் இருப்பதே நன்று!...
---------------------------------------------------------------------------
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
-237.
நன்னடத்தை இல்லாதானை எவரும் போற்றார்... தூற்றவும் செய்வர்... பிறர் தன்னைப் போற்றுவதில்லையே என்று மனம் நோவாரும் உண்டு!... ஆனால்; நன்னடத்தை இல்லாரை உலகம் இகழும் என்பது இயல்பே!
----------------------------------------------------------------------------------
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
-238.
எச்சம் = செல்வம்.
இழிவானவன் என்று உலகத்தால் ஒருவன் வசைப் பாடப் படுகிறான் எனில், அவன் நன்னடத்தையற்ற வாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதால்தான்!
---------------------------------------------------------------------------------------
இல்லறவியல்
திருக்குறள் உரை.
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
-239.
எவ்விதக் குறைபாடும் இல்லா நிலமும் வளங்குன்றி, வறண்டுப் போகும்... ஏனெனில்?
நன்னடத்தை யற்றோர் வாழும் மண்ணில், வாழப் பிடிக்காமல் மக்கள் யாவரும் வேறிடம் அகன்று விட்டால், அந்நிலமதை உழுது விளைச்சல் செய்ய ஆளில்லாமல் அந்நிலம் பாழாகும்!...
*நன்னடத்தை அற்றோரை சுமக்கும் நிலமும் வளங்குன்றும்...
*மன்னர் காலத்தில் பார்ப்பனர்களின் கொடுமை தாளாது, அரசுக்குத் தெரியாமல் புலம் பெயர்ந்து ஓடினர் மக்கள் கூட்டம் கூட்டமாய்...
-----------------------------------------------------------------------
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
-240.
தீயவனிவன் என்ற வசைமொழிக்கு உள்ளாகாமல், நன்னடத்தையுடன் வாழ்வோர் எவரோ, அவரே உயிர் வாழ்வார் ஆவார்... நன்னடத்தை நாளுமிழந்து வாழ்வோர் உயிரற்ற சடலமேயாவர்...
*நன்னோக்கு இல்லா பார்ப்பனனை சடலம் எனலே சரி!
-----------------------------------------------------------------------
நேயவியல்
அதிகாரம் :25.
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
-241.
பேதமின்றி, யாவரிடமும் மானிடநேயம் காட்டுதல் என்பது நற்குணமாகும்... இந் நற்குணத்தைப் பெருஞ்செல்வம் என்றும் கூறலாம்... பொருட் செல்வம் என்பது கயவர்களிடத்திலும் இருக்கக் கூடியது...
*பிறரிடம் வஞ்சித்துப் பெற்று பார்ப்பனன் செல்வந்தனாக இருக்கிறான்... அவன் மானிடநேயம் அற்றவன் என்பதால் அவனை கயவன் என்பர்...
--------------------------------------------------------------------------------
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
-242.
நற்சிந்தனையோடு, உள்ளத்தில் அன்புக் கொண்டு வாழ்வோரின் வாழ்வியலை,வேறு எவ்வகையில் ஆய்வுச் செய்தாலும் அன்புள்ளமே வாழ்வியலுக்குத் துணையாகிறது என்பதை அறியலாம்...
---------------------------------------------------------------------------
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
-243.
மானிடநேயம் கொண்டோர், மூடஎண்ணத்திற்கு உடன்பட மாட்டர்... ஏனென்றால்?
மூட எண்ணமானது கடவுள், மதம் என மக்களைப் பிளவுப் படுத்தி இன்னலுக்கு உள்ளாக்கும்!...
------------------------------------------------------------------------------
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
-244.
மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு, மக்களை நல்வழிப் படுத்துவோர்க்கு தன் உயிர்ப் பற்றிய அச்சம் இருக்காது... ஏனெனில் மரணம் நிச்சயமானது என்பதை பகுத்தறிவால் அவர்கள் உணர்ந்திருப்பர்...
மேலும், கடவுள் சிந்தனையை மூடத்தனம் என்று கூறும் பகுத்தறிவாளர்களை கடவுள் தண்டித்து, விரைவில் உயிர் பறித்து விடுவார் என்று அச்சமூட்டினாலும், அஞ்சாது, மக்களை பகுத்தறிவு பாதைக்கு இட்டுச் செல்வர்...
-----------------------------------------------------------------------
நேயவியல்
அரங்க கனகராசன்
உரை.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
-245.
அல்லல் = பழிச்சொல்.
மல்லல் = வளமை
மா
= சிறப்பான
மானிடநேயம் மிக்கவர்கள், மூட எண்ணத்தவர் மொழியும் பழிச்சொல் குறித்து கவலைக் கொள்வதில்லை...
உயிர்க் காற்றால் நன்மை விளைகிறது என்பதற்கு வளத்துடன் விளங்கும் சிறப்புமிகு இவ்வுலகே சான்று! அதுபோல் பகுத்தறிவாளர்களால் மக்களுக்கு நன்மையே விளைகிறது...
---------------------------------------------------------------------------------
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
-246.
மக்களைத் தவறாக வழிகாட்டி, மக்களுக்குக் கிட்ட வேண்டிய மேலுலக வாழ்க்கையை கெடுத்து விட்டனர் என்று பகுத்தறிவாளர்கள் மீது,மானிட நேயமற்ற மூடர் - கடவுள் - மதத்தின் பேரில் மக்களை ஏய்த்து வாழ்வோர் - கூறுவர்...
------------------------------------------------------------------------
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
-247.
மானிடநேயமற்றவர்களை, சான்றோர் தம்மோடு சேர்த்துக் கொள்வதில்லை... அதே போல், செல்வமற்றவனை செல்வந்தர் தமக்கு துணைவராக்கிக் கொள்வதில்லை...
*பணமிருந்தால், மாபாதகனையும் செல்வந்தர் தம் பட்டியலில் சேர்த்துக் கொள்வர்... ஏழ்மையில் இருப்பினும் மானிடநேயம் இருப்பின் சான்றோர் போற்றுவர்...
------------------------------------------------------------------
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. - 248.
ஏழையும், ஓர்நாள் செல்வம் சேர்க்கலாம் நேரியமுனைவில்!... ஆனால்; மானிட நேயமற்றவன் நெஞ்சம் அன்புள்ளமாக மாறும் என்பது அரிதானச் செயலாகவே இருக்கும்...
*ஒடுக்கப்பட்டவன் கல்வியால் மேனிலை உய்யலாம்... பார்ப்பனன் நெஞ்சில் சமத்துவம் மலரும் எனல் இயலாத ஒன்று...
----------------------------------------------------------------------------------
நேயவியல்
அரங்க கனகராசன் உரை.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
-249.
'மெய்ப்பொருள் ஒன்றுக் கண்டறிந்துள்ளேன்' என்று மனப்பிறழ்வு நோயுற்றோர் கூறின், மக்கள் அதனை 'பித்தனின் உளறல்" என்பர்...
அதுபோல், மானிடநேயமற்றவன் - வஞ்சித்து வாழும் நெறியாளன் – பிறர்ப் பொருளை எவ்வகையிலும் கொள்ளையிட முயல்பவன்- 'மானிடர் யாவரும் சரிநிகராய் வாழஉரிமை யுள்ளவர்’ - என்று கூற முன்வந்தால், அதிலேதோ உட்பொருள் இருப்பதாகக் கருதி மக்களை அவனை சிந்தனைக் கொள்வர்...
*மானிட நேயமற்ற பார்ப்பான் தனக்கொரு இன்னல் நேரின், அவனால் வஞ்சிக்கப்பட்ட மக்களையும் இணைத்து, 'கடவுளுக்கு இழிவு செய்கிறான்... வாரீர் ஒன்றிணைந்து வெல்வோம்’ - என்பான்... அவனின் புரட்டுணர்ந்த மக்கள் அவனைப் புறந்தள்ளுவர்...
------------------------------------------------------------------------------
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
-250.
படைபலம் - ஆட்பலத்துடன் - திகழ்வோன் தன்னைத் தாக்குகையில் அச்சத்தால் நடுங்கிடுவான், வலிமையற்றவன்...
அறவே கையறு நிலையில் இருக்கும் ஒடுக்கப் பட்டோரின் மேல் வன்மம் செலுத்தும் போது, ஒடுக்கப்பட்டோர் மனநிலையும் அச்சம் கொண்டு அல்லாடும் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்...
*ஒடுக்கப்பட்டோரை ஏய்த்து, தன்னை வலைமை யுள்ளவனாக, பிம்பத்தைக் கட்டமைக்கும் பார்ப்பனன், ஆங்கிலேயரிடமும் , முகமதியரிடமும் அடைக்கலம் பூண்டு ஏவல் புரிந்துள்ளான்... அப்படிப்பட்ட நேரத்தில் நான்கு வருண பேதத்தை, எந்த மூலையில் ஒளித்து வைத்திருப்பானோ?
-------------------------------------------------------------------
நேயவியல்
அதிகாரம் :26.
புலால் மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
-251.
தன்னுடைய தசை நார்களை வலுவாக்கிக் கொள்ளும் பொருட்டு, வேள்வி, யாகம் என்ற பெயரில் பலியிட்டு மிருகங்களின் தசை நார்களை உண்பான் பார்பனன்... அவனே, 'கடவுள்' என்றும் 'கருணை' என்றும், 'அருள்வாக்கு' என்றும் பேசுவான்... இது, பார்பானனின் இரட்டை நிலை வாழ்க்கை முறையாகும்...
*ஒரு உயிரைக் கொன்று யாகத்தின் பெயரில் புசிப்பவனிடம் அன்பு நிலைஇருக்குமா?
----------------------------------------------------------------------------
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
-252.
