#திருக்குறளும் - இந்து மதமும்
திருக்குறளும் - இந்து மதமும் -1
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இல்லாத இயல்பு.- 161.
ஒழுக்காறாக் கொள்க
- தூயவாழ்வின் துணை எதுவெனில், நல்லொழுக்கமாகும்!... அதுவும்,
ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு
- நெஞ்சில் துளியளவும் பொறாமைக்கு இடந்தராமல்,
இல்லாத இயல்பு.
- வாழும் வாழ்வாகும்!...
ஒவ்வொருவனும் பொறாமையின்றி வாழ்தலை ஒரு கொள்கையாய் கொளல் வேண்டுமென தமிழ்நெறி உணர்த்துகிறது...
*** பார்ப்பனனைத் தவிர, வேறெவரும் கற்று உயர் பதவிக்கு வந்துவிடக்கூடாது எனும் நோக்கில், பாத்திமா போன்ற இளந்தளிர்களை கொல்லும் தீய எண்ணத்தை நெஞ்சில் வைத்து செயல்படுவது ஆரியநெறியாகும்...
திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
---------------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 2.
---------------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 2.
"படி" - குறள்மதம். "படிக்காதே"- இந்துமதம்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். - 410.
இலங்குநூல் - பகுத்தறிவு நூல்.
விலங்கொடு மக்கள் அனையர்
- மானிடர் உருவில் விலங்குகள் என்று எவரைக் கூறலாமெனில்
இலங்குநூல்
- தெள்ளியநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
- கற்றுத் தெளிந்தவர்களோடு ஒப்பிடுகையில், கல்லாதவர் எவரும் விலங்குகளோடு ஒப்பிடத்தகுந்தவர் ஆவர்.
( கல்விக்கற்று அறிவில் தெளிந்தவர்களாய்த் திகழும் மக்களைத் தவிர்த்து, கல்லாத எவரையும் மானிட உருவம் கொண்ட மிருகங்கள் எனலாம்)
பார்ப்பானன் பிற மக்களை கல்விக் கற்கவிடாதே என்கிறான். - இதுவே மனுநீதி!
சூத்திரனுக்கு இம்மைக்குப் பயனளிக்கிற அர்த்த ஸாஸ்திரத்தை சொல்லி வைக்கலாகாது... தருமம் விரதம் இவைகளையும் சூத்திரனுக்கு நேராய் சொல்லலாகாது (மனு அத் : 4, சுலோ : 80)
கல்லாமல் இருந்தால் உன்னை விலங்கினும் கீழாய் நடத்துவர் என்கிறது குறள் .
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
----------------------------------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 3.
----------------------------------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 3.
"நிலவினை பாம்புப் பிடிக்காது " - குறள்மதம்.
நிலவினைப் பாம்பு கவ்வும்" - இந்துமதம்
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. -1146.
கண்டது மன்னும் ஒருநாள்
- ஒருநாள்
ஒரேயொரு நாளில் ஒருமுறை
ஒருமுறை ஒரேயொரு முறை - என்
திருமகனோடு என்னை
தெருமருங்கில் கண்டனர்...
அலர்மன்னும்
- கண்டசேதிதன்னை
கருந்திரையிட்ட வார்த்தைகளால்
மெய்யறியாது
பொய்யுரை கலந்து
கண்ணிமை நேரத்தில்
காடுகழனியன்றி
ஊரும் தெருவும்
கூறினரே ஊரார்...
இதற்கோர் உவமை
இனிதாய்க் கூறிடு எனில்
திங்களைப் பாம்புகொண் டற்று.
- தெளிந்த
வான்வீதியில்
ஞாயிறும் பூமியும் - ஒரு
நேர்க்கோட்டில் சுழல
நேசமாய் நிலவும்
இடைவெளியில் நுழைந்து
இனிய ஒளியை மறைத்து
இருள் செய்திடுமே
இருள்காட்சிதனைக் கண்டோர்
பெரும்பாம்பொன்று
நிலவினை
விழுங்கியதென
வீணுரை பகர்வர்...
நிலவினை
விழுங்கியதுப் பாம்போ...
திருமகனோடு ஒருநாள்
தெருமருங்கில்
பேசிநின்றேன் - அது
மோசமோ...
ஏனிந்த வீணுரை
எனக்கின்னும் புரியவில்லை...
( பாம்பு கவ்விற்று நிலவினை என்று பார்ப்பானன் சொல்வான்... அதுவே இந்து மதம்.
நிலவினை பாம்பு விழுங்கல் என்பது வதந்தி என்பது குறள்மதம்.
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
*குறள்மதம் இணைவீர்
அமிர்தம் எடுக்க கடல் கடையப்பட்டதாம்... அமிர்தம் பங்கிடும்போது, அசுரனும் திருட்டுத்தனமாகப் பெற்றானாம்...
இதனை அறிந்த விசுணு அரக்கனைக் கொன்று பாம்பின் தலையைப் பொருத்தினானாம்... கோபம் கொண்ட பாம்பு அரக்கன் சந்திரனை விழுங்கியதாக ரிக் வேதம் கதையளக்கிறது... அறிவியலுக்குப் புறம்பான இக்கதை இட்டுக் கட்டப்பட்டவை என்று சுட்டிக் காட்டும் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்...
பார்ப்பனன் எவளையும் கற்பழிக்கலாம்
-------------------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 4.
"பிறபெண்களைப் பார்க்காதே" - குறள்மதம்.
"பார்ப்பனன் எவளையும் கற்பழிக்கலாம்" - இந்துமதம்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு -148.
பிறன்மனை நோக்காத பேராண்மை
-அடுத்தவன் மனைவியின் உடலழகைக்கண்டு, காம இச்சைக் கொள்ளாமல் மனவுறுதியுடன் இருப்பதே பேராண்மை எனப்படும்.
சான்றோர்க்கு
- இதனைச் சான்றோர்களின்
அறனொன்றோ
- ஒழுக்கம் என்பதைவிட
ஆன்ற ஒழுக்கு.
- பேரொழுக்கம் என்றே கூறலாம்...
"பிறப் பெண்களை காமநோக்கோடு அணுகாமலிருப்பது ஒழுக்கம் என்பதைவிட பேரொழுக்கம் எனலாம் " குறள் மதம்.
"பார்ப்பனன் சூத்திரச்சியையும் புணரலாம்... பார்ப்பனன் பிற பெண்கள் மீது இச்சைக் கொண்டு கற்பழிப்பு நிகழ்த்தலாம்...
இது தவறல்ல!... தண்டனைக்குரிய செயல் அல்ல!" - இந்து மதம்.
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
*குறள்மதம் இணைவீர்
--------------------------------------------------------------------------------
5- மடப்பயல்களின் பொய்
--------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 5.
" மழையின்றி இவ்வுலகில் புல்லும் முளைக்காது " - குறள் மதம்.
"யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது. - இந்து மதம். (பகவத் கீதை - அத் - 4 )
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -16.
விசும்பின் துளிவீழின் அல்லால்
- வானிலிருந்து மழைத்துளி வீழாது எனில்,
மற் றாங்கே
- இப்பூமிதனில்
பசும்புல் தலைகாண்பு அரிது.
- சிறுபுல்லின் நுனியும் முளைப்பது அரிது.
''மழைநீரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, மழைத்துளி இல்லையேல் பசும்புல்லின் நுனியும் முளைக்காது" - என்று அறிவியலை நமக்குக் கற்றுத் தருவது குறள் மதம்.
"யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது." - என்று மூடத்தனத்தைத் திணிப்பது இந்து மதம். (பகவத் கீதை - அத் - 4 )
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
-------------------------------------------------------------------------------------
6 - ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
-------------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 6.
"நன்மை நிகழுமெனில் பொய்ப் பேசு " - குறள்
மதம்.
"பார்ப்பானனைக் காப்பாற்ற பொய்ப் பேசு". - இந்து மதம். (மனுநீதி : அ 8, சு 112 )
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். - 292.
பொய்மையும் வாய்மை யிடத்த
- பொய் பேசுதல் தவறுதான்!... ஆயினும், சிலதருணத்தில் பேசப்படும் பொய்யால்
நன்மை பயக்கும் எனின்.
- நன்மை நிகழுமெனில், அது குற்றமாகக் கருதப்படமாட்டாது... அந்தப் பொய்யும், வாய்மைக்குரிய சிறப்பிடத்தைப் பெறும்.
"நாட்டுக்கு நன்மை பயக்குமெனில், பொய்ப் பேசலாம்" என்று வரையறையை வகுத்துத் தருவது குறள் மதம்.
"ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.
"அதாவது பிராமணன் செய்யும் எந்த தவறையும் பொய்களால் மூடிவிடு " என்பது இந்துமதம்
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
--------------------------------------------------------------------------------------------------
7 - சோம்பேறி
-------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 7.
"உழைப்பதைக் குறிக்கோள் எனக் கொள்... பிறருக்கும் உதவிடு" - குறள் மதம்.(62-3)
"சூத்திரனிடம் கொள்ளையிட்டு தின்னு "- இந்து மதம். (மனுநீதி : அ 11, சு 13)
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு - 613
வேளாண்மை என்னுஞ் செருக்கு - 613
தாளாண்மை - விடாமுயற்சி
வேளாண்மை - உதவுதல்
தாளாண்மை
- விடாமுயற்சி என்பது
என்னுந் தகைமைக்கண்
- நல்லதோர்க் கொள்கையாகும்...
தங்கிற்றே
- அந்தக் கொள்கைக்கு உட்பட்டது
எதுவெனில்,
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
- பிறருக்கு உதவுதல் என்னும்
பழக்கமாகும்...
"தோல்வியைக் கண்டு துவளாதே!... விடாமுயற்சியுடன் இயங்கு! பிறருக்கும் உதவு" என்று அறஞ்ச் சார்ந்து மக்களை நல்வழிப் படுத்துவது குறள் மதம்
"சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." (மனு) அ.11. சு.13.
"அதாவது பார்ப்பனன் உழைக்காமல் பொய்ச்சொல்லியும், ஏமாற்றியும், சூத்திரனிடம் திருடியும் பிழைக்கலாம்" என்பது இந்துமதம்
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
----------------------------------------------------------------------------------------------
8 -ஆண் பெண் தீண்டல்!
------------------------------ ----
திருக்குறளும் - இந்து மதமும் - 8.
"ஆண். பெண் இதயம் இணைவு உன்னதமானது" - குறள் மதம்.(129-1)
பெண் என்பவள் குழந்தையை பெற்றெடுக்கும் கருவி"- இந்து மதம். (மனுநீதி : அ 9, சு 59)
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.- 1281.
உள்ளக் களித்தலும்
- கண்ணிரண்டை மூடி
காரிருளில் முடங்கி - பெண்ணின்
பேரெழில் மேனியை
பேதை நெஞ்சம் நினைத்தாலே இனிக்கிறது
காண மகிழ்தலும்
- கட்டழகு மேனியைக்
கண்ணிரண்டால் பார்த்தாலும்
இன்பம் அளவின்றி ஊறுதே
கள்ளுக்கில்
- இந்த சுகம் மதுவில் இல்லை
காமத்திற்கு உண்டு.
- காமத்திற்கு மட்டுமே உண்டெனில்
மாறுண்டோ...
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ளத்தில் பல்கும் உணர்வை வள்ளுவன் அழகுப் படுத்துகிறான்...
"கணவனின் இச்சைக்குக் கட்டுப்படுவதே பெண்ணின் கடமை "(அ : 9, சு : 59) மனுநீதி
அதாவது, பெண் என்பவள் கணவனின் காம இச்சையைத் தணிக்க வேண்டும். குழந்தையை பெற்றெடுக்கும் இயந்திரமாய் இருக்க வேண்டும் என்பது இந்துமதம்
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
--------------------------------------------------------------------------------------------
9 - உழைத்து வாழாதே... பிறரை சுரண்டி வாழ்!
--------------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 9.
"பிச்சையெடுத்துப் பிழைக்கும் நிலைக் கூடாது" - குறள் மதம்.(107-2)
"பார்ப்பனன் உழைக்கக் கூடாது... கையேந்தி வாழ வேண்டும்"- இந்து மதம். (மனுநீதி :)
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். - 1062.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
- ஒரு சிலர் ஒரு சிலரிடம் கையேந்தி வாழவேண்டும்... இது தலைவிதி - கடவுள் விதித்த விதி - என்பர் பலர்!... 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் உரிமையின் முன் இது முரண்பாடானக் கருத்தாகும்... ஒரு சிலர் சகல உரிமையுடனும், வேறு சிலர் உரிமையற்றும் - அடிமையாய் - பிறர் தயவில் - வாழ்ந்திட வேண்டுமா... இதனை விதியென்று சொல்வதா?... இது மோசடியல்லவா... இயற்றப்படும் சட்டத்தால், மாந்தர் யாவரும் சம உரிமையுடன் வாழ்தல் வேண்டும்... வர்ணபேதம் கூடாது...
பரந்து கெடுக உலகியற்றி யான்.
- மாந்தர் யாவரும் உரிமையுடன் வாழ, சட்டத்தால் இயலவில்லையெனில், இப்படியொருப் பாகுபாடு மிகு, சட்டத்தை இயற்றியவன் எவனோ, அவன் வீழ்ந்தொழியட்டும்... மக்களைப் பாகுபடுத்தி, மக்களுக்கான உரிமை நல்க மறுக்கும் சட்டம் நொறுக்கப் படட்டும்... கெட்டு அழியட்டும்... ஒடுக்கப்பட்டோர் ஓங்கி எழட்டும்... புரட்சி வெடிக்கட்டும்...
மக்களுக்கான உரிமை மறுக்கப்படுமேயானால், எதிர் வினையாற்றி நொறுக்கி சமநிலை ஏற்படுத்துக என்பது குறள்மதம்!
உழைக்காமல், வேள்வி, யாகம், பூசை என்ற பெயரில் ஏமாற்றி வாழவேண்டும் பார்பனர்கள் என்கிறது இந்துமதம் மனுநீதி!...
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே
இந்நூல் பெற : arukutti@gmail.com
--------------------------------------------------------------------------------------------
10 - ஐம்புலன்களும் ஐந்து சட்டங்களும்
--------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 10.
"தீமைத் தரும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துதல் வாழ்வியலுக்கு நன்று!" - குறள் மதம்.(3-5)
"இந்திரன் எனுஞ்சொல் இக்குறளில் உள்ளதால் இது இந்துமத நூலாகும்"- பார்ப்பனர்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. - 25.
(ஐந்தவித்தான் = தீமைத் தரும் ஐம்புலன்களையும் அடக்குதல்.
கோமான் = கோள்களின் தலைமை
இந்திரன் = தலைவன்)
ஐந்தவித்தான் ஆற்றல்
-தீயப் பார்வை, தீய கேட்டல், தீய நுகர்தல், தீயத் தீண்டல், தீய சிந்தனை, ஆகிய தீமைத் தரும் ஐம்புலன்களையும் ஒழித்து, ஆளும் ஆற்றல் எப்படிப் பட்டதெனில்?
அகல்விசும்பு ளார்
-அகன்ற - பரந்த - பிரபஞ்சத்தில் இருக்கிற
கோமான்
-கோள்களின் ஆதியானதும், எல்லா கோள்களையும் இயக்குவதுமான சூரியனே,
இந்திரனே
- அந்த சூரியனின் மாபெரும் பணியே
சாலுங் கரி.
-ஒப்பாகும்.
"ஆதவனின் செயல்பாடுத் திட்டமிட்ட செயல்பாடுபோல் கட்டுப்பாடுடன் இருப்பதால் அண்டவெளியில் நன்மை விளைகிறது... அதுபோல தீமைத் தரும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதால், வாழ்வியலில் நன்மை விளையும்... புலன்களை அடக்கி ஆளும் ஆற்றல் சூரியனின் பணிக்கு ஒப்பாகிறது.." குறள் மதம்.
ஆனால்; இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் ஐ வகை நியதிகளை மக்களிடம் திணிப்பதாவது:
1, தேவ யக்ஞம், 2. ரிசியக்ஞம், 3. பித்ருயக்ஞம், 4.மனுஷ்ய யக்ஞம்,
5.பூத யக்ஞம்.
அதாவது, வேதம் ஓதி தேவர்களுக்கு மிருகங்களை பலியிட்டு பார்ப்பனர்கள் சுவைத்திட படையல் இடவேண்டும்.
ரிஷிகளால் சொல்லப்பட்ட வேதநூல்களுக்கு செவிமடுத்து பார்ப்பனர்களுக்கு அடங்கி வாழ வேண்டும்.
மூதாதையர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் முதலியன பார்ப்பனர்கள் வழியாக செய்யவேண்டும்.
வீடுதேடிவரும் பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கவேண்டும்.
பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படையிலிட வேண்டும்' என்று பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்வதே வாழ்வியலுக்கு உகந்தது என்று சொல்வது பார்ப்பனர்களின் வேத நூல்கள்.
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
-திருக்குறள் நாத்திகநூலே (சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது)
இந்நூல் பெற : arukutti@gmail.com
-------------------------------------------------------------------------------------------
11 - கொரோனா எனப்படும் நச்சுக்கிருமி இந்துமதம்.
------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 11
"ஒருவரின் நடத்தை அவரின் அடையாளத்தைக் காட்டிவிடும்" - குறள்நெறியம் (12-4) (குறள்)
"பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317. (மனுநீதி)
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். 114
தக்கார் தக்கவிலர்
-தக்கவரா, தகாதவரா
என்பது
-என்பது
அவரவர்
-அவரவரின்
எச்சத்தாற் காணப் படும்
.-அணுகுமுறைக் கொண்டே அறியலாம்.
"ஒருவரின் நடத்தை அவரின் பண்புகளை விவரிக்கும் அளவுகோலாகும்"- குறள் நெறியம்.
"மூடனாக இருந்தாலும், வஞ்சகனாக இருந்தாலும், கபடதாரியாக இருந்தாலும், காமலோலன் என்றாலும், கயவன் என்றாலும் அவன் பிறப்பால் பார்ப்பனன் எனில் அவன் தெய்வத்திற்கு நிகரானவன்" என்கிறது மனுதர்மம்.
இந்துமதம் என்பது மானிடநீதியை கொல்லும் கொரோனா எனப்படும் நச்சுக்கிருமி எனில் மிகையல்ல!
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
இந்நூல் பெற : arukutti@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------
12 - சூத்திரர்களுக்கு அறிவுக் கிடையாது...
---------------------------------------------
திருக்குறளும் - இந்து மதமும் - 12
"குழந்தைச் செல்வம் போன்று வேறு செல்வம் இருப்பதாக யானறியேன்" - திருவள்ளுவன் (7-1)
"குழந்தை பிறப்பு சாதியத் தன்மையுடையது" - ரிக்வேதம்
(10.90.12 ல் புருச சூக்த)
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. (61.)
மக்கட் செல்வத்தில் பேதம் தெரியவில்லை. குழந்தைப் பிறப்பு என்பது, செல்வமாகும்! அச்செல்வத்திற்கு நிகர் வேறு இருப்பதாக யானறியேன். நாளைய உலகை வழி நடத்தும் தகைமை குழந்தைக்கு உண்டு... ஆதலால் மக்கட்பேறுவை பாகுபடுத்த வேறு விதிகள் இருப்பதாக யானறியவில்லை என்கிறான் வள்ளுவன்.
பார்ப்பனர்களுக்கு பிறக்கும். குழந்தைகள் சட்ட ஞானிகளாகவும், அமைச்சர்களாகவும், அறிவாளிகளாகவும் திகழ்வார்கள்...
சூத்திரர்கள் பெறும் குழந்தைகள் அடிமையாய் விளங்கும் (10.90.12 ல் புருச சூக்த) (ரிக்வேதம்)
குழந்தை பிறக்கும் போதே சாதி முத்திரைக் குத்தி மானிட இனத்தை பாகுபடுத்துகிறது இந்துமதம்!
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
இந்நூல் பெற : arukutti@gmail.com
--------------------------------------------------------------------------------------------------
13 - சூத்திரன் அடிமையாவான்
------------------------------ -------------------
#திருக்குறளும் - இந்து மதமும் - 13
"குழந்தைகள் அறிவு பெறத்தக்க வகையில் வளர்க்கப்படவேண்டும். அறிவுப் பெற்றக் குழந்தைகளால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை நிகழும்'' - குறள் நெறியம்.(7-8)
"சூத்திரனுக்குப் பிறக்கும் குழந்தைகள் மேல் வர்ணத்தார்க்கு ஊழியம் செய்யவேண்டும். அதாவது கல்வியறிவு அறவே கூடாது" - மனுதர்மம் (அ 1சு 91)
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)
மாறிவரும் சூழலுக்கேற்ப குழந்தைகள் அறிவுவளம் பெறப் பட வேண்டும்... அறிவுப் பெற்ற மாணவனால் இவ்வுலகில் வாழும் மாந்தர் யாவரும் பலன் அடைவர் என்கிறது குறள் நெறியம்... அதாவது பிறக்கும் குழந்தைகள் சாதி மதம் என்பவற்றால் பேதம் படுத்தப்படக் கூடாது...
கல்வியறிவு பெறும் உரிமை குழந்தைகள் யாவருக்கும் உண்டு என்கிறது குறள் நெறியம்...
ஆனால்;
பார்ப்பனர் மட்டுமே கல்வியறிவு பெறத் தக்கவர்கள் என்றும், ஏனையோர் பார்ப்பனருக்கு அடங்கி வாழ்தல் வேண்டும் என்கிறது இந்துமதம். (மநுதர்மம் அ - 1 சு 91)
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
இந்நூல் பெற : arukutti@gmail.com
----------------------------------------------------------------------------------------------
14 -கேள்விகளால் தேடு
----------------- -------------------
#திருக்குறளும் - இந்து மதமும் - 14.
"கேள்விகளால் தேடு... உண்மைகள் புலனாகும்"- குறள் நெறியம்.(அதிகாரம்- 36. குறள்-3.)
"கண்ணனைத் தவிர வேறெதனையும் சிந்திக்காதே!... அவன் சொல்வதன்றி வேறெதிலும் நாட்டம் கொள்ளாதே!" - இந்து மதம் - (கீதை - அத் : 9 பதம் :34)
வானம் நணிய துடைத்து . (353)
"இப்பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் கண்டு, மயக்கமோ. அச்சமோ, கலக்கமோ அடையாதே... வினாவினைத் தொடு... விடைக் கிடைக்கும்" என்கிறது குறள்நெறியம்!
அறிவியலின் வளர்ச்சிக்கு வழிகோலுகிறது குறள் நெறியம். அறிவியலின் கண்டுபிடிப்புகளை நுகர்கிறோம் இன்று!
ஆனால்; 'சிந்திக்காதே... கண்ணன் ஒருவனைத் தஞ்சம் அடைந்து, கீதையின் வழிநட... உனக்கு விமோசனம் கிட்டும்' என்று மூடத்தனத்தை புகட்டுவது இந்துமதம்.
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
இந்நூல் பெற : arukutti@gmail.com
--------------------------------------------------------------------
15 - பார்ப்பானன் அறிவாளியா?
------------------------------ ------------------
#திருக்குறளும் - இந்து மதமும் - 15.
"நீ அறிவாளியா அல்லவா என்பதை மக்கள் கூறுவர் "- குறள் நெறியம்.(அதிகாரம்- 3. குறள்-8.)
"நெற்றியில் பிறந்தவன் பார்ப்பானன்... அவனே அறிவாளி... அவனே ஆலோசனை வழங்கத் தகுதியுடையவன்" - இந்து மதம் - (மனுநீதி)
மறைமொழி காட்டி விடும்.- (குறள் - 28)
"எவனொருவன் சொல்லும், செயலும் மக்களால் கணிக்கப்படும்... அவன் செயல் பகுத்தறிவின் பாற்பட்டதா ? அல்லவா? என்பதை அவன் வாழ்ந்த நெறிமுறைக் காட்டிவிடும்!" என்று வள்ளுவர் கூறுகிறார்...
"பார்ப்பணனைத் தொழு... அவன் சொல் கேள்... அவனே அறிவாளி... ஏனெனில் அவன் நெற்றியில் பிறந்தவன் " என்று மக்களிடையே மூடக்கருத்தைத் திணிப்பது மனுதர்மம்...
சிந்திக்கவும், ஆய்வுக்கும் இடமளிப்பது வள்ளுவம்!
"சிந்திக்காதே...சொல்வதற்கு அடிப் பணி " - என்று மக்களை சிந்திக்க விடாமல் முட்டாள்களாக்குவது இந்துமதம்!
ஆதலால் திருக்குறள் எப்படி இந்துமதம் நூலாகும்?
இந்நூல் பெற : arukutti@gmail.com
-----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக