எனது கட்டுரைகள்
arangakanagarasanஎனது கட்டுரைகள்
---------------------------------------(17032017)
" மருத்துவர் சொல்லைத் தட்டாதே! " - மருத்துவர் பாலகிருஷ்ணன்!
தவறாமல் வாக்களிப்பதால், தமிழ்நாட்டை உய்விக்க முடியும் என்று எதை வைத்து மக்களை ஏமாற்ற முயல்கிறார் முருகதாசு.
எதிர்த்தெருவில் ஒருவன் குடியிருந்தான் வாடகைக்கு!
ஒரு சாமானியனாக - சராசரி மானிடனாக - ஒரு புரிதலுக்காக
இன்னும் ஒரு தீர்ப்பு இருக்கிறது...
அந்தத் தாக்குதல் காவல்துறையின் மீதோ, நீதிமன்றத்தின் மீதோ தொடுக்கப்பட்டதாக நாம் கருதவியலாது!
இன்று ஆசிரியர் நாளாம்!
கொட்டும் மழையில் திமுக துவக்கப்பட்டது!
மிகப் பழையக் காலம்!
மொழி உருவாக்கம்...
------------------------
டேய், எச்சில் கைக் கூலி சைமனே, பிறப்பால் ஒருவன் தமிழனாக முடியாது...
உணர்வால் - உணர்ச்சியால் - மட்டுமே தமிழன் எனும் நிலையை எய்ய முடியும்...
கைக் கூலிகள் 'யார் தமிழர்' என்று அளவிட அருகதை யற்றவர்கள்...
மானுடத்தோற்றம் மொழியோடு நிகழவில்லை...
மானிடன் பிறந்தப் பிறகே மொழியை உருவாக்கி னான்... ஒரு கும்பல் - அல்லது குழு - மொழி உருவாக்கத் தை எடுத்துச் சென்றது...
அந்தக் குழுவினரிடையே ஏற்பட்ட பிளவுகள் பல மொழிகளை உருவாக்கின...
மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிக்கு ஒரு சான்று 'இந்தி மொழி'
மருதமலைக்கு அரோகரா
---------------------------------------
நேற்றைய நாள் இந்தி மோடி கோவை வந்திருந்தார்....
வணக்க்க்ஆம் என்று சொல்லிப் பேச்சை ஆரம்பித்த இந்தி மோடி பிறிதொன்றையும் சூசகமாகச் சொன்னார்...
"மர்தமலக்கோ அரோஹரா"
கோவை மக்களே, கோவைக்கு அரணாய்த் திகழும் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியான மருதமலை இந்தி மோடியின் கண்களை ஈர்க்கத் தொடங்கி விட்டதோ....
மீண்டும் மோடி வந்தால் அம்பாணி குழுமத்திற்கோ வேதாந்த குழுமத்திற்கோ மருதமலையை தாரை வார்த்து விடலாம்...
அதன் பாதிப்பு மிகப் பெரும் அளவில் கோவை மக்களுக்கு அமையலாம்...
ஏமாந்து விடாதீர்கள்
-தென்றல் கனகு
-தென்றல் கனகு
11042019
-------------------------------------------------------------------------------------------------------------------------
" மருத்துவர் சொல்லைத் தட்டாதே! " - மருத்துவர் பாலகிருஷ்ணன்!
------------------------------------------------------------
நான்காண்டுகளுக்கு முன்னர், ஒருநாள்-
நடக்கும்போது கால் இடறியது!
கோவை psg மருத்துவமனைச் சென்றிருந்தேன்.
நரம்பியல் மருத்துவர் திரு. பாலகிருஷ்ணன் என்னை சோதித்துவிட்டு, இருதயத் துறைக்கு என்னை சக்கர நாற்காலியில் அவசரமாக அனுப்பிவைத்தார்...
நான் கொண்டுப் போவதற்கு முன்-
" சார், கால்" என்றேன்.
" முதலில் இருதயம்." என்று கண்டிப்புடன் சொல்லி இருதயப் பிரிவுக்கு அவசரம் அவசரமாக அனுப்பிவைத்தார்...
அவர் நரம்பியல் துறை மருத்துவர் என்ற போதிலும், என் உடலின் முதல் அபாயம் குறித்து உணர்ந்து, செயல்பட்டார்...
நான் இருதயத்துறைக்கு கொண்டுப் போவதற்கு முன்னரே, அங்கு எனக்கு வேண்டிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன...
மருத்துவர்குழு உடனடியாக எனக்கான மருத்துவம் மேற்கொண்டனர்...
இதனிடையே, நரம்பியல் மருத்துவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு வந்திருந்தது பக்கவாதம் என்பதையும் அறிந்து அதற்கேற்ப நலம் படுத்தினார்...
இதனை இங்கு நான் குறிப்பிடுவது ஏனெனில், மருத்துவர் என்பவர் 'நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' எனும் நெறியை நரம்பியல் மருத்துவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் கொண்டிருந்தார் என்பதை சுட்டிக் காட்டவே!
இல்லம் திரும்பும் போது, ஒன்றை எனக்குக் கூறினார் :
"எக்காரணம் கொண்டும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற தவற வேண்டாம்... உடலில் எதிர்மறை விளைவு எது தெரிந்தாலும், மருத்துவரை உடனடியாகப் பார்க்க வேண்டும்"
ஆனால்; நானோ அவரின் அறிவுரையை மறந்திருந்தேன்...
நடக்கும் போது ஏற்பட்ட சிறு வலியை நான் பொருட் படுத்தவில்லை...
தூங்கி எழுந்தால், சரியாகிவிடும் என தவறாய் நினைத்தேன்...
என் அறிவீனம், இப்போது-
பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் சேர்த்ததோடு, அறுவை மருத்துவம் செலவினத்திற்கும் வழிகோலியது...
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...
கோவை PSG நரம்பியல் மருத்துவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களை!
" மருத்துவர் சொல்லைத் தட்டாதே"
- அரங்க கனகராசன்.
04122018
----------------------------------------------------------------------------------------------------------------------
சர்க்கார் படமும் அடிமைகளின் நாடகமும்...
----------------------------------------- --------
ஒரு படம் அல்லது படைப்பு என்பது 'முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் ' கொண்டிருக்க வேண்டும்.
சர்க்கார் படத்தில் முகமும் இல்லை! பிரதிமுகமும் இல்லை!...
இதில் துய்த்தல் எங்கே இருக்கும்?
சிங்கள ராணுவத்தால் சிதைக்கப்பட்டார் நாயகனின் தந்தை!
இதன் விளைவு ஏற்படுத்தும் தாக்கம் துளியளவும் படத்தில் கையாளப்படவில்லை!...
உள்ளூர் நிகழ்வு அரசியலைத் தொட்டுக் காட்டுவதால் மட்டுமே இது தமிழ்நாட்டை உய்விக்கும் படைப்பாகி விடுமோ?
சம்பவங்கள் நகர்வில் எதார்த்தம் இல்லை... செயற்கைத் தனமே மேலோங்கி மசாலாத் தனத்தை கண்முன் நிறுத்துகிறது...
சுரேஷ் கீர்த்தியின் கதை பாத்திரம் எதற்கு? அது படத்தில் ஏற்படுத்தும் விளைவு என்ன?
இவ்வளவு பணம் செலவு செய்து ஒரு சர்க்கார் படம் எடுத்ததற்கு, நல்லக் கதையோடு கோடம்பாக்கத்தில் அலைந்துக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பல இயக்குனர்களை உருவாக்கியிருக்கலாம்...
ஒருவிரல் புரட்சியால் மட்டுமே தமிழ்நாட்டை மீள்கட்டமைக்க முடியும் என்பது பாமரமக்களை ஏமாற்றும் போக்கு!
படித்த இளைஞரக்ளின் சிந்தனையைத் தூண்டுவதாக சர்க்கார் படம் அமையவில்லை.
கைத்தட்டலுக்காக வசனங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன! வணிக உத்தி!
வணிக உத்திக்காக தமிழ் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சியை படைப்பாளிகள் இனிமேலும் கையாளக்கூடாது!...
தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டை மீள் கட்டமைக்க தலைவர் பிரபாகரன் வழி காட்டியிருக்கிறார்...
வணிக உத்திக்காக தமிழின உணர்வைக் கையில் ஏந்தாமலிருப்பதே முருகதாசு போன்ற படைப்பாளிகள் தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மையாக அமையும்...
கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கூத்துதான் இப்போது அரங்கேறியிருக்கிறது...
அப்படியென்னக் குறையைக் கண்டார்கள் அடிமை அதிமுகவினர் சர்க்கார் படத்தில்...
எதிர்கட்சித் தலைவர் குற்றம் சுமத்துவதுப் போல் கமிசன் கலெக்சன் என்ற பாணியில் எதிர்ப்பு தெரிவிப்பது போல் படத்திற்கு விளம்பரம் செய்து சன் நிறுவனத்திடம் எத்தனை கையூட்டு பெற்றார்களோ இந்த அடிமைகள்?
இந்த அடிமைகள் விளம்பரம் படுத்தியிராவிட்டால் சர்க்கார் படம் பத்திலிருந்து இருபது நாட்களுக்குள் உறக்கத்தை தழுவியிருக்கும்...
ஒரு மசாலா படத்தை, கையூட்டுப் பெற்று ஓடச் செய்த பெருமை அடிமைகளுக்கே சேரும் என்று திரை ஆய்வாளர்கள் கூறுவது மெய்தான் போலும்...
ஆனால், ஒரு சம்பவம் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாய் சர்க்கார் படத்தில் உள்ளது.
ஆளுங்கட்சியின் அடியாட்கள் போல் செயல்படும் காவல்துறையின் அட்டகாசம் - கொடுங்கோன்மையை இந்த படம் தோலுரிக்கிறது...
ஆயினும், படத்தின் பெயரை தமிழில் வைக்காமல் வடமொழியில் சூட்டியிருப்பவர்களால் தமிழ்நாட்டுக்கு என்ன விடிவைத் தந்து விட முடியும் என்ற வினா எழாமல் இல்லை!
-அரங்க கனகராசன்.
10112018
-------------------------------------------------------------------------------------------------------
தூய்மை இந்தியா
வரி என்றப் பெயரில், மக்களை கசக்கிப்பிழிந்து, சாக்கடையில் நடக்கவிடும் தூய்மை இந்தியா...
கொஞ்ச நேரம் ரபேல் விமானத்தின் எண்ணத்திலிருந்து விடுபட்டு, மழைக்காலங்களில் தெருவில் நடந்துப் பாருங்கள்...
தூய்மை இந்தியாவின் வெற்றுக் கூச்சல் வெளிச்சம் ஆகிவிடும்!...
-அரங்க கனகராசன்
05102018
-------------------------------------------------------------------------------------------------------------
பொங்கி எழடா, தமிழா!...
அவனிடம் ஒருவன் வந்து, "ஓரிடம் வேண்டும் ஆழ்துளைக் கிணறு தோண்டி சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ள " என்று கேட்கிறான்...
எதிர்த்தெருவில் இருந்தவன், அவனை அழைத்துக் கொண்டு பக்கத்துத் தெருவுக்குள் நுழைந்து, ஒருவீட்டைக் காட்டி "இதோ இந்த வீட்டின் அருகில் நீரோடையுமிருக்கிறது... நீ, இந்த வீட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்டிக்கொள்" - என்கிறான்...
அவனும் சில ஆட்களோடு வந்து, சில இயந்திரங்களின் துணையோடு, குறிப்பிட்ட வீட்டை இடிக்க ஆரம்பிக்கிறான்...
உள்ளே குடியிருப்பவன் " யாரடா நீ என் வீட்டை இடிக்க?'' என்று கேட்டு, இடிக்க வந்தவர்களை அடித்து நொறுக்குகிறான்...
இடிக்க வந்தவனோ " அதோ அந்த எதிர்த் தெருக்காரன் இந்த இடத்தைக் காட்டினான்.." என்கிறான்...
" அவன் யாரடா எனக்கு உரிமையுள்ள வீட்டை, உனக்குக் காட்ட? உனக்கும் மந்தமாகிவிட்டதோ அறிவு? இந்த இடத்திற்கு உரியவன் எவன் என்று அறிந்திடாமல் வந்து இடிக்கிறாயே... அகதியென்று நினைத்தாயோ என்னை?.... இது எனக்கு உரிமையுள்ள வீடு... இனிமேலும் பித்தன் போல் அத்து மீறினாயெனில், அழித்து விடுவேன் உன்னை" என்று எச்சரித்துத் துரத்தி விடுகிறான்...
ஒரு வீட்டின் மீது, ஒருவனுக்கு உள்ள உரிமைக் கூட, தமிழ் நிலத்தின் மீது தமிழர்க்கு உரிமையில்லாது போயிற்றென்றால், தமிழன் நாதியற்றவனா?
டில்லியிலிருந்து ஒரு வடவன் சொல்கிறான் :
"தஞ்சை - நாகை - சோழவளநாடு சென்று, ஹைட்ரொ கார்பன் எடுத்துக்கொள்" - என்று!
இன்னொரு வடவனும் வந்து நம் நிலத்தில் நமது விருப்பம் இன்றி, ஹைட்ரொ கார்பன் எடுக்கிறான் எனில், மூதாதையர் நம்மை நாதியற்றவர்களாகவா விட்டுச் சென்றனர்?...
நம் நிலம்! நம் உரிமை! பொங்கி எழடா, தமிழா!
- அரங்க கனகராசன்.
03102018
-----------------------------------------------------------------------------------------------------
அண்ணல் காந்தியடிகள்!...
இன்று பிறந்ததாள் கொண்டாடப்படும் காந்தியடிகள் 'மகாத்மா' என்று அழைக்கப் படுபவர் ஆவர்..
மகாத்மா என்பது வடமொழி!... தமிழில் மாமனிதர் எனலாம்...
இன்னும் சிறப்புப்பட அழைப்பதென்றால் தமிழில் சான்றோன் எனலாம்...
சாி... மாமனிதர் எனும் சிறப்புக்கு காந்தியடிகள் உகந்தவரா என்பது எனது நெடுநளைய வினா!...
ஏனிந்த வினாவெனில், மாமனிதர் என்பவர் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவராக - நடுநிலையாளராக - வாழ்ந்திருக்க வேண்டும்...
அண்ணல் காந்தியடிகள் அத்தகைய வாழ்வு வாழ்ந்தாரா எனில் "இல்லை " என்பதுவே நடுநிலையாளரின் கருத்தாகும்...
அவர், நால்வர்ண பேதத்தை நிலைநாட்டவும், ஆரியத்தை திணிக்கவும் முயன்ற இராமனின் துதிப் பாடி நின்றவர் இறுதி மூச்சுவரைக்கும்...
மேலும், தீண்டாமை ஒழிப்பு என்ற போில் தீண்டாமை வளர உறுதுணைப் புரிந்தவராகவே காந்தியடிகள் தொிகிறாா்...
குலத்தொழிலுக்கு எதிராய் பொியாா் முழங்கி நின்றப்போது, 'குலத் தொழில் தவறல்ல! அது விதிப் பயனாகும்... ஆண்டவன் விதித்த விதிப்படி குலத் தொழில் செய்வதானது, அது ஆண்டவனுக்கு ஆற்றும் நற்கா்மமாகும் " என்று சாதியத் தீண்டாமைக்கு ஆதரவு குரல் கொடுத்தவா் அண்ணல் காந்தியடிகள்...
பகவத்கீதையை உயா்வாகப் பேசியவர் காந்தியடிகள்!...
கர்மம் செய்... பலனை எதிர்பாா்க்கதே என்பதுதானே பகவத் கீதை!...
பாா்ப்பனா்களுக்கு சேவை செய்வதுதான் கர்மம் என்றால், காந்தியடிகளை மாமனிதர் எனல் சாியாமோ?...
எனக்கென்னவோ, காந்தியடிகள் இந்து மதத்தின் தூதுவராகத்தான் தன்னை நிலைநிறுத்தினாா் என்றேப் படுகிறது...
ஒரு வட்டத்தில் தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட ஒருவரை மாமனிதர் என்றனரே... எவ்வாறு?...
விளங்கியோர் விளம்பிடின் புரிதல் கொள்வேன் நானும்...
-அரங்க கனகராசன்
-அரங்க கனகராசன்
02102018
-------------------------------------------------------------------------------------------------
உச்சநீதிமன்றத்திடம் பெரியாரின் கேள்வி!...
---------------
உச்சநீதிமன்றத்திடம் ஒரு கேள்வி!...
நேற்று ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால்!
கள்ளக்காதல் - கள்ளஉறவு - தவறில்லை என்று!
மிக முன்னேறிய நாடுகளில்கூட, கள்ளஉறவுக்கு வெளிப்படையான ஆதரவுநிலை இருப்பதாகத் தெரியவில்லை...
பிடிக்கவில்லையென்றால், மணமுறிவு செய்துக் கொண்டு, வாழ்க்கையில் வேறு பாதையைத் தேடிக் கொள்கிறார்கள்...
கள்ள உறவினை மேலைநாடுகள் பேணுவதாகத் தெரியவில்லை...
ஆயினும் நேற்றையத் தீர்ப்பின் மீது வினா தொடுப்பதைவிட, இன்றைய ஒரு தீர்ப்பின் பொருட்டு ஒரு வினா எழுப்பிடாமல் இருக்கயிலவில்லை...
இந்த தீர்ப்பின் பொருட்டுத்தான் சராசரி - சாமானிய - மானிடன் கேள்வி எழுகிறது!...
"சபரிமலைக்குப் பெண்களும் செல்லலாம்... ஆண்களுக்கு எந்தவிதத்திலும் பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்லர்"
என்ன அருமையான வரிகள்...
உச்சநீதின்றதின் இந்த வரிகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது...
சமூகநீதியின் பிரதிபலிப்பாக இருக்கிறதே இந்த வரிகள் என்று நான் வியக்கும் வேளையில்-
என்னுள் உறைந்திருக்கும் பெரியார் என்னை உசுப்பி விடுகிறார்...
அந்தப் பொல்லாத கிழவனின் உசுப்பல் இதுதான்:
"சபரிமலை கோவிலுக்குள் நுழையப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சொல்லும் உச்ச நீதிமன்றமே, கருவறைக்குள் நுழைந்திடவும் எல்லாருக்கும் உரிமையுண்டல்லவா?"
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் கேள்வி; பெரியாரிடமிருந்து!...
பெரியாரின் கேள்விக்கும் விடைத் தருமா, உச்சநீதிமன்றம்!...
- அரங்க கனகரசன்.
28092018
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் ஒரு தீர்ப்பு இருக்கிறது...
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திரன், அகலிகை மீது ஆசைக் கொள்கிறான்...
அகலிகையின் கணவன் நீராடச் சென்ற போதிலே, இந்திரன் கள்ளத்தனமாய் நுழைந்து அகலிகையைப் புணர்கிறான்...
அவன் இப்போது இந்துக்களுக்கு தெய்வம்!
மங்கையர் நீரிடும்போதிலே, திருடன் போல் நுழைந்து-
நீராடுந்துறையில் ஒளிந்து நின்று, மங்கையரின் ஆடைகளை களவாடியதோடு, குளித்து முடித்த மங்கையர் அணிய ஆடையின்றி தவிக்கும் தவிப்பை கள்ளமாய் கண்டு மகிழ்ந்தவன் கண்ணன்!
அவன் இப்போது இந்துக்களுக்கு தெய்வம்!
சிவன் - பார்வதி திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவன் பிரமன்.
நெருப்பை வலம்வருகையில்-
பார்வதியின் தொடையழகில் சித்தம் இழந்த பிரமனுக்கு, காமம் பீறிடுகிறது...
அந்த காமத்தில் பிறந்தவள் சரசுவதியாம்!...
மகளென்றும் பாராமல் பிரமன் சரசுவதியை புணர்ந்தானாம்...
அவனும் இந்துக்களுக்கு இப்போது தெய்வம்...
மகனைக் காவலுக்கு வைத்துவிட்டு பார்வதிக் குளிக்கச் செல்கிறாள்...
அன்னைக் குளிக்கிறாள் என்று அடங்கிக் கிடந்தானா விநாயகன்...
அன்னையென்றும் பாராமல், அவள் குளிக்கையில் கள்ளமாய் கண்டு மகிழ்ந்தவன் விநாயகன்...
அவனும் இந்துக்களுக்கு இப்போது தெய்வம்...
ஆக, பாலியலில் கள்ளத்தனம் என்பது பார்ப்பானார்களின் பார்வையில் தவறான ஒன்றல்ல!
இன்று உச்சநீதிமன்றம் கள்ள உறவுக்கு பாலம் கட்டியிருக்கிறது எனில் வியப்பில்லையே!...
மண்ணின் சுவை நீருக்கு இருக்கும் என்பதுபோல் ஆட்சியாளரின் குணம் தீர்ப்பில் வெளிப்படுவது இயல்பே!...
இன்னும் ஒரு தீர்ப்பு மீதியிருக்கிறது!...
அதனையும் உச்சநீதிமன்றம் வழங்கிடுமாவென்று காண்போம்...
அது எது என்கிறீர்களா?
சூத்திரப் பெண்களை பார்ப்பனன் கெடுப்பது தவறல்ல என்ற மனுநீதியையும் உச்சநீதிமன்றம் செல்லுபடியாக்கிவிட்டால்-
'இந்து' என்று கூவி நிற்கும் தமிழர்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்துப் பார்ப்போம்...
-அரங்க கனகராசன்.
27092018
-------------------------------------------------------------------------------------------------------------------------------
எச். ராஜா வின் குண்டு!
------------------------------ ------
அது பாசிசத்தின் வெளிப்பாடு என்பதையும் மறுக்கமுடியாது..
இன்று தந்தை பெரியார் சிலை மீது வீசப்பட்ட செருப்பு, தமிழ் உணர்வாளர்கள் மீதோ, பகுத்தறிவாளர்கள் மீதோ வீசப்பட்டதாக நாம் கருதிடக் கூடாது!
பெரியார் உயிரோடு இருந்தபோதே அவர் மீது செருப்பு வீசப்பட்டதை நாம் மறக்கமுடியாது...
செருப்பு வீசப்பட்டதால் பெரியார் துவண்டுவிடவில்லை!
அவர் பணியில் தொய்வும் ஏற்பட்டுவிடவில்லை...
சீர்திருத்தத்தின் சக்ரவர்த்தியாக ஆக்கப்பட்டார் பெரியார்.
இன்று அவரின் கற்சிலை மீது செருப்பினை எறிந்திருக்கிறார்கள் என்றால், பெரியார் இன்றும் பகுத்தறிவின் அரசனாகவே விளங்குகிறார் என்றுதான் பொருள்!...
பெரியாரின் தோழர்கள் ஆவேசமோ,ஆத்திரமோ கொள்ளாமல், பெரியாரின் வழியில் சென்று பாசிசத்தின் வேர்தனை அறுத்திடுக!...
கல்லூரி மாணவி வளர்மதி என்ன செய்தார்?
காவல்துறையைசாடினாரா?
நீதிமன்றத்தை மயிர் மன்றம் என்றாரா?...
அல்லவே!
மீத்தேன், கார்பன் போன்ற திட்டத்த்தால் தமிழ்நாடு பாழாகிவிடும் என்று துண்டு அறிக்கையை கொடுத்தார்...
இதென்ன தேசத்துரோகமா?...
ஆனால், வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது இந்தக்காவல்துறை!.
தூத்துக்குடியில்-
ஸ்டெர்லைட் ஆலை கக்கிய நச்சுப்புகைக்கு எதிராக குரல் கொடுத்த பத்தாம் வகுப்பு மாணவியின் வாயில் துப்பாக்கியை செருகி, சுட்டுக்கொன்றது காவல்துறை!
பாசிச ஆட்சி ஒழிக என்ற ஒற்றை முழக்கத்தின் பொருட்டு சோபியா கைது செய்யப்பட்டார்...
அப்போதெல்லாம் இது காவல்துறையா? ... ஏவல்துறையா என்று மக்கள்வினாத்தொடுத்தனர்...
அந்த வினாவினை உறுதிப்படுத்துவதுபோல் எச் ராஜா ஓர் கூற்றினை கூறியிருக்கிறார்...
காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது ; லஞ்சம் வாங்கி பணியாற்றுகிறவர்கள் தமிழக காவல்துறையினர் என்றோர் குற்றச்சாட்டை பகிரங்கமாக - நட்டநடுவீதியில் - போலீசை எதிரில் நிற்கவைத்து போலீசின் மீதே குற்றம் சுமத்தினார் எச். ராஜா!...
காவல்துறை என ஒன்று இல்லாவிட்டால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை அச்சம் நிறைந்ததாக இருக்கும்...
சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து அயோக்கியர்களின் பிடியில் சிக்கி மக்கள் நைந்து விடாமல் இருப்பதற்கு,காவல்துறையினர் ஆற்றும் பணி மகத்தானது...
ஆனால்; எச் . ராஜா காவல்துறையை மிகவும் கேவலமாக சித்தரித்துள்ளார்...
இது பொய்யா மெய்யா என்பது காவல்துறையால் மட்டுமே சொல்லமுடியும்...
மக்களின் எதிர்ப்பை சமாளிக்க, காவல்துறை சாதாரண ஒரு வழக்கினை போட்டு, எச். ராஜாவை காவல்துறை காப்பாற்றிடுமேயாயின், எச். ராஜாவின் கூற்று உண்மையாகிவிடும்!...
காவல்துறையே, எச். ராஜாவை குண்டர்சட்டத்தில் அடைத்து ஆவணசெய்திடுக!
அல்லவெனில், எச். ராஜா நீட்டிய லஞ்சத்தை வாங்கிக்கொண்டு ராஜாவை காப்பாற்றுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு காவல்துறை
உள்ளாகும் என்பதை மறந்து விடாதீர்கள்...
- அரங்க.கனகராசன்.
17092018
------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------
மாணாக்கர், மக்கள் என அனைவருக்கும் நன்னெறியை தந்த வள்ளுவனை ஆசிரியராக ஏற்றுக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்...
அதிகாரபீடத்தில் ஆரியர் வீற்றிருப்பதால், தமிழன் ஒருவனுக்கு ஆசிரியர் நாள் என ஒன்றை சிறப்புச் செய்திட இயலாது...
இதுவே, தமிழ்நாடு தனிநாடாக இருந்திருப்பின் சாத்தியமாகியிருக்கும்!...
கற்கவேண்டிய முறையை சொல்கிறான் :
"கற்கக் கசடற"
இதைவிட எளிமையாகவும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லித்தந்தவன் வள்ளுவனன்றி வேறெவன்?...
தமிழனின் அடையாளத்தை அழிக்கும் இந்தியத்தோடு இருக்கும்வரை தமிழுக்கோ, தமிழர் அடையாளத்திற்கோ நன்மை சாத்தியமாகாது...
- அரங்க கனகராசன்.
05092018
----------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் விடிவு?
பெரியாரிடத்தில் என்னப் பிழைக் கண்டறிந்து, திமுகவை தொடங்கினார் அண்ணா?
மூன்று தலைமுறையாக திமுகவுக்கு வாக்களித்து வருகிறோம்; 2009 வரை.
திமுகவை தொடங்கிய அண்ணா இன்று மரணத்தை வென்றவராய் உயிரோடு இருப்பாரேயானால், மனம் நொந்து விம்மியிருப்பர்.
பெரியார் மீது வீண் குற்றச்சாட்டை சுமத்தி, கொட்டும் மழையில் தொடங்கப்பட்ட கட்சி இன்று கருணாநிதி குடும்பத்திடம் வசமாகி விட்டதே என்று அண்ணா கண்ணீர் விட்டிருப்பார்...
தமிழின விடுதலையில் நாட்டம் செழுத்திய பெரியார், பதவி மோகம் கொள்ளாதீர்கள்; மோசம் போவீர்கள் என்றார்...
கேட்டாரா அண்ணா?
பதவி மோகத்தில், பெரியாரின் இறுதி ஆசையான தனிநாடு கோரிக்கையைக் கூட கடாசிவிட்டார் அண்ணா!
கடவுள் இல்லை என்ற உண்மைநிலையை - வாக்கு வங்கி அரசியல் வேண்டி - ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முலாம் பூசி மறைத்தார்...
பழையன கிளறுதல் நன்றோ என்று வினவும் தோழருக்கு ஒரு கேள்வி...
இனத்தின் விடுதலை பாற்பட்டு போயிற்றே... உணர்கிறீர்களா?
பெரியாரால் உருவாக்கப்பட்ட இலட்சிய வேட்கை நிரம்பிய இளைஞர் பட்டாளத்தை, பதவி மோகத்தில் உடைத்து திமுகவை கண்டார் அண்ணா!
திமுக, பெரியாரின் தனிநாடு கோரிக்கைக்காக எள்முனையளவாவது முனைப்புக் காட்டியதா?...
அண்ணாவின் மறைவுக்கு பின்னர், மாபெரும் இளைஞர் பட்டாளம் கொண்ட திமுகவை தன் புகழ் பாடும் கும்பலாக மாற்றியமைத்தார் கலைஞர்!
தமிழ்நாட்டு முஜிபுர் ரகுமான் என்ற புகழ்மொழிக்கு தம்மை உள்ளாக்கி புளகாங்கிதம் அடைந்தாரே ஒழிய, பெரியாரின் தனிநாடு கோரிக்கையை முன்னெடுப்பு செய்யவே இல்லை...
திமுக பிளவு படாதிருந்தால்-
பெரியார் உயிரோடு இருக்கும்போதே, தனித்தமிழ்நாடு பெற்றுத் தந்திருப்பர் எனில் மிகையாமோ?...
அய்ம்பது ஆண்டுகள் தலைவராக பதவி வகித்து, உலகசாதனைக் கண்டவர் கலைஞர் என்கின்றனர்...
உண்மைதான்!
அவரன்றி எவரையும் தலைவர் பொறுப்புக்கு வரவிடாமல் நாசூக்கான தாழிட்டார் என்பதுவே மறுக்கவியலா உண்மை!
ஒருவர் ஒருமுறை அல்லது இருமுறைக்கு மேல் தலைவர் பொறுப்பு வகிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து செயலாக்கம் செய்திருந்தால்-
கலைஞர் மெச்சத் தகுந்தவராகியிருப்பர்!
சாவின் விளிம்பைத் தொட்டு - முதுமையின் இயலாமையில் தாக்குண்டோம் என்று அவர் உணர்ந்த நிலையிலும், கட்சி பதவியைத் துறக்க மனமற்ற கலைஞரை தமிழகம் காணதானே செய்தது...
அந்த நிலையில் இருந்து இப்போது, பேராசிரியர் அன்பழகனும் அடிபிறழாமல் நிற்கிறார்; வயது மூப்பிலும் பதவியை விட்டுத்தர மனமின்றி!
அவர் விட்டுக் கொடுத்தால், அவர் வகிக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு கருணாநிதி குடும்பத்திற்கே அபகரிக்கப்படும்!...
மிகுந்த சிரமங்களைத் தாங்கி, ஸ்டாலின் திமுகவின் தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார் என்று புகழ்கின்றனர்...
அவர் தலைமை பொறுப்புக்கு வந்ததில் எமக்கு ஏதும் வருத்தமில்லை!
அவரை, தலைவர் பொறுப்புக்கு கொண்டுவர கலைஞர் நகர்த்திய சிரமங்களை வரலாறு மறவாது!...
நீள்நெடுங்காலம் ஸ்டாலின் தலைவராக நீடிக்கட்டும்!
ஆனால்; தமிழினத்தின் கதி?
இதோ...
கருத்துரிமைகள் மறுக்கப்படும் நிலை-
நச்சுக்காற்றிலிருந்து விடுதலை கேட்ட மாணவியின் வாயில் துப்பாக்கி செருகல்-
போராட்ட குணம் மிக்க திருமுருகன் காந்தி, வளர்மதி, போன்றோர் மீது அடக்குமுறை-
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
எதிர்க்கட்சி என ஒன்று இருக்கிறதா?
இதுவே-
போராளி பெண் பாலியல் சீண்டலுக்கு காவல்துறையால் ஆளாக்கப்பட்டிருப்பாரேயாயின் இந்நேரம் கேரளாவின் எதிர்கட்சிகள் செயல்பாடு எத்தனை வீரியமிக்கதாக இருந்திருக்கும்...
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்ன செய்கிறது?
கலைஞரை தனிநபர் துதி பாடி, மயக்கத்தில் ஆழ்த்தியது போல், இப்போது தனிநபர் துதி ஸ்டாலினுக்கு பாடப்படுகிறது...
மேம்படுமா தமிழ்நாடு?
வேல்முருகன், திருமுருகன் காந்தி, வளர்மதி, நந்தினி போன்றோர் பலர் தோண்றி, மேதகு பிரபாகரன் வழி நடந்தாலன்றி தமிழ்நாட்டுக்கு விடிவில்லை!... பெரியாரின் இறுதி கனவும் நிறைவேறாது!
- அரங்க கனகராசன்
29082018
---------------------------------------------------------------------------------------------------
ஒரு நாட்டின் விடியல்...
**** ( மெல்லப் படியுங்கள்... பொறுமையுள்ளோர் - இன உணர்வுள்ளோர் - அவசியம் படியுங்கள் )
அக்காலத்திலே பாரினில் செல்வந்தர் நாடு என்ற பெருமையிலும், வணிகத்திலும், கல்வி, கேள்வியிலும் பண்பாட்டிலும் மிகச்சிறப்போடு விளங்கிய நாடு அது!...
அந்நாட்களில்-
ஒருகூட்டம்- நாடற்ற கூட்டம் - ஏய்த்துப் பிழைக்கவும், பிறரை ஏமாற்றி சொகுசாக வாழவும் அலைந்துக் கொண்டிருந்தது...
அந்தக் கூட்டத்தினர் நுழைவைக் கண்டாலோ அல்லது அக்கூட்டத்தினரின் செயலை உணர்ந்தாலோ சில நாட்டினர், அக்கூட்டத்தினரை விரட்டியடித்தனர்...
அப்படியும்-
உழைத்து வாழ மனமின்றி-
ஏய்த்துப் பிழைக்கவே அந்தக்கூட்டம் அலைந்து திரிந்தது...
பண்பாட்டில் ஓங்கி விளங்கிய அந்த நாட்டின் மக்கள் வந்தாரை வரவேற்று, பசியாற்றும் தன்மைக் கொண்டவர்களாக இருந்தனர்...
அந்நாட்டின் பழக்கவழக்கம் கண்டு நாடோடிகள் வியப்பில் மூழ்கியதோடு, அங்கேயே தங்கி வயிற்றை நிரப்பி வந்தனர்...
ஏனெனில் -
அந்நாட்டு மக்கள் விருந்தளித்து மகிழ்வதிலும், கள்ளம் கபடமற்ற வாழ்க்கையமைப்பிலும் இருந்தனர்...
அம்மக்களின் கபடமற்ற வாழ்க்கை முறையானது-
நாடோடிகளுக்கு ஏய்த்துப் பிழைக்க சிறந்த இடமாக விளங்கியது...
கூடாரமிட்டு தங்களாயினர்!
அந்நாடோடிகளின் பெண்கள், நாடோடி ஆண்களுக்கு அடிபணிந்து இருந்ததோடு, நிறத்தில் சற்று சிவப்பாகவும், தொடைகள் தெரியும்படியான ஆடை தரித்து ஆடவர்களை ஈர்க்கும்படியாகவும் இருந்தார்கள்...
இந்நாடோடிகள் கூடாரமிட்டு தங்கியிருந்த வளமிகுந்த பகுதியின் வாழ்ந்த ஆண்களின் பார்வை, நாடோடிப்பெண்களின் தொடையின் மீது ஊர்ந்த்ததில் வியப்பில்லை!
ஆயினும், பிறன்மனையை நோக்கலை வெறுத்தனர்...
ஓரப்பார்வையில்-
பார்த்து செல்லும் ஆண்களை கவனித்த நாடோடிகள், தமது பெண்களை நெருங்கவிட்டு தேவையானதை யாசித்து, பிழைத்துக் கொண்டிருந்தனர்...
தமது கணவர்கள், மந்திரம் சக்தி பெற்றவர்கள் என்றும், அவர்கள் யாகம் நடத்தினால், சொர்க்கம் கிடைக்கும் என்ற கட்டுக்கதைகளையும் பெண்களின் மூலம் பரவச்செய்து சில சித்து விளையாட்டுகளையும் செய்து, மக்களை வியப்பில் ஆழ்த்தினர்...
நாளடைவில் அந்நாட்டின் சிற்றரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் இவர்களின் சித்துவிளையாட்டு எட்டியது...
அக்காலகட்டத்தில் அண்டை நாடுகளோடு சில நேரங்களில் சண்டைச் சச்சரவுகள் நிகழ்ந்தும் கொண்டிருந்தன...
இதனால், மனஉளைச்சலில் இருந்த சிற்றரர்களை அணுகி, தமது கணவர்கள் யாகம் நடத்தினால், உங்கள் நாட்டின் பகைவர்கள் அழிந்துவிடுவார்கள் என கூறலாயினர் நாடோடி பெண்கள் மிக நளினமாக!
சிவப்புத்தோலின் நளினத்தில் கிரங்கிய சிற்றரசர்களும், வலிந்து விழுந்த நாடோடி பெண்களின் தொடையழகில் சற்று திகைத்துத்தான் போனார்கள்...
அந்தசந்தர்ப்பதை பயன்படுத்தி, யாகம் - பூசை - என சில ஏமாற்றுக்களை நடத்தினர் நாடோடிகள்...
குருவி அமர பனம்பழம் விழுந்தக்கதையாய், சிலநேரங்களில் ஏற்பட்ட மோதல்களில் வெற்றியும் கிட்டின சிற்றரசர்களுக்கு!...
படைவலிமையில் கிட்டிய வெற்றியை- யாகத்தால் கிட்டியதென நம்பவைத்தார்கள் நாடோடிகள்...
போதாதா...
தங்கள் அரசு நீடிக்க வேண்டுமெனில் நாடோடிகள் தயவும் தேவையென நம்பினார்கள் மன்னர்கள்...
அந்த நம்பிக்கையானது நாடோடிகளை அரசவையில் தலைமை அமைச்சர் என்றநிலை வரைக்கும் இட்டுச்சென்றது...
தலைமை அமைச்சர்களானதும்-
மக்கள் தாங்கள் செய்யும் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்றும், மீதி நேரங்களில் அரச கடமையாற்றிட வேண்டுமென்றும் ஆலோசனை வழங்கி மன்னவன் வாயிலாக நிறைவேற்றி, மக்களை செய்தொழிலில் மட்டும் ஈடுப்படுத்தி கல்விநிலையில் ஒதுக்கிவைத்தார்கள் நாடோடிகள்...
கல்வி மறுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கும் திறன் இழந்து ராஜவிசுவாசமே சிறந்தது என்ற மனநிலைக்கு அடிமைப் படுத்தப்பட்டனர்...
மெல்ல மெல்ல தங்கள் வம்சத்தினர் ஆண்டாண்டு காலத்துக்கும் சொகுசான வாழ்வு வாழ்ந்திட-
அரசின் அதிகாரப்பதவிகளை லாவகமாக மன்னனிடமிருந்து பெற்றனர் நாடோடிகள்!...
மன்னனையும், மக்களையும் மூடஎண்ணத்தில் ஆழ்த்தி, நாடோடிகள் தங்களின் வாழ்க்கைநிலையை திடப்படுத்தினர்...
அந்நேரங்களில், பகைநாட்டு அரசர்கள் கையோங்கியிருப்பின்-
பகைநாட்டு அரசர்களுக்கு, நம்பிக்கையைப் பெற்றிட, தாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாட்டைக் காட்டிக் கொடுத்து, பகைநாட்டு அரசனிடமும் மனதில் இடம் பெற்றனர்...
எங்கேனும் ஓரிடத்தில் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருந்தார்களா எனில், கிடையாது...
அவ்வப்போது படையெடுத்து வந்த எதிரணி படையின் வலியறிந்து, வலிமை அதிகம் எனில் எதிரி நாட்டு அரசர்களுக்கும் இந்நாட்டை காட்டிக்கொடுத்து உரிய உகந்த வாழ்வுமுறையை கொண்டனர்...
நாயக்க மன்னர்கள் என்றாலும், மராட்டிய மன்னர்கள் என்றாலும், வலிமையை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் உத்திகளை மாற்றி, வலியவர்களோடு ஒன்றிக் கொண்டார்கள்...
ஆங்கிலேயரின் வருகையையையும், அவர்களின் படைவலிமையையும் அறிந்து ஆங்கிலேயர்களின் விருப்பு வெறுப்புகளை உணர்ந்து, காய்களை நகர்த்தி ஆங்கிலேயர்களுக்கும் இந்நாட்டை காட்டிக் கொடுத்தனர்...
மாறுபட்டிருந்த ஆங்கிலேயரின் நிர்வாகவியலுக்கு ஏற்பவும் தங்களை மாற்றி, ஆங்கிலேயரின் நிர்வாகப்பணியில் அதிகாரம் மிக்க அணைத்து பதவிகளையும் தாங்களே திறம்பட அபகரித்தனர்...
ஆக-
ஆட்சிகள் மாறினாலும் உள்ளூர் மக்களுக்கு கல்வியறிவு எட்டிவிடாதபடி, மன்னர்களின் காலத்திலிருந்தே மிகத்தந்திரமாக - கண்ணும் கருத்துமாக - இருந்தனர் நாடோடிகள்...
மன்னர்களின் ஏகாதிபத்திய முறையிலிருந்து விடுபட்டு, ஆங்கிலேயரின் அடிமை வாழ்வுக்கு மக்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த போது-
ஆங்கிலேயரின் காலத்து சுவாசம்-
சற்று மாறுபட்டிருந்ததாக அறிந்தனர் மக்களில் சிலர்!...
அந்தசிலரின் கோரிக்கைகள் ஆங்கிலேயர் ஏற்று, கல்வியை அனைவரும் கற்க வகைசெய்தனர்...
இப்படியே விட்டால் ஏடாகூடமாகி விடும் என்று நினைத்த நாடோடிகளில் தங்களை இருபிரிவாக்கி கொண்டனர் தந்திரமாக!
ஒருபிரிவினர் ஆங்கிலேயருக்கு நம்பிக்கையாளர்களாக காட்டிக் கொண்டனர்...
மற்றோரு பிரிவினர் நாட்டில் மதவெறியை வளர வழிவகுத்து கொடுத்தனர்...
நாட்டின் சிக்கல் அதிகரிக்கலாயின...
மதமோதல்களை சகிக்காத ஆங்கிலேயர் விடுதலை தருகிறேன் என்று சொல்லி வெளியேறினர்...
அதிகாரம் கைக்கு மாறும்போது, நாடோடிகள் இப்போதும் அதிகாரத்தின் மைய புள்ளிகளாய் மாறினர்...
நாடோடிகளின் வஞ்சகத்தன்மையை பெரியார், அம்பேத்கர் போன்றோர் எடுத்தியம்பி மக்களை விழிப்பு நிலைக்கு கொண்டுவந்தனர்...
ஆயினும்,
நாடோடிகளிடம் இருந்து அதிகாரம் விடுபடவில்லை...
இந்நிலையில் பலர் போராடி- போராடி -தோற்றுத்தான் போயினர்...
ஆங்கிலேயன் அகன்றுவிட்ட நிலையிலும் -
ஒரு நூறாண்டு கடந்துவிடும் நிலையிலும்-
அதிகாரத்தின் பிடியைத்தளர்த்தாமல் நாடோடிகள் சட்டவிதிகளை தங்களுக்கு சாதகமாக்கி வருவதை உணர்ந்த இளைஞர் கூட்டம் -
ஒரு முடிவுக்கு வந்தனர்...
வந்தேறிகளாம் நாடோடிகளை இனி இங்கிருந்து அப்புறப்படுத்துவது எளிதல்ல; அதே நேரம் நாடோடிகளிடமிருந்து அதிகாரங்கள் கைப்பற்றியே தீருவது என்று மனநிலைக்கு வந்தனர்...
நாடோடிகளின் வீடுகளுக்குள் புகுந்தது இந்நாட்டின் தொன்மைக் குடிகளின் இளைஞர் கூட்டம்...
வலுக்கட்டாயமாக கருச்சிதைவு - கருத்தடை யில் இறங்கினர்...
நாடோடிகள் வாழ்ந்த சுவடே இல்லாத படி, தேடித் தேடிப் பிடித்து கருத்தடை செய்தனர்...
மெல்ல மெல்ல நாடோடிகள் வம்சம் அழிய-
இந்நாட்டின் தொன்மைக்குடிகளின் கைக்கு நாடு கிடைத்தது...
- அரங்க கனகராசன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுடல் கதாநாயகன் வாழும் நாடு !
அய்ந்து லடச்சம்தான் லோகேஸ்வரியின் மதிப்பா?
முதல் பட்டதாரி பயிலும் பெண்.
ஏழைக்குடும்பம் !
படித்துமுடித்து, தான் இன்னவிதத்தில் வாழ்வை அமைத்துக் கொள்வேன் என்று எத்தனைக் கனவுகளுடன் அந்த பிஞ்சு முகம் உறங்கியிருக்கும்.
ஒருநொடியில் உயிரை சிதைத்திட்ட நிகழ்வை நினைக்கையில், நெஞ்சம் பதறுகிறது...
பெற்றவர்கள் இதயம் எப்படித் துடித்திருக்கும்?
அறிவைப் புகட்ட வேண்டிய கோவையின் அந்தக் கல்விச்சாலை அறிவற்ற செயலுக்கு ஒப்புதல் நல்கியதை நினைக்கையில்-
இதுநாடா? பணம் பிடுங்கும் குரங்குகளின் கூடாரமா என்று கேட்கத் தோன்றுகிறது?
மாணவர் நலனில் துளியும் அக்கறையின்மையையே இது காட்டுகிறது எனில் மிகையாமோ?
எந்த ஒரு தற்காப்பும் அணிந்திருக்காத நிலையில் பயிச்சி கொடுப்பது ஆபத்தை விளைவிக்கும் என்ற சிற்றறிவும் கூட இல்லையெனில் அது கல்விக்கூடமா?
ஒருகல்விக்கூடமே இத்தகைய செயல் குறித்து ஆய்ந்திருக்கவில்லை யெனில், அங்கு பயிலும் மாணாக்கர்களின் அறிவு விருத்தியாகுமா?
என்னதான் புலம்பினாலும் சிதைந்திட்ட லோகேஸ்வரியின் உயிர் மீண்டும் வரப்போவதில்லை!
இனியெந்த லோகேஸ்வரிக்கும் இந்நிலை வரக்கூடாது.
தனது உடல்கட்டை இணையத்தில் வெளியிட்டு வேடிக்கைக் காட்டும் வினோதமான பிரதமர் கோவை மாணவி லோகேஸ்வரிக்கு துளியும் வருத்தம் தெரிவிக்கவில்லை - தெரிவிக்கவும் மாட்டார் - இதுதான் தமிழ் மாணாக்கரின் நிலை!
அடிபணிந்தே ஆயுள் கடத்தும் முதலவர் நீட்டும் அய்ந்து லட்சம் என்பது அந்த மாணவியை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது...
அந்த குடும்பத்திற்கு ஒரு நிலையான ஆதரவை ஏற்படுத்துவதே லோகேஸ்வரியின் மரணத்திற்கு நிகழ்த்தும் ஆறுதலாக அமையும்!
பள்ளி மற்றும் கல்லூரிகள் அங்கு நிகழும் நிகழ்வுகளை கண்காணித்து ஆபத்தை உணர்த்தியிருந்தால், லோகேஸ்வரியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும்...
என்ன செய்வது?
பணத்தை குறிகோளாய்க் கொண்டு விளங்கும் இன்றையை கல்விமுறையில் மாணவர் நலனை எதிர்பார்க்க முடியாதுதான்!
- அரங்க கனகராசன்
14072018
---------------------------------------------------------------------------------------------------------------------------
நக்சலைட்டுகள்?
அவற்றில்-
சில மாசுக்கட்டுப்பாடு கோளாறு இருந்தமையால், விற்கப்பட்ட மகிழுந்துகளை அந்நிறுவனம் வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்கிறது!...
மீண்டும் புதிய வகை நுட்பத்தோடு விற்பனைக்கு அனுப்புகிறது மகிழுந்துகளை !
அவற்றிலும், மாசுக்கட்டுப்பாடு கோளாறு இருப்பதனை அறிந்த, அந்நாட்டு அரசு, அந்நிறுவனித்திடமிருந்து கையூட்டுபெற்றுக் கொண்டு, அந்நிறுவனத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்கவில்லை.
மாறாக-
அந்நிறுவனத்தின் செயல் அதிகாரியை கைது செய்து, நிறுவனத்துக்கும் முத்திரையிடுகிறது...
இங்கு-
தூத்துக்குடியில், மாசுக்கட்டுப்பாடுவை சிறுதும் மனதில் கொள்ளாமல் ஓர் ஆலை - ஸ்டெர்லிட் - இயங்குகிறது.
மக்கள் அவ்வாலையின் நச்சுப்புகையை சுவாசித்து, கொடிய பல நோய்களுக்கு உள்ளாகின்றனர்...
பலர் மடிகின்றனர்...
பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன!
இதே செயற்பாடு அந்நாட்டில் நடந்திருந்தால்-
அவ்வாலையின் செயல் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பார்...
ஆனால்; இங்கு நடந்தது என்ன?
மக்கள் உயிரோடிபோராடி,போராட்ட நிலைக்கு உந்தப்படுகிறார்கள்...
ஆலை நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கும், அரசுத் துறை அலுவர்களுக்கும் கையூட்டு வழங்கிவிட்டு மக்கள் நலனை புறந்தள்ளிவிடுகிறது!
மக்கள் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது!
அரசு என்ன செய்திருக்க வேண்டும்?
உடனடியாக-
ஆலையின் செயல் அதிகாரியை கைதுசெய்து, ஆலைக்கு முத்திரை இட்டிருக்க வேண்டும்...
நடந்ததென்ன?
ஆலைக்கு எதிராய் துரும்பும் கிள்ளாமல், ஆலையின் கோரா நச்சுத்தன்மையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று அழுது புலம்பி கண்ணீரோடு அபயம் -அடைக்கலம் - தேடி வந்த மக்களை சுட்டுக் கொன்றிருக்கிறது...
அதோடு, மக்களை தீவிரவாதிகளாய் உருவகம் படுத்தி-
கேவலம் படுத்துகிறது...
இதே நாட்டில்-
இந்நாட்டின் தேசத்தந்தை என்று கூறப்பட்டவர் கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறார்...
கொலையாளி சில ஆண்டுகளில் விடுவிக்கப்படுகிறான்...
ஆனால்;
இன்னமும் ஐயப்பாட்டுக்குரிய ராஜீவின் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழர்கள் ஆண்டுகள் இருபத்தைந்து கடந்தும், சிறையில் உள்ளனர்...
இந்நாட்டில்-
இந்தியருக்கொரு, நீதியும், தமிழருக்கொரு நீதியுமெனில் இது நாடுதானா?
இதனைக் கேட்டால் நக்சலைட்டுகள் என்கிறார்கள்...
நக்சலைட்டுகள் என அதிகார வர்க்கத்தினர் கூறும்போது-
புலியின் கதைத்தான் நினைவுக்கு வருகிறது...
இதோ புலி வருகிறது... இதோ புலி வருகிறது என்று புரளிக் கிளப்பிக் கொண்டிருந்தனராம்...
உண்மையாவே
ஒருநாள் புலிவரவே-
புலிக்கு பலர் மடிந்ததாக கதையுண்டு...
இதோ நக்சலைட்டுகள் ... இதோ நக்சலைட்டுகள் ... என்று போராடும் மக்களை வதைத்துக்கொண்டிருந்தால்-
உண்மையாகவே
மக்கள் மனதில் நக்சலைட்டுக்கான உருவகம் உண்டாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுவது இயல்புதானே!...
- அரங்க கனகராசன்.
19062018
---------------------------------------------------------------------------------------------
BREAKING NEWS
" இன்று அதிகாலை நடிகர் ரஜனிகாந்த் மகள் ஐஸ்வர்யா கடத்தப் பட்டார்"
இந்தியாவின் அணைத்து செய்திக் காணொளிகளிலும் இந்த வரிகள் ஓடின.
அதிகாலை 3 மணியளவில் கடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
கடத்தியவர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை.
அடுத்து ஒரு BREAKING NEWS - ஒரு மணி நேர இடைவெளியில்-
பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்னையில் கடத்தப்பட்டார்.
உலகெங்கும் பரபரப்பான செய்தியாகப் பார்க்கப்பட்டன.
அடுத்த ஒருமணிநேரத்தில் -
மீண்டும் ஒரு BREAKING NEWS
கடத்தப்பட்ட நடிகர் ரஜனிகாந்த் மகள் வாயில் துப்பாக்கிமுனை சொருகப்பட்ட நிலையில் ஒரு படம் காட்டப்பட்டது.
கடத்தல்காரர்களிடமிருந்து அனுப்பட்ட மின்னஞ்சல் படம் அது.
ரஜனி உருக்கமான வேண்டுகோள்.
"என்மகள் அப்பாவி. ஒன்றும் செய்துவிடாதீர்கள். "
ஊரே கலவரம் மூண்டது.
மத்திய அமைச்சரவை உடனடியாகக் கூட்டப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சரை மீட்க துரிதகதியில் ராணுவத்தினர் முடுக்கிவிடப் பட்டனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் -
மீண்டும் ஒரு BREAKING NEWS .
"மூன்று மாணவிகளின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும்; தமிழ்நாட்டில் !
இரண்டு மணி நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால்-
பாதுகாப்புத்துறை அமைச்சரை சுட்டுக்கொல்வோம்!
நடிகர் ரஜனிகாந்த் மகள் வாயில் ஏற்கனவே துப்பாக்கிமுனை வெடிக்கும் நிலையில் உள்ளது"
கடத்தல்காரர்களின் இந்த அறிவிப்பால் மீண்டும் மத்திய அமைச்சரவை கூடியது!
ரஜனி கதறினார்.
மத்திய அரசின் நீட் கொள்கையால் என் மகளை பலிக்கடாவாக்குவதா? மத்திய அரசு உடனடியாக நீட்டை ரத்து செய்யவேண்டுகோள் விடுத்தார்..
மத்தியஅரசு மீண்டும் மீண்டும் கூடி விவாதித்தது!
"இருவரையும் பத்திரமாக மீட்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." - என்று சொல்லிவிட்டு டுபாக்கூர் செல்ல விமானநிலையம் புறப்பட்டார் பிரதமர்.
ரஜனி எரிச்சல் அடைந்தார்.
" என்மகள் கடத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதா?
இது அக்குருமம்
இது அராஜூகம் " என்று சொல்லிவிட்டு ரசிகர்களுடன் சாஸ்திரிபவன் சென்று முற்றுகையிட்டார்.
தெருவில் சென்ற வாகனங்கள் எரிக்கப்பட்டன.
போலீசாரை உயிரோடு எரித்தனர் ரசிகர்கள்.
மத்திய அமைச்சரவைக் கூடியது.
"தமிழ்நாட்டுக்கு நீட்டில் இருந்து விலக்கு "
என அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
சிறுது நேரத்தில் ஆந்திராவின் காட்டோரம் இருவரும் விடுவிக்கப்பட்டதாக மீண்டும் BREAKING NEWS
.
நிருபர்கள், சாஸ்திரிபவனில் நடந்த போராட்டம் பற்றி நடிகர் ராஜனிகாந்த்திடம் சரமாரியாக கேள்வி!
"அடிபட்டவனுக்குத்தான்யா வலி தெரியும். கேள்வி கேட்காதீங்கய்யா போங்கய்யா... உங்க பொன்னை கடத்தியிருந்தாங்கனா நீங்க என்ன செஞ்சுருப்பீங்ளோ அதைத்தான் நானும் எனது ரசிகர்களும் செஞ்சோம். இதை சமூக விரோதச்செயல்னு சொன்னீங்கன்னா சத்தியமா சொல்றேன் நீங்கெல்லாம் மனுஷனே இல்லை"
ஒரு நிருபர் மீண்டும் கேட்டார்.
"நீங்க உங்க பொன்னை கடத்திட்டாங்கனு வாகனங்களை எரிச்சீங்க! உங்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! ஆனா, அமைதியா ஊரவலம் போன தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொன்னங்களே . அதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
"நீயெல்லாம் நிருபராடா... பெரியார் சிலையை ஒடைப்போம்னு ஒடைச்சான் ஒருத்தன். பெண் பத்திரிகையாளர்களை கேவலமா ஒரு நாய் பேசிச்சு . அவங்க மேல ஆக்சன் எடுத்தாங்களா? கேள்வி கேட்க வந்துட்டீங்க போங்கய்யா " என்று சொல்லிவிட்டு ஐஸ்வர்யாவை பார்க்க அவசரமாக புறப்பாட்டார், காவல்துறையின் பாதுகாவலோடு!
*** கற்பனைத்தான்! கற்பனைத்தான்! திரைப் படங்களுக்கு வடிவம் அமைப்பார்களே; அதேபோல் இதுவும் கற்பனைத்தான்! ***
நீதி வாழ்க ! சமூகநீதி ஓங்குக! நீதியரசர் வாழ்க!
3% மக்கள் வாழ, தமிழ்நாட்டில் நீட் மரணங்கள் தொடராது இருக்குமாக!
- அரங்க கனகராசன்.
07062018
----------------------------------------------------------------------------------------
ரசனியே, உன் படம் ஓட...
தமிழ் நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாம்!
மராட்டிய ரசனியே வேறு மண்ணில் நீ இப்படி பேசியிருக்க முடியுமா?
ஒரு இனத்தின் போராளிகள் உன் கண்களுக்கு சமூக விரோதிகளாக தெரிகின்றனர் எனில்.
உன் எண்ணப்படியே தமிழகத்தில் சமூக விரோதிகள் இருந்தால்-
இந்நேரம் உன்னை கம்பத்தில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள் அல்லவா...
அறவழி உரிமைப் போராளிகளை சமூக விரோதிகள் என்று சொல்வதற்கு முன்,
மோடியின் முகத்தையும், தமிழின போராளிகளின் முகத்தையும் ஒப்பிட்டு நோக்கியிருக்க வேண்டும் .
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நீச ரசனி!
தொண்ணூற்று ஒன்பது நாட்கள் போராடிய மக்களை ஒருநாளும் சந்திக்காத நீ, இப்போது உன் படம் ஓட வேண்டும் என்பதற்காக சாவு வீட்டில் ஒப்பாரி போல் நடித்துவிட்டு வந்திருக்கிறாய்...
காவலர்களைத் தாக்குவது தவறு என்ற நீ, துப்பாக்கி சூட்டுக்கு உத்தவவிட்டவன் எவன் என வீதியில் நின்று போராடாதே... நீதிமன்றமாவது போக மனதுண்டா மராட்டிய கன்னடனே!
- அரங்க கனகராசன்.
30062018
நடுத்தெருவில்...
எகத்தாளம் என்பதா? ஏதேச்சதிகாரம் என்பதா?
எதுவாயிருந்தாலும், வீணாய்ப் போன தமிழனே, இன்னுமா உனக்கு சூடு. சுரணைப் பிறக்கவில்லை!
இந்தியாவை ஆண்டுக் கொண்டிருப்பது ஆரியனடா!... ஆரியன் தமிழனை அழிக்கத்தான் பார்ப்பான்!...
இது இராவணன் காலந்தொட்டு நடக்கும் யுத்தம்!
காவிரிக்குத் தடையாய் இருப்பவனை இழுத்துவந்து, நடுத்தெருவில் நிறுத்துவதை விட்டு, நீ டெல்லி சென்று தூக்கில் தொங்கப் போகிறாயே...
உனது உடலை எரிநெருப்புக்கும், தூக்கில் தொங்கவிடுவதற்கும் இனி நீ பயன்படுத்தக்கூடாது!
நீ சாவதாக இருந்தால், எதிரியை அழித்துவிட்டு சாவு!
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று எவனாவது அரசியல்வாதி பேசினானால், அவன் வாயில் எதையாவதுத் திணித்து முடக்கு வீட்டோடு!
போதும் இந்த அரசியல்வாதிகளால் தமிழ்நாடு கெட்டது!
தனிநாடு பிரகடனம் படுத்து!
இதற்கு தேவையான அணைத்துக் காரணங்களையும் இந்திய அரசு வகுத்துக்கொடுத்துள்ளது...
முதற்கட்டமாக-
புகைவண்டி நிலையங்களை முடக்கு! தபால் நிலையங்களை முடக்கு! வருமானவரி அலுவலகங்களை முடக்கு! வரி செலுத்துவதை நிறுத்து!
இந்திய அரசால் வஞ்சிக்கப்படுகிற உழவனே, மாணவனே, மீனவனே! உங்கள் புலன்களை கூறாக்குங்கள்...
நீங்கள் இணைந்தாலே, தமிழினம் தலைநிமிர்ந்து உலக அரங்கில் தன்மானத்தோடு வாழத்தொடங்கிவிடும்...
நியூட்ரினோ, ஸ்டெர்லிட், கூடங்குளம், காவிரிப்படுகை பெட்ரோலிய மண்டலமாக்கல், தமிழகத்தின் கடல்வளத்தை கடல்மாலை என்ற பெயரில் அபகரிப்பு, மொழியுரிமையின்மை, கல்வியுரிமைப் பறிப்பு, காவிரித்தடுப்பு, இந்தி திணிப்பு, ஆரியமொழி திணிப்பு, இது போல் அடுக்கிட காரணங்கள் இந்தியஅரசால் வகுக்கப்ட்டுள்ளன!....
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியஅரசே மதிக்காதபோது, நீ ஏனடா அடங்கியிருக்க வேண்டும்?
உணர்வாய் தமிழ் இளைஞனே!
- அரங்ககனகராசன்.
03052018
--------------------------------------------------------------------------------------------------
அம்மா என்றால் நாக்கு அழுகிடுமோ?...
சன்னலோரம், தெருவைப் பார்த்து அமர்ந்திருந்தேன்...
தெருவில் - பள்ளி விடுமுறையாதலால் - சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்...
ஒரு நடுத்தர வயதொத்த பெண்மணி ஒருவர் வந்து, எதிர் வீட்டை எட்டிப் பார்த்தார்...
வீடு, சாத்தியிருக்கவே, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனை நெருங்கி-
"உங்க அம்மா வீட்லே இருந்தா கூப்பிடு "
"மம்மி வீட்லே இல்ல"
"அம்மா, எங்கேடா போயிருக்காங்க"
"மம்மி, எங்கே போனாங்கனு தெரியலே"
"அம்மா வந்தா சொல்லு; நான் வந்துட்டு போனேனு"
என்று சொல்லிவிட்டு, அப்பெண்மணி நடந்தாள், அப்போது இருசக்கர வாகனத்தில் அந்தச் சிறுவனின் தாயும் வந்து விட்டார்...
" மேடம், வாங்க... நா எங்க டாடியைப் பாக்கப்போயிருந்தேன்... உள்ளாரா வாங்க"
அந்த நடுத்தர வயதுப்பெண்மணி, ஏதும் பேசாமல், நின்றாள்.
"என்னங்க மேடம், உள்ளே வாங்க"
" முனீஸ்வரி, நீ என்னை அக்கான்னுதானே கூப்பிடுவே... இப்ப என்ன புதுசா, மேடம்னு"
" அதுவா மேடம்.."
"முனீஸ்வரி, நீ என்ன படிச்சிருக்கே?"
முனீஸ்வரி சற்று தாமதித்து, " நானெங்கே படிச்சேன்... ஒன்னாவது படிக்கும்போதே வீட்லே மம்மிக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேனு எங்க டாடி நிறுத்திட்டார்" என்றாள்.
சிறுவன் ஓடிவந்து முனீஸ்வரியின் கால்களை கட்டிப் பிடித்துக்கொண்டு, செல்லமாக, "மம்மி, சாக்லேட் " என்று கேட்டான்.
முனீஸ்வரி எடுத்து நீட்ட, சிறுவன் "மம்மி நான் விளையாடிட்டு வருவேன்... இன்னொரு சாக்லேட் வேணும்" என்று சொல்லி, சாக்லெட்டை வாயில் திணித்துக்கொண்டே விளையாடப் போய்விட்டான்...
"தூரமா போகாதடா... மம்மினாலே, தேடமுடியாது"
"சரிங்க மம்மி"
" இங்கிலீசு ஸ்கொல்லே சேத்திருக்கேன், மேடம்" என்றாள் பெருமிதமாக!
நடுத்தர வயதுப்பெண், "இந்த மாசம் வட்டி இன்னும் தரிலியே முனீஸ்வரி... கேட்டுட்டு போலாம்னு வந்தேன்" " - என்று கேட்க-
"சாரி மேடம்... சண்டே கொண்டு வந்து தந்துர்றேன்"
சிறுவன் மீண்டும் ஓடி வந்தான்.
"மம்மி சாக்லேட்"
அந்த நடுத்தர வயது பெண்மணி சொன்னாள்: :முனீஸ்வரி, உன் பையன், உன்னை மம்மினே கூப்பிடட்டும்... நல்லா இருக்கு " என்று சொல்லி முடிப்பதற்குள்,
முனீஸ்வரி, " ஆமாங்க மேடம், இங்கிலீசு ஸ்கொல்லே சேத்துருக்கேன்... இப்பருந்தே, ஸ்டைலா வளத்தனத்தானே, நல்லது" . என்றாள்.
அந்த பெண் மீண்டும் சொன்னாள் : "ஆமா, முனீஸ்வரி, பக்கத்து தெருவிலே ஒரு பையன் அவ அம்மாவை 'மம்மி' 'மம்மி' னே கூப்பிட்டிருந்தான்... என்னமோ தெரியலே, ஒருநாள் அம்மானு கூப்பிட்டான் பாரு... அந்த பையனோட நாக்கு அப்பவே அழுகிடிச்சு... அதனாலே உன் பையன் நாக்கு அழுகாமே பாத்துக்க..." என்று நறுக்கென்று சொல்லிவிட்டு அந்தப் பெண் போய்விட்டாள்...
வெற்றுப் பெருமைவேண்டி, "அம்மா" எனும் தமிழ் அமுதை இழக்கும் குடும்பங்களுக்கு அந்தப்பெண்ணின் சவுக்கடி தேவைதான்!
- அரங்க கனகராசன்.
13042018
-------------------------------------------------------------------------------------
வெள்ளையனும் நம்மை ஆண்டான்...
உணர்வினை வெளிப்படுத்திடப் போராடும்போது காவல்துறையை ஏவி, அடக்குமுறையில் ஈடுபடுகிறது அரசு எனில், ஆங்கே குடிமகன் போராளியாக மாற-
அரசே வழிவகுக்கிறது என்பதுதானே உண்மை!
வெள்ளையன் நம்மை ஆண்டான்...
இதைத்தான் சாப்பிடவேண்டுமென்று அவன் கட்டாயம் படுத்தினானா?
இதைத்தான் கும்பிடவேண்டும் என்று அச்சுறுத்தல் செய்தானா?
ஒரே மொழி என்று திணித்தானா?
யாவருக்கும் வாழ்வுரிமை இருந்தது வெள்ளையன் ஆட்சியில்!
உணவு, நீர், மொழி என மக்களின் உணர்வுகளை அவன் புண்படுத்தவில்லை...
நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றவன்தானே வெள்ளையன்! மறுக்கவியலுமா?
ஆயினும் , அடிமை என்ற உணர்வு மேலோங்கியதால், அவனிடமிருந்து விடுதலைப் பெற்றோம்!
அந்த விடுதலை வேண்டி, காந்தியடிகள் நடத்தவில்லையா ஒத்துழையாமை இயக்கம்!
மக்கள் அதற்கும் ஆதரித்தனரே...
ஒத்துழையாமை இயக்கம் கண்டவர், பின்னாளில் தேசத்தந்தை என்று போற்றுதலுக்கு ஆளாக்க பாட்டர் என்பதே வரலாறு!
இப்போது நடப்பதென்ன?
வெள்ளையன் தமிழனுக்கு வழங்கிய உரிமைகள்கூட இப்போது பறிக்கப் படுகின்றன என்றால், நாம் இந்தியாவின் அடிமைகள் தானா?
இந்த வினா எழுவதில் தவறேதும் இருக்கவியலுமா?
தமிழகத்தின் வருவாயில் இயங்கும் இந்தியா, தமிழகத்தின் உரிமையை நசுக்கி, தமிழகத்தைப் பாலைவனம் ஆக்குகிறது எனில்,
இத்தகைய இந்தியாவிடமிருந்து, பிரிந்து உரிமையோடு வாழ ஒவ்வொரு தமிழனும் இந்தியாவோடு ஒத்துழையாது, இருப்போம் என்பது காந்தியடிகள் காட்டிய வழிதானே?
தற்போதைய அறவழிப் போர்முனைகளில் சற்று மாறுதல் காண முடிகிறது...
வெற்று முழக்கமும், நடைப்பயணமும் நடைமுறைக்கு ஒவ்வாது என்பதை, ஐ பி எல் லின் போது அறவழிப் போராளிகள், போரின் வீச்சை சற்று மாறுதல் படுத்தினர்...
அது, போரின் மாற்றத்திற்கான தொடக்கம்!...
தீக்குளித்து மாய்வதில் டெல்லிக்கு ஏதும் இழப்பில்லை...
சாவதற்கு முன் எதிரியை வெல்ல வகைக் காணவேண்டும்...
அந்த மாறுதலை-
இப்போது நடக்கும் போராட்டங்களில் -
வேல்முருகன், சீமான், விசிக தொண்டர்கள் மற்றும் திரைத்துறை படைப்பாளிகள் வகைச் செய்துள்ளனர்...
விழிப்புக்கு வழிவகுத்துள்ளனர்!
தமிழா, நம் நாடு! நம் இனம்! நாம்தான் தோள் தரவேண்டும்!
- அரங்க கனகராசன்.
12042018
---------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் போடும்! ...
வேறேந்த நிலத்திலும் - இந்தக் காலத்தில் - இப்படியோர் கொத்தடிமைகள் கிடைக்கமாட்டார்கள்...
என்னமாய் நடிக்கிறார்கள்...
இப்படிப்பட்ட நடிப்புக்கெல்லாம் ஆஸ்கர் விருது கொடுத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்...
இதே நடிப்பை ஒருகாலத்தில்-
இறுதி யுத்தத்தின் போது திமுக நடத்தியது...
இப்போது அதிமுக!
முகம் வேறு!... களம் ஒன்றுதான்...
சொந்த இனமக்களை ஏமாற்றும் அரசியல்வியாதிகளின் கூடாரமாயத் தமிழ்நாடு விளங்குகிறது...
வேறெங்கும் காணவியலாத மோசடிகள்!
இந்திமோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தால், மோடி தோற்றுவிடப்போவதில்லை என்றாலும், விவாதம் என வந்துவிட்டால், மோடியின் உண்மைத்தன்மை உலகிற்கு தோலுரித்துக் காட்டப்பட்டுவிடுமே...
கல்வி, மருத்துவம், தூய்மை, அடிப்படை மேம்பாடு என அளவீடுகளை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டைவிட, குசராத் அப்படியொன்றும் மேம்பட்டு விளங்கவில்லை...
ஆனால்; குசராத்தை, தங்க நகராக சித்தரித்து அதன் கதாநாயகனாக மோடியைக் காட்டி, இந்தியாவையும் உலக அரங்கில் தலைநிமிர்த்துவார் என்ற பிம்பத்தை உருவாக்கினர் காவிகள்!...
அந்த பிம்பத்திற்கு வேட்டு வைப்பதுப் போல் நம்பிக்கையின்மைத் தீர்மானம் வருகிறது என்றால், பிஜேபி ஒப்புக்கொள்ளுமா...
எந்த மாநிலம் பாலைவனமாக்கப் படுகிறதோ அந்த மாநிலத்து அடிமைகளைக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டுமென்ற பொய்க் கூப்பாடு இடச்செய்து, நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்கும் ஆற்றல் கொண்ட மோடியை வாழ்த்தத்தான் வேண்டும்...
ஒரே ஒரு காரணத்திற்காக ஆந்திரா, சிலிர்த்து கிளம்பிற்று எனில், பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழ்நாடு, இன்று எரிகாடென - தீப்பிழம்பாய் - சீறியிருக்க வேண்டுமே?...
என்னச் செய்வது... அடிமைகளைப் பெற்றெடுத்தத் தமிழன்னைக் கண்ணீர் சிந்துவதைத் தவிர?
ஆனால்; இது நிலையானதல்ல!... நிச்சயம் தமிழ் இளைஞன் வீறுகொண்டெழுவன் ஒருநாள்!
அந்நாள்; தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் போடும்!
- அரங்க கனகராசன்.
27032018
----------------------------------------------------------------------
தமிழன் காட்டுமிராண்டியா?
தமிழைக் காட்டுமிரண்டி மொழி என்றாராம் பெரியார்...
அப்படியானால்; அம்மொழியைப் பேசிய மக்கள் காட்டுமிராண்டிகளாய்தானே இருக்கவேண்டும்?....
பெரியாரின் கூற்று இப்படி மெய்ப்படுமேயானால், நான் பெரியாரின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன்...
தமிழர்கள் காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடத்தக்க வகையில் உயர்வானர்வர்களா - சிறந்தர்வர்களா என்பதே என் கேள்வி...
ஏனெனில் காட்டுமிராண்டிகள் தங்கள் இருப்பிடத்தத் தக்க வைத்துக் கொள்ள உயிரையும் மாய்க்கத் தயங்கார்...
அவர்களின் இருப்பிட எல்லைக்குள் அந்நியர் நுழைந்துவிட்டாலோ முழு ஆற்றலையும் பயன்படுத்தி, நஞ்சுத் தடவிய அம்பெய்துக் கொன்றிடுவார்...
அந்நியரின் வருகையை ஒருபோதும் அவர்கள் சமநிலைப் படுத்தியதில்லை...
மலையாள நடிகன் ஒருவன் இங்கே முதல்வனாக ஆக முடிந்தது எனில், காட்டுமிரண்டிகளின் இருப்பிடத்தைத் தக்கவைக்கும் அளவுக்கு மதிநுற்பம் அற்றவர்கள் தமிழர்கள் என்பதுத் தெளிவாகிறது...
தமிழன் யாருக்கெல்லாம் தலைவணங்கியிருக்கிறான் என்பதைப் பட்டியலிட்டால்-
வேறெந்த இனத்திலும் இந்த வெட்கக் கேட்டினைக் காணவியலாது...
அந்த மலையாள நடிகனை பொம்பளைப் பொறுக்கி என்றும் கூறுவார்களாம்...
அந்த நடிகனின் மனைவியே இன்னொருவனிடமிருந்து அபகரிக்கப் பட்டவள் என்பார்களாம்...
தன்னோடு நடிக்கும் நடிகையை, ஒப்பந்தத்தின் படி வகைச் செய்து வைத்திருப்பாராம்...
அந்த வகையில்-
ஜெயலலிதா எனும் நடிகை ஜெய்சங்கர் என்பவரோடும் நெருக்கத்தில் இருந்தாராம்..
தகவலறிந்துக் கொதித்த அந்த நடிகன்-
கையும் களவுமாக தியாகராய நகரின் ஒரு வீட்டில் ஜெயலலிதாவையும் ஜெய்சங்கரையும் பிடித்தாராம்...
உனக்குமட்டும் என்னடா உரிமை என்று இரு நடிகர்களுமே நடுத்தெருவில் கைகலப்பில் ஈடுபட, அங்கிருந்த கை ரிக்சா ஓட்டிகள் ஓடிவந்து இருவரையும் ஆறுதல் படுத்தினராம்...
அதேபோல்-
அவரோடு இணையாக நடித்த லதா என்கிற நடிகைக்கும் ரசனிகாந்துக்கும் உறவு மலர இருவருமே உல்லாசப் பறவைகளாக இருந்தனராம்...
அப்போதெல்லாம் பான்பராக் எனும் போதை பாக்கின் அடிமை என்று ரசனியைக் கூறுவார்களாம்...
லதாவோடு ரஜனினியின் நெருக்கத்தை விரும்பாத மக்கள் நடிகன் - அந்த நேரத்தில் முதலமைச்சராக - இருந்தாராம்...
அந்தப் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி போலீசை விட்டு தேடவைத்து பழனியில் ரஜனி -லதாவை பிடித்து- பிரித்தார்களாம்...
அந்த நடிகரின் இன்னொரு நடிகை, ஜெய்சங்கர் மட்டுமல்லாது, சோபன்பாபுவோடும் உறவில் இருந்தாராம்...
அதுவன்றி மூப்பனாரின் அந்தப்புரத்தில் அவ்வப்போது நாட்டியமாடி ஊதியம் பெற்றுவந்தாராம்..
இப்போது ஆன்மீகம் பேசும் நடிகன் பான்பராக், மது என அணைத்து பழக்கத்திற்கும் அடிமையாம்...
மதுவருந்தி - பான்பராக் போட்டு - இதழியலாளர் ஒருவரை கொல்ல முயற்சி, விமானநிலையத்தில் தகராறு, எம்சியாரின் ஒப்பந்த நடிகையோடு கும்மாளம் என பல குற்றச்சாட்டுகள் அந்நடிகன் மீது உள்ளனவாம்...
இவைகள் யாவும் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப் பட்டவை என்று ஒதுக்கி விடலாம்...
ஆனால்; இவர்களுக்கெல்லாம் தமிழன் தலைவணங்குகிறான் என்பதுதான் வேதனை...
மலையாளி- கன்னடப் பார்ப்பாத்தி - தமிழகத்தின் தலைமையைக் கைக்கொள்கின்றனர் என்றால், இருப்பிடத்தைத் தக்கவைக்கும் காட்டு மிராண்டியைக் காட்டிலும் தமிழன் எந்த வகையில் சிறந்தவன் என்று தெரியவில்லை...
மராட்டிய நடிகன் தமிழகம் நுழைந்து பிழைப்பு நடத்துவதோடு அதிகாரத்தையும் கைக்கொள்வேன் என்கிறான் ...
சில தமிழர்கள் அந்நடிகனுக்கு பதாகைத் தூக்குகின்றனர் எனில் தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் தகுமா?
இனத்தைக் கொன்றழித்திட உதவிய ராகுலையும் சோனியாவையும் முகமன் கூறி வாழ்த்து முழக்கம் செய்கிறான் தமிழன் என்றால், தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் நன்றாகுமா?...
இனத்தை அழிக்கவும், தமிழ் நிலத்தைப் பாழாக்கவும், மொழியைச் சிதைக்கவும்,, மருத்துவக் கல்வியைப் பறிக்கவும் செய்யும் ஒரு மோசடியாளனை அகம் குளிர வாழ்த்துகிறான் தமிழன் எனில், தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் முறையாமோ?
காட்டுமிராண்டிகளிடம் உள்ள மண்பற்று, இனப்பற்று, தன்மானம் என எதுவுமே அற்ற தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் சரியன்று...
இனமீட்பில் ஈடுபாடும் வைகோ, சீமான், உதயகுமார், வேல்முருகன், திருமா, திருமுருகன் காந்தி போன்றோர் மீது தமிழர்களைக் கொண்டே களங்கம் கற்ப்பிப்பது இன்னும் வேதனையானது...
அதிலும் மேற்கண்டாரிடையே இணைப்பு இன்மை என்பது மிக வேதனையானது!
-அரங்க கனகராசன்.
19032018
------------------------------------------------------------------------------------------------
போதுமடா இந்தியா!...
திங்கள்தோறும் ஊதியம் பெறுவதும், தவறாமல் கையூட்டுப் பெறுவதும்தான் தமிழ்நாடு அரசின் பணியா? தமிழ்நாடு அரசு துறைகளின் கடமையா?
ஒரு வாரத்துக்கு முன்னரே குரங்கணி காட்டில் நெருப்பு எரிந்துக் கொண்டிருக்கிறது...
ஒரு எச்சரிக்கைப் பலகை வைத்திருக்கலாமே...
" காட்டில் நெருப்பு எரிந்துக் கொண்டிருக்கிறது..." என்று!
ஏனிங்கே ஒரு அரசு?
ஏனிங்கே ஒரு தலைமைச் செயலாளர்?
மலைவாழ் பெண்களை மிரட்டி இச்சையைத் தணித்துக் கொள்வதற்கா இங்கே வனத்துறை?
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் கருகிவிடும் என்ற அபாயம் தெரிந்தே, "இருட்டாகிவிட்டது... இருட்டில் இனி தேட முடியாது" என்றோர் அறிவிப்பு வல்லரசு நாடாம் இந்தியாவின் இராணுவ அமைச்சரிடமிருந்து வெளியாகிறது என்றால்,
இந்த நாட்டின் அவலத்தை - இந்த நாட்டு குடிமக்களின் - வாழ்கை தரத்தை எந்த சொற்களால் விளிப்பது?
வெட்கம்!... வெட்கம்!....
திரைத்துறையினரின் உதவியை நாடியிருந்தாலே, அவர்கள் இருட்டையும் பகலாக்கித் தந்திருப்பார்கள்...
இந்த நுட்ப வசதிகூட இந்தியாவிடம் இல்லையெனில், இந்த நாட்டை வெள்ளையனிடமே தந்துவிடுவது மேலானது...
ஆழ்குழாயில் விழுந்த, உயிரைக் காப்பாற்ற தெழில்நுட்பமில்லை... நெருப்பில் தவிப்போரைக் காப்பாறுந்திரணில்லை? கடலில் கலக்கும் எண்ணையை பிரித்தெடுக்க வாளி!... வெள்ளத்தில் துடிப்போரை மீட்க, மொட்டை மாடி...
கூடங்குளத்தில் நாளை ஆபத்து ஏற்பட்டால், இந்தியாவின் மீட்புப்பணி எப்படியிருக்கும் என்பதற்கு குரங்கணிக் காட்டு தீயே சான்று!
குரங்கணி காட்டில் வாழும் மலைவாழ் மக்கள் பயணிக்க ஒரு பாதையில்லை... நோயோ மகப்பேறு வலியோ ஏற்பட்டால் அவர்களின் நிலையும் இவ்வாறுதானே இருக்கும்?
இதுதான் வல்லரசா?
போர்க்கால நடவடிக்கை என்று ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்த பன்னீரே, மனசாட்சியைத் தொட்டு சொல்... இதுதான் உங்கள் போர்க்கால நடவடிக்கையா?
வெந்துச் சாம்பலான இளம் இரத்தங்கள்... துடிக்கும் பெற்றோர்... கலங்கும் தமிழகம்...
இதென்னக் கொடுமை?
தானாகப் பற்றியதா காடு?
நியூட்ரினோவை வரவேற்க ஏற்றிய தீபமா?
தமிழநாட்டைச் சாம்பலாக்கித்தான் தீருவது என்றோர் எண்ணம் திரைமறைவில் அரங்கேறுகிறதோ?
எப்படியோ மூன்று நாட்கள் காவிரியை மறந்தோம்...
இன்னும் சின்னாளில் மேலாண்மை வாரியம் தீர்ப்பு செல்லரிக்கத் தொடங்கிவிடும்...
போதும் தமிழ் இளைஞனே... உனது தேசத்தை நீதான் காப்பாற்றியாக வேண்டும்...
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால், இந்தியாவுக்கே சவால்விடுமளவுக்கு, தொழிநுட்பத்தோடு சிறந்திருக்கும்...
நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளின் வரிசையில் தமிழ்நாடு எழில் பெற்றிருக்கும்...
-அரங்க கனகராசன்.
13032018
---------------------------------------------------------------------------------------------------------
பேனாமுனை மீட்குமோ ?
தமிழ் நாட்டில் கெயில் குழாய் பதித்தே தீருவோம்; எந்த எதிர்ப்பு வந்தாலும் என்று இந்திய அமைச்சர் சூளுரைச் செய்கின்றார்...
யாருடைய மண் யார் ஆதிக்கம் செலுத்துவது?
நமது மண்ணில் நமது விருப்பத்தை அறுத்தெறிந்துவிட்டு அவனுடைய அதிகாரத்தைத் திணிக்க முயல்வதைத் திமிர் என்பதா?
தமிழரின் கோழைத்தனம் என்பதா?
காவிரியை வரளச்செய்து, மீத்தேன் - கைட்ரோ கார்போன் - நியூட்ரினோ ஆய்வு - கடல் மாலை - என பன்முகத் தாக்குதல் நடத்துவது எதனால்?
தேசியம் - தேசிய நீரோடை என்றப் பொய்மைத் தத்துவத்தைத் திணித்து , "இந்திய தேசம் வளர தமிழ் மாநிலத்தைத் தியாகம் செய்வதில் தவறில்லை" என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் நடமாடுகிறான் ஒருவன் என்றால், தமிழ் இளைஞனே நீ சூடற்றவனா?...
இப்படித்தான் தேவிகுளம் , பீர்மேடு பகுதிகளை இழந்தோம் காமராசரால்!
நூறு சதம் தமிழ் மக்களின் நிலமது!... கேரளா மிகச்சிறியதாக இருக்கிறது... தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இணைத்தால்- கேரளா தலையுள்ள உருவமாகும் என்று மலையாளிகள் கேட்டுப் பெற்றனர்...
அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, திராவிடர் கழகத்தினரைப் பார்த்து தேவியாவது- குளமாவது - எங்கே போகப் போகிறது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்க போகிறது என்று திராவிடர் கழகத்தினரின் வாயை அடைத்தார் காமராசர் தேசியம் என்ற பொய்மை மயக்கத்தால்!
அதன்விளைவு?
முல்லைப்பெரியாரை இழந்தோம்...
அங்கு தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு - தமிழ்க் கல்வியுரிமை- மலையாளக் கைதிகளை குடியேற்றம் செய்து தமிழரின் நிலத்தின் மீதான உரிமை என யாவும் இழந்தோம்...
சித்தூர், நெல்லூர், திருப்பதி என தமிழ் நிலத்தை இழந்து அங்கு கால்பதிக்கவும் உரிமை இழந்தோம்...
கச்சத்தீவைப் பறிகொடுத்துவிட் டு, மீன் பிடிஉரிமையையயும் இழந்து நிற்கிறோம்...
நீட் எனும் ஆயுதங் கண்டு மருத்துவக் கல்வியின் உரிமை இழந்தோம்...
இன்னும் என்னென்ன இழக்கப் போகிறோம்...
வருங்காலத் தமிழரை அகதியாக்கிவிட்டு நாம் சாகப் போகிறோமா?
வெறும் பேனாமுனை மட்டுமே இதற்குத் தீர்வாகிடுமா தமிழ் இளைஞனே! ...
- அரங்க கனகராசன்.
05032018
--------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் இறந்து விட்டார்!
இறப்பும் பிறப்பும் இயற்கை நியதிக்கு உட்பட்டது...
எவருக்கும் விதிவிலக்கில்லை!
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்று வள்ளுவன் தெளிவாகச் சொல்லியுள்ளான்...
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரன் என்பவருக்கு மரணமே நிகழாது... இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் அவர் உயிருடன்தான் இருப்பார் என்ற நிலை ஏதேனும் இருந்ததா?
இல்லையே!
இன்று அவர் மரணசெய்திக் கேட்டு இந்தி மோடி அதிர்ச்சி அடைந்தாராம்...
செயல் தலைவர் ஸ்டாலினும் அதிர்ச்சி அடைந்தாராம்...
இன்னார் இறந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன்... இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதில் எந்த எதிர் வினாவும் எவரும் தொடுக்கப்போவதில்லை...
ஆனால்;
இந்திமோடியும், ஸ்டாலினும் ஜெயேந்திரன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக இரங்கல் அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளனர்...
ஏன்?
அவருக்கு மரணமே நிகழாது என்று எண்ணியிருந்தனரா?...
இப்படியோர் கூமுட்டைகள் நம் நாட்டை வழிநடத்த விழைகிறார்கள் எனும் போது அது இந்த நாட்டின் வெட்கக்கேடானது என்பதைத் தவிர, வேறென்ன சொல்லமுடியும்?
ஜெயேந்திரன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டு அநேகருக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்...
மரணம் நெருங்கிட பீதியுற்ற அவர், மருத்துவரை நாடலானார்...
ஆகா; ஜெயேந்திரனின் இறுதி நிகழ்வு நாத்திகத்தை பறை சாற்றிவிட்டது...
பிறப்பும், இறப்பும் இயல்பே!
கடவுள் என்று கூறி மண்ணை ஏய்த்துக் கொண்டிருந்தவர் இறந்து விட்டார்...
ஆம்!
கடவுள் இறந்து விட்டார்...
ஆதலால்;
கடவுள் இல்லை என்று நாத்திகர் கூறினால், இனி காவிகள் கோபம் கொள்ளமாட்டார்கள்!...
- அரங்க கனகராசன்.
28022018
-----------------------------------------------------------------------------------------------------
சொல் களவாணிகள்!...
" உங்களை நான் டாடி என்று கூப்பிடட்டுமா " - என்று என்மகள் மழலைப் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருகையில் கேட்டாள்....
ஏனென வினவினேன்...
"எல்லாரும் அவங்க அப்பாவை டாடினு கூப்பிட்றாங்க... நானும் உங்களை டாடினே கூப்பிடட்டுமா " என்று மீண்டும் கேட்டாள் மூன்று வயதில் என்மகள்!...
வேண்டாம் மகளே!
ஏம்ப்பா?
நீ அப்பா' னு கூப்பிடும்மா... எனக்கு ரொம்ப பிடிக்கும்... அப்பாவுக்கு பிடிச்சா உனக்கும் பிடிக்கும்தானே என்றேன்!
டாடி என்ற வார்த்தையில் அப்பா என்ற பொருள் இருக்கும்...
ஆனால்; அப்பா என்று தாய் மொழியில் பொதிந்துள்ள பாசம் - அன்பு - தந்தைக்கும் மகளுக்கிமிடையில் உண்மையான நெகிழ்வை வளம் படுத்தும்
இதனை அறியாமல்-
டாடி என்று அழைப்பது மேன்மையானது... நாகரீகமானது... என்றோர் தவறான புரிதலுக்கு ஆளாகி-
தமிழ்மொழியின் சொற்களை புதைத்து விடுகிறோம்...
அப்படி புதைக்கும் போது , ஆங்கே ஆங்கிலம் மட்டுமா குடியேறுகிறது?
அந்த சந்தடிசாக்கில் ஆரியம் நுழைய முனைகிறது...
முனைவதோடு மட்டுமல்ல; தமிழ் சொற்களைக் களவாடி தனதென்று காப்புரிமை செய்கிறது...
பார்ப்பனர்கள் தொலைக்காட்சி சொல்லாடலில் அச்சமின்றி இது இது ஆரியச்சொற்கள் என்று வாதிடுகின்றனர்...
செத்தமொழிக்கு தமிழ்மொழியின் சொற்களை களவாடி ஒட்டு வேலைச் செய்யும் புரட்டர்கள் ஆரியர்கள்...
சலசலவென ஓடும் நீர் என நீரோடையில்ஓடும் நீர் பார்த்து நாம் சொல்லும் சொல்லை , பார்ப்பணன் ஜலம் என்று ஆக்கி கொண்டான்...தமிழ் சொல்லின் முதல் எழுத்தை வடவெழுத்தாகி,தமிழ் சொல்லின் இறுதி உயிர்மெய் எழுத்தை துண்டித்து
ஆரிய வடிவத்துக்கு மாற்றிக்கொள்வது புரட்டர்களின் பணியாகும்...
உண்மையில்-
சொற் வளமோ, பொருள்வளமோ செத்தமொழியில் இல்லை...
பூவை புஷ்ப(ம்)என்றும்,சாரை எனில் பாம்பு என பொருள் படும் தமிழ் சொல்லை திருடி, ஸர்ப (ம்) என்றும்இன்னும் ஏராளமான சொற்கள் பார்ப்பனர்களால் தமிழில் களவாடப்பட்டு திரிபு செய்யப் பட்டுள்ளன!...
தமிழ் அறிஞர்கள் தக்க ஆய்வில் இறங்கி, செத்த மொழிக்கு அலங்காரம் செய்யும் பார்ப்பனர்களுக்கு தக்க விதத்தில் அறிவு வழங்கிட வேண்டும்...
- அரங்க கனகராசன்.
27022018
--------------------------------------------------------------------------------------------
தூக்குங்கடா... ஏந்துங்கடா...
ஒரு நாடோடி குடும்பத்தோடு ஊருக்குள் நுழைகிறான்...
அவன்கண்களுக்கு-
வயல்வெளியில் பணியிலிருந்த உழவன் தெரிகிறான்...
உழவனை நெருங்கி-
"அய்யா, பசியாகிறது... ஏதாவது கொடுங்கள்... " என்று இறைஞ்சுகிறான்...
நாடோடியின் ஆத்துக்காரியும், அய்ந்து பிஞ்சுக் குழந்தைகளும் கண்களில் நீர்க் கசிய, ஏக்கத்தோடு உழவனைப் பார்க்கிறார்கள்...
உழவன்அந்த ஏழு நாடோடிகளையும் அழைத்துச் செல்கிறான் இல்லத்துக்கு!...
அந்த நேரம் இல்லாள் உணவருந்திக் கொண்டிருந்தாள்...
இல்லாளிடம், உழவன் விபரத்தைச் சொன்னவுடன்-
தான் அருந்திக் கொண்டிருந்த உணவை அப்படியே வைத்துவிட்டு-
வந்தவர்களை அமரச்சொல்லி-
முதலில் குடிக்க மோர்த் தந்தாள்...
பின்னர் வீட்டில இருந்த பழங்கள் மற்றும் சிறு தின்பண்டங்களைக் கொடுத்து உடனடிப் பசிக்கு ஆறுதல் செய்கிறாள்...
சிறுது நேரத்தில்-
அறுசுவை உணவைச் சமைத்து விருந்தினர்களுக்குப் பரிமாறு கிறாள்...
நன்றாக - வயிறு முட்ட - சாப்பிட்ட நாடோடியும், நாடோடியின் குடும்பமும் பெரிதாக ஏப்பம் விட்டு-
உழவனை நோக்கி கைத் தொழுகிறார்கள்...
" நன்றி எதற்கு? விருந்தினரை வரவேற்று விருந்தளிப்பதை நாங்கள் மேன்மையாகக் கருதுகிறோம்... இது எங்கள் தமிழர் பண்பு" என்கிறான் உழவன்!
நாடோடி கேட்டான் : அய்யா நீங்கள் சாப்பீட்டீர்களா?
"இன்னும் இல்லை; வயல்வெளியில் வேலையை முடித்துவிட்டு, பின்னர் வந்து சாப்பிடுவேன்... அதற்குள் நீங்கள் வந்து விட்டதால், வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு உங்களை அழைத்து வரவேண்டியதாயிற்று.... சரி; நீங்கள் சற்று இளைப்பாறிவிட்டு செல்லுங்கள்... நான் வயல்வெளி செல்கிறேன்"
" அய்யா சற்றுப் பொறுங்கள்... நான் சொல்வதை சற்று கேட்பீராக!"
உழவன் நின்றான்.
நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை... ஆத்துக்காரன் சாப்பிடும்முன் ஆத்துக்காரி சாப்பிடுவது தோஷமாயிற்ரே... உங்கள் ஆத்துக்காரி நீங்கள் சாப்பிடுமுன்னரே சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேனே... அன்னதோஷம்...
இதிலென்ன தவறிருக்கிறது... பசித்தால் மனைவி சாப்பிடுவது எப்படிப் பிழையாகும் என்று உழவன் கேட்டிருந்தால்-
நாடோடி, பேசாமல் நகர்ந்திருப்பான்?
ஆனால் உழவானோ. " என்ன தோஷம்?" - என்று வினவ-
சில கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டான் நாடோடி!
நெஞ்சிலே அச்சத்தை ஊட்டிட முனைந்தான்...
கணவன் சாப்பிடுமுன்னரே மனைவி சாப்பிட்டது வேதத்துக்கு எதிரானது ; இப்படிப்பட்ட மனைவியை நீங்கள் வைத்திருந்தால்-
உங்களுக்கு மோட்சம் கிட்டாது... என்று பயமுறுத்தினான்...
அன்னமிட்டவளை சபித்தான் நாடோடி!
பிச்சை எடுக்க வந்த நாடோடியே, உங்கள் பண்பாடு வேறு; எங்கள் பண்பாடு வேறு... என் எதிரிலேயே என் இல்லாளை சபிக்கிறாயா ஓடி போடா என்று விரட்டியடிக்காமல்-
நாடோடி சொல்வதில் உண்மையிருக்குமோ என்று மதி மயக்கம் கொண்டதன் விளைவுதான்...
நாடோடிகள் நம் நாட்டில் காலூன்றியதோடு-
நம் தமிழ் மொழியை நம் எதிரிலேயே வஞ்சித்து-
ஆரியமொழியில் அய் அய் டி யில் இன்று ஆரிய மொழியில் பாடுகின்றனர் நம்நாட்டுக்குள்ளேயே!
அன்றைக்கு ஊமையாய் - மதிமயக்கம் - கொண்ட நமது முன்னோர் போல் நாமும் இப்போதும் இருக்கலாமோ?
வெறுமனே கண்டனம் தெரிவித்தால் நாடோடியின் செவியில் ஏறாது...
தூக்க வேண்டியதைத் தூக்கி - ஏந்த வேண்டியதை ஏந்திட வாய்த்த நேரத்தைத் தவற விடாதே, தமிழ் இளைஞனே!
- அரங்க கனகராசன்.
26022018
----------------------------------------------------------------------------------------------------------
ரபேல் விமானமும்... இந்தி மோடியும்!
தேடுதல் என்பது சுகமானது!
ஏனெனில்; தேடுதலில்தான் புதியனக் கிடைக்கின்றன... மடமைகள் விரட்டியடிக்கப் படுகின்றன...
இந்தியாவின் - குடிமக்களின் - வரிப்பணத்தில் - இந்தியாவின் புதுப் பயணத்திற்கானத் தேடுதலை இந்திமோடி நாடு நாடாக ஓடோடித் தேடுதல் செய்கின்றார் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில்-
வெற்றிப் பெற்றவுடன் ஒவ்வோர் குடிமக்களுக்கும் பதினைந்து லட்சம் தருவார் இந்திமோடி என்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும்-
அது ஏமாற்றம்தான் என்றாலும்-
அதனை "மோசடி வாக்குறுதி" யென மக்கள் குற்றம்சுமத்திடவில்லை மோடியை நோக்கி!
ஏனெனில்; நாடுநாடாக ஓடோடி - இந்தியாவை 'நுண் இந்தியா" - டிஜிட்டல் இந்தியா- வாக மாற்றுவார் என்று நினைத்திருந்தனர் மக்கள்!
ஆனால்; மக்களின் கனவைக் காலில் இட்டு மிதித்தல் செய்தார் இந்திமோடி...
ஒரு நாட்டின் முதன்மை அமைச்சர்
செத்தமொழிக்கு சிகை அழகு செய்வதிலும்-
அதிமுகவுக்கு தரகுப் பார்க்கவும்-
அதானி, அம்பானிப் போன்றோருக்கு தரகர் வேலைப் பார்க்கவே தமது பதவியைப் பயன்படுத்திக்கொண்டார் என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஒப்பிட்டு நோக்கும்போது -
இதைவிட ஒரு நாட்டுக்கு கேவலம் ஏதுமுண்டா?...
இந்நிலை நீடித்தால் -
பன்னாட்டு ஏகாதிபத்தியம் நம் நாட்டை ஏலம் விட்டுவிடுமோ என அச்சம் மக்களின் நெஞ்சில் எழுவதில் வியப்பில்லை...
இந்தியாவோடு ஏலம் போவதற்கு முன்னர்-
தமிழ்நாட்டின் மண்ணையும், வளத்தையும் காப்பாற்றி இந்தியவிடமிருந்து தமிழ்மண்ணை மீட்க வேண்டியக் கடமை தமிழ் இளைஞர்களின் முன் நிறுத்தப்பட்டுள்ளது...
இந்த எச்சரிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மட்டத்திலும் இந்நேரம் பேருரு எடுத்திருக்க வேண்டும்...
எழவில்லை!
ஏனெனில் ஏறத்தாழ எல்லா கட்சிகளும் உள்ளூர் அரசியல் பகைமையைச் சீராட்டி வளர்த்து தமிழ்மக்களை ஏய்த்தல் செய்கின்றன...
சீமான், களஞ்சியம், கௌதமன், வைகோ, உதயக்குமார் போன்றோரின் உள்ளக்குமுறல் இன்னமும் மக்களின் செவியைத் தொடாமலிருப்பதை எண்ணுகையில் வேதனையே மிஞ்சுகிறது!
தமிழ் இளைஞனே, தமிழ்நாட்டை ஏறெடுத்தப் பாரடா!
- அரங்க கனகராசன்.
19022018
-----------------------------------------------------------------------------------------------------------
நீ என்ன செய்யவேண்டும்?
ஒரு உணவகம் செல்கிறாய்...
பணியாள் வந்து உனது தேவையைக் கேட்கிறார்...
ஒரு தோசை வேண்டுமென உனது தேவையைக் குறிப்பிடுகிறாய்...
உனது தேவையை பணியாள் குறிப்பெடுத்துச் செல்கிறார்...
உனது இருக்கைக்கு எதிரில், ஒரு பார்ப்பனன் வந்து அமர்கிறான்...
அதே பணியாள் வந்து, பார்பானனின் தேவையைக் கேட்கிறார்...
பார்ப்பனனும் ஒரு தோசை வேண்டுமென்கிறான்...
சிறுது நேரத்தில்-
பணியாள் ஒரு தட்டில் தோசையை ஏந்தி வந்து, இலையைப் பரப்பி நீரும் தெளித்து தோசையை வைத்து செல்லகிறார் பார்ப்பனனுக்கு!...
முதலில் வந்தவன் நீ!
முதலில் உனது தேவையை பதிவு செய்தவனும் நீ!
ஆனால்; நீ கவனிக்கப் படவில்லை...
சரி; பணியாள் எதோ ஞாபகத்தில் இரண்டாவதாக வந்த பார்ப்பனனுக்கு கொடுத்து விட்டான்... அடுத்து தோசையை கொண்டு வருவான் என்று நீயும் பொறுமையாகக் காத்திருக்கிறாய்...
பார்ப்பனன் சாப்பிட்டுவிட்டு ஏப்பமும் விட்டுவிட்டு சென்றுவிட்டான்...
பணியாள் வருகிறான்...
பார்ப்பனன் சாப்பிட்ட எச்சில் இலையை உன்னருகில் நகர்த்தி, அதில் தோசையை வைத்துச் செல்கிறான்...
நீ என்ன செய்வாய்?
தம்பி, தோசையின் விலையென்ன?
நாற்பது ரூபாய்
அவன் சாப்பிட்ட தோசையின் விலை என்ன?
நாற்பதுதான்!
நான் உன்னிடம் பசியாகிறது ஏதாவது கொடு என்று யாசித்தேனா?
இல்லை
நானும் காசுகொடுத்துத்தானே சாப்பிட வந்திருக்கிறேன்...
ஆமாம்
பின் ஏன் என்னை இழிவு செய்கிறாய்?
என்பதோடு நிற்பாயா?
மானவுள்ளவன் என்றால் நீ என்ன செய்திருப்பாய்?
கொஞ்சம் திரும்பிப் பார்....
நீயும் பாராளுமன்றம் சென்றிருக்கிறாய்...
அவன் இந்தியில் நிதிநிலை வாசிக்கிறான்...
நீ என்ன செய்திருக்க வேண்டும்?
நீ இந்தியாவுக்கு வரி காட்டுகிறவன்தானே?
இந்திக்காரன் மட்டுமா வரி காட்டுகிறான்?
சொல்லப்போனால், மராட்டியத்துக்கு அடுத்தநிலையில் அதிக வரியை நீ இந்தியாவுக்கு காட்டுகிறாய்...
இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டுமானால்; பாகிஸ்தான் நாட்டின் ஒத்துமொத்த வருவாய் அளவுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இந்தியாவுக்கு வாரியாகக் கொடுக்கிறது...
தமிழ்நாட்டின் வரி இல்லையென்றால்; இந்தியா திவாலாகிவிடும்...
இந்த நிலையிலும், தமிழுக்கோ - தமிழினத்திற்கோ - தமிழர் உணர்வுக்கோ இந்தியா மதிப்பளிக்காமல், அவமதிப்பு செய்கிறது என்றால் நீ என்ன செய்யவேண்டும்?
- அரங்க கனகராசன்
03022018
------------------------------------------------------------------------------------------
இவன் தமிழ்நாட்டில் வாழத்தான் வேண்டுமா?...
ஒருநாள்-
குன்றக்குடிகளார் வீட்டில், பெரியார் தங்கியிருந்தப்போது -
அடிகளார் குளித்து முடித்து, பூசை செய்து திருநீரை எடுத்துவந்து பெரியாரிடம் நீட்டினார்..
பெரியார் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றாலும், திருநீறு மகிமை மிக்க பொருள் அல்ல என்று நன்கு உணர்ந்திருந்தவர் என்றபோதிலும்,
அடிகளார் நீட்டிய திருநீறை எழுந்துநின்று வாங்கிக் கொண்டார்...
அதுதான் பெரியாரின் பண்பு!...
சக மானிடன் நீட்டிய திருநீறை அவர் வேண்டாம் என்று மறுத்திருக்கலாம்... திருநீருக்கு மரியாதைத் தராவிட்டாலும், அதை நீட்டுகிற மானிடனுக்கு மரியாதைத் தந்து பெற்றுக்கொண்டார்...
அத்தைகையப்பண்பை காஞ்சி விசயேந்திரனிடம் எதிர்பார்க்கக்கூடாது...
ஏனெனில்; தமிழை நீச பாஷை - சூத்திர பாஷை - அதனைப் பேசுவதே பாவம் என்ற குருதியில் முளைத்த ஆரியப் பார்ப்பணன் விசயேந்திரன்...
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நின்றால்-
தமிழை மொழியாக ஏற்றுக்கொண்டதாகி விடாதா?
பார்ப்பானான் கொள்கையில் எவ்வளவு தீரமாக இருக்கிறான் என்று, காவிக்குள் புதைந்திருக்கும் தமிழனைப் பார்த்து வினா தொடுக்கிறேன்...
உனக்கேன், இன உணர்வு இல்லை?
நீ தமிழன் என்பதைத் துறந்து, இந்து என்ற அடையாளத்தைச் சுமக்கிறாயே...
சிந்தித்துப் பாரடா ....
பார்ப்பணன் எள்முனையளவும் ஆரியத்திலிருந்து வழுவவமல் இருக்கும்போது, காவித்தமிழனே, கண்திறந்துப் பாரடா...
மொழியை - மொழிக்குரிய இனத்தை அவமதிப்பு செய்திருக்கிறான்...
அவனுடைய மரியாதைக்காக தமிழ்மொழி ஏங்கி நிற்கவில்லை...
வளமும்; தொன்மையும் மிக்க கன்னிமொழி நம் தமிழ்மொழி!
ஆனால்;
தமிழ்நாட்டில் குந்திக்கொண்டு, தமிழில் பேசி தமிழரை ஏய்த்து வயிறை நிரப்பிக்கொண்டு, தமிழை நீச பாஷை என்று இன்றும் பிரகடனம் செய்கிறான் என்றால், இவன் தமிழ்நாட்டில் வாழத்தான் வேண்டுமா?...
- அரங்க கனகராசன்.
24012018
-------------------------------------------------------------------------------------------------------
நிலவுக்கு விண்கலம் - தமிழனுக்கு மண்கலம்!
பொங்கல் முடிவுற்றது!
மெரினாவில் உதைப்பட்ட - அடிபட்ட - இளைஞர்களை நினைவுக் கூறாமலே ஏறுதழுவுதல் போட்டியை நிகழ்த்திவிட்டனர் அவ்வவ்வூர் மக்கள்!...
இதன் எதிர்வினையாதெனில், 'ஏறுதழுவுதல் போட்டியை அதிமுக போராடிப் பெற்றது என " வரலாற்று திரிபு செய்கிறது பன்னீரும்... அதிமுகவும்!
கடந்த ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட அதிமுக அமைச்சர்கள் இன்று விழாவினை துவக்குகின்றனர்...
அரசின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான மெரினா போராளிகளின் போராட்டம் வரலாற்றிலிருந்து நீக்கும் கயமை இது!
இத்தகையக் கயமைக்கு இடம்தருவதாகவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல்பாடும் அமைந்தனவோ?... வேதனைதான்!...
இதுபோல்-
வரலாற்றினை எளிதில் மறந்து விடுவதால்-
கடுஞ் சரிவிலிருந்து தமிழினத்தை மீட்கும் போருக்கான தலைமை இன்னமும் தமிழினத்துக்கு அமையவில்லை போலும்!...
ஒரு சிலரைத் தவிர யாவருமே வாக்கு வேண்டி காய்களை நகர்த்தி, அரசியல் வேடந்தாங்கித் திரிகின்றனர்...
இதன் விளைவு என்பது, தமிழரில் சிலர் துக்கத்தில் இருக்கும்போது, இன்னொரு பக்கம் தமிழர் மகிழ்ச்சியோடு களிக்கின்றனர்...
ஒற்றுமை உணர்வு இன்மையே தமிழரின் இவ்விழிநிலைக்கு பொருள் எனில் ஏற்பவர் ஏற்கலாம்; தவறு என்போர் தவறு எனலாம்!
இங்கே-
என் பதிவு என்னவென்றால்,
நாடே பொங்கல் விழாவில் திளைத்துக் கொண்டிருக்க-
சிவகாசி மக்கள் கண்ணீரைத் துடைக்க ஒரு விரலும் நீளவில்லை என்பதை நினைக்கும்போது வேதனைதான் ஓங்குகிறது...
பட்டாசு வெடியால், மாசு கெடுகிறது என்பதோர் பக்கம் இருப்பினும்,
அதனையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்க்கை திடுமெனத் தகர்ந்து விட்டதே...
பட்டாசு தொழில் சிவகாசி மக்களுக்கு பாரம்பரிய தொழில் அல்ல!
அது சீனாவிலிருந்து, கொல்கொத்தா வழியே சிவகாசிக்குள் நுழைந்தது...
உயிருக்கு ஆபத்து என்றபோதிலும், சிவகாசி மக்கள் தம் வாழ்வாதாரம் வேண்டி அத்தொழிலை மேற்கொண்டனர்...
நிலவுக்கு விண்கலம் ஏவும் இந்தியாவால், வாழ்விழந்துத் தவிக்கும் சிவகாசி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவியலாதா?...
சின்னச்சின்ன தெருக்கள் என்றாலும், சிவகாசியின் சுறுசுறுப்பினை சென்னைமாநகரில் கூட காணவியலாது...
உழைப்பிற்கு சளைக்காத சிவகாசி மக்களின் மாற்று ஏற்பாட்டை செய்ய வலியுறுத்தும் ஒற்றைக்கால் போராளி இன்மையே, சிவகாசியை மட்டுமல்ல, தமிழக கடற்பரப்பு யாவற்றையும் இந்திய ராணுவத்திற்குத் தாரை வார்க்கவிருக்கிறோம்...
வாழ்க தமிழர் ஒற்றுமை!
- அரங்க கனகராசன்.
16012018
------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 26, 2004 - ஆழிப் பேரலை!
( என் தாயும், தங்கையும், தங்கை மகனும் ஆழிப் பேரலையின் கோரப் பசிக்கு இரையாயினர்... )
அன்னையே...
தங்கையே...
மகனே...
பதின்மூன்று ஆண்டுகள் உருண்டோடினாலும் உமது நினைவுகளில் நான் என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன்...
அழுகிறேன்...
அழுவேன்...
நான் உயிர்த் துறக்கும் வரைக்கும் அழுவேன்...
என் நாடிநரம்புகள் குப்பையாகி - செல்லரிந்துப் போயினும், உம்மை நினைத்து அழுதல் என்னிடம் குறையாது...
உமதுப் பிரிவின் வேதனை என்னுள் நொடிதோறும் வளர்கிறது...
உமது நினைவால் எழும் வேதனை நான் சாகும் வரைக்கும் வேண்டும் எனக்கு...
உமதுப் பிரிவுத் தந்த சோகம் - அதுவே எனக்கு இன்பம்...
அழுகையும், வேதனையும், சோகமும் என்றென்றும் எனக்கு வேண்டும்...
ஆழிப் பேரலை உம்மை இரையாக்கிக் கொண்டு, என்னை சோகத்தில் வதைத்தாலும், அந்த சோகமே எனக்கு ஆறுதல்...
ஆதலால்; நான் அழுவேன்... அழுவேன்... அழுதுக் கொண்டேயிருப்பேன்...
- அரங்க கனகராசன்.
25122017
--------------------------------------------------------------------------------------------------
யாரடா தமிழ்நாட்டில் அரசியல் செய்வது ...
தமிழ் இனத்தின் அடையாளம் தொலைந்து விடாதிருக்க, மெரீனாவைத் தொட்டு விழித்தெழுந்த 2017 ஆம் ஆண்டே உன்னை மறக்க முடியுமா?...
உனது ஆண்டின் இறுதி நாளில் நடிகன் ரஜினிகாந்தை அடையாளம் காட்டி விடைபெறும் 2017ஆம் ஆண்டே உனக்கு நன்றி!....
ஆன்மீக அரசியல் தொடங்குகிறாராம்...
ஏறத்தாழ எல்லா ஓட்டுவாங்கி அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து விட்டனர்..
இந்த நடிகனின் ஆன்மீக அரசியல் எதுவென விளங்கிடவில்லை!...
யாரடா நீ தமிழ்நாட்டில் அரசியல் செய்ய என்று ஏகத்துக்கு கேட்க விம்முகிறது நெஞ்சு...
எல்லாம் இந்த இரு பெரும் ஊழல் கட்சிகளால் வந்த வினை...
தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவிருந்த ஒரு மாபெரும் இயக்கத்தை உடைத்து திமுகவை அண்ணா தொடங்கினார்...
அதில் அவர் பலன்பெறவில்லையென்றாலும்-
அவருக்கு பின் வந்த கருணாநிதி திமுகவை, ஓட்டு அரசியலின் சுவைக்கு மயங்கி தன் குடும்பத்தினருக்கு கும்மி விளையாட விட்டு அழகு பார்த்தார்...
உடல் இயலாமை நிலை எட்டிவிட்டபோதும்-
தலைவர் பொறுப்பை அடுத்தவரிடம் தர அக்குடும்பத்திற்கு மனமில்லை...
செயல் தலைவர் என்றோர் பதவியை உருவாக்கி ஸ்டாலின் எடுத்துக் கொண்டார்...
ஒருக்கால், கலைஞரின் மறைவுக்குப் பின், ஸ்டாலின் கழகத்தின் தலைவர் ஆகி விடலாம்...
அப்போது செயல் தலைவர் எனும் பதவியின் நிலை என்ன?
நீக்கப்படுமா? அல்லது; உதயநிதிக்கு போய் சேருமா? நீக்கப்படுமெனில், நீக்கப்படக்கூடிய பதவியை உருவாக்கிட்டதேன்?...
அதுவல்ல இங்கு நான் சொல்ல வருவது!
தமிழினத்தை வழி நடத்த வேண்டாம்; ஒரு கட்சியை வழி நடத்தும் ஆற்றலாவது ஸ்டாலினிடம் உண்டா ?
ஏனெனில், அவர் தலைவராக உருவாகவில்லை...
கருணாதியால் அவ்வப்போது, இதோ ஸ்டாலின் மேயர்; இதோ ஸ்டாலின் சட்ட மன்ற உறுப்பினர்; இதோ ஸ்டாலின் துணைப் பொதுச்செயலாளர்; இதோ ஸ்டாலின் துணை முதல்வர் என ஒரு ரோபோவை போல சித்தரித்துக் காட்சிப் படுத்தினர் கருணாநிதி ஸ்டாலினை!...
ஆதலால்;
இயல்பான தலைமைத் துவம் இல்லாத கட்சியாயிற்று திமுக!
அடுத்து யாரென்று பார்த்தால், மோடியின் அடிமைகள் தெரிகின்றனர்...
அவர்களுக்கும், இயல்பான தலைமைத்துவம் இல்ல; அடிமைகள்!
தினகரனோ பணத்தைக் கொண்டு எதையும் செய்யலாம் என்ற செயலலிதாவின் அகங்கார செயல்பாட்டினைக் கொண்டு விளங்குகிறார்...
ஆக, இன்றைய தமிழகம் சரியான தலைமை இன்றி - ஒரு பக்கம்
பணத்துக்கு சோரம் போய்க் கொண்டிருக்கிறது...
மறுபக்கம்-
நடிகன்களின் நச்சூடல் அரங்கேறி இனத்தின் அடையாளத்தை அழிக்க விழைகிறது...
இனத்தின் உரிமையை மீட்டெடுத்து, தமிழினத்திற்கு ஓர் வழிநடத்துதல் செய்வார் என்று எதிர்பார்க்கப் பட்ட வைகோவும், திமுகவோடு கூட்டு - செயலலிதாவோடு கூட்டு - என்று ஒட்டு வங்கி அரசியல் நடத்தி, தன் கட்சியின் சரிவுக்கு அவரே மூலவர் ஆனார்...
அதேபோல்-
சீமான் நிச்சயம் தமிழ் இனத்தின் விடிவெள்ளியாவார் என்று எண்ணிய இலட்சக் கணக்கான இளைஞர்களை கட்டமைத்து, - இயக்கம் கண்டு - தமிழ் இனத்தின் பெருஞ் சக்தியாக மாறுவார் என்ற எதிர்பார்ப்பையும் சீமானே தவிடுப் பொடியாக்கினார்...
எவ்வாறெனில், நாம் தமிழர் என்றோர் இயக்கம் காண்பதற்கு மாறாய் ஒட்டு வங்கி அரசியல் பணியில் இறங்கி தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டார்...
இந்தியாவின் சட்டத்திற்குள் அடங்கி நின்று அரசியல் கண்டு தேர்தலில் வென்றாலும், இந்தியாவின் சட்டத்தின் படிதானே ஆள முடியும்... கச்சதீவை மீட்க முடியுமா? தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க முடியுமா?....
இயலாது...
ஆதலால்; இந்தியாவின் கட்டமைப்பு அரசியலை விடுத்து-
தமிழின எழுச்சியை மையமாய் கொண்டு இயக்கம் கண்டால் ஒழிய-
நம் இனத்திற்கும், மொழிக்கும், அடையாளத்திற்கும் அரண் அமையாது...
ஒட்டு அரசியலில் இருந்து மக்கள் மனதை மாற்றி-
இனத்தின் உணர்வின்பால் ஈர்க்க நல்லதோர் இயக்கம் இப்போது தேவை இளைஞர்களிடமிருந்து!...
அப்படியோர் இயக்கம் இருந்தால் மட்டுமே ரஜினி போன்ற நடிகன்களின் அரசியல் நுழைவை நம்மால் தடுக்கவியலும்...
வாக்குக்கு விலைப்போகாமல் தமிழ் மண்ணைக் காப்பாற்றவியலும்...
நடிகன்களை வெறுப்பது என்பது, ஒட்டு மொத்த திரையுலகு வெறுப்பு என்று கணக்கில் கொள்ளக்கூடாது...
திரை மறைவில் பணியாற்றி நடிகன்களை மிளிரச்செய்யும் படைப்பாளிகள் - தமிழின உணர்வு மிக்க படைப்பாளிகள் - பங்களிப்பை ஒருபோதும் புறந்தள்ளக் கூடாது...
சாமியாரின் பேச்சைக் கேட்டு பாபா படத்தை எடுத்த ரஜினிக்கு தமிழ்மக்கள் தக்க பாடத்தைப் புகட்டினர்...
காவிரிக்கும், ஈழத்துக்கும், மீத்தேனுக்கும் அணுஉலைக்கும் எதிராய் தமிழ் மக்கள் போராடியபோது இந்த சாமியார் ரஜினி வாய்த் திறக்காததற்கு யாது நிலை?
இப்போது ஆன்மீக அரசியல் தொடங்கிட தமிழ் மண்ணின் மீதுள்ள பற்றுதலா அவருக்கு?....
அல்ல!... தமிழர்களின் உணர்வை மழுங்கடிக்க முனைத் தீட்டப்படுவதே ஆன்மீக அரசியல்!
இப்போதும் சாமியார்களின் பேச்சை கேட்டு அவர் அரசியலுக்கு வருவதில் நமக்கு எதிர் கருத்து இல்லை...
சாமியார் ரஜினி தமிழ்நாட்டை விட்டு, அவரைப் பெற்றெடுத்துத் தாலாட்டிய கர்நாடகத்தில் அல்லது இந்தியாவில் கட்சி தொடங்கட்டும்...
வாழ வந்தவன் தமிழ் மண் ஆளுதல் என்பதை ஏற்க முடியாது...
யாரடா நீ தமிழ்நாட்டில் அரசியல் செய்ய என்று ஏகத்துக்கு முழக்கம் எழவே விழித்தெழு தமிழா விண்ணதிர வீர நடையிட்டு...
இயக்கம் கண்டு தமிழ்மண்ணுக்கு இரும்புத்திரை சமைக்க 2018 ஆம் ஆண்டே வா... வா...
- அரங்க கனகராசன்.
31122017
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோவையின் தென்றல் காற்று!
கன்னட நாட்டிலிருந்து பிழைக்க வந்த ரஜனிகாந்த் தனது ரசிகக் குஞ்சுகளுக்கு, ரசிகர்களின் சந்திப்பின்போது அறிவுரை எனும்பேரில் விடுக்கும் அரைவேக்காடு பிதற்றல்களை அரசியல் வாதிகள் புகழலாம் வாக்கு வங்கியை மனதில் கொண்டு!
ஆனால்; தமிழ்நாட்டை நோக்கி, பேராபத்து மிக்க நச்சுவிதை வீசப்படும் களமாக ரஜனி பயன்படுத்தப் படுகிறார் என்பதை அறிவார்ந்த சான்றோர் நினைவில் கொள்வது தமிழ்நாட்டுக்கு நலம் பயக்கும்...
தனது படம் வெளியாகவிருப்பதால்-
வணிகத்தை மனதில் கொண்டு ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து கிளாப் அடித்துக் கொண்டிருக்கிறார்...
அந்த வகையில்
கோவை மாவட்ட ரசிகர்களின் சந்திப்பின் போது, " எனக்கு கோவையைப் பிடிக்கும்" என்றார் ரஜனி...
கொஞ்சித் தவழ்ந்து கோவையைத் தாலாட்டும் தென்றல் காற்று கோவை மண்ணுக்கே உரித்தானது...
கோவையின் தென்றல் காற்று ரஜனிக்கு பிடித்திருக்கும் என நினைத்தேன் ஏமாற்றம்...
சென்னைக்கு அடுத்த நிலையில் கல்லூரிகள் சூழ்ந்த - கற்றோர் நிரம்பிய - நகரம் என்பதால் ரஜனிக்கு கோவையைப் பிடித்தது என்றும் அவர் கூறவில்லை...
ஒரு திருப்புளியும், ஒரு நட்டுத் திருகும் இருந்தால் போதுமானது; கோவை மக்கள் விஞ்ஞானம் வியக்கும் விந்தையை நிகழ்த்தி விடுவார்கள்...
கோவை மக்களின் தொழில் திறம் ரஜனிக்கு பிடித்திருக்கும் எனில் அவர் சொல்லியிருப்பாரே...
மான்செஸ்டர் நகர் எனும் அளவுக்கு, தொழில் உற்பத்தியில் சிறந்து மேலோங்கும் -
நூற்பாலையில் வடநாட்டுக்கு சவாலாக நிமிர்ந்து நிற்கும் கோவையின் தொழில் நுட்பம் ரஜனிக்கு பிடித்ததாவெனில் அவர் இதனைக் குறிப்பிடவே இல்லை...
நீராதாரம் இல்லையென்றாலும் உழவுத் துறையில், வானம் பார்த்த பூமியாம் கோவை மண் செழிப்போடு - பச்சை பசேலென்று - பொள்ளாச்சித் தாண்டியும் பொலிவோடு விளங்கிட-
ஓய்வற்ற உழைப்பில் ஓங்கி உயர்ந்து நிற்கும் உழவுப் பெருமக்கள் வசிப்பதால் கோவையை ரஜனிக்கு பிடித்ததா என்றால், அவர் மூடத்தனத்தின் இமயமாக திரிவதால் அவருக்கு தோதாகவில்லை போலும்...
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் சுவைமிகுக் குடிநீர் - சிறுவாணியை - கோவைக் கொண்டிருப்பதால் அந்த ரஜனிக்கு கோவையைப் பிடித்திருக்குமோ என்றால் சிறுவாணி நீரை அவர் சுவைத்திருக்கவில்லை போலும்...
பின் எதனால் பிடித்தது கோவையை ரஜனிக்கு?
மூடப் பழக்கத்தை பரப்பும் இரண்டு சாமியார்கள் கோவையில் வசிப்பதால் கோவை மாவட்டம் ரஜனிக்குப் பிடித்ததாம்...
இந்த மூட்டாளின் பேச்சு, அப்பாவி தமிழ் இளைஞர்களின் மூளையைச் சலவைச் செய்துக்கொண்டிருக்கிறது...
மூடத்தனத்தை நோக்கிப் பயணிக்க வைக்கிறது...
தமிழ்நாட்டுக்குப் பிழைக்க வந்தவனைக் கொண்டு பெரியாரின் பகுத்தறிவு முழக்கத்துக்கு விடப்படும் சவாலாக - யாராலோ இயக்கப்படுகிறது...
தமிழ் நாட்டின் எல்லையைத் திறந்து வைத்ததுப் போதும்...
அரங்க கனகராசன்.
29122017
-------------------------------------------------------------------------------------------------------------------------
விடியல் வெளிச்சம் வரட்டும்...
பாரதமாதாகி ஜே ....
வந்தே மாதரம்....
ஜனகனமான
இந்தியன் என்பதில் பெருமைக் கொள்வோம்...
ஏண்டா முட்டாளே, இந்தியன் என்பதில் இந்தியன் பெருமைக் கொள்ளட்டும்...
நீ தமிழனடா...
இந்தியாவின் அடிமைத்தேசம் தமிழ்நாடு என்பதை நினைவில் கொள்ளடா...
தமிழ்நாடு இன்று தனிநாடாக இருந்திருந்தால் , நாளை ராமேசுவரத்தின் நிலை என்னவாயிருக்கும்...
எதுவமாயிருக்காது.... இயல்புநிலையில் மாற்றம் வந்திருக்காது...
ஆனால் ; நாளை நடக்கவிருப்பது என்ன?
இந்தியாவின் குடியரசு தலைவர் ராமேசுவரம் வருகிறாராம்.... ஆதலால்; ஈழ அகதிகள் கூண்டில் அடைக்கப் படுகிறார்கள்...
தமிழ் மீனவன் கடலுக்கு செல்லக்கூடாதாம்...
இதென்னடா அடிமைத்தனம்?
இந்தியாவின் குடியரசு தலைவர் வருகையயால், தமிழ்நாட்டு கடல் பரப்புக்குள் தமிழ் மீனவன் வாழ்வாதரம் தடுக்கப் படுகிறது என்றால், தமிழ்நாட்டை இந்தியா ஆண்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறு நகல்தானே...
வெள்ளையன் ஆண்டபோது இருந்த நிலைதானே இப்போதும்...
தமிழ்நாடு தமிழனின் ஆளுகையில் இருக்குமேயாயின், தமிழ்மண் தேடி வந்த தமிழ் ஏதிலியர்களை கூண்டில் அடைப்போமா?....
இது ஒரு சான்றுதான்!
புரிந்து நிமிரடா... தமிழ்தேசம் மீட்க!
இந்தியாவின் கட்டுக்குள் அடிமையாய் நின்று வாக்குவங்கி அரசியல் செய்வதை விடுத்து - ஒருங்கிணைந்த இயக்கம் தமிழ்தேசம் மீட்பு - காணடா...
விடியல் வெளிச்சம் வரட்டும் தமிழ்மண் மீது!
- அரங்க கனகராசன்.
22122017
---------------------------------------------------------------------------------------------
சீமான் இன்னொரு இராமதாசா?
பெங்களூரிலிருந்து சென்னை சென்றிருந்தேன்...
RK நகர் தேர்தல், பன்னாட்டு தமிழர் பேச்சாக மாறிவிட்ட நிலையில் நானும் காணச் சென்றிருந்தேன்...
தமிழ்நாட்டின் திருவிழா நகர் போல் காட்சி!
ஒருகிழவி இன்னொரு நடுத்தர வயது பெண்ணிடம் காய்கறிக் கடையருகே பேசிக்கொண்டிருந்தாள் :
தேர்தல் நடக்கக்கூடாதடி!
உடனிருந்த பெண்ணின் விழிகள் மட்டுமல்ல என்விழிகளும் ஏனென வினவின!...
கிழவியே மீண்டும் பேசினாள்...
நமக்கு அப்பத்தாண்டி அடிக்கடி பணம் கிடைச்சிட்டே இருக்கும்...
இந்த மாதிரி மக்கள் இருக்கும் வரை இந்த நாட்டை பழனிச்சாமி ஆண்டால் என்ன? பன்னீர் ஆண்டால் என்ன?...
ஊழல் பணம் கிட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் அடிக்கடி தள்ளிப் போகவேண்டும் என்று எண்ணும் அந்த அப்பாவிக் கிழவியின் நப்பாசைக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் பங்களிக்கிறதோ?...
RK நகரின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களிடம் பேச்சு கொடுத்தேன்...
பிஜேபியோடு ஒப்பிடும்போது காங்கிரஸ் சிறந்ததாகத் தெரிகிறது... அதனால் திமுகவை ஆதரிப்பதில் தவறில்லை என்றார் ஒரு மாணவன்!
உடனே அம்மாணவனின் தோழன் குரல் உயர்த்தினான்...
அதிமுக, பிஜேபி க்கு அடிவருடுகிறது என்றால், திமுக காங்கிரசின் அடிவருடியதை மறந்து விட்டாயா?... மருத்துவம் பார்க்க வந்த பார்வதியம்மாளை திருப்பியனுப்பிய திமுகவை மறந்து விட்டாயா?... பிஜேபி காங்கிரஸ் இரண்டுமே தமிழர் நலனுக்கு எதிரானவைதான்... இதில் ஒன்றுக்கு ஒன்று இளைத்தவையல்ல.. தமிழனுக்கு உண்மையாகப் பாடுபடும் கட்சிக்கு ஒட்டு போடனும் என்றார் மாணவனின் தோழர்!
பேருந்துக்காகக் காத்திருந்த நிலையில் ஒரு இளம்பெண் தானாகவே முன்வந்து பேசினார்...
தம்பிகளா, நீ சொன்னியே பார்வதியம்மா, அந்த நேரத்திலே எங்க அப்பா ஈழப்பிரச்னைக்காக சீமான் நடத்துற எல்லா கூட்டத்துக்கும் தவறாமே போவாரு... சீமான் வந்தாதான் மத்திய அரசிலிருந்து தமிழ் மக்களுக்கு விடிவுனு எங்கப்பா சொல்வாரு...
உங்க வோட்டு சீமானுக்கா, அக்கா
இல்லத்தம்பி, சீமான் எங்க கண்ணுக்கு ஒரு ராமதாசா தெரியறார்
என்னக்கா சொல்ல வரீங்க
ராமதாசு கண்ணுக்கு வன்னியர் மட்டுமே தமிழரா தெரிவாங்க... சீமானுக்கும் அப்படித்தாம்ப்பா... நாங்க அவர் கண்ணுக்கு தமிழரா தெரியலே போலிருக்கு... இந்த நாட்டை விட்டா எங்களுக்கு கதியில்லே தம்பி
அந்த பெண் ஏதோ சொல்லவருகிறார் போல் தெரிந்தது...
அமைதியாக செவி மடுத்து காத்திருந்தேன்...
தம்பி, எங்கப்பா எனக்கு தேன்மொழினு பேர் வெச்சாரு... என் தங்கச்சியோட பேரு மலர்விழி!... என் தம்பியோட பேரு தமிழரசு!
ஏன் அந்த இளம்பெண் தன் குடும்ப விபரங்களைத் தெரிவிக்கிறார் என்று புலனாகவில்லை...
அவரே தொடர்ந்து பேசினார் :
எங்கப்பாவும் அம்மாவும் வீட்லே தெலுங்கு பேசுவாங்க ... நாங்க தெலுங்குல அரைகுறைதான்... தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது... எங்க உணர்வு, எண்ணம் எல்லாமே தமிழ் தமிழ்தான்... தமிழனுக்கு ஒரு பிரச்சனைனா எங்கப்பா கொதிச்சு போயிருவார்... ஆனா சீமான் என்ன சொல்றார்னு தெரியுமா தம்பி... தமிழ்நாட்லே தமிழை தாய்மொழியா கொண்டவங்கதான் வாழணும்னு சொல்ரமாதிரி இருக்கே தம்பி... என்னோட செர்டிபிகேட்ல தாய்மொழி தமிழ்னுதான் பதிஞ்சிருக்கேன்... வீட்டுமொழி தெலுங்கா இருந்தாலும் நாங்க தமிழரா வாழ்ந்துட்டு இருக்கும்போது, சீமான் ஆட்சிக்கு வந்தா, எங்க கதி என்னாகுமோன்னு அப்பா வெறுத்துட்டார் தம்பி...
இப்பவெல்லாம் சீமான் கூட்டத்துக்கு போறதில்லை... அதுக்காக காங்கிரசுக்கோ, பிஜேபிக்கோ ஓட்டு போடமாட்டோம்... இப்ப இருக்கிற அரசியல் வாதிகளாலே தமிழ் சமுதாயத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது நடக்காது தம்பி... மெரினா மாதிரி ஒரு தலைவன் வரணும்...
அவர் பேச்சில் ஏதோ இழையோடுவதுப் புரிந்தது...
அந்த பெண் பேருந்து ஏறி சென்றபிறகு மாணவன் சொன்னான்:
எண்ணூரில் அந்தக்கா, செவிலியரா வேலை செய்றாங்க... அவங்கப்பாவுக்கு தமிழ்னா உசுரு...
அந்தநேரம் தமிழிசை, பிஜேபிக்கு வாக்கு சேகரித்த வண்ணம் எங்களைக் கடந்தார்...
வெளியூர் தலைகளும்-
வெளியூர் தமிழின் ஓசைகளும் -
RK நகரின் புது வண்ணமாக - புது அரங்கமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன...
என்னவாகிறது பாப்போம்...
பணமா? தமிழா?
அல்லது அந்த செவிலியர் பேசியது போல் தமிழினத்திற்கு இன்னும் தலைவன் பிறக்கவில்லையா ? அல்லது தமிழைக் காப்பேன் என்று சொல்லும் தமிழன் மீது சரியான புரிதல் வரவில்லையா தமிழ்மக்களுக்கு?
பாப்போம்...
- அரங்க கனகராசன்.
14122017
----------------------------------------------------------------------------------

தமிழர்களின் சவக்குழி!
தமிழர்களின் சவக்குழி!
கடலின் கோரா நாக்குகள் குமரி மக்களை விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில்-
தமிழ்நாட்டின் முதல்வர் கோவையில் நின்று, கோவையின் எழிலை வர்ணித்துக் கொண்டிருந்தார் MGR நூற்றாண்டு விழாதனில்!...
உறவுகளைக் காணாது, குமரி மீனவன் கதறி அழுகையில், ஆர் கே நகர் தேர்தல் கணக்குப்பார்த்துக் கொண்டிருந்தார் பழனிசாமி!
ஆதலால்; அவரை நீரோ மன்னன் எனில் பெருமையாகி விடும்...
கதறும் மீனவனே, இந்தியாவின் கடல் பரப்பு இந்தியாவின் கையில்தானே இருக்கிறது...
இந்தியா வல்லரசு நாடு என்று அடிக்கடி வடவர் பெருமிதம் கொள்கின்றனரே...
ஆயின், ஒரு வல்லரசு நாடு, தனது கடற்பரப்பில் தத்தளிக்கும் தம் மீனவர்களைத் தேடவியலுமே...
இயலும்!
தமிழ்மீனவர்கள் அல்லவெனில்!
கிட்டிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழன்களை கொல்லுங்கடா என்பது போல் உள்ளதா இந்தியாவின் மெத்தனப் போக்கு?...
உண்மையில் நடப்பது என்ன?
தேடுகையில் கிட்டிய மீனவர்களும் இலங்கைக் கொண்டுசெல்லப் பட்டு புதைக்கப் பட்டனரா?
தமிழ்மக்களைக் கொன்று புதைக்க இந்தியாவின் நட்பு நாடாம் சிங்களத்தில் ஏராளமான சவக்குழிகள் உள்ளனவே...
தமிழா,
உணமையைக் கண்டறிய சர்வதேச நீதிமன்றம்தனை நாடுவதில் தவறேதும் உண்டோ...
உனக்கான நாட்டில் நீ அகதியைப்போல் அல்லாடுவதுதான் வேதனை!
- அரங்க கனகராசன்.
08122017
-----------------------------------------------------------------------------------------------
ஆதலால்...
மகிழ்ச்சியில் தள்ளாட்டம் - துள்ளாட்டம் - எடப்பாடி பன்னீர் கூடாரத்தில்!
தமிழ் நாட்டின் உரிமைகளைத் தாரை வார்ப்பதில் முன்னோடிகளாய்த் திகழ்வதன் பொருட்டு இரட்டை இலை பரிசாகக் கிடைத்ததா எனில் தெரியாது...
நீட் தேர்வில் உயிரை மாய்த்த அனிதாவுக்கு ஓர் இரங்கலும் தெரிவிக்காத-
செம்மொழி வாழும் நாட்டில் நவோதயம் என்றப்பெயரில் செத்த மொழிக்கு மண்டபம் எழுப்பிடும் மைய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத -
தமிழக மீனவனை சுட்ட இந்தியக் கடற்படையைக் கண்டிக்காத -
இப்படி எல்லாவற்றிலும் அடிமை நிலையைக் கச்சிதமாக - பணிவோடு - கடைப்பிடிக்கும் கூடாரத்துக்கு இரட்டை இலையைப் பரிசாகக் கொடுத்து அழகுப் பார்ப்பது யாரென்ற வினாவும் தேவையில்லை...
இந்த இலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை நோக்கிய எனக்கு விந்தைதான் மேலோங்கியது...
ஏதோ தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி கிடைத்த தோரணையில் குதியாட்டம் போடுகின்றனரோ எனில் அதற்கானத் தகுதிதான் அந்த கட்சிக்கு இல்லையே; அதனால் இந்த குத்தாட்டம் எதற்கெனில்?
இந்த இலையை வைத்து ஒரு ஜெயலலிதா பல பினாமிகளை உருவாக்கி, சாதனைப் படைத்துப் பெருமை யடைந்தார்...
இப்போது, ஒவ்வொரு பினாமியும் பலப் பலப் பினாமிகளை உருவாக்கிட, கிடைத்த வாய்ப்பெனக் கருதித் துள்ளாட்டம் போடுகின்றனர்...
இவர்களின் துள்ளாட்டம் என்பதெல்லாம் ஒரு பகல் கனவே!
சின்னத்தைப் பார்த்து சீரழிய, தமிழக இளைஞர்கள் விழிப்புணவர்வற்றவர்கள் அல்லர்...
தமிழின் முதிர்ச்சியை உலக அரங்கிற்கு முன்னெடுக்கவும்-
தமிழரின் தொன்மையைக் காக்கவும்-
தமிழரின் அடையாளத்தை இழந்து விடாமலும்-
தமிழ்நாட்டின் மீட்பிலும் -
தமிழக இளைஞன் சிந்தைக் கொண்டிருக்கிறான்...
தமிழ் இளைஞன் அரசியல் சின்னத்தை மறந்துவிட்டான்...
கட்சியை விரட்டிவிட்டான்...
இனம் - மொழி - எனும் கட்டமைப்புக்குள் நெறி வகுத்திட்டான் ...
அதனை மெரினாவில் நின்று, தமிழின எதிரிகளை களம் கண்டான்...
அக்களத்தில் தமிழனின் திமிரும், வீரமும் தெறித்தன...
ஆதலால்;
அதிமுக அடிமைகளே, சின்னத்தைக் கொண்டு சிந்தை இழக்காதீர்கள்...
உங்கள் சிற்றறிவைக் கண்டு தமிழ் இளைஞன் நகைக் கொள்கிறான்...
- அரங்க கனகராசன்.
23112017
--------------------------------------------------------------------------------
அணில் சேமியாவும் - அடிமைகளின் அம்மாவும்!
நடிகர் எம்ஜியார் வரலாறு, படமாகிறதாம்!
எம்ஜியாரால் ஏமாற்றப்பட்ட நடிகர்கள் குறித்து வினா தேவையில்லை இங்கு!
அவரால் மேடைகளில் அறிவிக்கப்பட்ட பல நன்கொடைகள் அறிவிப்போடு நின்றன என்றும், அறிவிக்கப்பட்டவர்கள் நன்கொடையை எதிர்பார்த்து ஏமாந்தனர் என்பது குறித்தும் இங்கே வினவ வில்லை!...
அவருடைய ஆட்சியில்-
தொழில் துறை வளர்ச்சியில்லை என்பது குறித்தும் இங்கே வினா எழுப்பவில்லை...
அவரது வரலாறு படமாகிறதாம்... மகிழ்ச்சிதான்!
கூடவே-
அம்மையார் ஜெயலலிதாவின் வரலாறும் படமானால் எதிர்வரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்...
எவ்வாறெனில்?
மாதந்தோறும் நாற்பதாயிரம் ரூபாயை எம்ஜியாரிடம் பெற்று வாழ்ந்து வந்த ஜெயலலிதா , பின்னாளில் அரசியலில் குதித்து ஆயிரமாயிரம் கோடிகளைக் குவித்த வித்தையை படம் வெளிப்படுத்துமில்லையா?...
ஊழல் வழக்கை பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்தத் திறமையை அம்மையாரின் வரலாற்று படம் கூறுமில்லையா?...
நல்லத் திட்டமே என்றாலும், அது திமுக கொண்டு வந்தது எனில் அதனை முடக்கிய ஜெயலலிதாவின் காழ்ப்பு அரசியலை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வரலாற்று படம் உதவுமில்லையா?...
அதோடு மிக முக்கியமான ஒன்று-
அமைச்சர்களைத் தாள்பணிய வைத்ததோடு, அவர்களின் சுவாசமும் அடிமைப் படுத்தப்பட்டிருந்ததோ என்றும் எல்லாரும் எண்ணும்விதமாக கோலோச்சிய அம்மையாரின் இறுமாந்த மாண்பினை படம் காட்டுமில்லையா?
இது ஒருபுறமிருக்க -
இன்னொன்றையும் இங்கே பதிவிட மனம் விழைகிறது...
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள், சமூக அக்கறை சார்ந்து விளங்கும்...
மேலும்; அவர் தமிழ் இனத்தின் பாலும், அடையாளத்தின் பாலும் உணர்வுக் கொண்டவர் என்று மக்களால் மதிக்கப் படுபவர்...
மக்களின் மதிப்பிற்கும் - ரசிகர்களின் ஆதரவுக்கும் உள்ளான நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைத்து அணில் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது...
அவ்விளம்பர படத்தில் விஜய் சேதுபதி மன்னராக நடித்திருப்பார்...
அவருக்கு ஒரு பார்ப்பான குடும்பத்தின் சமையல் பிடித்திருப்பதுப் போல் சித்தரித்திருப்பார்கள்...
தமிழன் சுவையாக - நேர்த்தியாக - உணவு செய்யத் தெரியாதவன் என்பது போலவும், பார்ப்பனர்கள் நேர்த்தியாக உணவை செய்யத் தெரிந்தவர்கள் என்பது போலும் அவ்விளம்பரத்தின் காட்சி அமைப்பு உள்ளது...
இருக்கட்டுமே!...
அணில் நிறுவனத்தின் பொருட்களை பார்ப்பனர்களே வாங்கி பயன்படுத்தட்டும்...
தமிழர்கள் அதனை ஓரங் கட்டுவது நல்லது...
இப்படித்தான்-
"இது நம்மாத்து சமையல்" என்று ஆச்சி மசாலா நிறுவனம் ஒரு விளம்பரம் செய்தது...
நம்மவர்கள் அசைவம் தின்பவர்கள் என்றும், அவாள்கள் சைவம் மட்டுமே உண்பவர்கள் என்றும் விளம்பரம் படுத்தினர்...
முகநூல் எதிர்ப்பை அறிந்து, நடிகர் சத்யராஜ் நடித்திருந்த அந்த விளம்பரத்தை நிறுத்தியது ஆச்சி நிறுவனம்...
இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான பதிவாக எனக்கு தோன்றவில்லை...
இருப்பினும்....
- அரங்க கனகராசன்.
10112017
-------------------------------------------------------------------------------------------
சாலையில் மழை நீரோடை!
சென்னையின் 2015 ஆம் ஆண்டின் கோரம், சுரனையற்ற நாய்க்கும் சூடுபிறக்க வழிவகுத்திருக்கும்...
ஆனால்; அதிமுக அடிமை அரசு மேலும் மேலும் செல்லரித்துப் போயிற்றே எனும் வேதனைதான் , தமிழ்நாட்டின் அவலம்!
நீர்வழித்தடங்களை மேம்படுத்தவில்லை...
ஏரிகள், குளங்கள், ஆறுகள் தூர்வாரப்படவில்லை...
பாவம் அதிமுக அடிமைகள்!
ஊழலில் தோய்ந்த அவ்வடிமைகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, இந்திமோடிக்கு தண்டமிட்டுக்கொண்டிருக்கவே நேரம் போதவில்லை...
இதில், மக்கள் நலனில் எவ்வாறு கவனம் செலுத்தவியலும்?
இதில் ஒரு கேள்வி!
எதிர்கட்சி தலைவர் எங்கே?
ஏன் இந்த கேள்வியை அதிமுக அடிமைகள் கேட்டனர் என்று புரியவில்லை...
எதிர்க்கட்சித் தலைவரோடு ஆலோ சித்துவிட்டுத்தான் மக்கள் நலப் பணியாற்றுகின்றனரா?
அல்லது; அதிகாரத்தை எதிர்கட்சித் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு இவ்வடிமைகள் பதவி விலக முடிவெடுத்து "எங்கே எதிர்க்கட்சி தலைவர்" எனத் தேடலாயினரா?
அதிகாரம் கையில் இருந்தும், முன் நடவடிக்கையில் ஈடுபடாத கையாலாகாத அடிமைகள் "எங்கே எதிர்க்கட்சித் தலைவர்" என்று கேலியாய் வினா எழுப்புவது இவர்களின் பொறுப்பின்மையைத்தான் வெளிச்சம் ஆக்குகிறது...
எதிர்க்கட்சித்தலைவர் தம் கட்சி சார்பில் சில ஏரிகளை தூர்வாரிய அளவுக்குக்கூட இந்த அடிமை அரசு செய்யவில்லை என்பது வெட்கமே!
இந்த அடிமைகளை கவனத்தில் கொண்டால், நமது மனமும் ஊனமாகி விடும்...
என்னே அவலம்?
நீர்வழித்தடமின்றி - மழை வெள்ளம் போக்கிடமின்றி - தவிக்கும் தவிப்பு - ஈர நெஞ்சினர் கொள்ளும் கொதிப்பு - சொல்லில் அடங்காது...
இவர்களை நம்பிப் பலனில்லை... திமுக - அதிமுக - இரண்டுமே இதில் அடங்கும்!
வீரவேங்கையர் தமிழ் இளையோர் தோள் தட்டி களம் வரவேண்டும்...
* வாகனங்கள் ஓடும் நெடுஞ்சாலையின் அடியே மழை நீர் பயணிக்க மழை நீரோடைக் கட்டமைக்க வேண் டும்.
* ஒவ்வொரு நெடுஞ்சாலையின் அடியே ஓடும் மழை நீரோடை யாவும், அருகில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றினை நோக்கி கட்டமைக்க வேண்டும்.
* மழைநீர் நெடுஞ்சாலைகளினூடே இறங்கி ஏரி, குளங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டால் நீர்மூழ்கதலில் இருந்து வீடுகள் தப்பிக்கும்...
* செம்பரப்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் மழைநீரில் நிரம்பினால், அவ்வேரிகளின் நீர் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுதற்கு, கட்டமைப்பு இருக்க வேண்டும்!
* மேட்டூர் ஆணையின் நீர் கோவையின் அருகாமையில் உள்ள பில்லூர், சிறுவாணி, அணைகளையும் சங்கமிக்க கட்டமைப்பு வேண்டும்!...
* அதே போல், மேட்டூர் அணை நிரம்பும் நிலையில், அந்நீர், வீராணம், புழல், செம்பரப்பாக்கம் அணைகளுக்கு திருப்பிவிடத் தக்க கட்டமைப்பு வேண்டும்!
* தமிழ்நாட்டின் பெரிய ஏரிகள், தமிழ்நாட்டின் அணைத்து ஏரிகளின் இணைவில் இருக்க வேண்டும்!...
* ஒவ்வொரு அய்ந்து காத தூரத்தில் உள்ள, பொதுப்பயன்
பாட்டிற்கான மனைகளில் பெரிய மலட்டுக்கிணறுகள் தோண்டப்பட்டு, அக்கிணற்றோடு, அருகாமையில் உள்ள சாலைகளின் அடியே ஓடிவரும் மழைநீரோடைகள் இணைக்க படவேண்டும்...
* மழைநீரோடை இணைவு என்பது குடிநீருக்கு மட்டுமின்றி, தமிழ்நாடு முழுமைக்கும் பாசன வசதிக்கும் பெரும்பயனைத் தரும்...
* கங்கை காவிரி இணைப்பு சாத்தியமாகும்போது, தமிழ்நாட்டின் மழைநீர் இணைப்பை சாத்தியமாக்க இயலாதா?
* இயலும்!... இம்மாபெரும் கட்டமைப்பை நிகழ்த்தும் அதே நேரத்தில், தூர்வாரல், ஏரிக்கரை வலுவாக்கல் போன்ற பணிகளுக்கு தனி அமைச்சகமும் வேண்டும்...
* ஒருதுளி மழைநீரும் வீணாகாமல் - தமிழன் நீருக்காகக் கையேந்தாமல் இருக்க - தமிழ்நாட்டை ஆள, நேர்மை - தூய்மை - ஆண்மை - மிக்க தமிழன் வேண்டும்!
தமிழ் இளைஞர்களின் சிந்தனைக்கு விடப்பட்ட என் கோரிக்கையிது!
- அரங்க கனகராசன்.
05112017

----------------------------------------------------------------------.
இறந்த ஆட்சிக்கு ஊதுபத்தி !
உயிருள்ளவன் சிந்திப்பான்...
அந்தச் சிந்தனைத் தொலைநோக்குடையதாக இருக்கவேண்டும் எனும் கோரிக்கை உயிருள்ளவன் செவியில் ஏறும்...
இறந்துவிட்ட ஆட்சிக்கு இனி எத்தனை நாள் ஊதுபத்தி ஏற்றுவர் இந்த இந்திமோடி என்று தெரியவில்லை...
உயிருள்ள ஆட்சி எனில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டிருக்கும்...
இந்த மழையால் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள்தான் இறந்திருக்கின்றனர் என்று மின்துறை அமைச்சர் கூறியிருப்பது, இனி எத்தனை உயிர் மாண்டிருக்க வேண்டும் - பல நூறு உயிர்கள் பலியாகியிருந்தால்தான் மின்துறை அமைச்சருக்கு இது ஒரு துயர நிகழ்வாகத் தெரிந்திருக்கும் போலிருக்கி றது...
கொடுங்கையூர் இரு இளம்பூக்கள் மின்சாரம் தாக்கி இறந்த நிகழ்வு, நெஞ்சில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில்-
மூன்று அலுவலர்களை இடை நீக்கம் செய்துவிட்டு, இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ஒரு தொகையை இழப்பீடாக வழங்கிவிட்டால் இந்த அரசு உயிருள்ள அரசாகி விடுமா எனும் வினா ஆவேசத்துடன் பீறிடுகிறது!...
இறந்த சிறுமிகளின் உயிர் மீண்டிடுமா?
இந்த அடிமைகள் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து குறுகி நின்றுப் பழக்கப்பட்டவர்கள்...
அடிமைத்தளையிலிருந்து மீள இந்த அடிமைகளுக்கு விருப்பம் இராது...
ஏனெனில்; அடிமையாய் இருந்து பழக்கப்பட்டவர்கள், தனித்து தலைநிமிர்ந்து வாழ தன்னம்பிக்கை அற்ற நிலை அவர்களுள் தோய்ந்திருக்கும்...
அதன்பொருட்டே இன்று போட்டிப் போட்டு இந்திமோடியிடம் மண்டியிட்டு அடிமைநிலையைப் புணரமைத்து வருகின்றனர்...
அதேபோல்; இவர்களின் தலைவி காட்டிய ஊழல் வழி இவ்வடிமைகளின் நெஞ்சில் ஆழமாய் ஊன்றித் திளைக்கிறது...
அந்த ஊழல்தனம்தான், மின்வழித் தடங்களில் கையூட்டு பெற்றுக்கொண்டு தரமற்ற கம்பிகளை - உதிரிகளை - பொருத்தச் செய்கிறது போலும்...
குடிநீரோடு சாக்கடை உறவாடி வர வழி வகுத்துள்ளது போலும்...
உயிர்நீப்பு ஏற்பட்டபிறகு, இறுதியில் அலுவலர்களின் மீது பழிபோட்டு, ஓடிவிடும் இந்த அடிமைகளின் இறந்த ஆட்சிக்கு இனி எத்தனைநாள்தான் ஊதுபத்தி கொளுத்தி நாடகம் ஆடுவார் இந்திமோடி என்று தெரியவில்லை!...
பலிக்கடா ஆவதென்னவோ தமிழரும், தமிழர் நிலமும்!...
மழைநீரோடு சாக்கடையில் திணறிக்கொண்டிருக்கிறது இன்றைய சென்னை என்பதுவே வெட்கம் படவேண்டிய உண்மைநிலை!
இளைஞர்களே இஃது சரியோ என்று சொல்லுங்கள்...
- அரங்க கனகராசன்.
01112017
--------------------------------------------------------------------------
BIG BOSS - இந்திமோடி
தமிழ்த் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BIGBOSS நிகழ்ச்சியில் பெரிய நாட்டாமைப் போல் வலம் வந்து ஆணவத்தின் உச்சியை தொட்டுநின்ற நடிகையும் பிஜேபி உறுப்பினருமான திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் -
நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மக்கள் அவர்மீதுக் கொண்டிருந்த வெறுப்பின் அளவினை உணர்ந்ததாக அவரே வாக்குமூலம் தந்த நிகழ்வினையும் அநேகர் பார்த்திருக்கக்கூடும்...
இந்த நிகழ்வினை இங்கே நான் ஏன் குறிப்பிடவேண்டும் என்ற வினா உங்கள் எண்ணத்தில் எழலாம்...
இந்திமோடி - வெளிநாடு சுற்றுலா - எனும் BIG BOSS நிகிழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் போலும்...
அதனால்தான் இந்த மூன்றாண்டுகளில் மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் மதிப்பீட்டை உணராது இருக்கிறார் போலும்...
பெட்ரோல் விலை நடுத்தர மக்களைக் கசக்கி எரிக்கிறது-
தொழில் வளர்ச்சி மிகப்பெரும் வீழ்ச்சி நிலையைக் கண்டுள்ளது-
படித்த இளைஞர்கள் வேலையின்றி படும் அவலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது-
பொருட்களின் விலையோ எட்டாத தூரத்தை எட்டிநிற்கிறது-
தூய்மை இந்தியா என்று கூறும் அவருக்கு நாட்டில் டெங்கு காய்ச்சல் மரணம் புரியவில்லையோ-
மாநிலக்கல்வி முறையில் பயின்ற ஏழை - எளிய - மாணவரக்ளின் மருத்துவக் கனவு சிதைந்திருக்கிறது-
இவைப் போல் பட்டியலிட்டால் பன்மடங்கு உயரும்...
BIGBOOSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த "காயத்திரி'' யை வெளியேற்றியது போல் மக்கள் விரைவில் வெளியேற்றும் படலம்தனை நிறைவேற்றினால்தான்-
இந்திமோடி மீது மக்கள் கொண்டிருக்கும் எண்ணமும் இந்திமோடிக்கும் புரியும்...
தமிழகத்திலும் எலும்பு வல்லுனரும் - மூளை வல்லுனரும், பொன்னரும், பரட்டையும் போன்றோரின் ஒப்பாரிகளும் தொலையும்...
அல்லவெனில், செத்தமொழிக்கு சிகையழகுச் செய்தே மக்கள் வரிப் பணத்தை விரயமாக்கிவிடுவார்...
- அரங்க கனகராசன்.
29102017
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழா எங்கே செல்வாய் நீ?...
ஒரு இந்தியனின் உடல் நலம் எப்படியெல்லாம் இந்திய அரசால் தூய்மையாக்கப்படுகிறது என்றோர் வினா எழுந்தால் அதற்கு விடையுண்டோ?...
சாக்கடை நீரோடு கலந்துறவாடும் மழை நீரில் நடைப் பயில்கிறான் இந்தியன்...
அள்ளப்படாதக் குப்பைக்குவியலின் கெட்ட நாற்றத்தினூடே ஒர் அன்னை தன் குழந்தைகளை பள்ளிக்கு இட்டுச்செல்கிறாள்...
வரி கட்டும் குடிமக்கள் பொதுவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க கழிவறைகள் இல்லை...
எங்கோ-
பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிப்பிடங்களில் சிறுநீர்க் கழிக்கவும் GST கட்டினால் ஒழிய சிறுநீர் கழிக்கவியலாது...
ஆண்கள்- நாய்களைப் போல் - சுவர் ஓரத்தை நாடி பொது கழிப்பறை ஆக்கிவிடுகிறார்கள்... அங்கிருந்துக் கிளம்பும் கிருமிகளுக்கு முதல் பலியாவது, தெருவோரத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி விற்கப்படும் தின்பண்டங்களைச் சாப்பிடும் பள்ளிக் குழந்தைகள்தாம்!...
நிலைமை இவ்வாறு இருக்க-
வீடு, வணிக நிறுவனங்களில் சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்வு , மக்களை திசைத்திருப்பும் நிகழ்வோ எனும் அய்யத்தை மக்களினுள் கிளர்ந்திருக்கிறது...
உண்மையில் பொதுநலம் விரும்பும் அரசாக இருந்தால்-
இவற்றில் கவனம் செலுத்தியிருப்பின் பாராட்டுதற்குரியதாக இருந்திருக்கும்...
ஆனால்;
மக்களை மெர்சல், டெங்கு, தூய்மை இந்தியா என திசை மாற்றிவிட்டு-
ஓசையின்றி வட சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்தை விழுங்கி, கொசஸ்தலை ஆற்று வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கப் பார்க்கிறது இந்திய அரசு...
இதைவிடக் கொடுமை எதுவெனில், அது தமிழரின் ஆண்டாண்டுக் கால குடி உரிமையை - மண்ணின் மீதான உரிமையை - பறிக்கும் இந்திய அரசு செய்யும் கபடத்தனம் எனில் மிகையன்று!,,,
தனுசுகோடி தமிழரின் நிலம் என்பதை இனி தமிழன் மறந்து விடவேண்டியதுதான்...
வாழத் தகுதியற்ற இடமென்று அறிவித்துவிட்டு-
தமிழ் மக்கள் யாவரையும் வெளியேற்றிவிட்டு தனுசுகோடி முழுமையையும் இந்திய அரசு கையகம் படுத்தும் கபடநாடகத்தைத் தொடங்கிவிட்டது...
தனுசுகோடியை இந்தியாவின் கப்பல்படைக்குத் தாரை வார்க்க-
இந்திமோடி அடிமைகளும் உடன்பட்டுவிட்டார்கள் எனக் கருதத் தோன்றுகிறது...
கட்சத்தீவின் மீதிருந்த தமிழனின் உரிமை-
இந்திய அரசால் பறிபோனது!
தனுசுகோடி மீதான தமிழனின் உரிமையையும் பிடுங்கவிருக்கி றது இந்திய அரசு!...
நெற்களஞ்சியமான காவிரி டெல்ட்டா நிலம் முழுதையும் பெட்ரோலிய மண்டலமாய் அறிவித்து-
தமிழ்நாட்டின் விளைநிலங்களின் மீதான தமிழனின் உரிமையையும் இந்தியா எடுத்துக்கொண்டால்-
தமிழா எங்கே செல்வாய் நீ, உன் நிலத்தை - உன் உரிமையை விட்டு?
- அரங்க கனகராசன்.
27102017
------------------------------------------------------------------------------------
யாரிவன் விநாயகன் ?
தமிழினத்திற்கு எதிராய் சதி விரித்தாலும், எடப்பாடி, பன்னீர் போன்று அடிமை நாய்களாய் அடங்கிக் கிடக்காமல் பொங்கி எழுந்து, புலியாய் சீறி வடநாட்டவனின் கொட்டம் செதுக்கிய தமிழ்மன்னன் வரலாறு அறவீரன்றோ...
தமிழை - தமிழினத்தை - சிறுமை செய்த வடநாட்டு அரசனின் போக்கிரி குணத்துக்கு பாடம் புகட்ட களம் கண்டான் தமிழ்மன்னவன்...
வாதாபிக்கே படை நடத்திச் சென்று, வாதாபியை வீழ்த்தி ' தமிழன் கிள்ளுக் கீரையல்லடா... மானம் கொண்டவன் தமிழன் ' என்று வடவனின் கொட்டம் அடக்கினான்...
ஆயினும்; வடவன் ' எம்மை வீழ்த்திய உன்னை எமது கடவுள் தண்டிப்பார் ' என்றான்...
" எவனடா உன் கடவுள்? இக்களிமண்ணுருண்டையோ உன் கடவுள்... உன் கடவுளையும் சிறைப்படுத்துவேன் ' என்று சொல்லி, விநாயகனையும் சிறைப்படுத்தி தமிழகம் கொண்டுவந்து காட்சிப் பொருளாக்கி வாதாபி வென்றான் என்று புகழ் மொழியும் பெற்றான் தமிழ் மன்னன்...
அப்போதெல்லாம் ஆரியரின் ஆதிக்கம் தமிழ் எல்லையை நெருங்கவில்லை...
கடவுள் பெயரால் பிழைத்துக் கொண்டிருந்த ஆரியருக்கு விநாயகன் சிலை சிறை நிகழ்வு பேரிடியாய் புரட்டிப் போட்டது...
மெல்ல மெல்ல ஆரியர்கள் தமிழகத்திலும் தமது கயமையை கடவுள், சாதி எனும் பேராலும் சொர்க்கம் நரகம் போன்ற மோசடி வார்த்தைகளாலும் திருவிளையாடலை அரங்கேற்றினர்...
அதுவரைக்கும் இந்த விநாயகன் என்பது சிறைப் பிடிக்கப்பட்ட காட்சிப் பொருளாகவே தமிழ்மண்ணில் வலம் வந்தது...
எந்த விநாயகன் சிலையைச் சிறைப்படுத்தி தமிழரின் மானத்தைப் பாருக்கு காட்டினானோ , அதே விநாயகன் சிலையை வணங்கும்படி தமிழனின் மூளையைச் சலவை செய்து வெற்றிக் கண்டான் ஆரியன் சூழ்ச்சியால்; தான் பிழைக்க!
------------------------------ --------------------
இதையும் படியுங்கள்...
(17-09-2015ல் அரங்க கனகராசன் முகநூலில் இட்ட பதிவையும் காண்க...)
வாழ்க விநாயகர்...
"காலம் இனிமையாக இருக்கிறது... காலாற நடையிடுவோமா நாயகனே, கானகத்தில்" - என்றனள் பார்வதி!
'ஓ ... செல்வோமே என் செல்லக்கிளியே!" - என்று சொல்லி, புதுமலர் மணம் பொழியும் பூஞ்சோலைக்குள் புகுந்தான் பரமசிவன் பார்வதியோடு!
ஆங்கே-
எழிலார்ந்த ஏகாந்தப் பாறை மடுவில்-
பெண் களிற்றொன்றினை, ஆண் களிறொன்றுக் கூடி சுகம் கொண்டிருக்க, கண்டனள் பார்வதி அக்காட்சிதனை!
மிருகமே புனர்ந்திடினும், மனிதன் நாணுவான் அதனைக் காண!
ஆயினும், பார்வதியும், பரமனும் மனிதர் அல்லவே நாணம் கொள்ள!
கண்டனர்... காட்சியில் களித்தனர்...
"என்னருந் தேவனே, யானை வடிவாய் மாறி யானைப் போல் புனர்ந்திடவே எனக்கும் ஆசை" என பார்வதி தேவி கேட்க,
அதற்கு பரமனும் இசைந்தான்...
இருவரும், யானை உருவெடுத்து புணர, பிறந்தானாம் விநாயகன்...
இந்த விநாயகனை வாழ்க எனச் சொல்வதா?
அல்லது-
ஒரு நாள் - குளிக்க, படித்துறைச் சென்றனள் பார்வதி...
கண்ணனைப் போல் கயவர் எவரேனும் பெண்டிர்க் குளிக்கும் காட்சியைச் சுவைத்திடக் கள்ளமாய் வந்திடுவர்... காவலுக்கு எவருமில்லையே எனக் கலங்கிய தேவி, தன் மேனியில் உருட்டி, திரட்டினாள் கையளவு அழுக்குருண்டையை...
கையளவு அழுக்குருண்டை ஒருவர் உடலில் சேர எத்தனை ஆண்டுகளாகக் குளித்திருக்கவில்லை என்ற வினாவைக் கேளாதீர்கள்.. நடப்புக்கு வாருங்கள்...
திரட்டிய அழுக்குருண்டைக்கு உயிரூட்டி, காவலுக்கு வைத்துவிட்டு படித்துறை இறங்கினாள் தேவி குளிக்க!
அந்த அழுக்குருண்டைக்கும் விநாயகர் என்று பேரும் சூட்டியிருந்தாள் தேவி!
பொல்லாத அந்த அழுக்குருண்டைக்கும் மனம் கொள்ளவில்லை... தாயென்றும் பாராமல், குளிக்கும் பார்வதியின் தளத் தளப்பை கண் இமைக்காது காணலுற்றது...
பக்த கோடிகளே, இதில் எந்த விநாயகரை வாழ்த்துவது? விழா எடுப்பது? விழாவுக்கு தகுதி உண்டா விநாயகனுக்கு?
(17-09-2015ல் அரங்க கனகராசன் முகநூலில் இட்ட பதிவிது...)
(24102017)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவனுக்குத் தெரியாமல் மனைவி!
ஆட்சியர் இடை நீக்கம் செய்யப் பட்டிருக்க வேண்டும்; ஆறு முறை புகார் அளித்தும் உரிய - விரைந்த நடவடிக்கை இன்மையால்!...
மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் காவல்நிலையங்களைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பதால்!...
நெல்லைத் தீக்குளிப்பு சம்பவம் ஒன்றைப் பாடமாக்குகிறது....
கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ. மனைவிக்குத் தெரியாமல் கணவனோ கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடாது...
குடும்பத்தில், கணவன் மனைவி இடையே வெளிச்சம் இருக்க வேண்டும்... அல்லவெனில்; வாழ்வை இருளாக்கி விடும் என்பதே நெல்லை நிகழ்வு தரும் பாடம்!...
குழந்தையின் காதணி விழாவை கடன் வாங்கி நடத்தியது என்பது குடும்பத்தின் வருவாயைக் கருத்தில் கொள்ளாத மனைவியின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது...
கணவனின் வருவாயின் பெரும்பகுதி வட்டிக்கே குட்டியாயிற்று...
இந்நிலையில், கடன் வாங்கி மனை வாங்கியது... மனையின் மதிப்பு பலமடங்கு உயரும்; உயர்ந்தால் மனையை விற்று கடனை அடைத்து விடலாம் என்ற சுப்புலட்சிமியின் கனவை GST தகர்த்துவிட்டது...
GST - நிலம் வாங்கல் விற்றலையும், பதம் பார்த்துவிட்டது என்பது அப்பாவி சுப்புலட்சுமி அறிந்திருக்கவில்லை...
இதனிடையே -
யாருடைய வழிகாட்டலோ?
மேலும் கடன் வாங்கி ஒத்திக்கு இரண்டு வீடுகளை பிடித்து வாடகைக்கு விட்டால், வாடகையை வாங்கி கடன் அடைத்து விடலாம் என்பது!
அதுவும், எதிர்பார்த்த வாடகையைத் தரவில்லை...
மேலும் மேலும் கடன்...
உழைத்து வீடு தீரும்பும் கணவனிடம் கலந்துரையாடல் செய்யாமலே சுப்புலட்சுமி தனித்து இயங்கிய இயக்கம் குடும்பத்தையே காவு வாங்கி விட்டது...
இவையாவும் காவல்துறையின் தகவலாகும்...
இதில் எத்தனை சதவீதம் உண்மை என்பது புரியவில்லை...
ஆயினும் ஒன்றை நெல்லைத் தீக்குளிப்புப் படமாக்குகிறது...
கணவன் - மனைவி இடையே கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இணையும் கருத்தில் கொண்டு குடும்பத்தை வழி நடத்தவேண்டும் என்பதுவே!
ஆன்மிகம் இருந்திருந்தால், இதுபோல் தீக்குளிப்பு நடவாது என்று சொல்லும் ஹர ஹர (எச்சு) ராஜா சர்மா -
சுப்புலெட்சுமியின் பெயரில் குடிக்கொண்டுள்ள லட்சுமியும் உங்கள் பார்வையில் கடவுள்தானே? அவள் என்ன செய்திருக்க வேண்டும்... இதுபோல் நடவாமல் காப்பாற்றியிருக்க வேண்டுமல்லவா?...
உங்கள் பூணூலைக் காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டி இது போல் மூடத்தனங்களை பெருக்க வேண்டாம் பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சர்மா !
- அரங்க கனகராசன்
25102017
---------------------------------------------------------------------------------
இந்தியா எனும் ஒற்றை வார்த்தை
இந்தியா எனும் ஒற்றை வார்த்தை உதிர்ந்து விட்டால், இந்தியன் என்பவன் நாடே இல்லா அகதியாவான்...
தமிழனுக்கு தமிழ்நாடும், மலையாளிக்கு கேரளா நாடும், கன்னடனுக்கு கர்நாடக தேசமும், தெலுங்கனுக்கு ஆந்திரா நாடும் பீகாரிக்கு பீஹார் எனப்படும் நாடும், ஒரியனுக்கு ஒரியா நாடும், காஸ்மீரிக்கு காசுமீர் நாடும், மராட்டியனுக்கு மராட்டிய மண்ணும், உத்திர பிரதேசத்தவனுக்கு அவனுடைய நாடும், வங்காளிக்கு வங்காள மண்ணும் உரிமையாய் இருக்கின்றன....
இதே போல் ஒவ்வொரு இனத்தவனுக்கும் ஒரு பாரம்பரிய மண் இருக்கிறது...
இந்தியன் என்பவன் இந்தியா என்ற ஒற்றைச் சொல் உதிரத் தொடங்கிவிட்டால் நாடற்ற அகதியாகிவிடுவான்...
தமிழ்மொழிக்கென நிலம் உண்டு... இந்தி மொழியோ இடமற்ற மொழியாகும்... எவ்வாறெனில், போஜ்பூரி எனப்படும் பதினொரு மொழிகளின் கலவைதான் இந்திமொழி...
இதன் வரலாறு சுமார், ஐநூறு ஆண்டுளுக்குள் அடங்கும்...
சொந்தமாய் ஓரடி நிலமோ, தொன்மையோ இல்லாத இந்தியன் என்பவன் கூறுகிறான்:
சீமான் (கிருத்துவன் ), ஜோசப் விஜய் (கிருத்துவன் ), திருமுருகன் காந்தி (கிருத்துவன் ), உதயகுமார் (கிருத்துவன் ), இயக்குனர் கவுதமன் (கிருத்துவன் ), தா. பாண்டியன் (கிருத்துவன் ), மனுஷ்ய புத்திரன் ( இஸ்லாமியன் ) என இன்னும் பல தமிழ் உணர்வாளர்களை சேர்த்து இவர்கள் யாவரும் இந்துக்கள் அல்லர் என்றும் கூறி வருகின்றனர்...
இதில் என்ன அய்யம் Rss அடிவருடிகளுக்கு?
ஆம்; இவர்கள் யாவரும் இந்துக்கள் அல்லர்...
ஆயினும்; தமிழர்கள் அல்லர் எனக் கூறிடக் கூடுமா?
இவர்கள் யாவரும், தமிழினத்தின் தொன்மைகுடிமக்கள் ஆவர்...
ஆரியர் நுழைவுக்குப் பிறகு, மன்னர்களை தம் சாதுர்யத்தால் அல்லது மன்னர்களின் இச்சையறிந்து அதனை விட்டுக்கொடுத்து மன்னர்களை தம் வசமாக்கிக் கொண்டனர் ஆரியர்...
மன்னர்களின் சிந்தையை, பாலியல் ரீதியாக அடிமை படுத்தி-
அரசவையிலும் இடம்பிடித்தனர்...
அதன் பின்னர் மக்கள் செய்யும் தொழில் கொண்டு மக்களை தொழில் வண்ணம் குலம் பிரித்து தமிழினத்தைப் பிளந்தனர்...
பிளவுக்குள் குளிர்க் காய்ந்தனர் நாடோடிகள்...
மன்னர்கள் , ஆரியரின் சூழ்ச்சியில் மதிமயக்கம் அடைந்திருக்கையில், இழி நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் எவரிடம் முறையிட இயலும்?
அந்தநேரத்தில்-
மானிடரை மானிடராய் மதிக்கும் சில மதங்கள் உள்ளே புகுந்தன...
தோள் கொடுத்துத் தாங்கின...
இழிவுபடுத்தப் பட்ட மக்கள், ஆதரவு கரத்தைக் கைப்பற்றினர்...
அந்த இழிவு இன்னமும் அரசியல் சட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை...
இத்தகைய இழிநிலையை ஏற்க மறுத்து, ஆதரவுக்கரம் நீட்டிய, மதம் நோக்கிச் சென்றனர் தமிழர் சிலர்... இதுவே உண்மை!
தமிழர்கள் மத ரீதியாக மாறி நின்றாலும், இனத்தின் வழியாகவும், உணர்வின் வழியாகவும், மொழியின் வழியாகவும் அவர்கள் தமிழர்களே!... தமிழினத்தவர்களே!...
பெயர் என்பது ஒரு அடையாளமே... தமிழ் உணர்வின் மிகுதியால் தமிழின் அடையாளத்தை - தமிழின் நுண் பொருளை - தாங்கும் வண்ணம் தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்...
ஆரியரின் வருகைக்கு பின்னர்-
ஆரியம் பொதிந்த பெயர்கள் தமிழர்கள் மீது திணிக்கப் பட்டன...
ஆனால்; நீங்கள் குறிப்பிடும் டேனியல், செபஸ்தியான், ஸ்டீபன், தாமஸ், சாகுல் அமீது போன்ற பெயர்கள் திணிக்கபட்டவையல்ல...
அப்பெயர்கள் மதம் சார்ந்து நின்றாலும், அப்பெயருடைய தமிழர் தமிழினத்தவரே என்பதில் அய்யம் வேண்டாம்... குழப்பமும் வேண்டாம்...
தமிழுக்கும் - தமிழ் அடையாளத்துக்கும் - போராடும் எம்மினத்தவரை நோக்கி மதத்தின் பெயரால் குழப்பம் ஏற்படுத்த முயன்றால்-
ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள்... தமிழர்கள் ஒருக்காலும் இந்தியர் அல்லர்...
இந்தியா எனும் ஒற்றைச் சொல் உதிரும் போது தமிழனுக்கு நாடிருக்கிறது...
நாடோடிகளாம் நீங்கள், பழையபடி நாடற்று நாடோடிகளாய் ஓடும் நிலை உருவாகும்...
- அரங்க கனகராசன்.
23102017
-------------------------------------------------------------------------------------------------------
நானும் படம் பார்த்தேன்!
நானும் மெர்சல் பார்த்தேன்...
திரைப்படங்களுக்கு நான் நேரத்தை ஒதுக்குவதில்லை...
ஆயினும்; இப்படத்தைப் பார்க்கத் தூண்டிய தமிழிசைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
ஒரு படைப்பாளியின் படைப்பு என்பது, அது அந்த காலக் கட்டத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது ஓர் இலக்கணம்...
இந்த இலக்கண வரம்பினை அட்லீ திறம்படக் கையாண்டுள்ளார்...
GST - மக்களின் உள்ளக்கொதிப்பினை - அட்லீயின் மூளை நரம்புகள் எள்முனையளவும் பிசகாமல் கணிப்பு செய்துள்ளது...
டிஜிட்டல் இந்தியா என்று வடிவேலுவின் வாயிலாக வெளிப்படும் வார்த்தை, ஏதோ படத்துக்காகத் தீட்டிய வசனமன்று....
மூன்றாண்டுகளாக இந்தி மோடியின் வாயிலிருந்து ஓயாமல் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைத்தான்!
அந்த வெற்று வார்த்தை மக்களை நடுத்தெருவில் அல்லாடவைத்து விட்டது என்பதே இக்காலத்தின் ஓட்டம்...
இந்தி பேசுகிறவன்தான் இந்தியாவில் வாழத் தகுதியுடையவன் என்ற இந்தி மோடியின் பிம்பத்தை, நடிகர் விஜயை வேட்டிக் கட்ட வைத்து தமிழ்த் தாழ்ந்த மொழியல்ல என்பதைப் பேசவைத்து தகர்த் தெறிந்திருக்கிறார்...
கழிப்பறையும், மருத்துவமும் மானிடரின் நல்வாழ்விற்கு அவசியம் என்பதை அறியாது, இராமன் கோயிலுக்கும், கேதார்நாத் சீரமைப்பிற்கும் மக்களின் வரிப்பணத்தை ஊதாரி செய்துக்கொண்டிருக்கும் இந்தி மோடியின் அறியாமை நிர்வாகத்தை ஆவேசமாக சாடுகிறது அட்லீயின் மூளை நரம்புகள்...
ஜல்லிக்கட்டுவை மடியில் தாங்கிய மெரினாவுக்கும், நன்றி கூறும் அட்லீயை வரலாறு போற்றும்...
தமிழ் என்றாலே கசக்கும், RSS ஆரிய வருடிகளுக்கு இப்படம் கசக்கத்தான் செய்யும்...
மற்றபடி பெரும்பாலான படங்களைப் போல் இப்படமும் சினிமாத்தனம் கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம்...
இதனை ஊதி பெரிதுப் படுத்தி நல்விளம்பரத்தைத் தந்து, நல் வசூலையும் குவியச் செய்ததில் பிஜேபிக்கே பெரும்பங்கு இருக்கிறது...
திரைப்படங்களைக் காணாதவர்களையும் காணச்செய்து, பிஜேபியின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டியது இப்படத்தின் இயக்குனர் அட்லீயல்ல; பிஜேபியே!
இப்படத்தைப் பார்த்து ஊளையிடும் பிஜேபி யை நினைத்தால், "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும் "
எனுங் குறள் நினைவுக்கு வருகிறது...
- அரங்க கனகராசன்.
22102017
---------------------------------------------------------------------------------------
தமிழினத்தின் மீது சீவப்பட்ட வேல்!...
ஊழல் நரிகளின் ஊளையிடுதலை நமது ஊடகங்கள் முதன்மையாக்குவது, தமிழ்நாடன்றி வேறு எந்த நாட்டிலும் நடந்தேறியிருந்தால்-
அது மக்களின் கிளர்ச்சிக்கு அடிகோலியிருக்கும்!...
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாரைவார்த்துவிட்டு , தமிழ்நாட்டில் வலம் வரும் திண்மை ஊழல் நாதேரிகளுக்கு உண்டென்றால், அது தமிழ்மக்களின் உணர்ச்சிக் குறைபாடு எனில், மிகையாமோ?....
திறன்மிகு மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்று மருத்துவ ஆய்விதழ்கள் கூறுகின்றன... இம்மருத்துவர்கள் பெரும்பாலானோர் நீட் தேர்வின் மூலம் மருத்துவர் ஆனவர் அல்லர்...
மாநிலக் கல்வியை மையமாய் கொண்டு பயின்றவர்களே பெரும்பாலானோர்...
நமது மக்களுக்கு பாடத் திட்டம் வகுக்கும் உரிமை நமது அரசுக்கு இல்லையெனில், உரிமையற்ற அகதிகளாய் ஏன் இந்தியாவோடு இணைந்திருக்க வேண்டும் எனும் கருத்தியலை உணர்த்திட மறுக்கும் ஊடகங்களைத் தகர்த் தெறியும் வல்லமை எப்போது நமக்குப் பிறக்குமோ அப்போதுதான் தமிழன் தன் தேசத்தை கண்டறிவான்...
ஏனெனில் ஊடகங்களின் செயல்பாடு, பெரும்பாலும் தமிழினம் எனும் உணர்வை மழுங்கச்செய்யும் விதமாகவே நிகழ்ச்சிகளைத் தருகின்றன...
குடிஅரசு தேர்தல் வரைக்கும் ஏமாற்று வார்த்தைகளால் அதிமுக அடிமைகள் மூலம் நாடகம் ஆடி, இப்போது நீட் தேர்வில் கையை விரித்து தமிழ் மாணவர்களின் கனவை சிதைத்த இந்திமோடியின் கபடத்தன்மை தமிழர்களின் உரிமை நிலைமீது சீவப்பட்ட வேலாகவே கருதத் தோன்றுகிறது
தமிழகத்தில் -
அகழ்வாராய்வுகளில் கிடைத்தப் பொருட்களில் கடவுள் சிலைகள் ஏதும் கிட்டவில்லை...
அதோடு, தாலி போன்ற சடங்குப் பொருட்களும் கிட்டவில்லை...
இதிலிருந்து தெரிவதென்ன?
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் மதம் சாராதவனாய்- தன்மானம் மிக்க தலைவணங்காதவனாய் - பண்பாடு எழிலோடு வாழ்ந்த ஒழுக்கச் சீலனாய் - வாழ்ந்திருப்பதுப் புலனாகிறது...
இதனை வெளிப்படுத்தினால்,
தமிழர்கள் தம்மை இந்து என்று கூறிட மறுப்பார்கள் என்ற ஒரே காரணங் கொண்டு அகழ்வாராய்வு உண்மைகளை மூடி மறைக்க இந்தியா முயல்கிறது...
தமிழர்கள் தொன்மைமிகுக் குடிகள் - தமிழர்கள் இந்துக்கள் அல்லர் - தமிழர்கள் தமக்கென தனிநாடு கொண்டிருந்தனர் - என்பதைத் தெளிவுபடுத்திடும் கடமையை, தமிழுணர்வாளர்கள் கருத்தில் கொண்டு செயல் வடிவை அமைக்கவேண்டும்...
அந்த செயல் வடிவம்தனை முனையரங்கு முழக்கமாகவும், திண்ணை அமர்வு ஊடாகவும், முகநூல், கட்செவி வாயிலாகவும் , சிறு நாடகம், குறும்படம் மூலமாகவும் உணர்ச்சி மிகு பாடலாகவும் பரப்பிட வேண்டும்...
தமிழினம் அழியாதிருக்க, இத்தகைய முனைவுகள் முடுக்கப்படல் வேண்டும்...
இளைஞர்களே திரண்டெழுங்கள்...

ஒரு போர்வையாவது வாங்கி கொடுங்கள், தமிழர்களே!
வேதனைச் சுவடுகளின் மீது நாம் நம் குழந்தைகளைப் பயணிக்கச் செய்துக் கொண்டிருக்கிறோம்...
ஒன்றா இரண்டா?....
அய்யாயிரம் ஆண்டுகளின் வேதனைகளின் தழும்பைத் தாங்கி ஓர் இனம் இன்னும் உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறது எனில், அது மொழியின் உயிர்மையே அன்றி வேறு யாது?....
மொழிதான் இனத்தின் உயிர்! - மூச்சுக்காற்று!
தமிழின் செம்மை, தமிழரை இன்னமும் நடமாடவிட்டுக் கொண்டிருக்கிறது...
ஆரியத்தின் வஞ்சனையால் வீழ்ந்த - அடையாளத்தை இழந்த - மொழிகள் ஏராளம்...
மூத்தமொழி எனும் தகுதியோடு உலகின் முதல் மொழியாகத் திகழ்த்தற்பொருட்டே தமிழர் அடையாளத்தை இழந்துவிடாமல் கிளர்ந்துத் திரள்கின்றனர்...
இந்த இனத்தை, பிரம்மனின் பாதத்தில் பிறந்த இனமென்றும், பன்றிக்கு பிறந்த இனம் தமிழினம் என்றும் ஆரியர் இழைக்கும் அவமதிப்புகள் ஒருபுறமிருக்க-
நாம் ஒன்றை நிச்சயம் மறந்து வருகிறோம்...
யாகம் என்ற பெயரிலும், சடங்கு என்ற பெயரிலும் ஆரியர் மிருகங்களைக் கொன்று பூசித்து, தின்று வந்தனர்...
புலால் உண்ணாமை எனும் நெறியோடு வாழ்ந்த தமிழர், ஆரியரின் மூடப் பழக்கம் பரவாதிருக்கவும், மிருகங்களை வதைப்பதைத் தடுக்கும் பொருட்டும், தமிழரின் எல்லைக்குள் யாகம், வேள்விக்கு தடையாய் இருந்தனர் தமிழர்!...
புலால் உணவில் இச்சை மிகுந்த ஆரியர், இதன் பொருட்டு தமிழரோடு வம்பு செய்தனர்...
ஆயினும், திண்மையோடு நின்று ஆரியரின் புலால் இச்சையை எதிர்த்தமையால்-
ஆரியர் வஞ்சத்தால் - மறைந்து நின்றுக் கொன்றனர்... கொல்லப்பட்டவனை நரகாசுரன் என்று விளித்தும், பன்றிக்குப் பிறந்தவன் என நம்பவியலாத கட்டுக்கதைகளை இட்டுக்கட்டியு ம் ஆண்டுதோறும் அவன் இறப்பைக் விழாவெடுகின்றனர்...
கூறுங்கள், தமிழர்களே...
தமிழனைக் கொன்று ஆரியர் விழாவெடுக்க, தமிழன் மாண்ட நாளை தமிழர் வீர நாளாக அன்றோ கடைப்பிடித்தல் வேண்டும்...
நாமும் ஆரியரோடு சேர்ந்து, தீபாவளியைக் கொண்டாடுவது, பன்றிக்கு பிறந்தவர்கள் தமிழர்கள் என்று ஒத்துக்கொள்ளுதல் போலல்லவா இருக்கிறது...
வேண்டாம்; தமிழர்களே!....
இந்நாளை-
ஒரு மாவீரனின் நினைவு நாளாய்ப் போற்றும் வண்ணம்-
இல்லார்க்கு உதவுவோம்...
எளியோர்க்கு இயன்றதை வழங்குவோம்...
இந்நாளில், வெடிக்காக செலவிடும் தொகையை, முதியோர் இல்லம் சென்றும், ஆதரவற்றோர் இல்லம் சென்றும் அவர்தம் பசியாற்றுவோம்...
வெடி வாங்கி வைத்திருந்தாலும், அன்பளிப்பாக வந்திருந்தாலும் அவற்றை நீரில் அமிழ்த்தி அழித்துவிடுங்கள்; இயற்கை மாசு அடைவதைத் தடுக்க!
இயற்கை மட்டுமா மாசு அடைகிறது...
என்போல் உள்ள இதய நோயாளிகளின் நலனும் அதில் உள்ளடங்கும்...
குழந்தைகளின் நுரையீரல் கெடாமல் காப்பாற்றப்படும்...
வெடிவாங்க வைத்திருக்கும் தொகையில்-
அரசு பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள், தமிழ் அகராதி, ஆங்கில அகராதி மற்றும் நுண்ணறிவு நூற்களை வாங்கி கொடுங்கள்...
வெடிவாங்கிடும் தொகையில்-
தெருவோரம் ஆதரவின்றி கிடக்கும் தொழு நோயாளிகளை- முதியோரை - எளியோரை - அழைத்துவந்து, அந்த ஒருநாள் அவர்களுக்கு உணவுப் பரிமாறி மகிழுங்கள்...
வீட்டுக்கு அழைத்து வராவிட்டாலும் அவர்களின் இடந்தேடிச் சென்று உதவிடுங்கள்...
குறைந்தபட்சம் ஒரு போர்வையையாவது தெருவாசிகளுக்கு வாங்கி கொடுங்கள்...
இப்பழக்கத்தை குழைந்தைகளோடு செய்தால், குழந்தைகளும் இதனை பின்பற்றி எதிர்காலத்தில் தொடர்வார்கள்...
வெடிவாங்கி கரியாக்கி - இயற்கையை - மாசுபடுத்தி - நம் நுரையீரலை நைத்து நாசமாக்குவதைக் காட்டிலும்,
ஆரியரின் யாகத்துக்கும், வேள்விக்கும், புலால் பழக்கத்திற்கும் எதிராய்ப் போராடி வஞ்சத்தால் வீழ்ந்த அம்மாவீரனின் நாளை எளியோர்க்கு உதவிடும் நாளாக - மெய்யுணர்வு வளர்க்கும் நாளாகவும் - ஆக்கிடுவோம்...
- அரங்க கனகராசன்.
15102017
-----------------------------------------------------------------------------------------
காந்தி - காமராசர் - எடப்பாடி - பன்னீர்!
தென் ஆப்ரிக்காவில் காந்திக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானம், அவரை இனவெறிக்கு எதிரானதோர் போர்க்களத்துக்கு இட்டுச்சென்றது என்கிறது வரலாறு...
அதே காந்தியடிகளிடம், தமிழ்நாட்டில் குருக்கல்வி முறையால் சாதி வேறுபாடு - தீண்டாமை - கடைப்பிடிக்கப்படுகிறது என்று பெரியார் தமது உள்ளக்குமுறலை காட்டியபோது, சாதி என்பது இறைவன் வகுத்த விதி - அதைமீறுவது வேதங்களை நிந்திப்பது ஆகும் என்றார்...
சாதியை - குலத்தொழில் முறையை - ஆதரித்த காந்தியைக் காட்டிலும்-
கிராமந்தோறும் பள்ளிகள் திறந்து - உழவின் அவசியம் கருதி, அணைக்கட்டுகள் கட்டி - தமிழகத்தைக் கல்வியிலும், உழவிலும் தலைநிமிரச்செய்த காமராசர் மேல் என்பேன்...
காமராசரின் தொலைநோக்குப்பார்வை-
சிற்றூரில் இருந்தும் மருத்துவனை உற்பத்தி செய்கிறது தமிழகம்!
ஆனால்; இன்று வீட்டை விட்டு வெளியேற பயந்திட வேண்டிய அச்சம் நிலவுகிறது தமிழ்நாட்டில்...
டெங்குவின் பிடியிலிருந்து தப்பிக்க வியலாது என்று அஞ்சி மகனைக் கொன்று தானும் இறந்தாள் தாய் - தமிழ்நாட்டில்!
டெங்குவின் பழிவாங்கும் கொடூரம் நாளுக்குநாள் நீடிக்கிறது...
வெளியே சென்றால், டெங்கு ஒட்டிக்கொள்ளுமோ என்ற அச்சம் தமிழ்நாட்டிலே நிலவும் இந்த நேரத்தில்-
சொடுக்கு போட்டு அரசு அதிகாரிகளை மின்னலென இயங்கச் செய்திட வேண்டிய இந்தத் தருணத்தில் -
திருப்பதியில் எடப்பாடியும், பன்னீரும் குடும்பம் சகிதமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால்-
தமிழ்மக்கள் ஊமையரா? செவிடரா?
இந்த நாட்டின் அவலம் போக்காது, அரசு செலவில் MGR நூற்றாண்டு விழாவை நிகழ்த்தி விளம்பரம் தேடித் கொண்டிருக்கிறார்கள் என்றால்-
தமிழ்மக்கள் சுரனையற்றவர்கள் ; சூடற்றவர்கள் என்ற எண்ணமா பன்னீருக்கும், எடப்பாடிக்கும்?
எடப்பாடியும், பன்னீரும் தமிழ்நாட்டின் இறுதியுரை எழுதிட தமிழ்மக்கள் வேடிக்கைக் கண்டு கொண்டிருக்கின்றனர் என்று உலகு துப்புகிறதே...
இதுகள் பதவியில் நீடிப்பது தமிழ்நாட்டின் அவமானமா? அல்லவா?
அவமானத்தின் உருவங்கள் பன்னீரோடும், எடப்பாடியோடும் நிற்கட்டும்...
சுயநலத்தின் பொருட்டும் - கட்சியின் சின்னத்தை கைபற்றுங் நோக்கிலும் - உ ள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் காலந்தாழ்த்தும் எடப்பாடியும் , பன்னீரும் நீடித்தால் தமிழ்நாடு கொசுக்களின் தலைமையகமாக மாறிவிடும்...
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் இப்போது புரிகிறதா?
- அரங்க கனகராசன்.
03102017
---------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழன் என்ற ஒற்றை வார்த்தை!
ஞாயிற்றுக்கிழமை ஒரு கோயில்!
திங்கள் ஒரு தெய்வம் !
செவ்வாய் ஒரு விரதம்!
புதன் மற்றோர் கோயில்!
வியாழன் அனுமன் கோயில் !
வெள்ளி அம்மனுக்கு பூசை!
சனி ஒரு பகவானுக்கு வேண்டுதல்!
இப்படி வாரத்தில் ஏழு நாட்களும் -
வருடத்தில் மதம் சார்ந்த சிறப்பு விழாக்கள் என அநேகம்!
அதோடு பிறப்புக்கும், இறப்புக்கும் நிகழ்த்தப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள்...
இவற்றால் தமிழன் தமிழன் என்ற உச்சத்தைத் தொட்டானா எனில் இல்லை!...
தமிழன் சாதி - சாதியம் - என்ற வட்டத்தை விட்டு வெளியாறா வண்ணம், ஆரியம் துல்லியமானோதோர் ஆயுதத்தை, மதம் என்ற பெயரில் பிணைத்துள்ளது...
ஆரியமே கலங்கி நிற்கும் எதிர்வினையை தமிழன் ஆற்றவியலாதா?...
இயலாத என்ன?
அரசின் சில சலுகைகளைத் துறந்து - தமிழினம் என்ற பரந்த வெளியை - இருவிழிகளால் தமிழன் காணத் தொடங்கிவிட்டால் ஆரியத்தின் பிணையை சிதைத்து நொறுக்கி விடலாம்...
பள்ளியில் சேர்க்கும் போதே அதனைத் தொடங்க வேண்டும்...
சாதி என்று படிவம் கேட்கும் இடத்தில் அழுத்தமான கோடு இழுத்திடுங்கள்...
ஆரியன் தன் சாதியை குறிப்பிட்டால் அது நமக்கு சாதகமே!
நாடு என்று கேட்கும் இடத்தில் கூட தமிழ்நாடு என்று எழுதி அடைப்புக்குள் இந்தியா என்று குறிப்டுபிடுங்கள்...
இனம் என்று கேட்கும் இடத்தில் , இந்தியன் என்று எழுத வேண்டிய அவசியமில்லை...
தமிழன் என்று நீங்கள் செதுக்கும் எழுத்துக்கள் ஆரியத்தை உதிர வைக்கும் உளியாகும்...
இனம் என்ற இடத்தில் தமிழன் என்று குறிப்பிடுவதை எவராலும் தவறென்றுக் கூறவியலாது...
ஏனெனில் தமிழினம் உலகளாவிய - தேசிய - இனம் ஆகும்!...
தமிழன் என்ற ஒற்றை வார்த்தையை நாம் இதயத்தில் தாங்கி படிவத்தில் எழுதினால் சாதி - சாதியம் - தகர்வதோடு, தமிழ்நாட்டின் பொதுவாக்கெடுப்புக்கும் திறவு கோல் கிட்டிவிடும்!
அந்த ஒற்றை வார்த்தை இந்தியாவின் கடவுசீட்டிலும் இடம்பெறவேண்டும்...
- அரங்க கனகராசன்.
30092017
-------------------------------------------------------------------------------------------
நேருவின் நினைவுகளும்... ஆயுதப் பூசை சிந்தனையும் ...
இயற்கையை மாசுபடுத்தி-
நோய்க்கிருமிகளை உண்டாக்குவதில் வல்லமை மிகு மதமொன்று உண்டெனில் தவறாகுமா?...
ஒரே இடத்தில புனித நீராடல் என்ற பெயரில் நீரை மாசுபடுத்துதல்-
களிமண் உருண்டைக்கு வேதியல் வண்ணம் தடவி நீர்நிலைகளில் அதனைக் கரைக்க, அந்நீரைப் பருகும் நீர்வாழ் உயிரினங்கள் மடிந்துற, மடிந்துற்ற மீன் உட்பட பலவற்றின் சடலங்கள் கரை ஒதுங்கி - அழுகி - நோய்க்கிருமிகளின் பிறப்பிடமாய் மாற-
அந்நீரைப் பருகும் மனிதன் டெங்கு - டிங்கு- மங்கு - சங்கு -என இன்னும் பலப் பெயரிடப்படாத நோய்கள் தாக்கி மடிய-
தீபாவளி என்ற பெயரில்-
வெடிகளை வெடித்து இயற்கையின் நலம் கெடுப்பதோடு- வெடியால் சிதறும் குப்பைகள் குவியலாகி-
அக்குவியல் ஈரத்தை உள்வாங்கி, கிருமிகளை உண்டாக்கி மானிடரைத் தாக்க-
இப்போது ஆயுதபூசையின் போது பூசணிக்காயை தெருவோரத்தில் உடைத்து,
அப்பூசணிக்காய்கள் நைந்து அழுகி தெருவோரம் உறைந்து கொசுக்களின் உற்பத்தித் தலமாகிட -
அய்யயோ...
இதற்கும் ஓர் மதம் உண்டு என்று சொல்வதல்ல இப்போது எனது நோக்கம்...
ஆண்டாண்டு காலமாய் மக்களும் இயற்கையின் மாசுப்படுத்துதலுக்கு உடன்படுகிறார்கள் என்பது வேதனைதான் என்றாலும்-
நான் சொல்ல வந்தது வேறு!
நேருவின் மரணத்திற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது...
சீனாவின் நம்பிக்கை துரோகம் நேருவை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி மரணம் ஏற்படுத்திவிட்டது என்பதே அந்தக் காரணம்!....
அதாவது-
இந்தியா ஏமாந்திருந்த வேளையை சீனா பயன் படுத்தி , போர் தொடுத்து இந்தியாவின் பகுதிகளையும் ஆக்ரமித்துக் கொண்டதாம்...
அந்த அச்சம்தான் இப்போது எனக்கு!
இந்தியர்கள் ஆயுத பூசை செய்வதை மதசடங்காகக் கருதுகின்றனர்...
இன்றைய பிஜேபி ஆட்சியும் மத நம்பிக்கையில் அதிக நாட்டம் கொண்டுள்ளது...
அரசு எவ்வழியோ... துருப்புகளும் அவ்வழியே செயல்படுவர் என்று மக்கள் கருதுவதில் விந்தையேதும் இல்லையே!...
பொதுவாக, ஆயுதப்பூசை செய்துவிட்டு, மீண்டும் மறுநாள் அல்லது நல்லநாள் பார்த்து மறு பூசை செய்துவிட்டுத்தான் திரும்பவும் ஆயுதங்களை கையாள்வது இந்தியர்களின் நம்பிக்கை!...
அந்த வகையில்-
இந்திய ராணுவம் ஆயுதங்களுக்கு ஆயுத பூசை செய்து விட்டு, மறுபூசைக்காக விடும் இடைவெளியை சீனா, பாகிஸ்தான் மற்றும் நாகாலாந்து போராளிகள் பயன்படுத்திக் கொண்டால்?
இந்தியாவின் எல்லையோரம் பதட்டம் மிகுந்திருக்கும் இந்நேரத்தில்,
இந்தியர்களின் பாதுகாப்புக் குறித்து அச்சம் ஏற்படுகிறது...
- அரங்க கனகராசன்
29092017
-------------------------------------------------------------------------------------------------------
எது கலப்புத் திருமணம்?
முனைவர் அண்ணாதுரை ஈஸ்வர் என நினைக்கிறேன்... கடந்த வாரம் ஒரு பதிவு இட்டிருந்தார் முகநூலில்!
தமிழன் தமிழச்சியை திருமணம் புரிவது கலப்புத் திருமணம் ஆகுமா? என்று வினவியிருந்தார்...
சிந்தனையைத் தூண்டும் வினா!
சாதிகளைக் கண்டறியாதவன் தமிழன்...
ஆரியரின் வருகைக்குப் பிறகே, ஆரியரால் திணிக்கப் பட்ட கட்டமைப்பே சாதிகள்!
இந்தக் கட்டமைப்பைத் தகர்த்துவிட்டு நோக்கின், தமிழர் யாவரும் சரி நிகரே!
யாதும் ஊரே; யாவருங் கேளிர் என்று மானிடவியலை பாருக்கு வழங்கிய தமிழநாட்டில் சாதிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை...
இந்த சாதிய கட்டமைப்பைத் தகர்க்க இரு வழிகள் உள!
ஒன்று நாம் அனைவரும் தமிழினம் என்ற கட்டமைப்பை உறுதிப் படுத்திடல் வேண்டும்...
இரண்டாவது, ஒதுக்கீட்டிற்காக - சில சலுகைகளுக்காக சாதியத்தை கையில் ஏந்துவதை முற்றாகத் துறக்கவேண்டும்...
இடஒதுக்கீட்டினை விட்டு கொடுத்தால், ஆரியரின் ஆதிக்கம் சகலத் துறைகளிலும் ஓங்காதா?
முன்னிருந்தபடி நாம் ஆரியருக்கு தலைவணங்கி வாழ்வதா?
எனுங் கேள்விகள் எழுவதில் வியப்பு இருக்குமோ?
சாதிகளையும் விட்டொழிக்க வேண்டும்... இடஒதுக்கீடும் வேண்டும்...
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
தமிழ்நாட்டில் சாதிகளை ஒழிக்க தமிழினம் என்ற குடையின் கீழ் நாம் வர வேண்டும்...
வந்தால், இங்கே - தமிழ்நாட்டில் - சாதிகள் இருக்காது...
இரு இனங்கள் மட்டுமே இருக்கும்!
அவை ; தமிழினம் என ஒன்று! மற்றொன்று ஆரிய இனம்!
தமிழினத்திற்கு 97 விழுக்காடு ஒதுக்கீடும், ஆரிய இனத்திற்க்கு 3 விழுக்காடு என ஒதுக்கீடும் தொடர வழிவகுப்போம்...
தனியார் பள்ளிகளின் ஈடுக்கு ஏற்றவாறு அரசு பள்ளிகளின் ஈட்டையும் உயர்த்தி, கல்வியை முழுதாக இலவசமாக்கிட்டால், தமிழர் யாவரும் கற்றலில் பேதமிருக்காது...
தமிழினத்தில், முதல் பட்டதாரி மாணாக்கர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு பயிற்சி மையங்களையும் உண்டாக்கிவிட்டால், ஆரிய இனத்தையும் விஞ்சி திகழ்வர் தமிழின மாணாக்கர்...
சரி இக்கட்டுரைக்கும் கலப்புத் திருமணத்திற்கும் என்ன இணைப்பு என வினவும் வினாக்கர்களுக்கு விடையுரைத்தல் மிக எளிது!
தமிழன் ஆரியச்சியை மணந்தால் அது கலப்புத் திருமணம்!...
தமிழன் வடநாட்டு பெண்ணையோ, வடநாட்டவன் - ஆரியன் தவிர்த்து - தமிழ் பெண்ணையோ மணந்தால் அது கலப்புத் திருமணம்...
தமிழன் மேலை நாட்டு பெண்ணையோ , மேலைநாட்டு மணமகன் தமிழச்சியை மணந்தாலோ அது கலப்புத் திருமணம்!...
சரி இது நடைமுறைக்கு ஒத்துவருமா எனில், இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு இருக்கும் வரை ஒத்துவராது...
ஆதலால், இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ்நாடு விடுதலைப் பெற வேண்டும்...
விடுதலை வேண்டி பொதுவாக்கெடுப்பு நடந்தால் சாத்தியமே!
ஆதலால்; பொதுவாக்கெடுப்பு வேண்டி-
இளைஞர்களும், சட்ட அறிஞர்களும் முன்னெடுப்பு செய்திடல் வேண்டும்...
-அரங்க கனகராசன்.
27092017
-----------------------------------------------------------------------------------------------------
கடவுளின் முகவரி
" அய்யா, சாக்கடை நாற்றம்... கொசுத்தொல்லை... "
மாமன்ற உறுப்பினரிடம் முறையீடு!
அவர் கவனிக்கவில்லை...
அந்த கோரிக்கை மாமன்றத் தலைவருக்கும் அனுப்பப்படுகிறது...
பலனில்லை!
மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்டது..
அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக விடைத்தரப்பட்டது...
கோட்டைக்கும் போனது... கிடப்பில் போயிற்று...
என்னதான் செய்வது?
ஆட்சியாளர்களின் அலட்சியத்தை முறையிட வேண்டிய இடத்தில முறையிட்டு நீதி பெறுவோம் ...
அங்கும் விசித்திரமான விடை கிடைத்தது...
"கொசுவை ஒழிக்க கடவுளிடம் போங்கள்" - தள்ளுபடி ஆனது!
கடவுள் என ஒருவர் இருந்திருந்தால் நாட்டில் சச்சரவுகள் ஏது?
மனிதன் தீர்வு வேண்டி அலையமாட்டானே...
தீர்வு நாடி வந்த இடத்திலும் இப்படியா?
கடவுளைப் பாருங்கள் என்றவர், கடவுளின் முகவரியைப் தந்திருக்கக் கூடாதா என்று மக்கள் நினைப்பதில் விந்தையில்லையே?...
- அரங்க கனகராசன்
23092017
* இது நீதிமன்ற அவமதிப்பல்ல... ஒரு குடிமகனின் அவலம்...
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொசு, ஈ தொல்லை அறவே ஒழிக்கப்பட்டிருக்கும் போது, நம் ஆட்சியாளர்களால் ஒழிக்க இயலாமைக்கு யாது பொருள்?...
---------------------------------------------------------------------------------
நல்ல காலம் பொறக்குது.... ரஜினி!... கமல்!...
நடு இராத்திரி கோடங்கி இடும் பயமுறுத்தல் ஒலி போல் swachh swachh swachh swachh என்று இன்று காலையிலிருந்து தமிழ் செய்தி ஊடகங்களில் ஒலியாயின...
இது என்ன வார்த்தை என்றோ இதன் பொருள் என்னவென்றோ தமிழர்களுக்குத் தெரியாது...
இந்த swachh பின்னணியில்-
கன்னட நாட்டு நடிகர் ரஜினிகாந்த் உருவப்படமும் போட்டு கீச் கீச் செய்தனர்...
அப்பாடா, என்னே சுறுசுறுப்பு ரஜினிக்கு!
ஆண்டுகள் மூன்று ஓடிவிட்டன...
வடநாடுகளில் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்கள்தான் பெரும்பாலும்!...
கழிப்பறை இல்லையெனுங் கூற்றை மையப் படுத்தி மணமுறிவு நிகழ்வுகள் வடநாட்டில் நடக்கின்றன...
சாலை செப்பனிடல் பணி வேகம் இல்லை...
தொடர்வண்டி நிலையங்களில் கெட்ட நாற்றம் போக்கப்படவில்லை...
தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றிட போதியப் பணியாளர்கள் இல்லை...
கழிப்பறை இல்லாதப் பள்ளிகள் இன்னும் ஆயிரக்கணக்கில்-
ரஜினி இவற்றை கவனத்தில் கொண்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்...
வாய்கிழிய " தூய்மை இந்தியா" என்று விளம்பரத்திற்காக கூவத் தெரிந்த இந்தி மோடி கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் செய்த தூய்மைப் பணி என்னவென்று கேட்கத் தெரியாத ரஜினி "தூய்மை இந்தியா" வுக்கு கீச் கீச் செய்துள்ளதும் அதனை ஊடகங்கள் பெரிதுப் படுத்துவதும் வேடிக்கை!...
உள்ளப்படியே தூய்மையில் நாட்டம் கொண்டவர் எனில் ரஜினி என்னச் செய்திருக்க வேண்டும்?
அரசின் நிர்வாகத்தில் ஊழல் பெருச்சாளிகளோடு கைக்கோர்க்கும் இந்திமோடியின் செயலும் தூய்மையற்ற செயல்தானே என்று கீச் கீச் செய்திருக்க வேண்டும்...
செய்யமாட்டார்...
ஏனெனில்; இவர் காவிகளுக்குள் புகுந்து கசாயம் குடிப்பவர்...
இவர் இப்படியென்றால்,
இன்னொரு நடிகரும் 100 நாட்களில் நான் முதலமைச்சராகத் தயார் என்கிறார்...
இவர் அரசியலுக்கு வரட்டும்...
நடிகன் அரசியலுக்கு தகுதியற்றவன் என்பதல்ல என் கூற்று!...
இவர் நடிப்புக்கும் அப்பால் தன்னை அறிவாளியாகக் காட்டிட முனைபவர்...
உண்மையாகவே, நாட்டின் நலனில் - கமலுக்கு அக்கறை இருக்குமேயானால், நடிப்புக்கு முற்றாக முழுக்குப் போட்டுவிட்டு, ஓர் அய்ந்து ஆண்டுகளாவது - குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளாவது -
தமிழ்நாடு சார்ந்த உரிமைச்சார் போராட்டங்களை நடத்தி - தமிழ்நாட்டின் அரசியல்துவம் பெறட்டும்...
பின்னர் முதலமைச்சர் பதவிப்பற்றி சிந்திக்கட்டும்...
திரையுலகின் மாயையில் சிக்கிய ஈர்ப்பைப் பயன்படுத்திட முனைவது சரியான முன்னெடுப்பாக தமிழ்மக்களுக்கு அமையாது...
இந்திய அரசின் வருமான வரி சோதனை என்று இந்தி மோடி ஓர் நாடகத்தை நடத்தினால் , மத்திய அரசின் உருட்டலுக்கு அஞ்சி வீழ்ந்த நடிகர்களின் வரிசையில் கமலையும் வீழ்த்தி காட்டிவிடுவார்கள்...
மேலும், நடிகர்களின் பங்களிப்பு என்பது இனி தமிழ்நாட்டின் அரசியலுக்கு வேண்டாம்...
தமிழ்நாட்டுக்கு இனிமேல் தேவை யாதுயெனில், பொதுவாக்கெடுப்பே!
நிச்சயம் கமல் இதற்கு ஒத்துவரமாட்டார் என்பது என் கணிப்பு...
நடிகர்களால் நசிந்தது போதும்... தமிழ்நாட்டை நிமிர விடுங்கள்...
- அரங்க கனகராசன்.
22092017
----------------------------------------------------------------------------------------------
இந்தியா உருவானது இப்படித்தான்!....
சுமார் நானூறு ஐநூறு வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன...
அந்தப் பகுதியில் வணிகத்தின் பொருட்டு அந்நியர் நுழைந்தனர்...
அப்பகுதி மக்கள் அறியாமையில் மூழ்கியிருந்தனர்...
நானூறு ஐநூறு வீடுகளில் வசித்த மக்களிடையே ஏற்பட்ட பழக்கமானது, அந்நியர்களுக்கு ஒருவித ஈர்ப்பினை ஏற்படுத்தியமையால்-
வணிகப் பொருட்களை வைப்பதற்கும், தாங்கள் தங்கியிருந்து வணிகம் செய்வதற்கும் அந்நியர் இடம் கேட்டனர்...
அம்மக்களும் தத்தமது வீட்டின் சிறு பகுதியை அல்லது திண்ணையைக் கொடுத்து உதவினர்...
காலப்போக்கில், அந்நியர் தமது செல்வங்கொண்டு மிடுக்கான வாழ்வு வாழ்த்தொடங்கியதோடு, இடம் கொடுத்தவர்களின் வீட்டையும் மெல்ல மெல்ல ஆக்ரமிக்கத் தொடங்கினர்...
விழித்துக்கொண்ட ஒருசிலர், தமக்குரிய வீட்டை அந்நியர் ஆக்ரமித்ததோடு, வீட்டின் மீதிருந்த உரிமையையும் எடுத்துக் கொண்டதை உணர்ந்து ஆதங்கம் பட்டனர்... ஆவேசம் பட்டனர்... அந்நியர் ஆக்ரமிப்பிலிருந்து நகரமறுத்தனர்...
அந்நியர் பறித்துக்கொண்ட வீடுகளை மீட்க நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து "ஒருங்கிணைப்பு குழு " அமைத்து போராடுவோம் என்றனர்...
மக்கள் சம்மதித்தனர்...
அவ்வொருங்கிணைப்பு குழுவில் இந்திவெறியர்கள் அதிகம் இருந்தனர்...
அப்போது சிந்தனையாளன் ஒருவன் சொன்னான் :
"உங்கள் வீட்டை மீட்க நீங்கள்தான் போராடவேண்டும்... அடுத்தவனோடு இணைந்துப் போராடினால்-
போராட்டத்தின் பலன் வேறுவிதமாகி விடும்...
அது இன்னொரு ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்துவிடும் "
சிந்தனையாளன் பெரியாரின் கூற்றை செவிமடுக்க மக்கள் மறுத்தனர்...
இடையிடையே அம்மக்களிடையே சாதி சண்டை, மதமோதல் என இரத்தக்களரி ஏற்பட்டன...
இதனைக் காண சகிக்காத அந்நியர், ஆக்கிரமிப்பை விட்டு வெளியேறி விட்டனர்...
அந்நியர் வெளியேறியவுடன் -
அந்தந்த வீட்டுக்குரியவர்கள் அந்தந்த வீட்டுக்குள் நுழைந்தனர்...
"இப்படி நாம் தனித்தனியாக இருந்தால், மீண்டும் அந்நியர் வந்து நமது வீடுகளை ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடும்... எனவே நாம் ஒருங்கிணைந்து வாழ்வோம் " என்றனர் ஒருங்கிணைப்புக் குழுவினர்...
மக்கள் நம்பினர்...
ஆனால்; நடந்ததென்னவோ வேறு!
ஒருங்கிணைப்பு குழுவில் இந்திபேசுவோர் அதிகம் இருந்ததால்-
ஒவ்வொரு வீட்டுக்கும் தகவல் அனுப்பினர்... நீங்கள் உங்கள் வீட்டில் வாழ்ந்தாலும், நாங்கள் சொல்வதைத்தான் செய்யவேண்டும்... நாங்கள் சொல்வதைத்தான் சாப்பிடவேண்டும்... இந்தியை மட்டும் படிக்க வேண்டும்... மீறினால் ஒருங்கிணைப்புக்குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்...
சிந்தனையாளன் பெரியார் சொன்னது அப்போதுதான் ஒருசிலருக்குப் புரியத்தொடங்கியது...
ஆனாலும், ஒருங்கிணைப்புக்குழுவின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு வாழவேண்டிய சிக்கலுக்கு உள்ளாயினர்...
எதிர்த்து பேசுவோர் மீது கடுமையான தண்டனைகளை விதித்தனர் ஒருங்கிணைப்புக் குழுவினர் பெயரில் இயங்கிய இந்தி ஆதிக்க வெறியர்கள்...
அடுத்தத் தலைமுறை இளைஞர்கள் சிந்தித்தனர்...
இந்த வீடு நமது மூதாதையர் சகல உரிமையோடு வாழ்ந்த வீடு...
இங்கு நாம் இப்போது உரிமையிழந்து நிற்பது என்ன நியாயம்?
நம்மீது வேற்று மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதும், அவர்களின் பழக்கவழக்கங்களை நம்மீது திணிப்பதும் நன்றல்லவே!...
நமது உரிமையை மீட்டெடுப்போம் என்ற சிந்தைக்கு வந்தனர்...
ஆயினும், இன்னும் அவர்களால் அவர்களின் வீட்டை - நாட்டை - மீட்க இயலவில்லை...
சர்வதேச நீதிமன்றம் சென்றால் கூடுமா?
அறிஞர்களே, இளைஞர்களே நம்நாட்டை மீட்பது குறித்து முடிவெடுங்கள்...
ஊழல் அதிமுக வின் நிகழ்வுகளில் சிந்தையிழந்து, நமது மூதாதையர் வாழ்ந்த மண்ணை மீட்க மறந்து விடாதீர்கள்...
- அரங்க கனகராசன்.
19092017
----------------------------------------------------------------------------------
நீதி அரசரின்...
நீதி அரசரின் நீதியை அல்லது கருத்துக்களுக்கு மாற்று கருத் துரைப்பதை பலர் அஞ்சுகின்றனர்; அது நீதிமன்ற அவமதிப்பாகிடுமோ என்பதால்!...
இந்நாட்டின் குடிமக்கள் சிலவற்றின்மீது விளக்கம் பெற உரிமை உண்டல்லவா?...
நீதி அரசரின் சிலநேரத்து சீற்றங்கள், மக்களுக்கு மகிழ்வாகவும், சிந்திக்கத்தூண்டுவதாகவும் உள்ளன...
இன்றைக்கும் ஒரு சீற்றம் வெளிப்பட்டிருக்கிறது...
ஒருமணிநேரத்தில் அனைவரையும் வேலையிலிருந்து தூக்கியெறிந்து விடமுடியும்; வேலைநிறுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வராவிட்டால்! என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் மீது!...
தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்கெட்டுக்கிடக்கும் நிலையில். நீதியரசரின் இந்த சீற்றம் நன்றுதான்...
இந்தசீற்றமானது இரண்டு நாட்களுக்கு முன்னரும் ஆசிரியர்கள் மீதும் வெளிப்பட்டது நீதிமன்றத்திலிருந்து...
மாநிலப்பாடத்திட்டத்தில் பயின்ற நான்கு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க இடம்கிடைத்தது என்பதை நினைத்து ஆசிரியர்கள் வெட்கம் படவேண்டும் என்று!
உண்மையில்-
மாநிலப் பாடத்திட்டத்தின் படி சிறப்பாகவே நமது ஆசிரியர்கள் கற்றுத்தந்துள்ளனர்...
ஆண்டுக்கு ஆண்டு வெற்றி சதவீதம் உயர்ந்து வருவதே சான்று!
மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று மருத்துவரான நமது மருத்துவர்கள் அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் மெச்சும்படி பணிபுரிந்து வருகின்றனர்...
இந்நிலையில் ஆசிரியர்கள் வெட்கம் படவேண்டும் என்று சொல்வது புரியும்படி இல்லை...
மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர் மீது வலுக்கட்டாயமாக வேறு பாடத்திட்டத்தின் - நீட் - கேள்விகளை துளைத்தது மட்டுமின்றி-
அனிதாவின் மரணத்துக்கும் காரணமான இந்திமோடி வெட்கப்படவேண்டும் என்று நீதி மன்றம் கூறியிருந்தால்-
அது உள்ளப்படியே மகிழ்வைத் தந்திருக்கும்...
- அரங்க கனகராசன்.
15092017
இந்துமதம் வந்தக் கதை !
பிறக்கும்போதே மனிதன் இந்துவாகப் பிறக்கிறானாம்...
இந்துமதமே இங்கிலீஸ்காரன் வந்தப்பிறகுதான் பிறந்தது...
அட அறிவாளிகளே,
பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று கதையளக்கிறீர்களே...
சரி உங்கள் கூற்றுப்படியே பிறக்கும் இந்து ஏனய்யா மதம் மாறுகிறான்...
இந்து மதம் கோளாறு என்பதாலா?...
இந்துவாக பிறந்து, இந்துவாக வாழ்ந்து, செத்தப்பிறகு அவனை சக்கிலியனாக, பள்ளனாக, பறையனாக இன்னும் பல சாதி பெயர்களில் இழிவு படுத்தி பிணத்தை தூக்கி செல்ல தனிப்பாதை அமைக்கிறதே இந்து மதம்...
இது என்ன நீதி?
இதுதான் இந்துநீதி எனில்,
வள்ளுவனின் நீதியைப்பாருங்கள் ...
''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் "
இதுதான் மானிடர்நீதி!...
மானிடனாய்ப் பிறந்து, மானிடர்க்காகவே எழுதப்பட்ட தமிழ்நீதி!
இதுவா? அதுவா? என்று கேட்டால், தமிழர்கள் மட்டுமல்ல மானிடநேயம் கொண்டோர் யாவரும் தமிழ்நீதியே மேலென்பர்!...
ஆதலால்;
பிறக்கும்போது மனிதன் இந்துவாகப் பிறக்கிறான் என்று தமிழ்நிலம் நோக்கி கூறாதீர்கள்...
- அரங்க கனகராசன்.
12092017
-----------------------------------------------------------------------------------
வேண்டும்... வேண்டும்... பொதுவாக்கெடுப்பு வேண்டும்...
சட்டத்தின் கொடூர ஆயுதத்தை கைலேந்தி - நாடாளுமன்றமோ, உச்சநீதி அவையோ ஒரு இனத்தின் உணர்வை நசுக்க முற்பட்டால்-
அது வரலாற்றுப் பிழையாகும்!...
ஒரு இனத்தின் மக்கள் எப்படிப் படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவ்வினத்தின் மக்களேயன்றி பலதேசங்களை ஒருங்கிணைந்த இந்தியா அல்ல!...
பலதேசங்களின் கூட்டுத் தன்மையைப் பொறுப்போடு கையாளாமல்-
ஒருகுறிப்பிட்ட இனத்தின் பாரம்பரியத்தை நசுக்குவது போல் செயல்பாடு அமைந்தால்-
பலதேசங்களின் ஒருங்கிணைப்பிலிருந்து விலகிட, பொதுவாக்கெடுப்புக் கோருவதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை, தமிழ்நாட்டுக்கு!...
அனிதாவின் நெஞ்சில் கொழுந்து விட்டெரிந்த அனல் பொது வாக்கெடுப்புக்கும் வழிவகுக்குமெனில் அனிதாவின் கல்லறை வரலாற்றின் சதுக்கமாகும்...
தமிழன் வரி கட்டுவான்...
தமிழனின் வரியில் மருத்துவமனை- மருத்துவக்கல்லூரி-கட்டப்படுகி றது.
தமிழனின் வரியில் பேராசியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது...
ஆனால்; தமிழனுக்கு அந்த மருத்துவக்கல்லூரில் படிக்க சட்டம் தடையாய் இருக்குமெனில், அது உடைப்படுமென்பது தவறாகுமா?...
தமிழ்மண்ணில், தமிழன் கல் மண் சுமந்து கோயில் கட்டுவான்... தமிழன் கட்டும் கோயிலில் தமிழன் நுழையக்கூடாது - பார்ப்பணன் மட்டுமே கருவறையில் நுழையலாம் என்ற அரசியல் சட்டத்தைத் தகர்க்காமல் விட்டதன் எதிரொலியே தமிழ்மாணவர் மருத்துவப்படிப்புக்கு தடைவிதிக்க விதிசெய்தனர்...
போதியத் தகுதி இருந்தும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு-
வேறொருவரை தலைமை நீதிபதியாக அரசு நியமிக்குமேயானால் அந்த வலி - அந்த உரிமை மறுப்பு - எத்தகையது என்பது பாதிப்புக்குள்ளாகும் நீதிபதி அறிவார் அல்லவா...
அதே வலிதான் தமிழ் மாணவருக்கும் என்பதை சட்டத்தை பரிபாலிப்பவர் உணர்வார்களா?...
- அரங்ககனகராசன்
09092017.
----------------------------------------------------------------------
கவுரி லங்கேஷ் என்ன சொன்னார்?
மனுதர்மம் மனித குலத்திற்கு எதிரானது என்றார்...
மனுதர்மத்தின் சாரம்சத்தைத்தா னே அந்தப்பெண்மணி சுட்டிக் காட்டியிருக்கிறார்...
அதைத்தானே ஒருநூற்றான்டுக் காலம் பெரியாரியல் சொல்கிறது...
" கவுரி நீங்கள் சொல்வது தவறு... மனுதர்மம் மனிதகுலத்தின் வழிகாட்டி!... நீங்கள் சொல்வது போல் இந்துமதம் அருவருப்பான மதமல்ல... இந்துமதத்தில், மானிடநேயம் மிகுந்திருக்கிறது... இந்து மதத்தில் பார்ப்பணனை நாங்கள் உயர்வுப் படுத்தவில்லை... இங்கு எல்லாருமே சமம்... சாதி பாகுபாடு இல்லை... மலம் அள்ளும் வேலையைத்தான் பார்ப்பனன் பார்க்கிறான்... அவனை நீங்கள் தவறாக சித்திரிப்பதுத் தவறு...
எங்கள் இந்து மதக் கடவுள்கள் ஆபாசமானவர்களில்லை... ஒழுக்கமானவர்கள்... குளிக்கும் பெண்களை எட்டிப்பார்க்கும் கடவுள் இந்து மதத்தில் இல்லை...
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தைப்பிறக்கும் என்ற கட்டுக்கதைகள் இந்து மதத்தில் இல்லை " - என்று ஆதாரங்களோடு விளக்கம் தந்திருக்கவேண்டாமா மதவெறியர்களே...
கருத்தியலை கருத்தியலாக விடைக் கொடுத்திருந்தால், நீங்கள் அன்பும், அமைதியும் மிக்கவர்கள் எனலாம்...
எந்த நாத்திகனாவது ஆத்திகனை கொன்றதாக வரலாறு உண்டா?
நாத்திகம் பேசினால், ஆத்திகம் பேசி விடை பகரும் நல்தன்மை மதவெறியர்களிடத்து காணமுடிவதில்லையே..
அதுதான் மதம் பிடித்து அலைகிறீர்களே...
உங்களிடத்தில் நேயம் எப்படி காணவியலும்?...
கவுரியைக் கொன்று மதத்தின் கோர முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறீர்கள்...
தமிழ்மண்ணிலும் உங்கள் மிரட்டல் தொடரத்தான் செய்கிறது...
தமிழ்மக்களே,
இந்தியாவோடு இணைந்திருக்கும் வரை, ஆரியத்தின் நச்சு நம்மைத் தீண்டிக் கொண்டுத்தானிருக்கும்...
மாணவர்களே...
உறுதிக் குலையாதிருங்கள்...
நடந்துக் கொண்டிருக்கும் போராட்டத்தில் மதம் - சாதி - சாயம் பூசி உங்களைத்திசைத் திருப்பக்கூடும்...
- அரங்க கனகராசன்.
06092017
----------------------------------------------------------------------------
நம் மாணவர்களின் மீது ஏனிந்த வக்கிரம்?
இனி எத்தனைக் காலத்துக்கு இந்த சித்ரவதை?
காங்கிரஸ் ஆளும்போது, திமுக மவுனம் காப்பதும், பிஜேபி ஆளும்போது அ(டிமை)திமுக மவுனம் காப்பதும் நாம் கண்டறிந்து விட்டோம்...
திமுக - அதிமுக - மவுனங்கள் தமிழினத்தின் அழிப்புக்கு பேராயுதமாகப் பயன்பட்டன காங்கிரசுக்கும், பிஜேபிக்கும்!
ஆதாலால், காலத்திற்கேற்ற அவர்களின் கூப்பாடுகளை நம்பி இனி எந்த மாணவனும் ஏமாறக்கூடாது...
காலத்திற்கேற்றவாறு-
கண்டான பொதுக்கூட்டம் அல்லது அறிக்கை அல்லது மனிதசங்கிலி போர் அல்லது கடையடைப்பு நடத்துவது திமுக - அதிமுக - ஆகிய கட்சிகளுக்கு கைவந்தக்கலை!
கைவந்தக்கலை என்பதைவிட தமிழ் மக்களை ஏமாற்றிட முனையும் தந்திரங்கள் எனலாம்...
அதோடு - அந்தப் போராட்டங்களோடு மக்களை திசைதிருப்பிவிட்டு பெருச்சாளிகள் கிளம்பிவிடும் ஊழல் பொந்துகளுக்கு!...
திமுக , அதிமுக ஆகிய கட்சிகளால் நம் மாணவர்களுக்கு நீட்டிலிருந்து நிச்சயம் விலக்கு பெற்றுத் தந்துவிட முடியாது...
ஏறுதழுவதலை நெஞ்சுயர்த்தி பெற்று தந்தவர்கள் தமிழ் மாணவர்களும், தமிழ் இளைஞர்களும்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்...
நீட்டில் இருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என்று சொல்லி இன்னமும் ஏமாற்றுதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை நம்பாதீர்கள்...
நமக்கு இப்போது நீட் வேண்டுமா? வேண்டாமா என்பதற்கான போரல்ல இது!...
நம் தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்க வன்மம் கொண்டு, திட்டம் தீட்டி செயல்படும் இந்தியாவோடு இனியும் நாம் ஒட்டியிருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் கேள்விக்கானப் போர் இது!...
இந்தியாவால் பன்னெடுங்காலமாக பாதிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் தமிழ் மீனவனும், தமிழ் மாணவனும், இணைந்தால்-
இந்தியாவோடு நாம் இணைந்திருக்க வேண்டுமா வேண்டாமா எனும் கேள்விக்கு விடைக் கிடைத்துவிடும்...
- அரங்க கனகராசன்.
05092017
--------------------------------------------------------------------------------------------
அனிதாவும் - அமெரிக்கா மாணவனும்!...
இந்திமோடி என்பவர் மாதம் ஒரிரு நாள் இந்தியா வருவார்...
வரும்போது தூய்மை இந்தியா என்பார்...
அதோடு சரி..
தமிழர் நலனோ - தமிழ் உழவர் நலனோ அவரிடம் இருக்கிறதா என்பது கேள்விக் குறியே!...
தமிழ்ப்பெண் அனிதாவுக்காக ஒரு துளி இரங்கலும் தெரிவிக்காத இவரின் தன்மையில் , தமிழ் மக்கள் மீது இவர் கொண்டிருக்கும் வன்மத்தின் விளிம்பை உணர முடிகிறது என்று கூறலாமா?...
அமெரிக்காவில் நேற்று ஒரு சம்பவம்!
பொறியியல் பயிலும் சீக்கிய மாணவனை அமெரிக்கா மாணவன் கொலை செய்தான்...
கொலை செய்துவிட்டு அவன் தப்பி ஓடிவிடவில்லை...
நேராக காவல்நிலையம் சென்று தன் தரப்பு நியாயத்தை வைத்தான்...
அமெரிக்கா மண்ணில் அமெரிக்கா மாணவனுக்குக் கிட்டவேண்டிய கல்வியை எங்கிருந்தோ வந்த சீக்கியன் தட்டிப்பறிக்க-
நான் சொந்த மண்ணில் அகதியாவதா என்று வினா எழுப்பி நின்றான்...
ஆனால்;
நமது தமிழ்ப்பெண் அனிதா அவ்வாறு செய்யவில்லை...
ஏனெனில் " இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ்மண்ணாயிற்றே...
தனது வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்டாலும், அதனை தன் நெஞ்சோடு புலம்பலுக்கு விட்டதோடு உயிரையும் மாய்த்துக் கொண்டாள், தமிழ்நாட்டில் இந்தியநாட்டு மாணவன் வாழ வழிவிட்டுச் சென்றாள்...
இது அனிதாவுக்கே உரிய குணமன்று...
தமிழர் அனைவருக்குமான பண்பு!...
தமிழ்ப் பண்பு தமிழர் நெஞ்சமெங்கும் ஒட்டி உறவாடித் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது...
இந்த தமிழ்ப் பண்பு அந்த அமெரிக்கா மாணவனிடம் இல்லாததால்தான் சீக்கிய மாணவனைக் கொன்றான்...
அமெரிக்கா மண்ணில் கிருஷ்ணசாமி, எச்சை எலும்பியில் வல்லுநர், பரட்டைப் போன்றோர் இருந்திருந்தாலும் அந்த அமெரிக்கா மாணவன் கொன்றிருப்பான் போலும்...
நல்லவேளை!
நம் தமிழ் மாணவர்களிடத்தில் அமெரிக்க மாணவனின் பண்பு துளியும் இல்லை...
- அரங்க கனகராசன்.
03092017
--------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க தமிழர்!
அரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி வரைப் பரவியது கலவரம் - கற்பழிப்புப் புகார் மீதெழுந்த சாமியார் வழக்கின் தீர்ப்பின் போது!
பெண்களைக் கற்பழித்தும், கற்பழிப்பை ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய ஊடகவியளாலரைக் கொன்றும் தவறிழைத்த சாமியார் மீது நடந்த வழக்கின் தீர்ப்பு - கலவரத்துக்கு வித்திட்டது...
கயமைக் கோலம் பூண்ட சாமியாருக்காக வடநாட்டை போர்க்களமாக்கினர்...
ரயில்கள் எரிக்கப்பட்டன...
பொதுச்சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன...
சமூகநீதி வேண்டி உயிர்நீத்த அனிதாவுக்கும் தமிழர்கள் போராடி வருகின்றனர்...
குறைந்தபட்சம் ஐம்பது ரயில்களை எரித்தார்களா?
இல்லை!
ஐம்பது விமானங்களையாவது எரித்தார்களா ?
இல்லை!
ஐம்பது தபால்நிலையங்களையாவது எரித்தார்களா?
இல்லவே இல்லை...
மைய அரசின் அலுவலகங்கள் ஏதேனும் எரியூட்டப் பட்டனவா?
ஒன்றுமே இல்லை!
தமிழர்கள் அமைதியானவர்கள்...
அறவழியில் - நடுத்தெருவில் கூடி கூப்பாடு போடுவார்கள்...
காவல்துறை அடிக்க வந்தால் போராட்டத்தைவிட்டு ஓடிவிடுவார்கள்...
ஏனெனில் தமிழர்கள் வன்முறையை விரும்புவதில்லை...
அமைதியாகப் போராடுவார்கள் ...
வாழ்க தமிழர் அமைதி!
அரங்க கனகராசன்.
02092017
--------------------------------------------------------------------------------------
பிரதமர் பணிக்கும் நீட் தேர்வு!
எலும்பு வல்லுநர் திரும்பவும் சொல்லுகிறார்...
" நீட் அவசியமே"
மழலைப் பருவம் தொட்டு, பள்ளிப்பருவம் முடிய மொத்தம் 14 ஆண்டுகள் பயிலும் மாணவர், மேற்கொண்டு பயில நீட் அவசியமாம்...
கடைசி ஈராண்டுகள் பயிலும்போதே, மேற்படிப்புகானக் கல்வியையும் தேர்ந்தெடுத்து பயின்று, தேர்வான மாணாக்கருக்கு,, மீண்டும் ஒரு தேர்வு நடத்தித்தான் மருத்துவம், பொறியியல் பயில வாய்ப்பு வழங்க இயலுமெனில்-
எச்சையிடம் ஒரு கேள்வி!
டீ கடையில் வேலை செய்த அனுபவம் -
மேடையேறி தில்லாலங்காடி பேசும் சாதுர்யம் -
லஞ்சம் கொடுத்து வாக்கு வாங்கும் அயோக்கியத்தனம் -
-இவைகள் இந்நாட்டிற்கு பிரதமராகவும், முதலமைச்சராகவும் ஆவதற்கானத் தகுதி எனில், துறைச்சார்ந்த படிப்பைப் படித்து மேனிலை வகுப்பில் (+2) தேர்ச்சி பெற்ற மாணாக்கருக்கு அதுவே போதுமானது மருத்துவம் - பொறியியல் படிக்க!...
அல்ல அல்ல நீட் அவசியம் என்று கூவுகிறீரெனில்-
இந்நாட்டின் பிரதமராகவும், குடியரசு தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆவதற்கு ஒரு நீட் அவசியம்தானே?
ஒரு ஆட்சியரின் (கலெக்டர்) தகுதியைவிட அதிக தகுதி - அதிக கல்வி ஞானம் பிரதமருக்கும் இருக்கவேண்டும்...
அதை அறிய பிரதமர் பணிக்கும் நீட் தேர்வு கொண்டு வந்து விட்டு எம் தமிழ் மண்ணுக்கு - எம் தமிழ் மாணவருக்கு - நீட் கொண்டு வரட்டும் இந்திய அரசு!
அனிதாவின் மரணத்தை ஒட்டி எழுப்பப்படும் கேள்வியல்ல இது!...
நாட்டின் நன்மை கருதி கேட்கப்படும் கேள்வி!
எச்சை பதில் கூறுமா?...
- அரங்க கனகராசன்.
02092017
--------------------------------------------------------------------------------------------
ரஜினிகாந்துக்கு சிலைவைப்போம்
சிவாஜி!
மிகச் சிறந்த நடிகர்...
அவர் தனது நடிப்பாற்றலால் உலகின் பார்வையைத் தமிழ்நாட்டின் பக்கம் திருப்பிய பெருமை அவருக்கே உரித்தானது...
அவர் பேசிய செந்தமிழ் வசனங்கள் உச்சரிப்பின் இலக்கணமாய் திரையுலகிற்கு கிடைத்த பெரும் பரிசு!
அவரிடமிருந்து நகல்கள் பல எடுக்கப்பட்டன... இன்னும் எடுக்கப்படும்...
அவரின் சாயல் இப்போதுள்ள நடிகர்களின் நடிப்பில் - வசனத்தில் - முகபாவத்தில் - உறைந்திருக்கும்...
இன்னும் வரும் நடிகர்களிடத்திலும் அதனைக் காணவியலும்...
ஏனெனில், அவர் நடிப்பின் சிகரத்தைத் தொட்டவர்...
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் போது, அவ்வரலாற்றின் நாயகர்கள் உருவத்தை நாம் சிவாஜியின் சாயலில்தான் காண்கிறோம்...
இத்தகு அரியப்பண்பு கொண்ட சிவாஜிக்கு சிலை வைக்கவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!...
நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முதற்கொண்டு திரையுலகினரின் கோரிக்கையின் அழுத்தம் சற்று அதிகமாகவே இருந்தது இந்த வாரம்!...
சிவாஜிக்கு சிலை வைக்கவேண்டியதுதான்...
அது பொது இடமாக இருக்கவேண்டுமா என்பதுவே எனதுக் கேள்வி...
ஏனெனில், திரைத்துறையில் மட்டுமல்லாது பொதுவாழ்விலும் அவரின் பங்களிப்பு பெரும்பாலும் இந்தியம் என்பதாகவே இருந்தது...
தமிழரின் தேசம் - தமிழரின் உரிமை - தமிழினினம் பழம்பெரும் தேசிய இனம் - என்பதான அழுத்தம் அவரின் பொதுவாழ்வில் இருந்ததில்லை...
அவர் ஊதியம் பெற்றே நடித்தார்... நடிப்பிற்காக திரையுலகினர் சிலை வைக்க விரும்பினால், நடிகர் சங்கத்தில் வைத்துக் கொள்ளட்டும்...
அல்லது அவரின் சொந்த வீடு - தோட்டம் - எதிலாகட்டும் - வைத்துக் கொள்ளட்டும்
பொது இடத்தைத் தெரிவு செய்ய விரும்பினால், கன்னட நாட்டிலிருந்து பிழைக்க வந்த ரஜினிகாந்துக்கும் நாளை தமிழ்நாட்டில் பொது இடத்தில் - மெரினாவிலும் - சிலை வைக்க கோரிக்கை எழும்...
ஏனெனில் நம் தமிழ் இளைஞர்கள் திரையுலகின் ஈர்ப்பால் தம் இன அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பதையே மறந்து திரிகின்றனர்...
இன்று இந்தியாவின் விடுதலை நாளில் - இந்தியாவில் தமிழரின் உரிமை இழப்பு நிலைதான் மனதில் மேலோங்கி சித்ரவதைக்கிறது...
கீழடி ஆய்வுகளை வெளி உலகிற்கு காட்டாது மறைக்கச் செய்யும்
இந்தியாவின் கொடூர ஆதிக்க குணம் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சையும் இரணமாக்குகிறது இந்நாள்!...
இந்நிலையில் சிவாஜியின் சிலையோ - இந்தியாவின் விடுதலை நாள் விழாவோ - தமிழ் தேசத்தை மீட்டுத் தரப் போவதில்லை...
எப்போது மீளும் நமது தேசம்?...
- அரங்க கனகராசன்.
15082017
-------------------------------------------------------------------------------------------------------------
வைப்பாட்டி மகன்!
" தமிழ்ப் பேசுவோர் இந்தியாவின் குடிமக்கள் அல்லர்... ஆதலால்; தமிழர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப் படுவர் " என்றோர் அறிவிக்கை இந்திய அரசால் வெளியீடு செய்யப்படலாம் ...
அதனாலென்ன?
தமிழ் இளைஞனே, நீ நடிகன் படத்துக்கு பால் பூசை செய்து கொண்டிரு...
BIGBOSS போன்ற, பொழுது போக்கு நிகழ்வுகளைக் கண்டு நடிகைகளுக்கு புரட்சிப் படை அமைத்திடு...
கால்புட்டி மதுவும், இருநூறு ரூபாயும் வாங்கிக் கொண்டு, ஊழல் காதகர்களுக்கு கூசாத் தூக்கிடு!...
'உனது நாடு தமிழ்நாடு! உனது மொழி தமிழ்! நீ உலகின் மூத்த மொழியின் வழித்தோன்றல்!' என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாதே!
ஒருநாள் உன்கழுத்தைப் பிடித்துத் தள்ளும் இந்திய அரசு!
ஏனெனில்; நீ தமிழைத் தாய்மொழியாக கொண்டவனாயிற்றே...
அதன் முன்னோட்டம்தான் இன்று இந்தியாவின் பாராளுமன்றத்தில், துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழில் பேசுவதைத் தடுத்த நிகழ்வு!
தமிழும் இந்தியாவின் மொழிதான்; தமிழில் பேசுவது தவறல்ல என்று, இந்திமோடியோ - சபாநாயகரோ கூறாது மௌனம் காத்தனர்...
ஆதலால்; தமிழ் பேசும் நாம் இந்தியாவின் இரண்டாம்தர குடிகளாவோம்...
இன்னும் அழுத்திச் சொன்னால்; மனுநீதியின் படி நாம் பார்ப்பனர்களின் வைப்பாட்டி பிள்ளைகளாவோம்...
வைப்பாட்டிக் குழந்தைகளுக்கும் கூட சட்டம் சில உரிமைகளை வழங்குகிறது ...
ஆனால்; நமக்கு இந்தியாவில் சரிநிகர் உரிமை இல்லை...
எனவே; இந்திய அரசு நம்மை நாடுகடத்தும் முன்னர், நாமே இந்தியாவிலிருந்து வெளியேறிவிடுவது நல்லதா என்பதை சிந்தி , தமிழ் இளைஞனே!
- அரங்க கனகராசன்.
09082017
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கமலஹாசன் - news 7 - vijay TV -
தமிழ் இனத்தின் அடையாளம் திட்டமிட்டு இந்திய அரசால் - குறிப்பாக - இந்தி மோடியின் அரசால் - அழிக்கப்பட்டு வருகிறது...
கீழடி ஆய்வுக்குத் தடங்கல் செய்வதும்-
கீழடியில் கிடைத்தப் பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அதன் தொன்மையைப் பெறுவதிலும் இந்தி மோடி அரசு காட்டும் சுணக்கம் தமிழ் இனத்தின் அடையாளத்தை அழிக்கும் வெளிப்பாடுதான் எனில் மிகையன்று!...
தொன்மை வெளிப்பட்டால், உலகின் முதல் மூத்த இனம் தமிழினம் என்பது உலக அரங்கிற்கு வெளிச்சமாகிவிடும்...
இந்த வெளிச்சம் உறங்கிக் கிடக்கும் தமிழனை எழுப்பி, அவனது தேசத்தைக் கண்டறியச் செய்துவிடும்...
தமிழினத்தின் தொன்மை - பண்பாடு - வெளிப்பட்டுவிடாமல், இருட்டுக்குள் புதைத்து, சுவடுகளையும் தோய்த்து விட இந்திய அரசு குள்ளநரியைப் போல் செயல் படுகிறது...
குமரிக்கண்டத்தை ஆண்ட இனம் தமிழினம் என்பதை எடுத்துக்காட்டும் நிலப்பரப்புகளையும், பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து விட்டமையால், சுமார் பத்தாயிரம் அடிக்கும் கீழாய்த் தமிழ் நிலம் பாழாகப்போகிறது...
இந்தியாவைத் தொட்டு பகை நாடுகளும் உள்ளன...
அந்நாடுகள் போர்த் தொடுக்கும் பட்சத்தில், சுடுகாடு ஆகப்போவது தமிழ்நாடுதான் முதலில் எனில் மிகையன்று!
அந்நாடுகள் அணுகுண்டுகள் வீசி நம்நாட்டை சிதைக்க விடவேண்டியதில்லை...
சிதைப்புக்கு எளிய வழியையும் இந்திய அரசு செய்துள்ளது...
கல்பாக்கம், கூடங்குளம் என்றில்லாது இப்போது கதிராமங்கலம், நெடுவாசல் மீது சிறிய அளவிலானத் தாக்குதலை, வானிலிருந்து சீனாத் தொடுத்தால் போதும்...
நாகசாகி, ஹிரோஷிமாவைவிட மிக மோசமாகவும், விரைந்தும் தமிழ்நாடு அழிந்துவிடும்...
தமிழ் நிலப்பரப்பும், தமிழினமும் இந்திமோடி அரசால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது...
இதனை news7 போன்ற செய்திசேனல்கள் கோடிட்டுக் காட்டுகையில்-
நமது இனத்திற்கு ஏற்பட்டுள்ள அவலம் நினைத்து நெஞ்சம் பதைக்கிறது...
அதே நேரம்-
விஜய் தொலைக்காட்சியில்-
ஒரு நடிகை கொஞ்சமும் நாணமின்றி ஒருவனிடம் முத்தம் கேட்டு அலைகிறாள்...
அவனோடுப் படுக்கையைப் பகிர்ந்துக் கொள்ளத் துடிக்கிறாள்...
அவளுக்கு தமிழ் இளைஞர்களின் வாக்கு பலகோடிகளைத் தாண்டுகிறது...
நடிகர் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராய்க் கொடி தூக்கிய மாதர் சங்கங்கள்-
ஆடவனின் போர்வைக்குள் நுழைந்த நடிகையின் நிகழ்வுக்கு பாராட்டு நடத்தப போகின்றனவா எனத்தெரியவில்லை...
அதே பொழுது போக்கு நிகழ்ச்சியில் -
ஏறுத் தழுவுதல் போட்டிக்காக மெரினாவில் போராடிய ஒரு பெண் போராளியை அழைத்து அவள் மனதை ஊனமாக்கி - அவளுள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை - படம்பிடித்து இரணமாக்கி வெளியேற்றுகிறது...
பகுத்தறிவு முழக்கங்களை அவ்வப்போது முழங்கும் கமலஹாசன் இந்நிகழ்வுகளுக்கு தொகுப்பாளராய் விளங்குவது விந்தை!...
தமிழிளைஞர்களின் சிந்தை அணுக்களை சிதைக்கும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகளை நாம் தவிர்த்து -
தமிழினத்தின் சுவடுகளைத் திரட்டி தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தேசத்தின் வரைப்படத்தை உணர்ச்சிப் பூர்வமாய் காட்டும் தொலைக்காட்சிகளை நாடினால் மட்டுமே தமிழ்தேசம் மீட்புக்கு வடிவம் கிட்டும்...
- அரங்க கனகராசன்.
08082017
---------------------------------------------------------------------------------------------------
ஆதலால் தாங்கள்...
அப்துல் கலாம் அரசுப்பள்ளியில் பயின்று - தமிழில் பயின்று - அறிவியல் அறிஞர் ஆனார்...
அவரது நினைவு இல்லத்திறப்பு வந்து இந்தியில் பேசிய இந்திமோடிக்கு ஓர் வேண்டுகோள் என்னவெனில்?
அப்துல் கலாம் நீட் தேர்வு எழுதி அறிவியல் மேதை ஆணவரல்ல!...
தாய்மொழியில் சிந்தித்து, - வளர்ந்து - அறிவியல் உலகை எட்டினார்!...
அனால்;
நீங்கள் செய்வதென்ன?
RSS ன் மொழிக்கொள்கையை தமிழ்நாட்டு மக்கள் மீதும் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள்...
உங்களுக்கு வேண்டுமானால், உங்கள் தாய் மொழி தூசியெனப் படலாம்...
அதனால்தானோ நீங்கள் உங்கள் தாய்மொழியையும் ஓரங்கட்டிவிட்டு இந்தியைப் பிடித்து ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்...
அனால்;
தமிழருக்கு தாய்மொழி உயிரினும் மேலானது...
இதனை உணராமல், நீட் தேர்வு என்ற குறுக்கு வழியைக் கொண்டு மைய பாடத்திட்டத்தின் வினாக்களைத் தொடுத்து எம் தமிழ் மாணவர்களை இந்தியைப் படிக்க வைக்க மறைமுகமானதோர்ப் போரை நிகழ்த்திக்கொண்டிருக்கீறீர்கள் எனத் தோன்றுகிறது...
மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மீது மைய பாடத்திட்டத்தின் வினாக்களைத் தொடுத்தது, ஈரம் உள்ள நெஞ்சினர் செய்யும் வேலை அல்லவே...
அதிமுக அடிமைகளைக் கொண்டு இன்னும் எத்தனை நாள் உங்களால் தமிழ்நாட்டில் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தமுடியும்?...
ஈழத்தில் முப்பது ஆண்டுகள் ஆண்ட, தமிழினத்தலைவன் பிரபாகரன் ஆட்சி நிர்வாகம் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் பொறியியல் கல்வியையும் தமிழில்தான் வழங்கினான்...
தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் எம்மொழியில் பயில வேண்டும் என்று வழிகாட்டியவன் பிரபாகரன்!
ஆதலால் தாங்கள்...
- அரங்க கனகராசன்.
28072017
---------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் கமல் - குண்டர் சட்டம்!
மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டமாம்...
அரசுக்கு எதிராகப் போராடினாராம்... போராட்டத்தைத் தூண்டினாராம்...
போராடுவதை சட்டம் தடைச் செய்தாலும், போராடும் உரிமை மனிதனுக்கு உண்டு!
போராட்டத்தைத் தூண்டினார் என்று வளர்மதி மீது மற்றோர்க் குற்றசாட்டு!
மக்களுக்குத் தெரியாதா?
போராட்டத்தைத் தூண்டிவிடுவது யாரென்று?
ஊழலை ஒரு தொழிலாக்கிவிட்ட அரசின் செயலே மக்களைப் போராடத் தூண்டுகிறது...
கையூட்டுப் பெற்றுக் கொண்டு, தடை செய்ப்பட்ட பொருட்களை விற்க ஒப்புதல் நல்கிய அதிகாரிகளின் செயலே மக்களைப் போராடத் தூண்டுகிறது...
மறைந்த செயலலிதாவால் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட 110வது விதியை மீண்டும் கையில் எடுத்து மக்களை ஏமாற்ற முனையும் எடப்பாடியின் செயல் மக்களைப் போராடத் தூண்டுகிறது என்று அரசியலாய்ந்த சான்றோர் செப்பும் மொழிப் பொய்யோ ?
அரசுக்கு எதிராய்க் கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டமெனில், இது மறைமுகமாய் நடிகர் கமலகாசனை மிரட்ட பிஜேபி அரசு எடப்பாடி எனும் கருவியைக் கைகொண்டுள்ளதா எனும் வினா எழுவதில் வியப்பில்லை...
ஏனெனில்; ஊழலுக்கு எதிரான - நடிகர் கமலஹாசனின் கருத்து, பிஜேபியையும் சுரண்டியிருக்கிறது...
அல்லவெனில்; கமலகாசனுக்கு எதிராய், எச்சைகளும், பரட்டைகளும் கணைத் தொடுக்க வேண்டிய அவசியமில்லையே...
ஒருவேளை; நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வந்தால், நசுங்கப் போவது முதலில் அதிமுக தான்...
அதிமுக நசுங்கிவிட்டால், பிஜேபியின் வளர்ச்சிச் சிதைந்து விடும்...
அதிமுக கூடாரத்தில் குந்தியிருப்பது இப்போது பிஜேபி தானே!
- அரங்க கனகராசன்.
19072017
---------------------------------------------------------------------------------------------------------------------------
அவன் இந்தியன்... இவன் தமிழன்...
அமர்நாத் நோக்கி பயணித்த பக்தகோடிகள் இழைத்தத் தவறென்ன?
தத்தமவர் குடும்பம் சிறக்க சிவனின் அருள்பெறவே இந்திய பக்தகோடிகள் பயணித்தனர் அமர்நாத் நோக்கி!
அந்தோ...
மானிடர் உயிர் அற்பத்தனமாய் பறிக்கப்பட்டதை எண்ணுகையில் மனம் நோகிறது...
அங்கே அந்த படுகொலை நடேந்தேறியவுடன் இந்திய ராணுவம் குவிக்கப்படுகிறது...
ஏனெனில்?
அவர்கள் இந்தியர்கள்!
தமிழக மீனவர்களை சிங்கள இனவாத அரசு சுட்டுக்குவிக்கிறது...
இங்கே இந்திய ராணுவம் விரையவில்லை...
ஏனெனில் இவர்கள் தமிழர்கள்...
- அரங்க கனகராசன்.
13072017
------------------------------------------------------------------------------------------------------------------
மனிதர்களோடு மனிதர்களை மோதவிட்டு...
பெரியண்ணன் எனலாம்...
நாட்டாமை என்றும் கூறலாம்...
BIG BOSS -
விஜய் தொலைக்காட்சி நிகழ்த்தும் நிகழ்ச்சியின் ஓருருதான் - BIGBOSS!
இந்நிகழ்ச்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஒருபுறம் மனதை நெருடத்தான் செய்கிறது...
அந்தக்காலத்தில்-
மனிதர்களோடு மனிதர்களை சாகும்வரை மோதவிட்டு, அதனை அரசக் குடும்பத்தினர் கண்டுக் களித்தார்களாம்...
இந்த பெரியண்ணன் நிகழ்ச்சியை காணும்போது அதுதான் நினைவுக்கு வருகிறது...
இந்தக் காலத்திலும் மனிதர்களை விலங்குபோல் ஒரு கூண்டுக்குள் அடைத்து, அவர்களை வேடிக்கைக் காட்டுவது மானிட நேயத்துக்கு நேர்மாறானதாக இருக்கிறதே எனும் ஆதங்கம் இருந்தாலும்-
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கையில்-
மனுநீதி வாக்கியங்கள் நினைவில் ஊடத் தவறவில்லை...
எந்தச் சந்தர்பத்தையும் ஆரியன் தனக்கு சாதகமாக்கிட வேண்டும் எனும் ஆரியநீதியை ஆதிக்கச் சாதி பெண்ணொருவர் நிலைநாட்ட முற்படுவதை இந்நிகழ்ச்சியில் காணக் கிடைக்கிறது...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்லி ஆசிரியர் சொல்கிறார்...
எல்லாரும் இசைவுப் படுகின்றனர்...
ஒருபெண், தான் "சமசுகிருதம் பயின்றிருக்கிறேன்... அதனால் டமில் வால்து சரியாக வராது" என்கிறார்...
தமிழில் பேசி தமிழ் நாட்டில் பிழைக்கும் அவர் , பெரியண்ணன் நிகழ்ச்சியின் போது டமில் டாய் வால்த்து பாடச்சொல்லும் போது, தான் சமசுகிருதம் படித்தவள் என்கிறார்...
நீசமொழி தமிழ் என ஊடகமாக நிலைநாட்டுகிறார்...
அதோடு-
ஏறுதழுவுதல் போராட்டக் களத்தில் கலந்து கொண்ட ஜூலி எனும் தமிழ்ப்பெண்ணை சகட்டுமேனிக்கு சாடுகிறார்...
அவர்சாடுவது, ஜூலியை அல்ல என்பதும், தமிழ் இன உணர்வை சாடுகிறார் என்பதும் ஊன்றி கவனித்தால் புரியும்...
இதனை இங்கு நான் கோடிட்டுக்காட்டுவது ஏனெனில்-
ஆரியத்தை நிறுத்த ஆரியன் எந்த வாய்ப்பையும் தவறவிடக்கூடாது என்பதில் இன்றும் குறியாக உள்ளனர் என்றும், தமிழர் தமிழ் உணர்வு மழுங்கிட வாழ்கின்றனர் என்பதைக் கூறிடவும்தான்!...
- அரங்க கனகராசன்.
06072017
-----------------------------------------------------------------------------------------------------
தமிழர் நிலமெனில்...
" கொக்கரிக்காதே... போர் மூளும் " - சீனா.
" எத்தைகையப் போரையும் இந்தியா சமாளிக்கும்" இந்தியா பதிலடி...
ஏன் இந்த அச்சுறுத்தல்?
சிக்கிம் எல்லைதான்!
சிங்கள நாட்டோடு சுமுக உறவு வேண்டி, கட்சத்தீவைத் தாரைவார்த்த இந்தியா, சீனாவோடு சுமுக உறவு வேண்டி சிக்கிமை சீனாவுக்கு தாரைவார்க்குமா?
மாட்டாது!
ஏனெனில், சிக்கிம் தமிழர் நிலமல்லவே?
- அரங்க கனகராசன்.
30062017
---------------------------------------------------------------------------------------------------------
இந்திமோடியின் கடிவாளம்!
கடைந்தெடுத்தக் கபடதாரிகள் - அயோக்கியர்கள் - கயவர்கள் - வெள்ளுடை தரித்து, மக்களெதிரில் - மனதில் சற்றும் கூச்சமின்றி வலம் வரும் அருவருப்பான - அவலம் - தமிழ் மண்ணில் அரங்கேறுவது வெட்கம்... வெட்கம்...
அவர்களைச் செய்தியாளர்கள் சூழ்ந்து செய்திக் கேட்பதும், செய்திகளின் பின்புலத்தில் ஊழல் ஓலமிடுவதும் நாளொரு வேடிக்கை!...
ஊழலின் மகாராணி மறைவும்-
ஊழல் கூடாரத்தில் முகாமிட்டு கொழுத்துத் திரிந்த எருமைகளின் திருட்டுத்தனமும்,
இந்திமோடியின் கைக்குக் கிடைத்தக் கடிவாளமாயிற்று...
எருமைகளுக்குக் கடிவாளம்தனை பூட்டி தாம் விரும்பிய வண்ணம் ஊழல் எருமைகளை ஆட்டுவிக்கிறார் இந்திமோடி!
கல்தோன்றி மண்தோன்றா முன்காலதே தோண்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்று வாயளவில் வலம் வந்த முதிர் மொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் மேலைநாட்டு அறிவியலார்கள் தமது ஆய்வில் தெளிவுப் படுத்தியுள்ளனர்
'' இன்றைக்கு இந்தியா என்று சொல்லப்படும் பெருநிலப்பரப்பின் முதல் குடிமக்கள் தமிழ்மக்களே'' என்று!
பெருநிலமாண்ட தமிழன் - பெருமதிப்பிற்குரிய தமிழினம் - இன்று சிறுமையாகி நிற்பதற்கு வெள்ளுடை தரித்த ஊழல் எருமைகள் போன்றோரின் வெட்கம் கெட்ட - ஈனகெட்ட - செயல்தான் எனில் மிகையன்று...
இந்த ஊழல் எருமைகளின் வாக்குகள் இந்தியாவின் முதல் குடிமகனை தேர்வு செய்யப் போகின்றன எனில் இதைவிட வெட்கம் இந்தியாவுக்கு வேறில்லை உலக அரங்கில்!...
இந்த ஊழல் எருமைகளின் வாக்குகளை அறுவடை செய்வது நாட்டின் முதன்மை அமைச்சர் என்பது மிக வெட்கக் கேடானது!...
இவ்வூழல் பேர்வழிகள் குடியரசு தலைவர் தேர்வுக்கு வாக்களிப்பதன் மூலம், தம்மை வாக்களித்துத் தேர்வு செய்த மக்களை சிறுமை செய்கின்றனர்...
இருவரில் எவர் இந்தியாவின் முதல் குடிமகனாக வந்தாலும், தமிழனின் பெருமை மீளப் போவதில்லை...
ஊழல் எருமைகளை விரட்டியடித்து, வீரத்தின் செறிவை தமிழ்மண்ணில் விளைவித்தாலன்றி தமிழ்மண் மீள வழியில்லை...
இந்தியாவின் அரசியல் நோக்கை நோக்கி நாம் பயணிப்பதை விட்டு, தமிழ்மண்ணுக்குரிய அரசியல் முன்னெடுப்பை நாம் எடுத்து தமிழ் மண் மீள்பணியாற்றுவோம்...
- அரங்க கனகராசன்
23062017
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் உழவர் நடத்திய போர்...
தமிழ் உழவர் பெருமக்கள் போராட்டம் நடத்தினர்...
போராட்டத்தின்போது எரிக்கப்பட்ட புகைவண்டிகளின் எண்ணிக்கை எவருக்கேனும் தெரியுமா?
பெயர்த்தெடுக்கப்பட்ட தண்டவாளங்களின் நீளம் எவ்வளவு என்று எவரிடமேனும் கணக்குள்ளதா?
எரியூட்டப்பட்ட தலைமை தபால் நிலையங்கள் எத்தனை என்பது எவர் அறிந்துள்ளனர்...
உழவர் பெருமக்களால் கடத்தப்பட்ட இந்தியா அரசின் உயர் அலுவலர்கள் எவரெவர் என பட்டியல் உள்ளதா?
கடத்தி சிறைவைக்கப்பட்ட இந்திய அமைச்சர் யாரென்பதாவது தெரியுமா?
பிஜேபி க்கு கூசா தூக்கிப்பிழைக்கும் தமிழ்நாட்டவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் நினைவில் உள்ளனவா?
இருக்காது....
ஏனெனில்; இவை எதுவுமே தமிழ்ப் போராளிகளால் நிகழ்த்தப்படவில்லை...
41 நாட்கள் - கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் டில்லியில் முகாமிட்டு அறவழியில் தமிழ் உழவர்கள் போராடினர்...
கிஞ்சித்தும் இந்திமோடி மதிக்கவில்லை...
ஆனால்; மத்தியப் பிரதேசத்தைப் பாருங்கள்...
உழவர்ப் போராட்டத்தில், நெருப்புக் குழம்புகள் பொங்கிற்று...
உடனே- இந்திமோடி அமைச்சர்களுடன் ஆலோசனை...
" நாங்கள் உழவர்களுக்கு எதிரானவர்களல்லர்... கடன்தள்ளுபடி செய்கிறோம் " என்று இந்திய அரசு ஓடோடி வருகிறது...
அதற்காக தமிழ்ப் போராளிகள் தங்கள் போராட்டத்தின் வடிவை மாற்றவேண்டும் என்று நான் விரும்பவில்லை...
ஆயிரம் பேர் தமிழர்களைப் பார்த்து 'அடிமை நாய்களே' என்று ஏசினாலும், சூத்திரர்கள் என்று இழிவு செய்தலும் அமைதிக் காத்து அறவழி போராட்டத்திலிருந்து எல்லை மீறி விடாதீர்கள்...
- அரங்க கனகராசன்.
09062017
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்களே புறக்கணிப்புச் செய்வீர்...
விழிபிதுங்கி நடுத்தெருவில் நாதியற்று ஓர் இனம் இருக்கிறதென்றால், அது நம் தமிழினம்தான்....
தன்னினத்தை தன்னாட்சிப் பெற்ற இனமாக மாற்றி இந்த மண்ணில் சக மானிடரோடு மானிடராய் வாழ வைக்க- தன்னுணர்வுப் பெற்ற தகைமையை பெறவியலாது தமிழன் தவிக்கும் தவிப்புதனை வரலாறுப் பதிவு செய்துக் கொண்டிருக்கிறது...
இந்நிலைத் தகர்வது எப்போது?
தமிழ்மண்ணின் நிகழ்வு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தமிழனிடம் இல்லை!
ஈராயிரம் கல்தொலைவுக்கு அப்பால் இருக்கும் குசராத்தியன் தமிழனின் நிலைப்பாட்டை நிர்ணியிக்கும் அவலம்...அந்தோ?
என்மொழியை என்வழக்காடு மன்றத்தில் பேசிட எனக்கு உரிமைக் கொடு என்று டில்லியிடம் கெஞ்சும் அடிமையாய் தமிழினம் மாறியிருக்கையில்-
ஊழலில் ஊறி - ஊதி - வெடித்து - சிதறிக் கொண்டிருக்கும் அதிமுகவின் சிதறல்களை தமிழன் வேடிக்கை கண்டுக் கொண்டிருக்கிறான்...
இந்த வேடிக்கையை நிகழ்த்துவதே டில்லிதான்!...
இப்படிப்பட்ட வேடிக்கைகளில் தமிழனின் மனதைத் திருப்பி, தமிழனை வேறு பாதையில் சிந்திக்க விடாமல் ஆக்குவது டில்லிதான்!...
இந்தியா தொடர்ந்து தமிழினத்தை வஞ்சித்தால் ஒத்துழையாமை இயக்கம் காண்போம் என்று என்று எழுச்சியோடு முழங்கிய மாணவர் - இளைஞர்களும் - மவுனம் காக்கின்றனர்?...
ஏதோ ஒரு இயக்கம் தோன்றும்-
அந்த இயக்கம் ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவிக்கும்-
அப்போது நாமும் கலந்துக் கொள்வோம் என்று அடுத்தவரின் மீது கடமையை சுமத்த காத்திருப்பதை விட்டு,
இப்போதிருந்தே சிறு அளவில் இந்தியாவை புறக்கணித்திடத் துவங்குங்கள்...
இயன்றவரை தமிழ்நாட்டுப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்...
தமிழ் தொழிலதிபர்கள் தமிழருக்குரியப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்திட முனைப்புக் கட்டினால் தமிழ்நாட்டுக்கு வெளிப்பொருட்கள் தடை செய்தது போலாகும்...
தமிழ்நாட்டுக்கு வெளியே உண்டாக்கப்படும் பொருட்களை புறக்கணியுங்கள்; தமிழர்களே...
- அரங்க கனகராசன்.
08062017
----------------------------------------------------------------------------------------------------------------
காவல்துறை நமது நண்பன்!
நேர்மை எனும் சொல்லுக்கு பொருள் கூற வேண்டுமெனில் தமிழ்நாடு காவல்துறை எனலாம்...
சட்டம் மதிப்பவர்கள் தமிழ்நாடு காவல்துறையினர்!
மக்களுக்குக் காவலாய்த் திகழ்ந்து - நண்பனாய் வலம் வந்து உலக அரங்கில் முதன்மை இடத்தில் விளங்குவது நம் காவல்துறை!...
அரசியல் நெருக்கடிக்கு அடிப் பணியாதவர்கள்...
லஞ்சம் - லாவண்யம் கேள்விப் படாதவர்கள் -...
தெருவோரத்தில் கீரை விற்கும் கிழவிகளிடம் மிரட்டி பணம் வாங்குவதோ, கையேந்தி பவனில் தின்றுவிட்டு காசு கொடுக்காமல் செல்வதோ தமிழ்நாடு காவல்துறையினர் அறியாத ஒன்று!...
பொய்வழக்கு போடுவதாக எளியோரை மிரட்டி பணம் கறப்பது தமிழ்நாடு காவல் துறை வரலாறில் இல்லை...
தாமுண்டு - தம் ஊதியம் உண்டு என்று எளிய வரையறைக்குள் வாழ்ந்து முன்னோட்டமாய்க் காட்சியளிப் பவர்கள் தமிழ்நாடு காவல்துறையினர்...
அனால்; அண்மைக் காலமாய்-
தமிழ்நாடு காவல்துறையின் சீருடை அணிந்து சில பொறுக்கிகள் நம் காவல் துறைமீது களங்கம் கற்பிக்க முற்சிக்கிறார்கள்...
தெளிந்த நீரோடை போல் போராடிய மெரினா மாணவர்களை கண்போல் காத்து நின்றனர்-
ஆனால்;
அந்தோ சில பொறுக்கிகள் மாணவர்களை அடித்து ஏதுமறியா காவல் துறை மீது பழியிட்டனர்...
நேற்று-
மதுவுக்கு எதிராய்ப் போராடிய பெண்கள் மீதும் காவல்துறையின் சீருடை அணிந்த கயவர்கள் திருப்பூர் பெண்களை நையப் புடைத்தனர்...
அந்த பழியையும் ஏதுமறியா தமிழ்நாடு காவல்துறை மீது திருப்பி விட்டனர்...
ஆதலால்;
தமிழ்மக்களே...
இனி உங்கள் போராட்ட வடிவில் சற்று மாற்றம் தேவை...
வெறுமனே கைகோர்த்து நின்றும்-
தரையில் அமர்ந்து முழக்கமிட்டும்-
உண்ணாநிலை இருந்தும் அறவழியில் போரிடும் முறையில் சில தற்காப்பு முறைகளும் சேர்க்கப் படவேண்டும்...
உங்கள் போராட்டத்துக்கு காவலர் உரிய பாதுகாப்பு வழங்கினாலும்,
காவலர் போர்வையில் சிலர் உங்களை அடித்து நொறுக்குவது நெஞ்சை நொறுங்கச் செய்கிறது...
அதனால்; நீங்கள் உங்களைப் பாதுகாப்பதையும் நீங்களே மேற்கொள்ள வேண்டும்...
காவலரைப் போல் வரும் கயவர் கையில் இரண்டு அடி நீளத்தில் தடி இருக்கிறது எனில், நீங்கள் உங்களை தற்காத்து கொள்ள நான்கு அடி நீளக் கம்புகளைப் போராட்டத்தி ன்போது தற்காப்புக்கு எடுத்து செல்லுங்கள்... - சிலம்பம் நல்லது -
பெண்கள் மீது தடியடி நடத்த முயலும் காவலர் போல் கயவரைச் சுற்றி வளைத்து சிலம்பம் ஆடி - காவல்துறையிடம் ஒப்படைத்து காவல்துறைக்கு நண்பராய் மாறுங்கள்...
மிளகாய்ப்பொடியும் உங்களுக்கு உதவும்...
பாவம் காவல்துறையினர்...
போராட்டத்தின் போது உங்களைப் பாதுகாப்பார்களா? உங்களைத் தாக்குவோரைத் தடுக் க முனைவார்களா?
எனவே, போராடும் உங்கள் மீது தாக்கும் காவலர் போல் திரியும் கயவர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்து நமது நண்பனான காவல்துறையிடம் ஒப்படைக்கும் வண்ணம் உங்கள் போராட்டத்தின் வடிவை மாற்றம் செய்யுங்கள்...
அல்லவெனில் குனியக் குனிய மிதி விழுந்து கொண்டேயிருக்கும்...
மீண்டும் சொல்கிறேன்; காவல்துறை நமது நண்பன்!
- அரங்க கனகராசன்.
12042017
-----------------------------------------------------------------------------------------------------------------------
வைகோ சொன்னதில் தவறில்லை...
சில நேரங்களில் நெஞ்சில் நிழலாடுவதுண்டு...
தமிழ் இன அழிப்பில் - தமிழ் நிலம் மாய்ப்பதில் - பிஜேபி மேற்கொள்ளும் நிலையைக் காட்டிலும், காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாடு இந்தளவுக்கு மோசமானதாக இல்லை என எண்ணத் தோன்றும்...
உண்மையில்-
பிஜேபி ஆகட்டும், காங்கிரஸ் ஆகட்டும் இரண்டுமே தமிழ் இன விரோதப் போக்கின் அளவுகோலில் வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது...
கொத்து கொத்தாய் குண்டுகள் வீசவும் , போர்த்திட்டம் வகுத்து கொடுக்கவும் முன் நின்றது இந்திய அரசு - காங்கிரஸ் அரசு !
இந்தியாவின் பங்கு இல்லையெனில் விடுதலைப்புலிகளிடம் வெற்றிக் கண்டிருக்கவியலாது என்று, சிங்கள அரசு கூறியதை நினைவில் கொண்டால்-
காங்கிரஸ், தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகம் தெரியும்...
முக்கால் மணிநேரம் உண்ணாநிலை இருந்து குண்டுவீச்சின் வேகத்தைக் கூட்டிய திமுகவின் ஒத்துழைப்பும் புரியும்...
இறுதிப் போரின் இறுதியில், திமுகவோடு கூட்டு சேரவோ, காங்கிரசோடு உறவுக் கொள்ளவோ தமிழக தமிழ் உணர்வுள்ள கட்சிகள் தயங்கின - அல்லது; ஒதுக்கி வைத்தன என்றே கூறலாம்...
இந்நிலை-
காலப் போக்கில் மக்கள் மனதில் இருந்து மங்கின...
இதனை சாக்காய்க் கொண்டு காங்கிரசும், திமுகவும் தமிழக அரசியல் வீதியில் வலம் வருகிறது எனில்-
நாம் நம் இன உணர்வினை நாமே கொன்றுக் கொண்டிருக்கிறோமோ என ஆதங்கம் ஏற்படுவதில் வியப்பில்லை...
தமிழக அரசியல் வீதியில் இருந்து அகற்றப் பட வேண்டிய காட்சிகள் பிஜேபி மட்டுமல்ல; காங்கிரசும் - திமுகவும்தான்...
இனத்துரோகம் இழைத்த திமுகவையும், காங்கிரசையும் மறந்துவிடக் கூடாது என்று வைகோ கோடிட்டுக் காட்டியதில் தவறில்லை....
- அரங்க கனகராசன்.
04042017
-----------------------------------------------------------------------------------------------------------
இன்று 31 - 03 - 2017 காலை சுமார் ஐந்து மணி!
சென்னை உள்நாட்டு விமானம் நிலையம்...
என் மகள் பணியின் நிமித்தம் பெங்களூர் செல்ல,காத்திருந்த நேரம் நெடிதுயர்ந்த - பரிச்சயமான முகம் எதிரில் கண்டேன்...
என்ன சுறுசுறுப்பு...
மிடுக்கான நடையோடு, துணைவியாரும் உடன் வரக் கண்டேன்..
வணக்கம் தெரிவித்தேன்... என் மகளை அறிமுகம் செய்திட விழைந்தேன்...
ஆனால்; நேரமாகிவிட்டமையால் அதே சுறுசுறுப்போடு நிலையத்தின் உள்ளே நுழைந்து விட்டார், வைகோ!
-அரங்க கனகராசன்.
31032017

தமிழ் மக்கள் சுரணையற்றவர்கள்...
ஒரு நேர்த்தியான தலைவன் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைய விடமாட்டான்...
நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வேண்டிய கடமை இருந்தால் அது தலைமைக்கு அழகு!...
ஆனால்; கக்கூஸ் கட்டுகிறேன்; தூய்மைப் படுத்துகிறேன் என்று சொன்ன இந்தி மோடி கொஞ்ச நாள் இந்தியாவில் இருந்து இன்றைய நிலைமையை அலச வேண்டும் ...
வட நாட்டவர் ;பெரும்பாலானோர் திறந்தவெளியை, கழிப்பிடமாய்க் கொண்டுள்ளனர்...
இன்னமும் கழிவறை இன்மையே அதற்கு காரணம்...
நமது நாட்டு சாக்கடைகள் கூட தூர் வாரப்படாதிருக்கையில் தூய்மைப் பணி என்னவாயிற்றென்பது இந்தி மோடிக்கே வெளிச்சம்...
உலகம் சுற்றுவதை நிறுத்தியிருந்தால்கூட, அந்த பணத்தில் நாட்டில் பலருக்கு கழிவறைக் கட்டிக் கொடுக்க ஏதுவாயிருந்திருக்கும்...
ஊர்ச்சுற்றி நாட்டின் செலவினத்தை வீணடிப்பதோடு. இப்போது உ பி யில் மேலும் ஒரு செலவீனத்துக்கு வழி வகுத்துள்ளார்...
மக்களவை உறுப்பினரை உபி க்கு முதல்வராக ஆக்கியதால்-
முதல்வராக ஆக்கப் பட்டவர், தம் மக்களவைப் பதவியை விலக்க வேண்டும்...
அவர் விலகும் பட்சத்தில்-
அந்த இடத்திற்கு மறு தேர்தல் வரும்...
அதோடு, உ பி முதல்வர் ஆறு திங்களுக்குள் சட்டமன்றம் - மேலவை - உறுப்பினராக ஆகவேண்டும்... தேர்தல் வரும்...
இதனால் மக்களின் வரிப்பணம் விரயம் ஆகும் நிலை உண்டாகியுள்ளது...
ஏழைநாட்டின் பொருளாதாரம் சீரழிவுக்கு நாட்டின் தலைமையும் காரணம் எனில், இதைவிட கேடு நாட்டுக்கு வேறுண்டோ?...
ஆனால் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!
நாடு சீரழியும் முன்னரே நம் தமிழ் நாட்டை அழிக்க இந்தியா கங்கணம் கட்டி செயல்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது...
தமிழ்நாட்டில் -
ஒரு பக்கம் விளைநிலங்களை இற்று போகச்செய்து-
இன்னோர் பக்கம் நீர்ப்பாதையை அடைத்து -
மற்றோர்ப்புறம் இனஅழிப்பில் இறங்கியதோடு,
இப்போது தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் பணியில் இந்தியா அதி தீவிரம் காட்டியிருக்கிறது...
தபால் துறைக்கு நடந்தத் தேர்வில் வடநாட்டு இளைஞர்களைத் தெரிவு செய்ததன் வாயிலாக -
தமிழ் இளைஞர்களின் வாழ்வாதரத்தை நசுக்குகிறது...
ஒரு பகுதி வளம் பெற -
அப்பகுதியில் வேலைவாய்ப்பை உண்டாக்கி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பினை நல்குவது உலகெங்கும் உள்ள நடைமுறை...
தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்புக்கு - தமிழில் நடந்த தேர்வுக்கு - தமிழேத் தெரியாத - வடநாட்டவனை தெரிவு செய்வது-
ஏற்புடையதோ?
இப்படியோர் - ஏய்ப்பை - வாழ்வாதாரத்தை நசுக்கும் கொடூரத்தை-
காஸ்மீரில் நடத்த இந்திய அரசு முனையுமா?
பஞ்சாபில் செய்யுமா?...
அசாமில் செய்யுமா?
ஏன் பக்கத்தில் உள்ள கேரளாவில்தான் நடத்த முடியுமா?
முடியாது...
ஏனெனில் இந்தியாவின் பட்டியலில் தமிழ் மக்கள் சுரணையற்றவர்கள் என்றிருக்கிறதோ?... என்னவோ?..
- அரங்க கனகராசன்.
19032017
---------------------------------------------------------------------------------------------------------------
பெரியாரியலுக்கு எதிரானதல்ல...
ஒரு உண்மையை, கருத்து மறுபாடின்றி யாவரும் ஒத்துக் கொள்கின்றனர்...
திராவிட அல்லது திரவிட எனும் சொல் மருவி தமிழ் என்றானது எனும் கருத்தை - ஆய்வை - எவரும் மறுப்பதில்லை...
தமிழ் எனும் சொல்லில் பெருந்திரளான - தொண்மைவாய்ந்த இனமும் - மொழியும் இன்றளவும் இயங்கி வருகிறது...
மருவி வந்தச் சொல்லுக்கு இனமும் - மொழியும் இருக்கையில்-
மருவி வந்தச் சொல்லை ஏற்றுக் கொள்ளும்போது -
தமிழ்நாட்டில், சிலர் ஏன் திராவிட என்ற சொல்லை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்? அதற்கு அவசியம் என்ன?...
திராவிடர் என்பது இனத்தின் அடையாளம் என்கின்றனர்... தமிழ் என்பது இனத்தின் அடையாளம் இல்லையா?
'திராவிட' என்ற சொல்லை கைவிட்டால், ஆரியர் தமிழினத்தோடு கலந்து விடுவர் - அவர்களை - இனம் காணுதல் அரிதாகிவிடும் எனும் வாதத்தை முன் வைக்கின்றனர்...
ஆரியர் ஒருபோதும் தமிழர் ஆகிட இயலாது...
அவர்கள் பழக்க வழக்கம் - நடை உடை - பண்பாடு - வேறு!
தமிழர் பழக்க வழக்கம் - நடை உடை - பண்பாடு - வேறு!
தமிழர் உழைத்து வாழ நினைப்பவர்...
ஆரியரோ மடமையைப் புகுத்தி ஏய்த்து வாழத் துடிப்பவர்கள்...
இருவேறு மனநிலைக் கொண்ட - இருவேறு இனம் - கலப்பினம் ஆகிடுமோ எனும் அச்சம் தேவையற்றது...
ஒருசிலர் மனம் திருந்தி - மனிதராய் - தமிழராய் - தமிழரோடு ஒன்றி வாழ வந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை... அதுவும் பெரியார் கருத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கொள்ளலாம்...
பிராமணருக்கு எதிரானவரல்ல பெரியார்!
பிராமணீயத்துக்கு மட்டுமே எதிரானவர் பெரியார்...
ஆதலால்; பார்ப்பனன் குடுமியை - பூணூலை - அறுத்தெறிந்துவிட்டு மனிதனாய் - தமிழனாய் - இணைவது பெரியாரியலுக்கு எதிரானதல்ல...
'திராவிட' என்ற சொல்லை கைவிடுவதால் -
ஆரியரை இனம் காணவியலாது என்பது தேவையற்ற ஒன்றாகும்...
இன்றைய நிலையில் -
தமிழ் இளைஞர் தமிழ் தேசம் பேசுவதில் சிலர் முரண்பாடு கற்பிக்க முயல்வது சரியானதாகத் தோன்றவில்லை...
திராவிட என்ற சொல் தமிழ் என மருவியது என்று ஒப்புக் கொள்வோர் மருவி வந்த 'தமிழ்' என்ற சொல்லின் இனத்தை மேம்படுத்த முனைவதே நன்றாகும்...
பெரியாரும் தமிழர் கழகம் என்றே பெயரிட விழைந்தார்... ஆனால்; அன்றிருந்த நீதி கட்சித் தோழர் சிலர் வற்புறுத்தல் செய்ததன் விளைவாக திராவிடர் கழகம் என ஒப்புக் கொண்டார்...
இயக்கத்திற்கு 'தமிழ்' என இனம் காண்பது இன்றையக் காலத்தின் கட்டாயமாகும்...
திராவிட என்ற சொல்லுக்கு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ, துளுவரோ தம்மை உட்படுத்திக்கொள்ள விருப்பம் இல்லாது இருக்கும்போது தமிழர் மட்டும் ஏன் இதில் பிடிவாதம் காட்ட வேண்டும்?...
மாணவர்கள் - இளைஞர் - மனநிலைக்கு மதிப்பளித்தல் என்பது தமிழ் தேசம் வென்றெடுக்க வலுசேர்க்கும்...
-அரங்க கனகராசன்.
17032017
---------------------------------------------------------------------------------------------------------------------
அடிமைகளின் இயலாத் தன்மையும் - ராசுநாத் சிங் பேச்சும்...
மருத்தவம் மேற்கொண்டபோது மிக மிக மறுமொழியாக - மூடு மந்திரமாக - காவல் செய்தனர்...
அவர் இறந்து வெகுநாட்களானப் பிறகே அவரின் இறப்பை அப்போதுதான் நிகழ்ந்ததாக அறிவித்தனர் என்றும் அந்த இடைவெளியில் அவரால் குவிக்கப் பட்ட சொத்துக்களை சட்டரீதியாகச் செல்லத்தக்கதாக்கிட ஒரு கும்பல் திட்டமிட்டு செயல் பட்டதாகவும் , அத்தகையப் பணிகளில் மனநிறைவு அந்த கும்பலுக்கு ஏற்பட்டதும் இறப்பை அறிவித்தனர் என்றும், மேலும் அடிமைகளின் இயலாமைத் தன்மை அக்கும்பலுக்கு சாதகமாகி விட்டதென்றும் மக்கள் அய்யம் கொண்டிருந்தனர்... இப்போதும் கொண்டுள்ளனர்...
சென்னை நீதியரசருக்கும் இந்த அய்யப்பாடு இருந்ததை நாடறியும்...
இந்நிலையில் -
அமெரிக்க மருத்துவரைச் சென்னைக்கு வரவழைத்து விளக்கம் அளிக்க வைத்திருப்பதன் அவசியம் என்னவென்று புரியவில்லை...
இது குறித்தெல்லாம் கவலைக் கொள்ளாமல், நாம் வேறொன்றின்பால் நினைவுகளைத் திருப்ப வேண்டிய உந்துதலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்...
ஒருதமிழச்சி முதல்வர் ஆகிறார் என்பது தமிழ்மக்களின் எண்ணங்களை ஈடேற்றுவதாகிடாது...
அவரும் அடிமைகளை மேய்க்கும் மேய்ப்பராகவும், டில்லிக்கு அடிமையாகவும் பணி ஆற்றவுள்ளார்...
இதில் தமிழரின் உணர்வுகள் மெய்யாகிடும் கூற்றுண்டோ..
கிடையாது...
இங்கே நாம் நமது பார்வையை விசாலமாக்கிட வேண்டியத் தருணம் வாய்த்துள்ளது...
இந்தியாவின் உள்துறை அமைச்சர், ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்...
பாகிஸ்தானின் குறிப்பிட்டப் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, வாக்கெடுப்பின் அடிப்படையில் அப்பகுதியை இந்தியாவோடு இணைக்க வேண்டுமென்கிறார் ராசுநாத்சிங்!...
இது ஒரு மாற்றத்தின் அறிகுறியாக மாற்றவேண்டியக் கடமை இப்போது தமிழ்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது...
மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க இந்திய அரசு முயல்கிறதெனில், இதனை தமிழ்மக்கள் பயனுள்ளதாக்கிட வேண்டும்...
இதில் முனைப்பு காட்டுங்கள்...
மாறாய்-
சசிகலா தமிழச்சி... பன்னீர் தமிழரில்லையா எனும் கருத்தாடலில் நாம் கருத்தூன்ற வேண்டிய அவசியமில்லை...
பொது வாக்கெடுப்பு நிலை தமிழ் மக்களின் உணர்வுக்கும் பொருந்தும்....
ஆதலால்;
'பொதுவாக்கெடுப்பு ' கோரிக்கையை - தமிழகமெங்கும் முன்கொண்டு செல்வீராக!...
சண்டையின்றி - இரத்தமின்றி - கலவரமின்றி - பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழ்தேசம் மீட்புக்கு - ராசுநாத்சிங்கின் அறிக்கை உதவும்...
பணியை முடுக்குக....
- அரங்க கனகராசன்.
06022017
ஆதலால்...
மகிழ்ச்சியில் தள்ளாட்டம் - துள்ளாட்டம் - எடப்பாடி பன்னீர் கூடாரத்தில்!
தமிழ் நாட்டின் உரிமைகளைத் தாரை வார்ப்பதில் முன்னோடிகளாய்த் திகழ்வதன் பொருட்டு இரட்டை இலை பரிசாகக் கிடைத்ததா எனில் தெரியாது...
நீட் தேர்வில் உயிரை மாய்த்த அனிதாவுக்கு ஓர் இரங்கலும் தெரிவிக்காத-
செம்மொழி வாழும் நாட்டில் நவோதயம் என்றப்பெயரில் செத்த மொழிக்கு மண்டபம் எழுப்பிடும் மைய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத -
தமிழக மீனவனை சுட்ட இந்தியக் கடற்படையைக் கண்டிக்காத -
இப்படி எல்லாவற்றிலும் அடிமை நிலையைக் கச்சிதமாக - பணிவோடு - கடைப்பிடிக்கும் கூடாரத்துக்கு இரட்டை இலையைப் பரிசாகக் கொடுத்து அழகுப் பார்ப்பது யாரென்ற வினாவும் தேவையில்லை...
இந்த இலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை நோக்கிய எனக்கு விந்தைதான் மேலோங்கியது...
ஏதோ தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி கிடைத்த தோரணையில் குதியாட்டம் போடுகின்றனரோ எனில் அதற்கானத் தகுதிதான் அந்த கட்சிக்கு இல்லையே; அதனால் இந்த குத்தாட்டம் எதற்கெனில்?
இந்த இலையை வைத்து ஒரு ஜெயலலிதா பல பினாமிகளை உருவாக்கி, சாதனைப் படைத்துப் பெருமை யடைந்தார்...
இப்போது, ஒவ்வொரு பினாமியும் பலப் பலப் பினாமிகளை உருவாக்கிட, கிடைத்த வாய்ப்பெனக் கருதித் துள்ளாட்டம் போடுகின்றனர்...
இவர்களின் துள்ளாட்டம் என்பதெல்லாம் ஒரு பகல் கனவே!
சின்னத்தைப் பார்த்து சீரழிய, தமிழக இளைஞர்கள் விழிப்புணவர்வற்றவர்கள் அல்லர்...
தமிழின் முதிர்ச்சியை உலக அரங்கிற்கு முன்னெடுக்கவும்-
தமிழரின் தொன்மையைக் காக்கவும்-
தமிழரின் அடையாளத்தை இழந்து விடாமலும்-
தமிழ்நாட்டின் மீட்பிலும் -
தமிழக இளைஞன் சிந்தைக் கொண்டிருக்கிறான்...
தமிழ் இளைஞன் அரசியல் சின்னத்தை மறந்துவிட்டான்...
கட்சியை விரட்டிவிட்டான்...
இனம் - மொழி - எனும் கட்டமைப்புக்குள் நெறி வகுத்திட்டான் ...
அதனை மெரினாவில் நின்று, தமிழின எதிரிகளை களம் கண்டான்...
அக்களத்தில் தமிழனின் திமிரும், வீரமும் தெறித்தன...
ஆதலால்;
அதிமுக அடிமைகளே, சின்னத்தைக் கொண்டு சிந்தை இழக்காதீர்கள்...
உங்கள் சிற்றறிவைக் கண்டு தமிழ் இளைஞன் நகைக் கொள்கிறான்...
- அரங்க கனகராசன்.
23112017
நம் மாணவர்களின் மீது ஏனிந்த வக்கிரம்?
இனி எத்தனைக் காலத்துக்கு இந்த சித்ரவதை?
காங்கிரஸ் ஆளும்போது, திமுக மவுனம் காப்பதும், பிஜேபி ஆளும்போது அ(டிமை)திமுக மவுனம் காப்பதும் நாம் கண்டறிந்து விட்டோம்...
திமுக - அதிமுக - மவுனங்கள் தமிழினத்தின் அழிப்புக்கு பேராயுதமாகப் பயன்பட்டன காங்கிரசுக்கும், பிஜேபிக்கும்!
ஆதாலால், காலத்திற்கேற்ற அவர்களின் கூப்பாடுகளை நம்பி இனி எந்த மாணவனும் ஏமாறக்கூடாது...
காலத்திற்கேற்றவாறு-
கண்டான பொதுக்கூட்டம் அல்லது அறிக்கை அல்லது மனிதசங்கிலி போர் அல்லது கடையடைப்பு நடத்துவது திமுக - அதிமுக - ஆகிய கட்சிகளுக்கு கைவந்தக்கலை!
கைவந்தக்கலை என்பதைவிட தமிழ் மக்களை ஏமாற்றிட முனையும் தந்திரங்கள் எனலாம்...
அதோடு - அந்தப் போராட்டங்களோடு மக்களை திசைதிருப்பிவிட்டு பெருச்சாளிகள் கிளம்பிவிடும் ஊழல் பொந்துகளுக்கு!...
திமுக , அதிமுக ஆகிய கட்சிகளால் நம் மாணவர்களுக்கு நீட்டிலிருந்து நிச்சயம் விலக்கு பெற்றுத் தந்துவிட முடியாது...
ஏறுதழுவதலை நெஞ்சுயர்த்தி பெற்று தந்தவர்கள் தமிழ் மாணவர்களும், தமிழ் இளைஞர்களும்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்...
நீட்டில் இருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என்று சொல்லி இன்னமும் ஏமாற்றுதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை நம்பாதீர்கள்...
நமக்கு இப்போது நீட் வேண்டுமா? வேண்டாமா என்பதற்கான போரல்ல இது!...
நம் தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்க வன்மம் கொண்டு, திட்டம் தீட்டி செயல்படும் இந்தியாவோடு இனியும் நாம் ஒட்டியிருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் கேள்விக்கானப் போர் இது!...
இந்தியாவால் பன்னெடுங்காலமாக பாதிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் தமிழ் மீனவனும், தமிழ் மாணவனும், இணைந்தால்-
இந்தியாவோடு நாம் இணைந்திருக்க வேண்டுமா வேண்டாமா எனும் கேள்விக்கு விடைக் கிடைத்துவிடும்...
- அரங்க கனகராசன்.
05092017
கவுரிக்கு வீரவணக்கம்!

22122017-----------------------------------------------------------------------------
ரபேல் விமானமும்... இந்தி மோடியும்!
ஏனெனில்; தேடுதலில்தான் புதியனக் கிடைக்கின்றன... மடமைகள் விரட்டியடிக்கப் படுகின்றன...
இந்தியாவின் - குடிமக்களின் - வரிப்பணத்தில் - இந்தியாவின் புதுப் பயணத்திற்கானத் தேடுதலை இந்திமோடி நாடு நாடாக ஓடோடித் தேடுதல் செய்கின்றார் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில்-
வெற்றிப் பெற்றவுடன் ஒவ்வோர் குடிமக்களுக்கும் பதினைந்து லட்சம் தருவார் இந்திமோடி என்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும்-
அது ஏமாற்றம்தான் என்றாலும்-
அதனை "மோசடி வாக்குறுதி" யென மக்கள் குற்றம்சுமத்திடவில்லை மோடியை நோக்கி!
ஏனெனில்; நாடுநாடாக ஓடோடி - இந்தியாவை 'நுண் இந்தியா" - டிஜிட்டல் இந்தியா- வாக மாற்றுவார் என்று நினைத்திருந்தனர் மக்கள்!
ஆனால்; மக்களின் கனவைக் காலில் இட்டு மிதித்தல் செய்தார் இந்திமோடி...
ஒரு நாட்டின் முதன்மை அமைச்சர்
செத்தமொழிக்கு சிகை அழகு செய்வதிலும்-
அதிமுகவுக்கு தரகுப் பார்க்கவும்-
அதானி, அம்பானிப் போன்றோருக்கு தரகர் வேலைப் பார்க்கவே தமது பதவியைப் பயன்படுத்திக்கொண்டார் என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஒப்பிட்டு நோக்கும்போது -
இதைவிட ஒரு நாட்டுக்கு கேவலம் ஏதுமுண்டா?...
இந்நிலை நீடித்தால் -
பன்னாட்டு ஏகாதிபத்தியம் நம் நாட்டை ஏலம் விட்டுவிடுமோ என அச்சம் மக்களின் நெஞ்சில் எழுவதில் வியப்பில்லை...
இந்தியாவோடு ஏலம் போவதற்கு முன்னர்-
தமிழ்நாட்டின் மண்ணையும், வளத்தையும் காப்பாற்றி இந்தியவிடமிருந்து தமிழ்மண்ணை மீட்க வேண்டியக் கடமை தமிழ் இளைஞர்களின் முன் நிறுத்தப்பட்டுள்ளது...
இந்த எச்சரிக்கை தமிழ்நாட்டின் அனைத்து மட்டத்திலும் இந்நேரம் பேருரு எடுத்திருக்க வேண்டும்...
எழவில்லை!
ஏனெனில் ஏறத்தாழ எல்லா கட்சிகளும் உள்ளூர் அரசியல் பகைமையைச் சீராட்டி வளர்த்து தமிழ்மக்களை ஏய்த்தல் செய்கின்றன...
சீமான், களஞ்சியம், கௌதமன், வைகோ, உதயக்குமார் போன்றோரின் உள்ளக்குமுறல் இன்னமும் மக்களின் செவியைத் தொடாமலிருப்பதை எண்ணுகையில் வேதனையே மிஞ்சுகிறது!
தமிழ் இளைஞனே, தமிழ்நாட்டை ஏறெடுத்தப் பாரடா!
- அரங்க கனகராசன்.
19022018
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
தமிழன் காட்டுமிராண்டியா?
------------------------------ ---------------
அப்படியானால்; அம்மொழியைப் பேசிய மக்கள் காட்டுமிராண்டிகளாய்தானே இருக்கவேண்டும்?....
பெரியாரின் கூற்று இப்படி மெய்ப்படுமேயானால், நான் பெரியாரின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன்...
தமிழர்கள் காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடத்தக்க வகையில் உயர்வானர்வர்களா - சிறந்தர்வர்களா என்பதே என் கேள்வி...
ஏனெனில் காட்டுமிராண்டிகள் தங்கள் இருப்பிடத்தத் தக்க வைத்துக் கொள்ள உயிரையும் மாய்க்கத் தயங்கார்...
அவர்களின் இருப்பிட எல்லைக்குள் அந்நியர் நுழைந்துவிட்டாலோ முழு ஆற்றலையும் பயன்படுத்தி, நஞ்சுத் தடவிய அம்பெய்துக் கொன்றிடுவார்...
அந்நியரின் வருகையை ஒருபோதும் அவர்கள் சமநிலைப் படுத்தியதில்லை...
மலையாள நடிகன் ஒருவன் இங்கே முதல்வனாக ஆக முடிந்தது எனில், காட்டுமிரண்டிகளின் இருப்பிடத்தைத் தக்கவைக்கும் அளவுக்கு மதிநுற்பம் அற்றவர்கள் தமிழர்கள் என்பதுத் தெளிவாகிறது...
தமிழன் யாருக்கெல்லாம் தலைவணங்கியிருக்கிறான் என்பதைப் பட்டியலிட்டால்-
வேறெந்த இனத்திலும் இந்த வெட்கக் கேட்டினைக் காணவியலாது...
அந்த மலையாள நடிகனை பொம்பளைப் பொறுக்கி என்றும் கூறுவார்களாம்...
அந்த நடிகனின் மனைவியே இன்னொருவனிடமிருந்து அபகரிக்கப் பட்டவள் என்பார்களாம்...
தன்னோடு நடிக்கும் நடிகையை, ஒப்பந்தத்தின் படி வகைச் செய்து வைத்திருப்பாராம்...
அந்த வகையில்-
ஜெயலலிதா எனும் நடிகை ஜெய்சங்கர் என்பவரோடும் நெருக்கத்தில் இருந்தாராம்..
தகவலறிந்துக் கொதித்த அந்த நடிகன்-
கையும் களவுமாக தியாகராய நகரின் ஒரு வீட்டில் ஜெயலலிதாவையும் ஜெய்சங்கரையும் பிடித்தாராம்...
உனக்குமட்டும் என்னடா உரிமை என்று இரு நடிகர்களுமே நடுத்தெருவில் கைகலப்பில் ஈடுபட, அங்கிருந்த கை ரிக்சா ஓட்டிகள் ஓடிவந்து இருவரையும் ஆறுதல் படுத்தினராம்...
அதேபோல்-
அவரோடு இணையாக நடித்த லதா என்கிற நடிகைக்கும் ரசனிகாந்துக்கும் உறவு மலர இருவருமே உல்லாசப் பறவைகளாக இருந்தனராம்...
அப்போதெல்லாம் பான்பராக் எனும் போதை பாக்கின் அடிமை என்று ரசனியைக் கூறுவார்களாம்...
லதாவோடு ரஜனினியின் நெருக்கத்தை விரும்பாத மக்கள் நடிகன் - அந்த நேரத்தில் முதலமைச்சராக - இருந்தாராம்...
அந்தப் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி போலீசை விட்டு தேடவைத்து பழனியில் ரஜனி -லதாவை பிடித்து- பிரித்தார்களாம்...
அந்த நடிகரின் இன்னொரு நடிகை, ஜெய்சங்கர் மட்டுமல்லாது, சோபன்பாபுவோடும் உறவில் இருந்தாராம்...
அதுவன்றி மூப்பனாரின் அந்தப்புரத்தில் அவ்வப்போது நாட்டியமாடி ஊதியம் பெற்றுவந்தாராம்..
இப்போது ஆன்மீகம் பேசும் நடிகன் பான்பராக், மது என அணைத்து பழக்கத்திற்கும் அடிமையாம்...
மதுவருந்தி - பான்பராக் போட்டு - இதழியலாளர் ஒருவரை கொல்ல முயற்சி, விமானநிலையத்தில் தகராறு, எம்சியாரின் ஒப்பந்த நடிகையோடு கும்மாளம் என பல குற்றச்சாட்டுகள் அந்நடிகன் மீது உள்ளனவாம்...
இவைகள் யாவும் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப் பட்டவை என்று ஒதுக்கி விடலாம்...
ஆனால்; இவர்களுக்கெல்லாம் தமிழன் தலைவணங்குகிறான் என்பதுதான் வேதனை...
மலையாளி- கன்னடப் பார்ப்பாத்தி - தமிழகத்தின் தலைமையைக் கைக்கொள்கின்றனர் என்றால், இருப்பிடத்தைத் தக்கவைக்கும் காட்டு மிராண்டியைக் காட்டிலும் தமிழன் எந்த வகையில் சிறந்தவன் என்று தெரியவில்லை...
மராட்டிய நடிகன் தமிழகம் நுழைந்து பிழைப்பு நடத்துவதோடு அதிகாரத்தையும் கைக்கொள்வேன் என்கிறான் ...
சில தமிழர்கள் அந்நடிகனுக்கு பதாகைத் தூக்குகின்றனர் எனில் தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் தகுமா?
இனத்தைக் கொன்றழித்திட உதவிய ராகுலையும் சோனியாவையும் முகமன் கூறி வாழ்த்து முழக்கம் செய்கிறான் தமிழன் என்றால், தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் நன்றாகுமா?...
இனத்தை அழிக்கவும், தமிழ் நிலத்தைப் பாழாக்கவும், மொழியைச் சிதைக்கவும்,, மருத்துவக் கல்வியைப் பறிக்கவும் செய்யும் ஒரு மோசடியாளனை அகம் குளிர வாழ்த்துகிறான் தமிழன் எனில், தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் முறையாமோ?
காட்டுமிராண்டிகளிடம் உள்ள மண்பற்று, இனப்பற்று, தன்மானம் என எதுவுமே அற்ற தமிழனை காட்டுமிராண்டிகளோடு ஒப்பிடல் சரியன்று...
இனமீட்பில் ஈடுபாடும் வைகோ, சீமான், உதயகுமார், வேல்முருகன், திருமா, திருமுருகன் காந்தி போன்றோர் மீது தமிழர்களைக் கொண்டே களங்கம் கற்ப்பிப்பது இன்னும் வேதனையானது...
அதிலும் மேற்கண்டாரிடையே இணைப்பு இன்மை என்பது மிக வேதனையானது!
-அரங்க கனகராசன்.
19032018
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
அம்மா என்றால் நாக்கு அழுகிடுமோ?...
சன்னலோரம், தெருவைப் பார்த்து அமர்ந்திருந்தேன்...
தெருவில் - பள்ளி விடுமுறையாதலால் - சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்...
ஒரு நடுத்தர வயதொத்த பெண்மணி ஒருவர் வந்து, எதிர் வீட்டை எட்டிப் பார்த்தார்...
வீடு, சாத்தியிருக்கவே, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனை நெருங்கி-
"உங்க அம்மா வீட்லே இருந்தா கூப்பிடு "
"மம்மி வீட்லே இல்ல"
"அம்மா, எங்கேடா போயிருக்காங்க"
"மம்மி, எங்கே போனாங்கனு தெரியலே"
"அம்மா வந்தா சொல்லு; நான் வந்துட்டு போனேனு"
என்று சொல்லிவிட்டு, அப்பெண்மணி நடந்தாள், அப்போது இருசக்கர வாகனத்தில் அந்தச் சிறுவனின் தாயும் வந்து விட்டார்...
" மேடம், வாங்க... நா எங்க டாடியைப் பாக்கப்போயிருந்தேன்... உள்ளாரா வாங்க"
அந்த நடுத்தர வயதுப்பெண்மணி, ஏதும் பேசாமல், நின்றாள்.
"என்னங்க மேடம், உள்ளே வாங்க"
" முனீஸ்வரி, நீ என்னை அக்கான்னுதானே கூப்பிடுவே... இப்ப என்ன புதுசா, மேடம்னு"
" அதுவா மேடம்.."
"முனீஸ்வரி, நீ என்ன படிச்சிருக்கே?"
முனீஸ்வரி சற்று தாமதித்து, " நானெங்கே படிச்சேன்... ஒன்னாவது படிக்கும்போதே வீட்லே மம்மிக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேனு எங்க டாடி நிறுத்திட்டார்" என்றாள்.
சிறுவன் ஓடிவந்து முனீஸ்வரியின் கால்களை கட்டிப் பிடித்துக்கொண்டு, செல்லமாக, "மம்மி, சாக்லேட் " என்று கேட்டான்.
முனீஸ்வரி எடுத்து நீட்ட, சிறுவன் "மம்மி நான் விளையாடிட்டு வருவேன்... இன்னொரு சாக்லேட் வேணும்" என்று சொல்லி, சாக்லெட்டை வாயில் திணித்துக்கொண்டே விளையாடப் போய்விட்டான்...
"தூரமா போகாதடா... மம்மினாலே, தேடமுடியாது"
"சரிங்க மம்மி"
" இங்கிலீசு ஸ்கொல்லே சேத்திருக்கேன், மேடம்" என்றாள் பெருமிதமாக!
நடுத்தர வயதுப்பெண், "இந்த மாசம் வட்டி இன்னும் தரிலியே முனீஸ்வரி... கேட்டுட்டு போலாம்னு வந்தேன்" " - என்று கேட்க-
"சாரி மேடம்... சண்டே கொண்டு வந்து தந்துர்றேன்"
சிறுவன் மீண்டும் ஓடி வந்தான்.
"மம்மி சாக்லேட்"
அந்த நடுத்தர வயது பெண்மணி சொன்னாள்: :முனீஸ்வரி, உன் பையன், உன்னை மம்மினே கூப்பிடட்டும்... நல்லா இருக்கு " என்று சொல்லி முடிப்பதற்குள்,
முனீஸ்வரி, " ஆமாங்க மேடம், இங்கிலீசு ஸ்கொல்லே சேத்துருக்கேன்... இப்பருந்தே, ஸ்டைலா வளத்தனத்தானே, நல்லது" . என்றாள்.
அந்த பெண் மீண்டும் சொன்னாள் : "ஆமா, முனீஸ்வரி, பக்கத்து தெருவிலே ஒரு பையன் அவ அம்மாவை 'மம்மி' 'மம்மி' னே கூப்பிட்டிருந்தான்... என்னமோ தெரியலே, ஒருநாள் அம்மானு கூப்பிட்டான் பாரு... அந்த பையனோட நாக்கு அப்பவே அழுகிடிச்சு... அதனாலே உன் பையன் நாக்கு அழுகாமே பாத்துக்க..." என்று நறுக்கென்று சொல்லிவிட்டு அந்தப் பெண் போய்விட்டாள்...
வெற்றுப் பெருமைவேண்டி, "அம்மா" எனும் தமிழ் அமுதை இழக்கும் குடும்பங்களுக்கு அந்தப்பெண்ணின் சவுக்கடி தேவைதான்!
- அரங்க கனகராசன்.
----------------------------------------------------------------------------------------------------
மதிமயங்கிய BJP
பகைவனும் நலமுடன் வாழ்தல் வேண்டும் என்று பண்புடையோர் கருதுவர்...
தனது கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக்கிட - சூத்திரர்களை அடிமையாக்கிட - மனுதர்மத்தை நடைமுறைப் படுத்திட - நான்கு வருணத்தை சட்டமாக்கிட - என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்திடாமல், தன்னோடு எந்தக் கட்சியும் துணை வரவில்லையே என்ற மன வெம்பலில் எச்சு ராசா மற்றும் BJP யினரும் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிடுமென்றும், உருப்படாதென்றும் பறையறிவித்து மகிழ்ந்தனர்...
இந்த மகிழ்வில் மதிமயங்கிய BJPயினர் தமதுக் கட்சி தமிழகத்தில் தேய்ந்துப் போனதை கவனிக்க மறந்தனர் என்பது வேதனையான நிகழ்வு!
2016 தேர்தல் தி மு க வுக்கு மாற்று அ தி மு க என்றும், அ தி மு கவுக்கு மாற்று தி மு க என்றும் நிலவியக் கூற்றை மக்கள் நலக் கூட்டணி உடைத்ததோடு மக்கள் நலக் கூட்டணியே தமிழகத்தின் மாற்று என்பதை நாளும், நாளும் நிலை நிறுத்தி வருகின்றது...
அதன் அச்சாரம் - இன்று மக்கள் நலக் கூட்டணியோடு த மா க இணைவு!..
தமிழகம் நல்லதோர் அணியை உருவாக்கியுள்ளது... இதில் கவனிக்க வேண்டியது ஒன்று என்னவென்றால், மதவாதக் கட்சியோடும் , சாதியக் கட்சியோடும் தமிழ் மக்கள் இணைவை வைத்துக் கொள்ளவில்லை...
செயலலிதா பணபலம் கொண்டும், கலைஞர் தீய நகர்த்தல் கொண்டும் மக்கள் நலக் கூட்டணியை சிதைக்க முற்படலாம்...
எது எவ்வாறு இருப்பினும், மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலுக்கு மாற்று என்பதுத் தெளிவு.. - இதில் ஒரு நெருடல், நடிகர் விசயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்பது மட்டுமே -
ஆயினும்; ஒழுக்கத்தை நெறியாய்க் கொள்ளின், வாழ்வும் தூய்மையாகும் என்பதை 2016 தேர்தல் சொல்லுகிறது...
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இல்லாத இயல்பு.
ஒழுக்காறாக் கொள்க
= தூயவாழ்வின் துணை எதுவெனில், நல்லொழுக்கமாகும்... அதுவும்;
ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு
= நெஞ்சில் துளியளவும் தீமைக்கு - பொறாமைக்கு - இடந்தராமல்,
இல்லாத இயல்பு.
= வாழும் வாழ்வாகும்.
வைகோவின் நேர்மைக்கும், தூய்மைக்கும், உழைப்புக்கும் கிட்டிய ஒருங்கிணைவே இது எனில், மிகையாகாது...
-அரங்க கனகராசன்
09042016
---------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகன் விண்ணில் பூத்த விஞ்ஞானி அல்லன்...
கருணாஸ் ஒரு நடிகர்...
அவர் தமிழ் நடிகர் என்றுதான் தமிழ் மக்கள் கருதுகின்றனர்...
அவரோ; தன்னை எப்போதுமே தன்னை ஒரு சாதிக்கு அடையாளம் படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை...
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அவர் உறுப்பினராக செயல்படுவதற்கு மாற்றாய், தன் சாதி நடிகர்களை திரட்டி (திரண்டால்?) சாதி நடிகர் சங்கம் துவக்கியிருந்தால் அவருக்கு மென்மேலும் சிறப்பு சேர்ந்திருக்கும்...
சாதி நடிகர்களை நடிக்க வைத்து, சாதி தொழிற்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு, படம் தயாரித்து, சாதி பட அரங்குகளைத் தேடி, சாதிவெறியர்களை காண வைத்தால், இன்னும் அவருக்கு பெருமைச் சேரும்...
சாதியும் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடும்...
ஆனால்; அவர் தான் சம்பாதிக்க தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை நாடுகிறார்...
உணர்வு ரீதியாக, தன் சாதியை ஏந்துகிறார்...
இவருக்கு எதற்கு பொதுப் பணி...
இத்தோடு, தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தலின் போது இவர் அடித்த பல்டியை இன்னும் மக்கள் மறந்துவிடவில்லை....
ஊழலை ஒழிக்க, நடிகர் சங்கத்தைக் கைப்பற்ற ' போர் ' என்றார்...
அப்போதைய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் மீது வீசிய, குற்றச்சாட்டுகளில் முதன்மையானது ஊழல் என்பதாகும்...
ஊழலை ஒழிக்க, புறப்பட்ட கருணாஸ், சரத்குமாரை விரட்டி பெருமைக் கொண்டார்...
அதே கருணாஸ் இன்று ஊழலின் உருவமாம் அ தி மு கவோடு தன்னை அடையாளம் படுத்துவது விந்தை!...
இந்த விந்தையொடு மேலும் ஒரு விந்தை என்னவெனில், ஊழல் என்றுக் கூறி, நடிகர் சங்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சரத்குமாருக்கும் இவர் வாக்கு கேட்டு வலம் வரலாம்...
இந்த நடிகர்களின் கூத்துக்கு ஒரு அளவே இல்லை... எல்லாம் தமிழ் மக்களின் தாராளமய ரசிப்புக் கொள்கையின் விளைவு!
இவர் வென்றிட தமிழ் மக்கள் வழிவகுத்தால், 'அந்தோ தமிழ் மக்களே...!' என வருந்த மட்டுமே இயலும்...
தமிழ் மக்கள் நெஞ்சின் ரணம் ஆறி, தமிழினம் தழைப்பது எப்போது?
நடிகர்களை நடிகர்களாக காணுங்கள் தமிழர்களே...
அவர்கள் விண்ணில் பூத்த விஞ்ஞானிகள் அல்லர்... எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசும் உருவங்கள்... சொல்வதைக் கேட்டு செய்யும் பொம்மைகள்... அவ்வளவே!...
- அரங்க கனகராசன்
05042016
மனிதன் தோன்றி, பசியின்போது உண்ணல் தேடியலைந்தான்...
காய், கனிகள் இலைகள் ஆரம்பத்து உணவாக இருந்திருக்கவேண்டும்...
அவன் பார்வை, சிறு விலங்குகள் மீதுத் திரும்பியப் போது, அவற்றைப் பிடிக்க முயன்றான்... சில பிடிப் பட்டன... சில எதிர்த்தன... பிடிப்பட்ட விலங்குகளோடு விளையாட அந்த மனிதனுக்கு மகிழ்வுத் தருவதாக இருந்தது...
அவ்விலங்குகள் போடும் கூச்சல்களை - ஓசைகளை - தானும் இட்டுப் பழகினான்...
அதில் ஆனந்தமும் இருக்கக் கண்டான்...
தனி மனிதனின் உலாவல், நாளடைவில் குழுவாக மாறியிருக்கலாம்...
உணவுத் தேடலுக்காக குழுப் பயணம் செய்தனர்...
இயற்கையின் வினைப்பாட்டால் தோன்றிய நெருப்பு வளையத்தினுள் சிக்கி சில வேளைகளில் மனிதனும் மாண்டான்... விலங்குகளும் மாண்டன...
நெருப்பில் வெந்த சடலங்களின் வாடை மனிதனை ஈர்க்க, அவற்றை முகர்ந்தும், ஒரு வித பயத்தோடு நக்கியும் பார்த்தான்...
வெந்த விலங்குகளின் ஊண் மனிதனுக்குப் பிடித்தமானதாக ஆனது...
இத்தருணத்தில், மனிதனின் உணவு வேட்கை மிருகங்களின் வேட்டையாடலில் திரும்பியது...
மிருகங்களின் எதிர்த் தாக்குதல் மனித இனத்துக்கு அச்சமும் சவாலுமானப் பாதைக்குத் திருப்பியது...
வேட்டையின் போது உதவிக்கு சக மனிதனை சிறுச் சிறு ஓசைகளின் மூலம் அழைக்கும் நடைமுறைப் பரவியது...
சிறு ஓசைகள் - கூப்பாடுகள் - குறிலும், நெடிலுமாய்ப் பிறந்ததன...
மனிதன் சிறுக் குழுவாகத் திரிந்தான்... அதுவே பெருங்குழுவாக மாறியப் போது, குழுக்களின் எண்ணிக்கை வடிவில் பிரிந்தன...
ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ள - அடையாளம் காட்டிக் கொள்ள- வழக்கம் போல புதுப் புது ஓசைகள் மலர - அதுவே வார்த்தைகளாயின...
மனிதக் குழுக்கள் தாம் திரிந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப ஒலி வடிவங்களை மனிதன் அமைத்துக் கொண்டான்...
நாளடைவில், மனிதக் குழுவினிடையே வேட்டையாடலில் வேற்றுமை - பகைமை - ஏற்பட, இடப்பெயர்ச்சி நிகழ்ந்தது...
இந்த இடப் பெயர்ச்சியானது பகைமையையும் சுமக்கச் செய்தது...
இதனால் - இப்பகையால் - ஒரு மனிதக் குழு உச்சரித்த வார்த்தையை இன்னொரு மனிதக் குழு ஏற்க விரும்பாததோடு, தமக்கென வார்த்தைகளை வடிவமைக்கத் தொடங்கியது...
இந்த ஒலியானது பல்வேறு வித,வார்த்தை வடிவங்களை உண்டாக்கியது...
ஒவ்வொரு மனிதக் குழுவும் தத்தமக்கென அமைத்துக் கொண்ட ஒலி வடிவங்கள் நாளடைவில் மொழியானது...
ஆக, மொழி முதலில் தோன்றவில்லை...
மனிதன் தோன்றி, மொழியை உருவாக்கினான்...
எந்தக் குழுவோடு வாழ்ந்தால் தனக்கு அரண் அதிகம் என்று உணர்ந்த மனிதன், தனக்குத் தோதானக் குழுவோடு இணைந்து அந்த மொழிக்கு தன்னை உட்படுத்திக் கொண்டான்...
அம்மொழியைப் பேசியதால், மனிதனை அந்த மொழியினன் என, அடுத்த மனிதக் குழு அடையாளம் படுத்தியது...
எனவே, ஒரு மொழியை ஏற்றவன் அந்த மொழியினன் ஆனான்...
இப்போதும் அந்நிகழ்வுத் தொடர்ந்துக் கொண்டுதன தான் இருக்கிறது...
வீட்டில் பேசப்படும் மொழியைக் கொண்டு ஒருவரை தமிழர் அல்லர் என்பது இயற்கைக்கு எதிரானது...
உணர்வால் தமிழை ஏற்றுக் கொண்ட யாவருமே தமிழர்தாம்!
அதே வேளையில், ஆரியர், தமிழைப் பேசினாலும், வடமொழியைத்தான் உணர்வோடுக் கொண்டிருக்கின்றனர்...
அவர்களைத் தவிர்த்து, தமிழோடு ஒன்றிய யாவரும் இணைந்தால், தமிழ்நாட்டில் 2016 தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்...
அதுவும், ஆளுமைக்குத் தகுதியற்ற விசயகாந்தை நீக்கி, மக்கள் நலக் கூட்டணியும், சீமானும் இணைந்தால் டெல்லியின் செவிகளில் தமிழர் என்றோர் இனமுண்டு என்பதை தெளிவுப் பட ஓதலாம்...
- அரங்க கனகராசன்
04042016
---------------------------------------------------------------------------
தற்காப்புக்கு ஆயுதம் ஏந்துதல் தவறா?...
இனி எத்தனைக் காலம் இந்த மன உளைச்சல்?...
தீராத தலைவலியோடு வாழ்நாட்களைக் கடத்த வேண்டிய நிர்பந்தம் ஏன்?...
முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற உரிமையை நம்மிடமிருந்துப் பறிக்கும் போது நாம் ஏன் ஊமையானோம்?...
ஒவ்வொரு நாளின் விடியலும் தமிழக மீனவர்களை துக்கத்தில் ஆழ்த்துவது ஏன்?...
இதோ... அதோ... என்பார்கள்... காங்கிரஸ் மற்றும் பிஜேபி ன் நிலைப்பாடு ஒருமித்து திகழ்கிறதே தமிழக மீனவர் வாழ்வாதாரத்தின் மீது... ஏன்?
நம்மை நாம் ஆளவில்லை என்பதுவே உண்மை!
நமது புண்ணின் வலி பிறனுக்குத் தெரியும் என்று நாம் நினைப்பது நமது முட்டாள் தனம்...
நமது இதயத்தின் கதறல் நம் இனத்திற்கு மட்டுமே கேட்கும்...
அடுத்தவன் வரவை எதிநோக்குவது அறிவீனம்... காலத்தின் விரயம்...
மழைத் துளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குடை ஏந்துகிறோம்...
வெயிலுக்கு மரம் தேடுகிறோம்...
அதேபோல் நம்மைநாம்தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்...
நமது பாதுகாப்பை நாம்தான் தேடவேண்டும்...
அடுத்தவனிடம் நாம் உயிர்ப் பிச்சை யாசிப்பது இனத்திற்கே நாம் செய்யும் இழிவு!...
குனியக் குனிய, குட்டுவதை நிறுத்த மாட்டான்...
நிமிர்ந்து எதிர்த்து நின்றால் ஓங்கிய கையை ஒரு கணம் நிறுத்துவான்...
நிமிர்ந்து நின்றாலே அவன் கை அடங்குகிறதெனில் , தற்காப்புக்கு நாமும் அடிக்கத்தொடங்கினால் சிங்களவன் கொட்டம் அடங்காதா?
'ஓடப்பர் உதையப்பர் ஆக வேண்டும்' என்று பாரதிதாசனார் சொல்லவதை நினவில் ஏற்றுவது அவசியம்...
வாழ்வது சில நாள்தான்... இதிலேன் பேடி வாழ்க்கை?
இப்படி வாழ்வது நமது சந்ததியினரை நாமே சுட்டெரிப்பது ஆகாதா?...
சீக்கியன் தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருக்கிறானே; அதனை அரசியல் சட்டம் தடுக்கவில்லையே!
அவனுக்கொரு சட்டம் ; தமிழனுக்கொரு சட்டமா?
தமிழ் சட்டவல்லுனர்களை கலந்தோசித்து, எவ்வகையில் தற்காப்புக்கு ஆயுதம் தரிப்பது எனக் கேட்போம்...
சீக்கிய மதம் சீக்கியனுக்கு சட்டம் வைக்க அனுமதிக்கிறது எனில், அது ஒரு தடைக்கல் அல்லவே?...
தமிழரும் தமக்கென ஒரு மதம் அல்லது ஒரு கோட்பாடு உண்டாக்கி, தற்காப்புக்கு ஆயுதம் வைத்துக் கொள்ள வகைச் செய்வோம்...
மீனவன் மீன் பிடிக்கச் செல்லும்போது, சிங்கள நாட்டவனால் ஆபத்து நேரிடுமெனில் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுப்பட, தற்காப்பு ஆயுதம் உதவுமே...
மேலும்; நமது எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், அத்து மீறி நுழையும் சிங்கள இராணுவத்தை சுட்டு வீழ்த்தி, சடலத்தை இந்திய அரசிடம் ஒப்படைக்கலாம்...
நமது எல்லையைக் காக்கும் கடமை, நமது இராணுவத்துக்கு மட்டுமே கடமையுண்டு என நினையாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் எல்லையைக் காக்கும் கடமை உண்டு என்பதுத் தவறல்லவே!
தற்காப்பு ஆயுதம் தரித்து, நம் தமிழ் எல்லையை நாம் காப்பதில் உள்ள அணுகுமுறையை தமிழ் வழக்கறிஞர்கள் மீனவர்களுக்கு இயம்பிட வேண்டும்...
- அரங்க கனகராசன்.
*** 2016 தேர்தல் இதற்கும் வழிவகுக்கட்டும்...
13032016
கருத்துகள்
கருத்துரையிடுக