அரங்ககனகராசன் கவிதைகள்

அரங்க கனகராசன் கவிதைகள் 

------------------------------

புத்தாண்டே ஓர் சொல் உனக்கு...
-----------------------------------------------

வருக வருகவென 
ஈராயிரத்து இருபத்தைந்தாமாண்டே - நின்னை 
வரவேற்பர் பலர்...

வருக வருகவென யானும் 
நிறைமொழிக் கூறிடுவேன்...

ஆயினும் ஓர்சொல் சொல்லுவேன் 
உந்தன் வரவுக்குமுன்னே...

பேரோடும் புகழோடும் 
பாராண்ட தமிழன் 
சீரிழந்தான் பார்ப்பனராலே...

மாடோட்டி வந்த பார்ப்பனரிங்கே 
மூடம் பரப்பி கேடு பல செய்து - தமிழ் 
மாமன்னரை வீழ்த்திட்டான் 
மோச சொல்பேசியே...

ஆயிற்று ஆண்டுகள் பல 
ஆரியனுமிங்கே அதிகாரம் கொண்டு 
ஆக்கினான் எம்மினத்தை அடிமையாய்...

ஆண்டே 
ஈராயிரத்து இருபத்தைந்தாம்  ஆண்டே 
தமிழர் இழிநிலைப் போக்கி 
தமிழ்நிலம் விடுதலைப் பெறவே 
தக்கனச் செய்வாயெனில் 
இக்கணமே சொல்வேன் 
இனிதாய் வருக வருகவென்றே...

- #அரங்ககனகராசன் 
31122024

ஏங்கும் காதல்
-----------------------
என்னடா செய்கிறாய்
இதயம் அறுக்கிறாய்
எங்கேடா சென்றாய்
மனதை வலிக்கிறாய்
எப்போதடா வருவாய்
இமையை நோண்டுகிறாய்
ஏனடாப் போனாய்
தவித்தல் தந்தாய்
எதுவடாக் கலந்தாய்
உதடுகள் இனித்தாய்
எதையடா வரைந்தாய்
படுக்கைக் கலைத்தாய்
எதற்கடா கடித்தாய்
காயம் செய்தாய்
எதிலடா உறங்குவேன்
மார்போடுத் தொலைந்தாய்...
என்றே நான் ஏங்கிட
எனக்கோர் காதலன் இல்லையே
- அரங்க கனகராசன்
12092021
------------------------------------------------

தகுமோ
--------------
அன்னைக் குளிப்பதை
ஆசைப் பொங்க
கோல் பிடித்து - கையில்
ஆட்டி நின்றனன் பிள்ளையாண்டான்...
எந்தன் மனைவிக் குளிப்பதை
எவனடா காண்பதேன்றே
சினம் கொண்டு சிவனும்
கருநிறப் பிள்ளையாண்டானின்
சிரமறுத்துக் கொன்றானே...
என் பெருந்திரள் அழுக்கினில்
என்மகனைப் பெற்றேன்...
கொண்டையில் பெண்டிரை
கொலுவைத்து குற்றின்பம்
கொள்ளும் சிவனே
என்மகனைக் கொல்லும் தகுதி
ஏதுனக்கென்றே சீறினாள் பார்வதி...
இணையாளின் இருவிழி சிவப்பில்
மருண்ட சிவனும்அஞ்சி
இணையோடிருந்தக் களிற்றொன்றின்
தலையைக் கச்சிதமாய்க் கொய்து
கையில் கோல் பிடித்து பிணமாய்க் கிடந்த
பிள்ளையாண்டான் சடலத்தில்
யானைசிரம் வைத்து
உயிர்ச் செய்தானாம்...
பிள்ளையாண்டான் பிழைத்தநாளை
பிறந்த நாளாய்
திருவிழா செய்தல் அறிவோ...
அவணியில் ஓர் ஆண்மகன்
அன்னைக் குளிப்பதில் - சுய
இன்பம் கொள்வானெனில்
கொஞ்சுவீரோ...
கல்லால் அடித்து காலால் உதைத்து
தெருவெங்கும் விரட்டல் செய்வீரே...
இவனோ கயவன்...
இனியத்தாயின் குளியலில் - சுய
இன்பம் துய்த்தோனை
இவ்வூரில் கடவுளைனில் தகுமோ...
-அரங்க கனகராசன்
12092021
------------------------------------------------

நின்னை நினைந்தே

---------------------------

குசுபுவே
நின்னை நினைந்தே
தவிக்கிறேன் நான்...
நீயும் ஊர்கோலம் போனாய்
நின் பேரும் சேறாய் ஆனதே
என்னை நீ செய்தனை
எங்கும் நீ தோற்றனை
பொங்குதே நெஞ்சு
பொறுக்காமல் புலம்பல் செய்தேன்.
தேர்தலில் நீ தோற்றும்
ஊரறியக் கற்பழிப்பு நடத்தும்
பாசிகக் கட்சியில் - நின்னை
பாராதிருத்தல் தகுமோ..
குசுபுவே அமைச்சர் ஆவாய் - அல்லவெனில்
கற்பழிப்புக் கட்சியின் தலையாவாய்
என்றே என் நெஞ்சம் ஏங்க
ஏனோ நின்னை மோடி கைவிட்டான்
கதறுகிறதே பாழும் நெஞ்சு
-அரங்க கனகராசன்
09072021

---------------------------



அன்று ஆட்சியில் தி மு க இல்லையே 
--------------------------------------------------

நானே கடவுள் என்றான் 
நாளொரு பெண்ணைக் கெடுத்தான்...

கண்ணன் நானே என்றான் -இளங் 
கண்ணே வாடி என்றான் 

கோபிகையரே வருக - என்
வாயினிக்கத் தருக முத்தமென 
வாரியணைத்திட்டான் - அந்தோ 
பாடம் பயிலுங் குழந்தையை! 

கடவுள் நானே என்றவன் 
கால்தெறிக்க ஓடினான் ஓடினான் 
காவலரிடம் மாட்டினான் மாட்டினான் 
கம்பிசிறைக்குள் சிக்கினான் சிவசங்கர பாபன் 

அந்நாளில் கண்ணன் என்போன் 
மங்கையர் குளிக்கும் போதில் 
மறைந்துநின்று ஆடைத் திருடி -பெண்களை 
மிரட்டியே வன்புணர்வுக் கொண்டான்..

அன்றைய நாளில் - திராவிட
முன்னேற்றக் கழகம் அரசிருந்திருப்பின் 
கண்ணனவனைக் கைதுசெய்தே 
கடுஞ்சிறைவாசம் தந்திருக்குமே 
- அரங்ககனகராசன் 
arangakanagarasan.blogspot.com
17062021

பெயர்த்தெறிமின் பெயர் மாற்றம்தனை
---------------------------------------------
வந்தேறிகட்கு ஏதடா உரிமை
செந்தமிழ் நாட்டின் பெயர்தனை
மாற்றென்றுக் கூற!
அண்டிப் பிழைக்கவந்த ஆரியனே
பைந்தமிழ் நாட்டின் பெயர்தனை
மாற்றெனக் கூற ஏதடா உரிமை
கையேந்தும் கூட்டமே
கன்னித் தமிழ் நாட்டின் கரும்புள்ளிகளே
கால்பிடறிப்பட ஓடுக
தமிழ்நாட்டை விட்டே!
கனல் எழுமெனில்
கதறல் கொண்டு ஓடுவீரே
- அரங்க கனகராசன்
03062021
-------------------------------


ஊரில் உழவன்
தலைநகரில் உழவன்
தவிக்கிறான் - அவனும் குடிமகனன்றோ..‌
குடிமகன் உரிமைப் பறித்து
பெருவணிகன் பெருவாழ்வு வாழுமிந்நாடு...
குடியரசு விழா ஒருக் கேடா...
-அரங்க கனகராசன்
2601202201
-------------------------

எடப்பாடி எனும் நீ
------------------------

அரியர்களிள் அரசனே - நீ
ஆரியர்களின் நக்கி
பேராசை பதவியின் பாலுனக்கு - அதனால்
ஓசையின்றி நீ ஓரிடமுமின்றி - தமிழர்
வேலை யாவற்றையும் தூக்கி
மூளையற்ற வடவருக்கே வழங்கும் வள்ளல் நீ
படித்தத் தமிழர் பணியின்றி பரிதவிக்க - உன்
தடித்த எசமானன் ஏவலை
நொடிப் பொழுதும் நோவின்றி
மடியிட்டு நக்கும் நாயகன்நீ
நீயோடினால் நலம் தமிழ்நாட்டுக்கே
ஓடிவிடு அதற்கும் புகழ் சூட்டுவோம்
கேடியின் ஓடி வாழ்கவென்றே
28082020
---------------------------