வாழ்க்கையின் இயல்பு நிலையை போற்றாமல் – ‘மானிடர் யாவரும் சரிநிகர் உரிமை உடையவரே’ - என்று கருதாமல், மானிடரைப் பிரித்தாளும் வஞ்சகரிடத்தில் அன்பு நிலையிருக்குமோ?... வேள்வி, யாகம் என்ற பெயரில் கொலைபாதகம் புரிவோனிடம் கடவுள் என்போன் இருப்பானா?... அக்கடவுள் அன்புள்ளம் கொண்டவன் ஆவானா?
*தந்நலத்தின் பேரில் செய்யப்படுபவை யாவற்றையும் கடவுள் பெயரில் மூடி மறைக்கும் கயமைக் கூட்டமே பார்ப்பனர் கூட்டம்...
-----------------------------------------------------------------------------
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
-253.
கொலைக் கருவி வைத்திருப்பவன், நெஞ்சில் கொலைவெறி தாண்டவமாடும்... அவனிடத்தில் நேயம் இருக்காது... அதுபோல்- யாகம், வேள்வியின் பொருட்டு விலங்குகளை பலியிட்டு, அதன் சுவையில் திளைக்கும் பார்ப்பனனின் மனமும் நேயமற்றே விளங்கும்...
---------------------------------------------------------------------
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
-254.
யாகமும் வேள்வியும் அருள் பாவிப்பன என்பான் பார்ப்பனன்... யாகமும், வேள்வியும் அறமற்ற செயலாகும்... ஏனெனில்?... கொல்லுதல் - பிறஉயிர் நேசாதிருத்தல் - அருள் அல்ல அது! அருளெனில் நற்பன்புக் கொண்டிருத்தல் - யாவற்றையும் நேசித்தல் - எதனையும் கொல்லாதிருத்தல் எனப் படும்... யாகத்தில் கொல்லப்பட்ட சடலத்தைத் தின்றால் இந்திரனின் அருள் கிடைக்கும் என்பது பொருளற்றதாகும்... ஏமாற்றுஞ் செயலாகும்...
----------------------------------------------------------------------------
நேயவியல்
அரங்க கனகராசன் உரை.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
-255.
அண்ணாத்தல் = தப்பித்தல், மீளுதல்.
அளறு
= புதை சேறு.
யாகத்தின் பெயரில் ஓருயிரைக் கொன்று, அதன் சதை நார்களைத் தின்றால்தான் நீள்நெடு நாள் உயிர் வாழ்தல் கூடும் என்பது பொய் கூற்றாகும்...
புதை சேற்றில் சிக்குண்டோர் மீள்வது சிரமம் அல்லவா... அதே போல் புலால் சேற்றில் சிக்கியோர் மீள்வதும் சிரமம்... இதன் உண்மைத் தன்மையை மறைக்கவே, புலால் உண்டால் உயிர் வாழலாம் என்று உண்மைக்கு மாறாகப் பேசுகின்றனர்...
---------------------------------------------------------------------------
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல்.
-256.
தின்னும் பொருட்டு, பிற உயிர்களைக் கொல்லும் பழக்கம் இவ்வுலகில் ஒழிந்தால், எவரும் புலால் விற்பனைச் செய்யார்...
*பார்ப்பனன், யாகத்தின் பேரில் மட்டும் மிருகங்களைக் கொன்று, புசித்தானில்லை... யாகம், வேள்வி நடத்தவியலாத சூழலில், புலால் சுவைக்கு மயங்கிய பார்ப்பனன், புலால் உண்ணும் பொருட்டு, பார்ப்பனன் புலால் விற்றும் வந்துள்ளான் என்பது அறியமுடிகிறது இக்குறள் வாயிலாக!...
-------------------------------------------------------------------------
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
-257.
புலால் உண்ணாதிருத்தல் வேண்டும்... ஏனெனில், புலால் என்பது பிற உடலின் புண்ணாகும்... இதனை உணர்ந்தால், புலால் உண்ணும் எண்ணம் உண்டாகாது...
*நமது உடலில் காயம் ஏற்பட்டால் புண் என்கிறோம்... சுவையின் பொருட்டு நம் புண்ணை நாம் உண்போமா? பிற உடல்களை காயம் படுத்தி, புண் உண்டாக்கி உணல் சரியோ?
----------------------------------------------------------------------
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்.
- 258.
செயிர் = குற்றம்.
குற்ற உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் – ஒழுக்கத்தை மேன்மையாகக்
கருதுவோர் - ஒருபோதும், உயிர் பிரிந்தச் சடலத்தை உண்ண மாட்டார்...
---------------------------------------------------------------------------
நேயவியல்
அரங்க கனகராசன் உரை.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -259.
செகுத்தல் = கொல்லுதல்.
கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் உயிர்வதைச் செய்து, நெய்யூற்றி நெருப்பிட்டு யாகம்,வேள்வி எனும் பேரில், வெந்த சடலங்கள் ஆயிரம் தின்பதைவிட - எவ்வொரு உயிரையும் கொன்று, உண்ணாதிருத்தலே தூயவாழ்வாகும்...
-------------------------------------------------------------------------
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
-260.
கொல்லாமலும், புலால் உண்ணாமலும் வாழ்வது உன்னதக் கோட்பாடாகும்... இக்கோட்பாட்டுடன் வாழ்வோரை பாராட்டும் முகமாய் அகம் மலர, கைகூப்பி நன்று மொழிவர் நல்லோர்...
-------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் :27.
தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்க் குரு.
-261.
நாற்பது நாள் அதிகாலையில் கடுங்குளிரில் நீராடுவது தவமாம்... குறிப்பிட்ட நிறத்தில்
ஆடையணிந்து புலால் உண்ணாதிருத்தல் தவமாம்... பெண்களை அப்புறப் படுத்துதல் தவமாம்... குறிப்பிட்ட நேரம் உண்ணாதிருத்தல் தவமாம்... மதம், கடவுள் பேரில் உயிர் பலியிடலும் தவமாம்... இதில் எதுவுமே தவம் என்பதன் இலக்கணம் கொண்டிருக்கவில்லை...
வள்ளுவன் கூறுகிறான் :
துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் மனவலிமை வேண்டும்... பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத நன்னடத்தை வேண்டும்... இதுவே தவத்தின் இலக்கணம் ஆகும்!...
*மனவலிமையும், நன்னடைத்தையும் தவத்தின் இலக்கணம் ஆகும்!...
----------------------------------------------------------------------------------
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
-262.
அவம் = குற்றம்.
சகிப்பும்
- தீமை செய்யாமையும் - மன உறுதி யுடையோரிடம் இருக்கும்... மன உறுதியற்றவர்களால் மனதைக் கட்டுப் படுத்தவியலாது... மேலும், மன உறுதி யற்றவர் மன உறுதியுடையோர் போல் தம்மைக் காட்டிக் கொள்வது குற்றம் தரும்... ---------------------------------------------------------------------------
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
-263.
'துறவுக் கோலம் பூண்டோர்க்கு பணிவிடை செய்... அதுவே தவத்திற்கு இணையாகும்' என்போரின் தவறான வழிகாட்டுதலால், தவம் என்பதின் இலக்கணத்தை மறந்துவிட்டனரோ?
*மதவாதிகளுக்கும், கடவுளின் தூதுவர் என்போர்க்கும், கடவுளின் பிறப்பு என்போர்க்கும், நெற்றியில் பிறந்தவன் யான் என்போனுக்கும் உதவி செய்தல் மேலுலகில் நன்மை விளையும்... அதுவே தவமாகும் என நம்புவோர், தவம் என்பதன் இலக்கணத்தை மறந்தவர் ஆவர்...
பொறுத்துக் கொள்ளுதல், பிறருக்குத் தீமை செய்யாதிருத்தல் இதுவே தவத்தின் இலக்கணமாகும்...
ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனனுக்கு உதவுதல் எவ்வகையிலும் தவமாகாது...
---------------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
-264.
உவளுதல் = துவளுதல்
உவந்தார்
= ஒடுக்கப் பட்டோர்.
அடக்கு முறையை அழித்து, எளியோரை உயர்த்திடவும் மனம் கொண்டால் நிறைவேறும்; மனதில் உறுதியிருப்பின்!
--------------------------------------------------------------------------------
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
-265.
எண்ணியதை எண்ணியவாறு அடைந்திடக் கூடுமாதலால், மனஉறுதிதனை
உறுதியாக்கிக் கொள்ளல் வேண்டும்...
-------------------------------------------------------------------------------------
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
-266.
மனஉறுதி மிக்கோர், நல் கடமை யாற்றுவர்... மன உறுதியற்றோர் குற்றச் செயல்களில்
ஈடுபடுவர்; பேராசையின்பாற் உந்தப்பட்டு!
-----------------------------------------------------------------------------
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
-267.
சுடச் சுட பொன்னின் நிறம், ஒளியுடன் விளங்குவது போல், துன்பத்தை எதிர்த்து வாழப் பழகுவோருக்கு மனஉறுதியானது மேலும் மேலும் வலிமைப் பெறும்...
-----------------------------------------------------------------------------
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்.
-268.
தன்னுயிரைப் பொருட்டாய்க் கொள்ளாது, யாவரும் சரிநிகர் வாழ்வு வாழ வகை செய்தோனை, இவ்வுலகம் போற்றும்...
-------------------------------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு.
-269.
குதித்தல் = கடந்துப் போதல்.
மரணம்தனை நினைத்து அஞ்சாமல் - துவளாமல் - தம் இலட்சியத்தில் உறுதியுடன் திகழ்வோர், கடவுளின் பேரால் யாகம், வேள்வி என நடத்தி ஏமாந்து மடிகிறவர்
களைக் காட்டிலும் சிறப்பானவர் ஆவர்...
---------------------------------------------------------------------------------------------
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
-270.
மூட சிந்தையற்றோர் ஈங்கு பலராக இருப்பதற்கு யாதுக் காரணமெனில்?
வேள்வி, யாகம் என பழமைவாதிகள் சிலராகவும், வேள்வி, யாகம் இவற்றில் நம்பிக்கையற்றோர் பலர் இங்கு வாழ்வதாலும்தான்!...
