எனது கட்டுரைகள் - 2


arangakanagarasanஎனது கட்டுரைகள்

---------------------------------------(17032017
'மனிதா நீ ஆசைப்படாதே' என்று எவரேனும் சொன்னால் புறந்தள்ளு!
ஏனெனில் ஆசையே அறிவியலின் உரம்...
அறிவியல் வளர்ச்சியால் மட்டுமே பார்ப்பனனிடமிருந்து மக்களை விழித் தெழ வைக்க முடியும்...
பார்ப்பானன் விரட்டப் பட்டாலன்றி தமிழ் தேசம் மலராது...
தமிழர்க்கென தனிநாடு உருவானாலன்றி சாதி மதம் ஒழிக்கவியலாது...
அதனால் நீ ஆசைக் கொள்...
தமிழ்க் கொடி தமிழ்க் கோட்டையில் பறக்க ஆசைப்படு....
-அரங்க கனகராசன்
--------------------------------

அண்ணாமலைக்கு ஓர் அறைகூவல்
--------------------------------
"தொந்தி விநாயகனை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைத் தடுத்தால் திமுக ஆட்சி கலைக்கப்படும்" -ஆட்டுக்கார அண்ணாமலை.
குளிக்கும் தாய்க்குக் காவலாய் இருந்த விநாயகனின் தலைக் கொய்து வீசியெறிந்த சிவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் துணிவு இருக்கிறதா அண்ணாமலை.
நீ உண்மையான இந்துவாக இருந்தால் விநாயகனுக்கு கெடுதிச் செய்த சிவனின் ஆலயங்களை மூடச் சொல்லி ஆர்பாட்டம் நடத்து.
-அரங்க கனகராசன்
02092021
--------------------------------

போராடும் உழவர் பெருமக்களின் மண்டையை உடைத்து போராட்டத்தை அடக்குங்கள் என்று வடநாட்டில் நீதிபதி ஒருவர் வாய்மொழி உத்தரவிடுகிறார் என்றால் இதுதான் மக்களாட்சியின் மாண்பா
இங்கு ஆள்வது மோடியா தலிபானா என்று எதிர்முனை வினா எழுந்திருக்கிறதே....
இந்த வினா ஆர் எஃச் எஃச் மற்றும் தலிபான்களின் ஒற்றுமையை விவரிக்கிறது...
நீதித் துறையிலும் காவல் துறையிலும் ஆர் எஃச் எஃச் கும்பல் ஊடுருவலை இந்நிகழ்வு காட்டுகிறது...
இது சரியான பயணமல்ல...
மக்கள் வரிப்பணம் ஆர் எஃச் எஃச் ஊடுருவலுக்குப் பயன்படுத்தப் படுகிறது எனில் இத்தகைய ஒன்றியத்திலிருந்து விலகுதலே நன்று...
இன்று வடநாட்டில் நடந்தது நேற்று மெரீனாவில் - தூத்துக்குடியில் - நடத்தப்பட்டதுதான்
பாலியல் ஐல்சா பார்ட்டி இந்திய ஒன்றியத்தை உடைக்கும் பணியை செவ்வனே செய்வதாகத் தெரிகிறது...
தோழர்களே தனித்தமிழ் தமிழ்நாடு கோரிக்கையை நாம் முன் வைக்க வேண்டியதில்லை...
சங்கிகளின் ஆட்சியில் விரைந்தே நிகழும் என எதிர்ப்பார்ப்போம்...
- அரங்க கனகராசன்
30082021
--------------------------------


பல் துலக்க பசை எதற்கு?
'உங்கள் வீட்டில் உப்பு இருக்கிறதா...'
'எங்கள் பற்பசையில் கிராம்பு ' இருக்கிறது என்ற பற்பசை விளம்பரங்கள் பார்த்திருப்பீர்கள்...
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கிலிருந்து பற்பசையை பல் துலக்கப் பயன்படுத்துவதில்லை...
பசைத் தீர்ந்த நிலையில் உதயமானதுதான் இந்த செயல்பாடு.
ஒரு கிராம்பு வாயில் போட்டு இரு நிமிடங்கள் நன்றாக மெல்லுவேன்... கடுகளவுக்கும் சற்றே அதிக அளவில் ஒரு கல் உப்பு வாயில் இட்டு கிராம்பு கலவையுடன் மெல்லுவேன்...
சுரக்கும் உமிழ் நீரால் தொண்டையில் கரகர செய்து விட்டு அதே உமிழ் நீரில் 30 நொடிகள் கொப்பளித்துவிட்டு உமிழ் நீரை துப்பி விடுவேன்...
அவ்வளவு தான்... பற்கிருமிகள் வெளியேற்றப்பட்டு விடும்.
பிறகு பசையற்ற வெறும் பல் துலக்கியால் பற்களின் இடுக்குகளை சுத்தம் செய்து நன்னீரில் வாயைக் கழுவிக் கொள்வேன்.
இதுதான் எனது பல் துலக்கும் முறை...
வாய் நாற்றம் இராது. பொழுதெல்லாம் கிராம்பு மணம் நீடிக்கும்...
காலை இரவு இரு வேளையும் நான் பல் துலக்குவது இப்படிதான்...
பற்கள் நலமாக - வளமாக - பளப்பளப்போடு இருக்கின்றன...
பற்பசை செலவும் இல்லை.
-அரங்க கனகராசன்.
23082021
--------------------------------

ஆரியனே அகல்
------------------------------
எல்லா சாதியினரும் வழிபாடு நடத்த வழிவகுக்கும் சட்டத்தை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...
அல்வெனில்
ஆரியனே வெளியேறு முழக்கம் வீதிதோறும் விரட்டும்
-அரங்க கனகராசன்.
19082021
--------------------------------
பெருமாள் :
என்ன ஒய்... தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை பண்ணறா... நேக்கு வயிறு எரியறது...
இராமன் :
நேக்கும் எரியறது வொய்...
தமிழன் :
டேய் வெண்ணெய்களா... நெருப்பில் விழுந்து சாவுங்கடா... கொரோனா விட மோசமான கிருமிகள்டா நீங்க... சமஃச்கிருதம் மாதிரி நீங்களும் அழியும் நாள் நெருங்கிடுச்சுங்கடா...
இராமன் :
அய்யோ அய்யோ தமிழ்நாட்டு சூத்திரன் திட்டறான்... நாக்கில் சூடு வைங்கோ...
பெருமாள் :
தமிழ்நாட்டு சூத்திரனை வதம் பண்ண அவதாரம் எடுக்கப் போறேன்...
தமிழன் :
அடச் சீ... ஓடுங்கடா... நாதாறிகளா... பிஞ்சுறும்...
- அரங்க கனகராசன்
08082021
--------------------------------

அரசியல் வேண்டாம்
---------------------------
தலித் என்ற வன்மத்தை கட்டமைத்த ஆரியனிடமிருந்து விலகி விட்ட மாமனிதர் அம்பேத்கரை மீண்டும் தலித் என்ற வட்டத்துக்குள் சிறைப் படுத்தி ஆரியனுக்கு அம்பேத்கரை சூத்திரனாக சித்தரிக்கும் மானிடரே அம்பேத்கரை அவர் போக்கில் விடுங்கள்... அவர் தலித்துகளின் தலைவரல்ல... மானுடம் பேணும் மாண்பாளன்
31072021
-----------------------------

திமுக பணிந்து வருகிறதா
----------------------------------
எளிமையானவர் - வயதில் மூத்தவர் - சங்கரய்யா என்பதால், அவர் தகைசால் தமிழர் ஆவாரோ?
அவர் தம் வாழ்நாளில் தமிழுக்காகவும் - தமிழ் இனத்திற்காகவும் - ஆற்றியப் பணியை தகைசால் விருது வழங்கிய தமிழ்நாடு அரசு தரணிக்கு வெளிப்படுத்தினால் ஆகச் சிறந்த ஒன்றாக இருக்கும்...
வன்னியருக்கென இட ஒதுக்கீடு செய்த செயல் எதனோடு ஒப்பிடுவது?
மோடி முன்னேறிய வகுப்பில் ஏழைகளுக்கு என்றப் பெயரில் பார்ப்பனர்களுக்கு செய்த ஒதுக்கீடு, சமூகநீதி அற்றச் செயல் போன்றதே ; வன்னியர்களுக்கென செய்த ஒதுக்கீடும்!...
பாரதமாதா என்ற கறபனைப் பாத்திரத்தைப் பேசினார் என்பதற்காக பொன்னைய்யா என்ற பாதிரியார் கைது செய்யப் பட்டிருக்கிறார் எனில் தமிழன்னையை இழிவுப் படுத்திய பார்ப்பனரை இன்னமும் கைது செய்யாமல் இருப்பது எவ்வகையில் நியாயம்?
இதனை வாக்கு வங்கி அரசியல் என்பதா? அல்லது ; ஏதோ ஒரு வகையில் பிசேபிக்கு பணிந்து விட்டது திமுக என்பதா?
- அரங்க கனகராசன்.
29072021
-----------------------------------------------

கடவுள் பேசவில்லை
----------------------------
"ஏண்டா கோயில் வாசலில் சோகமா உட்கார்ந்திருக்கே "
"உனக்குப் புரியாது மச்சி... "
"சொன்னாதானே புரியும் "
"எங்கிட்ட கடவுள் பேச மாட்டேங்கிறார் "
"டேய் கடவுள் யார்கிட்டயாவது பேசி பார்த்திருக்கியா... முட்டாள்... போடா வீட்டுக்கு..."
"இல்லை மச்சி... நா ரொம்ப நம்பிக்கையா வந்தேன்... கடவுள் பேசுவார்னு "
"அதாவது ; நீ பேசியிருக்கே... கடவுள் உன் பேச்சுக்கு மறு பேச்சு பேசல"
"ஆமாடா... ஒருநாள் தவறாமல் கோயிலுக்கு வந்தும் சாமி என்கிட்ட பேச மாட்டேங்குதுடா... மனசே சரியில்லை "
"அப்படி என்னடா பேசினே "
"மூனு வரம் கேட்டேண்டா "
"வரமா? "
"பொய்ப் பேசாத பிரதமர் இந்தியாவுக்கு வேணும்னு வரம் கேட்டேன் "
"சிரிப்பா வருதுடா... இந்தியா ஒழிஞ்சா ஒரு வேளை பொய்ப் பேசாத பிரதமர்கள் இந்த நாடுகளுக்கு கிடைச்சாலும் கிடைக்கலாம்... அடுத்த வரம் என்ன கேட்டே? "
"மோடி தன் மனைவியோடு சேர்ந்து வாழனும்னு வரமா கேட்டேன் "
"லூசாடா நீ!... மனைவி எக்கேடு கெட்ட என்னனு ஓடிப் போன மோடியோட மனசைப் புரிஞ்சுக்காமல், மோடி மனைவியோட சேர்ந்து வாழனும்னு வரம் கேட்டிருக்கியே... இது மோடிக்குத் தெரிஞ்சது... தேச துரோகம் சட்டத்தில் உன்னை தூக்கிப் போட்ருவார்டா... "
"மனைவியோடு சேர்ந்து வாழனும்னு சொன்னா தேச துரோகமா "
"டேய் முட்டாள்! பெண்களுக்கு ஆதரவா பேசறது மனுநீதிக்கு எதிரானது... உனக்கு குண்டர் சட்டம் உறுதி... சரி அடுத்த வரம் என்ன கேட்டே ''
"வாக்கு இயந்திரத்தில் தேர்தல் வேண்டாம்... பழையப்படி வாக்கு சீட்டு முறை வேணும்னு வரம் கேட்டேன் "
"டேய் நீ மோடியோட அரசியல் வாழ்க்கைக்கே ஆப்பு வெச்சிருவே போலிருக்கு... வெளியே யாருகிட்டயும் சொல்லாதே... சங்கிகளுக்குத் தெரிஞ்சா சங்கறுத்துருவானுக... கல்லை கடவுள்னு நினைச்சிட்டு நீ வம்பை விலைக்கு வாங்கப் போறே... எழுந்திருடா... வீட்டுக்குப் போடா... "
- அரங்க கனகராசன்
26072021
-----------------------------------

திரும்பிப் பாருங்கள்...
--------------------------

தோழர்களே...
திரும்பிப் பாருங்கள் மேற்கு வங்கத்தை..
தமிழ்நாட்டைக் காட்டிலும் மேற்கு வங்கத்தில் சங்கிகள் கூடுதலாக - வீரியமாக - இருக்கிறரார்கள்...
இருந்தும் மம்தாவிடம் சங்கிகளின் வாலாட்டல் எடுபடவில்லை...
வீடுவீடாகப் புகுந்து சங்கிகள் தேடப்பட்டனர்...
சங்கிகளின் உண்மை முகம் அப்போதுதான் வெளிப்பட்டது...
அரண்டு ஓடினார்கள்... அடைக்கலம் கேட்டு அண்டை - அயலாரைத் தஞ்சம் அடைந்தனர்...
குடும்பத்தோடு வேறிடம் ஓடினர்...
அதன்பிறகே மேற்குவங்த்தின் மீதானப் பார்வையை டில்லியின் இரு தடியர்கள் மாற்றினர்...
சங்கிகள் சுருண்டு - மருண்டு - பீதியுற்று - நாதியற்று - போயினர் மேற்கு வங்கத்தில்...
தோழர்களே...
மேற்கு வங்கத்தின் காட்சிதனைக் கண்டீரா?...
இங்கு நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்?
வீதியில் நின்று - வெயிலில் வதங்கி - கையில் கருங்கொடி ஏந்தி - நம் வாய் வலிக்க நாம் 'சங்கிகள் ஒழிக" என்று கூப்பாடுப் போட்டுக் கலைகிறோம்...
சங்கிகளோ குளிர் அறையில் குந்தி நாக்பூரின் எலும்புத் துண்டுகளை மென்றுக் கொண்டிருக்கின்றனர் ஒய்யாரமாக..
வீதியில் நின்று கூப்பாடுப் போடுவதை நிறுத்தி கைக் கூலிகளாம் சங்கிகளின் இருப்பிடம் தேடி விரட்டுதல் செய்தாலன்றி - சங்கிகளின் சண்டித்தனம் முடிவுக்கு வராது தமிழ்நாட்டில் .
தமிழ்நாட்டு சங்கிகளை ஒரு பொருட்டாய் நினைப்பதோ அவர்களுக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருப்பதோ வேண்டாம்.
அது நம் நேரத்தை நாமே விரயமாக்கல் ஆகும்...
-அரங்க கனகராசன்
12072021
-------------------------------------

நல்லதோர் அடிமை செய்தான் கேடி
-------------------------------------------
"அடே நம்ம எல் முருகன் ஒன்றிய அமைச்சராயிட்டாரு..."
"போடா விவரங்கெட்டவனே... எல். முருகன் அமைச்சாரானால் அவருக்கு அனுகூலமா இருக்குமே ஒழிய தமிழ் நாட்டுக்கு எந்தவித நன்மையும் இருக்காது "
"உன் வாயில் நல்லதே வராதா"
"அட விவரங்கெட்டவனே... கோபம் படாதே... ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இவங்க யாருனு சொல்லு "
"மோடியோட அடிமைகள்... இதுகூடவா எனக்குத் தெரியாது... போடா அறிவாளி மாதிரி பேசாதே "
"டேய் விவரம் உள்ளவனே... அதிமுக னு பெரியக் கட்சியை நடத்திட்டு இருந்தவங்களே, மோடிகிட்ட அடிமை வேலைதான் செஞ்சாங்க... இந்த சூத்திரன் முருகனுக்கும் அதே வேலைதான்... புரிஞ்சுதா "
"அடிமையா இருக்கறதுக்கு நாண்டுகிட்டு சாகலாமேடா "
"அது மானம் உள்ளவங்க செய்வாங்க... எச்சிலுக்கு அலையற நாய்கிட்ட மானத்தை எதிர்ப்பார்க்க முடியுமாடா "
"அப்போ முருகனும் தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்கும் எடுபிடினு சொல்றியா "
"புரிஞ்சா சரி "
-அரங்க கனகராசன்
08072021
-------------------------------------

கோயில் திறந்தாச்சு
-------------------------
கண்ணன் கோயில் தூணின் மறைவில் ஒளிந்து நின்று கொண்டிருக்க
ராமன் பார்த்து விடுகிறான்.
இராமன் :
ஏண்டா பொறுக்கி, என்னடா செய்றே?
கண்ணன் : கோயில் தொறந்துட்டா... பார்க்க வந்தேன்.
இராமன் : ஒளிஞ்சு நின்னு பார்க்கறியேடா...
கண்ணன் :
அது வேற ஒன்னுமில்லை. சாகாத வரம் வேணும்னு கொரோனா கேட்டான்.
கோயில் திறந்த பின்னே வரச் சொல்லியிருந்தேன்...
இராமன் :
வரம் தந்துருவியா
கண்ணன் :
என்ன நீ என்னை கேள்விக் கேட்டுண்டே இருக்காய்... நீ எதுக்கு வந்தாய் சொல்லு
இராமன் :
என் பேரில் கோயில் கட்ட பணம் கொள்ளை அடிச்சவாளும் வரா... அவாளைப் பார்க்க வந்தேன்.
கண்ணன்
கொள்ளையடிச்சப் பணத்தில் பங்கு கேட்கப் போறாய்... நேக்கு தெரியுமடா..
இராமன் :
நீ மட்டும் என்ன... கொரோனா பேர் சொல்லிண்டு வந்திருக்கிறாய்... உன் சபல புத்தி நேக்குத் தெரியாதா... கோயிலுக்கு வரும் பெண்களை டாவ் அடிக்க வந்திருக்கிறாய்...
கண்ணன் :
சித்த சும்மா இரு... பொம்மணாட்டிகள் வரா... நான் மேயனும்... நீ சும்மா இரு...
இராமன் :
என் தோப்பனார் பத்தாயிரம் மனைவிகளுக்குச் சொந்தக்காரர்...
தெரிஞ்சதா... நடுவில் வரும் பிகரை நான் தான் தடவுவேன்... நீ ஒளிஞ்சு நின்னு வேடிக்கை பார்...
(அப்போது கொரோனா அவர்கள் முன் குதித்து )
கொரோனா :
அடப் பதர்களா... உங்களை கடவுளென்று நினைத்து ஏமாந்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். அயோக்கியர்களே உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்.
(கொரோனாவைப் பார்த்த கண்ணனும் இராமனும் "கொரோனா கொரோனா" என்று அஞ்சி அலறி ஓடுகிறார்கள்.
-அரங்க கனகராசன்.
05072021
-------------------------------------

சென்னை செல்ல
---------------------------
நேற்று கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் சென்றேன்.
கடும்பசி.
உணவகங்கள் இல்லை.
விமானநிலையத்தில் ஒரு உணவகம்.
எலுமிச்சை சாதம் ஒரு கரண்டி அளவுக்கு தரப்பட்டது.
அப்பளம் பொறித்த அதே எண்ணெய்யில் எலுமிச்சை சாதம் செய்திருப்பார்கள் போல.
குமட்டல் வந்தது. குமட்டல் செய்த ஒரு கரண்டி எலுமிச்சை சோறு விலை 180 ரூபாய் மட்டுமே.
வாழ்க ஒன்றிய நிர்வாகம்.
இதுவல்லவோ மோடியின் வல்லரசு நிர்வாகம்.
04072021
-------------------------------------



ஈரல் கெட்டு விடுமா?
-----------
நான் பெரியாரை ஏற்றுக் கொண்டவன்!
வைகோவின் தூய்மையும் போராட்டக் குணமும் எனக்குப் பிடிக்கும்...
என் பதிவுகளை - என் கட்டுரைகளை அறிந்தோர் என்னையும் அறிவர்...
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வருமுன்னர், மதுக்கடைகளை திறக்கலாமா என்ற வினாவினை ஊடகங்கள் முன் வைத்தேன்...
மதுக்கடைகளை மூடுவதும், நிரந்தரமாக திறந்து வைத்திருப்பதும் தி மு க வின் கொள்கை முடிவு!...

ஆனால்; ஏழைகளின் கல்லீரலை அழுகச் செய்து, கெட்டுப்போன ஈரல்களின் மூலம் கிட்டும் வருவாயில் ஆட்சி நடத்துவது சரியோ என்பதே எனது கேள்வி!...
இக்கேள்வியைக் கேட்ட என்னைப் பார்த்து ' நீ ஒரு சங்கி' என்று தி மு க வின் குடிகாரன்கள் சிலர் என் மீது பாய்கின்றனர்...

மோடியை பார்த்து வினா எழுப்புவோர் மீது "தேச விரோதி " என்று சாடுவோருக்கும், என்னை 'சங்கி' என்று சாடும் தி மு க வின் குடிமகன்களுக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்...

வருவாய்க்காக மதுக்கடை திறப்பு எனில், கள்ளப் பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெளிக் கொண்டால் அரசின் வருவாய் கணக்கில் சேராதா?...
அம்மையார் செயலலிதாவின் ஊழல் சொத்துக்களை ஏலம் விட்டால், அரசுக்கு வருவாய் சேராதா...
நாட்டுமக்களுக்கு எவ்வகையிலும் பயனற்ற கோயில் சொத்துக்களை விற்று அரசின் செலவினங்களுக்கு பயன்படுத்தக்கூடாதா?
சட்ட மன்ற உறுப்பினர்களின் ஊதியத்தைக் குறைத்துக் கொண்டால் நாட்டு மக்களின் ஈரல் கெட்டு விடுமா?
அரசு ஊழியர்களின் ஊதியத்தை நாட்டுநலன் கருதி, குறைத்தால் அரசின் கருவூலம் கதறுமா?...
அரசியல் கட்சிகளின் அபரிமிதமான சொத்துக்களை பறிமுதல் செய்தால், அரசுக்கு வருவாய் சேராதா?...

இவை எல்லாவற்றிற்கும் மேலாய், ஒன்றிய அரசுக்கு gst என்ற பெயரில் கட்டும் கப்பத்தை நிறுத்தினால் தமிழ்நாட்டுக்கு நிதிப் பற்றா குறை ஏற்படுமா?
இதில் எதுவும் கவனம் செலுத்தாமல், கொரோனாவோடு, ஆட்சியாளர்களும் சேர்ந்து, மதுக்கடைகளைத் திறந்து ஏழைகளின் கல்லீரலை அழுகச் செய்து அதில் வருவாய் ஈட்டலாமா எனில், என்மீது 'சங்கி' பட்டம்...

ஒருக்கால், அடிமைகள் ஆட்சியைப் பிடித்திருந்தால் - கொரோனா காலமிதில் மதுக்கடைகளை திறந்திருந்தால், உங்கள் கைகள் அடிமைகளின் பாதத்திற்கு மலர்களைத் தூவியிருக்குமா? மதுவுக்கு எதிரானக் கொடிகளை ஏந்தியிருப்பீர்களா?

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்... இப்போது உங்களுக்குக் கிடைத்த வெற்றி உங்களுக்கானதல்ல... மோடி மற்றும் அடிமைகள் மீதான வெறுப்பு வாக்குகள்தான்!...

மக்கள் மனதில் ஈராயிரத்து ஒன்பதின் இரணம் நீங்காமல்தான் இருக்கிறது... இப்போதும் உங்கள்மீதான முப்பது நாட்கள் ஆட்சியை குறைக் கூறவில்லை - மதுக் கடைத் திறப்பைத் தவிர...
-அரங்ககனகராசன்
14062021


முகக் கவசம் மிக அவசியமா?
-------------
முகக் கவசத்துடன் ஓரிரு மணி நேரம் வெளியேச் சென்று விட்டு வீடுத் திரும்பியப் போது முகக்கவசம் குறித்த எண்ணம் என்னுள் எழவில்லை...
விலை உயர்ந்த - மருத்துவர் பரிந்துரைக்கக் கூடிய - முகக்கவசத்தை ஓர் ஒன்பது மணி நேரம் அணிதலுக்கு உட்பட்டேன்...
தொடர்ந்து மூன்று மணித் திலங்களில் ஓர் கெட்டவாடை முகக் கவசத்தில் இருந்து பரவி, நாசியை அரிக்க ஆரம்பித்து...
சிறுது நேரத்தில் உணர்ந்து அணிந்திருந்த கவசத்தை பாதுகாப்புடன் அப்பறம் படுத்திவிட்டு, மீண்டும் புதியதை அணிந்தேன்...
இப்போது ஒரு மணி நேரத்திலேயை மூக்கின் துவாரங்கள் நல்லக் காற்றுக்காக ஏங்க ஆரம்பித்தது...
மீண்டும் மீண்டும் புதியதை அணிந்தாலும் நுரையீரல் தூயக் காற்றுக்காக கரைந்தது...
ஒன்பது மணிநேரத்தில் கடைசி மூன்று மணித் திலங்கள் கவசத்தின் கெட்டவாடை பெரும் குமட்டல் செய்தது...
முகக்கவசத்தால் கொரோனா பரவாது எனும் அரசு , நாள் முழுவதும் முகக்கவசம் அணிபவர்களின் நுரையீரல் வேதியல் மாற்றம் குறித்த ஆய்வை நடத்துவது மக்கள் நலனுக்கு உகவாக அமையும்... இதன் உண்மைத் தன்மையை வெளியுலகிற்கு உணர்த்துவது அரசின் கடமை.
அல்லாமல்; முகக்கவசம் அணியாதவரிடம் இருநூறு ரூபாய் பிடுங்குவதும், தண்டத்துக்கு அஞ்சி நாள் முழுக்க முகக்கவசம் அணிவோரை புது தொற்றுக்கு உள்ளாக்குவதும் இருவேறு செயல்களல்ல...
- அரங்க கனகராசன்
21042021
-------------------------------------


விடிகாலையில் வைகோ முன் 11 கேள்விகள்:
1) நீங்கள் பாசிசம் தமிழகத்தில் வேரூண்றாதிருக்க திமுகவை அரியணையேற்ற விரும்புகிறீர்களா ?
2) உங்கள் மனவேட்கையைப் புரிதல் கொண்டுள்ள திமுக உங்கள் உழைப்பை மட்டுமே பயன்படுத்திட விரும்புகிறது... அதேசமயம். மதிமுகவின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை என்பது பொய்க் கூற்றாகுமா?
3). சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துகிற கூட்டணி அவசியம் தானா?
4). உண்மையில் திமுக அரியணை ஏற நீங்கள் விரும்புவது வெளிப்படையானதே... அதே நேரம் பாசிசத்தின் கொடூரமும் வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாடும் உங்களிடத்தில் வெளிப்படையானதே என்ற மதிமுகவினரின் உள் வேட்கையை நீங்கள் அறிவீர்கள் அல்லவா
5). இந்தத் தேர்தலில் நீங்கள் தொண்டனின் உணர்வோடுத் துணை நிற்பதில் தவறில்லையே
6). கூட்டணியிலிருந்து மதிமுகவை விலக்கிட திமுக காய் நகர்த்தல் செய்வது போல் மக்கள் உணர்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீரா
7) இந்நிலையில் திமுகவை நீங்கள் எதிர்க்கவும் வேண்டாம்... உங்கள் அரசியல் பணியை மதிப்பீடு செய்யாத திமுக, மதிமுகவுக்கு வழங்கவிருக்கும் சொற்ப இடங்களுக்காக மதிமுகவின் சுயமரியாதையை இழக்கவும் வேண்டாம் என்றுக் கூறும் தொண்டனின் மனதில் களங்கமில்லை என்பதை அறிவீர்தானே?
8) இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் வழங்கும் ஆதரவு நீடிக்கட்டும்... ஆனால் அதே நேரம் இன துரோகக் கட்சிகளான பாசக மற்றும் காங்கிரஃச் நிற்கும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து மதிமுகவை தனிக் களம் இறக்கலாமே?
9) இப்படிச் செய்வதால் மதிமுகவின் தனித் தன்மை மேலோங்குவதோடு, பாசகவின் எதேச்சாதிகாரம் பிடிக்காத அதிமுகவினரின் வாக்குகளும் மதிமுகவை வந்து சேரும்... காங்கிரசின் இன அழிப்பின் மீது வெறுப்புக் கொண்டுள்ள திமுகவின் உணர்வு மிகுந்த தொண்டர்களின் வாக்கும் மதிமுகவுக்கேக் கிடைக்க வாய்ப்புள்ளது எனும் கருத்தில் பிழையுண்டோ?
10) அதிக எண்ணிக்கையில் மதிமுக போட்டியிடும் பட்சத்தில் மதிமுகவின் செயல் வீச்சு பன்மடங்கு உயரும் என்பதை நீங்கள் அறிவீர்தானே...
11) மதிமுக கூடுதல் இடங்களில் வெற்றிப் பெற்று செயல் திட்டங்களின் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு ஆதரவளிக்கலாமே? இது எதிர்கால அரசியலுக்கும் உகந்ததாக அமையுமே
-அரங்க கனகராசன்
05032021
------------------------------------------------------------


உச்சநீதிமன்றம் சொல்லுது "ஏழு பேரை விடுதலைச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கு"
ஆளுநர் சொல்றாரு "குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் இருக்கு"
குடியரசு தலைவர் சொல்றாரு "கோயிலுக்குள் நுழையவே எனக்கு அதிகாரமில்லை"
06022021
-------------------------------------

தூக்குடா துப்பாக்கி
--------------------------

தில்லியில் நடப்பது இந்திய ஒன்றியத்தில் வாழும் உழவர்ப் பெருமக்களால் நடத்தப்படும் போராட்டமா?
ஆமெனில் தவறென்பதே எனதுக் கூற்றாகும்...
தில்லியில் நடப்பது சீக்கிய இனத்து உழவர்களின் போரேயன்றி இந்திய ஒன்றிய உழவர்களால் நடத்தப்படுவது அன்று...
இப்போர் தமிழ் உழவர்களால் நடத்தப்பட்டப் போது தமிழ் உழவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் மறந்துவிடவியலாது...
சீக்கியப் பெருமக்கள் பெருமளவில் பங்குக் கொண்டு நடத்தும் இப்போராட்டத்தை -
இதேப் போல் பெரிய அளவில் தமிழ் உழவர்களால் தில்லியில் நடந்தேறியிருக்குமேயாயின் இந்நேரம் தூத்துக்குடியைப் போல் துப்பாக்கிச் சூடும், மெரினாவைப் போல் வன்மமிகுத் தாக்குதலும் பாசிஃசுட்டுகளால் நடத்தப்பட்டிருக்கும்...
ஏனெனில் சீக்கியர் மீதான இருக்கும் அச்சம் தாயகத் தமிழர் மீது இந்திய ஒன்றிய அரசுக்குக் கிடையாது எனில் தவறாமோ...
இந்திய ஒன்றிய அரசு தமிழ் மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைப்பதால்தான் சிங்களப் பேரினவாத இராணுவம் தாயகத் தமிழ் மீனவர்களைக் கடலில் ஆழ்த்திக் கொலைபாதகம் புரிகிறது...
தமிழ் மக்களே, இன்னும் எத்தனை ஆண்டுகள் நீங்கள் பாரம்பரியம், பண்பாடு என்று பழமையைப் பேசிக் கொண்டிருப்பீர்கள்?...
பொங்கல் விழாக்களின் போது-
தமிழ்ப் பெண்களையும் சிலம்பம் ஆடச் செய்து பெருமைப் பேசுகிறீர்கள்...
இதுபோதுமா?
காலத்திற்கேற்ப கலையைப் புதுப்பித்துக் கொள்ள மாட்டீர்களா?
சீக்கியன் தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருப்பதை இந்திய ஒன்றியத்தால் தடை விதிக்க இயலவில்லை...
அவனுக்கொரு நீதி?
தமிழனுக்கொரு நீதியா?
தற்காப்புக்காவது எப்போது ஆயுதம் தரிக்கப் போகிறாய்த் தமிழா?...
அந்த ஆயுதம் துப்பாக்கியாக இருக்கட்டுமே...
நீ தற்காப்புதனைத் தரித்தாலன்றி சிங்களக் காடையன் முதற்கொண்டு கடைக்கோடி சங்கிகள் வரை தமிழன் மீதானப் பார்வை மாறுபடும்...
சிறுவர் முதற் கொண்டு பெரியோர் வரை தமிழர் யாவரும் துப்பாக்கி ஏந்தும் கலைக் கற்றிடல் நலமாகும்...
எப்போது உணர்வாய் நீ தமிழா...
- அரங்க கனகராசன்
24012021
-----------------------------------------
பித்தலாட்டத்தின் பித்தகன் ரசனி
-----------------------------------------
2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து விடுவேன் என்று 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே
சொன்னவர் ரசனி...
ஆனால் கட்சிப் பணியைக் காட்டிலும் திரைக் காட்சி யில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டு நடிக்கத் துவங்கி விட்டார்..
அண்ணாத்த படம் நடிக்க ஒப்புக் கொண்டால் கட்சிப் பணியின் துவக்கப் பணிகள் தொய்வு ஏற்படுமென்பது ரசனிக்கும் நன்குத் தெரியும்...
அண்ணாத்த படத்தின் பணியைக் காட்டி பாசிச கட்சியிடம் இருந்து தப்பித்து விட எண்ணினார்..
ஆனால் பாசகவின் பிடி இறுக்கியது அவரை...
பாசிசத்தின் பிடியிலிருந்து தப்பிக்க , கொரோனா அச்சத்தை மருத்துவர் வாயிலாக வெளிப்படுத்தினார் ரசனி.
கொரோனா பயமெனில் நீ அண்ணாத்த படத்திலிருந்தும் விலகு... இல்லையெனில், பா சாவுக்கு பணியாற்றிட வா வென பாசக கிடுக்கிப் பிடியை போட்டது..
இந்த முறை ரசனியால் வேறு பித்தலாட்ட நாடகம் நடத்த முடியவில்லை என்றாலும், அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தப் பிறகு கட்சியைத் துவக்குவேன் என்று இன்று ஜனங்களுக்கு தகவல் சொல்லியிருக்கார்..
இதில் ஒளிந்துள்ளப் பித்தலாட்டத்தை ரசனி ரசிகர்களே உணருவார்கள்...
அண்ணாத்த படம் ஓட்டப் பட ரசனி செய்யும் பித்தலாட்டமே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்பது...
மேலும் கொரோனா அச்சத்தால் தேர்தலின் போது மக்களை நேரில் சந்தித்து வாக்குக் கேட்க மாட்டேன் என்று இப்போதே கூறி விட்டார்...
கொரோனா எனும் நோயினைக் கண்டு அஞ்சுவது உண்மையெனில் முகக்கவசம் இன்றி ஊடகவியலாரோடு சந்திப்பு நடத்தியது ஏன்? சமூக இடைவெளியை பின்பற்றாத தேன் என்ற வினாவினை ரசனி ரசிகர் ஒருவர் - வயதான தாத்தா- வினா யெழுப்பியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை...
இவர் படப்பிடிப்பை நடத்தி முடிக்கும் வரை அடிமைகள் தமிழர்களின் உரிமைகளை விற்றுக் கொண்டே இருப்பதில் இவரின் நிலைப்பாடு மாபெரும் பித்தலாட்ட மே...
மேலும் எடப்பாடியை முதல்வராக ஏற்றுக் கொண்டாரெனில் , இவரின் தமிழக மாற்று அரசியல் என்பது மாபாதகப் பித்தலாட்டமே...
பித்தலாட்டத்தின் மொத்த உருவமான ரசனியை, குப்பை மேட்டில் கடாச வேண்டியக் கடமை, தமிழ் பெண்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் உண்டு.
04122020
--------------------------------------------------------

ஒரு நாட்டின் ஒரிடத்தில் இராமன் எரிக்கப்படுகிறான்...
இன்னோர் இடத்தில் இதே நாட்டில் இராமனுக்கு கோயில் கட்டப்படுகிறது...
இதெப்படி ஒரே நாடாகும்?
28112020
------------------------------------------------------------------------
மனுநீதியும் மாதரசி குஃசுபுவும் 
---------------------------------------

மனுநீதி மகத்தான நூல்! 
பெண்மையைப் போற்றும் பாரிய நூல்... 
பெண்களுக்கான சம உரிமையைப்  பிரகடனம் செய்த உலகின் முதல் நூல்...

மானிடர் யாவரும் சரி நிகர் என்றோதும் ஒப்பற்ற நூல்...

இந்நூல்தனின்,  சிறப்பைப் போற்றாத பதர் திருமா மற்றும் திராவிட இயக்கக் கயவர்கள், நூலில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி -

இந்துப்பெண்களை இழிவுச் செய்து வருகின்றனர்...

இந்நிலையில்-
மாதரசி குஃசுபு மனம் வெம்பி, திருமாவை மன்னிப்புக் கேட்கச் சொல்லியும், கேளாமல், பரதத்தாயின் கற்புக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில்-

தொடர்ந்து மனுநீதிப் பற்றி அவதூறுப் பரப்பி, உலக அரங்கில் பரதமாதாவின் கற்பின் கண்ணியத்தைக் குறைத்து வருகின்றனர்...

மீண்டும் மனம் வெம்பிய மாதரசி. குஃ சு பு , போர்க்களம் காண சிதம்பரம் விரைந்த நிலையில்-
தமிழ்நாடு காவல் துறையினர்,  மாதரசி  கு ஃசு பூவை முட்டுக்காட்டில் வழிமறித்து கைது செய்தச் செயல்  வன்மையாகக் கண்டிக்கத் தக்கது...

நடிகையும், மாதரசியும் ஆன கு ஃ சூப்பு அவர்களே, நீங்கள் எக்காரணம் கொண்டும் பிணைக் கோருதல் கூடாது...

மாலைநேரத்தில்-
உங்களை காவல்துறையினரே, விடுவித்தாலும் நீங்கள் விடுதலைப் பெறக்கூடாது...

எக்காரணம் கொண்டும் மாதராசியின் மாண்பு களங்கம் கண்டுவிடாமல், 
சிறையில் இருந்தவண்ணமே-
நீதிமன்றம்தனில் நீங்கள் வாதாடி, மனுநூல் பெண்களை விலைமாதராகக்  கூறவேயில்லை என்று விளக்கம் கொடுத்து, பதர் திருமா மற்றும் திராவிடச் சிந்தனையாளர்களை சிறையனுப்பி வைக்க, உங்களுக்கு கிடைத்த நல்லதோர் - இவ்வாய்ப்பினை செவ்வனே செய்து, கற்பின் இலக்கண நாயகியாக வலம் வந்து, பாலியல் ஜல்ஸா கட்சியின் ஒப்பற்ற திரவுபதிகளின் தலைவியாக வரவேண்டும் என்பதே தமிழ்  மங்கையரின் மாளா ஆவல்...        
27102020
------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை
----------------------------------------------
ஆர் எஃசு எஃசு தூண்டுதலால் இட ஒதுக்கீடுப் போராட்டம் 2015 ஆகஃச்ட் மாதம் அஃர்த்திக் படேல் எனும் படேல் இன இளைஞனால் குசராத் மாநிலத்தில் முன்னெடுக்கப் பட்டது...
50 பேருந்துகள் தீக்கிரைய்க்கப் பட்டன... ஏராளமான பணம் பட்டுவாடா இயந்திரங்கள் நொறுக்கப் பட்டன... பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப் பட்டன....
மக்களின் இயல்பு நிலை முடக்கப்பட்டன... இத்தனைக்கும் படேல் இனத்தவர் நன்கு முன்னேறிய இனத்தவர்...
ஆயினும் ஏன் இட ஒதுக்கீடுக் கோரி போராடினர்... அது காங்கிரஸ் அரசுக்கு எதிரான, சங்கிகளின் அரசியல்...
இட ஒதுக்கீடு தேவைப் படாதவர்களைக் கருவியாக்கி, காங்கிரஸ் அரசுக்கு எதிரானக் காய் நகர்த்தலை முன்னெடுத்த பாசிசுட்டுகள் -
இன்று இட ஒதுக்கீடுக் கோரும் தமிழ் மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து முழுமையாக ஓரங்கட்ட இட ஒதுக்கீடு இல்லை என்று கை விரிக்கிறது...
தமிழ் மாணவர்களின் மருத்துவப் படிப்பைப் பிடுங்கும் அதிகாரம் வந்தேறிகளாம் ஆரியர்களிடம் இருக்லாமா என்று கேட்டு, தமிழ் மாணவர்களே, தமிழ்ப் பெற்றோர்களே போராட்டம் ஏதும் நடத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும், அரசின் சொத்துகளுக்கு சேதம் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் தமிழ் நிலம் நன்றியும்...
ஏனெனில் ; நடிகனின் திரைப்படம் வெளியானால் அவனின் ஆளுயரப் படத்திற்கு பால் வார்க்கும் தலையாயப் பணி உங்களுக்கு இருக்கிறது ...
பெற்றோர்களே நீங்களும்தான்-தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நடிகன் நடிகைகளின் பீற்றலை, குடும்பத்தோடு அமர்ந்துப் பார்க்கும் உங்கள் மாணவச் செல்வங்கள், பக்குவாக பாரிய அளவில் இரசிக்க இன்னும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள், விலையுயர்ந்த அலைபேசிகள் வாங்கிக் கொடுக்கும் கடமையில் இருந்து தவறாதீர்கள்...
26102020
--------------------------------------------------------------------

முதல்வர் வேட்பாளரும் முட்டாள் தேசமும்
----------------------------------------
மண்டியிட்டு மடித் தவழ்ந்த எடப்பாடிக்கேத் தெரியும் முதல்வர் வேட்பாளர் என்பது இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பில் இல்லாத ஒன்று என...
முதல்வர் வேட்பாளர் மட்டுமல்ல பிரதமர் வேட்பாளர் என ஒன்றும் ஈங்கில்லை...
இதுத் தெரியாமல் எல். முருகனும், வானதி சீனியும் எகிறிக் குதிப்பதைப் பார்த்தால் இதனை முட்டாள்களின் தேசம் எனாமல் வேறென்னச் சொல்ல...
ஓ பி எஃசு விட்டுக் கொடுத்து விட்டாராம் முதல்வர் வேட்பாளர் எனும் தகுதியை...
இதனை இந்த ஊதுகுழல் ஊடகங்களும் ஊளையிட்டுக் கூவுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது...
நாட்டில் நீட் மற்றும் உழவர் அடிமைச் சாசனம் என எண்ணற்றக் கொடுஞ் சூழல்கள் நாட்டை காவு வாங்கிக் கொண்டிருக்கையில் -
முதல்வர் வேட்பாளர் என முட்டுக் கொடுத்து ஊடகங்கள் மோடியிடம் வித்தைகள் செய்துப் பிழைக்கின்றன...
உண்மையில் -
முதல்வர் வேட்பாளர் என்பவர் யார்?
234 தொகுதி மக்களாலும் நேரடியாக வாக்களித்து தெரிவுச் செய்யப்பட வேண்டும்...
இதற்கானச் சட்டம் இந்திய ஒன்றியத்தில் இல்லாதப் போது-
முதல்வர் வேட்பாளர் எனக் கூவி, முட்டாள்களோடுக் கூத்தடித்து, மக்களின் சிந்திப்புத் திறனைக் களவாடும் கயமைக் கூட்டம்தனை இந்த 2020 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடியோடு அகற்றுதல் அறிவார்ந்தச் செயலாகும்...
( கருத்து : கந்தசாமி, குறிஞ்சி மின் நகர், கோவை 41)
23102020
---------------------------------------------

விஜய் சேதுபதி ஏன் நடிக்கக் கூடாது
----------------------------------------------
ஒரு படைப்பாளி மொழிக் கடந்தவன்...
ஒரு கலைஞனுக்கு மொழி எல்லைக் கிடையாது என்று கூக்குரல் இடுவர் இனமானமற்றோர்...
ஒரு படைப்பாளி ஒரு மொழியைத் தொடாமல் தன் படைப்பின் தேடுதலை செய்ய முடியுமா?...
முடியாது...
ஒரு நடிகன் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க வல்லவனாக இருக்க வேண்டும் எனும் கூற்றில் தவறில்லை... அவன் நடிகன் மட்டுமே எனும் போது!
ஆனால் விஜய் சேதுபதி நடிகன் மட்டுமல்ல... இன உணர்வாளன்... மேலும் ; ஆதிக்க வர்க்கத்தின் ஆணிவேரைப் பிடுங்கும் போராளியுமாவான்...
மேதகு தலைவர் பிரபாகரன் வரலாற்று படத்தை சிங்கள மொழியியல் படம்பிடித்து வெளியிட சிங்கள மக்கள் ஒப்புவரா...
சிங்கள அரசுதான் ஒப்புதல் நல்குமா...
விடுதலைப் புலிகள் வரலாறு மட்டுமல்லாது தமிழர்களின் உரிமையைப் படம் பிடித்து வெளியிட இந்திய ஒன்றியம்தான் ஒப்பிடுமா...
ஒரு வரி வசனத்தையும் கூர்ந்து கவனிக்கும் இந்திய ஒன்றியம் தமிழ் மக்களின் தொண்மையை எவ்வகையிலெல்லாம் இருட்டடிப்புச் செய்கிறது என்பதை தமிழ்ப் படைப்பாளிகள் அறிவர்...
நமக்கென நாடு இன்மையால் நாம் இவ்வின்னல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம்...
முத்தையா முரளிதரன் வரலாற்றுப் படத்தை சிங்களத்தில் எடுக்கட்டும் ; இந்தியில் எடுக்கட்டும்...
ஆனால் தமிழ் மொழியில் உருவாக்க முனைவதன் உள்நோக்கம் என்ன?
இனதுரோகி முரளிதரனை தமிழ் மக்களிடையே வல்லவனாகச் சித்தரித்துக் காட்டுவது...
அடுத்து ராஜபக்சேவின் வரலாற்று படத்தில் தமிழனை நடிக்க வைத்து ராஜபக்சேவின் செயலை நியாயம் ஆக்குவது என்றுத் தொடர்ந்தால் தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் இருந்து இன உணர்வை மெல்ல மெல்லக் கிள்ளியெறியும் பண்பாட்டுப் படையெடுப்பு என்பதுதானே எதார்த்தம்...
இதன் பின்னே ஆரியம் இயங்குகிறது என்பதும் எதார்த்தமான சூழ்ச்சி வலையன்றோ...
நாளை கருணாவின் துரோகமும் நல்ல வரலாற்றுப் படைப்பாகும் தமிழ் நடிகனின் துணைக்கொண்டு...
எச்சை ராஜாவின் வரலாறும் மற்றும் தமிழின அழிப்பின் கதாநாயகன் மோடியின் வரலாறும் திரிக்கப்பட்டு, தமிழினத்தின் பாதுகாவலர்களாக அவர்களை தமிழ் மக்களின் முன்னே நிறுத்தும் ஆரியம் தமிழ் நடிகனின் துணைக் கொண்டு....
வாஞ்சிநாத அய்யர் எனும் சனாதான வாதியை - மனுநீதி வெறியனை - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தவனை தியாகியாக வேடம் மாற்றியதன் வல்லமை ஆரியத்திற்கே உண்டு...
ஆதலால் ; தமிழ் உணர்வாளரான விஜய் சேதுபதி தமிழின துரோகத்தை நன்மையானதாகச் சித்தரிக்கும் வேடங்களில் நடிக்கக் கூடாது என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு...

தமிழுணர்வுதனை வேரறுக்க முனையும் ஆரியத்திடம் நாம் தோற்றுவிடக் கூடாது தோழர் விஜய் சேதுபதி அவர்களே

16102020

------------------------------------------------

கணவர் / பெயர்
ரணசிங்கம்
--------------------------

இன்று வெளியீடு தொலைக் காட்சி ஊடகத்தின் வழியே...
படத்தில் ஒரு வசனம் : மனுசங்க வலியை மனுங்களே புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே...
ஏழை எளிய மனிதர்களின் மனவலியை மிக ஆழமாக படம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர்...
இந்திய ஒன்றியத்தில்
மனவலியுடன் தான் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை...
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் அணையைத் திறந்து வைக்க வருகையில், அதே அணைக்கட்டில் குதித்து படத்தின் நாயகி கைக் குழந்தையுடன் தற்கொலைக்கு முயல்கிறார்...
குடிமக்கள் நலனில் அன்பும், அக்கறையும் கொண்ட பிரதமராக இந்தக் காட்சியில் சித்தரிக்கப் படும் போது மனம் வலிக்கிறது...
ஆனால்-
படத்தின் இறுதிக் காட்சியில் பிணம் மாற்றப் பட்டிருப்பதை படம் காட்டும் போது, இந்த அரசாங்கத்தின் மோசடி மனவலியைக் கூடுதலாக்குகிறது...
02102020
------------------------------------------------
Sex என்பது பொதுவான உணர்ச்சி.
------------------------------------------------
ஆண்கள் செக்ஸ் கொண்டால் பெருமிதம் கொள்வதும், அதே செக்சை பெண்கள் விரும்பினால் மட்டமாகப் பேசுவதும் மிகத் தவறான - கீழான - சிந்தையாகும்.
Sex எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கீடு செய்வதுப் போலாகும்...
பெண்களை வாழ விடுங்கள். இந்த உலகம் ஆண்களின் விருப்பத்திற்கு மட்டுமே உட்பட்டதல்ல.
இழிவுப் பேசுவதை விடுத்து நலிவுற்ற பெண்கள் மேம்பாடுற உதவிடுங்கள்
05102020
-------------------------

ரவுடிகள் தேவை
-----------------------

பகல் நேரத்தில் அரசியல் பணி. இரவு நேரத்தில் கொலை, கொள்ளை, கறபழிப்பு, ஆள்கடத்தல், கஞ்சா கடத்தல் போன்ற தொழில்கள் கற்றுத் தரப்படும். சட்டப் பாதுகாப்பு உண்டு..
தகுதி: 'முருகன் தமிழ்க் கடவுள்' என்று கூவத் தெரிந்திருக்க வேண்டும்..
தொடர்பு : சங்கிகள் கூடாரம்.
02092020

-----------------------


உலகின் உன்னத உத்தமன் இந்தி மோடி
-----------------------------------------

தாள் மதிப்பிழப்பில் பொது மக்கள் சகல ஆதாரங்களையும் காட்டி ஒரு இரண்டாயிரம் தாளுக்காக கால் கடுக்க வரிசையில் நின்றார்கள்.
பலர் மடிந்தார்கள்..
இதோ சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட கோடிக் கணக்கான இரண்டாயிரம் தாள்களுக்கு ஆதாரம் எதுவும் தேவைப்படவில்லை.. . வழக்குத் தள்ளுபடி...
இரக்கமற்றவன் என்பதா? அடி முட்டாள் என்பதா? கோமாளி என்பதா?...
உத்தமன் இந்தி மோடியே நீயே சொல்லய்யா...
20092020
---------------------------------------------

இலடாக் விற்கப்பட்டு விட்டதா?
-------------------------------------------

370வது பிரிவு நீக்கப்படுவதுதான் அவர்களதுத் திட்டம் என்று செய்தியாக்கப் பட்டது...
காசுமீரம் மூன்றுத் துண்டாக்கப் படும் என்றோ,
அதில் மக்கள் பிரதிநிதித்துவம் அற்ற மண்ணாக லடாக் ஆக்கப்படும் என்றோ எவரும் அறிந்திருக்கவில்லை...
சிறு ஊராட்சிக்கும் மக்கள் மன்றமும், மன்ற உறுப்பினர்களும் இருக்கையில் -
மக்கள் பிரதிநிதித்துவம் அற்ற வெற்றிடமாக இலடாக் மாநிலம் ஆக்கப்பட்டது...
சிறு நாளில் சீனாவின்
நுழைவுத் தொடங்குகிறது...
ஓரடி மண் கூட சீனாவிடம் இழக்கவில்லை என்று ஒன்றியத்தின் பிரதமர் அறிவிக்கிறார்...
ஆனால் முப்பத்தெட்டாயிரம் சதுர மைல் பரப்புள்ள நிலம் சீனாவின் ஆக்ரமிப்புக்குள் மாறுகிறது..
கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டிய நாடு, சீனாவிடம் கையெழுத்திட்டு கடன் வாங்குகிறது...
இன்னும் சில சதுரமைல் பரப்பை கையகம் படுத்துகிறது சீனா...
என்ன நடக்கிறது?
கச்சத்தீவு போல் -
இலடாக் மண்ணும் தாரை வார்க்கப் படவில்லை என்ற நம்பிக்கையும்,
கைம்மாறு ஏதும் எவரும் பெற்றிலர் என்றும் மக்கள் நம்புகின்றனர்...
ஏனெனில்; அவர்கள் தேச பக்தர்கள் என்றக் கூப்பாட்டை ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் வாய்க்குச் சொந்தக்காரர்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர்...
20092020

-------------------------------------------

கோவன் யார்?
--------------------
பாடகர் பாலசுப்ரமணியன் மறைவு இரங்கலுக்கு உட்பட்டதுதான்...
ஆனால் ஒப்பாரிக்கு உகந்ததாய் ஆக்குகின்றனவே ஊடகங்கள்...
புரியவில்லை...
தெலுங்கிலிருந்து வந்த பலரில் பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒருவர்..
தமிழில் பாடி செல்வம் சேர்த்தாரேயன்றி, வறுமையில் உழலவில்லையே...
செல்வம் சேர்த்தப் போதும் தனக்கு வாரி வழங்கிய தமிழ் மொழிக்காக தமிழ் இனத்திற்காக அவர் செய்த சிறு பணியேதும் உண்டா...
ஆனால் அவரால் சங்கரமடமும் பார்ப்பனர்களும் நன்மையுற்றனர் என்பதுதானே உண்மை!..
கோவன் யார்? அவரும் ஒரு பாடகர் தானே...
பாசிச அரசு கோவனின் குரல் வளையை நசுக்கிய வேளையில் -
பாடகர் என்ற முறையில் சிறு கண்டனமாவது பாலசுப்பிரமணியனிடமிருந்து கிளம்பியதா...
பாடகர் கோவன் சிறைபட்ட காலத்திலாவது பாடகர் என்ற முறையில் பாலசுப்பிரமணியன் கோவனின் குடும்பத்திற்கு செய்த உதவி என்ன?
இன்னமும் அவரது சடலம் இறுதி நிகழ்வுக்கு உட்படாத நிலையில் அவரைச் சாடுவதாக எவரும் தவறாய்க் கணிக்க வேண்டாம்...
அவர் மீதும் அவர் குரல் மீதும் மரியாதை உண்டு எனக்கும்...
இரங்கல் போதும்...
ஒப்பாரித் தேவையில்லை...
தமிழர்களின் எண்ணமெல்லாம் தமிழ் இன மீட்பிலும், இனவுணர்ச்சியிலும்தான் எப்போதும் இருக்க வேண்டும்...
சினிமா கவர்ச்சிக்குட்பட்டு சிந்தையைச் சிதற விடாதீர்கள்...
ஊடகங்களின் ஒப்பாரியைக் கேட்கையில் தமிழ்மண் மீளவியலாத் துயரில் சிக்குண்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது...
இப்படியோர் கட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இடம் தரவேண்டியதில்லை...
25092020
--------------------


சங்கிகளின் நாடகம்
-------------------------
கொரோனா கொடுந்தொற்றுவின் சிறு மயிரிழையைக் கூட எந்தக் கடவுளாலும் பிடுங்க முடியவில்லை...
இதில் மேலை நாட்டு சாமி, கீழை நாட்டு சாமி மட்டுமல்ல... உள்ளூர் சாமியாலும் உளுத்துப் போண கொழுக்கட்டை சாமியாலும் கொரோனாவின் சிறுத் துரும்பைக் கூடக் கிள்ள முடியவில்லை...
மக்கள் வெறுப்பு நிலைக்கே தள்ளப்பட்டு விட்டனர்... நோயை விரட்ட மட்டுமல்ல பசியை விரட்டவும் கூட எந்தக் கடவுளாலும் முடியவில்லை...
இந்நிலையில் கடவுள் மீதிருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல நீங்க ஆரம்பித்து விட்டது மக்களுக்கு...
கடவுள் இருக்கிறானா என்றக் கேள்வியை வெளிப்படையாக கேட்கத் தொடங்கி விட்டனர் தமிழ்நாட்டுப் பெண்மணிகள்...
இந்தப் போக்கு பாசகவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதுப் போலும்...
கடவுளை வைத்து அரசியல் செய்யும் பாசிச கட்சிக்கு, தமிழ்ப் பெண்களின் கடவுள் மீதான நம்பிக்கையிழப்பு உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்தி விட்டது...
ஊடகவிவாதங்களின் நிகழ்ச்சிகளில் அதிகாரம் மீறலில் ஈடுபட்ட பாசிச கட்சி, இப்போது ஊடகங்களின் நாடகங்கள் மீதும் தங்கள் கருத்துத் திணிப்பைத் திணிக்கத் தொடங்கி விட்டதாகவேத் தெரிகிறது...
தமிழ் ஊடக நாடகங்கள் இப்போது பெருமளவில் மூடநம்பிக்கை காட்சிகள் கொண்டதாக விளங்குகின்றன...
இப்படித்தான் காட்சிகளைக் கொண்டுச் செல்ல வேண்டுமென்று இயக்குநர்கள் மிரட்டப்படுவதாகவேத் தெரிகிறது...
ஆனால் தமிழ்ப் பெண்கள், கொரோனா காலத்தில் மூடநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை மற்றும் பரிகாரம், மந்திரவாதி போன்ற காட்சிகளைக் கண்டு கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்...
இதிலுமா பாரதி ராஜாவின் கட்சிக்கு தோல்வி?
27082020
--------------------------------------------
பின்னணிப் பாடகர் பாலசுப்ரமணியன்
-----------
குரலில் தேன் குழைந்திருக்கும்...
நெஞ்சைத் தாலாட்டும் குரல்...
கருத்து வேறுபாடில்லை எவருக்கும்...
அவரும் மனிதர்தானே...
கொரோனா தாக்கப்படாமலிருந்தாலும், மரணம் எல்லாருக்கும் நிச்சயமானது ...
அவர் பாடினார் - அதற்கான ஊதியம் பெற்றுக் கொண்டு!
தமிழ் வழியாக மட்டுமின்றி பிற மொழிகளிலிலும் பாடி பெரும் பொருள் ஈட்டியவர்...
தமிழால் அறிமுகமானார்..
ஆனால் தமிழ் மண்ணுக்கோ மக்களுக்கோ அவர் ஏதேனும் செய்தாரா...
அல்லவே...
சங்கரமடத்துக்கும், மடத்து பார்ப்பானர்களுக்கும் ஏராளமாகச் செய்தார்..
இதுதான் அவரின் சுவடுகள்...
கலங்காதே தமிழா...
உனக்காக கண்ணீர் சிந்த சங்கிகளோ - பார்ப்பானர்களோ இல்லை...
பாடகர் நலம் பெறட்டும்... இன்னும் பொருள் ஈட்டட்டும்... வாழ்த்துவாயாக!
19082020
-----------------------------------------------------

புதியக் கல்விக் கொள்கை -
உயர்க்கல்வித் தறை அமைச்சர் அன்பழகன் கல்வியாளர்களுடன் ஆலோசனை-
ஆலோசனையில் திராவிட இயக்க முண்ணோடிகளையும் இணைத்தால் தமிழர் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.
02082020
---------------------------------------------------
"அடேய், இராமா! நீ யாருக்கடா சொந்தம்?... பி சே பிக்காரனுக்கா?... நேபாளிக்காரனுக்கா? வாய்த் திறந்துச் சொல்லேண்டா... "

14072020
--------------------------------------------------------
ஞாபகம் போச்சே
--------------------------
கல்லூரி மாணவிகள் ஆளுநர் தொடர்பு பேராசிரியை நிர்மலா வழக்கு மறந்துப் போச்சு...
சேகர் ரெட்டி வழக்கு மட்டும் விதிவிலக்கா... அதுவும் மறந்துப் போச்சு...
கண்டெய்னர் 1500 கோடி பணம் என்ன ஆச்சு... மறந்தேப் போச்சு...
குட்கா வழக்குனு இருக்குதா என்ன... மறந்துப் போச்சு..
கொடநாடு கொலை வழக்கும் என்னமோ மறந்துப் போச்சுங்க...
தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டவனைக் கண்டுப் பிடிச்சாங்ளா... தெரிஞ்சா சொல்லுங்க..
மெரினா போரில் ஆட்டோவுக்கு நெருப்பு வெச்சிட்டு இளைஞகள் மீது காட்டுமிராண்டித் தனத் தாக்குதல் நடத்துனதும் மறந்துப் போச்சுனா நம்புங்க...
சேலம் எட்டுவழிச் சாலையை மறுத்த உழவர் மீதும் தாக்குதல் நடந்துச்சாமே... என்னாச்சுங்க...
செயலலிதா சாவில் மர்மம் இருக்குனு சொன்னாங்க... என்னாச்சுங்க...
குளிக்கும் போது எட்டிப் பார்த்த ஆளுநர் தாத்தா மேல் வழக்கு ஏதாச்சும் போட்டாங்களா... மறந்துப் போச்சுங்க...
அப்படினா தூத்துக்குடி லாக்கப் மரணம் வழக்கும் மறந்துப் போகுமோ...
உலகில் மானிட நேயம் கொண்டோர் யாவரும் கண்டித்த, தூத்துக்குடி லாக்கப் சம்பவத்தை மோடி கண்டிக்கவில்லையே...
ஓ... அவருக்கும் மறதி இருக்குமே...
05072020
-----------------------------------------------------------------------------------------

தொலைக் காட்சியில் காக்கி உடுப்புகளைப் பார்த்து குழந்தைகள் பயம் கொள்கிறார்கள் . இந்நேரத்தில் குழந்தைகளுக்கு காவல்துறை கதாபாத்திரம் கொண்ட படங்களை தவிர்த்து விடல் நலம்... மனபாதிப்பு உண்டாகலாம்...
பூச்சாண்டிகள் போல காவல்துறை தெரிகிறது குழந்தைகளுக்கு
30062020
---------------------------------------------------------------------------------


கொரோனா நன்மையும் செய்திருக்கிறது
-------------------------------
மோடிக்கு P M care
எரி எண்ணைய்யால் அதானி
கொரோனா சோதனை குப்பி அதிக விலைக்கு வாங்கியது
காவல்துறையின் ஈரலை வெளியுலகிற்கு காட்டியது
உளறல் நாயகன் எடப்பாடி என பட்டம் பெற வைத்தது
கோயில்களை மூடியது
இந்திய மக்களை பட்டினிக்கு பழக்கியது
28062020
---------------------------------------------------------

காவல் துறையா? கயவர்ப் பாசறையா?
-----------------------------------
காவல் துறையில் வேலை கிடைத்திராவிடின் இவர்கள் பேருந்தில் களவாணிகளாக -
வழிப்பறிக் கொள்ளையர்களாக -
கட்டபஞ்சாயத்து கதாநாயகர்களாக -
மகளிரைக் கடத்தி விற்கும் தரகர்களாக -
விலைமகளிர் கூடாரங்களின் எசமானர்களாக -
கூலிப்படையினராக -
போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளாக -
இணையவழித் திருடர்களாக -
பெண்களை மிரட்டும் மொள்ளமாரிகளாக -
திரிந்துக் கொண்டிருப்பார்கள்...
இது இயல்பானக் குணமாகும் இக்கயவர்களுக்கு...
காவல்துறையில் பணிக் கிடைத்துவிட்டாலும் இவர்களின் இயல்பு குணத்தில் மாற்றமிராது...
காவல்துறையின் பணி என்பது இக்கயவர்களிள் கயமைக்கு கிடைத்த உரிமம் எனில் மிகையல்ல...
இதுகாறும் பயந்து, பயந்து கயமைத்தனத்தில் ஈடுபட்டவர்கள் காக்கி உடுப்புக் கிடைத்தவுடன் மேலும் கூடுதல் வலுவுடன் கயமையில் திளைப்பார்கள்...
ஓரிருவரைத் தவிர காவல்துறை என்பது முற்றிலும் கயவர்கள் நிரம்பியப் பாசறையாகத்தான் விளங்குகிறது...
காவல்துறையைத் தூய்மைப் படுத்த வேண்டுமெனில் இப்போது பணியில் இருக்கும் சிலரைத் தவிர, எஞ்சிய சில்லறைகள் யாவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்...
ஆனால் அது இயலக்கூடியதாக இல்லை...
அரசியல் பொறுக்கிகள் துணையிருப்பதால் இது சாத்தியமாகாது...
ஆயினும் ; பள்ளியில் கடைசி இரண்டு ஆண்டுகள் பயிலக்கூடிய மாணவர்களில் இருந்து தன்னார்வம் மிக்க மாணவர்களைக் கண்டறிதல் வேண்டும்...
அதேபோல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் நல்லொழுக்கமும், பொதுநலனில் தன்னார்வமும் மிக்க மாணவர்களைக் கண்டறிதல் வேண்டும்...
அவர்களில் -
விருப்பமும், தகுதியும் கொண்டேர்க்கே காவல்துறையில் பணி வழங்க வேண்டும்...
இயல்பில் பொதுநலனில் தன்னார்வம் கொண்டோர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தால் மட்டுமே "காவல்துறை உங்கள் நண்பன் " என்று சொல்ல காவல்துறை அருகதை உடையதாக இருக்கும்...
அதுவரை "காவல்துறை உங்கள் நண்பன் " எனும் வரியை நீக்கி விடுவதே நாட்டுக்கு அழகு
26062020
-----------------------------------------------------------------------------

லடாக் யாருடையது ?
---------------------------
சீனாக்காரன் தனக்குரியது என்கிறான்...
இந்தியனும் தனக்குரியது என்கிறான்..
ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கும் சீனாவிடம் " முன்னொருக் காலத்தில் வழித் தவறிய அய்ரோப்பியர்களுக்கு கல்வான் எனும் சிறுவன் இந்த வழியைக் காட்டினான்... அதன் நினைவாக இப்பள்ளத்தாக்கிற்கு கல்வான் என்று பெயரிடப்பட்டது என்கிறது இந்தியா...
சீனா ஏற்க மறுத்து விட்டது..
அய்ரோப்பியர் வழிமாறி இந்தப் பள்ளத்தாக்கின் வழியே வருவதற்கு முன்னரே அங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்தியாவின் கூற்று சான்றாகிறது எனில் ,
அந்த மக்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்குப் பெயரிடாமல் இருந்திருப்பார்களா?
கல்வான் எனுஞ் சொல் ஆய்வுக்கு உட்படுத்தினால் அது தமிழ் மொழிக்குரிய சொல் என நெஞ்சுயர்த்தி ஓங்காரமிடும் ஆய்வறிக்கை...
வான் முகடு தொடுமளவுக்கு சிகரத்தின் கல்முனை விளங்கியமையால் கல்வான் என பெயர் இளங்கிற்று...
கல்லும் வானும் உரசுதல் போல் தோற்றம் கொண்டமையால் கல்வான் என வழங்கிடலாயிற்று...
சரி ; இந்தப் பள்ளத்தாக்கு தொடங்கும் இடம் சீயோக் நதி முகத்துவாரம்...
சீயோக் என்பது சீயாறு எனும் தமிழ்ச் சொல்லின் மருவலாகத் தான் புலனாகிறது...
சீயோக் நதி முகத்துவாரம் ஒளியுடன் மிளிர்மாம்...
சீ எனில் தமிழில் ஒளி
எனவும் சிறப்பு எனவும் பொருள் உள்ளன... சீயாறு என்பது ஒளியோடு ஓடும் ஆறு எனவாகிறது...
முகத்துவாரம் நெற்றிப் போல் அழகாய் விளங்கியமையால் லாடம் என பெயரிட்டு வாழ்ந்ததும் தமிழரே உணர முடிகிறது...
நெற்றியின் இன்னொரு சொல் லாடம் ஆகும்.. அதுவே பின்னாளில் லாட, லட, லடாக் என திரிபுநிலை உற்றிருக்கலாம்...
காசுமீரத்தின் பெயரும் தமிழின் திரிபே...
காரீரம் என்பதே பின்னாளில் காசுமீரமாக மருவியிருக்கக் கூடும்...
கார் எனில், அடர்ந்த எனவும் பொருளாகிறது... ஈரம் எனில் அதிகக் குளிரூட்டல் எனவும் பொருளாகிறது
காரீரம் எனில் அடர்ந்த குளிர்ந்த சூழல் கொண்ட நிலம் எனப் பொருள் கிட்டுகிறது...
மேலும் ஈரம் எனும் சொல் குங்குமம் பூ எனவும் பொருள் தருகிறது...
காரீரம் எனில் அடர்ந்த குங்குமம் பூ விளைநிலம் எனவும் பொருள் கிட்டுகிறது..
காசுமீரம் குங்குமம் பூ பூக்கும் வளம் கொண்டதாகும்..
காரீரம் என்பதன் பெயருக்கு இப்போது பொருள் நன்கு விளங்கும்...
அதே போல் திருநகர் சிறிநகரானது...
மேலும் காசுமீரத்தின் இடப் பெயர்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழ் மொழி உறைந்திருப்பதை வெளிக் கொணரலாம்..
மொத்தத்தில் ஒரு காலத்தில் தமிழனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தப் பள்ளத் தாக்கினை தொடர்பே இல்லாத சீனனும், இந்தியனும் உரிமைக் கோருகின்றனர்...
தமிழன் இதையும் பார்க்கிறான் வேடிக்கை...
25062020
---------------------------------------------------------------------------

தமிழன்னைப் பேசுகிறாள் :
----------------------------------
"மோடி பேசுகிறார் பாரதமாதாவை அவமதிக்க விடமாட்டோம் என்று. தமிழர்களே பாரதமாதாவுக்கும், சீனாக்காரனுக்கும் இடையில் நாம் போக வேண்டாம்..
இப்போது கொரோனாவிலிருந்து மீண்டு தமிழ் மண்ணை வளப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் ...
வெள்ளையனிடம் அடிமையாக இருந்த நாம் இந்தியனிடம் அடிமையானதுபோல் இனி எப்போதும் எவனிடமும் அடிமையாகக் கூடாது..
சீனாக்காரன் வந்தாலும் நாம் அவனிடம் அடிமையாகாமல் தமிழ்நாட்டின் விடுதலையில் எண்ணம் கொண்டு இருப்போமாக...
நம்மிடம் பிடுங்கி தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவு மற்றும் தேவிகுளம் பீர்மேடு திருப்பதி போன்ற பகுதிகளை நம்மோடு இணைத்து தமிழ்ப் பேரரசு காண்போம்
.தமிழன்னையின் சொல்லுக்குச் செவி சாய்த்து பொறுப்போடு செயல்படுங்கள் "
20062020
--------------------------------------------------------------


வாயில் வடைச் சுடாதே
------------------------------
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு இந்த மாத இறுதி வரைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்...
அவரே இன்று நீட் பயிற்சி மையத்தை துவக்கியும் வைத்துள்ளார்...
இந்நிலையில் இம்மாதம் 26ந் தேதி நீட் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது...
சென்னை உட்பட முழு ஊரடங்கிற்கு உள்ளாகியிருக்கும் நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்கள் நீட் எழுத விதி விலக்குண்டா...
ஊரடங்கை மீறி நீட் எழுதச் சென்றால் மாணவர்கள் கைதுச் செய்யப் படுவார்களா..
நீட் எழுதித் தேர்வானால்தான் மருத்துவப் படிப்பைத் தொடர இயலுமெனில் , நீட் எழுதப் போய் கொரோனாத் தொற்று மாணவர்களைத் தாக்கினால் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தருவாரா எடப்பாடி பழனிச்சாமி...
வாயில் வடைச் சுடும் மோடியைப் போல் சுடாமல், தெளிவான விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு முன் வர வேண்டும்...
கொரோனாவை முன்னிட்டாவது நீட் தேர்வை ஒழித்திட தனது எசமானர் மோடியிடம் மண்டியிட்டேனும் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றுவாரா...
மண்டியிடலில் மகத்துவம் பெற்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பார்ப்பு மிக எளிமையானதுதானே...
- அரங்க கனகராசன்
17062020
-------------------------------------------------------------------

சிங்களவனும் தமிழ் மீனவர்களை குறிப் பார்த்து சுடுகிறான்..
சீனாக்காரன் குண்டுக்கு இரையாவதும் தமிழ் வீரர்களே
இதன் பின்னணி ஆய்வுப் படுத்தப் படுமா...
17062020
----------------------------------------------------------------
அன்பழகன்...
சிரிப்பு முகத்தில் மட்டுமல்ல... உள்ளத்தாலும் பிறர்க்கு ஈதல் செய்து புன்னகைப் பூணுவார்...
கொடுந் தொற்று எனத் தெரிந்தும் களமிறங்கி கனிவுக் காட்டினார் ...
அந்தோ ச ம உ அன்பழகன் மறைவு ஆறுதலுக்கு உடபட்டதன்று... மிகவும் வருந்தச் செய்யும் நிகழ்வு ..
-அரங்க கனகராசன்
10062020
--------------------------------------------------------------
யாரிடம் புலம்புவது?

எங்கேப் போய் முட்டிக் கொள்ள?
அறிவற்ற திடங்களோ இந்நாட்டின் மக்கள்...
கருப்பினக் குடிமகனை வன்மமாக கழுத்தை நெறித்துக் கொலைச் செய்த வெள்ளையின வெறியனுக்கு எதிராய், பாகுபாடின்றி அமெரிக்க மக்கள் ஓரணித் திரண்டு போராடுகிறார்கள்...
இங்கே கொரோனா எனப்படும் கொள்ளை நோயால் மக்கள் படும் இன்னல் குறித்துக் கவலைக் கொள்ளாத மூடர்கள், மீண்டும் வழிப்பாட்டுத் தளங்களைத் திறந்திட உத்தரவுப் போடுகிறார்கள்
வழிப்பாட்டுத் தளங்களில் வாசம் செய்வதாகக் கூறப்படும் கடவுள்களால் கொரோனாவின் சிறு மயிரைக்கூடப் பிடுங்கத் திரிணியற்ற இந்தக் கற்பனைக் கடவுள்களை வழிப்பாடு செய்ய வழிபாட்டுத் தளங்களைத் திறக்கச் சொல்வது கடைந்தெடுத்த கயமையல்லவா...
அறியாமையில் உழலும் மக்களை வஞ்சிக்கும் செயலல்லவா இது...
பெரிதளவில் மக்களை வஞ்சிக்கும் இந்த நாசகார நாதாரிகளை எதிர்த்து ஓர் எதிர்ப்புக் குரலும் எழவில்லையே...
வழிப்பாட்டுத் தளங்ளால் நன்மை அடைவோர் ஆரியர்களன்றோ...
சிறு ஆரியக் கூட்டம் சொகுசாய் வாழ, பெருந்திரள் மக்களை முட்டாளாக்குவதை ஏற்றுக் கொள்ளலாகுமா...
இனவெறி வஞ்சகன் வெள்ளையன் ஒருவனை எதிர்த்து நாடே கொந்தளிக்கிறது; அமெரிக்காவில்...
அதைக் கண்ணுற்றும் பெருந்திரள் மக்கள் இங்கே கற்பனைக் கடவுள்களுக்கு எதிராய்க் குரல் எழுப்பி இருக்க வேண்டாமா?...
பேரிடர்க் காலத்திலும் பயனற்ற வழிப்பாட்டுத் தளங்கள் இந்த மண்ணுக்குத் தேவையில்லையென ஓரணித் திரண்டு ஓங்கிக் குரல் கொடுக்க இதுவன்றி வேறேது நேரம் எப்போது வாய்க்கும்...
கருவறைக்குள் ஆரியன் என்ன செய்கிறான் என்று அறியவும் உரிமையற்ற மக்களுக்கு வழிப்பாட்டுத் தளங்களால் நன்மை விளையப் போவதென்ன?
- அரங்க கனகராசன்
08062020
---------------------------------------------------------------------

கலைஞர் உயிருடன் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பார்த்தார்கள்...
ஏதும் நடக்கவில்லை...
இறந்தப் பின்னும் ஊழல் சாயம் பூசுவது அவர்களின் வன்னெஞ்சமதை படம் பிடித்துக் காட்டுவதாகவே இருக்கிறது...
உயிருடன் இருந்தப் போதே ஊழல் வழக்கில் சிறையேகியவர் என்றப் போதிலும் இறந்தப் பின்னும் செயலலிதாவின் ஊழலை நினைவாக்கம் செய்வது, வரலாற்றின் பக்கங்கள் திருத்த முடியாதது என்பதை மாந்தர் உணரல் பொருட்டே...
கருணாநிதியால் தமிழ்நாடு பல நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை மறைக்க ஊழல் ஊதுபத்திகளைக் கொளுத்துவதால் ஒருபோதும் கருணாநிதியின் வரலாற்றுப் பக்கங்கள் தீய்ந்துப் போகாது...
நெருடல் உண்டு கருணாநிதியின் மீது... அதற்காக தமிழகத்தில் அவர் ஆற்றிய அருந் திட்டங்களைப் பேசாமல் இருப்பது பார்ப்பானர்களின் சதிக் குழியில் நம்மை சவமாக்கிடல் போன்றதாகும்... மேலும் நடுநிலைப் பண்புமாகாது...
என்றும் நெருடலுடன்
-அரங்க கனகராசன்
03062020
-------------------------------------------------------------------------------

சீனாவின் அழுகுரல் கேட்டு அய்நா பேரவை கடும் கண்டனம்...
இந்தியாவின் மேக் இன் இந்தியா ராணுவத் தளவாடங்களின் கோரத் தாக்குதல் - அமெரிக்கா அதிர்ச்சி.
இந்திய ராணுவ வீரர்களைமரத்தடியில் ஓய்வு. எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஆர் எஃச் எஃச் குண்டர்கள் களம் இறங்கியதால் சீன ராணுவம் பின் வாங்கியது...
பாரத் மாதாகி ஜெய் என்று சொல்ல மறுக்கும் சரணடைந்த சீன வீரர்களை முகாம்களில் அடைத்து கீதா உபதேசம்... செஞ்சிலுவை சங்கம் கண்டனம்.
சரணடைந்த சீனாவீர்கள் மத்தியப் பிரதேசம் கொண்டு வரப்பட்டு வெட்டுக் கிளிகள் அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்..
ஊறுகாய் மாமி களநிலவரத்தை தொலைக் காட்சியில் உன்னிப்பாக கவனித்து வருகிறார்..
இந்தப் பதட்டமான போர்ச் சூழலிலும் பிரதமர் மோடிக்கு வேண்டிய தைவான் காளானை பெறுவதில் வெளியுறவு துறை அமைச்சர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்...
காளானை சுவைக்க அதிபர் ட்ரம் அழைக்கப் பட்டுள்ளார்...