யாருக்கடா விடுதலை
-----------------------------
யாருக்கடா விடுதலை நாள்
தமிழா
போதுமடா உறக்கம்
நூற்றாண்டுகள் பலவாயின - பார்ப்
போற்றுந் தமிழ்மண்தனின்
ஏற்றமிழந்த எம் தமிழ்மன்னவர்
பார்ப்பனருக்கு அடிமையாயினர்
அந்தோ
சூத்திரனாய் தமிழனை ஆக்கிடவே - தமிழ்
அரசரும் ஆணையிட்டனரே
ஆங்கிலேயனும் எம்மண்ணையாண்டு
ஆக்கினான் அடிமையாய் எம்மை
அவனிடம் விடுதலைக் கேட்டோம்
அவனும் தந்தான் விடுதலை பார்ப்பனருக்கே...
பார்ப்பனருக்கு அடிமையானோம் - மீண்டும்
பரத்தையர்ப் பிள்ளையென்றே
பார்ப்பன் ஆக்கினான் தமிழரை - அனைத்தும்
ஆனதே உரிமை அவனுக்கே...
அறிவற்ற தமிழா
அழகோ நீமொழிவது...
ஆகுமோ இந்நாள் தமிழர் விடுதலைநாளென...
எம்மினம் எம்நாடு தனிநாடு தமிழ்நாடு
அந்நாளே எமக்குத் திருநாள்
அந்நாளே எமக்கு விடுதலைநாள்...
ஓலமிடாதே -இது
பார்ப்பனர் பெற்ற விடுதலை...
கூறடா
இன்னும் நாம் அடிமையென்றே
- அரங்க கனகராசன்
15082020
---------------------------

நல் கந்தக் கவசம்
----------------------
ஆரியர் திமிரை
அழகுவேல் தாக்க
பொய்யுரைக் கயவரை புனிதவேல்
தாக்க
கதிர்வேல் இரண்டும்
மனுநூல் தாக்க
விதிமனு சொன்னவனை
வேலவர் தாக்க
வாழ்வுரிமைப் பறித்தோனை நல்வேல் தாக்க
ஓசியில் வாழ்வோனை
பெருவேல் தாக்க
கல்வித் தடுப்பவனை முனைவேல் தாக்க
சங்கிகள் நாவைச் செவ்வேல் தாக்க
இராமனரசியலை கதிர்வேல் தாக்க
எம்மின எதிரியை இனியவேல் காக்க
பூணூல் வாயனை வடிவேல் தாக்க
கோயில் சிலைத்திருடரை திருவேல் தாக்க
கர்பகிரகத்தில் கற்பழித்தவனை தாக்க
மதமோதர்களை பெருவேல் தாக்க
வர்ணம் வேதத்தை
அருள்வேல் தாக்க
இழிவேதம் நாலும்
பருவேல் தாக்க
வர்ணம் நாலு சொன்னவன் மடியவே தாக்க
சமநீதி தடுப்பவனை செவ்வேல் தாக்க
பூணூல் கயிற்றை நல்வேல் தாக்க
சாதிமதச் சண்டாளனை அயில்வேல் தாக்க
கொட்டம் அடக்கிடவே
பெருவேல் தாக்க
உச்சிக் குடுமியை வல்வேல் தாக்க
சமநீதி மறுப்பை பருவேல் தாக்க
பிறப்பால் பழிப்பவனை கதிர்வேல் தாக்க
பஞ்சமர் என்றவனை அருள்வேல் தாக்க
பொய்மந்திரமதை கருணைவேல் தாக்க
எண்ணிக்கையில் மூவரை முரண்வேல் தாக்க
பின்புலம்நின்று ஏமாறும் சூத்திரர் திருந்த
சூத்திரரும் கற்று நன்னிலையேக
சாதியடையாளம் நம்நிலம் நீங்க
பார்ப்பனர் திமிரை முனைவேல் தாக்க
இப்பொழுதே மானிட எதிரியை வேல்தாக்க
எளியோர் வாழ்வு அழிவுறும் நேரம்
கடுகவே வந்து கனகவேல் தாக்க
இட ஒதுக்கீட்டை வச்சிரவேல் காக்க
குறுக்கே நிற்கும் குடிகெடல்வானை தாக்க
சாதியும் பேதமும் எதிர்வேல் தாக்க
தாமதம் இன்றி சதுர்வர்ணம் தாக்க
தாக்க தாக்க மனுநீதி தாக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க
- அரங்க கனககவசம்
22072020
---------------------
விடுதலை நாளேடு
விடுதலைப் போராடு - தமிழினம்
விடுதலைப் பெறவே
விடுதலை தமிழ்நாடு
விடுதலைக் கொடியோடு - தமிழர்
விடுதலை தீர்வு
விடுதலை எமது உரிமை
விடுதலை வேண்டாதே - தமிழா
விடுதலை வென்றெடு
- அரங்க கனகராசன்
01062020
----------------------------------------------------------------

தமிழினத் தலைவன் அவனே
--------------------------------------
பிரபாகரன் ஓர் எழுச்சி ஞாயிறு!
இரும்புக் கொண்டும் மறைக்க முடியாது...
பிரபாகரன் ஓர் அடையாளம்
சுரண்டி அழிக்க முடியாது...
பிரபாகரன் முப்படைகளின் தலைவன்
திரைமறைவு நடிகனல்லனவன்...
பிரபாகரன் - தரணியில்
தமிழ்வீரம் வரைந்த ஓவியனவன்...
வெற்றுச் சொற்களால் - தமிழரை
சோம்பலாக்கியோன் அல்லன்
நாளை மலரும் கருவுக்கும்
மேதகு தலைவனே தலையாவான்..
ஒப்பாரியிட்டு ஒப்பிலாத் தலைவனின்
செப்புரையைச் சிதைக்கும் எட்டப்பன்காள்...
பொய்யுரைக் கொண்டு
மெய் வரலாறுப் புதைப்பீரோ...
-அரங்க கனகராசன்
02052020
-----------------------------------------------------------


வா.. வா... கொரோனா வா
-----------------------------------
கொரோனா... கொரோனா....
கொல்ல வந்தாயோ
கொல்லைப் புறத்திலே...
(கொரோனா)
உணவில்லை உறக்கம் இல்லை
அழுகின்ற குழந்தைக்கு
கொடுக்கவே பாலில்லை
(கொரோனா)
அடங்கியிரு வீட்டில் என்பார்
அய்நூறு ரூபாய்க்காக
வாவெளியே என்பார்
ஊரடங்கு என்பதன்
பேரென்னவோ ....
(கொரோனா)
வரிசையில் நின்று வெயிலில் வெந்து
புழுத்த அரிசியதனை வாங்கிடப் போனால்
அழுத்தமாய் கேட்கிறார் ரேசன் அட்டையை
எங்கே செல்வேன் வீதியில் திரிகிறேன்
கையில் கம்போடு காவலர் அடிக்கிறார்
பசிக்குது வயிறு. துடிக்குது நெஞ்சு
(கொரோனா)
சாகடிக்க வந்த கொரோனாவே
சாகடித்துப் போ நீயும் சீக்கிரம்
அரசாங்கம் பட்டினிப் போட்டு - ஏழைகளைக்
கொல்லுதே... வா நீயும் பாய்ந்து...
(கொரோனா)
- அரங்க கனகராசன்
25042020
----------------------------------------------------------------------

அன்பழகனார்க்கோர் இரங்கல்
---------------------------------------
ஏங்கி மகிழ்வேன் - நின்
ஏற்றமிகுக் குரல் கேட்டே - அதில்
குழைத்துத் தருவாயே தீந்தமிழை
உண்டு களிப்பேன் அதனை...
இனமென்றும் மானமென்றும்
இமையாப் பெரியார்ப் போல்
தமிழர் வாழவே உழைத்தாய் - தனித்
தமிழ்நாடு நின்கனவதனை மறவோமே...
- அரங்க கனகராசன்.
07032020
--------------------------------------------------------------------------

தாய்மண்ணின் தொப்புள்கொடி உறவு
தமிழ்மண்ணில் வாழ - மாறுசொல்லும்
தறுதலையே யாரடா நீ..
எம்மண் தமிழ்மண்ணில்
எவன் வாழ வேண்டுமென
எழுதிட எவனடா நீ...
ஊரெங்கும் திரிந்தாலும்
ஓடிவந்துறங்க தமிழ்மண்ணிருக்கு எமக்கு...
நாதியற்ற நாயே நாடற்ற மூளியே
வாயைமூடடா தமிழ்மண் விட்டோடடா
ஈழத்தமிழர்க்கு இடமில்லை
ஈங்கென நீ கூற உரிமை ஏதடா
வெட்டொன்று வரைபடத்தில்
இட்டோமேனில் தனிக்கொடி பறக்குமடா
- அரங்க கனகராசன்
07022020
---------------------------------------------------------------------------

ஈராயிரத்து இருபதாம் ஆண்டே
-----------------------------------------------

திரையிட்டு நிற்கும் மேகத்தை வெடியிட்டு விரட்டு...