*மூடத்தனத்தை முதலீடாகக் கொண்டவர் வந்தேறிகளாம் பார்ப்பனர்... மன உறுதி யோடு
வாழ்க்கையை எதிர்க் கொள்வோர் இந்நாட்டு குடிகள்...
------------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் :28.
கூடா ஒழுக்கம்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
-271.
ஒழுக்க சீலன் என்பான் தன்னை!... மனதில் வஞ்சகம் இருக்கும்!... அவனுள் பாலியல் வேட்கை, கோபம், பேராசை, பொறாமை, ஏமாற்றுதல் என ஐந்து தீயகுணங்களும் கொண்டிருப்பான்...
இவ்வகை குணங்களை மூடி மறைத்து ஒருவன் ஒழுக்கசீலன் எனில், அவனுடைய குணநலன்களே அவனுள் எள்ளி நகையாடும்...
*அவனுடைய மனச்சான்று அவனை நகையாடும்...
---------------------------------------------------------------------------------------
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
-272.
உடல்வலிமையால் - செல்வச் செழிப்பால் - கற்ற கல்வியால் - ஒருவன் வானுயர புகழ்ப் படலாம்... ஆயினும்; கூடா ஒழுக்கத்தினால், தெரிந்தே தவறுகள் இழைத்திருப்பானாயின் - எளியோரின் வாழ்வை சிதைத்திருப்பானாயின் –அவனுடைய மனச்சான்றே
அவனைக் குற்றவாளியாய் சித்தரித்து அவனுள் தீராத் துயரம் செய்யும்... மனதில் அமைதியிராது...
*கூடா ஒழுக்கம் அமைதியைக் கெடுக்கும்...
--------------------------------------------------------------------------------------
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. -273.
வலியில் = மன உறுதியற்றவன்.
மன உறுதியற்றவர், பிறர் துணையினை வாய்ப்பாகக் கொண்டு, தன்னை வலிமையாளனாக காட்டிக் கொள்வதென்பது, புலியின் தோல் போர்த்தி மேயும் பசுப் போன்றதாகும்...
*புலியின் தோல் போர்த்தி நின்றாலும், பசுவின் இயல்பான அச்சம், அதனை விட்டு அகலாது... உதவுவோர் விலகினால் மன உறுதியற்றவரின் இயல்பு நிலை காட்டி விடும்...
-----------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
-274.
ஒழுக்க நெறியில் உறுதியற்றோர், ஒழுக்கவான் போல், ஒழுக்கக் கேடான செயலில் ஈடுப்படுவதானது; புதருக்குள் ஒளிந்து, வஞ்சகமாய் பறவைகளை வேட்டையாடுதல்
போலாகும்...
*ஒழுக்கமற்றவனின் செயல் அவனின் குணத்தைக் காட்டிவிடும்...
---------------------------------------------------------------------------------------
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
-275.
ஒழுக்க நெறியற்றோர் கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் நம்பிக்கைக் கொண்டிருப்பதால், தூயோர் என தம்மை வெளிப்படுத்திக் கொள்வர்...
உண்மையில் கடவுள் பேரிலும் மதத்தின் பேரிலும் ஒழுங்கீனம் பல செய்வர்... இத்தகையோரின் செயல் யாவுமே என்றைக்கும் குற்றம் பொதிந்து இன்னல் பல்கும்...
------------------------------------------------------------------------------
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
-276.
மனஉறுதியற்றோர்; வஞ்சித்து வாழும் நெறியை அகற்ற மாட்டர்... இறைச் செயலுக்காவே வாழ்வதாகவும், தமக்காக வாழவில்லை எனக் கூறி, மதத்தின் பேரிலும், கடவுள் பேரிலும் மக்களை ஏய்த்துப் பிழைப்பர்... இவரைப் போல் மோசடியாளர் எவரும் இலர்...
------------------------------------------------------------------------------------
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
-277.
கடவுள், யாகம், வேள்வி என பொய்யுரைத்து, அன்பின் வடிவினராய் தம்மைக் காட்டிக் கொள்வர்...
குன்றி மணியும், ஒரு புறத்தில் அழகாக - எவரையும் - ஈர்க்கும் வடிவமாக - காட்சியளிக்கும்... ஆனால், அதன் இன்னோர் புறம் கரும்புள்ளியிருக்கும்... பார்ப்பனரும் சான்றோர் போல் காட்சியளித்தாலும், அவரின் உள் நெஞ்சில் கூடா ஒழுக்கத்தின் கயமை நிறைந்திருக்கும்...
--------------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை
மனத்தது மாசாக மாண்டார்நீ
ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். -278.
ஒழுக்க நெறியோடு வாழ்வோம் எனும் உறுதிப்பாடு அற்றோர், ஒழுங்கீனத்தை
மனதில் மறைத்திருப்பர்...
இறந்தவர்களின் பேரிலும் சடங்குகள் நிகழ்த்த வேண்டும் என்று வீண் புகன்று, ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமும் உண்டு...
------------------------------------------------------------------------------
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
-279.
கொடுமை நிகழ்த்துவதால், படைக்கருவி தீதானது!... யாழ் நரம்போசை மனதை மகிழ்வூட்டக் கூடியது... அதுபோல், நன்மை எது? தீமை எது? என்பதை செய்கைகளால் அறியலாம்...
*மக்களுக்கு நன்னெறியை காட்டுவதுப் போல் பேசி பிளவை உண்டாக்கிடுவர் கயவர்... மனஉறுதிமிக்க பகுத்தறிவாளர், தடைகளைக் கடந்தும் மக்களை செம்மைப் படுத்த முனைவர்... இதில் எது நன்மை, தீமையென அறிதல் வேண்டும்...
-------------------------------------------------------------------------------
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
-280.
உறுதியற்றவர்கள் ஆழ்ந்து சிந்திதிக்காமல், உரைப்பவை இது : ‘மொட்டை அடி... கடவுள் உனது இன்னல் நீக்குவர்...' ‘தாடி அல்லது முடியை நீளமாக வளர்த்துக் கொள்... கடவுள் உன் வாசலில் உனக்குக் காவல் நிற்பார்'
இதில் அறிவியல் உண்மை ஏதுமில்லை... மொட்டை அடிப்பதாலோ, முடி வளர்ப்பதாலோ வாழ்வில் மேம்பாடு அடையலாம் என்பது, மதவாதிகள் தம் பிழைப்புக்கு வடித்த பொய்மைகள்...
ஆதலால்; மழிக்கவும் வேண்டாம்... நீட்டவும் வேண்டாம்... இதனால் நன்மையேதும் விளையப் போவதில்லை... மாறி வரும் சூழலுக்கேற்ப உலகம் தீமையானது என்றுக் கூறுவதை ஒழித்து, ஒழுக்கநெறி நின்று வாழ்ந்தாலே போதும்...
--------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் :29.
கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
-281.
பிறரால் இகழப் படாமல் வாழ வேண்டும் என எண்ணுகிறவன், எந்த ஒருப் பொருளையும், களவு செய்திட எண்ணம் கொள்ளக் கூடாது... அத்தகைய உறுதியை நெஞ்சில் கொள்ள வேண்டும்...
*பார்ப்பனன் பிறர் பொருளை கள்ளமாய் கையகம் படுத்தி வாழ்ந்திட, அவனுடைய நூல்கள் வழிகாட்டுகின்றன...
-----------------------------------------------------------------------
உள்ளத்தால் உள்ளலும் தீதே
பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் என்னால்.
-282.
மனதளவில் நினைப்பதும் தவறு; பிறருக்குரியப் பொருளை கள்ளத்தனமாக களவுக் கொள்வோம் என்று!...
*மதவாதிகள் யாகம், வேள்வி எனக் கூறி, பலப் பொருட்களை வருவித்து, அவற்றை தாங்களே எடுத்துச் சென்றிடுவர்... இது திட்டமிடப்பட்டக் களவாகும்...
----------------------------------------------------------------------------
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
-283.
களவின் வாயிலாக ஈட்டியவை, அளவற்ற மகிழ்வைக் கொடுப்பது போல், தெரியினும்
அது எதிர்வினையாக கெடும்.
*பேராசைக்குட்பட்டு, பெருஞ்செல்வம் கள்ளமாக ஈட்டி நுகர்ந்தாலும், உண்மையறிதல்
என ஒன்று நிகழும் போது யாவுமே துன்பம் தருவனவாக மாறும்...
----------------------------------------------------------------------------
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
-284.
களவு செய்வதில் பேரின்பம் கொண்ட மனம், களவு கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப் படும்போது பெரும் துயரத்திற்கு உள்ளாகி தவிக்கும்...
-----------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
-285.
பொச்சாப்பு = பொய்மை. கள்ளம்.
மானிடநேயம் கொண்டு மானிடர் யாவரிடமும் அன்புடையவராகத் திகழ்வது, நல்லோரின் இயல்பாகும்!...
கயமைத் தனத்தை நெஞ்சில் கொண்டு, கள்ளம் கூறி ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனரிடத்தில் மானிடநேயம் எனும் நல்லியல்பு துளியும் இருக்காது...
---------------------------------------------------------------------------
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
-286.
வருவாய் அறிந்து அதற்கேற்ப வாழும் நெறியை கடைப்பிடிக்க மாட்டாதவர் எவரெனில்? களவின் வாயிலாக உல்லாச வாழ்வில் முயங்கியோர்...
*பார்ப்பனன் எந்த வகையிலும், சுகவாழ்வு வாழ, களவுக் கொள்கையை வாழ்நாள் வெறியாகக் கொண்டிருப்பதை அவனுடைய நூல்கள் வாயிலாக அறியலாம்...
------------------------------------------------------------------
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
-287.
களவு செய்தல் என்பது, பேராசை கொண்டோரின் கீழான அறிவில் விளைவதாகும்...
இருப்பதைக் கொண்டு, நிறைவு காண்பர் நல்லோர்... திருட்டு எனும் கீழான எண்ணம், நல்லோரிடம் இருப்பதில்லை...