அதிபரின் வருகையை ஒட்டி புலம் பெயர் தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு
30052020
---------------------------------------------------


வெளி மாநிலங்களில் இருந்து தாய்நாடு திரும்பிய புலம்பெயர் தமிழ் மக்கள் வழியே கொரோனா பரவுகிறதாம்...
ரேசன் கடையில் முட்டி மோதி நின்றதாலோ,
மதுக்கடையில் கட்டிப்பிடி நாயகர்ளாலோ கொரோனா தொற்று பரவவே இல்லையாம்...

நம்புங்கள்... தமிழ்நாடு அரசின் அறிவியல் அறிக்கைகளை பாராட்டுங்கள்
29052020
---------------------------------------------------------------------

பாகிஃச்தானாக இருந்தால் இந்நேரம் 3 நிமிடத்தில் அந்த நாட்டை சாம்பலாக்கி பாரத் மாதாகி ஜெ என்றிருப்போம்..
வந்திருப்பது சீனாக்காரன் என்பதால் நாங்கள் பொறுமைக் காக்கின்றோம்...
ஏனென்றால் கொரோனாவால் துவண்டுப் போனவனிடம் போரிடுவது அறமல்ல என்று நாங்கள் எண்ணுகிறோம்...
இப்போது எங்கள் கவனமெல்லாம் வெட்டுக் கிளிகள் மீதுதான்...
யாகம் நடத்தி வெட்டுக் கிளிகளை கூண்டோடு அழித்திடவும் இராமன் மாயவில்லேந்தியும் கண்ணன் சக்ராயுதம் ஏந்தியும் விநாயகன் எலிப்படைகளை வழிநடத்தியும் சீனாக்காரனை சிதறிடித்து விடுவார்கள்...
ஆதலால் போர்நிதியை அள்ளித் தாருங்கள்...

ஜெய் கிந்த்... பாரத்மாத்கி ஜே...
27052020
-----------------------------------------------------------

#மே18
--------

இரத்த ஆறு ஓட-
துண்டுத் துண்டாக சிதைக்கப் பட்ட தமிழர் சடலங்கள்...
அந்தச் சடலங்ஙளுக்கிடையில் உயிர்த் துடிக்கக் கிடந்த தமிழ் மக்களின் குற்றுயிர் உடல்கள்
கொத்து குண்டுகள் வீசப்பட்ட இடங்களெங்கும் தமிழ்ப் பிணங்கள்... பிணங்கள் மீது சாகாமல் தவழ்ந்தக் குழந்தைகள் ஏராளம்.. அம்மா உறங்குகிறாள் என்று நினைத்து சடலமானவளின் முலைக் காம்பை பசிக்காகக் கவ்விய மொட்டுகள்...
உயிர்ப் பிரிந்தும் உயிர்ப் பிரியாத குற்றுயிர் தமிழர்களையும் லாரியில் அள்ளி படுகுழியில் கொத்து கொத்தாய் குவித்து மண் மூடிய அவலம்...
தமிழர்கள் கொல்லப்பட்டச் சுவடுகள் அழித்து ஆங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திய பாசிச நாய்க்கு இந்தியாவின் சார்பில் பூங்கொத்து அனுப்பி வாழ்த்தியக் காங்கிரஸ்..
அதற்கு சற்றும் குறைவின்றி பாசிச ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த பாசிச மோடி...
இதன் போதெல்லாம் தங்கள் தங்கள் குடும்ப பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள நீலிக் கண்ணீரையும் அடக்கி ஊமையான தமிழகத் தலைமைகள்..
இந்த கபோதிகளை தமிழக மக்கள் தீண்டத் தகாத கட்சியாக ஒதுக்கி வைத்தனர்...
மோடியின் தமிழின விரோதத்தால் வெகுண்டத் தமிழ் மக்களின் கோபத்தில் குளிர்க் காய நுழைந்து அப்படியே அரசியல் ஆதாயம் கண்டு விட்டவர்கள்...
இன்று பிராபாகரன் முடிந்துப் போன கதை என்றுக் கூறி முற்றுப்புள்ளி வைத்து இரணத்தை மூடல் செய்யும் திமுக...
மறக்க முடியுமா? பிரபாகரன் முடிந்துப் போனக் கதையா?
துக்கத்தில் கேள்வி எழுப்பும் தமிழ்மக்களைப் பார்த்து, "இவர்கள் நாம் தமிழர் கட்சியினர் " என்று அடிக் கோடிட்டு எல்லோரையும் எச்சரித்து-
பிரபாகரனை வசைப் பாட எங்கிருந்து வந்தது இந்தத் துணிவு...
மாவீரனைப் பேச நாங்கள் சீமானின் முதுகில் ஒளிய வேண்டியதில்லை...
சீமான் தமிழ்நாட்டின் இன்னொரு ராமதாசு என்பதை நாங்கள் நன்கறிவோம்...
மோடியின் தமிழின விரோதப் போக்கினை எதிர்த்து போர்முரசுக் கொட்டிய பெரியாரின் தொண்டர்கள் நாங்கள்.
எங்கள் உணர்வை - எங்கள் உழைப்பை - கையம் படுத்தி தேர்தலில் வெற்றிப் பெற்றுவிட்ட திமுக இப்போது 'பிரபாகரன் முடிந்துப் போனக் கதை " என்றுக் கூறி வரலாற்றை மண்கொண்டு மூடி விட்டு, உங்களை தமிழ் மக்களின் நிரந்தர காவலர்களாகக் காட்டிட துணிபென்ன...
பிரபாகரனைப் பேசாதே என்று தடை விதிக்க நீயார்?...
மாவீரன் பிரபாகரன் தமிழர்க் குருதியோடு உறைந்துள்ளவன்... அவனை நீக்கி விட்டு உங்கள் கடந்தக் காலத் தவறுகளை மக்கள் நெஞ்சில் துடைத்து விடலாம் என்று குள்ளநரித்தனக் கனவுகளை விதைக்காதீர்கள்...
கனவு விதை ஒருபோதும் முளைக்காது...
தேர்தல் போது எங்கள் வாசல் கதவைத் தட்ட வருவீர்கள....
அப்போதும் பெரியார் தொண்டர்களின் குருதியில் மாவீரன் மேதகு பிரபாகரன் வாழ்ந்துக் கொண்டிருப்பதை காணத் தான் போகிறீர்கள்...
தமிழ் மக்களே மே18 மாலை ஆறு மணிக்கு வீடுகள் தோறும் மாவீரர் நினைவாய் விளக்கேற்றுக...
மாவீரன் வழி மறவோம் என்று முழக்கமிடுங்கள்...
-அரங்க கனகராசன்
18052020
------------------------------------------------------------------

கொரோனா குளிப்பு
-------------------------
பொதுவாகக் குளிக்க எந்த குளிப்பு பயன் படுத்துகிறீர்களோ , அதே குளிப்பு கொண்டு கை கழுவுங்கள்.
கொரோனா பீதியில் நுரைமை கொண்டு கைக் கழுவாதிர்கள்..
நச்சுத் தன்மைக் கொண்ட வேதியல் கலவைகளின் சேர்மம் தான் நுரைமை !..
இந்த வேதியல் நுரைமை சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும்... இதனால் தோல் செதில் சிதைவு நோய்கள் உண்டாகலாம்...
புலிக்குப் பயந்து குழியில் விழுந்து மாண்டதுப் போல் கொரோனாவுக்கு பயந்து நுரைமையில் கைக் கழுவி தோல் சிதை நோய்க்கு ஆளாகாதீர்கள்
* குளிப்பு = soap
* நுரைமை = hand wash
- அரங்க கனகராசன்
17052020
-------------------------------------------------------------

எம் பிரபாகரன்
-------------------
காலம் முழுதும் இந்தியாவின் அடிமையாய் டயர் நக்கிப் பிழைப்போருக்கு பிரபாகரன் வழி பிழையாகத்தான் இருக்கும்....
பிரபாகரன் தனிமனிதன் அல்லன்
வரலற்றின் செதுக்கம் அவன்...
பிரபாகரனை போல் ஒரே ஒரு நாள் அரசியல் கட்சித் தலைவர்களால் வாழ்ந்துக் காட்ட முடியுமா?
முடியாது... ஏனெனில் அவன் இனத்திற்க்காக பாதை சமைத்தவன்...
ஊழல் அரசியல்வாதிகள் உல்லாசத் தீவில் உற்சாகமாய் இருந்துக் கொண்டு, நாளும் நாளும் நெருப்பில் நடையிட்டவனை இழித்துப் பேசாதீர்...
பிரபாகரன் வழி தனி வழி
-அரங்க கனகராசன்
17052020
----------------------------------------------------
-----------------
என்னவென்பது
கை கால் கட்டப்பட்டப் போதே ஜெயசிறியின் இருதயம் அச்சமுற்று- நடுங்கி - பதறி - கதறி- துடித்த வேதனைக்கு சொல்லேது?
வாயை அடைத்து எரிதழலில் அவளை வேக வைத்தக் கொடியவனுக்கு விசாரணை வேண்டுமா...
உயிர்ப் பிரியும் தருணத்திலும் "அப்பா எங்கே ' என்று கேட்ட ஜெயசிறியின் குரல் கேட்டு கதறாத நெஞ்சும் கதறும்...
அப்பா இருந்திருந்தால் தன்னைக் காப்பாற்றி இருப்பாரே என்ற ஆதங்கம் அவளுள் பீறிட்டிருக்கிறது...
நெருப்புக்கு என்னத் தெரியும்?
14 வயதுச் சிறுமியின் தந்தைப் பாசம் நெருப்புக்குத் தெரியுமா..
கொலைகாரக் கும்பல் - அதற்கோர் அரசியல் கட்சி! அறிவற்ற அடிமைகள் வளர்ந்த வளர்ப்பு அது...
எந்த அரசியல் கட்சியிலும் முழுக் கை சட்டையின் கையை முழங்கைக்கு மேல் மடித்து. விடல் என்பது அரிது...
அடிமைகள் கட்சியில் அவர்களின் அடையாளமே முழங்கைக்கு மேல் சட்டையை மடித்திருப்பதுதான்...
இது அவர்களின் செய் தொழிலின் அடையாளம்...
கைமடிக் கொடியவர்கள் ஒரு காலத்தில் திமுகவில் இருந்தவர்கள்தான்.
ஆனால் ; திமுகவில் இருந்தப் போதிலும் அவர்கள் அறிஞர் அண்ணாவின் மடியில் இளைப்பாறியவர்கள் அல்லர்...
திரை மயக்கத்தில் எம்ஜியார் என்ற பிம்பத்தில் ஒன்றியிருந்தனர்...
எம்சியாரின் திரைப் படங்கள் வெளியாகும் போது டிக்கெட்டுகளை அதிகளவில் வாங்கி அதனை கள்ளச் சந்தையில் விற்று குறுக்கு வழியில் வருவாயை ஈட்டியவர்கள்...
டிக்கெட்டுகளை ஒழித்து வைக்கவே அப்போது முழுக் கையை முழங்கை வரை மடித்து விட்டிருப்பார்கள்...
திருட்டுத் தனத்தின் பரிணாம வளர்ச்சியே இன்றளவும் அடிமைகள் முழுக் கைத் துணியை முழங்கை வரை மடித்து விட்டிருத்தல்...
இப்படி அடிப்படையே கள்ளத்தனமும் பிளேடும் அவர்களிடத்தில் ஊறியிருந்த வேளையில் எம்சியார் கட்சித் தொடங்கினார் ...
எம்சியார் படம் வெளியாகும் வேளையில் கள்ள டிக்கெட் விற்றக் கும்பல் அடியோடு
எம்சியார் கட்சியில் சேர்ந்தது...
அது அரசியல் கட்சி என்றப் போதிலும் அரிசியல் அறியா கள்ள டிக்கெட் விற்ற கும்பலின் கூடாரம் ஆனது...
அவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதை
எம்சியார் மரணமுற்றப் போது கலைஞரின் சிலையை உடைத்த சம்பவம் ஒரு சான்று...
அதே போல் அம்மையாருக்கு சிறைவாசம் என்று நீதியவை தீர்ப்பு கேட்டு கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை உயிரோடு பேருந்துக்குள் எரித்தனர்...
அரசியல் பாடம் கற்காமல் சினிமா மாயையில் கள்ள டிக்கெட் விற்பனை முகவர்களாக இருந்தவர்களைக் கொண்டு தொடங்கப் பட்டதால் அடிமைகட்சி இன்றளவும் அரசியல் முதிர்ச்சி இன்றி இயங்குவதோடு, குறுக்கு வழியில் பிழைக்க எந்தக் கொடூரத்தையும் இரக்கமின்றி செய்து வருகிறது...
அதன் நீட்சியே விழுப்புரம் ஜெயசிறியின் கொடூர கொலை நிகழ்வு ...

விசாரணை என்றப் பெயரில் நீண்டால் இந்தக் கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க அடிமைகள் கட்சி வழிவகுத்துக் கொடுத்துவிடும்...
ஆதலால் 14 வயது சிறு பெண்ணின் மரணவாக்கு மூலத்தை ஏற்று, அடிமைகள் இருவரையும் விழுப்புரம் கூட்டுச் சாலையில் பொது மக்கள் பார்வையில் நெருப்பிட்டுக் கொளுத்திட விரைவானத் தீர்ப்பினை நீதியவை வழங்கினால் நலம் பயக்கும்
-அரங்க கனகராசன்
11052020
---------------------------------------------------------


மூன்று கேள்விகள்
-------------------------
புலிகள் தங்கள் வல்லமையால் தங்களை வழி நடத்தியவர்கள்...
கலைஞரின் ஆதரவை அவர்கள் கோர விரும்பவில்லை என்பது ஊரறிந்த ஒன்று..
இனப்படுகொலை என்று பேச்செடுத்தாலே திமுகவின் இதயம் கொதிப்பதேன்.. ?
மேதகு தமிழினத் தலைவர் பிரபாகரன் என்று யாம் கூறினால் திமுகவுக்கு கோபம் கொப்பளிப்பது ஏன்?
தமிழின அழிப்புச் சண்டாளர்கள் என்று காங்கிரசை யாம் கை காட்டினால் கலைஞரைத் திட்டாதே என்று திமுக பிதற்றுவது ஏன்?
- அரங்க கனகராசன்
11052020
--------------------------------------------------------------

மோடியின் அவலத்தையும் எடப்பாடியின் அலங்கோலத்தையும் சகிக்க முடியாமல் மக்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள்...
ஆனால் மேதகு பிரபாகரன் அவர்களை வசைப் பாடினால் 2009 காலகட்டத்திற்கே திமுக தள்ளப்படும் என்பதே உண்மை...
மோடி மற்றும் எடப்பாடி மீதான வெறுப்புதான் திமுகவுக்கு சாதக நிலையை வார்த்து தந்துள்ளது..
இதில் இறுமாப்பு கொள்ளு முன் 2009 நிலவரத்தை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
- அரங்க கனகராசன்
11052020
----------------------------------------------------------------------------


குடிமக்களே நிமிருங்கள்
-------------------------------
நீங்கள் உழைத்தால் உங்கள் குடும்பம் காப்பாற்றப் படும் என்று மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த அரசாங்கத்திற்கும் நீங்கள்தான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கொரானா நமக்குக் கூறும் உண்மையை உள்ளத்தில் தாங்கிச் செல்லுங்கள்...
நீங்கள் உழைத்துத் தரும் பணத்தில் கொஞ்சம் பிடித்தம் செய்து உங்கள் மனைவி சேமித்து வைப்பார்
ஏன் தெரியுமா?
அவசரத் தேவைக்கு அந்த சிறுசேமிப்பு உதவும்...
ஆனால் உங்கள் உழைப்பில் கொழுத்துத் திரிவது யார் தெரியுமா...
உங்கள் உழைப்பில் ஊர் சுற்றுவது யார் தெரியுமா...
உங்கள் உழைப்பைக் களவாடுவது யார்த் தெரியுமா?
சேற்றில் விழுந்து சம்பாதிப்பது நீங்கள்..
செங்கல் சுமந்து சம்பாதிப்பது
நீங்கள்...
மலக்கழிவுகளில் மூழ்கி கிருமிகளிள் தாக்குதலையும் தாங்கி சம்பாதிப்பது நீங்கள்...
உங்கள் முதலாளிகளின் வசவுகளைத் தாங்கி கூனிக் குறுகி சம்பாதிப்பது நீங்கள்...
உங்கள் எல்லாருடைய உழைப்பில் உல்லாசம் காண்பவன் யார் தெரியுமா...
200 கோடி செலவில் மருத்துவக் கட்டிடங்கள் மீது மலர்த் தூவச் சொல்லி மருத்துவர்கள் கேட்டார்களா..
200 கோடி ரூபாய் மலர்த் தூவலில் மருத்துவர்களுக்கு சீருடை வாங்கித் தராதவனிடம் ஏனென்று கேட்க நீ திராணியிழந்து விட்டாயா...
அந்த 200 கோடியில் நோயாளிகளுக்கு படுக்கைகள் வாங்கித் தராததேன் என்று கேட்க உனக்குத் தகுதியில்லையா
இரண்டு மாதம் ஊதியத்தை இழந்து வீட்டுக்குள் பட்டினியோடு உழன்று குடும்பத்தாரின் கண்ணீரைத் துடைக்கவும் துண்டுத் துணிக்கு வழியின்றி வதங்கியிருந்த வேளையில் -
இந்த அரசாங்கம் உன் பசியைப் போக்கியதா...
ஏன் போக்கவில்லை... நீ உழைத்து ஈட்டிய தொகையை சிறுது சிறுதாய் நீ செலழித்தால் தான் நாட்டில் பணப் புழக்கம் நடைபெறும்...
உன்னால் செலவிடப்படும் சிறு சிறு பணமே அரசின் கருவூலத்தை நிரப்புகிறது என்பது உனக்குத் தெரியுமா...
நீ ஓய்ந்து விட்டால் கருவூலம் சாய்ந்து விடும் என்பது உனக்குத் தெரியுமா..
உன்னால் நிரப்பப் படும் கருவூலம் பேரிடர் காலத்தில் உன் பசிக்கு உணவு வழங்க முன் வழங்க முன்வரவில்லை எனில் அந்த கருவூலம் யாருக்கானது...
நோய்க்கு பயந்து உன்னை வீட்டில் அடைத்தார்கள்..
நீ முடக்கப்பட்டதால் கருவூலம் வெறுந் தொட்டியானது...
கருவூலத்தில் பணம் சேராததால் அரசின் ஊதாரித் தனத்திற்கு பணம் வேண்டுமே...
நீ பட்டினிக் கிடந்தாலென்ன... நோய்த் தாக்கி செத்தாலென்ன... போ.... போய்ப் பாடு படு... கருவூலம் நிரம்ப வேண்டும்...
கொரோனா பீடித்து நீ சாவதற்கு முன் உன்னால் முடிந்தளவு பாடு படு.... கருவூலம் நிரம்பட்டும்...
உழைத்த பணத்தில் மது வாங்கிக் குடி...
உன் மனைவியின் தாலி அறுபட்டாலென்ன... உன் குழந்தை எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து தெருவில் கிடந்தாலென்ன...
நீ வா பாடு படு... பணப்புழக்கம் இருந்தால் தான் கருவூலம் நிரம்பும்...
வா நிரப்பு...
உன்னை உனது அரசாங்கம் நடத்துவது உனக்கு கேவலமாயில்லையா.
உலகின் எந்த அரசும் தங்கள் குடிமக்கள் பட்டினியால் சாகக் கூடாது என்பதற்காக பேரிடர் காலங்களில் எல்லாருக்கும் 3 மாத ஊதியத்தை இலவசமாக கொடுத்து குடிமக்களை காத்தல் செய்கிறது...
பட்டினியால் துவண்டு கொண்டிருப்பவனைப் பார்த்து இந்த அரசு அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவச் சொல்கிறது...
படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்ற அரசு கொரோனா காலதாதிலும் மதுவை நீட்டி பணம் பறிக்கிறது...
இந்த அரசாங்கம் உன் சாவுக் குறித்து கவலைக் கொள்ளவில்லை...
உன் பட்டினிப் பற்றியும் கவலைப் படவில்லை...
வா பாடுபட்டு பொருளீட்டி கருவூலத்தை நிரப்பிட அழைக்கிறது...

உன்னை போல் ஊமையாகி விட்டவர்களின் கழுத்தை நெறிக்கக் கயிறுகள் தாராளமாகக் கிடைக்கும்...
-அரங்க கனகராசன்
06052020
---------------------------------------------------

இவர்தான் முதல்வர்
--------------------------
ஒரு நாள் வீட்டிலிரு என்பார்
அடுத்த சில நாட்களில் 'சாப்பாடு வேணும்னா வேலைக்கு போங்க " என்று கதவைத் திறந்து விடுகிறார்
மூனே நாளில் கொரோனா குளோஸ் என்றார்
முப்பது நாளாக கொரோனா தாண்டமாடுவதைப் பார்த்து முகக்கவசம் மாட்டிக் கொண்டார்
கொரோனா பணக்கரர்களின் நோய் என்றார்...
கோயம்பேடு சந்தையில் கூலிக்கு சுமைத் தூக்காளிகளையும் விட்டுவிடவில்லை கொரோனா
சுமைத் தூக்காளிகள் பணக்கார்களா என்பதையும் அவர்களின் சொத்து விபரத்தையும் இதுவரை வெளியிடவில்லை...
பூணூல் போட்டவன் பால் திரிந்து விட்டது என்று பதிவுப் போட்டால் கரிசனத்துடன் பால் மாற்றித் தருகிறார்....
என் வீட்டில் பால் திரிந்துப் போனதை பதிவாக இட்டேன்.. பால் வரவில்லை.. பூணூல் குடும்பத்திற்கு மட்டும் பால்காரனாக பணிவிடைச் செய்வேன் என்று தெளிவுப் படுத்தியிருந்தால் நான் திரிந்தப் பாலை பதிவிட்டிருக்க மாட்டேன்...
கைதட்டச் சொன்னால் தட்டுகிறார்... விளக்குப் பிடி என்றால் பிடிக்கிறார்... வரிப்பணத்தை வானிலிருந்து பூக்களைக் குப்பையாகக் கொட்டுவதை கண்டு சிலிர்க்கிறார்... ஏனைன்று சிந்திக்கவே மாட்டார்... இவர்தான் ஏட்டரைக் கோடி தமிழ்மக்களின் முதல்வர்...
தமிழ்நாடு வாழ்கவே...
-அரங்க கனகராசன்
04052020
-----------------------------------------------------------
கோயில்களை மருத்துவ மனையாக்குக
----------------------------------
இரண்டு திங்களாக எந்தக் கோயில்களிலும் பூசையில்லை...
எந்த வழிபாட்டுத் தளங்களிலும் இறை வழிப்பாடு இல்லை.
எந்த ஆலயங்களிலும் ஆண்டவனுக்கு ஆடையலங்காரம் செய்யவில்லை...
பரிகாரங்கள், வேண்டுதல்கள் இல்லை...
இதனால் கோபித்த கடவுள் பிரளயம் உண்டாக்கி மக்களை பயமுறுத்தியதாக நிகழ்வுகள் இல்லை...
இதிலிருந்தே இல்லாதக் கடவுளை இதுநாளும் வழிப்பட்டு, காலத்தை விரயம் ஆக்கியிருக்கிறோம் என்பதுத் தெளிவாகிறது...
காலம் விரயமானதோடு, மக்களின் மூடநம்பிக்கை தகர்க்கப்பட்டுள்து என்பதையும் கொரோனா நமக்கு உணர்த்துகிறது...
கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவர்களின் முழுகவனமும் கொரோனாவின் பக்கம் திருப்பபட்டுள்ளது என்பது வேதனை மிகுந்த உண்மை..
மருத்துவர்கள் திசைத் திருப்பப் பட்டுள்ளதால், மகப்பேறு மற்றும் இதயக் கோளாறுப் போன்றவற்றிற்கு மருத்துவம் மறுக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகின்றன...
மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனையில் ஏற்படும் இட நெருக்கடியை சமாளிக்க கல்லூரிகளைப் பயன் படுத்தும் அவலநிலையைக் காண்கிறோம்...
மாணவர்கள் பயிலும் கல்லூரிகளை கொரோனாவின் புகலிடமாக மாற்றுவது எதிர்காலத்தில் மாணவர்களின் உடல் நலனுக்கு தீங்காகவும் அமையலாம்...
ஆதலால் ; இல்லாதக் கடவுள்களுக்காக இருக்கும் வழிப்பாட்டுத் தளங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதே சிறந்தச் செயலாகும்...
உடனடியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள வழிபாட்டுத் தளங்களை கையகம் படுத்தி கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும்...
இப்போது இதனை செய்யாவிட்டால் மக்கள் நலனைப் புறந்தள்ளுதல் போலாகும்...
இதுவே சிறந்தத் தருணம்... இதுவே நல்லாட்சிக்கு அழகு...
எவ்வாறெனில் வழிப்பாட்டுத் தளங்களின் நிதியை பயன்படுத்தி கொரோனா ஒழிப்பு செலவினங்களையும் ஈடுக்கட்டுவதற்கான வழியும் அமையும்
- அரங்க கனகராசன்
04052020
---------------------------------------------------------

#சாப்பாடுப் போட வக்கில்லாத அரசு, மக்களுக்கு சவக்குழித் தோண்டுகிறது
02052020
------------------------------------------------------------

வைகோ நன்றி
------------------
இந்தியாவில் மேநாள் மகிழ்வைக் கொண்டாடும் ஒவ்வொரு தொழிலாளியும் மே நாள் விடுப்புக்காகப் போராடி வெற்றியை ஈட்டிய வைகோவுக்கு நன்றி நவில கடமைப் பட்டுள்ளனர்
01052020
---------------------------------------------------------------


எங்கும் கடவுள் இல்லை.
எந்த மொழியிலும் இல்லை.. கற்பனை மற்றும் பித்தலாட்டங்களின் உருவாக்கமே கடவுள். ஆதலால் எங்கும் கடவுளை வழிப்படாதீர்கள்.. மனிதனை நேசியுங்கள்..
அதைவிட மகத்தானது எதுவுமில்லை
30042020
-----------------------------------------------------------------------

தமிழக அமைச்சர்கள் கையில் சுற்றியிருக்கும் கயிற்றின் அறிவியல் நன்மை என்ன?
நல்வாழ்வு துறை அமைச்சரும் கயிறு கட்டியிருக்கிறார் ...
கயிற்றின் வழியே எளிதில் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருந்தும் விடாப்பிடியாக கட்டியிருக்கிறார்களே...
30042020
-------------------------------------------------------------
செருப்படியாவது... 
----------------------------

மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நாள்,  மாலை நேரம் -
எதிர் வீட்டில் குடியிருக்கும் மலையாளி மிகு மகழ்ச்சியோடு என்னிடம் பேச விழைந்தார்... 

எதன் பொருட்டு முகத்தில்  அளவு மீறிய மகிழ்ச்சியை வெளிப் படுத்துகிறார் என்று சற்று நேரத்தில்  எனக்கு விளங்கியது... 

அவரே அரை குறையாக தமிழை மலையாளத்தில் குழைத்து,  "பிரபாகரன் சிறிலங்கா கொன்னாச்சு " என பேசினார்.. 

மேதகு தலைவர் பிரபாகரன் மரணச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று  என்னுள் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தப் போதிலும் -
மனதில் சோகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.. 

அப்படிப் பட்டத் தருணத்தில்தான் எதிர் வீட்டு மலையாளி  மேதகு தலைவரின் மரணச் செய்தியில்  மகிழ்வை வெளிப் படுத்திக் கொண்டிருந்தார்... 

அம் மலையாளி மீது எனக்கு கோபம் வந்தப் போதிலும் அங்கே நான் "உரிமைப் போராட்டம் என்பது தோல்வியில் துவள்வதல்ல " என்பதோடு என் பேச்சை நிறுத்தி விட்டேன்...

மலையாளிகள் இயல்பாகவே தமிழின விரோதப் போக்கைக் கொண்டவர்கள்.. 

தயிழ்நாட்டில் தஞ்சமெனப் புகுந்து தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தப் போதிலும்  தமிழினத்தைப் பகைமையோடு அல்லது பொறாமையோடுப் பார்க்கும் குணம் இயல்பாகவே மலையாளிகளிடத்தில் உண்டு... 

மேதகு தலைவர் பிரபாகரன் மலையாள மக்களுக்கு தீங்கு ஏதும் செய்திடவில்லை என்றப் போதிலும் தமிழினப் பகைமை குணமானது அவர்களிடத்தில்  பல்கி  தலைவரின் மரணச் செய்தி அவர்களுள் மகிழ்வைப் பெருக்கிற்று...

அதன் நீட்சியை மலையாள  நடிகர் செயராமனிடத்தில்  கண்டோம்... 

இப்போது மலையாளப் படமொன்றில் நாய்க்கு  மேதகு தலைவரின் பெயரைச் சூட்டியுள்ளனர்... 

இப்படத்தில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் மம்முட்டியின் மைந்தனும் நடிகனுமான துல்கார் சல்மான்..  நாயை எள்ளி நகையாடும் காட்சியும் வைத்து தமிழின வெறுப்பை உமிழ்ந்திருக்கின்றனர்... 

தமிழையும் தமிழ் இனத்தையும் எள்ளி நகையாடும் மலையாள நடிகர்கள் தமிழ் மண்ணில் நெஞ்சுயர்த்தி வலம் வருகிறார்கள் தொடர்ந்து... ஏனெனில் ;  பெரும்பாலான மலையாளிகளின் உடலில் ஆரியக் குருதிதான் ஓடுகிறது.. 

தமிழினத்தைக் கொச்சைப் படுத்தும் மலையாள நடிகன் மீது ஒரு வெட்டு அல்லது ஒரு செருப்படியேனும் விழுவதாக இருந்தால் -

மலையாளிகள் தங்கள் தவறை உணருவார்கள்.... 

ஆனால் தமிழன் அப்படி ஏதும் செய்யும் பண்புக் கொண்டவனில்லையே... 

இன்னும் தமிழனின் பண்பை விவரிக்க வேண்டுமென்றால்-
அப்படிப் பட்ட நடிகன்களின் பட வெளியீட்டின் போது அந்த நடிகனின் உருவ பொம்மைக்கு மலர்த் தூவி பாலமுது படைத்து சிறப்பு செய்யும் பண்பினர் தமிழர்... 

தமிழர் பண்பு ஓங்குக! 

-அரங்க கனகராசன்
29042020
-------------------------------------------------------------------------------------- 

தம்பிகளா, கோயில் கருவறையை சுத்தம் செய்யும் போது, பாதுகாப்பு சாதனங்கள் ஏதும் தென்பட்டால் அதைத் தொடாதீர்கள்... காவல்துறையினர் முன்னிலையில் அம்பிகளை வந்து எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்...
25042020
-----------------------------------------------------------------
#கொரானோவை அழிக்க வல்லமையற்ற தஞ்சை பெரியக் கோயிலை - மதுரை மீனாட்சி கோயிலை வன்மையாகக் கண்டிக்கிறோம்
23042020
--------------------------------------------------------------------------------------

சடலம் மறிப்பும் - அரசின் செயல்பாடும்
--------------------------------
கொரோனா நோய்த் தொற்றால் இறந்த மருத்துவரின் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்தது - அறியாமையின் விளைவு..
சடலத்தை சுமந்து வந்த வாகனத்தை நொறுக்கியது அறியாமையின் உச்சம்...
சடலத்தோடு வந்த சக மானிடர்களைத் தாக்கியது காட்டுமிராண்டிகளின் செயல்...
இதற்கானக் குற்றவியல் அறிவிக்கையை அரசை நோக்கித்தான் நீட்ட வேண்டும்...
மக்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதானது தவறுக்கு மேல் தவறிழைக்கும் அரசை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது...
மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதது அரசின் அறிவின்மையை வெளிச்சம் ஆக்குகிறது...
மூன்று நாளில் கொரோனா ஒழிந்து விடும் என்று நம்பிக்கை வாக்களித்த முதல்வர் ஆளும் மண்ணில் கொரோனாவின் சடலம் வருகிறது எனில், மக்கள் மனநிலையை ஆய வேண்டியக் கடமை நீதிமன்றத்திற்கு இல்லையா...
தாமாக முன்வந்து வழக்காடிய நீதியவை சாமான்யர்களின் மனநிலையை கருத்தில் கொள்ள வேண்டும்...
இரண்டு நாளில் ரேபிட் கிட் வந்து விடும் என்று நம்பிக்கை வார்த்த அரசின் செயல் சாமான்யர்களின் நெஞ்சில் ஏற்படுத்தியிருக்கும் ஏக்கத்தை நீதியவை கருத்தில் கொள்ளவில்லையே...
337 ரூபாய் விலைக்கு ஏனைய மாநிலங்கள் ரேபிட் கிட்டை வாங்கியிருக்கும் சூழலில் தமிழ்நாடு ஏன் 600 ரூபாய் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த சாமான்யனின் சுய அறிவு , சடலத்தைக் கண்டு அச்சமுற்றதில் வியப்பேதுமில்லை...
ஆட்சியாளர்களின் உச்சபட்ச தெளிவின்மையை நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு தீர்வுநிலைக்கு குரல் கொடுக்குமேயானால் அநேக மக்களின் அறியாயை தானாக அகன்று விடும்...
இது வெளியில் ஏற்றப்பட்ட அகல் விளக்கு போன்றதல்ல..
உள்ளத்தில் ஏற்றப் பட வேண்டிய அறிவு விளக்கம் ஆகும்...
உலகில் தாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்று கத்தும் பூணூல் வாதிகளும் சடலம் மறிப்பில் ஈடுப்பட்டிருந்ததை தொலைக்காட்சியில் காண முடிகிறது...
- அரங்க கனகராசன்
21042020
--------------------------------------------------------------------------------------

நெற்றியில் பிறப்புறுப்பை 
--------------------------------- 

வஞ்சிக்கப்படுகிறோம்...
வாழ்வாதாரம் இழந்து வருகிறோம்...

கொரானாவின் கொடூர இறுக்கம் தமிழகத்தை நெருக்குகிறது...

வஞ்சிக்கும் இந்தியாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு,  கொள்ளை நோயாம் கொரோனாவின் வலையிலிருந்து  மீள நம்மை சிந்திக்க விடாமல் பார்ப்பனனும், பாப்பாத்தியும் தமிழகத்தில் ஓங்கி எழுப்புகின்றனர் வினா!...

வினா கேட்கப்படும் நேரமா இது?...

கொரோனா மாய்வில் மக்கள் மடிவதுக் குறித்துக்  கிஞ்சிற்றும் இரக்கமற்ற பார்ப்பனர் கூட்டம் தமிழகத்தில் வினாத்  தொடுக்கின்றனர்...

எள்ளி நகையாடுவர் அண்டை, அயலார் இவ்வினா கேட்டு!...

அப்படியென்ன அந்தக் கேள்வியின் மகாத்மியம் என்கிறீர்களா?...

தந்தை பெரியார் இறந்து, நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றன...

அவரின் இறப்புநாள் ஏறக்குறைய அரை நூற்றாண்டுகள் ஓடிவிட்ட நிலையில் - ஒரு எச்சிலைப் பொறுக்கி சபிக்கிறான் "ராமசாமி நாய்க்கர் நாசமாகப் போவான்" என்று!...   
  
அவர் உயிருடன் இருக்கும்போதே பார்ப்பனர்களின் சபித்தலில் சலனம் கொள்ளாதவர் என்பது இந்த பார்ப்பனர்களுக்குத் தெரியும்தானே!

தெரிந்தும், இறந்த மனிதரின் பெயரைச் சொல்லி "நாசமாகக் கடவாய்" என்கிறான் எச்சை எனில் அவன் நெஞ்சில் எத்தகு வன்மம் குவிந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் அறியவேண்டும்...

எச்சைகளின் வன்மத்திற்கு  பொருள் தெரியாதா நமக்கு?

மூன்று சதவீதம் கூட இல்லாத பார்ப்பனர்கள், நயவஞ்சகத்தை நெஞ்சில் தாங்கி நின்று, மூடத்தனத்தைத் தூவி, மக்களை முட்டாளாக்கிய கைவண்ணத்தால் வசதிமிகு சுரண்டலில் திளைத்தனர்...

97 சதவீத மக்களின் உழைப்பை உறிஞ்சி கடவுள் பேரால், மூடத்தனத்தின் பேரால் உல்லாச வாழ்வு வாழ்ந்துக் கொண்டிருந்த ஏமாற்றுப் பேர்வழிகளாம்  பார்ப்பனர்களின் மீது பகுத்தறிவு எனும் பாறாங்கல்லை எறிந்ததால் பார்பனர்களின் ஏமாற்று வாழ்க்கை  சிதிலம் அடைந்தது...

ஊரான் காசில் நோகாமல் வயிறு வளர்த்த பார்ப்பனர்களின் ஏமாற்றுத் தனத்திற்கு சாவுமணி அடித்த பெரியார் மீது பார்ப்பனர்கள் 
வன்மம் காட்டுவதில் விந்தையேதுமில்லை...

ஆனால்; இப்போது ஒரு புது பாப்பாத்தி முளைத்திருக்கிறார்...

அறிவுலகின் தேவதை என்று தனக்குத்தானே மயக்கமூட்டி மோகத்தில் திளைத்த அவரின்  அறிவின்மையை பெரியாரின் தோழர்கள் கிழித்தெறிந்தனர்...

அறிவின்மை வெளிப்பட்டுவிட்ட ஆத்திரத்தில் அந்தப் பாப்பாத்தி அனத்துகிறார்  - அனல் கக்கி கேள்வி கேட்கிறார்!...

பகுத்தறிவின் நிறம் கறுப்பா என்று கேட்கிறார்...

நிற- இன - பேதத்தில் முயங்கிய பெண்ணே,  பகுத்தறிவின் நிறம் கறுப்பு  என பித்தம் கொள்ள வைத்துவிட்டது உனது அறிவின்மை!... 

அட பித்தகியே!

நிறத்தில் இல்லை பகுத்தறிவு !... 

மனுதர்மம் கற்ற உனக்கு பகுத்தறிவின் நிறம் தெரியாதெனில் யாம் வியப்பதற்கு  ஏதுமில்லை...

பித்தர் மனைப் புகுந்து சித்தம் தெளிந்து வா... பகுத்தறிவின் நிறம் எதுவென்று அறிய?...

தெருவில் நின்று கூப்பாடு போட்டால், குழுமி நின்று  சிரிப்பர் சிறுவர் உன்னைப் பார்த்து...

பகுத்தறிவின் நிறம் கேட்ட பெண்ணே, உனது பிறப்பின் சான்று என்ன?

பார்ப்பனர்கள் நெற்றியில் பிறந்தவர்கள்; அறிவாளிகள் என்று திமிரோடு உளறும் உன்னிடம் ஒரு கேள்வி...

"பார்ப்பானன் நெற்றியில் பிறக்கிறான் " என்பதற்கு அறிவியல் சான்று உள்ளதா உன்னிடம்?

நெற்றியில் பிறப்புறுப்பை அறிவியலார்க்குக்  காட்ட முடியுமா  உன்னால்...

பெண்களுக்குக் கல்விக் கூடாது என்றுச் சொன்ன மனுதர்மத்தை மிதித்து கல்விப் பயின்றாயே... 

அந்த மிதித்தலில் உலாவிக் கொண்டிருக்கிறது பகுத்தறிவின் நிறம்... ஆனாலும்; கல்வி கற்றதால் மட்டும் அறிவாளியாக முடியாது என்பதற்கு உனக்கு நீயே சான்று!...

கேள்விக் கனைகள் நீ ஆயிரம் தொடுக்கலாம்...

எனது கேள்வி ஒன்று தான்!...

பார்ப்பணன் நெற்றியில் பிறக்கிறான் என்பதை அறிவியல் சான்று கொண்டு விளக்கம் கொடு...

அல்லவெனில் கைபர் கணவாய் நோக்கி நடையிடு... 

இங்கே எமக்கு கொரானாவிடமிருந்து மக்கள் மீள்செய்தல் பணி உள்ளது..
- அரங்க கனகராசன்

16042020
-------------------------------------------------------------


அம்மா பசிக்குதே
----------------------
"அம்மா பசிக்குதே' ..."தாயே பசிக்குதே "
என்று ஈனக்குரல் தொடுத்து கையில் தட்டேந்தி வாசல் தோறும் இறைஞ்சி வருவோர் நிலை இன்று தமிழ்நாட்டில் காணப்படுவதில்லை...
இந்த அவலக் குரல் இப்போது வீடுதோறும் வீட்டுக்குள் இருந்து ஓலமாய் வெளிப்படுகிறது...
மூன்று வேளையும் உணவு உண்டுக் கொண்டிருந்த உழைக்கும் வர்க்கம் முடக்கப்பட்டு ஓட்டிய வயிறோடு ஓசையின்றி கண்ணீர் விட்டுத் தவித்தல் செய்கிறது...
வாய்த் திறந்து கேட்கக் கூசும் மனம் கொண்டோரின் வறுமையை முகம் காட்டிக் கொடுக்கிறது...
அந்தோ அவலம்...
அல்லல் ஆட்டமாடும் வேளையில் இளகிய மனதோர் தம்மிடம் இருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளித்து பசி வேதனைதனைக் களைய முற்படுவர்...
ஏனெனில் இது வள்ளுவன் மண்...
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" எனும் முதுமொழி தமிழ் மக்களின் இரத்தத்தில் கலந்தப் பண்பு...
அதன் விளைவன்றோ தன்னார்வலர்கள் தம்மால் இயன்றதை எடுத்துக் கொண்டு பசித்திருப்போர் வாசலுக்கேச் சென்று ஈந்து வந்தனர்..
அரசு செய்திட வேண்டிய அரும்பணியைத் தடுத்தவன் நீ முதல்வனா? கொடுங்கோலனா...
கைக்குக் கிடைத்த உணவை வாய்க்குக் கொண்டுச் செல்வதை தட்டிவிட்ட உன்னை தறுதலை என்பதா? ஏழையின் வறுமை ஓலத்தை ஒளிந்து நின்று ரசிக்கும் அரக்கன் என்பதா...
பசி என்று அழைப்பு வருமுன்னரே பதறியோடி பசித்திருப்போர் இடத்திற்கே வந்து பசிபோக்கும் பிணராயி விஃசயன் முதல்வனா?
பசித்திருப்போர் கையிலிருக்கும் உணவை தட்டிவிடும் அடிமையே... உன்னை முதல்வன் என்பதா பாசிஃச்ட் என இனம் பிரிப்பதா...
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். "

நீ அழிவை நோக்கிப் பயணிக்கிறாயோ...
சற்று எண்ணிப் பார்; பட்டினிச் சாவுகள் பட்டியல் நீளும் முன்னர்...
- அரங்க கனகராசன்
14042020
-----------------------------------------------------------

கொரோனா பேசுகிறேன்...
-------------------------
எனக்கு கொரோனா என்று பெயர் சூட்டி விட்டார்கள்...
எனது நிறம் மஞ்சள் என்பதையும் கண்டறிந்து விட்டனர் விஞ்ஞானிகள்...
எனது உருவத்தையும் செதுக்கி விட்டனர்...
ஆனால் எவர் கண்ணுக்கும் புலனாகாதப் புதிராய் புவியில் வலம் வருகிறேன்..
காற்றோடும் நான் திரிவதாகக் கதைக்கிறார்கள்...
அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவர்களின் நெஞ்சுக் குழிக்குள் நான் குடிப் புகுதல் செய்கிறேன்..
நாடுநாடாய் நான் பரவி நானில மக்களைக் காண்கிறேன்...
என்னால் சொல்லப்படும் பாடங்கள் படித்து மாந்தர் யாவரும் நலம் பெற வேண்டுமென்பதே எனது அவா...
இன்னும் சில நாட்களில் என் இறுதிப் பயணத்தை முடித்துக் கொண்டு முடங்கிப் போவேன்..
ஆனால் ; முடங்கிக் கிடக்கும் தமிழ் மக்களை நினைத்தே நான் வேதனைப் படுகிறேன்...
இந்தியாவில் நான் நுழைந்து என் களியாட்டத்தை நான் அரங்கேற்றம் செய்தப் போது அரண்டோடினர் இந்தியாவில் மக்கள்..
ஏன் ஓடினர் மக்கள்? சொல்லுங்கள்... கரோனாவாகிய என்னைக் கண்டு இடம் விட்டு இடம் ஓடினார்களே ஏன்?
இந்தியா ஒரே தேசம் என்றால் மக்கள் ஏன் தங்கள் தாய் மண்ணை நோக்கி ஓட வேண்டும்?
இந்தியா ஒரே தேசம் அல்ல... அது ஒட்டுப் போடப்பட்ட வரைப்படம் என்பதனை நான் காட்டிவிட்டேன்....
டில்லியை தலைநகரம் என்கிறீர்கள்... ஆனால் அங்கிருந்துதான் கூட்டம் கூட்டமாக ஓடவிட்டேன் மக்களை. ..
அங்கிருந்து ஓடியதோர் கூட்டம் பசியோடும் தாகத்தோடும் தாய் மண்ணாம் உத்திரப் பிரதேசத்தை நோக்கி...
அதே போல் ஓடியது பீகாரை தாய்மண்ணாகக் கொண்டக் கூட்டத்தினர்...
இந்தியா ஒரே தேசம் அல்ல என்பதை, தாய் மண் நோக்கி ஓடியக் கூட்டங்களின் ஓலத்தைக் கேட்டாயா தமிழனே....
நாக்பூரில் இருந்தும் தாய்நாடாம் தமிழ்நாடு நோக்கி ஓடி வந்தனரே தமிழ்மக்கள் ... அறியவில்லையா நீ தமிழா!...
தாய்நாடு நோக்கித்தான் மக்களை ஓடவிட்டு மக்களுக்கு வரலாற்றினை நினைவுப் படுத்தினேன்..
இந்தியா என்ற வரைப் படத்தில் வசித்தவர்கள் என் வரவறிந்து பாதுகாப்புத் தேடி தம் தாய் நிலங்களில் தஞ்சம் அடைந்தனர்...
ஓடியவர் யாவரும் இந்தியா என்பது அந்நியம் என்பதை உலகறியச் செய்தனர்...
இன்னும் காலம் பலக் கடந்தாலும் இந்தியர் என்போர் எவருமில்லை ; அவரவர் மொழி வேறு; அவரவர் தேசம் வேறு என்பதை நான் படம் பிடித்துக் காட்டினேன்...
இந்தப் பாடத்தை உங்கள் நாட்டில் தந்தைப் பெரியார் உங்களுக்கு நடத்தினார் ஏற்கனவே...
தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்றாரே.. செவி மடுத்தாயா தமிழா...
தமிழா உன்னுடைய உழைப்பை வரியாய் உறிஞ்சி வடநாட்டை வாழவைத்துக் கொண்டிருக்கிறதே இந்தியா...
வாயடங்கியிருக்க நீ வடவனின் அடிமையா?
கொரோனாவாகிய நான் தமிழ்நாட்டிலும் தடம் பதித்து தாண்டவம் ஆடுகிறேன்...
கொரோனாவின் பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம் என்று ஆக்கினேன்..
பாதிப்புக்கு உகந்த நிதியை இந்தியா தமிழ்நாட்டுக்கு வழங்கியதா?
தமிழ் நாட்டுக்கு தகரத்தைத் தந்துவிட்டு பாதிப்பில் குறைந்த வடநாட்டுக்குத் தங்கத்தை வாரி வழங்குகிறதே...
உன் வரிப்பணம் உனக்கு உதவிடாதெனில் உறவேனடா இனி இந்தியாவோடு..
இந்தியாவின் வஞ்சனையை நீ அறிய நான் மீண்டும் மீண்டும் வருவேன் என்று நம்பியிராதே..
தமிழினம் தனி இனம்... தமிழர்க்கென மண் சொந்தமாயிருக்கையில் நீயேனடா சிந்திக்க மறுக்கிறாய்...
இன்னும் சிலநாளில் என் இறுதிப்பயணத்தை முடித்து முடங்கிப் போவேன...
உன்னை நீயறியவே உனக்கோர் வாய்பை நல்கிடவே தமிழ் மண்ணுக்கும் வந்தேன்...
நீ மீள்வாயா அல்லது இந்தியாவுக்கு வரி செலுத்தியே மாய்வாயா என்பதை நீ முடிவெடுக்க இவ்வாய்ப்பினைக் கொள்ளடா..
பொல்லாதக் கிருமியென்று பாரோர் எனைத் தூற்றினாலும் நல்லதைக் காட்டவே தமிழ் மண்ணுக்கும் வந்தேனடா...

உன் முடிவில் தமிழ்மக்களின் எதிர் காலம் உள்ளது என்பதை மறவாதே மடத் தமிழா!
- அரங்க கனகராசன்
09042020
----------------------------------------------------------------------------------
ஊரடங்கின் போது
---------------------

ஊரடங்கின் போது வெடி வெடிப்பதை போலீஸ்
எந்தப் பிரிவின் கீழ் அனுதி வழங்கியது
நச்சுப் புகையால் சுவாசப் பாதை பாதிக்கப்பட்டால் கொரோனாவுக்கு எளிதான வழியாகாதா
கைத் தடியால் ஓங்கி அடிக்கும் காவல்துறை பட்டாசு வேடிக்கைப் பார்த்ததே எந்த விதியின் கீழ்...
ஒளியேற்றி தங்கள் அடிமைத் தனத்தை உறுதி செய்த அதிமுக மண்டுகள் செயலலிதாவின் ஆன்மாவிடம் அனுமதி வாங்கினார்களா விளக்கேற்ற...
கட்சியை பாசகவுக்கு விளக்குப் பிடிக்க வைத்த எடுப்பும் பன்னீரும் செயலலிதாவின் ஆனமாவிடம் என்ன சொல்லுவார்கள்...
-அரங்க கனகராசன்
05042020
-------------------------------------------------------------
அந்த ஒன்பது நிமிடங்கள் ...
-------------------------------

அந்த ஒன்பது நிமிடங்கள் ...
காசுமீரத்து ஒன்பது வயது சின்னஞ் சிறு பெண்ணைக் கருவறைக்குள் கற்பழிப்புச் செய்தல் கும்பல் நுழையலாம்...
அண்டா பிரியாணித் திருடர்களும் நுழையலாம்...
பாசிசத்தை எதிர்த்தப் போராளி கவுரி லங்கேசைக் கொன்றக் கும்பலும் நுழையலாம்...
கதவைப் பூட்டியிருங்கள்...
தற்காப்புடன் இருங்கள்...
ஏனெனில் அன்று அவர்களின் பிறந்தநாள்...
- அரங்க கனகராசன்
04042020
----------------------------------------------


இது மூடர்களின் தேசம்...
------------------------------

இது மூடர்களின் தேசம்...
முட்டாள்களின் கூத்துப் பட்டறை.
அறிவற்றவர்களின் அலங்கோலமே...
சுயச் சிந்தனையற்ற அடிமைகளின் ஆலாபனை....
144 போடுவாராம்...
மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமாம்...
காய்கறி இறைச்சி கடைகளை திறக்க சொல்லுவாராம்...
வீட்டுக்குள்ளே இரு என்று சொல்லிவிட்டு வெளியே காய்கறி கடைகள் திறப்பு எதற்கு...
ஆயிரம் ரூபாய் தருவாராம்.. வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் அதனைப் பெற வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்..
பிறகு எதற்கடா 144
காவலர்களின் கைத்தடி விளையாட்டை கண்டு களிக்கும் சேடிஸ்ட்டா நீ...
ஊரடங்கின் போது குடும்பம் குடும்பமாக தெருவில் ஊர்வலம் போல் மக்கள் இடப்பெயர்ச்சிச் செய்து வழியெங்கும் பிணங்களாய் விழுந்தக் காட்சியில் கண் குளிர்ந்தாயோ...
ஆயிரம் ரூபாயை நீட்டி மக்களை கொரோனாவுக்கு காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்கள்...
தெரு நாய்களைத் தேடிச் சென்று உணவளிக்கும் இந்த நாட்டில் -
மனிதர்களின் பசியோடுப் பல்லவிப் பாடும் பைத்தியங்கள்.
வீடுத்தேடிச் சென்று ஓட்டுக்கு பணம் நீட்டத் தெரிந்த திருடர்கள்...
144 ன் போது வீடுத் தேடிச் சென்று உணவளிக்கும் பக்குவம் உன்னிடத்தில் இல்லையென்றால் நீ மூடன்தானே...
ஊரடங்கின் போதும் ரேசன் கடைகளில் மக்களைத் திரளச் செய்த அடி முட்டாளே...

கொத்து கொத்தாய் கொரோனா மரணம் இந்த மண்ணில் நடக்குமேயானால் அந்ந பிணங்களின் மீது மூடர் தேசத்தின் முகவரித் தெரியும்...
-அரங்க கனக ராசன்
03042020
-------------------------------------------------

காவல் துறையினர் பார்வைக்கு
-----------------------------------------
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு காவலர் பணிக்கு பள்ளிப் படிப்பே போதுமாளதாக இருந்தது...
இன்றைய நிலையில் பட்டதாரிகளும் காவலர்களாகப் பணிபுரிகின்றனர்...
அதாவது சரிவர படிக்காத அன்றைய காவலர்களாகட்டும், பட்டதாரிகளான இந்நாள் காவலர்களுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.
குணத்தில் - நடத்தையில் - காட்டு மிருகங்கள் போல்தான் மக்களால் மதிப்பிடப் படுகின்றனர்..
கொரானோவின் மீதுள்ள அச்சத்தைக் காட்டிலும், போலீசின் உறுமல் கேட்டு அதிகம் அச்சம் படவேண்டியிருக்கிறது...
மூன்று மாதங்களாக தமிழகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் கொரோனாவால் இல்லை என்று கூறப்பட்ட மக்களிடம் கொரோனாவைக் கண்டு அஞ்சு என்று இன்று சொல்வது எந்த வகையான நாடு இது என்று கேட்க விழைகிறது...
144 இன்று நடைமுறைக்கு வருகிறது... வெளியே செல்லக் கூடாது என்று மக்களிடம் தடியை நீட்டும் காவல் துறையினர் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் மக்கள் கேட்காமலேயே மக்களைச் சென்றடையுமானால் மக்கள் ஏன் வெளியே வந்து காவலர்களிடம் அடி வாங்கப் போகிறார்கள்...
ஊரடங்கு நாட்டின் நன்மைக்கானது என்பதால் அடிப்படைத் தேவைகள் குறித்து ஏதும் கேட்கக் கூடாது... நாட்டின் நவனுக்காக வீட்டிலேயே முடங்கி பட்டினியால் சாவுங்கள் என்றாலும், அதற்கும் மக்கள் உடன்படுவார்கள் நாட்டின் நலன் கருதி!
ஆனால் 144 முதல் நாளான இன்று சட்டத்தை கையில் எடுத்த காவல்துறையின் செயல் சட்டத்திற்கு உட்பட்டிருந்ததா...
காவலர்கள் நெறியை சரிவரப் பின்பற்றினரா?...
நான்கு பேர் கூடினால் அவர்களை கைது செய்ய காவல்துறைக்கு சட்டம் ஒப்பதல் நல்குகிறது...
நீங்கள் என்ன செய்தீர்கள்...
கொரோனா விதிப்படி ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கான இடைவெளி 1 மீட்டர் இருக்க வேண்டும்.
இன்று காவலர் என்ன செய்தனர்?
வண்டிகளில் தனித்தனியே வந்தவர்களை எல்லாம் போதிய இடைவெளியின்றி குவியச் செய்து தோப்புக் கரணம் போட வைத்தது காவல்துறை.
இப்படி பொதுவெளியில் மக்களை ஒன்று கூட வைப்பது கொரோனாவின் விதிக்கு முரண்பாடாக இல்லையா?
இந்த விதிமீறலுக்கு 144 ஒப்புதல் லழங்குகிறதா காவல்துறைக்கு...
144 ஐ மீறினால் மக்களை சுட்டுக் கொல்லவும் சட்டம் உங்களை அனுமதிக்கிறது...
செய்வதாக இருந்தால் அதை செய்துவிட்டு போங்கள்...
பொது வெளியில் மக்களை தோப்புக் கரணம் போட வைக்கும் உரிமையை நீதியரசர்கள் உங்களுக்கு வழங்கினார்களா..
வாகனத்தில் வருவோரை ஓரமாகத் திரட்டி லஞ்சம் வாங்குவது எப்படித் தவறோ... அதே போல் தவறுதான் இதுவும்...
ஒரு மருத்துவர் பணியின் நிமித்தம் வாகனத்தில் செல்கிறார்... அவரையும் காவல் துறை அடிக்கிறது...
தங்கள் உயிரையும் துச்சமாக்கி கொரோனாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றத் துடிக்கும் மருத்துவரையும் கையில் தடி இருக்கிறது என்பதற்காக நீங்கள் அடிக்கிறீர்கள் என்றால நீங்கள் மனிதம் செத்தவர்களா?
அல்லும் பகலும் அயராது உழைக்கும் காவல் நண்பர்களே இது போல் செயல்களால் உங்கள் ஈகையை நீங்களே கொச்சைப் படுத்தலாமா....
காக்கி சட்டை அணிந்து கையில் தடி எடுத்தவுடன் மனிதம் உங்களிடம் மாண்டு விடுவதாக கற்பனை செய்துக் கொள்கிறீர்கள்..
உண்மையில் வெயிலென்றும் பனியென்றும் இரவென்றும் பகலென்றும் பாராமல் பசியின் போதும் சாப்பிட நேரமின்றி நீங்கள் உழைப்பது ஏன்?
ஊதியத்திற்காக மட்டுந்தானா?. உயிரையும் பணயமாக்கி சட்டத்தை நிலைநிறுத்தப் ஏன் பாடுபடுகிறீர்கள்... ஊதியத்த்தின் பொருட்டா?
உங்கள் உழைப்பால் நாட்டின் ஆணி வேர்களான நீங்கள் மனிதர்களிடம் மனிதம் காட்ட மறுப்பதேன்..
காக்கிச் சட்டையைக் கழற்றிவிட்டு மக்களருகே நில்லுங்கள்... மனிதப் பாசம் உங்களிடத்திலும் வெளிமலரும்.... உங்கள் தங்கையாக - தந்தையாக - தாயாக - குழந்தைகளாக - அவர்கள் தெரிவார்கள்...
வாழும் நாள் குறைவு... ஆனால் வாழ்க்கையில் நீங்கள் உங்களை இழந்து வாழ்நாளின் பெரும்பகுதியை வசைக்கு உள்ளாக்குகிறீர்கள்....

உங்கள் குழந்தைகள் உங்களால் நிறைவுக் கொள்ள நீங்கள் மனிதம் இழந்து விடக் கூடாது...
-அரங்க கனகராசன்
25032020
-----------------------------------------------------------------------------------------


#corona சொல்லும் பாடம்
---------------------------------
நீரின்றி அமையாது ஒழுக்கு என்றான் வள்ளுவன்...
அதையே தன் பாணியில் சொல்கிறது...
"சுத்தமாக இரு... கூடா நட்பு கேடு தரும்.
.குடும்பத்தை நேசி... உன் குடும்பம் நலமாக இருந்தால் உன் நாடும் நலமாக விளங்கும்... " -
இது கொரோனாவின் முதல் படி..
இரண்டாவது படி : சோமிக்கக் கற்றுக் கொள்.
கொரோனாவைப் போல் திடீரென பேரிடர் தரும் பெரு நோய்கள் மனிதனைத் தாக்கக் கூடும் ...
இந்தத் தாக்குதலின் போது மக்களை தனிமைப் படுத்த முடியுமே அன்றி பசிக்கு சோறும் பிணிக்கு காசும் தரும் என்று அரசிடம் எதிர்ப்பார்க்க வியலாது..
ஆதலால் சேமிக்கக் கற்றுக் கொள்... அரசாங்கம் தனிமைப் படுத்தினாலோ நோய்த் தாக்குதல் நடத்தினாலோ உன் பிணிக்கும்
, உன் பசிக்கும் உன் சேமிப்பு உதவும் என்பது கொரோனாவின் இரண்டாவது படி...
கொரோனாவின் மூன்றாவது படி :
கடவுள் இல்லை... கடவுளை நம்பாதே... கடவுள் என்பது கயவர்களின் ஏமாற்று... ஆதலால் பகுத்தறிவுடன் வாழ்.. என்பது கொரோனாவின் மூன்றாவது படி.
ஆதலால் மக்களே. கொரோனா உயிர்க் கொல்லி நோயென்றப் போதிலும் அது நமக்கு உணர்த்தம் பாடங்கள் மகத்தானவை..
இங்கே தேவபாஷைகளும் மாட்டு மூத்திரங்களும் பாடையில் ஏற்றப்பட வேண்டியவை என்று உணர்த்தும் கொரோனா மானிட வரலாற்றின் முத்தாரம்....
- அரங்க கனகராசன்
24032020
---------------------------------------------------------------------------------------

------------------------
மோடி என்ற ஒற்றை மனிதருக்காக மக்கள் ஊரடங்கு நடந்தது என்று சங்கிகள் சந்தர்ப்பப் புளகாங்கிதம் அடைகிறார்கள்...
மோடி என்ற ஒற்றை மனிதனின் வேண்டுகோளுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் திரையரங்குகள் வெறிச்சோடின..
பயணிகள் குறைவால் பேருந்து மற்றும் புகைவண்டிகளின் ஓட்டம் குறைந்தன...
இது யாருடைய வேண்டுதலாலும் நடந்து விடவில்லை...
கொரோனா எனும் நச்சுக் கிருமியின் உக்கிரம் உணர்ந்து மக்கள் தாமாகவே சுயக் கட்டுப்பாட்டுக்குள் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டனர்...
ஏனெனில் இந்நோய்த் தாக்கினால் அதற்கானத் தீர்வைக் கண்டறியும் தலைமை இந்தியாவில் இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்...
எவ்வாறெனில் ; கொரோனாவின் பிடியில் சிக்கி சீனா நாடு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் -
இவர் சிஏஏ, என்பிஆர், என்சிஆர் இவற்றைக் கையிலேந்தி மக்களிடையே வெறுப்பு அரசியலுக்கு வித்தூன்றிக் கொண்டிருந்தார்...
கொரானோ பரவல் குறித்து சிறிதும் சிந்தைக் கொள்ளாமல் ட்ரம்பை அழைத்து ஊர் கூட்டி தனது புகழின் மயக்கத்தில் மிதந்தார்...
கொரோனா மிகத் தீவரமான கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தத் தருணத்திலும் சிஏஏ எனும் மகுடியை ஊதிக் கொண்டிருந்தார்.
இத்தகைய ஒரு பிரதமரால் நமக்கு பாதுகாப்புக் கிட்டாது என்றுணர்ந்த தமிழ் மக்கள் தமக்குத் தாமே சுயக் கட்டுப்பாட்டை விதித்து விழிப்புணர்வை வெளி மாநிலங்களுக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை மெல்ல உணர்ந்த மோடி சுய ஊரடங்கு என்று தானே அறிவித்து தற்புகழ்ச்சித் தேட விழைந்தார்
உண்மையில் இவர் நாட்டு மக்களிடம் அக்கறைக் கொண்டிருப்பின் அமைச்சரவை மற்றும் மருத்துவ விஞ்ஞானிகளோடுப் பேசியிருக்க வேண்டும்..
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஆலோசனைப் பெற்றிருக்க வேண்டும்.
நாடுத் தழுவிய ஊரடங்கினை நாற்பது நாட்களுக்கு முன்னரே பிறப்பித்திருந்தால் கொரோனாவின் சுவடுகள் கூட இந்திய மண்ணில் பதியாமல் செய்திருக்கலாம்....
தனியார் நிறுவனங்களுக்காக உழைப்பை சிதறவிடும் மதவாதியிடம் இந்திய மக்கள் அடைக்கலம் நாடுதல் செய்கிலர்...
உலக மக்கள் தொகையில் பெருந்திரள் ஏழைகளாகவும், மூடநம்பிக்கையால் தோய்க்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் அன்றாடங் காய்ச்சிகளாய் உழன்றிருக்கும் இந்திய நாட்டு மக்கள் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளானால் தனியார் மருத்துவமனையின் கதவைத் திறக்கச் சொல்லியிருக்கிறது மோடி அரசு...
மக்களைத் தேடி வந்துத் தொற்றும் இந்நோயின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுங் கடமை அரசுக்கு உண்டா? இல்லையா?
கியூபாவும், சீனாவும் என்ன செய்தன..
நோய்த் தாக்குண்ட மக்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் நல்கினவா...
குடிமக்களை நோயிலிருந்துக் காப்பாற்றும் கடமையிலிருந்து ஓர் அரசு நழுவுகிறது எனில் அது மக்களுக்கான அரசாகாது...
கொரோனா தொற்றை அறிந்துக் கொள்ள நான்காயிரத்து அய்நூறு ரூபாயை தனியார் மருத்துவமனைக்குக் கட்டவும், அடுத்தடுத்து ஏற்படும் மருந்துச் செலவுகளை மக்களே கட்டிக் கொள்ள வேண்டும்... அதோடு குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தியாக வேண்டிய கட்டாய நிலையும் அதற்கான செலவினமும் இந்த நாட்டு குடிமகன் தாங்க வேண்டுமெனில் அரசாங்கத்தின் சுகாதார துறை எதற்கு?
மக்களிடம் வரி வசூலிக்கும் அரசு மக்களை இது போல் பேரிடர் நோய்களிலிருந்தும் காப்பாற்ற முனையாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் வசூலித்துக் கொள்ள உரிமம் வழங்குது குடியாட்சிக்கு உகந்த செயலாகுமா?
இந்ந இழிநிலை நீங்க வேண்டுமானால் கியூபாவைப் போல் மக்களை நேசிக்கும் தலைமை வர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பும் நேரமல்ல இது...
பேரிடரைப் புரிதல் கொண்டு கொரோனாவாலும், இது சார்ந்து நாட்டில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் அன்றாட உழைப்பை இழக்கும் மக்களின் அன்றாடச் செலவினங்களையும் அரசே ஏற்க வேண்டும்...
அதுவே ஓர் அரசின் இலக்கணமாகும் ...
-அரங்க கனகராசன்
23032020
-----------------------------------------------------------------------------

கை கழுவுங்கள் என்பதில் அறிவியல் இருக்கிறது.
ஆனால் ; கைத் தட்டுங்கள் என்பதுதான் காமெடியாக தெரிகிறது...
#மக்கள் தற்காப்பு என்பது இரு வாரங்களாவது வீட்டோடு முடங்கி இருத்தலே.
வெளியே போனால் கரோனா அச்சுறுத்தல்...
வீட்டோடு முடங்கியிருந்தால் பசிக் கொடுமை...
இதில் கைதட்டச் சொல்வது வேடிக்கை.
கோயிலை மூடச் சொல்லி சாமிகள் தகவல் ஏதும் அனுப்பியதாகத் தெரியவில்லை.
ஆனால் ; மக்களைக் காப்பாற்றத் திராணியற்ற சாமிகளின் கோவிலை மூடுவது நல்லதே...
கோயிலை மூடுகிறோம் என்ற சாக்கில் சிலைகளையும் , நகைகளையும் பார்ப்பான் களவாடப் பார்ப்பான்.
மக்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள்...
துரத்தப் படவேண்டியது கொரோனா மட்டுமல்ல... சாமிகளும்தான்...
- அரங்க கனகராசன்
21032020
--------------------------------------------------------------------------

மானுடம் பேணும் மாமனிதர் மோடி
----------------------------------------------
கொரோனா கொல்லியிடம் மாந்தர் மாண்டுவிடலாகாது எனும் ஒப்புரவுக் கொண்ட மாமனிதர் மோடியைப் போற்றுவோம்...
2020 மார்ச் 22ஆம் நாள் வரலாற்றில் பதிவாகும் நாளன்றோ...
வரலாற்றுப் பதிவாளர் மோடியை மீண்டும் போற்றுதும்...
ஒன்பது மணியிலிருந்து மாலை அய்ந்து மணி வரைக்குமான மக்கள் தானே ஊரடங்கு என்பது , மக்களின்பால் மோடிக் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடல்லவா; ஆதலால் மீண்டும் மோடி போற்றுதும்...
மானிட நேயத்தையும், மக்கள் உயிரையும் கண் போல் காக்கும் மோடி போற்றுதும்...
தமிழ் மக்களும், இசுலாமியச் சொந்தங்களும் தங்கள் மனதில் நெருடாடும் நினைவலைகளை இருகரமேந்தி வாழ்த்துவோம் மோடியை...
குசராத் இனக்கலவரத்தின் போது சாதி மதம் பாராது ஆயிரக்கணக்கான இசுலாமிய மக்களுக்கு அடைக்கலம் தந்த மோடியை நெஞ்சில் நிறுத்தி போற்றுதும்...
சென்னையை வர்தா புயல் சின்னாப்பின்மாக்கியப் போது இருளென்றும், சேறென்றும், சகதியென்றும் பாராமல் சுமையைத் தன் தோளில் தாங்கி சென்னை மக்களை செம்மையாய்க் காத்தருளிய மோடியின் உயர்ப் பண்புப் போற்றுதும்...
கஃசா புயல் காவிரியோரத்து மக்களை புரட்டிப் போட்டப் போது கண்ணீர் மல்க ஓடோடி வந்து காப்பாற்றிய காவலனல்லவா மோடி போற்றுதும்...
குமரி மக்கள் கடலில் தொலைந்தப் போது கதறினாரே மோடி... அந்தக் கதறலில் குமரிமுனையே கசிந்துருகியதே... அந்தக் கண்ணாளன் மோடி போற்றுதும்...
இயல்பாகவே மாந்தர் உயிர்மீது களங்கமற்ற நேயம் கொண்ட ஒருவனால் மட்டுமே மார்ச் 22 மக்கள் ஊரடங்கிற்கு. அழைப்பு விடலுக்கு சாத்தியமாகும்...
அந்த ஒருவன் மோடி எனும் போது, நமக்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே பீடு...
ஆதலால் மோடி போற்றுதும்...
இதில் சிறு சலனம் என்னவென்றால் மார்ச் 22ல் மக்கள் யாவரையும் கரவொலி எழுப்பிட பணித்துள்ளார்...
அது ஏனெனப் புரிதல் இல்லை எனக்கு...
ஒருக்கால் -
மார்ச் 22ல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொரானாக் கிருமியழிப்பு மருந்து இந்தியாவில் கண்டுப் பிடித்திருந்தால் அந்த மகிழ்வின் பொருட்டு கரவொலி எழுப்பிட விரும்பியிருப்பார் மோடி.
அல்லது கொரோனோவை முற்றிலும் இந்தியாவிலிருந்து ஒழிந்த நாளாக மார்ச் 22ஆம் நாள் அமையுமா?...
இதுகாறும் தமிழ் மக்களுக்கும், இசுலாமிய மக்களுக்கும் நல்லதையே செய்திட்டச் செம்மல் மோடியால் மட்டுமே கொரோனாவிடமருந்தும் மக்களைக் காப்பாற்றவியலும்...
சாதி, மதம் சார்பற்ற சான்றோன் மோடி மீண்டும் மீண்டும் போற்றுதும்...
- அரங்க கனகராசன்
21032020
--------------------------------------------------------------------

இப்படியும் சில எடுப்புகள்
--------------------------------
#துப்பரவு தொழிலாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் - எடப்பாடி.
#கொரானோ தாண்டவம் ஆடும் இந்தக் காலகட்டத்திலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மூக்குக் கவசமோ கையுறையோ வழங்காத அடிமையின் பெயர் மாற்றத்தால் துப்புரவுப் பணியாளர்களின் உடல் நலம் பேணப்பட்டு விடுமா ?
- அரங்க கனகராசன்.
19032020
------------------------------------------------------------------------------------



---------------------------------
கெய்க்வாட்
இந்தச் சொல் தமிழ்நாட்டில் இல்லை...
வடநாட்டில் அனைவரும் அறிந்த சொல்.
அதாவது ; சக்கிலியன் எனும் சொல் தமிழ்நாட்டில் பரவலாகப் பலரால் அறியப்பட்ட சொல் போல் வடநாட்டில் அறியப்பட்ட சொல்தான் கெய்க்வாட்...
சாதியச் சொல் இங்கு நான் பயன்படுத்துவது ஏனெனில்-
பார்ப்பானர்களின் சந்தர்ப்பவாதம் எத்தகையது என்பதை உணர்த்தவே...
'பார்ப்பனர்கள் வாழ எந்தச் சந்தர்ப்பத்தையும் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் ' என்பது பார்ப்பனர்களின் நெறியாகும்..
கெய்க்வாட் எனப்படும் மக்கள் தீண்டத்தகாதவர்களாக பார்ப்பனரகளால் இட்டுக் காட்டப்பட்டுள்ளனர்...
இன்றளவும் இந்து மதம் அவர்களை அப்படித் தான் வைத்துள்ளது.
இப்படியொரு ஒதுக்கப்பட்ட கெய்க்வாட் எனும் சாதியைச் சார்ந்த - சிவாஜி கெய்க்வாட் - நடிகர் ரசனியை தமிழ் மண் அன்றி வடமண் தீண்டாது.
பெரியார் மண் என்பதால் கெய்க்வாட் ரசனியை சாதியக் கண்ணோட்டத்தில் பாராமல் நடிகனாக - கலைஞனாக - தமிழ் மண் ஏற்றுக் கொண்டது என்பதை எவராலும் மறுக்கவியலாது...
இந்த ரசனியின் தமிழ்நாட்டில் ஆரம்ப. வாழ்க்கை குடிகாரனாகவும் - கஞ்சா அடிப்பவனாகவும் - பொறுக்கியாகவும் இருந்தது என்பதை செய்திகள் கூறுகின்றன...
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த - கஞ்சா அடிமையை - பாரப்பனர்கள் தங்களின் மாபிள்ளை ஆக்கிக் கொண்டனர்... ஏன்?
கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்காத கெய்க்வாட் சாதியைச் சார்ந்த ரசனியின் பள்ளியறைக்கு பாப்பாத்தியை பார்ப்பனர்கள் அனுப்பியது ஏனெனில் ; 'எந்த சந்தர்ப்பத்தையும் சாதகமாக்கிக் கொள்ள லேண்டும்" என்ற பார்ப்பனர்களின் நியதியின் பொருட்டே..
கெய்க்வாட் சாதியைச் சேர்ந்த ரசனிக்கு வன்னியர் பெண்ணை மணமகளாக அனுப்பியிருந்தால் மருத்துவர் ராமதாசின் கையில் தீப்பந்தம் கொடுத்து ஊரை எரிக்க - சூறையாட - பார்ப்பனர்கள் தூபம் இட்டிருப்பார்கள்..
அவன் தீண்டத்தகாதவனாக இருந்தாலும் - கோயில் கருவறைக்குள் நுழைய அருகதையற்றவனாகவும் பார்ப்பனர்கள் ரசனியை வைத்திருந்தாலும் ரசனியிடம் குவிந்த புகழையும் பணத்தையும் கவர சாதகமாக்கிக் கொண்டனர் பார்ப்பனர்...
அவாள் வாழ சாதியைப் அவாளே பொருட்படுத்தவில்லை.
ஆனால் அவாளால் சூத்திரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராமதாசு வகையறா சாதியை விட்டொழிக்காமல் இளமதியை நடத்தியத் தனம் காட்டுமிராண்டித்தனம் என்பதையும் மீறியது எனலாம்....
கொரோனாவுக்கும் மருந்து கிடைக்கும். ஆனால் ; சமூகத்தின் அவலங்களான ராமதாசு வகையறாவுக்கு மருந்தேயில்லை...
பெரியார் மண்ணில் இத்தகு நச்சுருவிகள்?
-அரங்க கனகராசன்
15032020
--------------------------------------------------------------------------------------

#ரசனியின் சர்க்கரைப் பொங்கலும் மீனும்
--------------------------------------------
"ரசனி தான் ஒரு கிறுக்குப் பயல்ன்றதை சொல்லாமல் சொல்றாரு புள்ளை. ரசிகர்களின் உழைப்பில் ஆர் எஸ் எசை முதல்வர் பதவியில் உக்கார வெக்கனும்னு கிறுக்குத்தனமா ஒளறிட்டு போறாரு புள்ளை...
இந்த கிறுக்கனுக்கு கொஞ்சங்கூட வெவரமே இல்லை புள்ளை... தமிழ்நாட்டில் நின்னு ஜெய்ஹிந்த் னு சொன்னா எவ மதிப்பாம் புள்ளை... 'வெல்க தமிழ் ' "வாழிய தமிழ்"னு சொல்ற பெரியார் மண்ணுன்றது இந்த கிறுக்குப்பயலுக்கு புரிய வெக்கனும் புள்ளை "
"அட போ மாமா அங்கிட்டு... சர்க்கரைப் பொங்கலுக்கு மீன் தொட்டுச் சாப்பிட்றவன் பேச்சை பேசிட்டு இருந்தம்னா நம்ம பொழப்பு நாறிடும் "
- அரங்க கனகராசன்
12032020
------------------------------------------------------------------------------


நான்தான் !
  ---------------- 


அவனுடைய தாய், தங்கை, தங்கை மகன் ஆகியோர் 2004ம் ஆண்டு ஆழிப்பேரலையில் சிக்கி இறந்துவிட்டனர்..

அவனால் அந்த துக்கத்தில் இன்றளவும் விடுபடமுடியவில்லை...

இறந்த நாளில் இருந்து இன்றளவும் அவர்களை  கனவில் காண்பான்...

கனவில் காணும் ஒவ்வொரு நொடியும் அவனுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கும்...

'உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டதாக நினைத்தோமே... " என்று கனவில் அழுது அவர்களிடம் ஓடுவான்...

அவர்களும் அன்புடன் பேசுவார்கள்...

உயிரோடு இருந்தபோது அவனுக்கு அவர்களிடமிருந்து  கிடைத்த அதே அன்பு, பாசம், மதிப்பு  யாவுமே கனவிலும் கிடைத்தது...

அவன் நெகிழ்ந்தான்...

நாள்தோறும் கனவில் கண்டு துக்கிப்பான்...

அந்த துக்கம் அவனுக்கு இன்பமாக இருந்தது...  அந்த துக்கத்திற்காக ஏங்குவான்..

இந்நிலையில் 2015ல்  இதயநோயும், பக்கவாதமும் ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான் அவன்...

மருத்துவர்கள்  சோதனையில் அவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும்  கண்டறியப்பட்டது...

தவறாமல்  எடுத்துக் கொள்ளவேண்டுமென சில மருந்துகள் அவனுக்கு பரிந்துரைக்கப் பட்டன...

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, நேற்று வரை அதாவது 2020 பிப்ரவரி 18 வரைக்கும் மருந்துகள்  எடுத்து வந்தவனுக்கு ஒரு எண்ணம் உண்டாயிற்று...

மனதளவிலும், உடல் அளவிலும் தான் நன்றாக இருப்பதாக எண்ணினான்...

அதன்விளைவாக மருந்து  உட்கொள்ளுவதை பிப்ரவரி 18ந்தேதி நிறுத்தினான்...

அன்று அவன் தூங்கினான்... ஆனாலும் தூங்காமலும் இருந்தான்...

ஆமாம்! அன்று அவன் கனவில் அவர்கள் வந்தார்கள்... 2015ல் இருந்து கனவில் காணாதிருந்தவன் 2020 பிப்ரவரி 18ல்  கனவில் கண்டான்... 

தங்கையின் அபரிமிதமான அன்பில் திணறினான்... தங்கை மகன் 'மாமா' என்றழைக்க மருமகனை தூக்கிக் கொஞ்சினான்... யாரைவிடவும் அவனிடம் அதிக அன்புக் கொட்டும் தாயும் கொஞ்சமும் குறைவின்றி பாசம் பொழிந்தாள் கனவிலும்...

மகிழ்ச்சியின் விளிம்பில் அவனுக்கு மூச்சு முட்டியது...

மூளை நரம்புகள் அவனை மேற்கொண்டு தூங்கவிடாமல் எழுப்பின...

கனவில் இருந்து விடுபடுவதும், சிறுநேரம் கழித்து உறங்கினால் மீண்டும் கனவில் தங்கையை, தாயை, தங்கையின் மைந்தனை கனவில் காண்பதும் - மகிழ்வதும் - மூச்சிரைப்பதும், மூளை நரம்புகள்  அவனைத்  தட்டி எழுப்புவதும் விடியல் வரைக்கும் நீடித்தது...

விடியலின் போது அவனுக்கு ஒன்று புலனாயிற்று...

மருத்துவர்களின் ஆற்றலைப் புரிந்துக் கொண்டான்... அறிவியலின் அழகை நினைத்து வியந்தான்...

கனவோடு கரைந்துருகி நின்றால், நிச்சயம் அவன் மனநலம் பாதித்த நோயாளியாகி விரைவில் மடிந்திருப்பான்...

கனவுகளைத்  தடுத்து, அவன்  மனநோயாளியாகாமால் அரனாய் காத்தது விஞ்ஞானமே...

நோயறிந்து நோய்க்கேற்ப மருத்துவம் கண்டறிந்த அறிவியலை இங்கே நான் குறிப்பிடுவது ஏனென்றால்,

அறிவியலின் கண்டுப் பிடிப்புகளை மானிடன் உணர்ந்தால்தான், கண்டுப் பிடிப்புகள்  தந்த அறிவியலார்களை போற்றுவதாக அமையும்...

இப்படியோர் அரிய கண்டுப் பிடிப்பை மதத்தின் வாயிலாக புண்படுத்திய சம்பவம் ஒன்று இப்போது நினைவில் ஊசல் ஆடுகிறது...

ஆம்: உத்திர பிரதேசம் என்ற மாநிலத்தை சேர்ந்த  பாராளுமன்ற பிசேபி உறுப்பினரின் செயல்தான்  அது....

சூரியஒளித் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தால் சூரிய பகவானுக்கு மண்டை வலி வருமாம்... எரிச்சல் அடைவாராம்... சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாவோமாம்... அதனால் மின் உற்பத்தி செய்யும் சூரியத்தகடுகள் நொறுக்கப் பட்டன...

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும்,அந்த அறிவியல் மக்களை சென்று விடாமல் தடுத்து மக்களை முட்டாளாகவே வைத்திருக்கும் உத்தியை  மதம்  நிகழ்த்தி வருவதை நினைத்து, அறிவியலால் பயனுற்ற அவன் வேதனை அடைந்தான்...

அவன் யார்? அவன் என்பது என்னைத்தான்!... ஆம்; அவன் நான்தான்...    - -அரங்க கனகராசன்
19022020
-----------------------------------------------------------------------------------------
வருமானவரி
---------------------
வரி செலுத்தப்பட்டால்தான் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

வரி ஏய்ப்பு என்பது நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்பது யாவரும் அறிந்த ஒன்றே...
ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரையில் அரசுக்கு செலுத்தப்படும் வரி நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக செலவிடப்படுகிறதா என்றால் இல்லை என்பர்...
வரிப்பணத்தில் ஊர் சுற்றுவது, வரிப்பணத்தை அரசின் விளம்பரங்களில் விரயம் ஆக்குவது, வரிப்பணம் கொண்டு பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் மாடுகளுக்கு பகவத் கீதை அருளுவது, பொது மக்களின் வரிப்பணத்தை செத்த மொழிக்கு சிகை அலங்காரம் செய்வதுப் போன்ற செலவினங்களால் அரசியல் வாதிகள் வரிப்பணத்தை விரயம் செய்து விட்டால் முன்னேறுமா நாடு?
இந்திய ஒன்றியத்தின் அதிகாரக் குவிப்பில் குதூகலம் காணும் அரசியல் வாதிகள் நடத்தும் நாடகங்களில் ஒன்று வருமானவரி சோதனை.
நடிகர்கள் வரி கட்டாமலில்லை. உழைத்து ஈட்டிய பணத்தை ஈட்டிக்காரனைப் போல் ஓர் அரசு பிடுங்க முனையும் போதுதான் வரிஏய்ப்பில் ஈடுபடுகிறார்கள்...
வரிஏய்ப்பில் ஈடுபடாத நடிகன்கள் எவனும் இல்லை என்றே கூறலாம்.
அதேசமயம் வரி ஏய்ப்பில் சிக்கும் நடிகன்கள் சிறையேகியதாகவும் தெரியவில்லை.
ஆயினும் அரசுக்கு பயன்படாத இந்த வருமானவரி சோதனை ஏன் நடத்தப்படுகிறது எனில் அதிகார போதையில் மிதக்கும் அரசியல் வாதிகளின் சுயநல அரசியல் லாபத்திற்காக மட்டுமே எனில் மிகையல்ல...
உண்மையான அக்கறை இந்த அரசுக்கு இருந்திருப்பின் வரி ஏய்ப்பு சட்டத்தில் ரசனியை உள்ளைத் தள்ளியிருக்க வேண்டும்.. ரசனியின் ஏராளமான வரி ஏய்ப்பு பணம் அரசின் கருவூலத்தை நிரப்பியிருக்கும்.
அரசின் கருவூலம் நிரம்ப வேண்டும் என்ற அக்கறையின்மையால் இந்த அரசு நடிகன் ரசனியை தலையாட்டும் பூம்பூம் மாடாக மாற்றி விட்டது.
இந்த மாடு திரைப்டத்தில் வரிஏய்ப்பு செய்வோரை அதம் செய்வதாக நடித்திருப்பதை ரசிகர்கள் மறந்திருப்பார்கள் என நினைக்கத் தோன்றவில்லை...
படத்தில் ஒரு மாதிரியாகவும் உண்மையில் பூம் பூம் மாடாகவும் திரிய வேண்டிய பரிதாப நிலை ரசனிக்கு ஏற்பட்டிருக்கிறது. இது அவருக்கு புதிதாய்த் தோன்றலாம்.
தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே ஒரு பூம் பூம் மாட்டை பார்த்திருக்கிறார்கள்.
இந்திரா அதிகாரத்தில் இருக்கும் போது திமுகவை உடைக்க வருமான வரி என்ற ஆயுதத்தைக் காட்டி நடிகன் எம் சி ஆரை பூம் பூம் மாடாக மாற்றி அரசியல் லாபம் கண்டார்
இப்போது நடிகர் விசய் மீதும் இந்த கேடி அரசு ஏவியுள்ள வளையத்திற்குள் சிக்கி விசய் பூம் பூம் மாடாக மாறவிருக்கிறாரா அல்லது புலியாய் பாய்ந்து வருவாரா என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரியவரும்.
-அரங்ககனகராசன் 
05022020
-----------------------------------------------------------------------------------------------------

சமச்ஃகிருத சொற்கள் தமிழ் மொழியில் இல்லை

சமச்ஃகிருத சொற்கள் தமிழ் மொழியில் இல்லை. இருப்பதாக தெரிவதெல்லாம் பார்ப்பனர்களால் களவாடப்பட்டு பின் அதனை சமச்ஃகிருதத்திற்கேற்ப திரித்து அதனை மீண்டும் திருடப்பட்ட மொழியில் திணித்து விடுவர்... திணிப்பதில் வல்லவர்கள் பார்ப்பனர்கள். காலப்போக்கில் அந்நச் சொற்களின் மீதும் உரிமை செய்வர் பார்ப்பனர். உண்மையில் தமிழைப் போல் சொல் வளமோ பொருள் வளமோ சமச்ஃகிருத்தில் கிடையாது. களவாடப்பட்ட பிற மொழிச் சொற்களைத் திரித்து தன் வஞ்சகக் கூட்டில் பிண்ணி வைத்திருக்கும் கலவை மொழியே அது. இன்னும் தெளிவாக உரைக்க வேண்டுமானால் அது ஒரு பிச்சைக்காரன் மொழி யாகும்
02022020
-------------------------------------------------------------------------------------------------------

தோழர்களே...
இந்திய ஒன்றியத்தின் இன்றைய நிலை நீடிகுமானால், அடுத்து உங்கள் செயல் திட்டம் என்ன?...
இந்திய ஒன்றியத்தினூடே வாழ முடியாது எனும் சூழல் உருவாகுமாயின் தோழர்களே தமிழ்நாட்டின் விடுதலையைக் கோருவீர்களா?
கோரிக்கையை செவிமடுக்காத இந்திய ஒன்றியம் தனிநாடு கோரிக்கை எழுப்பும் தோழர்களை பிரிவினைவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்...
கைது செய்து சிறையில் அடைத்தாலும் தமிழ் நாட்டின் விடுதலையின் பொருட்டு அடுத்து தோழர்களே உங்கள் செயல் திட்டம் எதுவாக இருக்கும்?...
அறவழிப் போராட்டத்தின் வாயிலாகவே விடுதலைப் போர் நடத்துவது என்ற எண்ணம் கொண்டிருக்கிறீர்களா?...
இன்றையக் காலகட்டத்தை சிறுது மனதில் எண்ணிப் பாருங்கள்...
தூத்துக்குடி போராட்டத்தின் போதும், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்த்து நடக்கும் அறவழிப் போராட்டத்திலும் ஆர் எச்ஃ எச்ஃ பயங்கரவாதிகளின் செயல்பாட்டை கருத்தில் கொண்டீர்களா?...
ஏறக்குறைய திராவிட இயக்கம் தோன்றியக் காலகட்டத்தில்தான் ஆர் எச்ஃ எச்ஃ பயங்கரவாத அமைப்பும் தோன்றியது...
இவ்விரண்டில் ஆர் எச்ஃ எச்ஃ அமைப்பின் வளர்ச்சி கட்டுக்கோப்பு மிக்க இராணுவம் போன்று அதிவேக வளர்ச்சியைக் கொண்டுள்ளது...
ஆயுதம் ஏந்திய இராணுவம் போல் ஆர் எச் ஃ ஏச்ஃ வலுவாக வியாபித்திருப்பதை நம்மால் மறுக்கவியலுமா...
இந்த வளர்ச்சியானது இந்திய ஒன்றியத்தின் இராணுவத்திற்கும் தொல்லைத் தரக் கூடியதாய் மாறும் நிலை வரலாம்...
எவ்வாறெனில் ஆர் எச்ஃ எச் தனது பாசித்தை ஆழம் படுத்தும் முயற்சிக்கு இந்திய ஒன்றியத்தின் இராணுவம் முட்டுகட்டையாக இருக்குமேயாயின் ஒன்றியத்தின் இராணுவத்தோடும் மோதும் ஆயுதப் பயிற்சியை ஆர் எச்ஃ எச்ஃ கொண்டுள்ளது என்பதை நாட்டில் இப்போது நடைபெறும் போராட்டங்களின் போது ஆர் எச்ஃ எச்ஃ பயங்கரவாதிகள் ஏந்தும் துப்பாக்கிகள் நமக்கு பாடம் சொல்லுகின்றன...
இந்தப் பாடங்களில் நாம் கற்றுக் கொள்வது என்னவாக இருக்க வேண்டும் தோழர்களே...
தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்று அறவழியில் நாம் போராட்டம் நடத்துவோமாயின் நமது தற்காப்பு நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆர் எச்ஃ எச்ஃ தீர்மானிக்கிறது நமக்கு என்பதை உணர்வுக் கொள்க தோழர்களே
- அரங்க கனகராசன்
01022020
-------------------------------------------------------------------------------------


தஞ்சை குடமுழுக்கு
--------------------------------
தமிழ் மண்ணின் மைந்தர்களால் பேசப்படாததும், செத்துப் போனதுமான வடமொழியை -
இன்றளவும் பதினைட்டு கோடி மக்களால் பேசப்படுவதும், உயிர்ப்புடன் திகழ்வதுமான கன்னித் தமிழ் மொழிக்கு இணையாக சமநிலைத் தந்த மதுரை நீதியவையின் தீர்ப்பு தமிழ் மண்ணின் அவலத்தை காட்டுகிறது என்பதோடு தமிழனின் அடிமைநிலையை அம்பலம் படுத்தியுள்ளது எனில் மிகையன்று...

தமிழை நீசபாஷை என்று சொல்லும் வடமொழியின் பிணத்தை தமிழ் மண்ணிலிருந்து அப்புறம் படுத்தும் உரிமை தமிழனுக்கு இல்லையெனில் தமிழன் இந்திய ஒன்றியத்தின் அடிமையன்றி வேறேது சொல்ல...
அய்யா நீதிமான்களே, இந்த மண்ணுக்கு உறவற்ற வடமொழியை தமிழோடு சமநிலை படுத்தியவர்களே, இந்த மண்ணின் மக்களுக்கு ஓர் உதவிப் புரிவீர்களா...
தஞ்சை குடமுழுக்கின் போது ஓதப்படும் சமச்ஃகிருதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை ஒளிவின்றி வெளியிடச் செய்வீர்களா...
ஏனெனில் அந்த மொழி வக்கிரம் மற்றும் பாலியல் காட்சிகளை தன்னுள் கொண்டு செத்துக் கிடக்கிறது...
அந்த வக்கிரத்தையும் பாலியல் பலாத்காரம் காட்சியையும் இறைவன் புரிந்து புளகாங்கிதம் அடைகிறான் எனில் மக்களும் மகிழட்டுமே...
உதவுதல் செய்வீரா
-அரங்க கனகராசன்
31012020
-------------------------------------------------------------------------

செருப்படியும் செருப்பு மாலையும்
--------------------------------------------------

இராவணன் தங்கை காமவல்லி மீது காமம் கொள்கிறான் இராமன். காமவல்லி இராமனை எதிர்க்கிறாள்...
ஆத்திரமுற்ற இராமன் இலக்குவன் மூலம் காமவல்லியை அங்கசேதம் செய்கிறான். இத்தருணத்தில் சீதை :

சீதை:
சூத்திரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், விரசலர்கள், என்றும் இழிவானச் சொற்களால் தமிழ் மக்களை விளிக்கின்றீர்களே... உங்களால் இழிவானவர்களாகக் கருதப்படும் இவர்களதுப் பெண்களைக் கண்டு மோகிப்பது தர்மமோ?... சூத்திரச்சியை தீண்டுவது தீட்டாகாதோ?... பசிக்காக மலத்தையும் தின்பது சரியோ?...

இராமன் :
சூத்திரனது அழகிய பெண்களை, ஆரியர்கள் அனுபவிக்கலாம்... அழகிய சூத்திரப் பெண்கள் ஆரியர்களின் தாசிகள்!... தாசிகள் எங்களுக்கு இசைந்தே ஆக வேண்டும்!...

***இவனை செருப்பால் அடித்தால் என்ன? இவனுக்கு செருப்பு மாலை அணிவித்தால் என்ன?

நன்றி : நீயன்றோ அரக்கன்

24012020
------------------------------------------------------------------------------------------------------

கிழவன் ரசனியின் பேச்சு இலேசுப்பட்டதல்ல!
----------------------------------------------------------------------

காவிசாயத்தைக் கையில் தூக்கிக் கொண்டு மேடையேறும் கிழவன் ரசனியின் பின்புலம் சற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் ...

அந்தக் கிழவனின் இந்துமதவெறி எப்படிப்பட்டது எனில், மிகுவெறிக்கொண்ட பாசிசத்தின் தோன்றலாகவே புலனாகிறது...

தூத்துக்குடி மக்கள் தங்கள் மூச்சுக் காற்றுக்காக போராடியதை எள்ளியவன்தான் இந்த கிழவன் ரசனி!...

அந்த எள்ளலில் எத்தணித்த அகங்காரம் பசிசுட்டுகளுக்கே உரித்தானது!... 

பொதுவாக மக்கள் தம் வாழ்வாதாரம் - உரிமை - வேண்டிப் போராட்டம் நடத்திடின் பாசிசுட்டுகள் மக்களைக்  கொல்லவும் தயங்கமாட்டார்கள்...

போராடும் மக்களின் நியாயத்தை ஒருபோதும் செவிக் கொள்ளாத மிருகமாகவே கிழவன் ரசனி தன்னைக் காட்டிக் கொள்வதுண்டு...

அப்போது வெளிப்படும் கிழவன் ரசனியின் முகபாவம் கொடூர மிருகத்தின் குணத்தைக் காட்டும்...

அது பாசிசுட்டுகளுக்கே உரித்தானது...

ரசனியின் பேச்சு மற்றும் முகபாவத்தை ஒப்பிட்டு நோக்கும்போது மதவெறிக்கும்பலுக்கும் அவருக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கலாம் என்றே தெரிகிறது...

தூத்துக்குடி மக்கள் கொலையில் ரசனியின் பங்கு உள்ளதா  என்பதை அறிய நல்லதோர் ஆய்வுக்குழு அமைந்திடின் நல்லது...

அதேபோல், டில்லி பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்துத் தாக்குதல் நடத்திய இந்துமதவெறிக் கும்பலோடு கிழவன் ரசனிக்கு  பிணைப்பு உண்டா என்று அறிதல் அவசியம்...

கிழவன் ரசனியின் போயஸ் தோட்டத்தில் இந்துமத தீவிரவாதிகளின் முகாம் உள்ளதா என்பதும் அறிதல் நாட்டுக்கு நல்லது...        

ஏனெனில், கிழவன் ரசனியின் பேச்சு இலேசுப்பட்டதாக - மேம்போக்கானதாக - தெரியவில்லை!...

 விபரீதத்தின் விதையாய் விளைந்திட கிழவன் ரசனி முனைவதற்கு முன் தமிழ்நிலம் காப்பாற்றப்படவேண்டும்   

 தமிழகமும் - தமிழ்ப் பண்பாடும் - அழிந்திடாதிருக்க கிழவன் ரசனியின் உள்நோக்கத்தை தமிழர் அறிந்திட செய்திடல் வேண்டியக் கடன் பெரியார் மண்ணுக்கு உண்டு!...
- அரங்க கனகராசன்.

22012020
---------------------------------------------------------------------

இது இந்தியா அல்ல  
------------------------------

சேரர், சோழர், பாண்டியர் காலத்தை சற்றே நினைவில் இருந்து திரையிட்டு வைப்போம்...

அண்மைக்கால அரசியல் நுழைவுக்குள் நுழைந்து தேடுதல் செய்வோம்.

1. தமிழ்நாடு 
2. புதுவை 
3. கேரளா 
4. லட்சத்தீவுகள் 
5. அந்தமான் தீவுகள் 
6. ஆந்திரா 
7. கர்நாடகம் 
8. தெலுங்கானா 
9. சட்டீசுகர் 
10. மராட்டியம் 
11. குசராத் 
12. மத்தியபிரதேசம் 
13. ஒரிசா 
14. ஜார்கண்ட் 
15. மேற்குவங்கம் 
16. திரிபுரா 
17. மிசோரம் 
18. மணிப்பூர் 
19. நாகாலாந்து 
20. அருணாசல பிரதேசம் 
21. அசாம் 
22. பீகார் 
23. சிக்கிம் 
24. உத்தரபிரதேசம் 
25. ராசத்தான் 
26. டெல்லி 
27. அரியானா 
28. உத்திரகான்ட் 
29. பஞ்சாப் 
30. இமாச்சலப்பிரதேசம் 
31. ஜம்மு காசுமீர்     

* இப்படி பல நாடுகளும் - இதில் உட்பட்ட பல சிற்றரசுகளும் - எப்போது ஒன்று கூடினார்கள்?
* ஒன்றுகூடி தத்தமது அரசுகளை கலைத்துவிட்டு ஒரேதேசமாக இயங்க எப்போது முடிவெத்தார்கள்.
* ஒரே தேசமாக்கி அதற்கு எப்போது இந்தியா என்று பெயர் சூட்டி ஒப்புதல் கையொப்பம் இட்டிருந்தால் அந்த ஆவணம் எங்கே?

இதற்கு விடைத் தெரியாமல் இந்தியா ஒரேதேசம் என்றுக் கூறுவதை ஏற்க முடியாது.

இந்தியா என்ற பெயரில், பார்ப்பனர்கள் பல தேசங்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதன்றி, வேறு விடை என்ன?


-அரங்க கனகராசன்.
25122019
--------------------------------------------------------------------------------------


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
------------------------------------------------------
புதிய தேசிய குடியுரிமைச் சட்டம் என்பது முழுக்க முழுக்க பாசிசத்தின் கோட்பாடு.

கைபர் கணவாய் வழியே நுழைந்த ஆரியர்களுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் அவர்கள் நாடோடிகள் என்ற நிலையில் இருந்து உயரவில்லை.
என்னதான் அரசின் உயர்பதவிகளில் அதிகாரத்தை கையில் கொண்டிருந்தாலும் பார்ப்பனர்கள் தங்களுக்கென ஒரு நாடற்ற நாடோடிகளாவே இருக்கின்றனர் என்பது பார்ப்பனர்களாலும் மறுக்கவியலா உண்மை...
ஆதலால் ஏதுமறியா அப்பாவி மக்களை ஒன்றுத் திரட்டி இந்து என்ற கூடாரத்தை வனைத்து அதற்குள் அடைத்து - அதனுள் ஆரியர்களும் அடைக்கலமாகி யுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
நாடோடிகளாம் ஆரியர்கள் நிரந்தரமாக வாழ ஒரு நிலம் தேவைப்படுகிறது.
சிந்திப்பதிலும் கல்வியிலும் அஞ்சுவதிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடநாடு இப்போது ஆரியர்களின் சதிப் பின்னலில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறது...
ஆரியர்களின் மாயைக்கு இடையூறாய்த் திகழ்பவர்கள் தமிழர்கள் மட்டுமே ... தமிழர்கள் மட்டுமே என்பதில் கிருத்துவர்களும் , இசுலாமியர்களும் அடங்குவர்...
ஆரியநாடோடிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமையவிருக்கும் இந்து நாட்டை நிர்மாணிக்க எதையும் இழக்கத் தயங்கமாட்டார்கள்...
இங்கே இழக்கத் தயங்கமாட்டார்கள் என்பதனை தமிழ் மக்கள் தவறாகப் புரிதல் கொள்ளக் கூடாது...
இந்து நாடு அமைய தமிழ்நாடு தடையாய் இருப்பது அவர்களுக்குத் தெரியும்...
தடையாய் இருப்பதை வெட்டிவிட்டால் தடங்கலினறி இராம ராச்சியத்தை அமைத்துவிடலாம் என்பது ஆரியர்களின் சதித் திட்டங்களில் ஒன்று.
இங்கே வெட்டி வெடுதல் என்று ஆரியர்கள் பேசுவது தமிழ்நாட்டை தனியாகப் பிரித்து நம்மிடம் கொடுத்துவிட்டு இந்து நாடு என்ற பெயரில் ஆரியநாடோடிகள் வடநாட்டை தம்வசமாக்கிட விரும்புகிறார்கள் என்று தப்புக் கணக்குப் போடாதே தமிழா!...
ஆரியர்கள பாசிஃசுட்டுகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் தமிழர்களே.
கனிம வளம் இயற்கை வளம் மிக்க தமிழ்நாட்டை அவ்வளவு எளிதாக இந்திய ஒன்றியத்திலிருநது விடுவிக்க மாட்டார்கள்...
அதே நேரம் இந்து தேசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை க் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை சும்மா விட்டுவிடமாட்டார்கள்...
இரண்டாம் உலகப்போரில் மக்களை நச்சு புகையேற்றிக் கொன்ற ஹிட்லரின் வரலாறும், 2009 இறுதி யுத்தத்தின் போது கொத்து குண்டுகளை வீசி குவியல் குவியலாக தமிழ்மக்களை ஈழத்தில் கொன்ற வரலாறும் நினைவில் கொள்ளுங்கள்..
பாசிஃசுட்டுகள் தமிழர்கள் குடிக்கும் நீரிலும், உண்ணும் உணவில் கவனம் செலுத்துவார்கள்...
தமிழ்மக்கள் ஒருங்கே குழுமும் இடங்களில் ஊடுருவுவார்கள்
மருத்துவமனையையும் சாதகமாக்கி கொலைக்களம் ஆக்கிடுவார்கள் ...
தமிழ்மக்களின் இன அழிப்பில் தான் ஆரியர்கள் இந்து தேசம் காண விழைவார்களேயனறி --
தமிழ்நாட்டை நம்மிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு இந்து நாட்டை நிராமாணிப்பார்கள் ஆரியர்கள் என்று தமிழா தவறாய்க் கருத்தில் கொண்டுவிடாதே...
போராடாமல் விடுதலையில்லை என்பதை நினைவில் கொண்டு ஆரிய சூதினை வெல்லும் திறன் பெற்று தீரமோடு இருந்தால் தமிழ்நாடு தமிழருக்கே
11202019
-----------------------------------------------------------------------------------

குறள் மதம்
-----------------
இந்தியாவின் உள்துறை அமைச்சர் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.
தமிழர்கள் இந்துக்கள் இல்லையாம்.

ஆனால் ; தமிழ் நாட்டில் உள்ள சங்கிகள் தமிழ் மக்கள் மீது இந்து எனும் சாயத்தை பூச முயல்கிறார்கள்.
அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பது அவர்களுக்கு புரிய வைப்பது நமது கடமையல்லவா...
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் படிவங்கள் பதிவுச் செய்யும் போது தமிழ் மக்கள் தம்மை குறள் மதம் அல்லது நாத்திகம் என்று பதிவிட செய்யுங்கள்...
குறள் மதத்துக்கும் நாத்திகத்திற்கும் வேறுபாடு இல்லை.
ஆதலால் நமது பதிவிடுதல் சங்கிகளுக்கும் இந்திய அரசுக்கும் நல்புரிதலை நல்கும்
09122019
------------------------------------------------------------------------------------------------------------------------

மேட்டுப்பாளையம் கூறுவது என்ன
-------------------------------------------------------
நிலைக்குலைந்து உயிர்த் துடிக்க சவமான பதினேழு பேரும் இந்நாட்டுக் குடிகள்தானே...
இறந்தவர்கள்பால் கண்ணீர் சிந்தினால் , கசிந்துருகினால் தீதென்பதுவோ இந்நாட்டின் சட்டம்...
கற்றோர் மிக்க நாடன்றோ தமிழ்நாடு!
கதறும் கூட்டத்தார்க்கு கனிவும், நல் ஆறுதலும் மொழிந்திட வேண்டிய காவல்துறை கால் கொண்டு மிதித்து, தடியாட்டம் நடத்தியிருக்கிறது எனில் 'காவல் துறை' எவனுடைய நண்பன் என்ற கேள்வியை மேட்டுப்பாளையம் முன் வைக்கிறது...
கூறுங்கள் தமிழ்மக்களே...
காவல்துறை எவனுக்கு நண்பன்...
மேட்டுப்பாளையத்தின் கேள்விக்கு விடைத் தேடிடுங்கள் தமிழ் இளைஞர்களே...
அடிப்பவன் நண்பனெனில் நன்மைக்கென அறிவோம்
எதிரியாய் ஒருவன் ஓங்கி வருகிறான் எனில் மிருகமாய் நாம் மாறுவதில் தவறுண்டோ என்ற வினாவினைத் தொடுத்திருக்கிறது மேட்டுப்பாளையம்...
- அரங்க கனகராசன்
03122019
--------------------------------------------------------------------------------------

நான் பார்பனன் பேசறேன்
--------------------------------------
எனது ஜனனம் பிரம்மனின் நெற்றியில் நடந்தது
நானே கடவுளின் பிரதிநிதி.
என் மூலமாகத்தான் ஆண்டவனை வழிப்பட வேண்டும்
ஆலயத்தில் ஆயக் கலைகள் அறுபதை செதுக்கச் சொல்லி மன்னர்களின் மனதை ஈர்த்தவன் நான்...
நானே கோயிலின் அதிபதி.
கோயிலுக்கு வரும் சூத்திரச்சிகளின் கன்னத்தில் அறைவேன்.
காலாலும் எட்டி உதைப்பேன்
காரியும் உமிழ்வேன்...
கற்பழிப்பும் கோயிலுக்குள் நடத்துவேன்...
கற்சிலைகளைத் திருடி காசும் பார்ப்பேன்...
இதுபற்றியெல்லாம் கேள்விக் கேட்காமல் தமிழர்கள் கோயிலுக்கு வந்து என்னை சுவாமி என்று பயபக்தியோடு விளிப்பார்கள்
மந்திரம் சொல்லி பூசைச் செய்யுங்கள் என்று என்னிடம் தமிழனும் தமிழச்சியும் கெஞ்சுவார்கள்...
பார்ப்பனனாகிய நான் தமிழச்சியை தேவடியா என்றும் தமிழனை தேவடியா மகன் என்றும் சமசுகிருதத்தில் தீயவசை மொழி ஓதுவேன்
இதன் பொருள் புரிந்தாலும் தமிழர்கள் சூடு சுரணை ஏதுமின்றி கோயிலுக்கு வருவார்கள் என் மூலமாக வழிப்பட!
17112019
----------------------------------------------------------------------------------------
வருமா? வராதா?
---------------------------
வெள்ளையன் காலத்தில் "வெள்ளையனே வெளியேறு " முழக்கம் பிறந்தது.

பார்ப்பனர் ஆதிக்கம் வேரூண்றல் அதிகரித்துள்ள இன்றையக் காலத்தில் "பார்ப்பானனே வெளியேறு " எனும் முழக்கம் தமிழரிடையே வருமா? வராதா?
17112019
------------------------------------------------------------------------------------------------------------------

#சுஜித் சில கேள்விகள்
பேரிடரின் போது உடனடியாக வந்து சேர வேண்டிய பேரிடர் குழுவை 20 மணி நேரம் தாமதம் படுத்தியது யார்
மீட்புத் துறையில் அனுபவம் கொண்ட உள்ளூர் மக்களைத் தடுத்தது யார்

பேரிடர் மீட்பு குழு கையறு நிலையில் அனுப்பப் பட்டது ஏன்
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் யாரிடம் இருந்தது
ஒன்றில் தோல்வி ஏற்பட்டப் பிறகே அடுத்த நகர்வுக்கான உத்தரவு தாமதமாக யாரால் எங்கிருந்து வழங்கப்பட்டது
போதிய மீட்பு கருவிகள் இல்லை என்றுத் தெரிந்தும் வெளிநாட்டின் உதவி கோரப்படாததேன்
அரசிடம் மீட்புக் கருவி உத்தி ஏதுமற்ற நிலையில் மீட்பு குறித்த அனுபவம் கொண்டிருந்த உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்க மறுத்தது ஏன்
ஊரே சுஜித் அல்லது சுர்ஜித் என்று அடையாம் படுத்தியிருக்க முதல்வர் மற்றும் பிரதமர் பதிவுகள் மட்டும் சுர்ஜித் வில்சன் என்ற அழுத்தத்தோடு இருந்தது ஏன்?
மக்கள் மனதின் இந்தக் கேள்விக்களுக்கு விடை வேண்டும்
29102019
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இல்லாத கடவுள் 
------------------------
இல்லாத கடவுளை வேண்டி நேரத்தை வீணாக்காதீர்கள்.
அதற்கு மாற்றாய் குழந்தை மீட்பு குறித்து சிந்தித்து ஆலோசனை வழங்குக
280102019
------------------------------------------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------
இந்திய நாடு வல்லரசு நாடு என்பதில் நீங்கள் மிக ஆனந்தம் கொள்வீர்கள்.
இந்துக்களின் அதி அற்புதம் நிறைந்த தீபாவளியை நீங்கள் இராணுவ வீரர்களோடு சேர்ந்து இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதிலிருந்தே தீபாவளியின் பால் நீங்கள் கொண்டிருக்கும் உங்களின் மகத்தான உணர்வைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

நன்றாக இனிப்பை உண்டு உங்கள் தீபாவளியை நீங்கள் கொண்டாட உங்களுக்கு முழு உரிமையுண்டு...
ஆனால் ; அதே நேரத்தில் எங்கள் தமிழ்நாட்டில் இரண்டு வயது பிஞ்சுக் குழந்தை ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணத்தோடு போராடிக் கொண்டிருப்பது, உங்களுக்குத் தெரிந்திருந்தப் போதிலும் இந்த நிலையில் குழந்தையின் குடும்பத்தார்க்கு நீங்கள் வாய்த் திறந்து ஓர் ஆறுதல் மொழிச் சொன்னாலும், ஆறுதல் சொல்லும் போது நாவில் திரளும் தீபாவளி இனிப்பின் சுவையை உணர முடியாமல் உங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்றுக் கருதி நீங்கள் ஆறுதல் கூறத் தயங்குகிறீர்கள் என்று தமிழர்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
நீங்கள் மாட்டின் மீது அதிக நேசம் கொண்டிருப்பவர்.
உங்களிடத்தில் மனிதக் குழந்தைக் குறித்து கோரிக்கை வைப்பது சரியல்ல என்றாலும்,
இந்த நேரத்தில் - அதாவது இராணுவ வீர்களோடு இனிப்பருந்தி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் -
இராணுவத்தில் ஏதும் தொழில் நுட்பம் உள்ளதா குழாயிலிருந்து குழந்தையை மீட்க என்று இந்தியாவின் வல்லரசு இராணுவத்திடம் கேட்டுப் பாருங்கள்...
ஏனெனில் நாங்கள் தனிநாடாக இருந்திருந்தால் வெட்டிப் பேச்சுக்கு இடந்தராமல் தொழிற் நுட்பத்தில் பல வெற்றிகளைக் குவித்திருப்போம் என்பது உங்களுக்கேத் தெரியும்.
ஆதிகாரம் அற்ற நிலையிலும் கோவை மக்கள் தொழிற் நுட்பத்தில் ஓரளவு சிறந்து விளங்குகிறார்கள். இப்போது அது பேசுவது சரியல்ல
ஆயினும் நீங்கள் மனது வைத்தால் இந்தியாவின் வல்லரசு ராணுவத்திடமோ வேறு நாட்டிடமோ தொழில் உதவிப் பெற்று குழந்தையைக் காப்பாற்ற உதவுங்கள்.
குழந்தையின் அருமை குழந்தையைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியும் என்று சமஸ்கிருதம் சொல்லவில்லையா அன்பு மோடி அவர்களே
28102019
-----------------------------------------------------------------------------------------------------------------------


இதுதான் டிஜிட்டல் இந்தியா வா
குழியில் விழுந்தக் குழந்தையை மீட்க, நுட்பம் அறியாத நாட்டில் கோடானுக் கோடிக் கடவுள்கள்.
இந்த கடவுள்களின் பேரில் ஒரு மதம்.
இந்த மதத்தின் பேரில் பசுக் காவலர்கள்
இவர்களை வழி நடத்துவதற்கென்று அதி வல்லமை மிகுந்த மொழியாம். அதுவும் தேவ மொழியாம் . நெற்றியில் பிறந்தவன்களின் மொழியாம்
ஒரு மயிருக்கும் உதவாதது.... த்தூ...
26102019
------------------------------------------------------------------------------------


நாங்குநேரி விக்கிரவாண்டி தரும் பாடம் என்ன?
-----------------------------------------------------
பணத்தைக் கொடுத்து வாக்கினை வாங்கி, பதவியைப் பிடித்து மீண்டும் மக்கள் நலனை புறக்கணித்தாலும் மக்கள் ஆட்சியாளர் மீது வெறுப்புக் கொள்ள மாட்டார்கள்

திமுக தரம் பார்த்து வாக்கு ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கியதாம்
அதிமுக பாரபட்சமின்றி வாக்குரிமையுள்ள அனைவருக்கும் வாக்கு ஒன்றுக்கு தலா ஈராயிரம் வழங்கியதாம்
நாடு சுடுகாடு ஆனாலும் கவலையில்லை. எந்த அயோக்கியன் அதிகமாக பணம் கொடுக்கிறானோ அவனுக்கே தமது நன்றிக் கடன் செலுத்தியுள்ளனராம் விக்கிர நாங்கிகள்...
பார்ப்பனர்களின் ஆட்டுவிப்பில் ஆடும் ஆணையமும் பாசிசத்தின் பக்கம் சார்ந்து நன்றே ஆடுகிறதாம்...
வாக்கு எந்திரம் நன்றாகவே பயன்படுத்தப் படுகிறது.
அது சரி...
இது குறித்து நாம் ஏன் கவலைப் பட வேண்டும்...
வாக்கு அரசியலை முன்னெடுத்து இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ் மண் மீட்டெடுக்க முடியும் என்று மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் அல்லவா கவலையுறல் வேண்டும்...
தமிழ்ப் பற்றாளர்களுக்கு ஓர் கடன் உளது.
பணத்தை வாங்கிக் கொண்டு பாசிசவாதிகளுக்கு வாக்களிக்கும் வாக்களர்களை இனம் கண்டு நடுத் தெருவில் நிறுத்தி நல்லோர் முன்னிலையில் நல்லதோர் வினையாற்றிடல் வேண்டும்..
ஏனெனில் இவர்கள் தமிழ் மண் தமிழ் உரிமை மீட்பின் தடைக் கற்கள் ஆவர்.
- அரங்க கனகராசன்
24102019
-----------------------------------------------------------------------------------------------------

வைகோ எனும் மாமனிதர்
-----------------------------------------
சீமானின் பேச்சுக்கள் குறித்த விவாதம் பொதுவெளிக்கு உகந்தவையல்ல என்பது எனதுக் கருத்து.
ராஜேந்திர பாலாஜி போன்றவர்களும் ஏசும் அளவுக்குத்தான் சீமானின் மனமுதிர்ச்சி என்றும் நான் கூறமாட்டேன் ...
அவர் யாருடைய மனமகிழ்வுக்காக கூலியாய் கூவுகிறார் என்று சிலர் வினாத் தொடுப்பதுக் குறித்தும் அவரிடம் எனக்கு வினா இல்லை...
இன்று ராசிவ் காந்தி குறித்து அவர் பேசியது வெறும் கை தட்டலுக்காகவா என்றும் கேட்கப் போவதில்லை..
ஆனால் ,அவருடைய பேச்சால் விடுதலைப் புலிகளின் போராட்டம் நோக்கம் களங்கமாகும் எனபதை அவர் நினைத்துப் பார்த்தாரா இல்லையா எனும் வினாவுக்கான விடையை அவரிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை.
ஏனெனில் -
யார் யார் தமிழர் என்ற பரிசோதனை கூடத்தின் எசமானரான சீமான் சரியான புரிதல் அற்றவர் என்று அவரைப் புறந்தள்ளிட முடியாது...
தமிழன் என்ற பிறப்பு திட்டமிட்ட ஒன்றல்ல...
தமிழைப் பாவித்த கால்டுவெல்லை செல்லக் குழந்தையாய் ஏற்றுக் கொண்டது தமிழ் என்பதனை பாருக்கு வரலாறுக் கூறும்...
இன்று மேடையேறி முறுக்கி முழங்குவதால் மட்டும் ஈழமக்களின் பேராதவாளன் என்று சீமானை தமிழ்க் கூர் நல்லுலகு ஏற்றுக் கொண்டுவிடும் என்று சீமான் முனைந்தால் அது பித்தலாட்டம் என்பதை வரலாறு வரிந்துக் வந்து கட்டியம் கூறும்...
ஏனெனில் வைகோ எனும் மாமனிதர் ஈழத்திற்கு ஆற்றியப் பணியை ஒருபோதும் வரலாற்றிலிருந்து நீக்க முடியாது...
சீமான் அவர்களே நீங்கள் முறுக்கி முழங்குவதால் வரலாற்றின் உண்மையை ஊமையாக்கிடக் முடியும் என்று நீங்கள் எவரிடம் பாடம் கற்றீர்கள் என்பதே நான் உங்கள் முன் வைக்கும் வினா ...
- அரங்க கனகராசன்
16102019
----------------------------------------------------------------------------------


தூக்கி எறிக சரசுவதியை!
தூக்கிக் காட்டுங்கள் கீழடிச் சுவடுகளை!
-------------------------------------------
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் திருமணம் நடந்ததாம்...

அப்போது பிரமன் என்பவன் புரோகிதராக திருமணம் நடத்தி வைக்க வந்தானாம்
தீச்சட்டியை மணமக்கள் வலம் வருகையில்-
பிரம்மனின் பார்வைக்கு பார்வதியின் தொடைத் தெரிந்ததாம்...
அடுத்தவனுக்கு மனைவியாக போகும் பார்வதியின் தொடையழகில் மயங்கிய புரோகிதன் பிரமன், திருமண வேலையை விட்டுவிட்டு சுய இச்சையில் ஈடுபட்டானாம்...
அப்போது பீய்ச்சி அடித்த அவனது உயிர் அணு குளத்து தாமரையில் விழ-
சரசுவதி என்பாள் பிறந்தாளாம்...
அவன் உயிரணுவில் பிறந்தவள் அவனுக்கு மகள்தானே ஆவாள்...
பிரமனோ, சரசுவதியைப் புணர்ந்து மனைவியாக்கிக் கொண்டானாம்...
பின்னர் அவளும் கல்விக்கே கடவுள் ஆக்கப்பட்டாளாம்...
கல்விக்கெனக் கடவுள் இருந்தும் நமது தாத்தன், தாத்தி, பூட்டன், பூட்டி என எவருக்கும் இந்த சரசுவதியால் கல்வியைத் தரமுடியவில்லை.
கடவுளால் செய்ய இயலாததை என்பதை விட, கடவுள்கள் என்ற புளுகு மூட்டைகள் அவிழ்க்கப் படுதற்கு முன்னரே-
அதாவது கடவுள் என்ற கற்பிதங்கள் கற்பிக்கப் படுவதற்கு முன்னரே -
பிற மக்கள் மொழியை அறிவதற்கு முன்னரே -
தமிழன் பேசவும், கற்கவும் தெரிந்திருந்தான்....
தமிழன் கல்விக்கென சரசுவதி எனும் கற்பனை கற்பிதத்தை அறிந்திருந்ததாகவோ, வணங்கியதாகவோ எந்தத் தடயமும் கீழடித் தரவில்லை நமக்கு...
ஆதலால் இந்தக் கடவுள் என்பதெல்லாம் ஆரியன் வருகைக்குப் பின்னர் ஆரியனால் அவிழ்க்கப் பட்ட புளுகு மூட்டைகள் என்பதுத் தெளிவாகிறது...
ஆதலால் தமிழ் மக்களே, தமிழன் எனும் மானவுணர்வு உங்களில் எல்லாருக்கும் இருக்க வேணடும்...
மானவுணர்வு மிகுந்த தமிழர்காள் கீழடியின் முரசு உங்கள் செவிகளில் உரசட்டும்...
உரசலில் பிறக்கும் நெருப்புப் பொறியில் சரசுவதிகளும், ஆயுதப் பூசைகளும் சாம்பலாகட்டும்...
ஆம்; தமிழா சரசுவதியும் , ஆயுதப் பூசையும் நமக்கானதல்ல!
அதனால் அறிவியல் சார்ந்தப் பலனேதுமில்லை...
தூக்கி எறிக சரசுவதியை!
தூக்கிக் காட்டுங்கள் கீழடிச் சுவடுகளை!
-அரங்க கனகராசன்
06102019
------------------------------------------------------------------------------------------------

அன்பிற்கினிய தமிழ்மக்களே!


குறள் மதம் 
(தமிழர் அறஞ்சார் நெறியம்)
(தமிழ் மக்களின் வேலி)

உங்களைத்  தமிழர் என்றுக் கூறிட பெருமைக் கொள்கிறீர்கள்...
அதே வேளையில், தான் இந்துவல்ல என்று கூறிட ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறீர்கள் என விளங்கவில்லை...

குறள் மதம் என்பது தமிழ்மக்களின் வேலியாகும்!

குறள்  மதம் என்பது தமிழரின் அடையாளமதனை காக்கும் கருவியாகும்!...

உங்களில் பெருமைக் கொள்ளுங்கள் தமிழராய்ப் பிறந்தமையின் பொருட்டு!..

உங்களில் வேதனைப் படுங்கள் உங்கள் மீது திணிக்கப்பட்ட இந்து எனும் சொல் குறித்து!...

இந்த எண்ணம் உங்களிடம் மேலோங்குமாயின்   குறள் மதம் 
(தமிழர் அறஞ்சார் நெறியம்)
(தமிழ் மக்களின் வேலி) குழுவில் இணைய, குழுவின் வினாக்களுக்கு விடைப் பகர்தல் அவசியமாகும்...

இந்து அல்ல என்றுகூறிட அச்சம் கொள்வீராயின், குழுவில் இணைய இசைவு அனுப்ப வேண்டா!...

குழுவின் வினாக்களுக்கு விடைப் பகர்வோர் மட்டுமே குறள்மதம் குழுதனில் இணைக்கப்படுவர்...

மேலும்;
குழுவில் இணைக்கப்பட்ட தோழர்கள்-
குறள் மதம் தமிழர்க்கு ஏன் அவசியம் என்ற கருத்தியலையும், இந்து என்பது அவமானத்தின் சின்னம் எனும் விவரணையுடன் கூடியப் பதிவுகளையும் இட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

தமிழ் மக்களிடையே அரசியல் வேறுபாடு இருப்பினும், அரசியலுக்கு அப்பாற்பட்ட வேலியாய் குறள் மதம் விளங்கிட யாவரின் ஆதரவையும் கோருகிறேன்...
-நிர்வாகி 
குறள்மதம்     

 13092019
--------------------------------------------------------------------------

உயிரோடு அடக்கம்
------------------------------
சிவகங்கையில்-
ஒருவன் தான் உயிருடன் புதைகுழியில் அடக்கம் ஆவதாக கூறுகிறான்... அவன் சாவைக் காண கூடும் கூட்டமே உங்களில் யாருக்கும் இரக்கம் இல்லையோ...

இந்த அறிவிலிகளை அரசாங்மும் வேடிக்கை காண்பதுதான் பெரும் வேதனை!...
12092019
-----------------------------------------------------------

என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் தமிழா
--------------------------------------------------------
ஒரு மாநில முதல்வர் அமெரிக்கா போய் வருகிறேன் என்றச் சாக்கில் மாட்டுத் தொழுவம் செல்கிறார்....
ஒரு ஒன்றியத்தின் பிரதமரும் மாட்டுத் தொழுவத்தில் பசுவின் பெருமைப் பற்றி பாடம் நடத்துகிறார்...
என்ன நடக்கிறது நாட்டில்?
பாசிசத்தின் கூர்வாள் உங்கள் கழுத்தைத் தொடு நெருக்கத்தில் இருப்பதை தமிழர்களே நீங்கள் உணரவில்லையா?
காசுமீரத்தின் ஓலம் நாளை தமிழ் மண்ணிலும் எழும்புமா? மாட்டாதா?
கண்ணெதிரில் பல இலட்சம் பணியாட்களின் பணிப் பிடுங்கப்பட்டு விட்டது..
அவர்களின் குடும்பத்தின் ஒப்பாரி இன்னும் விரிவடையும்....
இதில் அதிகம் கதறலுக்கு உள்ளான கோவை மக்களின் கண்ணீர் சிறுவாணியையும் மிஞ்சி விடும் போலிருக்கிறது...
வேலையில்லா அவலம்...
அதேநேரம் சிஃ எஃசு டியின் (gst யின் ) இரக்கமற்றக் கோரத் தாண்டவம் ஆழிப்பேரலைப் போல!
பொருளாதார வீழ்ச்சி எரிதழல் போல் நாட்டைப் பொசுக்கிடுமோ என்று குடிமக்கள் அஞ்சி ஒடுங்குகிறார்கள்...
இந்நிலையில் -
நாட்டில் இன்னல் எதுவுமே இல்லை என்பதுப் போல் மாயபிம்பத்தை உண்டாக்கி மாட்டுத் தொழுவத்தில் நின்று மூத்திரத்தை முகரச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பலை வேடிக்கைப் பார்க்கவோ நீ இருக்கிறாய் தமிழா!...
தொழில் முதலீட்டில் உண்மையாகவே அக்கறை இருப்பின் எடப்பாடி அடிமை யாது செய்திருக்க வேண்டும்....
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடியின் முயற்சியைக் கிள்ளியெறிந்து தமிழ்நாடு அரசு அதனைக் கையகம் படுத்தியிருக்க வேண்டுமல்லவா...
நெய்வேலியின் வருவாய் தமிழ் நாட்டின் ஆண்டு வருவாயைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம்...
நமது நிலம்... நமது நிலக்கரி... ஆனால் தமிழனுக்கு துளியும் ஆதாயமில்லை ..
அங்குப் பணிப்புரிவோரில் பெரும்பாலும் வடநாட்டு பொறியாளர்கள்...
நெய்வேலி ஆலை ஒன்று போதும்...
தமிழர்கள் எல்லாருக்கும் கல்வி - மருத்துவம் - குடியிருப்பு ஆகியன தரமாக இலவசமாக வழங்கி வேலை வாய்ப்பையும் பெரூக்கிடும்
இப்படி பொன்முட்டையிடும் நெய்வேலியை தமிழ்நாடு அரசுக் கைப்பற்றிடாமல் ஊர்ப் பணத்தில் மாட்டுத் தொழுவத்தை சுற்றிவிட்டு வரும் பொய்யர்களிள் புழுகினை உடைத்தெறிந்து தமிழ்மண் தமிழ் கனிமம் மீட்டெடுக்க முனையாமல் ஊமையாய் இருப்பது ஏனடா தமிழா
11092019
-----------------------------------------------------------------------------------

தமிழன் இந்தியன் அல்லன்
------------------------------------------

பாவலரேறு தமிழ்க் களம் நடாத்திய, மொழித் தேசங்களின் சட்டவியல் கருத்தரங்கம் போன்று தமிழகமெங்கும் வீதி தோறும், பகுதி தோறும் திங்கள் தோறும் நடாத்திடல் தமிழ் தேசிய இனத்திற்கு நன்றி பயக்கும்...
நாம் இந்தியர் அன்று¡ தமிழ் தேசிய இனத்தவர் என்பதை தமிழ்ச் சிறார் அறிந்திட தமிழ் இளைஞர்காள் பாசறைச் செய்மின் 
25082019
---------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் வசிக்கும் தகுதியை இழந்த கமல்காஃசன்
--------------------------------
தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழச்சி ஒருத்தி காவிரிநீர்க் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப் படுத்துகிறார்
காவிரிக் குறித்து தமிழச்சிப் பேசக்கூடாது என்று கூறி கன்னடக்காரி தமிழச்சியை தற்கொலைக்குத் தூண்டுகிறாள்...
கன்னடக்காரியை கண்டிக்க வக்கற்ற கமலகாஃசன் கன்னடக்காரியை தலைவியாக்கி அழகுச் செய்கிறார்...
அந்த கன்னடக்காரிக்கு அவள் பிறந்த கர்நாடகமண்ணில் பாராட்டு மழைக் குவிகிறது
கமல்காசன் கூத்தாடியே தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் அருகதையும் உனக்குண்டோ?...
21082019
-------------------------------------------------------------------------------------

பெரியாரும் - பிரபாகரனும் 
----------------------------------------
இந்த நூற்றாண்டின் தமிழினத்தின் இணையற்ற இருதலைவரர்களில் ஒருவர் பெரியார் மற்றொருவர் மேதகு பிரபாகரன்
18082019
-----------------------------------------------------

எடியூரப்பவும்  இச்ஃடாலினும் 
----------------------------------------------

என்னதான் அகங்காரம் கொண்ட - காழ்ப்புணர்வு நிறைந்த அரசியலை, செயலலிதா நடத்தியிருந்தாலும். அவர் தன்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தவராக இருந்தார்...

தன்னை அறிவாளியாக பாவித்துக் கொண்டதோடு, தன்னைச்சுற்றிலும் துளியும் அறிவாளிகளுக்கு இடந்தராமல் பார்த்துக்கொண்டார்...

அறிவாளிகளுக்கு இடந்தந்தால்-
அவர்கள் வினாத்தொடுப்பார்கள் அல்லவா...

பிறரின்  வினாத் தொடுப்பை செயலலிதா துளியும் விரும்புவதில்லை...

அதனால்தான், தனது அமைச்சரவையில் கூட-
மக்குகளுக்கும்,  மண்ணுருண்டைகளுக்கும், மடையன்களுக்கும், முட்டாள்களுக்கும், பேதைகளுக்கும் மட்டுமே இடம் அளித்திருந்தார்...

இந்த உண்மை அவரின் மறைவுக்குப்பின்-
உலகிற்கு வெளிச்சம் ஆனது...

இப்படி-
மக்குகளையும் மண்ணுருண்டைகளையும் கொண்ட அமைச்சரவையை கவிழ்க்கவும்கூட முடியாத   ஞானமற்ற சூனியம் தாம் என்பதை ஸ்டாலின் நிலைப் படுத்திவிட்டார்...

கர்நாடகாவில்-
தேர்ந்த அரசியல்வாதியையே ஆட்டம் காணவிட்ட எடியூரப்பாவோடு ஒப்பிடுகையில் ஸ்டாலின் அரசியலில் இன்னமும் கற்றுக்குட்டிதான்!...

தமிழ்நாட்டில் உள்ள அடிமைகள் எடியூரப்பா போன்ற அரசியல்வாதிகளிடம் சிக்கியிருந்தால், நைந்து போயிருப்பார்கள் என்பது மட்டும் திண்ணம்!...  
24072019
--------------------------------------------------------------------------------------------------


அடிமையோ தமிழன்
---------------------------------
நம் கண்ணெதிரில் நம் தமிழினம் கொல்லப்படும் போது தமிழர்களாகிய நாம் வேதனையுறுகிறோம். துடிக்கிறோம்... ஓவென கதறுகிறோம்...
நம் இனத்தைக் காக்கத் துடிக்கிறோம்... காக்கும் வழியைத் தேடுகிறோம் ..
இது இயற்கையான உணர்வு.
"உன் தமிழினம் தாக்கப் பட்டாலும், கொல்லப் பட்டாலும் நீ உன் உணர்வை வெளிப்படுத்தாமல் ஊமையாயிரு... மீறினால் தேச துரோகம் செய்தவனாவாய் " இந்தியா' நம்மை சட்டங் கொண்டு அடக்குமேயானால்,
நாம் இந்தியாவின் அடிமையோ?
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழினம் தட்டிக் கேட்கக் கூடாதெனில் -
அடிமையாய் தமிழினம் இந்தியாவிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை...
#ஈழ மக்களை ஆதரித்தமையால் வைகோவுக்கு இந்திய நீதியம் தண்டனை
05072019
--------------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் நாத்திக நூலே,
 - விற்பனைக்கு:
arukutti@gmail.com  

தமிழ்நாட்டில் கடும் தண்ணீர்ப் பஞ்சம்
-----------------------------------------------------------
ஒரு லிட்டர் பீர் தயாரிக்க இருபது லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது...
அதிமேதாவிகளை அமைச்சர்களாகக் கொண்டுள்ள தமிழக அரசே பீர் தயாரிப்புக்குத் தடைவிதித்து அந்த நீரை மக்களின் தாகத்துக்கு வழங்கு.
#தண்ணீர்_தாகம்_பீர்_தயாரிப்பைநிறுத்து
15062019
----------------------------------------------------------------------------------
தமிழரின் திருநாள் 
-----------------------------
நீர்வளத்துறை என எளிய முறையில் நாம் தமிழில் சொல்லிக் கொண்டிருக்க -
இந்திய ஏகாதிபத்தியம் அதனை ஜல்சக்தி என தமிழ் ஊடகங்களை சொல்ல வைத்திருக்கிறது....
திருட்டுத் தனமாக தமிழை அழிக்க முனையும் போதேல்லாம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான இடைவெளி விரிசல் அதிகம் ஆகிறது...
இந்த விரிசல் ஒருநாள் பெருவெடிப்பாகி இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் துண்டிக்கும்...
அந்நாள் தமிழரின் திருநாளாகும்...
15062019
-------------------------------------------------------------------------------------------------

தமிழனே, நீ செத்தப் பிணமா....
------------------------------------------------
தமிழ் மக்கள் உரிமைக்காகப் போராடியதை தீவிரவாதம் என்றவன் ரசனி.
தமிழரின் உரிமைப் போரை இழிவுப்படுத்தியக் கயவன் ரசனியின் வரலாற்றை தமிழ் குழந்தைகளுக்குப் பாடமாகப் படிக்க வைப்பதானது, தமிழ் மக்கள் மானம் அற்ற சடலங்கள் எனும் எகத்தாளமே ஆட்சி பீடத்தை இயக்கும் பார்ப்பான பாசிச்ஃசுட்டுகளுக்கு...
தமிழில் பெயர் பலகை வைத்தாலே கொடு வாளோடு வெட்ட வரும் கன்னட நாட்டுப் பள்ளியில், காவிரியில் தமிழனின் உரிமைக் குறித்து கன்னட மாணவர்களுக்கு ஒரு பாடம் வைத்தால் ஏற்பார்களா... தீக்கிரையாகாதோ தமிழர் இல்லங்கள் கன்னடத்தில்! ...
ரசனியை பாடமாக வைத்தும் இன்னும் நாம் கொந்தளிக்காமல் ஊமையாகவிருக்கிறோம்
12062019
--------------------------------------------------------------------------------------------

மிழனுக்கு தமிழ்நாட்டில் உத்தியோகம்
---------------------
"அம்புஜம் "
"ஏண்ணா பக்கத்தலதானெ இருக்கேன்... எதுக்கு கத்தறேளை"
"இதப் பாத்தியோ.. தினமலர் சஞ்சிகை "
"காட்டுங்க... ஓ... இந்த சமாஷ்ஷாரம் சொல்றேளா? பெரியார் திராவிடர் கழகம் கூட்டம் நடத்த அனுமதியில்லை. இந்தியாவைப் பிரிவினைப் படுத்துவதை ஏற்க முடியாதுனு நம்ப ஜட்ஜ் சொல்லியிருக்கா.. "
"ஒரே போடு போட்டுட்டா ஜட்ஜ்வாள்... வட இந்தியாவாள் வந்து தமிழ்நாட்டு வேலை வாய்ப்பைப் புடுங்கறாளாம்.. இதை எதிர்த்து கூட்டம் நடத்த அனுமதி வேணுங்கறா... நம்ப ஜட்ஜ்வாள் இது பிரிவினைன்டார் "
"நோக்கொரு சந்தேகம்... இந்த நாட்டு வேலையை இந்த நாட்டு மக்களுக்கு கொடுங்கோனு கேக்கறது அவாளுக்கு ரைட்ஸ் இருக்கறச்சே பிரிவினைனு சொல்றது நேக்கு சரியாப் படல... "
"அடியே அபிஸ்ட்டு தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டுகாரனுக்கு தீர்ப்பு கொடுத்துட்டா, நாளைக்கு பிராமனாள் ஜோலி என்னாகறதடி... இப்ப ஜட்ஜ் வேல பாக்கறவா மோஸ்ட்லி நம்ம பிராமனாள்தான்... அவா ஜோலி என்னாகறதடி... ஒன்னு தெரிஞ்சுக்கோ... சூத்திராளுக்கு அரசாங்க உத்தியோகம் தரப்பட்டது... கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவா... அப்படியே கொடுத்தாலும் நீஷ உத்தியோகம்தான் தரனும்... நம்ம மோடி சரியா செய்வா... "
"ஆமண்ணா, போனவாரம் கோயம்புத்தூர் போயிட்டு திரும்பறச்சே பிளைட்ல வந்தோமே. நீங்க சொன்னமாதிரியே இருந்துச்சு... கோயமுத்தூர் ஏர் போர்ட்டில் வேலை செய்யறவா எல்லாரும் மலையாளிகளும், இந்தி காரனுக மட்டுந்தான் நா பார்த்தேன்... கக்கூஸ் கழுவுற வேலை மட்டும் தமிழனுக்குக் கொடுத்துருக்கா... அந்த தமிழன் என்ன செய்றான் தொரியுமோ... நம்மாளுக மலஜலம் கழிச்சிட்டு வர்றச்சே 'சாமி ' ஏதாவது காசு கொடுங்கோ'னு கையேந்தறான்.. பாத்தேளா... "
"ஆமாடி தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இந்த கதி போதும்டி ... இல்லைனா தமிழ்நாட்டு ஜனங்க பிரிவினைப் பேசி பிராமணாளை தொறத்துருவாண்டி "
09062019
--------------------------------------------------------------------------------------


எடுப்புத் துடுப்பு
------------------------
புலியூர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...
உழைப்பும் , ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க ஊர்!...
அங்கே எடுப்புத் துடுப்பு என்பவனும் இருந்தான்...
அவன் குறுக்கு வழியில் நோகாமல் வாழப் பழகி விட்டவன்...
ஊரில் அழையா விருந்தாளியாகச் சென்று எடுபிடி வேலைப் பார்ப்பான்...
பிறரை முந்தி துடுக்குத் தனமாக உளறுவான்...
அதனால் அவன் எடுப்புத் துடுப்பானான்... இயல் பெயர் பழனிசாமிதான்.
புலியூர் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே போதிய வேலைவாய்ப்பு இருந்தது.
இந்நிலையில் பான்பராக் வாயன் ஒருவன் வேலை கேட்டு எடுப்புத் துடுப்பிடம் வந்தான்..
கமிசன் தருவதாக இருந்தால் வேலை வாங்கித் தருகிறேன் என்றான் எடுப்பு...
முதலாளியிடமும் தரகுத் தொகையை வாங்கிக் கொண்டு பான்பராக் வாயனை வேலைக்குச் சேர்த்து விட்டான் எடுப்பு...
இது ஒரு நல்ல - எளிதாக - வருமானம் வரும் வழி என முடிவெடுத்து ஏராளமான பான்பராக் வாயன்களை வருவித்து தரகு தொகையும் வாங்கிக் கொண்டு குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு முதலாளிகளிடமும் தரகு வாங்கி சொகுசாக வாழ்ந்தான் எடுப்பு...
இதனால் உள்ளூர் இளைஞர்கள் வேலை இழந்தனர்... வறுமையில் வாடினார்கள்...
அதே நேரம் பெருமளவில் குவிந்திருந்த பான்பராக் வாயன்கள் ஒழுக்கம் இன்றி கண்ட இடத்தில் பான்பராக்கைத் துப்பியதோடு தெருவோரத்தை திறந்த வெளி கழிப்பிடமாக ஆக்கிக் கொண்டார்கள்...
திருட்டும் வழிப்பறியும் நடக்கலாயின..
புலியூர் சீர்கெடுவதை இளைஞர்களால் சகிக்க முடியவில்லை...
எடுப்புத் துடுப்புவை சந்தித்து இளைஞர்கள் முறையிட்டார்கள்...
"எனக்கும் குடும்பம் இருக்கு... ஊருக்காக என் பிழைப்பை நிறுத்த முடியாது " - என்று உறுதியாக சொல்லிவிட்டான்...
இளைஞர்கள் செய்வதறியாது கண்டனம் மட்டும் தெரிவித்து வந்தனர்...
ஒரிளைஞன் கையில் பழைய நாளிதழ் ஒன்றுக் கிடைத்தது...
படித்துப் பார்த்தான்...
இளைஞர்களைக் கூட்டி, பழைய நாளிதழின் செய்தியைப் படித்துக் காட்டினான்...
"இந்திய தேசம் வல்லரசாக வேண்டுமென்றால் தமிழ்நாட்டை தியாகம் செய்வதில் தவறில்லை "
"எவண்டா பேசுனது "
"மத்திய அமைச்சர் பொரியுருண்டை"
"ஓகோ... பொரியுருண்டைக்கு வாழ்த்துச் சொல்லுங்கடா "
மறுநாள் எடுப்புத் துடுப்புவின் சடலம் மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது...
'புலியூர் நன்மைக்காக ' - பதாகையும் தொங்கிக் கொண்டிருந்தது...
பான்பராக் வாயன்கள் ஊரைவிட்டு ஓடினார்கள்...
முதலாளிகள் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமைத் தந்தார்கள்...
கண்டனங்கள் உதவாது... களத்தை மாற்றினால் ஒழியத் தீர்வில்லை என்பது போல ஊடகங்கள் சொற்போர் நடத்தின...
07062019
------------------------------------------------------------------------------------------------------

நீட்டா? தனித்தமிழ் நாடா?
-----------------------------------------
ஒவ்வோர் நீட்டின் போதும் நாம் தமிழ் மாணவச் செல்வங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்...
இந்த ஆண்டும் இரு மாணவிகள் இன்னுயிர்த் துறந்தனர்...
இந்தியாவில் தலைச்சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட நாடு தமிழ்நாடு...
இத்தகைய நம் மருத்துவர்கள் நீட் எழுதவில்லை...
திட்டமிட்டே தமிழ் மாணவர்களை உளரீதியாக கோழையாக்கும் இந்தியாவின் குள்ளநரித்தனம் இதில் இருக்கிறது...
தலைச்சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத தமிழ் மாணவர்களை கட்டாயத்திற்குத் தள்ளி, நம் மாணாக்கர் மீது சம்பந்தமில்லாத கேள்விகளை ஏவி -
தமிழ் மாணாக்கரை நிலைக் குலையச் செய்து தோல்வியுற வைக்கிறார்கள்...
கல்வியறிவில் பின் தங்கியுள்ள வடநாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றியடைதல் என்பது கேள்விக்குறியதாகும்...
தலைச் சிறந்த மருத்துவர்கள் நிரம்பியுள்ள தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்களி!...
அல்லவெனில் ; தமிழ்நாட்டை தனிநாடாக்கு...
தனிநாடு வேண்டுமென பொதுவாக்கெடுப்புக்கு முனைவு எடுப்பீராக தமிழ்மக்காள்....
#நீட்டா_தனிநாடா?
05062019
-----------------------------------------------------------------------------------------------
#தமிழிசையும் தகரடப்பாவும் 

சிறுவயதில் -
சிறுவர்கள் ஒரு விபரீத விளையாட்டு விளையாடுவார்கள்...
பழக்கமில்லாதவர்கள் அவ்வளவு எளிதாக கழுதையை நெருங்கிவிட முடியாது...
அப்படி நெருங்கி, பின்னங்கால் உதை வாங்கும் சிறுவர்களை நினைத்து பரிதாபம் படுவேன்... நீண்ட நேரம் அந்த நினைவு என்னுள் சோகம் செய்யும்...
ஆனால் ; அசராத சில சிறுவர்கள் மிக சாதுர்யமாக கழுதையின் வாலில் நீண்டக் கயிற்றோடு தகரடப்பாவை கட்டிவிடுவார்கள்...
கட்டியக் கையோடு தகரடப்பாவை தடதடவென தட்டிவிடுவார்கள்...
டப்பாவின் ஓசையில் கழுதை ஓட ஆரம்பிக்கும்...
அந்தோ... கழுதைக்குத் தெரியவில்லை தகரடப்பா தன்னோடுப் பிணைக்கப் பட்டிருக்கிறதென்று...
அதனால் முட்டாள் கழுதை என்று கூவிக்கொண்டே சிறுவர்களும் பின் தொடர்ந்து ஓடுவார்கள்...
இதன் விளைவு சில நேரங்களில் விபரீதமாக மாறிவிடும்...
தெருவில் சென்றுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் டப்பாகட்டப்பட்ட கழுதையால் ஊறுநேர்ந்து விடும்...
ஆயினும் கழுதை ஓடிக் கொண்டிருக்கும்...
தகரடப்பா கயிறு ஏதிலாவது சிக்கி அறுந்து விழுந்து டப்பாவின் ஒலி அடங்கும் வரை ஓடும் கழுதை...
தற்கால அரசியலிலும் பாசிஃசுட்டுகள் சிலரை ஓடவிட்டு மகிழ்கிறார்கள்...
ம்... என்ன செய்வது?
உணர வேண்டியவர்கள் உணர மறுக்கிறார்களே.... 
03062019
---------------------------------------------------------------------------------------------

இந்தி கட்டாயமாம்
-----------------------------

தமிழன் எந்த மொழியைக் கற்க வேண்டும் என்று தீர்மானிக்க வடவனுக்கு ஏது உரிமை...

இந்தியாவோடு தமிழகத்தை வைத்திருக்க விருப்பமில்லையெனில், இந்தி மோடியே தமிழ்நாட்டை விடுவித்து விடு...
அல்லாமல் எம் மக்களின் உணர்வின் மீது எரிநெருப்பினை வீசி எகத்தாளம் செய்யாதே இந்தியாவே...
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயம் என இந்திய அரசு நேற்றிரவு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது...
வெஞ்சினம் கொண்டு வெகுண்டெழு தமிழா...
இந்திய அரசின் அலுவல் யாவும் தமிழ் மண்ணில் முடங்காதோ...
தமிழன் எம்மொழியில் கற்க வேண்டும் என்பதை இந்தியன் கூறுகிறான் எனில் தமிழன் இந்தியாவின் அடிமையல்லன் என்பதை உரக்க முழங்கு...
01062019
----------------------------------------------------------------------------------------------------------------------
#இந்தி_ஒழிக_தமிழ்நாடுதமிழருக்கே


இந்தி இந்தியாவின் பொது மொழியல்ல.
இந்திய மொழிகளில் ஒன்று. 500 வருடங்களுக்குள்தான்
அந்த தொந்தி மொழி உருவாக்கப்பட்டது. 11 மொழிகளின் கலவை அது

#இந்தி_ஒழிக_தமிழ்நாடுதமிழருக்கே
01062019
----------------------------------------------------------------------------------------------------------


#தகரடப்பாவும்_தமிழிசையும்

சிறுவயதில் -
சிறுவர்கள் ஒரு விபரீத விளையாட்டு விளையாடுவார்கள்...

பழக்கமில்லாதவர்கள் அவ்வளவு எளிதாக கழுதையை நெருங்கிவிட முடியாது...

அப்படி நெருங்கி, பின்னங்கால் உதை வாங்கும் சிறுவர்களை நினைத்து பரிதாபம் படுவேன்... நீண்ட நேரம் அந்த நினைவு என்னுள் சோகம் செய்யும்...

ஆனால் ; அசராத சில சிறுவர்கள் மிக சாதுர்யமாக கழுதையின் வாலில் நீண்டக் கயிற்றோடு தகரடப்பாவை கட்டிவிடுவார்கள்...

கட்டியக் கையோடு தகரடப்பாவை தடதடவென தட்டிவிடுவார்கள்...

டப்பாவின் ஓசையில் கழுதை ஓட ஆரம்பிக்கும்...

அந்தோ... கழுதைக்குத் தெரியவில்லை தகரடப்பா தன்னோடுப் பிணைக்கப் பட்டிருக்கிறதென்று...

அதனால் முட்டாள் கழுதை என்று கூவிக்கொண்டே சிறுவர்களும் பின் தொடர்ந்து ஓடுவார்கள்...

இதன் விளைவு சில நேரங்களில் விபரீதமாக மாறிவிடும்...

தெருவில் சென்றுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் டப்பாகட்டப்பட்ட கழுதையால் ஊறுநேர்ந்து விடும்...

ஆயினும் கழுதை ஓடிக் கொண்டிருக்கும்...

தகரடப்பா கயிறு ஏதிலாவது சிக்கி அறுந்து விழுந்து டப்பாவின் ஒலி அடங்கும் வரை ஓடும் கழுதை...

தற்கால அரசியலிலும் பாசிஃசுட்டுகள் சிலரை ஓடவிட்டு மகிழ்கிறார்கள்...

ம்... என்ன செய்வது?

உணர வேண்டியவர்கள் உணர மறுக்கிறார்களே....
03062019
-------------------------------------------------------------------------------------------------------------------
ரஜனி நல்ல மனுஷன்
----------------------------------
"வாங்க மாமி... நன்னா இருக்கேளா"
"அம்பஜம் உன் ஆத்துக்காரர் இன்னும் வரலியா "
"வந்துட்டார்... அண்ணா, நிர்மலா மாமி வந்துருக்கா "
"நமஸ்கார் நமஸ்காரம்... உக்காருங்கோ மாமி... அதென்ன கையில் பொட்டலம் '
"அதிரசம் பண்ணியிருந்தேன்... இந்தாடி அம்புஜம்... ஆத்துக்காரும் நீயும் சாப்பிடுங்கோ... அங்க பக்கத்து ஆத்துல எழவு விழுந்தது போல அழுது அரண்டுகிட்டு இருக்கா... சகிக்கல இங்க வந்துட்டேன்..."
"குடிகாரச் சூத்திரவாள் ஆத்துல எது நடந்தாலும் கண்டுக்கப்படாது... பேசாம் இருந்துறனும்... ஆமா அப்படி என்ன நடந்ததுருச்சுனு ஒப்பாரி வெக்கறா "
"9 வயசு பையனை கெடுத்து கொன்னுட்டாங்களாம் "
" டிவில காமிச்சா.. நானும் பார்த்தேன்... மாமி டிவில நம்ம ரஜனி இண்டர்வியூ பாத்தேளா "
"பேஷ்... பிரமாதம். தமிழநாட்டில் மோடி ஜெயிக்காம போணதுக்கு ரஜனி சூப்பர் ரீசன் சொல்லியிருக்கா "
"மாமி ஐலம் குடிங்கோ... ரஜனி இண்டர்வியூ வுல பேஷா ஒன்னை மென்சன் பண்ணியிருப்பா பாருங்கோ... நேக்கு சந்தோஷம் தாங்க முடியல "
"ஆமாடி அம்புஜம்... மோடி மேல் தப்பில்லை... தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஆளுக பிரச்சாரம் செஞ்சதால்தான் மோடி ஜெயிக்க முடியலனு ரஜனி பேஷா சொல்லியிருக்கா "
"மாமி ரஜனி ஆத்துக்கு போயிட்டு வரலமா ... அவாளுக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு., மோடியை விட்டுக்குடுக்காம பேசினதுக்கு தாங்ஸ் சொல்லிட்டு வந்துறலாம் வாங்க "
"பேஷா போலாமே "
"ஏண்ணா வர்றேளா... இல்ல. மாமியும் நானும் போயிட்டு வரவா "
"இருடி நானும் கிளம்பிட்டேன் "
29052019
--------------------------------------------------------------------------------------------------------------


கொஞ்சம் நஞ்சமல்ல
----------------------------------

இந்தியாவின் மொத்த வருவாயில் தமிழ்நாடு மட்டும் 48% சதம் இந்தியாவுக்கு வரி செலுத்துகிறது...
தமிழ்நாடு வரி செலுத்துவதை நிறுத்தி விட்டால் இந்தியாவின் நிலை பரதேசி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.
இந்தியாவின் தலைமை செயலகத்தில் குந்திக் கண்டு, தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கித் தின்றுத் திளைக்கும் பார்ப்பன நாடோடிகள் , தமிழ்நாட்டுக்கே துரோகம் இழைக்கும் திட்டங்களை வரிசைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...
பார்ப்பனர்களின் நச்சுச் செயலைக் கண்டித்து என்னதான் பாராளுமன்றம் முற்றுகை என போராட்டங்கள் பல நடத்தினாலும் பார்ப்பன வர்க்கம் ஏப்பம்விட்டு ஏளனத்தோடு கடந்துச் சென்றிடும்...
செவிடன் காதில் சங்கு ஊதும் நிலைதான் தமிழர் நிலை!...
இனி எத்தனைக் காலத்துக்கு துயர்களை சுமப்பது...
நமது சந்ததியினரையும் இந்தியாவின் அடிமையாய் விட்டுச் செல்லுதற்கோ உயிர் வாழ்கின்றோம்...
இனி மறியல் - முழக்கம் - ஊர்வலம் - மனிதசங்கிலி -கருப்பு பறக்கை - என்பதெல்லாம் பாசிஃட்டுகள் கண்டுகளிக்க பயன்படுமேயன்றி தமிழினத்தின் தீர்வாகாது...
தமிழ் இளைஞனே போதும் இந்த வேதனை...
பொங்கியெழு மாற்றுவழிப் போர் முன்னெடு...
வரிவாங்கிக் கொண்டு எம்மை வஞ்சிக்கும் மாட்டு மூத்திரக் கூட்டத்தின் கொட்டம் அடக்கி அருந்தமிழகத்தின் எல்லைக் கோடு வரைந்திடு...
facebook.com/தமிழர் அறஞ்சார் நெறியம் (தமிழ் மக்களின் வேலி) (தமிழ் மதம்)
28052019
-----------------------------------------------------------------------------------------------


கொக்கொக்க கூம்பும் பருவத்து
-------------------------------------------------
இந்தி மோடி இரண்டாவது முறையாக கொடுங்கோன்மைக்கு வந்துள்ளது தமிழினத்திற்கு வாய்த்த நல்வாய்ப்பாகும்...
மகிழ்வுக் கொள்வோம்...
வேறு எவரேனும் ஆட்சிக்கு வந்திருப்பின் தமிழினம் ஓரளவேனும் சமரசம் செய்துக் கொண்டு இந்தியத்தோடு அடிமையாகவே நீடித்திருக்க சூழல் ஏற்பட்டிருக்கும்...
ஆனால் ; அத்தகையச் சூழல் இந்தி மோடியால் நிகழ வாய்ப்பில்லை...
கொடுங்கோலன் தன்னைத் திருத்திக் கொண்டதாக வரலாறில்லை...
அதனால் ; தமிழ்நாடு இந்தியத்திலிருந்துப் பிரிந்திடக் கூடிய சூழலை உருவாக்குவார் இந்தி மோடி...
அந்த வாய்பை நாம் சாதகமாக்கி நம்நாட்டை தனிநாடாக்குவோம்...
வாய்ப்பை நழுவவிடலாகாது தமிழ் மக்களே!
24052019
------------------------------------------------------------------------------------------------------------------
பெரியார் மண்
----------------------
பெரியார் மண் என்பதை வடநாட்டவருக்கு தமிழ் மண் உணர்த்தியுள்ளது 2019 தேர்தலின் வாயிலாக!
முந்தையக் காலங்களைப் போல் பதவி சுகம் வேண்டி, இந்த வாய்ப்பினை சுயநலத்திற்காகப் பயன்படுத்த திமுக நினைக்குமேயானால அது தவறாகிவிடும்...
தமிழ் மக்களின் தனி அடையாளங்களை மீட்கும் பொருட்டும், உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டும் தன்மானத்தை கோலோச்ச செய்யவும் திமுக இந்த வாய்ப்பினை நன்குப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்...
அதுவே தமிழ்மக்களின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்...
சீமான் போன்ற இரத்த பரிசோதனை நிலையங்களின் உரிமையாளர்களின் தவறான செயல்பாட்டுக்கும் முடிவுரையாக அமையும்.
சக்கர (டயர்) நக்கிகளால் ஏற்பட்ட தலைக் குனிவை நிவர்த்திச் செய்து தமிழ்மண்ணில் படிந்த களங்கத்தைத் துடைக்க வேண்டியக் கடமையும் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது...
மேலும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று தவிர்க்க இயலாத நிலையில் உள்ளது; அது என்னவென்றால், இந்திய தேர்தல் முறை தமிழ்மண் மீட்புக்கு உதவாது என்பதையும் கவனத்தில் கொண்டு திமுக பணியாற்றுமேயானால் உலகத்தமிழர் யாவரும் ஆறுதல் கொள்ள வாய்ப்பிருக்கிறது...
இந்த தேர்தலில் காங்கிரசைத் தவிர்த்து, அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டிருந்தாலும் திமுக வெற்றியடைய வாய்ப்பு ஒளி மயமாக இருந்துள்ளது... எவ்வாறெனில் இது பெரியார் மண் என்பதேயாகும்!...
23052019
---------------------------------------------------------------------------------------------------------

320 கி மீ வேகத்தில் சீனா
---------------------------------------
"அம்புஜம் யாரோ காலிங் பெல் அடிக்கறா... கேக்கலையோ நோக்கு... யாருனு பாரு "
"நீங்க என்ன செஞ்சுண்டிருக்கேள்..."
"தெரியலையோ. .. தியானம் செஞ்சுண்டுருக்கேன்... போய் பாருடி"
"ஏய். தேன்மொழி வாடி... நன்னா இருக்கியா "
"இருக்கேண்டி... நீ எப்படி இருக்கே "
"நன்னா இருக்கேன்... உட்காரு "
"ஏய்... உன் கணவர் என்னடி செஞ்சுட்டிருக்கார்"
"ஆத்துக்காரர் தியானம் செஞ்சுட்டுருக்கார்"
"உச்சி வெயில் அடிக்குது... இந்த நேரத்தில் எதுக்குடி தியானம்? "
"தேஷம் ஷேமமா இருக்கனும்னு தியானம் இருக்கா... நம்ம மோடியும் தியானம் இருக்கா... கேதார் நாத்ல... டி வி யில் பார்த்தியோ "
"பார்த்தேன்... பார்த்தேன்... ஏண்டி அம்புஜம்... தியானம் இருந்தா மட்டும் நாட்டுக்கு நல்லது நடந்துருமா... இங்கே மோடி தியானம் செஞ்ச அதே நாளில் சீனாவில் ஒன்னு நடந்துச்சே... தெரியுமா "
"என்னடி "
"மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் ஓட்டி சாதனை செஞ்சுருக்கு சீனா... இந்த சாதனைக்காக அந்த நாட்டு பிரதமர் தியானம் ஏதும் செஞ்சதா தெரியலையேடி "
"அம்புஜம் நா தியானம் இருக்கேன்... உன் ஸிநேகதியை மெதுவா பேசச் சொல்லு "
"சாரி அம்புஜம்... என்னால உங்க வீட்டுக்காரர் தியானத்துக்கு இடைஞ்சல் ஆயிடுச்சு... என் பொண்ணுக்கு காதுகுத்து வச்சிருக்கேன்... நீயும் அவரும் மறக்காம வந்துருங்க... இந்தா அழைப்பிதழ்... "
"அம்புஜம் காதுகுத்து விஷேஷத்துக்கு அய்யரு மந்திரம் ஓதுனா நல்லது... மந்திரம் ஓத நா போறேன்.. நீ அட்வான்ஸ் வாங்கிக்கோ "
"வேண்டாம் அம்புஜம்... தமிழாசிரியர் வந்து திருக்குறள் பாடி காதுகுத்து விழாவை தொடங்கறாரு... சரி நா வர்றேன்... அழைப்பிதழ் நிறையத் தர வேண்டியிருக்கு... வர்றேன்... "
19052019
-----------------------------------------------------------------------------------------------------------------------------

உப்பில்லா கஞ்சி
--------------------------
மேதகு பிரபாகரன் கட்டுப்பாட்டில் இருந்தப் போது ஈழமக்கள் கடைப்பிடித்த அதே ஒழுங்கமைப்பில் இருந்து இன்னமும் வழுவாதிருக்கின்றனர் என்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போதும் காணமுடிந்தது...
ஈழமக்கள் நினைவேந்தல்தனை சந்ததியினருக்கும் கொண்டுச் செல்லும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு...
உப்பில்லாதக் கஞ்சியை சமைத்து நினைவேந்தல் நாளின்போது பருகுகின்றனர்...
ஏனின்று உப்பில்லாதக் கஞ்சி யென அறியா சிறார் கேட்பின் இது இனப்படுகொலையின் நினைவூட்டல் கஞ்சி என்று இனப்படுகொலையின் வரலாற்று நிகழ்வினை நெஞ்சில் ஏற்றுகின்றனர்...
அதை நினைவில் கொண்டு வளரும் பிஞ்சுகளின் நெஞ்சிற்கு உப்பில்லாத கஞ்சி உரமாகி ஈழவிடுதலையை நோக்கி அவர்களை பயணிக்க வைக்கிறது...
உப்பில்லாத கஞ்சிப் பருகிடுவோரில் இருந்தும் இனி புலிகள் உருவாவர்...
இந்தக் கடப்பாடு ஈழமக்களுக்கு மட்டுந்தானா?
உரிமைகள் பல இழந்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமானது....
இனி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது ஒவ்வொரு தமிழனும் உப்பில்லா கஞ்சிப் பருகிடல் வேண்டும் தமிழ் தேசம் மீட்பின் பொருட்டு...
19052019
--------------------------------------------------------------------------------------------------------
தமிழும் சாகும் ... தமிழ் மண்ணும் சாம்பலாகும்...
------------------------------------------------------

இந்தியாவை காங்கிரசு ஆண்டாலென்ன?... பாசிச பாசக ஆண்டாலென்ன? அல்லது வடவன் எவன் ஆண்டாலென்ன?...

தமிழும் சாகும் ... தமிழ் மண்ணும் சாம்பலாகும்... தமிழர் அடையாளமும் அழிக்கப்படும்... 

தமிழை ஒழிக்க உறுதியான இறுதி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது இந்திய அரசு!...

தமிழ் மண்ணை சாம்பலாக்கிடும் இந்திய அரசு!...

தமிழர் தம் நிலத்தைத் துறந்து அகதிகளாய் வெளியேறி அழிவர்...

'தமிழினம் என்றோர் இனம் இருந்தது...  அது; இந்திய அரசாளும் சிங்கள பேரினவாத அரசாளும் அழிக்கப்பட்டது...

அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று அழைக்கப்பட்டது...

அம்மொழியின் ஒலிக்குறிப்பை இப்போது ஒலிபரப்புகிறோம் கேளுங்கள்' -  என்று சீன அரசு சீன மொழியில் அறிவித்தல் செய்து தமிழ் சொற்களின் ஒலிவடிவை ஒலியீடு செய்யுங்காலம் வெகுதூரத்தில் இல்லை...

இப்படியோர் கொடுநிலை உருவாகாதிருக்க-
தமிழ் மக்கள்,  'தமிழர் அறஞ்சார் நெறியம்' தனில் இணைந்து-
தமிழுக்கும், தமிழர் அடையாளத்திற்கும் வேலியாய் மாறி காத்திடுவோம்...

நமது மதம் இந்து மதமல்ல...

வாரீர்...
facebook.com/mathi.tamil.matham/
16-05-2019
------------------------------------------------------------------------------------------------------------------------------------------


காந்திக்கும் கோட்சேக்கும் 
----------------------------------------


காந்திக்கும் கோட்சேக்கும் அப்படியொன்ன கருத்து வேறுபாடு ?
சாதி வருணத்தை இருவருமே ஆதரித்தனர்...
மனுதர்மத்தை இருவருமே நிராகரிக்கவில்லை...
இல்லாத இந்து மதத்திற்கு இருவருமே உயிர் ஊட்டியவர்கள்தான்...
பிறகு எங்கே முரண்பாடு இடறுகிறது?
காந்தி பார்ப்பணனாக இருந்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை...
இதனை இந்து பாசிசம் என்கிறார்கள்
15052019
--------------------------------------------------------------------------------------------------------------------------

லட்டு வாங்கிட்டு வந்துருக்கேன்
---------------------------------------------------
"அம்புஜம்.... அம்புஜம்... எங்கேடி இருக்கே "
"வடகம் எடுக்கப் போயிருந்தேன்... எதுக்கு அவசரமா கூப்பிட்டேள்... என்ன விஷயம்... சொல்லுங்கோ"
"லட்டு வாங்கிட்டு வந்துருக்கேன்...இந்தா சாப்பிடு "
"ஓ... எல் டி டி ஈ தடையை இந்தியா அரசாங்கம் நீட்டிச்சிருக்கே அதுக்காகவா "
"பேஷா சொன்னே...அது மட்டுமில்லடி... நம்ம கோட்சேவை தீவிரவாதினு சொன்ன கமல்ஹாசன் மேல கேஸ் போட்ருக்காங்கடி... அதுக்காகவும்தா லட்டு... ம்... வாயத் திற "
"ஏண்ணா நேக்கொரு டவுட்... "
"நோக்கு என்னடி டவுட்"
"இந்துவுக்கு எதிரா காந்தி இருந்தாரு.. அதனால பிளான் பண்ணி காந்தியை சுட்டேன்னு கோட்சே சொன்னதை மறந்துட்டேளா... "
"அம்புஜம்... ஏண்டி நோக்கு புத்தி தடுமார்ரது...
கோட்சே யாருடி...பிராமணாள்... மறந்துட்டியா...
பிராமணாள் மத்தவாளை கொலை செய்யலாம்... நாக்கு அறுக்கலாம்... சூடு வெக்கலாம்... சூத்திரன்னு திட்டலாம்... ஆனா பிராமணாளை யாரும் தீவிரவாதினு சொல்லப் படாதுனு மனுதர்மம் சொல்லியிருக்கேடி... மறந்துட்டியா "
"ஆமண்ணா...கோட்சே பிராமணாள்னு மறந்துட்டேன்... எல் டி டி ஈ சூத்திராள் பார்ட்டி... தடை செய்றது தப்பேயில்லை... இன்னொரு லட்டு குடுங்கோ... நீங்களும் வாயில போடுங்கண்ணா "
14052019
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் அடிமைகள்
----------------------------------------
" அம்புஜம்... சேகர் வந்துருக்கான். .குடிக்க ஜலம் எடுத்துண்டு வா"
"இதோ கொண்டு வரேண்ணா"
"ஏண்டா சேகர் நாட்டு நடப்பு எப்படி போயிண்டுருக்கு... "
"அத்திம்பேர் நாட்டு நடப்பை நெனெச்சா எரிச்சல் ஆகறது "
"என்னடா பேசிண்டிருக்கே "
"கவனிச்சேளா... சூத்திரவாள் எப்பப் பார்த்தாலும் எலக்ஷன் கமிஷனை அபவாதம் பேசிண்டே இருக்கா "
"டேய் சேகர் குரைக்கற நாய் வேட்டைக்கு ஆகாதுறா "
"அத்திம்பேர் என்ன சொல்றேள் "
"சூத்திரவா எல்லாருமே குரைக்கற நாய் மாதிரி... டேய் சூத்திரவாள் அவாளோட தேசம் எதுனு சொல்றா "
"தமிழ் தேஷம்ன்றா "
"இந்த தமிழ்தேசத்துக்கு எலக்சன் நடத்தறது யாரு "
"இந்திய தேசம் "
"இந்திய தேஷத்தோட ரெப்ரெஷெண்டிவ் வந்துதானே சூத்திர தேசத்துக்கு எலக்சன் நடத்தறா... இதிலிருந்து என்ன தெரியறது.... சூத்திர ஜாதிக்கு சூத்திர தேசத்தில் எலக்சன் நடத்தறதுக்கும் உரிமையில்லைடா "
"ஆமா அத்திம்பேர் "
"சூத்திரவாள் இந்திய தேஷத்துக்கு அடிமைன்றதை மறந்துட்டு எலக்சன் கமிஷனைத் திட்டிண்டு இருக்கா"
"சேகர் , சூத்திர ஜாதியைப் பேசியிருக்கே...நன்னா வாய் அலம்பிட்டு வாடா... இந்தா ஜலம் "
09052019
-----------------------------------------------------------------------------
தமிழினமே வருக...
-------------------------------
ஈழத்தில் மொழியால் ஒன்றாகத் தெரியினும் மதத்தால், சுமார் இருபத்தியிரண்டு இலட்சம் தமிழர்கள் தம்மை தமிழினமாகக் கருதுவதில்லை...
மதத்தால் தம்மை இசுலாமியர் என்று கூறி பிளவுப் படுகின்றனர்...
மதமென்னும் வெறியானது தமிழினத்தைப் பிளவுப் படுத்தவும் ஆங்கே தயங்குவதில்லை..
தமிழின உணர்வு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட உயிர்ப்பாகும்...
ஆதலால் ;
தமிழ் மக்கள் யாவரும் 'தமிழர் அறஞ்சார் நெறியம் ' தனில் ஓர் குடையின் கீழ் இணைவோம்...
மதவெறியிலிருந்து தமிழினத்தை மீட்போம்...
-அரங்க கனகராசன்.
14052019
\----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐ நா பாராட்டு
----------------------
"ஏண்டீ அம்புஜம்... நேக்கு பசியாகறது... சாதம் போடாமெ நியூஸ் பேப்பர் படிச்சிண்டிருக்கியே... வாடி "
"சித்த பொறுங்கோ... இத வாசிக்கிறேன் கேளுங்கோ... பசி பறந்துப் போயிரும் "
"அப்படியென்னடி நியூஸ் "
"பாணி புயலை திறம்பட கையாண்டதற்காக இந்தியாவுக்கு ஐ நா பாராட்டு"
"ஏண்டி அபிஸ்ட்டு... நேக்கு பசியாகறதடி... ஐ நா சங்கதி இப்ப எதுக்குடி"
"ஏண்ணா நோக்கு புத்தியிருக்கோ... சொல்லுங்கோ... தமிழ்நாட்டில் வர்தா புயல் வர்ரச்சே கஜா புயல் வர்ரச்சே இந்தியா ஏறெடுத்துப் பாக்கல... அப்பல்லாம் ஐ நா ஊமையா இருந்துட்டு இப்ப பாணி புயலுக்கு வாய் தொறக்குதுனா என்ன அர்த்தம்... சொல்லுங்கோ... ஐ நா வுக்கும் தமிழ் ஜனங்க மேல் அக்கறையில்லைனுத் தெரியறதோ... "
"ஆமாம்டி அம்புஜம்... நீ சொன்னது கேட்டு நேக்கு பசி போயிடுத்து...பேஷ்... பேஷ்... "
- அரங்க கனகராசன்
04052019
----------------------------------------------------------------------------------------------------------------------

காஃசா புயலில் தமிழ்நாட்டுக்கு அல்வா
--------------------------------------------------
"ஏண்ணா கேட்டேளா "
"கேட்டேண்டி... பேஷ் ... பேஷ்... அம்புஜம் நம்ம மோடி போஷா பேசியிருக்காடி"
"இந்த சாமார்த்தியம் வேற யாருக்கு வரும் சொல்லுங்கோ"
"மகா சாமார்த்தியம்டி... அம்புஜம்!... கஜா புயல் வந்துச்சு... கம்முனு இருந்துட்டார் ... சின்ன அனுதாபம் கூட தெரிவிக்கலெ... இப்ப பாரு பாணி புயலுக்கு துணையா நிப்பேனு சொல்றார்டி.. "
"ஆமண்ண, தமிழ்நாட்டு ஜனங்களுக்கு எதுவும் செய்யக் கூடாது... சாகட்டும்... என்ன சொல்றேள்? "
" பேஷ் பேஷ்... அம்புஜம் பேஷா பேசறியேடி நீ?"
03052019
------------------------------------------------------------------------------------------------------

"சாதி ஒழிந்தால் இந்த சங்கடங்கள் தீரும்" - பெரியார்!
------------------------------------------------------

பலதேசங்களில் கால் பதித்து, தமிழின் மேன்மையை உலகறியச் செய்தப் பெருமைக்கு உரியவன் தமிழன்...

ஆனால்; இன்று தமிழன் சாதியால் வேறுபட்டு நிற்கிறான்...

சாதியால், தனக்கு இன்று நிகழும் அவமதிப்பை, தனது சந்ததியினருக்கும் கொண்டுச் சென்று இனத்தின் மேன்மையை சிறுமைப்படுத்துகிறான் தமிழன்...

சாதி ஒழிந்தால் இந்த சங்கடங்கள் தீரும் என்றார் பெரியார்!...

"சாதி ஒழிய வேண்டுமென்றால் வேறு ஆயுதம் தேவையில்லை; சாதி ஒழிப்பு சட்டமே போதும்" என்றார் பெரியார்!

ஆனால்; இந்த சட்டம் இயற்றவேண்டிய இடத்தில பார்ப்பனர்கள் அன்றோ இருக்கின்றனர்...

யாரால் சாதீயம் திணிக்கப்பட்டதோ, அவர்களால் சாதி ஒழிப்பும் நிகழும் என்பது இயலாத ஒன்று!...

சாதி ஒழிந்தால் பார்ப்பனன் இந்த மண்ணைவிட்டு ஓடவேண்டியதுதான்!...

அதனால் அவன் சாதியை ஒழிக்க இசைவுத் தர மாட்டான்...

ஆகையால்; தமிழன் தமிழனாக வாழ - 
தமிழன் மீது சூத்திரன் என்ற இழிநிலை சுமத்தப்படாமல் தமிழன் வாழ- 
யாவரும் சரிநிகர் என்ற கோட்பாட்டுடன் இயங்க - 

தமிழனை வழிநடத்திட ஓர் அமைப்பு தேவை!

அது மதம் என்ற பெயர் தாங்கி நிற்பினும், மதம் என்பது அபின் போன்றது என்ற உண்மையை உணர்த்தும் விதமாக அந்த அமைப்பானது-

தமிழர் அறஞ்சார்  நெறியமாகத் திகழும்!

எதிர்காலத் தமிழன் சூத்திரன் என்ற இழிநிலையற்று தோன்றவும்-
பார்ப்பனியம் அழியவும் தமிழ்மதம் அவசியமாகிறது!...

தோழர்களே முன் வாருங்கள்...

தமிழ்மக்களே, தோழர் சொல்லில் இருக்கும் உண்மையை அறிந்து தீர்மானம் செய்யுங்கள்...       
- அரங்க கனகராசன்.
02052017
---------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு மற்றும் ஈழம் 
-------------------------------------- 

தமிழ் மக்களே...

உங்களுக்குள் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பால் ஆர்வம் அல்லது ஈடுபாடு இருக்கலாம்...

உங்களுக்குள் அரசியல் கண்ணோட்டம் மாறுபட்டிருப்பினும்-
இந்த முகநூல் பக்கமானது, தமிழர் அறஞ்சார் நெறியம்  - மதம் - தொடங்குதற்கான முன்னெடுப்பில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

எந்த ஒரு மதமும் சாராது வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மீது - இந்துக்கள் என்றக் கூற்றை போர்த்தி, வயிறு பிழைத்துக் கொண்டிருக்கிறது பார்ப்பனர் கூட்டம்...      

தமிழ் மக்களை ஏய்த்தும் திரிகிறது பார்ப்பனர் கூட்டம்...

ஆதலால், தமிழ் மக்களே, உங்களுக்குள் அரசியல் வேறுபாடு இருப்பினும், இங்கு தமிழ் அறஞ்சார் நெறியம் - மதம் - தொடங்குதற்கான வழிநெறியை வகுத்திட உதவுங்கள்...

தமிழ் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும்,  மதம்தனை மதம் என்ற பெயரிலேயே ஓர் நெறியம் ஆரம்பிக்க உதவிடுங்கள்...

கூடிய விரைவில் தமிழ் மதம் பதிவு செய்திடவும், அரசின் அங்கீகாரம் பெற்றிடவும் வேண்டிய பணிகளில் கவனம் செலுத்திட தமிழ்மக்களின் பால் விழைகிறேன்...

இதுவானது, தமிழ்நாடு மற்றும் ஈழம் மீட்புக்கு உதவியாகவும்  அமையலாம்...


மாற்றுப்  பதிவுகளில் செலுத்திடும் ஆர்வத்தை, தமிழ் அறஞ்சார்  நெறியம் குறித்தான பதிவுகளுக்கும் சற்று நேரம் ஒதிக்கிட தமிழ் மக்களை அன்போடு விழைகிறேன்... 
29042019

தமிழனுக்கு மதம் அவசியமா?
------------------------------------------------

மதம் எனுஞ்சொல் -
திமிர் - அகம்பாவம் - மமதை - வெறி - கொடூரம் - என பல சொற்களை உள்ளடக்கி இருப்பதாலோ என்னவோ-

தமிழன் எம்மதமும் சாராதவனாய் வாழ்ந்திருக்கிறான்...

இயற்கை விழவு எடுத்தானேயன்றி-
எந்த சடங்கும் சம்பிரதாயத்திற்கும் தமிழன் உட்பட்டிருக்கவில்லை...

அதனால்தானோ என்னவோ-
பார்ப்பனர்கள் உட்பட ஒருசில மதத்தவர் தமிழகம் நுழைந்து, மதமில்லா தமிழ் மண்ணில் மதம் ஊன்ற முனைந்தனர்...

அந்த சூழலிலும் திருவள்ளுவனும் தன் படைப்பை எந்த மதச் சாயலுமின்றி, பொது நூலாக யாத்து பாரோர் புகழ்ந்திட வைத்தான்...

ஆனால்;
இன்றைய நிலையில் தமிழனுக்கென்று ஓர் மதம் - அறஞ்சார் நெறியம் - தேவைப்படுகிறது...

ஏனெனில்-
பார்ப்பனர்களின் பிடியில் சிக்கி - அழிந்துக் கொண்டிருக்கும் தமிழர் உரிமை - அடையாளம்தனை மீட்டெடுக்க தமிழர் யாவரையும் தமிழர் என்ற உணர்வோடு இணைக்க-

தமிழ் மதம் இப்போது தேவைப்படுகிறது...

மதம் என்பதால் இது வெறிக் கொண்ட கும்பலின் குழுவாக இயங்குமோ என்று தமிழர் அய்யம் பட வேண்டியதில்லை...

தமிழ் நெறியம் - மதம் - என்பது மானிடநேயம் மிக்கதாகவும், கடவுள் மற்றும் உருவம் வழிப்பாடு அற்றதாகவும்,இயங்கும்...

 தமிழ் இனம், தமிழர் அடையாளம், தமிழ் மொழி மற்றும் தமிழர் நலன் காக்கும் அரணாகவும் விளங்கும்...

பெரியார் பிறந்த இந்த மண்ணில் மதவெறி மோசமானது என்பதை வேறெங்குமிலாத அளவிற்கு தமிழ் மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள்...

ஆதலால், தமிழ் மதம் என்பது அறஞ்சார் நெறியம் என்பதை நினைவில் கொண்டு தமிழ் மதம் காண்போம்...

வருக வருக தமிழ் மக்களே!...
28042019        

தமிழ் மதம்
-----------------
தமிழர்க்கென அறஞ்சார் நெறியம் ( தனி மதம்) தொடங்க விழைகிறேன்...
திருக்குறள் அதன் வழிகாட்டுதல் நூலாகக் கொண்டிருக்கும்...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தமிழ் நெறியத்தின் (மதம்) முதன்மைக் கோட்பாடாகும்...
தமிழர் ஆதரவு நல்கிட விழைகிறேன்...
நம் தமிழ் நெறியம் (மதம்) அங்கீகாரம் பெற முனைவோம்.
- அரங்க கனகராசன்.
*பகிர்க#
24042019


நமது மொழி தமிழ்
-----------------------------
97சதம் மக்களின் வரிப்பணத்தை, 3 சதத்திற்கும் குறைவான பார்ப்பனர்களின் மொழியான செத்த மொழிக்கு வாரியிறைப்பதா?
இதற்கா நாம் வரி செலுத்த வேண்டும்?
தமிழா சிந்தி!....
-தென்றல் கனகு .
11042019
------------------------------------------

போராளியா எம் ஃசி ராமச்சந்திரன்?
-------------------------------------------------------

சினிமா நடிகன் எனும் பின்புலம் தவிர்த்து எம் ஃசி ராமச்சந்திரன் தமிழ் மண்ணுக்கு ஆற்றிய சாதனை என்ன?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஆளுமையை மாநில அரசுக்குப் பெற்றுத் தந்த போராளியா அந்த நடிகன்?

தமிழ்நாட்டின் அடையாளங்களை நடிகன் பெயருக்கு மாற்றுவது ஏற்புடையதல்ல !

துளியும் ஆளுமைத் திறனற்ற அடிமைகளின் வாக்கு வங்கிக்காக அரங்கேற்றப் படும் இதுப் போன்ற கேலிக் கூத்துதனைக் கிள்ளியெறிய தமிழ் இளைஞர்கள் முனைப்புக் காட்ட வேண்டும்
- அரங்க கனகராசன்
11042019
-----------------------------------------------------------------------------------------------


நமது மொழி தமிழ்
-----------------------------
97சதம் மக்களின் வரிப்பணத்தை, 
3 சதத்திற்கும் குறைவான பார்ப்பனர்களின் மொழியான 
செத்த மொழிக்கு வாரியிறைப்பதா?
இதற்கா நாம் வரி செலுத்த வேண்டும்?
தமிழா சிந்தி!....
-தென்றல் கனகு
10042019
--------------------------------------------------------------------------


பெரியார் சிலை உடைப்பும், பெரியார் தொண்டர்களும்....
-----------------------------------------------------------
"பெரியார் சிலை உடைக்கப்பட்டு விட்டது... அதனால் அய்ந்து தொகுதிகளிலும் பிசேபியை வைப்புத்தொகை இழக்கச் செய்வோம் " - உணர்ச்சி வேகத்தில் சிலத் தொண்டர்கள் சூளுரைச் செய்கின்றனர்...
இதில் வேடிக்கை என்னவென்றால் -
பிசேபிக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் வரிசைக் கட்டி நிற்பதுப் போலவும் -
பெரியாரியல் தோழர்கள் தடுக்க முனைவதுப் போலவும் உள்ளது...
அய்ந்து முனையிலும் வைப்புத்தொகை இழப்பர் காவிகள்... இதில் எள் முனையளவும் எவருக்கும் அய்யம் வேண்டாம்...
ஆனால்-
வைப்புத் தொகை இழப்பு என்பது நமக்கு ஈடாகாது...
பெரியார் சிலை மீது கை வைக்க காவிகள் குலை நடுங்கிட வேண்டும்...
முச்சந்தியில் மூளியாக்கி மின் கம்பத்தில் சடலம் தொங்கிட வேண்டும்...
ஏந்த வேண்டியதை ஏந்தினாலன்றி ஆரியம் அடங்காது என்பதை நினைவில் கொள்ளடா, என்னுயிர் பெரியார் தோழா!
- தென்றல் கனகு
08042019
----------------------------------------------------------------------------------------------------------------


அடிமைகளின் பிரகடணம்
----------------------------------------
தேச துரோகிகளான தமிழ் மக்களே!
மீண்டும் மோடியைப் பிரதமராக்கிட்டால், உங்கள் வாய்க்குள் சுட்டு கிண்ணஃச் சாதனைப் படைப்போம்.
பெண்களின் கன்னத்தில் போலீசை விட்டு அடிக்கச் சொல்லி மோடியிடம் பாராட்டுப் பெறுவோம்...
மேலும் உங்களை நக்சலைட் என்றும் , தீவிரவாதிகள் என்றும் புகழ்ந்து முகிலனைத் தொலைத்ததுப் போல் உங்களையும் தொலைத்திடுவோம்....
அரங்க கனகராசன் 
07042019
----------------------------------------------------------------------------------------------------
இந்த ஓர் அய்ந்தாண்டையும் ...
------------------------------------------------
ஏற்கனவே 72 ஆண்டுகளை இழந்து விட்டான்...
இந்த ஓர் அய்ந்தாண்டையும் இழந்து, வழக்கமான வேதனையில் உழலப் போகிறான் தமிழன்...
ஆம்! இந்தியத் தேர்தல் முறையால் தமிழினத்திற்கு ஏதும் பலன் வாய்க்கப் போவதில்லை.
தமிழ்நாடு தமிழருக்கே என்பதை இனி எத்தனை அய்ந்தாண்டுகள் கழித்துத்தான் உணருவானோ...
-அரங்க கனகசராசன் 
01042019
------------------------------------------------------------------------------------------------------------------ 

பொள்ளாச்சி மக்கள் என்ன செய்வார்கள்?  
-------------------------------------------

எரிநெருப்பென கொதிக்குது  நெஞ்சம் !

இளம்பெண்களின் எதார்த்த நிலையை எரியூட்டிடும் கயவர்களின் தேசமோ தமிழ்நாடு!

குட்கா, நெடுஞ்சாலைத்துறை என ஊழல் கொந்தளிப்பில் தமிழ் தேசம் தவித்திருக்க, மோடியின் குறுக்கு புத்தியில் சிறையுண்ட  அடிமைகள்  உல்லாசத் திமிரில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார்கள்....

உதவி கேட்டுவந்த பெண் ஒருத்தியை கர்பமாக்கிய  தேசம் தமிழ் தேசமெனில் காரி உமிழாதோ உலகம்தான்!

அந்த அமைச்சன் மீது நடவடிக்கை எடுப்பது எவன்?

தந்தை அரசியலில் இருக்கிறான் எனும் திமிரில், இளம்பெண்களைக் கதறவிட்டு பாலியல் சுவைக் காணும் நாடு தமிழ்நாடு என இகழாதோ இச்சகம்!...

மகனின் பாலியல் தனம் குறித்து கேள்வி கேட்ட நிருபரை மிரட்டிய பொள்ளாச்சி ஜெயராமனை விசாரிக்க இந்நாட்டுக்கு திராணியில்லையா?

அதிகாரத்தில் இருப்போர் தடுக்கின்றனர்; ஆதலால், அவலத்தை முறியடிக்க முடியவில்லை என்று காவல்துறை கையற்று நிற்குமேயானால், அதிகாரத்தில் இருந்து ஆகாதனச் செய்யும் அயோக்கியனை பொள்ளாச்சிச்  சந்தையில் நிறுத்தி அவனது உறுப்பை அறுத்து அவனது வாயில் திணித்துக்  கொன்றிட பொதுமக்கள் துணிவார்களா? மாட்டார்களா?...  

இளம்பெண்களின் வாழ்வை நாசமாக்கியக்  கும்பலுக்கு காவல்துறையே காவலெனில் அந்த காக்கிச் சட்டைகள்  மீது  மக்கள்  வெறுப்புக் கொள்வார்களா?... மாட்டார்களா?...

கயவர்களின்  கழுத்தை நெறித்து முச்சந்தியில் கொழுத்திட  மக்கள் முனைந்தால்தான், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்மம் தடுக்கப்படுமெனில் மக்கள் என்ன செய்வார்கள்?... 
- அரங்க கனகராசன்
12032019
-----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் தீமறை
--------------------------------

"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் " - இந்தப் பேச்சினை தமிழ் இன உணர்வாளர்கள் நையாண்டிச் செய்தும், கேலிப் படுத்தியும்,

இன்னும் சொல்லப் போனால் நகைச்சுவையாகவும் கருதுகிறார்கள்...

தாமரை மலர்ந்தே தீரும் என்றப் பேச்சில் பொதிந்திருக்கும் சூழ்ச்சியை உணராமல் இருப்பதுதான் வேதனையான ஒன்று!...

ஆரிய மாயைகளில் இதுவும் ஒன்று என்பதை தமிழ் மக்கள் உணரும் உணர்ச்சியை அற்று இருப்பதால்தான் தமிழ் மக்களுக்கு இத்தகையப் பின்னடைவு நிகழ்ந்திருக்கிறது...

சிங்களவன் செய்வதை இங்கே பிசேபி செய்கிறான்...

தமிழரின் நிலப்பரப்பில் இன்று வடஇந்தியா்களை வேலைக்கு அமர்த்தியும். அடையாள அட்டையை துரிதமாக வழங்கியும், தமிழகத்தில் நிரந்தரமாக வடவர்களை குடியமர்த்தியும் வருகிறது பிசேபி...

வெகு வேகமாக வடஇந்தியா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கப் படுகிறது...

பலமுறை அலைந்தும் வாக்கு அட்டைப் பெற இயலாத தமிழர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கையில் வாக்கு அட்டை விரைந்து வழங்கப் படுகிறது வடவர்களுக்கு தமிழகத்தில்...

இந்தப் போக்கு தாமரையை மலரச் செய்திடும்...

சொந்த மண்ணில் அகதியாக்கி விடும் தமிழனை...

இதில் பார்வையைச் செலுத்தாமல் ஒரு தொகுதிக்கும் இரு தொகுதிக்குமென அலைந்துக் கொண்டிருக்கிறான் தமிழன்..

இந்த தேர்தல் முறையால் தமிழினத்திற்கு ஏதும் பலனில்லையெனத் தெரிந்தும் தமிழ் மக்களை இந்த மோசடியில் ஆழ்த்துவது பேராபத்தாகும்...

இந்த அழிவிலிருந்துத் தமிழினத்தைக் காப்பாற்ற எவனாவது வருவான் என்று எதிர்ப்பாா்த்திருப்பது இன்னும் பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும்...

எவனோ ஒருவனுக்காக எதிா்ப்பாா்த்திருப்பதை விடுத்து, தனியொரு ஒவ்வொருத் தமிழனும் ஏந்திட முன்வந்தாலொழிய விடிவுக்கு வேறு வழியில்லை
05032019



மீண்டும் மீண்டும்

ஒரு பிரதமர் சக மனிதனை தாழ்த்தப்பட்டவன் இவன் என்று மீண்டும் மீண்டும் மீண்டும் அடையாளம் படுத்துவதே இந்தி மோடி கால் கழுவிய நிகழ்வு
கால் கழுவிய நாடகம் நடத்தியதற்கு மாற்றாய் சக மானிடனை கருவறைக்குள் நுழையச் செய்திருந்தால் அந்த நிகழ்வு கண்ணியம் மிக்கதாக இருந்திருக்கும்
அரங்க கனகராசன் 
24022019
----------------------------------------------------------------------------------------------------------


பதறும் நாள் தொலைவில் இல்லை
------------------------------------------------------
சாதியக் கட்சியுடன் பேரம் நிறைவுற்ற நிலையில் டயர் நக்கிகள் கனவுலகில் மிதக்கிறாா்கள்.
வெற்றிக்கனியை இப்போதே பறித்து விட்டதாக தள்ளாடுகிறாா்கள்.
இந்த அடிமைகள் வெற்றிடத்தை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதுதான் உண்மை...
ஒரு புறம் மீனவர்களின் கோபம்
இன்னொரு புறம் எட்டுவழிச்சாலையில் கொட்டு..
காவிரி டெல்டா மண்டலத்தை பெட்ரொலிய மண்டலமாக்கியமைக்கான உழவர் பெருமக்களின் உள்ளக் கொதிப்பு
அரசு ஊழியர்கள் - ஆசிாியா்களின் ஆவேசம் ...
நியுட்ரினோவுக்காக இயற்கை மலையை உடைத்து பாழ்ப்படுத்த முனைவதால் தேனி மக்களின் மனக்குமுறல்
தூத்துக்குடி மக்களின் தீரா துக்கம்
குப்பங்களை அழிக்க முனைவதால் கொப்பளிக்கும் கடற்கரை மக்கள்
அனிதாவின் மரணமும் மாணாக்கரின் மருத்துவக் கனவுச் சிதைவும்
ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் உரிமைகளை பலியிடுவதால் இளைஞர்களின் இதயக் குமுறல்
விளைநிலங்களின் வளத்தை அழிக்கும் வண்ணம் எரிக்குழாய் பதிப்பு மற்றும் உயர்மின் வழித்தடம் போன்றவற்றால் பொங்கியெழும் ஆத்திரம்
மதுவால் ஆண்டுதோறும் உருவாகும் அய்ம்பதாயிரம் கைம்பெண்களின் பொருமல்
இலவசம் வழங்கி வாக்குகளை வாங்க முனையும் எகத்தாளம் கண்டு வெம்பும் வெஞ்சினக் காளைஞர்
படித்துப் பட்டம் வாங்கியும் வேலைக் கொடாமல் பக்கோடா கட்டச் சொல்லும் பாவிகள் என பதறும் பட்டதாரிகள்
தேனிர் போடத் தெரியாதவனும் அதிகாரத்தில் அமர்ந்து அறிவாளிகளை ஊதாசீனப்படுத்தும் இன்றையக் கட்டமைப்பின் மீது இளைஞர்களின் சீற்றம்
தமிழ் - தமிழா் - அடையாளம் அழிப்பால் கொந்தளிக்கும் தமிழர் நெஞ்சம்
ஈழத்தின் வடுவென
இன்னும் அளவிலா சீற்றங்களின் நடுவில் சாதியாளன் இரமதாசனைக் கொண்டு எளிதில் வெற்றிப் பெற்று விடலாம் என்று மனப்பால் பருகிக் கொண்டிருக்கும் கனவுலகின் கயவர்களான டயர் நக்கிகளும், காவிகளும் பதறும் நாள் எதுவெனில் தேல்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளே!
-அரங்க கனகராசன்
22022019
---------------------------------------------------------------------------------------------------------------------------

அரபு நாட்டின் சவுக்கடிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...
---------------------------------------------


சவுக்கடி வழங்கும் சட்டம் நம் நாட்டில இல்லை.

ஆனால் நோட்டா எனும் சவுக்கால்  சுழற்றிச் சுழற்றி அடியுங்கள்...

மாநில உரிமைகளின் நலனுக்காக அதிமுகவோடு கூட்டு சேர்வதாக, சாதியக் கட்சியான, பாமக அறிவித்து அதிமுகவோடு கூட்டணியில் இணைந்துள்ளது...

இந்த அறிவிப்பை வெளியிட்ட இராமதாஸ், தமிழ்நாட்டின் உரிமைகளை விற்ற - விற்றுக் கொண்டிருக்கும் - அடிமைகளை அருகில் வைத்துக் கொண்டு பேசுவது இன்னும் வேடிக்கை!...

இரு திராவிட கட்சிகளை ஒழிப்பதும், மாற்று அரசியல் முன்னெடுப்பதுமே குறிக்கோள் என முழங்கிய பாமக இன்று திராவிட கட்சியோடு கூட்டு சேர்ந்திருப்பது கடைந்தெடுத்த சுயநலத்தின் வெளிப்பாடு!...

மகனுக்குப்  பதவி  வேண்டும்; அதற்காக எதனையும் சமரசம் செய்து சாப்பிட முனைவேன் என்று இராமதாசு உணர்த்தியிருக்கிறார் என்று  சாமானியன் பொருள் கொள்ளின் தவறில்லை என்றே தோன்றுகிறது... 
     
எந்த உரிமையை இனி அடிமைகளின் அடிவருடி இராமதாசு பெறுவார் என்பது அவருக்கே வெளிச்சம்!

நீட் தேர்வால் உயிர் மாய்த்த அனிதா ஒருக்கால் வன்னியர் குலம் சார்ந்தவராக இருப்பின், இராமதாசு இத்தகையக்  கூட்டணிக்கு இசைந்திருப்பாரா?...

அவரது சாதியம் இதில் வெளிச்சம் ஆகிறது என்பதை அவரே உணர்வார்!...

அதேபோல்-
கொலை பாதக காங்கிரசோடு திமுக உறவு கொள்ளுமாம்...

இரண்டு லட்சம் தமிழ் உயிர்களை மயிரெனப் பிடுங்கிய காங்கிரசுக்கு திமுக வாக்களிக்கச் சொல்லுமாம்...

தமிழ் மக்களின் மௌனத்தை விலைப் பேசும் படுபாதக கட்சி திமுக என்றல்லவா வரலாறுக் கூறிடும்...

இதுபற்றியெல்லாம் திமுகவுக்கு அக்கறையில்லை...

ஆனால்;
தமிழ் மக்களே மனதில் சிறுதும் சஞ்சலத்திற்கு இடம் தராமல்-

காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு மட்டுமல்ல, இவ்விரு கட்சிகளுக்குத் துணைப் போகும்  கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள்...

இந்திய தேர்தல் முறையால்-
தமிழகத்தின் உரிமை மீட்பு மயிரளவும் நடவாது...

ஆதலால்; இக்கட்சிகளுக்கு மாற்றாய் நோட்டா எனும் சவுக்கை எடுத்து
விளாசுங்கள்...

இந்த விளாசலில், ஏற்படும் தழும்பு தமிழ்நாட்டின் துரோக கட்சிகளுக்கு பாடமாக அமையட்டும்...
- அரங்க கனகராசன்  
  19022019
----------------------------------------------------------------------------------------------------


இது ஊமைகளின் தேசம்  
-------------------------------------- 



தமிழ்நிலம் சுருங்கிக்கொண்டிருக்கிறது...

தமிழ்மக்களின்  அடையாளம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ....

இன்னமும் நேரம் முடிந்து விடவில்லை...

இனிமேலும் அமைதியாய் இருந்தால்-

இது ஊமைகளின் தேசம் 

செவிடர்களின் கூடாரம் 

பார்வையற்றோரின் பட்டறை 

என்று வரலாறு கூறும் நிலை வந்துவிடும்...

வடவனின் வல்லாதிக்கம் பெருகிவிட்டது தமிழ்நாட்டில்!

வடவனிடம் பொருள் வாங்காதீர்கள்...

வடவனின் உற்பத்திப் பொருட்களைப்  புறக்கணியுங்கள்...

வடவனை அடிமை வேலைக்கும் சேர்க்காதீர்கள்...

தமிழ்நாட்டை - தமிழனை -தமிழை - தேட வைத்துவிடாதீர்கள்...

இரண்டு தேசிய கட்சிகளுமே தமிழினத்தின் குருதியில் குளிப்பவை !

-அரங்க கனகராசன்  
06022019
--------------------------------------------------------------------------------------------------------------


2019ல் பிரதமர்
-----------------------
2019 நாடாளுமன்றம் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவாா்கள்...
மக்களவை உறுப்பினர்களில் பிரதமர் பொறுப்பு ஏற்க விரும்புகிறவர்கள் நீட் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்?
26012019
---------------------------------------------------------------------------------------------------------





உழவனும் ஆசிரியனும் மருத்துவனும்...
-------------------------------------
மக்கள் வாிப் பணத்தில் ஆசிாியா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது...
இதனை விவாதப் பொருளாக்குவது நியாயமில்லை...
ஓர் அரசானது தனது வருவாயின் பெரும்பங்கை உழவு, கல்வி, மருத்துவத்திற்கு முறையாக வழங்க வேண்டும்
உழவன் சேற்றில் இறங்கவில்லையெனில் நாடு சாவின் விளிம்பில் ஊசலாடும்...
ஆசிரியன் கல்வியைக் கற்பித்தல் செய்யாதுவிட்டால் எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தும் சான்றோர் கிடைக்க மாட்டார்கள்...
மருத்துவம் இல்லையென்றால் மக்களின் வாழ்வில் நலம் குன்றும்
உழவு, கல்வி , மருத்துவம் இம்மூன்றும் நாட்டின் முதுகெலும்பெனலாம்...
இதில் குறையிருப்பின் நாடு கயவர் பூமியாகிடும்...
பாா்ப்பானர்களின் மேலாதிக்கம் கொடூரமாகும்...
ஆதலால் ஆசிாியருக்கு தரப்படும் ஊதியம் குறித்துக் குறைக் கூறலாகாது...
அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவன யாவும் தனியாா் ஆசிாியா்களுக்கும் கிட்டிட வழிக்கோல வேண்டும் ...
ஆசிாியா் வாழ்வில் தன்னிறைவு இருந்தால் நல்ல மாணவர்கள் வாா்க்கப்படுவாா்கள்...
-- அரங்க கனகராசன்
25012019
-------------------------------------------------------------------------------------------------------------------

ஆரியர் மேலும் மேலும் சுகமாக வாழட்டும்
-------------------------------------------------- 


இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர் உணர்வு மதிக்கப்படும்!

அல்ல!

அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழர் உணர்வு மதிக்கப்படும்...

-இப்படியே எழுபது ஆண்டுகள் ஓடிவிட்டன...

கொள்கை வழி வந்த கட்சியினரும், பதவி கிடைத்த சுகத்தில் மேயலாயினர்...

பதவி மோகத்தில்  அவர்கள்  தம்மைத்  'தமிழர்கள்' என்பதை மறந்து இந்தியர் என்ற உணர்வுக்குள்  புதைந்தனர்...

அவர்கள் சீர் பெற்றனர்...

தமிழினமோ துயரங்களை சுமக்க முடியாமல் தவித்தலுக்கு உள்ளாகி வருகிறது...

எந்தக் கட்சியாலும் தமிழினத்திற்கு விடியல் வரப்போவதில்லை...

ஏனெனில்;
இந்த தேர்தல் நமக்குள் எந்த முன்னேற்றத்தையும் செய்யப் போவதில்லை...

தேர்தல் அமைப்பு , தமிழனை  இந்தியாவின் அடிமை நிலையில் வைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...    

அதிகாரமற்ற மற்றும் இந்தியாவிடம் கையேந்தும் பதவிக்காக தமிழ்நாட்டு கட்சிகள் தமிழர்களை ஒவ்வோர் அய்ந்து ஆண்டும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன...

இந்தியாவின் வருவாய்க்காக  பெரும்பங்கை தமிழ்நாடு வரியாக செலுத்தி வருகிறது...

தமிழனின் வரியில் பார்ப்பனர்கள் கொழுக்கின்றனர்...

மேலும் தமிழினத்தை அழிக்கவும் தமிழனின் வரியை இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது...

ஆனால்;  தமிழ்நாட்டின் பெருங்கட்சிகள் இதனை உணரவிடாமல் தமிழ் மக்களை திசைத்  திருப்பி விடுகின்றன; கையேந்தும் முதல்வர் பதவிக்காக!

மாடுகள் ஓட்டி, நாடோடிகளாய் நுழைந்த பார்ப்பனர்கள்  அறியாமை என்ற இருளை நம் முன்னோர்கள் மீது போர்த்தி,  நம் மூதாதையர்களை  சூத்திரர்களாக்கி - பார்ப்பனர்கள் தங்களை  உயர்குடிகளாக்கிக் கொண்டு ஏய்த்தனர் எனில், - பார்ப்பனர்களின் சாதனை  என்பதா? அல்லது  நமது முன்னோர்கள் பார்ப்பனர்களின் சிவப்புத் தோலில் வீழ்ந்த  வேதனை என்பதா?

என்ன செய்ய புலம்புதல் அன்றி?
     
இனியென்ன...

வந்தாரை வாழவைப்போம்...

இட ஒதுக்கீட்டில் பத்து சதம் எடுத்துக் கொண்டனர்...
நாடோடிகளாய் நுழைந்திட்ட பரர்ப்பானர்கள், நம் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில்-

சிறுபான்மையினர் ஆவர்...

சிறுபான்மையினருக்கு ஆதரவு நல்குதல் என்ற அடிப்படையில்-

வேலை வாய்ப்பு மற்றும் சகல ஏற்பாடுகளையும் நூறு சதம் விட்டுக் கொடுத்து வந்தேறிகள் பார்ப்பனர்களை சொகுசுடன் வாழவைத்து சூத்திரர் என்ற பட்டத்தை நிரந்தரமாக சுமக்க வேண்டியதுதான்...

இன்றைய தமிழக பெருங்கட்சிகளை  நம்புவோம்...

தேர்தல் முறைக்கு ஆதரவளிப்போம்!
- அரங்க கனகராசன்.  
12012018
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படியும் பேசுவாரா டுமிழிசை?
"சபாிமலையில் பெண்கள் நுழைந்தது மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது...
இதற்கு பாிகரமாய் தமிழக பாசிசத்தின் சார்பாக நான் ஒரு முக்கிய போராட்டத்தை அறிவிக்கிறேன்...
மேலாடை அணிய பெண்களுக்குத் தடையிருந்தது...
அந்த பாரம்பாியம் இன்றும் மீறப்படுவதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் -
நான் கமலாலயத்தில் பெண்கள் மேலாடைக் கழற்றி எறியும் போராட்டத்தை என் தலைமையில் நடத்துவேன் என்பதை மதிப்பிற்குாிய பினரயி விஜயன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் "
-அரங்க கனகராசன் 
03012019
--------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்தியாவின் பகை நாடோ தமிழ்நாடு?
இந்தோனிசியா ஆழிப்பேரலையில் மாண்டோா்க்கு இந்தியாவின் பிரதமர் இந்தி மோடி இரங்கல் தெரிவிக்கிறார்...
உதவியும் செய்ய ஓடி வருகிறேன் என்கிறார்...
தமிழ்நாட்டை சீரழித்து, கோரத்தாண்டவம் ஆடிய கஜாப் புயலால் போிடாில் தவிக்கும் தமிழனுக்கு துளியும் ஆறுதல் சொல்லவில்லை இந்தி மோடி!
தமிழ்நாெடன்ன இந்தியாவின் பகை நாடா?...
அல்லது
தமிழர் அழிந்தால்தான் தமிழ்தாட்டின் கனிமவளத்தை கொள்ளயிட முடியும் என்றோர் குரூர எண்ணமா?
இதனைத்தான் ஆங்கிலத்தில் sadist என்பரோ?
தமிழா, தமிழ்நாடு தமிழர் நாடு என்பதை பிரகடனம் செய்ய விரைந்தெழு...
-அரங்க கனகராசன் 
25122018
------------------------------------------------------------------------------------------------------------------------


அடிமை எடப்பாடி ஓட்டமெடுப்பது எப்போது?


தந்தையின் கடின உழைப்பால் கட்டப்பட்ட எஃகு கோட்டைக்குள் தடங்கலின்றி நுழைந்து விட்டார் ஸ்டாலின்...

மிக அருமையான எஃகு கோட்டை!

அந்த கோட்டையின் வரலாறு மிக உன்னதமானது!

தனது திருமணநாளின் போதும், இந்தியெதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர் கருணாநிதி!...

அவருடைய உழைப்புத்தான் அவருக்கு உரிய இடத்தை வழங்கியது...

அவரின் வாரிசான ஸ்டாலின் இன்று திமுகவின் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார்...

எதிர்கட்சிக்குரிய பாங்கினை அவர் ஆற்றுகிறாரா? அல்லது அறிக்கை மட்டுமே அரசியல் நடத்த போதுமானதா? அல்லது பெயரளவுக்கு போராட்டம் நடத்தி, கண்டன அரசியல் நடத்துவது மட்டுமே போதுமானதா?  அல்லது தீர்வை நோக்கிய களம் அவசியமில்லையா?  அல்லது கட்சியின் தலைமை இடத்தைப் பிடித்தாயிற்று  முதல்வர் நாற்காலிதான் அடுத்தக் குறி என்பதுதான்  அவரின் நோக்கமா?

ஓர் எதிர்கட்சி தமிழகத்தில் உள்ளதா என்றோர் வினா பரவலாக எழுப்பப் படுகிறது... 

மேகதாது அணையால் காவிரிப் படுகை பாழாகும் என்பது அவருக்குத் தெரியும்... 

கஜா  புயலால் உருக்குலைந்த காவிரிப் படுகை மக்கள் குந்தவும், தாகத்திற்கு  குடிக்கவும் அல்லாடுகின்றனர் என்பதும் ஸ்டாலினுக்கு தெரியும்...

ஸ்டெர்லைட் ஆலையின் குள்ளநரித்தனமும் - மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான முனைவும் - அந்த முனைவால் தூத்துக்குடி மக்கள் அடைந்திருக்கும் துயரமும் ஸ்டாலின் அறிவார்...

நீட் எனும் கொடு நோய் தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்களின் கல்வியுரிமையை கொல்லும் என்பதும் ஸ்டாலின் அறிவார்...  

அறிந்தால் மட்டும் போதுமா?

தமிழ் மக்களின் இத்தனை துயர் நிலைக்கும் பொறுப்பாக விளங்குவது எடப்பாடியின் அடிமை அரசல்லவா?...   

ஓர் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக இருந்திருப்பின், அடிமை எடப்பாடி யாருக்கும் தெரியாமல் நாட்டைவிட்டே ஓடியிருந்திருப்பார்...

ஓர் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக விளங்குமேயானால், இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கின் விளைவாய் தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் - விமான நிலையங்கள் - தொடர்வண்டி நிலையங்கள் பக்கவாதம் பிடித்து செயலற்றுப் போயிருக்குமே...

ஆனால்; அதுபற்றியெல்லாம் அக்கறையற்றத்  தன்மையோடு இருக்கிறதோ திமுக என்ற வினாவினை மக்கள் இன்று தொடுக்கின்றனர்...

கட்சியின் செலவில்தான் தந்தைக்கு சிலைத்  திறப்பு விழா நடத்தினார் என்றாலும், இன்றைய அவலங்களுக்கிடையில் - இப்படி விழா நடத்த எப்படி மனம் வருகிறது...

வாக்கு வாங்கி அரசியலை மனதில் வைத்து, முதல்வர் நாற்காலியை நோக்கிய நகர்வு மட்டுமே நாட்டு நலன் சார்ந்திடுமா?...

அடிமையால் தமிழ்நாடு ஊனமாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம் கொழுந்து விட்டெறிந்திட வேண்டிய நேரத்தில்-

சிலை திறப்பு கூத்து அவசியம்தானா?

ஓர் பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு, இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்தும், அடிமை நாய்களிடமிருந்தும் தமிழ் மண்ணை மீட்டு தமிழ் மண்ணுக்கு அரனாய் விளங்கிட வேண்டுமென்று திமுவிடம் மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லையே...

ஏனெனில்; திமுக என்பது மிகப்பெரிய இயக்கமாக இப்போது உள்ளது...

இந்த இயக்கத்தை ஆக்கபூர்வமாக - தமிழ் மண் நலன் மீட்புக்காக - வழிநடத்திட வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு உண்டல்லவா...  
 - அரங்க கனகராசன்.
19122018
----------------------------------------------------------------------------------------------------------------------------------


விடுதலைப்புலிகள் மீதானத் தடை நீக்கப்படுமா?
------------------------------------------------------ 

பேராசிரியர் அன்பழகனுக்கு இல்லாத தகுதி, சோனியாவுக்கு இருக்கிறதா கலைஞர் சிலைத் திறக்க என்று நான் வினா எழுப்பிட விரும்பவில்லை...

ஆனால், சிலைத் திறக்கப்பட்டவுடன், மேடையில் அன்பழகன் தனித்து விடபட்டக் காட்சி, நெருடலை ஏற்படுத்தியது...

திமுகவின் வளர்ச்சிக்கு அன்பழகன் ஆற்றிய பங்களிப்பு மனக் கண்ணில் தோன்றி வாதிக்கிறது...

அவருடைய உழைப்பாலும் வளர்க்கப்பட்ட திமுக இன்றோர் குடும்பத்தின் கை பொம்மையாகி விட்டதை நினைக்கும் போது நெஞ்சில் ரணம் உண்டாவதைத் தடுக்கவியலாது...

இங்கே இதனை அலச விரும்பவில்லை...

கலைஞர் சிலை சோனியாவால் திறக்கப்பட்ட நிகழ்வு 2009 ஆம் ஆண்டின் நினைவலைகளை ஏற்படுத்தவில்லை என்று எவராலும் மறுக்க முடியாது...

அந்த  நினைவலைகள்  ஏற்படுத்தும் காயம் ஆறாதது!...

காயத்தை உண்டாக்கிய இரு கட்சிகளும் இன்று கைகோர்த்து விட்டன...

2009க்குப் பிறகு தமிழ் மண்ணை மிதிக்க அஞ்சியிருந்த ராகுலை, விருந்தாளியாக்கி விட்டது திமுக! 

இந்நிலையில் -
பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார் ஸ்டாலின் அவர்களால்!...

2009ம் ஆண்டு காயத்தின் இரணம் தீர, காங்கிரசோடு திமுக ஏதும் பேசியுள்ளதா என்பதையறிய தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இருக்கின்றனர்...

ராகுல் பிரதமர் ஆனால், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்று ஒப்புதல் வழங்கியுள்ளாரா ராகுல் என்பதை ஸ்டாலின் தெளிவுப் படுத்த வேண்டும்...

ராகுல் பிரதமரானால், ஈழம் மீட்டெடுத்து தரப்படும் என்றோர் வாக்கும் ராகுலால் திமுகவுக்கு தரப்பட்டுள்ளதா என்பதையும் திமுக விளக்கிட வேண்டும்...

அல்லாமல், தமிழினத்தைக்  கொன்ற கட்சியோடு திமுக உறவு வைத்துக் கொண்டால்-

அந்த உறவானது வாக்கு வங்கி அரசியலை மையம் படுத்தி-

பதவி சுகத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உறவாகவே கருதப்படும்...

மக்களின் நினைவாற்றல் மங்கிவிட்டது என்றோர் தப்புக் கணக்கு போட்டு, தமிழினத்திற்கு நன்மை இல்லாவிடினும் காங்கிரசோடு கைக் கோர்த்து பதவி சுகம் காண மீண்டும் முயன்றால்-

அது-
திமுக, தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்...

ஆதலால், தேர்தலுக்கு முன்பே-

காங்கிரசோடு கை கோர்ப்பதால், நீட் உட்பட தமிழர் உரிமையும், ஈழத்தமிழர்களின் நலனும் காக்கப்படும் என்பதை திமுக பிரகடனம் படுத்திட வேண்டும் - காங்கிரசின் நிலைப்பாட்டோடு! 
   
அல்லவெனில்; இத்தைகைய கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை தமிழ் மக்கள் உணர்த்துவார்கள்...

-அரங்க கனகராசன். 
17122018
-----------------------------------------------------------------------------------------------------------------------





தலித் மக்களுக்கென தனி மொழியுண்டா?
-----------------------------------------


சாதியக் கட்டமைப்பில் தமிழன் வெளியேற-

ஆரியனை விரட்ட தமிழ் இளைஞர்கள் வழிகாண்பர்  என  நாடு காத்திருக்க-

சாதியக் கட்டமைப்பை வலுவேற்றும் முயற்சியில் இயக்குனர் ரஞ்சித் இறங்கியிருப்பது வேதனையானது...

இன்னொரு ராமதாசு உருவாவதால் தமிழ்நாட்டுக்கு ஏதும் பலனுண்டோ?...

தலித் என்பவன் யார்?

அவன் மொழி யாது?

அவன் உணர்வு யாது?

தமிழன்!...  தமிழ்!... தமிழ்நாடு தனி நாடு!

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை...

இதனை வலுவாக்கி - சாதி பேதம்தனை - களைந்து, தனிநாடு காணவேண்டிய சூழலை உருவாக்காமல் ஆரியத்தின் பிடியில் சிக்கி சாதியம் பேசுவது எந்த வகையில் நியாயம்?...   

 முதலியார் பெண்ணை மணம் புரி!...

வன்னியர் பெண்ணை கைப்பிடி!...

கவுண்டன் மகளை கல்யாணம் செய் என்று போதிக்கின்றனர் தலித் தலைவர்கள் சிலர், ஒடுக்க பட்ட இளைஞர்களுக்கு!

ஒரு இளைஞன் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே சான்றோரின் விருப்பமாயிருக்கையில் -

படிக்கும் காலத்திலியே காதல் உணர்வைத்  தூண்டுவது நியாயமா?...

படிக்கவேண்டும்... எதிர் காலத்தில் அவன் மருத்துவனாகவோ - துறைச்  சார்ந்த நிபுணனாகவோ - தொழில் முனைபவனாகவோ மாறவேண்டும்!...

ஏறக்குறைய  அவன் சுயமாக வருவாய் ஈட்டும் நிலையை எட்டியப் பிறகு, உடன் பணிபுரியும் பெண்ணோடு பழக்கம் ஏற்படின் அது இயல்பானக் காதலாக மிளிரும்...

மாறாய் அவன் படிக்கும் காலத்திலேயே -
அவனை "நீ தலித்! நீ வன்னியர் பெண்ணை வசியம் செய்!... முதலியார் பெண்ணை மயக்கு!... கவுண்டர் கன்னியை காதலி " என்று சொல்லிக் கொடுத்தால்-

அவன் சக மாணவியை மாணவியாகப் பாராமல்-

அவள் என்ன சாதிப் பெண்? அவளை மயக்குவது எப்படி?  என்று ஆராய்வதிலும் அவளை மயக்குவதிலும் அவன் நாட்டம் கொள்ள முனைந்தால்-

அவன் அவனையறியாமலே சாதிய வட்டத்துக்குள் தன்னை திணித்துக் கொள்கிறான் என்றுதானே பொருளாகிறது...

இப்படிப் பட்டவர்களின் செயல் இயல்பாகவே மலரும் காதல் மீதும் அய்யம் கொள்ள வைக்குமே...

முதலியார் - வன்னியர் - கவுண்டர் - என பெண்களைத் தேடி அவர்களை மயக்க முற்படும் இளைஞன் -

அவனை யறியாமலே அவன் மேற்சொன்ன சாதிகளுக்கும் கீழானவன் என்பதை அவன் தன்னைத்தானே பறைச் சாற்றி கொள்ளுதல் போலாகாதா?...           

அண்மையில் கோவையில் ஒரு குழுவினர் இயற்றிய பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது...

"எந்தச்  சாதியானாலும் நீ பார்ப்பானனின் தாசிமகன்தான்" என்ற பாடலை கேட்டுப் பாருங்கள்...   

சாதியின் ஆணிவேர் பார்ப்பனன் தான் என்பது விளங்கும்!...

ஆணிவேரைப்  பிடுங்க முயலாமல் சாதிய வட்டத்தை வலுவாக்குவது மேலும் மேலும் மனிதர்களை தாழ்வுப் படுத்தும் என்பதை தலித் இளைஞர்கள் நினைவில் கொள்வது நலமாகும்!...

அண்ணல் அம்பேத்காரின் பணியை எவர்தான் குறைக் கூறவியலும்...

தந்தை பெரியரைப் போற்றுகின்ற எவரும், பெரியாராலேயே பாராட்டப்பட்ட அண்ணல் அம்பேத்கரை போற்ற மறுப்பதில்லை!...

ஆனால்; தன்னை தலித் என முத்திரைகுத்திக் கொள்ளுவதற்காகவே, அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது  அண்ணலின் பணியை சிறு வட்டத்தில் அடக்க முயல்வதாகும்...

தலித் மக்களும் தமிழர்கள்தானே...

தமிழில் அம்பேத்கரைப் போற்றினால்- அது சிறுமையாகிவிடுமா?

"ஜெய் பீம்" என்று வடமொழியில் முழங்குவதால், நீங்கள் உங்களை தமிழர் அல்லர் என்று ஒப்புக் கொள்கிறீர்களா ரஞ்சித் அவர்களே...

அப்படியாயின் உங்களுக்கென்று தாய்மொழி ஏதும் உண்டா?

தெளிவுபடுத்துங்கள் ரஞ்சித்!

தமிழ்த்தான் உங்கள் தாய்மொழியெனில் தமிழினம் சாதியிலிருந்து விடுப்பட வழி காணுங்கள்...

அல்லாமல்; சாதிய கோடு வரைவது நன்றல்ல!

ஒரு படைப்பாளியின் சிந்தனை பரந்திருக்க வேண்டும்; சிறு வட்டத்திற்குள் சிக்கக்கூடாது!...         
- அரங்க கனகராசன்.
10122018
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
சரஸ்வதி பூசை 
------------------------
ஏய்... சரஸ்வதி... ஏய்... சரஸ்வதி... எங்கேடி இருக்கே...

யாருப்பா நீ?... எதுக்கு சரஸ்வதியைத் தேடறே?...

கல்விக் கடவுள் யார்?

நீ தேடிட்டு இருக்கியே சரஸ்வதி... சரஸ்வதிதான் கல்விக் கடவுள்... அவளை ஏன்டா தேடிட்டு இருக்கே?...

சரஸ்வதி கடவுளா இருக்கறது இந்த நாட்டில்தானே?...

ஆமாடா... இதிலென்ன சந்தேகம்?

எங்க முன்னோர்களைப் படிக்கவிடாமல் ஒரு கூட்டம் தடை செஞ்சதே... அப்ப இந்த சரஸ்வதி என்ன புடிங்கிட்டு இருந்தா.... தடைமீறிப் படிச்ச, எங்க முன்னோர்களின் நாக்கை அறுத்தாங்களே... அறுக்கறதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தாளே சரஸ்வதி... அவளை, இந்த நாட்டில் இருந்து துரத்தியடிக்கணும்... அவ எங்கே?...  

அடேய், இல்லாத ஒருத்தியை ஏண்டா தேடுகிறாய்... படிக்கவிடாமல் தடுத்தக் கூட்டத்தைத் தூக்கிவீசினால், இல்லாதக்  கடவுளும் இல்லாதுப் போகுமடா... போடா... பிழைப்புக்காகக் கடவுளை உண்டு செய்தவனத் துரத்து... உண்டாக்கப்பட்ட கடவுளும் ஓடிரும்டா... அப்போ; இல்லாத சரஸ்வதிக்கும் இங்கே பூசை நடக்காதுடா.... அடி வேரை விட்டு, பொடி வேரைபுடுங்காதேடா...
- #அரங்ககனகராசன் 
12102024
--------------------------------------------------------------------------------------

------------------------------------------
நாடிநரம்புகளின் மீது தாக்குதல் தொடுத்துள்ளான் சீமான்...
கோவை கு #இராமகிருட்டிணன், விடுதலை #இராசேந்திரன், #திருமுருகன் காந்தி மற்றும் கொளத்தூர் #மணி ஆகியோர் எதிர்வினை ஆற்றி தங்கள் தலைவன் மீது வீசப்பட்ட அபாண்டம் களைய வீறு கொண்டுள்ளனர்...
தி க, திமுக வின் இந்த உறக்கம் ஆயிரம் சீமான் கள் உருவாக வழி வகுக்கும்...
1965ல் நடந்தேறிய இந்திப் போருக்கு நிகரான ஓர் களம் அமைக்கப்பட்டால் ஒழிய, சீமான், வழியாக ஆர் எஸ் எஸ் போடும் சதி முறியடிக்கப்பட முடியாமல் போகும்... அதற்கு #திக, #திமுக உறுதணையாகிடக் கூடாது...
11012025

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்