எம் ஈழமும் தமிழ்மண்ணும்
இருளாகி நிற்க
இருகண் கொண்டு கண்டு
வெருண்டு மாள்வதோ...
ஏய் புத்தாண்டே
வாராது செல் - உன்னை
வரவேற்றல் இல்லை
அடிமைத்தளை அகன்றாலன்றி!...
எம்மண்ணின் விடுதலை முழக்கம்
எட்டுத்திக்கும் ஒலிக்கும் நாளே
எம்மண்ணின் கொடி
எழுஞாயிற்றின் விழுதுகளோடுத் தீண்டும்நாளே
எமக்கினி புத்தாண்டு அறிவாய்...
ஆதலால்
ஈராயிரத்து இருபதாம் ஆண்டே
வாவென உனை
வரவேற்றல் செய்யோம்...
அடிமைகள் யாங்கள்
அகமகிழ்வது தமிழ்விடுதலையாதல் பொருட்டே...
அதனால் நீ - தமிழர் கூவலை
அகிலமெங்கும் அறைவாய் போ..
-அரங்க கனகராசன்
31122019
--------------------------------------------------------------------------------------

தமிழா...
------------
நீ
குனியக் குனிய
குட்டுவதை நிறுத்தமாட்டான்...
எட்டி நீ
உதைத்தால்
எட்டடித் தள்ளி விழுவான்
குண்டுத் தடியோடு
வந்தேறிப் பார்ப்பான்
கூட்டத்தில் கலந்துத் தாக்குகிறான்...
ஒளிந்து நின்று - வாலியை
கொலைச் செய்தக் கொடியோன்
வழியையவன் மறந்திலன்...
குண்டுத் தடியோடு
குண்டன் வந்தால்
குண்டு முழங்கட்டும் உன்னிடம்
துணிந்திடு
துரத்திடு
கைபர் கணவாய் நோக்கி
தருணமிதுத் தவறல் வேண்டா
தமிழ்நாடுதனில் தனிக் கொடி ஏற்றிட
21122019
-----------------------------------------------------------------
மகளே பாத்திமா
----------
மகளே பாத்திமா -உன்
மரணத்தின் கயவனை
மின் கம்பத்தில் தொங்கவிட்டு
மரணிக்கச் செய்யவே
மனதுத் துடிக்குதே...

கட்டப் பட்டிருக்கிறதே - எங்கள்
தமிழ் நாட்டின் கைகள்...
விலங்கொடிப்போம் ஒருநாள்
மலத்தினும் கீழான
குலத்தவரையும் அழிப்போம் அன்றே...
- அரங்க கனகராசன்
13112019
--------------------------------------------------------------------------------------------
தீபாவளி தீமையழி
-----------------------------
எங்கே நின்றுக் கொண்டிருக்கிறாய் தமிழா
பண்பாட்டின் விளிம்பில்
பாதாளம் தொட்டு நிற்கிறாய் - இன்னுமா நீ
பார்வையைத் திருப்ப மறுக்கிறாய்...

திரும்பிப் பாரடா
திருடப்பட்டப் பண்பாட்டை...
எங்கேனும் கண்டாயோ
தங்கத் தமிழர் வரலாறுதனில்
பன்றியும் பூமியும் காமம் கொண்டதோ
இன்றிந்தக் கேள்விக்கு
இனிதான விடையுண்டெனில்
இயம்படா
ஆரியன் பெருஞ்சூதுக் கொண்டு
வீரத்தமிழனை வீழ்த்தி
ஏட்டிலும் எழுதிட்டான் - தமிழன்
சூத்திரனென்று...
ஓய் தமிழா
நீ சூத்திரனோ
ஆமெனில்
தீயேந்தி நச்சுப் புகைமூட்டு...
அல்லவெனில்
அநீதியில் விளைந்த தீபாவளியை
அடிகொடுத்து விரட்டு...
நாடும் வீடும் நச்சுப்புகை நீங்க
காற்றும் கைமகவோடுக் கொஞ்ச
நானிலமெங்கும் நம்தமிழரே
தீபாவளி தீதென்றே முழங்குக!
- அரங்க கனகராசன்
25102019
---------------------------------------------------------------------------


#அட_மாட்டு_மூத்திரம்_குடிப்பவனே

மாட்டு மூத்திரம் வேண்டுமெனில் - நீ
பாத்திரம் பாத்திரமாய் குடியடா....

கடன்வாங்கி கல்லூரிச் சேர்ந்த மாணவனை
முடக்காதடா மூடனே கீதைப் படியென்று!...

கீதைப் படித்தோ அப்துல் கலாம்
வான்புகழ் கொண்டான்...

கீதைப் படித்தோ தமிழன் சிவன்
ஏவினான் சந்திரனுக்கும் கலம்...

மூடர்க் கூடத்து மூத்திரங்களே - கல்விக்
கூடம்தனில் பயிலும் மாணாக்கன்
பொறியாளராய் வெளிவரட்டும்
சாமியாராய் மாற்றிடாதீர்...

நாடுவளம் பெற
நல் பொறியாளர் வேண்டும்...
கீதையால் சீர்கெடும் நாடும்
ஓதுவாரில்லையோ உமக்கு - மூத்திரமன்றி
வேறில்லையோ காவியே....

25092019
------------------------------------------------------------------------------



கீழடி வாருங்கள்...
------------------------

குடும்பம் குடும்பமாய்

குழுக் குழுவாய்த்

தனித்தேனும்

தமிழர்காள் வருக கீழடி!...


உலகோர் விழித்திரை

எழில் தமிழ்த் தரைதனின்

உயிரோவியம் காணவே

உடனே வருக கீழடி!...


நம்முன்னோர் தடம்

நன்றே தெரிகிறது

நாலு திக்கிலுருந்தும்

ஓடி வருக கீழடிக் காணவே


இந்தியன் குருட்டுச் செவி

இனி திறவட்டும்...

தமிழனே மூத்தோன் - என

இந்தியன் கேட்டிடவே


முழக்கமிட்டு வாராய்

முதுமொழி ஈன்றத் தமிழர்காள்

வெதும்பி ஆரியரும்

வெந்துறவே வேகமாய் வாரீர்
22092019
---------------------------------------------------------------------------

பெரியார் நீ வாழி!
--------------------------------------------------

 வெண்தாடி வேந்தனே 
இன்று மட்டுமே உன்னை நினைத்து 
இன்னிசைப் பாடுதல் கூடுமோ 

நாளும் நாளும் - நீ 
வாழ்கிறாய் எம் வாழ்வோடு...

உன் கைத்தடியோசையே 
தமிழர் உரிமையின் முழக்கம்...

உன்னை ஒருநாளும் மறவோம் 
உன்வரிகள் பார்ப்பனர் திமிர் அடக்கும்...
அதுவே எமக்கு அரண்... 
17092019                                      


காதல் பேசுவதை சற்று நிறுத்து 
-------------------------------------------

காதல் பேசுவதை - உன்
இதழ்கள் நிறுத்தட்டும்...
கண்ணெதிரில் - மானுடம்
மண்ணுக்குள் புதையாகிறது...
காதல் வரிகளை மூடிவிட்டு
வாய்த் திறந்து நெருப்பினைக் கக்கு...
நடிகனுக்கு நாளையிடு மாலை - இன்று
அழிப்பவனுக்கு அனுப்பு மரணவோலை
சாதியைச் சாக்கடையில் வீசு - கொடுங்
கோலனை நாட்டிலிருந்து நீக்கு
05082019
--------------------------------------------

இதயம் இருக்கிறதா 
-----------------------------

இதயம் இருக்கிறதா உனக்கு 
காதும் செவிடானதோ உனக்கு 

அனிதாவைக் கொலைச் செய்தாய் 
அடுத்தடுத்து நீளுகிறதே கொலைகள் 

ஆறுதல் கொள் தமிழினமே - இனி 
அநியாயம் நிகழாது என்னாலென்று 
ஆறுதல் மொழியொன்றுக் 
கூறவும் இருக்கிறதா இதயம் உனக்கும்!...
-------------------------------------------------------------------------------------- 




#முகிலன் 
---------------

#வானோடும் முகிலே
காணாமல் போன முகிலனைக்
கண்டாயோ சொல்லாயோ
04062019
----------------------------------------------------------
முள்ளிவாய்க்கால் பரணி
----------------------------------------
ஒடிந்து நொறுங்கிய எலும்புகள்
கருகி கமழ்ந்த தசைநார்கள் 
வெடிக்குழிகளில் உறைந்தக் குருதிக் குளம்
மடிந்தப் பிணங்களின் குவியல் மேடை...

ஓரினத்தை வெல்ல
ஒன்பது தேசங்களோ
ஓ... சர்வதேச சமூகமே - தமிழர்
ஓலம் ஓய்ந்தது என நினைந்தீரோ..
அரக்கனாய் நுழைந்த
இரக்கமற்ற இந்தியாவே
அழித்திட்டோம் தமிழ்க் கருவையென
அடிமனதில் கொண்டாயோ ஆனந்தம்...
விதைகளாயினர் எம்தமிழ்வீரர்
விளைந்தெழுவர் ஒன்றுக்கு நூறாய்
ஒருநாள் வரும் மறவாதீர்
ஈழம்மலரும் காண்பீர்...
18052019
---------------------------------------------------------


தமிழா முழங்கு
-------------------------
இன்று தமிழ்ப் புத்தாண்டென்று
இயம்பின் ஏலாதீர் தமிழ்மக்காள் ...

பகுத்தறிவற்றப் பார்ப்பான்
பரப்பிவிட்ட இட்டுக் கதையிதனை
நெருப்பிட்டுப் பொசுக்குவீர் தமிழ்மக்காள்...
தைத் திருநாளே
தமிழராண்டென்றே
ஊதுமின் சங்கு
ஊரெங்கும் தோரணம் கட்டியே...
- அரங்க கனகராசன்.
14042019

அய்யய்யோ மோடியே 
------------------------------------

அய்யய்யோ மோடியே 
அடிவயிறுக் கலங்குதே...
அய்யய்யோ மோடியே 
அநியாயம் செய்யறியே...

ஒருவார்த்தை நீ பேசினாலே 
ஒரு பூகம்பம் போலாகுதே...

ஏழைக நாங்க என்னசெஞ்சோம் தப்பு 
மோடியே உனக்கு இரக்கமே இல்லையா...

பணத்தாள் செல்லாதுன்னு 
பறந்துபோனியே விமானமேறி 

பாடுப் பட்டக்காசு கையில் இருந்தும் - அடப்
பாவி  பட்டினிப்போட்டு சாகடிச்சியே
ஏழைக உயிரை... 

பசியாகுதுனு படியேறி - என் 
என்காசில் நா சாப்பிட்டேனே...
பாவிமோடியே - உன் 
பேரைச் சொல்லி
அங்கேயும் வாங்கிட்டானே  வரி!... 

செயற்கையா ஒரு புயலை - எங்கக்  
கடலோரத்தில் செஞ்சு 
துடித்துடிக்கச் சாகடிச்சச் சண்டாளன் யாரு 
வேகுதுமனசு நோகுது நெஞ்சு 
அய்யய்யோ மோடி 
அநியாயம் செய்யறியே...
- அரங்க கனகராசன் 
12042019
----------------------------------------------------------------------- 



மொழி நெருப்புதனில்
----------------------------------
உங்கள் புதைக்குழிகளின் வெப்பம்
உறங்க மறுக்கிறது
தமிழ்மண்மீதில் நின்று
தமிழ்வாழ்கவென்றே
இடியென முழங்கி
இன்னுயிர் ஈந்த வீரா்காள்
இன்னமும் விடியவில்லை
இந்தியாட்டம் மடியவில்லை
இந்தியனே - எவனடா நீ
எம்மண்ணாள ...

ஓடடா நீ - என்றே
ஓரணித் திரள்வோம்
ஓயாது எம்களமினி
ஏற்றுவோம் தமிழ்க் கொடி
- அரங்க கனகராசன்
25012019
--------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------
தைநாளே வருக தமிழர்தாகம் தணிக்க...
-----------------------------------------------
குளிர்க் காற்றோடு
இளங்கதிா் கோலமிட 
உழவு மண்ணது
செழித்து மலர

நெற்கதிரும் விளைந்து
தை தை தையென
தரணிமகிழப் பாடிட வரும்
தமிழராண்டே - தைமுதல் நாளே
தமிழினமோ
நை நை நையென
நலிந்து நாசமாகுதே
நானிலத்தில்...
தமிழினமது தரணிதனில்
இமிழ்க் கடல்மீதிலும்
இனிதாய் விண்பரப்பிலும்
தனியரசோச்சிட
தைநாளே வகைச் செய்திட
வாராய்நீ வாழ்த்துகிறேன்
வாழ்கவென்றே!
வாழ்கவென்றே. ..
-அரங்க கனகராசன்.
15012019


புத்தாண்டே வா... வா...
எகிறிக் குதித்து
எழுச்சியோடு வாராய்
எம்தமிழ்நிலம் நோக்கிப் புத்தாண்டே!...
எப்போதோ தொலைத்து
இப்போதும் தமிழன்
உாிமையிழந்து
உயிர்த் துடிக்கிறான்...
தமிழ்மண்ணதனை மீட்டு
தமிழனிடம் கொடுத்திடவே
இமிழ்க் கடல் வழியே
இரைத் தேடும் பறவையெனவே
விரைந்தோடி வருக புத்தாண்டே...
நீ தரும் பரிசாய்
தமிழர் உணர்ந்தெழவே
கிளர்ந்தோடி வா புத்தாண்டே...
- அரங்க கனகராசன்.
31122018
--------------------------------------------------------------------------------------------------------------------------------

தந்தை பெரியார் நினைவு நாள்

கைத்தடிக் கிழவனே - நீ
கட்டியக் கோட்டை மீது
வெட்டிப் பயல்கள் 
முட்டி மோதி மண்டைப். புண்ணாயினா்...
வெடிகுண்டென நின்தொண்டா்
வெகுதல் கண்டே - பாா்ப்பனா்
வெருதல் ஆயினர்...
நடைப்பிணமெனவே - ஆரியர்
நம்நாட்டில் ஆயினர்...
நச்சரவமாய் நம்மையவர்
கொத்திடத் தருணம் பாா்க்கின்றனா்
அந்தோ அறிவிலிகள்
இது பொியாா் நாடென்பதனை
அடிக்கடி மறத்தல் ஆகின்றனா்...
கிழவா - பெருங்கிழவா
தமிழ்நாட்டை மீட்டெடுத்து - நின் 
கனவுதனை நனவாக்குவோமென்று
கடுங்குரலெடுத்து உறுதி செய்கிறோம்
இந்நாளிலே...
- அரங்க கனகராசன்
24122018
--------------------------------------------------------------------------------------------------------


தந்தை பெரியா

 கிழவனே - நீ

கட்டியக் கோட்டை மீது
வெட்டிப் பயல்கள் 
முட்டி மோதி மண்டைப். புண்ணாயினா்...

வெடிகுண்டென நின்தொண்டா்
வெகுதல் கண்டே - பாா்ப்பனா்
வெருதல் ஆயினர்...
நடைப்பிணமெனவே - ஆரியர்
நம்நாட்டில் ஆயினர்...
நச்சரவமாய் நம்மையவர்
கொத்திடத் தருணம் பாா்க்கின்றனா்
அந்தோ அறிவிலிகள்
இது பொியாா் நாடென்பதனை
அடிக்கடி மறத்தல் ஆகின்றனா்...
கிழவா - பெருங்கிழவா
தமிழ்நாட்டை மீட்டெடுத்து - நின் கனவுதனை நனவாக்குவோமென்று
கடுங்குரலெடுத்து உறுதி செய்கிறோம்
இந்நாளிலே...
- அரங்க கனகராசன
தந்தை பெரியார் நினைவு நாள்

கைத்தடிக் கிழவனே - நீ
கட்டியக் கோட்டை மீது
வெட்டிப் பயல்கள் 
முட்டி மோதி மண்டைப். புண்ணாயினா்...

வெடிகுண்டென நின்தொண்டா்
வெகுதல் கண்டே - பாா்ப்பனா்
வெருதல் ஆயினர்...
நடைப்பிணமெனவே - ஆரியர்
நம்நாட்டில் ஆயினர்...
நச்சரவமாய் நம்மையவர்
கொத்திடத் தருணம் பாா்க்கின்றனா்
அந்தோ அறிவிலிகள்
இது பொியாா் நாடென்பதனை
அடிக்கடி மறத்தல் ஆகின்றனா்...
கிழவா - பெருங்கிழவா
தமிழ்நாட்டை மீட்டெடுத்து - நின் கனவுதனை நனவாக்குவோமென்று
கடுங்குரலெடுத்து உறுதி செய்கிறோம்
இந்நாளிலே...



இனியவனே ! 

இன்னுயிரை துச்சமெனக் கொண்டு 
மண்ணுயிரை – தமிழ் 
மண்ணுயிரை 
இனம் காட்டியவனே!...

தமிழர் என்றோர் இனம் 
தரணிதனில் அழிந்திடவில்லை என்றே 
பறை செய்தவனே! 

வீரத்தின் வேரை 
பாரின் விளிம்புக்கும் 
பாய்ச்சியவனே – தமிழர்
 மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! 

நீ வாழி!
நின் எண்ணம் திண்ணமாகும்! 
ஈழம் எமக்கு நிழலாகும்! 

-அரங்க கனகராசன்    
25112018


***( உடல்நலம் இல்லை. மருத்துவமனையிலிருந்து நவம்பர் 2015  * இட்ட மீள்பதிவு!)


ஒரு தாலாட்டு...
------------------------- 

கண்ணுறங்குக்  கண்ணுறங்கு 
கட்டித் தங்கமே  கண்ணுறங்கு
கண்ணுறங்குக்  கண்ணுறங்கு 
அமைச்சர் மகனே கண்ணுறங்கு...

மீன்வளத்துறையிடம் 
வேலை வேண்டுமென்றேன்...
ஆராரோ ... ஆரிரரோ...ஆரிரர ராராரோ 
தேனமுதே உன்னைத் தந்தான் 
கண்ணுறங்குக்  கண்ணுறங்கு...
கண்ணின் மணி நீ கண்ணுறங்கு...

மீனின் வலையில் விழுந்த மீனடா - நீ
ஆசைக் கடலின்  பாறையடா...
ஆழ்கடலின் வஞ்சிரமடா - நீ 
 மோகக் கடலின் மத்தியடா
ஆராரோ ... ஆரிரரோ...ஆரிரர ராராரோ...

செம்மீனே செஞ்சுறாவே 
கெளுத்தியே கிழங்கானே 
நெத்திலியே நெய்மீனே 
சத்தான வொவ்வாளே 
கண்ணுறங்குக்  கண்ணுறங்கு...
கண்ணின் மணி நீ கண்ணுறங்கு...

கேலிக்கதை நாயகனின் 
ஆசைச் சொல்லில் பிறந்தவனே...
ஆராரோ ... ஆரிரரோ...ஆரிரர ராராரோ 
செயக் குமரனே செயக் குமரனே
கண்ணுறங்குக்  கண்ணுறங்கு...
கண்ணின் மணி நீ கண்ணுறங்கு...

- அரங்க கண்கரசன்  
24102018

( உதவிக் கேட்டு வந்த பெண்ணை மயக்கி, தமிழக அமைச்சர் ஜெயக்குமார்  அப்பெண்ணைத் தாயாக்கியதாய்  வந்த செய்தியின் விளைவில் பிறந்த வரிகள்...)
  


இனி இங்கே இப்படித்தான்!...


எச் ராசா போற்றி ... போற்றி...
எகத்தாளம் கொண்டேனே போற்றி ... போற்றி...

மயிர் மன்றம் என்று மொழிந்தாய் போற்றி ... போற்றி...
ஈரல் கேட்ட காவல்துறை என்றாய் போற்றி ... போற்றி...

பெரியார் சிலை உடைப்பாய் என்றாய் போற்றி ... போற்றி...
மண்ணாங்கட்டி என்றாய் நீ போற்றி ... போற்றி...

மதம் மோதல் செய்வாய் போற்றி ... போற்றி...
வெறிநாய் போலானாய் நீ போற்றி ... போற்றி...

வெட்டுவேன் குத்துவேன் என்றாய் போற்றி ... போற்றி...
நானும் ரவுடிதான் என்றாய் போற்றி ... போற்றி...

வளர்மதியும் சோபியாவும் ஒழிக போற்றி ... போற்றி...
திருமுருகன் காந்தியும் திருமாவளவனும் ஒழிக போற்றி ... போற்றி...

நந்தினியும் அவர்தந்தையும் ஒழிக போற்றி ... போற்றி...
வைகோவும் வேல்முருகனும் ஒழிக போற்றி ... போற்றி...

நின்திருவாய் திறந்தாலே கலவரம்தான் போற்றி ... போற்றி...
நீன்  பாசிசம்  ஓங்கி ஒலிக்கவே  போற்றி ... போற்றி...

ஸ்டெர்லைட்டும் மீத்தேனும் வாழ்க போற்றி ... போற்றி...
எட்டுவழி சாலையும் ரபேலும் வாழ்க போற்றி ... போற்றி...

பெண்களை இழிவு செய்வாய் போற்றி ... போற்றி...
தமிழ் உணர்வோரை துரோகி என்பாய் போற்றி ... போற்றி...

தமிழ்நாட்டில் வாழும் முறையை வகுத்தாய்  போற்றி ... போற்றி...
அர அர சர்மா நீ பச்சைத்தமிழன் ஆனாய் போற்றி ... போற்றி...

ஏமாந்த சூத்திரனை இந்துவென்பாய் போற்றி ... போற்றி...
கோமாளித்தனம் கோடி செய்வாய் போற்றி ... போற்றி...

தமிழ்மண் பாழாகவே நீ போற்றி ... போற்றி...
தறுதலையே நின் திருமந்திரம் போற்றி ... போற்றி...


- அரங்க கனகராசன் .
23092018
--------------------------------------------------------------------------------------------------------------------------


விடியலில் ...


யாருக்கும் யாரென்று 
யாருக்கும் யாருமில்லை!

ஊருக்கே தெரியுமிது 
உனக்கேன் புரியவில்லை!

இன்றிருந்தவன் நாளையில்லை 
இதுவே மானிடவாழ்வு!
நாளையும் இருப்பேன் என்பதோ 
அகந்தையின் வெளிப்பாடு 


கரடுமுரடு  மேடுகளைப் 
பாதையாக்கு!
விரைந்து துணிந்தும் பாய்ந்தோடு 
விண்மீனும் வசமாகும் !

அடக்குமுறையை அடக்கிப் போடு   
ஒடுக்குமுறையை ஒடித்துப் போடு
விடிவது தெரியும் - அந்தவிடியலில் 
தெரியும் பார் தமிழ்நாடு!
 - அரங்க கனகராசன்  
09072018
----------------------------------------------------------------------------------------



அழுவது கேட்கலையோ...
அழுவது கேட்கலையோ
அடித்து புடுங்கறான் தொியலையோ
ஆண்டாண்டு காலம் உழுது சோறுண்ட மண்ணில்
அடிமாடுபோல் அடிக்கிறானே அடப்பாவி!

அய்யோ அய்யோ
அடிவயிறு எரியுதே
எட்டுவழிப் பாதைனு
எங்க தோட்டம் தொறவு காடு கழனி புடுங்கறானே
எங்க வீட்டுக்குள்ளே பூந்து
எங்களை அடிக்கிறானே
தட்டிகேட்க யாருமில்லையோ
தடுக்க எங்களுக்கும் தெம்பில்லையே
அய்யய்யோ அய்யய்யோ...
அகதியோ நாங்க - கதறறோமே
சொந்தநாட்டிலே
- அரங்க கனகராசன்
22062018

------------------------------------------------------------------






நீட்டை நீள்வாள் கொண்டு சீவு... 



கண்மணிகளா 
கண்கலங்க வைத்தீர்களே 
நீட் அரக்கனுக்கு 
நீயும் பிரதிபா பலியானயே...

அனிதாவின் அழுகுரலோடு 
உனது ஓலமும் சேர்ந்ததே...

நீட்டை ஏவியக் கொடுங்கூட்டத்தை  - கொன்று 
நீ மாண்டிருந்தாலும் 
மகிழ்ந்திருப்போம்...
உன் கனவு 
மண்ணாகிடவோ நீட் வந்தது ...

தமிழ்க்கண்மணிகளை 
மண்ணுக்குள் புதைத்து  கொன்றிடவோ 
இன்னும் தமிழா உறக்கம் கலையாதிருக்கிறாய் 
நீட்டை நீள்வாள் கொண்டு சீவு...

வீரத்தில் மட்டுமே 
வெற்றிப் பெற்றவன் தமிழன்.
வீண் செய்யாது வீரம்காட்டு !
ஒண்டவந்த நீட்டை ஓட ஓட விரட்டு!  
   -  அரங்க கனகராசன்
05062018

-----------------------------------------------------------------------------------------------------------------
தமிழருக்கும்தான் பிரதமர்


கனடாவின் முதல் மகனே  - நீர் 
தமிழருக்கும்தான் பிரதமர்!

ஆம்!

உன்னை எண்ணி -  தமிழர்  
உவகைக் கொள்கிறோம்!

நீ வருவாயா - உன் பாதம் 
தொடவே தமிழ்மண் மயிலிறகாய் 
மலர்ந்து நிற்கிறது...

வா... வா...

-அரங்க கனகராசன் 
23022018
---------------------------------------------------------------------------------------------


நினைத்தாலே  இனிக்கும்  காதல்!



அடிப்பார் - செல்லமாய் 
இடிப்பார்..

கிள்ளுவார்
அள்ளி அணைப்பார்...

உச்சிக்கும் உள்ளங்காலுக்கும்
உதட்டால்  பாதை  சமைப்பார் 

நாவால்  நாவை  நீவி 
மோகவீணை  மீட்டுவார்...

என்னவென்பேன் - அவர் 
எது செய்தாலும் 
இன்பங் கோடி என்பேன்...

என்னை  மயக்கிய  மன்னவன் 
ஏழுகடல்  தாண்டி  இருப்பினும் 

நான் 
நினைத்த  நேரத்தில் 
என் 
எண்ணத்தில்  உலா  வருவான்...

கன்னல்  போல் 
இன்பம் பொழிவான்... 

இதுபோல் 
இனியச்செயல்  எதுவுமில்லை.... 

          -    அரங்க கனகராசன்.
( திருக்குறள் நாத்திகநூலே எனும் நூலில் எழுதிய உரையிலிருந்து )

( எனைத்தொன்று  இனிதேகாண்  காமம்தாம்  வீழ்வார் 
நினைப்ப  வருவதொன்று  இல்.  - 1202)

14022018
-------------------------------------------------------------------------------------------------


டிசம்பர் 26, 2004 - ஆழிப் பேரலை!

( என் தாயும், தங்கையும், தங்கை மகனும் ஆழிப் பேரலையின் கோரப்  பசிக்கு இரையாயினர்... )

அன்னையே...
தங்கையே...
மகனே...

பதின்மூன்று    ஆண்டுகள் உருண்டோடினாலும் உமது நினைவுகளில் நான் என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன்...

அழுகிறேன்...

அழுவேன்...

நான் உயிர்த்  துறக்கும் வரைக்கும் அழுவேன்...

என் நாடிநரம்புகள் குப்பையாகி - செல்லரிந்துப் போயினும், உம்மை நினைத்து அழுதல் என்னிடம் குறையாது...

உமதுப்  பிரிவின் வேதனை என்னுள் நொடிதோறும் வளர்கிறது...

உமது நினைவால் எழும் வேதனை  நான் சாகும் வரைக்கும் வேண்டும் எனக்கு...

உமதுப் பிரிவுத் தந்த சோகம் -  அதுவே எனக்கு இன்பம்...

அழுகையும், வேதனையும், சோகமும் என்றென்றும் எனக்கு வேண்டும்...

ஆழிப் பேரலை உம்மை இரையாக்கிக் கொண்டு, என்னை சோகத்தில் வதைத்தாலும், அந்த சோகமே எனக்கு ஆறுதல்...

ஆதலால்; நான் அழுவேன்... அழுவேன்... அழுதுக் கொண்டேயிருப்பேன்...
     - அரங்க கனகராசன்.
25122017
-------------------------------------------------------------------------------------------------------


நான்  கண்ட கோவில் 


கோவை வடவள்ளி - கணுவாய் , களப்பநாயக்கன் பாளையத்தில் சிறி அரங்கநாதர் மேநிலைப் பள்ளியில் என் மகள் 9ஆம் வகுப்பு 2007ஆம் ஆண்டு பயில்கையில்-

அப்பள்ளிக்குறித்து கவிதையொன்று எழுதியிருந்தார்;  ஒரு தோழிக்கு கடிதம் போல-

நான் கண்ட கோவில்.

அரங்கத்து  நாதன்  - அவன் 
அகிலத்தின்  காவலன் என்பர்...

அவன்  திருவருளால்  - நாளும் 
அவனி  செழிக்குதென்பர் 
அன்புத்தோழியே!...

நான்  பயிலும்  சீர்மிகு  அரங்கநாதர் 
பள்ளியும்  - அருள்மிகு 
கோவிலுக்கு  இணைதானடி!...

பள்ளியெனில்  சரியல்ல  - இஃதோர் 
அன்பு சாலையெனில்  மிகையல்ல!...

அன்பும்  கனிவும்  ஆழ்ந்த  அறிவும்  - எம் 
பள்ளி  ஆசிரியர்களுக்கு  உண்டு!... 

அடித்தல்  இல்லை 
அதட்டல்  இல்லை 
அடக்குதல்  இல்லை 

சொல்லில் 
இனிய  வார்த்தைதனைப்  பிழிந்து - மனதில் 
புதியப்  பாடந்தனைத்  தருவர் 
எமது  ஆசிரியர்!...

ஆசைத்தோழியே  - எம்  ஆசிரியரை 
கண்டால்  அச்சமில்லை...

அன்புடன்  தாயாய் - நல் தந்தையாய் 
நட்பாய்  நாளும் பழகும் 
ஆசிரியர்களுக்கு  நானும்  நவில்வேன்  நன்றி!

அரங்கநாதர்  கோவில்  -   நான் 
கண்டதில்லை!

அரங்கநாதர்  பள்ளி  - நான் 
கண்ட  கோவில்!
    -   தமிழரசி. 

பொதுவாக, மாணவர்கள் - ஆசிரியர்கள் உறவு என்பது தற்சமயம் சரியான ஒட்டுதல் இன்றியே இயங்குகிறது...

ஆனால்; என்மகள் இன்றும் சிறப்பொடு விளங்க அப்பள்ளிக்கும் பங்குண்டு!...


பழையவற்றைத் தேடுகையில் கிட்டிய செல்வமிது! தினமலர் நாளேட்டில் பதிவானது!
13122017
-------------------------------------------------------------------------------------


நம்நாடு  தமிழ்நாடு 


நம்நாடு  தமிழ்நாடு 
நாமெல்லாம்  தமிழ்மக்கள் 
என்றுக்கூறி  ஒன்றுசேரு
நம்நாடு  தமிழ்நாடு!

வந்தேறிகள்  நம்மையாள 
இந்துக்களென்று  நம்மைக் கூற
இன்னும் அமைதி காப்பதோ
மடமையிதை  ஒடிப்பாயே...

நம்கொடி  தமிழ்க்கொடி 
வீதியெங்கும் கட்டி 
வீணர்க்கொடியை  விரைந்தழி 
நம்கொடி தமிழ்க்கொடி...

சொந்தங்கள்  மண்டியிட 
சொகுசாய் ஆரியம்வாழ 
இனியும் அறிவிழப்பதோ 
இடியென அதிராயோ...

நம்மொழி  தமிழ்மொழி 
நலமிகு செம்மொழியென்று 
இலங்கு சாலையெங்கும் 
பயிலச் செய்கிடுவோம் 

     - அரங்க கனகராசன்.
26102017
------------------------------------------------------------------------------------------------------------------



கெட்டியாய் ஒட்டிப்படுத்து...


தாம்வீழ்வார்  மென்றோள்  துயிலின்   இனிதுகொல் 
தாமரைக்  கண்ணான்   உலகு.             ( 1103)
தாம்வீழ்வார்  மென்றோள்  
   =   கெட்டியாய் ஒட்டிப்படுத்து  - என்னைக் 
        கட்டிப் பிடித்து 
        கன்னத்தில் முத்தமாரிப்  பொழிந்து  -  இன்பக் 
        கடலில்  ஆழ்த்தும்   அழகனே 
        உன்தோள்  சாய்ந்து 

துயிலின் 
   =   என்  முகத்தை 
        உன்  பரந்த  மார்பில்   புதைத்து 
        கண்  துஞ்சுவேன்...

இனிதுகொல் 
   =   இதைவிட  இனிமை 
        வேறெதிலுண்டு   கட்டழகனே!

தாமரைக்  கண்ணான்  உலகு.
   =   என்கண்  நிறைந்தவனே 
        தாமரை  மலர்ப்  போல் 
        நீளவிழிக் கொண்டவனே 
        நீயே   எனது  உலகம் 
        உனது அருகாமையே   எனது   இன்பம்!...


        ( கெட்டியாய் ஒட்டிப்படுத்து  - என்னைக் 
        கட்டிப் பிடித்து 
        கன்னத்தில் முத்தமாரிப்  பொழிந்து  -  இன்பக் 
        கடலில்  ஆழ்த்தும்   அழகனே 
        உன்தோள்  சாய்ந்து 
       என்  முகத்தை 
        உன்  பரந்த  மார்பில்   புதைத்து 
        கண்  துஞ்சுவேன்...
      இதைவிட  இனிமை 
      வேறெதிலுண்டு   கட்டழகனே!

.
       என்கண்  நிறைந்தவனே 
        தாமரை  மலர்ப்  போல் 
        நீளவிழிக் கொண்டவனே 
        நீயே   எனது  உலகம் 
        உனது அருகாமையே   எனது   இன்பம்!... )

( இதில் எங்கே இந்து மதமும் - இந்து கடவுளும் இருக்கின்றன என்று தெரியவில்லை...

மேலும் வள்ளுவன் காலத்தில் இந்து மதமே இல்லை... சைவ நெறி  மற்றும் வைணவ நெறியோடு பவுத்த நெறியும் தமிழகத்தில் மெல்ல பரவியிருந்தன... 

கவனிக்க : இந்துமதம் இல்லை !... 

ஓ... இக்குறளில்  தாமரை எனுஞ் சொல் வந்துள்ளமை-
ஒருசாரார்   "இந்து குறள்" என  பொருள் கொண்டிருப்பின்-

அது பொருள் உணர்தலில் ஊனம் என குற்றம் சுமத்துவேன்... 

ஆய்க... அவசரம் கொண்டு குறளின் உண்மைத் தன்மையை சிதைத்து இந்துமயமாக்க  முனையாதீர்கள்... )


    - அரங்க  கனகராசன்.
13102017
--------------------------------------------------------------------------------------------------------- 


அனிதா  ஏன்நீ  இறந்தாய்?


என் செல்லமே 
தளிர்ச்சிட்டே 
இளங்கொழுந்தே 
பொன்னே  - பூவே...
ஏனம்மா இறந்தாய்?...

இரக்கமில்லா  வன்னெஞ்சர் - உன் 
இதயம்தனைப் பிளந்தனரே...
கொடியோர் ஆரியர் சூழ்ச்சிக்கோ 
மடிந்தாய் - மரிக்கொழுந்தே...
கொடுமையிதை எங்கு புலம்புவேன்...

ஆட்சிக் கட்டில் வேண்டி 
அரசியல் கயவோர் அலைய 
நீட்எனும் கூர்வாள் - தமிழினத்தை 
சிதைக்கும் கொடுவாளென்று - ஊருக்கு 
உரைத்தவள்  நீ மட்டுமே அனிதா!...  

சாகாது - நீ 
வேரோடு ஆரியசூதை  வீழ்த்தி
தமிழ்மண்ணில் தரங்கெட்டோரை 
நெருப்பென பொசுக்கி  - வீரத்தை 
விதைக்காமல் செத்தாயே செல்லமே...

வீதியெங்கும்  நெருப்பாறு 
ஓடுமென்று  நினைத்தாயோ...
தூங்கும் தமிழனை நம்பியோ - நீ 
தூங்கச் சென்றாய் செல்லமே - உன் 
ஏக்கத்தின்  கனவுகளைக் கொன்ற தேசமம்மா இந்தியா!... 

   -   அரங்க கனகராசன்.
01092017











-----------------------------------------
ஈழத்தின் விடியல்...


அந்த விடியலுக்காக 
நீயும் நானும் ஏங்கினோம்...

இருளின் அழுத்தம் 
என்னையும் உன்னையும் 
இன்னல் செய்தப் போதும் 
வெளிச்சத்தின் தேடலை நிறுத்தினோமில்லை...

ஊளைக் காற்று 
இருதயத்தை பயமுறுத்தின...
ஆயினும் 
நம்மிருவர் சுவாசம் 
விடியலுக்கான கதவுகளைத் துழாவியது...

அதோ 
பகைமூட்டம் எம்மீது  
நெருப்புக் கங்குகளைத் துப்பத் தேடுகிறது...  
நாம் சாம்பலாக மாட்டோம்...

சாம்பலாகிவிட்ட நாம் - மீண்டும் 
சம்பலாகோம்...
எம் 
சாம்பலில் ஆயிரமாயிரம் வீச்சுகள் 
முளைவிடத் தொடங்கி விட்டன...

மீண்டும் எமது இன மீட்பை  
எவராலும் வீழ்த்தவியலாது...
ஈழத்தின் விடியலே எம் இனத்தின் விடியல்...
சித்திரை முதல் நாளல்ல!

-அரங்க கனகராசன் 
13042016
-----------------------------------------------------------------------------------------


நல்விடையுண்டோ...   நவில்க... 


உதிரிமணல் மீது 
உடைந்தப்   படகின் முதுகில் சாய்ந்து 
முகத்தில் தெறித்து உதிர்ந்த 
அலைகளின் துளிகளைத்  துடைத்தெறியாமல் 

விரிந்து பரந்து 
விண்ணின் வளைவைத் தொட்டு விளையாடும் 
கடல்நீரின் ஓங்காரம் - என் 
உடலை உலுக்கியது...

நீ 
அமர்ந்திருக்கும் மணலும் நிலமும் 
நீ 
காணும் பெருங்கடலும் கடல் செல்வமும் 
நீ 
அண்ணாந்துப் பார்க்கும் வானும்  வான்பாதையும் 
உன்னுடையது...

எப்போதுத் தொலைந்தது...  
எப்போது  மீட்பாய்...

ஊமையாய்  உறங்கிக் கிடந்தால் 
ஊனமாகிவிடுமடா  வருங்காலத்தில்  உன் இனம்...   
நீலக்கடல்காற்றின்  கேள்விக்கு 
கூறுவாருண்டோ   மொழி?
   -   அரங்க கனகராசன்.
17092017
----------------------------------------------------------------------------------  

மகளே ... மகளே...  மகளே...


என்வாசல்  உன்பாதம் தொட்டால் 
என்மேனிப்   பூவாகுமே...

உன்விரல் கொண்டு 
என் கண்ணீர்த்  துடைத்தால் 
என் நோய் சீராகுமே ...

அப்பா என்றே 
அன்பாய்  அழைப்பாய்  - அதுவே 
எனக்குத் தாலாட்டல்லவா!...

மகளே மகளே மகளேயென்று 
உன்கால் தொட்டுக்  கொஞ்சிட  
என்நெஞ்சம் ஏங்குதே... 

தளிராய் நீயென் கைகளில் 
தவழ்ந்த நினைவுகளில்  
தவியாய்த்  தவிக்கிறேன்...   

வா  வா  வா வாமகளே - என் 
விழிமூடும் முன்னே 
துளிநேரமேனும் உனைக்  காணவே...

    -    அரங்க கனகராசன் 

( குறும்படம் ஒன்றிற்கு எழுதியப் பாடல் )
02082017
--------------------------------------------------------------------------------------------------------------


தைநாளே தமிழராண்டு!

புத்தாண்டெதுவெனப் புரியாதோர் - தமிழ் 
புத்தாண்டெதுவெனப் புரியாதோர்
சித்திரை நாளை தமிழர் ஆண்டென 
சித்தமிழந்து கொண்டனரே...

பண்டைநாளில் பைந்தமிழும் 
செந்தமிழில் செப்பிற்றே...
புதுநெல் கொய்து புத்தரிசி வெய்து 
ஞாயிறுப் போற்றி சாற்றினர் விழவென்று!...

அந்நாள் அருந்தமிழருக்கு 
தைநாளின் முதல்நாளன்றோ... 
அறிகிலையோ  - அந்தோ 
தைநாளே தமிழராண்டு!
             - அரங்க கனகராசன்
14042017
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 


ஆகஸ்ட் 19 - இன்றென் (தங்கை) மகன் பாரி பிறந்தநாள்...

கனவில்  வந்து 
கன்னத்தில்    முத்தம்   பெறுகிற  மருமகனே 
நனவில்  வாடா 
நானுனக்கு  நானூறு   முத்தம்  தருவேன்...


தவிக்குதடா   நெஞ்சு 
தாவியோடி  வாடா...

வந்தென் 
மார்மீதில் 
மடிமீதில் 
கால்மீதில்
புரண்டுப்  புரண்டு  விளையாட 
ஓடோடி  வாடா  என் மகனே... 

*மரிக்கும்போது  மகனுக்கு வயது பத்து...
உயிரோடு  இருந்திருந்தால்  இன்று பொறியாளராக  வலம் வந்திருப்பான்...
           - அரங்க கனகராசன்.
19082015
--------------------------------------------------------------------------------------------------------------------
நானும் கடவுளாகிட...


ஏனப்பா சிறை வந்தாய்? - தயக்கமோ 
என்னிடம் கூற?

கொலை செய்தாயோ? - இல்லை 
கொள்ளை  அடித்தாயோ...
சொல்லாயோ மவுனம் கலைத்தென 
பொல்லாக் கைதியவன் கேள 

என்னவென்பேன் என்நிலையை! 
எவரும் கடவுள் என்றென்னை 
எவ்விடமும் வணங்கிடவே
எனதாசையிது  தவறோவென்றான்... 

பொல்லாக் கைதியும் 
கொல்லென்று  சிரித்து 
சொல்லடா இளைஞனே  - தகுதியுனக்கு 
உள்ளதோ கடவுளாகிட  வென்று கேட்க 

புதுக் கைதியும் புன்னகைச் செய்து 
பதுமைப் போலொரு அழகி 
பக்கத்துக்கு வீட்டில் இருந்தாள்...
அக்கமெவரும்  அறியாமல் 

பேரழகிக்  குளிக்கும் கோலமதை - கதவின் 
ஓட்டைவழியே  பார்த்தேன் கள்ளமாய்...
ஒய்யாரியவள் அவிழ்த்துப் போட்ட  
ஒட்டுத் துணியையும் ஒன்றும் விடாமல் 

அள்ளிக் கொண்டேன் - அதோடு
சொல்லுவேன் இன்னொன்றையும் கேளீர்...
சொக்கத் தங்கமவள் குளித்துவிட்டு உடுத்தும் 
அக்குள் துணியையும் திருடிவிட்டேன்...

ஆடையேதுமின்றி  அணங்கவள் 
போட்டக் கூச்சல் கேட்டு - ஓடிவந்தோர்
ஆட்டை மாட்டைபோல் அடித்து - அய்யகோ 
போட்டனரே சிறையில்...

கண்ணன் என்போன் - குளிக்கும் 
கன்னியரின் ஆடைத் திருடினான் 
கடவுள் என்றனர் அவனை - என்னையேன் 
அடித்தனர் அடைத்தனர் சிறையில் ... 

-அரங்க கனகராசன்.
05092015
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------




தமிழா  மரணம்  புதிதோ உனக்கு... 



மாவீரனே 
எமது நெஞ்சிலே 
நீ விதையானாய்...

நாங்கள்  அழமாட்டோம்...


உனது நினைவுகளை 
நெஞ்சிலேத் தாங்கி 
வீறுக் கொண்டெழுவோம்...

எழுதலும்  விழுதலும் 
பழுதன்று...
அழுதலும்  துவளுதலும் 
எங்களிடத்தில்  இல்லை...

நாங்கள்  அழமாட்டோம்...

மரணங்களை  
நாங்கள்  பழக்கிக் கொண்டோம்...

துன்பங்களும்  துயரங்களும் 
எங்கள் தொட்டில்கள்...

தாய்மண்ணில் 
கண்ணுறங்கு...

ஒருநாள் 
ஈழத்தின்  விடுதலை கீதம் 
உன்  செவிகளைத் 
தாலாட்டாய்  வருடும்...

   - அரங்க கனகராசன் 
( முத்துக்கமலம் இணைய இதழில் 2009ல் எழுதியது )



( 2009 - மாவீரன் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக வந்த துக்க  சேதியை இன்னமும் நெஞ்சம் ஏற்கவில்லை...அச்செய்தி பொய்யாக இருக்கவேண்டும் என்பதே எனது நினைப்பு...)


-------------------------------------------------------------







வாழ்க விநாயகர்...
"காலம் இனிமையாக இருக்கிறது... காலாற நடையிடுவோமா நாயகனே, கானகத்தில்" - என்றனள் பார்வதி!
'ஓ ... செல்வோமே என் செல்லக்கிளியே!" - என்று சொல்லி, புதுமலர் மணம் பொழியும் பூஞ்சோலைக்குள் புகுந்தான் பரமசிவன் பார்வதியோடு!
ஆங்கே-
எழிலார்ந்த ஏகாந்தப் பாறை மடுவில்-
பெண் களிற்றொன்றினை, ஆண் களிறொன்றுக் கூடி சுகம் கொண்டிருக்க, கண்டனள் பார்வதி அக்காட்சிதனை!
மிருகமே புனர்ந்திடினும், மனிதன் நாணுவான் அதனைக் காண!
ஆயினும், பார்வதியும், பரமனும் மனிதர் அல்லவே நாணம் கொள்ள!
கண்டனர்... காட்சியில் களித்தனர்...
"என்னருந் தேவனே, யானை வடிவாய் மாறி யானைப் போல் புனர்ந்திடவே எனக்கும் ஆசை" என பார்வதி தேவி கேட்க,
அதற்கு பரமனும் இசைந்தான்...
இருவரும், யானை உருவெடுத்து புணர, பிறந்தானாம் விநாயகன்...
இந்த விநாயகனை வாழ்க எனச் சொல்வதா?
அல்லது-
ஒரு நாள் - குளிக்க, படித்துறைச் சென்றனள் பார்வதி...
கண்ணனைப் போல் கயவர் எவரேனும் பெண்டிர்க் குளிக்கும் காட்சியைச் சுவைத்திடக் கள்ளமாய் வந்திடுவர்... காவலுக்கு எவருமில்லையே எனக் கலங்கிய தேவி, தன் மேனியில் உருட்டி, திரட்டினாள் கையளவு அழுக்குருண்டையை...
கையளவு அழுக்குருண்டை ஒருவர் உடலில் சேர எத்தனை ஆண்டுகளாகக் குளித்திருக்கவில்லை என்ற வினாவைக் கேளாதீர்கள்.. நடப்புக்கு வாருங்கள்...
திரட்டிய அழுக்குருண்டைக்கு உயிரூட்டி, காவலுக்கு வைத்துவிட்டு படித்துறை இறங்கினாள் தேவி குளிக்க!
அந்த அழுக்குருண்டைக்கும் விநாயகர் என்று பேரும் சூட்டியிருந்தாள் தேவி!
பொல்லாத அந்த அழுக்குருண்டைக்கும் மனம் கொள்ளவில்லை... தாயென்றும் பாராமல், குளிக்கும் பார்வதியின் தளத் தளப்பை கண் இமைக்காது காணலுற்றது...
பக்த கோடிகளே, இதில் எந்த விநாயகரை வாழ்த்துவது? விழா எடுப்பது? விழாவுக்கு தகுதி உண்டா விநாயகனுக்கு?
(17-09-2015ல் அரங்க கனகராசன் முகநூலில் இட்ட பதிவிது...)






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்