-------------------------------------------------------------------------
அளவறிந்தார்
நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
-288.
அளவறிந்து வாழ்வோரின் நெஞ்சில் நேர்மை இருக்கும்... களவு செய்து வாழ்வோரின் நெஞ்சில் வஞ்சமிருக்கும்!...
----------------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
-289.
வரம்புக் கடந்தக் குற்றங்கள் செய்து, வம்பில் மாட்டி அழிவர் கள்வர்!... களவு செய்தலைத்
தவிர, வேறெந்த நல்வழியையும் ஏற்காத இவர்களின் அழிவு, இவர்கள் புரிந்த தகாதச் செயல்களிலிருந்தேப் புலனாகும்...
*சூழ்நிலைகள் மாறினாலும் பார்ப்பனன் யாகம், வேள்வி என ஏமாற்றுந் தொழிலைக் கைவிட மாட்டான்...
----------------------------------------------------------------------------------
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
-290.
திருட்டுப் பழக்கமிருப்போனிடம் எப்போதுமே இனம் புரியாத அச்சம் குடிக் கொண்டிருக்கும்... அவ்வச்சமே நல்லோரிடத்தில் சரளமாகப் பழகிட விடாமல் அவனைத் தள்ளி நிறுத்தும்...
களவுத் தொழிலை மனதாலும் எண்ணம் கொள்ளாமல், நேர்மையுடன் வாழ்வோன் தயங்கி நின்றாலும் புதுமைகள் நிறைந்த இவ்வுலகு அவனைப்
புறந்தள்ளுவதில்லை...
-----------------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் : 30.
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
-291.
வாய்மை எனப்படுவது எதுவெனில்? எதன் பொருட்டும், எவருக்கும் தீமை நிகழ்ந்து விடாதபடி பேசுதலாகும்...
*பார்ப்பனனுடைய வாய்மை எதுவெனில்? பிறரை இகழ்ந்து தன்னை உயர்த்திக் கொள்வதாகும்...
-----------------------------------------------------------------------------
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
-292.
பொய் பேசுதல் தவறுதான்!... ஆயினும்; பேசப்படும் பொய்யால் நன்மை நிகழுமெனில், அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது... நன்மை செய்யுமெனில், பொய்யும் வாய்மைக்குரிய சிறப்பிடத்தைப் பெறும்...
*பார்ப்பனன் பேசுவது யாவுமே இட்டுக் கட்டிய பொய்... அவன் மொழிகிற பொய் யாவுமே, மத மோதல், இனமோதல், வேற்றுமை வளர்ப்பு என வழிகோலும்...
------------------------------------------------------------------
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
-293.
நெஞ்சமறிந்த உண்மையை மறைத்து பொய்ப் பேசலாகாது... பேசப்படும் பொய்யானதுத்
தீமையை வளர்க்கும்... அதனால், பேசப்பட்ட பொய்யை நினைக்கும் தோறும் உள்ளம் சுடும்...
*இக்குறள் பார்ப்பனனுக்கு உகந்த குறளன்று!... ஏனெனில், உலகில் பார்ப்பனனைத் தவிர மானிடர் யாவரிடத்தும் மானிடநேயம் காணவியலும்...
---------------------------------------------------------------------
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
-294.
உள்ளத்தாலும் பொய்ப் பேசாது வாழ்பவன் எவனோ, அவன் உலகத்தார் யாவராலும் போற்றப் படுவான்...
---------------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
-295.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், தன்னெஞ்சறிந்த உண்மையைத் தயங்காமல் பேசுபவன் மிகச் சிறந்தவன் ஆவான்... எவ்வாறெனில்?
பிறருக்கு உதவிச் செய்து வாழ்தலை கடமையாய் - மனதில் உறுதியாய் - கொண்டு வாழ்பவன் சிறந்தவன்தான் என்ற போதிலும், நெஞ்சறிந்த உண்மையைத் தயங்காமல்
பேசுபவன் மிகச் சிறந்தவன் ஆவான்...
---------------------------------------------------------------------------
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
-296.
பொய்ப் பேசாதிருத்தல் மிகு புகழுக்குரியச் செயலாகும்... பொய்ப் பேசாதிருத்தலுக்குஈடானப்
புகழ் ஏதுமில்லை...
நேர்மையின்பாற் விளையும் அணைத்து நன்மையும், பொய் பேசத்திருத்தலாலும் கிட்டும்...
----------------------------------------------------------------------------
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. -297.
பொய் பேசுதல் கூடாது எனும் கொள்கையை உண்மையாகவே - உறுதியாக - ஒருவன் கடைப் பிடித்தால்,
வேறு சில நற்கடமைகளை ஆற்ற தவறினாலும், தவறில்லை... குற்றமாகாது!...
*பார்ப்பனனைப் போல் பொய்ப் பேசி, கலவரம் மூட்டுவதைவிட, பொய்ப் பேசாதிருத்தல் என்பது பேருதவியாக மண்ணுக்கும் மக்களுக்கும் விளையும்...
---------------------------------------------------------------------
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். -298.
உடலின் புறவுறுப்பை, நீரால் தூய்மையாக்கலாம்...
மனதின் தூய்மையை உண்மையெனும் உறுதிப்பாட்டால் மட்டுமே காணவியலும்...
---------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
-299.
பார்ப்பனன் கூறுவான் : 'கோயிலில் நெய்விளக்கேற்றினால் நாட்டில் நன்மை விளையும் என்று!'
நெய் விளக்காகவே இருந்தாலும், அவ்விளக்கின்
ஒளியானது அதனைச் சுற்றிலும் உள்ள சிறுபரப்பளவை, இருள் போக்கி வெளிச்சத்தை ஏற்படுத்தும்... ஆனால்; விளக்கேற்றுவதால் நாட்டின் இன்னல் நீங்கி மக்கள் நன்னலம் அடைவர் என்பது பொய் கூற்றாகும்... ஏனெனில், சான்றோர்களால் பேசப் படும் உண்மை நெறியே, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டும்... அதுவே, மக்களின் இருண்ட வாழ்விலிருந்து மீட்கும் விளக்காகும்...
-----------------------------------------------------
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. -300.
வள்ளுவன் இங்கே நம்மோடு நேரில் உரையாடுகிறான்:
ஆலயம் செல்லும் பலரை நானும் பார்க்கிறேன்... மண்டியிட்டும், தரையில் உருண்டும் உண்ணாமல் உடலை வருத்தியும் இருக்கின்றனர்... ஏனெனக் கேட்டேன்... 'மெய்ப்பொருள்' அறியவே என்றனர்... நாளெல்லாம் பொய்ப் பேசித் திரிவதும், பின்னர் ஆலயம் சென்று தொழுவதும்தான் மெய்ப் பொருளோ?... நானும் ஆய்ந்து ஆய்ந்து நோக்கினேன்... இத்தகையச் செயல்களால் மெய்ப் பொருள் அறிய முடியுமா?...
நெஞ்சறிந்த உண்மையைப் பேச வேண்டும்... அதுதான் மெய்ப் பொருள் என நான் அறிகிறேன்... உண்மையைப் பேசி வாழ்தல் போல், வேறு சிறப்புகள் எதிலும் இருப்பதாக தெரியவில்லை...
-----------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் : 31.
வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
-301.
கோபத்தால் தீமை நடக்குமெனில், அவ்விடத்தில் கோபம்தனை அடக்கும் உறுதியாளனே, சினங்காப்பவன் ஆவான்...
கோபம் கொள்வதால் ஏதும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்கிற இடத்தில் கோபம் கொள்வதால் ஆகப் போவது என்ன?... கோபம் கொள்ளாமல் இருப்பதால் ஆகப் போவது என்ன?
-------------------------------------------------------------------
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
-302.
கோபம் கொள்வதால் பலனேதுமில்லை என்கிற இடத்திலும் கோபம் கொள்ளல் கூடாது!... கோபம் கண்டு பணிவோரிடமும் கோபம் கொள்ளல் ஆகாது... எளியோரிடத்தில் கோபம் கொள்வதுப் போல் அறிவற்றச் செயல் வேறிருக்காது...
------------------------------------------------------------------------------
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
-303.
எவராயிருப்பினும் கோபத்தை மறந்து விடுவது நன்மையாகும்... அல்லவெனில், தீய விளைவுகள் கோபத்தால் ஏற்படும்...
----------------------------------------------------------------------------
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
-304.
முகமலர்ச்சியையும், மனநிம்மதியையும் சிதைப்பது சினமே!... ஆதலால் கோபத்தை விடக் கொடியப் பகையும் உண்டோ?
-------------------------------------------------------------------------------
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
-305.
மானிடர் அரங்கில் நற்புகழோடு விளங்கிட வேண்டுமெனில், சினத்தைக் கட்டுப் படுத்தும் மனஉறுதியாளராக இருக்கவேண்டும்... அத்தகைய மன உறுதி இல்லை என்றால், நற்புகழை அழிப்பதோடு, சினமானது கொல்லும் கருவியாகவும் மாறலாம்...
---------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
-306.
நெருப்புப் போன்றது சினம்... நெருப்பு சேருமிடம் அழிவது போல், சினம் சேர்ந்தாரையும் அழித்து விடும்... இனமாண்பையும் - பண்பையும் - பொசுக்கி விடும்...
---------------------------------------------------------------------------
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
-307.
கோபம் கொள்பவனுக்கு, அழிவு நேரிடுவது எவ்வாறெனில்? கடும் பாறையை ஓங்கிக் கையால் குத்தினால், கை சிதைவதுப் போல், கோபம் கொள்பவனும் அறிவற்ற தனத்தால் அழிவான்...
---------------------------------------------------------------------------
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
-308.
கோபமூட்டுதற் பொருட்டு, பிறர் எரி நெருப்புத் தீண்டுவது போல் சீண்டினாலும், கோபம் கொள்ளல் கூடாது எனும் கொள்கையில் உறுதியோடு இருக்க வேண்டும்... அதுவே நல்லது!...
------------------------------------------------------------------------------------
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
-309.
குறிக்கோள் எதுவோ, அதில் நோக்கம் கொண்டு இயங்க வேண்டும்... இயக்கத்திற்கு ஏற்பப் பலன் கிட்டும்... ஆனால்; கோபம் கொள்ளாத - உறுதியான
- மனம் இருக்க வேண்டும்...
*ஏனெனில்; நல்ல சிந்தனைகளின் உருவாக்கத்தைக் கோபம் தடுத்து விடும்...
-------------------------------------------------------------------------
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
-310.
கோபம் கொண்டு மாண்டோரும், கோபம் கொண்டிருப்போரும் ஒன்றே! கோபம் கொள்ளாமல் நற்புகழுடன் உயிர் துறந்தோரும், கோபம் கொள்ளாத மனஉறுதியுடையோரும் ஒன்றே!
-----------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் : 32.
இன்னா செய்யாமை
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். -311.
கைநிறைய செல்வம் கிடைப்பதாக இருப்பினும், அடுத்தவனுக்கு கேடு செய்தல் கூடாது... வாழ்வில் ஒழுக்கத்தை உறுதியாய்க் கொண்டோரின் நன்னெறியாகும் இது!... *காசுக்காக பார்ப்பனன் எத்தகைய ஈனச்செயலுக்கும் தலைப்படுவான்...
--------------------------------------------------------------------------------
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
-312.
திட்டமிட்டு ஒருவன் தீமை செய்தாலும், அவனை பழிக்குப் பழி வாங்கும் பொருட்டு, தகாதச் செயலில் ஈடுபாடு கொள்ளல் கூடாது... இது ஆன்றோர்களின் நன்னெறி ஆகும்!...
-----------------------------------------------------------------------------------
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
-313.
பகைவன் என்பதால் பழிச் செயல் செய்தல் கூடாது! அது வன்மம் வளர்க்குமேயன்றி ஆறுதல் தராது... *பகவனிடமும் பண்புக் காட்டு...
---------------------------------------------------------------------------
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
-314.
தீமைப் புரிந்தவனை தண்டிக்க ஓர் வழியுண்டு... அது எதுவெனில்? தீமை செய்தவன், தான் செய்த தவறை எண்ணி நாணம் கொள்ளச் செய்ய வேண்டும்... அது எப்படி?
தீமையாளனுக்கு நன்மையாற்றிடு!... அதுவே அவனுக்குத் தண்டனையாகும்...
------------------------------------------------------------------------------
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. -315.
அறிவு நிரம்பப் பெற்றவன் என்று சொல்லுவதால் நன்மை ஏது முண்டோ? தனக்கு ஏற்படும் வலி - வேதனை - பிறருக்கும் இருக்கும் என்ற பகுத்தறிவு - மானிட நேயம் - இல்லையெனில்...
*நெற்றியில் பிறந்தவனாம் பார்ப்பனன்... அறிவு அவனுக்கே சொந்தம் என அவனே கூறிடுவான்... ஆயினும், அவனிடத்தில் மானிடநேயம் கடுகளவும் இராது... அவனை அறிவாளி எனல் தகுமோ?
-----------------------------------------------------------------------
உறுதியியல் அரங்க கனகராசன் உரை.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
-316.
தீமை இதுவென அறிந்தால், அதனைப் பிறருக்கு பிறருக்குச் செய்யாதே...
--------------------------------------------------------------------------------
எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
-317.
எத்தருணத்தும், எச்சூழலிலும், எவருக்கும் மனதளவிலும் தீமை செய்தல் கூடாது... அவ்வுறுதிப்பாடு பெருஞ்சிறப்பாகும்...
---------------------------------------------------------------------------------------
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
-318.
தன் வாழ்நிலைக்குத் துன்பம் தருமென என நன்கு தெரிந்திருந்தும், அதே துன்பத்தை ஏவி, பிறர் வாழ்வாதாரத்தை சிதைப்பதேன்...
*பார்ப்பனன் பிறரைக் கெடுப்பதில் வல்லவன்
------------------------------------------------------------------------------------------
பிறர்க்கு இன்னாமுற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
-319.
தீமையை ஒருவருக்கு முன்பொழுதில் செய்தால், தீமையின் எதிர்வினை அடுத்த பொழுதிலேயே தெரிய வரும்...
*ஆதலால் தீமையிலிருந்து தப்பித்து விடலாம் என எண்ணுவது தவறாகும்... ஏதோ ஒருவகையில் சிறு துப்பும் எதிர்வினை ஆற்றத் தொடங்கிவிடும்...
*முன்பிறவி பலன் என்பான் பார்ப்பான்... அது முற்றிலும் தவறு. வினை இருந்தால் எதிர்வினை வரும்...
------------------------------------------------------------------------------
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
-320.
தீமை என்பது தொற்று நோய்ப் போன்றதாகும்... தொற்றைப் பரப்புவோர் மீதும் தொற்று படரக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன... இதனை அறிந்தோர் - தீமையின் எதிர்வினைக்கு ஆட்பட விரும்பாதவர் - பிறருக்கு தீமை செய்ய மாட்டர்...
--------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் : 33.
கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
-321.
ஒழுக்கம் வாய்ந்தச் செயல் எதுவெனில்?... பிற உயிர்களை எதன் பொருட்டும் கொலை செய்யாது இருத்தல் ஆகும்... இச்செயல் தீமை நிகழ்த்தாது... ஒழுக்கம் அற்ற வேறு எந்தச் செயலும், தீமையை தோற்றுவிக்கும்...
---------------------------------------------------------------------
பகுத்துன்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. -322.
பல்லுயிர் = எல்லா உயிர்களும்
பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்... எல்லா உயிர்களிடத்தும் அன்புச் செலுத்துதல் வேண்டும்... எவ்வுயிரையும் கொல்லாதிருத்தல் வேண்டும்...
உயர்ந்த நூல்கள் யாவுமே, பகுத்துண்டு வாழ்தலையும், எல்லா உயிர்களிடத்தும் அன்புக் காட்டுதலையும் தலைச் சிறந்த பண்பு என உரைக்கின்றன...
--------------------------------------------------------------------------------
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாராப்
பொய்யாமை நன்று.
-323.
உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து, பிற உயிர்களைக் கொல்லாதிருத்தல் நன்று... மேலும், உயிர்களைக் கொன்று, யாகம், வேள்வி நடத்துதல் நன்மையின் பாற்பட்டது எனப் பொய்யுரை கூறாதிருத்தல் மிகவும் நன்று...
----------------------------------------------------------------------------
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
-324.
நன்னெறி எனப்படுவது எதுவெனில்? எவ்வொரு உயிரையும் உயிர்வதை செய்தல் கூடாது எனும் கோட்பாடாகும்...
*கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் மானிடர் உயிரையும் வதைக்கின்றனர்...
இதனை நன்னெறி எனல் மக்களை ஏமாற்றுஞ் செயலாகும்...
------------------------------------------------------------------------------------
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
-325.
வாழ்வின் துயர்ப்பாடுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வோர் உண்டு... அது அவரின் உரிமை!... ஆயினும், கொலைப் பாதகம் தீதானது எனக் கருதி, எவ்வுயிரையும் கொலைச் செய்யாமல் வாழ்கிறவனே தலை சிறந்தவன் ஆவான்...
*தன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் கொலை பாதகமே!... அதே போல் பிறஉயிரையும் பாவித்து கொலைச் செய்யாது வாழும் வாழ்வு தலைச் சிறந்த வாழ்வாகும்... யாகம் புரிந்து வாழ்வது கொலை பாதகமே!...
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
-326.
கொலை செய்தவன், கொல்லப்பட்டவனை சார்ந்தோரால் கொல்லப்படுவான்... அல்லவெனில் நீதிசபையும் தண்டிக்கும்... ஆனால்; எவரையும், எதனையும் கொலை செய்தல் கூடாது எனும் மன உறுதியுடன் வாழ்வோனுக்கு வாழ்நாளெல்லாம், பிறரால் கொல்லப் படுவோம் என்று உயிர்க் குறித்த அச்சம் ஏற்படுவதில்லை...
*மதத்தின் பேரிலும், கடவுள் பேரிலும் கொலைகள் தொடர்கின்றன... இவர்களின்
வாழ்வு அச்சத்திற்கு உட்பட்டே இருக்கும்...
-----------------------------------------------------------------------------
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
-327.
தன்னுயிரைப் போக்க வேண்டிய சூழல் ஏற்படினும், பிற உயிரைக் கொலைச் செய்தல் கூடாதே... ஒவ்வொரு உயிருக்கும் தன்னுயிர் இன்னுயிர் என நினைவில் கொள்க!...
-------------------------------------------------------------------------
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
-328.
திட்டமிட்டு ஒரு கொலைச் செய்தலால், பெருந்தொகை ஊதியம் கிடைக்கலாம்... மானிட நேயம் மிக்கோர், அவ்வூதியத்தை இழிவெனக் கருதுவர்...
*ஓருயிரைக் கொன்று புசித்தால், சுவையாயிருக்கும் என்று பார்ப்பனன் தின்பான்... மானிட நேயம் உள்ளோர் அவ்வண்ணம் தின்பதை இழிவெனக் கருதுவர்...
----------------------------------------------------------------------------
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
-329.
உயிரைக் கொல்லுவோர் எவரும் மக்கள் வகையினர் அல்ல... மாக்கள் ஆவர்... மாக்கள் என்போர் இழிவானவர்களே... கொலை நிகழ்வால் ஏற்படும் கொடுமையை ஆராய்ந்துப் பார்க்கும் போது, கொலைகாரர்கள் கொடியவர்கள் என்பது புலனாகும்...
*கொலைச் செய்து உயிர் வாழ்ந்தோர் பார்ப்பனரே... பார்ப்பனர் கும்பல், வள்ளுவன் பார்வையில் மாக்கள் ஆவர்...
----------------------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
உயிர்உடம்பின் நீக்கியார் என்பசெயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
-330.
செயிர் = குற்றம்.
கொலை வினையாற்றுவோரை மக்களாகக் கருதுவோரில்லை... மாக்கள் என்றே கருதுவர்... மாக்களெனில் சடலம் எனலாம்... சடலத்தை அப்புறப் படுத்துவது போல், மாக்களையும் மக்கள் அப்புறம் படுத்தி விடுவர்...
கொலை புரிய, கொலைகாரனுக்கு அவனது உடலும் உடந்தையாக இருக்கிறது... ஆதலால் அவ்வுடலும் குற்றச் சாட்டுக்கு உட்பட்டதாகும்... எனவே, அவனது உடலும் சடலமாகவே பார்க்கப்படும்... அவனையும், அவனது நடத்தையையும் உலகு ஏற்றுக் கொள்வதில்லை...
------------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் : 34.
நிலையாமை
நில்லாத
வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
-331.
எதுவும் நிலையில்லை... காணும் கனவு... கண்டக் காட்சி... வாழும் நிலை... காற்றின் நிலை... வெப்பத்தின் மாறுபாடு... எதுவுமே நிலையில்லை... நேற்றிருந்தவர்
இன்றில்லை... ஆயினும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்வு நிலையானது என்று, தவறாகக் கணித்து பொறாமைக் கொள்வோர்
ஏராளம்...
இவர்கள் பகுத்தறிவற்றவர்கள்... உண்மையை உணராத இவர்களது எண்ணமும் மிக மிகத் தாழ்வானதாகும்...
-----------------------------------------------------------------------
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
-332.
கலைக் காட்சிதனைக் கண்டுக் களிக்க, அரங்கில் கூடும் கூட்டம் போன்றதே பெருஞ் செல்வமும்... மெல்லக் கூடி, மெல்லக் கலைவது போல், செல்வமும் மெல்ல சேர்ந்து, மெல்ல மெல்லக் கரைந்து விடும்... *செல்வம் நிலையானதல்ல!
--------------------------------------------------------------------
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
-333.
அற்கா = நிலையின்மை
அற்குப = பயன் பெறும் வகையில்
செல்வம் நிலையில்லாதது... ஆயினும் அதனை நேரிய வழியில் ஈட்டியிருந்தாலும், அச்செல்வம் கரைந்து விடுமுன் அதனைப் பயனுள்ள வகையில் ஆக்கிக் கொள்ள வேண்டும்...
-------------------------------------------------------------------------------
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
-334.
ஒவ்வொரு நாளிலும் இரவுமுண்டு; பகலுமுண்டு!... நாளில் வேறுபாடு ஏதுமில்லை... ஒன்று போலவே ஒவ்வொரு நாளும் நகர்கிறது... ஒருநாள் கழிவது என்பது, வாழ்நாளின் ஒருநாள் கொய்யப் படுகிறது எனில் மிகையல்ல...
ஒவ்வொரு நாளும் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றனர்... அது அறியாமையின் நிலை... ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் அறிவியல் உண்மை...
---------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
-335.
நாக்கு உள்ளிழுக்கப் பட்டு விக்கல் ஓசை வெளிவர ஒரு நொடிக்கும் குறைவான நேரமேப் பிடிக்கும்... அந்த நேரமும் கழியுமுன்னர் விரைந்து நற்செயல் ஆற்றிட வேண்டும்... *நிலையில்லா வாழ்வில், கிட்டும் நேரத்தை நற்செயலுக்குப் பயன்படுத்துக
--------------------------------------------------------------------------------
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
-336.
நெருநல் = நேற்று.
நேற்று இருந்தவன், இன்று மரணித்து விட்டான் என்னும் வரலாறுதான் இவ்வுலகின் பெருமை... மரணம் எந்த நேரத்திலும், எந்த வடிவிலும் ஏற்படலாம்...
---------------------------------------------------------------------------
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
-337.
ஒரு நொடிப் பொழுதேனும், யாரும் தாம் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிவதில்லை... நிலையில்லாதது இவ்வாழ்வு என்று அறியாமல், வாழ்க்கைப் பற்றிய காணும் கனவு - எண்ணம் - அளவிட்டு, கோடி என்றுக் கூறின் தவறாகும்... கோடியைக் காட்டிலும் பன்மடங்கு எனலாம்...
------------------------------------------------------------------------
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
-338.
கூட்டை விட்டு, பறவை வெளியேறி விடுதல் போலாகும் உடலுக்கும், உயிருக்கும் உள்ள உறவு. *உயிர் பிரிந்து விட்டால், உடல் வெறும் கூடுதான்... அதுவும் சிதைந்து விடக் கூடியதே...
---------------------------------------------------------------------------------------
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
-339.
உறங்குதல் போன்றது இறப்பு!... உறக்கம் கலைந்து எழுதல் போன்றது பிறப்பு.
-----------------------------------------------------------------------------------
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
-340.
துச்சில் = ஒதுங்குமிடம்
உடம்பில் இருந்த உயிர்க்கு என்னவாயிற்று?... இவ்வளவுப் பெரிய உடம்பில் ஒதுங்க இடமில்லையோ... இந்நாள் வரைக்கும் இந்த உடம்பில் தானே இருந்தது?...
-------------------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் :41
துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
-341.
'எந்தப் பொருளின் மீது விருப்பம் அதிகரிக்கறதோ, அப்பொருளை மறந்து விடுவது அல்லது அந்தப் பொருளின் பயன்பாட்டை மறுத்து விடுவது நல்லதாகும்...
ஏனெனில்? அப்பொருள் குறித்த எதிர்ப்பார்ப்பும் - ஆசையும் - மனவேதனையும் - நீங்கிவிடும்...'
*என்றே வள்ளுவன் கூறுகிறான்...
ஆனால்; மதத்தின் பேரிலும், கடவுள் பேரிலும் ஏமாற்று வித்தையினர் கூறுவதென்ன?
துறவெனில் இல்லற வாழ்வைத் துறந்து விடுதலாம்... கடவுளுக்காவும், மதத்திற்காகவும் தன் பொருட்கள் யாவையும் மதவாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, கடவுள் பேர் கூறி மதவாதிகளுக்கு பணிவிடை செய்தலாம்... மேலும்; குறிப்பிட்ட அடையாளத்தின் சின்னமாய் மாற்றிக் கொள்வதும் துறவறமாம்!
------------------------------------------------------------------------------
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
-342.
உள்ளம் விரும்பும் தேவையற்றதை ஒதுக்கிவிடு... உள்ளம் விரும்பும் பொருளைத் துறந்து விட்டால் துன்பத்திலிருந்து விடுபடலாம்... துன்ப நிலையில்
இருந்து விடுபட்டாலே மனம் ஆறுதல் பெறும்... அதுவே இன்பமாகும்!
------------------------------------------------------------------------------
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
-343.
அடல் = ஆளுமை.
கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என ஐம்புலன்களின் மீதும் ஆளுமை செலுத்த வேண்டும்... அல்லது ஐம்புலன்களும் அடிமையாக்கி விடும்...
எனவே, ஐம்புலன்கள் கிளர்த்தும் பேராசையை, ஆளுமைத் திறன் கொண்டு அடக்கிவிடல் நல்லது... மனஉறுதியை துணிவுடன் பேணிட்டால், துயரம் என்பதிலிருந்து விடுபடலாம்...
------------------------------------------------------------------------------------
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
-344.
நோன்பு = மனவுறுதி.
எந்தவொரு வீணாசையும் கொள்ளாதிருத்தல், மனஉறுதிக்குத் தூணாகும்...
வீணாசைக் கொள்ளுதல், மன உறுதியைக் குலைத்துத் துயரத்தில் ஆழ்த்தும்...
-------------------------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. -345.
ஏனின்னும் துன்பத்தோடுத் தொடர்புக் கொண்டிருக்கிறாயோ... கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என ஐம்புலன்களால் தோன்றும் இச்சைக்கு உட்பட்டு இன்னலுறுகிறாயே...
வீணாய் இன்னலுறுவதற்கோ ஆசையை சுமக்கிறாய்?... இருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் வாழத் தெரியாதவனுக்கு அவனது உடம்பும் சுமையே!...
*இத்தகையோர் மடிவதே மேல்!...
-------------------------------------------------------------------------------
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
-346.
எல்லாம் நானே... எல்லாம் எனக்கே என்னும் பேராதிக்க எண்ணத்தை விட்டு, நன்னெறி எனும் மன உறுதியுடன் வாழ்கிறவன் எவனோ -அவன்- வானளாவியப் புகழுடன் திகழும் சான்றோர்களை விட உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப் படுவான்...
*இக்குறளுக்கு- செருக்கற்ற வாழ்வு வாழ்வோனுக்கு கடவுள் எனப்படுவோர் வாழும் உலகைக் காட்டிலும், உயர்ந்த உலகில் வாழ இடம் கிடைக்கும் என்று உரை எழுதியுள்ளனர் சிலர்... அந்த உலகம் எங்கே இருக்கிறது... அதில் இருப்போர் தொகை எவ்வளவு என்ற விபரத்தையும் உரையாசிரியர் தந்தால் நல்லது...
-----------------------------------------------------------------------------------
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
-347.
இன்னல் பல்வேறு வடிவில் துன்பங்களைத் தரும்... ஏனெனில்? பேராசையை நெஞ்சில் வளர்த்து பெருந் துன்பத்தில் சிக்கி உழல்வோர் உண்டு... பெருந்துன்பத்திலிருந்து விடுப்பட வேண்டுமெனில், பேராசையை விட்டொழிக்க வேண்டும்...
*கடவுளை வழிப்படுவோர் துன்பமற்ற வாழ்வு வாழ்வர் எனும் மூடநம்பிக்கையை திணிப்பது மதநூல்கள்... பேராசை நீக்காமல் பெருந்துன்பம் நீங்காது என்பது வள்ளுவம்!
----------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
-348.
துன்பத்தை வெற்றிக் கொண்டோர் என்போர் வீண் ஆசையைத் துறந்தவர் ஆவர்... பேராசையில் மயங்கி, பெருந்துன்ப வலையில் சிக்கிக் கொண்டோர், வீணாசையைத் துறந்திடாதவர் ஆவர்...
-------------------------------------------------------------------------------
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
-349.
நற்கொள்கையில் உறுதி வாய்ந்த நெஞ்சம் கொண்டவர்களால் மட்டுமே, கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என ஐம்புலன்களால் உண்டாக்கப் படும் பேராசைகளில் இருந்து விடுபடமுடியும்...
நெஞ்சில் உறுதி இல்லையேல், அவர்களின் வாழ்க்கைத் தரம், நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கி வீழும்...
------------------------------------------------------------------------------------
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
-350.
ஏற்றுக் கொள்க தன்னலமற்றவனின் கொள்கையை!... அக்கொள்கையை ஏற்று, அதன்படி செயல்பட்டால் மனதில் தோன்றும் வீணாசையிலிருந்து விடுப்படலாம்...
*மதவாதிகள் இம்மை, மறுமை, கீழ் உலகம், மேல் உலகம் எனும் பேராசையை ஊட்டுபவர் ஆவர்... உண்மையில் மனதில் ஏற்படும் பேராசையை நீக்கினாலே நல்வாழ்வு அடையலாம்... வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை...
-------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் : 36.
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
-351.
உண்மைக்குப் புறம்பானவற்றை உண்மையென நினைக்கின்றனர் பகுத்தறிவு
அற்றோர்... அறியாமையில் மூழ்கியுள்ள அவர்களின் வாழ்நிலை வாழ்நாளெல்லாம் இழிவானதாகும்...
*கடவுள் நால்வர்ணம் செய்தான் என்று நம்புவோர், வாழ்நாளெல்லாம் இழிபிறவியென பாவிக்கப் படுகின்றனர்...
-----------------------------------------------------------------------------------
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
-352.
அறியாமையிலிருந்து விடுபட்டு, இன்ப நிலையை அடைவோர் எவரெனில்? வியப்பு ஏற்படுத்தும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு, வியக்க வைத்த நிகழ்வை சிந்தித்து - பகுத்தாய்ந்து - உண்மையைக் கண்டறிவோர் வாழ்வில் இன்பம் காண்பர்...
*இடி, மின்னல், அலை, பெருங்காற்று என இன்னும் பலவற்றிற்கு கடவுளைப் படைத்தான் பார்ப்பனன்... மக்களும் அஞ்சி பார்ப்பனனின் ஏவலுக்குப் பணிந்து அறியாமையில் உழன்றனர்... இடி, மின்னல், அலை, பெருங்காற்று என யாவற்றுக்கும் பகுத்தறிவால் விடைத் தேடி பார்ப்பனன் ஏற்படுத்திய இருட்டைக் கிழித்து உண்மையைக் கண்டனர் பகுத்தறிவாளர்...
-----------------------------------------------------------------------------
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
-353.
இப்பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடத்தி உண்மைகள் பல கண்டறிகின்றனர், ஆராய்ச்சியாளர்...
தம் சிந்தையால் வானத்தின் நிகழ்வுகளை விரல் நுனியால் அறிவர் ஆராய்ச்சியாளர்...
*வள்ளுவன் வாக்கு இன்று மெய்யாக்கப் படுவதையும், பார்ப்பனரின் புரட்டு உடைக்கப் படுவதையும் காண்கிறோம்...
கடவுள் வானிலிருந்து இவ்வுலகை இயக்குகிறான்... அவனது பேராற்றலை என்னவென்பது?... மழைத் தருகிறான்... இடியை முழக்குகிறான்... மின்னல் செய்கிறான்... பூமியைப் பாயாகச் சுருட்டுகிறான்... பன்றியைப் புணர்ந்துக் குழந்தை பெறுகிறான்... மகத்தான மகத்துவம் பல செய்கிறான் என்று மக்களை வியப்பில் ஆழ்த்தி, உண்மையைக் கண்டறிய விடாமல் மூடத்தனத்தில் ஆழ்த்தினார் மதவாதிகள்...
------------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
-354.
கண்டல், கேட்டல், நுகர்தல், தீண்டல், சிந்தித்தல் என அய்ந்து நிலைகளாலும்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உண்மையை மக்களுக்கு வெளிச்சம் ஆக்கினர் ஆராய்ச்சியாளர்... ஆயினும்; மூடத்தனத்தில் மூழ்கி பகுத்தறிவை ஏற்கவில்லை
யெனில் பலனற்று போவரே மக்கள்...
--------------------------------------------------------------------------------------
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு. -355.
எதுவாயினும், அது எதனால் நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது என அதன் உண்மைத் தன்மையை அறிந்து, தெளிவு அடைதல் வேண்டும்... அதுவே அறிவார்ந்தச் செயலாகும்...
*'நெற்றியில் பிறந்தேன்' என பார்ப்பனன் சொன்னால், அதனை நம்பி அவனைப் பணிதல் கூடாது... எவனையும் நெற்றியில் பெற்றெடுக்க இயலாது... அவன் அவ்வண்னம் ஏன் பொய்யுரைக்கிறான்? எதன் பொருட்டு பொய்யுரைக்கிறான் என்று ஆய்ந்து இயன்றால் அவன் தாயின் நெற்றியை ஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்... அதுவே அறிவார்ந்தச் செயலாகும்...
-------------------------------------------------------------------------------
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி!
-356.
மெய் (எ) பொய்மை.
கற்று, ஆய்ந்து பகுத்தறிவைக் கண்டோர், மீண்டும் மூட எண்ணம்தனை ஊட்டும் மதவழிக் கோட்பாட்டுக்கு - பகுத்தறிவற்றப் பாதைக்கு - திரும்ப எண்ணங் கொள்ளார்...
*மற்றீண்டு வாரா நெறி எனும் சொற்றொடருக்கு, திருக்குறள் உரையாசிரியர் பலர், மீண்டும் மறுப்பிறவி எடுத்திடக் கல்வியாளர் விரும்பமாட்டர்' என உரைத் தந்துள்ளனர்...
மறுப்பிறவி என்பதே பொய்! அது உண்மையெனில் எவன் விரும்ப மாட்டான்... நீண்ட நாள் வாழ மருத்துவம் மேற்கொள்பவன் மீண்டும் பிறந்து வாழ விரும்ப மாட்டானா?
---------------------------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. -357.
நன்கு ஆய்ந்து தெளிவடைந்தோர், மக்கட் பெருக்கத்தை, மிக உறுதியாக - மனதளவிலும் - விரும்ப மாட்டார்...
*படைப்பு இறைவனின் செயல்... குழந்தைப் பிறப்பைத் தடுத்தல் கூடாது என்பது மதம்... ஆனால்; பகுத்தறிவாளர், மக்கட் பெருக்கத்தை விரும்புவதில்லை... ஏனெனில்; எல்லாருக்கும் கல்வி,எல்லாருக்கும் மருத்துவம் என்பது இயலாமல் போகும்... நாட்டில் வறுமை கோலோச்சும்... அறியாமை நீடிக்கும்...
------------------------------------------------------------------
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. -358.
படைத்தல் என்பது கடவுள் செயல் என்பர் மதவாதிகள்... இது அறியாமையாகும்... இந்த அறியாமை நீக்கப்பட வேண்டும்...
நினைத்தால் பிறப்பை நிகழ்த்த முடியும்... நினைத்தால் பிறப்பைத் தடுக்க முடியும் என்ற நிலையை அறிவியலார் கண்டறிதல் வேண்டும்...
*சோதனைக் குழாய்க் குழந்தை மற்றும் படியாக்கம் மற்றும் கருத்தடை என அறிவியலால் மாற்றம் நிகழும் என வள்ளுவன் நன்கே அறிவியலைக் கணித்துள்ளான்...
------------------------------------------------------------------------------------------
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
-359.
உண்மை நிலையைக் கண்டறிந்தால் பழமைக் கருத்து ஒழியும்... பழமைவாதம் அழிந்தால், பொய்மை ஒழியும்... பொய்மை ஒழிந்தால் மூடஎண்ணத்தால் இடையூறு நிகழாது...
*பகுத்தறிவு மலர்ந்தால், தீமை பயக்கும் மூடக்கருத்துகள் விலகிவிடும்...
---------------------------------------------------------------------
காமம் வெகுளி மயக்கம்இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். -360.
நாமம் = அச்சம், துன்பம்.
பேராசை, கோபம், அறியாமை என இம்மூன்றும் தீராத் துன்பம் தருவன... இம்மூன்றையும் மன உறுதிக் கொண்டு ஒழித்தால், இம்மூன்றால் விளையும் துன்பமும் இராது...
----------------------------------------------------------------------------------
உறுதியியல்
அதிகாரம் :37.
அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
-361.
பிறப்பு = வாழ்க்கை, வாழ்நாள்.
பேராசையே பெருந்துன்பத்துக்கு விதை என்றறிக... துன்பமானது எல்லா உயிர்க்கும், எந்த வடிவிலும் நிகழலாம்... பேராசை எனும் நச்சுவிதை நெஞ்சில் விதைக்கப்பட்டு விட்டால், வாழ்நாளெல்லாம் வளர்ந்து - பெருந்துன்பம் தந்துக் கொண்டே யிருக்கும்...
-----------------------------------------------------------------------------------
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். -362.
பிற + அவாமை = பிறர்ப் பொருள் விரும்பாமை.
நல் ஒழுக்கத்தோடு வாழ விரும்பினால், பிறர்ப் பொருளை விரும்பாதிருக்க வேண்டும்...
பிறர்ப் பொருள் மீது அவா வுறுதல் என்பது, தீமைகளைத் தோற்றுவிக்கும்... பிறர்ப் பொருளை விரும்புவோர், அவர் விரும்பாமலேயே தீமைகள் நாடி வரும்...
*அவா அறுத்தல் தலைப்பின் கீழ் வரும் பிறவாமை எனும் சொல்லுக்கு மறுபிறவி என உரை எழுதியுள்ளனர் உரையாசிரியர் பலர்...
------------------------------------------------------------------------------------
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.
-363.
இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழும் மனஉறுதிக்கு ஈடான செல்வம் இங்கு மட்டுமல்ல... எங்குமே இல்லை...
-------------------------------------------------------------------------------
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
-364.
மனத்தில் பேராசை இன்றி - மன உறுதியுடன் - வாழும் வாழ்வே தூய வாழ்வு எனப்படும்... அந்த மனஉறுதியும் வாய்மை நெறியோடு வாழ்வோர்க்கே வரும்... *மனதில் உறுதி வாய்மையின் பாற்பட்டதாக இருக்க வேண்டும்...
---------------------------------------------------------------------------
உறுதியியல்
திருக்குறள் உரை.
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
-365.
பிறர்ப் பொருள் மீது விருப்பம் கொள்ளாமல் மன உறுதியுடன் வாழ்வோரை அற்றவர் எனலாம்... மாறாக ஏமாற்றுப் பேர்வழிகளை அற்றவர் எனலாகாது...
*அற்றவர் எனில், மதத்தின் பேரில் - கடவுள் பேரில் - துறவிகள் என்று அழைக்கப் படுவோர் அல்லர்... ஏனெனில்; அவர்கள் உழைக்காமல் பிறர் உழைப்பில் வயிறு நிரப்பும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆவர்...
--------------------------------------------------------------------------
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
-366.
பழிக்கு அஞ்சி வாழ்தல் நேர்மையின் பாற்பட்டச் செயலாகும்... துறவிகள் வேடத்தில் வாழ்வோர் அறநெறியாளர் அல்லர்... அவர்கள் பிறர் உழைப்பை வஞ்சித்து வாழ்வோர் ஆவர்...
---------------------------------------------------------------------------------------
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
-367.
ஆசையூட்டுஞ் செயலை ஒருவன் அறவே அறுத்து விடின், நன்முறையில் வாழும் நெறி தானாகவே அமையும்...
-------------------------------------------------------------------------------
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம்அஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
-368.
ஆசையே துன்பத்தின் உரமாகும்... ஆசை நெஞ்சில் இருக்குமேயானால் துன்பமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் ...
-------------------------------------------------------------------------
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
-369.
மனதில் இன்பம் தொய்வின்றி நிலைக் கொண்டிருக்கும்; எப்போதெனில்?
பிறர்ப் பொருள் மீது அவா எனும் துன்ப விதையைத் தூக்கி வீசி விட்டால், அமைதி எனும் இன்பம் மனதைத் தழுவிடும்...
------------------------------------------------------------------------------
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
-370.
இயல்புக்கு மாறான பேராசையை நெஞ்சிலிருந்து நீக்க வேண்டும்... இவ்வுறுதிப் பாட்டில் நிலையாய் இருப்பின், இயல்பாகவே நெஞ்சில் பேரானந்தம் மிளிரும்...
உறுதியியல்
அதிகாரம் :38.
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
-371.
ஊழ் = செயல்
அசைவு = வருத்தம், தளர்வு.
ஆக்கத்தின் எதிர்விளைவால், மனதில் உறுதிநிலை - மகிழ்வு நிலை - ஏற்படும்... கைப்பொருள் இழப்பு ஏற்படின், மனம் சோர்வடையும்... இது இயல்புநிலை...
*இதனை விதி என்பர் மதவாதிகள்...
-------------------------------------------------------------------------------------------
பேதைப் படுத்தும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
-372.
இழவு = இழப்பு.
ஊழ் = செயல்பாடு
இழக்கும் படியான செயல்பாடு இருப்பின், ஒருவனை பிறர் எள்ளும் படியான பேதையாக்கி விடும்... அத்தகைய அறிவைப் போக்கி, கூரிய சிந்தனைத் தருவது எதுவெனில்?
நல்லாற்றல் கொண்டோரின் தொடர்பால், பேதை எனும் நிலையைப் போக்கிவிடும்... இழப்பிற்கான செயல்பாடும் இராது...
*தோல்வி என்பது விதியால் என்பர்... ஆனால்; தக்காரின் தொடர்பு, அறியாமையப் போக்கி அறிவை வளர்த்து வெற்றி முகத்திற்கு இட்டுச் செல்லும்... மனம் தளராமல் வெற்றிக்கான வழித் தேடல் வேண்டும்...
--------------------------------------------------------------------------------------
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
-373.
மிகச் சிறந்த - நுட்பமான - நூல் கற்றவனாயினும், ஒருவனிடத்தில் இயல்பான அறிவு எதுவோ அதுவே வெளிப்படும்...
*நுண்ணிய நூல் கற்பதால், ஒருவன் தெளிவைப் பெற்று விடுவான் என்பது அறியாமை... இயல்பாகவே ஒருவனுள் இயங்கும் நுண்ணூக்கிகள் உள்வாங்கும் திறன் கொண்டிருத்தல் வேண்டும்...
அத்திறன் செயல்பாட்டில் குறைப்பாடு இருப்பின் இயல்பான செயல்பாடே காணப்படும்... விதி என அவனை வீண்பழியிடல் ஆகாது...
--------------------------------------------------------------------------------
உறுதியியல்
அரங்க கனகராசன் உரை.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
-374.
இயல்பாகவே வாழ்வியல் இருகூறாகத் திகழ்கிறது... செல்வந்தர் எனும் ஒருநிலை. நுண்ணிய அறிவிற் சிறந்தோர் எனும் மற்றோர் நிலை.
*கல்வியறிவை உள்வாங்கும் ஆற்றல் இல்லாத சிலரிடம் செல்வம் குவிவதும்,
கல்வியாளர் சிலரிடம் செல்வம் இல்லாத நிலையும் இயல்பானதே... இதனை முன்வினை என்றோ விதி என்றோ கூறுதல் அறியாமையின்
வெளிப்பாடாகும்...
--------------------------------------------------------------------------------
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
-375.
நன்னெறியும் தீமை பயத்தல் போல் காணப்படும்... தீயவழியும் நன்மையானதாகத் தெரியும்... செல்வம்தனை எவ்வகையிலும் குவித்திடல் வேண்டும் என்றெண்ணிச் செயல் படுகிறவர்க்கு!...
*செல்வம் குவிப்பவன் குறிக்கோள் நன்னெறி, தீயநெறி எனக் கொள்வதில்லை... கற்றிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் தேவையில்லை... இது அவனது ஆற்றல்!... இதனை விதி எனின் மடமை!...
----------------------------------------------------------------------------
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
-376.
பிறர்ப் பொருளை, எவனொருவன் கட்டிக் காத்தாலும் அது அவன் பெயரை கூறப் போவதில்லை... எவன் உடமையாளனோ அவனையே அது அடையாளம் படுத்தும்...
தான்விரும்பி, தன் பொருளை பிறருக்கு வழங்கி விட்டாலும், அப்பொருள் இன்னாரின் பொருள் இன்னாருக்காக வழங்கப்பட்டது என்றே கூறப்படும்...
-----------------------------------------------------------------------------
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
-377.
பொருள் சேர்ப்பதற்குரிய நியதிகள் சான்றோர்களால் வகுக்கப்பட்டுள்ளன... அந்நியதிக்குப் புறம்பாக- கோடிக் கணக்கில், செல்வம் குவித்தாலும்
வெளிப்படையாக - அச்சமின்றி - அதனை நுகர இயலாது...
--------------------------------------------------------------------------------------
உறுதியியல்
ஊழ்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
-378.
துறப்பு = தோல்வி அடைதல்
துப்புரவு = அனுபவம், திடம்.
உறல் = செயல், திட்டம்.
ஊட்டம் = செழுமை, வழி.
கழியும் = அழிதல், ஒழிதல்.
மனஉறுதியும்,நேர்திறனும் இல்லையேல் தோல்வி ஏற்படுவது இயல்பு!... இத்தகையவர்களால்
போடப்படும் திட்டங்களும் நடைமுறைக்கு ஒவ்வாது அழியும்... இதன் மெய்ப் பொருளை உணராது விதி என சோர்வு அடைவர்...
-------------------------------------------------------------------------------
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
-379.
நன்னெறியைக் காண்பவர் நல்நிலையை அடைவர்... நன்னெறி அல்லாத வழியில் பயணிப்பவர் துன்பமே அடைவர்...
*உண்மை இவ்வாறிருக்க, இதனை உணராமல் விதியின் செயலிது என்று அறியாமையில் புலம்புவதேன்?... மானிட நேயம் அற்ற மதக் கோட்பாட்டினைப் பின் பற்றினால் துயரமே மிகும்... கடவுளே ஏன் என்னை கை விட்டீர் என்று பின்னர் புலம்புவர்...
------------------------------------------------------------------------------
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
-380.
ஊழி = சூரியன், பகலவன்.
பகற்கோள் காட்டிலும், பெரு வலிமைக் கொண்ட , மாற்றுக் கோள்கள் உண்டோ?... வேறெதுவும் சூரியனை மறைக்க முற்பட்டாலும், சூரியன் தன் ஆற்றலால் முன்னிலைக் கொண்டிருக்கும்...
-------------
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
-380.
ஊழ் = முன்னர் செய்தச் செயல்
முன்னர் செய்தச் செயலைக் காட்டிலும், வேறு சான்று எதுவுமுண்டோ?... முன்னர் செய்தச் செயலின் எதிர் விளைவை, எது கொண்டு மறைத்தாலும் மறையாது... அது அழிக்கவியாலா தடயமாய் முன்னிலை வகிக்கும்...
--------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக