சிறுகதைகள்

சிறுகதைகள் 

சூத்திர நீதிபதி
-----------------
""ஏண்டா அம்பி மோடி ஆட்க்ஷி சுத்தம் மோசம் "
"ஏன்னா இப்படி பேசறேள்... மோடி கவரண்மெண்ட்டு நம்மவாளுக்கு அதிக கரிஷனம் காட்றதில்லையோ.. "
"போடா அம்பி... இதுவே மன்னராட்சியா இருந்தா பிராமணாளுக்கு தானம் பண்ணுங்கோ னு உத்தரவுப் போட்டிருப்பா"
"மன்னராட்சி மாதரிதானே மோடி ஆட்சியும் இருக்கறது "
"அட அபிஸ்ட்டு... உடுப்பி கோபாலகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமோ... அவாளுக்கு வயசாயிடுத்து... சொளகரியமா வாழ்ந்துண்டு இருக்கான்... "
"சொல்லுங்கோ "
"அவாளுக்கு செங்கல்பட்டு ஜில்லாவில் 4 கிரவுண்ட் மனை இருந்துச்சு "
"22 செண்ட் இடமாச்சே.. பெருமாளுக்கு கோயில் கட்டினால் 100 பிராமணாள் குடும்பம் கஷ்டமில்லாமல் ஜீவிக்குமே ..."
"அதுதா இல்லே... சூத்திர நீதிபதி ஒருத்தன் அந்த இடத்தை நடிகை ஜோதிகா புருஷன் சூர்யா நடத்தற கல்வி அறக்கட்டளைக்கு தானம் பண்ணிடுங்கோனு சொல்லிட்டான்... அந்த உடுப்பி கோபாலகிருஷ்ணனும் தானம் பண்ணிட்டான்... மன்னராட்சியா இருந்தா பிராமணாளுக்கு தானம் பண்ண வெச்சிருப்பா.... மனுநீதியை மன்னர்கன் மதிச்சா... இப்ப பாரு... சூத்திரன் படிக்க தானம் பண்ணிட்டான் பாவி...:
"மோடி ஆட்க்ஷியிலா இப்படி நடக்கறது... ஹரே கிருஷ்ணா.... லோகம் கெட்டுப் போயிடுத்து... மறுபடியும் மனுதர்மம் ஆட்சி வேணுமடா இராமா.... "
-அரங்ககனகராசன்
29042020
--------------------------------------------------------------


மோடியை இழுக்கறே
----------------------------
"ஏண்டீ, காலையிலதானே அம்பது ரூபா தந்தேன் "
"ஆமா அம்பது கொடுத்தீங்க... நேற்றைக்கு நூறு கொடுத்தீங்க... ஞாயிற்றுக்கிழமை கறி எடுக்க முன்னூறு கொடுத்தீங்க... இதுக்கெல்லாம் என் கிட்ட கணக்குக் கேளுங்க "
"ஏண்டிக் கத்தறே "
"நா கத்தறனா... நா கத்தறனா "
"என்னடி ஆச்சு சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்றே "
"நா மட்டுமா சொல்றேன் ... இதோ இது. சொல்றதில்லை "
"என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு... நா எதையோ கேட்டா உங்கம்மா டிவியை காட்றா "
"யப்போ... உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்காப்பா... அம்பது ரூபா தந்துட்டு அய்னூறு தடவை அம்மாவைக் கணக்குக் கேக்கறியே... இந்த ரெண்டு மாசம் என்னப்பா நடக்குது "
"என்னடா நடக்குது "
"உனக்கு ஒன்னும் தெரியாதுப்பா.... ஆக்கி வெச்சா கொட்டிக்கத் தெரியுதில்லை... "
"நீயும்தாண்டா கொட்டிக்கிறே"
"ஆமா... நானும் கொட்டிக்கிறேன்.... ஆனா கேபிளுக்கு நீதானே பணம் கட்றே....அதுவும் ஜி எஸ் டி யோட"
"எனக்கு ஒன்னும் வெளங்கலே... நீயாவது சொல்லேண்டி. "
"ஊரடங்கு போட்ட நாள்லிருந்து கேபிளுக்கு பணம் கட்டிட்டுதானே இருக்கீங்க.. அறிவிருக்கா.... உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா.. எங்கிட்ட கொடுக்கற காசுக்கு கணக்குக் கேட்கத் தெரிஞ்ச இந்த மூஞ்சிக்கு மோடிகிட்ட போய் கணக்கு கேட்க துப்பிருக்கா "
"மோடிகிட்ட நா என்னடி கேக்கனும்.. "
"ஏற்கனவே போட்ட பழைய நிகழ்ச்சியை நாடகத்தை இப்பவும் காட்டிட்டு இருக்கானுக... #பழைய நிகழ்ச்சிக்கு எதுக்குடா பணம் கேக்கறே... ஜி எஸ் டி யும் சேத்து வாங்கறியேனு போய் மோடிகிட்ட கணக்கு கேக்க தைரியமில்லை... எங்கிட்ட மட்டும் கணக்குக் கேக்கறீங்ளே... ஒரு நியாயம் வேணாம் "
"அதுக்கு எதுக்குடி மோடிகூட என்னைக் கோத்து விட்றே "
"யப்பா உன்னால முடியாதில்ல... அப்ப பேசாம இரு... ஊரடங்கு முடியற வரைக்கும் பொத்திக்க வாயை "
"என்னங்கடி ஊரடங்குல எல்லாருக்கும் மறை லூசு ஆயிருச்சா "
"யப்பா... பொத்து... மறை கழண்டவன்கிட்ட கேக்காம திரும்பத் திரும்ப அம்மாவை கேள்விக் கேக்குற"
"அய்ய்யோ ஊரடங்கு முடியறதுக்குள்ள இனி எத்தனை வீட்ல எத்தனைப் பேர் லூசாகறாங்ளோ... "
-அரங்க கனகராசன்
23042020
--------------------------------------------------------------------------------

பிழைக்கத் தெரியாதவளே...
----------------------------------
"வீடு வாடகைக்குக் கிடைக்குமா?...
அலைபேசியில் வெட்டி அரட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயின் செவிகளை "வீடு வாடகைக்குக் கிடைக்குமா?" - என்று குரல் ஓசைத் தொட்டது....
குரலின் இனிமையால் ஈர்க்கப்பட்டு, விஜய் அவனையறியாமலேயே எட்டிப் பார்த்தான் சன்னல் வழியே...
அதே வேளையில்-
"வீடு இல்லைம்மா..." என்று அவனுடைய அம்மா அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டேச் சொன்னாள்....
அடடா என்ன அழகு
சன்னல் வழியே எட்டிப்பார்த்த விஜயின் மனம் அவளுடைய பின்னழகிலும் மயங்கியது....
"ஆகா... திரிஷா மாதிரியே இருக்காளே..." என்று வாய்விட்டு முனகினான்...
கல் பொறுக்கிக் கொண்டிருந்த தாயின் காதில் இவன் முனகல் மெலிதாகக் கேட்டகவே, "என்னடா சொன்னே..." என்று கேட்டாள்...
"இல்லைம்மா... பின்னாடி போர்சன் காலியாகத் தானே இருக்கு... 'வாடகைக்கு வீடு விடப்படும்' னு போர்டு போட்டிருக்கோம்... அந்த பொண்ணுக்கு வீடு இல்லைனு சொல்லி அனுப்பிட்டியேம்மா..." -என்று ஆதங்கமாகக் கேட்டான் விஜய் தாயிடம்...
"அவளை எனக்குப் பிடிக்கலை... வீடு இல்லைனு சொல்லிட்டேன்... உனக்கென்னப் பிரச்சனை இப்ப..."
அவன் ஏதும் சொல்லாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவளைப் பின் தொடர விரைந் தான்...
அடுத்தத் தெருவைத் தாண்டி நடந்துச் சென்றுக் கொண்டிருந்தவளைக் கண்டுக் கொண்டான்....
அவளருகில் வண்டியை நிறுத்தி, "அலோ..." என்றான்...
அழகி அவனைப் பார்த்து முறைத்துவிட்டு ஒதுங்கி நடந்தாள்...
"வீடு தேடிட்டு இருக்கீங்களா?" -என்று கேட்டான்...
'வீடு' என்ற சொல் கேட்டு நின்றாள்...
"என் இதயம் காலியாக இருக்கு... குடியிருக்க வரீங்களா.." -என்று மெலிதாகப் பேசினான்...
அவளுக்கு ஏதும் புரியாமல், "வீடு எங்கே இருக்கு?" -என்று கேட்டாள்...
திரும்பவும் அவன், "என் இதயத்தில்..." என்று மெலிதாகச் சொன்னான்
"லூசாடா நீ... நீ யாருடா... எதுக்கு என்னைப் பாலோ பண்றே... செருப்புப் பிஞ்சிரும்..." -என்றாள் கோபமாக...
"நீங்க செருப்பால் அடிச்சீங்கனா... அதைவிட எனக்கு சந்தோசம் இல்லைங்க... ரொம்ப அழகா இருக்கீங்க... உங்ககிட்ட செருப்படி வாங்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்..."
இவன் பைத்தியக்காரன் போல் இருக்கிறான் என்று நினைத்தவள் அவனை அழுத்தமாக முறைத்துவிட்டு வேகமாக நடந்துச் சென்றாள்...
ஒருநாள்-
"அம்மா, பசங்க விதம் விதமா டி சர்ட் போட்டுட்டு காலேஜுக்கு வராங்க..."
"உன்கிட்டையும் துணி நிறைய இருக்கேடா... இப்ப ஒன்னும் வேணாம்... பிறந்தநாளைக்கு எடுத்துத் தறேன் போ..." -என்றாள் அம்மா...
"...அம்மா, விஜய் படம் போட்ட டி சர்ட் வேணும்... எனக்கு விஜய்னு பேரை வெச்சிட்டு, இப்ப தளபதி படம் போட்ட டி சர்ட் எடுத்துத் தர மாட்டேங்கிறியேம்மா... தளபதி படம் போட்டுட்டு போனால்தாம்மா கெத்தா இருக்கும்..."
"என் ராசா... நம்ம தளபதி படம் போட்ட டி சர்ட் தானே ... வாடா ராசா இப்பவே வாங்கித் தரேன்..."
பிரமாண்டபமான கீர்த்தி துணிக்கடையில் நடிகர் விஜய் படம் பதித்தத் துணி வாங்க அம்மாவும் மகனும் போனார்கள்...
விஜய் படம் பதித்த டி சர்ட்டுகளை விதம் விதமாக எடுத்துக் கொண்டுப் போய் காசாளர் தளத்துக்குச் சென்றவன் மலைத்து நின்றான்...
அங்கே காசாளராக இருந்தவள் அவள்தான்...
தன்னையே பார்த்து நின்றவனை. "சார், பில் கொடுங் க..." -என்று சொன்னவள் அவனை எங்கோ பார்த்ததாக சிந்தித்தாள்...
"அலோ... நம்பவே முடியலைங்க..." -என்றான்...
"மூவாயிரத்து எழுநூறு... கேசா... ஜிபே வா?..."
"நம்பவே முடியலைங்க... உங்களை நான் திரும்பவும் பார்ப்பேன்னு.... நான் ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க..." - என்றான் பிரமிப்புடன்...
அப்போது அவளுக்கும் ஞாபகம் வந்தது...
"அலோ சார், பணம் கொடுங்க... கஸ்டமர் கியூவில் நிக்கறாங்க... இல்லைனா, தள்ளி நில்லுங்க..."
"ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க... நான் அடிக்கடி உங்களைப் பார்க்க வருவேன்..."
சற்றுத் தள்ளி நின்றிருந்த அவனுடைய அம்மா, "என்னடா, இன்னும் பணம் கட்லையா... இங்கே வாடா இங்கே லைனில் ஆளில்லை..." என்று அழைக்கவே, அவன் விரைவாக பணம் செலுத்திவிட்டு, "ஐ லவ் யூ ங்க " -என்றான்...
அவள் வேலைப் பார்க்கும் இடம் தெரிந்து விட்டதால் தினமும் அவளுடையப் பார்வையில் படும்படி தெருவில் நின்று அவளையே கவனித்து வந்தான்...
அவளின் காதலுக்காக நண்பர்களிடம் சொல்லிப் புலம்பினான்...
எப்படியாவது அவளிடம் காதலைத் தெரியப்படுத்தி அவனுக்கு உதவிட நண்பர்கள் எண்ணினார்கள்...
அவள் வேலையை முடித்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு, வெளியே வந்தாள்... அவளோடு அவளுடன் பணிபுரியும் பெண்ணும் நடந்து வந்துக் கொண்டிருந் தார்கள்...
ஏழெட்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து அவ்விருவரையும் வட்டமிட்டு நின்றார்கள்...
அவர்களில் ஒருவன் "அலோ, உங்களை இவன் காதலிக்கிறான்... நீங்க எதுவும் பேசாமல் இருந்தா என்ன அர்த்தம்... இப்பவே என் நண்பனை காதலிக்கிறதா சொல்லுங்க... இவன் உங்களை நல்லா வெச்சு காப்பாத்துவான்..." -என்றான்...
உடன் நின்றிருந்த பணிப்பெண், "என்னங்க இது... இப்படி நாடு ரோட்டில் நீங்க நடந்துக்கறது உங்களுக்கே அசிங்கமா இல்லை... வழி விடுங்க... நாங்க போகணும்"... -என்றாள்...
"நீ போம்மா... நாங்க உன் பிரெண்டுகிட்டதான் பேச ணும்..." -என்றான் இன்னொருவன்...
அவள் தன் தோழியை சற்றுத் தள்ளி நிற்க சொல்லி விட்டு, "சார் நீங்க எல்லாரும் அப்படி போங்க... நான் இவர்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..." என்றாள்...
"அப்படி வழிக்கு வரணும்... மச்சி உன்கிட்ட இவ ஐ லவ் யூ சொல்லப் போறா... சீக்கிரம் வா... டாஸ்மாக் மூடிருவான் என்று சொல்லி விலகிச் சென்றார்கள்...
அவர்கள் சென்றதும் அவன் "உங்க காதலுக்காக நான் தூங்கறதே இல்லைங்க... தளபதி ஒரு படத்தில் பாடுவாரே... 'கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகளில் அடைப்பேன்...' நிச்சய மங்க..." என்றான்...
அவள், "ஓ..." என்றாள் வியப்புடன்...
அவன் மீண்டும், "அதோ அந்த நட்சத்திரங்களை தூசித் தட்டி, உனக்கு நல்ல வீடு கட்டித் தருவேன்..." -என்றான்....
"ஓ... சார், விஜய் ரசிகரோ?" என்று அவன் அணிந்திருந்த டி சர்ட்டை பார்த்துக் கேட்டாள்...
"வெறியனுங்க... தளபதிக்காக உயிரையே தருவேனுங் க... நான்தானுங்க இந்த மாவட்ட செயலாளர்..." என்று நெஞ்சுயர்த்திச் சொன்னான் ...
"ஏன்டா, தற்குறிப்பயலே, நாற்பத்தொரு பேர் துடிச்சு செத்துட்டு இருக்கும்போது காப்பாத்த வக்கில்லாத #தற்குறிப்பயலே... என்னை காப்பாத்த வந்துட்டியா... தற்குறிப்பயலே ஓடிப்போடா..." -என்று சொல்லி செருப்பால் அடித்து விரட்டினாள்...
அவன் செருப்படி வாங்குவதைக் கண்ட மற்ற தற்குறிகளும் தலைதெறிக்க ஓடினார்கள்...
விலகி நின்றிருந்த அவனுடைய தோழி அவளருகில் வந்து, "என்னடி நடந்துச்சு... செருப்படி வாங்கிட்டு ஓட்றானுக..."
அவள் விளக்கினாள்...
"அடி, போடி... பைத்தியம்... இப்படிபட்டவனைத் திருமணம் செஞ்சுருந்தியினா நீ வாழ்க்கையில் செட்டில் ஆயிருப்பியேடி..." -என்று சொல்லி அங்க லாய்த்தாள்...
"என்னடி உளறுறே"
"நான் உளறலே... நீ பிழைக்கத் தெரியாதவளா இருக்கி யேனு கவலையா இருக்குடி... இந்த தற்குறிப் பயலை திருமணம் செஞ்சிருந்தியினா, இவன் நிச்சயம் விஜய் கூட்டத்துக்குப் போய் நசுங்கி செத்துருப்பான்... உனக்கு இருபது இலட்சம் பெரிய தற்குறித் தந்திருப்பான்... இருபது இலட்சம் கிடைக்க இருந்த வாய்ப்பை, செருப் பால் அடித்துத் துரத்திட்டியேடி..." -என்றாள் உடன் பணிப் புரியும் பெண் சோகமாக...
28102025
#*இந்த குறும்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர் / நடிகை #புதுமுகம் அணுகவும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்